1 15 Ezr 2 1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2 15 Ezr 2 2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடுகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
3 15 Ezr 2 3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
4 15 Ezr 2 4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
5 15 Ezr 2 5 ஆராகின் புத்திரர் எழுநூற்றுஎழுபத்தைந்துபேர்.
6 15 Ezr 2 6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
7 15 Ezr 2 7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
8 15 Ezr 2 8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9 15 Ezr 2 9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10 15 Ezr 2 10 பானியின் புத்திரர் அறுநூற்றுநாற்பத்திரண்டுபேர்.
11 15 Ezr 2 11 பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர்.
12 15 Ezr 2 12 அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
13 15 Ezr 2 13 அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
14 15 Ezr 2 14 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
15 15 Ezr 2 15 ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்.
16 15 Ezr 2 16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17 15 Ezr 2 17 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18 15 Ezr 2 18 யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
19 15 Ezr 2 19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20 15 Ezr 2 20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
21 15 Ezr 2 21 பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
22 15 Ezr 2 22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
23 15 Ezr 2 23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
24 15 Ezr 2 24 அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
25 15 Ezr 2 25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
26 15 Ezr 2 26 ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
27 15 Ezr 2 27 மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
28 15 Ezr 2 28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
29 15 Ezr 2 29 நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
30 15 Ezr 2 30 மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31 15 Ezr 2 31 மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32 15 Ezr 2 32 ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
33 15 Ezr 2 33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
34 15 Ezr 2 34 எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
35 15 Ezr 2 35 சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர்.
36 15 Ezr 2 36 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
37 15 Ezr 2 37 இம்மேரின் புத்திரர் ஆயிரத்துஐம்பத்திரண்டுபேர்.
38 15 Ezr 2 38 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
39 15 Ezr 2 39 ஆரீமின் புத்திரர் ஆயிரத்து பதினேழுபேர்.
40 15 Ezr 2 40 லேவியரானவர்கள்: ஓதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
41 15 Ezr 2 41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
42 15 Ezr 2 42 வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
43 15 Ezr 2 43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
44 15 Ezr 2 44 கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
45 15 Ezr 2 45 லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
46 15 Ezr 2 46 ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
47 15 Ezr 2 47 கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
48 15 Ezr 2 48 ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
49 15 Ezr 2 49 ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
50 15 Ezr 2 50 அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
51 15 Ezr 2 51 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
52 15 Ezr 2 52 பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
53 15 Ezr 2 53 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
54 15 Ezr 2 54 நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
55 15 Ezr 2 55 சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
56 15 Ezr 2 56 யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
57 15 Ezr 2 57 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
58 15 Ezr 2 58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
59 15 Ezr 2 59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மோரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
60 15 Ezr 2 60 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
61 15 Ezr 2 61 ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
62 15 Ezr 2 62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63 15 Ezr 2 63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64 15 Ezr 2 64 சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
65 15 Ezr 2 65 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66 15 Ezr 2 66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பந்தைந்து,
67 15 Ezr 2 67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
68 15 Ezr 2 68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69 15 Ezr 2 69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
70 15 Ezr 2 70 ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்.