1 வேதத்தை அறிந்து கொள்ள வந்திருப்போரே! உங்களுக்கு எனது காலை வணக்கம். இன்று காலையில் ஒவ்வொருவரும் எவ்வாறு உணருகிறீர்கள்? நன்றாக இருப்பதாக உணருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆமென். நாங்கள் இன்று காலையில் இங்கே இருப்போம் என்பதை மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிவித்திருந்தோம். ஏனெனில் நான் எனது நிகழ்ச்சி நிரலை இன்னும் இறுதியாக்கவில்லை; எப்பொழுது நான் புறப்படுவேன் என்பதும் முடிவாகவில்லை. இந்நிகழ்ச்சி நிரலானது அடுத்த ஆறு மாத காலத்திற்கென தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே நான் இன்று காலையில் இவ்வாராதனையை நடத்தி விடு வோமே, அது நல்லது என்று எண்ணினேன்; ஏனெனில் நான் அறிந்த வரையிலும், இலையுதிர் காலத்தில் நான் இங்கு திரும்பி வருகிற வரையிலும், சில காலம் ஆகிவிடுமே.
2 வருகின்ற வாரத்தில் நான் டெக்ஸாஸிலுள்ள ப்யூ மோண்டுக்கு புறப்பட்டுவிடுவேன். அங்கே அடுத்த வாரத்தில் ஆரம்பித்து, சுமார் எட்டு அல்லது பத்து நாட்களுக்கு சுயாதீன சபைகளின் சங்கமும் மற்றும் வேறு பல சபைகளும் ஒழுங்கு செய்துள்ள கூட்டங்களில் கலந்து கொள்ளுவோம். டெக்ஸா ஸிலுள்ள ப்யூமோண்ட் டில் உள்ள இயேசு நாமக்கார சபைகள் தான் அக்கூட்டங்களை நடத்துகிறது. அந்த ஊரில் தான் சில காலத்திற்கு முன்பாக நமக்கு மகத்தான கூட்டம் உண்டாயிருந்தது; அது இந்தப் படம் எடுக்கப் பட்ட பிறகு அச்சமயத்தை ஒட்டி நடந்ததாகும். ப்யூமோண்டில் நடைபெறும் கூட்டங்களுக்கு வந்து சேருவதற்காக அவர்கள் 27 கோச்சுகள் கொண்ட ஒரு இரயில் வண்டித் தொடரை அதற்கென ஓடும்படி ஒழுங்கு செய்திருக் கிறார்கள். அங்கே தான் அந்நகரத்தின் மேயரானவர் ஒரு பேரணியை தெருக்களில் நடத்திச் சென்றார். அவர்கள் யாவரும் சென்றார்கள். ப்யூமோண்டில் மகத்தான வேளை நமக்கு உண்டாயிருந்தது. அவ்வூருக்கு நாம் மீண்டும் அடுத்த வாரம் திரும்பிப் போகிறோம். அதற்குப் பிறகு சான் அண் டோனியோ என்ற இடத்திற்கு போவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். ஆனால் திரும்பி வரும் வழியில் அங்கே போவதற்கு போதுமான சமயம் நமக்கு இருக்காது.
நாம் அங்கிருந்து பீனிக்ஸ், லாஸ் ஏஞ்ஜெலிஸுக்குப் போய் விட்டு, பிறகு லாங் பீச்சுக்கும் போகப்போகிறோம். அதன்பிறகு, கர்த்தருக்கு சித்தமானால், நாம் திரும்பி வந்து, கிழக்குக் கடற் கரையில், வர்ஜீனாயாவுக்கும், தெற்கு கரோலினாவுக்கும் போகப் போகிறோம். பிறகு, அங்கிருந்து ப்ளூமிங்டன், இல்லினாய்க்கு போவோம். அங்கிருந்து , ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் லேன் டெக் உயர்நிலைப் பள்ளியில் கிறிஸ்தவ வர்த்தகர் குழு நடத்தும் கூட்டத்திற்குப் போவோம். அதன்பிறகு நான் அங் கிருந்து புறப்பட்டு, வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும், அலாஸ்கா வரையிலும் சென்று, அப்பகுதிகளில் ஜூன் வரையிலும் இருப்பேன். இப்பொழுது நமக்கு மகத்தான நேரம் உண்டாயிருக்கும் என்று நாம் நம்புகிறோம்.
3 இங்குள்ள இச்சபையைக் குறித்து வருமானவரித் துறையினர் என்னிடம் செய்யும் புலன் விசாரணையானது அந்த சமயத்தின் போது முடிவடைந்துவிட வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அது முடிவடைந்து விட்ட பிறகு, ஜூன் மாதத்தில் வெளிநாட்டிற்கு நான் போக முடியும்; அது ஆப்ரிக்காவுக்கு போவதற்கு ஏற்ற சமயமாக இருக்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நான் ஆப்பிரிக்காவில் இருப்பேன். ஆகவே, நிச்சயமாக உங்களுடைய ஜெபங்கள் எனக்குத் தேவையாயிருக்கிறது. 5. நாம் கர்த்தருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் கூறிய இக்கூட்டங்களெல்லாம், அது கர்த்தருடைய சித்தமாக இருக்குமானால்'' என்று தான் உள்ளன. பாருங்கள். நமக்குத் தெரியாது. அவரால் முடியும். இக்கூட்டங்க ளெல்லாம் சரியாக வழிநடத்துதல்கள் பேரில் உள்ளவையாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் நமக்கு வந்த அழைப்பை யெல்லாம் ஒன்று சேர்த்து, அவைகளின் பேரில் ஜெபித்து, "நாங்கள் எப்பக்கம் செல்ல வேண்டும்?'' என்று கேட்டோம். அது நடத்துதல் போல் தோன்றுகிறது; நான் என்னிடம் மட்டுமே வைத்துக் கொண்டிருக்காமல், அதை மற்றவர்களிடமும் கூறி, அதைப்பற்றி அவர்களும் சிந்தித்துப் பார்த்து, அதின் பேரில் ஜெபிக்கச் செய்து இருக்கிறேன். அப்பொழுது, நாம் தானே இச்சமயம் மேற்கிலும், தெற்கிலும், போக வழி நடத்தப்பட்டது போல் நமக்குத் தோன்றியது. இந்த வேளையில் மேற்கே சுற்றிலும் எல்லா இடங்களிலிருந்தும் நமக்கு அழைப்புக்கள் வந்துள்ளன; எனவே நாம் புறப்பட்டு விட்டோம். முதலாவதாக போக வேண்டிய இடமாகப்யூமோண்ட் அல்லது சான் அண்டோனியோ இருக்கும் என என் இருதயத்தில் உணர்ந் தேன். நமக்கு இரு இடங்களிலிருந்துமே அழைப்பு உண்டா யிருக்கிறபடியினால், எங்கு போகவேண்டும் என்பதை அறிய விரும்பினோம்.
4 ப்யூமோண்டில் ஒரு தொடர் கூட்டத்தை நாம் அறிவித்திருக் கிறோம். அவர்களிடம் நாற்பத்திரண்டு சபைகள் ஐக்கிய பெந்தெ கொஸ்தே சபையின் ஒத்துழைப்பாய் இருக்கிறபடியால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து ஐந்து நாட்கள் என்று கூட்டங்களைக் கொடுப்பதைவிட, ஒரே இடத்தில் அவர்கள் யாவரையுமே கூடிவரச் செய்து, ஒரு பெரிய அரங்கத்தில் பத்து நாட்களுக்கான கூட்டத்தை ஒழுங்கு செய்வது சிறந்தது என்று நாங்கள் எண்ணி னோம். ஆகவே அவ்வாறு ஒரு இடத்தை நடுமையமாக வைத்து கூட்டத்தை நடத்துவது மேலானதாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். ப்யூமோண்டைச் சுற்றிலும், டெக்ஸாஸின் எண்ணெய் வளப்பகுதியின் தொலைதூரப் பிரதேசங்களிலும், தேவையுள்ள மக்கள் ஏராளமானோர் உள்ளனர், ஆகவே ப்யூ மோண்டில் நாம் ஒரு மகத்தான வேளையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.
பெரிய நகரங்கள், பெரிய ஸ்தலங்கள் இருக்கிற இடங் களாகப் பார்த்துப் போவதற்கு நாங்கள் ஒருபோதும் முயலவில்லை. ஆனால் நாங்களோ, அது சிறிய இடமாக இருந்தாலும் சரி, கர்த்தர் நடத்துகிற வண்ணமாகவே போக நாங்கள் முயலுகிறோம். எந்த ஒரு சமயத்திலும் நமக்கு ஒரு மக்கதோனிய அழைப்பை அவர் கொடுக்கக் கூடும். அவர் எங்கு போகச் சொன்னாலும் அதற்காக நாம் எந்த சமயத்திலும் ஊழியக்களத்திற்கு புறப்பட்டு விடுவோம்.
5 அருமையான மக்களாகிய உங்களோடு, தேவனுடைய வார்த்தையைச் சுற்றி நாம் கொண்டுள்ள இந்த ஐக்கிய வேளையை நிச்சயமாக மகிழ்ச்சியுடன் அனுபவித்தோம். இப்பொழுது நீங்கள் உத்தமமாயிருந்து, சபைக்கு ஒழுங்காக வந்து, இங்கேயிருக்கிற தீரமிக்க நமது சகோதரர் நெவில் அவர்கள் மூலமாக கொடுக்கப் படும் வேதாகம உபதேசங்களுக்கு கீழ்ப்படிவீர்கள் என்று நான் நம்புகிறேன். சகோதரர் நெவில் அவர்கள் தேவனாகிய கர்த்தரின் ஊழியக்காரரன் தான் என்பதை நாம் மிகவும் உயர்வாக பரிந்துரை செய்கிறேன். அவர் தேவனோடு ஆழமாக, இன்னும் ஆழமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார், அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
சிறிய சபையே, நீங்கள் தேவனுடைய கிருபையில், உறுதியாக நிலைத்திருக்கவும், எப்பொழுதும் கல்வாரியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவும், உங்கள் ஆத்துமா, இருதயத்தினின்று எல்லா கசப்பான வேரையும் அகற்றிவிட்டு, தேவன் எந்த சமயத்திலும் உங்களை உபயோகிக்கத்தக்கதாகவும் இருக்கும்படி நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் எச்சரித்து அறிவுறுத்துகிறேன். எதையாவது நீங்கள் செய்யும்படியோ, அல்லது ஏதாவது ஒரு வெளிப்பாடோ வினோதமான முறையில் உங்களுக்கு எச்சரிக்கையாக வருமென்றால், கவனமாக இருங்கள். மிகவும் சூழ்ச்சியும் சாமர்த்தியமும் உள்ளவனாக சாத்தான் இருக்கிறான். பாருங்கள்? அதை தேவனுடைய வார்த்தையோடு சரிபார்த்து, உங்களது மேய்ப்பனோடு அதைப் பற்றி கலந்தா லோசியுங்கள்.
6 வரங்கள் சபையில் நுழைந்து கொண்டிருக்கின்றன என்றும், அவை சபையில் கிரியை செய்து கொண்டிருக்கின்றன என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள். அவ்வரங்கள் கிரியை செய்யும் முன்பாக, அதைப் பற்றி உங்கள் இருதயத்தில் சரியான நெருக்குதலை முதலாவது உணருகிறீர்களா என்று பாருங்கள். இப்பொழுது சத்துருவானவன் மிகவும் சாமர்த்தியமான வஞ்சகனாக இருக்கிறான். பாருங்கள்? ஒவ்வொரு சமயத்திலும் உண்மையான வரமானது தவறாக பயன்படுத்தப்படுதல் தான் சபைகளை சிதறடிக்கிறது. பாருங்கள்? தேவன் செய்ய முயற்சிக்கும் ஒரு காரியத்தில் வரமானது தவறாப் பயன்படுத்தப்பட்டால், அது உங்களை புண் படுத்துவதுமல்லாமல், அது முழு சபையும் உடைத்துவிடுகிறது. பாருங்கள்? அதைப் பற்றி ஆராய்ந்து பார்த்து, அது வேதாகமத்தின்படி உள்ளதா என்பதை சரி பார்த்து, அது தேவனால் வழி நடத்தப்பட்டதா அல்லவா என்பதை சோதித்துப் பாருங்கள். அதைத் தொடர்ந்து சோதித்துப் பார்த்து, பரீட்சித்துப் பார்த்து அது கோட்டை விட்டு விலகாததாக, தேவனுடைய வார்த்தையோடு சரியாக பரிபூரணமாக இருக்கிறதாக இருக்க நீங்கள் கண்டால், அப்பொழுது சரியான நிலையில் உள்ளீர்கள் என்பதை அறியலாம்.
வார்த்தையானது, வரம் இங்கு உண்டாயிருக்கும் என்றும், அது இன்னவிதமாக கிரியை செய்யும் என்றும் கூறியிருக்கிற வரையிலும், அதனோடு நிலைத்திருங்கள். ஒருபோதும், யார் என்ன செய்தபோதிலும், அது எவ்வளவு உண்மைபோல் தோன்றினாலும், வழி விலக வேண்டாம். அது ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையிலும் உள்ள வேத வாக்கியங்களை பிரதிபலிக்க வில்லையெனில், அதை விட்டு விடுங்கள். இப்பொழுது சாத்தான் அவனுடைய தன்மையின்படியே, வஞ்சித்துக் கொண்டிருக்கிறான்; எனவே அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள்…..
7 நான் ஒரு எஜமானனின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முயலுவதாகத் தோன்றுமானால், என்னை மன்னியுங்கள். நான் எஜமானன் அல்ல. பவுல் ஒரு சமயம் தனது சபையாரைப் பார்த்து, "நீங்கள் என் கிரீடத்தில் உள்ள நட்சத்திரங்கள்'' என்று கூறினானே, அதைப் போலவே நானும் உங்களிடம் கூறும் படியான எண்ணம் வருகிறது. அக்கரையில் இருக்கும் அப்பரம் தேசத்திற்கு நான் கடந்து சென்று, உங்களை அந்த மகிமைப்பட்ட நிலையில் நான் சந்திக்கையில், நீங்கள் அங்கே நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டுமென நான் வாஞ்சிக்கிறேன், பாருங்கள்? நீங்கள் அங்கே இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நான் அங்கே இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
கர்த்தருடைய பிரசன்னத்தை, அல்லது அவருடைய ஜனங்களை அக்கரையிலுள்ள மகிமையான தேசத்தில், என் தரிசனத்தில் கண்டதைநான் நினைவுகூருகிறேன். நான் சுற்று முற்றும் பார்த்து, அவர்களிடம் கூறினேன்… அவர்கள் என்னிடம் நான் சுவிசேஷத்தை எவ்வாறு பிரசங்கித்தேனோ, அதன்படியே முதலாவதாக நியாயந்தீர்க்கப்படுவேன் என்று கூறினார்கள்… 'பவுல் எவ்விதமாக அதை பிரசங்கித்தானோ அதேவிதமாகத்தான் நானும் பிரசங்கித்தேன்'' நான் கூறினேன்.
அந்த இலட்சக்கணக்கான மக்கள் அங்கே நாங்கள் அதின் பேரில்தான் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்'' என்று ஆர்ப் பரித்தார்கள். பாருங்கள்? அது அவ்வண்ணமாகவே இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு நாளில் நாம் அங்கே சந்திக்கப்போகிறோம்.
8 தேவன் என்னையும் சகோதரர் நெவிலையும் எஜமானர்களாக இருக்க வேண்டுமென்று அனுப்பவில்லை. அப்படி இல்லவே இல்லை. நாங்கள் உங்களுடைய சகோதரர்கள் மாத்திரமே என்பதை நீங்கள் பாருங்கள். நாங்கள் சுவிசேஷத்தை போதிக்கிறவர்கள் மாத்திரமே. ஆகவே நாம் யாவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்.
சில சமயங்களில், ஒரு நபர் பெற்றிருக்கிற வரமானது கிரியை செய்யும் விதத்தைக் குறித்து அதை ஒழுங்குபடுத்தும்படி அதைப்பற்றி ஏதாவது கூறவோ, கடிந்துகொள்ளவோ செய்யும் பொழுது, அவ்வரத்தைப் பெற்றிருக்கும் அந்நபர் அதை ஏற்றுக் கொள்ளாமல், அதை நிராகரித்தால், அவ்வரம் சரியான ஒன்றல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலாவதாக, அது தேவனிடத்திலிருந்து வந்ததே அல்ல. தேவனுடைய ஆவியானது எப்பொழுதும் சீர்த்திருத்தலை ஏற்றுக்கொள்ளும்படியாக, அது இனிமையாகவும், தாழ்மையாகவும், விருப்பமுள்ளதாகவும் இருக்கும். பாருங்கள்? ஆனால் அதற்கு மாறாக, சீர்திருத்தல் வரும்போது எழுந்து நின்று, "நான் எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்வேன்'' என்று சொன்னால், அவ்விதமான ஆணவத் தன்மையுள்ள ஆவிகள், தேவனிடத்திலிருந்து வந்ததல்ல. பாருங்கள்? எனவே, பூமி முழுவதும் தேவனுடைய மகிமையால் நிரம்பியிருக்கையில், தேவனுடைய உண்மையான வல்லமையால் நிரம்பியிருக்கையில், ஏன் போலியைத் தெரிந்து கொள்ள வேண் டும்? நாம் ஏன் ஒரு போலியை தெரிந்து கொள்ளப் போகிறோம்? இப்பொழுது இந்த நாளில் நாம் மிகவும் தாமதமாக இருந்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்; என்னவெனில், வஞ்சிக்கிறவன், எவ் வளவு சூதும் வஞ்சகமுமாயிருக்க முடியுமோ, அந்த அளவுக்கு இருந்து, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக் கப்பார்ப்பான். பாருங்கள்?
9 சில வேளைகளில் நாம் அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர் களின் கூட்டத்தில் இருக்கிறோம் என்று எண்ணுகிறோம். அதில் நாம் இருக்கிறோம் என்று நானும் நம்புகிறேன்; ஆனால் நாம் வேதத்தோடு சரியானபடி இருக்கக்கடவோம். அப்பொழுது எல்லாமே வேத வாக்கியங்களின்படியே சரியாக இருக்கு மென்றால், தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருமென்றால், சபைக்கு கனத்தை ஏற்படுத்துமென்றால், அப்பொழுது அது தேவனால் உண்டானது என்று அறிகிறோம், ஏனெனில் வேதமும் அது சரியென்று அதை ஆதரிக்கிறது. ஆனால் நமது உபதேசங்கள் அதை சரியென்று கூறாவிடில், அது நன்மை பயக்காது, அது வீழ்ச்சி யடைந்துவிடும்.
10 ஆகவே, நமக்கு ஏதாவது உள்ளத்தில் தோன்றினால், அது எவ்வளவு உண்மைபோல் தோற்றமளித்தாலும், வேதவாக்கியங் களின்படி அது இருக்கவில்லையெனில், அதை உடனடியாக விலக்கிக் கொள்ளுங்கள், ஏனெனில், உண்மையான ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது, பாருங்கள்.
எனவே இப்பொழுது ஜெபியுங்கள். எப்பொழுதும், நீங்கள் என்ன செய்தபோதிலும், எனக்காக ஜெபியுங்கள். எனக்காக ஜெபி யுங்கள்; ஏனெனில் கடைசி தடவையாக நாம் ஊழியக் களங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்பது எனது கருத்து, நாம் இப்பொழுது …. போய்க்கொண்டிருக்கிறோம்….
11 மகத்தான காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அவைகளோ உலகத்தார் மத்தியில் அறியப்படாமல் இருந்து கொண்டிருக் கின்றன. இயேசு உலகில் வந்து, வாழ்ந்து, மரித்து, பலியாகி, உயிர்த்து, மகிமைக்கு திரும்பிப்போனார். ஆனால் அதைப்பற்றி கோடிக்கணக்கானோர் அறிந்திருக்கவேயில்லை. பாருங்கள்? அது ஆடம்பரமாக, கோலாகலமாக, மகத்தானதாக, பெரிய காரியமாக காணப்படவில்லை. 'அவர் தமக்கு சொந்தமானவர்களிடத்திற்கு வந்தார்'' என்பதாக இருந்தது. ''ஆவியானவர் சபைக்குச் சொல்லு கிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன்.'' புறம் பேயிருக்கிறவர் களுக்கல்ல, "சபைக்குச் சொல்லப்படுவதை'' என்பதாக அது இருக்கிறது. சபைதான் தனக்குரிய அசைவைப் பெற்றுக்கொள் கிறது.
கர்த்தர் ஒருநாள் என்னோடு பேசுகிற வரைக்கிலும், நான் அதைப்பற்றி வேறுபட்ட கருத்தை உடையவனாய் இருந்தேன்; அவர் என்னை தேவனுடைய வார்த்தைக்கு திரும்பிப்போய் அங்கே எவ்வாறு யோவானைக் குறித்து தீர்க்கதரிசிகள், "உயர்ந்த ஸ்தலங் களெல்லாம் பள்ளமாகும், தாழ்ந்த இடங்களெல்லாம் மேடாகும்" என்பதாக கூறினார்களோ, அதைப்பற்றி பார்க்கும்படி செய்தார். எவ்வாறு தேவனுடைய வல்லமை கிரியை செய்யும் என்பதையுங் குறித்து கூறப்பட்டதைக் காண்பித்தார். "மலைகளெல்லாம் ஆட்டுக் கடாக்களைப் போல் துள்ளினது' ''மரங்களெல்லாம் கை கொட்டும்". அது சரிதான், அது ஏதோ சம்பவிக்கப் போகிறதைக் குறித்து கூறுவதாக தோன்றியது. பார்த்தீர்களா? எனவே, அக்காரியம் சம்பவித்த பொழுதோ , என்ன நடந்தது? தாடி வளர்ந்திருந்த வயோதிபன் போல் உள்ள ஒரு நபர் தன் இடுப்பில் ஆட்டுத்தோலைப் போர்த்துக் கொண்டு, வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். வனாந்திரத்தில் எந்தவித சௌகரியங்களும், வசதிகளும் அவனுக்கு இருக்கவில்லை. அவன் அவ்வனாந்திரத்தில் ஒன்பது வயதிலிருந்து இருந்துவந்திருக்கிறான்; அவன் அங்கிருந்து புறப்பட்டு வரும்போது, அவன் முப்பது வயதுள்ளவனாயிருந் தான். வனாந்திரத்திலிருந்து அவன் நடந்து வந்து, தேசத்தில் கால் மிதித்து வந்து, மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கித்துக் கொண் டிருந்தான்; அப்பொழுது ஒருவேளை அவன் யோர்தான் நதிக்கரையில் முழங்காலளவு சேற்றில் நின்று கொண்டிருந்திருப்பான். அப்பொழுது தான் உயர்ந்த ஸ்தலங்கள் பள்ளத்தாக்காகியது; பள்ளத்தாக்குக ளெல்லாம் மேடான ஸ்தலங்கள் ஆகியது.
12 உங்களுக்கு ஆவிக்குரிய நிதானிப்பு இருக்க வேண்டும். ஒரு காரியத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், அதென்ன வெனில், தேவன் இப்பூமியில் ஒருபோதும், பகட்டானவற்றில் வாசம் பண்ணவில்லை, அப்படி இனியும் வாசம் பண்ணப்போவ தில்லை. அவர் அதற்கெதிராக இருக்கிறார். அவர் ஒருபோதும்… இந்த மகத்தான செய்தியானது ஒருபோதும் "இன்னார் இன்னாரை பெரிதாக்குங்கள்'' என்பதாக இருக்கவே இருக்காது. அந்த விதமாக அது செய்வதேயில்லை. அவருடைய ஊழியக்காரர்கள் ஒருபோதும் அந்த விதமாக கிரியை செய்வதில்லை. அவரது மகிமையும், பகட்டும் உன்னதத்திற்குரியவையாகும்.
நேற்று அல்லது இரு தினங்களுக்கு முன்பாக என் நண்பர் பேங்க்ஸ் வுட் அவர்களோடு கெண்டக்கிக்கு சென்று கொண்டிருந் தோம். அங்கே ஒரு பெண் போலீஸ் நின்றுகொண்டிருந்தாள்; அவர் அப்பொழுது, "நாம் வண்டியை சற்று வேகத்தைக் குறைத்து ஓட்டுவது நல்லது, அவள் கடுமையாக இருக்கிறாள்'' என்றார்.
13 'ஆம் அது சரிதான்'' என்று நான் கூறினேன். "ஒரு தேசமானது இலட்சக்கணக்கானவர்களை வேலையில் அமர்த்திக் கொள்ள வேண்டியிருக்கையில், அதற்காக அவர்கள் பெண்களை அப்பதவிகளுக்கு நியமித்துக்கொள்வதும், பெண் போலீஸ் காரிகளாக அவர்களை நியமித்துக்கொள்வதும், டாக்ஸி டிரைவர் களாகவும் அவர்களை நியமித்துக்கொள்வதுமாக இருந்தால், அது நமது தேசத்தின் மேல் படிந்திருக்கும் பெரிய கறைகளில் ஒன்றாக இருக்கிறது'' என்று நான் கூறினேன். ஒரு முயலுக்கு எண்ணெய் சட்டியில் எவ்வாறு எந்தவொரு வேலையும் இருக்கமுடியாதோ, அதேபோல் பெண்களுக்கும் அவ்விதமான வேலைக்குப்போக சம்மந்தமே இல்லை. பாருங்கள்? அது அவளுடைய ஸ்தானம் அல்ல. 'அது என்னை மிகவும் வாதிப்பது வழக்கமாயிருந்தது; ஆனால் இப்பொழுதோ நான், இது நம்முடைய இராஜ்யம் அல்லவே, நாம் இவ்வுலகுக்கு உரியவர்கள் அல்லவே என்பதைக் குறித்து ஞாபகப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன்'' என்று நான் கூறினேன்.
14 ஏன் ஸ்திரீகள், நமது ஸ்திரீகள் குட்டையாக முடியை கத்தரித்துக்கொண்டு, மேக்-அப்புகளை செய்துகொண்டு, ராக் -என்ரோல் மற்றும் இன்னபிற காரியங்களையும் விரும்பிக்கொண்டிருக் கின்றனர்? நல்லது, மக்கள் சாதாரண சபைகளுக்கு போகிறார்கள்; அது சரியென்று எண்ணுகிறார்கள். ஏன்? அவர்கள் அமெரிக்கர்கள், அவர்கள் அமெரிக்கர்கள், அமெரிக்க ஆவியைப் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ அமெரிக்கர்கள் அல்ல; நாம் கிறிஸ்தவர்களாயிருக் கிறோம். நாம் ஜீவிப்பது… நமது ஆவியோ வேறொரு இராஜ்யத் திற்குரியதாக உள்ளது. நமது ஆவியானது இந்த இராஜ்ஜியத்திற்கு உரியதாக இருக்குமென்றால், அப்பொழுது நாம் இந்தக் காரியங் களோடு தொழுது கொள்ளுகிறவர்களாக இருப்போம்; அப் பொழுது நாம் இந்த கீழ்த்தரமான பாடல்களை தொழுது கொள்ளு கிறவர்களாக இருப்போம்; இந்த ராக் - என் - ரோல்களை தொழுது கொள்ளுகிறவர்களாக இருப்போம். "உங்கள் பொக்கிஷம் எங்கே யிருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்". நமது பொக்கிஷங்கள் உன்னதத்தில் இருக்கின்றன. ஆகவே நாம் ஒரு இராஜ்யத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்.
இது நம்முடைய வீடு அல்ல; நாம் இங்கே பரதேசிகளாக சஞ்சரித்துக் கொண்டேயிருந்து, மற்ற பிரஜைகளையும் இருளை விட்டு வெளியே கொணர முயற்சித்துக்கொண்டிருக்கிறவர்களாக இருக்கிறோம். இதற்காக நாம் ஒரு நகரத்திற்குள் போய், அங்கே ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு நகரளாவிய ஒரு பெரிய கூட்டத்தை ஏற்படுத்தி, ஒருவேளை அங்கேயிருக்கிற ஒரேயொரு விலையேறப்பெற்ற ஆத்துமாவுக்காக, அந்நிலத்தை உழுதுகொண் டிருக்கிறோம்; அங்கு ஒன்றே ஒன்றுதான் இருக்கக்கூடும்.
"இந்த கூட்டமானது பெரிய வெற்றியாக அமைந்தது, ஐயாயிரம் பேர்கள் பீடத்தண்டையில் வந்தார்கள்'' என்ற நீங்கள் ஒருவேளை கூறலாம். ஆனால் அவர்களில் ஒரு நபர்கூட இரட் சிக்கப்பட்டிருக்காமல் இருக்கக்கூடும். பாருங்கள்? "இரு நபர்கள் மாத்திரமே பீடத்தண்டை வந்தார்கள்'' என்று நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர் ஒரு விலையுயர்ந்த இரத்தினமாக இருக்கக்கூடும். நாம் நீரோடையில் வலை வீசிக்கொண்டிருக் கிறோம். தேவனோ அதிலுள்ள மீன்களைப் பொறுக்கியெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அவற்றில் எது மீன், எது மீன் அல்ல என்பது தெரியும்.
ஆகவே, பாருங்கள், நாங்கள் பிரசங்கிப்பதை மட்டுமே செய்கிறோம். அதே காரியத்தைத்தான் இந்தக் கூடாரத்திலும் நீங்கள் செய்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும்'' என்பதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தேவனுடைய சத்தமானது அவருடைய வார்த்தை யாயிருக்கிறது.
15 அன்றொரு நாள் நான், இந்த ஜனங்கள், அது ஒருபோதும் இருக்கவில்லை என்று எவ்வாறு கூறுகிறார்கள் என்பதைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஸ்தாபன சபையானது, "தெய்வீக சுகமளித்தல் என்பது சரியானது அல்ல. பரிசுத்த பவுல், மேல்வீட்டறையில் கூடியிருந்த பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் ஆகியோர்களைத் தவிர வேறு எவருக்கும் எக்காலத்திலும் தெய்வீக சுகமளித்தல் வரமொன்று அளிக்கப்படவேயில்லை. அவர்களுக்கு மட்டும் தான் தெய்வீக சுகமளித்தல் வரம் கொடுக்கப்பட்டது, அவ்வளவுதான், அதற்குப்பிறகு யாருக்கும் கொடுக்கப்படவே யில்லை" என்று கூறுகின்றனர்.
ஆனால், இங்கே இருக்கிற அந்த சகோதரன் வில்லி நமக்காக மிகவும் அற்புதமான முறையில் அமைத்துத் தந்திருக்கிற இந்த அற்புத வரைபடத்தின் மூலமாக, சபைக்காலங்கள் தோறும் எவ்வாறு அவ்வரங்களின் கிரியையின் தொடர்ச்சியானது தடை படாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பதைப் பாருங்கள். அதே சபையானது சபை சரித்திரத்தைப் பற்றியும், ஐரேனியஸ், பரிசுத்த மார்ட்டின் ஆகியோரைக் குறித்தும் என்ன கூறிடும் என்பதையும் பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன். அப்போஸ்தலர் கள் யாவரும் மரித்தபிறகு இருந்த காலங்களினூடே நூற்றுக்கணக் கான ஆண்டுகளாக ஜீவனைக் கொடுத்த இரத்த சாட்சிகள்கூட அந்நிய பாஷைகளில் பேசினார்கள், வியாதியஸ்தரைக் குணமாக்கினர், மரித்தோரை உயிரோடெழுப்பினர், அற்புதங் களைச் செய்தனர், முழுச் சபையுமே அவ்வாறு செய்தது. வரங்கள் அப்போஸ் தலர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன என்று அந்த சபை கூறுமானால், இவர்களைப் பற்றி என்ன என்று நான் வினவுகிறேன்.
16 அது எத்தகையதொரு குறுகிய மனப்பான்மை என்பதைப் பாருங்கள். அவர்களுக்கு சரியான ஆவிக்குரிய நிதானிப்பு இல்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் குருடராயும், பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்தவர்களாயுமிருக்கிறார்கள். பாவம் என்றால் அவிசுவாசம் என்று பொருள். அவிசுவாசமான எந்தவொன்றும் பாவமாயிருக்கிறது. ஒரு நபர் எத்தனை நீளமான பட்டங்களைப் பெற்றிருந்தாலும், அதாவது, டி.டி. இரட்டை பி.ஹெச்.டி. பட்டங்கள், எல்.எல்.டி., ஆகிய பட்டங்களை ஒரு சேரப் பெற்றிருந்தாலும், அந்த ஆள், "தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று கிடையவே கிடையாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பதும் கிடையாது'' என்று கூறினால், அம்மனிதன் பாவத்தில் மரித்தவனாயிருக்கிறான். அவன் ஒருவேளை வேதாகமத்தில் இருந்து எல்லாவிதமான இரகசியங்களையும் விளக்கத் திறனுள்ளவனாக இருக்கக்கூடும், ஆனால் அவனது வாழ்க்கையே , அவனது சாட்சியே , அவன் மரித்தவனாயிருக்கிறான் என்பதை நிரூபிக்கிறது. அவன் பாவத்திலும் அக்கிரமங்களிலும் மரித்தவனாயிருக்கிறான், ஏனெனில் அவன் பாவியாயிருக்கிறான்.
பாவம் என்பது அவிசுவாசமாகும். பாவம் என்பது விபச்சாரம் செய்வது, சிகரெட் புகைப்பது, நடனமாடுவது, மற்றும் அது போன்ற இன்னபிற காரியங்களைச் செய்வதல்ல. அவையல்ல பாவம், அவைகள் அவிசுவாசத்தின் தன்மைகளாகும். ஆனால் ஒரு விசுவாசியோ…. ஒரு மனிதன் குடிப்பதில்லை, புகைப்பதில்லை, இச்செயல்களையெல்லாம் செய்வதில்லை; ஒரு கெட்ட வார்த்தை கூட சொல்லவில்லை; பத்துக் கற்பனைகள் அனைத்தையும் கைக் கொள்ளுகிறவன் என்று இருந்தாலும்கூட, அவன் தேவனுடைய வல்லமை எந்தவொன்றையும் மறுதலித் தால், அவன் முழு கறுப்புப் பாவியாயிருப்பான், அவன் முதல் தரமான பாவியாயிருக்கிறான். பாவம் என்ற வார்த்தை அவிசுவாசத் தையே குறிக்கும். அது சரிதானா அல்லவா என்பதைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தையின் பேரில் அவிசுவாசம் கொண்டுள்ள ஒரு நபர் பாவியாயிருக்கிறான், அவனால் அந்த இராஜ்யத்தில் பிரவேசிக்கவே முடியாது.
17 ஓ! இப்பொழுது, கர்த்தருடைய சித்தத்தை நான் மேற் கொண்டவனாக, பரிசுத்த ஆவியானவருடைய கட்டளையின்படி, மீண்டும் இக்கூடாரத்திற்கு வந்திட இன்று காலையில் நான் தீர்மானித்து, ஒருவேளை உங்களை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செய்தியின் பேரில் காக்க வைத்திடுவேன் என்று நினைக்கி றேன். ஆனால் நான் போவதற்கு முன்பாக வெளிப்படுத்தின விசேஷம் நான்காம் அதிகாரத்தை முடித்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன். உங்களை அது களைப்படைய செய்யாது என்று நான் நம்புகிறேன், அது உங்களுக்கு மகிமையாக இருக்கும் என்று நம்புகிறேன். அது உங்களுக்கு நன்மை செய்வதும், உதவி செய்வதுமான ஒன்றாக இருக்கும் என்றும், எதிர் வரும் நாட்களுக் கென்று உங்களுக்கு உதவி செய்வதாயிருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.
இப்பொழுது ஒருவேளை … இன்று காலையில் இங்கு வருவதற்கு முன்னர் நான் பில்லியிடம், நமது மத்தியில் யாராவது அந்நியர்கள் வந்திருந்தால் அவர்களுக்கு ஜெப அட்டைகளை கொடுக்கும்படி கூறியிருந்தேன்; ஏனெனில், நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லப்போகிறோம், இனி எப்பொழுது திரும்பி வருவோம் என்று தெரியவில்லை. தேவன் மாத்திரமே அதை அறிவார். நான் விரும்பினேன்… இது ஒருவேளை கடைசி கூட்டமாக இருக்கக்கூடும் என்று எண்ணினேன் … ஒன்பது மணி சுமாருக்கு என் மகன் என்னை அழைத்து, ''அப்பா, சில மக்கள் ஜெபித்துக்கொள்வதற்காக காத்திருக்கிறார்கள், அவர்களை நான் கேட்டேன், ஆனால் அம்மக்கள் எப்பொழுதும் சபைக்கு வருகிறவர்கள்தான்'' என்று கூறினான்.
18 ''அப்படியெனில், ஜெப அட்டைகள் எதையும் கொடுத்திட வேண்டாம், ஏனெனில் அந்த மக்கள்… நமக்கு இன்று காலையில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பது இருக்குமென்றால், அப்பொழுது நாம் அவர்களை மேலே அழைத்து அவர்களுக்காக ஜெபிப்போம்'' என்று நான் கூறினேன். "நாம் அறிந்திருக்கிற வழக்கமாக கூடாரத்திற்கு வருகிற ஜனங்கள்தான் அவர்கள் என்றால் வேண்டாம்" ''யாராவது புதியவர்கள் வந்திருந்தால்தான் கொடுக்க விரும்புகிறேன்'' என்று கூறினேன்.
பிறகு என் மகன் சில நிமிடங்களுக்கு முன்னர், நான் அங்கே நின்று கொண்டிருக்கையில், வந்து, என்னை சந்தித்தபொழுது, "நல்லது, நான் சில ஜெப அட்டைகளை வழங்கிவிட்டேன்; வெகு சிலருக்குத்தான் நான் ஜெப அட்டைகளை வழங்கினேன்; நீங்கள் உங்கள் விருப்பப்படியே செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினான்.
அதற்கு நான், "நல்லது, செய்தி எவ்வாறு போகிறது என்று பார்ப்போம், நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பார்ப்போம், அதன்பிறகு நாம் போவோம். நான் …'' என்று பதிலளித்தேன்.
"அநேகர் ஜெப அட்டைகள் தங்களுக்கு தரப்படவேண்டு மென்று விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் சபையில் உள்ள மக்கள்தான்'' என்று மகன் கூறினான். பாருங்கள்?
19 தேவன் தேவனாகவே இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அவர் செய்கிற காரியங்களைப் பார்க்க எப்படியாயிருக்கிறது! பல்வேறு காரியங்களைப்பற்றி ஜெபிப்பதற்காக மக்கள் தொலை பேசி மூலம் தெரியப்படுத்துகிறார்கள். சிலவேளைகளில் சிறு காரியங்களைப் பற்றிகூட, தேவன் அவைகளுக்கு எப்படியாய் பதிலளிக்கிறார் பாருங்கள்!
என்னுடைய வீட்டிற்கு அன்றொரு பன்னிரண்டு அல்லது ஒருமணி சுமாருக்கு நியூ ஆல்பேனியிலிருந்து அவ்விளம் பெண் மணி, இல்லை, அவளுடைய கணவர், நிமோனியோ ஜுரத்தினால் பாதிப்பட்டு மூச்சுத் திணறலுடன் கொண்டு வந்த அக் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று அறிய நான் விரும்புகிறேன். அதோ அங்கே; குழந்தை எப்படியிருக்கிறது? (சபையில் இருந்த ஒரு மனிதர், "ஓகே'' என்று கூறுகிறார்-ஆசி). நன்றாயிருக்கிறாள், நலம் தான்; நல்லது.
20 நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு காண்பிப்பேனாக; அதென்னவெனில், நீங்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு காரியம் இருந்தால், பரிசுத்த ஆவியானவர் பேசிய பிறகு, அது தொடர்ந்தும் அப்படி இருப்பதில்லை. ஃப்ரெட் சாத்மேன்… நமது விலை யேறப்பெற்ற சகோதரன் ஃப்ரெட் அவர்கள், ஆமென்'' என்று சற்று முன்பு கூறியது என் காதில் விழுந்தது. ஆனால் அவர் எங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கேயிருக்கிறார்? அவர் இங்கேதான் இருக்கிறாரா? இதோ இங்கே தான் சகோதரன் ஃப்ரெட் சாத்மேன் அவர்கள் இருக்கிறார். அது எவ்வளவு எளிமையாயுள்ளது என்பதை காண்பிக்கும் படியாக… அவரிடத்தில் சில நண்பர்கள் வந்திருந்தனர். அது சகோதரன் வெல்ச் ஈவான்ஸ் என்று நான் அனுமானிக்கிறேன். எனக்குத் தெரியாது. அவர்களிடத்தில் ட்ரெய்லர் வண்டி ஒன்று இருந்தது. அதன் கதவைத் பூட்டி விட்டார்கள், ஃப்ரெட் அதன் சாவிகளை தொலைத்துவிட்டார். அவர்கள் எல்லா இடங்களிலும் அதைத் தேடிக் கொண்டிருந்தார்கள், அதை எந்த இடத்திலும் கண்டு பிடிக்கவே முடியவில்லை. எனவே சகோ. வெல்ச் இங்கு வந்து சேர வேண்டியதான நாள் வந்தது; ஆனால் அவர்களால் அவ்வாகனத் தின் சாவிகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எனவே அவர் என்னிடம் என் வீட்டிற்கு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு, 'சகோதரன் பிரன்ஹாம், அந்த சாவிகள் எங்கேயிருக்கின்றன? அவைகளை நாங்கள் எங்கே காணலாம்?" என்று கேட்டார்.
21 அவ்விதமான கேள்வியை ஒரு மனிதன் கேட்பதைக் குறித்து உங்களில் சிலர் மலைக்கக்கூடும். ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள்; ஈசாயின் புத்திரர் கழுதைகளைத் தேடிக் கொண்டு போன சம்ப வத்தை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களா? "என்னிடத்தில் ஒரு வரம் இருந்தால் அது எங்கே என்று கண்டுபிடித்து சொல்லி விடுவேன். தீர்க்கதரிசியினிடத்தில் அவ்விஷயத்தைக் கேளுங்கள், அவன் ஒரு வேளை கழுதைகள் எங்கே இருக்கின்றன என்பதை சொல்லி விடுவான்'' என்று சொல்லப்பட்டது. அது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?
அவன் சாலையில் நடந்து செல்லுகையில், அவர்கள் தீர்க்க தரிசியைச் சந்தித்தார்கள். அப்பொழுது தீர்க்கதரிசி, ''நீங்கள் கழுதைகளைத் தானே தேடிக்கொண்டு வந்தீர்கள்? நீங்கள் உங்கள் வீட்டிற்கு திரும்பிச்செல்லுங்கள். அவைகள் ஏற்கனவே வீட்டிற் குப் போய் விட்டன'' என்றான். அது உங்களுக்கு ஞாபகமிருக் கிறதா?
நான் ஜெபித்தேன். ஃப்ரெட் எளிதாக அதைக் கண்டு எடுத்துக் கொண்டார். பார்த்தீர்களா?
சகோதரன் எட் டால்டன் அவர்களே, நீங்கள் எங்கேயிருக் கிறீர்கள்? எட் டால்டன் எங்கேயிருக்கிறார்? அவர் இங்கு எங்கோ தான் இருக்கிறார்; சற்று முன்னர்தான் நான் அவரைப் பார்த்தேன். ஓ பின்னால் அதோ அங்கே இருக்கிறார். இண்டர்காம் அல்லது ஒலிபெருக்கி மூலம் நான் கூப்பிடுவதை அவர் கேட்டார். அன் றொரு நாள் இரவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது; சகோ. எட் அவர்கள் மிகக் கடுமையான தொல்லையில் அகப்பட்டிருந்தார். நான் அவருக்கு உதவி செய்ய விரும்பினேன். "இல்லை, நீங்கள் தேவனிடத்தில் எனக்காக விண்ணப்பிக்கவே நான் விரும்பு கிறேன்'' என்று அவர் கூறினார். அவருக்கு உதவி செய்யும்படி நான் கர்த்தரை வேண்டிக்கொண்டேன். அடுத்த நாள் அவரது மனைவி என்னை தொலை பேசியில் அழைத்து, ஒருவர் உதவிக்கு வந்திட்டதாகத் தெரிவித்தார். அப்படித்தானே சகோதரன் எட்?
22 அவர் தேவனாயிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அப்படித் தான். அவர் தேவனாகவே இருக்கிறார். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், அது எத்தகைய தொல்லையாக இருந்தாலும், எங்கும் எப்பொழுதும், தொடர்ந்து அவர் தேவனாகவேயிருக்கிறார். நாம் சுற்றிலும் போய் தற்புகழ்ச்சி செய்து கொண்டிருக்கவில்லை. அவ்வாறு நாம் செய்யக் கூடாது. வலது கை செய்வதை இடது கை அறிய வேண்டாம். இடதுகை செய்வதை வலது கை அறிந்திட வேண்டாம். நாம் நமக்குள் அதைப் பற்றி பேசிக்கொள்கிறோம்; அதை எங்காவது நாம் தம்பட்டமடித்துக் கொள்வதில்லை. ஏனெனில் "தேவன் ஒரு நபருக்கு மாத்திரமே அதைச் செய்ய முடியும்'' என்று கூறுவது போல், அது சுயபெருமை ஆகிவிடும். அவரை விவாசிக்கிற எவருக்கும் அதை அவர் செய்ய முடியும். அது விசுவாசமாக இருக்கிறது. விசுவாசம்! நீங்கள் என்ன செய்ய விரும்பின போதிலும் உங்கள் எண்ணங்கள் என்னவாயிருந்தாலும் சரி, அவற்றை தேவனிடத்தில் எடுத்துச் செல்லுங்கள். அவர் எல்லா வற்றையும் அளிக்கிறவராயிருக்கிறார். அது அவ்வாறு இருக்க வில்லையா? எனவே அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். தேவன் பதிலளிக்கிறார். தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிற பிதாவாயிருக் கிறார்.
23 எனவே, இப்பொழுது இத்தொடர் கூட்டங்களின் இறுதியாக, கர்த்தருக்கு சித்தமானால், இக்கூட்டத்தின் இறுதியில், ஒருவேளை இக்கூட்டத்தின் சமயத்தில், இருதயத்தின் எண்ணங்களை பகுத் தறிந்து சொல்லும் ஊழியத்தை வைத்துக்கொள்ளலாம் என்று நான் எண்ணினேன். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை நாம் அறியமாட்டோம். அந்தவிதமாக இருப்பதை நான் விரும்பு கிறேன். எந்த ஒன்றையும் நீங்கள் உறுதியிட்டு நிச்சயப்படுத்தி வைக்க வேண்டாம். அவர் எப்படி செய்ய விரும்புகிறாரோ அவ் வாறே நடக்க விட்டுவிடுங்கள்.
இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, கடிகாரத்தை நிறுத்தி விடுங்கள்.
(ஒரு மனிதர் 'சகோதரன் பில் அவர்களே' என்று அழைக் கிறார் - ஆசி). ஆம்? (நான் பேசலாமா?'' என்று அவர் கேட்கிறார்) சரி, சகோதரனே (அந்த சகோதரன் சாட்சி சொல்ல ஆரம்பிக்கிறார் - ஒலிநாடாவில் காலியிடம்-ஆசி). நிச்சயமாகவே நான் அதை விசு வாசிக்கிறேன். நான் அதை முழுமையாக விசுவாசிக்கிறேன்.
24 இதோ இங்கே சகோதரன் வெல்ச் ஈவான்ஸ்… இதோ அங்கே அவர் தான் அமர்ந்திருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுகையில்…
இங்கே சமீபத்தில் லூயிவில்லில் இந்தக் கார்களைத் திருடி, வெகு விரைவாக அவைகளை கென்டக்கியில் ஏதோ ஒரு இடத்தில், எடுத்துச் சென்றுவிடும் ஒரு திருட்டுக் கும்பலைப் பற்றி நீங்கள் யாவரும் கேள்விப்பட்டும், பத்திரிக்கைகளில் அதைப் பற்றி படித்தும் இருக்கிறீர்கள். கென்டக்கியில் ஒரு மோட்டார் வாகனத்தை உரிமை கொண்டாட அதற்கான உரிமைப் பத்திரம் உங்களுக்குத் தேவையில்லை; அதை கென்டக்கியிலேயே உங்களுக்கு தயாரித்துக் கொடுப்பார்கள். ஆகவே, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அதை நீங்கள் எடுத்துக்கொண்டு போய் உரிமைப்பத்திரம் இல்லாமலேயே விற்றுவிட வேண்டியதுதான். எனவே அவர்கள் இவ்வாறு திருடிக் கொண்டு வந்த விற்கப்பட்ட வாகனங்களை எடுத்து ஒட்டிக்கொண்டுபோய், அவைகளுக்கு வேறு வர்ணம் பூசி, அவைகளைத் கொண்டு வந்து விற்று விடுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவ்வாகனத்திற்கான உரிமைப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களுடைய குடியிருப்பின் இலக்கத்தை மட்டும் சொன்னால் போதுமானது. அதைக் கொண்டு அவர்கள் உங்களுக்கு உரிமைக்கான தஸ்தா வேஜைத் தயாரித்து அளித்து விடுவார்கள். இப்படியாக அவர்கள் மோட்டார் வாகனத்தை தெருவிலிருந்து திருடிக்கொண்டு, அதை வெகு வேகமாக ஓட்டிச் சென்று, ஏதாவது ஒரு பணிமனையில் கொண்டுபோய் நிறுத்தி, அதற்கு வேறு வர்ணம் கொடுத்து, அவ் வண்டியின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியமைத்து, அதை விற்றுவிடுவார்கள். அமெரிக்காவில் எங்கும் இவ்விதமான மோசடியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. அது விசேஷ மாக கெண்டக்கியில் தான் மிக அதிகமாக நடைபெறுகிறது. அதைப் பற்றிய கட்டுக்கதையை சமீபத்தில் பத்திரிக்கையில் படித்தேன்.
பெருந்தன்மையும், நல்ல உள்ளமும் படைத்த, விலையேறப் பெற்ற சகோதரன் ஈவான்ஸ் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஜார்ஜியாவிலுள்ள மேகோனிலில் இருந்து மோட்டார் வாக னத்தை ஓட்டிக்கொண்டு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு சுவிசேஷத்தைக் கேட்பதற்கென்றே வந்துகொண்டிருக் கிறார்கள். ஓ, எவ்வளவாய் அவர்கள் உத்தமமும், உண்மையுமான சிநேகிதராயிருக்கிறார்கள்! பிறகு அவர் மில்லருடைய உணவகத் தில் சாப்பிட செல்வதுண்டு.
25 மில்லர் நிறுவனத்திற்காக நான் விளம்பரம் கொடுக்க வில்லை. லூயிவில் கெண்டக்கியின் மிகச்சிறந்த உணவை அவர்கள் விற்கிறார்கள் என்று நான் நிச்சயமாக கருதுகிறேன். தனிப்பட்ட வீடுகளைக் குறித்து நான் ஒப்பிட்டுச் சொல்லவில்லை. வீட்டை விட்டு வெளியே உள்ளவற்றில், எனக்குத் தெரிந்தவரை அங்கு தான் நன்றாக உள்ளது. நானும் அங்கு சாப்பிடுவது உண்டு. நான் எனது குடும்பத்தை வீட்டில் வைத்து உணவளிப்பதைவிட மிக மலிவாக அந்த உணவகத்தில் உணவளிக்க முடியும்.
எனவே, அப்பொழுது நான் அங்கே உள்ளே சென்றேன். அதே போல், சகோ. ஈவான்ஸ் அவர்களும் சாப்பிடுவதற்காக, தனது மோட்டார் வாகனத்தை வெளியே நிறுத்தி வைத்துவிட்டு, உள்ளே சென்றார். அவர் தானும் தனது குடும்பமுமாக உணவகத்தை விட்டு வெளியே வரும்போது, அங்கே அவரது எல்லாத் துணிமணிகளோடும் அவரது மோட்டார் வாகனமானது காணப்படவில்லை. எல்லாம் போய்விட்டிருந்தது. நம் எல்லா ரையும் போலுள்ளவர்தான் சகோதரன் ஈவான்ஸ் அவர்களும். அவருக்கு அங்கே ஒரு சிறு வியாபாரம்தான் உண்டு, அவர் மோட்டார் வாகனத்தில் வேலை செய்கிறவர். மிக மோசமாக சேதமடைந்த வண்டிகளை வாங்கி, அவைகளை சீர் செய்பவர் அவர். அவர் ஒரு எளிய மனிதர், அவர் தனது பணத்தை, இந்த வகையான சுவிசேஷத்தை அவர் விசுவாசிக்கிறபடியினால், அதைக் கேட்ப தற்காக செலவழித்துக் கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். தேவன்தாமே அவர்களுக்கு, அத்தேசத்தில் உதவியாக இருந்து இச்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக, எங்கிருந்தாவது ஒரு செய்தியாளனை அனுப்பும்படி நான் ஜெபித்துக்கொண்டு இருக் கிறேன்.
அப்பொழுது சகோதரன் ஈவான்ஸ் செய்வதறியாமல் வந்தார். அவர் காவல் துறையினருக்கும் தெரிவித்துவிட்டார். அவர்களாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எனவே அவரும், அவரோடு சகோ. ஃப்ரெட் அவர்களும் வந்தனர், நாங்கள் அறையில் அமர்ந்து அதைக் குறித்து பேசினோம். அவ்வித மாகத்தான், நாங்கள் என்ன நடக்கிறதென்று அறையில் உட்கார்ந்து பார்த்து, பிறகு தேவனிடத்தில் போவது வழக்கம். எனவே நாங்கள் கர்த்தரிடம் ஜெபித்த பொழுது, அவ்வாகனத்தை எடுத்துக் கொண்டுபோன மனிதனை சந்தித்து, அவன் எங்கிருந்தாலும் சரி, அவனைத் திருப்பியனுப்பும்படி கேட்டோம்.
26 வழக்கமாக இத்திருடர்கள், வண்டியை வெகுவேகமாக போலீஸ் கைக்கு எட்டாத தூரத்தில், அதாவது பௌலிங் க்ரீன் என்ற பகுதியைத் தாண்டி ஓட்டிச் சென்றுவிடுவர், அதனால் அவர்களால் அதைக் கொண்டுபோய் மறுபடியும் வேறு வர்ணம் பூசி, அதை வேறுமாதிரியாக உருவாக்கிவிடுவார்கள். திருடப் பட்ட இந்த வாகனம் மிகவும் நல்லதொரு வண்டியாகும். அது ஒரு ஸ்டேஷன் வாகன் என்று எண்ணுகிறேன். அப்படித்தானே சகோதரன் ஈவான்ஸ் அவர்களே? ஆம், அது ஒரு ஸ்டேஷன் வாகன்தான்.
எனவே, என்ன நடந்தது? நாங்கள் முழங்கால் படியிட்டு ஜெபித்தோம். எல்லாம் சரியாக இருக்கிறது என்பதாக கர்த்தர் எங்களுக்கு சாட்சியிட்டார். எனவே, அப்பொழுது கர்த்தருடைய வல்லமையானது எங்களுக்குள் வந்தது. சகோதரன் ஈவான்ஸ் ஒரு குறிப்பிட்ட வழியாக போகும்படியாக நடத்தப்பட்டு புறப்பட்டுச் சென்றார்.
27 வாகனத்தை திருடியவன் அதை நேரே இங்கே ஜெபர்சன் வில்லுக்கே திரும்பக் கொண்டு வந்துவிட்டான். அவ்வாகன மானது லூயிவில்லில் திருடப்பட்டது. திருடியவன் பௌலிங் க்ரீன் வரையிலும் அதைக் கொண்டுபோய் விட்டு, அதை இங்கே திரும்பக்கொண்டு வந்து விட்டு விட்டான். அவன் வாகனத்தை விட்டு வெளியேறி, அதன் சாவியையும் வண்டியிலேயே விட்டு விட்டு, வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு, நடந்து சென்று விட்டான். ஈவான்ஸ் கண்டு கொள்ள வசதியாக ஜெபர்சன் வில்லிலேயே விட்டுவிட்டு சென்று விட்டான்; லூயிவில்லில் அல்ல. இவ்வளவு தூரம் திரும்ப இங்கே ஜெபர்சன்வில்லுக்கு அவன் வெகுதூரம் ஓட்டிக் கொண்டு வந்துவிட்டு விட்டுப் போய் விட்டான்.
பறவைகள் தனக்குக் கீழ்ப்படியும்படி கர்த்தரால் செய்ய முடியும். மனிதன் அவருக்குக் கீழ்ப்படியும்படி செய்ய அவரால் முடியும்; அவருடைய சத்துரு அவருக்கு கீழ்ப்படியும்படி செய்ய அவரால் இயலும். ஆம், ஐயா. அவர் தேவனாயிருக்கிறார். ஒரு பொருள்கூட இழக்கப்படாமல், பெட்ரோல் டாங்கின் பாதி யளவுக்கு பெட்ரோல் நிரப்பியிருந்து, வாகனமானது அங்கே, பௌலிங் க்ரீன் வரைக்கிலும் அத்திருடன் அதை ஓட்டிக்கொண்டு போய் விட்டு , அவனால் திரும்பக்கொண்டு வந்து நிறுத்தி விடப் பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவனிடம், ''வண்டியைத் திருப்பு , வண்டியை ஜெபர்சன்வில்லுக்கு திருப்பி ஓட்டிக் கொண்டுபோ, இன்ன இடத்தில் இன்ன தெருவில் நிறுத்திடு வாயாக, நான் அவனை, வாகனத்தை கண்டு கொள்ளும்படி அந்த இடத்திற்கு அனுப்பப் போகிறேன். இன்ன வழியாக'' என்று கூறியிருக்க வேண்டும். அது சரிதானே சகோ. வெல்ச் அவர்களே? அது சரிதான்.
28 அவர் தேவனாயிருக்கிறார். சகோதரன் ராய்! அவர் ஜெபத் திற்கு பதிலளிக்கிறார். சகோதரன் ஸ்லாட்டார். அதேவித மாகத்தான் அவர் செய்கிறார்; உங்களுடைய சிறிய நாயைக்கூட அவர் குணமாக்கினார். அவர் சுகமளிக்கிறார் என்பதை நான் அறிவேன். அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார். அவர் இன்னமும் அற்புதங்களைச் செய்கிறார். அவர் இன்னமும் தேவனாயிருக்கிறார். அப்படியே அவர் செய்வார். எப்பொழுதும் அவர் தேவனா யிருந்தார், அவர் இன்னமும் தேவனாகவே இருப்பார்.
வீட்டின் கூரையின் மேலும் அவர் தேவனாயிருக்கிறார் (அப்பாடலை சபையில் பாடும் சகோதரர் யார்?) சமையலறையில் தேவன் இருக்கிறார், பண்ணையில்
தேவன் இருக்கிறார், வாகனத்தில் தேவன் இருக்கிறார், எங்கும் தேவன்
இருக்கிறார்; எல்லாவற்றிலும், எங்கும் தேவன் தேவனாக
இருக்கிறார்.
ஓ, எவ்வளவு அற்புதமானவர் நாம் இவ்விதமாக பிரசங்கம் செய்து கொண்டே போகலாம், அப்பொழுது நம்மால் இந்தப் பாடத்திற்குள் செல்லவே முடியாது போய்விடும். நல்லது, நாம் இப்பொழுது ஒரு க்ஷணம் ஜெபத்திற்காக தலை வணங்குவோமாக.
29 கிருபையுள்ள பரம பிதாவே, நாங்கள் உம்முடைய பரிசுத்த வார்த்தையின் மேல் மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம். அதினால் எங்களுடைய இருதயங்கள் எங்களுக்குள்ளாக கொழுந்து விட்டு எரிகிறது, அப்பொழுது நாங்கள், உம்முடைய ஆவி எங்கள் மத்தியில் இறங்கி வருகிறார் என்றும், எங்களோடு பேசுகிறார் என்றும், எங்கள் இருதயங்கள் முன் வந்து அதைப் பற்றிக் கொள் கிறது என்றும் அறிகிறோம். கர்த்தாவே, அதைக் குறித்து நாங்கள் மிகவும் நல்லவிதமாக உணருகிறோம்.
மிகவும் அதிகமாக குழப்பம் நிறைந்திருக்கிறதாக இந்த இருளான வேளை இருக்கிறது என்பதை அறிகிறோம். தீர்க்க தரிசியானவன், கடைசி நாட்களில் ஒரு பஞ்சம் வரும். அது இவ் விதமாக இருக்கும். எப்படியெனில், ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக் குறைவினால் உண்டாகிய பஞ்ச முமல்ல. ஆனால் தேவனுடைய உண்மையான வார்த்தையைக் கேட்க முடியாத பஞ்சமாகும் அது. உண்மையான தேவனுடைய வார்த்தையை தேடுவதற்காக மனிதர் கிழக்கிலிருந்து மேற்குக்கும், வடக்கிலிருந்து தெற்குக்கும் அலைந்து திரிவார்கள் என்று கூறிய தைப் போல் நிலைமை இருக்கும். வார்த்தை! வார்த்தை என்பது யார்? இயேசுவே வார்த்தையாயிருக்கிறார். "வார்த்தை மாம்சமாகி நமக்குள் வாசம் பண்ணினார்''. உண்மையான தேவனுடைய வார்த்தையின் பிரத்தியட்ச மாகுதலைக் காணுவதென்பது, வேத வாக்கியங்களின்படியே காணும்படியாக தோற்றமளித்தலாகும். வேதவாக்கியம் கூறுகிற படி, மக்கள் எவ்வாறு பயணம் செய்து வார்த்தையைத் தேடுவார்களென்பதும், அப்படியும் அதைக் காணத் தவறிடுவர் என்பதும் அப்படியே நிறைவேற்றியிருக்கிறது. ஓ தேவனே, நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம்; ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் அவரைக் கண்டு கொண்ட தாலும், அது எங்களுடைய இருதயத்திற்கு விலையேறப் பெற்றதாக இருப்பதாலும், நாங்கள் ஒரு சிறிதளவுகூட குழம்பியிருக்கவில்லை என்பதைக் காணவும், நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களா யிருக்கிறோம்.
30 ஓ தேவனே, "தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கெண்டு, மகத்தான காரியங்களைச் செய்வார்கள்'' என்று நீர் கூறினீர். நாங்கள் இந்தக் கடைசி நாட்களில் இருந்து கொண்டு, இன்னின்ன காரியங்கள் இக்காலத்தில் சம்பவிக்கும் என்று இயேசுவானவர் முன்னுரைத்த காரியங்கள் எங்கள் மத்தியில் வந்து நிறைவேறி, பிரத்தியட்சமானயாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அவர் செய்த வண்ணமாகவே, அதே அடையாளங்கள், அற்புதங்கள், அதிசயங்கள், நிகழ்த்தப் படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "சோதோமின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய வருகையிலும் நடக்கும்'' என்று அவர் கூறியது போலவே இருக்கிறது.
கர்த்தாவே, நீர் பரிசுத்த ஆவியினாலே, உம்முடைய வார்த்தையில் சேர்ந்து, அதிலிருந்து உண்மையான காரியங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவைகளை வார்த்தையைக் கொண்டு கல்வாரியோடு இணைத்துப் பார்க்கும்படி எங்களுக்கு செய்து, அவரில் எங்களுக்கு பரிபூரணம் இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளச் செய்திருக்கிறீர். செல்வங்களும், ஆசீர்வா தங்களும், மகிமையும், எல்லாம், அவற்றைப் பெற்றுக் கொள்ள பாத்திரராயிருக்கிற அவருக்கே போகிறது. அவர் உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்டிருக்கிறபடியால், பாத்திரராயிருந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்தில் இருந்த புத்தகத்தை எடுத்துக் கொள்ள வருகிறார், அவர் தாமே சிங்காசனத்தில் வீற்றார்.
பிதாவே, அவரைக் குறித்து இன்று காலையில் நாங்கள் பேசு கிறோம். நீர் எங்கள் இருதயங்களை, ஆசீர்வதிக்க வேண்டுமென ஜெபிக்கிறோம். அவரது ஆவி எங்கள் மத்தியில் அசைவாடி எங்களை ஆசீர்வதித்து, எங்களுடைய அனுபவத்தை உயர் தரமுள்ள தாக, ஜெயங்கொள்ளுகிறதற்கான கிருபையை அளிப்பதாக.
மேலும் தேவனே, சத்தருவை எதிர்கொள்ள தூரத்திலுள்ள ஊழியக்களங்களுக்கு நான் புறப்பட்டுச் செல்லுகையில், ஜெபம் என்னும் பாதுகாப்பு அரண் ஒவ்வொரு நேரமும் என்னை பாது காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நான் உணருவேனாக. ஓ எவ்வளவாய் நான் அந்த பாதுகாப்பு அரணை நம்பியிருக்கிறேன்; சத்துரு அணுகும் வேளையிலெல்லாம் ஜெபமாகிய பாதுகாப்பு அரண்தான் தடுத்து நிறுத்துகிறது; ஏனெனில்; மறுபடியும் பிறந்த அனுபவத்தையுடைய , பரலோகத்திற்கு பயணம் செய்துகொண் டிருக்கிற கிறிஸ்தவர்களாகிய தாய்மார்களும், தந்தையர்களும், வாலிபரும், வாலிபப்பெண்களும், தங்கள் முழங்கால்களில் நின்று, "தேவனே, விடுதலையை அளியும்'' என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். பிதாவே, நாங்கள் சத்தருவினுடைய வரிசைகளுக்குள் பிரவேசித்து, அங்கே காத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு விலையேறப் பெற்ற ஆத்துமாவையும் ஜெயிக்கத் தக்கதாக நீர் எங்களுக்கு உதவிட வேண்டுமென ஜெபிக்கிறோம். அவ்வாறு செய்யும், கர்த்தாவே, அவர்களை இருளினின்றும் வெளியே கொண்டு வந்து, ஒளியினுள் பிரவேசிக்கச் செய்தருளும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென்.
31 இப்பொழுது, வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரம். நாம் 3ம் அதிகாரத்தை முடித்துவிட்டோம்; நாம் பயபக்தியுடன் இருப்போம்; நான் உங்களை அதிக நேரம் இங்கே வைத்துக் கொண் டிருக்கமாட்டேன். ஆனால் இந்த 3ம் அதிகாரத்தில் யோவான் மேலே எடுக்கப்பட்டபோது, அது சபை எடுக்கப்படுதலுக்கு முன்னடையாளமாகத் திகழ்ந்தது. சபையானது மேலே எடுக்கப் பட்ட முதற்கொண்டு, திரும்பி வருகிறவரையிலும் நடப்பவை யெல்லாம் இஸ்ரவேல் சம்மந்தமாகவே இருக்கின்றன. அது எவ்வாறு இருக்கிறது என்பதை நீங்கள் காணவில்லையா? இன்றைக்கு இருக்கிற மக்கள் எப்படியிருக்கிறார்களென்றால், மகத்தான ஒரு காரியம் முழு உலகையும் அசைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். அது வேதவாக்கியங்களுக்கெதிரான ஒன்றாகும் அப்படி இருக்காது, ஐயா. நடைபெற வேண்டிய சம்ப வங்களின் வரிசையில் ஒழுங்கில், அடுத்தபடியாக சபையானது எடுக்கப்படுதல்தான். சபைக் காலங்கள் புஸ்தகத்தில் அதைப் பற்றி வாசித்து அறிந்து கொள்க.
32 இப்பொழுது, நடைபெற வேண்டிய ஏனைய காரியங்களெல் லாம், சபையானது மகிமையில் இருக்கையில் நடைபெறும் விவாக நிகழ்ச்சியின்போது உள்ளவையாகும். தேவன் திரும்பி வருகிறார். அப்பொழுது யூதர்களால் மகத்தான அற்புதங்கள், சர்வதேச அதிசயங்கள் நிகழ்த்தப்படும், அது சபைக்கு நடக்கப் போகிற காரியமாக இருக்காது.
3ம் அதிகாரம், சபைக்காலத்தை முடித்து வைக்கிறது. சபைக்காலமானது, நாம் காண்கிறபடி, மிகச்சிறிய சிறுபான்மை யினரோடு முடிவடைகிறது. இங்கே சற்று கவனியுங்கள். வெளிப் படுத்தினே விசேஷம் 3ம் அதிகாரம் 20ம் வசனம் முதல் 22ம் வசனம் முடிய உள்ள வசனங்களில், சபைக்காலத்தின் முடிவில் கிறிஸ்து இருக்கிற இடத்தையும், அவரது மனப்பான்மையையும் குறித்துக் கூறுகிறவைகளை நான் இன்று காலையில் மீண்டும் படித்தபோது, அது என்னை ஏறக்குறைய மிகவும் நொறுக்கியது. அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள், முடிவுக்காலத்தில் கிறிஸ்து எங்கே இருக்கிறார் என்பதை. சபைக்காலங்களின் முடிவில் அவர் எங்கே இருக்கிறார்? அவர் தன் சபையை விட்டு வெளியே இருக்கிறார்; மத ஸ்தாபனங்களாலும் மதக் கோட்பாடு களாலும் அவர் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். அவரது மனோபாவம் எப்ப டியுள்ளது? மீண்டும் உள்ளே பிரவேசிக்க முயன்று கொண்டிருக் கிறார். அது மிகவும் பரிதாபகரமானதொரு நிலையாகும்.
33 பிறகு, நாம் இங்கே, "இவைகளுக்குப் பின்பு அவனோடு பேசுகிற ஒரு சத்தத்தை அவன் கேட்டான் என்பதை நாம் இங்கே காண்கிறோம். அது என்னவாயிருக்கிறது? ஆவியானவர் பூமியை விட்டு கிளம்பிப்போய்விட்டார். முதலாம் வசனத்தில் "இவைக ளுக்குப் பின்பு" என்ற வாக்கியத்தோடு வசனம் ஆரம்பிக்கிறது. "இவைகளுக்குப் பின்பு, இதோ பரலோகத்தில் திறக்கப் பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன்…"
வெளி. 4:1
வெளிப்படுத்தின விசேஷம் 4:1-சபையானது போய்விட்ட பிறகு, ஒரு வாசலானது திறக்கப்பட்டது. நாம் அதைப்பற்றி யெல்லாம் பார்த்து, அது கிறிஸ்துதான் என்பதையும் கண்டு கொண்டோம். கிறிஸ்துவே அந்த வாசலாயிருக்கிறார் என்பதைக் கண்டோம். ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தவருடைய அதே சத்தத்தைத்தான், "இங்கே ஏறி வா" என்ற சத்தத்தை பரலோகத்திலிருந்து கேட்ட பொழுதும், அவன் கேட்டான். யோவான் மேலே ஏறிப்போனான். அச்சம்பவம், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலில் மேலே ஏறிப்போவ தற்கு முன்னடையாளமாயிருந்தது.
யோவான் ஆவிக்குள்ளானான். அவன் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவன் வாக்குத்தத்தம் செய்து, "நான் வருமளவும் அவனிருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன" என்று சீஷர்களிடம் அவர் கூறிய பிரகாரமாக, எல்லா காரியங் களையும் அவன் முன்கூட்டியே கண்டான். அவன் பூமியிலிருக்கை யில், சபையின் எடுத்துக்கொள்ளப்படுதல் வரைக்கிலும் பூமியில் என்ன சம்பவிக்கும் என்பதைக் கண்டான். பின்பு அவன் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஆயிர வருட அரசாட்சிக்கு பிறகும் நடக் கப்போகிறவைகளையெல்லாம்கூட அவன் கண்டான். ஓ, அது அற்புதமாயிருக்கவில்லையா?
34 நாம் கடந்த ஞாயிறன்று, வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரம் 4ம் வசனத்தில் அவனை விட்டுவிட்டு வந்தோம்.
''அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங் களிருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந் தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்."
வெளி.4:4.)
இவர்களெல்லாம் மூப்பர்கள் என்பதை நாம் பார்த்தோம். மூப்பர் என்னும் சொல் ஒருபோதும் ஒரு தூதனையோ அல்லது வேறு எந்த ஜீவ ராசியையோ குறிக்காது. மூப்பர்கள் என்பது மீட்கப்பட்ட மானிட வர்க்கத்தையே குறிக்கும். ஏனெனில் அவர்… சிங்காசனங்களும், கிரீடங்களும், ஆளுகைகளும் ஒருபோதும் தூதர்களுக்கு சம்மந்தமுள்ளதல்ல. ஆனால் கிரீடங்க ளும், சிங்காசனங்களும் மானிட வர்க்கத்திற்கு சம்பந்தமுள்ள தாகவே உள்ளன. இம்மூப்பர்கள் கிரீடமணிந்து, வெண்வஸ்திரந் தரித்தவர்களாய், சிங்காசனங்களில் வீற்றிருந்தார்கள். மற்ற வேத வாக்கியங்களில் அவர்கள் பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும், பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் குறிக்கும் என்பதாகக் கண்டோம். அவர்கள் இருபத்து நான்கு பேர்கள். அதாவது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், பன்னிரண்டு கோத்திரப் பிதாக்களுமாவர்.
35 பரலோகத்தினின்று தேவனிடத்திலிருந்து இறங்கி வருகிற நகரத்தையும் குறித்து நாம் கண்டோம். பூமியானது வெடித்து தூள் தூளாக ஆனபிறகு, பூமியில் எரிமலை வெடிப்பில் உண்டாகும் சாம்பலைத் தவிர வேறு எதுவும் இருக்காது; அதுதான் மீதமாயிருக்கும் இப்பூமியில்; இனிமேல் சமுத்திரமும் இருக்காது. சமுத்திரம் வறண்டு போகும்.
நான் நேற்றிரவில் யாரோ ஒருவரிடம், எவ்வாறு பூமியானது ஒரு காலத்தில் காணப்பட்டது என்பதைப் பற்றி பேசிக்கொண் டிருந்தேன். அது சூரியனைச் சுற்றி இருந்துகொண்டிருக்க, பூமியில் எப்பகுதியிலும் ஒரே சமமான உஷ்ணமானது காணப்பட்டது; பிரிட்டிஷ் பனிக்கண்டத்தில் நீங்கள் 500 அடி ஆழத்திற்கு வெடிப்பினால் ஆழப்படுத்தி காண்பீர்களானால், அங்கே ஈச்ச மரங்களைக் காணலாம். குளிர்சாதனம் செய்வதுபோல் திடீரென அந்நிலை தோன்றி, அவற்றை உறையச் செய்துவிட்டது. உங்க ளுடைய , நீரை வற்றச் செய்யும் சாதனம்போல; மிகுகுளிர்பதன சாதனங்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பாதுகாத்து அநேக ஆண்டுகாலம் வைத்திருப்பது போல், பனிக்கண்டங்கள் தோன்றி அவ்வாறு செய்தன. அதேவிதமாகத்தான் அக்காலத்தில் ஏற் பட்டது. ஜலப்பிரளய காலத்திற்கு முந்தின காலத்தில் ஒரு அழி வானது ஏற்பட்டு, அது பூமி முழுவதிலும் ஜலப்பிரளயத்தை ஏற்படுத்தியது. அப்படி காரியம் சம்பவித்தபொழுது, அணுசக்தி விசையானது வெடித்து, பூமியை அதனுடைய சுற்றுப் பாதையி லிருந்து விலகும்படி செய்தது, அப்பொழுது அது உறை நிலைக்குப் போய், அங்கே அவ்வாறு அமைந்துவிட்டது. துருவப் பிரதேசங் களில் ஆழமாகத் தோண்டிப் பார்த்தால், பனை ஈச்ச மரங்களையும் மற்றும் இன்னபிறவற்றையும் நீங்கள் அங்கே காணலாம். ஒரு காலத்தில் அது மிகவும் அழகான முறையில் குடியிருக்கப் பெற்றிருந்தது என்பதை காண்பிக்கிறது. ஆனால் இப்பொழுதோ அது நிலைகுலைந்து போயுள்ளது.
36 ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் "பூமியானது ஒழுங் கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, ஆழத்தின்மேல் தண்ணீர் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார், 'வெளிச்சம் உண்டாகக்கடவது' என்றார்'' என்று தொடங்குகிற இடத்தை வாசிக்கையில், தேவன் எவ்வாறு தண்ணீரை எங்கிருந்து உண்டாக்கினார் என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன். தேவன் அப்பொழுது தண்ணீரையும் வெட்டாந்தரையையும் வெவ்வேறாகப்பிரித்தார். வெட்டாந்தரையே பூமியாயிற்று. ஆனால் முழு பூமியும் சுற்றிலும் மூடப்பட்டிருந்தது. அவர் என்ன செய்தாரெனில் … வளி மண்டலத்தின் மூலமாக, அவர்… வளிமண்டலமானது ஹைட்ரஜனாலும் (ஜலவாயு - மொழிபெயர்ப்பாளர்) ஆக்ஸிஜனாலும் (பிராண வாயு - மொழி பெயர்ப்பாளர்) மற்றும் இன்னபிறவற்றாலும் நிரம்பியிருப்பதாக இருக்கிறது. தேவன் அதை பூமியைவிட்டு மேலே எடுத்து, அதைப் பிரித்தார். அப்பொழுது பூமியில் சமுத்திரம் இல்லாமல் இருந்தது. தேவன் பூமிக்கு நீரிறைத்தார். அப்பொழுது மழையே பெய்ய வில்லை. அவர் ஊற்றுக் கண்களைக்கொண்டு பூமிக்கு நீர்ப்பாசனம் உண்டாகச் செய்தார். அப்பொழுது அவர் செய்த ஒரே காரியம்…
மனிதன் பூமியை அதன் சுற்றுப் பாதையை விட்டு விலகும்படி செய்தபோது, என்ன நடந்தது? அப்பொழுது உஷ்ணப்பகுதி அந்தப் பக்கமும், குளிர்ப்பகுதி இந்தப் பக்கமுமாக இடம் மாறியது. உஷ்ணமும் குளிரும் எதைக் குறிக்கிறது? இப்பொழுது அங்கே ஜன்னல்கள் வழியாக வெளியே குளிராகவும், உள்ளே உஷ்ணமாயும் இருப்பதை உணர்ந்து பாருங்கள். வியர்வையைப் பாருங்கள்? மழையானது வியர் வையைத் தவிர வேறொன்று மில்லை; அது வியர்த்தல்தான். தண்ணீ ரானது சாம்பலாய் இருக்கிறது. எனவே, அது ….
37 அப்பாடலை நான் விரும்புகிறேன். விலையேறப்பெற்ற கர்த்தாவே, நீர் புல்வெளியின்மேல்
உமது கரத்தை வைத்தீர் நீர் உமது கரத்தை மேய்ச்சல் நிலத்தில் வைத்தீர், கர்த்தாவே நீர் நீரூற்றை ஊற்றினீர், மலையை எழுப்பினீர் ஓ! கர்த்தாவே நீர் உமது கரத்தை என் மேல் வைத்தருளும், நீர் மேகங்களை உண்டாக்கினீர், மழையைத் தரும்
மேகத்தை உருவாக்கினீர், நீர் எங்களுக்கு பரிபூரண ஜீவனை கொடுப்பதற்காக; நீர் பூமியையும், வானங்களையும் உம்முடைய அதிகாரத்தில்
வைத்திருக்கிறீர், கர்த்தாவே. ஓ, உமது விலையேறப்பெற்ற கரத்தை என்மேல் தயவுகூர்ந்து வைத்தருளும்.
(ஓ நீர் எவ்வளவாய் மகத்துவமுள்ளவராய் இருக்கிறீர்! ஆம், பரலோகத்தின் தேவன்).
38 பிறகு இந்த மகத்தான வேளையில், அது இப்பொழுது, இவ்விதமாக சார்ந்து கொண்டு இருக்கிறது. அவர் நமக்கு ஒரு வாக்குத்தத்தத்தை கொடுத்தார். "இனிமேல் தண்ணீரினால் அல்ல, நெருப்பினால்தான் இத்தடவை அழிவு" என்றார். அவர்கள் பூமியை சூரியனைவிட்டு அகற்றிவிட்டனர். அதனால் அது குளிர்ந்து போயிற்று. நீங்கள் அதை சூரியனிடம் எறிந்துவிட்டால், அது எரிந்து போகும். அவர் முன்பு தண்ணீரினால் அழித்து, வானத்தில் வானவில்லை வைத்ததுபோல, இனிமேல் அவர் செய்யமாட்டார். இப்பொழுது, அவர் பூமியை நெருப்பினால் சுட்டெரிக்கப் போவதாக வாக்குரைத்திருக்கிறார். அங்கேதான் பாவமும், எல்லா கவர்ச்சியும், அனைத்து அசுத்தமும் அழியும், அவ்விடத்திற்குத்தான் நீங்கள் வருகிறீர்கள்.
39 சமீபத்தில் நான் புல்வெளிகள் வழியாக குதிரையில் சவாரி செய்து போய்க்கொண்டிருந்தேன். நான் சிறுவனாயிருந்தபோது, என்னுடைய சரித்திரப் புத்தகங்களையும், புவியியல் புத்தகங்களை யும் எடுத்து வைத்துக்கொண்டு, மேற்கத்திய சமவெளிகளைப் பற்றி சிந்திப்பதுண்டு. நான் எனக்குள், 'ஒரு நாள், நான் அப்பிரதே சத்தில், பாவமில்லாத அவ்விடத்தில், அமைதியாகவும், சமாதான மாகவும் வாழ்வேன், அங்கே நான் இந்தியரைப்போல (செவ்விந் தியரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் - மொழிபெயர்ப்பாளர்) நான் அவ்வெளிகளில் அலைந்து திரிந்து, வேட்டையாடுவேன். நான் அங்கே வாழ்நாள் முழுவதும் சமாதானமான வாழ்க்கை வாழ் வேன்'' என்று கூறுவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ, அங்கே வெள்ளையன் குடியேறிவிட்டான். வெள்ளையன் எங்கேயெல்லாம் போகிறானோ, அங்கெல்லாம் அவனோடு பாவமும் போகிறது. இப்பூமியிலேயே மக்களையெல்லாம் கொன்று குவித்தபெரிய கொலைகாரன் அவன்தான். எல்லா நிறத்தவரிலும் அவனே துரோகியாக இருக்கிறான்.
40 சமீபத்தில் பத்திரிக்கையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு விஷயத்தை நான் படித்தேன். (சகோதரன் டாம் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கிறார்.) அதில் கூறப்பட்டுள்ளது என்னவெனில்: ''அமெரிக்கர்கள் இன்னமும் தொடர்ந்து ஆப்பி ரிக்காவுக்கு போக அனுமதிக்கப்பட்டார்களெனில், இப்பொழுதி லிருந்து பத்து ஆண்டுகளில் பெரிய ஆப்பிரிக்க சிங்கங்கள் மற்றும் யானைகள் முற்றும் ஒழிந்துபோய்விடும்.'' இந்த துரோகிகள் கண்ட கண்ட இடத்திலெல்லாம் சுடுகிறார்கள். இரண்டு பெரிய ஆண் சிங்கங்கள் காயமடைந்த இன்னொரு பெண் சிங்கத்தை தூக்கி நிறுத்த முற்படுகின்ற படத்தை நான் பார்த்தேன். அவைகளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. பெண் சிங்கங்கள் இறப்பதை ஆண் சிங்கங்கள் விரும்புவதில்லை. அப்பெண் சிங்கத்தை தரையில் விழுந்துவிடாமல் தூக்கி நிறுத்திய வாறு இரு பக்கங்களிலும் அவைகள் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றன. அது குண்டுக்காயம் பட்டு சிதறிப்போ யிருந்தது. எதையும் அந்தவிதமாக சுடுகிற ஒருவனுடைய கையில் ஒரு துப்பாக்கியை வைத்திருக்க அவனுக்கு தகுதியில்லை. அதைக் கையாள போதுமான விவேகம் அவனுக்கு இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என்னுடைய நல்ல நண்பர் ராய் ராபர்சன் நிலத்தில் சில மரை மான்களின் மந்தையை கூட்டிச் சேர்க்க முயற்சித்தேன். கொலரேடோவில் நான் அவைகளை வழி நடத்திக்கொண்டிருந்தேன். அங்கே எங்களுக்கு அருமையான மந்தை உண்டாயிருந்தது. ஜெஃப்புக்கும் எனக்கும் அநேக ஆண்டுகளாக அவைகள் உண்டாயிருந்தன. ஏறத்தாழ எண்பது மரைகள் அங்கேயிருந்தன. டென்வரிலிருந்து சில அதிகாரிகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் உள்ளே விட்டு விட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். அவர்கள் தொளதொளவென்று தைக்கப்பட்டிருக்கும் நீளமான கால் சட்டைகளையும் காலில் பின்னல் வேலையான உறையையும் அணிந்து கொண்டு ஜீப்புகளில் ஒரு குழுவானது வந்திறங்கியது. இவர்களெல்லாம் வேட்டையாடுபவர்கள்? ஊ! அவர்கள் எங்கள் பிரதேசத்தில் நுழைந்து விட்டார்கள்.
41 நான் இந்த மரை மந்தையை மலையின் மேல் அவைகளின் பின்னால் இருந்து ஓட்டிச் சென்று கொண்டிருந்தேன். (மரை என்பது ஒருவகை காட்டுமான் - மொழிபெயர்ப்பாளர்). அவைகள் வழி நெடுக மேய்ந்து கொண்டிருந்தன. வயதான பெரிய எருதுகள் மற்றும் இன்னபிறவற்றின் மந்தையை நெருக்கலாக வைத்திராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாவிடில் மந்தையை நீங்கள் உடைந்துபோகப் பண்ணுவீர்கள். மாட்டு மந்தையை வளர்ப்பது போல் இவைகளும். வனவிலங்கும் அதேபோல்தான் நமக்கு இருக்கின்றன. இப்படிப்பட்டவைகள் வேட்டையாடுவதற் குரிய இலக்கு அல்ல. நீங்கள் வேட்டையாடுவதற்கான இலக்கு வேண்டுமெனில் அதற்கென காடு உள்ளது. இவ்விதமான பிராணிகளை வெட்டிச் சாய்ப்பது அவமானகரமான செயலாகும். அது பாவகரமானதும், தேவபக்திக்குரியதல்லாத செயலுமாகும்.
42 அம்மனிதர்கள் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு நூற்று இருபத்து மூன்று குண்டுகள் சுட்டதை நான் எண்ணினேன். தங்கள் தோள்களில் வைத்துக்கொண்டு சுட்டார்கள் போலும், அடுத்த நாள் காலையில் என்னுடன் இருந்த சகோதரன் பாங்க்ஸ் வுட் அவர்களோடு மலையின் மேல் ஏறிப்போய், இரத்தம் தோய்ந்த பத்தொன்பது படுகைகளை கண்டு எண்ணினோம். அவர்களுக்கு வேட்டையாடுதலைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பெரியதொரு விலங்கை நீங்கள் அவ்வாறு சுடலாம், அதைக்கொல்வதற்காக அவ்வளவு தீவிரமாக சுடலாம். அவர்கள் கட்டு மீறிப்போய் "பேங், பேங், பேங்' என்று ஒவ்வொன்றாக சுட்டனர். அவைகள் மரித்துவிடும். சுரம் அவைகளைப் பீடித்ததெனில், அவ்வளவுதான், நீங்கள் அவைகளைக் கண்டால் அவைகளால் உங்களுக்குப் பயனில்லை. அவைகள் அப்பொழுதே கெட்டுப்போய்விடும். அழுகிய பிணங்களைத் தின்று வாழும் விலங்குகளும், ஓநாய்களும் அவைகளைத் தின்றுபோடும். அத்துப்பாக்கிகளினால் சுடப்பட்டு குண்டு துளைக்கப்பட்டு, இரத்தமானது இரண்டு அடி உயரத்திற்கு பீறிட்டு வந்து, பெரிய குளம்புகளையுடைய அக்காட்டு மாடுகள் கொல்லப்பட்டு, அங்கே பத்தொன்பது படுகைகள் காணப் பட்டன. அவ்விதமான போக்கிரிகளை தங்கள் கையில் துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள அனுமதிக்கவே கூடாது. அவனுக்கு ஒரு துப்பாக்கியைக் கையாள்வதற்கான அறிவே இல்லை. அவ்விதமாக காட்டுமிராண்டித்தனமாக விலங்குகளைக் கொன்றுகுவிப்பது பயங்கரமானதாகும், அவ்வாறு செய்வது பாவமான செயலாகும்.
43 அது பயங்கரமான செயலாகும். ஆனால் அமெரிக்காவின் செயல் அப்படித்தான் இருக்கும். கனடா தேசமே, கனடா தேசத்திலிருந்து உள்ள விலையேறப்பெற்ற மக்களே! அமெரிக்கர் அங்கு போய்க்கொண்டேயிருந்தால், கனடாவும் அமெரிக்காவைப் போல் சிறிது காலத்தில், கீழ்த்தரமாகப் போய்விடும். கனடாவின் எல்லைகள் நெடுகிலும் போய்ப்பாருங்கள். அங்கே நீங்கள் அமெரிக்க சூழ்நிலையையே காண்பீர்கள். இந்த அமெரிக்க தேசமானது நாடுகளுக்கெல்லாம் வேசியாயிருக்கிறது. அவ்வாறு தான் அவள் இருக்கிறாள். இப்பொழுது இருக்கிறதை விட இன்னும் மோசமாக அவள் ஆகப்போகிறாள். அவள் தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறாள். வேதாகமம் அவள் தனது அழிவை அடையப்போகிறதைப் பற்றிக் கூறுகிறது. அவள் எவ்வாறு இருக்கப் போகிறான் என்பதைப் பற்றி பேசுகிறது. அமெரிக்கர்; கீழ்த்தரமாகவும், அழுகிப்போனதாகவும், அசுத்தமானதாகவும், பொல்லாததாகவும் காணப்படுகிறாள். சரியாக அப்படியே அவள் இருக்கிறாள். அவள் ஒரு காலத்தில் மகத்தான தேசமாக இருந்தாள். அவள் சுவிசேஷ செய்தியை சுமந்துகொண்டு சென்றாள். அவள் இப்பொழுது இருக்கிற நிலைக்கு அவளை ஆளாக்கியது எது? ஏனெனில் அவள் சுவிசேஷ செய்தியை தள்ளிப் போட்டு, சத்தியத்தை நிராகரித்துவிட்டாள். அவள் பயங்கரமானவளாகி விட்டாள். அவள் தன் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறாள்; அதைப்பற்றி நீங்கள் விசனமடைய வேண்டாம், நான் அதைப்பற்றி தரிசனத்தில் கண்டேன். அது "கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்" என்பதாக இருக்கிறது. அது வருகிறது. அவள் தன் பாவத்திற்குத்தக்கதாக செலுத்தித் தீர்க்கப்போகிறாள்.
அமெரிக்கா முன்பு அமெரிக்காவாக இருந்தபோது, அவள் ஒரு மகத்தான தேசமாக இருந்தாள். இஸ்ரவேலின் நாட்கள் முதற்கொண்டு, உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்ற தேசமாக விளங்கியது அமெரிக்காதான். ஆனால் அவளோ இப்பொழுது தன்னை அசுசிப்படுத்திக்கொண்டுவிட்டாள். அவள் செய்தியைப் புறக்கணித்துவிட்டாள். அவள் எதைத் தெரிந்து கொண்டாள்? அவள் இப்பொழுது… அப்படிப்பட்ட நிலையை அடைந்து விட்டாள். அவள் இப்பொழுது எந்த நிலையில் இருந்து கொண் டிருக்கிறாள் என்பதை நீங்கள் காணலாம். அதை யாவரும் அறிவர். கடந்த தேர்தலில் அவளது ஆவிக்குரிய நிலையானது எப்படி யிருக்கிறது என்பதை காண்பித்துவிட்டாள். ஊ - ஊ, அவள் அறியாமல் இருக்கிறாள்.
44 இங்கே இந்த மூப்பர்கள் சிங்காசனங்களின் மேல் தங்கள் தலையில் கிரீடமணிந்தவர்களாய் வீற்றிருக்கிறார்கள். 5ம் வசனத்திலிருந்து நாம் ஆரம்பிக்கப் போகிறோம்.
"அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடி முழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன".
வெளி. 4:5
ஓ, நான் இதை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? எனது மேற்சட்டை எனக்கு பொருத்தமாக இருப்பது போல் உணருகிறேன். நான் ஆவிக்குரிய மேற்சட்டையைக் குறித்துக் கூறுகிறேன். நீங்கள் அதை அறிவீர்கள்.
'சிங்காசனத்திலிருந்து இப்பொழுது நாம் இந்த சிங்காசனத்தைக் குறித்து சில நிமிடங்கள் பேசுவோமாக. இது இரக்கத்தின் சிங்காசனமல்ல; இரக்கத்தின் சிங்காசனத்தின் வேளை முடிந்துவிட்டது. இனிமேல் இரக்கம் இல்லை. அச்சிங்காசனத்தில் இரக்கம் இல்லை. நாம் என்ன செய்ய போகிறோம்… நியாயாசனம் எவ்வாறு கிறிஸ்துவின் நியாயாசனமாக ஆகப்போகிறது? எவ்வாறு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு ஆசனமாக ஆகப் போகிறது? அப்பொழுது அதில் இரக்கம் இருக்குமா? அங்கே ஒரு துளி இரக்கமும் இருக்கப்போவதில்லை. நியாயாசனத் தண்டையில் நீங்கள் இரக்கம் வேண்டும் என்று கதறும் போது, இனிமேல் கதறவே முடியாது என்ற அளவுக்கு கதறின போதிலும் அங்கே கொஞ்சம்கூட இரக்கம் இராது போய்விடும். நீங்கள் ஆகாயத்தில் கத்தித் தீருமட்டும் கதறுவீர்கள், ஏனெனில் அங்கே இரக்கமே இராதுபோகும்.
45 இப்பொழுதே இரக்கத்தின் நாள் உள்ளது. இப்பொழுது நாம் பழைய ஏற்பாட்டில் சிறிது திரும்பிப்போய், இரக்கமானது என்ன என்பதை நாம் அங்கே காண்போம். திரும்பிப்போய், இந்த சிங்காசனத்திற்கு என்ன நேர்ந்தது என்பதைப் பார்ப்போம். இந்த சிங்காசனம் உண்மையிலேயே நியாயத்தீர்ப்பு ஆசனம்தான். இன்றைக்கு இரக்கம் இருப்பதின் காரணம் என்னவெனில், பாவப்பிராயச்சித்த இரத்தத்தால் கிருபாசமானது தெளிக்கப்பட்டி ருக்கிறது. நியாயாசனத்தின் மீது அந்த இரக்கமானது இருக்கிற வரையிலும் அது நியாயாசனமாக விளங்காது, அது இரக்காசன மாகவே இருக்கிறது. ஏனெனில் நியாயத்தீர்ப்பினின்று காக்கும் படி ஒருவர் மரித்திருக்கிறார். அதை நீங்கள் கண்டுணர்ந்தீர் களெனில், 'ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி). கிருபாசனத்தின் மீது இரத்தமானது காணப்படுகிற வரையிலும், நியாயத்தீர்ப்பை தடுத்து நிறுத்துவதற்காக ஒருவர் மரித்துள்ளார் என்பதை அது காட்டுகிறது. ஆனால் சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் பொழுது, கிருபாசமானது நியாயாசனமாக ஆகிவிடுகிறது.
46 இங்கே புதிய ஏற்பாட்டிலுங்கூட, பரிசுத்த ஸ்தலத்தில் நியாயாதிபதி தன் ஆசனத்தில் வீற்றிருக்கிறார். பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் அந்த நியாயாசனம் முழுவதும் புகையால் நிறைந்தது. அது என்னவாயிருக்கிறது? சீனாய் பர்வதத்தில் இருந்த நியாயத் தீர்ப்பு ஆசனத்தைப்போல் அது உள்ளது. தேவனுடைய சிங்கா சனத்தைவிட்டு இரக்கமானது அகன்றுவிட்டது. இரக்கமில்லாமல் தேவன் உலகை நியாயந்தீர்ப்பார். அதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்?
அந்நாளில் அவர் அங்கீகரிக்கும் காரியம் ஒன்றேயொன்று தான் உண்டு. அது என்ன? அதுதான் இரத்தம். கோபமுள்ள தேவனை சாந்தப்படுத்துவது இரத்தம் ஒன்றுதான்.
47 ஆதாமும் ஏவாளும் தங்கள் நிர்வாணத்தை மூடிட, எந்தவொரு மெதோடிஸ்ட்டும், பாப்டிஸ்ட்டும், ப்ரெஸ்பிடேரி யனும் அல்லது பெந்தெகொஸ்தேகாரரும் செய்ய முடிந்திருக்கிற அளவுக்கு, ஒரு ஆடையைத் தயாரித்தார்கள். ஆனால் பார்க்கக் கூடாதபடி தேவனுடைய பார்வையை அவ்வாடை மறைக்க முடியாது. எனவே, அவர் ஒரு மிருகத்தைக்கொன்று, இறந்து போன மிருகத்தின் தோலை எடுத்து அவர்களுக்கு மூடுவித்தார். இரத்தமானது அந்த ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதா யிற்று. அதுவே அவருடைய கோபத்தை தடுத்து நிறுத்தியது. ஏனெனில் ஒன்று தனது ஜீவனை கொடுத்திருக்கிறது. ஓ தேவனே!
அதைப்பற்றி எண்ணிப் பாருங்கள் ! தேவனைத் தடுத்து நிறுத்துவது இரத்தம் மாத்திரமே. தேவன் ஒரே ஒரு இரத்தத்தைப் பார்த்தால்தான் நியாயத்தீர்ப்புக்கு கை நீட்டாமல் நிற்பார், அது அவருடைய சொந்தக் குமாரனின் இரத்தமே. அது அவருடைய சொந்த குமாரனின் இரத்தம்தான் என்பதை அவர் காண்கிற பொழுது, நியாயந்தீர்க்க முன்வரமாட்டார். ஏனெனில் தேவன் தமது குமாரனுக்கு அளித்த ஈவாகும் அது; தாம் உலகத்தோற்ற முன் தெரிந்து கொண்டவர்களை மீட்பதற்காக அவருக்கு அவர் அளித்த ஈவாகும். அதுவே தேவனை நியாயாசனத்தில் இருந்து திரும்பக் கொண்டுவருகிறது. ஆனால் அந்த இரத்தமானது நீக்கப் பட்ட பிறகு, முன்னறிந்துகொள்ளப்பட்டவர்கள் யாவரும் விலை யேறப்பெற்ற அவருடைய சரீரத்தினுள் வந்து சேர்ந்து கொள்வதற் காக அழைக்கப்பட்டு, அவருடைய சபையானது ஆயத்தப்பட்டு, எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, அப்பொழுது ஜனங்களின் மேல் தேவனுடைய கோபாக்கினையானது வருகிறது.
48 ஒருபோதும் அவ்விடத்தில் நிற்க விரும்பாதீர்கள். ஓ, சகோதரனே! நான் ஒரு இயந்திரத் துப்பாக்கி முன் நின்று, நான் துண்டு துண்டாக சுட்டுக்கொல்லப்பட்டாலும் பரவாயில்லை; நான் அங்குலம் அங்குலமாக அறுக்கப்படட்டும், பரவாயில்லை; எனக்கு என்ன வேண்டுமானாலும் சம்பவிக்கட்டும். கொலம்பஸ் துறவிகளின் சபதத்தைப்போல் … (நைட்ஸ் ஆஃப் கொலம்பஸ் Knighs of Columbus என்பது, ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தில் 1882ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு சர்வதேச சங்கமாகும் இது - மொழிபெயர்ப்பாளர்). அவர்கள் எனது வயிற்றை அறுத்து திறந்து என்னிலுள்ள கந்தகம் மற்றும் இன்னபிற இரசாயனங்களை யெல்லாம் சுட்டெரிக்கட்டும், எனது கரங்களும், கைகளும் துண்டாக்கப்படட்டும், எனக்கு என்ன நேரிட்டாலும் சரி, ஆனால் ஒருபோதும் தேவனுக்கு முன்பாக அந்த வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு முன்பாக நான் நிற்கவே வேண்டாம்.
ஓ, நான் இந்த சிறிய சிங்காசனத்தை கிறிஸ்துவின் ஆசனத்தண்டையில் எடுத்துக்கொண்டு போய், அவரது இரத்தத்தை ஏற்றுக்கொள்ளட்டும். கர்த்தாவே, நான் என் கையில் வேறெதுவும் என்னுடன் கொண்டுவரவில்லை. இயேசுவின் இரத்த ஊற்றைத்தவிர
(நான் அறிந்ததெல்லாம் அதைப்பற்றி மாத்திரமே) வேறே ஊற்றை நான் அறியேன், இதுவே எனது நம்பிக்கையும் ஆதரவும் இயேசுவின் இரத்தம் அன்றி வேறெ நம்பிக்கை
இல்லை .
49 எட்டி ப்ரூயிட் இவ்வாறு எழுதியதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தபோது, ஊக்கமான கிறிஸ்தவனாக இருந்தபோது, அவரது பாடல்களில் வாங்கிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. ''ஒருநாள் நான் ஒன்றை இயற்றுவேன், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்'' என்று கூறினார். மக்கள் பக்திப் பாடல்களை இன்னும் கூடுதலாக நவீன மான ஒன்றை விரும்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு நாளிலே ஆவியானவர் அவரை ஆட்கொண்டபோது, அவர் எழுதுகோலை எடுத்து பின்வருமாறு எழுதினார்.
எல்லாருக்கும் மா உன்னதர் கர்த்தாதி கர்த்தரே மெய்யான தேவ மனிதன் நீர் வாழ்க - இயேசுவே! நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறஸ்திபாரம் மணல்தான்.
வேறஸ்திபாரம் மணல்தான்.
சபையானாலும், நண்பனானாலும், சத்துருவானாலும், தேசமா னாலும், ஐசுவரியங்களானாலும், வறுமையானாலும், நன்மையா னாலும், அது என்னவாயிருந்தபோதிலும், வேறெந்த அஸ்திபார மும் சரியும் மணல்தான். அவை யாவும் ஒழிந்துபோக வேண்டியது தான். அதுதான் நடக்கும். ஆனால்: நான் நிற்கும் உறுதியான பாறை கிறிஸ்துதான் வேறெந்த அஸ்திபாரமும் சொரி மணல்தான் (அதை நினைவில் கொள்ளுவீர்)
50 வேதாகமத்தின் பின் பகுதியில் உள்ள லேவியராகமம் 16ம் அதிகாரத்திற்குப் போய் அங்கே லேவியருக்குரிய பிரமாணங் களிலே பார்ப்போமாக. லேவியராகமம் 16ம் அதிகாரம். 14ம் வசனத்தில் துவங்குவோம். இந்த காரியங்களின் பேரில் நான் எனது நேரத்தை எடுத்துக்கொண்டு, இவைகளை நான் பிரசங்கித்தாக வேண்டும். லேவியராகமம் 16:14.
பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின் மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து கிருபாசனத்துக்கு முன்பாக ஏழு தரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்
லேவி. 16:14
"கீழ்ப்புறமாக'' என்ற வார்த்தையை மறந்துவிட வேண்டாம். எத்திசையிலிருந்து இயேசு வருகிறார்? கிழக்கிலே, ஒரு மகிமையின் மேகத்திலே, சூரியன் (S-U-N) எத்திசையில் உதிக்கிறான்? கிழக்கு. குமாரன் (S-O-N) எத்திசையிலிருந்து உதிப்பார்? அதுவும் கிழக்கு. கிருபாசனமானது எத்திசையில் அமைந்திருந்தது? கிழக்கு நோக்கி. நான் ஏன் உங்களையெல்லாம் கிழக்கு நோக்கி அமரப் பண்ணியிருக்கிறேன்? ஏன்? பலிபீடம் கிழக்கு நோக்கியே உள்ளது. அது எவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது என்பதை சிறிது நேரத்தில் நாம் பார்ப்போம். அதை படமாக வரையப்போகிறேன். இந்த வரைப்படங்களை சில நிமிடங்களில் வரைந்து எடுத்துக்கொள்வதற்காக காகிதங்களைக் கொண்டுவரும்படி, எத்தனை பேர்களிடத்தில் சொல்ல முடியுமோ அத்தனை பேர்களிடத்தில் நான் கூறியுள்ளேன். நல்லது. "… கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல்
இரத்தத்தை ஏழு தரம் தெளிக்கக்கடவன்."
51 ஓ, இது மிகவும் அழகாக இருக்கவில்லையா? ''கிழக்கு நோக்கி ஏழு தரம்'. அது என்ன? ஏழு சபைக் காலங்கள் இரத்தத்தினால் மூடப்பட்டிருக்கும். அல்லேலூயா! இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது ஒவ்வொரு பாவியையும் இரட்சிக் கவும், ஒவ்வொரு வியாதியஸ்தரையும் குணமாக்கவும், ஒவ்வொரு அற்புதங்களையும் புரியவும், ஒவ்வொரு அடையா ளமும் நிறைவேறவும், எவ்வாறு கடந்த காலத்தில் போதுமானதாக இருந்ததோ, அதேபோல் இன்றும் என்றும், ஒவ்வொரு காலத்திலும் மிகவும் போதுமானதாக இருக்கிறது. கிறிஸ்து வருவதற்கு ஆயிரத்துத் தொளாயிரத்து தொண்ணூறு ஆண்டு களுக்கு முன்பாக வெகுகாலத்திற்கு முன்பாகவே, பழைய ஏற்பாட்டின் காலத்தில் "ஏழு தரம்' தெளிக்கப்பட்டது. அதைப் பற்றி எண்ணிப்பாருங்கள். ''ஏழு தரம்'' அடையாளச் சின்னம்.
''பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரண பலியான வெள்ளாட்டுக் கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தை திரைக்கு உட்புற மாகக் கொண்டு வந்து, காளையின் இரத்தத் தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத் தின் மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களு டைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ் செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்''
லேவி. 16:15-16
அது என்னவாயிருந்தது? 'கிருபாசனம்''. அவைகள் இப்பொழுது எங்கேயுள்ளன? உடன்படிக்கைப் பெட்டியினுள் என்ன இருந்தது? பத்துக் கற்பனைகள் இருந்தது. அதில் ஒன்றை மீறினால் கூட இரக்கம் இன்றி மரிக்க வேண்டியதுதான். ஆனால் உங்களுக்கு இரக்கம் கிடைப்பதற்காக, இரத்தமானது பலிபீடத் தின் மீது சிந்தப்பட்டு, கிருபாசனத்தின்மீது தெளிக்கப்பட வேண்டியதாயிருந்தது. கிருபாசனமே, நீங்கள் மண்டியிட்டு, இரக்கத்திற்காக வேண்டுதல் செய்யக்கூடிய பீடமாக இருக்கிறது. மனிதன் முழங்கால்படியிட்டு, தேவனை நோக்கி இரக்கத்திற்காக கெஞ்சும்படி, உள்ள பழங்காலத்துப் பாணியிலான பீடமானது நமது சபைகளை விட்டு நாம் எடுத்துப்போட்டுவிடாதபடிக்கு தேவன் நம்மை தடுத்தாட்கொள்வாராக. கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தினிடமிருந்து, இரக்கமானது ஏராளமாகவும் இலவசமாக வும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுதும்கூட அந்த இரக்கம் உண்டு. அதுவே இரக்கத்தின் ஆசனமாயிருக்கிறது.
52 ஆனால் இங்கே, இரக்கத்தின் ஆசனமாக இது இல்லை என்பதை நீங்கள் கவனியுங்கள். ஏனெனில் அங்கே "மின்னல் களும், இடி முழக்கமும் சத்தங்களும் இருக்கின்றன. இரக்கத்தின் ஆசனத்தில் மின்னலும், இடிமுழக்கங்களும் கிடையாது. நியாயத்தீர்ப்பின் சிம்மாசனத்தில் தான் அவ்வாறு இருக்கும்.
நாம் யாத்திராகமம் 19ம் அதிகாரம் 16ம் வசனத்தை எடுத்துக் கொள்வோம். யாத்திராகமம் 19ம் அதிகாரம் 16ம் வசனத்தில் இருந்து ஆரம்பிப்போம்.
உண்டாயிற்று ….. (என்னவென்று கவனியுங்கள்… தேவன் சீனாய் மலையின்மேல் இறங்கியபொழுது ) மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல் களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று: (எக்காள சத்தமானது என்ன? பிரதான தூதன்) பாளயத்திலிருந்து ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள் (கவனியுங்கள்!).
யாத். 19:16
"நியாயத்தீர்ப்பு!" வ்யூ! அவர்கள் நடந்து அங்கு சென்றிருந் தார்கள். அவர்கள் பிரயாணம் செய்ய தேவன் அவர்களுக்கு கிருபை அளித்தார். ஆனால் அவர்களோ ஒரு நியாயப்பிரமாணம் வேண்டுமென்று கோரினர். தேவன் அவர்களை ஒரு ஸ்தாபன ரீதியாக இல்லாதவர்களாக இருக்கும்படி விரும்பினார். ஆனால் அவர்களோ, தேவனைப் பின்பற்றுவதையும், அவரது ஆதிக்கத் தினுள் வாழ்வதையும், அவரது வல்லமையின் கீழ் வாழ்வதையும் விட, அதைக்கொண்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக்கொள்ளவும், எதைப்பற்றியாவது தர்க்கிக்கவுமே விரும்பினார்கள். கிருபை யானது அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை, பாவப்பிராயச்சித்தத்திற்காக ஒரு ஆட்டுக்குட்டியை அளித்திருந்தது; கிருபையானது இவ்வெல்லா காரியங்களையும் அவர்களுக்கு அளித்தது. ஆயினும் அவர்களோ நியாயத்தீர்ப்பையே விரும்பினார்கள். தாங்கள் கிரியை செய்யும்படி ஒன்றை அவர்கள் விரும்பினர்.
"அவர்களை கூடிவரச் செய்: அது என்னவென்பதை நான் அவர்களுக்கு அறியச்செய்வேன், அது என்னவென்று அவர்களுக்கு காண்பிப்பேன்'' என்றார். படியுங்கள். கவனியுங்கள். அவ்வெக் காள சத்தமானது வரவர பெரிதாகிக்கொண்டே வந்து, அது பூமியை அசையப் பண்ணத்தக்கதாக அந்த அளவுக்கு பலமாகத் தொனித்தது. நியாயத்தீர்ப்பானது என்னவென்பதை நீங்கள் பார்த்தீர்களா? எனக்கு அது வேண்டாம். எனக்கு கிருபையைத் தாரும்.
(சகோரன் ஃப்ரெட், ''சகோதரன் பிரன்ஹாம் அவர்களே'' என்று அழைக்கிறார் - ஆசி.). (அவர் சகோதரன் பிரன்ஹாமிடம், அவர் கடைசியாகக் குறிப்பிட்ட வேதவசனக் குறிப்பு எது என்பதைக் கேட்கிறார் - ஆசி.) அது யாத்திராகமம் 19ம் அதிகாரம் 16ம் வசனம், சகோதரன் ஃப்ரெட் அவர்களே. யாத்திராகமம் 19:16.
53 இப்பொழுது 17ம் வசனத்தைக் கவனியுங்கள்.
''அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப் பண்ணினான்; (ஓ, என்னே! நான் அவரை சமாதானத்துடன் சந்திக்கவே விரும்புகிறேன், அவ்விதமாக அல்ல) அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.''
யாத். 19:17.
அந்த மலையைச் சுற்றிலும் எல்லை வரையறை செய்யப்பட்டி ருந்தது. ஒரு மாடு அதைத் தொட்டாலும் அது அப்பொழுதே சாகவேண்டும். தேவனுடைய சமுகத்தில் வரமுடியாது. தேவன் … "மோசே ஜனங்களை புறப்படப் பண்ணினான்''
அடுத்து 18ம் வசனம் :
''கர்த்தர் சீனாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கின படியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது."
யாத். 19:18
அவர் எவ்விதமாக இறங்கினார்? அவர் தமது ஷெகினா மகிமையில் இறங்கிடவில்லை. ஆனால் அவரது நியாயத்தீர்ப்பின் சினத்தில்தான் இறங்கிவந்தார்.
"… அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. (சகோதரனே, நான் அந்த ஸ்தலத்தில் இருக்க விரும்பவில்லை).
எக்காள சத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் இவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். (மோசே தான் பேசினான், ஜனங்கள் பேசவில்லை; அவர்கள் மிகவும் நடுங்கிக் கொண்டிருந் தார்கள்).
கர்த்தர் சீனாய் மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாத படிக்கும், நீ இறங்கிப்போய் அவர்களை உறுதியாக எச்சரி."
யாத். 19:18-21
54 (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). மக்கள் சபையில் பின்னால் உட்கார்ந்துகொண்டு, அன்னிய பாஷைகளில் பேசு பவரையோ அல்லது ஆவியில் நடனமாடுபவரைக் குறித்தோ பரிகசிக்கின்றனர்; அதனால் பரிசுத்த ஆவியை அவர்கள் தூஷித்தா யிற்று, இனி அவ்வளவுதான், அவர்கள் என்றென்றைக்குமாக முத்திரையிடப்பட்டுவிட்டார்கள். "எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை''. அதை நீங்கள் ஏறிட்டுப் பார்க்க வேண்டாம். ஒன்று அதைவிட்டு நீங்கியிருங்கள், அல்லது அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
நாம் அந்த வேதவாக்கியத்தை விட்டு கடந்து சென்றுவிடு வோம். அதைத் தொடர்ந்து மீதியுள்ள வசனங்களை வாசியுங்கள்: தேவன் அங்கே என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். ஜனங்கள் மோசேயிடம், "ஓ, மோசே, நீரே பேசும், தேவன் இனி மேல் பேசவேண்டாம். நாங்கள் இக்காரியத்தை கேட்டேயிருக்கக் கூடாது என்று கருதுகிறோம். மோசே, நீரே எங்களிடம் பேசும். தேவன் எங்களோடே பேசினால் நாங்கள் செத்துப்போவோம்'' என்று கூறினார்கள். தேவன் ஒரு பாவ நிவிர்த்தியை உண்டாக்கினார் என்பதைப் பாருங்கள்.
55 "சிங்காசனத்தின் சத்தம்'' என்பதை இப்பொழுது பார்ப் போம். இந்த சிங்காசனத்தை கவனியுங்கள். ''சிங்காசனத்திற்கு முன்பாக ஏழு நட்சத்திரங்கள்'' நட்சத்திரங்களின் சத்தம். ''சத்தங்கள்'' என்பதைக் கவனியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தில் அல்லது 5ம் அதிகாரத்தில் இங்கே நாம் காண்பது என்னவெனில், ''அந்தச் சிங்காசனத்திருந்து மின்னல் களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன'' ஒரு சத்தம் அல்ல அது, ''சத்தங்கள்'' என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. அது என்ன? தேவன் சபையிடம் ஏழு ஆவிகள் மூலமாக தன்னையே பிரதிபலித்து காண்பித்துக்கொண்டு, பேசிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உண்மையான அபிஷேகம் பெற்றவர் பேசும்போது, அதுவே தேவனுடைய சத்தமாயிருக்கிறது. அதைப் புறக்கணிப்ப தானது, அந்த குத்துவிளக்கை அகற்றிவிடுவதாகும். பார்த்தீர்களா? "சத்தங்கள்'', ஏழு சபைக் காலங்களின் சத்தம் (இந்த மூலையில்) சத்தங்கள் இடிமுழக்கத்துடனும், மின்னலுடனும் பேசிக் கொண்டிருக்கின்றன.
56 இந்நாட்களில் இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்: ''நல்லது, பிரசங்க பீடத்திலிருந்து 'நரகம்' என்ற சொல்லை உபயோகிப்பதை நாங்கள் விசுவாசிக்கவில்லை'' என்கின்றனர். ஓ இரக்கம் வேண்டும். ஊ! தேவனுடைய வார்த்தையை அடக்கி வைக்காத தேவ மனிதனே நமக்குத் தேவை.
யாவருமே ஒரு பிரசங்கியாக முடியாது, ஆனால் உங்களுக்கு ஒரு சத்தம் உண்டு. ஜனங்களுக்கு ஒரு பிரசங்கத்தை உங்களால் பிரசங்கிக்க முடியவில்லையெனில்… நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தால், பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கிக்க அழைக்கப்பட்டுள் ளீர்கள். அவ்வாறு அழைக்கப்படவில்லையெனில், அப்படி யிருந்தும் ஜனங்களுக்கு முன்னால், உங்கள் வாழ்க்கையே ஒரு பிரசங்கமாக அமைய வேண்டும், அதன்மூலம் நீங்களும் ஒரு பிரசங்கியாகத்தான் இருப்பீர்கள். உங்களுடைய பிரசங்கமானது உங்களால் வாழ்ந்துகாட்டப்படட்டும், அவ்வாறு செய்தால், அதுவே தேவனுடைய சத்தமாக இருக்கிறது, அதை புறக்கணிக் கிறவர்கள் மேல் அது நிந்தையைக் கொண்டுவரும். அவர்கள் கூறுவார்கள்: 'அவன் அல்லது அவளுடைய ஜீவியத்திற்கெதிராக ஒருவரும் குற்றஞ்சுமத்த முடியாது. அவர்கள் இனிமை யானவர்கள், வாழ்ந்து காட்டுகிறார்கள். தேவனுடைய மனிதன் என்று சொல்லும்படி யாராவது ஜீவித்திருக்கிறார்களெனில், அது அந்த மனிதன்தான் அல்லது அந்த பெண்மணிதான்'' என்பார்கள். பாருங்கள், நீங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள், அதுவே உங்கள் பிரசங்கமாக இருக்கட்டும். நீங்கள் அவர்களுக்கு ஒரு பிரசங்கியாக இருக்கும்படி அழைக்கப்படாவிடில், பிரசங்கியா வதற்கு முயற்சிக்கவேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்யாவிடில், எல்லாவற்றையும் போட்டு குழப்பி, குழப்பம் உண்டாக்கி, மக்களை நீங்கள் சிக்கலில் மாட்டி வைத்து, என்ன நடக்கிற தென்பதையே நீங்கள் கெடுத்து, உங்களையும்கூட கெடுத்துக் கொண்டுவிடுவீர்கள். எனவே உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள்.
57 பிரசங்கியானவன் தன்னுடைய பிரசங்கத்தை பிரசங்கிக்க அழைக்கப்பட்டிருப்பதோடு, அதை தன்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்துகாட்டவும்கூட அழைக்கப்பட்டுள்ளான். உங்களால் பிரசங்கத்தின்படி வாழ்ந்துகாட்ட இயலாவிடில், நீங்கள் பிரசங் கப்பிதையே நிறுத்தி விடுங்கள். ஆனால் நீங்கள் செய்கிற பிரசங் கத்தின்படியெல்லாம் வாழ்ந்துகாட்டவேண்டும் என்று உங்களைப் பற்றி எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லது, இங்கே 'சத்தங்கள்'' இருந்தன. ஓ! ஜெபர்சன்வில்லில் வாழ்ந்துகாட்டுகிற சத்தங்கள் ஆயிரக்கணக்கில் வேண்டு மென்று எவ்வளவாய் வாஞ்சிக்கிறோம்! தேவனுடைய இடிமுழக்கமாக இருந்து, இன்றைக்கு பூமியில் கறை திரையின்றி, இனிமையிலும் பரிசுத்தத்திலும், தூய்மையிலும், கறைபடாத ஜீவியங்களிலும் நடந்து தேவனுடைய இடிமுக்கத்தை முழங்கித் திரிபவர்களாக அவர்கள் இருப்பார்கள். ஆம், ஐயா, உண்மையான கிறிஸ்தவர்கள், சத்துருவுக்கு எதிராக இடிமுக்கமாக இருக்கிறார் கள். நீங்கள் எவ்வளவாய் கத்துகிறீர்கள் என்பதைக் குறித்து பிசாசு அக்கறைப் படுகிறதில்லை; அல்லது எவ்வளவாய் உங்களால் குதிக்கமுடிகிறது, அல்லது எவ்வளவு உரத்த சத்தமாய் கத்துகிறீர்கள் என்பதைப் பற்றி பிசாசு கவனிக்கிறதில்லை. ஆனால் பரிசுத்தமாக்கப்பட்ட, தேவனுக்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பரிசுத்த ஜீவியத்தை பிசாசு காணும் பொழுது, அதுவே அவனை மிகவும் பாதிக்கிறது. அவனைக் குறித்து யார் எது சொன்னாலும், அவனை எப்படியெல்லாமோ இழிவாக சொன்னாலும், அதைப்பற்றி சலனம் அடையாமல் அவன் எவ்வளவு இனிமையாக இருக்கமுடியுமோ அவ்வளவாய் இனிமையாய் இருந்து, தேக்கமடையாமல், தொடர்ந்து நல்வழியில் முன்னேறிச் செல்லுகிறான். ஓ அவ்விதமான ஜீவியமானது, பிசாசை தூக்கி யெறிந்துவிடும்; பிசாசை அசைக்கும் இடி முழக்கம் அதுவே.
58 அவரால் பில்லிகிரகாமைப் போலவோ, அல்லது ஓரல் ராபர்ட்ஸைப் போலவோ அல்லது மகத்தான புகழ்மிக்க ஒரு பேச்சாளரைப் போலவோ பிரசங்கிக்க முடிந்தால், அவருக்கு அது இப்படியாக இருக்குமே'' என்று கூறுகிறீர்கள். ஓ, இல்லை! சில வேளைகளல் பிசாசானவன் அதைப்பார்த்து நகைக்கிறான். ஒன்று மற்ற ஒன்றைப்போல அதைப்பற்றி அவன் கவனம் செலுத்துகிற தில்லை. வேத தத்துவமெல்லாம் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், எல்லாவித வேதக்கல்லூரியின் பயிற்சியும் பெற்றிருக்கிறீர்கள்; பிசாசானவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு அதைப்பார்த்து நகைக்கிறான். ஆனால் அவன் ஜீவனுள்ள ஒன்றை காணும்போதோ!
அன்றைக்கு இருந்த சீஷர்களைப் பாருங்கள். சந்திரரோகி யாயிருந்த சிறுவனிடத்திலிருந்து பிசாசைத் துரத்த, 'பிசாசே, அவனைவிட்டு வெளியே வா, அவனைவிட்டு வெளியே வா, அவனைவிட்டு வெளியே வா'' என்று சொல்லிக் கொண்டிருந் தார்கள்.
அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த பிசாசானவன், "நீங்கள் உங்களையே வெட்கத்திற்குட்படுத்திக் கொண்டிருக்கவில்லையா? என்னைத் துரத்துங்கள் என்று இயேசுவானவர் உங்களுக்கு கட்டளை கொடுத்தார். ஆனால் உங்களில் ஒருவரால்கூட என்னைத் துரத்த முடியாது'' என்று சீஷர்களிடம் கூறியிருப்பான்.
ஆனால் சகோதரனே, அவன் இயேசு வருவதைக் கண்ட போது; அவர் அமைதியாக நடந்துவந்தார். ஊ ஊ ஓ! அவர் ஒன்றும் சொல்லத் தேவையாயிருக்கவில்லை. ஏற்கனவே பிசாசு அவரைக் கண்டு பயந்து போயிருந்தான். அவன் அந்தப் பிள்ளையைவிட்டு வெளியேறியாக வேண்டும் என்பதை அறிந்திருந்தான்; ஏனெனில், ஜீவனுள்ளவர் அங்கே வந்து விட்டார், அவர் வெறும் ஒரு பிரசங்கமாக மட்டுமல்ல, ஆனால் அவர் ஜீவனாகவும் இருக்கிறார். அவர், 'அவனைவிட்டு வெளியே வா" என்று கூறினார். ஓ, என்னே! அதுவே போதுமாயிருந்தது. அமைதியாக அவர் பேசினார். அவர், தான் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்திருந்தார். அவர், தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்திருந்தார்.
59 "சத்தங்கள்'' ஏழு எக்காளங்களின் சத்தங்கள்; ஏழு நட்சத் திரங்களின் சத்தங்கள், அது ஏழு தூதர்கள் ஆகும். அவைகள் அங்கே இருந்தன. ஆனால் இப்பொழுது கவனியுங்கள்.
"… தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.''
வெளி. 4:5.
"ஏழு தீபங்கள்'' - இங்கு நாம் சிறிது வரைந்துகொள்வோம். சிங்காசனம் - பரிசுத்தஸ்தலம் - சபையார். இந்த இடத்தில்தான் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆக ஏழு நட்சத்திரங்கள் - ஏழு தீபங்கள் - ஏழு செய்திளார்கள் - தூதர்கள் - ஏழு ஆவிகள்; தேவன் ஏழு ஆவிகளில் இருக்கிறார் என்று ஒட்டு மொத்தமாக இங்கு அர்த்தம் கொடுக்கவில்லை, ஆனால் 'ஒரே பரிசுத்த ஆவியின் ஏழு பிரதியட்சமாகுதல்கள் அல்லது தோன்று தல்கள்'' என்பதாகும்.
பரிசுத்த ஆவி எங்கேயிருக்கிறது? இங்கே சிம்மாசனத்திலே, ஒவ்வொரு சபைக்காலத்திலும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. இந்த சபைக்காலமானது தேவனுடைய சத்தங்களாக இருந்து, தனக்கடுத்த சபைக்காலத்திற்குள் அதே ஒளியை பிரகாசித்து, "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்'' என்று கூறிக்கொண்டிருக்கிறது. ஏழு என்பதைப் பாருங்கள், அங்கே சத்தங்கள் உண்டாயிருந்தன. எரியும் ஏழு தீபங்கள் தேவனுடைய ஏழு ஆவிகளாகும். ஏழு ஆவிகள்.
60 இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பாக நாம் அதைப்பற்றி, அதாவது பெரிய வைரக்கல்லைப் பற்றி பார்த்தோ மல்லவா, அதைப்பற்றி ஞாபகத்தில் வைத்திருங்கள். ஆனால் அது பல்வேறு முறைகளில் வெட்டி பட்டை தீட்டப்பட்டு, அதினிடத் தினின்று உள்ள அக்கினியையும், தீபங்களையும் பிரதிபலிக்கும்படி செய்யப்பட்டிருக்கிறது. ''தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியு மானவராக இயேசு கிறிஸ்து இருக்கிறார்'' என்பது அந்த விதமாகத் தான். வெளிப்படுத்தின விசேஷம் 1ம் அதிகாரம். அது சரிதானே? அப்படியெனில், தேவன் எப்பொழுது சிருஷ்டிக்கப்பட்டார்? அவர் தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியுமானவர். தேவன் நித்தியமானவராக இருக்கிறார். அப்படித்தானே? ஆனாலும் தேவன் சிருஷ்டிக்கப்பட்ட பொழுது… கன்னிகையாயிருந்த ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தை உற்பவித்தபொழுது, அது நடந்தது. அவள் தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியாயிருந்த இக்குழந்தையை பிறப்பிக்கும்படி இக்குழந்தைக்குரிய உயிரணுக்களை தனக்குள் வளரும்படி கொண்டிருந்தாள். "தேவன் மாம்சமாகி, நமக்குள் வாசம் பண்ணினார், அவர் இம்மானுவேல்' என அழைக்கப் பட்டார், அதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்'' இதுவே தேவனுடைய சிருஷ்டிப்புக்கு ஆதியுமானவர் என்ப தாகும்.
பூமியின் தூளிலிருந்து கிடைக்கக்கூடிய அந்த வைரக்கல் லிலே … ஏனெனில் அவர் மண்ணிலிருந்து உண்டாக்கப்பட்டார். அது சரிதானே? நான் உணவு உண்பதைப்போல அவரும் உணவு உண்டார். நீங்கள் உண்பது போலவே, அவரும் உணவு உண்டார். அந்த மண்ணான சரீரத்தில், மண் சரீரத்திற்குரிய கால்ஷியம், பொட்டாஷ், இயலுலக அண்டத்தின் ஒளி (Cosmic light) ஆகியவற்றைக் கொண்டவராக இருந்தபோதிலும், அவருக்குள் நித்திய ஒளியானது வாசமாயிருந்தது. அந்த சாஸ்திரிகள், அந்நட்சத்திரத்தினிடத்தில், "உம்முடைய பரிபூரண ஒளியினிடம் எங்களை வழிநடத்தும் என்று கூறியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
61 ஒரு பரிபூரண ஒளியின் வெளிச்சத்தையே அவர்கள் பிரதிபலித்தனர். அங்கே அவர் இருந்தார், அவரே தேவனுடைய பரிபூரண ஒளியாயிருந்தார். அவரே தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதியாயிருந்தார். அவர் அங்கே…
சாஸ்திரிகள் வானத்தில் அவரைக் கண்டபிறகு, எவ்வாறு அவர் தன்னையே பூமிக்குரிய தனது நடசத்திரங்களினிடத்திற்கு பிரதிபலித்துக் காண்பிக்கமுடிந்தது? அவர்கள் இப்பூமியில் ஊழியஞ்செய்கிற ஆவிகளாயினர். ''நம்முடைய மீறுதல்களினி மித்தம் அவர் காயப்பட்டு (அந்த பெரிய வைரக்கல் வெட்டப் பட்டது ) நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'' அது என்ன செய்து கொண்டிருந்தது. ஒளியை பிரகாசித்துக் கொண்டிருந்தது.
தேவனுடைய ஊழியக்காரன் என்று கூறிக்கொள்ளுகிற ஒரு மனிதன், தெய்வீக சுகமளித்தலையும், அவருடைய வல்லமையை யும் மறுதலிப்பானெனில், அவன் அந்த வைரக்கல்லிடமிருந்து தனது ஒளியை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறான். ஏனெனில் அது அவரை, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்று பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. அந்த வைரக்கல்லில் ஏழு நட்சத்திரங்களையும், ஏழு சபைக்காலங்களையும் நீங்கள் காண முடியும்.
62 ஓ, தேவனுக்கு துதி உண்டாவதாக! பிரசங்க பீடத்தி லிருந்து கொண்டு ஒரு ஊழியக்காரன் தேவனை நன்றி நிறைந்த ஸ்தோத்திரத்துடனும் துதியுடனும், கனம், வல்லமையுடனும், தொழுது கொள்வதென்பது பொருத்தமானதுதான் என்று நான் கருதுகிறேன். ஓ, எவ்வளவு உண்மையாய் இருக்கிறது, அது எவ்வளவாய் என் இருதயத்தை புளகாங்கிதங்கொள்ளச் செய்கிறது! அதனால் நான் எவ்வளவாய் சத்தமிட முடியுமோ அவ்வள வாய் சத்தமிடவும், எவ்வளவு உயரமாய் நான் குதிக்க முடியுமோ அவ்வளவு உயரமாய் குதிக்கவும் வேண்டும்போல் உணருகிறேன். ஏனெனில், என்னில் இருக்கிற ஒன்று, நான் எப்படியிருந்தேனோ அதிலிருந்து என்னை மாற்றிவிட்டதே. நான் என்னவாயிருக்க வேண்டுமோ அதுவாய் நான் இருக்கவில்லை; நான் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படியாயும் இருக்கவில்லை. ஆனால், நான் எப்படிப்பட்டவனாய் இருந்து வந்தேனோ அதி லிருந்து மாற்றப்பட்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது; ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
இங்கே நின்றிருந்து, இந்த நித்திய வார்த்தையானது, எழும்பி, ஒவ்வொரு புயலையும் அசைத்ததை காணுங்கள்! வேதாகமங்களை அவர்கள் எரிக்க முயன்ற பொழுது, அதேவிதமாக அது அப்புயலுக்கெதிராக அசைந்தது. ஏனெனில் வசனம் கூறுகிறது. 'வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த் தைகளோ ஒழிந்து போவதில்லை" என்று.
63 இப்பொழுது சிக்காகோவுக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் ஒரு ஆலயத்தில் உள்ள பிரசங்க பீடத்தின் மேல் ஒரு வேதாகமமானது வைக்கப்பட்டுள்ளது. முதல் உலகப்போருக்கு முன், ஒரு மிஷனரியானவர்… ஒருமனிதன் இரட்சிக்கப்பட்டான். அப்பொழுது அம்மனிதன் அம்மிஷனரிக்கு ஒரு வேதாகமத்தை அளிக்க விரும்பினான், அப்பொழுது அவன், ''நான் உமக்கு இந்த வேதாகமத்தை அளிக்க இயலாதவனாயிருக்கிறேன், என் தாயார் எனக்கு இதைக் கொடுத்தார்கள். நான் வீடு திரும்பும் பொழுது, உமக்கு ஒரு வேதாகமத்தை அனுப்பித் தருவேன்'' என்று கூறினான். 136. அவன் கடலில் பிரயாணம் செய்த பொழுது, ஒரு ஜெர்மானிய நீர்மூழ்கியானது இவன் பயணம் செய்த கப்பலை குண்டு போட்டு தகர்த்தது. அக்கப்பலின் உடைந்த ஒரு துண்டைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து, கடற்கரைக்கருகில் ஒரு பெட்டி மிதந்து கொண்டிருப் பதைக் கண்டார்கள். மூழ்கிப்போன ஏதோ ஒன்றுதான் அங்கே மிதந்து கொண்டிருப்பதாக சிலர் எண்ணினர். எனவே அவர்கள் அப்பெட்டியை எடுத்து அதைத் திறந்து பார்த்தார்கள். அதனுள் அத்தாக்குதலுக்கு தப்பி மீதியாயிருந்த அந்த மிஷனரிக்கு தான் அனுப்பித்தருவதாக வாக்களித்த அந்த வேதாகமம் மட்டுமே இருந்தது. அதை அவருக்கு அனுப்புவதற்காக வைத்திருந்தார். அது சிக்காகோவுக்கு அருகில் ஒரு மெதோடிஸ்ட் சபையில் உள்ள ஒரு பிரசங்க பீடத்தில் இன்றைக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. 'வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை"
64 1937ம் ஆண்டில் இவ்வூரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, மண்ணால் போடப்பட்ட தரையுள்ள இங்கேயிருந்த இந்த பழைய சபைக்கட்டிடமானது வெள்ள நீரினால் நிறைந்திருந்தபடியால், ஒரு இழுவைப் படகில் நாம் கட்டிடத்தின் கூரை வரையிலும் செல்லக்கூடிய அளவுக்கு இருந்தது. அன்றிரவில் நான் சுவிசேஷத் தைப் பிரசங்கித்துவிட்டு எனது வேதாகமத்தை திறந்தபடி பிரசங்க பீடத்தில் வைத்துவிட்டு நான் வீடு திரும்பிய பிறகு, வெள்ளம் ஏற்பட்டு, மேலே வரைக்கிலும் பெருகியது.
நான் வெள்ளம் வரும் என்று முன்னுரைத்திருந்தேன். "இங்கே இந்த ஸ்ப்ரிங் தெருவில் 22 அடி அளக்கப்படுவதைக் கண்டேன்'' என்று நான் கூறினேன்.
ஜிம் வைஸ்ஹார்ட் என்ற வயதான சகோதரனும் ஏனை யோரும் அதைக் குறித்து என்னை கேலி செய்தனர். சகோதரன் ஜார்ஜ் அவர்களே, அது உங்களுக்கு ஞாபகமிருகிறதா? அவர், "பில்லி, 1884ல் ஸ்ப்ரிங் தெருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் ஆறு அங்குல உயரத்திற்குத்தான் தண்ணீர் பெருகியது'' என்று என்னிடம் கூறினார்.
ஆகாயத்திலிருந்து ஒரு மனிதன் இறங்கி வருவதையும், அவன் ஒரு அளவுகோலை எடுத்து, இருபத்திரண்டு அடி உயரத்தை 'ஸ்பிரிங் தெருவில் அளந்தான் என்பதை நான் கண்டேன்'' என்று நான் அவரிடம் கூறினேன்.
"நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள்'' என்று அவர் பதிலளித்தார்.
"நான் உணர்ச்சி வசப்படவில்லை. அது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாக இருக்கிறது'' என்று நான் கூறினேன்.
65 ஸ்ப்ரிங் தெருவில் வெள்ளம் எவ்வளவு அடி உயரத்துக்கு இருந்தது என்பதை அவர்களிடம் கேளுங்கள். மிகவும் சரியாக இருபத்திரண்டு அடி உயரத்துக்கு அது இருந்தது.
அன்றிரவில் நான் பிரசங்கித்துவிட்டு வைத்துவிட்டு வந்த அந்த பழைய வேதாகமம் நான் வைத்துவிட்டு வந்த அதே இடத்தில்… மழை பெய்ய ஆரம்பித்து, வெள்ளம் பெருக் கெடுத்தது, இப்பழைய சபையில் இருந்த இருக்கைகள், கட்டிடத் தின் கூரை வரையிலும் வெள்ளத்தில் உயர கொண்டு போகப் பட்டது, உள்ளே வெள்ள நீர் நிறைந்திருந்து எல்லாவற்றையும் மேலே கொண்டுபோய்விட்டது; பிரசங்க பீடமானது மேலே போய்விட்டது. பிறகு அவைகள் கீழே வந்துவிட்டன, ஒவ்வொரு இருக்கையும் அதன் அதன் இடத்தில் திரும்பி வந்து இறங்கி நின்றுவிட்டது. வெள்ள நீரினால் மேலே கொண்டுபோகப்பட்ட வேதாகமமும் திரும்ப அதனிடத்திறகு வந்து எந்த அதிகாரத்தில் திறந்து வைக்கப்பட்டு அங்கே விடப்பட்டு இருந்ததோ, அதே அதிகாரம் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. இவ்வளவு தண்ணீர் பெருகியிருந்துங்கூட, இவ்வாறு நிகழ்ந்தது.
"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை"
66 அவ்வேதாகமம் அந்த உப்புத் தண்ணீரில் இரண்டு ஆண்டுகள் மிதந்து கொண்டிருந்தும்கூட, அதன் எழுத்துக்கள் கொஞ்சமும் அழிந்து போகாமல் எப்படியாய் இருந்தது பாருங்கள்! தேவனுடைய வார்த்தைகள் உண்மையாயிருக்கின்றன. ஆமென்.
அதன்பிறகு சகோதரன் ஜிம் ஹைஸ்ஹார்ட் அவர்கள் அதைப்பற்றி திருப்தியடைந்தவராக இருந்தார். அவருக்கு அடிக்கடி தனது கையில் வலி உண்டாகும். அவருக்கு எழுபத் தைந்து வயதாகிய போது, அவருக்கு வாதநோய் ஏற்பட்டது. அவருக்கு ஏதாவது ஒரு தொந்தரவு சரீரத்தில் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் சரீரத்தில் அவருக்கு நோவு ஏற்பட்டால், அவர் ஓடிப்போய் வேதாகமத்தை எடுத்து அந்த இடத்தில் வைத்துக்கொள்வார், இன்னொரு இடத்தில் வேதனை ஏற்பட்டால் அந்த இடத்திலும் இன்னொரு வேதாகமத்தை எடுத்து வைத்துக்கொள்வார். ஒருநாள் நான் அவரைப் பார்க்கப் போன பொழுது, அவர்மேல் எங்கும் வேதாகமங்களினால் மூடியிருந்தது, அதினால் அவரைப் பார்க்கவே முடியவில்லை. அவர் சரீர முழுவதும் வலியுள்ள பாகங்கள் பூராவும் வேதாகமங்களைக் கொண்டு மூடிக்கொண்டிருந்தார். அவர், "இது தேவனுடைய வாக்குத்தத்தம் ஆக இருக்கிறது'' என்று கூறினார். அவ்வாறுதான் அது இருக்கிறது.
67 "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'
அந்த வயதான மனிதர் வந்து என்னை சந்தித்துவிட்டுப் போவது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவருடைய பந்துக்கள் ஒருவரும் இங்கே இல்லை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு நான் சிறிதளவு பண உதவி செய்வதுண்டு. ஏனெனில் அவர் வயோதிபராகவும், பணம் தேவையுள்ளவராகவும் இருந்தார். அவர் வருவதுண்டு. ஒருநாள் நான் கனடா தேசத்திற்கு போகக்கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் வந்திருந்தார். வாயிலை விட்டு நான் வெளியே புறப்பட இருந்தபொழுது, அவர் அங்கே வந்து என்னை சந்தித்து, "என் மகனே, பில்லி, இந்நாட்களில் ஒன்றில் நீ திரும்பி வரும்பொழுது, இந்த சாலையில் இந்த வயதான அங்கிள் ஜிம் நடந்து இனிமேல் திரிந்து கொண்டிருக்கமாட்டார்'' என்று கூறினார். அதுவே அவரை நான் கடைசியாக சந்தித்தது. நான் கனடாவுக்கு போய்ச் சேர்ந்தபொழுது, எனக்கு ஒரு தந்தி வந்தது, சகோதரி மார்கன் அவர்களுடைய கரங்களில் அவர் உயிர் நீத்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது, அவரை உடனே மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் சென்றார்கள்; சகோதரியை நோக்கிப் பார்த்துவிட்டு, அவர் உயிர் நீத்திருக்கிறார்.
சகோதரி மார்ஜி இன்று காலையில் இங்கேயிருக்கிறார்களா? அவர்கள் இங்கே வழக்கமாக வருவதுண்டு. நீங்கள் யாவரும் அறி வீர்கள். பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உள்ள மெடிக்கல் க்ளினிக் கில் பதினேழு ஆண்டுகளாக தீவிரப் புற்றுநோயால் அவதிப்பட் டுக்கொண்டு, அங்குள்ள தாஸ்தாவேஜுகளில் "புற்று நோயால் மரித்துக்கொண்டிருக்கிறவள்'' என்று குறிப்பிடப்பட்டு இருந் தவள் அச்சகோதரி. அது பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக. அச்சகோதரி 412 நாப்ளாக் அவென்யூவில் வசித்து வருகிறார்கள்; மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். ஓ ஓ ஆச்சரியமான கிருபை, அதன் சத்தம் எத்தனை இனிமை!
68 இங்கு லூயிவில்லில் வழக்குரைஞரான ஜிம் டாம் ராபர்ட்சன் என்பவர் இருக்கிறார். ஜிம் டாமை நாம் யாவரும் அறிவோம். அந்த நிகழ்ச்சிதான் அவரை இந்த செய்தியை விசுவாசிக்கும்படி கொண்டு வந்தது. அவர் அங்கே சென்றிருந்தார். அவருடைய தந்தையார் அம்மருத்துவமனையில் உள் ளபணியார்களுக்கெல்லாம் முதன்மையானவராக இருக்கிறார். அவர் அங்கு சென்று அச்சகோதரி புற்றுநோயால் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்பது உண்மைதானா என்பதை கண்டறிய அங்கு சென்றிருந்தார். அவள் கைவிடப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டிருந்தாள். அவர்கள் கருத்துப்படி ஏறக்குறைய அவள் ஏற்கனவே மரித்தவளாக கருதப்பட்டாள். அவருடைய தந்தையார் முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்தார். அது உண்மையாயிருக்கிறது. ஜிம் டாம் கூறினார்: ''அது ஒரு பொய்; அவள் அங்கே இப்பொழுது நலமுடன் உட்கார்ந்து கொண்டிருக் கிறாள், நான் அவளிடம் உம்மை கொண்டுச் செல்லமுடியும்''.
69 ஓ ஓ - அவர் - அவர் உண்மையுள்ள தேவன் அல்லவா? அவர் நம்முடைய பிழைகளையெல்லாம் கண்ணிலெடுக்காது இருக்கிறார் என்பதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியுள்ளவனா யிருக்கிறேன். நீங்கள் அவ்வாறு மகிழவில்லையா? அது நம்மை அவரை முழு இருதயத்தோடும் நேசிக்கச் செய்கிறது.
சிங்காசனங்களும், மின்னல்களும்… என்ன? 'ஏழு தீபங் கள்'' அல்லது விளக்குகள், அல்லது ஏழு நட்சத்திரங்கள், அது "ஏழு ஆவிகள்'' என்றும் அழைக்கப்படுகின்றன. அதாவது, அதன் அர்த்தம் என்னவெனில், ஏழு சபைக்காலங்களில் ஜனங்களுக்காக ஏழு கிருபாசனங்களாயிருந்தும், பரிசுத்த ஆவியின் ஏழு தோற்றங் களுமாயிருப்பது என்பதுதான். அவைகள் இவ்வாறு உள்ளன; ஏழு கிருபாசனங்கள், ஏழு ஆசனங்கள், ஏழு சபைகள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு பிரத்தியட்சமாகுதல்கள், ஏழு ஆவிகள், ஏழு தீபங்கள், ஓ, தேவன் எவ்வளவாய் பரிபூரணராய் இருக்கிறார் ஒவ்வொரு…
எனவே அது வேதாகமத்தின் ஆவிக்குரிய தன்மையைக் கொண்டதாக இருக்கட்டும். வேதாகமத்திலுள்ள ஆவிக்குரிய இயல்பைப்போல உலகில் பரிபூரணமானது வேறொன்றுமில்லை. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய உங்களால் ஒரு பிழைகூட அதில் கண்டுபிடிக்கமுடியாது. அதன் ஆவிக்குரிய தன்மையில் பிழையேதுமில்லை. வேறுவகையான இலக்கியத்தில் மூன்று வசனங்கள் வாசிப்பதற்குள்ளாகவே, உங்களால் பிழை கண்டுபிடிக்காமல் இருக்கமுடியாது. ஆனால் வேதாகமத்தில் அப்படியல்ல.
கர்த்தருடைய ஜெபத்தோடு ஒரு சொற்றொடரை சேர்க்கவோ, அல்லது அதிலிருந்து ஒன்றை எடுத்துவிடவோகடந்த இருநூறு ஆண்டுக்காலத்திற்கு மேலாக முயன்றுகொண்டிருக் கின்றனர். ஆனால் அதுவோ பரிபூரணமாயிருக்கிறது. இனி எதையும் அதனோடு சேர்க்கவோ, அல்லது இனி எதையாவது அதினின்றும் அகற்றிவிடவோ முடியாது. அந்த ஜெபத்தை இன்னும் சற்று சிறப்பாக ஆக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு காரியத்தை அதற்குள் திணிக்கவோ, அல்லது வேறு ஒன்றை அதற்குள் சேர்க்கவோ, அல்லது குறிப்பிட்ட இன்ன வசனத்தை அதிலிருந்து அகற்றிவிடவோமுயலுவார்கள். ஆனால் அது சரியான காரியமல்ல. அது பரிபூரணமாயிருக்கிறது என்பதைப் பாருங்கள். தேவனுடைய எல்லா வழிகளும் பரிபூரணமாயிருக்கிறது.
எனவே நாம் பரிபூரணமில்லாதவர்களாயிருக்கிறோம். ஆனால் அவர் ''ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குண ராயிருக்கக்கடவீர்கள்'' என்றார். நாம் எவ்வாறு பரிபூரணமாக முடியும்? விலையேறப்பெற்ற இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினா லேயே, அதனால் நாம் நம்மையே மறந்து, அப்படியே அவரில் ஜீவிக்கத்தக்கதாக செய்கிறது. அது எத்தனை விலையேறப் பெற்றதாயிருக்கிறது!
70 நல்லது, இப்பொழுது 6ம் வசனத்திற்குள் செல்வோம். "ஏழு தீபங்கள்''
அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன; அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
வெளி. 4:6
ஓ, என்னே! அந்த ஜீவன்கள் கண்களால் நிறைந்திருந்ததைப் பாருங்கள்; முன்னும் பின்னும் கண்களால் நிறைந்திருந்தன. இப்பொழுது பொறுங்கள்!
அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாக பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது. அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன. அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
இப்பொழுது கண்ணாடிக் கடல்" என்பதைப் பார்ப்போம். இங்கே… இது… ஒரு பெரிய அளவுக்கு அடையாளச் சின்னமாகத் திகழவில்லை, ஆனால் ஒரு நிமிடம் இதை கற்பலகையிலிருந்து அழித்துவிடுகிறேன். இதைப்பற்றி சிறிதளவு படிப்போம். பழைய ஏற்பாட்டு ஆலயத்தில் கண்ணாடிக்கடல் அடையாளச் சின்னமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. மோசே பரலோகத்தில் தான் பார்த்ததைப் போலவே பூமியிலும் ஆலயத்தைக் கட்டும்படியாக தேவனால் கட்டளையிடப்பட்டதால், கண்ணாடிக்கடலும் இடம் பெற்றது. யாவரும் அதை அறிவோம்.
71 இங்கு நான் சற்று வரைந்து காட்டுகிறேன் - இதோ இங்கே உடன்படிக்கைப் பெட்டி இருந்தது, பழைய ஏற்பாட்டுக் காலத்தில். அடுத்ததாக, அந்த இடம் "மகா பரிசுத்த ஸ்தலம்'' என்று அழைக்கப்பட்டது. இதோ இங்கே பலிபீடமானது இருந்தது. அது பரிசுத்த ஸ்தலம் என அழைக்கப்பட்டது. பலிபீடத்திற்கருகில் "வெண்கல கடல்'' என்பது இருந்தது. அதாவது, பலிகளை வெண்கல பலிபீடத்தில் படைக்கப்படும் முன்னர் இந்த இடத்தில் தான் கழுவப்பட்டது. வெண்கல பலிபீடத்தில்தான் பலியானது எரிக்கப்பட்டது.
கண்ணாடிக்கடல் எங்கே இருந்தது என்பதைப் பார்க்க நாம் விரும்புகிறோம். இந்த கண்ணாடிக்கடல் சிங்காசனத்திற்கு முன்பாக, பரிசுத்த ஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்; இந்த இடத்தில்தான் ஏழு பொன் குத்துவிளக்குகள் இவ்விதமாக வைக்கப்பட்டிருந்தன; அந்த இடத்தில்தான் ஒரு தொட்டியும் வருகிறது. பாருங்கள்? அக்குத்து விளக்குகள்தான் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உள்ள ஒளியை இங்கு பிரதிபலிக்கிறதாக இருக்கிறது. நீங்கள் விரும்பினால் ஒழிய இதை நீங்கள் எழுதிக்கொள்ளத்தேவையில்லை. உங்களுக்கு கூற வேண்டிய ஒரு விஷயத்தை நான் இங்கே வரைந்திருக்கிறேன். ஆனால் இது வெண்கலக் கடல் என்று அழைக்கப்பட்டது என்ப தைப் பாருங்கள்; அது ஒன்றும் மிகவும் பெரிதான ஒன்றல்ல. அது ஆலயத்தில் அதற்குரிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இவ்விதமாக கண்ணாடிக் கடலானது வைக்கப்பட்டிருந்தது. அது வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு தொட்டியாகும்; அங்கேதான் அவர்கள் பலியைக் கழுவினார்கள். பலிகள் சுட்டெரிக்கப்படு வதற்கு முன்பாகவோ அல்லது அது ஏற்றுக்கொள்ளப்படும் முன்னரோ அது கழுவப்படவேண்டும்.
ஓ இப்பொழுதே அந்த விஷயம் ஒரு பிரசங்கத்தை அமைத்துத்தரவில்லையா? ஓ "கழுவப்படல்' என்ற விஷயம் என் கவனத்தைத் தொட்டது. தேவனிடத்தில் எந்த ஒரு பலியும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, அது முதலாவதாக கழுவப் படவேண்டும். எப்படி? உணர்ச்சிவசப்பட்டு அல்ல, ஆனால் வார்த்தையால் கழுவப்படவேண்டும். நான் சிவப்பான கிடாரி யைப் பற்றியும், வேறுபடுதலின் தண்ணீர்களைப் பற்றியும்; தண்ணீர்கள் வைக்கப்பட்டிருந்தது, வேறு பிரிந்து வருவதற்காக இருக்கிறது என்பதைப் பற்றியும் பிரசங்கித்தபோது, அந்த யூத போதகர் அங்கே இருந்தார். அதை நாம் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். தேவனிடத்தில் நாம் உண்மையான விசுவாசத்தோடு வருவதற்கு முன்பாக, நாம் முதலில் வேறுபிரிதலின் தண்ணீர்கள் அண்டையில் வரவேண்டியவர்களாக இருக்கிறோம். ஆம், ஐயா, அவ்வாறுதான் செய்ய வேண்டும். எதன் வழியாக நீங்கள் வரவேண்டும்?
72 நீங்கள் இதை சரியாக புரிந்துகொள்ளத்தக்கதாக, இதைக் குறித்து உங்களுக்கு இன்னும் இதன்பேரில் பேசமுடியுமா என்று பார்க்கிறேன். இப்பொழுது ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆடம்பரமான அறிவுசார்ந்த சிந்தையை அகற்றிவிட்டு, ஆவிக்குரிய சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இப்பொழுது ஒரு விஷயம் வருகிறது. "பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் முன்னர் முதலாவதாக அது வேறுபிரிதலின் தண்ணீர்களால் கழுவப்பட்டாக வேண்டும்'' என்கிற விஷயம்.
இப்பொழுது என்னோடு சேர்ந்து வேகமாக எபேசியர் கம் அதிகாரத்தை எடுத்துக்கெள்ளுங்கள். இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிற பகுதியை விடாமல் வைத்துக் கொண்டு, கொஞ்சம் சில பக்கங்கள் பின்னால் போய் எபேசியர் 5ம் அதிகாரம் 26ம் வசனத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
"தாம் அதை சுத்திகரித்து பரிசுத்தமாக்குகிறதற்கும்…'' (அவர் இங்கே சபையைக் குறித்துப் பேசுகிறார்).
நாம் இந்த வசனத்திற்கு இன்னும் சற்று பின்னால் போவோம். 21ம் வசனத்தை எடுத்துக்கொள்வாம்.
''தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந் திருங்கள்."
எபே. 5:21
73 'உங்களை சமர்ப்பியுங்கள்'' (தமிழ் வேதாகமத்தில் "கீழ்ப்படியுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ளதின்படி ''ஒப்புக்கொடுங்கள்'' அல்லது "சமர்ப்பியுங்கள்'' என்றும் கூறலாம் - மொழிபெயர்ப்பாளர்). சபையோரே நீங்கள் உங்களை உங்களது மேய்ப்பனுக்கு (பாஸ்ட்டர் - Pastor என்பதற்கு மேய்ப்பன் என்றே பொருள் - மொழிபெயர்ப்பாளர்) - ஒப்புக்கொடுங்கள். மேய்ப்பனே (Pastor), நீர் உம்மை உமது சபையோருக்கு ஒப்புக்கொடுங்கள். சபையில் சிறியதொரு கோஷ்டி உருவானால், எந்த ஒரு பட்சத்திலும் சாயாமல் இருந்து முழுச் சபைக்கும் உம்மை ஒப்புக்கொடும். சபையோரே, நீங்கள் ஒரு கோஷ்டியை உருவாக்க நேர்ந்தால், அப்பொழுது, நீங்கள் தேவனுடைய பயத்தோடு உங்களது மேய்ப்பனுக்கு உங்களை சமர்ப்பியுங்கள். பார்த்தீர்களா? ஓ, சகோதரனே! °!
"மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்."
எபே. 5:22
பெண்டிரே! நீங்கள் எத்தனை பேர்கள் இதை அறிவீர்கள்? அது மிகவும் சரியாயிருக்கிறது. வேதாகமம் ஆதியிலேயே இவ்வாறு கூறியுள்ளது. இதுவரையிலும் அவ்வாறே இருந்து வருகிறது.
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.'' (அவ்விதமாகவே கணவனும் இருக்கிறான்).
விவாகம் ஆனவர்களே, வயது வந்தோரே, வாழவேண்டிய விதத்தை அறிந்துகொள்வதற்குரிய பிராயத்தை அடைந்துள்ள பிள்ளைகளே, நீங்கள் இந்த விஷயத்தை நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.
"…கர்த்தருக்கு…
கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, (மனைவியை அசட்டை செய்யாதீர்கள், அப்படிச் செய்தால் நீங்கள் கணவனாயிருப்பதற்கு தகுதியில்லை).
எபே. 5:23-25
74 கவனியுங்கள், இதோ இங்கே இது வருகிறது, அதை எடுத்துக்கொள்ளுங்கள்.
தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்… ('தாம் அதை'' என்று சகோ. பிரன்ஹாம் கூற சபையார் "திருவசனத் தைக் கொண்டு " என்ற வார்த்தையைக் கூறுகிறார்கள் - ஆசி.).
எபே. 5:26
ஆகவே, தொழுதுகொள்ளும்படியாக வருகிற ஒவ்வொரு வரும் இவ்விடத்திற்கு தொடர்பு கொள்ள வருகையில், அதற்கு முன்பாக முதலில் வார்த்தையின் வழியாகத்தான் வரவேண்டும். அநேகர் வேறு வழியாக வருகிறார்கள். சிறுகதைகளை உதாரணமாக கூறுவதைப் பற்றி நானும் நம்புகிறேன். ''தாயார் அநேக ஆண்டு களுக்கு முன்பாக மரித்துவிட்டார்களென்றும், அவர்கள் உங்களுக் காக பரலோகத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்று ஒரு கதை உண்டு. வார்த்தை பயன்படுத்தப்பட்ட பிறகு இந்த விஷயம் வரலாம். அநேகர் பீடத்தண்டையில் வருகிறார்கள்; ஏனெனில் பரலோகத்திலுள்ள தங்கள் தாயாரை சந்திக்க அவர்கள் விரும்பு கிறார்கள். அதெல்லாம் சரிதான், நீங்கள் அதைச் செய்ய வேண்டி யதுதான். ஆனால் பீடத்தண்டையில் நீங்கள் வருவதன் காரணம் அதுவல்ல. வசனத்தின்படி, கிறிஸ்து உங்களுக்குப் பதிலாக மரித்தபடியினால், நீங்கள் உங்கள் பாவங்களை அறிக்கையிடும்படி பீடத்தண்டையில் வருகிறீர்கள்.
எனவே, வார்த்தையின்படி வராத எந்த பலிகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அப்படித்தானே? (ஓ, சகோதரனே, இதை நான் கூறவிரும்பவில்லை. இதைக்கூற எனக்கு விருப்ப மில்லை. இதைக் கூறுவதற்காக என்னை மன்னியுங்கள்) இக்காரணத் தினால்தான் வேதாகமத்தில் அப்போஸ்தலர் 19ம் அதிகாரம் இருந்துவருகிறது. "நீங்கள் விசுவாசிக்க ஆரம்பித்ததிலிருந்து இதுவரையிலும் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்களா?'' என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர்கள், 'அப்படி ஒன்று உண்டென்றே நாங்கள் கேள்விப்படவில்லை'' என்று பதிலளித்தார்கள்.
'அப்படியென்றால் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்? நீங்கள் ஏன் இதற்குள் வரவில்லை?'' என்று கேட்கப்பட்டது.
வார்த்தையின் வழியாக அல்லாமல் வேறு வழியாக அவர்கள் வந்துவிட்டனர். "ஓ, நாங்கள் மரபு முறையின்படி அதன் வழியாக வந்தோம். நாங்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றார்கள்.
அவன் அதற்கு, "அது இப்பொழுது பலனளிக்காது, யோவான் மனந்திரும்புதலுக்காக ஞானஸ்நானம் கொடுத்தான், பாவ மன்னிப்புக்கென்று கொடுக்கவில்லை' என்று பதிலளித்தான்.
இதை அவர்கள் கேட்ட பொழுது, அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஏன்? 'திருவசனத்தைக்கொண்டு "திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் கழுவப்படுவ தற்காக'' திருவசனமானது, "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்'' என்று கூறியுள்ளது. அதனோடு வேறு எதையாவது இணைக்கப் பார்க்கிற எதுவும் பொய்யாய் இருக்கிறது.
75 இப்பொழுது எனது விலையேறப்பெற்ற சகோதரனே, இது பதிவு செய்யப்படுகிறது என்று நான் அறிவேன். இப்பொழுது நீங்கள் உணர்ச்சி வசப்படவேண்டாம். தெய்வீக அன்போடு நான் கூறட்டும்; இந்தக் காரியங்களின் பேரில் இனிமேலும் நான் அமைதியாயிருக்கக்கூடாத வேளையானது வந்துவிட்டது, வருகைக்கு மிக அருகில் இருக்கிறோம். பார்த்தீர்களா? "திரித்துவக் கொள்கை பிசாசினுடையது'' என்பதை நான் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாகக் கூறுவேன். அது எங்கிருந்து வந்தது என்பதைக் கவனியுங்கள். நிசாயா ஆலோசனை சங்கத்தில் தான் ஆரம்பித்தது, அப்பொழுதுதான், அங்கே கத்தோலிக்க சபை யானது ஆளுகைக்கு வந்தது. "திரித்துவம்'' என்ற வார்த்தை வேதாகமப் புத்தகம் முழுவதிலும் எங்குமே குறிப்பிடவில்லை. மூன்று தேவர்கள் என்ற கொள்கையைப் பொருத்தமட்டில் அது பாதாளத்திலிருந்து வந்ததாகும். ஒரேயொரு தேவன்தான் உண்டு. அதுதான் சரியானது ஆகும்.
76 'அப்படியென்றால், இந்த திரித்துவக் கொள்கைக்காரர் களெல்லாம் பாதாளத்திற்குரியவர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா?'' என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, ஐயா அவர்களெல்லாம் கிறிஸ்தவர்கள் என்றுதான் நான் விசுவாசிக்கி றேன். ஆனால் வேளையானது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது, சகோதரனே! அவர்கள் உத்தமமாக இருந்தும் தவறானவர்களா யிருப்பார்கள்.
எந்த மனிதனானாலும் சரி, எந்த இடமானாலும் சரி, எந்த வேளையானாலும் சரி, இந்த விஷயத்தின் பேரில் பேச விரும்பு கிறவர்கள் என்னிடம் வரலாம். எந்த ஊழியக்காரரானாலும், பேராயரானாலும், பிரதான பேராயரானாலும் நீங்கள் யாராயிருந் தாலும் சரி. இச்செய்தி ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது, இது உலகம் முழுவதிலும் செல்லும். உலகம் பூராவிலும் செல்லும் இந்த ஒலிநாடாவிலுள்ள எனது செய்தியைக் கேட்டு என்னிடத்தில் வரும் எந்த ஒரு நபரையும் நான் சகோதர அன்போடு கேட்கிறேன். என்னவெனில், திருவசனத்தில் எங்காவது, அல்லது நம்பத்தகுந்த எந்த வரலாற்றுப் புத்தகத்திலும் ஒரு பாராவிலாவது, கத்தோலிக்க சபை ஸ்தாபிக்கப்படுகிற வரையிலும் பிதாகுமாரன் பரிசுத்த ஆவி யின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றதாக எந்த ஒரு நபரைக் குறித்தாவது எனக்கு காண்பிக்கட்டும் பார்க்கலாம். அப்படி காண்பித்தால், நான் எனது உபதேசத்தையே மாற்றிக் கொள்வேன். ஒவ்வொரு நபரும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால்தான் ஞானஸ் நானப்படுத்தப்பட்டார்கள். என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரர்களே! இக்காரியங்களுக்கு உங்களது கண்கள் குருடாக்கப் பட்டுள்ளன. தேவன் உங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கும்படி ஜெபிக்கிறேன்.
அதைக்குறித்து நிரூபிக்கும்படியான திருவசனம் உங்களிடம் இருந்தால், நீங்கள் எனக்கு அதைக் காண்பிக்கும்படி உங்களுக்காக நான் காத்திருப்பேன். அல்லது உங்களது கட்சியை நிரூபிப்பதற் காக நீங்கள் என்னை தொலைபேசியில் அழைப்பதற்காக கவனித்துக் கொண்டிருப்பேன். நீங்கள் இந்த விஷயத்தின் பேரில் எனக்கு சவால் விடுக்காவிடில், நீங்கள் வேண்டுமென்றே ஆவிக்குரிய அறி யாமையில் நடந்துகொண்டிருக்கிறீர்கள், இந்த ஒலிநாடாவுக்கு அப்பால் இருக்கிற உங்களுக்கு இதைச் சொல்லுகிறேன். எது வெளிச்சம், எது அந்தகாரம் என்பதை அறிய நீங்கள் விரும் பினால், நாம் அதற்காக தேவனிடத்தில் கேட்கக் கடவோம். நான் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்று கூறியதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்னை அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிப் பீர்களானால் … அது திருவசனத்தின்படி சரியாக இல்லாவிடில், என்னை சீர்படுத்துவது உங்களுடைய கடமையாகும், உ, ஊ, என்ன நடக்கிறது என்று பாருங்கள். திரித்துவ உபதேசம் தவறானதாகும்.
77 மூன்று தேவர்கள் உண்டு என்று நம்புகிற அநேக ஆயிரக் கணக்கான திரித்துவவாதிகள்கூட இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், அவர்களுக்கு எந்த வித்தியாசமும் அதில் தெரியவில்லை. இச்செய்தியில் பின்னால் இதைப்பற்றி நாம் பார்க்கப்போகிறோம்.
ஒலிநாடாவை நிறுத்திவிட்டு நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டாம். திரித்துவ சகோதரர்களே, இதற்கு செவிகொடுங்கள். சில நிமிட நேரம் அமைதியாக அமர்ந்தி ருங்கள். உங்களுக்கு நீங்களே கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்க ளுடைய சபையாருக்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். பாருங்கள்? ஒலி நாடாக்களை பெறுவதை நிறுத்திவிடாதீர்கள். அதனோடு நிலைத்திருங்கள். திருவசனத்தைக் கொண்டு அது சரியாயிருக்கிறதா என்று அதை ஆராய்ந்து பாருங்கள். "எல்லா வற்றையும் சோதித்துப் பாருங்கள்'' என்று வேதவாக்கியம் கூறுகிறது.
இது புகழ்பெறாதது என்பதை நான் அறிவேன். இயேசுவும் அப்படியே புகழ்பெறவில்லை; செய்தியும் அப்படியே இருக்கிறது. எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்திருக்கிறது. உங்கள் மத்தியில் உள்ள வியாதியஸ்தரையும், வாதிக்கப்பட்டவரையும் குணமாக்க நான் வருகிறபொழுது, நீங்கள் அதை மகத்தானது என்றும், பெரிய கூட்டங்களை சேர்க்கிறது என்றும், சபையை அது கட்டியெழுப்புகிறது என்றும் நீங்கள் எண்ணினீர்கள். இயேசுவும் கூட ஒருநாள் சத்தியத்தைப் பிரசங்கிக்க ஈடுபடுகிறவரையிலும், அப்படியே செய்தார். அவர் அவ்வாறு செய்தபொழுது, அவரோடு இருந்த எழுபது பேர்களுங்கூட அவரை விட்டு விலகிப் போனார்கள். அவர் மீதியாயிருந்த பன்னிரண்டுபேர்களிடமாய் திரும்பி, "நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?'' என்று கேட்டார்.
அப்பொழுதுதான் பேதுரு அந்த குறிப்பிடத்தக்க வார்த்தை களை உரைத்தான்: ''ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே '' என்றான்.
தேவனுடைய வசனம் மட்டுமே நித்தியமாயிருக்கிறது. ஆகவே எங்காவது யாராவது "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின்'' நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி தேவன் செய்தாரென்று எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம்.
78 மத்தேயு 28:19ஐ எடுத்துக்கொள்ளுங்கள். ''பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.'' அங்கே மத்தேயு கூறுகிறான், "நீங்கள் புறப் பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்று, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'' என்பது ஒரு நாமம் என்று யாராவது எண்ணினால், அவர்களுடைய படிப்பில்தான் ஏதோ குளறுபடி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற பிஷப்புகளுக்கு, பிதா என்பது ஒரு நாமமல்ல, குமாரன் என்பது ஒரு நாமமல்ல, பரிசுத்த ஆவி யென்பதும் ஒரு நாமமல்ல என்று ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்த மாணவன் ஒருவன் சொல்லவேண்டிய அளவுக்கு அவர்கள் நிலை இருக்கிறது. அவைகள் யாவும் (அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவைகள்) வெறும் பட்டங்கள் மட்டுமே, அவைகளுக்கு ஒரு நாமம் உண்டு; அதுதான் இயேசு கிறிஸ்து வாகும்.
இவ்வாறு நான் கூறுவது கோபத்திலல்ல, அன்பினால் கூறப் படுகிறது. உலகம் பூராவிலும் உள்ள திரித்துவ சகோதரர்களால் அவர்கள் சபைகளில் பேசும்படி நான் அழைக்கப்பட்டதுண்டு; அவர்களிடத்தில் தேவதா மரியாதையோடும், அன்போடும் கிறிஸ்துவின் முழு சரீரத்தைப் பற்றியும் கருத்தில் கொண்டு இது கூறப்படுகிறது. நான் உங்கள் நடுவில் இருக்கையில் இதைக் குறித்து பேசியதேயில்லை. நீங்களே என்னை கேட்பீர்களென்றால், அப்பொழுது நான் உங்கள் ஆலயத்திற்கு வந்து அதைக் குறித்து உங்களோடு பேசுவேன். ஆனால் உங்கள் சபையார் இடத்தில் அதைப் பேசி விட்டால் அது அவர்களை பெரிதும் கலக்கிடுமே. நீங்கள்தான் உங்கள் மந்தையின் மேய்ப்பன், எனவே அது உங்களுடைய இடம். வெளிப்பாட்டை நீங்கள் உங்கள் மந்தைக்கு கொடுக்கவேண்டும். நான் ஊழியக்காரர்களிடம் பேசுகிறேன். நீங்கள் அதைப் புரிந்து கொள்ளாவிடில், வாருங்கள், நாம் உட் கார்ந்து சேர்ந்து விவாதிப்போம். "எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்'' என்று வேதாக மம் கூறுகிறது.
79 கண்ணாடிக் கடலில்தான் பலி கழுவப்பட்டது. நாம் கழுவப் பட்டிருக்கிறோம். ஓ, அதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். அதைப்பற்றி நாம் சிறிது நேரத்தில் திரும்பவும் பார்க்கப் போகிறோம். திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்தல். அங்கே நீங்கள் பிரவேசிப்பதற்கு முன்னர், நீங்கள் திருவசனத்திற்கு செவிகொடுக்க வேண்டும். ஏனெனில் தேவனை அணுகுவதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் விசுவாசத் தின் மூலம் ஆகும். அது சரிதானே? 'விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்''. நமது மனச்சாட்சி கழுவப்படுதல். ஒரு மனிதனை சந்திப்பதற்காக அல்ல, தந்தையை சந்திப்பதற்காக அல்ல, தாயாரை சந்திப்பதற்காக அல்ல, குழந்தையைச் சந்திப்பதற்காக அல்ல; (அவைகளெல்லாம் உண்மைதான், நாம் அதையும் செய்வோம்). ஆனால் நாம் முதலாவதாக வரவேண்டிய இடம் என்னவெனில், தேவனை அணுகுவதற்காக உள்ள வழியில்தான். அங்கு நாம் தேவனுடைய வார்த்தையை கேட்கையில் கழுவப்பட்டாக வேண்டும்.
80 விசுவாசத்தினால் நாம் நடக்கிறோம். தேவன் உங்களுக்கு என்ன செய்தாரோ அதுதான் கிருபையாகும். அது உண்மை . தேவனை நீங்கள் விசுவாசித்தீர்கள். தேவன் பேரில் நீங்கள் விசுவாசங் கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்களைப் பற்றி மனஸ்தாபங் கொண்டதுமே, நீங்கள் ஏற்கனவே மன்னிக்கப்பட்டி ருக்கிறீர்கள்.
நேற்று நான் ஒரு சகோதரனிடம் பேசிக்கொண்டிருக் கையில், அந்த விஷயத்தில் அவர் சற்று குழம்பிப் போயிருந்தார். நான் அவரிடம், 'பாரும், சகோதரரே, நீங்கள் உங்கள் மனைவியின் மனதைப் புண்படுத்தும்படியாக கூறினீர்களென்றால், உடனே நீங்கள் அதைப்பற்றி மனஸ்தாபப்பட்டு, உங்கள் மனைவிக்காக வருத்தப்படுவீர்களென்றால், நீங்கள் செய்ததைப் பற்றி மனஸ் தாபங்கொள்ளுகிறீர்கள், நீங்கள் ஏற்கனவே உங்கள் இருதயத்தில் மனந்திரும்பிவிட்டீர்கள், அது சரிதான், ஆனால் நீங்கள் அதைப் பற்றி போய் உங்கள் மனைவியிடம் கூறவேண்டும். நீங்கள் நிச்சயம் அவளிடம் போய், ''அன்பே, நான் அவ்வாறு கூறியதற் காக வருந்துகிறேன்'' என்று கூறியாக வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நீங்கள் முழுவதுமாக மனந்திரும்பினீர்கள் என்று ஆகும். தேவனிடத்திலும் காரியம் இப்படியாகத்தான் இருக்கிறது.
இந்தவிதமாக ஒரு மனிதன் போய் கூறுவானெனில் : "நான் அவளுடைய உணர்வுகளை புண்படுத்தி விட்டேன்; ஆனால் அதனால் ஒன்றும் பாதகமில்லை. நான் அவளிடம், நான் வருந்துகிறேன் என்று சொல்லுவேன், ஆனால் உண்மையில் நான் அவ்வாறு வருந்தவில்லை'' என இவ்வாறு நீர் கூறினால், நீர் ஒரு மாய்மாலக் காரன் ஆவீர். பாருங்கள், அது தேவனால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
நீங்கள் உங்களுடைய பாவங்களுக்காக முழுவதுமாக மனஸ் தாபப்படவேண்டும். அப்படி நீங்கள் உங்களுடைய பாவங் களுக்காக மனஸ்தாபப்படுகிறீர்கள் என்று அறிவீர்களென்றால், அப்பொழுது, மனந்திரும்பி பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது நீங்கள் பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீர்கள், அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள். தேவன் அதை மிகவும் எளிமையானதாக இருக்கும்படி செய்திருக் கிறார் என்பதைப் பாருங்கள்.
81 இந்தக் "கண்ணாடிக் கடல்' பளிங்குக்கொப்பாகக் கூறப் பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, இந்த கண்ணாடிக் கடலானது வெண்கலக் கடல் தொட்டியைக் கொண்டு அடையாளமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. பரலோகத்திலே இது கண்ணாடிக் கடல் என்று இருக்கிறது. மோசே அதைக் கண்ணாடிக் கடலாகப் பார்த்தான். அதுதான் "வெண்கலக் கடல் தொட்டி'' என்று அழைக்கப்பட்டது. ஒரு வெண்கல பலிபீடம்.
வேதாகமத்திலே வெண்கலம் எதைக் குறித்து பேசுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? நியாயத்தீர்ப்பைக் குறித்து. மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டாக்கினான். சர்ப்பமானது எதைக் குறிக்கிறது? அடையாளச் சின்னமாக இருந்த அந்த வெண்கல சர்ப்பமானது, 'அவர் அதன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்' என்று ஏதேன் தோட்டத்தில் சொல்லப்பட்ட பொழுது, பாவமானது ஏற்கனவே நியாயந்தீர்க்கப் பட்டது என்பதை சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது.
வெண்கலம், ''தெய்வீக நியாயத்தீர்ப்பை எடுத்துக் காட்டுகிறது. வெண்கல பலிபீடத்தின் மேல்தான் பலியானது சுட்டெரிக்கப்பட்டது. வெண்கலக் கடல் தொட்டியானது, பலி திருவசனத்தின் தண்ணீரினால் கழுவப்படுவதற்காக இருக்கிறது. பாருங்கள்? எலியா, தன் நாட்களிலே போய் வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு, "ஆகாயமானது வெண்கலம்போல் காணப்படுகிறது'' என்று கூறினான். (புறக்கணித்துவிட்ட தேசத்தின்மேல் உள்ள தெய்வீக நியாயத்தீர்ப்பை குறிக்கிறது). ஓ, என்னே! வெண்கலம்.
82 நாம் இப்பொழுது "கடல் தொட்டி " யண்டையில் இருக் கிறோம். கடல் தொட்டியானது காலியாகவும், பளிங்கைப் போலவும் இருந்தது என்பதை கவனித்தீர்கள். ஏன்? சபையானது ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது.
சற்று நேரம் கழித்து உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் மேலே வருவதைக் குறித்து கவனிக்கிறோம். அப்பொழுது முழுவதும் மீண்டும் அக்கினிமயமாக இருப்பதை காண்கிறோம். நீங்கள் அறிவீர்களா? அதை நீங்கள் வாசிக்க விரும்புகிறீர்களா? இப்பொழுது நாம் வெளிப்படுத்தின விசேஷம் 15ம் அதிகாரம் 2ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம், அங்கே மீண்டும் அக்கினி மயமான வெண்கலம் போன்றுள்ளதைக் குறித்து பார்க்கலாம்.
"பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது"
வெளி.15:1
இப்பொழுது தேவனுடைய கோபம் என்பதைப் பற்றி கவனியுங்கள்.
"அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒரு கடலையும், (இப்பொழுது கவனியுங்கள்) மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவசுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்.
'அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும்… பாடி…''
வெளி. 15:2-3
ஓ, அதை நீங்கள் கண்டீர்களா? ''உபத்திரவ காலம்'' ஓ! நீங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போக அவசரமாயுள்ளீர்களா? (சபையார் "இல்லை'' என்று பதிலளிக்கிறார்கள் - ஆசி.). நல்லது, கவனியுங்கள். இங்கு ஒரு காரியத்தை நாம் கவனிப்போம்.
83 எவ்வாறு நாம் வருகிறோம்? புறஜாதி சபையாகிய நாம் இந்த திருவசனத்திற்கு இக்கண்ணாடிக் கடலண்டையில், தண்ணீரா கிய திருவசனத்தண்டையில் வந்து, அது எழுதப்பட்டிருக்கிற வண்ணமாக அதை அங்கீகரித்து வரவேண்டும். அது சரிதானே? அப்பொழுது பலியானது ஏற்றுக்கொள்ளப்பட்டு, உள்ளுக்குள் ளாக பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுகிறது; அந்தக் காலத்திற்குரிய வெளிச்சத்தினால் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து ….. பரிசுத்த ஸ்தலத்திலிருந்து இதற்குள் வருகிறது. வந்து நட்சத்திரம் இருக்கிற ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு இங்கே வருகிறது. அதைப் புரிந்துகொண்டீர்களா?
இந்தக் காலத்தின் முடிவில், வெண்கலக்கடல் தொட்டியை யோவான் காண்கையில், அது பளிங்கைப் போல் தெளிவா யிருந்தது என்பதைக் கவனியுங்கள். அதற்கு என்ன அர்த்தம்? வார்த்தையானது பூமியினின்றும் எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது; சபையானது எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது, எனவே இனி அதில் இரத்தம் இல்லை; சபைக்காலமானது முடிவடைந்து விட்டது, எனவேதான் அது பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது.
84 இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 15ம் அதிகாரத் தில், ஸ்திரீயின் சந்ததியாகிய மீதியானவர்கள் உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் ஆவர்; அவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக கடந்து செல்லுகிறார்கள், அவர்கள் இந்தக் கடலின் மேல் நின்று கொண்டிருப்பதாகக் காணப்பட்டார்கள். அது அக்கினிமயமாக, இரத்தத்தால் நிறைந்து, சிவப்பான தீ நாவுகள் உள்ளதாக, தேவ அக்கினியானது எரிந்து கொண்டிருந்தது. பாருங்கள். அவர்கள் ரோமாபுரியாகிய மிருகத்தின் மேலும், அவனது இலக்கத்தின் மேலும், அவனது பெயரின் எழுத்துக்களின் மேலும், அவனது சொரூபமாகிய சபைகளின் சமஷ்டி அமைப்பின் மேலும் ஜெயங் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதைவிட்டு வெளியே வந்து விட்டார்கள். இந்த உபத்திரவகாலத்து பரிசுத்தவான்களாகிய இக்குழுவினரான மக்களை வெளியே கொணருவதற்காக, இஸ்ரவேலுக்காக தோன்றவிருக்கும் அந்த இரு தீர்க்கதரிசிகளாகிய மோசேயும் எலியாவும் செய்கிற பிரசங்கத்தின் மூலமாக அவர்கள் கொண்டுவரப்படுவார்கள்.
பாருங்கள், இப்பொழுது சபையானது எடுத்துக்கொள்ளப் பட்டாகிவிட்டது. இது நடக்கையில் கிறிஸ்துவின் மனைவி யானவள் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உபத்திரவ காலமானது… நகரத்தினுள் தனது இராஜாக்களையும், அவர்களுடைய எல்லா மகிமைகளையும் கொண்டு வந்திருக்கிறாள். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 22ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும்போது நீங்கள் அதைக் காண லாம். இதை நீங்கள் எழுதிக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே வந்தால், அதைப்பற்றி நாம் பார்க்கையில், நமக்கு அதின் அர்த்தம் என்ன என்பதை கண்டுகொள்ளலாம். அதனுடைய உன்னதமான இடங்களைத் தொடுவதற்கு நமக்கு நேரம் இல்லை. பிறகு, ஏதாவது ஒரு நாளில், ஒருவேளை கர்த்தருக்கு சித்தமானால், அதைப்பற்றி பேசுவதற்கு நமக்கு ஏராளமான தருணம் உண்டாயிருக்கும்.
85 இப்பொழுது எழும்பிவந்த உபத்திரவ காலத்து பரிசுத்த வான்கள், மகா உபத்திரவ காலத்திற்குள் கடந்து வந்திருக்கிறார்கள். சபையானது உபத்திரவ காலத்தினுள் போகாது. அவர்கள் ஏற்கனவே மகிமையில் இருக்கிறார்கள் என்பதைக் காண்கிறீர் களா? இதோ இங்கே உபத்திரவ காலத்து பரிசுத்தவான்கள் பரிசுத்த மாக்கப்பட்டவர்களாய் … என்னுடையதும் உங்களுடையதுமான தவற்றினால் அவர்கள் ஒருபோதும் வசனத்தை கேட்காதவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கேட்டிருந்தும், அதை அவர்கள் புறக் கணித்திருந்தால், அவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள், புறம் பான இருளில் தள்ளப்பட்டிருப்பார்கள், ஏனெனில் அவர்கள் வசனத்தை புறக்கணித்தபடியினால் இப்படியாகி இருக்கும். ஆனால் அவர்கள் ஒருபோதும் கேட்டேயிராவிட்டால், அப் பொழுது தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார்; உபத்திரவ கால மானது அவர்களுக்கு வருகிறது.
ஒரு நிமிடம் கவனியுங்கள், யோசித்துப் பாருங்கள். அதே வார்த்தையினால்தான் இவர்களும் கழுவப்பட்டுள்ளனர். இவர் களுக்கும் அதே பலிபீடம்தான், அதே கண்ணாடிக் கடல்தான், அதே திருவசனம்தான். வெளிப்படுத்தின விசேஷம் 2:5, அல்ல, வெளிப்படுத்தின விசேஷம் 15:2 முதல் 5ம் வசனங்கள் முடிய. ஒரு நிமிடம் கவனியுங்கள். நாம் அவர்களிடத்திற்கு தேவவசனத்தை எடுத்துக்கொண்டு போகவில்லை; அதனால்தான் அவர்கள் இவ்வித நிலையில் இருக்கின்றனர். அதற்காக நாம் பொறுப்பாளிகளாக்கப் படப்போகிறோம். எனவே நாம் அனைவரையும் பிடித்துக்கொள்ள இயலாமல் இருக்கிறது. இந்த காலத்தில் உள்ள சத்தியத்தை யுடைய சபையானது அப்படி செய்ய இயலாது. அவர்கள் யாவரும் உபத்திரவ காலத்திற்குள் போகிறபடியால், கடந்துபோன சபைக் காலங்களில் மரித்த பரிசுத்தவான்கள் அல்ல இவர்கள், ஏனெனில் இவர்களைப் பற்றி "மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்'' என்று கூறப்பட்டுள்ளது. மகா உபத்திரவ காலமானது, சபையானது பரம வீட்டிற்கு எடுக்கப்பட்ட பிறகு எதிர்வரும் காலத்தில் நிகழப் போகும் காரியமாகும்.
86 ஓ நான் அதை நேசிக்கிறேன். கவனியுங்கள். இன்னும் சற்று அப்பால் பார்ப்போம்; அவர்கள் என்னவிதமான வார்த்தையைக் கேட்டார்கள் என்பதைப் பற்றி நான் பார்க்கவிரும்புகிறேன். இப் பொழுது நாம் வெளி. 15ம் அதிகாரம் 2ம் வசனத்திலிருந்து துவக்குவோம்.
"அன்றியும், அக்கினி கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்ட லங்களைப் பிடித்துக் கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன்."
வெளி. 15:2
இப்பொழுது, அவர்கள் ஒருபோதும் உள்ளே பிரவேசிக்க வில்லையென்பதையும், ஆனால் அவர்கள் திருவசனத்தைக் காது களால் கேட்டிருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள். அவர்கள் திருவசனத்தை கேட்டிருந்தார்கள். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் என்னவிதமான உபதேசத்தைக் கேட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அது சபையோடு ஒத்துப்போகிறதா என்பதைப் பாருங்கள்.
"அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் (அப்பாடல் மோசே செங்கடலை கடந்த பிறகு பாடியதாகும்) ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; (யார் அந்த ஆட்டுக்குடி யானவர்? சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே அவர்) பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்".
வெளி. 15:3
87 அவர்கள் அவரை யாரென்று அடையாளங் கண்டு கொண்ட னர் என்பதைப் பார்த்தீர்களா? திரித்துவத்தில் உள்ள மூன்றாம் ஆளாக அல்ல, ஆனால் அவரை அவர்கள் ''சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர், பரிசுத்தவான்களின் இராஜா'' என்பதாகத்தான் கண்டு கொண்டனர். கவனியுங்கள்! நீங்கள் ஆயத்தமாயிருக் கிறீர்களா? 4ம் வசனம்:
"கர்த்தாவே, (ஆங்கிலத்தில் முதல் எழுத்து பெரிய எழுத்தில் உள்ளது. கர்த்தாவே என்பதற்கு, அது ஏலோஹிம் ஆகும்) யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?…"
வெளி. 15:4
நீங்கள் இப்பொழுது திருவசனத்தைக் கேட்டு, தண்ணீரினால் சுத்திகரிக்கப்படுவதுபோல், அதே தண்ணீரினால்தான் அவர்களும் கழுவப்படுகிறார்கள். அதே விசுவாசம்தான், சர்வவல்லமை பொருந்திய இயேசு கிறிஸ்துவின் அதே வல்லமைதான் இதுவும். ஆதியில் முழு வெளிப்படுத்துதலாக அது இருக்கிறது. இயேசு கிறிஸ்து யார் என்பதைப் பற்றிய வெளிப்பாடு, அதாவது, நம் மத்தியில் மாம்சமான தேவனாகிய இயேசு கிறிஸ்து யார் என்ற வெளிப்பாடு முழுவதும் வெளிப்படுத்தின விசேஷத்தில் பொதிந்து கிடக்கிறது.
'…உமது நாமம் மகத்துவமும் ஆச்சரியமுமானது…" ''…யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப் படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின.''
வெளி. 15:4
இதன் அர்த்தம் யாதெனில், 'அதை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அது என்னவாயிருக்கிறது என்பதைக் காண்கிறோம். உமது நியாயத்தீர்ப்புகள் பிரத்தியட்சமாக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே நாம் இங்கே நிற்கிறோம், இப்பொழுது நாம் கழுவப் பட்டிருக்கிறோம், உபத்திரவ காலத்தின் வழியாக நாம் வந்தபிறகு, நாம் இப்பொழுது கழுவப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் உமக்காக நிலை நின்றோம்; நாங்கள் உம்மை விசுவாசித்தோம். இப்பொழுது நாங்கள் கண்ணாடிக் கடலின் மேல் நின்றுகொண்டி ருக்கிறோம். உமது பரிசுத்த வசனத்தின் பிரதிபலிப்பில் உம்மை நாங்கள் கனம்பண்ணி, மகிமைப்படுத்திக்கொண்டிருக்கிறோம். உமது விளக்குகள் உண்மையாயிருக்கின்றன, உமது நியாயத் தீர்ப்புகள் நீதியுள்ளவைகள்.''
88 ஓ, என்னே ! "பரிசுத்த ஆவியின் அபிஷேகம்'' என்ற தலைப் பின் பேரில் நாம் ஒருவார காலம் ஆராயலாம்… இப்பொழுது இங்கே வரைந்திடவேண்டிய ஒரு விஷயம் என்னிடத்திலுண்டு, அதை நாம் இப்பொழுது வரைந்து கொள்வோமாக. நாம் இங்கேயே அதைப்பற்றி பார்க்கலாமே.
இப்பொழுது இங்கே நாம் கவனித்துப் பார்த்தால், இங்கே ஒரு மகத்தான காட்சி காணப்படுகிறது. இதோ இங்கே மகா பரிசுத்த ஸ்தலம் உள்ளது. இங்கே வருவதற்கு முன்பாக, முதன்முதலாக கடல் தொட்டியை காணலாம்.
இப்பொழுது கவனியுங்கள், நாம் எவ்வாறு தேவனை அணுகு கிறோம்? "விசுவாசம் கேள்வியினால் வரும் '' மகா பரிசுத்த ஸ்தலத் திலிருந்து அந்தந்த காலத்திற்குரிய தூதனுக்குள்ளாக பிரதிபலித்துக் கொண்டிருக்கும் தேவனுடைய வார்த்தையை கேட்கிறதினால் வரும்.
சாலொமோனின் ஆலயத்திலே, அந்த குத்துவிளக்குகள் தனது விளக்குகளின் ஒளியை அங்கே வெளியேயுள்ள அந்த வெண்கல கடல்தொட்டியின்மேல் பிரகாசித்து பிரதிபலித்தன. எனவே, இங்கே, அந்த சபைக்காலத்திற்குரிய தூதனானவன் அக்கடல் தொட்டியின்மேல் ஒளிவீசி பிரதிபலித்துக் கொண்டிருக் கிறான்; இங்கேயிருந்து கொண்டு, அவருடைய இரக்கத்தையும், அவருடைய திருவசனத்தையும், அவரது நியாயத்தீர்ப்பையும், அவரது நாமத்தையும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறவனே அவன். அங்கே யாவும் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. அதை நீங்கள் விசுவாசிப்பதன் மூலம், அங்கே வேறுபிரிக்கப்படுகின்றீர் கள். அதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா?
89 இங்கே இது எவ்வளவு அழகாயுள்ளது என்பதை கவனியுங்கள்; நாம் அதைப்பற்றி அன்றைக்கு பேசினோம். கவனியுங்கள். இங்கே, இங்கே. விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால் கழுவப்பட்ட பிறகு, இரண்டாவது ஸ்தலத் தில் பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள். அதன்பிறகு, பரிசுத்த ஆவி யினால் நிரப்பப்படுகிறீர்கள். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப் படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். அதை நீங்கள் கண்டு கொண்டீர்களா? அவருடைய செய்தியானது எவ்வாறு உள்ளது? கேட்டலினால் நீதிமானாக்கப்படுதல்; பரிசுத்தமாக்கப் படுதல் என்பது, நீங்கள் அதன்பேரில் என்ன செய்கிறீர்களோ அதைப் பொறுத்ததாகும்; அதை மெச்சும் வகையில், நீங்கள் என்ன செய்தீர்களோ அதை மதித்து, தேவன் உங்களை பரிசுத்த ஆவியினால் முத்திரையிடுகிறார்.
இப்பொழுது, என்னுடைய பாப்டிஸ்ட் சகோதரனே, நான் ஒரு காரியத்தை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். "தேவனை விசுவாசிப்பதைத் தவிர ஆபிரகாமினால் வேறு என்ன செய்திருக்க முடியும்? அது அவனுக்கு தேவனால் நீதியாக எண்ணப்பட்டதே'' என்று கூறுகிறீர்கள்.
இந்த ஸ்தலத்தில் அவனால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. அவன் தேவனை விசுவாசித்தான். ஆனால் தேவனோ, அவனது விசுவாசத்தை ஏற்றுக்கொண்டதற்காக விருத்தசேதன மாகிய முத்திரையை அவனுக்குக் கொடுத்து, அவனை முத்திரை யிட்டு, அவனது விசுவாசத்தை தான் ஏற்றுக்கொண்டதாக அதன் மூலம் காண்பித்தார். நீங்கள் தேவனில் விசுவாசங் கொண்டுள்ள தாக அறிக்கையிடுகிறீர்கள், அப்படியிருந்தும், ஒருபோதும் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்படாதிருக்கிறீர்கள். எபேசியர் 4:30, இவ்வசனத்தை எழுதிக்கொள்ள விரும்பினால் குறித்துக் கொள்ளுங்கள். எபேசியர் 4:30… முத்திரையாகப்பெற்ற தேவனு டைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.'' நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாதவரையிலும், நீங்கள் முத்திரையிடப் படவேயில்லை.
90 அம்முத்திரை எவ்வளவு காலத்திற்கு நீடித்திருக்கும்? அடுத்த எழுப்புதல் வரைதானா? நம்முடைய மீட்பு வரையிலும், நாம் மீட்கப்படுகின்ற அந்தநாள் வரையிலும் நீடித்திருக்கும். அதை விட்டு அகன்று போக வழியேயில்லை. அதைவிட்டு நீங்கள் அகன்றுபோகவே முடியாது. ஏனெனில், அது உங்களைவிட்டு அகன்றிடவே செய்யாது. பாருங்கள்? ஏனெனில் நீங்கள் மீட்கப் படும் நாள் வரையிலும் முத்திரையிடப்படுகின்றீர்கள். வருங்காலமோ, நிகழ்காலமோ, நாசமோசமோ, பசியோ, தாகமோ, மரணமா, அல்லது வேறு எந்த ஒன்றுமோ, கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமாட்டாது. பவுல் இதைப்பற்றி கூறுகையில், "நான் அதைப்பற்றி முழுவதுமாக நிச்சயித்திருக்கிறேன்'' என்று கூறினான். அது சரியாக அவ்வாறுதான் உள்ளது; நீங்கள் உங்களுடைய மீட்பின் நாள் பரியந்தமும் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்.
91 கவனியுங்கள், அது மீண்டும் கடந்த ஞாயிற்றுக் கிழமை பார்த்த விஷயத்தை திரும்பக்கொண்டுவரும். இதைப் பார்க்க எனக்கு நேரம் இருக்குமா? நான் … கவனியுங்கள். இதைக் கவனியுங்கள். ஆவி … ஆவி, ஆத்துமா சரீரம், பாருங்கள்: சரீரம், ஆத்துமா, ஆவி .
நான் அந்த வரைபடத்தை அழித்துவிட்டு வேறொன்றை உங்களுக்கு வரையப்போகிறேன். இப்பொழுது நான் ஒன்றை இங்கே உங்களுக்கு வரையப்போகிறேன். கடந்த ஞாயிறன்று இதை வரைய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே நான் எனக்காக இந்த மஞ்சள் நிற துண்டுக் காகிதத்தில் வரைந்து வைத்திருக்கிறேன். நான் இதை இங்கே வரைந்திட விரும்பு கிறேன்; ஏனெனில், நீங்கள் அதைக் குறித்துவைத்துக் கொள்ளவும், நான் கூறியதின் அர்த்தம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவும் அது வசதியாக இருக்கும். இதுதான் சரீரம், இதுவே ஆத்துமா; இதுதான் ஆவி - பரிசுத்த ஆவி அது. இவைகளினால்தான் நாம் உண்டாக்கப் பட்டிருக்கிறோம்.
92 இங்கே நீங்கள் கவனித்துப் பார்த்தீர்களானால், இங்கே பரிசுத்த ஸ்தலம் அடுத்து, மகாபரிசுத்த ஸ்தலம் உள்ளது. இங்கே பலிபீடம் - பரிசுத்த ஸ்தலம்; இங்கே கடல் தொட்டியுள்ளது, அவ் விடத்தில் தான் நீங்கள் வார்த்தையைக் கேட்கிறீர்கள். 'விசுவாசம் கேள்வியினால் வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.'' அது வேறுபிரிந்து வருவதைக் குறிக்கிறது, வேறுபிரிந்து வரச் செய்யும் கடல் தொட்டியாகும் அது. இப்பொழுது இதைக் கவனியுங்கள். இங்கே உள்ளே பிரவேசிப்பதற்கு ஒரேயொரு வாசல்தான் உள்ளது. அதற்காக நீங்கள் இங்கேதான் வரவேண்டும். அது சரிதானே?
எனக்கு வரைவதற்கு போதுமான இடம் இருந்தால் நலமா யிருக்கும். அப்படியிருந்தால், நான் இங்கே 'கன்னிகைகளை'' குறிப்பிடுவேன். "கலியான விருந்தையும் " வரைந்து காட்டுவேன். அது இன்னொரு விஷயம். அந்த கலியாண விருந்தில் அம்மனிதன் எவ்வாறு உள்ளே வந்தான் என்பதை பாருங்கள், அவன் வாசல் வழியாக வராமல் வேறு வழியாக உள்ளே நுழைந்துவிட்டான். இங்கேதான் வாசல் உள்ளது. "நானே வாசல்' என்று இயேசு கூறினார். கலியாண விருந்துக்கான மேசை இங்கே வைக்கப்பட்டி ருந்தது. அதைச் சுற்றிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். இங்கே ஒரு மனிதன் கலியாணவஸ்திரம் தரியாதவனாக உள்ளே நுழைந்திருந் தான். இராஜா வந்தபொழுது, அவர், ''சிநேகிதனே, நீ எவ்வாறு இங்கே உள்ளே நுழைந்தாய். எவ்வாறு உள்ளே பிரவேசித்தாய்?'' என்று கேட்டார். அவன் வாசல் வழியாக பிரவேசிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அவன் ஒரு ஜன்னல் வழி யாகவோ, அல்லது கொல்லைப்புற வழியாகவோ அல்லது ஒரு கோட்பாட்டின் மூலமாகவோ, அல்லது ஒரு மதஸ்தாபனத்தின் வழியாகவோ உள்ளே பிரவேசித்திருப்பான். அவன் வாசல் வழியாக பிரவேசிக்கவில்லை.
93 ஏனெனில், பழங்காலத்து கிழக்கத்திய நாடுகளில், இன்ன மும் அதே நடைமுறையைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். அதாவது, மணவாளனானவன், தன் கலியாணத்திற்கு அவனே அழைப்பைக் கொடுத்து, தான் அழைத்தவர்கள் வரும்போது, அவர்களுக்கு கலியாண வஸ்திரத்தையும் அளிக்கிறான்.
ஓ, அதைப்பற்றி எண்ணுகையில் எனதுள்ளம் எவ்வளவாய், அதைச்சுற்றிலும் வளைய வந்து கொண்டிருக்கிறது! "முதலாவதாக என் பிதா ஒருவனுக்கு அழைப்பு விடுக்காமல், அவன் என்னிடத் தில் வரமுடியாது. என் பிதா எனக்குத் தந்தவைகள் யாவும் என்னணடையில் வரும்.'' நாம் எவ்வாறு அழைக்கப்பட்டோம்? உலகத்தோற்றத்திற்கு முன்னரே, நமது பெயர்கள் ஆட்டுக்குட்டி யானவரின் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. எதற்காக வென்றால், ஒளியைக் கண்டுகொள்ளவும், உள்ளே பிரவேசிப் பதற்காக பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே. ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட பொழுது… ஆட்டுக்குட்டி யானவரின் நாமம் அங்கே எழுதப்பட்ட அதே நேரத்தில்தான் நமது நாமங்களும் அங்கே எழுதப்பட்டன. வேதத்தில், ''உலகத் தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரையும் அவன் மோசம்போக்கினான்'' என்று கூறப் பட்டுள்ளது. அதை சிறிது நேரத்திற்கு பிறகு பார்ப்போம்.
94 கவனியுங்கள், மணவாளன்தானே வாசலண்டையில் நின்றி ருப்பானெனில், அழைக்கப்பட்டவன் தனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிதழை கொண்டுவந்து, ''இதோ, இங்கே கொண்டு வந்திருக்கிறேன்.'' என்பான்.
மணவாளன், 'உமக்கு நன்றி'' என்று கூறிவிட்டு அவ் வழைப்பிதழை எடுத்து கீழே வைத்துவிட்டு, எல்லோருக்கும் கொடுக்கும் ஒரேவிதமான அங்கியை அவனுக்கு அணிவிப்பான்; அப்பொழுது அவர்கள் யாவரும் ஒன்றுபோல் தோற்றமளிப்பார் களல்லவா? நான் அதை விரும்புகிறேன். பாருங்கள்? தேவனு டைய வல்லமையிலே, ஜீவனுள்ள தேவனுடைய சபையிலே, பணக்காரர், தரித்திரர், அடிமை, சுயாதீனன், கறுப்பு நிறத்தவர், வெள்ளை, பழுப்பு, மஞ்சள் நிறத்தவர் யாவரும் ஒரேவிதமாகத்தான் தோற்றமளிப்பார்கள், ஏனெனில் அவர்கள் ஒரே பரிசுத்த ஆவியின் வல்லமையினால்தான் அணிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்த் தீர்களா?
இப்பொழுது இவ்வுவமையிலே, அம்மனிதன் வாசல் வழியாகப் பிரவேசிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
95 இப்பொழுது இங்கே கவனியுங்கள். ஒரு மனிதன் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் (எவராவது, ஏதாவது வேத போதகர் எனக்கு கூறுங்கள்) உள்ளே புக முயற்சித்தால், இங்கே இந்த வாசல் வழியாக வராமல் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் புகமுயற்சித்தால், அவன் மரித்துப் போவான். ஆரோனின் குமாரன் ஒரு நாளிலே, அந்நிய அக்கினியை, ஒரு ஸ்தாபன அக்கினியை, உள்ளே கொண்டுவர முயற்சித்தபோது, அவன் வாசலண் டையிலே மரித்தான். அந்த ஸ்தலத்தில் உள்ள அக்கினி ஸ்தாபன அக்கினியாக இருக்கக்கூடாது. அது சரியல்லவா? அல்லது ஏலியின் புத்திரர் அவ்விதமான காரியத்தைச் செய்தனர். அவர்கள் அவைகளை உள்ளே கொண்டுவந்தனர் என்று நம்புகிறேன். அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரருக்கு அடையாள மாயிருந்தனர்.
96 இந்த சரீரத்தினுள் பிரவேசிக்க ஒரு வழியுண்டு. எவ்வாறு இந்த சரீரம் கட்டுப்படுத்தப்படுகிறது? இப்பொழுது மிகவும் கவனமாக கவனியுங்கள். உங்கள் எழுதுகோல்களை ஆயத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். சரீரத்தினுள் செல்லுகிற வாசல் இதோ இங்கே இருக்கிறது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, இப்பொழுது நீங்கள் இதை வரைந்து கொண்டீர்களா? இப்பொழுது இங்கே இந்த முதலாவது வாசல்: பார்த்தல், முகருதல், கேட்டல், ருசித்தல், தொடுதல் அல்லது உணருதல் (அது எது ஒன்றாகவும் இருக்கலாம், பரவாயில்லை). இவைகள் சரீரத்தில் இருக்கும் புலன்களாகும். அப்படித்தானே? ஆறு புலன்கள் சரீரத்தை கட்டுப்படுத்துகின்றன என்பதை எத்தனை பேர்கள் அறிவீர்கள்? இப்பொழுது இதன் வழியாக உள்ளே நுழைந்தபிறகு நமக்கு உள்ளே அங்கே ஒரு ஆத்துமா இருக்கிறது. புலன்கள் புறம்பே உள்ளன. அதுதானே புறம்பே இருக்கிற அமைப்பாகும்.
இப்பொழுது இங்கே ஆத்துமாவில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து இயல்புக்குணங்கள் உள்ளன. அவைகளை நீங்கள் எழுதிக்கொள்ள விரும்புகிறீர்களா? முதலாவது கற்பனை யாகும். இரண்டாவது மனச்சாட்சியாகும். மூன்றாவது ஞாபகம் ஆகும். நான்காவது யோசனை, ஐந்தாவது பாசம் ஆகும்.
இவைகளையெல்லாம் நீங்கள் புரிந்து கொண்டீர்களா? புரிந்து கொள்ளவில்லையெனில் இப்பொழுதே எனக்குத் தெரியப்படுத் துங்கள். அவைகளையெல்லாம் நீங்கள் குறித்துக்கொண்டீர்களா? பார்த்தல், ருசித்தல், உணருதல், முகருதல், கேட்டல், என்பவை கள்தான் சரீரத்தில் உள்ள திறப்பாக இருக்கிறது.
ஆத்துமாவில் கற்பனாசக்தி, மனச்சாட்சி, ஞாபகசக்தி, எதை யுமே ஏன், எப்படி என்று யோசித்து ஆராய்தல், பாசம் ஆகிய புலன்கள், அல்லது இயல்புக் குணங்கள் உள்ளன. ஆத்துமாவில் புலன்களைப்போல் உள்ளன இவைகள். ஆத்துமாதான் தன்னுள் இருக்கிற ஆவியின் தன்மையாக இருக்கிறது. உங்களுக்குள்ளாக என்ன இருக்கிறதோ அதற்குரிய சூழ்நிலையை வெளியே எடுத்துக் காட்டுகிறதாக ஆத்துமாக இருக்கிறது.
அதுதானே பரிசுத்தமாகுதல் என்ற ஸ்தானத்தைக் கொண்ட தாக இருக்கிறது. ஆத்துமா அவ்வாறு இருந்து அவ்வகையான காரியத்தை அது அங்கே அமைக்கிறது. நல்லது, யாவரும் அதைக் குறித்துக்கொண்டீர்களா?
97 இப்பொழுது இந்த வாசலுக்கு… அங்கே ஒரேயொரு வாசல்தான் உள்ளது. அது "சுயவிருப்பம்'' என்று அழைக்கப் படுகிறது. அங்கே உள்ளே என்ன போகவேண்டுமோ அதற்குரிய எஜமானாக நீங்களே இருக்கிறீர்கள். அது என்ன செய்கிறது? இது என்ன? சரீரமானது கழுவப்படவேண்டும், கடல் தொட்டியிலே, அடுத்ததாக, இங்கே அது பரிசுத்தமாக்கப்படவேண்டும்; அடுத்து, இங்கே அது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறது. இது அப்பொழுது தேவனுடைய நியாயாசனமாக ஆகிவிடுகிறது. மீண்டும், தேவன் அங்கே உங்கள் இருதயத்தில் அமருகிறார், நீங்கள் ஏதாவது பிழை செய்தால், "ஓ, நான் பிழை செய்தேனே'' என்கிறீர்கள்.
சிலர், "நான் குட்டையான முடியைக் கொண்டிருந்தால் அது என்னை எந்த விதத்திலும் குற்றப்படுத்தவில்லை'' என்கிறார்கள். பெண்கள், "கை விரல்களில் வர்ணம் தீட்டிக்கொண்டாலோ, அல்லது முகவர்ணம் தீட்டிக்கொண்டாலுமோ, அது என்னை ஒரு விதத்திலும் குற்றப்படுத்தவில்லை' என்று கூறுகிறார்கள். "நான் நடனமாடச் சென்றாலோ, சிறிது வெள்ளைப் பொய் கூறினாலோ, நான் எனது சீட்டாட்ட பார்ட்டியில் சீட்டு ஆடினாலோ, அது என்னை ஒருக்காலும் பாதிக்கவில்லை, அது என்னை குற்றப்படுத்தவில்லை" என்று கூறுகிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களை குற்றப்படுத்த உங்களிடத்தில் ஒன்றுமில்லை. "அது எனது மனச்சாட்சியை பாதிக்கவில்லை'' என்று நீங்கள் கூறலாம். உங்களிடத்தில் மனச்சாட்சி என்ற ஒன்றே இல்லை, உங்களை பாதிக்கச் செய்யும் ஒன்றும் உங்களிடம் இல்லை. நீங்கள் உலகத்துக் குரியவர்களாக இருக்கிறீர்கள்.
ஆனால் நான் உங்களுக்கு அறைகூவல் விடுத்துகூறுகிறேன், நீங்கள் இயேசு கிறிஸ்துவை இந்த இடத்தில் உள்ளே வர இடம் கொடுத்துவிட்டு, அந்த காரியங்களை ஒரு தடவை செய்து பாருங் கள் பார்க்கலாம். சகோதரனே, நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் மிகவும் குத்தப்பட்டு, கண்டிக்கப்பட்டு, அதனின்று பின்வாங்கி விடுவீர்கள். ஏனெனில் அவர் பரிசுத்தமுள்ளவர். நான் இங்கே நின்றுகொண்டிருப்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு அது நிச்சயமாக நேரிடும். கேளுங்கள். நான் அதற்கான வேத வாக்கியத்தை குறிப்பிடுகிறேன். ''உலகத்திலும் உலகத்திலுள்ளவை களிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை".
98 "சுயவிருப்பம்' என்பது எவ்வாறு உள்ளது? அதை ஏன் சுய விருப்பம் என்று அழைக்கிறீர்கள், சகோதரன் பிரன்ஹாம் அவர்களே?'' என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில் ஒரு மனிதனையோ அல்லது ஸ்திரீயையோ, அது ஏதேன் தோட்டத்தில் இருந்த ஆதாம் ஏவாளைப் போன்ற அதே நிலையில் வைக்கிறது. எதன் பேரில்? இரு மரங்களின் பேரில், சுயவிருப்பம்… இந்த ஒன்று மரணமாகவும், இது ஜீவனையும் பற்றினதாக இருக்கிறது. சுயவிருப்பமானது… ஒழுக்கக்கேடு… ஒழுக்க நெறியில் நடப்பதற் கான செயல்படுதலை சுதந்திரமாக தீர்மானித்துக்கொள்ளட்டும் என்று தேவன் முதல் மனிதனாகிய ஆதாமையும் ஏவாளையும் அனு மதித்து அவர்களை அங்கே வைத்திருந்தார். அதேவிதமாகத் தான் உங்களையும் அவர் வைத்திருக்கிறார். இந்தக் காரியம் இங்கே நிலைப் படுவதற்கு ஒரே வழி உங்களுடைய சொந்த சுய சித்தம். தேவனு டைய சித்தத்தைச் செய்ய நீங்கள் சித்தங்கொள்ள வேண்டும். உங்களது சுயசித்தத்திற்கு நீங்கள் விடுவிக்கப்பட்டவர்களாகி, அதன் மூலம் தேவனுடைய சித்தம் உள்ளேவர அனுமதிக்க வேண்டும்; அது ஒன்றுதான் இருதயத்திற்கு நேராக வழி நடத்தும் மார்க்கமாக இருக்கிறது.
99 ஓ, பாப்டிஸ்டுகளே, ப்ரெஸ்பிடேரியன்களே, நீங்கள் சபையில் சேர்ந்து கொள்ளக்கூடும். மெதோடிஸ்ட்டுகளே, யாத்திரை பரிசுத்த சபையினரே, நீங்கள் பரிசுத்தமாகுதல் என்ற நிலை வரையில் மட்டும் வரலாம். ஆனால் நீங்களோ உங்களது சுயசித்தத் தில், தேவனுடைய சித்தத்தை செய்ய சித்தம் கொண்டு, இங்கே பரிசுத்த ஆவியை உள்ளே பிரவேசிக்கவிடவேண்டும், அதன் மூலமாக, "விசுவாசிக்கிறவர்களைப் பின் தொடரும் அடையாளங் களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள், வியாதியஸ்தர்மேல் கைகளை வைப் பார்கள், சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும்…'' என்ற வசனத்தின்படியான கிரியைகளைக் கொண்டுவர வேண்டும். "தங்களுடைய சித்தத்தை என்னுடைய சித்தமாக ஆகிட இடம் கொடுப்பவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும்; நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள்''. நான் கூறுவதை நீங்கள் கவனிக்கத் தவறமாட்டீர்கள் என்று நம்புகிறேன். தேவனுடைய சித்தத்தை செய்ய ஒரு சித்தம் உண்டு. நான் கூறுவதின் கருத்தை அறிந்து கொண்டீர்களா?
100 இங்கே பாருங்கள், பரிசுத்த ஸ்தலம், கடல் தொட்டி ஆகிய வற்றைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இங்கே விளக்குகள் உள்ளன. விளக்குத் தண்டுகள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு உள்ளன. அவைகள் ஒவ்வொன்றும் ஒளியைப் பெற்றிருக்கின்றன. அவைகள் எங்கிருந்து தங்களுடைய ஒளியைப் பெறுகின்றன? ஒளியானது எங்கிருந்து பிரதிபலிக்கின்றது? எதை நோக்கி அது பிரதிபலிக்கிறது? அது இங்கே ஒரு மூலையில் ஒரு ஸ்தாபனத்தின்மேல் பிரதிபலிக்கவில்லை. அது திரும்பி வார்த்தை யினிடத்திற்கே ஒளியைப் பிரதிபலிக்கிறது. அதுதானே வேறு பட்டு பிரிந்துவருவதின் தண்ணீராக இருக்கிறது. வ்யூ!
'அன்றியும் மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எரு சலேம் தொடங்கி சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத் தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.'' எருசலேமிலே, மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எவ்வாறு போதிக்கப் பட்டது? அது எதுவரைக்கிலும் போயிற்று? அகில உலகமும் போனது. அப்போஸ்தலர் 2:38ல் பேதுரு கூறுகிறான்: ''மனந் திரும்பி நீங்கள் ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங் கள். அந்தச் செய்தி அகில உலகமும் சென்றடைந்திடவேண்டும். அப்பொழுது முடிவு உண்டாகும். இந்தச் செய்தி உலகம் முழுவதுக்கும் சென்றடைந்தபிறகு, அப்பொழுது முடிவானது வரும்.
101 எங்ஙனம் இந்த விளக்குத் தண்டுகள் இங்கேயுள்ள இந்த சில மெதோடிஸ்ட், ப்ரெஸ்பிடேரியன்கள் அல்லது பெந்தெ கொஸ்தே ஸ்தாபனங்கள் மேல் ஒளியை பிரதிபலிக்கச் செய்யும்? நிச்சயமாக அவ்வாறு செய்யாது.
அதுதானே ஒளியை "இருக்கிறேன்'' என்பதாகத்தான் பிரதிபலிக்கும், "இருந்தேன்'' என்பதாக அல்ல. மூன்று அல்லது நான்கு வெவ்றுே நபர்களாக அல்ல, ஆனால் தேவன் அங்கே அமர்ந்திருந்து தம்மைத்தாமே அந்த ஒவ்வொரு சபைகளுக் குள்ளும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார். முந்தைய காலத்தைத் திரும்பப் பார்த்து அங்கே அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பாருங்கள். நாம் அதற்காக வரலாற்றை தொடர்ந்து ஆராய்ந்து பார்த்து வந்திருக்கிறோம். அவர்கள் அவரை இருந்தவரும், இருக்கிறவரும், எப்பொழுதும் எவ்வாறு இருக்கப்போகிறாரோ அந்த ரீதியில் பிரதிபலித்தார்கள்.
இருந்தவர்…'' அக்காட்சியை யோவான் கண்ட மாத் திரத்திலேயே'' இருந்தவரும், இருப்பவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவன், தேவனுடைய சிருஷ்டி, அல்பா, ஓமெகா, ஆதியும் அந்தமுமானவர்'' என்று கூறினான். அந்த உண்மையான ஒளிதான் பிரதிபலிக்கப்பட வேண்டும். அதை நீங்கள் காண்கிறீர்களா? ஆமென்! வ்யூ!
102 பன்னிரண்டு மணிக்குப்பிறகு…. கவனியுங்கள். நாம் விரை வாகச் செல்வோம், நீங்கள் அதை நகலெடுத்துக்கொள்ளத் தக்கதாக, உங்களை அதிக நேரம் காக்கவைக்க நான் விரும்பவில்லை. நான் மீண்டும் எப்பொழுது உங்களை காண்பேனோ எனக்குத் தெரியாது. நண்பர்களே, நீங்கள் இதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன், இது ஜீவனாயிருக்கிறது. இப்பொழுது பாருங்கள், நான் அதைப்பற்றி கூறுகிறபடியால், நான் என்னை உயர்த்திக்கூறுகிறேன் என்பது அர்த்தமல்ல. நான் அவ்வகையில் பிரதிபலித்துக்கொண்டிருப்பேனாகில் அப்பொழுது நான்… நீங்கள் என் இருதயத்தை தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள். "ஓ, இது… நீங்கள் ஒன்றுமற்றவர்கள்'' என்று நான் பிரதி பலிக்க முயற்சிக்கவில்லை. நான் அதைச் செய்ய முயற்சித்துக்கொண்டி ருக்கவில்லை. நீங்கள் அந்த ஒளியைப் பெற்றுக்கொண்டிராவிடில், இங்கே இருக்கிற அவரையே நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பிரசங்க பீடத்திலிருக்கிறவரை அல்ல, அங்கே சிம்மானத்தில் வீற்றிருக்கிறவரையே சுட்டிக் காட்டு கிறேன். அந்த சிம்மாசனம் உங்களது இருதயமாக மாறவேண்டும். அதுதான் இங்கே பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது என்பதை அப்பொழுது காண்பீர்கள்.
இங்கேயிருக்கும் இது என்ன? அது இதை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அது வார்த்தையாயிருக்கிறது. தண்ணீர்களாகிய திருவசனத்தால் கழுவப்படுதல், வார்த்தையினால் கழுவப்படுதல். வேறு பிரித்தலின் தண்ணிர்களினால், உலகத்தின் காரியங்களி லிருந்து, உலகத்திலிருந்து வார்த்தையினால் கழுவப்படுதல். ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வார்த்தை கூறுகிறது. 'அவர் பெந்தெகொஸ்தேயின் காலத்திலும் சீஷர்களின் காலத்திலும் மாறாமல் இருந்தார்; பிறகு அடுத்துவந்த காலத்தில் அவர் மாறிவிட்டார்'' என்று அது கூறவில்லை. அவ்வாறில்லை. அவர் மாறாமலேயே இருக்கிறார். பார்த்தீர்களா. வேறு எதையாவது கூறும்படி அதை நீங்கள் ஆக்க முடியாது. இந்த விஷயங்களில் ஒன்றில் மாத்திரம் நாம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டேயிருக்க முடியும். ஆனால் நீங்கள் அதைப் புரிந்துகொண்டு விட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை அழைத்திருந்தால் நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். அவ்வாறுதான் நான் விசுவாசிக்கிறேன். நல்லது, ஐயா.
103 இப்பொழுது, அது என்ன? நீதிமானாகுதல், பரிசுத்த மாகுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ; ஆத்துமா, சரீரம், ஆவி - யாவும் ஒன்றுதான். இப்பொழுது இந்த விளக்கு வார்த்தையைப் பிரதி பலித்துக்கொண்டிருக்கிறது. உண்மையான வார்த்தை எதைப் பிரதிபலிக்கிறது? ஷெகினா மகிமையிலிருந்தே இவ்விளக்கு பிரதிபலிப்பை பெற்றுக்கொண்டிருக்குமானால், அது ஷெகினா மகிமையையேதான் பிரதிபலிக்கும். அப்படித்தானே?
நீங்கள் உங்கள் ஒளியை ஒரு வேதக் கல்லூரியினின்று பெற்றுக் கொண்டிருப்பீர்களானால், நீங்கள் அந்த வேதக் கல்லூரி யையே பிரதிபலிப்பீர்கள். நீங்கள் அதை ஒரு மெதோடிஸ்ட் வேதக் கல்லூரியிலிருந்து பெற்றிருந்தீர்களானால், அப்பொழுது நீங்கள் மெதோடிஸ்ட் கொள்கைகளையே பிரதிபலித்துக் கொண் டிருப்பீர்கள். நீங்கள் பிரதிபலிக்கிறீர்கள். பெந்தெகொஸ்தே வேதக் கல்லூரியினின்றும் நீங்கள் அதைப் பெறுவீர்களானால், அப்பொழுது நீங்கள் பெந்தெகொஸ்தே கொள்கைகளையே பிரதிபலிப்பீர்கள். முட்செடியில் பற்றியெரிந்த தேவனுடைய மகிமையில் அதை நீங்கள் பெறுவீர்களாயின் …
104 மோசே தேவனுடைய சமுகத்தைவிட்டு வெளியே வந்த பொழுது, மக்கள் அவனது முகத்தை நோக்கிப் பார்க்கக் கூடா திருந்தபடியால், அவன் தனது முகத்தின்மேல் ஒரு முக்காட்டைப் போட்டுக்கொள்ள வேண்டியதாயிருந்தது அல்லவா? அவன் முழுவதும் தேவனுடைய வல்லமையால் நிறைந்திருந்தான்.
ஸ்தேவான் முழுவதும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு மனிதனாயிருந்தான். அவனை நிறுத்தப்பார்த்தார்கள். அச்செய் கையானது, காற்று பலமாய் அடிக்கிற நாளில் நெருப்புப் பற்றி எரிந்து கொண்டிருக்கிற ஒரு வீட்டை அணைக்க முற்படுவது போல் உள்ளது. அதை அணைக்க அவர்கள் ஊத ஊத, அது இன்னும் அதி கரிக்கவே செய்யும். அவனை உங்களால் தடுத்து நிறுத்தவே முடி யாது. அவனை சனதெரின் சங்கத்திற்கு முன்பாக கொண்டு போய் நிறுத்திய போது, "அவன் அங்கு நின்றுகொண்டு, தூதனைப் போல் தோற்றமளித்தான்'' என்று வேதம் கூறுகிறது.
"ஒரு தூதன்'' என்பது, அவன் வெறும் ஒரு குறிப்பிட்ட ஜீவ ராசியாக நின்று கொண்டிருக்கிறான் என்று நான் எண்ணவில்லை. ஒரு தூதன் என்று அவன் அங்கே குறிப்பிடும் பொழுது, தான் என்ன அர்த்தத்தில் அதைப் பற்றி குறிப்பிடுகிறோம் என்பதை அவன் அறிந்தேயிருக்கிறான். ஆகவே, சபைக்காலத்தில் தூதன் எவனும், செய்தியாளன் எவனும் அவ்வாறே அதைப் பற்றி, நன்கு அறிந்திருந்தவனாயிருக்கிறான்; தூதன் என்னப்படுவதைப் பற்றி வேதக்கல்லூரிகள் என்ன எண்ணுகின்றன, என்பதைப் பற்றி அவரிடம் போய் கேட்டு அறிந்து கொள்ள வேண்டியது அவனுக்கு அவசியமில்லை. அத்தூதனானவன் தேவன் தம்முடைய வேதத்தில் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பற்றி அறிந்தேயிருக்கிறான். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்கும்படியாக, அவனில் அவ்வல்லமையானது பிரதி பலித்துக் கொண்டிருக்கிறது. அவன் அஞ்சாதவனாக இருந்து, தான் சத்தியம் எது என்று அறிந்திருக்கிறானோ அதை அப்படியே சரியாகக் கூறுகிறவனாயிருக்கிறான். தேவனும் அவனோடு அங்கே நின்று, அவனுடைய செய்தியை அதேவிதமான அற்புத அடை யாளங்களோடும், அதே வார்த்தையோடும் ஆதரித்து பின்பலமாக இருக்கிறார். அது தான் ஒரு தூதனுடைய காரியமாகும்.
105 தான் பேசுவது இன்னதென்று அறிந்திருக்கிறதாக ஸ்தே வான் கூறினான். "வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக் களைப் போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப் படுத்தாமலிருந்தார்கள்?' என்று அவன் கூறினான். ''உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள். அதன்பிறகு அவர்களுக்கு கல்லறைகளைக் கட்டினார்களே' என்றும் கூறினான்.
சபை ஸ்தாபனங்களே, அதே காரியத்தை உங்களில் யார் செய்யாமல் இருந்தீர்கள்? பாருங்கள்? நீங்கள் சுற்றிலும் வெள்ளையடிக்கப்பட்ட மாளிகைகளையும், பிணக்கிடங்குகளையும் கட்டிக் கொண்டீர்கள்; அப்படியிருந்து கொண்டும் தேவனைக் குறித்துப் பேசுகிறீர்களே! நீங்கள்தான் அவரைப் பிணக்கிடங்களில் போட்டீர்கள், நீங்கள்தான் அவரைக் கல்லறையில் வைத்தீர்கள். அவரை அங்கே போட்ட அதே மக்கள்தான் அவ்விடத்தில் வெள்ளை மாளிகையான ஒரு ஆலயத்தை எழுப்பியிருக்கிறது; ஸ்தாபனங் கள், பரிசேயர் சதுசேயர்தான் அவரை அங்கே கொன்று கிடத்தினார்கள். அப்படியெல்லாம் செய்து அவருக்கு அங்கே ஒரு நினைவுச் சின்னமும் எழுப்ப முயற்சியும் செய்தார்கள்.
106 கிறிஸ்து ஜீவிக்கிற ஒருவர் என்பதை நான் உங்களுக்கு கூறு வேனாக. மரித்துப்போய்விட்ட ஒருவர் அல்ல அவர். மரித்தோரி லிருந்து உயிரோடெழுந்து என்றென்றும் உயிரோடிருக்கிறவராக அவர் இருக்கிறார். ஓ, சகோதரனே, நிச்சயமாக அப்படித்தான்! அது என்ன செய்கிறது? அது எதை பிரதிபலிக்கிறது? அது இங் கிருந்து பிரதிபலிக்கிறது, அது என்னவாயிருக்கும்? அவரை உண்மையாக பிரதிபலிப்பது என்ன? அது முதலாவதாக பிரதி பலிப்பது என்னவெனில், அவருடைய நாமத்தைத்தான் அது முதலில் பிரதிபலிக்கிறது. அது சரிதானே? அது அவருடைய நாமத் தை பிரதிபலிக்கும். அடுத்து அது பிரதிபலிப்பது எதையென்றால், அவருடைய வல்லமையை. நான் கூறுவதைப் புரிந்து கொண் டீர்களா? அவர் என்னவாயிருக்கிறாரோ அதையெல்லாம் அப்படி யே பிரதிபலிக்கும்.
ஆகவே, இது இங்குள்ள இந்தக் காலத்திற்கு அவர் என்ன வாகவெல்லாம் இருந்தாரோ, அதை இப்பொழுதும் அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிறதென்றால், அவர் மாறாதவராயிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. வ்யூ, மகிமை! மகிமை! அது என்ன? அது அவரை இருந்தவராகவும், இருக்கிறவராகவும், எக்கா லத்தும் இருக்கப்போகிறவராகவும் அப்படியே பிரதிபலித்துக் காட்டுகிறது; ஏனெனில், அது நேரடியாக தேவனுடைய சிம்மா சனத்திலிருந்து வருகிறதாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதே தேவன்தான், அதே வல்லமை, அதே மகிமை, எல்லாம் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக் கிறார், ஓ சகோதரனே!
107 இன்னும் இதற்குமேல் உள்ளதையும் கவனிப்போம். நாம் இப்பொழுது இந்த 4ம் அதிகாரம் 6ம் வசனத்தின் மீதிப்பகுதியை யும் எடுத்துக்கொள்ளுவோம். நான் அதன்பேரில் சில கருத்துக்களை இங்கே எழுதி வைத்துள்ளேன், ஆனால் அவைகளை என்னால் முடிந்தவரை விரைவாகப் பார்க்க வேண்டுமென நான் விரும்பு கிறேன். இப்பொழுது மீதியுள்ளது… இவ்வதிகாரத்தை நீங்கள் கடந்து சென்றபின்,… இவ்வசனத்தை வாசித்து முடித்தபிறகு, அந்த ஜீவன்கள் என்ன செய்தன என்பதைக் குறித்து கூறுகிறதா யிருக்கிறது. அதைப்பற்றி நாம் படிக்க முடிகிறதா என்று பார்ப் போமாக. "கண்ணாடிக்கடல்.'' இப்பொழுது நாம் அது என்ன என்பதைப் பற்றி அறிவோம்.
"… அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும்… நான்கு ஜீவன் களிருந்தன…''
வெளி. 4:6
இப்பொழுது இங்கே எத்தனை பேர்களிடத்தில் வேதாகமத்தின் திருத்திய பதிப்பு உள்ளது? உங்களுடைய திருத்திய பதிப்பில், 'ஜீவிக்கிற மிருகங்கள்'' (living creatures) என்று கூறப் பட்டுள்ளது. ஜேம்ஸ் அரசனின் பதிப்பில் எவ்வாறு அது "நான்கு மிருகங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைப் பற்றி, அது ஏன் அவ்வாறு உள்ளது என்று நான் வியக்கிறேன். நல்லது, நான் கிரேக்க மொழி அகராதியில் அதைப்பற்றி என்ன அர்த்தம் கூறப்பட்டுள்ளது என்று காண் பேனாக. இதோ அது என்னவென்று இங்கே கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனமாகப் பாருங்கள். இங்கே இவ்வார்த்தை எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை குறித்துக்கொள்ளுங்கள்; அதினால் நீங்கள் அதைப்பற்றி திட்டவட்டமாக அறிந்து கொள்ளலாம். உங்களால் கூடுமென்றால், உங்களுக்கு விருப்ப மானால், நான் கூறுவதை குறித்துக்கொள்ளுங்கள். திருத்திய பதிப்பு (ஆங்கில) வேதாகமத்தில் 'ஜீவிக்கிற சிருஷ்டிகள்'' என்று கூறப்பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள்.
'… அந்த நான்கு மிருகங்களிலும்… சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன…''
வெளி. 4:8
அவ்வசனம் தொடர்ந்து இவ்வாறு அம்மிருகங்களைப்பற்றி விவரித்துக் கூறுகிறது. அதைப்பற்றி இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் பார்த்துவிடுவோம். இப்பொழுது இம்மிருகங்கள் எடுத்துக் காட்டாய் உள்ளன. இந்த "மிருகங்கள்'' என்பனவற்றினைப் பற்றி உங்கள் வேதாகமத்தில் ஓரக்குறிப்பு (marginal reading) உள்ளதா? உங்களிடத்தில் அவ்வகையான வேதாகமம் இருந்தால், அப் பொழுது அதில் உள்ள ஓரக்குறிப்பைப் பாருங்கள். டாக்டர் ஸ்கோஃபீல்ட் இங்கே, தான் மொழிபெயர்த்த வேதாகமத்தில் அதைப்பற்றி குறிப் பிட்டிருக்கிறார். மிருகங்கள் என்பதைப்பற்றி அவர் இங்கே ''ஜீவனுள்ள சிருஷ்டிகள்'' என்று குறிப்பிட்டிருக் கிறார். ஓ, என்னே! இப்பொழுது கவனியுங்கள். அதற்குரிய கிரேக்க பதமானது. Z-O-O-N; கிரேக்க மொழியில் அது "சூன்'' (ZOON) என்று அழைக்கப்படுகிறது; அதன் அர்த்தம் என்னவெனில் ''சிருஷ்டிகள்'' என்பதாகும்.
108 நீங்கள் இப்பொழுது வாசிக்க விரும்பினால் … நமக்கு நேரம் போதவில்லை. நான் அதை வாசிக்கவேண்டுமென இருந்தேன். ஆனால் நான் அவ்வாறு செய்யப்போவதில்லை. எழுதிக்கொள்ளுங் கள்: வெளிப்படுத்தின விசேஷம் 11, 13, 17 ஆகிய அதிகாரங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 11, 13, 17 ஆகிய அதிகாரங்களில் அங்கே மிருகங்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களில் மிருகங்களுக்கு கிரேக்க மொழியில் 'தேரியான் t-h-e-r-i-0-n என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கிரேக்க பதமாகிய 'தேரியான்' (Therion) என்பதற்கு 'மனிதரால் வளர்க்க முடியாத காட்டு விலங்கு' என்று அர்த்தமாகும். 'தேரியான்' என்ற கிரேக்க வார்த்தைக்கு ''வளர்க்கப்படாத ஒரு காட்டு மிருகம்'' என்று பொருளாகும்.
ஆனால் 'சூன்' (zoon) என்பதற்கு ஒரு சிருஷ்டி' என்று அர்த்தமாகும். நான்கு ஜீவன்கள்' (சூன்-'Zoon'). அது 'தேரியான் (therion) என்று சொல்லப்படும் காட்டுமிருகங்கள் அல்ல. ஆனால் 'சூன்' ("Zoon") "உயிருள்ள சிருஷ்டிகள்'' என்று அர்த்தமாகும்.
'தேரியான்' என்றால், 'வளர்க்கப்பட இயலாத காட்டு மிருகங்கள்'' என்று அர்த்தமாகும். அதாவது, வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில் நீங்கள் கவனித்தால், "ரோமாபுரி யாகிய மிருகம்; 13ம் அதிகாரத்தில் ''அமெரிக்க ஐக்கிய நாடு களாகிய மிருகம்"; 17ம் அதிகாரத்தில் அமெரிக்கா, ரோமாபுரி ஆக இரண்டையும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. அதுதானே கத்தோலிக்க கொள்கைகளோடு ஒன்றிணைந்து கொண்டுள்ள ஸ்தாபன சபைகளைக் குறிக்கும். அம்மிருகங்கள் சுவிசேஷத்திற்கு மனந்திரும்பாத, குணப்படாத, வளர்க்கப்பட முடியாதவை களாகும். வளர்க்கப்படமுடியாதவைகள்.
109 "தேவனுக்கு ஸ்தோத்திரம்; நாங்கள் பெரிய மெதோடிஸ்ட் சபையிலிருந்து வந்தவர்கள், பாப்டிஸ்ட்டுகளிலிருந்து வந்த வர்கள், ப்ரெஸ்பிடேரியனிலிருந்து வந்தவர்கள்; பெந்தெ கொஸ்தே ஸ்தாபனத்திலிருந்து வந்தவர்கள். நாங்கள் பேசுவது இன்னதென்று அறிந்துள்ளோம். யாரும் எங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை" என்று கூறுகிறீர்கள். இதோ உங்களை இனம் காட்டிவிட்டீர்கள். நீங்கள் குணப்படாத, மனந்திரும்பாத, சுபாவ அன்பில்லாத வர்கள், உடன்படிக்கையை மீறுகிறவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையடக்கமில்லாதவர்கள், நல்லோரைப் பகைக்கிறவர்கள், வேஷத்தைத் தரித்து…
(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.)… இப்பொழுது அதைப் பற்றி பாருங்கள். நான் அதை இன்னும் விளக்கமாக பிரித்து வகைப்படுத்திக்கூற விரும்புகிறேன். ஆனால் நான்… எனவே இது எப்படியாயினும் ஒலி நாடாவில் பதியப்பெற்றுவிடுமென்பதால் … ஆனால் அதைச் செய்வதற்கு நமக்கு நேரம் போதவில்லை. இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டீர்களா? எத்தனை பேர்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள்? புரிந்துகொண்டால் ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி.) பாருங்கள், இவைகள் இப்படியாயிருக்கின்றன.
110 'சூன்' ("Zoon") என்றால் என்ன? ஜீவனுள்ள சிருஷ்டிகள் (living Creatures) என்பதுதான் அதன் பொருள். அது சூன்' என்று உச்சரிக்கப்படவேண்டும். அதை நீங்கள் எவ்வாறு உச்சரிப்பீர்கள்? 'சூன்'. அதை 'சூன்' என்று நான் உச்சரிப்பேன்.
'தேரியான்' இந்த வார்த்தைக்கு ''திருத்தியமையாத குணப்படாத மிருகங்கள்'' - காட்டுத்தனமாக கொடூர மிருகம் என்று அர்த்தமாகும். மிருகங்கள் அப்படிப்பட்டவைகள்தான். நீங்கள் போய் உங்களுடைய கிரேக்க மொழி அகராதியை எடுத்து அந்த வார்த்தைக்குள்ள அர்த்தம் அப்படியிருக்கிறதா இல்லையா என்பதைப் பாருங்கள். உங்களுடைய கிரேக்க மொழி அகராதியை எடுத்துப்பாருங்கள். எம்ஃப்படிக் டயக்லாட்டை (Emphatic Diaglott) எடுத்துப்பாருங்கள். ("எம்பாடிக் டயக்லாட்'' என்பது புதிய ஏற்பாடு அதன் மூல பாஷையாகிய கிரேக்க பாஷையில் எழுதப்பட்டதும், அதன் அருகில் சரியான ஆங்கில மொழி பெயர்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளதுமானதாகும் - மொழி பெயர்ப் பாளர்). அதில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பாருங்கள். அங்கே வெளிப்படுத்தின விசேஷம் 11,13,17 ஆகிய அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகங்கள் ''பழக்கி வளர்க்கப்பட முடியாத காட்டு மிருகம்'' என்ற அர்த்தத் தில்தான் உண்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள்.
ஆனால் இங்கே வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத் தில் உள்ளதோ, "ஜீவனுள்ள சிருஷ்டிகள்'' (தமிழ் வேதாகமத்தில் ''ஜீவன்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளன - மொழிபெயர்ப் பாளர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளதேயல்லாமல், மிருகங்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. ஆங்கில வேதாகமத்தில் "மிருகம்'' என்று எழுதப்பட்டுள்ளது; ஆனால் அது அவ்வாறு அந்த அர்த்தத்தில் அல்ல. எசேக்கியேல் 1ம் அதிகாரம் 1 முதல் 28 முடிய உள்ள வசனங்களிலும் அதே விஷயம் உள்ளது. இன்னும் ஒரு நிமிடத்தில் அதைப்பற்றி நாம் பார்க்கலாம்.
''பழக்கிவளர்க்கப்படாத, குணப்படாத, மனந்திரும்பாத காட்டு விலங்கு'' - பழக்கி வளர்க்கப்படாத.
ஆனால் இவைகளோ "ஜீவிக்கிற சிருஷ்டிகள்'' அவைகள் என்ன? அவைகள் தூதர்கள் அல்ல. அவைகள் என்ன என்பதை நான் உங்களுக்கு கூறுவேன். நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷத்தில் 4ம் அதிகாரத்திற்கு அடுத்த பக்கத்தில் உள்ள 5ம் அதிகாரத்தைப் பார்ப்போம். வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரம் 11ம் வசனம்:
"பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன் களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய ( தூதர்கள்'' என்று பன்மையில் உள்ளது ) சத்தத்தைக் கேட்டேன். ( என்பது இணையிடைச் சொல் ஆகும்). (இணையிடைச் சொல் என்றால், சொற்களையும் தொடர்களையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று - இணைக்கும் சொல் - மொழி பெயர்ப்பாளர்).
வெளி. 5:11)
'and' என்பது இணையிடைச் சொல் ஆகும். (மேலே கண்ட வசனம் ஆங்கிலத்தில் "சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும்'' என்று வருகின்ற இடத்தில் தமிழில் 'யும்'' என்று சொற்களை இணைக்கும்படி வருகிறது போல ஆங்கில வசனத்தில் இணையிடைச் சொல்லாக (Conjunction)" and வருகின்றது - மொழி பெயர்ப்பாளர்) அந்த ஜீவன்கள் என்னப்பட்டவைகள் தூதர்கள் அல்ல, அவைகள் மூப்பர்களுமல்ல; அவைகள் சிங்காசனத்தின் அருகிலிருந்த ''ஜீவனுள்ள சிருஷ்டிகள்''. ஓ, நீங்கள் அதை நேசிக்கவில்லையா? ஜீவனுள்ள சிருஷ்டிகள்! அவைகள் தூதர்களல்ல, ஏனெனில் பின்வரும் வசனத்தில் அதைப்பற்றி நிரூபிக்கப்படுகிறது:
"பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும், ஜீவன் களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்…
வெளி. 5:11
111 இங்கே மூன்று வெவ்வேறு வகையினங்கள் உள்ளன. இவ்வமைப்பை நீங்கள் யாவரும் இப்பொழுது இங்கே குறித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நான் அதை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன். அங்கே மூன்று வெவ் வேறு வகையினங்கள் உள்ளன, மூன்று வெவ்வேறு உயிரினங்கள் சிங்காசனத்தைச் சுற்றிலும் உள்ளன. இப்பொழுது பாருங்கள்.
இதோ இங்கே சிங்காசனம் உள்ளது. இப்பொழுது இங்கே முதலில் சிங்காசனத்தின் அருகில் இருப்பவை நான்கு ஜீவன்கள் ஆகும். அதற்கு வெளியே இருபத்து நான்கு மூப்பர்கள் தத்தமது சிறியதும், கீழாக இருக்கிறதுமான சிங்காசனங்களின் மேல் அமர்ந்திருந்தனர். இதையெல்லாம் சுற்றி, இந்த பெரிய சேனை யாகிய தூதர்கள் சிங்காசனத்தைச் சூழ்ந்து நின்றார்கள். ஓ, ஓ, ஓ! நான் கூறுவதைப் புரிந்து கொண்டீர்களா? அவர்கள் ஒவ்வொரு வரும் வெவ்வேறு வகைப்பட்டவர்கள். அங்கே தூதர்கள் உள்ளனர்; இங்கே மூப்பர்கள் உள்ளனர்; இங்கே ஜீவன்கள் உள்ளன.
112 ஒரு நிமிட நேரம் அதை விட்டு விலகிச் செல்லவேண்டாம். சற்று ஒரு நிமிட நேரம் நாம் பற்றிக்கொண்டிருப்போம். "ஜீவனுள்ள சிருஷ்டிகள்''. அந்த ஜீவன்கள் தூதர்கள் அல்லது மீட்கப்பட்ட மனிதர் அல்லாவிடில் அவர்கள் யார்? அதை நீங்கள் அறிய விரும்புகின்றீர்களா? இதோ அதைப்பற்றி என்னுடைய வியாக்கியானம். அது சரியானது என்று நான் நம்புகிறேன். அவர்கள் தேவனுடைய சிங்காசனத்தைக் காக்கும் தேவனுடைய காவலர்கள் ஆவர் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது நாம் ஒரு சிறிது இதை கரும்பலகையிலிருந்து நீக்கப்போகிறோம். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் தூதர்களோ, மனிதரோ அல்ல. அவைகள் காட்டு விலங்குகளும் அல்ல. அவைகள் சிருஷ்டிகள் - ''ஜீவனுள்ள சிருஷ்டிகள்'' ஆகும்.
இப்பொழுது, இதோ இங்கே தேவனுடைய சிங்காசனம் உள்ளது. இதோ இவைகள் அவருடைய காவலர்கள் ஆவர். இன்னும் சில நிமிடங்களில், அதைப்பற்றி கூறும் வசனத்தை நாம் சிறிது வாசித்து பார்ப்போமாக. பாருங்கள், அவர்கள் தேவனுடைய தூதர்கள், இல்லை, தேவனுடைய சிங்காசனத்தைக் காக்கும் தேவனுடைய காவலர்கள் ஆவர். அவர்கள்… ஒரு நிமிடத்தில் அதைப் பெற்றுக்கொள்வோம். நாம் எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்திற்கு திரும்பிப்போவோம். நான் இவைகளைப் பற்றி இங்கே என்னிடம் எழுதிக் குறித்துவைத் துள்ளேன். அவைகளைப் பற்றிப் பார்க்காமல் கடந்து செல்ல நான் விரும்பவில்லை. நாம் எசேக்கியேல் 1ம் அதிகாரம் 12ம் வசனத்தில் ஆரம்பித்து 17ம் வசனம் முடிய உள்ளதை ஒரு நிமிடத்தில் பார்ப்போம்.
"அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர் முகமாய்ச் சென்றது…"
எசே. 1:12
113 நாம் இப்பொழுது இன்னும் சில சிமிடங்களில் பார்க்கப் போகிறோம். இங்கே இந்த 7ம் வசனத்தை நினைவில் வைத்துக் கொள்வோம். அவைகளின் தோற்றம் எதற்கொப்பாய் அந்நான்கும் இருந்தன என்பதை வெளிப்படுத்தின விசேஷத்தின் அதே அதிகாரத்தின் 7ம் வசனத்தில் பார்ப்போம்.
"முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷ முகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன."
வெளி. 4:7
எசேக்கியேல் தேவனுடைய மகிமையைக் கண்ட போது, அவன் யோவான் கண்ட அதே காரியத்தையே கண்டான். கடந்த ஞாயிறன்று, தேவனுடைய மகிமையைப் பற்றியுள்ளதை நாம் எவ்வாறு பெற்றுக்கொண்டோம் என்றும், நம்மோடுகூட அதின் படம் எடுக்கப்பட அவர் செய்தார் என்றும் பார்த்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள். அதை நினைவில் வைத்திருக்கிறீர்களா? தேவனுடைய மகிமையை எசேக்கியேல் எவ்வாறு இருக்கக் கண்டானோ, அதேவிதமாகத்தான் யோவானும் கண்டான், இன்றும் இங்கே அவ்வாறே அது இருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவை எசேக்கியேலின் காலத்திலும் மாறாத வராகவும், இப்பூமியில் அதேவிதமாகவும், இன்று நம்மோடு அதே தேவனாக இருக்கவும் செய்கிறது. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பதைக் காண்பிக்கிறது. இருந்தவரும், இருக் கிறவரும், வருகிறவருமானவராகக் காண்பிக்கிறது. ஆத்துமா, சரீரம், ஆவி ஆகியவற்றுக்குள் பிரவேசிக்கும் வாசலான வார்த்தையாகிய வெண்கலக்கடல் தொட்டியாக அவர் இருக்கிறார். நமது ஆத்துமாவை பரிசுத்தமாக்குபவராகவும், பரிசுத்த ஆவி யினால் நிரப்புகிறவருமாகவும் இருக்கிறார். யாவும் அவரேதான், அவரேதான்.
114 இதை இப்பொழுது கவனியுங்கள்.
'… ஆவி போக வேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப் பார்க்கவில்லை."
எசே. 1:12
அவைகளால் திரும்ப முடியவில்லை. இவைகள் இந்த வழியாக செல்லுமென்றால், அது ஒரு மனிதனைப் போல் போயிற்று, இந்த வழியாகச் செல்லுமென்றால், அது ஒரு கழுகைப்போல் போனது; இந்த வழியாகச் செல்லுகிறதென்றால், அது ஒரு காளையைப்போல் போயிற்று; இந்த வழியாகச் செல்லுமென்றால் ஒரு சிங்கத்தைப் போல் போனது. அவைகளால் பின்னால் செல்ல முடியவில்லை. சென்ற எவ்விடத்தும் அந்த ஜீவன்கள் ஒவ்வொன்றும் முன்னோக்கியே போகவேண்டியதி ருந்தது. வேதத்தில் ஒரு மிருகம் எதைக் குறிக்கும்? வல்லமையைக் குறிக்கும். ஒரு வல்லமையைக் குறிக்கும்.
115 இப்பொழுது:
''ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் (ஆங்கில வேதாகத்தில்
''…ஜீவன்களுக்குள்ளே மேலும் கீழும் சென்றது…'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - மொழி பெயர்ப்பாளர்.) பிரகாசமா யிருந்தது; அக்கினியிலிருந்து ஒளி புறப்பட்டது (அது தேவனாயி ருக்கிறது) -
அக்கினியிலிருந்து ஒளி புறப்பட்டது (இவ்வுலகுக்குரிய ஒளியல்ல, அது நித்திய ஒளியாகும்). (சகோ. பிரன்ஹாம் 'மின்னல்' என்பதை 'ஒளி' என்று படிக்கிறார் - மொழி பெயர்ப்பாளர்.) அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம் போல ஓடித்திரிந்தன.
நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, (நாம் இதைப் பார்க்கலாம்) பூமியில் ஜீவன் களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப் பச்சை வருணமாயிருந்தன; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாபோல இருந்தது.
எசே. 1:13-16
"இவ்வடையாளச் சின்னமானது என்ன சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, அது என்னவாயிருக்கிறது?'' என்று கேட்பீர்கள். அதன் அர்த்தம் என்னவெனில்: இக்காவலர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டி… அவைகளை எசேக்கியேல் கண்டபொழுது, அவைகள் தங்களில் சக்கரங்களைக் கொண்டிருந்து, பயணம் செய்துகொண்டு இருந்தன. ஆனால் யோவான் அவை களைக் கண்டபொழுதோ, அவைகள் ஏற்கனவே பரலோகத்தில் அவைகளுக்குரிய சரியான ஸ்தானத்தை வந்தடைந்துவிட்டன. தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியானது பூமியில் இருந்த பொழுது, சக்கரங்களினாலும் ஓடித் திரிந்தது, அவர்கள் அதை இடம் விட்டு இடம் எடுத்துச் சென்றனர், அது பயணம் செய்து கொண்டேயிருந்தது, அவர்கள் அதை வனாந்தரத்தின் வழியாகவும், ஆலயத்திற்குள் போகிற வரையிலும், வழி நெடுகிலும் அதை எடுத்துச் சென்றனர், ஆனால் இப்பொழுது அது உன்னதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது, ஏனெனில் சபைக்காலமானது முடிவடைந்துவிட்டது, அது மகிமையில் ஏறெடுத்துக்கொள்ளப் பட்டுவிட்டது. பார்த்தீர்களா? அது பரலோகத்தில் இப்பொழுது ஸ்திரமாக அமைந்துவிட்டது. அதைச்சுற்றி தூதர்களும் மற்றும் இன்னபிறவும் சூழ்ந்திருக்கத் தக்கதாக உள்ளது. சற்றுப் பொறுத்து, அவர்கள் தங்கள் கிரீடங்களை எடுத்துவிட்டு, முகங்குப்புற விழுந்து, அவருக்கு மகிமையைக் கொடுத்துக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். பாருங்கள்? அவர்கள் தேவனுடைய ஆலயத் திலுள்ள உடன்படிக்கைப் பெட்டியின் காவலர்கள் தாமே.
இப்பொழுது, இவர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியின் அல்லது கிருபாசனத்தின் காவலர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். யோவான் எத்தனை பேர்களைப் பார்த்தான்? நான்கு பேர்கள். எத்தனை பேர்களை எசேக்கியேல் கண்டான். அவனும் நான்கு பேர்களை, நான்கு ஜீவன்களைக் கண்டான். அவர்கள் இருவருமே ஒரேவிதமான தரிசனத்தைக் கண்டார்கள் என்பதை இப்பொழுது கவனியுங்கள்.
116 நான்கு என்ற எண்ணானது பூமிக்குரியதாயிருக்கிறது. அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? எத்தனை பேர் நான்கு என்ற எண் பூமிக்குரியது என்று அறிவீர்கள்? நான்கு என்ற எண்ணானது பூமிக்குரிய எண்ணாகும். நிச்சயமாக! நான்கு எபிரெய… போல்… அது பூமிக்குரிய ஒரு எண்ணாக இருக்கிறது. அது விடுதலையைக் குறிக்கும் ஒரு எண்ணாக இருக்கிறது. "விடுதலை" என்பதை நீங்கள் உங்கள் மனதில் வையுங்கள். அதை நான் இன்னும் ஒரு நிமிடத்தில் மிகவும் தீவிரமாக விளக்கிக் கூறப்போகிறேன். ''விடுதலை" என்பதைப் பாருங்கள். அக்கினிச் சூளையினுள் மூன்று எபிரெயப் பிள்ளைகள் இருந்தனர். ஆனால் நான்காவதாக ஒருவர் அங்கே வந்தபோதோ, அது விடுதலையைக் கொண்டுவந்தது. லாசரு மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தான்; நான்காவது நாள் வந்தபொழுதோ, அவன் விடுவிக்கப்பட்டான். ஆகவே நான்கு "விடுதலையை அளிக்கும் தேவனுடைய எண்ணாக இருக்கிறது. ஆகவே இந்நான்கு ஜீவன்களும்கூட நிச்சயமாக பூமிக்கு சம்மந்தமுள்ளதாகத்தான் இருக்கவேண்டும்.
இப்பொழுது நீங்கள் பசியாயிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். உங்களுடைய ஆவிக்குரிய பசியானது லௌகீகப் பசியைவிட மேலானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? சரி.
117 இப்பொழுது கவனியுங்கள். அவைகளுக்கு கண்கள் இருக் கின்றன. (எசேக்கியேலில் இங்கே இருக்கிறது). முன் புறத்திலும் பின்புறத்திலும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. அதைப்பற்றி நாம் சற்று வாசிப்போம். இங்கே பாருங்கள். இங்கே நான்கு முகங்களையுடைய ஜீவன்களைப் பற்றி அவர்கள் பேசினார்கள்; கழுகைப் போலுள்ளது… செட்டைகள். உள்ளும் புறம்பும் கண்களால் நிறைந்திருந்தன.
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் அவ்வாறு சிறகு களுள்ளவைகளும்…
வெளி. 4:8
அவைகள் பறந்து சென்றன. அவைகள் சுற்றிலும் உள்ளேயும் பின்புறமும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகளுடைய விவேகத்தைப் பற்றி அது பேசுகிறது. அவைகள், என்ன இருந்தது, இருப்பது, வரப்போகிறது என்பதைப் பற்றி அறிந்திருந்தன. ஏனெனில் அவைகள் சிங்காசனத்தின் அருகிலே மிகவும் நெருக்கமாக இருக்கின்றன. எனவே அவைகள் மானிடருமல்ல. ஆலய காவலர்கள்… அல்ல அவர்கள் ஆலய காவலர்கள் அல்ல. ஆலயக் காவலர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களாவர். ஆனால் இவைகளோ கிருபாசனத்தின் காவலர்களாவர். சிங்காசனத்தின் காவலர்கள் ஆவர். தேவனுக்கு அடுத்து, சிங்காசனத்தின் அருகில் இருப்பவைகள்தான் அந்த நான்கு ஜீவன்களாவர். அவைகள் தேவனுக்கு அடுத்தபடியாக உள்ளன. அவைகள் அங்கே நின்றுகொண்டிருக்கின்றன. இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமானவர் யார் என்பதை அறிந்த விவேகமுள்ள வைகளாய் உள்ளன. அவைகள் தங்களில் புறம்பே கண்களை உடையவைகளாய் இருந்தன; எனவே அவைகளால் என்ன வரப்போகிறது என்பதை காண முடியும் என்பதைக் காட்டுகிறது; உள்ளே கண்களால் நிறைந்திருந்தன என்றால், இப்பொழுது இருக்கிறதையெல்லாம் அவைகள் அறிந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது; பின்னால் கண்கள் இருக்கின்றன என்றால், என்ன இருந்தது, நடந்தது என்பதை அவைகள் அறிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. இருந்ததை யும், இருப்பதையும் வரப்போகிறதையும் அறிந்துள்ள இவைகள் "இருந்தவரும், இருப்பவரும், வருகிறவருமாகிய நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற'' இயேசு கிறிஸ்துவை சபைக்காலங்களில் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
118 அவைகளைப் பற்றி கவனித்துக்கொண்டேயிருங்கள். இன்னும் சில நிமிடங்களில் நாம் அதைப்பற்றி விரிவாக கரும்பலகையில் வரைந்து பார்க்கப்போகிறோம். அதைக் கவனியுங்கள். இன்னும் ஒரு நிமிடத்தில் …
அவைகளுடைய விவேகத்தைக் குறித்து வெளிப்படுத்தப் படுகிறது. அவைகள் அறிந்திருக்கிறதைப் பற்றி அது காண்பிக் கிறது. அவைகளுக்கு எதிர்வரும் காலத்தைக் குறித்தும், நிகழ் காலத்தைக் குறித்தும், கடந்த காலத்தைக் குறித்தும் எல்லாம் தெரியும்.
அவைகள் களைப்படைவதேயில்லை. மனுஷ சம்மந்தமாக அவைகளிடம் ஒன்றுமில்லை; மனிதனோ களைப்படைகிறான். ஆனால் அவைகளோ களைப்படைவதேயில்லை. பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்! சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று இரவும் பகலும், ஒவ்வொரு காலத்திலும் ஓயாமல் துதித்துக்கொண்டேயிருக்கின்றன.
119 என் மனதில் ஒரு வேதவாக்கியம் இருக்கிறது, ஒரு நிமிடத்தில் அதற்கு நாம் திரும்பிச் செல்லுவோம். ஏசாயா 6ம் அதிகாரத்தை விரைந்து எடுத்துக்கொள்வோம். கவனியுங்கள். சரியாக அதே விதமாக அதே காரியத்தை ஏசாயா கண்டான்.
கர்த்தர் ஒவ்வொரு தரிசனமும்…. அதைக் குறித்துத்தான் கூறுகிறேன். இன்று நமக்கு கிடைக்கும் தரிசனங்கள் வேதாகம தரிசனங்களுக்கு சரியாக இல்லாவிடில், அவைகள் தவறாக இருக்கும். அவர் என்னவாயிருந்தாரோ அதற்கு மாறாக அத்தரிசனங்கள் பிரதிபலிக்குமெனில், அல்லது எந்தவொரு வெளிப்படுத்துதலும், தேவன் என்னவாயிருந்தாரோ அதற்கு மாறாக இருக்குமெனில், அப்பொழுது அது தவறான வெளிப் பாடாகவே இருக்கும். மத்தேயு 17ம் அதிகாரத்தின்படி, சபையானது முழுவதும் வெளிப்படுத்தலின்மேல் தான் கட்டப் பட்டுள்ளது.
120 நாம் ஏசாயா 6ம் அதிகாரத்தைப் பார்ப்போம். இவ்விளம் தீர்க்கதரிசியானவன் அப்பொழுது இருந்த அந்த நல்ல அரசனின் ஆதரிக்கும் கரத்தில் நிம்மதியாக சாய்ந்து இருந்தான். அந்த அரசன் தனக்கு நல்ல வஸ்திரங்களையெல்லாம் வாங்கிக்கொடுத்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் முன்னேறிச் சென்றுகொண்டேயிருந்தான். ஒருநாள் அரசன் மரித்துவிட்டான். எனவே அவன் இடமாற்றம் செய்ய வேண்டியது வந்தது, எனவே அவன் ஜெபம் பண்ணுவதற்காக ஆலயத்திற்கு சென்றான். இராஜா இருந்த இடத்தில் இருந்து வந்த அவன், அங்கிருந்து வெளியேறிட வேண்டியதாயிற்று. வயது சென்ற அந்த நல்ல அரசன் ஒரு நல்ல பரிசுத்த மனிதனாக இருந்தான். ஏசாயா வெளியே வந்து மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைக் கண்டு ஆலயத்திற்குச் சென்றான். இப்பொழுது கவனியுங்கள்.
உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (மகிமை).
ஏசா . 6:1
அவருடைய வஸ்திரத் தொங்கல்' என்பது என்ன? இதோ அதற்கான விளக்கம் இதுதான்; அது "தூதர்கள், ஜீவன்கள்'' ஆகும். அவரைப் பின்பற்றின ஆடைப் பின்தொங்கல் (வஸ்திரத் தொங்கல்) ஆகிய அவர்கள்தான் அவரின் பின்னால் வருபவர்கள் ஆகும். 'அவரது வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.''
"சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள். அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.
கூப்பிடுகிறவர்கன் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது'' (என்னே ! ஓ, என்னே ).
ஏசா. 6:2-4
121 அம்மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் சரியாக அதே காரியம் தான் தரிசனத்தில் காண்பிக்கப்பட்டது என்பதை இக்காட்சி காண்பிக்கிறது. பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்' என்று அந்த ஜீவன்கள் களைப்படையாமல் ஓயாமல் இரவும் பகலும் சொல்லிக்கொண்டே யிருக்கின்றன. "கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்!'' என்றன.
நாம் இப்பொழுது வேதத்தில் இந்த ஜீவன்களைப் பற்றி அறிந்து கொள்ள சற்று பின்னால் திரும்பிப்போவோம். வேதத்தில் முதலில் ஆதியாகமத்தில்தான் இந்த காவலர்களைப் பற்றி குறிப் பிடப்பட்டுள்ளது. இப்பொழுது ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நாம் பிரசங்கிக்கும் ஒவ்வொரு விஷய மும் ஆதியாகமம் முதற்கொண்டு வெளிப்படுத்தின விசேஷம் முடிய உள்ளதக இருக்கவேண்டும். இவ்விஷயத்தில் உங்களுக்கு எப்பொழுதாவது ஏதாவது கேள்வி இருக்குமானால், நீங்கள் என்னிடத்தில் வந்து கேட்கலாம். தேவன் மாறாதவராயிருக்கிறார், எனவே எந்தவொரு விஷயமும் முழு வேதாகமத்தின் அடிப்படை யிலும் இருக்கவேண்டுமேயல்லாது, வேத்திலிருந்து அரைகுறை யாக ஏதோ ஒரு பாகத்திற்குட்பட்டதாக இருக்கக்கூடாது. அவர் ஆதியாகமத்தில் என்னவாக இருந்தாரோ, இன்றைக்கும் அதே விதமாகத்தான் இருக்கிறார்; அவர் நடுவான காலத்திலும் அவ்வாறே இருந்தார், அவ்வாறே எப்பொழுதும் இருக்கிறார். பார்த்தீர்களா? இப்பொழுது ஆதியாகமத்தில் இருந்த கேரு பீன்கள்… அவைகளைப் பற்றி நான் அந்த விதமாகத்தான் தெரிந்து கொண்டேன். அவைகள் ஆதியில் எவ்வாறு இருந்தன என்பதைப் பற்றி பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.
122 நாம் இப்பொழுது சற்று ஆதியாகமம் 3:24க்கு திரும்புவோம். ஆதியாகமம் 3ம் அதிகாரம் 24ம் வசனம். நீங்கள் அதை நேசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்'') என்று சொல்லுகிறார்கள் - ஆசி) சரி , 22-ம் வசனத்திலிருந்து துவங்கு வோம். அதை நான் விரும்புகிறேன். சிறிது கூடுதலாக இவ்வசனத்தை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் ஒரு நாளில் அது மிகவும் நன்மையான ஒரு காரியத்தைச் செய்யக்கூடும்.
"பின்பு… கர்த்தர்: இதோ, மனுஷன்… நம்மில் ஒருவரைப்போல் ஆனான்…"
ஆதி. 3:22
இப்பொழுது, எனது அன்புள்ள, விலைமதிப்புள்ள, அருமை யான சகோதரிகளே, (நான் இதை இவ்விதமாகக் கூறுவேனாக), உத்தமும், பண்பமைதியுள்ள, விலையுயர்ந்த அணிகலனாக இருக்கின்ற பெண்மையை நான் இழிவுபடுத்துவதாக நீங்கள் எண்ண வேண்டாம். ஸ்திரீயானவளைப் பற்றி, அவள் என்ன என்பதைப் பற்றி, இங்கே நான் காண்பிக்க விரும்புகிறேன். தயவுகூருங்கள், ஒலி நாடாவில் செய்தியைக் கேட்கப்போகும் பெண்களே, நான் உங்களை வசைபாட முயலவில்லை. ஒளியைக் கொண்டுவரும் கர்த்தருடைய ஊழியக்காரனாக மாத்திரமே நான் இருக்கிறேன். ஒரு பெண் கெட்டவளாயிருந்தால், அவள்தான் இப்பூமியில் இருக்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்குள்ளேயே மிகவும் கீழ்த்தரமானவளும், ஒழுக்கக்கேடான ஜென்மமாக இருக்கிறாள். ஒரு மனிதனுக்கு, அவன் அடைந்திருக்கும் இரட்சிப்புக்கு அடுத்தபடியாக, அவன் அடையும் மிகவும் விலையுயர்ந்த அணிகலன் எதுவென்றால், ஒரு நல்ல மனைவியே யாவாள். நான் தாழ்ந்த, ஒழுக்கக் கேடான, தரங்கெட்ட பெண்மணிக்கே இவைகளைக் குறித்துப் பேசுகிறேன். இதோ, இப்பொழுது நான் உங்களுக்கு அதைக் குறித்து காண் பிக்கப்போகிறேன், நான் ஏன் …. பெண்கள் பிரசங்கிகளாகவும், மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் அல்லது இன்னபிற அலுவலர்களில் எதிலும் சபையில் ஈடுபடக்கூடாது என்று ஏன் வேதா கமம் கூறுகிறது என்பதைப் பற்றி நான் உங்களுக்கு இப்பொழுது காண்பிப்பேன். இப்பொழுது இதைக் கவனியுங்கள்:
"பின்பு… கர்த்தர்: இதோ, மனுஷன் (ஆண்டவர் இதோ மனுஷன் நம்மில் ஒருவரைபோல் ஆனான்'' என்றுதான் சொன்னாரேயல்லாமல், "இதோ மனுஷி நம்மில் ஒருவரைப் போல் ஆனாள்'' என்று கூறவில்லை). நன்மை தீமை அறியத் தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான் (மனுஷி அப்படியாகவில்லை, அவள் வஞ்சிக்கப்பட்டாளே. அதை நீங்கள் கவனித்தீர்களா?)
123 பவுல் கூறினான், ''உபதேசம் பண்ண வும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை…. என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். எனவே அவள் தேவனில் ஒருத்தியாக ஆகவில்லை. அவளுக்கு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாடே தெரியாது. அவள் வஞ்சிக்கப்பட்டாள். அதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? புரிந்து கொண்டீர்களென்றால், "ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையார் "ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி.)
"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவ விருட்சத்தின் கனியையும் புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
அவர் மனுஷனைத்துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்திற்குப்போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத் தையும் வைத்தார். (அங்கே நான்கு ஜீவன்களைப் பார்த்தீர்களா? கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு வழிகள் நீங்கள் செல்லத்தக்கதாக உள்ளன) (தமிழ் வேதாகமத்தில் "வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயம்'' என்று மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது - ஆனால் ஆங்கில வேதாகமத்திலோ, "எத்திசையிலும் திரும்பி இருக்கிற சுடரொளிப் பட்டயம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)
ஆதி. 3:22-24 இந்த கேருபீன்கள் வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தை ஏதேன் தோட்டத்து வாயிலில் பெற்றவைகளாய் இருந்தன. எதற்கென்றால், ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியைக் காவல் செய்யும்படியாகத்தான். (ஏனெனில் மனிதன் அம்மரத்தை கையை நீட்டிப் பறித்து புசித்துவிட்டால் என்றென்றைக்கும் உயிரோடிருந்துவிடுவான்.)
124 இக்கேருபீன்கள் முதலில் குறிப்பிடப்பட்ட இடத்தில், ஏதேன் தோட்டத்தின் கிழக்கே உள்ள வாயிலில் வைக்கப் பட்டிருந்தன; அவைகள் நான்கு புறத்திலும் சென்றன. நான் அதை இதிலிருப்பதைவிட சற்று வித்தியாசமாக வரைந்து காண் பித்திருக்க வேண்டும்; தேவனுடைய மாதிரிகளை நான் சரியான விதமாக அதேவிதமாக வரைந்திட முடியாதுதான், ஆனால் நான் கூறுவதின் அர்த்தம் என்னவென்பதை அறிந்து கொள்வதற் காகத்தான் நான் இதை உங்களுக்கு வரைந்து காண்பித்திருக் கிறேன். அதோ அங்கே ஏதேன் தோட்டம் உள்ளது. இதோ இதுதான் ஏதேன் தோட்டத்திற்குள் பிரவேசிப்பதற்கான திறந்து மூடும் அமைப்புள்ள வாயிற்கதவு ஆகும். இந்த வாயிற் கதவில் தான் கேருபீன்கள் உள்ளன. கேருபீன்கள்! "ஒரு கேருபீன்' என்று அங்கே குறிப்பிடப்படவில்லை. "கேருபீன்கள்'' என்றே குறிப் பிடப்பட்டுள்ளன. கேருபீன்கள் எதை காவல் காப்பதற்காக அங்கே வைக்கப்பட்டிருந்தன? ஜீவவிருட்சத்தை காவல் செய்ய . ஜீவ விருட்சத்துக்கு போகும் வழியை காவல் செய்யத்தான் அவைகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. அந்த வழி'' யார் அந்த வழியாக இருக்கிறார்? இயேசு. அது எங்கிருந்து கொண்டு பிரதிபலிக்கிறது? இதோ இங்கே பரிசுத்த ஸ்தலம் உள்ளது. இங்கேதான் கேருபீன்கள் உள்ளன.
இப்பொழுது கவனியுங்கள். இவைகள் யாவையும் குறித்துக் கொள்ளுங்கள். இதோ இங்கே மகா பரிசுத்த ஸ்தலம் உள்ளது, இதுதான் மகா பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். அடுத்தது, பரிசுத்த ஸ்தலம்; இதோ இங்கே இருப்பது கடல் தொட்டி, இங்கே இருப்பது விளக்காகும், இங்கிருந்துவரும் ஒளியை ஏழு குத்து விளக்குகள் பெற்று இங்கேயும், இங்கேயும், இங்கேயும், இங்கே யும், இங்கேயும், இங்கேயும், இங்கேயும் இருந்து பிரதிபலிக் கின்றன. பார்த்தீர்களா? அவைகள் எதை பிரதிபலிக்கின்றன? அவைகள் தேவனுடைய அக்கினியைப் பெற்று அதை பிரதி பலித்துக்கொண்டே, ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியை காவல் செய்துகொண்டிருக்கின்றன. அவ்வொளியானது, இந்த இடத்தி லிருந்து, அதாவது ப்ரெஸ்பிடேரியன் வேதக் கல்லூரியிலிருந்தோ, அல்லது பெந்தெகொஸ்தே வேதக் கலாசாலையிலிருந்தோ வந்திட முடியாது. அது இங்கிருந்து வரும் ஒளியைத்தான் பிரதிபலிக்கிறது.
125 யோவான் கண்ட இக்கேருபீன்கள், ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியைக் காவல் செய்வதில் அக்கறையுள்ளவைகளாய் இருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்; எனவே அவைகள் மானிடரில் அக்கறையுள்ளவைகளாகத்தான் இருக்க வேண்டும். ஆதியாகமத்தை திரும்பவும் எடுத்துக்கொண்டு அதிலிருந்து படியுங்கள். அவைகள் ஜீவவிருட்சத்துக்கு போகும் வழியை காவல் காத்து நின்றன. அதுதான் ஜீவனுக்குப் போகும் வழியாகும். அவ்வழி எவ்வாறு உள்ளது? இயேசு கூறினார்: "நானே வழி. வானத்திருந்து தேவனிடமிருந்து வந்த அப்பம் நானே, ஒருவன் இந்த அப்பத்தைப் புசித்தால், அவன் என்றென்றும் ஜீவிப்பான்'' இப்பொழுது, ஜீவவிருட்சத்துக்கு திரும்பிப்போவதற்கு ஒரு வழி உண்டாயிருக்கிறது. அதை நீங்கள் கண்டுகொண்டீர்களா?
இப்பொழுது இங்கே நான் உங்களுக்கு இது ஒரு பலிபீட மாக இருக்கிறது என்பதை காண்பித்து, அதை நிச்சயப்படுத்த விரும்புகிறேன். இதுதானே ஏதேன் தோட்டத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பலிபீடமாக இருந்திருக்க வேண்டும். அது எப்படி என்பதை நான் உங்களுக்கு கூறுவேன். காயீன், ஆபேல் ஆகிய இருவரும் தொழுது கொள்வதற்காக இங்கேதான் வந்தார்கள் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பலிபீட மானது எடுத்து ஏதேன் தோட்டத்தின் வாயிலில் வைக்கப்பட்டது என்பதையும், ஏதேனுக்குள் திரும்பவும் செல்வதற்கு உரிய ஒரே வழியாக இந்த பலிபீடமே உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. ஏதேனுக்கு பலிபீடத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதை திரும்பவும் இங்கே பார்க்கிறோம். இந்த பலிபீடமானது இரத்தத்தால் மூடப்படாத வரையிலும், எவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, அவைகள் போகும் வழியை அவைகள் காத்துக்கொண்டு, அதைக் காவல் செய்ய வேண்டும்.
(ஓ தேவனே, மக்களால் அதைக் காண முடியாதா?) இரத்தம் இல்லாமல் வேறெவ்விதத்திலும் உள்ளே நுழைய முடியாது என்பதைப் பார்த்தீர்களா? அங்கே ஒரு பரிகாரம், அதாவது பிராயச் சித்தம் இருந்தாக வேண்டும். இந்த நியாயத்தீர்ப்பு ஆசனமானது கிருபாசனமாக ஆகிடவேண்டும். அதின் மேலிருந்து இரத்தம் நீக்கப்பட்டதுமே, அந்த நியாயத்ததீர்ப்பின் நாளிலே, மீண்டும் அம்மரத்தை பாதுகாக்க தேவனுடைய கோபாக்கினை அங்கே நின்றுகொண்டிருக்கும். ஏதேன் தோட்டத்திற்குள் மீண்டும் இந்த வாசல் வழியாக பிரவேசிக்க வேண்டுமானால், இயேசு கிறிஸ்து வின் இரத்தத்தின் மூலமாக மாத்திரமே. இதை நீங்கள் கண்டு கொண்டீர்களா?
126 இப்பொழுது கவனியுங்கள். இதோ இங்கே காயீன் இருக் கிறான், இதோ இங்கே ஆபேல் இருக்கிறான். இந்த இரு வாலிபர் களும் இந்த வாசலண்டையிலே தொழுதுகொள்வதற்காக வரு கின்றனர். எனவே அது தேவனுடைய பீடமாகத்தான் இருக்க வேண்டும், அப்படித்தானே? இந்த ஒரே பலிபீடத்திற்கு முன்பாக, பதிலியான ஒரு பலிபீடத்தை, வேறொரு பலிபீடத்தை அவர்கள் கட்டினர். மனிதனுடைய இருதயத்தில் தான் தேவனுடைய உண்மையான பலிபீடம் உள்ளது. பிறகு, அங்கே இன்னொரு பலிபீடமுள்ளது. அது பரிசுத்த ஸ்தலத்திலுள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு அடையாளமாகத் திகழ்கிறது.
ஓ! ஓ! நான் இப்பொழுது அன்னிய பாஷையில் பேச வேண்டும் என உணருகிறேன். ஓ மகிமை! அது பரிபூரணமாயிருக்க நீங்கள் காணவில்லையா? சற்றுக் கவனியுங்கள். நான் அதைக்கூறியதின் காரணம் என்னவெனில், என்னுடைய உணர்ச்சி களை வெளிப்படுத்த, எனது சொந்த ஆங்கில பேச்சு வழக்கில் அதை தெரியப்படுத்த, என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. எப்படியாவது அதை வெளிப்படுத்தவேண்டும்.
127 சகோ. ரோ என்பவர் ஜனாதிபதிக்கு இராஜிய பிரதிநிதியாக இருக்கிறார். நான்கு அல்லது ஐந்து ஜனாதிபதிகளுக்கு அவர் ராஜ்ய பிரதிநிதியாக இருந்திருக்கிறார். அவர் இவ்வாறு கூறினார்: "ஓ சகோ. பிரன்ஹாம் அவர்களே, நான் ஓர் இரவில் கூட்டத்திற்கு வந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வெளியே நின்றுகொண்டிருந்தேன். நான் கர்த்தரை என் ஆயுள் முழுவதும் நேசித்திருக்கிறேன். நான் ஒரு எபிஸ்கோ பேலியன் சபையைச் சேர்ந்தவனாயிருந்தேன். நான் கர்த்தரை அறிந்திருக் கிறேன் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அந்த இரவுக் கூட்டத்தில் நான் என்ன செய்வது என்பதை அறியாமல் திகைத்துக் கொண்டிருந்தேன். திருவசனமானது உரைக்கப்பட்டு வர ஆரம்பித்ததை நான் செவிமடுத்துக்கொண்டிருந்தேன். நான் எக்காரணத்தை முன்னிட்டும் உள்ளே போகமாட்டேன் என்று இருந்தேன். நான் கூடாரத்திற்கு வெளியே மேலும் கீழும், முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தேன். கதவண்டையில் வருவதற்கு நான் காத்திருக்க முடியாமல், அங்கே நான் அதன் கீழே தவழ்ந்து பீடத்தண்டை சென்று, கீழே விழுந்து, கர்த்தாவே, நான் பாவி' என்று கூறினேன். அப்பொழுது அவர் தமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பினார்'' என்று கூறினார்.
''எட்டு வெவ்வேறு மொழிகள் என்னால் பேச இயலும்,'' என்று அவர் மேலும் கூறினார். ஏனெனில் அவர் ஒரு இராஜ்ய வாதியாவார். அவர் ஜனாதிபதிக்கு ராஜீய பிரதிநிதியாக இருக்கிறார். உட்ரோ வில்சன் முதற்கொண்டு நமது ஜனாதிபதிகள் ஒவ்வொரு வருக்கும் அவர் ராஜீய பிரதிநிதியாக இருந்து வந்திருக்கிறார். அவர் ஒரு அயலுறவுத்துறை ராஜீய பிரதிநிதியாக இருப்பதால், எந்த அந்நிய நாட்டு பாஷையையும் பேச அவரால் இயலும். "உலகில் உள்ள அறியப்பட்ட எழுதப்படும் எந்த பாஷையையும் நான் கிட்டத்தட்ட அறிந்தவனாய் இருக்கிறேன். ஆனால் அவருடைய மகிமையினால் நான் மிகவும் நிறையப் பெற்றிருந்தேன், நான் அவரைத் துதிக்க, எனக்குத் தெரிந்த அந்த பாஷைகளில் எந்த வொன்றையும் என்னால் உபயோகிக்க முடியவில்லை, எனவே கர்த்தர், அவரைத் துதிப்பதற்காக புத்தம் புதிய பாஷையை பரலோகத்திலிருந்து எனக்குத் தந்தருளினார்'' என்று அவர் மேலும் கூறினார்.
ஓ! ஓ! பார்த்தீர்களா?
128 இந்த வாயிலை அவைகள் காவல் காத்துக்கொண்டிருந்தன. காயீனும் ஆபேலும் இந்த இடத்திற்கு ஆராதிப்பதற்காக வந்தனர். இந்தக் கேருபீன்கள் காவல் காத்துக்கொண்டிருந்த இது பலிபீட மாகத்தான் இருக்கவேண்டும். அது சரிதானே?
இன்னொரு காரியம், இங்கே இன்னொரு அத்தாட்சி உள்ளது. காயீன் … இப்பொழுது வேதாகமத்தை கவனியுங்கள். வேதத்தில் அப்பகுதிக்கு நீங்கள் திருப்பவேண்டும் என்று நான் விரும்பு வேன். ஆனால் அது இருக்கட்டும், அதை நீங்கள் ஆதியாகமத்தில் பார்க்கலாம். கவனியுங்கள். காயீன் புறப்பட்டு வெளியே போனான். ஏதேன் தோட்டத்திலுள்ள வாசலைவிட்டு கர்த்தருடைய சமுகத்தினின்று அகன்று சென்றுவிட்டான். ஆகவே, கர்த்தருடைய பிரசன்னம் வாசலண்டையிலுள்ள அந்த பீடத்தண்டையில்தான் இருந்திருக்கவேண்டும். மகிமை! ஓ! அதுதான், அவருடைய பலி பீடம் தான், தேவன் வாசம் பண்ணும் இடம். காயீன் இந்த இடத் திலிருந்து, கர்த்தருடைய சமுகத்தைவிட்டு அகன்று போனான். அதை நீங்கள் குறித்துக்கொள்ளுகிறீர்களா? ஆதியாகமம் 4:16நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால் அதைக் குறித்துக்கொள் ளுங்கள். நீங்கள் இவை யாவையும் எழுதிக்கொண்டீர்களா?
நான் இன்னொரு விஷயத்தை இங்கே படம் வரைந்து காட்ட விரும்புகிறேன். உங்களுடைய பீன்ஸ் கருகிவிடாது என்று நான் நம்புகிறேன். அது அழியப்போவதுதான், ஆகவே அவைகள் கருகட்டும், ஆனால் இங்கே மெய்யான காரியத்தைப் பற்றி நாம் எண்ணிப் பார்ப்போமாக,
129 மோசே பூலோகத்திலிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள் ளப்பட்ட கருத்தை இங்கே நிரூபிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய முயன்றுகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிய வில்லையா? அவன் தேவனுடைய பிரசன்னத்திற்குள் சென்றான். தேவனுடைய சமுகத்தைவிட்டு அவன் கீழே இறங்கி வந்தபோது, தேவன் மோசேயிடம் கூறினார்: "பரலோகத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்.'' அப்படித்தானே?
அப்பொழுது அவன் அதைச் செய்தபொழுது, அவன் உடன் படிக்கைப் பெட்டியைச் செய்தபோது, அதன் மேல் பெட்டியை காவல் செய்ய இரு கேருபீன்களையும் வைத்தான். அது என்ன வென்று பாருங்கள்? அது ஆலயமாயிருக்கிறது … அது பலிபீடமா யிருந்தது … சிங்காசனத்தைக் காவல் செய்பவைகளாய் இருக்கிறது, அவ்விரண்டு கேருபீன்களும், "வெண்கலத்தில் அவைகளைச் செய் வித்து, அதன் செட்டைகள், இவ்வண்ணமாக தொடும்படி செய் வாயாக'' என்று அவனிடம் அவர் கூறினார். ஏனெனில், அதேவித மாகத்தான் மோசே பரலோகத்தில் கண்டான்.
அதேவிதமாகத்தான் யோவானும் பரலோகத்தில் இந்த நான்கு கேருபீன்களையும் கண்டான். பரலோகத்திலுள்ள சிங்கா சனத்தின் உடன்படிக்கைப் பெட்டியின் நான்கு பக்கங்களிலும் அவைகளை அவன் கண்டான். அவைகள் உடன்படிக்கைப் பெட்டி யின் காவலர்கள் ஆவர். இந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் மீதில் காவலர்களாய் உள்ளனர்.
நீங்கள் அவ்வேதவாக்கியத்தை வாசிக்க விரும்பினால், யாத் 25 ; 10-22.
அவைகள் கிருபாசனத்தின் மீதில் காவல் செய்கின்றன. ஷெகினா மகிமையானது எங்கே இருந்தது? கிருபாசனத்தின் மீதில். அது சரிதானே? அவைகள் ஷெகினா மகிமையைக் காவல் செய்கின்றன. வ்யூ! செவிகொடுங்கள், சிநேகிதரே! இதிலிருந்து என்ன தெரிகிற தென்றால், எந்தவொரு கயவரும் அங்கே உள்ளே நுழைந்து அதில் பங்குபெற முடியாது, அதன் சமுகத்தினுள் நீங்கள் வரவேண்டு மானால், நீங்கள் முன்கூட்டியே ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்.
130 ஆரோனை முன்னடையாளமாகப் பாருங்கள். அந்நாட்களில் சபையார் எந்தவிதத்திலும் கிட்ட நெருங்கிச் சேரக்கூட முடியாது. ஆனால் ஆரோன் உள்ளே பிரவேசித்தபொழுது … எத்தனை தடவை கள் அவன் உள்ளே பிரவேசித்தான்? வருடத்திற்கொருமுறைதான். அவ்வாறு அவன் உள்ளே பிரவேசிக்கும் போது, விசேஷித்த கரங் களால் விசித்திரமாக உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்தவ னாய், அவன் உள்ளே பிரவேசிக்கவேண்டும். அந்தவிதமாகத்தான் அவன் உடையுடுத்தியிருக்கவேண்டும். அவன் ஆடையில் மாதுளை யும், மணியும் பொன்னால் செய்யப்பட்டிருந்து தொங்கிக்கொண் டிருந்தன; அவைகள் அவன் உள்ளே நடந்து சென்றபோது, ''கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று இசைத்துக்கொண் டேயிருந்தன. அவன் அவ்வாறு இரத்தத்தோடு கிருபாசனத்தை நெருங்கிக்கொண்டிருந்தான்.
சாரோனின் ரோஜாவிலிருந்து செய்யப்பட்ட குறிப்பிட்ட பரிமளவர்க்கத்தினால், பரிமளவர்க்கமிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணெயினால், ஆசாரியன் அபிஷேகிக்கப்பட்டிருக்கவேண்டும். இயேசு சாரோனின் ரோஜா ஆவார். கவனியுங்கள். ரோஜா மல ரானது தன்னில் வாசனையைக் கொண்டிருக்கும் ஒரு அழகான பொருளாகும். ஆனால் அம்மலரிலிருந்து வாசனைத் திரவியமானது வெளிவரும் முன்னர், ரோஜா மலரானது நசுக்கிப் பிழியப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவ்வாசனைத் திரவியமானது வெளிப்படும். அவ்வாறு நசுக்கப்பட்டு, வாசனைத் திரவியமானது பிழிந்தெடுக்கப்படுகிறது. இயேசுவானவர் தன்னுடைய ஜீவியத் தில், இதுவரையில் வாழ்ந்த எந்தவொரு ஜீவியத்தைவிட மிகவும் அழகான ஜீவியத்தை உடையவராயிருந்தார். ஆனால் அவர் அப்படியே நிலைத்திருக்க முடியவில்லை. ஏனெனில், அவர் தன்னுடைய சபையை, அது தன்னுடைய பரிசுத்தத்தை அணுகுவதற்காக, அபிஷேகிக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவரது ஜீவனானது பிழிந்தெடுக்கப்பட்டது. அவர்மேல் இருந்த அதே பரிசுத்த ஆவி சபையின் மேல் பொழிந்தருளப்பட்டது. அதனால் அவரை அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார் என்பதாகவும், வாசனை மிகுந்த சாரோனின் ரோஜாவாகவும் ஆக்குகிறது. இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் பிரவேசிக்கும் நபர் எவரும் அதே பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படவேண்டும். அந்நபர் அவ்வாறு உள்ளே பிரவேசிக்கையில், ''பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று கூறுகிறான். இதை அவன் தன் வாயில் சுருட்டை வைத்துக் கொண்டே சொல்லுவதில்லை. 'பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று கூறுகையில், தன் சட்டை காலரை உயர்த்தியபடி அல்ல, இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த அலங்காரத்தில் அலங்கரிக் கப்பட்ட வண்ணமாக சொல்லிக்கொண்டே உள்ளே பிரவேசிக்கிறான். "நீர் எவ்வளவு அற்புதமானவர்!" ஓ!
131 இப்பொழுது "கிருபாசனம்'. கிருபாசனமானது இருதயத் தில் உள்ளது. அங்கே அவரது ஷெகினா மகிமையானது அவரது பிள்ளைகளில் யாவரிலும் மானிட இருதயத்தினுள் பிரகாசித்துக் கொண்டே யிருக்கிறது. இங்கே மனுஷ இதயம் இருக்கிறது. அது கிருபாசனம் தானே? அதனுள் நீங்கள் அந்தப் பல்வேறு அமைப்புக்கள் வழியாக உள்ளே பிரவேசிக்கிறீர்களா? சுய விருப்பம் - சுய விருப்பத்தின் வழியாக அதனுள் பிரவேசிக்கிறீர் கள். அங்கிருந்து என்ன புறப்பட்டு வருகிறது? ஷெகினா மகிமை தான். ஷெகினா மகிமை என்பது என்ன? அது தேவனுடைய பிரசன்னமாக இருக்கிறது. அந்நிலையில் ஒரு மனிதனோ, அல்லது பெண்மணியோ நடந்து செல்லுகையில், அவன் ஷெகினா மகிமையை பிரதி பலித்துக்கொண்டே செல்லுகிறான். அவன் சூதாட்ட சாலைகளுக்குச் செல்லுவதில்லை. அவ்வாறெல்லாம் நடந்து கொண்டு, தேவனுடைய வார்த்தையை மறுதலித்துக் கொண்டு அவன் இருப்பதில்லை. மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப்பற்றி அவன் பொருட்படுத்தாமல், அவன் இருதய மானது ஒரே காரியத்தில் நிலைத்திருக்கிறது. அதுவே தேவன் ஆகும். அவன் தேவனால் உண்மையாக அழைக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவர் தம்மையே அந்நபர் மூலமாக ஷெகினா மகிமையைக் கொண்டு பிரதிபலித்துக் காண்பிக்கிறார்; கடந்த காலத்தில் அவர் செய்த அதே கிரியைகளை மீண்டும் செய்கிறார், அதன் மூலமாக அதே சுவிசேஷத்தை பிரத்தியட்சமாக்கிக் காண் பிக்கிறார், அதே வார்த்தையை பிரசங்கிக்கும்படி செய்கிறார், அப்பொழுது இருந்தது போலவே அதே அளவில் அதே வார்த் தையை பிரத்தியட்சமாக்குகிறார்; உண்மையான பெந்தெகொஸ்தே நாளில் எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில் மீண்டும் இருக்கும்படி செய்கிறார்.
132 'கிருபாசனம்'' - எசேக்கியேலும் யோவானும் ஆகிய இருவருமே ஒரே காரியத்தையே கண்டனர். இப்பொழுது கவனியுங்கள். நாம் இன்னும் சிறிது நேரத்தில் முடிக்கப்போகிறோம். இப்பொழுது, இங்கேதான் ஒரு விஷயத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். ஓ, தயவு செய்து அதை காணத்தவற வேண்டாம். அந்தக் கேருபீன்கள் ஜீவனுள்ள சிருஷ்டிகள்தான் என்றும், அவை மிருகங்கள் அல்ல என்றும் எத்தனை பேர் அறிவீர்கள்? அவைகள் உன்னதமானதொரு நிலையில் உள்ளவைகளாகும்.
இப்பொழுது ஒரு தேவதூதன் என்னப்பட்டவன் மனி தனைவிட மேலான நிலையில் உள்ளவனா, அல்லது தாழ்ந்த நிலையில் உள்ளவனா? நல்லது, ஐயா. ஒரு தேவ புத்திரன் மேலானவனா அல்லது ஒரு தேவதூதனா? தேவபுத்திரன்தான் மேலானவன். தனக்கு முன் நின்று ஒரு காரியத்திற்காக வேண்டுதல் செய்யும் தூதனுக்கு தேவன் சிறப்பாக செவிகொடுப்பாரா, அல்லது உங்களில் ஒருவர் செய்யும் வேண்டுதலுக்கு சிறப்பாகச் செவி கொடுப்பாரா? உங்களுக்குதான்! ஏனெனில், நீங்கள் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறபடியால். தேவதூதர்கள் பணிவிடைக்காரர்கள். அவர்கள் பணிவிடைக்காரர், நீங்களோ, அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். ஆகவே, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதைப்பற்றி பாருங்கள். இதுதான் நீங்கள் அதை உபயோகிக்க வேண்டிய இடமாக இருக்கிறது.
133 இது அழகாக இருக்கிறது, இங்கே நீங்கள் இதை கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஓ! சில விஷயங்களை கூறாமல் நான் விட்டுவிட்டு, இந்த விஷயத்திற்கு வருகிறேன். இப்பொழுது உங்களுடைய எழுதுகோல்களை எடுத்துக்கொள்ளுங்கள், உண்மை யிலேயே நீங்கள் இந்த ஒன்றை வரைந்து எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நான் விரும்பினேன். (சகோ. பிரன்ஹாம் கரும் பலகையில் ஒன்றை வரைகிறார் - ஆசி.). நாம் அதை சற்று சிறிய தாக வரைவது நலமாயிருக்கும். இதை மிகவும் கவனமாக கவனி யுங்கள், இஸ்ரவேலர் தங்களது யாத்திரையில், அவர்கள் பாளய மிறங்கியபோது, ஒவ்வொரு திசையிலும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. (நான் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்). ஒவ்வொரு திசையிலும் ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்று, இரண்டு, மூன்று என்று நாற்திசையிலும் திசைக்கு மூன்று கோத்திரம் வீதம் கிருபாசனத்தைச் சூழ்ந்து பாளயமிறங்கியிருந்தார்கள். நீங்கள் யாவரும் அதை அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது இதைப் பார்த்திருக்கிறீர்கள், அதைக் குறித்து பழைய ஏற்பாட்டில் வாசியுங்கள்.
134 இதோ இங்கே கிழக்குத் திசை. நான் அதை இவ்வரை படத்தில் குறித்து விடுகிறேன், அப்பொழுது நீங்கள் நிச்சயமாக அதை குறித்துக்கொள்ள முடியும். கிழக்கு-கிழக்குத் திசையில் எப்பொழுதும் யூதாதான் இருப்பான். இதுதான் வாசல். யூதா கோத்திரம். தங்கள் கொடியோடு, பாளயமிறங்கியிருக்கும் மூன்று கோத்திரங்களும் யூதாதான் தலைமையாக இருப்பான். மூன்று கோத்திரங்களும், தங்கள் கொடியாக யூதாவின் கொடியோடு இருந்தார்கள். உங்களுக்கு நினைவில் இருக்கும்… சிசில் டிமில் தயாரித்த பத்துக்கட்டளைகள் திரைப்படத்தை எத்தனை பேர் பார்த் திருக்கிறீர்கள்? கிழக்குத் திசையில் யூதா கோத்திரம் இருந்ததாக நீங்கள் இங்கே வேதவாக்கியத்தில் வாசித்திருக்கிறீர்கள்.
மேற்குத் திசையில் இங்கே, அதையும் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதைக் குறித்து யாத்திராகமத்தில் வாசிக்கலாம். மேற்கில் எப்பிராயீம் இருந்தான். மேற்கில் மூன்று கோத்திரத்தார் தங்கள் கொடியோடு இருந்தனர்.
தெற்கில் ரூபன் கோத்திரத்தார் - அங்கே மூன்று கோத்திரத் தார் தங்கள் கொடியோடு இருந்தனர்.
வடக்கில் தான் கோத்திரம். தங்கள் கொடியோடு மூன்று கோத்திரங்கள் அங்கே இருந்தன.
135 அவ்விதமாகத்தான் அவர்கள் பாளயமிறங்கியிருந்தார்கள். இதை நாம் சரியாகப் புரிந்து கொள்வதற்காக, வேதவாக்கியங்களி லிருந்து இதைப்பற்றி சற்று வாசிப்போமாக. நான் 7ம் வசனத்தி லிருந்து ஆரம்பிப்பேன்.
முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷ முகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவு மிருந்தன.
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் அவ்வாறு சிறகு களுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்த வைகளுமாயிருந்தன. அவைகள் : இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில் லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
மேலும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து, சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும் போது,
இருபத்து நான்கு மூப்பர்களும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற வருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து:
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையை யும் பெற்றுக்கொள்ளுகிறவதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளு மாயிருக்கிறது என்றார்கள்.
வெளி. 4:7-11
136 இப்பொழுது கவனியுங்கள். கிழக்குப் பாகத்தில் என்னவித மான முகத்தை அவன் கண்டான்? அதை நீங்கள் கவனித்தீர்களா? அதுதானே சிங்கம் போன்ற முகத்தை, சிங்கமுகம் பொறித்த கொடியிருந்தது. அதுதான் யூதாவின் கொடியாகும். ஏனெனில் அவர்… இயேசு அதிலிருந்துதான் வருகிறார். அது உண்மை . அவர் யூதா கோத்திரத்து சிங்கமானவர்.
எத்தனை பேர்கள், வானத்தின் 12 ராசிகளை பார்த்திருக் கிறீர்கள்? அது என்ன என்பதை உங்களில் அநேகர் அறிந்திருக் கிறீர்கள், அவைகள் நட்சத்திரங்களாகும். அதுவே தேவனுடைய முதலாவதான வேதாகமமாகும். 12 வான இராசிகளில் முதலா வதான எண்ணாக இருக்கிறது எது? எதிலிருந்து ஆரம்பிக்கிறது? முதல் உருவம் எது? முதலாவது கன்னி இராசியாகும். அது சரி தானே? கடைசியானது என்ன? சிங்கம் - சிம்ம இராசி. கிறிஸ்துவின் முதலாவது வருகையும், இரண்டாவது வருகையும் அவற்றி லெல்லாம் காணலாம். அவர்கள் இனக்கலப்பு செய்யப்பட்ட நண்டை உடையவர்களாயிருக்கிறார்கள். அதுவே இனக்கலப்பின் காலம், இனக்கலப்பு செய்யப்பட்ட மீன்களும் உள்ளன. அதுவே கடக இராசியின் காலமாக இருக்கிறது, அதன் வழியாகத்தான் நாம் ஜீவித்து வந்திருக்கிறோம். இது கான்சரின் காலமாக இருக்கிறது.
137 ஏனோக்கு தன் காலத்தில் அந்த பெரிய கூர்நுனிக் கோபு ரத்தை (Pyramid) கட்டிய போது, ஒவ்வொரு கல்லும் அதில் இருந்தது. அவைகளை அவர்கள் அளந்து, சரியாக என்ன நடக்கும் என்பதை, நடக்கப் போகும் யுத்தங்களைப் பற்றியெல்லாம் எடுத்துக்கூற முடிந்தது. அந்த கூர்நுனிக்கோபுரம் தலைக்கல் ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் பூர்த்தியாக இருந்தது. அதற்கு தலைக்கல் மட்டும் வைக்கப்படவில்லை. ஏன்? உங்களு டைய டாலர் நோட்டில் அதை நீங்கள் கவனித்தீர்களா? அதை எடுத்து பாருங்கள், இதில் தலைக்கல் இல்லாமல் இருக்கிறது. ஏன்? அதற்கு தலைக்கல் ஒருபோதும் வைக்கப்படவில்லை. கிறிஸ்துவே புறக்கணிக்கப்பட்ட தலைக்கல்லாயிருக்கிறார். அவர் புறக்கணிக்கப் பட்ட தலைகல்லாயிருக்கிறார். அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார். லூத்தரின் காலத்தில் அந்த சபையைக் கவனியுங்கள். அடிப் பாகத்தில் இருக்கிற சபையைப் பாருங்கள். அது மேலே மேலே வரவர, அது சிறுபான்மையினராக, ஆகிக்கொண்டே வந்து, பிறகு பெந்தெகொஸ்தேயின் காலத்தில் கொண்டு வந்துவிடுகிறது, அதன்பிறகு, தலைக்கல் வருவதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு கல்லும் சரியாக பொருத்தப்படுகிறது; அந்தத்தலைக்கல் வரும் போது, அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசுவைக் கொண்டு வரும் சபையாக அது இருக்கும். அது எவ்விதத்திலும் பூரணமானதாக இருக்கிறது. இப்பொழுது அவர் யூதா கோத்திரத்து சிங்கமாயிருக்கிறார்.
138 வேதத்தை வாசித்திருக்கிற எவரும் தாண் கோத்திரத்தின் எண் என்ன என்பதை அறிவீர்கள். தாணின் கொடி என்ன என்பதை அறிவீர்கள் என்பதை பற்றித்தான் நான் இங்கே குறிப்பிட்டேன். அவனுடைய கொடி கழுகு ஆகும். அதுதான் சரி. அவன் ஒரு கழுகு. வேதத்தை யாராகிலும் படித்திருந்தால், அவன் ஒரு கழுகு என்பது தெரியும்.
ரூபனுக்குரியது மனுஷ முகமுள்ள கொடியாகும். அவன் தான் மூத்த குமாரன், பிள்ளைகளெல்லாரிலும் அவன்தான் மிகவும் துன்மார்க்கனாயிருந்தான். அவ்வாறு ஆதியாகமம் 49ம் அதிகாரத் தில் யாக்கோபு கூறவில்லையா? ''ரூபனே, நீ என் சேஷ்ட புத்திரன், நீ என் சத்துவமும் என் முதற்பெலனுமானவன்… தண்ணீரைப் போல் தளும்பினவனே, உன் தகப்பனுடைய மஞ்சத்தின் மேல் ஏறினாய், நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்…'' . ரூபன் தன் தந்தையின் மறுமனையாட்டியோடு வாழ்ந்தான். அதுதான் மனித இனத்திற்கே உரித்தான ஒழுக்கக்கேடான செய்கையாகும். மிருகங்கள் அவ்விதமான ஒழுக்கக்கேடுகளைப் பெற்றிருக்கவில்லை. சிங்கமோ அல்லது வேறு எந்த மிருகமும் இவ்வாறு செய்யாது. ஆனால் மனிதன் அவ்வாறு செய்வான்; பிற மனிதனின் மனைவியோடு ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வான். அதேவிதமாகத் தான் அவன் செய்வான். யாவும் பூர்த்தியாயிருக்கிறது.
இப்பொழுது இங்கே இருக்கிற தாணுக்குரியது கழுகு ஆகும். ரூபனுக்கு மனுஷ முகக்கொடி இருந்தது. எப்பிராயீமுக்கு காளை முகங்கொண்ட கொடியிருந்தது. அந்த சித்திரத்தை நீங்கள் பெற்றுக்கொண்டீர்களா? எப்பிராயீம்… வேதாகமத்தில் கூறப் பட்டுள்ளபடி அவர்கள் அவ்வாறுதான் பாளயமிறங்கியிருந் தார்கள்.
139 நீங்கள் கவனிப்பீர்களானால், தாண் மூன்று கோத்திரங்களுக் கும், யூதா மூன்று கோத்திரங்களுக்கும், ரூபன் மூன்று கோத் திரங்களுக்கும் எப்பிராயீம் மூன்று கோத்திரங்களுக்கும் முறையே தலைவராயிருந்தார்கள். மூன்றை நான்கால் பெருக்கினால் பன்னி ரண்டு ஆகும். ஆக பன்னிரண்டு இஸ்ரவேலின் கோத்திரங்கள். ஒவ்வொருவரும் தத்தமது கொடியோடு இருந்தனர். யூதாவின் கொடியானது சிங்கக்கொடியாகும். ரூபனின் கொடி காளை முகங் கொண்டதாகும். தாணுக்கு கழுகு முகங்கொண்ட கொடியிருந்தது.
இங்கே யோவான் என்ன கூறுகிறான் என்பதைப் பாருங்கள். பரலோகத்திலும் இவ்வாறே இருக்கிறதா என்பதைப் பற்றி இப்பொழுது நாம் வாசித்து தெரிந்து கொள்வோமாக.
"முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும்… (யூதா…) இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், (அது இளங்காளை யாகும்) மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன."
வெளி. 4:7
அதேவிதமாகத்தான் இஸ்ரவேலின் கோத்திரங்கள் சூழப் பாளயமிறங்கியிருந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டிக்குரிய உரிமையை பூமியில் காவல் காக்கிறவர்களாயிருந்தார்கள். அல்லேலூயா! அதை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?
140 இங்கே கிருபாசனம். கிருபாசனம். அக்கோத்திரங்களைத் தாண்டி வேறு எதுவும் அங்கே எந்த இடத்திலும் ஊடுருவி வந்து விடமுடியாது. எதைத்தாண்டி வரவேண்டும்? சிங்கத்தை தாண்டி - மனுஷனைத் தாண்டி, மனுஷனுடைய விவேகம் - கடுமையாக உழைக்கும் மிருகமாகிய காளையைத் தாண்டி, விரைவாக இயங்கு கிற கழுகைத் தாண்டி வரவேண்டும். பார்த்தீர்களா? வானம், பூமி, இதற்கு இடைப்பட்ட பிரதேசத்தில், எங்கும் சுற்றிச் சூழ அவர்கள் காவலராயிருக்கிறார்கள். அதற்கு மேலே அக்கினி ஸ்தம்பம் இருந்தது. சகோதரனே, எந்தவொன்றும் கிருபாசனத்தைத் தொட வில்லை, அணுகவேண்டிய முறையில் அல்லாமல்.
கிருபாசனத்தை எதுவும் அணுக வேண்டுமானால், அது இரத்தத்தின் மூலமாகத்தான். ஆரோன் வருடத்திற்கொருமுறை அங்கே இரத்தத்தோடு பிரவேசித்தான். இப்பொழுது அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இப்பொழுது கவனியுங்கள். இந்த ஒவ்வொரு மூன்று கோத்திரங்களின் தலைவர்கள் ஒவ்வொருவரும் கிருபாசனத்தை காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்; அதாவது பழைய ஏற்பாட்டின் கிருபாசனத்தை, இதை நீங்கள் யாவரும் குறித்துக்கொண்டீர்களா? இதோ இங்கே புத்தம் புதிய விஷயம் ஒன்றுள்ளது, சகோதரனே! இதைக் கவனித்துக் கேளுங்கள், பிறகு நாம் போகலாம். அவர்கள் பழைய ஏற்பாட்டிலுள்ள காவலாளிகள் என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். எத்தனை பேர்கள் அதை வேதத்தில் வாசித்திருக்கிறீர்கள்? அது சரிதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டின் காவலர்கள் என்பதைப் பாருங்கள்.
141 இப்பொழுது நாம் வேறு ஒரு யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மகிமை! ஓ, நான் இந்தக் காலத்தை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கவில்லையா? இப்பொழுது இக்காலத்தில் தேவனுக்கு காக்கப்படும்படியான ஒரு கிருபாசனம் உள்ளது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இக்கிருபாசனம் எங்கே காணப்படுகிறது? மனிதனின் இருதயத்தில், அது மனிதனின் இருதயத்திற்குள் எப்பொழுது வந்தது? பெந்தெ கொஸ்தே என்னும் நாளில், தேவனாக இருக்கிற பரிசுத்த ஆவியானவர் மானிட இருதயங்களில் பிரவேசித்தபொழுது வந்தது. அப்படித்தானே? இதை நாம் இங்கே குறித்துக்கொண்டு, நீங்கள் விரும்பினால் வரைந்து கொள்ள ஆயத்தமாவோம். பெந்தெகொஸ்தே, இதை நான் இங்கே குறிக்கிறேன். இதுதான் கிருபாசனம், பரிசுத்த ஆவியானவர். இங்கே குறியுங்கள்… அது என்னவென்று நான் உங்களுக்குக் கூறுவேன். அதை அது மிகவும் பொருத்தமானதாக ஆக்கும். இங்கே 'புறா'' என்று நாம் குறித்துக்கொள்வோம், அது ஒரு பறவை - அதன் அர்த்தம் என்னவெனில்…. இன்று கிருபாசனத்தை காவல் செய்ய தேவனுக்கு காவலாளிகள் உண்டு. ஆம், இப்பொழுது இது எவ்வளவு அழகாக வரையப்பட்டுள்ளது!
142 அன்றொரு நாள் நான் உட்கார்ந்திருக்கையில், இதைப்பற்றி கண்டபொழுது, மேலும் கீழும் குதித்து, எனது இருக்கையைச் சுற்றி சுற்றி ஓடிவந்து, ''மகிமை! மகிமை! மகிமை! மகிமை! மகிமை!'' என்று கத்தினேன். சார்லி, காட்டில் நான் சில சமயம் செய்வதைப்போல. சகோதரி நெல்லி அவர்களே, நான் இவ்வாறு நடந்துகொண்டால், உங்கள் வீட்டைவிட்டே என்னை விரட்டி விடு வீர்கள் என்று நான் அனுமானிக்கிறேன். ஓ, எனக்கு ஒரு மகிமை யான வேளை உண்டாயிருந்தது. அது என்னவென்பதைப் பற்றி கர்த்தர் எனக்குக் கொடுத்ததை கவனியுங்கள்.
பெந்தெகொஸ்தேக்குப் பிறகு என்ன புத்தகம் எழுதப் பட்டது? பரிசுத்த ஆவியானவரின் நடபடிகள். நடபடிகள். அப்படித்தானே? நடபடிகள் புத்தகம் எதனோடு துவங்குகிறது? முதலாவதாக இரட்சிப்பிற்குள் பிரவேசிப்பது … அப்போஸ்தலர் 2:38, கடைசியானது இது. 'அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப் பட்டு…. வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.'' அங்கே பேதுரு எழுந்து நின்று அவர்களுக்கு ஒரு பிரசங்கத்தை நிகழ்த்தினான். அவர்கள் "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். "நாங்கள் எப்படி இந்த அனுபவத்தைப் பெறுவது?'' என்றார்கள். அப்போஸ்தலர் நடபடிகள் 2:38ல் பேதுரு கூறினான், ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று.
தேவன் அந்த கிருபாசனத்தைக் காவல் செய்ய தனக்கென சில காவலர்களை கொண்டிருக்கிறார் என்பதை இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். கிருபாசனத்தைக் காப்பவர்கள் யார்? கிழக்கில் மத்தேயு - லூக்கா , மாற்கு, யோவான் ஆகியோர். அவர்கள் எழுதிய நான்கு சுவிசேஷப் புத்தகங்களும் வரப்போகிற நடபடிகளின் புத்தகத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. நீங்கள் எந்த வகையில் பார்த்தாலும், அவைகள்தான் அதை காக்கிறவையாக இருக்கின்றன.
143 நமக்கு நேரம் போதுமானதாக இல்லை, எனவே ஒரேயொரு விஷயத்தைப் பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம். நான் இங்கே இருபது அல்லது அதற்கு மேல் வசனங்களைக் குறித்து வைத் துள்ளேன். ஆனால் இரட்சிப்புக்காக, நாம் இங்கே ஒரேயொரு விஷயத்தை இந்தப் பொருளின் பேரில் எடுத்துக்கொள்வோம். நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்போகிறோமா? இல்லை? இப்பொழுது ஒருமணி ஆகிவிட்டது, எனவே, வியாதியஸ்தருக் காக ஜெபிக்கவேண்டும் என்று நீங்களெல்லாம் விரும்பினால் ஒழிய நாம் அதை வைத்துக்கொள்ளப்போவதில்லை. ஆம், இப் பொழுது எனக்கு ஏராளனமான நேரம் இருக்கிறது. பாருங்கள்? ('நாள் முழுவதையும் எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று ஒரு சகோதரன் கூறுகிறார் - ஆ).
144 இப்பொழுது இதைக் கவனியுங்கள். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான், அது என்னவாயிருக்கிறது? நான்கு சுவிசேஷங்களைப் பற்றிய பூமிக்குரிய எண்ணாக இது இருக்கிறது - நான்கு என்ற எண். நல்லது, கவனிக்கவும்.
மத்தேயு 28:19 - மத்தேயு 28ம் அதிகாரம் - மத்தேயு 28:19ம் வசனம். இதைத்தான் திரித்துவ சகோதரரே, நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். மத்தேயுவின் அந்த அதிகாரத்தின் இறுதியான பாகத்தில் "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதி களையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து " என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் இங்கே வந்து பேதுரு கூறினான், ''மனந்திரும்பி இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுங்கள்'' என்று.
அங்கே ஏதோ பிழை உள்ளது. ''மத்தேயுவே, நீர்தான் அந்த கிழக்கு வாசலிலுள்ள காவலரா?''
அவ்வாசல் எவ்வாறுள்ளது? அந்த வாசல் யார்? இயேசுதான். இயேசு, ''வாசலானது தண்ணீர் வழியாயிருக்கிறது'' என்று கூறினார். (ஆங்கில மொழி வேதத்தில் மத்தேயு 7:14ல், ''ஜீவனுக்குப் போகிற வாசல் தண்ணீர் வழியாயிருக்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது. தமிழில் ''ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்…'' என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வார்த்தை "Strait" என்பதாகும். அதற்கு "குறுகிய தண்ணீர் வழிப்பாதை'' என்று அர்த்தமாகும் - மொழிபெயர்ப்பாளர்). "Strait" என்றால் ''தண்ணீ ர்'' என்று அர்த்த மாகும். ஆகவே, ''தண்ணீரே வாசலாயிருக்கிறது.'' எவ்வாறு நீங்கள் உள்ளே பிரவேசிக்கிறீர்கள்? "நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்.'' இதுதான் பூட்டியிருக்கிற வாசல் கதவுகளை திறந்துவிடுகிறது. ஏய்! வ்யூ!
"ஓ, ஆனால், சகோதரன் பிரன்ஹாம் அவர்களே, மத்தேயு 28:19 உங்களுக்கு உள்ளதே, அதைப்பற்றி என்ன?'' என்று கேட் கலாம். அது மிகவும் சரியாக இருக்கிறது. ''ஆனால் மத்தேயுவே, நீ அதற்குரிய காவலரா?'' என்று கேட்டால்,
"நிச்சயமாக, நான் முழுமையானதொரு காவலன்தான்'' என்று மத்தேயு கூறுவான்.
145 இப்பொழுது மத்தேயு 1:18-ஐ எடுத்துக்கொண்டு அது என்ன கூறுகிறது என்று பாருங்கள். இதை காக்கிறதா என்பதைப் பாருங்கள். அப்போஸ்தலர் 2:38-ஐ மத்தேயு 1:18 காக்கிறதா என்று பாருங்கள். "இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது…"
மத். 1:18
"இங்கே பிதாவாகிய தேவன் இருக்கிறார், இங்கே குமாரனா கிய தேவன் இருக்கிறார், இங்கே பரிசுத்த ஆவியாகிய தேவன் இருக்கிறார்'' என்று கூற அவர்கள் முற்படுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப் பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது."
மத். 1:18
எந்த ஒன்று? அவர்கள் இருவரையுமே ஒருவர் என்று இது காண்பிக்கிறது.
"அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
…கர்த்தருடைய தூதன்…(அவனிடத்தில் இறங்கி வந்து) தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தி யாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. (பார்த்தீர் களா?)
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;… தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
அவள் : இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; (ஏசாயா 9:6) ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்… அவருக்கு (இம்மானுவேல் - என்று சபையார் கூறுகிறார்கள் - ஆசி.) இம்மானுவேல் என்று பேரிடுவார்கள்.
மத். 1:19-23
146 அவன் அதைக் காக்கிறானா? 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி.'' அந்த ஒரே நாமத்திற்குரிய மூன்று பட்டங்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது. எனவே அதை காத்திட அந்த காவலன் அங்கே நிற்கிறான். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ஓ, என்னே! இப்பொழுது எத்தனை பேர்கள் இதை அறிகிறீர்கள்? இதோ, இங்கே அந்தக் காவலன் இருக்கிறான்.
இரட்சிப்புக்காக உள்ள வேறு பல காரியங்களும் உள்ளன, அதைப்பற்றி நிறையக்குறிப்பு என்னிடம் உள்ளது. ஆனால் இப்பொழுது இன்னும் ஒரு நிமிட நேரத்தில் நாம் ஒரு ஜெப வரிசையை ஒழுங்கு செய்யப்போகிறோம். அது சுமார் பத்து நிமிடங்களுக்கு இருக்கும். இன்னும் ஒரு நிமிடத்தில் நாம் அக்காரியத்தைச் செய்ய முயற்சிப்போம். இங்கே நான் குறித்து வைத்துள்ள சில வேதவாக்கியங்களை நாம் எடுத்துக் கொள்வோ மாக. இதோ அவைகள்.
தெய்வீக சுகமளித்தல் என்ற விஷயத்தை மத்தேயு காவல் செய்கிறானா என்பதைப் பற்றி நாம் எடுத்துக்கொண்டு இப் பொழுது பார்ப்போம். உங்களுடைய எழுதுகோல்களை எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அதை குறித்துக்கொள்ள விரும்பினால். மத்தேயு அதைக் காவல் செய்கிறானா என்பதைப் பார்ப்போம். நாம் இப்பொழுது மத்தேயு எழுதின சுவிசேஷம் 10ம் அதிகாரத்தில் 1ம் வசனத்தை எடுத்துக்கொள்வோமாக.
யோவான் அப்படி செய்தானா என்பதைப் பற்றி இரண் டொரு வசனங்களை எடுத்துக்கொண்டு பார்ப்போமாக. யோவான் 14:12, 15:7.
147 தேவனுடைய சிங்காசனத்தைச் சூழ்ந்து நின்று இவர்கள் தெய்வீக சுகமளித்தல் என்பதை காக்கிறார்களா என்பதைப் பற்றி நாம் பார்ப்போம். மாற்கு 16ம் அதிகாரம்; மாற்கு 11:21-22.
லூக்கா 10:1 முதல் 12 லூக்கா 11:29 முதல் 31 முடிய . நாம் வேகமாக சில வசனங்களை வாசித்து, அவர்கள் தெய்வீக சுகமளித் தலுக்கான உரிமையைக் காக்கிறார்களா என்பதைப் பற்றி பார்ப் போம். அவர்கள் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானத்தைப் பற்றிய வாசலையும் இதேபோல்தான் காத்து வருகின்றனர். அவை கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பார்க்கலாம்.
நாம் இப்பொழுது மத்தேயு 10:1-க்கு திரும்புவோம். நாம் இதை பார்த்துவிட்டு, கர்த்தருக்கு சித்தமானால், அதிக பட்சம் இன்னும் சுமார் ஐந்து, பத்து நிமிடங்களில் முடித்துவிடுவோம். அப்போஸ்தலர் நடபடிகளை மத்தேயு காக்கிறானா என்பதைப்பற்றி நாம் பார்ப்போமாக.
148 தேவன் தன்னுடைய வார்த்தையைச் சுற்றிச்சூழ ஒரு காவலனைப் போடவில்லை என்று நினைத்தீர்களா? இதோ இங்கே காளை, சிங்கம், மனிதன், கழுகு ஆகியவை உள்ளன. அவைகள் இன்னமும் இங்கே பூமியில் அவ்வாசல்களில் இருந்து கொண்டிருக்கவில்லையா? அவர்கள்தான் நான்கு சுவிசேஷங் களாகும். பாருங்கள்? அவைகள் போன எத்திசையிலும் நேராகச் சென்றன. ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கவில்லை. அவைகள் ஒன்றோடொன்று சேர்ந்தே நின்றன. பாருங்கள்? அவைகளில் ஒன்று மனிதனுடைய விவேகத்தோடும், இன்னொன்று கழுகின் வேகமாக செயல்படுகிற தன்மையோடும் போகின்றன. இன்னொன்று ஒரு மேய்ப்பனாக இருக்கிறது. ஒன்று சுவிசேஷகனாய் இருக்கிறது. ஒன்று சுவிசேஷகனைப்போல் பறந்து கொண்டே யிருக்கிறது ….. இன்னொன்று மேய்ப்ப னாக இருக்கிறது. இன்னொன்று கட்டுறுதி வாய்ந்ததாக இருக்கிறது. இன்னொன்று கூர்மதி வாய்ந்ததாக இருக்கிறது. பாருங்கள், அவைகள் ஒவ்வொரு திசையிலும் காவல் செய்தன. தேவன் இந்த பரிசுத்த ஆவி சுவிசேஷத்தை காவல் செய்கிறார். அதை விசுவாசியுங்கள், சகோதரரே.
இப்பொழுதும் நாம் மத்தேயு 10:1ஐ எடுத்துக்கொள்வோம்.
"அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, … அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
மத். 10:1
அவர்கள் மேல்வீட்டறையில் கூடி அவரது நாமத்தில் ஜெபித்தனர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர் அதினால் ஊழியத்திற்கான அதிகாரம் வந்தது. அன்று அவர்களுக்கு என்ன செய்தாரோ இன்று அவர் உனக்கும் அதை செய்வார் நானும் அவர்களுள் ஒருவன் என்பதால் நான்
மகிழ்கிறேன்
ஓ, குழந்தைகளை சற்று ஒரு நிமிடம் சமாதானப்படுத்துங்கள். சற்று மிகவும் கவனமாகக் கேளுங்கள்.
"… அசுத்த ஆவிகளைத் துரத்த… அதிகாரங்கொடுத்தார்"
மத். 10:1
அநேக போதகர்கள் தங்கள் சபைகளில் ஸ்திரீகள் ஆபாச ஆடை அணிவது, செயல்கள்… மற்றும் சீட்டாட்டங்கள், பாங்கோ விளையாட்டுகள், நடனங்கள் மற்றும் சுப் விருந்துகள் ஆகிய இந்த ஆசுத்த ஆவிகள் சபைகளில் தங்கும்படி விட்டுவிடுகின்றனர்.
… ஆசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும்…
அக்காவலன் அந்த வாசலில் அமர்ந்திருப்பதைப் பார்த்தீர் களா? எழுதப்பட்டுள்ள அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தை சுவிசேஷம் காவல் செய்கிறது.
149 நான் சமீபத்தில் ஒரு பெரிய போதகர் கூறுவதைக் கேட்டேன். அவர் ஒரு பெரிய மனிதர், மேன்மைமிக்கவர். நான் அவரை சந்தித்து, அவரோடு கை குலுக்கியிருக்கிறேன். அவர், ''ஆனால் அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் சபைக்கான வடிவம் கொடுக்கும் ஒருபுறச் சட்டம் மாத்திரமே'' (frame work), என்று கூறினார். ஹூ! அதாவது, உள்ள இருக்கவேண்டிய அப்போஸ்தலர் நடபடிகளை வெளியே உள்ள புறச்சட்டம் என்று அவர் கூறி விட்டார். ஆனால் சுவிசேஷங்கள் அப்போஸ்தலர் நடபடிகளை சுற்றி வெளியே இருந்து பாதுகாத்துக்கொண்டு அதினுடைய வடிவத்தை அமைத்துக்கொடுக்கும் புறச்சட்டமாக இருக்கிறது. அப்போஸ் தலர் நடபடிகளோ உள்ளே அமைந்திருக்கிறது. இச்சுவிசேஷங் களோ வடிவம் கொடுக்கும் புறச்சட்டமாக இருந்து, அது ஒருங் கிணைந்து இருக்க, அதை பாதுகாக்கிறதாயிருக்கிறது. இதைப்பற்றி மனிதனுடைய சிந்தையானது எவ்வாறு சிந்திக்க முடியும் என்பதைப் பாருங்கள். தேவன் அதைப்பற்றி காண்பித்திருக்கா விடில், நானுங்கூட அவ்வாறுதான் சிந்தித்திருப்பேன். பாருங்கள்?
பெந்தெகொஸ்தே, சுவிசேஷத்தின் புறவரிச் சட்டம் அல்ல (Frame work), பெந்தெகொஸ்தேயை தாங்குவதற்காக நான்கு சுவிசேஷங்கள் தான் அதின் புறவரிச் சட்டம் உள்ளது. அவர் களுக்கு இந்த புறவரிச்சட்டம் கிடைத்தபிறகு, பெந்தெகொஸ்தே வந்தது. அது சரிதானே? நடபடிகள் புத்தகமா, அல்லது அப்போஸ் தலர்களின் சுவிசேஷங்கள் முதலில் எழுதப் பட்டதா? அப்போஸ் தலர்களின் சுவிசேஷங்கள்தான். இயேசு நடந்து திரிந்து கிரியை களைச் செய்து, என்ன வரப்போகிறது என்பதைப்பற்றி முன்னு ரைத்துக்கொண்டிருந்தார். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு காவலர்களும் வருகின்றனர், அவர்கள் வந்து தாங்கள் கண்ட வரப்போகிற யாவற்றையும், அவைகள் உள்ள படியே எழுதி, அவைகள் எவ்வாறு நேரிடப் போகின்றன என்ப தைப் பற்றியும் கூறி எழுதிவைத்துள்ளனர். உடனே அவைகள் அதைச்சுற்றி புறவரிச் சட்டமாக தங்களை அமைத்துக்கொண்டன, அவ்வாறு அது வருகிறது. ஆமென்! மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதமாகிய சிங்காசனத்தை, பிரதான ஆலயத்தை காப்பதான காவலாளராக, புறவரிச் சட்டமாக இருக்கின்றனர்.
150 பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை நான் குறிப்பிடவில்லை, சகோதரனே, சகோதரியே. பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் முற்றிலும் புறம்பான நிலையில் மிகவும் தூரமாக, மற்றெந்த சபைகளை விடவும் வெளியே காணப்படுகிறது. லூத்தரன்கள் எவ்வாறிருந்தனரோ, அதைவிட மிகவும் தொலைவில் பெந்தெ கொஸ்தே ஸ்தாபனங்கள் காணப்படுகின்றன. லூத்தரன்கள் பெந்தெகொஸ்தேயினரைவிட சற்று மேலான நிலையில் தங்களை வைத்து இருந்தனர்; அதைப்போலவே காணப்படுகிறது. அது மிகவும் சரியாக இருக்கிறது, ஜீன்! ஏனெனில், இப்பொழுது… லூத்தரின் காலத்திலுள்ள லூத்தரன் சபைக்கு வெளியே இயேசு நின்றிருந்து, உள்ளே பிரவேசிப்பதற்கு முயன்றுகொண்டு இருப்ப தாக நான் காணவில்லை. ஏனெனில் முதலில் அவர் அதன் உள்ளேயே இருக்கவில்லை. அவர் பெந்தெகொஸ்தே சபைக்குள் இருந்தபோது, வெளியே தள்ளப்பட்டார்.
இப்பொழுது மத்தேயு 10:1
151 இப்பொழுது நாம் யோவான் சுவிசேஷம் 14:12-ஐ எடுத்துக் கொண்டு அங்கே யோவான் பெந்தெகொஸ்தேயின் விலையேறப் பெற்ற காரியங்களை காவல் செய்கிறானா , அதை ஆதரிக்கிறானா என்பதைப் பற்றிப் பார்ப்போம். யோவான் சுவிசேஷம் 14ம் அதிகாரம் 12ம் வசனத்தில் இயேசு பேசுகிறார்;
"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்."
யோவான் 14:12
ஓ, சகோதரனே, அங்கே இருக்கிற அவ்வாசலில் அக்கழு கானது உட்கார்ந்திருக்கிறது; ஏனெனில் அது சுவிசேஷப் பணி யாயிருக்கிறது. கழுகைப்போல் பறந்து செல்லுகிறது. விரைந்து பறந்து, தீர்க்கதரிசியின் தேசத்திற்குள் சென்று, இருந்ததைப் பற்றியும், இருக்கிறதைப் பற்றியும், வரப்போகிறதைப் பற்றியும் கூறுகிறது. பாருங்கள்? அங்கே அமர்ந்திருந்து, ''நான் செய்கிற கிரியைகளை'' என்பதை காக்கிறதாயிருக்கிறது. அக்கழுகைக் கவனித்துப் பாருங்கள்.
இதோ இங்கே சிங்கம், ஊழியக்காரன் இருக்கிறது. இயேசு அவர்களுக்கு அதிகாரத்தையளித்தார். அவர் அதைப் பாதுகாக் கிறார். அவர் அப்போஸ்தலர் 2:38ஐப் பாதுகாக்கிறார். அங்கே அந்த சிங்கத்தை வைத்திருக்கிறார்.
இதோ இங்கே இக்கழுகோடு, சுவிசேஷத்தின் விரைவான தன்மை காணப்பட்டு, "நான் செய்கிற கிரியைகளை செய்வீர்கள்'' என்று கூறுகிறது. அதனோடு உலக முழுவதும் பறந்து செல்லு கிறது. குஷ்டரோகியை சுத்தம் செய்வதற்காக புறாவின் தலையைக் கிள்ளி அதன் இரத்தத்தை அதன் ஜோடியான புறாவின்மேல் தெளித்து, அது கீழே சிந்தும் போது, அது 'கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்'' என்று கதறுகிறதே, அதைப்போல் உள்ளது.
152 என்னிடம் இன்னொரு வசனம் உள்ளது . யோவான் 15:7. நாம் 15ம் அதிகாரத்தின் 7ம் வசனத்தை எடுத்துக்கொள்வோமாக.
"நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், (வேதக்கல்லூரியின் வார்த்தை அல்ல) நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப் படும்."
யோவான் 15:7
அவ்வாறுதானே அது இருக்கிறது? அப்பொழுது அச்சுவி சேஷமானது இங்கே காவல் செய்கிறது. இந்த பெந்தெகொஸ் தேயின் ஆசீர்வாதத்தை யோவானும் அவனது சுவிசேஷமும் காவல் செய்கின்றனர்; மத்தேயுவும், அவனது சுவிசேஷமும் காவல் செய்கின்றனர்.
153 இப்பொழுது நாம் அடுத்த சுவிசேஷமாகிய மாற்குவை எடுத்துக்கொள்வோம். மாற்கு 16ம் அதிகாரம். மாற்கு இந்த பெந்தெகொஸ்தே ஆசீர்வாதத்தை காக்கிறானா என்பதைப் பார்ப்போம். மாற்கு 16ம் அதிகாரம். உயிர்த்தெழுதலைப் பற்றி இச்சுவிசேஷம் கூறுகிறதே, அதற்குப் பிறகு உள்ள வசனத்தி லிருந்து நாம் வாசிக்க ஆரம்பிக்கலாம். நாம் 14ம் வசனத்தை எடுத்துக்கொள்வோம்.
"அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினி மித்தம் அவர் களுடைய அவிசுவாசத்தைக் குறித்தும் இருதய கடினத்தைக் குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்."
மாற். 16:14
தங்களுக்கு செய்தியை அளித்த மக்களை அவர்கள் விசுவாசிக்கவில்லை. இன்றைக்கும் அவ்வாறுதான் நடக்கிறது. பரிசுத்த ஆவியைக் குறித்து சாட்சியை உடையவர்கள் கூறுவதைக் கேட்கும் மக்கள், 'அபத்தம், அவர்கள் உருளும் பரிசுத்தர் கூட்டத்தினர்'' என்று கூறுகின்றனர். அவரை அவருடைய உயிர்த்தெழுதலின்படி அறிந்திருக்கிற மக்களை அவர்கள் நம்பாத தினிமித்தமாக, அவர் அவர்களை கடிந்துகொண்டார்.
"பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்''
மாற். 16:15
154 என்ன? இவைகளைப் பிரசங்கிக்க வேண்டுமென அவர் களுக்கு சொல்லப்பட்டது. ஒரேயொரு சுவிசேஷம்தான் உண்டு, அதற்கு நான்கு காவலர்கள் உண்டு. "சர்வ சிருஷ்டிக்கும் சுவி சேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று கூறப்பட்டது. அவர் இந்த நான்கு காவலர் களிடமும், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நால்வரிடமுமே, 'சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்று கூறினார் என்பதை நினைவில் வையுங்கள்.
"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படு வான்.'' (இங்கே கூறப்படும் இந்த ஞானஸ்நானத்தினுள் நீங்கள் பிரவேசிக்கவேண்டும்)
"விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவான்.'' (ஓ , சகோதரனே, தயவு செய்து விசுவாசியுங்கள்.)
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: (ஆங்கிலத்தில் விசுவாசிகளைப் பின் தொடரும் அடையாளங்களாவன' என்றுள்ளது) (இவ்வசனம் ஆங்கிலத்தில் "And" என்ற இணையிடைச் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. இணையிடைச் சொல் என்பது வார்த்தைகளையும் தொடர்களையும், வாசகங் களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் ஆகும் - மொழி பெயர்ப்பாளர்). ("And" என்ற இணையிடைச் சொல்லானது மீதமுள்ள வாக்கியங்களையும் ஒன்றாக இணைக்கிறதாக இருக்கிறது).
மாற். 16:16-17
155 மெதோடிஸ்ட்டுகள் என்ன கூறுகின்றனர் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பார்ப்போம். "நீங்கள் சத்தமிட்டு, நல்ல வாழ்க்கையை நடத்தினால் போதும்'' என்கிறார்கள். பாப்டிஸ்ட்டு களோ, "வெறும் விசுவாசத்தை மட்டும் உடையவர்களாயிருந்து, ஞானஸ்நானம் பெற்றால் அதுவே போதுமானது'' என்று கூறு கின்றனர். எபிஸ்கோப்பேலியன்களோ, "எபிஸ்கோப்பேலியன் களைப் போல் நிமிர்ந்து நில்லுங்கள் பாடல் பாடப்படும் போது மட்டும் தலைவணங்குங்கள், அதுவே போதுமானது'' என்று கூறுகின்றனர். கத்தோலிக்கரோ, '' 'மரியே நீ வாழ்க' என்று கூறுங் கள், அது போதுமானது'' என்கின்றனர். பெந்தெகொஸ்தே யினரோ, "எங்கள் ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ளுங்கள், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்கின்றனர்.
"விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அல்ல அது ) என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிய ஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார் (ஆமென்! ஓ சகோதரனே).
மாற். 16:17-18
156 மத்தேயு 11ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், நாம் இப்பொழுது முடிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறோம். மத்தேயு 20, 21 ஆகியவற்றை நான் எடுத்துக்கொண்டுள்ளேன். இயேசு பேசு கிறார். இவைகள் யாவும் இயேசுவே பேசியவைகளாகும். ஏதோ ஒன்று அல்ல, ஆனால் இயேசு என்ன பேசினாரோ அவைகள்தான் அவை ஒவ்வொன்றும்.
காலையிலே அவர்… (அவர் பெத்தானியாவுக்கு வந்தார் ) திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு…
மத். 21:18-19
மத்தேயு 21ல், அவர் அம்மரத்தை சபிக்கையில் உள்ள சம்பவத்தைக் குறிக்கும் வசனமாகும் இது. மாற்கு 11:21,22.
"பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ நீர் சபித்த அத்திரமரம் பட்டுப்போயிற்று என்றான்.
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாச முள்ளவர்களா யிருங்கள் (பார்த்தீர்களா?)
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே (அது அகத்தில் உள்ள விஷயமாகும்) ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மாற். 11:21-23
தெற்கு வாசலானது காளையினால் காக்கப்படுகிறது. வடக்கு வாசலானது சிங்கத்தால் காக்கப்படுகிறது. வடக்கு வாசல்… நான் கிழக்கு வாசலைத்தான் சிங்கம் காக்கிறது என்று கூறுகிறேன். வடக்கு வாசல் அல்ல. வடக்கு வாசலானது பறக்கும் கழுகினால் காவல் செய்யப்படுகிறது. யோவான் அந்த சுவிசேஷகன். பிறகு இப்பக்கத்திலுள்ள வைத்தியனாகிய லூக்காதான் அந்த மனிதன்.
157 இப்பொழுது நாம் லூக்கா என்ன சொல்லுகிறான் என்பதைப் பற்றிப் பார்ப்போம். லூக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். லூக்கா 10:1 முதல் 12. அதுதானே கட்டளையாயிருக்கிறது அது என்ன வென்பதை நீங்கள் யாவரும் அறிவீர்கள். லூக்கா 10ம் அதிகாரம் 1 முதல் 12 முடிய. நாம் அதை எடுத்துக்கொண்டு வாசிக்கலாம். ஆனால் நமக்கோ அதைச் செய்ய நேரம் போதவில்லை. எனவே, நான், 'புறப்பட்டுப் போங்கள்…'' என்று துவங்குகிற 3ம் வசனத்தை எடுத்துக்கொள்ளுகிறேன்.
புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக் குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்.
பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோக வேண்டாம்; (பாருங்கள், எந்தவொரு ஸ்தாபனத்தின் பெயராலும் நீங்கள் செல்லவேண்டாம். நான் அனுப்புகிறபடி நீங்கள் செல்லுங்கள். இந்த எழுப்புதலுக்காக உங்களுக்கு நூறாயிரம் டாலர்கள் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டால் அதன்பேரில் செல்ல வேண்டாம். கொடுக்கப்படா விடில் நீங்கள் போகமாட்டீர்களே. உங்கள் கூட்டங்களை ஏற்படுத்துங்கள்; அவர் கூறினார், ''நான் உங்களை அனுப்பிடும் இடத்திற்கே செல்லுங்கள்'').
"பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டு போக வேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். (வழியில் நின்று, ''நான் போய் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பார்ப்பேன். இவர்கள்கூட வருகிறார்கள்.'' என்றெல்லாம் சொல்ல வேண்டாம். நான் அனுப்புகிற இடத்திற்கு போங்கள். யாரைப்பற்றியும் நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்,'' என்று கூறினார்).
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது : இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக வென்று முதலாவது சொல்லுங்கள்.
சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும்; இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பி வரும்.
அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்து, குடியுங்கள்; (இறைச்சி புசிப்பதில்லை என்ற கொள்கையைப் பற்றியெல்லாம் என்ன - கொடுப்பதைப் புசியுங்கள் என்றாரே )
வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.'' (இன்றைக்கு ஜோன்ஸ் வீட்டுக்கும், நாளைக்கு இன்னொரு வீட்டுக்கும், இன்னொரு வீட்டுக்கு அதற்கடுத்த நாளும் விருந்துக்குப் போகுதல் நடக்கிறது. நீங்கள் அங்கேயே தங்கி யிருங்கள்)
லூக். 10:3-7
அவ்வாறுதான் கூட்டத்திற்குச் செல்லுகையில் செய்வேன். நான் விடுதியில் தங்கிவிடுவேன். கடைசி வரையிலும் அங்கேயே தங்கிவிடுவேன். அப்படிப்பட்ட நிலையில்தான் நான் சமாதானத் தைக் காண்கிறேன். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள்.
"ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள் முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவ னுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்".
லூக். 10:8-9
158 அடுத்துள்ள வசனங்களை நான் வாசிப்பேனாக.
யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்:
எங்களில் ஒட்டின் உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்க ளுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிற தென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.
அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
லூக். 10:10-12
ஓ, சகோதரனே! அந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குறுதி. அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிடில், நீங்கள் அவர்களிடம், "நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாவிடில், என் பாதரட்சைகளில் ஒட்டியுள்ள தூசியை நான் உதறிவிடுகிறேன், நான் வெளியேறு கிறேன்'' என்று கூறுங்கள். அதாவது, "நான் உங்களிடமிருந்து ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை, நான் ஏதாவது புசித்தால் அதற்குரிய பணத்தைச் செலுத்தி விடுவேன்'' என்று கூறிவிட்டுச் செல்லுங்கள். ''மெய்யாகவே'' என்று ஆண்டவர் கூறினார். அவர்கள் சென்ற நகரங்கள் ஒவ்வொன்றிலும் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால், இன்றைக்கு அந்நகரங்கள் மூழ்கிப்போய் விட்டன. அவர்களை ஏற்றுக்கொண்ட நகரங்கள் ஒவ்வொன்றும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
159 இன்னும் ஒரு வசனம், அதன்பிறகு முடிப்போம். லூக்கா 11:29-31. இதற்குப் பிறகு முடித்துவிடுவோம். ஓ நான் இதை நேசிக்கிறேன்.
"ஜனங்கள் திரளாய்க் கூடி வந்திருகிறபொழுது…"
அது லூக்கா 11:29 என்பது சரிதானே? அதைப்பற்றிப் பார்ப் போம். ஆம். இதுதான் உரிய வசனம் என்று நான் கருதுகிறேன்.
''ஜனங்கள் திரளாய்க் கூடி வந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்தது போல மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாள மாயிருப்பார்.
தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொ மோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத் தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவாள்.
யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ. யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள் மேல் குற்றஞ்சுமத்துவார்கள்."
லூக். 11:29-32
160 இப்பொழுது நான் என்ன கூறுகிறேன்? முடிக்கிற வேளையில், மீதமுள்ளவைகளை நான் பேசாமல் விட்டுவிட வேண்டியதாயிருக்கிறது. ஆனால், முடிவாக, நான் இதைக் கூறவிரும்புகிறேன், நான் உங்களை ஏற்கனவே நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டேன். அவர் இங்கே என்ன கூறுகிறார்? "ஒருநாள் வரும், அப்பொழுது பொல்லாததும், விபச்சாரமுமான ஒரு சந்ததியானது ஒரு அடையாளத்தைத் தேடும்''. (இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள்). இதுதானே பொல்லாத, விபச்சார சந்ததியார் ஆவர். 'அந்த சந்ததியார் ஒரு அடையாளத்தைப் பெறு வார்கள்.'' என்று அவர் கூறினார். என்னவிதமான அடையாளம்? வேதாகமத்தில் ஏனைய பகுதியின் வழியாக…. யோனாவின் அடையாளம். "யோனா மீனின் வயிற்றில் மூன்று இரவும் பகலும் இருந்தான். அதேவிதமாக மனுஷகுமாரனும் பூமியின் வயிற்றில் மூன்று நான் இரவும் பகலும் இருக்கவேண்டும்". அது என்ன? அதுவே உயிர்த்தெழுதலின் அடையாளமாகும். பொல்லாத விபச்சார சந்ததியின் மத்தியில் உயிர்த்தெழுதலின் அடையாள மானது நிகழ்த்தப்படும், அது அப்போஸ்தல நடபடிகளின் புத்தகத்தில் நடந்தது. இயேசுவானவர் மரித்தோலிருந்து உயிரோடு எழும்பி பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடமும் ஏனைய அப்போஸ்தலர்களிடமும் வந்தார். அவர்களே இந்த நடபடிகளின் புத்தகத்தை நிகழ்த்தினார்கள் (அது அப்போஸ்தலர்களின் நடபடி கள் அல்ல). அதுதானே பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களில் செய்வித்த நடபடிகளாகும்.
இன்றைக்கும் அது ஒரு மனிதன் அல்ல. அது பரிசுத்த ஆவியானவர் மனிதன் அல்லது மனிதர்கள் மூலம் செய்யும் கிரியையாகும். அது மனிதன் அல்ல. மனிதன் வெறும் ஒரு பாத்திரம் மாத்திரமே. ஆனால் பரிசுத்த ஆவியானவரோ அப்பாத் திரத்தில் இருக்கும் எண்ணெயாக இருக்கிறார். பாருங்கள்?
161 அவர்கள் என்ன செய்தனர் என்பதைப் பாருங்கள்; இயேசு வினாலே அவர்கள் செய்த அடையாளங்களைப் பாருங்கள். பேதுருவும் யோவானும் படிப்பறியாதவர்களும் பேதமையுள்ள வர்களுமாய் இருந்தனர். ஆனால் அவர்கள் இயேசுவோடிருந்த வர்கள் என்று மற்றவர்கள் அறியத்தக்கதாக, இயேசு செய்த கிரியைகளை தாங்களும் செய்தனர். ஆகவே வேதாகமத்தில் உள்ள இந்நான்கு புத்தகங்களும், இந்நான்கு சுவிசேஷப் புத்தகங்களும், பெந்தெகொஸ்தே ஆசீர்வாதங்களை அவர்கள் என்ன கூறினார் களோ, அவற்றை அப்படியே ஆதரித்து நிற்கத்தக்கதாக, அதை காத்து நின்றனர். எனவே இப்பொழுது, இன்றைக்கு, அப்போஸ் தலர் நடபடிகள் புத்தகமானது நான்கு சுவிசேஷப் புத்தகங்களோடு சேர்ந்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி நிரூபிக்கத்தக்கதாக இருக்கிறது. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா?
அவர்கள் மேல்வீட்டறையில் கூடிவந்து அவர் நாமத்தில் ஜெபித்தனர். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர், அவர் பணி செய்திட வல்லமை அவர்கள் மேல்
வந்தது அன்று அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ, அதையே உமக்கும் செய்வார் இன்றும், நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட நான்
மகிழ்கிறேன்.
162 நான் அதைப் பாடுவேனாக :
அவர்கள் யாவரும் மேல் வீட்டறையில் கூடி அவர் நாமத்தினால் ஜெபித்தனர் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர் அவர் பணிக்கென அதிகாரம் பெற்றனர்
(இன்றைக்கு நமக்கும் அதுவே தேவை) அன்று அவர்களுக்கு செய்ததையே இன்று உனக்கும் செய்திடுவார் நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட சந்தோஷமே.
இவர்கள் கல்லாதவராயிருப்பினும்
(பேதுரு, யாக்கோபு, யோவான் இவர்களைப் போல்) இவ்வுலக கீர்த்தியும் அவர்களுக்கு இல்லை ஆனால் அவர்கள் இயேசுவின் நாமத்தினால்
அபிஷேகிக்கப்பட்டு, தங்களுடைய பெந்தெகொஸ்தே ஆசியைப்
பெற்றனர் அவர் வல்லமை இன்றும் மாறாதது என்று எவ்விடத்திலும் அவர்கள் கூறி வருகின்றனர்
(அன்று இருந்தது போலவே அப்படியே உள்ளது) நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட
சந்தோஷமே நானும் அவர்களுள் ஒருவன், நானும் அவர்களுள்
ஒருவன், நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட
சந்தோஷமே அவர்களுள் ஒருவன், அவர்களுள் ஒருவன், நான் மிகவும் மகிழ்கிறேன் நானும் அவர்களுள் ஒருவன் அவர்களுள் ஒருவன், நான் மிகவும் மகிழ்கிறேன் நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிடவே, ஓ சகோதரரே, வாரீர், இவ்வாசியை தேடுவீர், அது உமது இருதயத்தை பாவத்தை நீக்கி கழுவிடுமே, மகிழ்ச்சியின் மணியோசை நீர் கேட்கச் செய்திடுமே உமது ஆத்துமாவை அக்கினிப் பிழம்பாக்குமே, ஓ அது இப்பொழுது என் இதயத்தில்
கொழுந்துவிட்டு எரிகிறதே நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட மிகவும்
மகிழ்கிறேன். அல்லேலூயா அவர்களுள் ஒருவன், அவர்களுள் ஒருவன், நானும் அவர்களுள் ஒருவன் என்று கூறிட எனக்கு சந்தோஷமே.
163 (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). அநேக மக்களை அது வஞ்சிக்கிறது. தெருக்களில் இருக்கிற அநேகம் மக்கள் ஆலயத் திற்கு செல்கின்றனர்; சபைகளைச் சேர்ந்து கொண்டவர்களாய் இருக்கின்றனர், ஆதியில் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போலவே அவர்களும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவ்வாறு நேரிட்டுள்ளதைப் பற்றி அவர்களுக்கே தெரியவில்லை.
ஓ, வந்து ஜீவ விருட்சத்தினை எடுத்துக்கொள்ளுங்கள்; கேருபீன்களை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக.. கேருபீன்கள் என்று சொல்வதற்குப் பதிலாக வேறு ஒன்றைக் கூற நான் விரும்பினேன். இக்கேருபீன்கள் இச்சிங்காசனத்தை காவல் புரிந்துவருகின்றன. அவைகள் இங்கே வெளியே நின்று சிங்கா சனத்தை காவல் புரிந்து மக்களை விரட்டிவிடுவதற்கு பதிலாக, அவர்களை நாடி வாசல் வழியாக மீண்டும் ஜீவவிருட்சத்தினிடத் திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றது. அதன் மூலமாக மக்கள் ஜீவவிருட்சத்தை எடுத்துக்கொள்ள வேண்டு மென்பதற்காக. இயேசு கூறினார்: ''வானத்திலிருந்து தேவனிடமிருந்து வந்த ஜீவ அப்பம் நானே. என் மாம்சத்தைப் புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்''. ஓ நான் மிகவும் மகிழ்ச்சி யாயிருக்கிறேன்.
164 வியாதிப்பட்டவர்கள் எத்தனை பேர்கள் இவ்வறையில் உள்ளனர்? நாங்கள் உங்கள் கரங்களை காணட்டும், உங்கள் கரத்தை உயர்த்திக் காட்டுங்கள். எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் உள்ளன? பில்லி அட்டைகள் கொடுத்தானா? பில்லி எங்கேயிருக் கிறான்? அவன் ஜெப அட்டைகளைக் கொடுத்தானா? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) யாரிடம் உள்ளது? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.)
இப்பொழுது இதை இவ்விதமாகப் பாருங்கள். மகிமைக்கு கீழாக வருகையில் இருக்கிற வண்ணமாக அது உள்ளது. அவர்கள் எடுத்துக்கொண்டனர்…. அது இங்கேயிருக்கிற ஒளியாகும். நீங்கள் இங்கே முன்னேறிச் செல்லுகிறீர்கள். இப்பொழுது பாருங்கள். அது அங்கே நீங்கள் பார்க்கிற ஒளியின் பிரதிபலிப்பேயாகும். அது ஒளியல்ல. இங்கேதான் ஒளியானது தொங்கிக்கொண்டிருக்கிறது. இதோ இந்த பெண்மணியின்மேல் அது உள்ளது. நான் அதைக் கண்டுபிடித்தேன். அது யாரோ ஒருவர்மேல் உள்ளது என்று எண்ணினேன்.
165 நீங்கள் ஒன்றையே பார்க்கிறீர்கள், ஆனால் நானோ இரண் டைப் பார்க்கிறேன். அதில் ஒன்று மாம்சத்திற்குரியது, இன் னொன்று தெய்வீகமும் இயற்கைக்கு அப்பாற்றப்பட்டதுமாகும். இங்கே வெளியே ஒரு மனிதன் அவ்வரிசையில் உட்கார்ந்து அவ் வொளியை நோக்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறார், அவ்வொளி அவர்மேல் இடித்தது. அவர் செய்மோர், இண்டியானாவிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஐயா, நீர் விசுவாசிப்பீரெனில், தேவன் உம்மை அந்த மாரடைப்பு நோயி லிருந்து குணமாக்குவார். ஆமென். இப்பொழுதே விசுவாசிப்பீர்.
உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? அது தேவனால் உண்டானது என்பதை நிரூபிக்கும்படி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனாகிய கர்த்தர் நான் ஒன்றைச் செய்ய என்னை அனுமதிப்பாரெனில், அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிப்பீர்களா? உங்களுடைய தேகநிலை, நீங்கள் தற்போது மாதவிடாய் நிற்கப்போகிறதினால் ஏற்பட்டுள்ள மனதில் ஒரு படபடப்போடு காணப்படுகிறீர்கள். தேவன் உங்களை குணமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இந்தப் பகுதியில் உள்ளவர்களல்ல.
166 (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). உங்களுக்கு ஏற்பட்டுள்ள தொந்தரவு என்னவெனில் … அவர் உங்களை குணமாக்கு வாரென விசுவாசிக்கிறீர்களா? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). உங்களை குணமாக்கிட முடியும். ஏனெனில் குணமாகிட நீங்கள் விரும்புகிறதினால் அல்ல, உங்கள் மகன்தான் விரும்பு கிறான். அவன் விர்ஜீனியாவில் இருக்கிறான். அவனுக்கு என்ன தொந்தரவு உள்ளது என்பதைப்பற்றி என்னால் உங்களுக்கு தேவனுடைய உதவியினால் கூற இயலும் என்பதை விசுவாசிக் கிறீர்களா? அவனுக்கு குடல் புண் நோய் உள்ளது. அது சரிதான். அவனிடத்தில் இன்னொரு கெடுதல் உள்ளது; அவன் இரட்சிக் கப்படவில்லை. அவனுக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுதும் திருமதி பேகர் அவர்களே, நீங்கள் சொமர்செட் ஊருக்கு திரும்பிச் செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும், இயேசு கிறிஸ்து அவனை குணமாக்குவார் என்பதை விசுவாசி யுங்கள்.
(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)…. உங்களை குணமாக்கு வார், உங்களை குணமாக்குகிறவராக அவரை நீங்கள் ஏற்றுக்கொள் வீர்களா? உங்களால் இயலுமென்றால் ….. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) குணமாக்குகிறவர்… பவுல் ஒரு சமயம் கூறினான் … (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.).
கர்த்தாவே, இப்பொழுதும் தேவனாகிய கர்த்தாவே, இந்நாளில் இது வரையிலும் மிகவும் கவனமாக செவிகொடுத்த வர்களான இங்கு கூடி வந்திருக்கிற மக்கள்மேல் உமது இரக்கங் களும், தயவும் தங்கியிருப்பதாக.
சாத்தானே, நான் உன்னை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அறைகூவல் விடுத்து, இந்த மக்களை விட்டு வெளியேறும்படி கட்டளையிடுகிறேன். சுவிசேஷத்தைக் கேட்ட இவர்கள் இங்கே தங்கியிருக்கிறார்கள். இம்மக்களை கட்டி வைத்திருக்கிற பிசாசின் வல்லமையானது இவர்களை விட்டு அகலட்டும்.