1 நேற்று இரவுக்குப் பிறகு நாமெல்லாரும் நிறைந்துள்ளோம். பலர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர் என்னும் நல்ல செய்தியை இன்று கேள்விப்பட்டேன். அதனால் நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம்.
சகோ. கிரகாம் இன்றிரவு நம்முடன் கூட இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் இங்குள்ள அந்த கூடாரத்தை சேர்ந்தவர், நமது கூட்டாளிகளில் ஒருவர். அவர் ஊடிகாவிலுள்ள பரிசுத்தம் சபைக்கு போதகராக இருக்கிறார். சகோ. ஜாக்ஸன் நேற்று இரவு இங்கிருந்தார், அப்படி கேள்விப்பட்டேன். இன்று கூட்டத்தின் பின்னால் எங்கோ உள்ளார், யாரோ ஒருவர் சொன்னார். ஆம், சகோ. ஜாக்ஸன் இப்பொழுது கூட்டத்தில் பின்னால் உள்ளதைக் காண்கிறேன். சகோ. ரட்டல் இன்றிரவு இங்குள்ளாரா? அவரும் "62"-ல் நம்மைச் சேர்ந்த கூட்டாளிகளில் ஒருவர். அவர்கள் இங்கிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி, எங்கள்… ஓ, சகோ. பாட், இன்னும் இந்த கூட்டத்திலுள்ள மற்ற சகோதரர்கள். நீங்கள் அனைவரும் இன்றிரவு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
2 இது நியாயமென்று என்னால் காண்பிக்க முடியுமானால், உங்களிடம் பேசுவதற்கு சிறந்த போதகர்களில் சிலரை இங்கு அழைக்கலாமென்றிருக்கிறேன். ஏனெனில் நேற்றிரவு பெரிய தருணம் இருந்த காரணத்தால், என் தொண்டை கரகரப்பாயுள்ளது.
என் மனைவி என்னைத் திருத்துபவள். சகோதரரே. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? நேற்றிரவு பின்னால் இருந்தவர்கள் நான் பேசுவதை சரியாக கேட்க முடியவில்லையென்று அவள் கூறினாள். ஏனெனில் நான் ஒலிபெருக்கிக்குள் பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுது நாம் துவங்கும் முன்பு ஒன்றை முயற்சி செய்யப் போகிறேன். இப்பொழுது நன்றாகக் கேட்கிறதா? நான் பின்னால் சென்று பேசினால் இதை விட நன்றாகக் கேட்கிறதா? அல்லது இது நல்லதா? இப்பொழுது தேனே, நீ இந்த முறை சரியாகக் கூறவில்லை. இங்கு நின்றால் தான் நன்றாகக் கேட்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். சரி. ஓ, என்னே! என்னவாயினும் அவள் ஒரு ஸ்திரீ. ஆனால் நல்லவள். அவளை நீண்ட காலமாக நான் பெற்றிருக்கிறேன். அவள் கூறுவது வழக்கமாக சரியாயிருக்கும்.
3 இந்த மூன்று இரவு ஆராதனைகளிலும் நமக்கு மகத்தான தருணம் இருந்தது என்பது உறுதி. எனக்கு மகத்தான தருணம் இருந்தது. இந்த ஒலி நாடாக்கள், நேற்று இரவு ஒலிநாடாக்களைத் தவிர… நான் சகோ. கோட்டை (Bro. Goad) அழைத்து, கூடாரத்துக்கென்று இந்த ஒலி நாடாவை பதிவு செய்யும்படி கூறினேன். ஆனால் பில்லி பால் அவருடைய காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். எனவே எனக்குத் தெரிந்த வரையிலும், ஒலிநாடா கூடாரத்துக்கென்று பதிவு செய்யப்படவில்லை. எனவே அதை நாம் இழந்துவிட்டோம். நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்று யாராகிலும் அறிந்துகொள்ள, அதை சபைக்காக சபையில் வைத்திருக்க நான் விரும்பியிருப்பேன்.
4 இன்றிரவு நான் நேரத்தோடு கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்துவிட்டால், "மகத்தான மாநாடு" (The Great Conference) என்பதன் பேரில் பேசப் போகின்றேன். நாளை காலை சுகமளிக்கும் ஆராதனை இருக்கும். நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப் போகின்றோம். நாங்கள் சென்று, ''உனக்காக ஜெபிக்கப் போகின்றேன், உனக்காக ஜெபிக்கப் போகின்றேன்'' என்று கூறமுடியாது. அது சரியான முறையாகாது. நாங்கள் ஜெப அட்டைகளை விநியோகிப்போம். அவைகளிலிருந்து சிலரை மேடைக்கு வரும்படி அழைப்பேன். அப்பொழுது பரிசுத்த ஆவி வெளிப்படுத்தத் துவங்கினால், அது கூட்டத்தின் மத்தியிலும் சென்று சுகமளிக்கும் ஆராதனைக்காக ஜனங்களைத் தேர்ந்தெடுக்கும். நாளை காலை, கர்த்தருக்கு சித்தமானால், சுகமளிக்கும் ஆராதனைக்கு முன்பு நான் பேசுவேன்.
என் மனைவி சிரிப்பதை நான் காண்கிறேன். தேனே, நான் பேசுவது உனக்கு கேட்கவேயில்லையா? ஓ, உனக்குக் கேட்கிறது. அது நல்லது. அவள் பின்னால் உட்கார்ந்து கொள்வாள். நான் பேசுவது கேட்கவில்லையென்றால், அவள் தலையை அசைத்து ''கேட்கவில்லை, கேட்கவில்லை'' என்பாள்.
5 எனவே நாளை இரவு தண்ணீர் ஞானஸ்நான ஆராதனையுடன் கூடிய சுவிசேஷக் கூட்டம். நாளை இரவு நான் பேசி முடிந்தவுடன், நாம் திரைகளை இழுத்து மூடி, தண்ணீர் ஞானஸ்நானம் இங்கு கொடுப்போம். கர்த்தருக்கு சித்தமானால் காலை… இல்லை, நாளை இரவு… "ஒரு அடை யாளம் கொடுக்கப்பட்டது" என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். பிறகு புதன் இரவு இங்கு நான் இருக்க தேவன் அனுமதித்தால், நான் "கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு அவரைப் பணிந்துகொள்ள வந்திருக்கிறோம்" என்னும் பொருளின் பேரில் பேச விரும்புகின்றேன். அது கிறிஸ்துமஸுக்கு முந்தின மாலை.
பிறகு, கிறிஸ்துமஸ் முடிந்தவுடனே, கிறிஸ்துமஸ் விடுமுறை வாரம். அப்பொழுது தான் நாங்கள் கடிதங்கள் அனைத்திற்கும்… சகோ. மெர்ஸியரும் மற்றவர்களும் கடிதங்களை வழக்கமாக அனுப்புவதுண்டு. நாங்கள் அவைகளைப் பரப்பி, இந்த கடிதங்களுக்கு ஜெபத்தை ஏறெடுத்து, உலகின் எந்த பாகத்துக்கு நாங்கள் செல்ல வேண்டுமென்று தேவன் எங்களை வழிநடத்த வேண்டுமென்று ஜெபிப்போம்.
6 கிறிஸ்தவ வர்த்தகர்கள் பிளாரிடாவில் உடனடியாக நடைபெறவிருக்கும் தங்கள் மாநாட்டிற்கு அநேக பிரசங்கிமார்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அங்கிருந்து நான் கிங்ஸ்டனுக்கு சென்று, பிறகு ஹய்டிக்கு சென்று, அங்கிருந்து தென் அமெரிக்காவிலுள்ள போர்டோரிக்கோவுக்குச் சென்று, மெக்ஸிகோ வழியாக திரும்பி வருவேன்.
ஆனால் தேவன் என்னை நார்வேக்கு வழி நடத்துவதாகத் தோன்றுகிறது, ஏனென்று எனக்குத் தெரியவில்லை. "தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன்" என்னும் சிறு புத்தகம் உங்களுக்குத் தெரியுமல்லவா? அதுவே நார்வேயில் மார்க்க சம்பந்தமான மிகப்பெரிய வெளியீடு. தேவன் அங்கு என்ன செய்துள்ளார் என்று சற்று யோசித்துப் பாருங்கள். நான் அங்கு சென்றிருந்தபோது, வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்க அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நான் மூன்று இரவுகள் அங்கிருந்தேன். அவர்களோ வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்க என்னை அனுமதிக்கவில்லை. எனவே தேவனால் என்ன செய்ய முடியுமென்று பாருங்கள். அங்கு ஜனநெருக்கம் அதிகமாயிருந்தபடியால் அவர்கள் குதிரைகள் மேலேறிய காவற்படையினரைக் கொண்டு வந்து, ஜனங்களை தெருக்களினின்று விலக்கி, அந்த இடத்தை நான் அடையும்படி செய்தனர். நான் வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைக்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைக்கும்படி செய்து, அவர்களுக்காக ஜெபித்தேன்.
எனவே… (சகோ. பிரான்ஹாம் யாரிடமோ பேசுகின்றார் - ஆசி). இப்பொழுது நாளை காலை… இன்றிரவு இந்த கேள்விகளை நாம் பார்க்கலாம், அவைகளில் சில மிகவும் நல்ல கேள்விகள். கர்த்தர் எவ்வளவு நேரம் நம்மை அதில் வைத்திருக்கப் போகின்றாரோ, எனக்குத் தெரியாது. நாளை காலை பில்லி பால், ஜீன், லியோ, இவர்களில் யாராகிலும் ஒருவர் இங்கு 8.00 முதல் 8.30 வரைக்கும் ஜெப அட்டைகளை விநியோகம் செய்வார்கள். நகரத்துக்குப் புறம்பேயிருந்து வந்துள்ளவர்களே, நீங்கள் மறந்து போகாதபடிக்கு மறுபடியும் இதை உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் ஜெபவரிசையில் வர விரும்பினால், கூடுமான வரையிலும், நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்கள் வரிசையில் வருவது நலமாயிருக்கும்.
7 சில நேரங்களில் இந்த சபையில் அவர்கள், ''எப்படியோ…'' என்று சொல்லக் கூடிய நிலையை நாங்கள் அடைகிறோம். நகரத்துக்குப் புறம்பேயுள்ளவர்களை நாங்கள் மேடைக்கு கொண்டு வரும்போது, யாராகிலும் ஒருவர், "நல்லது, அவர்களுக்கு என்ன கோளாறு என்று எங்களுக்குத் தெரியாது, ஒருக்கால் அவர் தவறாக கூறியிருக்கலாம்'' என்கிறார். நாங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்தால், "அது ஏற்கனவே அவருக்குத் தெரிந்திருக்கும்'' என்கின்றனர். எனவே பிறகு அவர்கள்… ''அது ஜெப அட்டைகளிலேயே உள்ளது" என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியானால், ஜெப அட்டைகளை வைத்திராதவர் குறித்து என்ன? ஒவ்வொரு நாளும் இவ்வாறு கூறப்பட்டு வருகிறது. என்ன சொல்லுகிறீர்கள்? (சகோ. பிரான்ஹாம் ஒலிப்பெருக்கிக்கு சற்று பின்னால் நிற்கும்படியாக கேட்டுக் கொள்ளப்படுகிறார் - ஆசி). ஒலிப்பெருக்கி பின்னால் நிற்கவேண்டுமா? நல்லது, நான் எப்பொழுதும் பாதையில் நடுவிலே பிரசங்கிப்பவன் என்று உங்களுக்குத் தெரியும். எனவே நான் அப்படியே செய்கிறேன். இப்பொழுது பரவாயில்லையா? நல்லது. அது என்னவென்று உங்களிடம் கூறுகிறேன். இங்குள்ள நம்முடைய ஒலிப்பெருக்கி அமைப்பு மிகவும் தரம் குறைந்தது. இப்பொழுது நல்லது ஒன்றை வாங்க நாங்கள் எத்தனிக்கவில்லை. ஏனெனில் புது கூடாரத்தை நாங்கள் உடனடியாகக் கட்டத் தொடங்க தீர்மானித்துள்ளோம். அப்பொழுது இந்த இடத்தை சற்று விசாலமாக்கி, இன்னும் புது இடங்களை அதில் கட்டும்போது, நமக்கு நிறைய இடவசதி இருக்கும் (பாருங்கள்?). அப்பொழுது நாம் பெரிய கூட்டங்களை அங்கு வைக்கலாம்.
8 இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். காலையில் பையன்கள் - ஒருவர் அல்லது மூன்று பேரும்… 8.00 முதல் 8.30 மணி வரைக்கும் ஜெப அட்டைகளை விநியோகம் செய்வார்கள். எல்லோரும் வந்து இடங்களில் அமர போதிய நேரம் உண்டாயிருக்கும். அவர்கள் ஏன் ஜெப அட்டைகளைக் கொடுக்கின்றனர் என்று நான் உங்களிடம் கூறினேன். அது ஒரு ஒழுங்கைக் கடைபிடிக்க. பாருங்கள்? நான் இங்கு வந்து, ''இந்த ஸ்திரீ வரட்டும், இந்த ஸ்திரீ, இந்த மனிதன், இந்த ஸ்திரீ…'' என்று கூறினால் எப்படியிருக்கும்? பாருங்கள், அது ஒருவாறு கடினமாயிருக்கும். பாருங்கள்? பிறகு நீங்கள்… நான் அப்படி பலமுறை செய்திருக்கிறேன். நாளை காலையும் அநேகர் இல்லாமற்போனால், ஒருக்கால் நான் அப்படியே செய்யக்கூடும். நான், ''நகரத்துக்குப் புறம்பேயிருந்து இங்கு வந்துள்ள எத்தனை பேருக்கு கோளாறு உள்ளது, எழுந்து நில்லுங்கள்" என்பேன்.
9 சகோ. மெர்ஸியர், நீங்கள் என் உதவிக்கு வருவீர்கள். நீங்கள் எனக்கு உதவி செய்வீர்கள் அல்லவா? (சகோ. மெர்ஸியர் விடையளிக்கிறார் - ஆசி). ஓ, நீங்கள்… அவர் தன்னைக் காத்துக் கொள்ளவே வருகிறார். இன்று உங்கள் பெண் சிநேகிதியிடம் பேசினேன். நீங்கள் என்னிடம் நல்லவராயிருப்பது நலம் பாருங்கள்? சரி. அது நல்லது. சகோ. லியோ, அந்த தைரியத்தை நான் மெச்சுகிறேன். அது தவறாயிருக்கும்போது, நம்மால் இயன்ற வரையில், அதை சரிபடுத்த முயல்வோம்.
நகரத்துக்குப் புறம்பேயிருந்து வந்துள்ளவர்களில் கோளாறு உள்ளவர்களை தங்கள் கரங்களை உயர்த்தும்படி கேட்பேன். அதன் பிறகு அங்கு நான் நின்று கொண்டு, பரிசுத்தஆவி வரத்துவங்கி முழு கூட்டத்தையும் ஆட்கொள்ளும் வரைக்கும், யாராகிலும் ஒருவர் பேரில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பேன். அப்படி நடப்பதைக் கண்டவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனர்? நிச்சயமாக! பாருங்கள், பாருங்கள்? எனவே எந்த முறையை நான் கடைபிடித்தாலும், அதனால் பாதகமொன்றுமில்லை
10 இதை நீங்கள் நினைவில் கொள்ள விரும்புகிறேன். நான் மறுபடியும் அதை நாளை காலை கூற முயல்கிறேன். புறஜாதிகளுக்கு அருளப்பட்ட சுவிசேஷம், விசுவாச சுவிசேஷம், அது கிரியைகள் அல்லவே அல்ல. பாருங்கள்? நான் நேற்று இரவு கூறினது போன்று, பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவி விழுந்து, அவர்கள் யூதர்களிடம் சென்றபோது (அப். 19:5). யூதர்களை பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள அவர்கள் மேல், அவர்கள் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் சமாரியரிடம் சென்றபோதும், அவ்வாறே அவர்கள் மேல் அவர்கள் கைகளை வைக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர்கள் புறஜாதியாரிடம் கொர்நேலியுவின் வீட்டுக்குச் சென்றபோது, "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில்…'' அங்கு கைகள் யார் மேலும் வைக்கப்படவில்லை.
11 ஆசாரியனாகிய யவீருவின் மகள் மரணப்படுக்கையிலிருந்த போது, அவன், ''நீர் வந்து அவள் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்'' என்றான் (மாற்: 5:23). ஆனால் புறஜாதியான அந்த ரோம நூற்றுக்கு அதிபதியோ, "நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல, ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்'' என்றான் (லூக்: 7:6-7). அதுதான். பாருங்கள்?
அந்த சீரோபோனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயிடம் இயேசு, "பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல'' என்றார்.
அவள், "மெய்தான் ஆண்டவரே. ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே'' என்றாள்.
அப்பொழுது அவர், ''நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப் போயிற்று'' என்றார். (மாற்: 7:26-29). நீங்கள் நல்லவைகளைக் கூறுங்கள். மற்றவரைக் குறித்து நல்லது ஏதாகிலும் கூறுங்கள். இயேசுவைக் குறித்து பேசுங்கள். விசுவாசமுள்ள எதையாகிலும், உண்மையான எதையாகிலும் கூறுங்கள். பிசாசுகளை அப்புறப்படுத்துவதற்கு அதுவே வழி. அவர் அந்த பெண்ணுக்காக ஜெபம் செய்யவில்லை. அவள் சுகமடைந்துவிட்டதாக அவர் ஒரு வார்த்தையும் கூறவில்லை. அவர், ''நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம், நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம்…'' என்றார்.
12 அன்றொரு நாள் ஹாட்டி ரைட் ஒன்றையும் கேட்கவில்லை. அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் சரியான வார்த்தை கூறினாள், அது பரிசுத்த ஆவியைப் பிரீதிப்படுத்தினது. எனவே பரிசுத்த ஆவி அவளிடம் பேசினார். ''ஹாட்டி, நீ எது வேண்டுமானாலும் கேள். அது உண்மையில் நடக்கிறதா இல்லையாவென்று பார். எது வேண்டுமானாலும் கேள் (அங்கு உட்கார்ந்திருந்த ஊனமுள்ள அவளுடைய சகோதரியின் சுகத்துக்காக; மலையின் மேல் அவள் கஷ்டப்படுவதைத் தவிர்க்க பத்தாயிரம் டாலர்கள்; குன்றிப் போயிருந்த அவளுடைய உடலில் வாலிபம் திரும்ப வருதல்); நீ எதை வேண்டுமானாலும் இப்போதே கேள், அது உனக்கு உடனடியாக கொடுக்கப்பட வில்லையென்றால், நான் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி''. அது அற்புதமான ஒன்று, இல்லையா?
இயேசு, ''இந்த மலையைப் பார்த்து…'' என்றார். இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அது நாம் பிரவேசித்துக் கொண்டிருக்கும் ஊழியம். நாம் அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். விரைவில் கர்த்தராகிய இயேசுவின் வருகை இருக்கும், ஒரு நொடியில், ஒரு இமைப்பொழுதில் சபை மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு எடுத்துக்கொள்ளப்படுதலுக் கேற்ற விசுவாசம் இருக்கவேண்டும். இல்லையென்றால் நாம் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லவே முடியாது. கவலைப்படாதிருங்கள், அது இருக்கும், அது இருக்கும். இந்த கடைசி சபையின் வல்லமை தன் சகோதரர்களை உயிரோடு கொண்டு வரும், அந்த சபையின் வல்லமை தன் சகோதரர்களை உயிரோடு கொண்டு வரும். அந்த சபையின் வல்லமை அதன் சகோதரர்களை உயிரோடு கொண்டு வரும். இப்படியாக பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். அதை நாம் எதிர் நோக்கியிருக்கிறோம்.
13 மறந்து போக வேண்டாம், ஜெபஅட்டைகள் காலை 8 மணியிலிருந்து 8.30 மணி வரைக்கும். பிறகு எத்தனை அட்டைகள் மீதமுள்ளது என்று நான் கேட்பேன், பிறகு அட்டைகள் வழங்குவதை நிறுத்திவிட்டு, நான் சென்று உட்கார்ந்து கொள்வேன் (பாருங்கள்?). ஒருக்கால் அதற்குள் அவர்கள் எல்லா அட்டைகளையுமே விநியோகம் செய்திருக்கக் கூடும், அல்லது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அட்டைகள். பையன்கள் எழுந்து நின்று உங்கள் முன்னிலையில் அட்டைகளை ஒன்றொடொன்று கலந்துவிடுவார்கள். பிறகு உங்களுக்கு ஒன்று வேண்டுமா, உங்களுக்கு ஒன்று வேண்டுமா என்று கேட்டு கொடுப்பார்கள். பிறகு நான் வரும்போது, நான்… எங்கிருந்து கர்த்தர் கூப்பிடச் சொல்லுகிறாரோ… அவர், ''கூப்பிட வேண்டாம்" என்று சொல்லிவிட் டால், என்னவானாலும் நான் கூப்பிடவே மாட்டேன் (பாருங்கள்?)
நான் அந்த ஊழியம் மறைந்துகொண்டே வருகிறது; இதைக் காட்டிலும் ஒரு பெரிய ஊழியம் வந்து கொண்டிருக்கிறது. இதை ஞாபகம் கொள்ளுங்கள். இந்த மேடையின் மீதிருந்தோ அல்லது இந்த பிரசங்கபீடத்திலிருந்தோ கூறப்பட்ட ஒன்றாகிலும் இதுவரை தவறினதில்லை. கைகளை பிடித்து வியாதியை அறிவித்த ஊழியம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறது அல்லவா? அது என்ன செய்ததென்று பாருங்கள். இருதயத்தின் சிந்தனைகளை அறிந்துகொள்ளுதல் ஊழியம், அது என்ன செய்ததென்று பாருங்கள். இப்பொழுது இதை கவனியுங்கள்: வார்த்தையை உரைத்தால், அது என்ன செய்கிறதென்று பாருங்கள். நான் அநேக ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கூறினேன் - இந்த சபைக்கு (நான் இந்த கூடாரத்தை சேர்ந்தவர்களிடம் இதைக் கூறுகிறேன்) - மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு; ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது என்று கூறினேன். அது இப்பொழுது நடக்கப்பெறும் நேரத்தில் உள்ளது… அது இப்பொழுது உருவாகிக் கொண்டிருக்கிறது, அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! நமக்கு மிக்க மகிழ்ச்சி.
14 இங்கு சில கடினமான கேள்விகள் உள்ளன, அவைகளை உடனடியாக நாம் பார்க்க விரும்புகிறோம்! யாரோ ஒருவர் நான் வைத்திருந்த எல்லா புத்தகங்களையும் பார்த்திருக்கிறார். நான், "அறிவாளிக்கு ஒரே ஒரு புத்தகம் போதும்'' என்று கூறினேன். நான் அறிவாளியல்ல. எனவே எனக்கு நிறைய புத்தகங்கள் தேவையாயுள்ளன. இது 'டயக்ளாட்', இது வேதாகமம், இது ஒத்துவாக்கிய சங்கிரகம் (concordance) எனவே, அது… இந்த கேள்விகளுக்கு பதிலுரைக்க கர்த்தர் தாமே நமக்குதவி செய்து, அவருடைய தெய்வீக சித்தத்தின்படியும் அவருடைய வார்த்தையின்படியும் நம்மை வழிநடத்த வேண்டுமென்று இப்பொழுது அவரை வேண்டிக் கொள்ளப் போகின்றோம்.
15 இப்பொழுது, ஜெபத்துக்காக சிறிது நேரம் நாம் தலைவணங்குவோம். கர்த்தாவே, கடந்த மூன்று இரவுகளாக நீர் எங்களுக்கு செய்து வந்துள்ளதைக் குறித்து எங்கள் உள்ளத்தின் ஆழங்களிலிருந்து உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஓ, புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்துடன் போதகர்கள் அறையில் சந்தித்து, ஒருவரோடொருவர் கைகுலுக்கி, புதிய பாதையில் செல்வதைக் காணும்போது தொலைபேசியில் கூப்பிட்டு ஜனங்கள் உம்முடைய வார்த்தையை அறிந்துகொண்டு; பரிசுத்த ஆவியைப் பெறுவது எப்படியென்று, அது எவ்வாறு படிப்படியாக ஆலோசனை கூறுகிறது என்பதை அறிந்துகொண்டு பரிசுத்த ஆவியைப் பெறுவதைக் காணும்போது எங்கள் இருதயம் களிகூருகின்றது. கர்த்தாவே, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்.
நாங்கள் எளிய மக்கள் என்னும் காரணத்தால், நீர் காரியங்களை எங்களுக்கு மிகவும் எளிதாக்குகிறீர். நாங்கள் எப்பொழுதுமே எளியவர்களாயிருக்கும்படி செய்ய உம்மை வேண்டிக் கொள்கிறோம். ஏனெனில், தன்னைத் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான். உலக ஞானம் தேவனுக்கு பைத்தியமாயுள்ளது. பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கித்தினாலே இழந்து போனவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
16 இப்பொழுதும் பிதாவே, உத்தம இருதயங்களிலிருந்து எழுந்த அநேக கேள்விகள் என்னிடம் உள்ளன. அவைகளில் ஒன்றுக்கு தவறாக விடையளிக்கப்பட்டாலும், அது கேள்வி கேட்டவரை தவறான வழியில் நடத்திவிடும்; அவர்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் கேள்வியின் பேரில் தவறான வெளிச்சம் விழுந்துவிடும். எனவே தேவனாகிய கர்த்தாவே, உமது பரிசுத்த ஆவி எங்கள் மத்தியில் அசைவாடி இவைகளை வெளிப்படுத்தித் தருமாறு ஜெபிக்கிறேன். ஏனெனில் வேதத்தில், ''கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்'' என்று எழுதப்பட்டுள்ளது. அதைத்தான் நாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறோம், உமது இரக்கமாகிய கதவண்டை நின்று நாங்கள் தட்டிக் கொண்டிருக்கிறோம். உமது தெய்வீக நீதியின் நிழல்களில் நாங்கள் நின்றுகொண்டு, கிறிஸ்துவின் இரத்தத்துக்காகவும் பரிசுத்த ஆவிக்காகவும் கெஞ்சுகிறோம்.
மூன்று இரவுகள் பரிசுத்த ஆவியின் பேரில் பிரசங்கம் செய்து முடித்துவிட்டு இளைப்பாற வேண்டும் என்னும் காரணத்தால் இன்றிரவு நாங்கள் இங்கு வந்திருக்கவில்லை. நாங்கள் ஆழ்ந்த பக்தியுடனும் உத்தமத்துடனும் இங்கு வந்திருக்கிறோம். இதுவே பூமியில் நாங்கள் இருக்கும் கடைசி இரவு என்பது போல் நாங்கள் வந்திருக்கிறோம். எங்கள் ஜெபத்துக்கு பதிலளிப்பீர் என்று விசுவாசித்து வந்திருக்கிறோம். கர்த்தாவே, எங்களை உமது நித்திய ஜீவனால் இப்பொழுது திருப்தியாக்க உம்மை வேண்டிக் கொள்கிறோம். உமது வார்த்தையிலிருந்து பதிலுரைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே… ஓ, தேவனே, அது எங்கள் மத்தியிலுள்ள நீர் என்று நாங்கள் அறிந்துள்ளதால், இன்றிரவு நாங்கள் வாஞ்சிக்கும் காரியங்களை அவர் தாமே வெளிப்படுத்தி தரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். எங்கள் ஆத்துமாக்கள் இளைப்பாறி, எங்கள் சிந்தைகள் சமாதானம் பெற்று, தேவன் பேரில் விசுவாசம் வைத்து, அவர் வாக்களித்துள்ளதை பெற்றுக்கொள்ள முன்நோக்கி நடக்கவேண்டும் என்பதே எங்கள் வாஞ்சையாயுள்ளது. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
17 என்னிடம் கொடுக்கப்பட்ட எல்லா கேள்விகளும் உள்ளன. ஒரு கேள்வியைத் தவிர, சென்ற இரவுக்கு முந்தின இரவு என்னிடம் கேள்வி கேட்ட சகோ. மார்டினுக்கு நான் பதிலளித்தேன். ஒரே ஒரு கேள்வி. அநேக கடிதங்களை நேற்றிரவு இங்கிருந்தன. ஆனால் அவை ஜெப விண்ணப்பங்கள். சகோ. மார்டின் என்னிடம் யோவான் 3:16-ஐக் குறித்து கேள்வி கேட்டார்… இல்லை, யோவான் 3-ல் அது உள்ளதென்று நினைக்கிறேன். அதாவது, "ஒருவர் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்" என்னும் வசனத்தை, நான் எபிரேயர் நிரூபத்தின் பேரில் அனுப்பின ஒலிநாடாவுடன் ஒப்பிட்டு ஒரு கேள்வி கேட்டார். நேற்று மாலை பின் அறையில் நான் அவரைச் சந்தித்தபோது அவருக்கு பதிலுரைக்க இன்று எனக்கு கிடைத்துள்ள இந்த தருணத்துக்கு முன்பாகவே, அங்கேயே அந்த பொருளின் பேரில் அவருக்கு பதிலுரைத்தேன்.
நேற்று இரவு கூட்டத்துக்கு வராதவர் யாராகிலும் இங்குள்ளனரா? உங்கள் கைகளை நான் காணட்டும் நேற்று இரவு வராதவர். ஓ, நீங்கள் எங்களுடன் இருந்திருந்தால் நலமாயிருக்கும். எங்களுக்கு ஒரு மகிமையான தருணம் உண்டாயிருந்தது. பரிசுத்த ஆவி…
18 நான் ஒரு நிமிடம் இதை கூற விரும்புகிறேன்… அதனால் பாதகமில்லை. இது ஒலிப்பதிவாகின்றது. நான் இப்பொழுது கூறப்போவதில், அல்லது கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களில், இங்குள்ள போதகர் அல்லது நபர் யாராகிலும் இணங்காமலிருந்தால், சகோதரனே, அதை வித்தியாசமாக எண்ண வேண்டாம். இந்த ஒலிநாடா இங்குள்ள எங்கள் கூடாரத்தில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எங்கள் ஜனங்களுக்கு நாங்கள் போதிக்கிறோம். வெவ்வேறு விசுவாசம் கொண்ட போதகர் அநேகர் இங்குள்ளனர். நேற்று இரவு வர முடியாத எங்கள் ஜனங்களில் சிலர் இன்று வந்துள்ளதை நான் காண்பதால், நான் மறுபடியும் இந்த பொருளின் பேரில் சிறிது நேரம் பேசு விரும்புகிறேன். நீங்கள் அனுமதித்தால், நேற்று மாலை நான் பேசினதை அதாவது பெந்தெகொஸ்தேவைக் குறித்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதைக் குறித்து.
19 கிரேக்க மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 'எம்பாடிக் டயக்ளாட்' (Emphatic Diaglott)டிலிருந்து நேற்று மாலை நான் படித்தேன். அது இப்பொழுது என் முன்னால் உள்ளது. அதுவே கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மூல மொழிபெயர்ப்பு. அது மற்ற மொழிபெயர்ப்புகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாமல், நேரடியாக கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. சில சமயங்களில், ஒரே ஆங்கில பதம் அநேக அர்த்தங்களைக் கொண்டதாயுள்ளது. உதாரணமாக 'போர்ட்' (Board) என்னும் ஆங்கிலச் சொல்லை நாம் எடுத்துக்கொள்வோம். நீங்கள், ''நாங்கள் அவரை போரடித்தோம் (boring him)என்று தான் அவர் கூறினார்" எனலாம். "அவர் தனது 'போர்டுக்காக' (சாப்பாட்டிற்காக) பணம் கொடுத்தார்" அல்லது, "அது அவர் வீட்டின் ஓரத்திலுள்ள 'போர்டு' (பலகை)". பார்த்தீர்களா? ஏதாவது ஒரு… இந்த ஒரு வார்த்தையை நான்கு அல்லது ஐந்து வெவ்வேறு அர்த்தங்களில் உபயோகிக்க முடியும். எனவே நாம் முழு வரியையும் படித்து அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது 'காணுதல்' (See) என்னும் ஆங்கிலசொல். அது 'புரிந்துகொள்ளுதல்' என்று அர்த்தம் பெறும், அல்லது 'தண்ணீர் நிறைந்த கடல்' (Sea) என்றும் அதை அர்த்தம் கொள்ளலாம். அல்லது, 'காணுதல்' என்றும் அது பொருள்படும். பாருங்கள்? ஆனால் நேற்று இரவு நான் பேசின அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள, "அக்கினி மயமான நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது…'' அதைக் குறித்து சிறிது நேரம் மறுபடியும் கூற விரும்புகிறேன். நாம் தொடருவதற்கு முன்பு, நேற்று கூறப்பட்டதை சிறிது நேரம் மறுபடியும் பார்க்கலாமா?
20 இப்பொழுது ஜேம்ஸ் அரசனால் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம், அல்லது வேறெந்த மொழிபெயர்ப்பை நீங்கள் வைத்திருந்தாலும், அதைத் திருப்புங்கள். அதை நான் படிக்க விரும்புகிறேன். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அதை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். இன்று அநேகர், என் சகோதரி உட்பட, என்னை தொலைபேசியில் கூப்பிட்டு என்னிடம் கூறினார்கள்… திருமதி. மார்கன்… நேற்று மாலை இங்கு வந்திருந்த பலர், திருமதி. மார்கன் எங்கள் சகோதரிகளில் ஒருத்தி. அவள் மருத்துவர்களால் ஒரு காலத்தில் கைவிடப்பட்டவள். அவள் பதினாறு, பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் தாக்கப்பட்டு லூயிவில்லில் மரிக்க வேண்டியவர்களின் பட்டியலில் இடம் பெற்றவள். அவள் இன்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் என்று நினைக்கிறேன். நான் ஒலிப்பெருக்கியினுள் நேரடியாக பேசின காரணத்தால், அவளால் நேற்று கேட்க முடியவில்லை என்று கூறினாள். அப்படிப்பட்டவர்களின் நிமித்தம் இதை மறுபடியும் சிறிது நேரம் கூற விரும்புகிறேன்.
இப்பொழுது நான் அப்போஸ்தலர் 2-லிருந்து படிக்கப் போகின்றேன்.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு…
(இந்த வார்த்தை "ஒரே கருத்துடையவர்களாய்'' என்பதைக் காட்டிலும் எனக்கு அதிகம் பிடிக்கும். ஏனெனில் நீங்கள் பெரும்பாலும் ஒரு பொருளின் பேரில் ஒரே கருத்து கொண்டிருக்கலாம். ஆனால் இங்கு அவர்கள் ஒரு மனப்பட்டிருந்தார்கள்)…
ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்.
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல், வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி,
அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
(அவர்கள் முழங்கால்படியவில்லை, ஜெபம் செய்யவில்லை, உட்கார்ந்திருந்தனர்).
அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் (நா-வு-க-ள்) போல் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது.
("ஒவ்வொருவர்" - ஒருமை)
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின் வரத்தின்படியே, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.
வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம் பண்ணினார்கள்.
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
(அப். 2:1-6)
21 இப்பொழுது கவனியுங்கள்! அக்கினி வந்தபோது, அது நாவுகள். அவர்கள் பேசினபோது, அது பாஷைகள். நாவுகளுக்கும் பாஷைகளுக்கும் அதிக வித்தியாசமுண்டு. நமக்கு இவ்விரண்டும் ஒன்றே (ஆங்கிலத்தில் 'tongues' என்னும் சொல் நாவுகளையும் பாஷைகளையும் குறிக்கும் - தமிழாக்கியோன்). ஆனால் கிரேக்க மொழியில் 'நாவுகள்' என்பது உடலின் ஒரு உறுப்பைக் குறிக்கும். இது, காது (சகோ. பிரான்ஹாம் உதாரணப்படுத்துகிறார் - ஆசி). அது பாஷையைக் குறிக்காது, அது உடலிலுள்ள ஒரு உறுப்பு. ''அக்கினி மயமான நாவுகள்' என்பது 'நாவுகளைப் போன்று' தீச்சுடர், அக்கினி ஜுவாலை என்று பொருள்படும். அது ஒவ்வொரு இடத்திலும் வலியுறுத்தப்படுவதைக் காணுங்கள்.
இன்றிரவு நாங்கள் ஒரு சிறு நாடகம் அளிக்கப் போகின்றோம். ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை உங்களிடம் விட்டுவிடப் போகின்றேன். அது உங்களுக்கு முரணாகத் தென்படுமானால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால் எவன் ஒருவனும் தேவனிடத்திலிருந்து பெறக் கூடிய ஒரே வழி, விசுவாசத்தின் மூலமே. நீங்கள் ஒன்றை செய்வதற்கு முன்பு…
22 நான் புரியும் செயலில் எனக்கு விசுவாசம் இருக்கவேண்டுமானால், நான் என்ன செய்கிறேன் என்பதை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் ஏன் உங்கள் மனைவியை மணம் புரிந்தீர்கள்? அவள் மேல் உங்களுக்கு விசுவாசம் இருந்தது. நீங்கள் அவளை சோதித்துப் பார்த்தீர்கள், அவளை கவனித்து வந்தீர்கள். அவள் எங்கிருந்து வந்தாள் என்றும், அவள் யாரென்றும் நீங்கள் அறிந்திருந்தீர்கள். அப்படித்தான் தேவனுடைய வேத வாக்கியத்திலும். அதுதான் இந்த தரிசனங்களையும், அக்கினி ஸ்தம்பத்தையும் ரூபகாரப்படுத்துகிறது. ஏனெனில் தேவன் அதை வாக்கருளியுள்ளார். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். அவருடைய வார்த்தையினால் நான் அவரை சோதித்துப் பார்த்து, அது உண்மையென்று அறிந்திருக்கிறேன். நீங்கள் அவருடைய வார்த்தையைப் பின் பற்றுகிறீர்கள். எங்காவது சிறிது குழப்பம் இருந்தால், எங்கோ தவறுள்ளது. ஏனெனில் தேவன் (கவனியுங்கள்!)… தேவன் தமது விதிகளுக்கு மாறாக எதையுமே செய்ததில்லை, செய்யப்போவதுமில்லை. குளிர் காலம் கோடை காலத்தில் வரமுடியாது. அவ்வாறே கோடை காலமும் குளிர்காலத்தில் வரமுடியாது. இலைகள் வசந்த காலத்தில் உதிர்ந்து, இலையுதிர் காலத்தில் முளைப்பதில்லை. உங்களால் அப்படி செய்ய முடியாது.
23 நேற்று இரவு ஆர்டீஷியன் ஊற்றிலிருந்து உங்கள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதைக் குறித்து நான் கூறினது போன்று அல்லது நீங்கள் பயங்கரமான இருளில் வயலின் நடுவில் நின்றுகொண்டு, "ஓ, மகத்தான மின்சாரமே, நீ வயலில் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் பாதை தவறிவிட்டேன், எங்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று காணமுடியவில்லை. நான் நடப்பதற்கென்று வெளிச்சம் தா. வயல் முழுவதற்கும் வெளிச்சம் தர போதிய மின்சாரம் உள்ளது'' என்று கூறுவது போன்று. அது உண்மை. ஆம் ஐயா! இந்த அறைக்கு வெளிச்சம் தர இங்கு போதிய மின்சாரம் உள்ளது. ஆனால் நீங்கள் அதை கையாள வேண்டும். நீங்கள் உங்கள் தொண்டை கிழிய எவ்வளவுதான் கூச்சலிட்டாலும் அது வெளிச்சம் தராது. நீங்கள் மின்சார விதிகளை அனுசரித்து செயல்புரிந்தால், வெளிச்சம் பெறுவீர்கள்.
அப்படித்தான் தேவனுடைய வழிகளும் உள்ளன. தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த மகத்தானவர். அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். ஆனால் நீங்கள் அவருடைய பிரமாணங்களையும் கட்டளைகளையும் பின்பற்றும்போது மாத்திரமே அவர் கிரியை செய்வார். நண்பர்களே, இதை நான் கூறுகிறேன். அது தவறினதை நான் கண்டதில்லை, அது தவறாது.
24 இப்பொழுது, நாம் கவனிப்போம். சீஷர்கள் இரட்சிக்கப்பட்டு வார்த்தையின் பிரகாரம் பரிசுத்தமாக்கப்பட்ட பின்பு இயேசு லூக்கா: 24:49-ல் அவர்களுக்கு கட்டளையிடுகிறார், அவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து நீதிமானாக்கப்பட்டனர். யோவான்: 17:17-ல் இயேசு, ''பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே (வார்த்தையே) சத்தியம்'' என்று கூறின விதமாக அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டனர். அவரே வார்த்தையாயிருந்தார்.
அவர்கள் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும், மரித்தோரை உயிரோடெழுப்பவும் அவர் அதிகாரம் கொடுத்தார். அவர்கள் சந்தோஷத்தோடு திரும்பி வந்தனர். அவர்களுடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அதையெல்லாம் இப்பொழுது நாம் பார்த்தோம் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். இருப்பினும் அவர்கள் இன்னும் குணப்படவில்லை (converted). இயேசு சிலுவையிலறையப்படும் அந்த இரவு பேதுருவிடம், "நீ குணப்பட்ட பின்பு, உன் சகோதரரை ஸ்திரப்படுத்து" என்றார்.
25 பரிசுத்த ஆவி… நீங்கள் நித்திய ஜீவனுக்கு ஏற்ப (unto) விசுவாசிக்கிறீர்கள். ஆனால் பரிசுத்தஆவி வரும்போது, அது நித்திய ஜீவன். நீங்கள் அதற்கேற்ப விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதலின்போது ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுகிறீர்கள் (begotten). ஆனால் பரிசுத்தஆவி வரும் வரைக்கும் நீங்கள் ஆவியினால் பிறப்பதில்லை (never born). அது உண்மை. ஒரு குழந்தை தன் தாயின் கர்ப்பத்தில் ஜீவனைப் பெற்றுள்ளது, சிறு தசைகள் அசைகின்றன. அது ஜீவன், ஆனால் அது ஜீவ சுவாசத்தை தன் நாசிகளில் சுவாசிக்கும்போது, அது வித்தியாசமான ஜீவன். அது வித்தியாசமானது. அதுதான் அது. அது…
என் அருமை மெதோடிஸ்டு சகோதரனே, யாத்திரீக பரிசுத்தரே, நசரீன்களே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பரிசுத்தமாக்குதலினின்று வித்தியாசப்பட்டது. பரிசுத்தமாக்கப்படுதல் என்பது சுத்திகரிப்பு. அது ஜீவனைப் பெற ஆயத்தப்படுத்துகிறது. ஆனால் பரிசுத்தஆவி வரும்போது, அதுவே ஜீவன். பரிசுத்தமாக்கப்படுதல் பாண்டத்தை சுத்தமாக்கி ஆயத்தப்படுத்துகிறது. பரிசுத்த ஆவி பாண்டத்தை நிறைக்கிறது. பரிசுத்தமாக்கப்படுதல் என்றால், "சுத்தமாக்கப்பட்டு ஊழியத்திற்கென்று ஒதுக்கி வைக்கப்படுதல்" என்று பொருள். பரிசுத்தஆவி அதை ஊழியத்தில் புகுத்துகின்றது. நீங்கள் தான் தேவன் சுத்தமாக்கின பாண்டம்.
26 பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்று நாம் காண்கிறோம். தேவன் உங்கள் மேல் அக்கினி ஸ்தம்ப வடிவில் மோசேயுடன் கூட இருந்தார். தேவன் இயேசுவுக்குள் உங்களோடு இருந்தார். இப்பொழுது அவர் பரிசுத்த ஆவியாக உங்களுக்குள் இருக்கிறார். மூன்று தெய்வங்கள் அல்ல, ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களில் கிரியை செய்தல்.
தேவன் தம்மை தாழ்த்தி, மனிதன் மேல் அவர் இருந்த நிலையிலிருந்து கீழே இறங்கி வந்தார். மனிதன் அவரைத் தொடமுடியவில்லை ஏனெனில் அவன் ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்து, அவரிடம் கொண்டிருந்த ஐக்கியத்தினின்று தன்னைப் பிரித்துக் கொண்டான். என்ன நேர்ந்தது? அவர் அவன் மேலிருக்க வேண்டியதாயிற்று. காளை, வெள்ளாட்டுக் கடா, இவைகளின் இரத்தம் அவன் மறுபடியும் தேவனிடம் ஐக்கியங்கொள்ள அவனை அனுமதிக்கவில்லை. ஆனால் பிரமாணங்களின் மூலமாகவும் கட்டளைகளின் மூலமாகவும், வரப்போகும் அந்த நேரத்துக்கு முன் நிழலாக, காளைகளும் ஆடுகளும் பலி செலுத்தப்பட்டன. பிறகு தேவன் இறங்கி வந்து பரிசுத்தமாக்கப்பட்ட ஒரு சரீரத்தில்; கன்னிகையின் மூலம் பிறந்த ஒரு சரீரத்தில் வாசம் பண்ணினபோது, தேவன் தாமே… தேவன் என்ன செய்தாரென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை. அவர் தமது கூடாரத்தை நமது மத்தியில் வைத்தார், தேவன் இயேசுகிறிஸ்து என்றழைக்கப்பட்ட கூடாரத்தில் வாசம் செய்தார். அவர் நமது மத்தியில் தமது கூடாரத்தைப் போட்டார். (காலையில் அதைக் குறித்து பேசினேன், எனவே அதை விட்டுவிடுகிறேன்). எப்படி தேவன் நமது மத்தியில் வாசம் செய்தாரென்று.
27 இப்பொழுது தேவன் நமக்குள் இருக்கிறார். யோவான்: 14-ல் இயேசு, ''நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்றார். தேவன் நமக்குள் இருத்தல். அதன் நோக்கம் என்ன? அவருடைய திட்டத்தைச் செய்ய.
தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவர் மனிதர்களிடையே கிரியை செய்ய விரும்பினார். அவர் அதை அக்கினி ஸ்தம்பத்திலே கொண்டு வந்தார். அது இஸ்ரவேல் புத்திரரின் மேல் தொங்கிக் கொண்டிருந்த தெய்வீக அக்கினியாயிருந்தது. பின்பு அதே அக்கினி இயேசு என்னும் சரீரத்தில் வெளிப்பட்டது. அவரே அந்த அக்கினி என்று அவர் கூறினார். ''ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்'' (யோவான்: 8:58), அவரே அந்த அக்கினி. ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், நான் மறுபடியும் தேவனிடத்துக்குப் போகிறேன்'' (யோவான்: 16:28). அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலுக்குப் பின்பு பரி. பவுல் அவரை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தான் - அப்பொழுது அவனுடைய பெயர் சவுல் என்று இருந்தது. அவர் அந்த சமயத்தில் மறுபடியும் அக்கினி ஸ்தம்பத்துக்கு திரும்பிவிட்டார். ஒரு ஒளி அவன் கண்களை குருடாக்கினது. அது உண்மை.
இன்றைக்கு அவர் இங்கு அதே அக்கினி ஸ்தம்பமாக, அதே தேவனாக, அதே அடையாளங்களையும் அதே கிரியைகளையும் செய்து கொண்டிருக்கிறார். ஏன்? அவர் தமது ஜனங்களின் மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறார், அவர் நமக்குள் இருக்கிறார். நான்… அவர் இப்பொழுது உங்களோடு கூட இருக்கிறார். "நான் உங்களுடனே வாசம் செய்து, உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களுக்குள் இருப்பேன்". அவர் நம்மோடு கூட இருப்பார்.
28 இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் எருசலேமுக்குச் சென்று அங்கு காத்திருக்கும்படி இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். 'காத்திருங்கள்' என்னும் சொல் 'ஜெபித்துக் கொண்டிருங்கள்' என்று அர்த்தம் கொண்டதல்ல. 'காத்திருங்கள்' என்று தான் அதன் அர்த்தம். அவர்கள் பிரசங்கிப்பதற்கு இன்னும் தகுதியுள்ளவர்களாக ஆகவில்லை. ஏனெனில் அவர் உயிர்த்தெழுந்தாரென்று, அவரை வெளிப்புறம் ஒரு நபராக கண்டதன் மூலம் அவர்கள் அறிந்திருந்தனர். உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் அவர்கள் பிரசங்கிக்கவோ அல்லது வேறொன்றும் செய்யவோ கூடாதென்று அவர் கட்டளையிட்டிருந்தார். எந்த ஒரு போதகரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் தேவனால் அனுப்பப்படவில்லை. அல்லது சரியான போதகராக நியமிக்கப்படவில்லை என்பதே என் கருத்து. ஏனெனில் தேவன் முடிவற்றவர். தேவன் ஒருமுறை என்ன செய்கிறாரோ, அதையே எப்பொழுதும் செய்கிறவராயிருக்கிறார். அவர்கள் பெந்தெகொஸ்தேவுக்கு சென்று பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெறாமல் பிரசங்கிப்பதை தேவன் அனுமதிக்காமல் இருப்பாரானால், எந்த ஒரு மனிதனும் - அவனுக்கு ஆழ்ந்த விருப்பம் அல்லது ஒரு ஸ்தாபனம் அவனை போதகராக நியமித்தாலொழிய - பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறாமல் பிரசங்க பீடத்தில் ஏறுவதற்கு உரிமை கிடையாது. அது முற்றிலும் உண்மை. அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறும் வரைக்கும் ஏதோ ஒரு ஸ்தாபனத்தின் அறிவால் விளைந்த கருத்தினால் வழிநடத்தப்படுகிறான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு அவன் புறாவின் உணவை அவர்களுக்கு அளிக்கிறான் - நேற்று மாலை நாம் பேசின, 'ஆட்டுக்குட்டியும் புறாவும்' என்னும் செய்தி போன்று.
29 இப்பொழுது கவனியுங்கள். அவர், ''நீங்கள் எருசலேமுக்குப் போய் அங்கு தங்கியிருங்கள். நான் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை அனுப்பும் வரைக்கும் அங்கு காத்திருங்கள்'' என்றார். அவர்கள் என்ன செய்தார்கள்? அங்கு புருஷர்களும் ஸ்திரீகளும் நூற்றிருபது பேர் இருந்தனர். அவர்கள் ஆலயத்திலிருந்த மேலறைக்குள் சென்றனர். அது பெந்தெகொஸ்தே பண்டிகையின் நாளுக்கு சமீபமாயிருந்தது, பிரகாரத்தை சுத்திகரித்தல், பஸ்கா ஆட்டுக்குட்டி பலிசெலுத்தப்படுதல், அதன் பின்பு பெந்தெகொஸ்தே பண்டிகை, அறுப்பின் முதற் பலன்கள், பெந்தெகொஸ்தே யூபிலி. கட்டிடங்களின் மேல்…
நான் இந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். கிழக்கத்திய நாடுகளில் படிக்கட்டுகள் உள்ளே இருப்பது மிக ஆபூர்வம். அவை சாதாரணமாக வெளிப்புறத்தில் இருக்கும். ஆலயத்தின் வெளிப்புறத்தில் ஒரு சிறு அறைக்கு செல்லும் படிக்கட்டு ஒன்று இருந்ததாக நமக்கு கூறப்பட்டுள்ளது. அந்த படிக்கட்டு மேலே சென்று, சென்று, சென்று, முடிவில் நீங்கள் ஒரு சிறு அறையை அடைகின்றீர்கள்… ஆலயத்தின் மேலுள்ள சேமிப்பு அறையைப் போன்ற ஒரு சிறு அறை; ஒரு மேலறை. அவர்கள் மேலறையில் கூடியிருந்ததாகவும் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் வேதம் கூறுகின்றது. ஏனெனில் அவர்கள் கர்த்தராகிய இயேசுவை வழிபட்டதனால் யூதர்கள் அவர்களை சிதறப்பண்ணுவார்களோ என்று அவர்கள் பயந்தனர். முக்கியமாக, பிரதான ஆசாரியனாகிய காய்பாவும், பொந்தியு பிலாத்துவும் அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்த பிறகு, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்ட எவரையும் ஒழித்துவிடுவது என்று அவர்கள் முடிவு செய்திருந்தனர். கதவுகள் அடைக்கப்பட்டு, அவர்கள் காத்திருந்தனர்.
30 அப்படிப்பட்ட அறைகளுக்கு சன்னல்கள் கிடையாது. சன்னல்கள் கம்பிகள் போட்ட சிறு திறப்புகள் மாத்திரமே. கதவுகளை நீங்கள் இழுத்து திறக்கவேண்டும். அந்த அறைகளில் சிறு எண்ணெய் விளக்குகள் தொங்கவிடப்பட்டு, அவை எரிந்து கொண்டிருக்கும். நீங்கள் கலிபோர்னியாவிலுள்ள கிளிஃப்டன் கஃபீடரியாவின் அடித்தளத்துக்கு எப்பொழுதாவது சென்றிருந்தால், மேலறையைப் போன்ற ஒன்றை அங்கு காணலாம். நீங்கள் எப்பொழுதாகிலும் அங்கு சென்றதுண்டா? எத்தனை பேர் அங்கு சென்றிருக்கிறீர்கள்? ஜனங்கள் தலையசைப்பதை நான் காண்கிறேன். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். சரி. நீங்கள் அங்கு சென்றால், கெத்சமனே தோட்டத்தைக் காண்பீர்கள். அதற்கு முன்பு நீங்கள் அந்த கிழக்கத்திய அறைகள் ஒன்றில் நுழையவேண்டும். அது முற்றிலும் உண்மை. அங்கு ஒலிவ எண்ணெயால் நிரப்பப்பட்ட ஒரு சிறு விளக்கையும், அதில் ஒரு சிறு திரி மூழ்க்கப்பட்டு அது எரிந்து கொண்டிருப்பதையும் காண்பீர்கள்.
அவர்கள் வெளியேயிருந்த படிக்கட்டுகளின் வழியாக ஏறி அந்த மேலறையை அடைந்தனர் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் யூதருக்கு பயந்ததால் உள்ளே சென்று ஒளிந்துகொண்டனர். மேலறைக்குச் செல்லும்படி இயேசு அவர்களிடம் கூறவில்லை. அவர் "எருசலேமில் காத்திருங்கள்'' என்று மாத்திரம் கூறினார். அவர்கள் ஒரு வீட்டில் கூடியிருந்தால், என்ன நடந்திருக்குமென்று கூறமுடியாது. ஒருக்கால் யூதர்கள் வந்து அவர்களைப் பிடித்துக்கொண்டு போயிருக்கக் கூடும். எனவே மேல் மாடியிலுள்ள ஒரு சிறு பழைய அறைக்கு அவர்கள் சென்று, யூதர்கள் அங்கு வராதபடிக்கு கதவைத் தாளிட்டுக் கொண்டனர். அவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டு பத்து நாட்கள் காத்திருந்தனர்.
31 இப்பொழுது நாம் அப்போஸ்தலர்: 1-ம் அதிகாரத்தில் இருக்கிறோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அந்த காட்சி உங்களுக்கு புரிந்துவிட்டதா? கட்டிடத்தின் வெளிப்புறத்தில் படிக்கட்டு மேலே சென்றது. அவர்கள் அதன் வழியாக அந்த சிறு அறைக்குள் நுழைந்தனர். கீழே தேவாலயத்தில் அவர்கள் பெந்தெகொஸ்தே பண்டிகையை ஆசரித்துக் கொண்டிருந்தனர். ஓ, ஒரு மகத்தான நேரம் உண்டாயிருந்தது, பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு, தேவன் தாம் வாக்களித்ததை அனுப்புவார் என்னும் விசுவாசமுடையவர்களாயிருந்தனர். அவ்வாறே இங்குள்ள ஒவ்வொரு நபரும் இன்றிரவு ஒருமனப்பட்டு, என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது மறுபடியும் நிகழ வேண்டும். அவர்களுக்கு இருந்தவாறே, அந்த வாக்குத்தத்தம் இன்றைக்கும் உள்ளது. பாருங்கள்?
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? கட்டளைகளை பின்பற்றிக் கொண்டிருந்தனர். "அதுவரைக்கும் காத்திருங்கள்…" என்று தேவன் அளித்த கட்டளையை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.
32 அவர்கள் யூதர்களுக்கு பயந்திருந்தனர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அப்பொழுது சடுதியாக பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம் உண்டானது. அது பலத்த காற்று அல்ல. அது பலத்த காற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம். மொழி பெயர்ப்பாளர் அளித்துள்ள விரிவுரைகளை (comments) இன்னும் சில நிமிடங்களில் நான் படித்து காண்பிக்கிறேன். அது பலத்தகாற்று அடிக்கிறது போல ஒரு முழக்கம், வேறு விதமாகக் கூறினால், அது இயற்கைக்கு மேம்பட்ட காற்று (ஓ!), அவர்களால் உணர முடிந்த ஒன்று. அந்த காற்று அவர்களுக்குள் இருந்தது. அப்பொழுது பலத்த காற்று வந்தது - பலத்த காற்று போல் ஒன்று. காற்று பலமாக அடிக்கவில்லை. பலத்த காற்று அடிக்கும் போது ஏற்படுகிற முழக்கம்போல் ஒருமுழக்கம் உண்டானது. (சகோ. பிரான்ஹாம் காற்று அடிக்கும்போது ஏற்படுகிற ஓசையை தன் வாயினால் உண்டாக்கிக் காண்பிக்கிறார் - ஆசி). அதை நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்ததுண்டா? ஓ, என்னே! பலத்த காற்று அடிக்கிறது போல, இப்பொழுது கவனியுங்கள், அது நிரப்பிற்று. இங்கு ''எல்லாவற்றையும்" என்று ஆங்கில வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. (தமிழல் 'வீடு முழுவதையும்') என்றே உள்ளது. ஆனால் கிரேக்கமொழியில் "வீடு முழுவதையும்" என்று எழுதப்பட்டுள்ளது. அதாவது அந்த வீட்டில் இருந்த கீறல்கள், முனைகள், ஓட்டைகள் ஒவ்வொன்றையும் அது நிரப்பினது. "சகோதரரே, நான் உணருவதை நீங்களும் உணருகிறீர்களா?" என்று கேட்பதல்ல அது. அது பலத்த காற்றுபோல் எல்லாவிடங்களையும் நிரப்பினது. இப்பொழுது கவனியுங்கள். "அப்பொழுது பலத்தகாற்று அடிக்கிற முழக்கம் போல், வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி" (இரு சொற்களையும் இணைக்கும் இடைச்சொல்லை கவனியுங்கள். (ஆங்கிலத்தில் 'and') என்னும் இடைச்சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழில் அத்தகைய இடைச்சொல் கிடையாது - தமிழாக்கியோன்). அதை கவனிக்காமல் விட்டுவிட்டால், (அதன் அர்த்தமே மாறிவிடும் பாருங்கள்?) முழக்கமுண்டாகி (முதலில் நடந்தது முழக்கம், அவர்கள் மேல் பலத்த காற்று அடிப்பது போன்ற ஒரு முழக்கம்). முழக்கமுண்டாகி (நேற்றிரவு நான் கடைக்குச் சென்று ஒரு ரொட்டியும் இறைச்சியும் வாங்கினேன். ரொட்டி ஒரு பொருள், இறைச்சி மற்றொரு பொருள். ஆனால் ஒன்று மற்றொன்றுடன் சம்பந்தப்பட்டது). முழக்கம் என்பது ஒன்று. அது அவர்களிடம் உண்டானது. "அப்பொழுது பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு…''
33 இங்குள்ள யாராகிலும் சிசில் டிமில் தயாரித்த ''பத்து கற்பனைகள்" திரைப்படம் கண்டதுண்டா? அதில் பத்து கற்பனைகள் எழுதப்பட்ட போது நீங்கள் கவனித்தீர்களா? அவர் எப்படி அதை புகைப்படம் எடுத்தார் என்று எனக்குத் தெரியவில்லை. அதில் நான் கண்ட இரண்டு மூன்று காரியங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதலாவதாக, அந்த மரகத நிறம் கொண்ட ஒளி. அது அப்படியே தோற்றமளித்தது. பாருங்கள்? வேறொன்று அந்த கற்பனைகள் எழுதப்பட்டபோது. அது எழுதி முடித்த பின்பு, அந்த பெரிய அக்கினி ஸ்தம்பத்திலிருந்து சிறு அக்கினி நாவுகள் பறந்து சென்றதை கவனித்தீர்களா? பெந்தெகொஸ்தே நாளன்றும் அப்படித்தான் இருந்தது என்று நினைக்கிறேன். அவர்களுக்குக் காணப்பட்டது… அவர்கள் அதைக் காணமுடிந்தது. அது, "அவர்களுக்குள் விழுந்தது" என்று கூறவில்லை. அப்பொழுது அக்கினி மயமான நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு - இங்குள்ள நாவைப்போல் (சகோ. பிரான்ஹாம் தமது நாவை நீட்டிக் காட்டுகிறார் - ஆசி). நாவின் வடிவம் போன்ற அக்கினி நாவுகள். நான் முன்பு கூறினது போன்று காது என்னும் சொல் காதைக் குறிக்கின்றது; அவ்வாறே விரல் என்னும் சொல் விரலைக் குறிக்கின்றது. விரல் என்றால் நீங்கள் விரலைக் கொண்டு தொட்டீர்கள் என்று அர்த்தமல்ல. அது விரலைப் போல் காணப்பட்டது. காது என்றால், அவர்கள் காதினால் கேட்டார்கள் என்று அர்த்தமல்ல. அது காதைப் போல் காணப்பட்டது. இது காண்பதற்கு நாவைப் போலிருந்த அக்கினியேயன்றி, யாரோ ஒருவர் பேசினார் என்று அர்த்தமல்ல. அது நாவைப் போல் காணப்பட்ட அக்கினி.
34 இப்பொழுது கவனியுங்கள். கிரேக்க மொழியில் அது எவ்வாறுள்ளது என்று பாருங்கள்.
சடுதியாக ஒரு முழக்கமுண்டாகி… பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல… (3-ம் வசனம்).
பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன. (அவர்களுக்குள் பிரிந்திருக்கும் நாவுகள் இருந்ததென்றோ, அல்லது பிரிந்திருக்கும் பாஷையை அவர்கள் பேசினர் என்றே இல்லை. அவை பிரிந்திருக்கும் நாவுகள், அவர்களுக்குக் காணப்பட்டன. இப்பொழுது கவனியுங்கள். அது இன்னும் அவர்கள் மேல் வரவில்லை. அது அறையில் காற்றைப் போல சுழன்று கொண்டிருந்தது). அவர்களுக்குக் காணப்பட்டது, அக்கினி மயமான பிரிந்திருக்கும் நாவுகள்… (அவர்களுக்கு முன்னால் இருந்தன)… அக்கினி போன்ற… (அக்கினி போன்ற நாவுகள்)… அவை ஒவ்வொன்றும்… (ஒருமை)… ஒவ்வொருவர் மேல் தங்கினது (அவர்களுக்குள் சென்றது என்றல்ல, அவர்கள் மேல் தங்கினது).
ஜேம்ஸ் அரசனின் வேதாகமத்தில் வித்தியாசமாயிருப்பதைக் கவனியுங்கள்: "பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் உட்கார்ந்தது'' பாருங்கள்? அது போய் அவர்கள் மேல் உட்கார முடியாது. அது நமக்குத் தெரியும். மூல கிரேக்க வேதாகமம், "அவர்கள் மேல் தங்கினது" என்கிறது. இல்லையா? அதுசரியா என்று சரிபார்க்கட்டும். ஆம்! ''அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தங்கினது'', ஒவ்வொரு அக்கினி நாவும் ஒவ்வொருவர் மேலும். அங்கு பாருங்கள்? உங்களுக்குப் புரிகிறதா? அது தான் இரண்டாவதாக நிகழ்ந்தது. முதலில் காற்று, பிறகு அக்கினி நாவுகள் காணப்படுதல்.
35 சிறு எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த இந்த சிறு அறையில் அது நிகழ்ந்தது. அவர்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்ததை சற்று யோசித்து பாருங்கள். ஒருவன் "ஓ!'' என்கிறான். அவன் அறையைச் சுற்றிலும் பார்த்தான், அது அறை முழுவதிலும் இருந்தது. அவர்கள் அதோ "பாருங்கள்!''என்றனர். அக்கினி நாவுகள் அறையைச் சுற்றி வரத் தொடங்கின. இப்பொழுது கவனியுங்கள். அக்கினிமயமான நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டன.
இப்பொழுது அடுத்த வசனத்தைக் கவனியுங்கள்:
அவர்களெல்லாரும்… (வேறொரு இடைச்சொல். வேறொன்று சம்பவிக்கிறது)… பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு… (இது இரண்டாவதாக நிகழ்கின்றது).
பாருங்கள், இதை நாம் மாற்றி அமைத்து, "அவர்கள் அக்கினி நாவுகளைப் பெற்று பிதற்ற தொடங்கினர்; அதன் பிறகு அவர்கள் வெளியே சென்று யாரும் அறியாத பாஷையில் (Unknown tongue) பேசத் தொடங்கினர்'' என்கிறோம். நண்பனே, அப்படியொன்றும் வேதத்தில் கூறப்படவில்லை. பரிசுத்த ஆவியைப் பெறும்போது, யாரும் அறியாத பாஷையில் பேசுகிறவன் எவனும் வேதத்துக்கு முரணான ஒன்றைச் செய்கிறான். யாரும் அறியாத பாஷை பேசுவதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளவன் என்பதை இன்னும் சில நிமிடங்களில் உங்களுக்கு காண்பிக்கவும் நிரூபிக்கவும் போகிறேன் - ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறும்போதல்ல. அது பரிசுத்த ஆவியின் வரம். பரிசுத்த ஆவி என்பது ஆவி.
36 இப்பொழுது கவனியுங்கள். இந்த நாவுகள் அக்கினி வடிவில் அந்த அறையில் இருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் மேல் தங்கின. பிறகு அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். (இரண்டாவது காரியம்). அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட பிறகு, வெவ்வேறு பாஷைகளில் பேசினார்கள். அதை கவனித்தீர்களா? ஆவியானவர் அவர்களைப் பேச ஏவினபடியே, அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசத் தொடங்கினார்கள். இந்த விஷயம் வெளியே பரவினது.
நீங்கள் மறந்துபோகக் கூடாதென்று இதை மறுபடியும் விவரிக்கிறேன். வேதம் என்ன கூறுகிறதெனில், அவர்கள் மேலறையில் காத்திருக்கையில் சடுதியாய் பலத்த காற்று அடிக்கிறது போன்ற ஒரு முழக்கம் அவர்கள்மேல் வந்தது. அது பரிசுத்த ஆவி. அது பரிசுத்த ஆவியின் தோற்றம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? காற்றைப் போல், இயற்கைக்கு மேம்பட்ட காற்று. பின்பு அவர்கள் கவனித்த போது, அக்கினி மயமான சிறு நாவுகள் தோன்றி அங்கிருந்த நூற்றிருபது பேர்கள் ஒவ்வொருவர் மேலும் அமர்ந்தது. அது என்ன? அது என்ன? அது அக்கினி ஸ்தம்பம். அது தேவனே தம்மை தமது ஜனங்களின் மத்தியில் பிரித்துக்கொண்டு, ஜனங்களுக்குள் வருதல். இயேசு அதை முழுவதுமாக பெற்றிருந்தார். அவர் ஆவியை அளவில்லாமல் பெற்றிருந்தார், நாமோ அதை அளவோடு பெற்றிருக்கிறோம். (நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?). ஏனெனில் நாம் சுவிகாரப்புத்திரராக இருக்கிறோம். அவருடைய ஜீவன் - அவருடைய நித்தியஜீவன் - உள்ளே வந்தது. என்ன நடந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள்.
37 இப்பொழுது உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். அந்த தகவல் எப்பொழுது தொடங்கினது? அவர்கள் மேலறையிலிருந்து வெளியே வந்து படிக்கட்டுகளின் வழியாய் கீழே இறங்கி வந்து தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தை அடைய வேண்டும். அது அவர்களிலிருந்த இடத்திலிருந்து ஒருக்கால் ஒரு 'பிளாக்' தூரம் இருந்திருக்கும். அவர்கள் மேலிருந்து கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடைந்தனர். அங்கு தான் ஜனங்கள் எல்லாரும் கூடியிருந்தனர். அவர்கள் வெளியே வந்தபோது ஆவியினால் நிறைந்து, குடித்தவர்கள் போல் காணப்பட்டனர். ஜனங்கள், ''இவர்கள் புது மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்றனர். அவர்கள் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை.
அவர்கள் ஒவ்வொருவரும், "பரிசுத்த ஆவி வந்துவிட்டது. தேவனுடைய வாக்குத்தத்தம் என்மேல் உள்ளது. நான் ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறேன்'' என்று கூற முயன்றனர். அவன் ஒரு கலிலேயன். ஆனால் அவன் அரேபியனிடம் அல்லது பெரிசியனிடம் பேசினபோது, அவனவன் தன்னுடைய சொந்த பாஷையில் அதைக் கேட்டான்.
"நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே (யாரும் அறியாத பாஷையில் அல்ல). இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?'' அவர்கள் ஒருக்கால் கலிலேய பாஷையிலேயே பேசினர். ஆனால் அவர்கள் அதைக் கேட்டபோது, அது தங்கள் ஜென்ம பாஷையில் இருந்தது, இல்லையென்றால், இந்த கேள்விக்கு நீங்கள் பதில் கூற விரும்புகிறேன். பேதுரு எழுந்து கலிலேய பாஷையில் பேசினபோது, அங்கு கூடியிருந்த அனைவருமே அவன் கூறினதைக் கேட்டு எப்படி புரிந்து கொள்ள முடிந்தது? அங்கேயே மூவாயிரம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவினிடம் வந்தன. பேதுரு ஒரு பாஷையில் தான் பேசினான். நிச்சயமாக! அது தேவன் செய்த அற்புதம். பேதுரு மொசொப்பொத்தாமியாவில் குடியிருந்தவர்களுக்கும், அந்நியர்களுக்கும், மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், உலகம் முழுவதிலுமிருந்து அங்கு வந்திருந்தவர்களுக்கும் இதை கூறினான்… பேதுரு நின்று கொண்டு ஒரு பாஷையில் பிரசங்கித்தான். ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் அதைக் கேட்டு புரிந்து கொண்டனர். அதன் விளைவாக மூவாயிரம் பேர் மனந்திரும்பி உடனடியாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். அது எப்படி?
38 நண்பர்களே, பாருங்கள். என் ஸ்தாபன, பெந்தெகொஸ்தே சகோதரன் இப்பொழுதே இதை ஏற்றுக் கொள்வாரென்று என்னால் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் அதை வேதம் பூராவும் ஆராய்ந்து, அவர்கள் எப்பொழுதாவது பரிசுத்த ஆவியைப் பெற்று, அவர்கள் என்ன பேசுகின்றனர் என்று புரிந்துகொள்ள முடியாத பாஷையில் பேசினார்களா என்று என்னிடம் கூறுங்கள். அவர்கள் அந்த விதமாக அதை அங்கு பெற்றிருப்பார்களானால், இராஜாதிபத்திய தேவன்… ஒவ்வொரு முறையும் அது அந்த விதமாகவே இருக்க வேண்டும்.
என்னால்… அந்த வீட்டில்… நேற்றிரவு நாம் சமாரியாவில் என்ன நடந்ததென்று பார்த்தது நமக்கு நினைவிருக்கிறது. அவர்கள் வேறு எந்த பாஷையிலும் கேட்டதாக அங்கு ஒன்றும் எழுதி வைக்கப்படவில்லை. அதைக் குறித்து ஒன்றும் கூறப்படவில்லை, ஆனால் அவர்கள் கொர்நேலியுவின் வீட்டிற்கு சென்ற போது, மூன்று தேசத்தார் அங்கிருந்தனர், அவர்கள் பாஷை பேசினர். அவர்கள் அப்படி செய்திருந்தால், அவர்கள் பரிசுத்த ஆவி பெற்றிருந்தால், தொடக்கத்தில் அவர்கள் எப்படி பரிசுத்த ஆவியை பெற்றார்களோ, அதே விதமாகத்தான் இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக பேதுரு கூறினான். புறஜாதிகள் தேவனிடத்தில் கிருபை பெற்றனர் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். ஏனெனில் தொடக்கத்தில் அவர்கள் பெற்ற விதமாகவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். இதைக் குறித்த ஒரு கேள்வி என்னிடம் உள்ளது. அதை சில நிமிடங்களில் நாம் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதற்கு ஆதாரமாக இதைக் கூற விரும்பினேன்.
39 வெவ்வேறு போதகங்கள் கற்பிக்கப்பட்டுள்ளவர் இதை ஏற்றுக் கொள்வார்களென்று என்னால் எதிர்பார்க்க முடியாது… என் அருமையான, விலையேறப்பெற்ற பெந்தெகொஸ்தே சகோதரர்களே, எனக்கு செவி கொடுங்கள். இதை நான் வெளியில் எங்கும் பிரசங்கிக்கமாட்டேன். இது… சச்சரவு உண்டாகக் காரணமாயிருக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன், ஆனால் நாம் சத்தியத்தை அறிந்து கொள்ளாமல் போனால். நாம் எப்பொழுது தொடங்கப் போகிறோம்? நம்மை நேராக்க இங்கு ஏதாவதொன்று நடந்தாக வேண்டும். இப்பொழுது நாம் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற கிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும். சத்தியம் வெளியில் வரத்தான் வேண்டும்.
ஒரு மனிதன் செவிடனாகவோ, ஊமையாகவோ இருந்து, அவனால் பேச முடியாவிட்டால் அவன் என்ன செய்வான்? அவனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள முடியுமா? அவனுக்கு தொடக்கத்திலேயே நாக்கு இல்லையென்று வைத்துக் கொள்வோம். அந்த ஏழை மனிதன் இரட்சிக்கப்பட விரும்பினால், அவன் என்னசெய்வான்? பாருங்கள்? பரிசுத்த ஆவி என்பது அபிஷேகம். அந்நிய பாஷைகள் பேசுதல், பாஷைகளுக்கு அர்த்தம் உரைத்தல் போன்ற வரங்கள் அனைத்தும், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று கிறிஸ்துவின் சரீரத்தில் வந்த பிறகே உண்டாகின்றன. ஏனெனில் அந்த வரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளன.
40 இதை நான் கூறும் காரணம்… இங்கு பாருங்கள், அப்போஸ்தலர்களுக்குப் பிறகு முதன் முதலாக உலகில் ஸ்தாபிக்கப்பட்ட கத்தோலிக்க சபையை நீங்கள் எதிர்பார்க்க முடியுமா… கடைசி அப்போஸ்தலன் மரித்து அநேக நூற்றாண்டுகள் கழிந்த பின்பு… சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிசாயா ஆலோசனை சங்கம் முடிந்து உடனடியாக, நிசாயா பிதாக்கள் ஒன்றுகூடி ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட போது, கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்பட்டது. அப்பொழுது உலகம் முழுவதும் பரம்பின ஒரு சபையை அவர்கள் உண்டாக்கினர். அது தான் கத்தோலிக்க சபை. 'கத்தோலிக்கம்' என்றால் 'உலகம் முழுவதும்' என்று பொருள், அது எங்குமுள்ளது. அவர்கள்… அஞ்ஞான ரோம மார்க்கம் போப்பாண்டவ ரோம் மார்க்கமாக மாற்றப்பட்டது. அவர்கள் அம்மார்க்கத்துக்கு தலைவனாக ஒரு போப்பாண்டவரை நியமித்தனர். பேதுருவினிடம் இயேசு ராஜ்யத்தின் திறவு கோல்களைக் கொடுத்தாரென்று அவர்கள் கூறினர்; பேதுருவே ரோம மார்க்கத்தின் முதல் போப்பாண்டவர் என்பது அவர்கள் கருத்து. இன்றுவரைக்கும் கத்தோலிக்க சபைக்கு போப்பாண்டவர் பிழையற்றவர் (infallible)… அவருடைய சொற்கள் சட்டமாக ஏற்றுக் கொள்ளப்படும், அவர் பிழையற்ற போப் பாண்டவர். அது இப்படியாக நடந்து கொண்டே வந்தது.
41 கத்தோலிக்க உபதேசத்துடன் இணங்காதவர்கள் கொல்லப்பட்டனர், கழு மரத்தில் எரிக்கப்பட்டனர். நாம் அதையெல்லாம் ஜோசிபஸின் புனித நூல்களின் மூலமாகவும், ஃபாக்ஸ் என்பவர் எழுதின இரத்த சாட்சிகளின் புத்தகம், இன்னும் அநேக புனித… ஹிஸ்லப் என்பவர் எழுதிய இரு பாபிலோன்கள், மகத்தான வரலாறுகள் ஆகியவைகளின் வாயிலாகவும் அறிந்து கொள்கிறோம். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக நீடித்த இருளின் காலங்களின் போது, வேதாகமம் ஜனங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. ஆனால் அது ஒரு சிறு பாதிரியாரால் ஒளித்து வைக்கப்பட்டது என்று நாம் அறிகிறோம்.
அதன் பின்பு முதலாம் சீர்த்திருத்தம் மார்டின் லூத்தரின் மூலம் உண்டானது. அவர் தைரியமாக வெளிவந்து, கிறிஸ்துவின் உண்மையான சரீரம் என்று கத்தோலிக்கரால் அழைக்கப்படும் இராப்போஜனம், கிறிஸ்துவின் சரீரத்துக்கு எடுத்துக்காட்டாயுள்ள ஒன்று மாத்திரமே என்று கூறினார், அவர் இராப்போஜனத்தை பீடத்தின் கிராதிகளிலும், படிக்கட்டுகளிலும் எறிந்து, அது கிறிஸ்துவின் உண்மையான சரீரம் என்று அழைக்க மறுத்து. "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்'' என்று பிரசங்கித்தார். கத்தோலிக்க சபை அவருடன் இணங்கும் என்று நீங்கள் நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது, முக்கியமாக அவர்களுடைய தலைவர் அவர்களிடம் கூடாது என்று சொல்லும் போது. சரி.
42 நீதிமானாக்கப்படுதல் என்பதைப் பிரசங்கித்த மார்டின் லூத்தருக்கு பிறகு, ஜான் வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதல் என்பதை பிரசங்கிப்பவராய் தோன்றினார். ஒரு மனிதன் நீதிமானாக்கப்பட்ட பின்பு அவன் பரிசுத்தமாக்கப்பட வேண்டும்; அவன் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, பொல்லாங்கு என்னும் வேர் அவனிலிருந்து பிடுங்கப் பட வேண்டுமென்று அவர் பிரசங்கித்தார். லூத்தரன்கள் பரிசுத்தமாக்கப்படுதலைப் பிரசங்கிப்பார்களென்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் அப்படி செய்யப் போவதில்லை.
வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்த பின்பு, அதிலிருந்து பல சிறு பிரிவுகள் தோன்றின - வெஸ்லியன் மெதோடிஸ்டுகள், நசரீன்கள் போன்றவர். அவர்கள் தங்கள் காலத்தில் இந்த அக்கினி எரிந்து கொண்டிருக்கும்படி செய்தனர். பிறகு பெந்தெகோஸ்தேயினர் தோன்றினர். "அவர்கள் பரிசுத்த ஆவி என்பது ஒரு அபிஷேகம். அதை நாங்கள் பெறும்போது, அந்நிய பாஷைகள் பேசுகிறோம்'' என்றனர். அது தோன்றின போது, நசரீன்கள், வெஸ்லியன் மெதோடிஸ்டுகள் போன்றவர் அதை விசுவாசிப்பார்களென்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் விசுவாசிக்க மாட்டார்கள். அவர்கள் அதை பிசாசென்று அழைத்தனர். சரி, என்ன நடந்தது? அவர்கள் விழத்தொடங்கினர். பெந்தெகொஸ்தெயினர் எழும்பத் தொடங்கினர், அது எழும்பி, இப்பொழுது அசைக்கப்படும் நிலையை அடைந்துள்ளது. அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு வேறெதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அவர்களுக்கு தங்கள் சொந்த சட்டதிட்டங்களும் நியமங்களும் உள்ளன. அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது.
43 இப்பொழுது பரிசுத்த ஆவி வந்து சத்தியத்தை வெளிப்படுத்தி, "அதை தமது சொந்த பிரசன்னத்தினாலும் வார்த்தையினாலும் நிரூபிக்கும் போது, பெந்தெகொஸ்தே ஜனங்கள் அதை நான் ஒத்துக்கொள்கிறேன்'' என்று கூறுவார்களென்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் லூத்தர் செய்தது போலவும் வெஸ்லி செய்தது போலவும், மற்றவர் செய்தது போலவும் தனிமையில் நிற்கவேண்டும். நீங்கள் அதன் மேல் நிற்க வேண்டும். ஏனெனில் அந்த வேளை இங்குள்ளது. அதுதான் என்னை அவலட்சணமான வாத்துக்குட்டியாக செய்கிறது. அதுதான் என்னை வித்தியாசமாகச் செய்கிறது.
நான் என் விலையுயர்ந்த சகோதரர்கள் ஓரல் ராபர்ட்ஸ், டாமி ஆஸ்பார்ன், டாமி ஹிக்ஸ் ஆகியவர்கள் போன்று செய்யமுடியாது. ஏனெனில் சபைகள் என்னுடன் இணங்காது. அவர்கள், "அவர் நித்திய பாதுகாப்பு என்பதில் நம்பிக்கை கொண்டவராயிருக்கிறார். அவர் ஒரு பாப்டிஸ்டு அந்நிய பாஷை பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதன் முதல் அடையாளம் என்று அவர் நம்புவது கிடையாது. அவருடன் சேராதீர்கள்'' என்கின்றனர். பாருங்கள்?
44 ஆனால் அதை முகமுகமாய் சந்தியுங்கள். அதை சந்தியுங்கள். மெதோடிஸ்டுகள் லூத்தரன்களை சந்திக்க முடிகிறது. பெந்தெகொஸ்தேயினர் மெதோடிஸ்டுகளை சந்திக்க முடிகிறது. நான் இதைக் கொண்டு பெந்தெகொஸ்தேயினரை சந்திக்க முடியும். அது முற்றிலும் உண்மை. அது உண்மை, ஏன் அப்படி? அவர் ஒளியிலியிருக்கிறது போல நாமும் ஒளியில் நடக்கிறோம். பாருங்கள்? நாம் ராஜாவின் பெரும் பாதையில் நடந்து மேலே சென்று கொண்டிருக்கிறோம். நாம் அதிக தூரம் நடந்து வரும்போது, நமக்கு கிருபை அதிகம் கொடுக்கப்படுகின்றது, வல்லமை அதிகம் கொடுக்கப்படுகின்றது. இயற்கைக்கு மேம்பட்டது அதிகம் கொடுக்கப்படுகின்றது. நாம் அங்கு அடைந்துள்ளளோம். இந்த நேரத்தில்தான் பரிசுத்த ஆவி, தாம் தொடக்கத்தில் இருந்த விதமாகவே அக்கினி ஸ்தம்பமாக ஒரு ஒளி உருவில் இறங்கி வந்து தம்மை வெளிப்படுத்தி, தாம் பூமியில் இருந்தபோது செய்த அதே கிரியைகளை செய்து வருகிறார். இயேசு, "அது சரியா இல்லையாவென்று நீங்கள் எப்படி அறிந்து கொள்வீர்கள்? அவர்களுடைய கனிகளினாலே நீங்கள் அறிவீர்கள். என்னை விசுவாசிக்கிறவன், நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்'' என்றார்.
45 என் பெந்தெகொஸ்தே சகோதரரே, நான் உங்களுடன் கூட இருக்கிறேன். நான் உங்களில் ஒருவன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன். நான் அந்நிய பாஷைகள் பேசியிருக்கிறேன். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெறும்போது அந்நிய பாஷைகள் பேசவில்லை. நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றேன், அந்நிய பாஷைகள் பேசினேன், தீர்க்கதரிசனம் உரைத்தேன், அறிவு, ஞானம், அர்த்தம் உரைத்தல் போன்ற வரங்களைப் பெற்றேன். நான் இவைகளில் ஒன்றுக்கு கீழ்ப்பட்டிருக்கிறேன். ஏனெனில் நான் தேவனுடைய பிள்ளை, வல்லமை, தேவனுடைய அக்கினி என் ஆத்துமாவில் உள்ளது; அந்த அக்கினி நாவு என் மேல் அமர்ந்து, எனக்குள் வந்து, தேவனுக்கு முரணாயுள்ள அனைத்தையும் சுட்டெரித்துவிட்டது. இப்பொழுது நான் அவருடைய ஆவியினால் நடத்தப்படுகிறேன். அவர், ''இங்கே போ'' என்றால் நான் போகிறேன். ''இங்கே பேசு'' என்றால் நான் பேசுகிறேன். ''இதை, அதை, மற்றதை செய்'' என்றால் நான் செய்கிறேன். அவ்வளவு தான். நீங்கள் ஆவியினால் நடத்தப்படுகின்றீர்கள். அது தேவன் உங்களுக்குள் இருந்து கொண்டு தமது சித்தத்தை நடப்பிக்கிறார். அது என்னவாயிருப்பினும் அவர் தமது சித்தத்தை நடப்பிக்கிறார்.
46 இப்பொழுது கவனியுங்கள். நாம் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இதை சொல் அகராதியிலிருந்து (lexicon) படிக்க விரும்புகிறேன். இது வாடிகன் மொழி பெயர்ப்பிலிருந்து. வால்யூம்-7, 190-1205.
''அது அந்த ஜனங்களின் குரல் பேசின அந்நிய பாஷையா; அல்லது இயற்கைக்கு மேம்பட்ட பலத்த காற்று உண்டானது என்னும் அறிவிப்பு அல்லது வதந்தி ஜனக் கூட்டத்தை உணர்ச்சிவசப்படுத்தினதா என்று தீர்மானிப்பது கடினம்
அவர்களால் அதை புரிந்து கொள்ளமுடிவில்லை. இப்பொழுது கவனியுங்கள். அது ஜனங்களா…
நான் அதை விவரிக்கிறேன். இங்கு எளிய, கந்தை உடுத்திய கலிலேயர்கள் இருக்கின்றனர். அவர்கள் வெளியே தெருவுக்கு வந்தனர். அப்படிப்பட்ட ஒன்றை ஜனக்கூட்டம் இதற்கு முன்பு கண்டதில்லை. அவர்கள் தங்கள் கரங்களை மேலேயுயர்த்தி, அந்த மேலறையிலிருந்து படிக்கட்டுகளின் வழியாய் இறங்கி, தெருவை அடைந்தனர். அவர்கள் இன்னும் பேசத் தொடங்கவில்லை. பாருங்கள்? அவர்கள் படிக்கட்டுகளின் வழியாய் அங்கு அடைந்தனர். அவர்கள் தள்ளாடிக் கொண்டே வந்தனர் என்று வைத்துக் கொள்வோம். ஜனங்கள் கூறினர். ஒரு கிரேக்கர் என்னிடம் வந்து, ''நான் கலிலேய பாஷையில் பேசுகிறேன்'' என்று கூறுகிறான். நான், "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்கிறேன்.
''நான் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறேன். தேவனுடைய வல்லமை அந்த அறையில் இறங்கினது. எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. ஓ, தேவனுக்கு மகிமை!'' என்கிறான். வேறொருவன் அங்கு வருகிறான். அவன் கலிலேயனாயிருந்தும், அரபு தேசத்தானிடம் அரபிய மொழியில் பேசுகின்றான்.
பலத்த காற்று அந்த திரளான ஜனக்கூட்டத்தை ஒன்று சேர்த்ததா அல்லது அவர்கள் பேசின வெவ்வேறு அந்நிய பாஷைகள் அவர்களைக் கவர்ந்து ஒன்று கூட்டினதா என்று அவர்களால் கூற முடியவில்லை… நீங்கள் கவனிக்க வேண்டிய இரு காரியங்கள் உண்டு. அதாவது… வெளியிலிருந்தவன், "நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?'' என்றான். அவர்கள் வெவ்வேறு பாஷைகளில் பேசினதாகக் கூறப்படவில்லை, ஆனால் அவர்கள் அப்படி கேட்டனர். (ஆங்கிலத்தில், "how hear we every man in our own tongue where in we were born?"… அதாவது ''நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷையிகளிலே கேட்கிறோமே, இதெப்படி?'' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் வேதாகமத்தில், ''இவர்கள் பேசக் கேட்கிறோமே", என்று சேர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்).
47 பின்பு அதே குழு, அதே ஜனங்கள் அதற்கு விளக்கம் தெரிவித்தனர். பேதுரு ஒன்றின் மேல் குதித்து நின்று, ''கலிலேயரே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக (கலிலேய மொழி அவர்களுக்கு இருக்கவில்லை என்று ஜனங்கள் கூறினர்). நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள் (அவர்களெல்லாரிடமும் அவன் எந்த பாஷையில் பேசினான்?) நீங்கள் நினைக்கிறப்படி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, "பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர்மேல் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்'' இப்படியாக அவன் பேசிக் கொண்டே சென்று, ''அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையிலே ஆணியடித்துக் கொலை செய்தீர்கள். அவரைக் குறித்து தாவீது: "…அவர் ஆத்துமாவை பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று சொல்லுகிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று யாவரும் நிச்சயமாக அறியக் கடவர்கள்'' என்றான். இதை அவர்கள் கேட்ட பொழுது ஆமென்! யார்? வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு மனிதனும் என்ன நடந்தது? அவன், ''நான் இப்பொழுது கலிலேய பாஷையில் பேசுகிறேன். இப்பொழுது இந்த பாஷையில் பேசுகிறேன். இப்பொழுது அந்த பாஷையில் பேசுகிறேன்'' என்று அவன் கூறவில்லை.
பேதுரு இந்த வார்த்தைகளை பேசினபோது அவர்கள், "ஆ, சகோதரரே இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று கேட்டனர். பேதுரு அவர்களுக்கு அப்பொழுது அந்த சூத்திரத்தை தந்தான். அது எப்பொழுதுமே அவ்வாறே நிகழ்கிறது. பாருங்கள்?
48 அது முன்னே சென்று, தேவனிடம் நெருங்கி, அவருக்கு அருகாமையில் நடத்தல், உங்களுக்கு எப்படி தெரியும்? லூத்தர் நீதிமானாக்கப்படுதலைப் பெற்றபோது, அவர் அதை பரிசுத்த ஆவியென்று அழைத்தார். தேவன் சிறிதளவை அப்பொழுது ஊற்றினார். வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலைப் பெற்று, ''நீங்கள் சத்தமிடும்போது, அதை பெற்றுக் கொண்டீர்கள்" என்றார். ஆனால் பரிசுத்த ஆவி இல்லாத அநேகரும் சத்தமிட்டனர். பெந்தெகொஸ்தேயினர் யாவரும் அறியாத பாஷையில் பேசினபோது, ''நீ பெற்றுக் கொண்டுவிட்டாய்'' என்றனர். ஆனால் அவர்களில் அநேகர் அதைப் பெறாமலிருந்தனர். அதை அறிந்து கொள்வதற்கு அடையாளங்கள் உள்ளன என்றெல்லாம் இல்லை. இயேசு, "ஒரு மரத்தை நீங்கள் அறிந்து கொள்ளக்கூடிய ஒரே வழி அது கொடுக்கும் கனிகளினால் மாத்திரமே'' என்றார். வல்லமையினால் நிறைந்துள்ள ஒரு மனிதனை; பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ள ஒரு மனிதனை நீங்கள் காணும்போது முற்றிலும் மாறின ஒரு வாழ்க்கையை அவனில் காண்பீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடருவதை நீங்கள் காண்பீர்கள்: ''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள். அவை அவர்களைக் கடிக்காது, சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களை கொன்றுவிடாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்னே! இப்படிப்பட்ட அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களைத் தொடரும். நீங்கள் அதற்குள் வருவது எப்படி? இந்த வரங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் உள்ளன. அந்த சரீரத்துக்குள் நீங்கள் எப்படி வருகின்றீர்கள்? நீங்கள் அந்நிய பாஷை பேசி அதற்குள் வருவதில்லை; ஆனால் அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப் படுவதனால் (1கொரி. 12:13). நாமெல்லாரும் ஒரே ஆவியினாலே அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, இந்த வரங்களை அடைகிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
யாராகிலும் இந்த ஒலி நாடாவைக் கேட்க நேர்ந்து அல்லது இங்குள்ள யாராகிலும் இதற்கு இணங்க மறுத்தால், சகோதரனே, அதை நட்புத் தன்மையுடன் செய்வதற்கு ஞாபகம் கொள்ளுங்கள். ஏனெனில் நான் உங்களை நேசிக்கிறேன்
49 1. இன்றிரவு முதல் கேள்வி:
சகோ. பிரான்ஹாமே, தொலைகாட்சி உலகத்துக்கே ஒரு சாபம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நல்லது, அதை எழுதினவர் யாராயிருப்பினும், நான் உங்களுடன் இணங்குகிறேன். அவர்கள் அதை உலகிற்கு சாபமாக்கிவிட்டனர், அது உலகிற்கு ஆசீர்வாதமாக இருந்திருக்க கூடும், ஆனால் அவர்களோ அதை சாபமாக்கிவிட்டனர். என் அருமை மக்களே, அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் எந்த வகையில் நோக்குகிறீர்கள் என்பதை அது பொறுத்தது, தொலைகாட்சி சாபமாகக் கருதப்படுமானால், செய்திதாளும் சாபமே, வானொலியும் சாபமே, அநேகமுறை தொலைபேசியும் சாபமாக உள்ளது. பாருங்கள், பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? நீங்கள் அதை எவ்விதமாக செய்துவிடுகிறீர்கள் என்பதை அனுசரித்து அது உள்ளது. அன்றிரவு அந்த சகோதரன் கூறின விதமாக, தொலைக்காட்சியில் இப்பொழுது சுவிசேஷ நிகழ்ச்சிகளே இருப்பதில்லை. ஏனெனில் அதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் ஒரு எளிய போதகருக்கு தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியைத் தர இயலாது. எனவே… அன்றிரவு சகோதரன் இங்கு கூறினாரென்று நினைக்கிறேன், அல்லது வேறெங்கோ. அவர் "உங்கள் வானொலிப்பெட்டியின் மேலுள்ள தூசைத் துடைத்துவிட்டு அதை மூலையிலிருந்து கொண்டுவந்து சுவிசேஷ நிகழ்ச்சிகளைக் கேளுங்கள்" என்றார். அது உண்மை.
50 ஆனால் அன்பார்ந்த நபரே, நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுடன் நான் நிச்சயம் இணங்குகிறேன். அது மானிட வர்க்கத்துக்கே மிகவும் வெறுக்கப்படத் தக்க ஒன்றாக உள்ளது. அரசாங்கத்துக்கு வரிகளாக செல்லவேண்டிய பணத்தை அவர்கள் எடுத்து, சிகரெட்டுகள் விஸ்கி போன்றவைகளை விளம்பரப்படுத்துவதற்காக நிகழ்ச்சிகளை நடத்தி, அரசாங்க வரிகளிலிருந்து சலுகைபெற்று, அதன் பிறகு அவர்கள் சிறு தொகையைப் பெற, போதகர்களை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனர். நான் உங்களுடன் இணங்குகிறேன். அது மிகவும் பயங்கரமான ஒன்று… நீங்கள் அதில் காணும் நிகழ்ச்சி என்னவென்பதைப் பொறுத்தது. இந்த கேள்வியைக் கேட்டது சகோதரன் அல்லது சகோதரி யாராயிருப்பினும் உங்களுக்கு என் நன்றி.
51 1. (a) இது நல்ல கேள்வி:
வேதாகமத்தில் 1சாமுவேல்: 18:10 போன்ற இடங்களில், தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி செயல் புரிந்தது என்று எழுதப்பட்டுள்ளது. தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி' என்பது எனக்குப் புரியவில்லை. தயவு கூர்ந்து இதை விளக்கவும்.
நல்லது, தேவனுடைய உதவியைக் கொண்டு என்னால் முடியும் என்று நினைக்கிறேன். தேவன் பொல்லாத ஆவி என்று இதன் அர்த்தமல்ல. ஆனால் எல்லா ஆவிகளுமே தேவனுக்குக் கீழ்ப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் தமது சித்தத்துக்கு ஏற்றவாறு கிரியை செய்யும்படி பண்ணுகிறார். பாருங்கள்?
சவுலைத் துன்புறுத்த தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவியைக் குறித்து நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். சவுல் மனோநிலை சரியில்லாத, நொறுங்கிய நிலையில் இருந்தான். ஏனெனில் முதலாவதாக அவன் பின்வாங்கிப் போயிருந்தான். நீங்களும் பின்வாங்கிப் போகும்போது, உங்களை துன்புறத்த தேவன் ஒரு பொல்லாத ஆவியை அனுமதிப்பார்.
52 இன்னும் சிறிது நேரத்தில் ஒன்றை உங்களுக்கு படித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அதை குறித்து எனக்கு இங்கு மற்றொரு கருத்து உள்ளது. பாருங்கள்? ஒவ்வொரு ஆவியும் தேவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். யோசபாத்தும் ஆகாபும் போருக்குப் புறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? முதலாவதாக அவர்கள் ஒலிமுக வாசல்களில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். யோசபாத் நீதிமான். அவன் (அந்த இரண்டு ராஜாக்களும் அங்கு உட்கார்ந்து கொண்டு, தங்கள் சேனைகளை ஒன்று கூட்டினர்). எனவே அவன், ''நாம் யுத்தத்துக்கு போகலாமா வேண்டாமா என்று கர்த்தரிடத்தில் விசாரிப்போம்" என்றான்.
ஆகாப் தன் பாதுகாப்பில் இருந்த நானூறு தீர்க்கதரிசிகளை வர வழைத்தான். அவன் அவர்களைப் போஷித்து கொழுக்க வைத்திருந்தான். அவர்கள் திடகாத்திரமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்கள் அங்கு வந்து, ஒரு மனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்து, ''நீங்கள் போகலாம். தேவன் உங்களுக்கு வெற்றியைத் தருவார். நீங்கள் கீலோயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணப் புறப்படுங்கள். அங்கு கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்'' என்றனர். அவர்களில் ஒருவன் ஒரு உதாரணத்துக்காக தனக்கு இருப்புக் கொம்புகளை உண்டாக்கி, "இவைகளைக் கொண்டு நீர் அவர்களை தேசத்துக்குப் புறம்பே தள்ளிவிடுவீர்; அது உமக்குத் சொந்தமானது" என்றான்.
53 ஆனால் உங்களுக்குத் தெரியுமா, தேவனுடைய மனிதனிடத்திலுள்ள ஒன்று இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாது. பாருங்கள்? அது வேதத்துடன் ஒத்துப் போகவில்லையென்றால், ஏதோ தவறுள்ளது. எந்த உண்மையான விசுவாசியும். எனவே யோசபாத், "நல்லது, இந்த நானூறு பேர்களும் காண்பதற்கு நன்றாயிருக்கின்றனர். அவர்கள் நல்லவர்கள் போல் தோன்றுகிறது'' என்றான்.
''ஓ, அவர்கள் நல்லவர்களே", என்று ஆகாப் கூறியிருப்பான்.
ஆனால் யோசபாத்தோ, ''வேறு யாராகிலும் இங்கே இல்லையா?" என்று வினவினான். நானூறு பேர் ஒருமனதுடன் தீர்க்கதரிசனம் உரைத்துள்ள போது, ஏன் வேறு யாராகிலும் வேண்டும்? ஏனெனில் சரியாக இல்லாத ஏதோ ஒன்று உள்ளது என்று யோசபாத் கண்டு கொண்டான். பாருங்கள்?
ஆகாப், "இன்னும் ஒருவன் இருக்கிறான். அவன் தான் இம்லாவின் குமாரனாகிய மிகாயா. ஆனால் நான் அவனைப் பகைக்கிறேன்'' என்றான். நிச்சயமாக! அவன் அவனுடைய சபையை அடைத்துவிட்டு எந்த நேரம் வேண்டுமானாலும் அவனை தேசத்தை விட்டு துரத்திவிடுவான். பாருங்கள்? "நிச்சயமாகவே நான் அவனைப் பகைக்கிறேன்''.
''நீர் ஏன் அவனைப் பகைக்கிறீர்".
"அவன் எப்பொழுதுமே என்னைக் குறித்து தீமையாக தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்". அப்பொழுதே யோசபாத் ஏதோ சரியில்லை என்பதை கண்டு கொண்டான் என்று எண்ணுகிறேன். அவன், ''மிகாயாவை அழைத்து வா'' என்றான்.
எனவே அவர்கள் அவனிடம் சென்றனர், அவன் அவர்களிருந்த இடத்துக்கு வந்தான்… அவர்கள் மிகாயாவிடம் அனுப்பின ஆள் அவனுடன் பேசி, ''அங்கு வேத சாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்ற நானூறு பேர் இருக்கின்றனர். அவர்கள் தேசத்திலேயே சிறந்தவர்கள். பி.எச்.டி. எல்.எல்.டி. பட்டம் பெற்றவர்கள். படிப்பில்லாத எளியவனாகிய நீர் அத்தனை குருவானவர்கள் கூறினதுடன் இணங்காமலிருக்கமாட்டீர்'' என்றான்.
54 அப்பொழுது இம்லா, இல்லை மிகாயா, ''தேவன் ஒன்றை என் வாயில் போடாமல் நான் எதையும் சொல்லமாட்டேன். அவர் என்ன கூறுகிறாரோ அதை அப்படியே எடுத்துரைப்பேன்" என்றான். அது எனக்கு பிரியம். அது எனக்கு பிரியம். வேறு விதமாக கூறினால், ''நான் வார்த்தையில் நிலைகொள்வேன்''. மற்றவர்கள் என்ன கூறின போதிலும் அவனுக்குக் கவலையில்லை. அந்த ஆள் "நீர் துரத்தப்படாலிருக்க விரும்பினால் அவர்கள் சொன்னதையே சொல்லும்'' என்றான்.
மிகாயா அங்கு சென்றான். ராஜா, ''நாங்கள் போகலாமா?'' என்று கேட்டான்.
அவன், "போங்கள்'' என்று சொல்லிவிட்டு, "இன்றிரவு எனக்கு அவகாசம் கொடுங்கள். நான் அதைக் குறித்து கர்த்தரிடத்தில் பேச விரும்புகிறேன்'' என்றான். அது எனக்கு பிரியம். அன்றிரவு, கர்த்தர் அவனுக்கு தோன்றினார். அடுத்த நாள் மிகாயா அவர்களிடம் சென்று, ''போங்கள், ஆனால் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்'' என்றான். ஓ, என்னே! அது ராஜாவை கோபமூட்டியது.
ஆகாப், ''நான் ஏற்கெனவே உம்மோடே சொல்லவில்லையா? எனக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு முறையும் இதே போன்று என்னைக் குறித்து தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன்'' என்றான்.
ஏன்! அவன் வார்த்தையில் நிலைகொண்டிருந்தான். ஏன்? அவனுக்கு முன்பிருந்த உண்மையான தீர்க்கதரிசியாகிய எலியா ஆகாபை நோக்கி, "நீ குற்றமற்ற நாபோத்தின் இரத்தத்தை சிந்தினதால், நாய்கள் உன் இரத்தத்தையும் கூட நக்கும்'' என்று அவனுக்குண்டான தேவனுடைய வார்த்தையை உரைத்திருந்தான். அவன் தீமையானதை சொல்லியிருந்தான். எலியா பரலோகத்துக்கு ஏறி சென்றுவிட்டான். இருப்பினும் எலியா தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தான் என்று மிகாயா அறிந்தவனாய், வார்த்தையில் நிலைகொண்டிருந்தான். அது எனக்குப் பிரியம். வார்த்தையில் நிலைகொள்ளுங்கள்.
55 இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், அவருடைய வல்லமை இன்றைக்கும் மாறாததாயுள்ளது என்றும் பரிசுத்த ஆவி அதை விரும்பும் யாவருக்கும் உள்ளது, அவன் வந்து பெற்றுக்கொள்ளட்டும் என்று வேதம் கூறியிருக்குமானால், அந்த வார்த்தையில் நிலைகொள்ளுங்கள். ஆம், ஐயா! மற்றவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை. அவர்கள் எவ்வளவு நன்றாக போஷிக்கப்பட்டிருந்தாலும், எத்தனை வேத பள்ளிகளுக்கு சென்றிருந்தாலும், அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. எனவே அவன் கூறினான். தலையில் இருப்புக் கொம்புகளை சுமந்து, எதிரிகளை தேசத்திலிருந்து துரத்தியடிப்பதாக தீர்க்கதரிசனம் உரைத்த இந்த திடகாத்திரமுள்ளவன், மிகாயாவின் அருகில் சென்று (இந்த சிறு போதகரின் அருகில்), அவனைக் கன்னத்தில் அடித்தான். மிகாயா ஒரு சிறு உருளும் பரிசுத்தன் என்று அவன் அறிந்திருந்தான். ஆகையால் அதைக் குறித்து யாரும் ஒன்றும் கூறப் போவதில்லையென்று அவன் எண்ணி, அவனைக் கன்னத்தில் அடித்து, ''கர்த்தருடைய ஆவி என்ன வழியாய் என்னை விட்டு உன்னோடு பேசும்படி வந்தது?'' என்றான்.
அப்பொழுது மிகாயா, "நீ சிறைபிடிக்கப்பட்டு உள்ளறையிலே உட்கார்ந்து கொண்டிருக்கும் போது அதை புரிந்துகொள்வாய்'' என்றான்.
56 அவன், "கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதைக் கண்டேன். (ஆமென்! இப்பொழுது கவனியுங்கள்!) பரமசேனை அவரைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தது'' என்றான். என்ன விஷயம்? ஆகாபுக்கு என்ன நேரிடும் என்பதைக் குறித்து அவருடைய தீர்க்கதரிசி ஏற்கெனவே உரைத்துவிட்டான். தேவன்… அது எலியாவின் வார்த்தையல்ல; அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசி. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்னும் தேவனுடைய வார்த்தை மிகாயா, பரமசேனை தேவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கர்த்தர் தேவனுடைய வார்த்தை. நிறைவேற்றி, "அவனை யுத்தத்தில் கொல்லப்பட வைப்பதற்காக, உங்களில் யார் சென்று ஆகாபை வஞ்சிக்கப் போகிறீர்கள்? நாம் யாரை அனுப்பலாம்? என்று கேட்டார்", என்றார்.
57 அவன் தொடர்ந்து, ''ஒருவன் இப்படியும், ஒருவன் அப்படியும் சொன்னார்கள். அப்பொழுது ஒரு பொல்லாத ஆவி - பொய்யின் ஆவி - கீழேயிருந்து புறப்பட்டு அங்கு வந்து, நான் பொய்யின் ஆவி. நீர் என்னை அனுமதிப்பீரானால், நான் சென்று போதகர்கள் எல்லாருக்குள்ளும் நுழைந்து பொய்யின் ஆவியாயிருப்பேன். ஏனெனில் அவர்களிடம் பரிசுத்த ஆவி இல்லை. (அவர்கள் வேதப்பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் மாத்திரமே). நான் சென்று அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நுழைந்து அவர்களை வஞ்சித்து, பொய்யை தீர்க்கதரிசனமாக உரைக்கப்பண்ணுவேன். அப்படித்தான் நான் ஏமாற்றி வருகிறேன், என்றது'' என்றான்.
அப்பொழுது தேவன், "நீ போக அனுமதியளிக்கிறேன்'' என்றார்.
அப்பொழுது பொய்யின் ஆவி இறங்கிச் சென்று வேதாகமப் பள்ளிகளில் பயிற்சி பெற்றிருந்த அந்த கள்ளத்தீர்க்கதரிசிகள் அனைவரின் வாயிலும் நுழைந்து, அவர்கள் பொய்யை தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்தது. அது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றின பொய்யின் ஆவி.
58 இதை நான் கூறட்டும்… நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக வேறொன்றை… ஒரு நிமிடம் பாருங்கள்? இதை கவனியுங்கள். என்னுடன் 1கொரிந்திரியர் 5-ம் அதிகாரம் முதலாம் வசனத்துக்கு வேதாகமத்தை ஒரு நிமிடம் திருப்புங்கள். 1கொரிந்திரியர்… நீங்கள் ஒன்றைக் காண விரும்பினால், இதை கவனியுங்கள், எப்படி தேவன் பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார் என்றும் அவை எவ்விதம் கிரியை செய்கிறதென்று… சரி பவுல் கூறுகின்றான்.
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக் கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே (அப்படியானால் அது சபையில் இருக்கலாம் என்று நீங்கள் எப்படி நினைக்க முடியும்?)
இப்படிப்பட்ட காரியஞ் செய்தவனை நீங்கள் உங்களை விட்டு நீக்காமலும்… (நான் இரண்டு பக்கங்கள் திரும்பி விட்டேன் என்று நினைக்கிறேன்)… துக்கப்படாமலும்… (சற்று பொறுங்கள். நான் இல்லை, அது சரியாகத்தான் உள்ளது. (ஆம்!) இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.
59 எனக்குத் தெரியாது. யாராகிலும் இதற்கு விரோதமாக கருத்து தெரிவிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நான் விசுவாசிப்பது சரியென்று கூற முற்படுகிறேன். அதாவது, ஒருவன் பரிசுத்த ஆவியினால் ஒரு முறை நிறையப்பட்டால், அவன் அதை இழந்து போக முடியாது. பாருங்கள், பாருங்கள்,
நான் சரீரத்தினால் உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடே இருக்கிறவனாய், இப்படி செய்தவனைக் குறித்து நான் கூட இருக்கிறது போல, நீங்களும், என்னுடைய ஆவியும்,
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடி வந்திருக்கையில், அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்,
நாளிலே இரட்சிக்கப்படும்படி மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று தீர்ப்புச் செய்கிறேன்.
தேவன் தமது பரிசுத்த சபைக்கு, இப்பூமியிலுள்ள தமது சரீரத்துக்கு இதை கூறுகிறார். (இது பழைய ஏற்பாட்டின் காலத்துக்குப் பிறகு, புதிய ஏற்பாட்டின் காலத்தில்) - ஜனங்களின் மத்தியில் மிகவும் அசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து, தன் தகப்பனுடைய மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு இதைக் கூறுகிறார். அவர் அப்படிப்பட்ட காரியம் கிறிஸ்துவின் சரீரத்தில் நடந்துள்ளது. சபையே, "அவனை அழிவுக்காக சாத்தானுக்கு ஒப்புக் கொடுங்கள்,'' என்கிறார். பாருங்கள்? தேவன் அனுமதிக்கிறார். ஒன்று செய்யப்படுவதைக் காணவேண்டுமென்று அவர் நினைக்கும்போது - ஒருவருக்கு சாட்டை அடிகொடுக்க அவர் நினைக்கும்போது - அவர் பொல்லாத ஆவிக்கு அவன் மேல் அனுப்புகிறார். அந்த பொல்லாத ஆவி அவனைத் துன்பப்படுத்தி, அவனைத் திரும்பக் கொண்டு வருகிறது. நாம் காண்கிறோம். இந்த மனிதன்…
60 இன்றைய சபைகளிலும் அதுதான் விவகாரம். ஒருவன் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் வந்து அதன் ஒரு அங்கத்தினனாகி, பொல்லாத காரியங்களைச் செய்யும்போது, நீங்கள் ஒன்று கூடி அதே காரியத்தைச் செய்வதற்கு பதிலாக பிரான்ஹாம் கூடாரத்தைச் சேர்ந்தவர்களே, அதைச் செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் அவனுக்காக முறையிடும் வரைக்கும். அதன் இரத்தத்தின் கீழிருந்து கொண்டு, அதே செயலை மறுபடியும், மறுபடியும் புரிந்து கொண்டேயிருக்கிறான். ஆனால் நீங்கள் ஒன்று கூடி, அவனுடைய ஆவி கர்த்தருடைய நாளிலே இரட்சிக்கப்படும்படிக்கு, மாம்சத்தின் அழிவுக்காக அவனைச் சாத்தானுக்கு ஒப்புக் கொடுங்கள். தேவனுடைய சாட்டை அப்பொழுது வருவதைக் கவனியுங்கள். பிசாசு அவனை ஆட்கொள்வதைக் கவனியுங்கள். பொல்லாத ஆவி அவனைத் துன்புறுத்தத் தொடங்குகிறது.
அப்பொழுது அவன் நேராகி திரும்ப வருகிறான். அவன் தேவனுடைய சமூகத்தில் சுத்திகரிக்கப்பட்டவனாய் இருப்பதை நாம் 2கொரிந்தியரில் காண்கிறோம்.
யோபுவைப் பாருங்கள், ஒரு பரிபூரணமான மனிதன், நீதிமான் அவனுடைய ஆவி பரிபூரணப்படுவதற்காக பொல்லாத பிசாசு அவன் மேல் வந்து அவனைத் துன்புறுத்த தேவன் அனுமதித்தார். பாருங்கள்? எனவே பொல்லாத ஆவி… தேவன் தமது திட்டத்தையும் சித்தத்தையும் நிறைவேற்ற அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகளை உபயோகிக்கிறார்.
61 2(b). இது உண்மையில் கடினமான ஒரு கேள்வி (அது அதே நபர் என்று நினைக்கிறேன். ஏனெனில் அதே கையெழுத்து போல் தோன்றுகிறது): குணப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல ஒரு நபருக்கு பரிசுத்த ஆவி அவசியம் என்னும் போது, கணக்கொப்புவிக்கும் ஆண்டுகளை அடையும் முன்பு மரித்துப்போகும் குழந்தைகளின் நிலையென்ன? அவர்கள் எப்பொழுது உயிரோடெழுவார்கள்.
என் சகோதரனே, சகோதரியே என்னால் கூற முடியாது. அதற்கான வேத வசனத்தை என்னால் வேதாகமத்தில் எங்கும் காணமுடியவில்லை. ஆனால் என் கருத்துக்களை நான் கூற முடியும். தேவனுடைய கிருபையின்பேரில் விசுவாசம் கொண்டுள்ள உங்களை அது பெலப்படுத்தும். பாருங்கள், இந்த நபர் அறிய விரும்புகிறார் (அது நல்ல கேள்வி பாருங்கள்?); எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்க வேண்டும் என்றால், குழந்தையின் நிலையென்ன என்று இவர் அறிய விரும்புகிறார்… நான் ஏற்கெனவே கூறின படி, அது உண்மை. அது வேதப்பிரகாரமானது. அதைதான் வேதம் போதிக்கிறது. அதாவது பரலோகத்துக்கு செல்லமுடியாது… பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்குகொள்வார்கள்… தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். மற்றவர்கள்… மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. ஆயிரம் வருட அரசாட்சிக்குப் பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல், பின்பு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. பாருங்கள்?அதுதான் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரியான வரிசைக் கிரமம். ஆனால் குழந்தைகளுக்கு என்ன நேரிடுமென்று இந்த நபர் அறிய விரும்புகிறார். அவர்கள் வேறு விதமாகக் கூறினால், அவர்கள் பிறப்பதற்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனரா? அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனரா? என்னால் கூற முடியாது.
62 இப்பொழுது, அதை இப்படி நாம் கூறுவோம்: மரிக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோர் யாராயிருப்பினும், இரட்சிக்கப்படுகின்றனர் என்று நமக்குத் தெரியும். அந்த விஷயத்தில் தீர்க்கதரிசிகளின் குழு கொண்டுள்ள கருத்தை நான் ஆட்சேபிக்கிறேன். பாவமுள்ள பெற்றோருக்கு பிறக்கும் குழந்தை மரிக்க நேரிட்டால், அது நரகத்துக்கு சென்று அழிந்து போகும், அதற்கு விமோசனமே இல்லையென்று அவர்கள் கூறுகின்றனர். யோவான் ஸ்நானன் இயேசுவை நோக்கி, ''இதோ உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்றான். அந்த குழந்தை, தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குள் வர வேண்டிய மானிடக் குழந்தை என்னும் போது, பாவத்தைப் போக்க இயேசு மரித்தாரென்றால், இயேசு அந்த நோக்கத்துக்காக மரித்துள்ள போது, எல்லா பாவமும் தேவனுடைய பார்வையில் நீக்கப்பட்டுவிட்டது. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன. என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, நாம் மன்னிக்கப்படக் கூடிய ஒரே வழி, அவருடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுதலே. ஆனால் இந்த குழந்தையோ மன்னிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒன்றுமே செய்யவில்லை. அது ஒன்றும் செய்யவில்லை. எனவே அது பரலோகத்துக்கு செல்வதற்கு முற்றிலும் விடுதலையடைந்துள்ளது.
ஆனால் நீங்கள், "அவர்கள் எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்வார்களா?" என்று கேட்கலாம். இப்பொழுது, இது என் சொந்த வார்த்தை, இது என் சொந்த கருத்து… இதை என்னால் வேதாகமத்தைக் கொண்டு நிரூபிக்க முடியாது. கவனியுங்கள். இவ்வுலகில் தோன்றவிருக்கும் மானிடவர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் தேவன் உலகத்தோற்றத்துக்கு முன்னே அறிந்திருப்பாரானால்… அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒவ்வொரு கொசுவையும், ஒவ்வொரு வண்டையும், ஈக்கள் ஒவ்வொன்றையும், இவ்வுலகில் தோன்றவிருக்கும் ஒவ்வொன்றையும், முன்னமே அறிந்திருந்தார். அவர் அதை அறிந்திருப்பாரானால்…
63 கவனியுங்கள். மோசேயை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மோசே பிறந்தபோது, அவன் தீர்க்கதரிசியாயிருந்தான். எரேமியா தோன்றுவதற்கு முன்னமே தேவன் எரேமியாவிடம், ''நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம் பண்ணி உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்'' என்றார். (எரே. 15). யோவான் ஸ்நானன் பிறப்பதற்கு 712 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா அவனைத் தரிசனத்தில் கண்டு, "அவன் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தமாயிருக்கிறான்'' என்றான் (ஏசா.40:5).
தேவனுடைய முன்குறித்தல் அல்லது முன்னறிதல் சிறு குழந்தைகளைக் குறித்து எல்லாம் அறிந்துள்ளது (பாருங்கள்?), அவர்கள் என்ன செய்வார்களென்றும் அவர்கள் மரித்துப் போவார்களென்றும் அவருக்குத் தெரியும். தேவன் அறியாமல் ஒன்றுமே நடக்க முடியாது, எதுவுமே நடக்க முடியாது. நல்ல மேய்ப்பனைப் போல், அவர் சென்று… வேதாகமம் இன்னின்ன விதமாய் கூறுகிறதென்று என்னால் வேதாகமத்திலிருந்து அதை காண்பிக்க முடியாது. இது என் சொந்த கருத்து.
64 அடுத்த கேள்வி, அன்றிரவு நான் கூறினதன் பேரில் யாரோ ஒருவர் விளக்கம் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். பிள்ளை பேற்றினால் மனைவி இரட்சிக்கப்படுவாள் என்பதை விளக்குங்கள்.
பிள்ளை பெறுவதனால் மனைவி இரட்சிக்கப்படுவதில்லை. இப்பொழுது ஒரு நிமிடம் 1தீமோத்தேயு 2:8-க்கு வேதாகமத்தை திருப்புவோம். பிள்ளையைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறதென்று நாம் காண்போம். அது ஒரு கத்தோலிக்க உபதேசம் என்பதை உணருகிறேன். ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதன் மூலம் ஒரு ஸ்திரீ இரட்சிக்கப்படுகிறாள் என்று கத்தோலிக்கன் கூறுகிறான். ஆனால் நாமோ… அதை நான் விசுவாசிப்பதில்லை. Iதீமோத்தேயு 2-ம் அதிகாரம், 9-ம் வசனத்திலிருந்து தொடங்கி படிப்போம். சரி, கவனியுங்கள்.
ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது…
(சகோதரரே, நான் உங்களுக்கு இங்கு உதவி செய்கிறேன் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை புது தொப்பிகள் அணிவது போன்றது. பாருங்கள்? அது கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல)…
தங்களை அலங்கரியாமல். தகுதியான வஸ்திரத்தினாலும்…
(அது என்னவென்று நாம் கேட்கக்கூடாது. இல்லையா?)
இதை கவனியுங்கள்… நாணத்தினாலும்… (வ்யூ)… தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற
ஸ்திரீகளுக்கு ஏற்றப்படியே நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்க வேண்டும். ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுள்ளவளாயிருந்து, அமைதலோடு கற்றுக் கொள்ளக்கடவள்.
உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை.
அவள் அமைதலாயிருக்க வேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான்,
பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடும் விசுவாசத்திலும் (அப்படிப்பட்ட ஸ்திரீயைக் குறித்து தான் பவுல் பேசுகிறான், ஏற்கனவே இரட்சிக்கப்பட்ட ஸ்திரீயைக் குறித்து (பாருங்கள்?)… அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால்… (பாருங்கள்? அவள் நிலைக் கொண்டிருந்தால், அவள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவள்)… பிள்ளை பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். (பவுல் உலகப் பெண்கள் குழந்தைகளைப் பெறுவதைக் குறித்து இங்கு கூறவில்லை).
65 ஒரு குழந்தையைப் பெறுவது அவள் இரட்சிக்கும்படி செய்வதில்லை, ஆனால் அவள் பிள்ளைகளை வளர்த்து தன் கடமையை செய்கிறாள், பிள்ளைக்குப் பதிலாக அவள், இன்று அவர்கள் செய்வது போல், பூனைகளையும் நாய்களையும் வளர்ப்பதில்லை. அவர்கள் இரவெல்லாம் வெளியே சுற்றவேண்டும் என்பதற்காக, மிருகத்தின் மேல் தாயின் அன்பை செலுத்துகின்றனர். சிலர் அப்படி செய்கின்றனர். மன்னிக்கவும், அவர்கள் செய்கின்றனர். அதை நான் எடுத்துக் கூறுவது எனக்கே கஷ்டமாயுள்ளது, ஆனால் உண்மை உண்மையே. பாருங்கள் அவர்கள் குழந்தை ஒரு கட்டாக இருக்க விரும்புவதில்லை. பிள்ளை பேற்றினால், அவள் விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும், தெளிந்த புத்தியோடும் நிலை கொண்டிருந்தால், இரட்சிக்கப்படுவாள். அந்த நிபந்தனையை அங்கு கவனியுங்கள். நீங்களும் விசுவாசத்தால் சுகமடைவீர்கள். நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் ஆயத்தமாயிருந்தால், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்கள். அது போன்று அவள் இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்வாளானால் (பாருங்கள்?) இரட்சிக்கப்படுவாள், அவள் ஒரு ஸ்திரீ என்பதனால் அல்ல. அதுதான் சரி, சகோதரனே, சகோதரியே. இது கத்தோலிக்க உபதேசமே அல்ல… இங்கு மற்றொரு கடினமான கேள்வி உள்ளது. அதன் பிறகு இன்னும் ஒரு கேள்வி உள்ளது. அதற்கு பதில் கூற நேரம் இருக்கும் என்று எண்ணுகிறேன். இதை விவரிக்க என் சொந்த நேரத்தை எடுத்துக் கொண்டேன். இந்த கேள்விகள் எழுப்புதலின் பின் விளைவுகளினால் எழுந்தவை, கூட்டங்களின் பின் விளைவுகள்.
66 கேள்வி: சகோ. பிரான்ஹாமே (இது டைப் செய்யப்பட்டுள்ளது), ஒருவர் பாஷை பேசி அதன் அர்த்தத்தை அவரே விவரிப்பது வேத ரீதியாகுமா? அப்படியானால் 1கொரிந்தியர் 14:19-ஐயும் விவரிக்கவும்.
சரி, நாம் வேதாகமத்துக்கு சென்று அது என்ன கூறுகிறதென்று பார்ப்போம். அதை நாம் வேதரீதியாக வைத்திருக்கிறோமா என்று காண்போம். நாம் எப்பொழுதுமே வேதரீதியாக இருக்கவே விரும்புகிறோம். 1கொரிந்தியர் 14. ஒரு மனிதன் தான் பேசின பாஷைக்கு தானே அர்த்தம் உரைப்பது வேதரீதியானதா என்று இந்த நபர் அறிய விரும்புகிறார். "அப்படியானால் 1கொரிந்தியர் 14:19-ஐ விவரிக்கவும்" அது என்னவென்று பார்ப்போம். சரி.
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.
இப்பொழுது அடுத்தப்படியாக 27-ம் வசனம், அவர்கள் அறிய விரும்புகின்றனர்.
யாராவது அந்நிய பாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டு பேர் மட்டில் அல்லது மிஞ்சினால் மூன்று பேர் மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்.
67 அந்த நபர் இதைத்தான் குறிப்பிட முயல்கிறார் என்று கருதுகிறேன் (இன்னும் சிறிது நேரத்தில் ஒரு வசனத்தை படிக்கப் போகின்றேன்). அந்த சகோதரன் அல்லது சகோதரி என்ன குறிப்பிட முயல்கிறார் என்று நான் கருதுகிறேன் என்றால், ''அந்நிய பாஷை பேசும் ஒருவர், அவரே அவர் உரைத்த செய்திக்கு அர்த்தம் உரைப்பது சரியா?'' என்பதே. என் அன்பான நண்பரே, நீங்கள் 13-ம் வசனத்தைப் படிப்பீர்களானால், அது தெளிவுபடுத்தும்:
அந்தப்படி அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத் தக்கதாக விண்ணப்பம் பண்ணக் கடவன்.
நிச்சயமாக, அவனே அவன் செய்திக்கு அர்த்தம் சொல்லலாம். இப்பொழுது நாம் மாத்திரம்… நாம் நல்லது, நீங்கள்… அது எல்லாவற்றையும் அங்கு படியுங்கள், அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். முழு அதிகாரத்தையும் சற்று படியுங்கள். அது மிகவும், அது அதை விவரிக்கிறது.
68 இப்பொழுது, அந்நிய பாஷை பேசுவதைக் குறித்து… அதன் பேரில் இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருப்பதால், இது ஒலிநாடாவில் வேறு பதிவு செய்யப்படுகிறது. நான் தெய்வீக சுகமளித்தல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, வரப்போகும் உலகில் வல்லமை போன்றவைகளை விசுவாசிப்பது போல், அந்நிய பாஷை பேசுவதிலும் விசுவாசம் கொண்டுள்ளேன் என்பதைக் கூற விரும்புகிறேன். அவைகளை விசுவாசிப்பது போலவே இதையும் விசுவாசிக்கிறேன். கிறிஸ்துவின் வருகைக்கு ஒரு ஸ்தானம் உள்ளது போல, தெய்வீக சுகமளித்தலுக்கு ஒரு ஸ்தானம் உள்ளது போல, அந்நிய பாஷை பேசுதலுக்கு ஒரு ஸ்தானம் உண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் அதனதன் ஸ்தானம் உண்டு.
ஜனங்களாகிய உங்களிடம் இப்பொழுது இதைக் கூற எனக்குத் தருணம் கிடைத்துள்ளது, அதை விவரிக்க விரும்புகிறேன். யாரையாவது நான் புண்படுத்தினால், அப்படி செய்ய நான் நினைக்கவில்லை. நான் குழப்பத்தை உண்டாக்க நினைக்கவில்லை. ஆனால் கவனியுங்கள், பெந்தெகொஸ்தேயினர் (நானும் கூட அதில் சேர்ந்தவன், நானும் ஒரு பெந்தெகொஸ்தேயினன், பாருங்கள்?)… தொல்லை என்னவெனில், அவர்கள் அதை மதிப்பதில்லை. மற்றொரு காரியம், அவர்கள் தங்கள் விருப்பப்படி அதை பேசுகின்றனர். அவர்கள் வார்த்தைக்கு திரும்ப வருவதில்லை.
69 இப்பொழுது கவனியுங்கள், இப்படித்தான் சபை அமைக்கப்பட்டுள்ளது. நான் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்கு போதகாயிருப்பேனானால், அதை எப்படி அமைக்க எனக்கு விருப்பமென்பதை உங்களிடம் கூறுகிறேன், எல்லா சமயங்களிலும் அதற்கு நான் போதகராக இருக்க நேரிட்டால். நான் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரத்தையும் ஆதரிப்பேன். முதலாவதாக விசுவாசிகளிடம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறக் கூறுவேன். அப்பொழுது 1கொரிந்தியர் 12-ல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வரமும் இயங்கத்தான் வேண்டும் - சரீரம் முழுவதும் இயங்கும் நிலைக்கு அதை நான் கொண்டு வர முடிந்தால்.
இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்… நான் குறை கூறவில்லை. இதை ஞாபகம் கொள்ளுங்கள், நான் ஒரு வார்த்தையும் முரணாக பேசமாட்டேன்: அப்பொழுது நான் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய் தேவதூஷணம் உரைப்பவனாவேன். நான் அதை தவறாக கூறமாட்டேன் என்று தேவன் அறிவார். பாருங்கள்? இருபது ஆண்டுகளாக நான் வேதாகமத்தை ஆராய்ந்து படித்தபிறகு, வேதாகமம் கூறும் கருத்துக்களை உங்களுக்கு அளிக்க முனைகிறேன். நான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக பிரசங்கித்து வருகிறேன். நான் எல்லாவற்றின் வழியாகவும் கடந்து வந்திருக்கிறேன். அது எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் சிந்தித்து பாருங்கள். நான் ஒவ்வொரு மனிதனையும், உலகம் முழுவதிலுமுள்ள உபதேசங்களையும் கவனித்து வந்திருக்கிறேன். அப்படி நான் செய்யக் காரணம், அதன் மீதிருந்த என் சிரத்தையே. என் பேரில் மாத்திரமல்ல, மானிடர் பேரில் நான் கொண்டிருந்த சிரத்தையே என்னை அவ்வாறு செய்யத் தூண்டியது. நான் இவ்விடம் விட்டு செல்ல வேண்டும் நீங்களும் இவ்விடம் விட்டு செல்லவேண்டும். நான் கள்ளத்தீர்க்கதரிசியாக இவ்விடம் விட்டுச் சென்றால், என் ஆத்துமாவை நான் இழந்து போவது மாத்திரமல்ல, என் ஆத்துமாவும் கூட உங்கள் ஆத்துமாவையும் இழந்து விடுபவனாயிருப்பேன். எனவே இது அன்றாட ஆகாரத்தைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது, இது புகழைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது; இது மற்றெல்லாவற்றைக் காட்டிலும் முக்கியம் வாய்ந்தது. இது எனக்கு ஜீவன். பாருங்கள்? நான் எப்பொழுதுமே ஆழ்ந்த உத்தமத்தைக் கொண்டுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன்.
70 இப்பொழுது, நீங்கள் ஒரு பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றால் முதலாவதாக. (நான் எல்லாமும் அப்படியென்று கூறவில்லை, சிலர் அப்படியுள்ளனர்…) பெரும்பாலும், நீங்கள் ஒரு சபைக்குச் சென்று அங்கு பிரசங்கம் செய்யத் தொடங்குகின்றீர்கள். நீங்கள் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகின்றார். இந்த அருமையான நபர் ஒருக்கால் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அது பரிசுத்த ஆவி அவர் மூலமாக பேசுவதாக இருக்ககூடும். ஆனால் காரியம் என்னவெனில், அவர்கள் பயிற்சி பெறவில்லை. மேடையின் மேல் நடக்கும் இந்த ஊழியம், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கித்துக் கொண்டிருக்குமானால், தீர்க்கதரிசிகளின் ஆவிகள் தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்க வேண்டும். பாருங்கள்? "சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக் கடவது…'', ''ஒருவன் பேசும் போது'' என்று பவுல் ஏன் கூறுகிறானென்று வேதத்தைப் படித்துப் பாருங்கள்… அவன் உள்ளே வரும்போது, எல்லாமே குழப்பமாயிருந்தது.
நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று அந்நியபாஷையில் பேசுகிறார். அது அப்படியானால் பீட அழைப்பைக் கொடுக்காமலிருப்பதே நல்லது. அது அதை நிறுத்துகிறது.
71 பின்பு, வேறொரு காரியம். அநேக முறை ஜனங்கள் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசுகின்றனர். அப்பொழுது ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு மெல்லும் பசையை (Chewing gum) மென்றுகொண்டு, சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தேவன் பேசுவாரானால், அமரிக்கையாயிருந்து கவனியுங்கள்! அது சத்தியமாயிருக்குமானால், அந்த மனிதனின் மூலம் பரிசுத்தஆவி பேசிக் கொண்டிருப்பாரானால், நீங்கள் அமரிக்கையாயிருந்து கவனித்துக் கேளுங்கள், பயபக்தியாயிருங்கள், பாருங்கள்? அமரிக்கையாயிருந்து அர்த்தம் உரைப்பவர் யாராகிலும் உள்ளனரா என்று கவனியுங்கள்! அர்த்தம் உரைப்பவர் யாரும் சபையில் இல்லாமல் போனால், அவர்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் அமைதியாயிருக்கக் கடவர்கள்.
அவர்கள் அந்நியபாஷை பேசினால், அவர்களுக்கும் தேவனுக்கும் மத்தியில் பேசக் கடவர்கள் என்று வேதம் கூறுகிறது. அந்நியபாஷை பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகின்றான். அது அந்நிய பாஷை; வேறொரு பாஷை. ''அதனால் ஒரு உபயோகமுமில்லை'' என்று அவன் கூறுகிறான். ஒரு சத்தம் உண்டானால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். நீங்கள்… எக்காளம் சத்தமிட்டால், அது என்ன சத்தமிடுகிறது (…அது எப்படி ஊதப்படுகிறது) என்று நீங்கள் அறிய வேண்டும். இல்லையென்றால் யுத்தத்துக்கு எப்படிஆயத்தம் பண்ண வேண்டுமென்று யாராகிலும் அந்நியபாஷை பேசி, 'நீட்' என்று சத்தமிட்டால், அவ்வளவுதான். என்ன செய்ய வேண்டுமென்று யாருக்குத் தெரியும்? ஆனால் எக்காளம் 'ரிவைல்' (Reveille) ஓசையிட்டால், ''எழுந்திருங்கள்'' என்று அர்த்தம். அது 'டாப்ஸ்' (taps) ஓசையிட்டால், ''கீழே இறங்குங்கள்" என்று அர்த்தம். பாருங்கள்? அது ''சார்ஜ்" (charge) ஓசையிட்டால், "எதிரியைத் தாக்குங்கள்'' என்று அர்த்தம். அது அர்த்தத்தை கொடுப்பதாய் அமைந்திருக்க வேண்டும். தனிமையில் பேசுவது மாத்திரமல்ல. எனவே சபையில் அர்த்தம் உரைப்பவர் யாராகிலும் இருந்தால், அப்பொழுது அந்நிய பாஷைகள் சபைக்கு உரியதாகும்.
72 இப்பொழுது, என் அருமை நண்பரே, உங்கள் கேள்விக்கு "அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நிய பாஷையில் ஐயாயிரம் வார்த்தைகளை (அல்லது அதற்கு அதிகமாக வேதம் என்ன கூறினாலும்), (பதினாயிரம் வார்த்தைகள் என்று வேதம் கூறுகிறது - தமிழாக்கியோன்) பேசுகிறதிலும் மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்'' அது உண்மை. நீங்கள் தொடர்ந்து படிப்பீர்களானால், "அது வெளிப்படுத்தப்பட்டு அல்லது பக்தி விருத்திக்கேதுவாக அர்த்தம் சொல்லப்படாமல் போனால்'' பாருங்கள்? அது பக்தி விருத்திக்காகாது.
ஒரு சிறு கருத்தை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்… எழும்பிக் கொண்டிருக்கும் இந்த சபைக்கு நான் போதகராக இருந்தால், நான் போதகராக இருக்க தேவன் என்னை அழைப்பாரானால், இப்படித்தான் அதை நடத்தப் பிரியப்படுவேன். வரம் பெற்றுள்ள ஒவ்வொருவரையும் நான் கண்டுபிடிப்பேன். ஆராதனை தொடங்குவதற்கு ஏறக்குறைய ஒரு மணிநேரம் முன்பு அவர்கள் தனியாக ஒரு அறையில் கூடும்படி செய்வேன். அவர்கள் ஆவியின் அபிஷேகத்தில் உட்காரட்டும். முதலாவதாக, அந்நிய பாஷை பேசும் வரம் பெற்ற ஒருவர் எழுந்து அந்நிய பாஷை பேசுகின்றார். எல்லோரும் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். வேறொருவர் எழுந்து அவர் பேசினதற்கு அர்த்தம் உரைக்கிறார். அது சபைக்கு அளிக்கப்படும் முன்பு, அது இரண்டு அல்லது மூன்று சாட்சிகளால் நிலைவரப்பட வேண்டுமென்று வேதம் கூறுகிறது. அது ஆவியைப் பகுத்தறியும் வரம் கொண்ட மனிதர்களாய் இருக்க வேண்டும் (பாருங்கள்?) ஏனெனில் அநேக சமயங்களில் பொல்லாத ஆவிகள் அங்கு நுழைந்துவிடுகின்றன. பவுல் அதைக் குறித்து சொல்லியிருக்கிறான். ஆனால் தேவனுடைய வல்லமையும் அங்குள்ளது. பொல்லாத ஆவி இல்லாத ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். தேவ புத்திரர்கள் ஒன்று கூடியிருக்கும் போது, சாத்தான் அவர்கள் நடுவில் இல்லாத ஒரு இடத்தை எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். அது எல்லாவிடங்களிலும் உள்ளது. எனவே அதைக் கண்டு முகங்கோணாதீர்கள். பாருங்கள்? சாத்தான் எல்லாவிடங்களிலும் இருக்கிறான். இப்பொழுது பார்ப்போம். ஒருவர் அந்நிய பாஷை பேசுகின்றார். இப்பொழுது ஆவிகளைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் அங்கு உட்கார்ந்திருக்கின்றனர். ஒருவர் அந்நிய பாஷையில் பேசி ஒரு செய்தியை அளிக்கிறார். அது வேத வாக்கியங்களை எடுத்துரைப்பதாக இருக்கக் கூடாது. ஏனெனில் தேவன் வீணாக மறுபடியும் மறுபடியும் கூறுவது கிடையாது. நாமும் அப்படி செய்யக் கூடாதென்று நம்மை எச்சரித்திருக்கிறார். பாருங்கள்? எனவே அது வேதவாக்கியங்களை அப்படியே எடுத்துரைப்பதல்ல. அது சபைக்கு ஒரு செய்தி.
73 இந்த எழுப்புதலில் இதுவரைக்கும் நமக்கு இரண்டு சம்பவங்கள் நிகழந்தன. அவைகளில் ஒன்று மிகவும் பிழையின்றி சரியான விதத்தில் அமைந்திருந்தது. பாருங்கள்? ஒரு மனிதர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, அப்பொழுது அளிக்கப்பட்ட செய்தி உண்மையானது என்று உறுதிப்படுத்தினார். அன்றொரு இரவு வேறொருவர் எழுந்து நின்று தீர்க்கதரிசனத்தின் ஏவுதலினால், அவர் என்ன கூறுகிறார் என்று அறியாமலே, ஒன்றைக் கூறி, "முடிவில் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்'' என்றார். அப்பொழுது உடனடியாக ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டு, அதாவது, "கர்த்தர் வந்துள்ளார் என்று விசுவாசிப்பவன் பாக்கியவான்'' என்று கூறினது.
பாருங்கள், அர்த்தம்… பிறகு பரிசுத்த ஆவி நேற்றிரவு கட்டிடத்தில் விழுந்தது. பாருங்கள்? அது பக்திவிருத்திக்காக நான் நின்று கொண்டு, ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்களிடம் கூற முயன்றேன். அப்பொழுது பிசாசும் அவர்கள் மத்தியில் வந்து, "அதற்கு செவி கொடுக்காதே சும்மாயிரு'' என்றான். என் சகோதரி என்னிடம் ''பில், நீங்கள் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருந்தது. நான் எழுந்து மதிலைத் தாண்டிச் செல்லக் கூடும் என்பது போன்ற உணர்ச்சி எனக்கு உண்டானது'' என்றாள்.
நான், "எழுந்து தாண்டு'' என்றேன். அவ்வளவு தான்
அவள், "நீங்கள் அப்படி பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, ஜனங்கள் கூச்சலிடத் தொடங்கினர். நான் ஒன்றுமற்றவள் என்னும் உணர்ச்சி தோன்றினது'' என்றாள்.
நான், "அது பிசாசு, அது சாத்தான். அவன் அப்படிப்பட்ட உணர்ச்சியை உண்டாக்க வந்தபோது, நீ எப்படியாயினும் எழுந்திருக்க வேண்டும்'' என்றேன். நாம் தேவனுக்கு ஆசாரியர்களாயிருந்து நம்முடைய உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலியை அவருடைய நாமத்துக்கு செலுத்திக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்?
74 இப்பொழுது, இதுதான் நடந்தது. அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் பேசத் தொடங்கினார். ஏனெனில், "அது விசுவாசிக்கிறவன் பாக்கியவான்" இரண்டு மூன்று இரவுகளாக அதை நான் வலியுறுத்த முயன்றேன். அதன் பின்பு பரிசுத்த ஆவியானவர் பேசி (பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் ஒருவர் பேசி), "கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்'' என்று உரைத்தார். நான் வேறெதாவது ஒன்றைக் கூறுவதற்கு முன்பே, ''கர்த்தர் இதில் வந்துள்ளார் என்று விசுவாசிக்கிறவன் பாக்கியவான்'' என்று கூறினேன். பார்த்தீர்களா? பரிசுத்த ஆவி என்பது உங்களுக்குள் இருக்கும் தேவனே என்று நான் கூறி வந்தேன். பாருங்கள்? அவர்கள் அதைப் புரிந்து கொண்டனர். பாருங்கள்? பிறகு பரிசுத்த ஆவி ஜனங்களின் மத்தியில் விழுந்தது. தீர்க்கதரிசனம் எவ்வாறு பக்தி விருத்தியடையச் செய்கிறதென்று பாருங்கள்.
தீர்க்கதரிசிக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் ஒருவரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றவரிடம் செல்கின்றது. ஆனால் தீர்க்கதரிசியோ தொட்டிலில் பிறந்தது முதல் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கிறான். அவர்களிடம் ''கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது உள்ளது. அவர்கள் கூறுவது சரியாவென்று யாரும் நிலைவரப்படுத்துவதில்லை. முன்பிருந்த ஏசாயா, எரேமியா அல்லது மற்ற தீர்க்கதரிசிகள் உரைத்தவைகளை அவ்வாறு நிலைவரப்படுத்த வேண்டிய அவசியமிருந்ததாக நீங்கள் காண்பதில்லை. ஏனெனில் அவர்களிடம் "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது இருந்தது, ஆனால் ஜனங்களிலுள்ள தீர்க்கதரிசன வரத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். ஏனெனில் சாத்தான் மெல்ல நுழைந்து விடுவான். பாருங்கள்? அது சரியாவென்று நிலைவரப்படுத்தப்பட வேண்டும்.
75 இப்பொழுது, நாம் எழுப்புதல் கூட்டம் ஒன்றை நடத்தப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். போதகர்களே, இதை கவனமாய்க் கேளுங்கள். நாம் எழுப்புதல் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். சபையில் அனல் மூண்டிருக்கிறது. சபை எப்பொழுதும் அவ்வாறே இருக்கவேண்டும். ஒருக்கால் ஆவியின் வரம் பெற்ற ஐந்து அல்லது ஆறு பேர் நம்மிடம் உண்டு. ஒருவர் அந்நிய பாஷை பேசுகிறார். இரண்டு அல்லது மூன்று பேர் ஒருக்கால் அந்நிய பாஷை பேசக் கூடும். நான்கு அல்லது ஐந்து பேர் அந்நிய பாஷையில் பேசும் வரம் உடையவர்களாயிருந்து, அந்நிய பாஷை பேசக் கூடும். இரண்டு அல்லது மூன்று பேர் அர்த்தம் உரைக்கக் கூடும். அவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் ஞானத்தின் வரத்தை உடையவர்களாயிருக்கக் கூடும். சரி. வரம் பெற்றுள்ள இவர்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். நீங்கள்… நீங்கள் விளையாடுவதற்காக இந்த வரங்கள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை. ''நான் அந்நிய பாஷை பேசுகிறேன். அல்லேலூயா!'' என்று நீங்கள் கூறுவதற்காக இவைகள் உங்களுக்கு அளிக்கப்படவில்லை. அப்படியென்றால் உங்களை நீங்கள் தாழ்த்திக் கொள்கிறீர்கள். அவைகளைக் கொண்டு நீங்கள் கிரியை செய்யவே அவை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. நீங்கள் வசிக்கும் பாகம் சபை ஆராதனை தொடங்குவதற்கு முன்பு இடம் பெற வேண்டும். ஏனெனில் ஆராதனையின் போது கல்லாதவர்களும் கூட நமது மத்தியில் இருப்பார்கள்.
76 நீங்கள் ஒரு அறைக்குச் சென்று அங்கு உட்கார்ந்து கொள்கிறீர்கள், வரம் பெற்றவராகிய நீங்கள் அனைவரும் ஒருமித்து ஏனெனில் நீங்கள் சுவிசேஷத்தில் உடன் ஊழியக்காரராயிருக்கிறீர்கள். அங்கு நீங்கள் உட்கார்ந்து கொண்டு, ''ஆண்டவரே, நாங்கள் அறிய வேண்டுமென்று நீர் விரும்பும் ஏதாகிலும் இன்றிரவு உண்டா? ஓ, பரலோகப் பிதாவே, எங்களோடு பேசும்'' என்று உங்கள் ஜெபங்களையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்து, பாடல்களைப் பாடுகின்றீர்கள். அப்பொழுது பரிசுத்த ஆவி இறங்கி வந்து யார் மேலாகிலும் விழுந்து, அவர் அந்நிய பாஷை பேசுகின்றார். வேறொருவர் எழுந்து நின்று "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறி அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அது என்ன? கவனியுங்கள். "சென்று சகோ. ஜோன்சிடம் அவர் வசிக்கும் இடத்தை விட்டு மாறும்படியாக கூறுங்கள். ஏனெனில் நாளை பிற்பகல் அந்த நாட்டை பலத்த புயல் காற்று ஒன்று தாக்கப் போகின்றது. அது அவருடைய வீட்டை சேதப்படுத்தும். அவருடைய சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டுப் போகக் கூறுங்கள்.
அது நல்லதாகத் தென்படுகிறது. ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். அங்கு ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற மூன்று பேர் இருக்கவேண்டும். அவர்களில் ஒருவர், "அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது'' என்கிறார் மற்றொருவர், ''அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது'' என்கிறார். அது மூன்றில் இரண்டு பேர் - இரண்டு அல்லது மூன்று சாட்சிகள். சரி. அவர்கள் ஒரு தாளில் அதை எழுதுகின்றனர். ஏனெனில் அது ஆவியானவர் உரைத்தது. சரி அவர்கள் ஜெபித்து, கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
77 சிறிது கழிந்தது, தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒருவர் எழுந்து நின்று, ''கர்த்தர் உரைக்கிறதாவது, இன்றிரவு நியூயார்க் பட்டினத்திலிருந்து பெண் ஒருத்தி வந்தாள். அவள் டோலியில் (stretcher) கட்டிடத்துக்குள் கொண்டு வரப்படுவாள். அவள் தலையில் பச்சை நிறமுள்ள ஒரு துணியைக் கட்டியிருப்பாள். அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருக்கிறாள். கர்த்தர் அவளுக்கு விரோதமாக இவ்விதம் செய்த காரணம் என்னவெனில் அவளுக்கு பதினாறு வயது இருக்கும்போது, அவள் அவருடைய சபையிலிருந்து ஒரு முறை பணத்தை திருடிவிட்டாள். அவளிடம் இதைக் கூறும்படியாக சகோ. பிரான்ஹாமிடம் கூறுங்கள். 'கர்த்தர் உரைக்கிறதாவது', அவள் இதை சரிபடுத்திக் கொண்டால் சுகமடைவாள்'' என்று உரைக்கிறார். ஒரு நிமிடம் பொறுங்கள். அது நல்லதாகத் தென்படுகிறது. ஆவியைப் பகுத்தறிபவரே, உங்கள் பெயரை நீங்கள் தாளில் கையொப்பமிடப் போகின்றீர்கள். இல்லையா?
ஒருவர் எழுந்து, ''இது கர்த்தரிடத்திலிருந்து வந்தது'' என்கிறார். மற்றாருவர், "கர்த்தரிடத்திலிருந்து வந்தது'' என்கிறார். நீங்கள் ஒரு தாளில், "இன்றிரவு பெண் ஒருத்தி வரப் போகிறாள். இன்னின்னது சம்பவிக்கும்'' என்று எழுதுகிறீர்கள். ஆவியைப் பகுத்தறியும் வரம் பெற்ற இரண்டு அல்லது மூன்று பேர் அதை ஆமோதித்து கையொப்பமிடுகின்றனர். இந்த செய்திகளை அனைத்தும் அங்கு அளிக்கப்படுகின்றன. சரி.
78 சிறிது நேரம் கழிந்தது மணி அடிப்பதை அவர்கள் கேட்கின்றனர். சபை ஆராதனை தொடங்கும் நேரம் வந்துவிட்டது. அவர்கள் எழுதப்பட்ட இந்த செய்திகளைக் கொண்டு வந்து மேசையின் மேல் வைக்கின்றனர். இந்த மேசையில் தான் இவை வைக்கப்படும். நான் எங்கோ ஓரிடத்தில் படித்து, ஜெபித்துக் கொண்டிருப்பேன். பாடல்கள் பாடப்பட்ட பின்பு, சிறிது கழிந்து, நான் வெளியே வருவேன். சபை அனைத்தும் ஒழுங்கை கடைபிடித்து, ஜனங்கள் உள்ளே வந்து உட்கார்ந்து, தியானித்து, ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நீங்கள் ஒழுங்கை கடைபிடிக்க வேண்டும் நீங்கள் சபைக்கு வந்து, ஒருவரொடொருவர் பேசக் கூடாது. நீங்கள் சபைக்கு வந்து தேவனோடு பேச வேண்டும். உங்கள் ஐக்கியத்தை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? இப்பொழுது நாம் தேவனுடன் இங்கு ஐக்கிய கொள்கிறோம். நாம் இங்கு வந்து தேவனுடன் பேசுகிறோம். எல்லாமே அமைதியாயும் பயபக்தியாயும் உள்ளது. ஆவியானவர் அசைவாடுகின்றார். பாடல் ஆராதனை தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பே பியானோ வாசிப்பவர் பியானோவின் அருகில் வந்து,
என் இரட்சகர் மரித்த அந்த சிலுவையின்
கீழ் பாவம் கழுவப்படுவதற்காக நான் கதறினேன்.
…என்பது போன்ற ஒரு நல்ல பாடலை இனிமையாக அமைதியாக இசைக்கிறார். அது கூட்டத்தில் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தைக் கொண்டு வருகிறது பாருங்கள்?
79 ஜனங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் அழுது, ஆராதனை தொடங்குவதற்கு முன்பே மனந்திரும்பி பீடத்தண்டை வருகின்றனர். ஏனெனில் பரிசுத்த ஆவி அங்கே இருக்கிறார். பாருங்கள்? சபை பிரசவ வேதனை அடைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் ஸ்தானத்தை வகித்து ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மெல்லும் பசையை (Chewing gum) மென்றுகொண்டு, ''ஏ, லிடி, உன் உதடு வர்ணத்தை கொஞ்சம் எனக்குத் தா. எனக்கு வேண்டும்… உனக்குத் தெரியும். உனக்குத் தெரியும் எனக்கு அது தேவை… உனக்குத் தெரியுமா, அன்றொரு நாள் நான் கடைக்குச் சென்றிருந்தபோது, உன்னை அங்கு தூரத்தில் கண்டேன். நான் அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டதில்லை… அதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்?'' என்று வம்பளந்து கொண்டிருப்பது கிடையாது. ஓ, இரக்கம்! அதன் பிறகு இதை தேவனுடைய வீடு என்றழைக்கின்றனர். அது அவமானம். கிறிஸ்துவின் சரீரம் ஒன்று கூடி வருகின்றது. நாம் அங்கு உட்காருகின்றோம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன், "நாங்கள் அங்கு சென்றிருந்த போது இன்னின்னது, இன்னின்னது…'' என்கிறான். அதெல்லாம் வெளியில் பேச வேண்டும், இது தேவனுடைய வீடு.
80 ஜெபம் செய்து கொண்டே உள்ளே நுழையுங்கள். உங்கள் இடத்தில் அமருங்கள். சகோதரரே, நான் உங்கள் சபைகளைக் குறித்து பேசவில்லை. நீங்கள் அங்கு என்ன செய்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நான் என் கூடாரத்திற்கு இதை கூறிக் கொண்டிருக்கிறேன். என் சொந்த பின் வாசலுக்கு நீங்கள் (back door) இதை கூறிக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? அது உண்மை.
நீங்கள் அப்படி உள்ளே வரும்போது, முதலாவதாக போதகர் வெளியே நடந்து வருகிறார். அவர் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார். அவர் இது, அது, மற்றதற்கு பதில் கூற வேண்டியதில்லை. அவர் தமது ஊழியத்தின் பனித் துளிகளின் கீழிருந்து நேரடியாக வெளியே வருகிறார். அவர் பரிசுத்த ஆவியின் வல்லமையின் கீழிருந்தார். அவர் அங்கிருந்து, அதிக அக்கினி நாவுகள் ஒன்று கூடியுள்ள இடத்துக்கு வருகிறார். அது ஏறக்குறைய அக்கினி ஸ்தம்பம் (பாருங்கள்?), அது சுற்றிக் கொண்டிருக்கிறது. அவர் அங்கு வந்து மேசையின் மேல் வைக்கப்பட்டுள்ள தாளை கையிலெடுத்துப் படிக்கிறார்: "சபைக்கு ஒரு செய்தி 'கர்த்தர் உரைக்கிறதாவது', சகோ. ஜோன்ஸ் தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டும். நாளை பிற்பகல் 2.00 மணிக்கு அவருடைய இடத்தை பலத்த புயல் காற்று ஒன்று தாக்கும். அவருடைய சாமான்களை அவர் எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்ல வேண்டும்''. சகோ. ஜோன்ஸ் அதை கேட்கிறார். சரி அது எழுதி வைக்கப்பட்டுள்ளது. ''கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னின்ன பெயருடைய ஒரு ஸ்திரீ இன்றிரவு இங்கு வருவாள். அவள் இன்னின்னதை செய்திருக்கிறாள்'' (நான் உங்களிடம் ஏற்கெனவே கூறினது போன்றும்). சரி, அது எழுதப்பட்ட தாள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான். அவர்கள் சபையில் ஏற்கெனவே தங்கள் இடத்தில் அமர்ந்துள்ளனர். சரி.
பிறகு போதகர் செய்தியளிக்கிறார். அவர் பிரசங்கம் செய்யும் போது, எதுவுமே குறுக்கே பேசி அவரைத் தடை செய்வதில்லை. அது ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது. நாங்கள் தொடர்ந்து பிரசங்கம் செய்கிறோம். நாங்கள் செய்தியளித்து முடிக்கிறோம்.
81 சற்று கழிந்து… முதலாவதாக என்ன தெரியுமா, செய்தியளித்து முடிந்த பிறகு ஜெப வரிசை தொடங்குகிறது. அங்கு ஒரு ஸ்திரீ வருகிறாள். அவள் வரப்போவதாக ஒருவர் அந்நிய பாஷை பேசி முன்னறிவித்துவிட்டார். பாருங்கள்? எனவே என்ன நடக்கப் போகிறதென்று எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அது எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். உங்கள் மேல் அக்கினி நாவுகள் நின்றுகொண்டு, விசுவாசம் எப்படி அதிகரிக்கிறதென்று பாருங்கள்! அந்த அக்கினி நாவுகளெல்லாம் இப்பொழுது ஒன்று கூடுகின்றன. அது முடிவு பெற்ற கிரியையாயுள்ளது. அவ்வளவுதான். அந்த ஸ்திரீ… நான், "நியூயார்க் பட்டினத்திலிருந்து வந்து இங்கு அமர்ந்துள்ள திருமதி இன்னார்…'' என்பேன் பாருங்கள்?
"ஓ, அது உண்மை. உங்களுக்கு அது எப்படி தெரியும்?''
"அது கர்த்தரிடத்திலிருந்து சபைக்கு உண்டான செய்தி. நீ பதினாறு வயதுடையவளாய் இருந்தபோது, நீ இன்னின்ன இடத்தில் இருந்தாய். அப்பொழுது நீ சபையிலிருந்து சிறிது பணத்தைத் திருடி, அதைக் கொண்டு உனக்குத் துணிமணிகள் வாங்கிக் கொண்டாய் அல்லவா?''
"ஓ, அது உண்மை. அது உண்மை".
''அதை தேவன் இன்றிரவு எங்களுக்கு சகோ. இன்னார் பேசின அந்நிய பாஷை மூலம் கூறினார். அதற்கு சகோ. இன்னார் அர்த்தம் உரைத்தார். இங்குள்ள சகோ. இன்னார் அதை பகுத்தறிந்து, அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது என்று கூறினார். அது உண்மை.''
''ஆம்!''
"அப்படியானால், 'கர்த்தர் உரைக்கிறதாவது', அதை சரிபடுத்திவிடு. அப்பொழுது நீ புற்று நோயிலிருந்து சுகம் பெறுவாய்''.
82 சகோ. ஜோன்ஸ் வீட்டுக்குச் சென்று, வண்டியில் சாமான்களை ஏற்றி, அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். அடுத்த நாள் பிற்பகல் 2 மணிக்கு (சகோ. பிரான்ஹாம் புயல் காற்றின் சப்தத்தை வாயினால் உண்டாக்குகிறார் - ஆசி). எல்லாவற்றையும் நொறுக்கிவிடுகிறது. பாருங்கள்? அப்பொழுது சபை தேவனை மகிமைப்படுத்துகிறது. "கர்த்தராகிய இயேசுவே, உமது நன்மைக்காக நன்றி" அது சபை பக்திவிருத்தி அடைவதற்கு ஏதுவாக உள்ளது.
அவர்கள் கூறினவை நிறைவேறாமல் போனால் உங்கள் மத்தியில் பொல்லாத ஆவி உண்டென்று அர்த்தம். அந்த பொல்லாத ஆவி உங்களுக்கு வேண்டியதில்லை. வானங்கள் உண்மையான பெந்தெகொஸ்தே ஆவியினால் நிறைந்துள்ள போது, உங்களுக்கு ஏன் இந்த பொல்லாத ஒன்று? பிசாசினிடமிருந்து அதற்கு பதிலாக பொல்லாத ஒன்றைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். உண்மையான ஒன்றை பெற்றுக் கொள்ளுங்கள். தேவன் உங்களுக்காக அதை வைத்திருக்கிறார். நீங்கள் சரியென்று தேவன் ஏற்கெனவே உங்களை உறுதிப்படுத்தியிருந்தாலொழிய இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்யாதிருங்கள். ஏனெனில் சுவிசேஷ கிரியை செய்வதற்கு நீங்கள் சபைக்கு உதவி செய்ய வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அது என்னவென்று புரிந்து கொண்டீர்களா?
83 அந்நிய பாஷை பேசுதல்… அவர் என்ன பேசுகிறாரென்று எந்த மனிதனுமே புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு. இதற்கு ஒரு அர்த்தமுண்டு. (சகோ. பிரான்ஹாம் கைதட்டி சத்தம் எழுப்புகிறார் - ஆசி) "க்ளக், க்ளக், க்ளக்''. அது எங்கோ ஒரு மொழியாக அமைந்துள்ளது.
நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, அதை நம்பவேயில்லை. ஆனால் ஒவ்வொன்றும் இடும் சத்தத்துக்கும் ஒரு அர்த்தமுண்டு. அர்த்தமில்லாத ஒரு சத்தமும் கிடையாது என்பதாக வேதம் கூறுகிறது. எழுதப்பட்ட ஒவ்வொரு சத்தத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தமுண்டு. ஜனங்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்… நான், ''தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து'' என்பேன்.
உடனே ஒருவர் இப்படி கூறுவார். (சகோ. பிரான்ஹமே மொழி பெயர்ப்பாளர் தன் மொழியில் பேசும் சத்தத்தை பாவனை செய்து காண்பிக்கிறார் - ஆசி). மற்றொருவர் இப்படி கூறுவார் (சகோ. பிரான்ஹாம் மீண்டும் பாவனை செய்கிறார் - ஆசி). அது "தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து" என்று தங்கள் மொழிகளில் அர்த்தம் பாருங்கள்? அது… எனக்கு அது ஒன்றும் புரிவதில்லை, ஆனால் அவர்களுக்கோ, நான் உங்களிடம் பேசிக் கொண்டிருப்பது போன்று, அது ஒரு மொழி, ஜுலு (Zulu), கோஜா (Koza), பாண்டு (Bantu) ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாளர் இதை தங்கள் தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்தபோது, அவர்கள் கூறின ஒவ்வொன்றையும் அவர்கள் புரிந்து கொண்டனர். இந்த ஜனங்கள் முணுமுணுப்பதை நீங்கள் கேட்கிறீர்களே, அது உளறுதல் என்று நீங்கள் நினைக்க கூடும். அப்படியில்லை. அதற்கு ஒரு அர்த்தமுண்டு. எனவே அதற்கு நாம் மதிப்பு கொடுத்து, அதை அதன் ஸ்தானத்தில் பொருத்த வேண்டும்.
84 ஒருக்கால் ஒரு செய்தியும் இல்லாமல் இருக்கலாம். ஆராதனை முடிந்து, பீட அழைப்பு கொடுக்கப்பட்டு முடிந்துவிட்டதென்று வைத்துக் கொள்வோம். சிறிது கழிந்து ஒருவர் (முன்பு ஒரு செய்தியும் கொடுக்கப்படவில்லை). அவருக்குத் தருணம் கிடைக்கும் போது ஒருவர் எழுந்து நிற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பரிசுத்த ஆவி… ''அர்த்தம் சொல்லுகிறவன் இல்லாவிட்டால். அவன் பேசாமலிருக்கக் கடவன்'' என்று வேதம் உரைக்கிறது (1கொரி.14:28). அது எவ்வளவு தான் பேசப் பிரயாசப்பட்டாலும், பேசாமலிருங்கள்.
"என்னால் முடியாது'' என்று சொல்லிவிடுங்கள் நீங்கள் அப்படி சொல்லிவிடலாம் என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? அத்துடன் அது முடிவு பெற்றுவிடுகிறது. பாருங்கள்? அவன் பேசாமலிருக்க கடவன்.
ஆனால் எல்லாமே சபையில் ஒழுங்காயுள்ள தருணம் ஏற்பட்டு, செய்தியைக் கொடுப்பதற்காக பரிசுத்த ஆவி ஒருவர் மேல் வந்தால், அப்பொழுது செய்தி கொடுங்கள். அதைதான் நீங்கள் செய்ய வேண்டும். அப்பொழுது அர்த்தம் வருகிறது: ''இங்கு சாலி ஜோன்ஸ் என்னும் பெயருடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். (அத்தகைய பெயர் கொண்ட யாரும் இங்கில்லை என்று நினைக்கிறேன்) சாலி ஜோன்ஸ், (பாருங்கள்) இதுவே அவள் அழைக்கப்படும் கடைசி இரவாயிருக்கும் என்று அவளிடம் கூறுங்கள். அவள் தேவனிடம் அதை சரிபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வவுலகில் அவள் குறுகிய காலமே இருப்பாள்'' அப்பொழுது சாலி ஜோன்ஸ் அவளால் இயன்றவரை விரைந்து பிடத்துக்கு ஓடி வருவாள் (பாருங்கள்?) ஏனெனில் அதுவே அவளுடைய கடைசி அழைப்பு. பாருங்கள்? அதுதான் ஒரு செய்தி கொடுப்பது, உறுதிப்படுத்துவது அதைப் போன்ற ஒன்று.
85 அதுவே இயங்கிக் கொண்டிருக்கும் பெந்தெகொஸ்தே சபை. பொல்லாத ஆவிகள் புகுந்து கொள்ள வழியேயில்லை. ஏனெனில் அது ஏற்கெனவே… வேதம் வெளிப்படையாக, "இரண்டு அல்லது மூன்று பேர் பேசலாம். இன்னும் இரண்டு பேர் அது சரியாவென்று நிதானிக்க கடவர்கள்'' என்கிறது. அதுதான் சபை. ஆனால் ஒருவர் அந்நிய பாஷை பேசும் போது மற்றவர் குதித்து, சிரித்து, வேறெங்கோ பார்த்துக் கொண்டு வேறெதாவதை குறித்து பேசிக் கொண்டு, போதகர் ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பது, மற்றவர்களை சுற்றிலும் கூட்டம் கூடுவது போன்றவைகளை நாம் இன்று எங்கிருந்து பெற்றோம்? அது சரியல்ல. போதகர் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது, யாராவது ஒருவர் எழுந்து தடை செய்வது… ஒருவர் வேதாகமத்தை படிப்பது. வேறொவர் பின்னாலிருந்து அந்நிய பாஷை பேசி இப்படியாக அவரைத் தடை செய்து. ஓ, அப்படி செய்யக் கூடாது. பாருங்கள்? போதகர் பிரசங்க மேடையில் நின்றுகொண்டு பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது, யாராவது ஒருவர் எழுந்து நின்று அந்நிய பாஷை பேசி அவரைத் தடைசெய்தால், அது பரிசுத்த ஆவி இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் பரிசுத்தஆவியை எந்த சந்தர்ப்பங்களில் உபயோகிக்க வேண்டுமென்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் (பாருங்கள்) அதை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று. நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டேன்… இன்னும் ஒரு கேள்விக்கு இடமுண்டா? பிறகு, நாளை ஞாயிற்றுக்கிழமை. அப்பொழுது நாம்.
86 இங்கு ஒரு கேள்வி உள்ளது. அது மிகவும் அருமையான ஒன்று நீங்கள் இன்னும் சில நிமிடங்கள் என்னுடன் தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஒரு நோக்கத்துக்காகவே இந்த கேள்விக்கு இதுவரை பதில் கூறாமல் வைத்திருந்தேன். இதுவே என் கடைசி கேள்வி. இந்த நபர் கேட்டிருக்கும் இரண்டு காரியங்களை நான் வாசிக்கப் போகிறேன். அது ஒரு பழைய காகிதத்தில் அழகிய கையெழுத்தால் எழுதப்பட்டுள்ளது. அதை எழுதினது யாரென்று எனக்குத் தெரியாது. எந்த பெயரும் அதில் கையொப்பமிடப்படவில்லை.
கேள்வி: சகோதரன் பிரான்ஹாமே, போதகர்கள் தங்கள் ஆராதனைகளில் பணத்துக்காக நீண்ட நேரம் நிர்ப்பந்தம் செய்து, கூட்டத்திலுள்ள இத்தனை பேர் இவ்வளவு பணம் கொடுப்பார்களென்று தேவன் அவர்களிடம் கூறினதாக கூறுவது முறையாகுமா? அது சரியா அல்லது தவறாவென்று அறிய விரும்புகின்றேன். அது என் அமைதியை பயங்கரமாக குலைத்துள்ளது.
என் நண்பனே, இதைக் குறித்த என் கருத்தை நான் உங்களுக்குத் தெரிவிக்கப் போகின்றேன். அது தான் சரி என்பதல்ல. ஆனால் அது பயங்கரமான செயல் என்பதே என் கருத்து
இதை கூற விரும்புகிறேன். தேவன் என்னை சுவிசேஷ ஊழியத்துக்கு அனுப்பியுள்ளார். பணமில்லாமல் நான் அவதிப்பட்ட தருணம் எனக்கும் இருந்திருக்கிறது. என்னிடம் பணமே இருக்காது. அப்பொழுது நான், "காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்'' என்பேன். மேலாளர் என்னிடம் வந்து, "பில்லி, இன்றிரவு நமக்கு கூட்டத்துக்கான செலவை கொடுத்து தீர்க்க 5000 டாலர்கள் குறைவாயுள்ளது. அதை செலுத்த ஜெபர்ஸன்வில்லில் உம்மிடம் பணம் உள்ளதா?'' என்று கேட்பார்.
நான், ''பரவாயில்லை. தேவன் என்னை இங்கு அனுப்பினார். இல்லையென்றால் இங்கு நான் வந்திருக்க மாட்டேன்.(பாருங்கள்?) காணிக்கை தட்டை ஜனங்களிடம் அனுப்புங்கள்'' என்பேன். ஆனால் கூட்டம் முடிவதற்கு முன்பே, ஒருவர் வந்து, "உங்களுக்குத் தெரியுமா, இதன் செலவுக்காக 5000 டாலர்கள் கொடுக்க கர்த்தர் என் இருதயத்தை ஏவினார்'' என்பார். பாருங்கள், பாருங்கள்? முதலாவதாக, அந்த கூட்டத்தை நடத்துவதற்கு வழி நடத்தப்பட வேண்டும்.
87 நிர்ப்பந்தம் செய்வது, பணத்துக்காக பிச்சையெடுப்பது போன்ற செயல்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது தவறு என்பதே என் கருத்து. ஆனால் சகோதரனே, நீங்கள் அதை செய்ய நினைத்தால், உங்கள் மனதை நான் புண்படுத்தாதிருப்பேனாக. பாருங்கள்? ஒருக்கால் அப்படி செய்யும் உரிமையை நீங்கள் தேவனிடமிருந்து பெற்றிருப்பீர்கள். நான் என்னைக் குறித்த மாத்திரமே கூறுகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது.
போதகர்கள் பயமுறுத்துவதை நான் கேட்டதுண்டு. அண்மையில் நான் ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தேன்… இவர்கள் பெந்தெகொஸ்தேயினர் அல்ல, இது. வேறு சபைகள் (பாருங்கள்?) ஒரு பெரிய 'காம்ப்' கூட்டத்தில் இப்படி நடந்தது. கெர்டி, நீ அப்பொழுது என்னுடன் இருந்தாய், இன்னும் மற்றவர்களும் அங்கிருந்தனர். இதற்காக அவர்கள் முழு பிற்பகலையும் எடுத்துக் கொண்டனர். அது புகழ்வாய்ந்த ஸ்தாபனக் கூட்டம் - இரண்டு அல்லது மூன்று ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்து நடத்தின கூட்டம் (நமது பட்டினத்திலுள்ள நவீன சபைகளைப் போல் அவை வழக்கமான சபைகள்). அது ஒரு பெரிய கன்வென்ஷன் - அவர்கள் அந்த முழு பிற்பகலையும் இதற்காக உபயோகித்து, மேடையில் நின்று கொண்டு, இந்த கூட்டத்துக்காக ஜனங்கள் பணம் கொடுக்காமல் போனால், தேவன் அவர்களுடைய பயிர்களை அழித்து போடுவார் என்றும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு இளம்பிள்ளை வாதம் வரும்படி செய்வார் என்றும் இப்படிப்பட்ட காரியங்களைக் கூறி அவர்களை பயமுறுத்தினர். நான், ''தேவனுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் இது தேவதூஷணம்" என்றேன். தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்பாவிட்டால், ஸ்தாபனங்கள் உங்களை கவனித்துக் கொள்ளட்டும். ஆனால் நீங்கள்… தேவன் உங்களை அனுப்பினால், அவர் உங்களை கவனித்துக் கொள்வார்.
88 கேள்வி: பரிசுத்த ஆவி சபையில் கிறிஸ்துமஸ் நாடகம் நடத்தப்படலாமா?
நல்லது, அது கிறிஸ்துவைக் குறித்த நாடகமானால் பரவாயில்லை. ஆனால் அது சான்டாகிளாசைக் குறித்ததானால், அவன் பேரில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் வளர்ந்தபோது, அதனின்று அகன்றுவிட்டேன். எனக்கு சான்டா கிளாசின் பேரில் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. பாருங்கள்? இவர்கள் வைத்துள்ள சில சிறு கிறிஸ்துமஸ் காரியங்கள் மூடத்தனமானது என்று நான் எண்ணுகிறேன்… அவர்கள் கிறிஸ்துவை முழுவதுமாக கிறிஸ்துமஸிலிருந்து எடுத்துவிட்டு, அதில் சான்டா கிளாசை புகுத்திவிட்டனர்.
சான்டா கிளாஸ் ஒரு கட்டுக்கதை. (குழந்தைகளாகிய உங்களின் மனதை நான் புண்படுத்தவில்லையென்று நம்புகிறேன்). ஆனால் உங்களுக்கு நான் சொல்லுகிறேன். இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்நகரிலுள்ள ஒரு பெரிய சபையின் போதகர் என்னிடம் வந்தார். அவரை நான் நன்றாக அறிவேன். அவர் என ஆப்த நண்பர். அவருடைய பெயர் சார்லி போஹன்னான். (சகோ. மைக், உங்களுக்கு என் அருமை நண்பர் சார்லி போஹன்னானை ஞாபகமுள்ளதா?)… அவர் தமது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு, ''இந்த பொய்யை என் பிள்ளைகளுக்கு இனி ஒருபோதும் எடுத்துக் கூறமாட் டேன், என் பேரக் குழந்தைகளுக்கும் அதைக் கூற அனுமதிக்க மாட்டேன்'' என்றார். "அவர் தொடர்ந்து என் மகனுக்கு பன்னிரண்டு வயதானபோது, என்னிடம் வந்து சான்டா கிளாசைக் குறித்து பேசினான்'' என்றார். அப்பொழுது அவர் அவனிடம், ''தேனே உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன்'' என்று கூறி சாண்டாகிளாஸ் ஒரு கட்டுக்கதை என்று கூறினார். அவன் தாயிடம் ஓடிச் சென்று அதை அறிவித்தான். சிறிது கழிந்து அவன் திரும்பவந்து, "அப்பா, இயேசுவும் கூட அது போன்று கட்டுக் கதையா?'' என்று கேட்டான்.
நீங்கள் உங்களின் பிள்ளைகளிடம் உண்மையைக் கூறுங்கள். சாண்டா கிளாஸ் என்பது கிரிஸ் கிரிங்கில் அல்லது பரி. நிக்கோலாஸ் என்று அழைக்கப்பட்ட அநேக ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து ஒரு வயோதிப கத்தோலிக்க பரிசுத்தவான், அவர் பிள்ளைகளுக்கு நன்மை செய்பவராக சுற்றித் திரிந்ததாக வரலாறு கூறுகின்றது. இது ஒரு கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் அதை வழிவழியாக பாரம்பரியமாக கைக்கொண்டு வருகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய குமாரன், அவர் உண்மையுள்ளவர், அவர் ஜீவிக்கிறவர். இங்கு ஒரு கேள்வி உள்ளது. அதுவே கடைசி கேள்வி. அது ஒரு…
89 இப்பொழுது கவனியுங்கள். இந்த விஷயத்தில் நீங்கள் என்னுடன் இணங்காமல் இருக்கலாம். நீங்கள் இணங்காமலிருந்தால், அது நட்பு முறையில் இருக்கட்டும். அப்படிச் செய்வீர்களா? நான் உங்களை நேசிக்கிறேன், உங்களை புண்படுத்த நான் விரும்பவில்லை. நான் உத்தமமாய் இருக்க விரும்புகிறேன். என் மகனிடம் நான் பொய் சொன்னால், நான் ஒரு பொய்க்காரன். பாருங்கள்? நான் அவனிடம் உண்மையைக் கூறவே விரும்புகிறேன்.
நான் அவனிடம் சான்டா கிளாசைக் குறித்து கூறி, "ஆம், நிச்சயமாக சான்டா கிளாஸ் என்பவர் ஒருவர் இருக்கிறார். கிறிஸ்துமஸ் இரவன்று தந்தையைக் கவனி'' என்றேன். பாருங்கள்? ஆம்.
உங்களுக்குத் தெரியுமா, நேற்று முந்தின நாள் நான் அங்கு சென்றிருந்தபோது, ஒரு சிறு பெண்ணின் மேல் அதை முயற்சி செய்தேன். அவள் எனக்கு சரியாக பதில் கொடுத்துவிட்டாள். 'குவேக்கர்மேய்ட்' என்னும் கட்டிடத்திற்கு நானும் என் மனைவியும் பலசரக்கு வாங்க சென்றிருந்தோம். அங்கு ஒரு சிறு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஒன்றரை வயதுக்கு மேல் இருக்காது. அவள் அங்கு ஒரு சிறு வண்டியில் உட்கார்ந்து கொண்டு 'டிங்கில் பெல்ஸ்', 'டிங்கல் பெல்ஸ்'' என்று பாடிக் கொண்டிருந்தாள். நான் அவளிடம், ''சாண்டா கிளாஸ் வருவாரென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா?'' என்று கேட்டேன்.
அவள், ''மிஸ்டர், அது என் தந்தை'' என்றாள்.
நான், ''தேனே, உன் சிறு இருதயம் ஆசிர்வதிக்கப்படுவதாக. உனக்கு அறிவு இருக்கிறது'' என்றேன்.
90 இது மிகவும் கடினமான கேள்வி, நண்பர்களே இதற்கு பதில் கூறினவுடனே முடித்து விடுகிறேன். ஓ, இது அழகான வேதவாக்கியம். ஆனால் அது ஒவ்வொரு நபருக்கும் கடினமாக தோன்றக் கூடிய ஒன்று. அநேக ஆண்டுகளாக அது எனக்குப் புதிராகவே இருந்து வந்தது, ஆனால் தேவனுடைய கிருபையினால் மாத்திரமே… இப்பொழுது பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மனைவி, இந்த பிற்பகல் இந்த கேள்விக்கு நான் பதில் கூற வேண்டுமென்று அறிந்தபோது, ''பில், நீங்கள் எப்படி பதில் கூறப் போகிறீர்கள்? எனக்கு அது புதிராயுள்ளது. என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றாள். நான், "இனியவளே, இன்றிரவு வா. தேவனுடைய உதவியைக் கொண்டு என்னால் முடிந்த வரைக்கும் அதற்கு பதில் கூறுகிறேன்'' என்றேன்.
91 கேள்வி: சகோ. பிரான்ஹாமே, தயவு கூர்ந்து எபிரேயர்: 6:4 முதல் 6வசனங்களுக்கு விளக்கம் தாருங்கள்.
அது ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும்… பாருங்கள், இப்பொழுது நீங்கள் நம்முடைய விசுவாசம், கிருபை, விசுவாசிகளின் பாதுகாப்பு, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி… அதாவது பரிசுத்தவான்கள் காக்கப்படுதல் போன்றவைகளில் இங்கு கவனம் செலுத்த வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். எபிரேயர் 6ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்கள். இதை நான் முடித்தவுடனே, உங்களுக்கு இதை தெளிவுபடுத்தித் தர தேவன் எனக்குதவி செய்வாரென நம்புகிறேன். மன்னிக்கவும். இன்றிரவு நான் செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். அதையே நான் நாளை காலை ஆராதனையிலும் பிரசங்கிக்கலாமென்றிருக்கிறேன். பிறகு நான் இங்கிருந்து செல்வேன்.
இது மிகவும் கடினமான கேள்வி. பாருங்கள்? நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சத்தமிடும் அனைத்துமே அந்நிய பாஷைபேசும் அனைத்துமே, போதகரிடம் கைகுலுக்கும் அனைத்துமே நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், அதை நாங்கள் இந்த சபையில் போதிக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், தேவன் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருப்பாரானால், அதை நீங்கள் என்றென்றைக்கும் பெற்றிருக்கிறீர்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பாருங்கள்?ஏனெனில் கவனியுங்கள். அப்படி இல்லையென்றால், இயேசு ஒரு கள்ளப் போதகராகிவிடுவார். பரி. யோவான் 5:24-ல் அவர், ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான்" என்று கூறியிருக்கிறார். அவரோடு தர்க்கம் செய்யுங்கள். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்… பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான். (நான் வேதவாக்கியங்களை எடுத்துரைக்கிறேன்). பிதா ஒருவனை முதலில் இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் (பாருங்கள்?). என்னிடத்தில் வருகிறவனுக்கு நான் நித்திய ஜீவனைத் தருவேன்.(பரி.யோவான் 6); கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். இது அவருடைய வார்த்தைகள்.
92 இப்பொழுது கவனியுங்கள். நான் எபேசியர் 1-ம் அதிகாரத்துக்குச் செல்ல விரும்புகிறேன். பவுல் பிரசங்கிக்கிறான்… கொரிந்தியர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையையும் பாடலையும் பெற்றிருந்தனர். மற்ற சபைகளில் இந்த தொல்லை இல்லை என்பதை கவனியுங்கள். பவுல் மற்ற சபைகளில் அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவன் ரோம சபையிலோ அல்லது எபேசு சபையிலோ அந்நிய பாஷையைக் குறித்து ஏதாவது கூறியுள்ளானா? இல்லை. இல்லை, அவர்களுக்கும் கொரிந்தியரைப் போல் அந்நிய பாஷை பேசுதலும் மற்ற வரங்களும் இருந்தன. ஆனால் அவர்கள் அதை ஒழுங்குப்படுத்தியிருந்தனர். ஆனால் கொரிந்தியர்களோ அதை ஒழுங்குபடுத்தவில்லை. பாருங்கள்? பவுல் அங்கு சென்று சபையை ஒழுங்குபடுத்தினான். அவன்… ஓரல் ராபர்ட்ஸ் கூறுவது போல் "தேவன் நல்ல தேவன்'' என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா?
நீங்கள், "சகோ. பிரான்ஹாமே, அந்நிய பாஷை பேசும் பெந்தெகொஸ்தேயினரைக் குறித்தென்ன?'' என்று கேட்கலாம். அவர்களுக்கு பரிசுத்த ஆவி உண்டென்று நினைக்கிறேன். நிச்சயமாக. சரி. ஏன்? கவனியுங்கள். அவர் நல்ல தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒருமுறை தோமா, "உங்களுக்குத் தெரியுமா, ஆண்டவர்…'' என்றான்.
மற்றவர் அனைவரும் அவரை விசுவாசித்து, "ஓ, அவர் நிச்சயமாக உயிரோடெழுந்துவிட்டார்'' என்றனர்.
தோமாவோ, "ஓ, இல்லை, இல்லை, நான் விசுவாசிக்கமாட்டேன். அதை நான் விசுவாசிக்க கூடிய ஒரே வழி, அதற்கான அத்தாட்சி எனக்கு இருக்க வேண்டும். அவருடைய விலாவிலும், அவருடைய கைகளில் ஆணிகள் கடாவப்பட்டதனால் உண்டான காயங்களிலும் என் விரல்களை நான் போட வேண்டும்'' என்றான்.
அவர் நல்ல தேவன் அவர், "தோமாவே, அருகில் வந்து அப்படியே செய்" என்றார்.
தோமா, "ஓ, இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்'' என்றான்.
அவர், ''ஆம், தோமாவே, நீ என்னைக் கண்ட பிறகு, என்னை உன் கைகளினால் தொட்ட பிறகு, உன் கைகளை என் விலாவில் போட்ட பிறகு விசுவாசித்தாய். ஆனால் காணாதிருந்தும் என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு எவ்வளவு மிகுதியான பலன் உண்டாயிருக்கும்'' என்றார். அவர் நல்ல தேவன். அவர் உங்கள் இருதயத்தின் விருப்பங்களை அருளுகிறார், நிச்சயமாக. அவரை நாம் விசுவாசிப்போம். அது சாத்தானுக்கு மரண அடியாக இருக்கிறது. சகோதரனே, ஒரு மனிதன் தேவனை அவருடைய வார்த்தையின் மூலம் ஏற்றுக் கொள்ளும் போது, அது ஒவ்வொரு முறையும் சாத்தானைக் கொன்றுவிடும். அதுவே சாத்தானுக்குக் கிடைக்கப் பெறும் மிகவும் கடினமான அடியாக இருக்கும். ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, நான் அன்றிரவு கூறினபடி, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்".
93 இப்பொழுது இதை கவனியுங்கள். நான் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து - படிக்கப் போகின்றேன்.
ஆகையால் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டுவிட்டு… பூரணராகும்படி கடந்து போவோமாக… (நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிற முதலாவது காரியம் என்னவெனில்; இதை பவுல் யாரிடம் கூறுகிறான்? எபிரெயரிடம். எபிரெயர்களுக்கு கற்பிக்கப்பட்டது தான் எபிரெயர் நிருபம். அது சரியா? இயேசுவைப் புறக்கணித்த யூதர்கள். உங்களால் இப்பொழுது கிரகித்துக் கொள்ள முடிகிறதா? அவன் யூதர்களுக்கு இதை கூறுகிறான். நியாயப்பிரமாணம் கிறிஸ்துவுக்கு நிழலாகவும் முன்னடையாளமாகவும் இருக்கிறதென்று அவன் காண்பிக்கிறான். பழையவை அனைத்துமே புதியவைகளுக்கு முன்னடையாளம். இப்பொழுது கவனியுங்கள்…) கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு விட்டு… பூரணராகும்படி கடந்து போவோமாக.
94 அவன் அவர்களிடம் உபதேசங்களை குறித்துப் பேசி வந்திருக்கிறான். இப்பொழுது நாம் பூரணமான காரியங்களைக் குறித்து பேசுவோம். நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படும்போது, நீங்கள் தேவனில் பரிபூரணமடைகின்றீர்கள். ''தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது'' (1யோவான் 3:9).
பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ள எவனும்; அதாவது தேவனுடைய ஆவியினால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவனால் பாவம் செய்யமுடியாது. பாருங்கள்? வேதம் அவ்வாறு கூறுகின்றதா? எனவே அது அங்குள்ளது. நீங்கள்… நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றல்ல; உலகம் உங்களை குறித்து என்ன நினைக்கிறது என்றல்ல, தேவன் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம் வாய்ந்தது. பாருங்கள், பாருங்கள்? நீங்கள்… இந்நகரத்தின் தலைவர், நான் மணிக்கு நாற்பது மைல் வேகம் செல்லலாம் என்னும் உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, எப்படி எந்த ஒரு காவல்துறைகாரனும் என்னை சிறைப்படுத்த முடியும்? முடியவே முடியாது. அதுபோன்று, தேவனுக்கு முன்பாக எப்பொழுதுமே இரத்தம் தோய்ந்த பலி இருந்து அவர் என்னை காணவும் முடியாதபடிக்கு அது எனக்கும் தேவனுக்குமிடையே ஒரு மறைவாக இருக்கும் போது, நான் எப்படி பாவம் செய்ய முடியும்? நாம் மரித்தோம், நம்முடைய ஜீவன் தேவன் மூலமாய் கிறிஸ்துவுக்குள் மறைந்து பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி தேவனுடைய பார்வையில் தவறு செய்பவர்களாவீர்கள். ''சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்வமாய் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத் தக்க வேறொரு பலி இனியில்லை" (எபி. 10:26). ஆனால் இங்கு மனப்பூர்வமாய் பாவஞ் செய்வது கூடாத காரியம் (பாருங்கள்?)
95 இப்பொழுது நாம் தொடர்ந்து படிப்போம்.
…மூல உபதேச வசனங்களை நாம் விட்டுவிட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்,
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம்.
(அவர்கள் நாலாம் வசனத்திலிருந்து தொடங்க விரும்புகிறார்கள்)
ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம் ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்.
தேவனுடைய நல்வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே
மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.
இதை நீங்கள் இங்கு படிக்கும்போது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு பின் வாங்கிப் போய் இழந்துபோக முடியும் என்பது போல் உங்களுக்குத் தென்படக் கூடும். ஆனால் அவன் அப்படி செய்வது கூடாத காரியம். பாருங்கள்? அவனால் அப்படி செய்ய முடியாது. அவன் அப்படி செய்தால், கிறிஸ்து பொய்யராகிவிடுவார். பாருங்கள்? ஒரு தரம் பிரகாசிக்கப்படுகிறவர்கள். இங்கு கவனியுங்கள். அவன் யாரிடம் இதை கூறுகிறான்? அவன் எல்லைக்கோடு யூதர்களுக்கு இதைக் கூறுகிறான். பரிசுத்த ஆவியினால் நிறைந்த மனிதன் என்று அவன் கூறவில்லை. அவன், "தேவனுடைய நல் வார்த்தையை ருசி பார்த்தவன்" என்று கூறுகிறான்.
96 இதை நீங்கள் புரிந்து கொண்டு இதைக் காணத் தவறாதிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உவமையாக இதைக் கூற விரும்புகிறேன். அவன் இதை யூதர்களுக்கு எழுதுகிறான். அவர்களில் சிலர் எல்லைக் கோடு விசுவாசிகள். பாருங்கள்? அவன், ''நாங்கள் இந்த கிரியைகளைக் குறித்து பேசுவதை விட்டுவிட்டு, பூரணத்தைக் குறித்து பேசப் போகிறோம்'' என்கிறான். அவன், "இப்பொழுது நாங்கள் ஞானஸ்நானம், மரித்தோரின் உயிர்த்தெழுதல், கைகளை வைக்குதல், இன்னும் மற்றவைகளைக் குறித்து பேசி வருகிறோம். ஆனால் இவைகளைக் குறித்து பேசுவதை நாம் விட்டுவிட்டு பூரணத்தைக் குறித்து பேசுவோம். நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் வரவேண்டியதைக் குறித்து நாங்கள் இப்பொழுது பேசப் போகின்றோம். நீங்கள் இந்த கூட்டத்துக்கு நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்கிறான்.
அப்படிப்பட்ட ஜனங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் சுற்றி சுற்றி இங்கேயே இருப்பார்கள். அவர்கள் உள்ளேயும் வரமாட்டார்கள், வெளியேயும் செல்லமாட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பாராட்டுவார்கள். அவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். ஒருக்கால் பரிசுத்த ஆவி அவர்களுக்கு ஏதாவதொன்றை செய்யும். அவர்கள் எழுந்து, கூச்சலிட்டு. தரையில் மேலும் கீழும் குதிப்பார்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்ள அவர்களுக்கு மனமிராது. இல்லை, இல்லை! பாருங்கள்? அவர்கள், ''ஓ, ஆமாம், அது நல்லது. ஆனால் அதைக் குறித்து இப்பொழுது அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை'' என்று சொல்லிவிடுவார்கள். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? எல்லைக்கோடு விசுவாசிகள். அதை ருசி பார்க்கும்அளவுக்கு அவர்கள் அருகாமையில் உள்ளனர். ஆயினும் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ளமாட்டார்கள். பாருங்கள்? அவர்கள் இந்நிலையிலே நீண்ட காலம் இருந்து, பிறகு முழுவதுமாக அகன்று சென்றுவிடுகின்றனர். இக்கூடாரத்தில் அப்படி செய்தவர் அநேகரின் பெயர்களை நான் கூற முடியும். விழுந்து போன அப்படிப்பட்டவர்களை, மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். அவர்களுக்கு இனி மனந்திரும்புதலே இருக்க முடியாது. ஏனெனில் பரிசுத்த ஆவி அவர்களை விட்டுச் செல்லும் அளவுக்கு அவரைத் துக்கப்படுத்திவிட்டார்கள். அவர்கள் மிக அருகாமையில் வந்தனர். ஆனால்…
97 நீங்கள் என்னுடன் கூட வேதாகமத்தை திருப்புவீர்களானால் (உங்களுக்கு நேரமில்லையென்று எனக்குத் தெரியும்). ஆனால் நீங்கள் வேதாகமத்தை உபாகமம் 1-ம் அதிகாரத்துக்கு திரும்பி அதை படித்தால், அதே காரியம் அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். உபாகமம் 1-ம் அதிகாரம், 19-ம் வசனம் தொடங்கி 26-ம் வசனம் வரைக்கும் படியுங்கள். உபாகமம்… நீங்கள் காணலாம்… இப்பொழுது பாருங்கள். இஸ்ரவேலர் அனைவரும்… அவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் காதேஸ் பர்னேயாவுக்கு வந்தார்கள். ஓ, நான் ஒன்றைக் காண்கிறேன்! இந்த கூடாரம், இந்த பெந்தெகொஸ்தே உலகம் இப்பொழுது காதேஸ்பர்னேயாவில் உள்ளது. சகோ. நெவில், அது முற்றிலும் உண்மை. நாம் காதேஸ்பர்னேயாவில் - உலகத்தின் நியாயத்தீர்ப்பு ஆசனத்தில் - இருக்கிறோம். (அது நியாயத் தீர்ப்பு ஆசனமாக இருந்தது.)
வேவுகாரர்கள் புறப்பட்டு சென்றனர். யோசுவா, ''நான் வேவுகாரர்களை அனுப்பினேன்…'' யோசுவா இல்லை, மோசே, ''நான் பன்னிரண்டு வேவுகாரர்களை, ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரை, தெரிந்தெடுத்து அனுப்பினேன். அவர்கள் தேசத்தை வேவு பார்த்து அங்கிருந்து ஒரு அறிக்கையை கொண்டு வர, அவர்களை அனுப்பினேன்" என்றான். அது சரியா? அவர்கள் திரும்பி வந்த போது, அந்த பன்னிருவரில் ஒன்பது பேர், "ஓ, அது நல்ல தேசம் தான். ஆனால், ஓ, இரக்கம், நாம் அதைக் கைப்பற்ற முடியாது. ஓ, என்னே! எமோரியர் அங்கே இருக்கின்றனர். அவர்கள் அருகில் நாங்கள் வெட்டுக் கிளிகளைப் போல் இருக்கிறோம். அவர்கள் ஆயுதம் தாங்கியவர்கள். அவர்கள் மதில் சுவர்கள் மிகவும் பெரியது. ஓ, நீர் எங்களை இங்கு கொண்டு வந்ததைக் காட்டிலும் நாங்கள் எகிப்திலேயே மரித்திருந்தால் நலமாயிருக்கும்'' என்றனர்.
98 ஆனால் காலேபும் யோசுவாவும் அங்கு குதித்து அவர்களை அமைதிபடுத்தினர். அவர்கள், ''நாம் எளிதில் அதைக் கைப்பற்றிவிடலாம்'' என்றனர். ஆம், ஐயா! இப்பொழுது பாருங்கள், என்ன நடந்தது? தேவன் அதை வாக்கருளினார் என்று காலேபும் யோசுவாவும் அறிந்திருந்தனர். ''அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும், தடைகள் எவ்வளவாக இருந்தபோதிலும், அவை எவ்வளவு உயரமாயிருந்தாலும், அவை எவ்வளவு பெரிதாயிருந்தாலும், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேவன் கூறியுள்ளார், எனவே அதை நாம் கைப்பற்றிவிடுவோம்'' என்றனர். அந்த இருபத்தைந்து லட்சம் பேர்களில் இவ்விருவர் மாத்திரமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இவர்கள் மாத்திரமே தேவன் கூறினது உண்மை என்று விசுவாசம் கொண்டிருந்தனர். ஆமென்.
இப்பொழுது கூடாரம் காதேஸ்பர்னேயாவில் நின்று கொண்டிருக்கிறது. பாருங்கள். அந்த ஜனங்கள் அவ்வளவு அருகாமையில் வந்து, அந்த தேசத்திலிருந்து கொண்டு வந்த திராட்சை பழங்களையும் ருசி பார்த்தனர். அவர்கள் அந்த திராட்சை பழங்களைத் தின்றனர். காலேபும் மற்றவர்களும் அங்கு சென்று திராட்சை குலையைக் கொண்டு வந்த போது இவர்கள் அந்த குலையிலிருந்து சில பழங்களை பிய்த்து தின்று, ''ஓ, அவை ருசி மிகுந்தவை, ஆனால் நம்மால் முடியாது'' என்றனர். அவர்கள் தேவனுடைய நல் வார்த்தைகளை ருசி பார்த்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியை ருசி பார்த்து அதன் நன்மையைக் கண்டிருந்தனர், அதை ருசி பார்த்திருந்தனர், அவர்கள் தேவனுடைய வார்த்தையை ருசி பார்த்தனர்…'' பார்த்தீர்களா? இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த தேசத்திலேயே, வனாந்தரத்திலே அழிந்துபோயினர். அவர்கள் கடந்து உள்ளே பிரவேசிக்கவில்லை. இருப்பினும் அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் போதிய அருகாமையில் வந்தனர். ஆனால் அதை சுதந்தரித்துக் கொள்ள அவர்களுக்கு போதிய கிருபையும் விசுவாசமும் இருக்கவில்லை. அதுதான் அது.
99 இப்பொழுது இந்த கடிதம் எழுதின இந்த அருமையான நபர் என்ன சொல்லுகிறார் என்று கேளுங்கள். நாம் அடுத்த வசனத்தை படிப்போம். ஒரு நிமிடம் கவனியுங்கள். பவுலைக் கவனியுங்கள். இப்பொழுதும் நாம் 7ம் வசனத்தைப் படிப்போம்.
எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு.
அவன் என்ன சொல்லுகிறான் என்று பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். இந்த கேள்வி இங்கு கேட்கப்பட்டது. அதன் பிறகு நாம் முடித்து விடுவோம்… இது என்னை அநேக ஆண்டுகளாக தொந்தரவு செய்து வந்தது.
100 ஒரு முறை நான் இந்தியானாவிலுள்ள மிஷாகாவா என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஜனங்கள் அந்நிய பாஷை பேசிக் கொண்டிருந்தனர். நான் இப்பொழுது என் கூட்டத்தினரின் முன்னிலையில் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை வரலாற்றையும், அந்த கறுப்பு மனிதன், ''இதோ அவர், இதோ அவர்'' என்று கூறினதையும் நான் கூறக் கேட்டிருக்கிறீர்கள். அதை நான் உங்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
அதன் மற்ற பாகம்; நான் இரண்டு மனிதர்களை அங்கு கண்டேன். அவர்கள். ஒருவர் அந்நிய பாஷையில் செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். சகோதரனே, அவர்கள் பிழையின்றி உரைத்தனர். அப்பொழுது நான், ''என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. நான் தேவ தூதர்களின் மத்தியில் இருக்கிறேன்" என்று எண்ணினேன். ஒருவர் அந்நிய பாஷை பேசுவார், மற்றவர்.
101 அங்கு வயோதிப பிரசங்கி ஒருவருடன் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)… இருவரும் சில நேரத்தில் கைகுலுக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒன்றை நான் என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. ஒருவர் அந்நிய பாஷையில் ஒரு செய்தி கொடுப்பார். மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். என்னே, என்னே! அது மிகவும் அற்புதமானது! ஒருவர் பேசி மற்றவர் அர்த்தம் உரைத்தல் என்பது. இருவரும்… அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தும் போது, அவர்கள் முகம் சுண்ணாம்பு போன்று வெளுத்துவிடும். "ஓ, என்னே, என்னே, என் வாழ்க்கை பூராவும் நான் எங்கிருந்தேன். இது தான் அது. என் பெந்தெகொஸ்தே சகோதரர்கள் செய்வதுதான் சரி'' என்று எண்ணினேன். அது முற்றிலும் உண்மை.
அதுவரை நான் எதையுமே அதிகமாக கண்டதில்லை. இங்கு சுற்றிலும் நடப்பதைத் தவிர, ஒரு சில ஸ்திரீகள் எங்காவது சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒருத்தி மற்றவளை சண்டைக் கோழியே'' என்று திட்டுவாள். அப்படி ஏதாவதொன்று, இப்படியாக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஸ்திரீகளை நான் அவமதிப்பதாக கருத வேண்டாம். ஆனால் அது மிகவும் தாழ்வான நிலையில் இருந்தது. உங்களில் யாராவது… சகோ. கிரகாம், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?நீங்கள் அப்பொழுது சிறு பையனாக இருந்தீர்கள். அப்படித்தான் அது நடந்து கொண்டிருந்தது. இந்த சகோதரர் பேசுவதை நான் கேட்டபோது, ''ஓ, என்னே! நான் தேவ தூதர்களை சந்தித்துவிட்டேன்'' என்று எண்ணினேன்.
102 இரண்டாம் நாள் நான் வீட்டில் மூலையைச் சுற்றி வந்து கொண் டிருந்த போது, அவர்களில் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. நான், ''ஐயா, எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
அவரும், "எப்படியிருக்கிறீர்கள்?'' என்று என்னைக் கேட்டுவிட்டு, "உங்கள் பெயர் என்ன?'' என்றார்.
நான், "பிரான்ஹாம்", என்று விடையளித்தேன்.
அவர், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த இடத்தை சேர்ந்தவரா?'' என்று கேட்டார்.
நான், "இல்லை, ஜெபர்ஸன்வில்லிருந்து வருகிறேன்" என்றேன்.
அவர், "ஓ, நல்லது நீங்கள் பெந்தெகொஸ்தேயினரா?'' என்றார்.
நான், ''இல்லை, ஐயா. நான் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்தவன் அல்ல. பரிசுத்த ஆவியைப் பெற பெந்தெகொஸ்தேயினர் பின்பற்றும் வழி முறைகளை நான் அங்கீகரிப்பதில்லை. இருப்பினும் நான் கற்றுக் கொள்ள இங்கு வந்திருக்கிறேன்'' என்றேன்.
அவர், ''ஓ, அது மிகவும் நல்லது'' என்றார். அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய ஆவியை என்னால் பகுத்தறிய முடிந்தது. (கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயைப் போல்). அவர் மிகவும் நல்ல ஒரு கிறிஸ்தவர். சகோதரனே, அவர் சரியானவராகத் தென்பட்டார். அவர் நல்லவர். நீங்கள் எல்லோரும் உங்களில் எத்தனை பேர் என் கூட்டங்களில் ஆவியைப் பகுத்தறிதலின் வரம் கிரியை செய்வதைக் கண்டிருக்கிறீர்கள்? பார்த்தீர்களா? அந்த மனிதன் எல்லாவிதத்திலும் சரியானவராக இருந்தார். எனவே நான், "என்னே, அது எவ்வளவு அற்புதம்!'' என்று எண்ணினேன்.
103 அன்று மாலை, எப்பொழுதோ பிற்பகலில் அந்த மற்ற மனிதரை நான் சந்தித்தேன். நான், ''ஐயா, எப்படியிருக்கிறீர்கள்?'' என்றேன்.
அவரும், ''எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் பெயரென்ன?'' என்று கேட்டார், நான் என் பெயரைக் கூறினேன். அவர், ''நீங்கள் பெந்தெகொஸ்தேயினரா?'' என்று வினவினார்.
நான், ''இல்லை, ஐயா! நான் பெந்தெகொஸ்தேயினன் அல்லவென்று நினைக்கிறேன். நான் கற்றுக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறேன்" என்றேன்.
அவர், ''நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
நான், "எனக்குத் தெரியாது. நீங்கள் எல்லோரும் அதை பெற்றுக் கொண்டுள்ள விதமாக, நான் பெற்றிருக்கவில்லை என்று எண்ணுகிறேன்'' என்றேன்.
அவர், "நீங்கள் எப்பொழுதாவது அந்நிய பாஷை பேசியிருக்கிறீர்களா?" என்றார்.
நான் "இல்லை, ஐயா!'' என்றேன்.
அவர், ''அப்படியானால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளவில்லை'' என்றார்.
நான், "ஒருக்கால் நீங்கள் கூறுவது சரியாயிருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நான் இரண்டு ஆண்டுகளாக அதற்கும் சற்று குறைவாக பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். எனக்கு அதைக் குறித்து அதிகம் தெரியாது. ஒருக்கால் எனக்குத் தெரியாமலிருக்கலாம். எனக்குப் புரியவில்லை…" என்று பேசிக் கொண்டே சென்றேன். ஏன் தெரியுமா? அவருடைய ஆவியை பகுத்தறிய நான் அவரைப் பிடித்து வைக்க வேண்டியதாயிற்று. நான் பகுத்தறிந்த போது, நான் எப்பொழுதாகிலும் ஒரு மாய்மாலக்காரனை சந்தித்திருந்தால், இவர் அவர்களில் ஒருவர். அவருடைய மனைவி கருமை நிறத் தலைமயிர் கொண்டவள். ஆனால் இவரோ பழுப்பு நிறத் தலைமயிர் கொண்ட ஒருத்தியுடன் வாழ்ந்து வந்து, அவள் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. ஆனால் அந்நிய பாஷை பேசுதல், அர்த்தம் உரைத்தல் போன்றவைகளில் அவர் பிழையற்றவராக இருந்தார். நான், "ஆண்டவரே, நான் எதற்குள் பிரவேசித்துவிட்டேன்?'' என்றேன். தேவ தூதர்களிடமிருந்து, எதற்குள்; எனக்குத் தெரியவில்லை. நான், ''நான் அடிப்படை கொள்கையினன். வேதாகமமே, சரியாயிருக்க வேண்டும். எங்கோ தவறுள்ளது, ஆண்டவரே. இது எப்படி முடியும்?'' என்றேன்.
104 அன்றிரவு நான் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அந்த ஆவி அங்கு விழுந்தது. சகோதரனே, உங்களால் அதை உணர முடியும். அது பரிசுத்த ஆவி. ஆம், ஐயா! இல்லையென்றால், அது பரிசுத்த ஆவியென்று என்னுடைய ஆவியிடம் அது சாட்சி கொடுத்திருக்க முடியாது. நான் அப்பொழுது ஒரு வாலிபப் பிரசங்கி. அப்பொழுது ஆவியைப் பகுத்தறிதலைக் குறித்து நான் அவ்வளவு அதிகமாக அறிந்திருக்கவில்லை. என்னை இரட்சித்த அதே தேவன் அதே உணர்ச்சியை எனக்குத் தந்தருளினார் என்று அறிந்திருந்தேன். நான் கூரையை அடைந்துவிட்டது போன்ற ஒரு உணர்ச்சி. அந்த கட்டிடத்தில் எனக்கு அவ்வளவு அருமையான உணர்ச்சி ஏற்பட்டது. நான் நினைத்தேன்.
அங்கு ஏறக்குறைய 1500 பேர் கூடியிருந்தனர். நான், ''ஓ, எவ்வளவு அருமையானது!'' என்று நினைத்தேன். இரண்டு மூன்று குழுக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தன. நான், "இது என்ன! இது எப்படி முடியும்? அந்த மகத்தான ஆவி இந்த கட்டிடத்தில் விழுகிறது; அங்கு கடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், அந்த ஆட்கள் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, பிழையின்றி செய்தி கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் மாய்மாலக்காரர், மற்றவர் உண்மையான தேவனுடைய மனிதன், எனக்கு ஒரே குழப்பமாயுள்ளது. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை'' என்று எண்ணினேன்.
105 அதன் பிறகு உடனடியாக, என் அருமை நண்பர் ஒருவர், சகோ. டேவிஸ் (உங்களுக்குத் தெரியும்), என்னை பொம்மை என்று அழைக்க ஆரம்பித்தார். அது சிறுமிகளின் விளையாட்டுப் பொருள் என்று உங்களுக்குத் தெரியும். எனவே எனக்கு அப்பொழுது விவாகமாகவில்லை, நான் தனியாயிருந்தேன். எனவே நான்… அவர் என்னுடன் கூட வர ஆரம்பித்தார். அவர் ஒருவாறு என்னை முன் தள்ளிக் கொண்டே சென்றார்.
எங்களுக்குச் சிறு… உங்கள் தாயும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். அப்பொழுது இந்த கூடாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். முடிவில் அநேக ஆண்டுகள் கழித்து ஒருநாள், இந்த கூடாரம் கட்டி முடிந்த பின்பு, நான் ஜெபம் செய்வதற்காக கிரீன்மில் என்னுமிடத்திலுள்ள என் குகைக்கு சென்றேன். ஏனெனில் சகோ. டேவிஸ் என்னைக் குறித்து பயங்கரமான காரியங்களை தமது பத்திரிக்கையில் எழுதி வந்தார். நான் அவரை நேசித்தேன். ஒன்றும் நேரிடக் கூடாதென்று நான் விரும்பி, அவருக்காக ஜெபிப்பதற்காக நான் அங்கு சென்று குகைக்குள் பிரவேசித்தேன். அங்கு இரண்டு நாட்கள் தங்கினேன். நான், ''ஆண்டவரே, அவரை மன்னியும். அவர் அதை வேண்டுமென்று செய்யவில்லை'' என்று முறையிட்டேன். அப்பொழுது ஒரு வேதவாக்கியம் என் ஞாபகத்துக்கு வந்தது.
106 நான் வெளியே சென்றேன். அங்கு ஒரு மரக்கட்டை இருந்தது. அந்த மரக்கட்டை இப்பொழுதும் அங்குள்ளது. அண்மையில் அதன் மேல் நான் உட்கார்ந்தேன். அது மலையின் கீழே, ஓடையிலிருந்து வரும் ஒரு சிறு பாதையில் உள்ளது. நான் அந்த மரக்கட்டைக்கு இருபுறமும் என் கால்களை போட்டு உட்கார்ந்து கொண்டு, தூரத்திலுள்ள மலையைப் பார்த்துக் கொண்டே, என் வேதாகமத்தை மரக்கட்டையின் மேல் இப்படி வைத்தேன். நான், ''உனக்குத் தெரியுமா…" என்று கூறி ஒரு வேத வாக்கியத்தை - அதாவது, ''கன்னான் எனக்கு வெகு தீமை செய்தான்'' என்னும் ஒரு வேத வாக்கியத்தை (2 தீமோ: 4:14). ஞாபகப்படுத்திக் கொண்டு, அதை படிக்கலாமே என்று நினைத்து வேதாகமத்தை திறந்தேன். என் முகத்தை நான் துடைத்தேன். அப்பொழுது காற்று அடித்து வேதாகமத்தை எபிரேயர் 6-ம் அதிகாரத்துக்கு திருப்பியது.
''அந்த வேத வசனம் அங்கில்லை'' என்று சொல்லி வேதாகமத்தை திரும்பவும் மரக்கட்டையின் மேல் வைத்தேன். அப்பொழுது காற்று மறுபடியும் அடித்து அதை மறுபடியும் எபிரேயர் 6-க்கு திருப்பினது. "இது விசித்திரமாயுள்ளதே" என்று நினைத்து "சரி, அதை படிக்கலாம்'' என்று படித்தேன். அது இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
தேவனுடைய நல்வார்த்தையும், இனிவரும் பெலன்களையும் ருசி பார்த்தும்
மறுதலித்துப் போனவர்கள் ''அதில் ஒன்றையும் நான் காணவில்லையே" என்று நினைத்து அந்த அதிகாரம் முழுவதையும் படித்தேன். அதில் ஒன்றுமில்லை. நான் ''அவ்வளவுதான்'' என்று சொல்லி இப்படி வேதாகமத்தை வைத்தபோது, மறுபடியுமாக காற்று அதே அதிகாரத்துக்கு திருப்பினது. நான் வேதாகமத்தை கையிலெடுத்து, "இது என்ன?" என்று வியந்து அதை மறுபடியும், மறுபடியும், மறுபடியும், படித்தேன். எனக்கு புரியவில்லை. பிறகு நான் கீழே படித்துக் கொண்டு சென்றபோது, இந்த வசனத்தை அடைந்தேன்.
எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
''அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லையே" என்று வியந்தேன்.
107 நான் அப்பொழுது எதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை… நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது, கர்த்தர் சகோ. டேவிஸைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுப்பார் என்று நினைத்தேன். நான் இங்கு உட்கார்ந்து கொண்டு பார்த்தபோது, எனக்கு முன்னால் இருந்த குழியில் ஏதோ ஒன்று சுழலுவதைக் கண்டேன். அது உலகம்; அது சுழன்று கொண்டிருந்தது. அது முழுவதுமாக உழுதிருந்ததைக் கண்டேன். அப்பொழுது விதைகள் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்ட ஒரு மனிதன் புறப்பட்டு சென்றார். அவர் சென்றபோது, பூமி முழுவதும் விதை விதைத்துக் கொண்டே சென்றார், அவர் பூமியின் வளைவை சுற்றிச் சென்று என் கண்களுக்கு மறைந்து போனார். அவர் என் கண்களுக்கு மறைந்து போனவுடனே, இழிவான தோற்றமுடைய ஒரு மனிதன், கறுப்பு உடைகளை அணிந்து, இப்படி சுற்றிச் சுற்றிச் சென்று (அதை விவரிக்க சகோ. பிரான்ஹாம் சப்தம் உண்டாக்குகிறார் - ஆசி) கெட்ட விதைகளை விதைத்தான் (சகோ. பிரான்ஹாம் மறுபடியும் சப்தம் உண்டாக்குகிறார் - ஆசி). நான் அதை கவனித்தேன். பூமி சுழன்று கொண்டேயிருந்தது.
108 சிறிது கழிந்து, கோதுமை பயிர் வளர்ந்து மேலே வந்தது. கோதுமை பயிர் மேலே வந்தபோது, முள் செடிகளும், முள் பூண்டுகளும், களைகளும் கோதுமை பயிரின் மத்தியில் வளர்ந்து மேலே வந்தன. அவையனைத்தும் ஒன்றாகவே வளர்ந்தன. அப்பொழுது பயங்கர வறட்சி உண்டானது. கோதுமைப் பயிர் இப்படி தலையை தூக்கினது; முள்செடி, முள்பூண்டு, களை இவையனைத்தும் தலையை தூக்கின. ஒவ்வொரு களையும் இப்படி பெருமூச்சு விட ஆரம்பித்தது (சகோ. பிரான்ஹாம் பெருமூச்சு விடுவது போல் சப்தம் உண்டாக்குகிறார் - ஆசி). உங்களால் அதைக் கேட்கமுடியும். அவையனைத்துமே மழை வரும்படி அழைத்தன.
சிறிது கழிந்து, ஒரு பெரிய மேகம் தோன்றினது. மழை பெய்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. அது அங்கு விழுந்தபோது, கோதுமை பயிர் குதித்து, "மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று ஆர்ப்பரித்தது. அதே நேரத்தில் களையும் மேலே குதித்து, ''மகிமை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா" என்று ஆர்ப்பரித்தது. முட்களும் கூட வயலைச் சுற்றி நடனமாடி, "மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று ஆர்ப்பரித்தன. நான், "எனக்குப் புரியவில்லை'' என்றேன்.
109 அந்த தரிசனம் என்னை விட்டு நீங்கினது. அப்பொழுது நான், "முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ சபிக்கப்படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது" என்னும் வசனத்தை மறுபடியும் யோசிக்கத் தொடங்கினேன். இயேசு, ''மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது'' என்றார். ஒரு மனிதன் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு உண்மையாக பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் போலவே அந்நிய பாஷை பேசி, அவர்களைப் போலவே நடந்துகொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய ராஜ்யத்தில் இல்லாமல் இருக்க வகையுண்டு. அது முற்றிலும் உண்மை. ''அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்று அவர்களுக்குச் சொல்லுவேன்'' என்று இயேசு கூறவில்லையா? (மத். 7:22-23). அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
110 இதுதான் அதன் சரியான அர்த்தம். பாருங்கள்? அவர்கள் வானத்திலிருந்து வந்த நல்ல மழையை ருசி பார்த்தார்கள். ஆனால் தொடக்கத்திலேயே அவர்கள் தவறாயிருந்தனர். தொடக்கத்திலேயே அவர்கள் நோக்கங்களும் குறிக்கோள்களும் சரியாயில்லை. அது… உங்களால் சொல்ல முடியாது. அவர்கள், ''நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா?'' என்று கேட்டனர் (மத். 13:28).
அவர், ''அவைகளை அறுப்பு மட்டும் வளரவிடுங்கள், அந்நாளில் இந்த முள்செடிகளும் முள்பூண்டுகளும் ஒருமித்து சுட்டெரிக்கப்படும். கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்'' என்றார். உங்களுக்கு எது முள் செடி, எது முள்பூண்டு, எது கோதுமை என்று தெரியும். ''அவைகளுடைய கனிகளினால் அவைகளை அறிவீர்கள்''. பாருங்கள், சகோதரனே, சகோதரியே, நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்காது. என்னவானாலும், பாதையில் அது உங்களைத் தொடர்ந்து பிடிக்கும். எனவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் நாடும்போது… அந்த கேள்வியை யார் எழுதியிருந்தாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாருங்கள்?
111 இப்பொழுது, அந்த காலத்து எல்லைக்கோடு விசுவாசிகள் சரியாகத் தான் இருந்தார்கள். அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தேவன் வாக்களித்த தேசத்தின் முனைவரைக்கும் சென்றனர். அநேகர் அந்த முனைவரைக்கும் வந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நிலைவரைக்கும் வந்து, அதை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு அத்துடன் விட்டுவிட பிரியமிருக்காது. அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் வேதாகம ஞானஸ்நானம் வரைக்கும் வந்து, அதை காணக் கூடாமல் புறக்கணிப்பார்கள்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஒருவராகிலும் ஞானஸ்நானம் பெற்றதாக வேதாகமத்தில் ஒரு வேத வசனம் கூட இல்லை. கத்தோலிக்க சபை அதைத் தொடங்கி, அது லூத்தர், வெஸ்லி அவர்களின் வழியாக வந்து இது வரைக்கும் நிலைத்திருக்கிறது. அது முற்றிலும் உண்மை. ஆனால் வேத ஒழுங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதுவே அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானம். அந்த நாமத்தில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் இருக்க முடியாது. அது உண்மை.
112 இவைகளை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆவியின் வரங்கள்; தேவன் அளிக்கும் காரியங்கள்… ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை, ஓ, "நீங்கள், ஆனால் சகோ. பிரான்ஹாமே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் நீடிய பொறுமையுள்ளவன்" என்கிறீர்கள். அப்படித்தான் தோன்றுகிறது. அண்மையில் நான் ஓஹையோவுக்கு சென்றிருந்தபோது, யாரோ ஒருவர், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேனோ என்று கடிதம் எழுதி என்னைக் கேட்டிருந்தார். நான் ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் எப்படியோ அவர்கள் அதைக் கண்டு கொண்டனர். அப்பொழுது ஒத்துழைப்பு கொடுத்த பதினாறு போதகர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். இதுவா நீடிய பொறுமை? நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை, மற்றும் பரிசுத்த ஆவி. பாருங்கள்?
113 ஓ, சகோதரனே, சகோதரியே, நாம் காதேஸ்பர்னேயாவில் இப்பொழுது இருக்கிறோம். இப்பொழுது நீங்கள் ருசி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நேற்றிரவு பரிசுத்த ஆவி நம்மேல் விழுந்தது. அது பலத்தகாற்று போல் நம்மேல் வந்து, உங்களில் அநேகர் மேல் அது அமர்ந்தது. இன்று போதகர்கள் இங்கும் அங்கும் வீடுகளுக்குச் சென்று, பரிசுத்த ஆவியை நாடுபவர்களின் மேல் தங்கள் கரங்களை வைத்து அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். வேறொன்றையும் அதற்கு பதிலாக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஒருவிதமான சத்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஒருவிதமான உணர்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவன் உங்களை வனைந்து ஒரு புது சிருஷ்டியாக - ஒரு புது நபராக - செய்யும் வரைக்கும் நீங்கள் அங்கு காத்திருங்கள். இப்பொழுது நீங்கள் ருசி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் -ருசி பார்த்துக் கொண்டிருக்க மாத்திரம் செய்கின்றீர்கள். ஆனால் புறா உங்களை மேசைக்கு வழிநடத்த இடங் கொடுங்கள். அங்கு ஆட்டுக் குட்டியும் புறாவும் ஒருமித்து உட்கார்ந்து கொண்டு தேவனுடைய வார்த்தையை என்றென்றைக்கும் புசித்துக் கொண்டிருப்பார்கள். வானமும் பூமியும் இல்லாமல் ஒழிந்து போனாலும், தேவனுடைய வார்த்தை நிலை நிற்கும். அது உண்மை.
114 நான் தீவிரவாதி என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நான் தீவிரவாதியாக உங்களுக்கு காணப்பட்டிருந்தால், அப்படியிருக்க வேண்டுமெனும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான்… இந்த கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் நான் பதிலளித்தேன் என்று எண்ணுகிறேன்.
எனவே எபிரெயர் 6-ம்அதிகாரத்தில் பவுல், "நாங்கள் இதுவரை உங்களுடன் கூட வருகிறோம்'' என்று கூறின எபிரெயர்களுக்கு இதை கூறுகிறான். அவர்கள் அதுவரைக்கும் வருவார்கள். பார்த்தீர்களா? "இப்பொழுது நீங்கள்…'' என்று பவுல், அது வரைக்கும் வந்து ருசி பார்த்தவர்களை நோக்கி கூறுகிறான்.
115 நான் இந்த கட்டிடத்திற்குள் பின்னால் நோக்க நேர்ந்தது. ஜீவிக்கிற தேவன் இருக்கிறார் என்பதை உங்களுக்கு காண்பிக்கப் போகின்றேன். இந்த மனிதனை நான் பிரசித்தப்படுத்தவில்லையென்று எண்ணுகிறேன். அண்மையில் ஒரு கூட்டத்தில் நான் பங்கு கொண்டு விட்டு இங்கு வந்தபோது, என் ஆப்த நண்பர் ஒருவர்; வேட்டையில் என் கூட்டாளி; எனக்கு நல்லவராக இருந்து வருபவர்; என் சபைக்கு வந்திருப்பவர்; என் சகோதரனாயிருந்து வருகிறவரைக் குறித்து நான்அறிவித்தேன். அவரை நான் பஸ்டி என்றழைப்பது வழக்கம். அவருடைய பெயர் எவரட் ராட்ஜர்ஸ். அவர் மில்டவுனில் வசிக்கிறார். அவரைக் குறித்து இங்கு நான் அறிவித்தது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? அவர் இங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றை அறுத்து பார்த்த போது, அது புற்று நோயால் நிறைந்திருந்ததைக் கண்டு வயிற்றை மறுபடியும் தைத்துவிட்டு, "அவர் மரித்துப் போவார். இன்னும் சில வாரங்களுக்குள் அவர் இறந்துவிடுவார். அவ்வளவுதான்'' என்றனர்.
நான் இந்த மேடையின் மேல் நின்று கொண்டு அவருக்காக ஜெபம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அங்கு சென்று அவரிருந்த அறைக்குள் நுழைந்தேன். என் இருதயத்தை ஏதோ ஒன்று ஏவிக் கொண்டிருந்தது. நான் அறைக்குள் நடந்து சென்று எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்ட பிறகு… சகோ. எவரட் அங்கு படுத்திருந்தார். இது உங்களுக்கு ஞாபகமிருக்கும். நான், "சகோ. பஸ்டி" என்றேன். (அவரை பஸ்டி என்று தான் நான் அழைப்பதுண்டு).
116 அநேக நாட்களுக்கு முன்பு நாங்கள் பிரஷ் ஆர்பர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போது, மலையின் மேலுள்ள மெதோடிஸ்டுகள் அனைவரும் (அவர்களில் கெர்டி ஒருத்தி) மெல்ல நழுவி, நான் என்ன கூறுகிறேன் என்பதை கேட்க, கிரேக் ஆர்பரின் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மெதோடிஸ்டு சபை அவர்களை சபை பிரஷ்டம் செய்துவிடுமோ என்னும் பயம் இருந்தது. பிறகு எனக்கு அங்கு ஒரு தரிசனம் உண்டானது. ஒரு டப்பாவில் இறைச்சி குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். நான் சில மீன்களைப் பிடித்து, அவைகளைக் கயிற்றில் கோற்று தொங்கவிட்டேன். நான் பார்த்த போது… இவையாவும் தரிசனத்தில் காணப்பட்டன. அன்றிரவு பிரஷ் ஆர்பரிலுள்ள ஒரு கூட்ட ஜனங்களை நான் விட்டுசென்று, மலையின் மேலுள்ள சகோ. ரைட் என்பவரின் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாள் காலை, அவர்கள் என்னைக் காணவில்லை. நான், "நீங்கள் யாருமே…'' என்றேன்.
நான் அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அந்த ஒளி; அந்த அக்கினி ஸ்தம்பம் எனக்கு முன்னால் தோன்றி, "நீ இந்த இடத்தை விட்டு காட்டுக்குப் போ. நான் அங்கே உன்னுடன் பேசுவேன்" என்றது. அதற்கு அடுத்த நாள் தான் அவர்கள் என்னை மலையின் மேல் கண்டு பிடித்தனர். நான் மலையின் மேல் சென்று என் காரை புதரில் ஒளித்துவிட்டு, இரவு முழுவதும் அதற்கடுத்த நாளும் ஜெபம் செய்து கொண்டிருந்தேன். சிலர் அங்கு வந்து காரைக் கண்டு பிடித்துவிட்டு என்னிடம் வந்தனர். அன்றுதான் இங்குள்ள சகோ. கிரகாம் ஸ்னெல்லிங் பரிசுத்த ஆவியைப் பெற்று, ஊழியத்திற்கு அழைப்பும் பெற்றார்.
117 அந்த மலையின் மேல் நான் இருந்தபோது, நான் செய்ய வேண்டிய வெவ்வேறு காரியங்களை அவர் என்னிடம் கூறினார். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டோம். மீன்கள் கோர்வையாக கோர்க்கப்பட்ட தரிசனத்தைக் குறித்து அவர், ''அது உன்னுடைய மில்டவுன் சபை'' என்றார். அதிலிருந்து நான்கைந்து மீன்கள் விழுந்துவிட்டன. நான், ''அவர்கள் யார்?" என்று கேட்டேன்.
அவர், ''அது கை ஸ்பென்ஸரும் (Guy Spencer) அவருடைய மனைவியும்; மற்றது மற்ற ஸ்பென்ஸரும் அவரைச் சார்ந்தவர்களும்'' என்றார். யார் யார் போய்விடுவார்கள் என்று அவர் கூறினார்.
நான் அவர்களிடம், "நீங்கள் யாரும் புசிக்க வேண்டாம்'' என்றேன். அது எனக்கும் என் மனைவிக்கும் விவாகமாவதற்கு முன்பு. அவர்கள் சகோதரி ஸ்பென்ஸருடன் கூட வீட்டுக்குச் சென்று இரவைக் கழித்தாள். சகோதரி ஸ்பென்ஸர் மிகவும் அருமையானவள், கை ஸ்பென்ஸரும் மிகவும் அருமையானவர். அவர் அங்கு சென்றார். ஓபல் (சகோதரி ஸ்பென்ஸர் - தமிழாக்கியோன்) மேடாவிடம், ''இதோ பார், மேடா, நான் சகோதரன் பில் சொல்வதை நம்புகிறேன்" என்றாள். ஆனால் ஓபலுக்கு பசியெடுத்தால், பன்றி இறைச்சியும் (ham) முட்டையும் சாப்பிட வேண்டும். எனவே அவள் சென்று பன்றி இறைச்சியும் முட்டையும் பொறித்து, மேசையினருகில் உட்கார்ந்து, ஜெபம் செய்து, சாப்பிடுவதற்காக மேசையின் மேல் குனிந்தபோது, அவளால் அதை தொடமுடியாமல் அழத் தொடங்கினாள். அதன்பிறகு அவர்கள் வேட்டையாட வந்தனர்.
118 அந்த நாளன்று மலையின் மேல், என்ன நடக்குமென்று அவர் அப்படியே கூறினார். அவர், ''இவர்கள் போய் விடுவார்கள், அவர்கள் போய் விடுவார்கள்'' என்றார். ஆனால், டப்பாவில் அடைக்கப்பட்ட இறைச்சியை அவர் நிறைய வைத்திருந்தார். அவர், ''மில் டவுன் ஜனங்களுக்கு மேலும் உபயோகிப்பதற்காக இதை வைத்துக் கொள்'' என்றார். அன்றொரு இரவு நான் சகோ. கிரீச் பேசுவதைக் கேட்டபோது… அவர் நேற்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குத் தெரியவில்லை… சகோ. கிரீச், இன்றிரவு இங்கிருக்கிறீர்களா? சகோ. க்ரீச் என்னிடம் வந்து என்னைக் கூப்பிட்டார்; சகோதரி கிரீச் அழுது கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை அங்கு படுத்துக்கிடந்தார். அவள், சகோ. பில், அவரிடம் சொல்ல வேண்டாம், அவர் மரித்துக் கொண்டிருக்கிறார். புற்று நோய் அவரைத் தின்றுவிட்டது. மருத்துவர்கள் அவர் வயிற்றை அறுத்து பார்த்தபோது, அவர் முழுவதும் புற்று நோயால் நிறைந்திருந்தார்" என்றாள். வில் ஹால்லை உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கும். அதே மருத்துவர் அவர் வயிற்றை அறுத்து பார்த்த போது, அவர் முழுவதும் புற்று நோயால் நிறைந்திருந்தார். நான் அணில் வேட்டைக்காக அன்று காலை புறப்பட்டு சென்றுவிட்டேன். அந்த அறையில் ஆப்பிள் பழங்கள் தொங்குவதை நான் கண்டேன். (அந்த வரலாறு உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கிறதல்லவா?). அந்த மனிதன் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரும் சகோ. பஸ்டியும் நண்பர்கள்.
அந்த மருத்துவமனைக்கு - புதிய மருத்துவமனைக்கு - நான் சென்றேன் (நியூ ஆல்பனியிலுள்ள அதன் பெயர் என்னவென்று எனக்கு மறந்துவிட்டது) - அந்த புதிய மருத்துவமனையின் பெயர். நான் பஸ்டியைக் காண அங்கு சென்றிருந்தேன். நான் அறைக்குள் நுழைந்து, ''சகோ. பஸ்டி" என்று அவரை அழைத்தேன். அவர், ''சகோ. பில்'' என்று சொல்லி, என் கையை இறுகப் பிடித்து பலமாக கைகுலுக்கினார். அவர் முதலாம் உலக யுத்தத்தில் இராணுவ வீரராக பணிபுரிந்தார். அவருடைய முன்னிலையில் இதை நான் கூறவில்லை. அவருக்கு மிகவும் சிறந்த இருதயம் உள்ளது. அவர் என் கையைப் பிடித்துக் கொண்டார். நான் அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன், அவருடைய வீட்டில் உண்டிருக்கிறேன், அவருடைய வீட்டில் உறங்கியிருக்கிறேன். நான் அவருக்கு சகோதரனைப் போல. அவருடைய பிள்ளைகளும் அனைவரும் - நாங்கள் இரத்த உறவு கொண்ட சகோதரர்கள் போல். அவர் மிகவும் அருமையானவர்.
119 அவர்… ஆனால் அவர் கர்த்தரிடம் ஆழமான அனுபவத்துக்குள் வரவில்லை. அவருக்கு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அன்று அந்த மெதோடிஸ்டு போதகர், "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற எவரும் என் கூடாரத்தை விட்டு வெளியேறுங்கள்'' என்று கூறினபோது, ஜார்ஜ் ரைட்டும் மற்றவர்களும் வெளி நடந்துவிட்டார்கள். அன்று பிற்பகல் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக டாட்டன்ஸ் ஃபோர்டுக்கு சென்றேன். அவருடைய சபையோர் அனைவருமே தண்ணீருக்குள் நடந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு நான் சென்று கொண்டேயிருந்தேன். அது நன்றாக இருந்தது. தேவன் உங்களுடைய பட்சத்தில் இருந்தால், உங்களுக்கு விரோதமாயிருப்பவன் யார்? அந்த போதகர் எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு ஒன்றுமே தெரியாது.
நான் மருத்துவமனைக்குள் நடந்து சென்றேன். அங்கு பஸ்டி புற்றுநோய் நிறைந்தவராய் படுத்துக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒன்றுமே சிகிச்சை அளிக்கவில்லை. அவர் அசையாதபடிக்கு அவரை கட்டிலோடு சேர்த்து கட்டியிருந்தனர். பஸ்டி என்னிடம், ''சகோ. பில், இது ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே இவ்வாறு நடந்துள்ளது. ஏதோ ஒன்று சம்பவித்தது'' என்றார். நான், "ஆம், பஸ்டி" என்றேன். நான் இப்பொழுது உங்களிடம் கூறிக் கொண்டிருந்த அந்த ஆவி பலத்த காற்று அடிப்பது போல் உள்ளே நுழைவதை உணர்ந்தேன். அவர் சொன்னார். நான் அறைக்குள் நுழைந்த போது, ஒரு மூலையில் வானவில் காணப்பட்டது. வானவில் உடன்படிக்கைக்கு அடையாளம், தேவனுடைய உடன்படிக்கை. தேவன் அன்று அந்த மலையின் மேல் என்னுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். நான் என் கரங்களை பஸ்டியின் மேல் வைத்து அவருக்காக ஜெபித்தேன். மருத்துவர்கள், ''அவர் மரித்துப்போவார். எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர் இன்னும் சில நாட்களில் இறந்துபோவார்'' என்றெல்லாம் கூறினர். ஆனால் பஸ்டி ராட்ஜர்ஸ்… அது அநேக வாரங்களுக்கு முன்பு, இன்றிரவு பஸ்டி ராட்ஜர்ஸ் ஆரோக்கியமுள்ளவராய் பருமனடைந்து இந்த சபையில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சகோ. பஸ்டி எழுந்து நில்லுங்கள், அதோ அவர். நாம் தேவனுக்கு துதி செலுத்துவோம், ஒவ்வொருவரும்.
120 அவர்கள் மேலறையில் ஒன்று கூடி எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர்
அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு
ஊழியத்துக்காக வல்லமை வந்தது
அன்று அவர் அவர்களுக்குச் செய்ததையே உனக்கும்
இன்று செய்வார் ''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன்
"நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
(அல்லேலூயா!)
அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன்
"நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
அந்த ஜனங்கள் எவ்வித உரிமையையும்
பாராட்டாமல் உலகப் புகழ் உள்ளதாக
பெருமை பாராட்டாமல் இருந்தாலும் அவர்கள்
அனைவரும் பெந்தெகொஸ்தேவைப் பெற்றுக் கொண்டு
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர்
இப்பொழுது அவர்கள் உலகின் எல்லா திக்குகளிலும்
அவருடைய வல்லமை மாறாததென்று சொல்லிவருகின்றனர்
''நானும் அவர்களில் ஒருவன்'' என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
(அல்லேலூயா!)
அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று
சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
என் சகோதரனே, இப்பொழுது வந்து இந்த ஆசீர்வாதத்தை நாடு
அது உன் இருதயத்தைப் பாவமறக் கழுவும்
அது மகிழ்ச்சி மணிகளை ஒலிக்கும்படி செய்து
உன் ஆத்துமாவை அனல் மூட்டும்
ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது.
ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை
''நானும் அவர்களில் ஒருவன்" என்று
சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
(நாம் அதைப் பாடுவோம்)
ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
(அல்லேலூயா!)
அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
(உங்களில் எத்தனை பேர்)
அவர்களில் ஒருவன், உங்கள் கரங்களையுயர்த்துங்கள்?
ஓ, என்னே ஓ, அவர்களில் ஒருவனாக இருப்பதற்காக
நான் எவ்வளவாக மகிழ்கிறேன்!
அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
(அல்லேலூயா!)
அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
அவர்கள் மேலறையில் ஒன்று கூடி
எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர்
அவர்கள் பரிசுத்தஆவியினால் நிறையப்பட்டு ஊழியத்துக்காக வல்லமை வந்தது
அன்று அவர்களுக்குச் செய்ததையே உனக்கும்
இன்று செய்வார்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
(அல்லேலூயா)
அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
அந்த பல்லவியை நாம் மறுபடியும் பாடும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் திரும்பி, உங்கள் பக்கத்திலுள்ள ஒருவரிடம் கைகுலுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் அவர்களில் ஒருவரா? பாருங்கள்? சரி.
ஓ, அவர்களில் ஒருவன்
(சகோதரனே, நீங்கள் அவர்களில் ஒருவர் என்று அறிவேன், நீங்கள் அவர்களில் ஒருவர் என்று அறிவேன்)
(சகோ.பிரான்ஹாம் அவருக்கு அருகில் உள்ளவர்களுடன் கைகுலுக்குகிறார் - ஆசி)
அவர்களில் ஒருவன்
ஓ, அவர்களில் ஒருவன்,
அவர்களில் ஒருவன்
"நானும் அவர்களில் ஒருவன்"
என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
121 ஓ, நீங்கள் அவர்களில் ஒருவராக இருப்பதற்காக மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர்களில் ஒருவராக இருப்பதற்கு எத்தனை பேர் விரும்புகிறீர்கள், உங்கள் கைகளையுயர்த்துங்கள்? சரி, நான் இதை உங்களுக்காக பாடப் போகின்றேன்.
என் சகோதரனே, வந்து இந்த ஆசீர்வாதத்தை நாடு
அது என் இருதயத்தைப் பாவமறக் கழுவும்
அது மகிழ்ச்சி மணிகளை ஒலிக்கும்படி செய்து
உன் ஆத்துமாவை அனல் மூட்டும்
ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது
ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
அவர்களில் ஒருவன்,
அவர்களில் ஒருவன்
''நானும் அவர்களில் ஒருவன்" என்று
சொல்லமுடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
அந்த சிறு பெண் பேதுருவைப் பார்த்து, "நீயும் அவர்களில் ஒருவன் அல்லவா?'' என்று கேட்டாள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் மிகவும் மகிழ்கிறேன். நீங்களும் அப்படித்தானே? பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு. ''இது தான் அது'' என்று சொன்னான் என்று உங்களுக்குத் தெரியுமா?நான் எப்பொழுது, ''இது அதுவாக இல்லாவிட்டால், இதை பெற்றதற்காக மகிழ்கிறேன். அது வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்'' என்று கூறியிருக்கிறேன். அது உண்மை. இதைக் குறித்து நான் மகிழ்கிறேன்.
ஏனெனில் நானும் அவர்களில் ஒருவன்,நானும் அவர்களில் ஒருவன்,
''நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன்
"நானும் அவர்களில் ஒருவன்" என்று சொல்ல
முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்.
122 ஓ, இயேசுவோடு கூடஉன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, ஆவியுடன் உரையாடி, வார்த்தையின் பேரில் உரையாடி, வரப் போகும் நன்மையான காரியங்களைக் குறித்து பேசுவதென்பது மிகவும் அற்புதமல்லவா? அது மிகவும் நல்லது, அதைக் குறித்து அறிய நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். நீங்களும் அப்படித்தானே? நீங்கள் கிறிஸ்தவராயிருப்பதில் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் பாவங்கள் இரத்தத்தின் கீழ் இருப்பதற்காக நீங்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர் இந்நாட்களில் ஒன்றில் வருவார், நாம் அவருடன் சென்றுவிடுவோம். அப்பொழுது யோசித்துப் பாருங்கள், முதுமை பருவம் அனைத்தும் நம்மை விட்டு போய்விடும்; வியாதி, துன்பம் எல்லாம் போய்விடும். அழிந்து போகக்கூடிய இந்த வாழ்க்கையே மாறிவிடும். ஓ, என்னே! இங்கு நின்ற அருமையான சகோதரர்களை என்னால் நினைவு கூர முடிகிறது. நான் நினைவு கூருகிறேன்… உங்களில் எத்தனை பேருக்கு ரபி லாசன் ஞாபகமுள்ளது? என்னே, ஏறக்குறைய உங்கள் எல்லாருக்குமே. அவர் தமது கைத்தடியே இங்கு மாட்டி வைப்பார், நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பேன். அவர் அந்த சிறு பாடலைப் பாடுவார். (ஒரு நிமிடம் டெட்டி (Teddy), சகோதரனே). அந்த ராகம் எனக்கு வருகிறதா என்று பார்ப்போம். எனக்குத் தெரியவில்லை…
ஒரு மகிழ்ச்சிகரமான நாளை எனக்காக காத்திருக்கிறது
அங்கு முத்துக்கள் பதிக்கப்பட்ட வாசல்கள்
விரிவாய் திறக்கும் இந்த துன்பத்தின் திரையை
நான் கடக்கும்போது நான் மறுபுறம் இளைப்பாறுவேன்.
என்றாகிலும் ஒருநாள் அழிந்து போகக்கூடிய
உறவினருக்கு எட்டாத தூரத்தில் என்றாகிலும்
ஒருநாள், அது எங்கே எப்பொழுது என்று
தேவன் மாத்திரமே அறிவார்
அழிந்து போகக் கூடிய வாழ்க்கையின் சக்கரங்கள்
சுழலாமல் நின்று போகும்போது
நான் சீயோன் மலையில் தங்குவதற்கு சென்று விடுவேன்.
123 இந்த சிறு சக்கரங்கள் நமக்கு சுழன்று கொண்டிருக்கின்றன - பார்த்தல், ருசி பார்த்தல், உணருதல், முகருதல், கேட்குதல் ஆகிய புலன்களும் சக்கரமும் அழிந்து போகக் கூடிய இந்த வாழ்க்கையில் சுழன்று கொண்டிருக்கின்றன. என்றாகிலும் ஒரு நாள் அவை சுழலாமல் நின்றுவிடும். அப்பொழுது நானும் நீங்களும் சீயோன் மலையில் தங்குவதற்காக சென்றுவிடுவோம். ஓ, எனக்கு அது மிகவும் பிரியம், உங்களுக்கும் அப்படித்தானே? அந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியை நாம் பெற்றிருக்கிறோம் என்று அறிந்து கொள்ளுங்கள். சரி, நாம் ஞானஸ்நானத்தின் போது பாடும் பாடல் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த பாடல் வேண்டாம். நாம் கூட்டத்தை முடிக்கும் போது பாடும் பாடலைப் பாடுவோம்.
இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்
துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே
அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும்
நீ எங்கு சென்றாலும் அதை உன்னுடன் கொண்டு செல்
124 இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல், நீ போகும் போது அதை செய். சரி. நாமெல்லாரும் சேர்ந்து பாடுவோம். மறக்க வேண்டாம், நாளை காலை 8 மணிக்கு ஜெப அட்டைகள் விநியோகிக்கப்படும். கூட்டம் 9.30 மணிக்கு ஆரம்பிக்கும். நான் 10.00 மணிக்கு பிரசங்கம் செய்வேன். வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் ஆராதனை சுமார் 11 மணிக்கு தொடங்கும்.
நாளை பிற்பகல் - நாளை மாலை, கூடாரத்தில் சுவிசேஷக செய்தி கொடுக்கப்படும், நாளை இரவு, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, இன்னும் ஞானஸ்நானம் பெறாதவர்களுக்கு, குளம் திறந்திருக்கிறது. நாங்கள் ஜனங்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்போம்.
125 இப்பொழுது நாமெல்லாரும் சேர்ந்து நமது உச்சக் குரலில் பாடுவோம். சகோ. பஸ்டி, நான் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவனாகவும் தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். உங்களுக்குத் தெரியுமா, அவர் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் அவரைப் பார்த்துவிட்டு என்ன சொல்வதென்றே அவருக்குத் தெரியவில்லையாம். அவர் அதே ஆள் என்று அவரால் நம்பவே முடியவில்லை. ஓ, தேவனால் என்ன செய்ய முடியும் என்பது இரகசியமில்லை.அது உண்மையல்லவா? சரி.
இயேசுவின் நாமத்தை உன்னுடன்கொண்டு செல்
(அது தொனிக்கும்படி செய்)
துயரமும் துக்கமும் நிறைந்த பிள்ளையே
அது உனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிக்கும்
நீ எங்கு சென்றாலும் அதை உன்னுடன் கொண்டு செல்
விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!)
ஓ, எவ்வளவு இனிமை,
பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
விலையுயர்ந்த நாமம் (விலையுயர்ந்த நாமம்!)
ஓ எவ்வளவு இனிமை!
பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.
சரி. இப்பொழுது ஆராதனையை போதகரிடம் ஒப்படைக்கிறேன். பேசுவதற்கு அவருக்கு சில வார்த்தைகள் இருக்கக் கூடும், அல்லது ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்க அவர் யாரையாகிலும் கேட்கலாம், அவருடைய மனதில் என்ன இருந்தாலும்.