1 13 1Ch 25 1 மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது:
2 13 1Ch 25 2 ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
3 13 1Ch 25 3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
4 13 1Ch 25 4 கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின் குமாரரான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே.
5 13 1Ch 25 5 இவர்களெல்லாரும் ஏமானின் குமரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார்.
6 13 1Ch 25 6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள்.
7 13 1Ch 25 7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.
8 13 1Ch 25 8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
9 13 1Ch 25 9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
10 13 1Ch 25 10 மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
11 13 1Ch 25 11 நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
12 13 1Ch 25 12 ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
13 13 1Ch 25 13 ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
14 13 1Ch 25 14 ஏழாவது எசரேலா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
15 13 1Ch 25 15 எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
16 13 1Ch 25 16 ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
17 13 1Ch 25 17 பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
18 13 1Ch 25 18 பதினோராவது அசாரியேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
19 13 1Ch 25 19 பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
20 13 1Ch 25 20 பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
21 13 1Ch 25 21 பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
22 13 1Ch 25 22 பதினைந்தாவது எரேமோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
23 13 1Ch 25 23 பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
24 13 1Ch 25 24 பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
25 13 1Ch 25 25 பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
26 13 1Ch 25 26 பத்தொன்பதாவது மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
27 13 1Ch 25 27 இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
28 13 1Ch 25 28 இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
29 13 1Ch 25 29 இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
30 13 1Ch 25 30 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
31 13 1Ch 25 31 இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும் விழுந்தது.