1 .
2 .
3 .
4 .
5 .
6 .
7 .
8 .
9 .
10 .
11 .
12 .
13 .
14 .
15 .
16 .
17 .
18 .
19 .
20 .
21 .
22 .
23 .
24 .
25 .
26 .
27 .
28 .
29 .
30 .
31 .
32 .
33 .
34 .
35 .
36 .
37 .
38 .
39 .
40 .
41 .
42 .
43 .
44 .
45 .
46 .
47 .
48 .
49 .
50 .
51 .
52 .
53 .
54 .
55 .
56 .
57 .
58 .
59 .
60 .
61 .
62 .
63 .
64 .
65 .
66 .
67 .
68 .
69 .
70 .
71 .
72 .
73 .
74 .
75 .
76 .
77 .
78 .
79 .
80 .
81 .
82 .
83 .
84 .
85 .
86 .
87 அந்தக் காலங்கள் எல்லாவற்றிற்கும் பிறகு, அங்கிருந்த பரிதாபத்திற்குரிய வயது சென்ற மோசேயைக் கவனியுங்கள். ஒரு மனிதன் தேவனுக்கு முன்பாக எப்படி இருக்கிறான் என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். கோராவும் அவர்கள் எல்லாரும் எப்படியாக… தேவன் மோசேயைப் பார்த்து, "மோசே, வழியை விட்டு விலகிப் போ, நான் இந்த முழு கூட்டத்தையும் அழித்து போட்டு விட்டு, உன்னிலிருந்து ஒரு பெரிய ஜாதியை உண்டாக்கப் போகிறேன்" என்று கூறின போது, அதைக் கவனியுங்கள். (யாத்திராகமம் 32:10)
மோசேயோ தேவனுக்கு முன்பாக விழுந்து, தன்னுடைய வழியை இணைக்கும் பாலமாக வைத்து, "தேவனே, என்னை எடுத்துக்கொள்ளும்!" என்றான். தேவனால் அந்த மனிதனைத் தாண்டிப் போக முடியவில்லை, அதுதான் தேவனுக்கு முன்பாக ஒரு பரிசுத்தவானுடைய வல்லமையாக இருக்கிறது. அங்கே அதை நோக்கிப் பாருங்கள்.
பழங்காலத்து ஏசாயாவைக் கவனித்துப் பாருங்கள், அவன் எழுந்து போய் எசேக்கியா தீர்க்கதரிசியைப் பார்த்து (எசேக்கியா இராஜாவைப் பார்த்து - மொழிபெயர்ப்பாளர்), "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் மரிக்கப் போகிறீர். அது கர்த்தர் உரைக்கிறதாவது" என்றான். (ஏசாயா 38:1; 2 இராஜா. 20:1)
88 அது என்னவொரு அதிர்ச்சியாக இருந்தது, இரண்டு மணி நேரத்தில், அவன் மறுபடியும் திரும்பி (வந்தான்). பரிசுத்த ஆவியானவர் அவனைச் சந்தித்தார். அதற்குக் காரணம் என்னவென்றால், எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, மனங்கசந்து அழுது, கர்த்தாவே, நீர் என்னை நினைத்தருள வேண்டும் என்று கெஞ்சிக் கேட்கிறேன். நான் உமக்கு முன்பாக மன உத்தமமாய் நடந்திருக்கிறேன்" என்றான். அவனுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. தேவன் ஏற்கனவே அவனுடைய மரணத்தை முத்திரையிட்டிருந்தார், ஆனால் ஜெபமோ காரியங்களை மாற்றி விட்டது.
அவர் தீர்க்கதரிசியிடம், "திரும்பிப் போய் அவனிடம் சொல்லு" என்றார்.
89 மோசே எப்படிப்பட்ட ஒரு மாவீரனாக இருந்தான் என்று பாருங்கள்! அவனுடைய கடைசி மணி வேளைகளில், அவன் அந்தப் பயங்கரமான கோபத்தினால் அங்கேயே தாழ்த்தப்பட்டுப் போனான், இறுதியாக அவன் தேவனுக்குப் பதிலாக தன்னையே மகிமைப்படுத்திக் கொண்டான், (ஆகை யால்) தேவன் அவனை… அனுமதிக்கவில்லை . நிச்சயமாகவே, அவை எல்லாம் இன்றைய மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகோஸ்தே ஸ்தாபனங்களைப் போன்றும், மற்ற எல்லா ஸ்தாபனங்களைப் போன்றும் முன்காட்சியாகவே இருந்தது, அவர்கள் தங்களைத் தாங்களே மகிமைப்படுத்திக் கொண் டிருக்கிறார்கள்.
90 சில நாட்களுக்கு முன்பு, அந்த மிகப்பெரிய சபைகளில் ஒன்று, குட்டையிலுள்ள ஒரே வாத்து அவர்களாக இருக்க முடியவில்லையே என்ற காரணத்தினால், அவர்கள் அவ்விதமான ஒரு கூட்டத்தை நிராகரித்து விடுகிறார்கள். நான், உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு வேண்டியதில்லை. கழுகுகள் எங்கேயிருக்கிறதோ, பிணம்… பிணம் எங்கேயோ, அங்கே கழுகுகள் வந்து கூடும்" என்றேன். அது சரியாக இருந்தது. ஆம், ஐயா. நீங்கள் சத்தியத்தைச் சொல்லும் போது, தேவன் மீதியானவற்றைப் பார்த்துக்கொள்வார்.
அங்கே அவர்கள், 'ஓ, நாங்களே முக்கியஸ்தர்கள் (அதிகாரம் செலுத்துகிறவர்கள்)" என்றவாறு இருந்தார்கள்.
நான், "நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்குக் கவலையில்லை. நம்முடைய ஜீவியங்களில் அதிகாரம் செலுத்துகிறவர் தேவனே என்றேன். அது சரியே. அதற்கு தேவனே அவசியம் , சபை என்ன கூறுகிறதோ அதுவல்ல. அந்த சபை, அவர்கள் ஒவ்வொருவருமே… இங்கேயிருக்கும் சரித்திர ஆசிரியர் யாராவது இதைத் தேடிப்பார்க்க விரும்புவார்களானால். எப்பொழுதாகிலும் விழுந்து போன ஒரு சபையாவது மறுபடியும் எப்போதாவது எழுந்தது கிடையவே கிடையாது. தேவன் அவைகளை அலமாரியில் வைத்து விடுகிறார். அவைகள் ஒருபோதும் எழுந்ததே கிடையாது. லூத்தரன் சபையும் விழுந்தது, மெதோடிஸ்டு சபையும் விழுந்தது, பிரஸ்பிடேரியன் சபை, பாப்டிஸ்டு சபை, தொடர்ந்து அந்தக் காலங்களில் வந்த சபைகள் எல்லாமே, பெந்தெகோஸ்தே சபையும் கூட விழுந்து போயினர். தேவன் அவைகளை அப்படியே அலமாரியில் தூக்கி எறிந்து விடுகிறார்.
91 நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், இதைக் கவனியுங்கள். நான் இதை ஆவியின் ஏவுதலோடு கூறுகிறேன். சரியாக இப்பொழுது அல்ல, ஆனால் இதற்கு முன்பு என்ன சம்பவித்திருக்கிறது என்பதைக்கொண்டு கூறுகிறேன்; அது என்னவென்றால் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரதிநிதித் துவம் வகித்த ஒரு ஸ்தாபனமும் அங்கே இருக்காது (நான் என்ன குறிப்பிடுகிறேன் என்றால், முழு ஸ்தாபனத்தையும் தான் குறிப்பிடுகிறேன்); ஆனால் தேவனோ அவைகள் ஒவ்வொன்றையும் அகற்றி நீக்கிப் போட்டு விடுவார், விளைச்சலின் சிறந்த பகுதியையோ ஆவியினால் நிறைத்து, அதை மகிமைக்குள் எடுத்துக்கொள்வார். அது சரியே.
92 கடைசி சபைக்காலமானது லவோதிக்கேயா சபைக் காலம் என்றும், அது ஒரு வெதுவெதுப்பான சபைக்காலம் என்றும் வேதாகமம் முன்னுரைக்கிறது. சரியாக அதைத்தான் இன்று சபையானது பெற்றிருக்கிறது. அது சரியே. அவர்கள் ஒருக்கால் சற்றே தங்கள் கரங்களைத் தட்டி, கொஞ்சம் கூச்சல் போட்டு, மேலே குதித்து, சிறிது நேரம் அந்த மரச்சாமான் களை உதைக்கக் கூடிய கீழ் நிலைக்குப் போய் விட்டனர். ஆனால் தூயதும், பரிசுத்தமானதும், கலப்படமற்றதும், பரிசுத்த மாக்கப்பட்டதுமான ஒரு ஜீவியத்தை உண்மையில் ஜீவிக்கும் படி அது வரும்போது, பகலில் இருந்து இரவு எவ்வளவு தூரமாய் இருக்கிறதோ அவ்வளவு தூரமாய் அவர்களும் இருக்கிறார்கள். அது சரியே. சகோதரனே, இன்று நமக்கு என்ன அவசியமாயிருக்கிறது என்றால், ஒரு பழைமை நாகரீகமான மரித்து விடுதல் தான்; பீடத்தண்டை திரும்பிச் சென்று ஜெயங்கொண்டு விட்டு, மறுபடியும் பீடத்தண்டைக்கு திரும்பிச் செல்வதும், பீடத்திற்குத் திரும்பிச் செல்வதும் அல்ல நமக்குத் தேவை. அங்கே சென்று, நீங்கள் மரிக்கும் மட்டுமாக தரித்திருப்பது தான் நமக்குத் தேவை, அதன்பிறகு மரித்துப்போன ஒரு மனிதனுக்கு உலகத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அல்லேலூயா! அப்படியானால் நீங்கள் மறுபடியும் அதைத் துவங்க விரும்ப மாட்டீர்கள். சகோதரனே, கவனி, நான் இதை உன்னிடம் கூறட்டும்.
93 தேவன் தம்முடைய பரிதாபமான வயது சென்ற ஊழியக்காரனாகிய மோசேயை உடையவராய் இருந்த பிறகு… ஒருமுறை யாரோ ஒருவர் என்னைப் பார்த்து, அது தேவன் என்பதைக் காட்டுகிறதாக நான் உம்மிடம் கூறுகிறேன், நீங்கள் அவரை தேவன் என்று அழைப்பீர்களானால், அவர் தம்முடைய ஊழியக்காரனை விழுந்து போக அனுமதித்தாரே. அதன்பிறகு…" என்று கூறினார்.
மோசேயின் ஜீவியமானது நாற்பது என்ற சுழற்சியாக திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. அவன் நாற்பதாவது வயதில்) அழைக்கப்பட்டு, தன்னுடைய சகோ தரர்களால் புறக்கணிக்கப்பட்டான். பிறகு வனாந்தரத்திற்குப் புறப்பட்டுச் சென்று, நாற்பது வருஷம் ஆடுகளை மேய்த் தான். அவனுக்கு எண்பது வயது ஆனபோது, எகிப்தை விட்டு இஸ்ரவேலரை விடுவிக்கும்படியாக அவர் அவனை அனுப்பினார். அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத் திற்கு அருகில் போன போது, அவனுக்கு 120 வயதாகி யிருந்தது. நூற்றியிருபது வயதிலும் அவன் ஒரு வாலிபனைப் போன்று வேகமாக நடந்து போனான், அவனுடைய கண் பார்வையும் மங்கிப்போகவில்லை, அது உண்மை.
ஆனால் அந்தக் கன்மலை முன்பாக, அவன் அங்கே தேவனுக்குப் பதிலாக, தன்னைத்தான் மகிமைப் படுத்தின போது; தேவன் அவனிடம், "போய், கன்மலையைப் பார்த்துப் பேசு. அதை அடிக்காதே. அதைப் பார்த்துப்பேசு" என்றார். (எண்ணாகமம் 20:8) (அந்தக் கன்மலை ஒருமுறை மாத்திரமே அடிக்கப்பட்டிருந்தது.)
94 மோசேயோ முழுவதும் கோபமூண்டவனாய், அங்கே ஓடிச்சென்று அந்தக் கன்மலையை அடித்தான். அது தண்ணீரைக் கொண்டு வரவில்லை. அதை மீண்டும் அடித்தான், அப்போது அது தண்ணீரைக் கொண்டு வந்தது. அவன், 'கலகக்காரரே, உங்களுக்கு இந்தக் கன்மலையி லிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ?" என்றான். (எண்ணாகமம் 20:10,11). அவன் அவ்விதமாகச் செய்தான், அது தண்ணீர்களைக் கொடுத்தது, காரணம் என்னவென்றால் தேவன் அந்த வல்லமையைக் கொண்டு அவனைத் தரிப்பித்திருந்ததின் நிமித்தமாக அவர் அந்த தீர்க்கதரிசிக்கு செவிகொடுக்க வேண்டியிருந்தது. அது தேவ னுடைய வேதாகமத்தின் முழு திட்டத்தையும் உடைத்துப் போட்டது.
கிறிஸ்து ஒருமுறை தான் அடிக்கப்பட்டார். இப்பொழுது நாம் அந்தக் கன்மலையைப் பார்த்துப் பேசு கிறோம், அப்போது அது அதனுடைய தண்ணீரைக் கொண்டு வருகிறது, பாருங்கள். அது ஏற்கனவே அடிக்கப்பட்டிருக் கிறது. வெறுமனே அதைப்பார்த்து பேசுங்கள், அப்போது அது அதன் தண்ணீரைக் கொண்டு வருகிறது.
95 இப்பொழுது, அந்தக் காலையில் நான் அவனைக் காண்கிறேன். ஓ, நான் இந்தக் காட்சியைக் குறித்து நினைத்துப் பார்க்கும் போது, என்னுடைய இருதயமே ஏறக்குறைய நின்று விடுகிறது. நான் மோசேயைக் காண்கிறேன், அவன் அறிந்திருந்தான்… தேவன், "மோசே, உன்னுடைய சபையார் எல்லாரையும் பார்த்து, 'போய் வருகிறேன் (குட்பை' என்று சொல்லி விடு. நான் இன்றைக்கு இப்பொழுதே உன்னை மேலே சற்று அதிக உயரமான இடத்திற்கு அழைக்கப் போகிறேன் என்றார்.
வயதான மோசே அந்த நீண்ட வெண் தாடியை உடையவனாய் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது, அவன் தன்னுடைய சபையாரை உற்று நோக்குகையில், அவனுடைய தலைமயிர் அவன் முகத்தைச் சுற்றிலும் கிடக்க (trinkling down), அவனுடைய வயதான கண்கள் கண்ணீ ரினால் நிறைந்திருந்தது (dimming with tears). அவன் …காக எப்படியாக விழுந்து கிடந்தான். அவர்கள் எவ்வளவாக முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவன் எப்படியாக அவர்களுக்காக நின்றான். அவன் அவர்கள் எல்லாரையும் நோக்கிப் பார்த்து விட்டு, அந்த மலையின் மேல் ஏறத் துவங்கினான். அவன் மலையின் மேல் ஏறி, திரும்பிப் பார்த்து, போய் வருகிறேன் என்று கை அசைத்துக்காட்டத் தொடங்கினான். பிறகு மேலே செங்குத் தான மலையின் உச்சிக்கு ஏறிச்சென்றான். அது ஏப்ரல் மாதமாக இருந்தது. அவன் அங்கு நின்றுகொண்டு வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் நோக்கிப்பார்த்தான் (looked over). ஓ, அவன் அங்கே போக எவ்வளவாய் விரும்பினான்! என்னே, அவனுடைய பரிதாபத்திற்குரிய வயதான இருதயம் சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்தது. அவன் வழிநடத்தி வந்து, வழியில் அவர்களுக்காக நின்றானே, அந்த ஒரு கூட்டம் யூதர்களுடன் அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் போக அவன் விரும்பினான். அங்கே அவன் இருந்து, அங்கே (அந்த தேசத்தைப் பார்த்த போது, கண்ணீர் அவனுடைய கன்னங் களில் வழிந்தோடியது. அவன் திரும்பி, மறுபடியுமாக அந்த ஜனங்களைப் பார்த்து, போய் வருகிறேன் என்று கையை அசைத்தான். அது அவர்களுடைய வயது சென்ற மேய்ப்பன். அவன் அவர்களை விட்டு தூரமாகப் போகையில், அவ்வித மாக அவர்களைப் பார்த்து கை அசைத்துக்கொண்டே திரும்பிப் பார்த்தான்.
96 மோசே நின்றிருந்த இடத்தில் மாத்திரம் என்னால் நிற்க முடிந்து, அந்த இயற்கை வனப்பு மிகுந்த தேசத்தின் காட்சியை (landscape) பார்க்க முடிந்திருந்தால்! தேவனுக்குச் சித்தமானால், அடுத்த சில மாதங்களில், அங்கேயிருக்கும் அந்த மலையின் மேல் நின்று, அவர்கள் கடந்து சென்ற இடத்தைப் பார்க்க விரும்புகிறேன்.
அன்றொரு நாள் நான் ஒரு திரைப்படம் பார்த்தேன், அங்கே அந்த சகோதரர்களில் சிலர், அந்தக் கூட்டங்களிலிருந்து (campaigns) வந்திருந்த என்னுடைய சகோதரர்களில் ஏறக்குறைய நாற்பது பேர்கள் அங்கு சென்று, அதைக் குறித்த ஒரு திரைப்படத்தை (movie reel) எடுத்தனர். அவர்கள் அங்கே அதைக் கடந்து போன போது, அந்தக் கூட்டாளிகள் உரத்த சத்தமிட்டுக்கொண்டும், கூச்சலிட்டுக் கொண்டும் இருந்து, அந்த ஆற்றங்கரையிலுள்ள புதர்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிய விரும்பினார்கள், அங்கு தான் இஸ்ரவேல் புத்திரர்கள் மேலே ஏறிச்சென்றனர், இயேசு ஞானஸ்நானம் பெற்ற இடமும் அதுதான். அந்தப் பிரசங்கி மார்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடைகளை அணிந்திருந் தும் மற்றும் எல்லாவற்றோடும் தண்ணீரில் குதித்து, ஒருவருக் கொருவர் மறுபடியுமாக ஞானஸ்நானம் கொடுத்தனர். அவர் கள் ஒவ்வொருவரும் அவ்விதம் செய்தார்கள். ஓ, சகோ தரனே, அங்கே உள்ளே ஏதோவொன்று அசைவாடிக் கொண்டும், மனதைக் கிளறித் தூண்டி உணர்ச்சியூட்டிக் கொண்டும் இருக்கிறது. நாம் வாழ்ந்து வருகிறோம்… அவர்கள் ஒரு காரில் ஏறி, கொஞ்ச இடம் காரை ஓட்டிச்சென்று, சொல்லிக்கொண்டே, இஸ்ரவேல் புத்திரர்கள் பிரயாணம் செய்த இடத்தில் அங்கே பயணம் செய்து கொண்டிருந் தார்கள். வயதான பட்டி ராபின்சன், "இதை நிறுத்தி விடுங்கள், மிகச் சீக்கிரமாக!" என்று கூறினது போன்று. அவர் வெளியேறி, சுற்றி சுற்றி, சுற்றி ஓடி, "தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!" என்று அந்த இடத்தைச் சுற்றிலும் கூச்சலிட்டு, உரக்க கத்திக்கொண்டேயிருந்தார். பிறகு திரும்பவும் உள்ளே குதித்து, "இவளை தொடர்ந்து ஓட்டிச்செல்லுங்கள்" என்றார். அது சரிதான். அவர் அப்படிப்பட்ட ஒரு நேரத்தைக் கொண்டிருந்தார்! நிச்சயமாக!
97 மோசே நின்றிருந்த இடத்தில், அந்தக் கன்மலை யின் மேல் நான் நின்று, அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் என்னால் காண (looking over) முடிந்திருந்தால்! அவன் அங்கு போக விரும்பினவனாய், தன்னுடைய சபையாரை நோக்கி திரும்பிப் பார்த்து, போய் வருகிறேன் (good-bye) என்று மறுபடியும் கை அசைத்துக் காண்பித்தான். அவனுடைய நீண்ட தாடியிலிருந்து கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அவனுடைய வேளை வந்திருந்தது. அவ னுடைய வஸ்திரத்தினுடைய கைப்பகுதிகளானது இங்கே யுள்ள அவனது கைப்பகுதிகளுக்கு மேலாக வந்து, இதயத் துடிப்பு அவனுடைய கைப்பகுதிக்கு மேலே அதிகரிக்கத் தொடங்கியது. அவன் ஒரு வயதான அனுபவம் மிகுந்த மூத்த படைத்துறை வீரன்.
சகோதரனே, நான் சரியாக இப்பொழுதே இதை உங்களிடம் கூற முடியும், நான் சற்றே இதைக் (கூறுவதற்காக, நான் பாப்டிஸ்டாக இருக்கப் போகிறேன் என்று நினைத்து விடாதீர்கள், ஆனால், சகோதரனே, அவன் இழக்கப் பட்டிருக்கவில்லை. இல்லை, அவன் இழக்கப்படவில்லை. தேவன் தம்முடைய ஊழியன் விழுந்து போகும்படி அனுமதிக்கவே மாட்டார்.
அங்கே ஸ்லீவ்ஸ் இப்படி மேலே வருகிறது. நீங்க ள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அவன் பிடிக்கப்பட்டு விட்டான், இதயத்துடிப்பு - இதயத்துடிப்பு அடங்கிக்கொண்டிருந்தது (cooling off). அவன் அங்கே அந்தத் தேசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கையில் (looked over), அவனுடைய கண்கள் மங்கத் தொடங்கினது. அவன் அங்கே போக எவ்வளவாய் விரும்பினான்! ஓ, என்னே! அவனுடைய இருதயம் பலவீனமாகிக் கொண்டே வந்தது.
98 இந்த ஜீவனை விட்டுப்போக அவன் ஆயத்த மாகையில், அங்கே அவனுடைய பக்கத்தில் நின்றுகொண் டிருந்த அந்தக் கன்மலையை அவன் காண நேரிட்டது, அங்கே அந்தக் கன்மலை நின்று கொண்டிருந்தது. அவர் அங்கே இருக்கிறார் என்பது முற்றிலும் சரியே, அவ்வளவு தான். அவன் அந்தக் கன்மலையின் மேல் அடியெடுத்து வைத்தான். தூதர்கள் வந்து, அவனைச் சுமந்து கொண்டு சென்றார்கள் (packed away).
அங்கிருந்து 800 வருடங்களில், அவன் அதோ அந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் எலியாவின் அருகில் நின்று கொண்டு, இயேசுவோடு பேசிக் கொண் டிருந்தான். அவர் உன்னை விழுந்து போக அனுமதிக்க மாட்டார்.
99 இந்நாட்களில் ஏதோவொன்றில், நான் பாதையின் முடிவில் வர வேண்டியிருக்கிறது. எனக்கு இப்பொழுது 43 வயதாகிறது. நான் ஏறக்குறைய சுக்கு நூறாக உடைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் இருபது வருடங்களாக பிரசங்கம் பண்ணியிருக்கிறேன். பனிக்கட்டியை உடைத்து, நின்று, நான் தண்ணீர்கள் வழியாக சிரமத்துடன் நடந்து சென்று, ஏறக்குறைய பனியினால் உறைந்து போகும் அளவுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறேன். நான் (எதுவும் இல்லாமல் செய்திருக்கிறேன், காடுகளிலும் மற்ற எல்லாவற்றிலும் (எதுவும் இல்லாமல் சென்றிருக்கிறேன், மற்றும் வியாதிகளும் எல்லாமும் தாக்குவதற்காக பதுங்கி ஒளிந்து காத்திருக்கின்றன. நான் எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதைக் காட்டிலும் அதிக காலத்தைக் காண ஜீவிப்பேன் என்றால், இயேசு வரத் தாமதிப்பாரானால், ஒருக்கால் நான் வயது சென்றவனாக ஆகும் போது, அநேகமாக எனக்கிருக்கும் தலைமயிர் குறைவாக கீழே தொங்கிக்கொண்டிருக்க (hanging down), நிற்பேன். என்னுடைய ஜனங்கள் எல்லாரும், அவர்கள் வயதாகும் போது, கட்டுப்படுத்த முடியாத கை கால் ஆட்ட நோயைப் பெற்றவர்களாய் ஆட்டிக்கொண்டே இருந்தார்கள். நான் என்னுடைய வழியில் ஒவ்வொரு யுத்தத்தினூடாகவும் சண்டையிட்ட போது, என்னுடைய எல்லா நண்பர்களும் மற்றும் காரியங்களும் போய் விட்டனர், நான் அங்கு நின்று கொண்டு, அங்கே கடந்து வந்து கொண்டிருக்கிற தண்ணீர்கள் வீசி எறியப்படும் சத்தத்தைக் கேட்கிறேன், அப்போது நான் இவ்விதமாக என்னுடைய கோலின் மேல் நடுக்கமுற்றவனாய் இருந்து, இங்கேயிருக்கும் இந்தப் பழங்கால பட்டயத்தை எடுத்து, நித்தியத்தின் உறையில் செருகி வைத்து விட்டு, என்னுடைய தலைச்சீராவை (helmet) எடுத்து, அதைக் கீழே வைத்துவிட்டு, என்னுடைய கரத்தை உயர்த்தி, அல்லேலூயா, கர்த்தாவே, ஜீவ படகை அனுப்பி வையும் (push out), நான் இந்தக் காலையில் கடந்து வர வருகிறேன், நான் ஆற்றைக் கடந்து வருகிறேன்" என்று கூற விரும்புகிறேன். அப்போது அவர் என்னை விழுந்து போக அனுமதிக்க மாட்டார்.
100 நான் இங்கே இருக்கையில், அது வெளிச்சமாக இருக்கும் போதே, நான் பிரசங்கம் பண்ணி, ஜெபித்து, மன்றாடி, பாடி, தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன். என்னுடைய ஆத்துமா இந்த சரீரத்திலிருந்து உயர எழும்பத் துவங்கும் போது, நான் கீழே திரும்பிப்பார்த்து, என்னுடைய அடிச்சுவடுகளைக் கண்டு, அவர்கள் சரியான விதமான ஒரு இடத்தில், "நாம் இறுதி விடை பெறுகையில், காலமெனும் மணற்பரப்பில் கால் தடங்களை பின்னால் விட்டுச் செல்கிறோம்" என்ற இடத்தில் இருக்க விரும்புகிறேன்.
101 .
102 .
103 .
104 .
105 .
106 .
107 .
108 .
109 .
110 .
111 .
112 .
113 .
114 .
115 .