1 4 Num 4 1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 4 Num 4 2 லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,
3 4 Num 4 3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.
4 4 Num 4 4 ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.
5 4 Num 4 5 பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,
6 4 Num 4 6 அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
7 4 Num 4 7 சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபகரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதினமேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.
8 4 Num 4 8 அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
9 4 Num 4 9 இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்திரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,
10 4 Num 4 10 அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,
11 4 Num 4 11 பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,
12 4 Num 4 12 பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,
13 4 Num 4 13 பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,
14 4 Num 4 14 அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள் துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.
15 4 Num 4 15 பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக் கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.
16 4 Num 4 16 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.
17 4 Num 4 17 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
18 4 Num 4 18 லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
19 4 Num 4 19 அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது:
20 4 Num 4 20 ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்கு பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார்.
21 4 Num 4 21 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
22 4 Num 4 22 கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
23 4 Num 4 23 முப்பது வயதுமுதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக.
24 4 Num 4 24 பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது:
25 4 Num 4 25 அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும்,
26 4 Num 4 26 பிரகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிரகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள்.
27 4 Num 4 27 கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.
28 4 Num 4 28 கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.
29 4 Num 4 29 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
30 4 Num 4 30 முப்பது வயதுமுதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய்.
31 4 Num 4 31 ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும்,
32 4 Num 4 32 சுற்றிலும் இருக்கிற பிரகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும் அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள்.
33 4 Num 4 33 ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.
34 4 Num 4 34 அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
35 4 Num 4 35 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள்.
36 4 Num 4 36 அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர்.
37 4 Num 4 37 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
38 4 Num 4 38 கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
39 4 Num 4 39 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
40 4 Num 4 40 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
41 4 Num 4 41 மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் இவர்களே.
42 4 Num 4 42 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
43 4 Num 4 43 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள்.
44 4 Num 4 44 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர்.
45 4 Num 4 45 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே.
46 4 Num 4 46 லேவியருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும்,
47 4 Num 4 47 மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும்,
48 4 Num 4 48 எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள்.
49 4 Num 4 49 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.