1 நன்றி, சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
காலை வணக்கம், நண்பர்களே. மறுபடியுமாக இன்று காலை இக்கூடாரத்துக்கு புத்துணர்ச்சியுடனும் நல்லுணர்வுடனும் நான் வந்துள்ளது ஒரு சிலாக்கியமே. நேற்று முந்தின நாள் என்னால் பேசக்கூட முடியவில்லை. சுற்றி பறந்து கொண்டிருக்கும் சிறு பூச்சி உங்களுக்குத் தெரியும். அது தொண்டைகளுக்குள் சென்று அவைகளை கரகரப்பாக்கிவிடுகிறது. ஆனால் கர்த்தர் எனக்குதவி செய்து அந்நிலையிலிருந்து என்னை விடுவித்ததால், இன்று காலை உங்களிடம் என்னால் பேச முடிகிறது.
இங்கு நிறைந்து, ஜனங்கள் நின்று கொண்டிருக்கும் ஒரு அருமையான கூடாரம் உள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியூட்டுகிறது. இங்கு நின்று கொண்டிருப்பவர்களுக்கு அளிக்க போதிய இருக்கைகள் இருந்தால் நலமாயிருக்கும். எல்லா நாற்காலிகளுமே எடுத்து உபயோகிக்கப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன். நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் வந்து, உங்கள் முதுகை மறுபக்கம் திருப்பி, பீடத்தண்டை உட்கார விரும்பமாட்டீர்கள் என்றறிவேன்.
2 சில நாட்களாக நான் சரித்திரம் படித்து வருகிறேன். எனவே இன்று காலை பிரசங்கம் செய்வதற்கு பதிலாக, சற்று நேரம் தேவனுடைய வார்த்தையின் பேரில் உங்களுக்கு கற்பிக்கலாம் என்று எண்ணினேன். ஒருக்கால் நமக்கு சிறிது தாமதமாகக் கூடும். எனவே நான்… உட்கார்ந்திருக்கும் உங்களில் சிலர் நின்று கொண்டிருப்பவர்களுடன் இடம் மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி செய்து அவர்களுக்கு சற்று இளைப்பாறுதலை அருளினால், அது நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்.
இப்பொழுது, என் நண்பர்கள் அநேகர் வந்துள்ளனர். சிலர் வெகு தொலைவிலிருந்து; ஜார்ஜியா, ஓஹையோ, டென்னசி போன்ற பல்வேறு இடங்களிலிருந்து; இல்லினாய், மிஸ்ஸௌரி, மிஷிகன் போன்ற இடங்களிலிருந்தும்; இத்தகைய ஒரு சிறு கூடாரக் கூட்டத்துக்காக அவர்கள் சிக்காகோவிலிருந்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஜனங்களைக் காணும்போது, அது என்னை மிகவும் நன்றியுள்ளவனாகச் செய்கிறது. அது மாத்திரமல்ல, ஆனால், இதை நான் கூற விரும்புகிறேன்… தேவனுடைய வார்த்தையின் நலனுக்காக, அவர்கள் ஒவ்வொருவரும் இங்கு வருவது மாத்திரமல்ல, அவர்களுடன் தங்கள் தசமபாகங்களையும் கொண்டு வந்து, சபையின் உதவிக்காக அளிக்கின்றனர்.
அவர்கள் மிகவும் விசுவாசமுள்ள (loyal) நண்பர்கள். அப்படிப்பட்டவர்களை உங்களால் மறக்க முடியாது.
3 சில நேரங்களில் அவர்கள் மனதை நோகச் செய்யும் சிலவற்றை நான் கூற வேண்டியதாயுள்ளது. ஆனால் அதன் உள்நோக்கம் என்னவென்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என் இருதயத்தில் அவ்வாறு செய்ய விருப்பமில்லை. ஆயினும் ஏதோ ஒன்று, "நீ… அது செய்யப்பட வேண்டும்" என்கின்றது. பாருங்கள், எனவே தான் செய்ய வேண்டியதாயுள்ளது.
எல்லாவிடங்களிலிருந்தும் அவர்கள் வந்து, கர்த்தரை சேவிக்க முற்பட்டு, கர்த்தர் எனக்களித்துள்ள ஊழியத்தை அவர்கள் விசுவாசித்து, நான் தேவனுடைய ஊழியக்காரன் என்றும், அவர்களுக்கு தவறொன்றையும் எடுத்துரைக்கமாட்டேன் என்றும் அவர்கள் விசுவாசிப்பதைக் காணும்போது மிகுந்த உத்தமத்துடன் எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கொண்டு அவர்களுடைய ஆத்துமாக்களுக்கு நான் மேய்ப்பனாக இருக்க வேண்டியவனாயிருக்கிறேன். மற்றவர்கள் அவர்களைக் காணவேண்டும் என்பதற்காக, அவர்கள் பனி உறைந்த மலைகளின் வழியாகவும், குன்றுகளின் வழியாகவும் மிகுந்த ஜன தெருக்கடி உள்ள வீதிகளின் வழியாகவும் காரில் பயணம் செய்து வருவதில்லையென்று நானறிவேன். அவர்களுடைய பிள்ளைகள் உணவையும் உறக்கத்தையும் இழக்கின்றனர். அவர்களுடைய கைப்பெட்டி காரின் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. அது மிகவும் கடினமானது.
அப்படிப்பட்டவர்களைக் குறித்து வேதாகமம் எபிரேயர் 11ம் அதிகாரத்தில், "உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை" என்று உரைக்கிறது (எபி. 11:38). இதை என் இருதயப் பூர்வமாகக் கூறுகிறேன்.
4 அநேகர் நியூ ஆல்பனி, லூயிவில் போன்ற இடங்களிலிருந்தும், கென்டக்கியிலிருந்தும், அதிக தூரமில்லாத வெவ்வேறு இடங்களிலிருந்தும் உத்தமமாக பனிக்கட்டி வழியாக பயணம் செய்து இங்கு அடைந்துள்ளனர்.
அடுத்த ஞாயிறு கிறிஸ்துமஸுக்கு முந்தின நாள். நான் நினைத்தேன்… சபைக்கென கிறிஸ்துமஸ் செய்தி ஒன்றை வைத்திருந்தேன். ஆனால் இந்த சிறு பிள்ளைகளின் மேல் எனக்குப் பரிதாபம் தோன்றினது. இதை நான் கூறவேண்டும். அவர்கள்… நான் இங்கிருந்தால், சிறு பிள்ளைகளில் அநேகர் வெகு தூரத்திலிருப்பார்கள். அவர்கள் கிறிஸ்துமஸை இழந்துவிடுவார்கள். அது அவர்களுக்கு கடினமாக இருக்கும். போவதற்கு முன்னால்… இப்பொழுது, நாம்…
5 இங்குள்ள நாம் நமது பிள்ளைகளுக்கு சான்டா கிளாஸ் போன்ற கட்டுக் கதையை கற்றுக் கொடுப்பதில்லையென்று எனக்குத் தெரியும். யாரிடமும் பொய் சொல்வதில் நமக்கு நம்பிக்கையில்லை. எனவே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் பொய் சொல்லப் போவதில்லை. அப்படிப்பட்ட ஒன்று மிகவும் மோசமான கட்டுக்கதை. அது கிறிஸ்துமஸில் கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறது.
கிறிஸ்துமஸ் இழந்துவிட்டது… கிறிஸ்துமஸ் ஆராதனைக்குரிய ஒன்றாயிராமல், அது கொண்டாட்டமாகிவிட்டது. குடித்தல், சூதாடுதல், களியாட்டம் போன்றவை. அது அஞ்ஞானத்தின் எல்லையாகும்… கிறிஸ்துமஸுக்குப் பிறகு ஒருக்கால் நான் கிறிஸ்துமஸைக் குறித்து பேசுவேன். நீங்கள் பாருங்கள், அப்பொழுது, அது சிறு பிள்ளைகளின் குதூகலத்தை பாதிக்காமல் இருக்கும்… ஆனால் நீங்கள் சிறு பிள்ளைகளிடம் அந்த கட்டுக் கதையை சொல்லக் கூடாது. சிறு பிள்ளைகள் கிறிஸ்துமஸ் இரவின்போது கிறிஸ்துமஸ் வெகுமதிகளைப் பெறுகின்றனர். அவர்களுக்கு அது புரிவதில்லை. பாருங்கள்? அவர்கள்… அவர்கள் மிகவும் சிறியவர்கள். அவர்களையும் நாம் மறந்து போகக் கூடாது… அவர்களுக்கு பொதுவான சில காரியங்கள் உண்டு என்பதை, நம்மை நாம் அவர்களுடைய நிலைக்குத் தாழ்த்தி அவர்களை மறந்துவிடாமல் இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்…
(சகோதரனே, என் சத்தம் அதிகமாக கேட்கிறதா? ஒலிப்பெருக்கியின் சத்தம் அதிகமாக்கப்பட்டுள்ளதா? பின்னால் உள்ளவர்கள் நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா? பொறுங்கள். நான் ஒலிப்பெருக்கிக்கு மிக அருகாமையில் நின்று கொண்டிருக்கிறேன். எந்த ஒலிபெருக்கி வேலை செய்கிறது? இரண்டுமா, இதுவா, அதுவா? அது நல்ல ஒலிபெருக்கியென்று நினைக்கிறேன்… இப்பொழுது எப்படியிருக்கிறது முன்னைவிட நன்றாக இருக்கிறதா? நல்லது.)
6 சிறு பிள்ளைகள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சிறுவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாமும் ஒரு காலத்தில் சிறுவர்களாக இருந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்கள் சென்று கேதுரு புதர் ஒன்றை எங்கிருந்தாவது வெட்டிக் கொண்டு வருவார்கள். அம்மா சோளத்தை பொறித்து அதில் கட்டுவார்கள் என்பது என் நினைவுக்கு வருகிறது. அந்த மரத்தில் அது மாத்திரமே இருக்கும். பழைய கிழிந்த காலுரைகள் (Socks) கட்டப்பட்டு தொங்க விடப்பட்டிருக்கும்… அவர்கள் ஒருவேளை… ஒரு சிறு பொட்டலம் மிட்டாய் வாங்குவார்கள். கெட்டியான மிட்டாய் (எனக்கு இரண்டு, மூன்று மிட்டாய் தருவார்கள், ஹம்பிக்கு இரண்டு, மூன்று மிட்டாய்; இரண்டு, மூன்று இவனுக்கு). சிறு மிட்டாய்கள். நாங்கள் நாள் முழுவதும் அதை வாயில் சப்பிக் கொண்டிருப்போம். பிறகு அதை சிறு காகிதத்துண்டில் சுற்றி ஜோபியில் போட்டுக் கொள்வோம். சிறு பட்டாசு, துப்பாக்கி, அல்லது ஊதுவதற்கு ஊதுகுழல் கிடைத்தால், அது பெரிய காரியம். அது எங்களை பரவசப்படுத்தினது.
7 ஆனால் இன்றைக்கோ, அது வித்தியாசமாயுள்ளது. ஏழை மக்கள் கூட சிறிது காசு வைத்துள்ளனர். எனவே தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அதிக பொருட்கள் வாங்கிக் கொடுக்க முடிகிறது. இவர்கள் முன்காலத்து பிள்ளைகளைக் காட்டிலும் நன்கு உடுத்துகின்றனர். நன்கு உண்கின்றனர், நன்கு வாழ்கின்றனர். இன்று கிடைக்கும் ஊதியத்தின் விளைவாக, அவர்கள் எல்லா வகையிலும் நன்றாகவேயுள்ளனர். எனவே நீங்கள் சிறு பிள்ளைகளுக்கு ஏதாகிலும் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் இதை மாத்திரம் கண்டிப்பாக செய்யுங்கள். சாண்டா கிளாஸ் என்று ஒன்றில்லை என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். ஏனெனில் அது பொய்யான ஒன்று என்றாவது ஒருநாள் அவர்கள் உங்களிடம் வந்து, "அப்படியானால் இயேசுவைக் குறித்தென்ன?" என்று கேட்பார்கள். பாருங்கள்? பாருங்கள்? எனவே அவர்களிடம் உண்மையைக் கூறுங்கள். எல்லோரிடத்திலும் உத்தமமாயிருந்து உண்மையைக் கூறுங்கள். முக்கியமாக உங்கள் பிள்ளைகளிடத்தில் தவறான ஒன்றைக் கூறவேண்டாம். ஏனெனில் அவர்கள் எழுந்து நின்று கேட்பார்கள்… நீங்கள் கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனர். எனவே அவர்கள்… அவர்களிடம் நீங்கள் உண்மையையே கூறுகிறீர்கள் என்பதே அவர்களுடைய கருத்து. அவர்களிடம் உண்மையை மாத்திரம் கூற நிச்சயமுடையவர்களாயிருங்கள். அப்பொழுது எல்லாமே சரியாகிவிடும்.
8 அடுத்த ஆண்டுகள் இல்லை. ஆண்டு ஆராதனையைத் தொடங்கும் முன்னர், கூடுமானால் இக்கூடாரத்தில் இன்னும் ஒரு இரவு கூட்டம் நடத்த விரும்புகிறேன்.
கர்த்தருக்கு சித்தமானால், வரும் ஆண்டில் வெளி நாடுகளில் கூட்டம் நடத்த முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன். அதற்கான அவசியத்தை நான் உணருகிறேன். முக்கியமாக சுவிட்… ஸ்வீடன், நார்வே, அநேக ஸ்கான்டிநேவியன் நாடுகளிலும், ஆசியாவிலும். நாம் இந்த காரியங்களுக்காக பதட்டமாக ஜெபம் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேன், அதாவது, பரிசுத்த ஆவியின் வழியை நாம் அறிந்து கொள்ளவும், அவர் எப்படி நம்மை வழிநடத்தப் போகிறார் என்றும், நாம் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்ளவும்.
9 ஆதி சபையின் சரித்திரத்தை நான் படித்தபோது பிராட்பென்ட், ஹேசல்டைன் போன்றவர் எழுதியுள்ள விமர்சனங்கள், நிசாயா பிதாக்கள் போன்றவைகளை… நேற்று பரி. மார்டின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதுடன் முடித்துக் கொண்டேன். கத்தோலிக்க சபை அவரை பரிசுத்தவானாக்க மறுத்தது. ஆனால் தேவன் அதை செய்தார். எனவே அவர்கள்… அவருடைய மகத்தான வாழ்க்கை, எவ்வாறு அவருடைய வாழ்க்கை பூராவும் அற்புதங்களும் அடையாளங்களும் அவரைத் தொடர்ந்தன; அவர் எவ்வாறு மரித்த இருவரை உயிரோடெழுப்பினார், அசுத்த ஆவிகளைத் துரத்தினார், அந்நியபாஷை பேசினார், தரிசனங்களை கண்டார், எவ்வளவு பெரிய மனிதராயிருந்தார் என்றெல்லாம், ஆயினும் அவருடைய வல்லமையின் இரகசியமே அவருக்கு தேவனுக்கு முன்பாக இருந்த தாழ்மையே. இன்று சபையானது வல்லமையைக் குறித்தும், விசுவாசிக்கிறவனைத் தொடரும் அடையாளத்தைக் குறித்தும் பேசினாலும், அவர்கள் பெருமையுள்னவர்களாய், "நான் பெரியவன், நீ சிறியவன்" என்று நினைப்பதைக் காண்கிறோம். அது ஆதி சபையைப்போல் அல்ல, பாருங்கள். ஆதி சபையிலிருந்தவர்கள் தாழ்மையுள்ளவர்களாயும், ஒருவருக்கொருவர் தயவாயும், ஒருவரையொருவர் இனிமையாகப் புரிந்து கொள்ளுகிறவர்களாகவும் இருந்தனர். இன்று அதிக வித்தியாசமாயுள்ளது. இது பெரும்பாலும் நம்மை செய்தியின் முக்கியமான அம்சத்திலிருந்து வழி விலகச் செய்துள்ளதா என்று வியப்புறுகிறேன். அதாவது நம்மை நாம் தாழ்த்த வேண்டும் என்பது போன்றவைகளிலிருந்து. உங்களை… நீங்கள் எவ்வளவுக்கதிகமாய் தாழ்மையுள்ளவர்களாய் இருக்கின்றீர்களோ, அவ்வளவுக்கதிகமாய் தேவன் உங்களை உபயோகிப்பார்.
10 கட்டுக் கதைகளைப் பற்றி படிக்கும்போது, கிறிஸ்துமஸே கட்டுக் கதைதான்… கிறிஸ்துமஸைக் குறித்து எதுவும் உண்மையில்லை. கிறிஸ்துமஸைக் குறித்து வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. அவர்கள் கிறிஸ்துவின் பிறந்த நாளை ஆராதிக்கவில்லை. அப்படி ஒன்று இல்லவே இல்லை. அது ரோமன் கத்தோலிக்கரின் கொள்கையேயன்றி (Dogma), கிறிஸ்தவ போதகமல்ல, அதற்கான வேதவாக்கியம் வேதாகமத்தில் எங்குமில்லை. வேதாகம காலத்திற்கு பின்பு முதல் நூற்றாண்டு வரையிலும் அப்படி ஒன்றுமேயில்லை. அது வெறும் கட்டுக் கதை. சான்டா கிளாஸ் வணிக சம்பந்தமாகிவிட்டது. எல்லாமே திரளாக ஒன்று திரண்டுவிட்டது.
நீங்கள் ஆதிகால சபை வரலாற்றைப் படித்துவிட்டு அதை இக்காலத்துடன் ஒப்பிடுவீர்களானால், நாம் எங்கு அடைந்துள்ளோம் என்பதை அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது வேறொன்றும் இல்லை; கர்த்தருடைய வருகையைத் தவிர வேறொன்றும் நமக்குதவி செய்யாது. இந்த குழப்பத்தினின்று நம்மை விடுவிக்க, கர்த்தருடைய வருகையேயன்றி வேறொன்றும் உதவி செய்யாது.
11 (இந்த சிறு சுவிட்ச் தான் ஒலிநாடாக்களில் பதிவாகாதபடிக்கு தணிக்கை செய்கின்றதா? இது முழுவதையும் தணிக்கை செய்வது நல்லது என்று நினைக்கிறேன். இதை வெளியில் அனுப்பாமல் இருக்கலாம். ஏனெனில் அது மிகவும் கடுமையாகக் காணப்படுகின்றது. நான் இவ்வாறு கூறும் காரணம்… இப்பொழுது ஒலிப்பதிவாகிறதா? இந்த ஒலிநாடாவை விற்பனை செய்யாதீர்கள். இது விற்பனைக்கல்ல. இவைகளை வேண்டுமானால் சபைக்கு கொடுக்கலாம். ஆனால்… ஏனெனில்… அது நிச்சயமாக குழப்பத்தை விளைவிக்கும். பாருங்கள்? எனவே நாம் வேறொன்றை பேசும் வரை, ஒலிப்பதிவை நிறுத்திவிடுங்கள்.)
நாம் செய்தியை அணுகும் முன்பு, ஒவ்வொருவரும் ஆழ்ந்த சிந்தனையிலும், உங்களால் முடிந்தவரை இளைப்பாறவும் முயன்று கொண்டிருக்கிறீர்கள், நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் என் நேரத்தை நான் எடுத்துக் கொண்டு… நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, இதை ஆணித்தரமாக பதிய வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன், இப்பொழுது முதலாவதாக நாம்… எல்லாமே வழக்கத்திற்கு மாறாக இருக்குமானால், அது உள்ள வரைக்கும்…
12 (சில இருக்கைகள் உள்ளதாக சகோ. நெவில் கூறுகின்றார் - ஆசி). ஆம், பக்கவாட்டில் நின்று கொண்டிருக்கும் ஸ்திரீகள் இங்கு வரட்டும். சகோதரிகளாகிய நீங்கள் உட்கார இங்கு ஓரிடம் உள்ளது. முன் வரிசையில் ஒன்றுள்ளது. பின்னால் ஒரு நாற்காலி உள்ளது. பீடத்தினருகில் பிள்ளைகள் அமர்ந்துள்ளனர். யாராகிலும் சிறு பிள்ளை எழுந்து, நின்று கொண்டிருக்கும் பெரியவர் யாருக்காவது இடமளிக்க விரும்பினால் இங்கு பீடத்தினருகில் பிள்ளைகள் உட்கார இடமுள்ளது. பெரியவர் யாராகிலும் அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம். பின்பாகத்தில் தூணுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் ஸ்திரீகளே. நீங்கள்… அது அந்த மூலையில் பின்பாகத்தில் உள்ளது. ஆனால், அது… அங்கு நின்று கொண்டிருப்பது மிகவும் கடினம். நீங்கள் நிற்க விரும்பினால்…
13 சிலர் மேடையின் மேல் அமர்ந்துள்ளனர். சகோதரராகிய உங்களில் சில இங்கு வர விரும்பினால், இந்த பிள்ளைகள்… இங்கு ஒருவர் சகோ. வேக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். மேலே வாருங்கள், இங்குள்ள இருக்கைகளில் அமர்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது எல்லோரும்… நீங்கள் வீட்டில் உள்ளது போன்று பாவித்துக் கொள்ளுங்கள்… வீட்டில் உள்ள உணர்ச்சியைப் பெறுங்கள். சகோ. ஷெல்பி, இங்கு ஒரு இடம் உள்ளது. மேடையின் மேல், நீங்கள் மேடையின் மேல் வந்து எங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள விரும்பினால், அப்படியே செய்யுங்கள். சகோ. ஈவான், சகோ. சார்லி, நீங்கள் இங்கே, இங்கு ஒரு இருக்கை உள்ளது, அங்கு ஒரு இருக்கை, இரண்டு இருக்கைகள் உள்ளன. மேலே வாருங்கள். சகோதரனே… மேலே வந்து, கூடுமானவரை உங்களை சௌகரியப்படுத்திக் கொள்ளுங்கள்… ஆராதனைக்காக நாம், எல்லோரையும் நம்மால் கூடுமானவரை அமைதியாக உட்காரச் செய்வோம். அப்பொழுது நீங்கள் நின்று கொண்டு களைப்படையமாட்டீர்கள்.
14 பின்னாலுள்ள சில சகோதரர்களாகிய நீங்கள்… பின்னாலுள்ள அறையிலுள்ள சகோதரியே, அறையிலே பின்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரியே, நீங்கள்… இன்னும் இடமுள்ளது. இங்கு வேறொன்று. அது பியானோ நாற்காலி. அதை யாராகிலும் உபயோகிக்கலாம். அவர்கள் வந்து அதில் உட்கார விரும்பினால், அது நன்றாயிருக்கும். அங்கு ஒரு ஸ்திரீ தன் பக்கத்தில் காலி இடம் உள்ளதாக சைகை காட்டுவதைக் காண்கிறேன். அது சரியாகிவிட்டது. கூடுமானவரை இப்பொழுது உங்களை சௌகரியப்படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் இடம் அளித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், இப்பொழுது சுமார் இருபத்து மூன்று நிமிடங்கள்… பத்து மணி அடித்து இருபத்து மூன்று நிமிடங்கள் ஆகின்றது. இந்த டிசம்பர் பதினேழாம் தேதியன்று. இன்று காலை ஜெபர்ஸன்வில் ஆகிய, இந்த இடத்தில் வெளியே மழை பெய்கிறது. வெளியே மோசமாயுள்ளது. ஆனால் உள்ளே நன்றாக உள்ளது. கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது, அதை நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம், நாம் நித்தியத்தை அணுகிக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்துள்ளது மிகவும் அருமையாயுள்ளது. இன்று காலை விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் ஜீவனுள்ள தேவனுடைய செய்தியை நாம் இங்கு நின்று கொண்டு அளிக்க முடிவதற்காக நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். கர்த்தருடைய காரியங்களை நாம் எல்லோரும் அறிந்து கெள்ளக்கூடிய ஒரு மகத்தான நாளாக இது இருக்குமென்று நம்புகிறேன்.
15 இப்பொழுது நாம் சற்று நேரம் ஜெபத்திற்காக தலைவணங்குவோம். நாம் தலைவணங்கியிருக்கும் போது யாராகிலும் நினைவு கூரப்பட விரும்பினால், உங்கள் கரங்களை தேவனிடம் உயர்த்தி, உங்கள் விண்ணப்பங்களை உங்கள் இருதயத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நன்றி.
16 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் எல்லோரும் கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஒலிப்பெருக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது, ஒலிப்பதிவு கருவிகள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. கிறிஸ்தவர்கள் ஜெபித்து தங்கள் விண்ணப்பங்களை தெரியப்படுத்துகின்றனர். இன்றைக்கு அளிக்கப்போகும் செய்திக்காக, நான் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக தொடர்ச்சியாக புத்தகங்களைப் படித்து வந்தேன். பரிசுத்த ஆவியானவர் தாமே, இந்த பொருளை ஜனங்களின் இருதயங்களில் பதிய வைப்பதற்காக ஒரு சில வார்த்தைகளை உபயோகித்து, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தை அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்து, தேவனாகிய கர்த்தரை சந்திக்க அவர்களை ஆயத்தப்படுவாராக. எங்கள் மத்தியில் எல்லாவிடங்களிலுமுள்ள வியாதியஸ்தருக்காகவும் அவதியுறுபவர்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.
ஓ இயேசுவே, உமது சபையை, உலகெங்கும் பரவியுள்ள உமது சபையை, நினைவு கூருவீராக. அவர்களில் சிலர் காடுகளிலும், சிலர் தீர்மானத்தின் பள்ளத்தாக்கிலும், சிலர் மலையுச்சியிலும் இருக்கின்றனர். உலகம் முழுவதிலும் உமது பிள்ளைகள் உம் பேரில் சார்ந்திருந்து உம்மை நோக்கி கூப்பிடுகின்றனர். பழைய காலத்து யோவான் பத்மு தீவிலிருந்து கூறின வண்ணமாக, "ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்."
17 நாங்கள் சத்துருவின் பிரசன்னத்தில் இருக்கிறோம் என்பதை உணருகிறோம். அவன் எங்களைத் தடுக்கவும், நிறுத்தவும், அவனால் கூடுமான அனைத்தும் செய்யவும் எங்கள் அருகில் எப்பொழுதும் இருக்கிறான். ஓ, ஆண்டவரே, சத்துருவின் மேல் எழும்பி வெற்றி சிறக்க உமது பிள்ளைகளுக்கு இன்று காலை விசுவாசத்தை தாரும், அவர்களுடைய இருதயங்களை நீர் திறந்து, அவர்களுடைய ஆத்துமாக்களை செழிப்புள்ள நிலமாக்கி, ஜீவனுள்ள வார்த்தை அதில் விதைக்கப்பட்டு, அது பெரும் மகிழ்ச்சியையும், அதிக அறுவடையையும் அளிக்க அருள்புரியும்.
கர்த்தாவே, உமது வார்த்தையையும் உமது ஊழியக்காரரையும் ஆசிர்வதிக்கும்படி ஜெபிக்கிறேன். இந்த என் பெலவீனமான சத்தத்துக்கு நீர் உதவி செய்து நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் உரக்க பேசும்படி செய்யும். கர்த்தாவே, ஜெபவரிசையின் போது, நீர் வல்லமையும் விசுவாசத்தையும் அருளிச் செய்து, நாங்கள் இக்கட்டிடத்தை விட்டுச் செல்லும் போது, எங்கள் மத்தியில் பெலவீனமானவர் ஒருவராகிலும் இராதபடி செய்யும். ஆண்டவரே, இதை அருள்வீராக.
நாங்கள் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிவோம். நாங்கள் உமது சந்நிதானத்தில் காத்திருந்து உமது வார்த்தையைப் படிக்கும்போது, எங்களை ஆசிர்வதிக்குமாறு உம்மை வேண்டிக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். ஆமென்.
18 இப்பொழுது, நான் வேதாகமத்திலிருந்து இரண்டு மூன்று பாகங்களை வாசிக்கப் போகின்றேன். இன்று நான், "கிறிஸ்தவ மார்க்கமும் அதற்கெதிராக விக்கிரகாராதனையும்," என்பதின் பேரில் பேசப் போகின்றேன் என்று கடந்த ஞாயிறன்று உங்களுக்கு அறிவித்தேன். அதுவே இன்று காலை நம்முடைய பொருள். நான் ஒரு வேத பண்டிதன் அல்ல, எந்த வகையிலும் வேத மாணாக்கன் அல்ல. நான் கர்த்தராகிய இயேசுவை என் முழு இருதயத்தோடும் நேசிக்கும் படிப்பறிவில்லாத ஒருவன். நான் வேதபண்டிதன் என்று உரிமை கோரவில்லை, அல்லது வேறொருவரின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள முயலவில்லை. பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்று நான் உணரும் சில காரியங்களை, தாழ்மையுள்ள இருதயத்தோடு விளக்க முயல்கிறேன். அதை நான் இந்த சபைக்கு அளித்தே ஆக வேண்டும். என்னுடைய சிரத்தையில் இச்சபை வளர்ந்து வருகிறது. இது ஆவிக்குரிய விதமாக சரியாயுள்ளதா என்று கண்காணிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. இது என் சிரத்தையாயுள்ளது. ஏனெனில் இந்த சபை தேவனுடைய சிரத்தையில் உள்ளது. அவருடைய சிரத்தையே என் சிரத்தை. எனவே அதை நான் கவனிக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
19 ஆதி காலத்து சரித்திரக்காரர்கள் ஐரினேயஸ் இன்னும் மற்றவர்களைக் குறித்து எழுதியுள்ளதைப் படிக்கும்போது அவர்கள் எவ்வாறு உலகத்தின் காரியங்களில் கறைபடாமல் தங்கள் சபையைக் காத்துக் கொண்டனர் என்றும், அந்த பழைய போதகர்கள் எவ்வாறு சுவிசேஷத்தில் உறுதியாக நின்றனர் என்றும் புலனாகிறது. வேதாகமம் எழுதப்பட்டு இன்று நமக்குள்ள வடிவில் அவர்களுக்கு அப்பொழுது இல்லை. சீர்திருத்த காலம் வரைக்கும் அப்படியில்லை, லூத்தர் தான் அதை அச்சடித்தார் ஆனால், அவர்களுக்கு சுவிசேஷமும் அப்போஸ்தலனும் என்பது இருந்தது. அவர்கள் அதில் நிலை கொண்டிருந்தனர்.
20 இன்று காலை நான் படிக்க வேண்டுமென்று எத்தனித்துள்ள இரண்டு பாகங்கள், ஒன்று எரேமியாவின் புத்தகம் 7ம் அதிகாரம், 10ம் வசனம் தொடங்கி 18ம் வசனம் முடிய. மற்றது அப்போஸ்தலர் 7:49ல் காணப்படுகின்றது. இதிலிருந்து பொருளுக்கான வசனத்தை நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது எரேமியா 7. நான் 10ம் வசனத்திலிருந்து படிக்கப் போகின்றேன்.
பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?
என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர் குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் முந்தி என் நாமம் விளங்கப் பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள்.
நீங்கள் இந்த கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லி வந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டு, நீங்கள் உத்தரவு கொடாமலும் போன படியினால்,
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கு, நான் சீலோவுக்குச் செய்தது போலச் செய்வேன்.
நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப் போட்டது போல, உங்களையும் என் முகத்தை விட்டுத் தள்ளிப் போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; என்னிடத்தில் அவர்களுக்காக பரிந்து பேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவி கொடுப்பதில்லை.
யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?
21 கடைசி வசனத்தை படிப்பதற்கு முன்பாக நான் நிறுத்திக் கொண்டு, கர்த்தர் இந்த ஜனங்களை கடிந்து கொண்டு "அவர்களுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்" என்று கூறும் வசனத்திலிருந்து மறுபடியும் படிக்க விரும்புகிறேன். 16ம் வசனத்திலிருந்து 18ம் வசனம் முடிய படிக்கிறேன். கூர்ந்து கவனியுங்கள்.
நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம். அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம்; என்னிடத்தில் அவர்களுக்காக பரிந்து பேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவி கொடுப்பதில்லை.
யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா?
எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் (ஆங்கில வேதாகமத்தில் queen of heaven - அதாவது வான ராணிக்கு தமிழாக்கியோன்) பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
22 இப்பொழுது நான் அப்போஸ்தலருடைய நடபடிகள் 7ம் அதிகாரத்துக்கு திருப்பி, 44ம் வசனம் தொடங்கி 50 வசனம் முடிய படிக்கப் போகிறேன்.
மேலும், நீ பார்த்த மாதிரியின் படியே சாட்சியின் கூடாரத்தை உண்டு பண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது.
மேலும், யோசுவாவுடனே கூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக் கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டு வந்து, தாவீதின் நாள் வரைக்கும் வைத்திருந்தார்கள்.
இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான்.
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டை கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது… என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
23 இந்த வேதபாகங்களை நான் படித்ததிலிருந்து, இன்று காலை என் சிந்தனையை எதன் மேல் வைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் காணலாம். முதலாவதாக விக்கிரகாராதனையின் மேல். விக்கிரகாராதனையைக் குறித்து குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. விக்கிரகாராதனையை விளக்க அநேக புத்தகங்கள் கிடையாது. விக்கிரகாராதனை என்னவென்பதை விளக்க. ஆயினும் உலகம் அதனால் நிறைந்துள்ளது. அதைக் குறித்த உண்மை ஜனங்களுக்கு விளக்கப்படாததே அதன் காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் மேற்கொண்ட பயணங்களில், விக்கிரகாராதனை சிலவற்றை நான் கண்டு, அது என்னவென்று அறிந்துகொண்டது. என் வாழ்க்கையில் கிடைக்கப் பெற்ற பெரும் சிலாக்கியமே எனலாம்.
விக்கிரகாராதனையைக் குறித்து கடந்த சில வாரங்களாக புராணங்களில், கிரேக்க புராணங்களிலும், ரோம புராணங்களிலும் நான் படித்தபோது, அவர்கள் அதே முறையை இன்றும் பின்பற்றுகின்றனரா, விக்கிரகாராதனை தொடக்கத்தில் இருந்த விதமாகவே இன்றும் இருந்து வருகிறதா என்பதை என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. இன்று பயணங்களில் நான் கண்ட விக்கிரகாராதனைக்கும், அது ஆதி நாட்களில் எப்படி தொடங்கினது என்று படித்து அறிந்து கொண்ட விக்கிரகாராதனைக்கும் வேறுபாடு ஏதாகிலும் உண்டா என்று பார்க்கும்போது, அது மாறவேயில்லை என்பதை என்னால் காணமுடிகின்றது.
24 நான் இந்தியாவுக்கு சென்றிருக்கிறேன். இந்தியா விக்கிரகாராதனையால் நிறைந்துள்ளது. அங்கு தீயில் நடப்பவர்கள் உள்ளனர். வெவ்வேறு… ஒரு பகல் நேரத்தில் நான் பம்பாயை அடைந்தேன். அப்பொழுது எனக்கு உபச்சாரம் அளிக்கப்பட்டது… நான்… யாரோ ஒருவர் என்னிடம் சொன்னார். அங்கு குழுமியிருந்தவர்கள் யார் யாரென்று எனக்குத் தெரியாது. அவர்கள் ஜைன கோயில் ஒன்றில் கூடியிருந்தனர். அது பதினேழு அல்லது ஏழு வெவ்வேறு மதங்களோ; அது பதினேழு வெவ்வேறு மதங்கள் என்று உறுதியாக அறிவேன். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு சவால் விடுவதற்கென என்னைச் சந்தித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு விரோதமாயிருந்தனர். பதினேழு வெவ்வேறு மதங்கள்! அவர்கள் ஜைன கோயிலில் எங்கள் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே வரும்படி கூறினர். எங்களை தலையணையின் மேல் அமர்த்தினர். அங்கு எங்களுக்கு செய்யப்பட்ட சம்பிரதாய முறைகளை கூறப்போனால் நேரமாகும். எங்களை அங்கு கொண்டு சென்ற அந்தப் பட்டினத்தின் நகராண்மைத் தலைவர் ஒரு இந்து, ஒரு முகம்மதியர்.
முகம்மது ஒரு தீர்க்கதரிசி. அவர் இஸ்மவேலின் வம்சத்தில் தோன்றினவர். இஸ்மவேல் ஆபிரகாமின் ஒரு குமாரன்.
25 இந்த வம்சத்தில் தோன்றிய ஒரு முகமதியர் தான் இன்று உலகப் பிரசித்தி பெற்றுள்ள அந்த சுவிசேஷகரை தேவனுடைய வார்த்தையின் பேரில் பலப்பரீட்சைக்கு அழைத்தான் (சகோ. பிரான்ஹாம் சகோ. பில்லி கிரகாமைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). என் அபிப்பிராயம் என்னவெனில், அந்த சுவிசேஷகர், "எனக்கு சுகமளிக்கும் வரங்கள் கிடையாது. எங்கள் கூட்டத்திலுள்ள விசுவாசிகளுக்கு அந்த வரம் உண்டு. எனக்கு சில மணிநேரம் அவகாசம் தாருங்கள். நான் அவர்களில் யாராகிலும் ஒருவரை அழைத்து வருகிறேன்" என்று கூறியிருக்க வேண்டும். பாருங்கள்? ஆனால் அப்படி செய்வதன் மூலம், தம்மை ஆதரித்த ஸ்தாபனங்களுக்கு அவர் தம்மை அம்பலப்படுத்தியிருப்பார். அப்பொழுது அவர்கள் அவரை வெளியே எறிந்திருப்பார்கள்.
26 ஆனால் இரண்டாம் முறையாக நினைத்துப் பார்க்கையில், அது நானாக இருந்திருந்தால், அந்த அவிசுவாசி தேவனுடைய வார்த்தையின் மேல் ஜெயங் கொள்ள நான் அனுமதித்திருக்கவே மாட்டேன் என்று நினைக்கிறேன். நான் தோற்றுப் போனாலும், அங்கு நான் நின்று கொண்டு, என் விசுவாசத்தை காண்பித்து, அவர் மாறாதவராயிருக்கிறார் என்று அவர் பேரில் விசுவாசம் கொண்டிருப்பேன். எபிரேய பிள்ளைகள் கூறின விதமாக, "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களை எரிகிற அக்கினிச் சூளைக்குத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். விடுவிக்காமற் போனாலும், உம்முடைய சிலையை நாங்கள் பணிந்து கொள்ள மாட்டோம்." (தானி. 3:17-18). ஆம், அது மிகத் தீரமான செயலாக இருந்திருக்கும்.
அதன் பின்னர் மீண்டும்,
27 அந்த மகத்தான சுவிசேஷகர் வேதசாஸ்திரத்தில் டாக்டர் பட்டம் பெற்று வேதத்தை நன்கு அறிந்தவர். அப்படிப்பட்ட மகத்தான மனிதனாக நான் இருந்திருந்தால், நான் தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டு, இயேசு என்பவர் கிறிஸ்துவா இல்லையா, முகம்மது தீர்க்கதரிசியா என்று அவனிடம் சவால் விடுத்து, அவனுடைய சொந்த வேதாகமத்தைக் கொண்டே நிரூபித்திருப்பேன். அது என்னுடைய அழைப்பாய் இருந்திருக்குமானால் (வேதாகமத்தில்), அதாவது அதை விளக்க வேண்டிய சுவிசேஷகனாக, நான் பின்வாங்கி ஓடிப்போவதற்கு பதிலாக, என் அழைப்பில் உறுதியாய் நின்றிருப்பேன். வாழ்ந்தாலும் மரித்தாலும் உறுதியாக நிற்கும் கிறிஸ்தவ தைரியத்துக்கு அது எடுத்துக்காட்டாக அமையவில்லை. தேவன் விடுவிக்க வல்லவராயிருக்கிறார். நானாயிருந்தால் அந்த விஷயத்தில் அவனுக்கு சவால் விடுத்திருப்பேன் என்று நினைக்கிறேன்.
28 ஆனால், பம்பாயில், அன்றிரவு நடந்த கூட்டத்தில் அந்த குருடன், பார்வையடைந்த போது, அந்த முகம்மதியர்கள் அதை எண்ணிப் பார்க்க மறுத்துவிட்டனர். அதைக் குறித்து அவர்கள் ஒன்றுமே கூறவில்லை.
ஆயினும், அந்த ஜனங்கள் மாய்மாலக்காரர் அல்ல. அவர்கள் உங்களையும் என்னையும் போல் உத்தமமானவர்கள். சில நேரங்களில் அவர்கள் அமெரிக்காவிலுள்ள நம்மைக் காட்டிலும் அதிக உத்தமமானவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் மாய்மாலக்காரர் அல்ல, அவர்கள் உண்மையாகவே விசுவாசித்து, அவர்களுக்குள்ள எல்லாவற்றைக் கொண்டும் அதை கைக் கொள்கின்றனர்.
29 விக்கிரகாராதனையைக் குறித்து சிலவற்றை உங்களிடம் கூற விரும்புகிறேன். தீயில் நடப்பவர்களுடைய தெய்வத்தின் பெயரை மறந்துவிட்டேன். ஆனால் மிகப் பெரிய சிலை… அது மனிதனின் முகத்தைப் போன்ற முகத்தைக் கொண்டதாய், வெவ்வேறு நிறங்கள் பிரதிபலிக்கும்படி கற்களில் பொறிக்கப்பட்ட முகம் கொண்டதாய், அவர்களுடைய பாவங்கள் போன்றவைகளைக் கேட்பதற்கென மிகப்பெரிய செவிகளை உடையதாய் தோற்றமளிக்கிறது. காதுகளில் பெரிய கெம்பு கற்கள் (rubies) காதணிகளாக, ஒவ்வொன்றும் சுமார் 5 லட்சம் டாலர்கள் மதிப்புள்ளது. ஒருக்கால் நான் கூறின மதிப்பு அதிகமாயிருக்கலாம், அல்லது குறைவாயிருக்கலாம். ஆனால் அந்த விக்கிரகத்துக்கு மிகவும் விலையுயர்ந்த ஆபரணங்கள்.
30 அந்த கோயில் பூசாரி ஒரு ஏழை விவசாயியைக் கொண்டு வருகிறான்… அவன் ஒன்றையும் உடையவனாய் இல்லாமல், அவன் சாதாரணமானவன். விசேஷித்த ஆள் அல்ல. அவன், சாதாரண மனிதன். அந்த விவசாயி தனக்கு நல்ல விளைச்சல் கிடைத்ததற்காக தன் தெய்வத்துக்கு நன்றி தெரிவிக்க வருகிறான். அவ்வாறு செய்வதன் மூலம் தன் தெய்வத்தின்மேல் வைத்துள்ள விசுவாசத்தை அவன் காண்பிக்கிறான். அவன் கோயிலுக்கு வந்து தன் பூசாரியால் ஆசிர்வதிக்கப்படுகிறான்.
பிறகு… அநேக அடி ஆழமும் அநேக அடி அகலமும் கொண்ட கரித்துண்டுகள் நிறைக்கப்பட்ட குழியின் வழியாக அவன் நடக்க ஆயத்தமாகிறான். அது விசிறிகளால் வீசப்பட்டு, வெண் தணலாக சூடேற்றப்பட்டுள்ளது. அது வேஷமல்ல, உண்மையாகவே. அவன் விக்கிரகத்துக்கு முன் சென்று, தன் பூசாரியிடம் அவனுடைய பாவங்களை அறிக்கையிடுகிறான். அவர்கள் அவன் மேல் பூசாரி ஆசிர்வதித்த தண்ணீரை, பரிசுத்த தண்ணீரை, ஊற்றுகின்றனர்.
31 பின்பு அநேகமுறை அவர்கள் ஒரு கொக்கியை எடுத்து, தூண்டில் முள் போன்ற கொக்கி; பெரிய கொக்கி. அரை அங்குலம் முதல் முக்கால் அங்குலம் கனம் இருக்கும். அவர்கள் அதை கனமுள்ளதாக்க ஒரு தண்ணீர் பந்தை அதன் மேல் வைக்கின்றனர். கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க உபயோகிக்கும் பொருள் போன்ற ஒன்று. அவர்கள் அத்தகைய நூற்றுக்கணக்கான கொக்கிகளை எடுத்து, தங்கள் மாமிசத்தின் வழியாக கொக்கியிட்டு, அதை வெளியே இழுக்கின்றனர். அவர்கள் உள்ளே செல்லும்போது, தங்கள் தெய்வத்தை, விக்கிரகத்தை, பிரீதிபடுத்த மாமிசத்தின் வழியாக அதை இழுத்து தங்களை சித்திரவதை செய்து கொள்கின்றனர். அவர்கள் மாய்மாலக்காரர் அல்ல.
32 பின்பு, அநேகமுறை அவர்கள் தங்கள் நாவை நீட்டி, வேல் ஒன்றை எடுத்து நாவின் வழியாகவும் மூக்கின் வழியாகவும் குத்தி அவைகளை ஒன்றாக இணைக்கின்றனர். அவர்கள் நூலினால் வாயைத் தைத்துக் கொள்கின்றனர்… அவர்கள் தவறான காரியங்களை உரைத்திருந்தால், அப்படிப்பட்ட சித்திரவதை.
பின்பு அவர்கள் இந்து தீக்குழியின் பக்கம் அமருகின்றனர். அவர்கள் விக்கிரகத்தை சாந்தப்படுத்த, ஒரு ஆட்டை பலியிடுகின்றனர். தங்கள் பாவங்களுக்காக ஒரு உயிரைக் கொடுக்கின்றனர். அந்த ஆடு கொல்லப்படும் போது, அவர்கள் மந்திரத்தை உச்சரித்து முணுமுணுப்பதை நீங்கள் கேட்க வேண்டும். அவர்களுடைய பாவங்களை அவர்கள் அதன் மேல் அறிக்கையிட்டு அதைக் கொன்று, அதன் மாமிசத்தை எறிந்து விட்டு… இரத்தத்தை பாவப் பரிகாரமாகத் தெளிக்கின்றனர்.
33 தீயில் நடப்பவன் பயந்து அதன் வழியாக ஓடினால், அவன் தன் மேல் நிந்தையை வருவித்துக் கொள்கிறான். ஆனால், அவன் மெதுவாகவும் நிதானமாகவும் இந்த அக்கினித் தழவின் வழியாக நடக்க வேண்டும். இந்த அக்கினித் தழல் சில சமயங்களில் பதினைந்து அடி ஆழம் இருக்கும். பதினைந்து அடி ஆழம், முப்பது அல்லது நாற்பது கெஜம் நீளம், எட்டு அல்லது பத்து அடி அகலம் இருக்கும். அவை வெண் தணலாக சூடேற்றப்பட்டிருக்கும். அவன் கோவணத்தைத் தவிர வேறென்றையும் உடுப்பதில்லை. அது அவன் இடுப்பில் கட்டப்பட்டுள்ள இடுப்புத்துணி, அவன் இந்த மீன் கொக்கிகள் உடல் முழுவதும் தொங்கினவனாய், இரத்தம் வடிந்து அங்கு செல்கிறான். அவன் உணர்ச்சி வசப்பட்ட ஒரு நிலையையடைகிறான். அவன் வாயிலிருந்து வெண் நுரை தள்ளுகிறது.
அவன் அங்கு வருகிறான். அவன் தீயின் வழியாக நடந்து எவ்வித சேதமும் நேராமல் மறுபக்கம் அடைகிறான். அவன் நடக்கும் போது அவனுடைய பாதங்கள், கால்கள், அவ்வளவு ஆழமாக நெருப்புக்குள் செல்கின்றன. அவை இரண்டு அடி அல்லது அதற்கதிக ஆழம் நெருப்பினுள் சென்று, அந்த வெண்தணலை அவனுடைய மானிட மாமிசத்தின் மேல் இழுத்து கொள்கின்றன. அவன் இவ்வாறு அந்த தீயின் வழியாக நடந்து ஒரு கெடுதியும் நேராமல் மறுபக்கம் அடைகிறான். அவனுடைய கால்களை நீங்கள் கண்டால், ஒரு கீறலோ அல்லது சுட்ட வடுவோ இருக்காது.
அதை நான் கவனித்தபோது, ஒரு அஞ்ஞான விக்கிரகத்துக்கு ஆட்டின் இரத்தத்தை பலி செலுத்தி, அதன் பேரிலுள்ள விசுவாசம் ஒரு அஞ்ஞானியை தீயினின்று பாதுகாக்குமானால், ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கும் ஒருவனுக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்ன செய்யும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்.
34 இப்போது, விக்கிரகாராதனை வினோதமானது. காலங்கள் தோறும் அது இருந்து வந்துள்ளது… காலம் என்று ஒன்று தொடங்கின முதற்கொண்டு என்று நினைக்கிறேன். விக்கிரகாராதனைக்குரிய ஒழுங்கு என்னவெனில், இந்த விக்கிரகத்தை நிறுவும் மனிதன் அதை ஓரிடத்தில் வைத்து, அதை சிறந்த விதத்தில் வழிபடுவதற்கென, அவன் சென்று தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறான். இந்த விக்கிரகம் அவன் கண்டேயிராத ஏதோ ஒரு தெய்வத்தின் சாயலில் உண்டாக்கப்பட்டுள்ளது என்று அவன் நம்புகிறான். அதற்கு உருவமில்லை. எனவே அந்த தெய்வத்திற்கு அவன் விக்கிரக வடிவில் ஒரு உருவத்தை உண்டாக்குவதாக நினைக்கிறான்.
இதை மறந்து விட வேண்டாம். அந்த விக்கிரகம், இருப்பதாக அவன் எண்ணிக் கொண்டிருக்கும் இல்லாத தெய்வத்தின் வடிவமே.
அவன் இந்த விக்கிரகத்துக்கு முன்பாக சென்று, சாஷ்டாங்கமாக விழுந்து, காணக் கூடாத அந்த தெய்வம் கீழே இறங்கி இந்த விக்கிரகத்துக்குள் வருகிறதென்றும், இந்த விக்கிரகத்தின் மூலம் அவன் அந்த தெய்வத்துடன் பேசுகிறான் என்றும், அந்த தெய்வம் இந்த விக்கிரகத்துக்குள் நுழைந்து அவனுக்கு பதிலுரைக்கிறது என்றும் அவன் நம்புகிறான். புராணங்களைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களாகிய உங்களில் அநேகர்… அந்த தெய்வங்கள் ஒன்றோடொன்று அந்த நாட்களில் யுத்தம் செய்தன என்று கூறுகின்றனர்.
வேறு விதமாகக் கூறினால், அந்த தெய்வம் இயற்கைக்கு மேம்பட்ட அந்நிலையிலிருந்து தன்னை இந்த விக்கிரகத்துக்குள் மனோவசியப்படுத்தி நுழைத்துக் கொண்டு, வழிபடுகிறவனுக்கு இந்த விக்கிரகத்தின் மூலம் பதிலளிக்கிறது. வழிபடுகிறவனும் ஒருவகை உணர்ச்சியை தன்னில் உண்டாக்கிக் கொண்டு, அந்த விக்கிரகம் தன் இருதயத்தில் பேசுகிறதென்றும், அவனுடைய பாவங்கள் இந்த விக்கிரகத்தின் மூலமாக அவனுக்கு மன்னிக்கப்பட்டது என்றெல்லாம் நம்புகிறான். அது பிசாசு என்பதை வெளிப்படையாய் காண்பிக்கிறது. பிசாசு அவ்விதம் செய்கின்றது.
35 அவர்கள் காரியங்களை ஒழுங்கற்ற விதத்தில் செய்வதில்லை. சிலர் அப்படி செய்கின்றனர். ஆனால் அவர்களில் உண்மையாக வழிபடுவோர் சிலர் உள்ளனர். உதாரணமாக, அந்த விக்கிரகங்களிலுள்ள பிசாசுகள் எவ்வாறு அற்புதங்களை நிகழ்த்தின, பொருட்களிலிருந்து இரத்தத்தை வரவழைத்தன போன்ற வரலாறுகளை என்னால் கூறமுடியும். அவை பிசாசுகள்!
பிசாசு இருக்கிறது என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால்… தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிப்பதில்லை என்று அர்த்தமாகிறது. நிச்சயமாக, நீங்கள் அதற்கு எதிரான ஒன்றையும் விசுவாசிக்க வேண்டும். ஆதரவாகவும் எதிராகவும் உள்ளவை. எனவே பிசாசு உண்மையாகவே இருக்கிறான். அவன் ஒரு ஆள். அது ஏதோ சிந்தனை அல்ல, அவன் ஒரு ஆள்.
"பிசாசு என்பது உங்களுக்கு நேரிடும் ஒரு பொல்லாத எண்ணம் என்னும் போதகம் நிலவி வருகின்றது." இல்லவே இல்லை. அப்படியல்ல. பிசாசு ஒரு ஆள்.
அவ்வாறு போதிப்பவர்கள், "பரிசுத்த ஆவி என்பது உங்களுக்கு நேரிடும் ஒரு நல்லெண்ணம்" என்று விசுவாசிக்கின்றனர். ஆனால், அதை நம்பாதீர்கள். பரிசுத்த ஆவி ஒரு ஆள். அது ஆவியின் ரூபத்திலுள்ள கிறிஸ்து.
36 இந்த விக்கிரகாராதனைக்காரர்கள்… (உங்கள் வேதாகமத்தை ஆயத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் சில பாகங்களை நான் குறிப்பிடுவேன். சில பாகங்களை நாம் படிக்கலாம்). இந்த விக்கிரகாராதனைக்காரர்கள் விக்கிரகத்துக்கு முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்து, அந்த விக்கிரகம் அவர்கள் வழிபடும் தெய்வத்தின் பிரதிநிதியாய் உள்ளது என்று நம்புகின்றனர். இவ்வாறு வழிபடுபவன் மாய்மாலக்காரன் அல்ல என்பதை புரிந்து கொண்டீர்களா? அவன் அந்த விக்கிரகத்துக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை பற்றிக் கொள்கிறான். ஏனென்றால், அது அவனுக்கு பதிலளிக்கிறது. அவன் ஏதோ ஒன்றை செய்கிறான், அந்த விக்கிரகத்தினிடமிருந்து பதிலைப் பெற்றுக் கொள்கிறான். அது இல்லாத ஒரு கடவுள், உண்மையான ஒன்றல்ல.
அநேக சமயங்களில் பிசாசு அப்படிப்பட்ட காரியங்களில் நுழைந்து விடுகிறான். சில நேரங்களில் பிசாசு கூட்டங்களிலும் நுழைந்து தேவனைப் போல் ஆள் மாறாட்டம் செய்கிறான். என் ஊழியத்தில் இதை நான் கண்டிருக்கிறேன்.
37 இன்று காலை நாங்கள் கற்பித்துக் கொடுக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இந்த சபைக்கு இதை கூற விரும்புகிறேன். நான் இந்த ஊழியத்தை விட்டு சுவிசேஷ ஊழியத்துக்காக வெளி நாடுகளுக்கு செல்லும்போது, நீங்கள் உங்கள் போதகரிடமும், இங்கு உங்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ள போதகத்திலும் நிலை கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். வார்த்தையில் நில்லுங்கள். அதை விட்டுவிடாதீர்கள்! என்ன வந்தாலும், போனாலும் பரவாயில்லை. நீங்கள் வார்த்தையில் உறுதியாய் நில்லுங்கள். பாருங்கள்? நான் இங்கிருந்து போய்விடுவதனால். நான் இங்குள்ள போதகர்களில் ஒருவன். சகோ. நெவில் நான் போதிப்பதையே போதிக்கிறார். எனவே சபைக்கு வந்து வார்த்தையைக் கேளுங்கள்.
அவர் என்னை எங்கு கொண்டு செல்லப் போகின்றார் என்று எனக்குத் தெரியாது. இன்று காலை நான் உணவு அருந்தும் மேசையில் என் மனைவியிடம், "எனக்குள்ள ஏதோ ஒன்று இத்தனை ஆண்டுகளாக கூக்குரலிட்டு வருகிறது. அது என்னவென்று நான் கண்டு பிடிக்கப் போகின்றேன்" என்றேன். அது எங்கு என்னை வழிநடத்தும் என்றும், எங்கு கொண்டு செல்லும் என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் எங்கு என்னை வழி நடத்துகிறாரோ, நான் அவரைப் பின்பற்றிச் செல்வேன்.
38 விக்கிரகாராதனை இன்றும் உள்ளது. நாம் காண்கிறோம்… ஜனங்கள் பீடத்தண்டை வந்து குருட்டு போதகர்கள் சொல்லும் குருட்டு வார்த்தைகளைக் கேட்பதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள், "உன் சிந்தையைத் திறந்து கொடு, எல்லாவற்றையும் மறந்து விடு, உன் சிந்தையை சூன்யமாக்கிக் கொள் நீ எலியாவாகிவிடுவாய். நீ இது, அது, மற்றது ஆகிவிடுவாய்" என்கின்றனர். என்ன ஒரு பொய்! நீங்கள் அப்படி தேவனிடத்தில் வருவதில்லை… அது எல்லாவிதமான பிசாசின் ஆவிகளும் நுழைவதற்கு உங்கள் ஆத்துமாவை திறந்து கொடுப்பதாகும். அப்படி செய்யாதீர்கள். பிசாசு ஒருவன் இருக்கின்றான், அவன் முற்றிலும் இயேசுவை ஆள் மாறாட்டம் செய்கிறான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
39 நான் புனிதர் மார்டின் அவர்களுடைய ஜீவியத்தை பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலே ஒரு வாலிபன், தன்னை சந்நியாசியாக ஒப்புக் கொடுத்தவன், தேவன் தன்னை ஒரு பண்டையக் காலத்து தீர்க்கதரிசிக்கு ஒப்பாக அழைத்திருக்கிறார் என்றான். "நீங்கள் எல்லோரும் கவனியுங்கள், நான் பண்டைய கால தீர்க்கதரிசிகளில் ஒருவன்" என்றான். ஆனால் மார்டின் அதுபோன்ற காரியங்களை நம்பவில்லை. அந்த வாலிபனின் வாழ்க்கை அதற்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை. எனவே அவர்கள் அதை நம்ப மறுத்தனர். முடிவில் அவன், "நான் தீர்க்கதரிசியாக அழைக்கப்பட்டேன் என்பதை உங்களுக்கு நிரூபிக்கப் போகின்றேன்" என்றான். வெறுமனே ஒரு வாலிபன், "நான் அழைக்கப்பட்டேன்" என்று கூறினான்.
பாருங்கள், "வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே அளிக்கப்படுகின்றன" (ஆங்கில வேதாகமத்தில் மேற் கூறிய அர்த்தத்தில், "Gifts and callings of God are without repentance" என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் வேதாகமத்தில், "தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ரோமர் 11:29 - தமிழாக்கியோன்). பாருங்கள், அவர்கள் வார்த்தையை விட்டு விலகி சென்றுவிடுகின்றனர். நீங்கள் வார்த்தையை விட்டு விலகும்போது, வேறெதிலாவது நுழைந்துவிடுகிறீர்கள்.
40 மேலும் இந்த வாலிபன் அவர்களிடம், "நான் பண்டையக் காலத்து தீர்க்கதரிசி என்பதை நிரூபிப்பதற்காகவும், உங்களெல்லார் மத்தியில் உட்காரும் பொருட்டாக, தேவன் இன்று நள்ளிரவில் எனக்கு ஒரு வெள்ளை அங்கியை தரப்போகிறார்" என்றான். எனவே அவர்கள்… அன்றிரவு அவர்கள் எல்லோரும் அவருக்கு செவி கொடுத்து, "உள்ளே வாருங்கள்" என்று மெதுவாக அழைத்தனர். இதை பார்ப்பதற்கென்று ஜனங்கள் தொலைவிலிருந்து பயணம் செய்து வந்தனர். கூறினடியே அந்த வாலிபன் ஒரு வெள்ளை அங்கியைப் பெற்றான். அதை அவனுக்களித்தவர் சென்றவுடன், அவர்கள் சென்று அந்த அங்கியைப் பார்த்தனர். அது உண்மையான அங்கி. காண்பதற்கு அது மிக அழகாக இருந்தது.
ஆனால் அங்கிருந்த வயோதிப பேராயரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவருக்கு அது சரியாகபடவில்லை. ஏனென்றால் அது வேதத்தின் அடிப்படையில் ஒத்து போகவில்லை. (அந்த வெள்ளை அங்கி).
அவனுக்கு அது கிடைத்தவுடன், அவர்கள் அவனிடம், "இந்த அங்கியை கொண்டு போய், அந்த தேவனுடைய மனிதனாகிய புனிதர் மார்டின் முன்னால் நில்'' என்றனர். அவனோ அவ்வாறு செய்ய மறுத்தான். அந்த உண்மையான தீர்க்கதரிசிக்கு முன்னால் அவன் நிற்க மறுத்தான்; அவர்களோ அவனை கட்டாயப்படுத்திக் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவனைக் கொண்டு சென்ற போதோ அந்த அங்கி மறைந்து எங்கோ சென்றுவிட்டது. அது எங்கு மறைந்து சென்றது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பலப்பரீட்சைக்கு அது வந்தபோது, என்ன நடந்தது என்று பாருங்கள்!
41 உங்களிடம் உண்மையான தங்கம் இருக்குமானால், அது நல்லதா இல்லையா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அது எந்த இடத்திலும் பரிசோதனையில் வெல்லும். அவ்வாறே உண்மையான தேவனுடைய ஆவி எங்கும் பரீட்சையை வெல்லும். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையினால் சோதிக்கப்பட்டுள்ளது. "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்".
ஜனங்கள் ஒருவகை வலிப்பை (hysterics) பெறுவதை நான் கண்டிருக்கிறேன், நல்ல ஜனங்கள் (இந்த ஒலி நாடாவை விற்பனை செய்ய வேண்டாமென்று நான் ஏன் கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா?) நல்லவர்கள், பெந்தெகொஸ்தே ஜனங்கள், புரிந்து கொள்ளாத போதகர்கள் இத்தகைய வலிப்பைப் பெற்று, பிரக்ஞையற்ற நிலையையடைந்து, முடிவில் அது அவர்களை பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பிவிடுகின்றது. இந்த பேதை ஜனங்கள் தங்கள் இருதயத்தை திறந்து கொடுக்கும் போது, பிசாசுகள் உள்ளே நுழைந்து அந்த இடத்தில் வந்துவிடுகின்றன. பிசாசு உண்மையாக உண்டு!
42 பிசாசு யாரோ ஒருவரிடம் வந்ததை நான் படித்தேன். அது ஐரினேயஸ் அல்லது மார்டின் என்று நினைக்கிறேன். (என்னைக் காட்டிலும் இதைக் குறித்து நன்கு அறிந்துள்ள வேத மாணாக்கர் உள்ளனர்). அவன் தலையில் பொற்கிரீடம் தரித்தவனாய், உள்ளில் பொன்னால் மூடப்பட்ட காலணிகளை அணிந்தவனாய் தோன்றி, "நான் தான் கிறிஸ்து, என்னை அறிக்கையிடு" என்றானாம். அந்த பரிசுத்தவான் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். அந்த உண்மையான தீர்க்கதரிசி அங்கு நின்று காத்துக் கொண்டிருந்தார். அவன் இரண்டு மூன்று முறை, "நான் கிறிஸ்து, என்னை அறிக்கையிடு" என்று கூறினான்.
ஆனால் அவரோ, "என் கிறிஸ்து இப்படி வரமாட்டார்" என்றார்.
அது உண்மை, நீங்கள் வார்த்தையை அறிந்திருக்க வேண்டும்! வார்த்தையில் நில்லுங்கள்! பாருங்கள், மகத்தான யுத்தம் சமீபமாயுள்ளது. நாம் அநேக ஆண்டுகளாக, சபையில் இருந்ததாக பாவனை செய்து வந்தோம். ஆனால் இப்பொழுது. வேதம் கூறியுள்ளபடி, யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இது ஆவிக்குரிய யுத்தமாக, போராட்டமாக இருக்கும். சிலர் தொடர்ந்து ஸ்தாபனங்களில் இருப்பார்கள். ஸ்தாபன சபையும், அது சென்று கொண்டிருக்கும் வழியிலேயே சென்று, ஆதிக்கத்தை அடையும். ஆனால் நான் உண்மையான விசுவாசியைக் குறிப்பிடுகிறேன். அவன் போர்க்களத்துக்கு வந்து கொண்டிருக்கிறான். நீங்கள் வேத வாக்கியங்களை நன்கு கற்று, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்தவர்களாய் இருங்கள். இல்லையேல் நீங்கள் எளிதில் பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டு, அதை அறியாமல் இருப்பீர்கள். அது வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அதை விசுவாசிக்காதீர்கள்! வார்த்தையில் நிலைத்திருங்கள்.
43 விக்கிரகாராதனை பழமையானது, அது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் பழமையானது. அநேக ஆண்டுகளுக்கு முன்பு பியூப்ளோ இந்தியர் அரிசோனாவில் விக்கிரக வழிபாட்டை செய்துவந்தனர். அவர்களுக்கு மழை கடவுள் ஒன்று இருந்தது. அந்த மழை கடவுள்… அவர்கள் ஒரு மண் ஆமையின் உருவத்தை செய்வார்கள். அது மண்ணிலிருந்து வெளி வந்தது போல் தோற்றமளிக்க, அதன் மேல் புள்ளிகளை வைப்பார்கள். இந்த மண் ஆமையை அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து மழை கடவுள் மண் ஆமையின் ஓட்டினுள் வந்து அதன் மூலமாக அவர்களிடம் பேசினதாக அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் நம்பினர்… மண் ஆமை மண்ணிலும் சேற்றிலும் வாழ்ந்து வந்தால், அது அதற்கெல்லாம் கடவுள் என்று. அவர்கள்… அது ஒரு கட்டுக்கதை, ஒரு மூடநம்பிக்கை. அவ்வளவு தான்.
அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பிசாசுகளை வழிபட்டனர். மழை கடவுள் என்று நினைத்து மண் ஆமையை அவர்கள் வழிபட்டதன் மூலம், தங்கள் மேல் அசுத்த ஆவியை வரவழைத்துக் கொண்டனர். நிச்சயமாக, ஏனெனில் அவர்கள் தங்கள் இருதயங்களை அதற்கு திறந்து கொடுத்தனர். ஆனால் அது தவறான ஆவி!
44 இன்றைக்கு அநேகர் தங்கள் இருதயங்களை தவறான ஆவிக்குத் திறந்து கொடுக்கின்றனர். நீங்கள் ஒரு ஆவியைப் பெற்றுக் கொள்ளுகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அநேக முறை அது வார்த்தைக்கு விரோதமாக அமைந்து, "அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன! இது அது என்பது கிடையாது" என்கின்றது. அது கிறிஸ்தவ மார்க்கம் என்னும் மாறுவேடத்தில் வந்துள்ள பிசாசு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். சற்று கழிந்து அதற்கு நாம் வரும்போது, அது கிறிஸ்தவ மார்க்கம் என்னும் மாறுவேடத்தில் வந்துள்ள பொல்லாத ஆவி என்பதை நீங்கள் காண தேவன் உதவி செய்வாராக! அது கிறிஸ்துவின் ஆவியல்ல. ஏனெனில் கிறிஸ்துவின் ஆவி ஒவ்வொரு முறையும் வார்த்தைக்கு வரும். அவர் தமது சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியாது.
45 கிறிஸ்தவ மார்க்கம் ரோமாபுரிக்கு வந்தபோது, ரோமாபுரி பட்டினத்தில், அந்த ஏழு மைல் சுற்றளவுள்ள சுவற்றினுள், 400 அஞ்ஞான கோயில்கள் இருந்தன. 400 அஞ்ஞான கோயில்கள்! அவை தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் எழுப்பப்பட்டிருந்தன. தேவர்களும், தேவதைகளும், பெண்களுக்கும் ஆண்களுக்கும். நானூறு வெவ்வேறு கோயில்கள். சற்று சிந்தித்து பாருங்கள், நானூறு!
பவுல் ரோமாபுரிக்கு வந்தபோது இதை தான் கண்டான். பெந்தெகொஸ்தேயிலிருந்து ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அனுப்பப்பட்டு, அவர்கள் ரோமாபுரியில் ஒரு சபையை நிறுவின போது, அவர்கள் இதை தான் பெற்றிருந்தனர். அவர்கள் விக்கிரக வழிபாட்டை கண்டனர். ரோமாபுரி பட்டினத்தில் இருபது லட்சம் ஜனங்கள் இருந்தனர். அதாவது, அடிமைகளும், புறநகர் பகுதிகளில் வாழ்ந்தவர் அனைவரையும் சேர்த்து இருபது லட்சம் ஜனங்கள், ரோமாபுரியைச் சுற்றிலும் இருந்த மதில்கள் ஏழு மைல் நீளம் கொண்டதாயிருந்தன. அந்த மதில்களுக்குள், அஞ்ஞான தேவர்களுக்கும் தேவதைகளுக்கும் எழுப்பப்பட்ட நானூறு அஞ்ஞான கோயில்கள் இருந்தன.
46 நான் சரித்திரத்திலிருந்து எடுத்த ஒன்றை சற்று நேரம் பேச விரும்புகிறேன். என்னிடம் அப்படிப்பட்ட ஒன்று இப்பொழுது உள்ளது. அவர்கள் வழிபட உள்ளே பிரவேசித்த முறை, அவர்கள் வழிபட எப்படி வந்தனர்? ஒரு அஞ்ஞானி சாமி கும்பிட எப்படி வந்தான்? முதலாவதாக அவன் கோயிலுக்கு சென்று பூசாரியை, அந்த அஞ்ஞான பூசாரியை காண்பான். பின்பு அவனிடம் ஒரு தொகையை காணிக்கையாக கொடுப்பான். பின்பு அவன் பேசப் போகும் தெய்வத்தை சாந்தப்படுத்த ஒரு மிருகத்தை பலியிடுவான்.
சில சமயங்களில், ஒரு கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருப்பது வழக்கம். அங்கு, தேவர்கள், தேவதைகள் போன்றவை ஒரே கோயிலில் இருக்கும்.
எனவே அந்த அஞ்ஞான பூசாரி… இவன் அங்கு சென்று பூசாரியிடம் காணிக்கையாக ஒரு தொகையைத் தருவான். அந்த பூசாரி ஒரு மெழுகுவர்த்தியை அவனுக்குக் கொடுப்பான். சாதாரண, கொழுப்பினால் செய்யப்பட்ட வர்த்தி. தொழுவதற்குச் செல்பவன் பூசாரிக்கு தொகையைச் செலுத்தின பின்பு, அவன் இந்த மெழுகு வர்த்தியை எடுத்துக் கொண்டு, அவன் பேசவிரும்பும் இந்த தெய்வத்தின் பீடத்துக்குச் செல்கிறான். அந்த பீடத்தில் தீ எரிந்து கொண்டிருக்கும். அங்கு பலி சுட்டெரிக்கப்படும். அந்த சிலையின் பாதத்தில் பெரிய வெண்கல சிலை; அவன் இந்த மெழுகுவர்த்தியை பீடத்திலுள்ள தீயைக் கொண்டு ஏற்றி, விக்கிரகத்தின் பாதங்களை அடைந்து, இந்த மெழுகுவர்த்தியை அங்கு வைக்கிறான். அதை அங்கு வைத்த பிறகு…
47 அவர்களுடைய தேவர்கள் அனைத்திலும் எந்த தெய்வம். இந்த விக்கிரகத்துக்குள் வந்து அவனுடன் பேச வேண்டுமென்று அதற்கு தெரியும் என்று நினைக்கிறேன். அந்த மெழுகுவர்த்தி எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவன் அந்த மெழுகுவர்த்தியை பீடத்திலுள்ள தீயைக் கொண்டு ஏற்றி, அதை அங்கு வைக்கிறான்.
அதன் பின்பு அவன் கோயிலின் வாசலுக்கு சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிக்கிறான். அவன் தன் முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் அவனுடைய ஜெபத்தை மகத்தான தெய்வம் என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் அந்த புராண தெய்வத்துக்கு ஏறெடுத்து, அது இறங்கி அந்த விக்கிரகத்துக்குள் வந்து அவனிடம் பேசும்படி வேண்டுகிறான்.
48 சக்கிரவர்த்திகளில் ஒருவன் அப்பொல்லோ விக்கிரகத்துக்கு முன் மிகவும் பயபக்தியுடன் சாஷ்டங்கமாய் விழுந்து தமஸ்கரித்ததன் விளைவாக, சத்தம் அந்த விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு அவனிடம் பேசினதை அவன் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.
நீங்கள் உடனே, "சகோ. பிரான்ஹாமே, அவன் சத்தத்தைக் கேட்டது உண்மையா?" என்று கேட்கலாம். அவன் சத்தத்தைக் கேட்டான் என்பதை நான் சந்தேகிக்கவில்லை. ஆனால் அது பிசாசின் சத்தம். ஜுபிடர் என்னும் தெய்வம் இல்லவே இல்லை மற்றும் அவர்களுக்கிருக்கும் அநேக கடவுள்கள் கிடையவே கிடையாது.
ஆனால் அவர்கள் சாஷ்டாங்கமாக விழுந்து, அவர்கள் அறிந்திராத மர்ம தெய்வத்தை பணிந்து கொள்கின்றனர். அந்த தெய்வம் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து உண்டாக்கிய அந்த விக்கிரகத்தில் அதனுடைய ஆவி இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர். அப்பொழுது அதன் கண்களில் அவர்களுக்கு தயவு கிடைக்கிறது.
49 அவர்கள் அதற்கு காணிக்கை படைக்கின்றனர். தொழுகிறவன் இத்தகைய உணர்ச்சியை தனக்குள் ஏற்றிக் கொண்டு, மறுபடியும் விக்கிரகத்துக்கு முன்பாக செல்கிறான் இம்முறை அந்த அஞ்ஞானி பூசாரி அவனுக்கு ஆகாரமும், குடிக்க ஏதாகிலும் கொண்டு வந்து விக்கிரகத்தின் பாதங்களில் வைக்கிறான். அப்பொழுது (இதை இந்த காகிதத்தில் எழுதி வைத்திருக்கிறேன். அதிலிருந்து படிக்கிறேன். பாருங்கள்?) அவன் இந்த விக்கிரகத்தின் பாதங்களண்டை சென்று, குடிப்பதற்காக படைக்கப்பட்டதை எடுத்து சற்று குடித்து, ஆகாரத்தை சிறிது உண்டு, அதை விக்கிரகத்தின் பாதங்களின் மேல் ஊற்றுகிறான்.
அவன் என்ன செய்கிறான்? பிசாசுகளுடன் நற்கருணை (communion) பந்தியில் கலந்து கொள்கிறான். பிசாசுகளுடன் நற்கருணை புசித்தல். தேவர்களும், தேவதைகளும். கிறிஸ்தவன் கிறிஸ்துவுடன் நற்கருணை பந்தியில் புசிப்பது போன்று இது அமைந்துள்ளது. இதை தான் ரோமாபுரிக்கு வந்த முதலாம் சபை அல்லது சுவிசேஷத்தின் முதலாம் யாத்திரீகர், இந்த ஜனங்களின் வழிபாட்டில் கண்டனர்.
50 பாகால் எல்லா காலங்களிலும், எல்லா விக்கிரகங்களைக் காட்டிலும் பிரபலமானவன் (தீர்க்கதரிசி 'பாகால்' என்னும் சொல்லை ஆங்கிலத்தில் எழுத்து கூட்டுகிறார் - தமிழாக்கியோன்). அவன் சூரிய தேவன். அவனுக்கு ஒரு மனைவியுண்டு, சந்திர தேவதை - அஸ்தரோத். அது "அஸ்டார்டே" என்றும் அழைக்கப்படுகின்றது. அது ரோம நாணயத்தில் காணப்படுகின்றது. அவள் தேவதை, சந்திர தேவதை அல்லது, "வான ராணி, தேவர்களுக்கெல்லாம் தாய்" என்றழைக்கப்பட்டாள். பாகால் சூரிய தேவன்.
ஏறக்குறைய எல்லா அஞ்ஞானிகளுமே சூரியனை வழிபட்டனர். நமது முன்னோர்கள் அமெரிக்காவை அடைந்து, அமெரிக்கா நிறுவப்பட்ட போது, இங்கிருந்த சிகப்பு இந்தியர்கள் அதை தான் செய்திருந்தனர். நமது முன்னோர்கள் இங்கு வந்தபோது, இவர்கள் சூரியனை வழிபடுவதைக் கண்டனர். ஏனெனில், அதில் அவர்கள் வழிபட்டது…
கிறிஸ்தவர்கள் ரோமாபுரிக்குச் சென்றபோதும், அங்கு ஜனங்கள் அவ்வாறே தேவர்களையும் தேவதைகளையும் சேவித்து வந்தனர்.
51 விக்கிரகாராதனை மாறவேயில்லை என்பது என் பயணங்களில் நான் கண்டறிந்த உண்மை. அதுபோல் உண்மையான கிறிஸ்தவ மார்க்கமும் மாறவேயில்லை. இரண்டும் தன் தன் ஸ்தானத்தில் நிற்கின்றன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும் வரைக்கும் அவை அப்படியே இருக்கும். இதைக் குறித்து சற்று பேச விரும்புகிறேன், அப்பொழுது இதை பற்றிய கருத்து உங்களுக்குண்டாகும். நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், அதை நிச்சயம் கிரகித்துக் கொள்வீர்கள்.
பாகால் சூரிய தேவனானதலால், அவனுக்கென்று சுடப்பட்ட பணியாரங்கள்… எரேமியா அதைக் குறித்து கூறியுள்ளதை சில நிமிடங்களுக்கு முன்பு நாம் பார்த்தோம். ஸ்திரீகள் சூரிய தேவனாகிய பாகாலுக்கு பணியாரங்களை சுட்டனர். ஏனெனில், அந்த அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து படித்தால், அவர்கள் "நாங்கள் பாகாலை சேவிக்காமல் போனால், எங்கள் பயிர்கள் சேதமடையும். ஏனெனில் பாகால் செழுப்பின் தேவன்" என்று கூறுவதைக் காணலாம். வேறு விதமாகக் கூறினால், "சூரியனே பயிர்களை வளரச் செய்கின்றது என்று நாங்கள் அறிவோம்."
ஆனால் தீர்க்கதரிசியோ அவர்களிடம், "நீங்கள் தேவனை மறந்ததால், உங்கள் பயிர்கள் விளையவில்லை" என்கிறான்.
ஆனால் அவர்களோ பாகாலைச் சேவித்து அவனுக்கு காணிக்கை படைத்தார்கள்.
52 பாகால் வட்ட வடிவமான தேவனாக இருப்பதால்… (இப்பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் கிரகித்துக் கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் மற்றதை, இந்த செய்தியின் முடிவை அறிந்து கொள்வீர்கள்) …சூரிய தேவன் வட்ட வடிவமான தேவன். அவர்கள் பெரிய தட்டுகளை வைத்திருந்தனர். அது சூரியனை பிரதிபலித்து அக்கினி போல் தோன்றும். அவர்கள் சுட்ட எரேமியா கூறும் அந்த பணியாரம்… ஸ்திரீகள் பாகாலுக்கு இந்த பணியாரங்களைச் சுட்டனர். அது சூரியனைப் போல் வட்ட வடிவமாக உண்டாக்கப்பட்டது. அது அஞ்ஞான பீடத்தின் மேல் நற்கருணைக்காக படைக்கப்பட்டது. அது சூரியன் அல்லது சந்திரனைப் போல் வட்ட வடிவில் செய்யப்பட்டது. ஏனெனில் அது சூரிய தேவன் அல்லது சந்திர தேவதை.
53 பாகால்… நாம்… அது செழிப்பின் தேவன். அவன் எல்லாவற்றையும் விளையச் செய்கிறான் என்றனர்.
ஆதி சபை ரோமாபுரிக்கு வந்த போது இதை கண்டது. இன்றைய ரோமன் சபை அல்லது ரோமன் கத்தோலிக்க சபை இவ்வாறு அறிக்கை செய்து, அதை விசுவாசிக்கிறது. அது "கத்தோலிக்கம்" என்றழைக்கப்படுகிறது.
நாமெல்லாரும் கத்தோலிக்கர். நாம் கத்தோலிக்க சபை, அப்போஸ்தல கத்தோலிக்கர். "கத்தோலிக்கம்" என்றால் "உலகம் முழுவதும்" என்று பொருள். நாம் அப்போஸ்தல விசுவாசம் கொண்ட, உலகம் முழுவதும் வியாபித்துள்ள சபை. ஆம், ஐயா. இவ்விரு சபைகளுக்குமிடையே ஒரு வித்தியாசம் உண்டு. ஒன்று உலகம் பூராவும் வியாபித்துள்ள கத்தோலிக்க சபை. அப்போஸ்தல திருச்சபை; மற்றது ரோமன் கத்தோலிக்க சபை.
54 பேதுரு ரோம சபையை நிறுவினதாக கூறப்படுகின்றது. அப்படி அவர்கள் நம்புகின்றனர். அதற்கு ஆதாரமான வேதவாக்கியத்தை நான் காண விரும்புகிறேன். பேதுரு எப்பொழுதாவது ரோமாபுரியிலிருந்தான் என்று கூறப்பட்டுள்ள இடத்தை நான் வேதத்திலிருந்து காண விரும்புகிறேன். அவன் கி. பி. 41 முதல் 46 முடிய அங்கிருந்ததாக ரோம சபை கூறுகிறது.
அந்த சமயத்தில் தான் கிளாடியஸ் ரோமாபுரியின் சக்கிரவர்த்தியாக இருந்தான். அதன் காரணமாக எல்லா யூதர்களும் வெளியேறினர். அப்போஸ்தலர் 18ம் அதிகாரத்தை படியுங்கள். அப்பொழுது கண்டு கொள்வீர்கள். பவுல் எபேசுவுக்கு சென்றபோது, அவன் ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் கண்டான். அவர்கள் யூதர்கள். அவர்கள் துன்புறுத்தலின் காலத்தின் போது, அங்கிருந்து வெளியேறி மறுபடியுமாக பாலஸ்தீனாவை அடைந்தனர். ஏனெனில் கிளாடியஸ், கிறிஸ்தவர்கள், வைதீக யூதர்கள் உட்பட எல்லா யூதர்களும் வெளியேறும்படி கட்டளை பிறப்பித்தான். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமாபுரியில் சபையை நிறுவினர். கிளாடியஸ் எழும்பினதன் விளைவாக அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியதாயிருந்தது. சபை அனைத்தும்… கிறிஸ்தவர்களும், யூதர்கள் அனைவரும் ரோமாபுரியை விட்டு வெளியேறினர்.
55 "பேதுரு சபையின் பேராயராக இருந்தான்" என்பதைக் குறித்து, கிறிஸ்துவுக்குப் பிறகு குறைந்தது எழுபது ஆண்டுகள் வரைக்கும் அவன் பாலஸ்தீனாவை விட்டு வெளியே செல்லவில்லை என்பதற்கு வேத ஆதாரங்களை என்னால் காண்பிக்க முடியும். இந்த வேதாகமத்திலிருந்தே! நீங்களோ, பேதுரு ரோமாபுரியில் கொல்லப்பட்டான் என்றும், பவுல் ரோமாபுரியில் சிரச்சேதம் பண்ணப்பட்டான் என்றும் கூறுகிறீர்கள். அது கொள்கை (dogma). நான் எனக்கு கிடைத்த இரத்த சாட்சிகளைக் குறித்து எழுதியுள்ள புத்தகங்கள் அனைத்தும் படித்திருக்கிறேன். அவைகளில் ஒன்றாகிலும், பேதுரு அல்லது பவுல் (இருவரில் ஒருவர்) ரோமாபுரியில் கொல்லப்பட்டதாக கூறவில்லை, நாம் படித்த ஆதி காலத்து உண்மை சம்பவங்களைக் கூறும் (authentic) இரத்த சாட்சிகளைப் பற்றிய புத்தகங்கள் எதுவுமே அப்படியொன்றும் கூறவில்லை. பேதுரு ரோமாபுரியில் கொலை செய்யப்படவில்லை. அது ரோமன் கத்தோலிக்க சபையின் கொள்கை.
நான் விஞ்ஞான மார்க்கத்தை அம்பலப்படுத்த இங்குள்ளேன். எனவே, நாம் கர்த்தருடைய உதவியைக் கொண்டும், அவருடைய வார்த்தையின் உதவியைக் கொண்டும் அதை செய்யலாம், பாருங்கள், சபை எந்நிலையிலுள்ளது என்பதை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். நீங்கள் கத்தோலிக்கம்! என்று கூச்சலிடுகிறீர்களே, சற்று பொறுங்கள்.
56 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமாபுரியை விட்டு வெளியேறின பின்பு (வேதாகமத்தின்படி), அங்கிருந்த சிறு சபை அனாதையானது. அதில் மீதியிருந்தவர். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் வேறொரு தம்பதிகளும் நிறுவி வளர்த்து வந்த ரோமன் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்து கொண்ட மனம் மாறிய அஞ்ஞானிகள் மாத்திரமே.
இவர்கள் வெளியேறின பின்பு, அங்கிருந்தவர்கள் தங்கள் சொந்த பேராயர்களை ஏற்படுத்திக் கொண்டு, சொந்த கோட்பாடுகளை அமைத்துக் கொண்டனர் என்று நாம் காண்கிறோம்… கான்ஸ்டன்டைன் சக்கிரவர்த்தியின் ஆதரவைப் பெறவும், அவனுக்குப் பிறகு வந்தவர்களின் ஆதரவைப் பெறவும், அவர்கள் இவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று. ஏனெனில் நாட்டின் அரசியல் அமைப்பில் அவர்கள் நிலை கொள்ள வேண்டுமானால், அவர்களுக்கு அங்கத்தினர்கள் தேவைபட்டது. எனவே வாயினால் மாத்திரம் அறிக்கை செய்து, இன்று அமெரிக்காவில் உள்ள சிலரைப் போல் தேவனையே அறியாதவர்களை, அவர்கள் சபையின் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொண்டனர். வெறும் அறிக்கை, அவர்களுடைய தெய்வங்களுடன் வேறொரு தேவனாகக் கருதின கிறிஸ்துவை அவர்கள் வாயினால் மாத்திரமே அறிக்கை செய்தனர். பின்பு அவர்களுடைய சபை ஒழுங்குகளில், அவர்கள் அஞ்ஞான சடங்குகளை நுழைத்தனர்.
57 முதலாவதாக, நற்கருணையில் பங்கெடுக்கும் விஷயத்தில் ரோம குருவானவர் அஞ்ஞான வழிபாட்டை நுழைத்தார். நற்கருணை எடுக்கும் விஷயம் விவாதிக்கப்பட்டது. நொறுங்குண்டு பியக்கப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்துக்கு பதிலாக அவர்கள் அதை சூரியன், சந்திரனைப் போன்று வட்ட வடிவில் செய்தனர். இன்று வரை அது வட்ட வடிவிலேயே உள்ளது. நிச்சயமாக. இப்பொழுது அது வட்ட வடிவமான மெல்லிய ரொட்டித்துண்டேயன்றி (Wafer), அவருடைய நொறுங்குண்ட சரீரத்தைப் போல் அல்ல. அது வட்ட வடிவமாகவும் வழவழப்பாகவும் உள்ளது. ரோமன் கத்தோலிக்க குருவானவர்கள் இந்த வட்ட வடிவமான ரொட்டியை இன்றைக்கும் பீடத்தின்மேல் வைத்து, அது மெய்யான (literal) கிறிஸ்துவின் சரீரம் என்றழைக்கின்றனர்.
58 இந்த மேல் சபை எபிஸ்கோபல் சபையினருக்கும், கத்தோலிக்க சபையினருக்கும் இடையே இந்த விவகாரத்தில் வேறுபாடு காணப்படுகின்றது. அது மெய்யான சரீரமா, அல்லது சரீரத்துக்கு எடுத்துக்காட்டாயுள்ளதா என்னும் விஷயத்தில். ரோமன் கத்தோலிக்கர், "அது மெய்யான சரீரம்" என்கின்றனர். ஏனெனில் அது பாகாலின் (சூரிய தேவனின்) மெய்யான சரீரமாக அமைந்து, பித்தளை தட்டில் தன்னை வட்ட வடிவில் பிரதிபலிக்கின்றது. எந்த கிறிஸ்தவ இராப்போஜன மேசையும் வட்ட வடிவமுள்ள அப்பத்தை அதன் மேல் கொண்டிருக்காது.
அவர்கள் கிழக்கு நோக்கி அதை வைக்க வேண்டும் என்று சொல்லி, அஞ்ஞான வழிபாட்டில் அவர்கள் செய்வதுபோல், ஸ்திரீகளை அவர்கள் உள்ளே கொண்டு வந்தனர்; அஞ்ஞானிகள் பெண் தெய்வங்களை வழிபடுவது போல் அவர்கள் அஸ்தரோத்தை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மரியாளை வைத்து அவளை வான ராணியாக்கினர். பின்பு அவர்கள் ஜுபிடரை நீக்கிவிட்டு, பேதுருவை அந்த இடத்தில் வைத்தனர். அவர்கள் ஒரு ஸ்தாபனக் கொள்கையை உண்டாக்கிக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அதற்காக அவர்கள்…
கிளாடியஸ் அரசாண்டு பதின்மூன்று ஆண்டுகள் கழித்து, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் திரும்பி வந்தபோது, அவர்களுடைய சபை முழுவதுமாக விக்கிரகாராதனையில் ஈடுபட்டு, அது மிகப்பெரிய ஸ்தாபனமாக வளர்ந்திருந்ததைக் கண்டனர்.
59 அவர்கள் அஞ்ஞான வழக்கங்களை உள்ளே நுழைப்பதற்கென, அவர்கள் வேதாகமத்தை முற்றிலுமாக வெளியே எடுத்துப் போட வேண்டும். நான் ஐயர்லாந்து நாட்டைக் சேர்ந்தவன். என்னிடம், எங்கள் விசுவாசத்தின் உண்மைகள் (Facts of our Faith) என்று அவர்கள் அழைக்கும் புத்தகம் உள்ளது. அது குருவனருக்கு மாத்திரமே உரியது. நான் குருவானவர்களைப் பேட்டி கண்டதன் மூலம் இதை அறிந்திருக்கிறேன். அதாவது குருவானவர் எவருமே வேதத்தை ஆதாரமாகக் கொண்டு விவாதிக்கமாட்டார். அவர்களுக்கு வேதாகமம் மற்றுமொரு புத்தகம் மாத்திரமே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பேராயர் ஷீன் என்பவர், யாராகிலும் வேதாகமத்தை விசுவாசித்தால், அது சேற்றின் வழியாய் நடந்து செல்வதற்கு சமானம் என்றார். அவர்கள் வேதாகமத்தை விசுவாசிப்பதில்லை. அவர்கள் அங்கு தொடங்கி, "தேவன் அவருடைய சபையில் இருக்கிறார், அவருடைய வார்த்தையில் இல்லை" என்றனர்.
60 தெருவிலுள்ள புனித இருதய சபையின் குருவானவர் அண்மையில் என்னைப் பேட்டி காண வந்திருந்தார். அவர் என்னிடம்… தெருவிலுள்ள சபை. அதன் பெயரை மறந்துவிட்டேன். அது "புனித இருதயம்" என்றழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். அவர், பின்வாங்கிப் போய் கத்தோலிக்க சபையில் சேர்ந்து கொண்ட மேரி எலிசபெத் ஃபிரேசியர் என்பவள் பெற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து என்னிடம் கேட்க வேண்டுமென்று வந்திருந்தார். அவர், "நீங்கள் தான் அவளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தீர்களா?" என்று கேட்டார்.
நான், "ஆம்" என்றேன்.
அவர், "அவளுக்கு எந்த விதத்தில் ஞானஸ்நானம் கொடுத்தீர்கள்?" என்றார்.
நான், "கிறிஸ்தவ ஞானஸ்நானம் கொடுத்தேன்" என்றேன்.
அவர், "நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?" என்றார்.
நான், "ஒரே ஒரு கிறிஸ்தவ ஞானஸ்நானம் மாத்திரமேயுண்டு" என்றேன்.
அவர், "தண்ணீரில் முழுக்கியா?" என்றார்.
நான், "ஆம், ஐயா" என்றேன்.
அவர், "அப்படியானால் நீங்கள் அவளை பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலா தண்ணீரில் முழுக்கினீர்கள்?" என்று கேட்டார்.
நான், "அது கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்ல. கிறிஸ்தவ ஞானஸ்நானம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் முழுக்குவது" என்றேன்.
அவர் அதை குறித்துக் கொண்டார். அவர், "இதை பேராயருக்கு முன்பாக சத்தியம் செய்து சொல்வீர்களா? அல்லது இந்த பிரகடனத்தை அவர் முன் செய்வீர்களா?" என்று கேட்டார்.
நான், "அவர் என் வார்த்தையை நம்பாவிட்டால் போகட்டும். நான் எதன் பேரிலும் சத்தியம் செய்வதில்லை" என்றேன். பாருங்கள்? அவர் நான், "இதை நான் கர்வமாகக் கூறவில்லை, ஐயா. ஆனால் 'வானத்தின் பேரிலாவது பூமியின் பேரிலாவது சாத்தியம் பண்ண வேண்டாம். அது அவருடைய பாதபடி' என்று வேதம் கூறியுள்ளது எனக்குத் தெரியும். நான் அப்படி செய்யக்கூடாது" என்றேன்.
அவர், "விசித்திரமாயுள்ளது. கத்தோலிக்க சபை முன்பு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் கொடுத்து வந்தது" என்றார்.
நான் "எப்பொழுது? எப்பொழுது?" என்று கேட்டேன். பாருங்கள்? அப்படி செய்ததாக அவர்கள் கூறிக் கொள்கின்றனர்.
உண்மையில் அவர்கள் அப்படிதான் கொடுத்து வந்தனர். ஏனெனில் தொடக்கத்தில் நாமெல்லாரும் ஒன்றாயிருந்தோம். அது… அது பெந்தெகொஸ்தேயன்று தொடங்கினது. யாரும் எங்கும் அதை உறுதியாகக் கூறலாம். கிறிஸ்தவ சபை பெந்தெகொஸ்தேயன்று பெந்தெகொஸ்தே அனுபவத்துடனும், பெந்தெகொஸ்தே ஜனங்களுடனும், பெந்தெகொஸ்தே ஞானஸ்நானத்துடனும் தொடங்கினது. எல்லாமே பெந்தெகொஸ்தேயன்று ஆரம்பமான மூல சபையிலிருந்து வந்தது.
61 இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் சக்கிரவர்த்திகளைப் பிரியப்படுத்த, அஞ்ஞான வழக்கங்களை உள்ளே கொண்டு வர, வேத போதகத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டியதாயிருந்தது.
இப்பொழுது, பாருங்கள். பேதுரு ஒரு யூதன். அது சரியா? விக்கிரகத்தைக் கண்ணால் கூட காணக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்த யூதனான பரி. பேதுரு சபையில் விக்கிரகங்களை வைக்க வேண்டுமெனும் கருத்தைக் கொண்டிருப்பான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவன் அப்படி செய்வான் என்று நினைக்கிறீர்களா? அவன் ஒருக்காலும் அப்படி செய்யவேமாட்டான். அவன், "நான் தொடக்கத்தில் நிருபங்களில் எழுதி வைத்தவை அனைத்தும் தவறு. அவைகளை இப்பொழுது தூர எறிந்துவிடுகிறேன். இப்பொழுது நான் ரோம சபையில் ஆவியாக வாழப் போகிறேன். இவைகளை நான் உள்ளே நுழைக்கப் போகிறேன்" என்று கூறியிருப்பான் என்று நினைக்கிறீர்களா?
அப்படியானால் அவன் மாறின ஒரு மனிதனாக இருப்பான். அவர்கள் இவைகளைச் செய்து ஒரு ஸ்தாபனக் கொள்கையை தொடங்குவதற்கென, பேதுரு அந்த சபையில் அடக்கம் செய்யப்பட்டான் என்றும், அவனே இந்த கட்டளைகளை அவர்களுக்கு அளித்து சென்றான் என்றும், அவர்களே மூல கத்தோலிக்க சபையென்றும் உரிமை கோருகின்றனர். அவர்கள் அல்ல! அதை நிரூபிக்க ஒரு வேதவாக்கியமோ, சரித்திரமோ, வேறொன்றும் இல்லை. அவர்கள் அல்ல!
62 முதலாம் ரோம சபையின் அஞ்ஞான குருவானவர், இன்று காணப்படும் ரோமன் கத்தோலிக்க குருவானவரைப் போன்றே இருந்தார். அவர்கள் அப்பம் கிறிஸ்துவின் சரீரம் என்றும், எப்படியோ கிறிஸ்து இறங்கி வந்து, பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள அந்த அப்பத்துண்டில் நுழைந்து கொள்கிறார் என்றும் நம்புகின்றனர் (எலிகள் அதை இரவில் தூக்கிச் சென்றுவிடும்). பாருங்கள்? நம்புகின்றனர்… ஆகவே தான் ஒரு கத்தோலிக்கன், ஆராதனை செய்வதற்காக ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்கிறான். ஏனெனில், அவர்களுடைய சபை தான் தேவன் என்பதே அவர்களுடைய நம்பிக்கை. ஆகவே தான் அவர்கள் ஆலயத்தினுள் குனிந்து பணிந்து கொண்டு, சிலுவை அடையாளத்தை தங்கள் மேல் போட்டுக் கொள்கின்றனர். ஏனெனில், அந்த அப்பத்துண்டே தேவன். அது சூரிய தேவனாகிய பாகாலைக் குறிக்கும் ஒன்றேயன்றி, வேறொன்றுமல்ல. அதற்கு ஆதாரமாக ஒரு வேதவாக்கியமும் இல்லை. ஆம், அந்த பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள வட்ட வடிவமான அப்பம்.
63 அவர்கள் ஐரினேயஸ், பாலிகார்ப், பவுல், இன்னும் மற்ற ஆதி சகோதரர்கள் கைக்கொண்ட ஆதி கிறிஸ்தவ உபதேசத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதிக காலம் வாழ்ந்த சீஷன் யோவான் என்று நாம் காண்கிறோம். அவன் நாடு கடத்தப்பட்டு பத்மு தீவில் மூன்று ஆண்டுகள் கழித்தான். அவன் ஒரு பள்ளி வைத்திருந்தான். அவன் தேவனுடைய வார்த்தையை ஒழுங்குபடுத்தி, நிருபங்களாக ஒன்று சேர்த்தான். அவனும் அவனைச் சேர்ந்த ஞானிகளும் இதை செய்வதை அவர்கள் கண்டபோது, அவர்கள் மூன்று ஆண்டு காலமாக அவனை நாடு கடத்தினர் (சக்கரவர்த்தி மரித்த பின்பு, அவன் மறுபடியும் கொண்டு வரப்பட்டான்). அதன் பின்பு அவன் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தை எழுதினான்.
64 தேவன் தமது சபையில் இருக்கிறாரா அல்லது தேவன் தமது வார்த்தையில் இருக்கிறாரா? என்பதைக் குறித்து பேசும்போது, தேவன் வார்த்தையிலிருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்.
மாத்திரமல்ல, எந்த சபையின் போதகமும், அது பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பெந்தெகொஸ்தே சபை எதுவாயிருப்பினும் எழுத்துக்கு எழுத்து இந்த வேதாகமத்துடன் நிலைகொள்ளாமல் போனால், அது தவறு! ஏனெனில் பத்மு தீவில் யோவான் பரிசுத்த ஆவி அல்லது கிறிஸ்து அவன் மூலமாக கூறினது என்னவெனில், "இதிலிருந்து எதையாகிலும் எடுத்துப் போட்டால், அல்லது இத்துடன் எதையாகிலும் கூட்டினால்… அப்படியிருக்க, இந்த அஞ்ஞான விக்கிரக வழிபாட்டை நீங்கள் நுழைத்து, ஒரு தேவனை மூன்று தெய்வங்களாக்கி, ஆதி சபை போதிக்காததும், அதற்கு எதிராயிருந்ததுமான அஞ்ஞான பழக்க வழக்கங்களை எவ்வாறு பின்பற்ற முடியும்?
65 நிசாயா ஆலோசனை சங்கத்தில், அவர் மூன்று தெய்வங்களா அல்லது ஒருவரா என்னும் பெரிய விவாதம் நடந்து கொண்டிருந்தது. இரத்த சாட்சிகள் அங்கு வந்தனர். அவர்களில் சிலர்… பெந்தெகொஸ்தே பிரசங்கியார் ஒருவர் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்ததற்காக, அவர்கள் நெருப்பில் நன்றாய் காய்ச்சின இரும்புத் துண்டை அவருடைய கைகளின் மேல் வைத்து, அவருடைய கைகளை இப்படி பின்னால் இழுத்தனர். நின்று கொண்டிருந்த வேறொவருடைய கண்களில் அவர்கள் பட்டயத்தை பாய்ச்சி, கண்களை நோண்டி எடுத்துவிட்டனர். இந்த வார்த்தைக்காக ஒரு கூட்டம் இரத்த சாட்சிகள் நின்றனர். அல்லேலூயா! அவர்கள் தங்கள் இரத்தத்தை பழைய தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துடன் கலந்தனர். இந்த வார்த்தை, சகோதரனே, அது தேவனுடைய வார்த்தை.
66 இந்த அஞ்ஞானிகள் கிறிஸ்தவ மார்க்கத்தை தழுவினபோது, இந்த அஞ்ஞான வழக்கங்களை அவர்களுடன் கூட கொண்டு வந்தனர். அவர்கள் இனிமேல் வேதாகமத்தை ஒருக்காலும் உபயோகிக்க முடியாது. ஏனெனில் வேதாகமம் இவைகளை அம்பலமாக்கியது. இன்றைக்கும் அவர்கள் வேதாகமத்தை விசுவாசிப்பதில்லையென்று தான் சொல்வார்கள். அவர்கள், "அது சரிதான், ஆனால் சபையே எல்லாவற்றிற்கும் மேலான வார்த்தை" என்பார்கள்.
இன்று பெந்தெகொஸ்தேயினரிடையும் அதையே நாம் காண்கிறோம். கத்தோலிக்கரை குறை கூறாதீர்கள். ஏனெனில் நாமும் அதே குற்றத்தை புரிந்துள்ளோம். மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, அவர்கள் ஒவ்வொருவரும்.
மெதோடிஸ்டுகளே, மிகப் பரிசுத்தமுள்ளவர்களே, பின்னை ஏன் நீங்கள் ஜோசப் ஸ்மித்தை கொன்றீர்கள்? இது அமெரிக்கா. வழிபாட்டின் விஷயத்தில் இங்கு ஒவ்வொருவருக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஜோசப் ஸ்மித் கூறினதை நான் விசுவாசிப்பதில்லை. ஆனால் அந்த மார்மோனைக் கொல்ல உங்களுக்கு உரிமையில்லை.
பாப்டிஸ்டுகளே, நீங்கள் எத்தனை காரியங்களை மூடி மறைத்திருக்கிறீர்கள் மற்றவர்கள்?
பெந்தெகொஸ்தேயினரும் மற்றவர்களைப் போலவே குற்றவாளிகளாக இருக்கின்றனர். அவர்கள் திணிக்கப்பட்ட ஷாட்டுகளும் மாய்மாலக் கூட்டமுமாயிருக்கின்றனர். நீங்கள் தாழ்மை, ஆவியின் வல்லமை போன்றவைகளுக்குப் பதிலாக, ஆவியில்லாத வார்த்தையைப் பெற்றிருக்கிறீர்கள். மற்றவர்களைக் காட்டிலும் நீங்கள் அதிக தீங்கிழைப்பவர்களாயிருக்கின்றீர்கள். நீங்கள் திரித்துவக் கருத்துக்களைக் கொண்டவர்களாய், முன் காலத்து அஞ்ஞான வழக்கங்களுக்கு சென்றுவிட்டீர்கள். இதை வார்த்தையைக் கொண்டு உங்களால் நிரூபிக்க முடியாது. வார்த்தை அதற்கு முரணாயுள்ளது. எவ்வளவு பரிதாபம், எவ்வளவு பரிதாபம்!
67 கிறிஸ்தவ மார்க்கம் முதலாம் ரோம சபையை நிறுவின பின்பு, அவர்கள் வேதாகமத்தை தள்ளிவிட்டு, அஞ்ஞான வழக்கங்களை ஏற்றுக் கொண்டனர். அப்படி செய்ய அவர்களுக்கு ஏதாவதொரு ஆதாரம் தேவைப்பட்டது. எனவே அவர்கள், "பேதுருவே ரோம சபையின் முதலாம் போப்பாண்டவர்" என்றனர். அந்த கருத்து இந்நாள் வரைக்கும் நிலவி வருகின்றது. பாருங்கள், அவன் அப்படியே போப்பாண்டவராக இருந்தான் என்றே வைத்துக் கொள்வோம். அவன் பெந்தெகொஸ்தேயின் வார்த்தைகளை விட்டு பின் சென்றிருப்பானா? ஒரு யூதன் விக்கிரகங்களை நிறுவுவான் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?
தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து, நாட்களையும் ஆண்டுகளையும் கூட சரியாக குறிப்பிட்டு, பேதுரு பாலஸ்தீனாவை விட்டுச் செல்லவேயில்லை என்றும் (ஒரு முறை அவன் ஐபிராத்து நதியினருகில் பாபிலோனுக்குச் சென்றான்), அவன் ரோமாபுரியில் வசிக்கவேயில்லை என்றும் என்னால் நிரூபிக்க முடியும். அது "கர்த்தர் உரைக்கிறதாவது!" அவையனைத்தும் அஞ்ஞானக் கருத்து.
அதை இப்பொழுது பிராடெஸ்டெண்டு மார்க்கத்தில் காணப் போகின்றோம். பெந்தெகொஸ்தேயினரைப் பாருங்கள். அவர்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்வதில்லை, நீங்கள் வார்த்தையில் நிலைகொண்டால், எப்பொழுதுமே சரியாயிருப்பீர்கள். நீங்கள் வார்த்தையை விட்டுவிலகிவிட்டால், எங்காவது சென்றுவிடுவீர்கள்.
68 ஒரு பெரிய பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் சில நாட்களுக்கு முன் நடத்திய ஒரு பெரிய கூட்டத்தின்போது, ஒரு ஸ்திரீ குதித்தெழுந்து, அந்நிய பாஷை பேசி, பீட அழைப்பை தடை செய்தாள். அன்றிரவு நான் கூட்டத்திலிருந்து திரும்பிய போது, பில்லி அங்கே என்னை வெளியே சந்தித்து என்னிடம், "உங்களுக்குத் தெரியுமா? இன்றிரவு அளிக்க அவள் வேறொரு செய்தியை வைத்திருந்தாளாம்" என்றான்.
நான் அந்த ஸ்திரீயை கவனித்துக் கொண்டேயிருந்தேன். (கத்தரிக்கப்பட்ட தலைமயிர், அதற்குள் அவள் வார்க்கப்பட்டது போன்று மிகவும் இறுக்கமான ஆடை. அவள் அங்கு அமர்த்து, தலைமயிரை சரிபடுத்திக் கொண்டு, காலுரைகளை மேலே இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்.) அவள் குதித்தெழுந்தாள். "நான் உட்காரு" என்றேன், அவள் தொடர்ந்து எழுந்து கொண்டேயிருந்தாள். நான், "நான் சொல்வது கேட்கிறதா? உட்காரு" என்றேன். ஓ, என்னே!
அன்றிரவு நான் வெளியே வந்தபோது, நான்கைந்து பேர் அவளுடன் கூட என்னைச் சந்தித்து, "நீங்கள் பரிசுத்த ஆவியை விசனப்படுத்திவிட்டீர்கள்" என்றனர்.
நான், "தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் நான் விசனப்படுத்தும் எந்த ஆவியும் விசனப்பட்டே ஆக வேண்டும்" என்றேன். "தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது என்று வேதம் கூறியுள்ளதல்லவா? அவள் சாட்சி கூற வேண்டுமானால் அது தீர்க்கதரிசனம்… அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்தால், தீர்க்கதரிசனமாகிவிடுகின்றது. நான் முடிக்கும் வரை காத்திருந்து, பின்பு அப்படி செய்திருக்கலாம்" என்றேன்.
அவர்கள், "நீங்கள் வார்த்தையை போதிக்கிறீர்" என்றனர்.
நான், "அதன் பேரில் தான் நான் நின்று கொண்டிருக்கிறேன்" என்றேன்.
அவர், "அவள் பரலோகத்திலிருந்து புதிதான ஒன்றை, வித்தியாசமான ஒன்றைப் பெற்றிருந்தாள்" என்றார். அது மீண்டும் ரோமன் கத்தோலிக்க மார்க்கத்துக்கு செல்வது அல்லவென்றால், அது வேறென்னவென்று எனக்குத் தெரியவில்லை.
எந்த மனிதனுடைய வார்த்தையும், எந்த ஒரு ஆவியும் பொய்யாயும், தேவனுடைய வார்த்தை மாத்திரம் சத்தியமாயுமிருப்பதாக! தேவனுடைய வார்த்தை எப்பொழுதுமே முதல் ஸ்தானம் வகிக்க வேண்டும்.
69 இன்றுள்ள தொல்லை அதுவே. அவர்கள் எத்தனையோ வெளிப்பாடுகளையும் தவறான காரியங்களையும் பெற்றுள்ளனர். அது, தேவனுடைய வார்த்தையில் நிலை கொள்வதற்கு பதிலாக சாஷ்டாங்கமாக பணிந்து தங்கள் இருதயங்களை பிசாசுகளுக்குத் திறந்து கொடுப்பதாகும். அங்கு தான் தொல்லை நேரிடுகிறது. அதுதான் காரியம் அவர்கள் உத்தமமானவர்கள், நல்லவர்கள். அவர்களிடம் இதை நீங்கள் எடுத்துக் கூற முடியாது.
அவர்கள், "நாங்கள் பெந்தெகொஸ்தே ஜனங்கள், நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்."
"நாங்கள் பாப்டிஸ்டு ஜனங்கள், நாங்கள் இதை விசுவாசிக்கிறோம்" என்பார்கள்.
நான் இந்த வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், ஏனெனில் இது தேவனுடைய வார்த்தை! இந்த காரியத்தில் என்னைத் திருத்த நான் எவருக்கும் சவால்விடுகிறேன். பாருங்கள்? அது உண்மை. இது வார்த்தை, இதில் நிலைகொள்ளுங்கள். இது சத்தியமாயுள்ளது.
70 எனவே அவர்கள் முதலாம் சபையை, முதலாம் ரோமன் கத்தோலிக்க சபையை உருவாக்கினர். அவரை பேராயர் என்றழைப்பதற்கு பதிலாக அவர்கள் எல்லோரும் அவரை அவ்வாறு அழைத்து வந்தனர். அவரை 'பிதா' (Father) என்றழைத்தனர். இப்பொழுது அவர்கள் அப்படியே அழைக்கின்றனர். அவர்கள், "இந்த அப்பம் கிறிஸ்துவின் சரீரம் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். குருவானவர் ஒரு தெய்வமாயிருப்பதால், இந்த அப்பத்தை கிறிஸ்துவின் மெய்யான சரீரமாக மாற்ற, தேவன் குருவானவரின் சத்தத்துக்கு செவி கொடுக்க வேண்டும்" என்கின்றனர், அந்த புத்திசாலிகள் இந்த கருத்தை அவர்கள் தொண்டைகளில் திணித்தனர். ஓ, என்னே! ஓ, எப்படி…?
ஆனால் உண்மையாக தேவனை வழிபட்டவர்கள், உண்மையான பேராயர்கள், தேவனுடைய வார்த்தையில் நிலைகொண்டனர். அவர்கள் நிசாயா ஆலோசனை சங்கத்தின் போதும் அதில் நிலை நின்று, வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டனர். ஆம், ஐயா? அவர்கள் உள்ளே நுழைந்து இரத்த சாட்சிகளாக மரித்தனர். அவர்கள் கொல்லப்பட்ட போதும், வார்த்தையில் உறுதியாக நின்றனர். அவர்களுக்கு விக்கிரகாராதனை எதுவுமே வேண்டாம் என்றனர்.
71 பரி. பாட்ரிக் எப்பொழுதாவது ரோமன் கத்தோலிக்கராக இருந்தாரென்று யாராகிலும் எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அப்படி இல்லவே இல்லை! அவர் ரோமன் சபையை எதிர்த்து நின்றார். அவர் பரி. மார்டினின் மருமகன் (nephew) ஆவார். நான் அந்த பெண் எழுதிய… திருமதி ஹேசல்டைன் எழுதிய "நிசாயா ஆலோசனை சங்கத்திலிருந்து சில தொகுப்புகள்'' என்னும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அவள், பரி. மார்டினின் வாழ்க்கை வரலாறு என்னும் புத்தகத்தை எடுக்க ஆக்ஸ்போர்டின் நூலக அதிகாரியிடம் சென்றிருந்த போது, அவர், "ரோமன் சபையினால் அவர் பரிசுத்தவானாக (canonized) தீர்மானிக்கப்படவில்லை" என்றாராம். நிச்சயமாக இல்லை, அவர் ரோமன் சபைக்கு எதிர்த்து நின்றார். பரி. பாட்ரிக்கும் கூட. தேவனுடைய வார்த்தையில் உறுதியாய் நின்றவர்கள் தங்கள் சொந்த பள்ளிகளை நிறுவி, இத்தகைய காரியங்களினின்று விலகிச் சென்றனர்.
72 இன்றும் அவ்வாறேயுள்ளது என்று நாம் காண்கிறோம். ரோமன் சபை அந்த வட்ட வடிவமுள்ன பிஸ்கோத்தை இப்பொழுதும் வைத்து, கிறிஸ்து இறங்கி அதற்குள் குதித்துவிடுகிறார் என்று நம்புகிறது. கவனியுங்கள், குருவானவர் மாத்திரமே திராட்சை ரசத்தை பருகுகிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? (அவர்கள் ஒவ்வொருவரும் அதைப் பருக வேண்டுமென்றிருக்கும் போது. "அவர்கள் ஒவ்வொருவரிடமும் அதை கொடுத்தார்.") அஞ்ஞான வழிபாட்டில், பூசாரிகள் மாத்திரமே திராட்சை ரசத்தை பருகுகின்றனர். பாருங்கள்? நீங்கள் இன்னமும்… அது எல்லாமே அஞ்ஞான வழக்கம்! முற்றிலும் அப்படியே. அவர்கள் கவலை கொள்வதேயில்லை.
அவர்கள் உங்களிடம், "நான் உங்களிடம் வேதாகமத்தைக் குறித்து பேச மாட்டேன்" என்பார்கள். என்னிடம் பேசின அந்த குருவானவர், "திரு. பிரான்ஹாம் அவர்களே, நீங்கள் என்னிடம் வேதாகமத்தைக் குறித்து பேச முயல்கிறீர்கள். நான் சபையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன்.
நான், "வார்த்தையே தேவன்" என்றேன். சரி, இப்பொழுது, எல்லாம் சரி.
ஆகையால் தான் இன்று வரைக்கும் ரோமன் கத்தோலிக்கர் வழிபட ஆலயத்திற்கு செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றனர் என்று நாம் காண்கிறோம். அவர்கள், "தேவன் அந்த வட்ட ரொட்டியில் தான் இருக்கிறார். அவரே கூடாரத்தில் விருந்தளிப்பவர் (Host)" என்று கற்பிக்கப்பட்டுள்ளனர். பாருங்கள்? அது அஞ்ஞான வழக்கம் என்பதை உங்களால் காண முடியவில்லையா? நிச்சயமாக அது அஞ்ஞான வழக்கம்.
73 வார்த்தைக்கு முரணாக உள்ளதை ஏற்றுக் கொள்ளும் ஜனங்கள் எவரும் அதே அமைப்பில் உள்ளனர் என்பதை உங்களால் காண முடியவில்லையா? வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்தில் வேதாகமம் கத்தோலிக்க சபையை "வேசி"யென்று அழைக்கவில்லையா? பிராடெஸ்டெண்டுகளை அது தாய்… கத்தோலிக்க சபையை வேசிகளுக்கெல்லாம் தாய் என்று அழைக்கவில்லையா? எல்லாம் ஒன்றே. அவள் அசுத்தத்தினாலும் வேசித்தனத்தினாலும் நிறைந்த தன் போதகத்தை பாத்திரத்திலிருந்து குடிக்கக் கொடுத்தாள். அது உண்மையும் கலப்படமற்ற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருப்பதற்கு பதிலாக, வெறும் மனிதர்களைக் கொண்டுள்ளது.
"ஓ, தேவனே, எங்கள் மேல் இரக்கமாயிரும்" என்பதே என் ஜெபம்.
74 ஐரினேயஸ் இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறினதை இங்கு குறித்து வைத்திருக்கிறேன். அவர், "தேவனுடைய வார்த்தை, ஒரு பெரிய ராஜாவின் சிலையைச் செய்வதற்கென தேர்ந்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த ஆபரணத்துக்கு ஒப்பாயுள்ளது. ஆனால் ஸ்தாபனக் கோட்பாடுகள், கொள்கைகள், ஸ்தாபனங்கள் இந்த அழகான ஆபரணங்களை எடுத்து அதைக் கொண்டு ஒரு நாயின் சிலையை வடித்து, தேவனுடைய வார்த்தையை அறிந்திராத ஜனங்களை ஏமாற்றுகின்றன. தேவனுடைய வழிகளை கறைப்படுத்தவும் அதற்கு நிந்தையைக் கொண்டு வரவும் அவர்கள் இவ்வாறு செய்கின்றனர்" என்று கூறியுள்ளார். அல்லேலூயா!
உங்கள் ஸ்தாபனத்துக்கு பொருந்தும் வண்ணம், அதற்கேற்ப தேவனுடைய வார்த்தையை நீங்கள் கூறச் செய்ய முயன்றால், நீங்கள் அந்த பெரிய ராஜாவின் உடலிலிருந்து ஆபரணங்களை எடுத்து, அதிலிருந்து ஒரு நாய், நரி, அல்லது பன்றியின் சிலையை உண்டாக்குபவர்களாய் இருப்பீர்கள். வார்த்தையை அறிந்திராத ஜனங்களை நீங்கள் ஏமாற்றுகின்றீர்கள்.
அல்லேலூயா! சிலருக்கு, வார்த்தை மாமிசமானவரின் சார்பில் உறுதியாய் நிற்கும் தேவனுடைய ஆவி உள்ளது. (தேவனே, எங்கள் எண்ணிக்கையை அதிகரியும்). வார்த்தை, வார்த்தையைத் தவிர வேறொன்றுமில்லை. "வானமும் பூமியும் ஒழிந்து போம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை" என்று இயேசு குறிப்பிட்டுள்ள அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
75 "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுங்கள்" என்று சொல்லியிருக்க, அவர்கள் "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி" என்று அதிலிருந்து மூன்று கடவுள்களை உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் எல்லா விதமான கோட்பாடுகளையும் மற்றவைகளையும் ஏற்படுத்திக் கொண்டு, தண்ணீர் முழுக்குதலுக்குப் பதிலாக தெளித்தலை நுழைத்தனர். எல்லாமே! மகத்தான ராஜாவாகிய கிறிஸ்துவுக்கு ஆபரணங்களை அணிவிப்பதற்கு பதிலாக, மனிதனால் உண்டாக்கப்பட்ட சேற்றை அவர்மேல் பூசுகின்றனர். ஓ, அல்லேலூயா! அது மாமிசத்தில் தோன்றிய தேவனாகிய கிறிஸ்து!
அவர்கள் தேவனுடைய வழிகளை அசுசிப்படுத்துகின்றனர். அவர்கள் தலைமயிர் கத்தரிக்கப்பட்டு, அழகு சாதனங்களை உபயோகித்து, மானக்கேடான உடைகளை உடுத்தியுள்ள பெண்களை அனுமதிக்கின்றனர். ஆண்கள் பெண்மைத்தனம் கொண்டு, ஒரு ஸ்திரீ அவர்கள் மேல் அதிகாரம் செலுத்த அனுமதிக்கின்றனர். அவர்கள் சபைக்கு வந்து பங்கோ (bunco) பிங்கோக்கள் (bingos) போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர், கறைப்படுத்தும் எல்லா காரியங்களும். போதகர்கள் ஆற்றங்கரைக்கு நீச்சல் உடை அணிந்துள்ள நிர்வாணமான பெண்களுடன் நீச்சலுக்கு சென்று, புகை பிடித்து, அதே சமயத்தில் தேவனுடைய ஊழியக்காரர் என்று தங்களை அழைத்துக் கொள்கின்றனர். இந்த சரீரமாகிய ஆலயம் பரிசுத்த ஆலயமாக தேவனுக்குப் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமேயன்றி, இவ்வுலகத்தின் அசுத்தத்திற்கல்ல. அது உண்மை. அவர்கள் தேவனுடைய ஆபரணங்களை எடுத்து அதைக் கொண்டு ஒரு பன்றி, நரி, நாய் அல்லது ஒரு பூனையை உண்டாக்கி, அதை படிப்பறியாத அறியாமையுள்ள ஜனங்களுக்கு அளிக்கின்றனர்.
76 (நன்றி, டாக்டர், என்னிடம் ஒரு கைக்குட்டை உள்ளது. ஆனால் அதை உபயோகிக்க எனக்குத் தோன்றவில்லை).
ஆம், அதைதான் அவர்கள் செய்கின்றனர். ஐரினேயஸ் கூறினது உண்மையே.
இவையெல்லாவற்றையும் குறித்து தேவன் என்ன நினைக்கிறார்? "ஓ, இவையாவும் அவருக்கு பாதகமல்ல" என்று அவர்கள் கூறிகின்றனரா? அது அவருக்கு பாதகமுண்டு! அது பாதகமாயுள்ளது.
பின்னை ஏன் அவர் எரேமியாவிடம் இவைகளைக் குறித்து கூறினார்? அவர் ஏன் கூறினார்? அது பாதகமுண்டு. தேவனுக்கு ஒரு வழியுண்டு.
"என் பாதரட்சைகளை கழற்றுவதற்கு பதிலாக, என் தொப்பியை கழற்றுகிறேன்" என்று மோசே கூறியிருந்தால் என்னவாயிருக்கும்? அவன் அந்த தரிசனத்தைக் கண்டிருக்கமாட்டான். நீங்கள் தேவனுடைய வழிக்கு வரவேண்டும். தேவனுக்கு ஒரு பிரத்தியேக வழியுண்டு.
77 அதேக காரியங்களை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு வேத பாகத்துக்கு மாத்திரம் இப்பொழுது நாம் வேதாகமத்தை திருப்புவோம். நான் அநேக வேதவாக்கியங்களை இங்கு எழுதி வைத்துள்ளேன். இப்பொழுது ஒரு நிமிடம் எண்ணாகமம் 25க்கு திருப்புவோம். எண்ணாகமம் 25. அது தேவனுக்கு பாதகமுண்டா இல்லையா என்று பார்ப்போம். இந்த கோட்பாடுகள், கொள்கைகள் போன்றவை அவருக்கு பாதகமுண்டா என்று பார்ப்போம். அவர் நல்ல தேவன். இவைகளைக் காணாதவர் போல் விட்டுவிடுவார் என்று நீங்கள் கூறலாம். அவர் அப்படி செய்வதில்லை. அவர் ஒரு கோட்டை வரைந்து, ஒரு தூக்கு நூலை தொங்கவிடுகிறார். நீங்கள் அதற்கு வரவேண்டும்.
இஸ்ரவேல் சீத்திமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத் தொடங்கினார்கள். (கவனியுங்கள்!)
அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டார்கள்.
இப்படி இஸ்ரவேலர் பாகால் பேயோரைப் பற்றிக் கொண்டார்கள்: அதனால் இஸ்ரவேலர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
(அப்படிப்பட்டவர்களுக்கு ஜெபத்தை ஏறெடுக்க வேண்டாம் என்று அவர் கூறினதில் வியப்பொன்றுமில்லை.)
கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலை விட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக் கொண்டு, அப்படி செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப் போடும்படி செய் என்றார்.
அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால் பேயோரைப் பற்றிக் கொண்ட உங்கள் மனிதரைக் கொன்று போடுங்கள் என்றான்.
78 "அவர்கள் ஒவ்வொருவரையும்!" தேவன் தேவனாயிருக்க விரும்புகிறார். அவர் தேவனாயிராவிட்டால், அவர் இரண்டாவது ஸ்தானத்தை வகிக்கமாட்டார். அவர் பாகாலை (மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாட்டை, ஒரு மனிதனின் தத்துவத்தை, ஸ்தாபனத்தின் கோட்பாடுகளை அல்லது கருத்துக்களை) தமது குறுக்கே நிற்க அனுமதிக்கமாட்டார். அவர் தேவன், அவர் இந்த கற்களினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார். அவருக்கு உங்கள் ஸ்தாபனங்கள் அவசியமில்லை. அவருக்கு உங்கள் பெரிய சங்கங்களும், பள்ளிக் கூடங்களும் அவசியமில்லை. அவர் கையில் கிடைக்கக் கூடிய ஒன்றுமில்லாத ஏதாவதொன்றை அவர் எடுத்து ஜீவ சுவாசத்தை அதற்குள் ஊதுகிறார். அப்பொழுது அது அவருக்கு ஊழியம் செய்யக் கூடிய ஒன்றாக மாறுகிறது. அது தான் அவரை தேவனாக்குகிறது. நிச்சயமாக, அது தேவனுக்கு பாதகமுண்டு.
நீங்கள், "அது தேவனுக்கு பாதகமில்லை" என்கிறீர்கள். இது பாதகமுண்டு. நிச்சயமாக, அது பாதகமுண்டு.
79 மகத்தான போப் லியோ, 440 முதல் 461 ஆண்டு வரை அரசாண்டான். ஓ, அவன் செய்து வருவதெல்லாம் சரியே என்று அவன் எண்ணியிருந்தான். அவன் சபைக்கு வந்து… அவனுக்கு முன்பு விக்டர் என்பவன், அவனும் கொடியவன். அவன் அங்கு வந்து கிறிஸ்தவர்களைக் கொன்றுபோட்டான்.
யார் இதையெல்லாம் ஆரம்பித்து அதை சட்ட பூர்வமான கொலை என்று கூறினது? யார் தெரியுமா? ஹிப்போவின் பரி. அகஸ்டின் அவன் தான் இதை செய்தான்
ஒருமுறை பரி. அகஸ்டினுக்கு பரிசுத்த ஆவியினால் நிறைந்து. பெரிய மனிதனாக ஆக தருணம் அளிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. அவன் பிரான்சு தேசத்திலுள்ள லயான்ஸ் என்னுமிடத்தில் இருந்த அந்த மகத்தான பள்ளியின் புழக்கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அந்த பள்ளியில் தான் ஐரினேயசும், பரி. மார்டினும் கற்று கொடுத்தனர். அவன் புழக்கடையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவி அவனிடம் வந்தார். ஆனால் அவன் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான்.
பின்பு அவன் எதுவாக மாறினான்? அவன் தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் இரட்டிப்பாக நரகத்தின் பிள்ளையாக, அவன் ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவுக்குச் சென்று, அவனுடைய பள்ளியை நிறுவினான். அது…
"எனக்குக் காண்பியுங்கள்"
80 உங்களை நான் சரித்திரத்துக்கு கொண்டு செல்ல முடியும். அவன் தான், ரோம சபையின் கொள்கைகளுடன் இணங்காமலிருக்கும் எந்த மதத் துரோகியையும் கொன்று போடுவதில் தவறொன்றுமில்லை என்று உத்தரவிட்டான். இந்த ஹிப்போவின் பரி. அகஸ்டின் அது உண்மையென்று அறிந்துள்ள வேத அறிவாளி அல்லது சரித்திரம் படித்தவர் யாராகிலும் இங்கிருந்தால், உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? ஆம், பாருங்கள், நிச்சயமாக. அது தான். ஹிப்போவின் பரி. அகஸ்டின் தான், "ரோம சபையுடன் இணங்காத மதத் துரோகிகளைக் கொன்று போடலாம்" என்னும் உத்தரவு பிறப்பித்தான். வேதத்திலிருந்து விலகிச் சென்று, அஞ்ஞான போதகத்துக்கு சம்மதம் தெரிவித்து, சூரிய தேவன் ஆராதனையை நிறுவுதல் கிறிஸ்தவ மார்க்கம் இந்நிலையையடைந்த காரணம்…
81 கிறிஸ்துமஸை நீங்கள் எங்கு பெற்றுக் கொண்டீர்கள் தெரியுமா? கிறிஸ்து ஏப்ரல் மாதம் பிறந்தார். ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? சூரியனும் அதன் கிரகங்களின் அமைப்பும் (Solar System) அகன்று செல்லும் போது, இந்நேரத்தில் தாமதித்துக் கொண்டே வருகிறது. டிசம்பர் இருபது முதல் இருபத்தைந்தாம் தேதி வரை ஒவ்வொரு நாளும் சற்று குறுகிக் கொண்டே வந்து, இருபத்தைந்தாம் தேதி சூரிய பகவானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. அங்கு ஐந்து நாட்கள் உள்ளன. அப்பொழுது தான் அவர்களுக்கு ரோமன் சர்க்கஸ் இருந்தது. அவர்கள் சூரிய பகவானின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். இப்பொழுது நாம் எதை பெற்றுள்ளோம் என்று பார்த்தீர்களா? "சூரிய தேவன் (Sun God) என்பதற்கு பதிலாக நாம் தேவனுடைய குமாரன் (Son of God) என்று எடுத்துக் கொள்வோம்'' என்றனர். அது தொடக்கத்திலிருந்தே அஞ்ஞான வழக்கம். ஜனங்கள் உயரமான காலணிகளை அணிந்து கொண்டு, தெருக்களில் தங்கள் உடலை ஆட்டிக் கொண்டு, அங்காடிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
அன்றொரு நாள் என் மனைவி என்னிடம் கூறினாள். இருவர் பேசிக் கொண்டார்களாம். ஒருவர் மற்றவரிடம், என் தந்தைக்கு கிறிஸ்துமஸுக்கு என்ன வாங்கிக் கொடுப்பதென்றே தெரியவில்லை. ஒரு சகோதரன் அவருக்கு கால் குப்பி விஸ்கி வாங்கிக் கொடுக்கப் போகிறான். மற்றொருவன் அவருக்கு ஷாம்பேயன் மது வாங்கித் தரப் போகிறான். வேறொருவன் அவருக்கு கைத்தடி ஒன்றை வாங்கிக் கொடுக்கப் போகின்றான் என்றாராம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். அஞ்ஞான, பிசாசு வழிபாடு! எல்லாம் சரி.
82 அகஸ்டின் உத்தரவு பிறப்பித்தான். நீங்கள் ஸ்மக்கர் எழுதியுள்ள "மகிமையுள்ள சீர்திருத்தம்'' என்னும் புத்தகத்தை படிப்பீர்களானால், அதில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ஹிப்போவின் பரி. அகஸ்டின் கத்தோலிக்க சபைக்கு இந்த உத்தரவை பிறப்பித்த நாள் முதற்கொண்டு, அந்த அஞ்ஞான சபையின் கொள்கைகளை ஏற்க மறுத்தவர் எவரையும் அவர்கள் கொன்று போடுவதற்கு, அது கதவுகளை விரிவாய் திறந்து கொடுத்தது. பரி. அகஸ்டின் காலம் முதல் அதாவது கிறிஸ்துவுக்குப் பின் முன்னூறு ஆண்டுகள் தொடங்கி ஐயர்லாந்தின் மகா படுகொலை (the great massacre) உட்பட, 1850ம் ஆண்டு வரைக்கும், எட்டு கோடி அறுபது லட்சம் பிராடெஸ்டெண்டுகள் கத்தோலிக்க சபையால் கொள்ளப்பட்டனர். அது ரோம இரத்த சாட்சிகளின் பட்டியலில் உள்ளது. "எட்டு கோடி அறுபது லட்சம்.'' சரித்திரக்காரனுடன் விவாதியுங்கள். அவன் தான் இதை எழுதியுள்ளான். அவன் சொற்களை திரும்பக் கூறுகிறேன்: "கத்தோலிக்க கொள்கையுடன் இணங்க மறுத்த ஒவ்வொருவரையும்''.
"கத்தோலிக்கம்" அல்ல. கத்தோலிக்கம் என்னும் பெயருக்கு அவர்கள் தகுதியற்றவர்கள். அவர்கள் ரோம அஞ்ஞானிகள்.
அந்த விலையுயர்ந்த மக்கள் அல்ல. அங்கு லட்சக்கணக்கான மக்கள் மிகவும் உத்தமமாக… விக்கிரகாராதனைக்காரன் எவனும் அப்படியே இருக்கிறான். அவர்கள் தேவனை வழிபடுவதாக எண்ணுகின்றனர். ஆனால் வார்த்தையின்படி, அவர்கள் எல்லாவிடங்களிலும் விக்கிரகங்களைக் கொண்டுள்ளனர். பாருங்கள்!
83 சரி, அது ஒரு கொள்கை, ரோமக் கொள்கைகள். கவனியுங்கள், இங்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதை கடந்து சென்றுவிட்டேன்.
1640ம் ஆண்டு ஐயர்லாந்தில் படுகொலை ரோம நீதிபதிகள், குருவானவர்கள் தலைமையில் நடந்தபோது, பரி. பாட்ரிக்கின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்ட ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பரி. பாட்ரிக் ரோமன் கத்தோலிக்கராக இருந்திருந்தால் அவர்களுடைய சொந்த ஜனங்களை அவர்கள் ஏன் கொல்ல வேண்டும்? கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர் போன்றவர் இருந்தனர். அது உண்மை. இரத்த சாட்சிகளின் பட்டியலில் ''ஒரு லட்சம் பேர்'' அவர்களுடைய போதகத்துடன் அவர்கள் இணங்காத காரணத்தால் கொலை செய்யப்பட்டனர்.
நான் வட ஐயர்லாந்திலுள்ள பரி. பாட்ரிக்கின் ஆலயங்கள் சிலவற்றிற்கு சென்றிருக்கிறேன். ஆம் ஐயா. அவைகளைக் காணும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அது ஒரு பெரிய, பழைய கப்பலின் உடற்பகுதி (hull). அங்கு விக்கிரகங்கள் நிறுவப்பட்டு, பாதங்களில் பானகம் வார்க்கப்பட்டு, அந்த விக்கிரகங்களுக்குள் வந்து நுழைந்து கொள்ள ஜெபம் ஏறெடுக்கப்படுவது போன்ற ஒன்றுமில்லை. "மரியாளே, வாழ்க! தேவ மாதாவாகிய மரியாளே''. அவர்கள் அஸ்தரோத்துக்கு செய்தது போன்றே (மந்திரத்தால் கட்டுப்படுத்துதல்) மரியாளின் ஆவிக்குச் செய்ய முற்படுகின்றனர்.
84 இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கத்தோலிக்க சபை ஒரு புது கொள்கையை பிரகடனம் செய்தது. அதாவது, மரியாள் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து பரலோகத்துக்கு ஏறிச் சென்றாள் என்று. எத்தனை பேருக்கு அது நினைவிருக்கிறது? ஓ, உங்கள் எல்லோருக்குமே. செய்தித்தாள்கள் அந்த செய்தியை நிறைய வெளியிட்டன. கொள்கைகள்! அது இப்படிப்பட்ட கொள்கைகளால் கட்டப்பட்டுள்ளது, அதில் இம்மியளவு உண்மை எங்குமில்லை.
பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்களும் தேவனுடைய வார்த்தையை ஏற்க மறுத்து, அவர்களைப் போலவே மோசமாயிருக்கிறீர்கள். கத்தோலிக்க சபைக்கு தனிப்பட்ட கொள்கை இருப்பது போல், பிராடெஸ்டெண்டு சபைக்கும் தனிப்பட்ட கொள்கை உள்ளது. நாம் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பும் வரைக்கும் நாம் அனைவருமே தவறாயிருக்கிறோம்.
85 அசெம்பிளிஸ் ஆஃப் காட், ஃபோர் ஸ்கொயர், பெந்தெகொஸ்தே ஒருத்துவக்காரர், திரித்துவக்காரர், நீங்கள் யாராயிருந்தாலும், தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புங்கள்! இந்த ஸ்தாபன விக்கிரகங்களை, ஸ்தாபன 'ஸ்பின்ஸுகளை' (Sphinxes) விட்டு விலகுங்கள் ('ஸ்பின்ஸ்க்' என்பது கிரேக்க புராணங்களில் கூறப்பட்டுள்ள, ஸ்திரீயின் முகமும், சிங்க உடலும், இறக்கைகளும் கொண்ட கொடிய இராட்சத பிராணி - தமிழாக்கியோன்). அவர்கள் இந்த ஸ்தாபன விக்கிரகங்களுக்குள் தங்களை மந்திரத்தினால் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள் (bewitch) (பிசாசின் ஆவி), ஸ்தாபனம் ஒரு விக்கிரகமே என்று உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் ஒருவரைப் பார்த்து, "நீங்கள் கிறிஸ்தவரா?'' என்று கேட்டால்,
"நான் பிரஸ்பிடேரியன்''
"நீங்கள் கிறிஸ்தவரா?''
"நான் மெதோடிஸ்டு''
''நீங்கள் கிறிஸ்தவரா?''
''நான் பெந்தெகொஸ்தேயினன்''.
நீங்கள் ஒரு பன்றி, அல்லது நாய், அல்லது நாற்றமெடுக்கும் அமெரிக்க பூனையாக (skunk) இருந்தால், எவ்வாறு அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையோ, அது போன்று தான் இதுவும். அது உண்மை. இன்றைக்கு நமக்கு அவசியம் தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புதல்!
86 வட ஐயர்லாந்திலிருந்த கடையில் பணிபுரிந்தவர்கள் விலையுயர்ந்த மக்கள். பரி பாட்ரிக்கின் பள்ளி வட ஐயர்லாந்தில் இருந்தது. அவருடைய பெயர் பாட்ரிக் அல்லவென்று உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பெயர் சுகாடஸ் (Suscat) அவர் சிறுவனாயிருந்த போது, அவரைக் கடத்தி சென்றார்கள். அவருடைய சகோதர்கள் கொல்லப்பட்டனர். அவர் வீடு திரும்பினார். எப்படியெனில், அவர் பன்றிகளைத் துரத்த நாய்களைப் பழக்கியிருந்தார். அவர் அப்படி செய்தபோது, அவர்கள்… அவருடைய பெற்றோரிடம் செல்ல அவர் வழி கண்டு பிடித்தார். அவர் ஒரு பள்ளியைத் தொடங்கினார். வட ஐயர்லாந்திலிருந்த அந்த பள்ளி போப்பாண்டவரை மிகப் பிரதான குருவாக (Supreme vicar) ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் தேவனுடைய வார்த்தையில் நிலை நின்றனர். அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்தவானாகிய பரி. பாட்ரிக்கை தேவன் ஆசிர்வதிப்பாராக! உயர்ந்த மனிதர்.
87 ''பரி பாட்ரிக் ஐயாலாந்திலுள்ள பாம்புகள் அனைத்தையும் துரத்தினார்'' என்று அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். நீங்கள் சரித்திரம் படித்து அது என்னவென்பதை அறிந்து கொள்ளுங்கள். பரி. பாட்ரிக் அந்நிய பாஷை பேசுவதில் நம்பிக்கை கொண்டிருந்தார். சர்ப்பங்களை எடுத்து, சாவுக்கேதுவான யாதென்றைக் குடித்தாலும் அது அவரை சேதப்படுத்தாது என்று அவர் விசுவாசித்தார். அவர் சர்ப்பத்தை கையிலெடுத்து வழியிலிருந்து தூர எறிவதை ஜனங்கள் கண்டபோது, "அவர் சர்ப்பங்களை ஐயர்லாந்தை விட்டு துரத்தினார்'' என்றனர் ஏனெனில் சர்ப்பங்களை எடுத்தால், யாதொன்றும் அவரைச் சேதப்படுத்தாது என்னும் உறுதியான விசுவாசத்தை அவர் கொண்டிருந்தார். ஆம், ஓ, நிச்சயமாக.
88 அவர்களுக்கு இப்பொழுதுள்ள பெரிய ஆலயங்கள் கிடையாது. ஒரு பரிசுத்தவான் ஐரினேயஸ் இன்றிருந்தால் என்ன செய்வார்? ரோமன் கத்தோலிக்கர்கள் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து பெரிய ஆலயங்களைக் கட்டுகின்றனர். லட்சக்கணக்கான டாலர்கள் பெறுமான சிலைகளை வைக்கின்றனர். பிராடெஸ்டெண்டுகளும் அவ்வாறே செய்கின்றனர். இவைகளை பரி. பாட்ரிக் இன்று கண்டால் என்ன செய்வார்?
நான் அன்றொரு நாள் ஒன்றைக் கூறினேன். அது எல்லோரையும் ஸ்தம்பிக்கச் செய்துவிட்டது. அதனால் தான் இந்த ஒலி நாடாவை நான் வெளியில் அனுப்பப் போவதில்லை. அவர்களை தனியே விட்டுவிடுங்கள். அவர்கள் குருடருக்கு வழி காட்டுகிற குருடராயிருக்கின்றனர். அவர்கள் குழியில் விழட்டும். அது ஒன்று மாத்திரமே நீங்கள் செய்ய முடியும், பாருங்கள் 'பீட அழைப்புகள்' என்பது வேதாகமத்தில் இல்லையென்று நான் அவர்களிடம் எடுத்துரைத்த போது…
89 (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)… அவருடைய பரிசுத்தம். அவருடைய மரணத்துக்கு நம்மை தாழ்த்தி, நாம் ஒன்றுமில்லையென்று எண்ணும் போது, பரிசுத்த ஆவி வந்து நம்மை உயர்த்துகிறார். நாம் நம்மை நம்புவதில்லை. ஏனெனில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் அவருடன் கூட நாம் எல்லாவற்றையும் செய்ய முடியும்.
90 நாம் அவருடைய சாயலில், ஜீவனுள்ள தேவனுடைய ஜீவனுள்ள சாயலில் இருக்கிறோம். நாம் என்ன… நீங்கள் உங்களை தேவனிடத்தில் சமர்ப்பித்து. தேவன் உங்களுக்குள் வரும்போது, அது உங்களை என்னவாக செய்கிறது? தேவனுடைய ஜீவனுள்ள உருவமாக (image). ஏதோ ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ள உயிரற்ற சிலையல்ல. அல்லது வாஷிங்டனில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள சபைகளின் சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஸ்தாபனமல்ல. இல்லை, அது உயிரற்ற கோட்பாடு. ஆனால் நாமோ ஜீவனுள்ள உருவம் - தனிப்பட்ட நபர் ஒவ்வொருவரும்.
91 அன்று ஒருவர் கற்பித்துக் கொண்டிருந்தார், அல்லது ஒரு சிறு குறிப்பு எழுதி வைத்திருந்தார். யாரோ ஒருவர், "ஒரு மனிதன் இரட்சிக்கப்படாமல்… ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு, அவனுடைய மனைவி இரட்சிக்கப்படாமலிருந்தால், அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல முடியுமா? அவர்கள் இருவரும் ஒருவராயிருப்பதால், மனைவி போகாமலிருப்பது கூடாத காரியமாயிற்றே'' என்று கேட்டாராம். அர்த்தமற்றது இயேசு "இரண்டு பேர் கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பார்கள் ஒருவரை ஏற்றுக் கொள்வேன்; மற்றவரை கைவிடுவேன்'' என்று கூறியுள்ளார். அது தனிப்பட்டோரின் விவகாரம். அது உங்களுக்கும் தேவனுக்குமிடையேயுள்ள விவகாரம், உங்கள் சரீரத்தை அர்ப்பணித்தல். அது அம்மா, அப்பா, பிள்ளைகள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாமல் போனாலும். ஆமென்!
ஓ, தேவனே! அழிந்து போகக் கூடிய, அசுத்தமான இந்த உலகம்; இந்த அசுத்தமான சபைகள்… சபைகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவை; இந்த அசுத்தமான ஸ்தாபனங்கள்; தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ள இந்த அசுத்தமான கோட்பாடுகள், ஓ தேவனே, சிறுமையும் எளிமையுமான ஒருவரை எங்கிருந்தாவது கொண்டு வந்து இவைகளை சுத்தப்படுத்தி, உன்னதங்களுக்கு அவர்களை உயர்த்தி, நீர் சர்வ வல்லமையுள்ள தேவன் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தும். ஆமென்! அது எவ்வளவு அசுத்தமாகிவிட்டது!
92 நாம் அவருடைய பரிசுத்தத்துக்குப் பங்காளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். நாம் அவருடைய சாயலைப் பெற்று, ஜீவனுள்ள தேவனின் ஜீவிக்கிற உருவங்களாக இருக்கிறோம். நாம் நமக்கு மரித்து, அவருடன் உயிரோடெழுப்பப்பட்டு (இப்பொழுது கவனியுங்கள், இதை கவனியுங்கள்) மறுபடியுமாக அவருடைய வார்த்தை நமக்குள் மாமிசமாகியுள்ளது. (ஓ, சகோ. நெவில்!) பாருங்கள்! அது என்ன? ஏதோ புராணங்களில் காணப்படும் கற்பனையில் உருவாக்கப்பட்ட தேவன் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதல்ல, ஆனால் ஜீவனுள்ள தேவன். ஜீவனுள்ள தேவன் என்றால் என்ன? உங்களுக்குள் இருக்கும் வார்த்தை தன்னை உண்மையுள்ளதாகக் காண்பிக்கிறது. வ்யூ! தேவனுக்கு மகிமை! ஓ, நான் உருளும் பரிசுத்தன் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். ஒருக்கால் நான் அப்படித்தான் இருக்கிறேன். ஓ, சகோதரனே, உன்னால் அதை காண முடிகிறதா? எல்லா ஸ்தாபனங்களின் மேலும் வெற்றி சிறந்து, எல்லா அஞ்ஞானத்தின் மீதும் வெற்றி சிறந்து, ஜீவனுள்ள தேவன் ஜீவனுள்ள ஆலயத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார். தேவனுடைய வார்த்தை (அது தேவன்) உங்களில் மாமிசமாகியுள்ளது. ஏன்? நீங்கள் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, கிறிஸ்து இயேசுவுக்குள் எல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்திருக்கிறீர்கள். ஆமென்! ஓ, அது எனக்கு பிரியம். சிலவற்றை நான் கூறாமல் விட்டுவிட்டு செல்ல வேண்டியதாயுள்ளது.
93 இப்பொழுது கவனியுங்கள். அவருடைய விசுவாசிகளில் மிகச் சிறியவனும் கூட நீங்கள் எவ்வளவு காலமாக, எவ்வளவு சிறியவர்களாக, என்னவாக இருந்தாலும், அவருடைய விசுவாசிகளில் மிகச் சிறியவனும் கூட (அவருக்குள்) எல்லா பொல்லாங்கையும் தன் காலடியில் கொண்டிருக்கிறான். பாருங்கள்?கவனியுங்கள்! கிறிஸ்துவே சரீரத்தின் தலையாயிருக்கிறார். அது சரியா? தலை எங்குள்ளதோ, சரீரமும் அதன் கூட உள்ளது. மகிமை! என் தலை எங்கெல்லாம் செல்கின்றதோ, அதனுடன் என் சரீரத்தையும் கூட்டிச் செல்கின்றது. அது போன்று இயேசு எங்கிருக்கிறாரோ, சபையும் அவருடன் உள்ளது. ஆமென்! அவர் தமது வார்த்தையை விட்டு விலகுவதில்லை. அவர் வார்த்தையில் நிலைநின்று, அதை கவனமாய் பாதுகாத்து, அதை வெளிப்படுத்துகிறார். அவருடைய சபை அவருடன் கூட உள்ளது.
94 நீங்கள், "ஆனால் சகோ. பிரான்ஹாமே, நான் எல்லோரைக் காட்டிலும் மிகச் சிறியவன்'' எனலாம். அது தான் பாதங்களிலுள்ள குதிங்கால்கள். அவர் உங்களுடன் கூட எல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்துள்ளார். நீங்கள் அவருடைய பாதங்களின் குதிங்கால்களாக இருந்தாலும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒவ்வொரு வியாதியும், ஒவ்வொரு பிசாசும், ஒவ்வொரு வல்லமையும், மரணமும் கூட உங்கள் பாதங்களின் கீழ் உள்ளது. உங்களின் கீழ். மகிமை! எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகிவிட்டது என்று இன்று காலை எனக்குத் தோன்றவில்லை. நான் கூறுவது சத்தியம், சகோதரனே, இதை மாத்திரம் இந்த சபை புரிந்து கொள்ளும்படி என்னால் செய்ய முடியுமானால், நாம் வெற்றி சிறந்த ஒரு சபையாயிருப்போம். விசுவாசிகள் அவருக்குள், எல்லா பொல்லாப்பும் அவருடைய காலடியில், ஓ, மகிமை!
நான் எழுதி வைத்துள்ள குறிப்புகளை சற்று பரிசோதித்துவிட்டு, அடுத்த முறை தொடருவேன்.
கவனியுங்கள், இதை கவனியுங்கள். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, எனக்கு வல்லமை கிடையாது'' எனலாம். எனக்கும் அப்படித்தான். எனக்கும் வல்லமை கிடையாது. "சகோ. பிரான்ஹாமே, நான் பெலவீனன். நானும் அப்படித்தான். ஆனால் என் பெலத்தின் மேல் நான் சார்ந்திருக்கவில்லை. அது என்னுடைய பெலன் அல்ல. என் அதிகாரத்தின் மேல் நான் சார்ந்திருக்கிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் மேல். நான் பெலனுள்ளவன் அல்ல, எனக்கு பெலன் கிடையாது. அவர் பெலனுள்ளவர், நான் அவருடையவன்.
95 இது இவ்வாறுள்ளது. உதாரணமாக, லூயிவிலிலுள்ள ஃபோர்த் அண்டு பிராட்வே தெருவின் வழியாக, ''ஜும், ஜும், ஜும், ஜும்" என்று கார்கள் மிகவும் வேகமாக மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே பயந்து ஓடிவிடுகின்றனர். ஆனால் ஒரு சிறு மனிதன் அங்கு நடந்து சென்று கையை உயர்த்துகிறான். சகோதரனே, ''பிரேக்குகள் போடப்பட்டு கார்கள் சடுதியாக நிற்கின்றன. அந்த சிறு மனிதனுக்கு அந்த கார்களில் ஒன்றைக் கூட பிடித்து நிறுத்தக் கூடிய சக்தி கிடையாது. ஆனால் அவனுக்கு அதிகாரம் உள்ளது. மகிமை! அது அவனுடைய வல்வமை அல்ல. அந்த கார்களில் ஒன்று அவனை இடித்தால், அது அவனைக் கொன்றுபோடும். ஆனால் அவன் கையுயர்த்தட்டும்! ஏன்? காரோட்டிகள் அவன் அணிந்துள்ள சீருடையை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
ஓ, சகோதரனே, அவர்கள் அந்த சீருடையை அடையாளம் கண்டு கொள்கின்றனர். உடனே 'பிரேக்'குகள் போடப்படுகின்றன. ஏன்? அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பாருங்கள். அவனுக்கு பின்னால் ஆதாரமாக இருப்பது என்னவென்று பாருங்கள். பட்டினம் முழுவதுமே அவனை ஆதரிக்கிறது. நகரத்தின் சட்டங்கள் அவனை ஆதரிக்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாக அந்த சீருடை அமைந்துள்ளது. அவன் வித்தியாசமான ஒருவன். ஆம் ஐயா. ஏனெனில் அவன் ஒரு அதிகாரி.
அவன், "நில்" என்று சத்தமிடுகிறான். அந்த கார்களில் ஒன்று அவனுக்கு கீழ்ப்படியாமல் 'ஜும்' என்று செல்லட்டும் பார்க்கலாம். அவர்கள் அப்படி செய்யாமலிருப்பது நல்லது. அவனை ஆதரிப்பது என்னவென்று பாருங்கள். அவர்கள் கீச் என்று 'பிரேக்'கை போட்டு காரை நிறுத்துவார்கள். அவன் ஒன்றையும் கூற வேண்டிய அவசியம் கூட இல்லை. அவன் கையுயர்த்தினால் போதும். அது கிரியை செய்கிறது, நிச்சயமாக. அவனுடைய அதிகாரம் சட்டத்தை அமுல்படுத்துவதில் அமைந்துள்ளது. அது அவனை ஆதரிக்கிறது. அவனை பார்த்தால், அவன் ஒரு பெலவீனன். ஆனால் அவனைத் தாங்குவது எது? அவன் அணிந்துள்ள நட்சத்திரம்… அவனுடைய உடை. அவன் சீருடையை அணிந்திருக்கிறான்.
96 அது தான்… விக்கிரகம் அல்ல, தனிப்பட்ட நபர் அணிந்து கொள்ள வேண்டியவராயிருக்கிறார். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை நாம் அணிந்து கொள்வோம். இரட்சணியம் என்னும் தலைச்சீரா, விசுவாசம் என்னும் இந்த பெரிய கேடகம் (இந்த கதவின் அளவுக்கு). ஓ, சகோதரனே, அவன் யாரென்பது அல்ல, அவன் யாருக்கு பிரதிநிதியாக இருக்கிறான் என்பதே.
அது தான் அந்த அதிகாரி… அது அங்கு நின்று கொண்டிருக்கும் அந்த சிறு மனிதன் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். ஆனால் அவன் யாருக்கு பிரதிநிதியாயிருக்கிறான் என்பதே!
நமது ஆயுதம் இயேசு கிறிஸ்துவே. ஆம், ஐயா. அதை காணும்போது எல்லா பிசாசுகளும் பிரேக்குகள் போடுகின்றன. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அது உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆமென்! அவருடைய உயிர்த்தெழுதலின் சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொண்டு தேவனுடைய சிங்காசனத்திலிருந்து நேரடியாகப் புறப்பட்டு வருவதை அவை காணும்போது! ஆமென்.
நீங்கள் பெலவான்கள் என்பதனால் அல்ல. நீங்கள் ஒன்றுமில்லை. ஆனால் உங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு உங்களை ஆதரிப்பதே முக்கியம் வாய்ந்தது. ஏன்? நீங்கள் மரித்திருக்கிறீர்கள். நீங்கள் இராணுவத்தில் சேர்ந்துவிட்டீர்கள். நீங்கள் காவற்படையில் சேர்ந்துவிட்டீர்கள். நீங்கள் சட்டத்தை அமுல்படுத்தி, பிசாசுகளை கட்டுப்படுத்தப் போகின்றீர்கள். அது உண்மை. நீங்கள் காவற்படையில் இருக்கின்றீர்கள். காவற்படை முழுவதுமே உங்களை ஆதரிக்கிறது. நீங்கள் மரித்தவர்களாக எண்ணப்படுகின்றீர்கள். நீங்கள் ஒன்றுமில்லை, நீங்கள் ஒன்றையும் நிறுத்த முடியாது. ஆனால் நீங்கள் உயிரோடெழுந்து கிறிஸ்து இயேசுவில் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருப்பதால், உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிசாசு அதை கண்டு கொள்கிறது. அப்பொழுது கைகள் உயர்த்தப்படும் போது எல்லாமே 'பிரேக்கு'கள் போட்டு நிறுத்துகின்றன.
97 ஒரு முறை நீதிமன்றத்தில் பரி. மார்டின்… அங்கு மனிதன் ஜனங்களை காயப்படுத்திக் கொண்டிருந்தான் (ஒரு பிசாசு). அவன் ஜனங்களை கடித்து, பெரிய துண்டு மாமிசத்தை வெளியே எடுத்தான். ஜனங்கள் பயந்து ஓடினர். அவன் அவர்களைக் கொல்ல முயன்றான். ஒரு கையளவு வெளியே இழுத்து… அவனுக்கு பெரிய தந்தங்கள்… பற்கள் இருந்தன. அவன் குழப்பத்தையுண்டாக்கி, வாய் நிறைய மாமிசத்தைக் கடித்து துப்பிக் கொண்டிருந்தான்.
98 (ஒலி நாடாவில் காலி இடம் ஆசி)… ஆராதிப்பவர்களிடையே கண்டார். அவர் வரப்போகும் நாட்களை முன் நோக்கி, அவரே தம்முடைய சொந்த சபையாகிய லவோதிக்கேயா சபையிலிருந்து வெளியே துரத்தப்படுவார் என்றும், அப்படித்தான் இருக்கும் என்றும் அவர் அறிந்திருந்தார். அவர், ''இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்'' என்றார். (வெளி. 3:20). அந்த ஸ்தாபனம் அவரை வெளியே துரத்தினது. அவர்கள் அதை இன்று செய்துவிட்டனர். ஆயினும் அவர் வாசற்படியில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறார்.
ஓ, தேவனே, நாங்கள் வெற்றி சிறந்த சபையில் இருக்கிறோம் என்பதை அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் உணர்ந்து கொள்வார்களாக! நாங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம். நாங்கள் இந்த உலகத்தின் காரியங்களுக்கு மேலாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்.
99 நம்முடைய பெண்கள் ஏன் தலைமயிரை கத்தரிக்க விரும்ப வேண்டும்? தேவனே, ஏதோ தவறுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. அவர்கள் ஏன் இனக் கவர்ச்சி ஆடைகளை அணிந்து தங்கள் உடல்களைக் காண்பிக்க வேண்டும்? நமது ஜனங்கள் ஏன் எல்விஸ் பிரஸ்லி போன்ற மனிதன் அல்லது 'ரிக்கி'களில் வேறொவன் ஒரு பழைய 'கிட்டார்'ரை வைத்துக் கொண்டு, கிரீச் சென்று சப்தமிடும் (squeaky) இசையைப் பாடி, நமது வாலிபப் பெண்கள் இடுப்பைக் குலுக்கி நடனமாடி தங்கள் கீழ் உடைகளை களைய வைக்கும் அத்தகைய இசையைக் கேட்க இருதயத்தில் பசி கொள்ள வேண்டும்? தேவனே, இப்படியிருந்தும் அந்த பையன் (எல்விஸ் பிரஸ்லி - தமிழாக்கியோன்) தான் பெந்தெகொஸ்தேயினன் என்று உரிமை பாராட்டிக் கொள்கிறான், ஓ, தேவனே, அது என்ன… பாட் பூன் என்னும் பாடல்களைப் பாரும். அவன் மோசமான, அசுத்தமான காரியங்களைச் செய்து, தான் கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்தவன் என்று உரிமை பாராட்டுகிறான்… ஓ தேவனே, 'தன்னை கிறிஸ்துவின் சபையைச் சேர்ந்தவன்' என்றழைத்துக் கொள்கிறான்.
100 தேவனே, அதிகாரத்தின் சின்னம் ஒரு ஸ்தாபனத்தின் பெயரல்ல. அது வல்லமை, தனிப்பட்ட ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் காணப்படும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமை. தேவனே, இன்று காலை இங்குள்ள மக்கள் அதில் பிரவேசிக்க முயற்சி செய்வார்களாக. ஆண்டவரே, இந்த ஒலிநாடா தேசத்தினுள் சென்று ஜனங்கள் இதைக் கேட்க நேரிட்டால், இது குரோதத்தின் காரணமாக சொல்லப்படவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக! அப்படி செய்தால், நான் தவறு செய்தவனாவேன். சபையானது, அது வெற்றி சிறந்துள்ளது என்பதை அறிந்து, அதன் ஸ்தானத்தை உணர்ந்து கொள்ளட்டும். இந்த விக்கிரகங்கள் எல்லாம் எங்கே… கத்தோலிக்க சபை வெளிப்படையாக "விக்கிரகத்தை" உண்டாக்கிக் கொண்ட போது, ''பிராடெஸ்டெண்டுகள் ஸ்தாபனம்'' என்னும் விக்கிரகத்தை மறைமுகமாக உண்டாக்கிக் கொண்டுள்ளனர். இதுவும் மோசமான செயலே. வார்த்தையை மறுதலித்தல். தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலித்தல். கர்த்தாவே, உம்முடைய வார்த்தை எவ்வளவு உண்மையாயுள்ளது! ஒவ்வொரு வார்த்தையும்!
101 பிதாவே, எங்கள் பாவங்களை மன்னித்தருள ஜெபிக்கிறோம். இந்த செய்தியானது அவர்களுடைய இருதயங்களில் ஆழமாகப் பதியட்டும், ஜனங்கள்… இந்த சபை, இந்த சிறு கூடாரத்தைக் கட்டும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கும் இந்நேரத்தில், இவர்கள் அழகான ஒன்றை எதிர்பார்க்காமல் ஜனங்களைக் கொள்ளும் அளவுக்கு போதுமான இடம் இருக்க அருள் புரியும். தேவனே, ''நாங்கள் பெரிய மண்டபம் உள்ள ஒரு விசாலமான கூடாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். அது காலியான கப்பலின் உட்புறமாக இருக்கட்டும். இயேசு கிறிஸ்துவை அவர்கள் காணத் தவற வேண்டாம். அவரே எங்கள் ஆலயத்தை நிரப்புகிறவராக இருக்கட்டும். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வல்லமையும் அக்கினியும் அவர்களுடைய இருதயங்களாகிய பலிபீடத்தின் மேல் இறங்கும். கர்த்தாவே, ஒவ்வொரு நபருடைய இருதயத்தில் தான் உண்மையான பலிபீடம் உள்ளது.
இந்த வார்த்தை ஒவ்வொருவருடைய இருதயமாகிய பலிபீடத்திலும் ஆழமாக கிடத்தப்பட்டு, அவர்கள் அதிலிருந்து விலகாமல், புத்தியுடன் சுவிசேஷத்துக்கு வந்து வார்த்தையை விசுவாசிக்கவும், அவர்கள் இருதயத்தை பிசாசின் வல்லமைக்கு (அல்லது உணர்ச்சிக்கும், கூச்சலுக்கும், குதிப்பதற்கும், எந்த விதமான மாமிச கிரியைகளுக்கும்) திறந்து கொடுக்காமல், உண்மை அன்பாகிய கிறிஸ்துவின் ஆவிக்குத் திறந்து கொடுத்து, அவர் தம்மை அன்பிலும் வல்லமையிலும் அவர்களுக்கு வெளிப்படுத்த அருள் புரியும்.
ஆண்டவரே, இதை அருள்வீராக. வியாதியஸ்தர்களையும் அவதியுறுபவர்களையும் சுகப்படுத்துவீராக. இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
102 நான் அவரை நேசிக்கிறேன்
நான் அவரை நேசிக்கிறேன்
முந்தி அவர் என்னை நேசித்ததால்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில்
(சகோ. பிரான்ஹாம் 'நான் அவரை நேசிக்கிறேன்' என்னும் பாடலை மௌனமாக இசைக்கிறார் - ஆசி)…
…நேசிக்கிறேன்
முந்தி அவர் என்னை நேசித்ததால்
சம்பாதித்தார் என் இரட்சிப்பை
கல்வாரி மரத்தில்
நாம் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில் உங்களில் எத்தனை பேர் உங்கள் இருதயத்தை பலிபீடத்தின் மேல் வைத்து, அதை தேவன் தமது வார்த்தையை விதைக்கும் நிலமாகச் செய்து, அது கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஜீவனை மறுபடியும் கொண்டு வர அனுமதிப்பீர்கள்? உங்கள் கரங்களையுயர்த்தி தேவனே, 'என் முழு இருதயத்தோடும் வாஞ்சிக்கிறேன்' என்று சொல்லுவீர்களா? பசியுள்ள உங்கள் இருதயங்களை தேவன் தாமே ஆசிர்வதிப்பாராக… டஜன் கணக்கில் கைகள்.
அங்கு விட்டுவிடுங்கள், அங்கு விட்டுவிடுங்கள்
உங்கள் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று விட்டுவிடுங்கள்
தாம் விசுவாசித்து சந்தேகப்படாமலிருந்தால்,
அவர் நிச்சயம்
நம்மை வெளியே கொண்டு வருவார்
நம் பாரத்தை கர்த்தரிடம் கொண்டு சென்று
அங்கு விட்டுவிடுவோம்.
103 இரட்சகராகிய கிறிஸ்து உங்களுக்காக மரித்தார் என்பதை உங்கள் இருதயத்தின் ஆழத்தில் நினைவு கூருங்கள். நீங்கள் உங்களுக்கு மரித்தால், அது உங்கள் சரீரத்தை, உங்கள் ஆத்துமாவை, உங்கள் இருதயத்தை, இவ்வுலகத்தின் எல்லாவற்றினின்றும், அதன் இன்பங்களினின்றும் வெறுமையாக்கும். அப்பொழுது கிறிஸ்து… நீங்கள் அவருடன் உயிரோடெழும்புவீர்கள்.
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், இங்கு தண்ணீர் நிறைந்த குளம் ஒன்று உள்ளது. நீங்கள் தண்ணீரை விட்டு வெளிவரும் போது, நீங்கள் புது ஜீவனுடன் கிறிஸ்துவுடன் நடக்க எழும்புகிறீர்கள். நீங்கள் அப்பொழுது உங்களுக்கு மரித்துவிடுகிறீர்கள். நீங்கள் ஒரு போதும்… உங்கள் கோபமும் எல்லாமும் போய்விடுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். அப்பொழுது அவர் பரிசுத்த ஆவியினால் உங்களை எழுப்பி அவரோடு கூட உன்னதங்களில் இவ்வுலகின் எல்லா சக்திகளுக்கும் மேலாக உட்காரும்படி அருள் செய்கிறார்.
104 நீங்கள் எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும், நீங்கள் ஒருக்கால் துணிகள் சலவை செய்பவராக இருக்கலாம். ஒருக்கால் மொழியின் முதலெழுத்துக்களும் கூட அறிந்திராத சகோதரனாயிருக்கலாம். நீங்கள் யாராயிருந்தாலும், அதனால் ஒன்றுமில்லை. நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்திருக்கிறீர்கள், நீங்கள் பிசாசின் எல்லா அந்தகார சக்திகளின் மீதும் அதிகாரம் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெற்றி சிறந்து கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள்.
105 நீங்கள் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில்: இன்று காலை இங்கு வந்துள்ள ஒரு சகோதரனை நானறிவேன், சகோ. சிங்க (அவரை "சிங்க், ஜிம் சிங்க'' என்று அழைப்பார்கள்). அவர்… நமது சகோதரன் தேவனுடைய வார்த்தையைப் போதிப்பவர் என்று அறியப்பட்டவர். அது சரிதானே, சகோ. சிங்க்? வியாதியஸ்தருக்கு ஜெபிப்பதற்கு முன்பு, நாங்கள் இன்று காலை அவர் மேல் கைகளை வைத்து அவரை போதகராக நியமித்து (நமது சகோதரர்களில் ஒருவராக), சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக சபைகளுக்கு அனுப்பப் போகிறோம்.
சகோ. ஜிம் சிங்க், இங்கு பீடத்திற்கு வருவீர்களா? சகோ. நெவில், வாருங்கள். சகோ. ஜுனியர் ஜாக்ஸன், இங்கிருக்கிறீர்களா? இந்த விசுவாசத்தைச் சேர்ந்த போதகர் வேறு எவராகிலும்?
106 இங்குள்ள சகோ. ஜிம் சிங்க் நாம் பிரசங்கிக்கும் இந்த சுவிசேஷத்தை விசுவாசிக்கிறார். தேவனுடைய குமாரன் உண்மையாக கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்று அவர் விசுவாசிக்கிறார். அப்படித்தானே சகோ. சிங்க்? (சகோ. ஜிம் சிங்க, ''ஆமென்'' என்று விடையளிக்கிறார் - ஆசி). அவர் மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, எல்லாவற்றின் மேலும் வெற்றி சிறந்து, தேவனுடைய வலது பாரிசத்தில், தேவனுடைய உன்னதமான வல்லமையின் மத்தியில் உட்கார்ந்து, என்றென்றும் உயிரோடிருக்கிறவராய் நமக்காக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? ("ஆமென்''). பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்'') தேவன் அருளும் விதமாகவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் விசுவாசியைத் தொடருகிறது என்று விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்'') அவர் அதை விசுவாசிக்கிறார். மக்களுக்கு முன்பாக அவர் நிந்தையற்ற வாழ்க்கை நடத்தியுள்ளார் என்று நம்புகிறேன். அவர் இந்த சபையில் அடிக்கடி பிரசங்கம் செய்திருக்கிறார். அவர் அருமையான ஒரு தேவனுடைய மனிதன் என்பதை நான் கண்டிருக்கிறேன்.
107 இந்த சபையிலுள்ள யாருக்காகிலும் சகோ. சிங்குக்கு விரோதமாக கூற வேண்டிய வார்த்தை ஏதாகிலும் உண்டா? அப்படியானால் அதை இப்பொழுதே சொல்லக் கடவர்கள், இல்லாவிட்டால் ஒருக்காலும் சொல்லாதிருக்கக் கடவர்கள். உங்களில் எத்தனை பேர், சகோ. சிங்க் இந்த செய்தியையும் வார்த்தையையும் பிர்சங்கம் பண்ணுவதனால்… சகோ. சிங்க் பரிசுத்த ஆவியின் சாட்சியினால் போதகராக அபிஷேகம் பண்ணப்பட்டு இன்று காலை பிரசங்கிக்கப்பட்ட செய்திகளைப் போன்ற செய்திகளைப் பிரசங்கிக்க, கர்த்தர் அவரை உலகத்தில் அனுப்பும் இடங்களுக்கெல்லாம் அவர் செல்ல வேண்டும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கரங்களையுயர்த்தி, "சகோ. சிங்க், உங்களுக்காக நான் ஜெபிப்பேன்'' என்று கூறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
108 இப்பொழுது தலை வணங்குவோம்: சகோ. நெவில், உங்கள் கைகளை சகோ. சிங்க் மேல் வையுங்கள். நீங்கள் கையை வேதாகமத்தின் மேல் வையுங்கள்.
எங்கள் பரலோகப் பிதாவே, இவ்வுலகத்தின் அசுத்தத்தினின்று வெளியே கொண்டு வரப்பட்ட ஒரு மனிதனை இன்று காலை உம்மண்டையில் கொண்டு வருகிறோம். அவர் தனக்கு மரித்தவராக எண்ணிக் கொண்டு, கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும் வாக்குத்தத்தத்துடன் உயிரோடெழுந்து, இப்பொழுது உன்னதங்களில் உட்கார்ந்து, ஊழியத்திற்கான ஒரு அழைப்பை தன் வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறார்.
ஓ தேவனே, இச்சபையின் மூப்பர்கள் என்னும் முறையில், நாங்கள் சபையின் அங்கத்தினர்களைக் கண்காணிக்கிறவர்களாய், இந்த சபையை மேய்க்க பரிசுத்த ஆவி எங்களைக் கண்காணிகளாக வைத்துள்ள இந்த மந்தை, சகோ. சிங்க் நல்லவர் என்பதை அறிந்து அதற்கு அறிகுறியாக கைகளையுயர்த்தினது. எனவே சகோ. நெவில்லும் நானும், நீர் நியமித்த மூப்பர்கள் என்னும் முறையில், அவர் மேல் கைகளை வைத்து, விசுவாச ஜெபத்தை ஜெபித்து, அவரை இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திற்கென்று அபிஷேகிக்கிறோம். அதை அருள்வீராக. அவர் தேவனுடைய வல்லமையினால் நிரப்பப்பட்டு, ஒருக்காலும் ஒப்புரவாகாதிருப்பாராக. அவர் உமக்கென்று ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவாராக.
தேவனே, எங்கள் விசுவாசத்தையும் (loyalty), சகோதரத்துவத்தையும் அவருக்கு ஆணையிட்டுத் தருகிறோம். அவர் எங்கிருந்தாலும் அவரை ஜெபத்தில் தாங்கி, எங்களால் முடிந்த உதவியைச் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம். ஓ, தேவனே அவரை உம்மிடம் சமர்ப்பிக்கும் இந்நேரத்தில், அவரை ஏற்றுக் கொள்வீராக. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென், ஆமென்.
109 சகோ. சிங்க, உங்களுடைய கைகள் தேவனுடைய வார்த்தையின் மேல் வைக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், உங்களை கிறிஸ்துவுக்குள் சகோதரனாகவும் எங்கள் ஐக்கியத்தில் ஒருவராகவும் அபிஷேகிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. சபையோரும் "ஆமென்'' என்றனர் (சபையோர் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி). கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. சுவிசேஷத்திற்காக இன்னும் எவ்வளவோ செய்யப்பட வேண்டியுள்ளது மிக அவசரமான தேவை. நாங்கள் நூறு சதவிகிதம் உம்மை ஆதரித்து, எங்களால் கூடுமானவரை உமக்குதவி செய்வோம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
அவர் மிகவும் அருமையாக… ஓ, என்னே! நான் ஆண்மைத்தனம் கொண்டவர்களைக் காண விரும்புகிறேன். அது அருமையானது. அவர் இந்தியானாவிலுள்ள ஊடிகா என்னுமிடத்திலுள்ள பரிசுத்த கூடாரத்தின் (Holiness Tabernacle) போதகராகச் செல்கிறார் என்று கேள்விப்படுகிறேன். அவர் அதற்கருகில் வசிக்கிறார்.
110 இப்பொழுது நாம் பார்ப்போம். நமக்கு வேறெதாகிலும் உண்டா? ஓ, வியாதியஸ்தர்களுக்கு நாம் ஜெயிக்க வேண்டியது பாக்கியுள்ளது. இல்லையா? சரி. அவர்கள்… நீங்கள் ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறீர்களா? சரி, ஒரு சில ஜெப அட்டைகளை வேகமாக அழைப்போம். எல்லோரும் சற்று அமைதியாயிருங்கள். நமக்கு உண்மையாக நேரமாகிவிட்டது. எனக்கு பத்து நிமிடம் தருவீர்களா? சரி. ஜெப அட்டைகள், ஜெப் அட்டை வைத்திருப்பவர்கள்… எந்த எண்ணிலிருந்து கொடுத்தீர்கள்?ஒன்றிலிருந்தா?
சரி. ஜெப அட்டை எண் ஒன்று, வருவீர்களா? எண் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. ஜெப அட்டை எண் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. வேகமாக வந்து இங்கு நில்லுங்கள், உங்களால் எழுந்திருக்க முடியுமானால், முடியாவிட்டால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நாங்கள் வந்து கூட்டிச் செல்வோம். எங்களால் எவ்வளவு முடியுமோ, அத்தனை நபர்களை நாங்கள் அழைக்க முயல்வோம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து; ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது பத்து, அவர்களில் இரண்டு பேர் மாத்திரமே எழுந்து நின்றனர். பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து. நீங்கள் எல்லோரும், எல்லா ஜெப அட்டைகளும், இந்த பக்கம் வாருங்கள். உங்களுக்கு விருப்பமானால்.
111 ஓ, அவர் அற்புதமானவர் அல்லவா? எல்லோரும் பயபக்தியாயிருங்கள். கூடுமானவரை. சுமார் பத்து நிமிடங்களுக்கு, பத்து நிமிடங்கள். ஜெப அட்டை வைத்துள்ளோரே, ஜெபம் செய்யப்பட வேண்டுமென்று விரும்புவோர் உங்கள் ஜெப அட்டைகளுடன் வாருங்கள் என்று அறிவித்தோம். ஏனெனில் அப்பொழுதுதான் அவர்கள் திரும்பத் திரும்ப வரமாட்டார்கள்… அவர்கள் திரும்பத் திரும்ப வந்து, தேவனுடைய வரங்களை ஓயூஜா பலகையைப் போல் (Ouija board) உபயோகிக்க முயல்கின்றனர். (ஓயூஜா பலகை என்பது ஆவிகளுடன் தொடர்பு கொண்டு அவை கூறுபவைகளை அறிந்து கொள்ள உபயோகப்படுத்தப்படும் ஒரு பலகை - தமிழாக்கியோன்). அப்படி செய்வதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை.
தேவன் தமது கிரியையை செய்ய விட்டுக் கொடுக்க வேண்டுமென்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அப்படி நம்புகிறீர்களா? இந்த செய்தி சத்தியம் என்று உங்களில் எத்தனை பேர் இன்று காலை விசுவாசிக்கிறீர்கள்? (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). நன்றி, நன்றி. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. அதை நான் என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுமனதோடும் விசுவாசிக்கிறேன்.
112 ஜெபம் செய்யப்படுவதற்கு இங்கு ஏறக்குறைய ஐம்பது பேர் இருப்பது போல் தோன்றுகிறது. இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றீர்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்து கொண்டு வியாதியின் மேல் வெற்றி சிறந்திருக்கிறீர்கள். ஜெப வரிசையிலுள்ள கிறிஸ்தவர்கள், மறுபடியும் பிறந்த விசுவாசிகள், கைகளையுயர்த்துங்கள். அப்படியானால் உங்கள் ஸ்தானம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே வெற்றி சிறந்துவிட்டீர்கள். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவன் கூறியுள்ளது சத்தியம் என்று விசுவாசித்து அதை ஏற்றுக் கொள்ளுதலே.
113 அந்த வரிசையிலுள்ள அனைவரையும் சிந்தனைகளைப் பகுத்தறிய நான் தெரிந்து கொள்ள முடியாது. அது மிகவும் அதிகமாகிவிடும், நமக்கு நேரம் அதிகமாகிவிடும். எனக்கு ஒன்றுமில்லை. வேண்டுமானால் நாள் முழுவதும் இங்கு நான் தங்கியிருக்க முடியும். நான் நல்லுணர்வைப் பெற்றிருக்கிறேன், நான் நன்றாக இருக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இப்பொழுது நாம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம், இப்பொழுது நாம் கிறிஸ்துவுடன் கூட உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். ஆமென்! ஓ, என்னே! நான் உங்களுக்கு போதித்த இவையனைத்தும் சத்தியம். அப்படியானால் அவர் தம்மை வெளிப்படுத்துவார். அது உண்மை.
114 ஜெப வரிசையிலுள்ள எத்தனை பேர் எனக்கு அந்நியர்கள்? உங்களில் அநேகரை எனக்குத் தெரியும். உங்களில் சிலர் எனக்கு அந்நியர்கள். உங்களுக்குள்ள கோளாறு என்னவென்று எனக்குத் தெரியாது என்பவர்கள் உங்கள் கைகளையுயர்த்துங்கள். வரிசை பூராவும். உ, ஊ. சரி. அவர் கிறிஸ்துவா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு விசுவாசம் அவசியம், நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்காவிட்டால், அது கிரியை செய்யாது. உங்கள் ஸ்தானத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், உங்கள் இடத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சகோ. வெஸ்ட், அது சரியா? அது உண்மை. உங்கள் ஸ்தானத்தை அறிந்து கொள்ளுங்கள். ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்று இயேசு வாக்களித்துள்ளார். (யோவான் 14:12). உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசியுங்கள்.
115 பின்னால் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனுக்கு இடுப்பில் ஏதோ கோளாறு உள்ளது. உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? உன்னால் ஜெப வரிசைக்கு வரமுடியவில்லை. ஆனால் நீ சென்று உட்கார்ந்து கொள்ளலாம். ஏனெனில் அது உன்னை விட்டு நீங்கிப் போகின்றது. அது புற்று நோய் அல்ல. போய் உட்கார்ந்து கொள். அது போய்விட்டது. அந்த மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. நாம் அந்நியர்களானால், சகோதரனே, உன் கையையுயர்த்து. நாம் அந்நியர்களானால்… என்ன நேர்ந்தது? அவர் சுகமடைந்துவிட்டார்.
இந்த பீடத்தினருகில், நீ விசுவாசிக்கிறாயா? உன்னைக் குறித்தென்ன? நாம் அந்நியர்கள். உன்னை எனக்குத் தெரியாது. தேவன் உன்னை அறிவார். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறாயா? நான் பிரசங்கிக்கும் இந்த செய்தியை விசுவாசிக்கிறாயா? உன் முழு கோளாறு உன்னை விட்டுப் போய்விடும் என்று நான் கூறினால், உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயா? சரி. திரு. புர்க்கார்டு, நீ ஓஹையோவுக்குத் திரும்பி செல்லலாம். நீ சுகமடைந்துவிட்டாய்.
இங்கு நீ உனக்காக இல்லை, வேறு யாருக்காகவோ இருக்கிறாய். அது ஒரு ஸ்திரீ. அவளும் ஓஹையோவைச் சேர்ந்தவள். அது உண்மை. அவள் பெயர் ஆலிஸ் மக்வான். அது உண்மை. அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது உண்மை, வயிற்றுக் கோளாறு, பெண்கள் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, அது சரியா? விசுவாசி, அவள் சுகமடைவாள். சென்று, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி, உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. அவள் சுகமடைவாள்.
116 எப்படியிருக்கிறாய்? உன்னை எனக்குத் தெரியாது. நாம் அந்நியர்கள். அது சரியா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று நம்புகிறாயா? நாம் கிறிஸ்துவுக்குள் வெற்றி சிறந்துவிட்டோம் என்று விசுவாசிக்கிறாயா? உன் நரம்பு தளர்ச்சியோடும், மற்ற கோளாறுகளோடும் நீ விசுவாசித்தால், திருமதி ஆலன், நீ வீடு சென்று சுகமடைவாய்.
நாம் அந்நியர்கள் என்று நினைக்கிறேன், இல்லையா? உன்னை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நாம் முதன் முறையாக சந்திக்கிறோம். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். நான் அவருடைய தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கிறாயா? நீ விசுவாசிக்கிறாயா? உனக்கு நீரகக் கோளாறு உள்ளது. அது உண்மை இல்லையா? நீ இந்த இடத்தை சேர்ந்தவள் அல்ல, நீ தென்பாகத்தை சேர்ந்தவள். இரட்சிக்கப்படாத உன் பிள்ளைகளுக்காகவும் நீ ஜெபம் செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு பின்னால் இருப்பது உன் கணவர். அவருடைய இருதயத்திலும் ஒரு நண்பனை அவர் நினைத்திருக்கிறார். அவருக்காக அவர் ஜெபம் செய்து கொண்டிருக்கிறார். நான் யாரோ ஒருவரைக் காண்கிறேன். நீ என் பெற்றோருக்கு அறிமுகமானவள். எல்.சி அல்லது எஸ்.டி என்றழைக்கப்படும் ஒரு மனிதன் தரிசனத்தில் வருகிறார். எஸ்.டி போன்ற ஏதோ ஒன்று. அது உன் மகன் (சகோ. நெவில், ஜே.டி என்கிறார் - ஆசி). ஜே.டி… அது தான், எஸ்.டி அது ஜே.டி அல்ல எனக்குத் தெரியும். அது சிறு உருவம் கொண்ட கறுப்பு தலைமயிருடைய மனிதன். அவன் முன்னால் நின்று கொண்டிருப்பதை நான் கண்டேன், வீடு திரும்பு, உன் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வீடு செல்.
இங்குள்ள மனிதன் ஜார்ஜியாவிலிருந்து வந்தவரா? ஆம், ஆம், ஆம், உன் பெற்றோரை என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. அது உண்மையென்று உனக்குத் தெரியும். ஆனால் அவர்களைக் காணும் முன்பு உன்னை நான் கண்டேன். நீ அவர்களுடைய மகன் என்று அறிந்து கொண்டேன். உன் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. சந்தேகப்படாதே.
117 நீங்கள் எல்லோரும் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? எத்தனை பேர்? நீங்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்குள் இருக்கின்றீர்கள். "இது தான் சுவிசேஷமா?'' என்று நீங்கள் கேட்கலாம். அதை தான் இயேசு செய்தார். அதை தான் அப்போஸ்தலர்களும் செய்தனர். அதை தான் ஐரினேயசும் மற்றவர்களும் செய்தனர். அப்படியே.
நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் தலைவணங்கு. மூப்பனே, இங்கு வாரும். இப்படியாக வரிசையிலுள்ள எல்லோருக்குமே செய்ய முடியாது. அதில் அநேகர் உள்ளனர். நாங்கள் இரண்டு மூன்று பேரை அங்கு தேர்ந்தெடுத்தோம். இங்கு வாருங்கள். இந்த என் சகோ. நெவில் தேவனுடைய மனிதர். அதை நான் விசுவாசிக்கிறேன்.
நாங்கள் வரிசையின் வழியாக சென்று அங்குள்ளவர்களின் மேல் கைகளை வைத்து ஜெபிக்கப் போகின்றோம், அவர்கள் சுகமடைவார்கள் என்று நீங்கள் அனைவரும் விசுவாசிக்கின்றீர்களா?ஒவ்வொருவரும்? இங்குள்ள ஒவ்வொருவரும் அவ்வாறு விசுவாசிப்பீர்களா? அப்படியானால் தலைவணங்குங்கள். நாம் வெற்றி சிறந்த சபையில் இருக்கிறோம்.
கர்த்தராகிய இயேசுவே, இந்த சகோதரரை எனக்குத் தெரியும். ஆகையால் தான் அவரைக் குறித்து நான் ஒன்றும் கூறவில்லை. அவருடைய தேவை என்னவென்று எனக்குத் தெரியும். ஆண்டவரே, அவருக்கு சுகமளித்து, அவருடைய வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.
பரலோகப் பிதாவே, இந்த வாலிப சகோதரனின் மீது கைகளை வைத்தவர்களாய், அவருடைய மீட்பை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்.
118 பரலோகப் பிதாவே, இங்குள்ள எங்கள் சகோதரி டாஷ் மிகவும் அருமையான சகோதரி. எங்களுக்கு உண்மையுள்ள சிநேகிதியாக எங்கள் குடும்பத்தினருக்கும், எங்கள் அன்பார்ந்தவர்களுக்கும், இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களும், அவர்களுடைய கணவரும் உம்முடைய பிள்ளைகள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். தேவனே, இன்று காலை அவர்களுடைய விண்ணப்பங்களை அருளிச் செய்ய வேண்டுமாய் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
தேவனே, இயேசுவின் நாமத்தில் எங்கள் சகோதரி… ஆசீர்வதியும். அவர்கள் உம்முடைய ஊழியக்காரி என்று நாங்கள் அறிவோம். அவர்களுடைய வேண்டுதல்களை அருளிச் செய்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
ஓ, பரலோகப் பிதாவே, நீர் மாத்திரமே சகோதரி பிளாங்கோவை சுகப்படுத்த முடியுமென்று உணர்ந்தவர்களாய், நீர் அவர்களை ஆசீர்வதித்து இந்த விண்ணப்பங்களை அருளிச் செய்ய வேண்டுமாறு ஜெபிக்கிறோம், ஆண்டவரே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் மேல் நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கைகளை வைத்து, உமது மகிமைக்காக அவர்களுடைய விடுதலையைக் கோருகிறோம். ஆமென்.
119 "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். இந்த சகோதரியின் மேல் எங்கள் கைகளை வைக்கிறோம். அவர்கள் சுகமடைவார்கள். கர்த்தாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அதை அருளுவீராக. பரிசுத்த ஆவியின் உணர்ச்சியினால் இந்த நரம்புதளர்ச்சியுள்ள சரீரம் ஆடிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறது. அது களைப்படைந்துள்ளது. ஆனால் நீர் தேவனாயிருக்கிறீர். இந்த வாலிபப் பெண்ணை இந்த இடத்திலேயே சுகப்படுத்துவீராக!
சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் சகோதரனுக்கு அவருடைய விண்ணப்பங்களை அருளிச் செய்வீராக. பிதாவே, அதை அருள்வீராக. நாங்கள் அவர் மேல் கைகளை வைத்து, சத்துருவைக் கடிந்து கொள்ளுகிறோம். அவருடைய ஆத்துமாவை மன்னிப்பீராக. அவருடைய பெயருக்கு முன்னால் உள்ள கறுப்பு அடையாளம் நீக்கப்பட்டு, இன்று காலை வெற்றியுடன் எழுந்திருப்பாராக. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் தமது ஸ்தானத்தை உணர்ந்து கொள்வாராக. அவருக்கு உள்ளதை போக்குவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.
எங்கள் பரலோகப் பிதாவே, இந்த சகோதரனின் மேல் எங்கள் கைகளை வைக்கிறோம். அவருடைய வேண்டுதல்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நிறைவேற்றுவீராக. ஆமென்.
120 பிதாவே, இந்த அருமையான சிறு பெண். கர்த்தர் தாமே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் மீது இரக்கமாயிருப்பாராக. தேவனுக்கு மகிமையுண்டாக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
தேவனே, இந்த தாயின் இருதயத்தில் எழுந்துள்ள கூக்குரலையும், அவர்களுடைய மகளின் அழுகையையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். தேவனே, இன்று காலை அவளுக்கு நீர் விசுவாசத்தை அருளிச் செய்து, அவளும் அதன் மேல் அவளுக்கு வல்லமையுண்டு என்று அறிந்தவளாய், உடனே அந்த விசுவாசத்தை பிரயோகிக்கட்டும். அப்பொழுது அது நிறைவேறும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.
தேவனே, இந்த சிறுவனை சுகப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.
தேவனே, எங்கள் பிதாவே, எங்கள் சகோதரியின் மேல் நாங்கள் கைகளை வைத்து, அவர்களுடைய வேண்டுதல்களை அருளுமாறு வேண்டிக் கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
எங்கள் பரலோகப் பிதாவே, இந்த சிறு சீமாட்டி சுகம் பெறுவதற்காக தன் இடத்தை வகிக்கும் இந்நேரத்தில், நாங்கள் அவள் மேல் கைகளை வைத்து அவளுடைய சுகத்தைக் கோருகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
இந்த அழகான சிறு குழந்தையின் மேல் நாங்கள் கைகளை வைத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகத்தைக் கோருகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரி…? மேல் கைகளை வைக்கிறோம். அவளை இப்பொழுது சுகமாக்குவீராக.
121 பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. இந்த சகோதரனின் மேல் நாங்கள் கைகளை வைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அவர் அதை விசுவாசிப்பாராக. ஆமென்.
பரலோகப் பிதாவே, இங்குள்ள தீரமுள்ள எங்கள் சகோதரன், உமது ஊழியக்காரன், தேவனுடைய மனிதனாகிய இவர் மேல் எங்கள் கைகளை வைக்கிறோம். அவருடைய விண்ணப்பங்களை அருள்வீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர் தமது ஸ்தானத்தை இப்பொழுது எடுத்துக் கொள்வாராக. இங்கு ஒரு தேவனுடைய குமாரன்…? மகத்தான நேரம்…?
பரலோகப் பிதாவே, பயங்கர அந்தகாரத்தினின்று, வெளிச்சத்தில் நடப்பதற்காக வெளியே வந்துள்ள இந்த சிறு சகோதரியின் மேல் கைகளை வைக்கிறோம். அவளுடைய தீரமுள்ள சிறு ஆத்துமா இன்று காலை உயரே பரலோக சூழ்நிலைக்கு உயர்த்தப்படுவதாக. ஆண்டவரே, அதை அருள்வீராக. அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றுவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
பரலோகப் பிதாவே, இங்குள்ள இந்த சகோதரனின் மீது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் கைகளை வைத்து, உமது ஆசிர்வாதம் அவருக்கு அருளப்பட வேண்டுமாய் ஜெபிக்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரியின் குழந்தையின் மீது எங்கள் கைகளை வைத்து, அவர்களுடைய விண்ணப்பங்களை அவர்களுக்கு அருளுமாறு வேண்டிக் கொள்கிறோம். பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவள் மேல் நாங்கள் கைகளை வைக்கும் இந்நேரத்தில்.
122 எங்கள் பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரியின் மேல் நாங்கள் கைகளை வைக்கிறோம். அவர்களுடைய வேண்டுகோள் நிறைவேற்றப்படுவதாக. இயேசுவின் நாமத்தில், ஆமென்.
எங்கள் பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரி இந்த வரிசையில் வந்து, எங்கள் கைகளை அவர்கள் மேல் வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் இந்நேரத்தில், தேவனுடைய கிறிஸ்து இப்பொழுது அருகில் வந்து, கோளாறைக் கடிந்து கொண்டு, அவர்களை சுகப்படுத்துவீராக. ஆமென்.
பரலோகப் பிதாவே, எங்கள் சகோதரனின் மேல் நாங்கள் கைகளை வைத்து, அவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாரா என்று அவரைக் கேட்கிறோம். அவரை 'இயேசுவின் நாமத்தில் சுகமாக்குவீராக', ஆமென்.
பரலோகப் பிதாவே, இந்த பெண்ணின் மேல் நாங்கள் கைகளை வைத்து அவளை இயேசுவின் நாமத்தில் சுகப்படுத்த வேண்டுமாய், எங்கள் விலையேறப்பெற்ற கர்த்தரை வேண்டிக் கொள்கிறோம், ஆமென்.
எங்கள் விலையேறப்பெற்ற பிதாவே, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் சகோதரனின் மேல் நாங்கள் கைகளை வைக்கிறோம். நாங்கள் அவரில் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம். எங்கள் சகோதரனுக்கு அவருடைய வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இயேசுவின் நாமத்தில், ஆமென்.
123 எங்கள் பிதாவே, எங்கள் ஊழியக்காரியின் சகோதரனும், சிலுவையின் தீரமுள்ள வீரனுமாகிய இவர் மீது கைகளை வைக்கிறோம். உமது ஆவி அவர் மேல் இறங்கி, அவருடைய வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டுமாய் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எங்கள் பரலோகப் பிதாவே, சிலுவையின் தீரமுள்ள வீரனாகிய இவர் குற்றம் கண்டு பிடித்தலின் போதும், இன்னும் மற்ற நேரங்களிலும் உமது வார்த்தைக்கு உறுதியாய் நின்று, கிறிஸ்து இயேசுவுக்குள் வெற்றி சிறந்தவராக அங்கிருந்து நடந்து சென்றிருக்கிறார். பிதாவே, அவருடைய வேண்டுதல்களை அருள்வீராக. என் ஜெபத்தை நான் ஜெபித்து, உமது ஆசிர்வாதத்திலிருந்து அவருக்குத் தருகிறேன். கர்த்தாவே, அவரை சுகப்படுத்தி அவருடைய வேண்டுதல்களை அருள்வீராக. இயேசுவின் நாமத்தில், ஆமென்.
பரலோகப் பிதாவே, தேவன் சுகப்படுத்தாமல் இந்த குழந்தை வாழ முடியாது. தேவன் அதை சுகப்படுத்த முடியும். என் கைகளை அதன் மேல் வைத்து, சத்துருவை இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன். இப்பொழுது அது…? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கைகளை வைக்கும் எங்கள் சகோதரியின் இருதயத்திலிருந்து, நான் மாமிசமான கூடாரம்… அவர் தேவனுடைய குமாரனைப் போன்ற ஒரு தூதனை சிருஷ்டித்தார். இயேசு கிறிஸ்துவே எங்கள் சகோதரிக்கு அவர்களுடைய வேண்டுதல்களை அருளிச் செய்வீராக. ஆமென்.
124 எங்கள் சகோதரி கிட், உங்கள் இருதயத்தை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக. எங்கள் பரலோகப் பிதாவே, இந்த வயோதிப மனிதனையும் ஸ்திரீயையும் எங்கள் கைகளில் பிடித்துக் கொண்டிருக்கிறோம். இவர் நான் சிறுவனாயிருந்த காலம் முதற்கொண்டே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் புற்றுநோய் கொண்டு மரணத்தருவாயில் படுத்திருந்தார். நான் விரைவில் அவரை அடைந்தேன். தேவனுடைய வல்லமையானது அந்த எண்பது வயது மனிதனின் மேல் அசைவாடி அவரை சுகப்படுத்தினது. விசுவாசம் இல்லாத மருத்துவர்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய வேண்டுகோளை நீர் இன்று காலை நிறைவேற்றித் தர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, ஆசிர்வதிக்கப்பட்ட அவருடைய சிறு மனைவி துணிகளைச் சலவை செய்து, இரத்தம் சிந்தப்பட்ட இந்த இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக அவருடைய ஊழியத்துக்கு பணம் அனுப்பித் தந்தார்கள். கர்த்தாவே, அதை அருள்வீராக.
ஆண்டவரே, அவர்களுடைய மகனை ஆசீர்வதியும். ஆண்டவரே, அவரைச் சுகப்படுத்தி, பெலப்படுத்தும். வியாதியஸ்தர் மேல் இவர்கள் உறுமால்களை வைப்பதற்கென, இவர்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு கொண்டு செல்ல அவர் ஆதரவாக இருந்து வருகிறார். அவர்கள் வயோதிபராயுள்ளதால், அவர்களால் வெளியில் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியாது. ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கும் வீடுகளுக்கும் சென்று, வியாதியஸ்தர் மேல் உறுமால்களை வைத்து வருகின்றனர். அதை நீர் கனப்படுத்துகிறீர். நீர் அப்படி செய்வீர் என்று நானறிவேன். பிதாவே, அவர்களை ஆசிர்வதித்து, இன்னும் அநேக நாட்களுக்கு அவர்களுக்கு பெலனையளியும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.
125 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. சகோ. கிட், அது நிச்சயம் அருளப்படும் (சகோ. சகோதரி கிட், சகோ. பிரான்ஹாமுடன் பேசுகின்றனர் - ஆசி). தேவனுக்கு ஸ்தோத்திரம். ஆமென். ஆம், தொலைபேசியின் மூலம் ஜெபிக்கப்பட்டவள்.
எண்பது வயது கடந்த ஒரு மனிதனும் ஒரு ஸ்திரீயும். இப்பொழுது வெளியில் சென்று சுவிசேஷ வேலை செய்யவோ, பிரசங்க பீடத்தில் நின்று பிரசங்கிக்கவோ முடியாது. அப்படி பிரசங்கிப்பதற்கு அவருக்கு அதிக வயதாகிவிட்டது. இருப்பினும் அவர்கள் ஜெபிக்கப்பட்ட துணிகளை இங்கிருந்து வரவழைத்து, அவைகளை வியாதியஸ்தருக்கும் அவதியுறுபவர்களுக்கும் அனுப்பித்தந்து, அவைகளை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்று வியாதியஸ்தர் மேல் வைப்பது போன்ற பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வெளியே சென்று பிரசங்கம் செய்து, அந்த வகையில் ஊழியத்துக்கு ஆதரவாக இருக்கமுடியாது. ஆனால் அவர்களால் முடிந்த வரைக்கும் சிறந்த விதத்தில் ஊழியத்தை செய்து வருகின்றனர். நாம் இதைக் காணும் போது, வெட்கப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். அது உண்மை. கிறிஸ்துவுக்காக ஏதாவதொன்றை செய்து கொண்டிருத்தல்.
126 இந்த வயோதியர் சகோ. கிட், நான் பிறப்பதற்கு முன்பே சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மை. இப்பொழுது தீரமுள்ள வயோதிப வீரனாக வியாதியஸ்தருக்கு ஜெயித்து கொண்டிருக்கிறார். சகோ. கிட், உங்கள் வயதென்ன? எண்பத்தொன்று. இன்னும் தேவனுடைய ராஜ்யத்துக்காக உழைத்து வருகிறார். பிரசங்க பீடத்தில் நின்று இத்தகைய ஒரு செய்தியையளிக்க அவருக்கு அதிக வயதாகிவிட்டது. ஆயினும் அவர் ஆஸ்பத்திரிக்கும், வியாதிப்படுக்கைகளின் அருகிலும் சென்று வருகிறார். அவருடைய மகன் அவரை காரில் கொண்டு செல்கிறார். அவர்களால் நடக்க முடியாது. எனவே அவர் இவ்விருவரை வயோதிய தம்பதிகளை காரில் கொண்டு செல்கிறார். அங்கு அவர்கள் சென்று உறுமால்களை அவர்கள் மேல் வைக்கின்றனர்.
அவர்கள் நேசிக்கும் ஒரு பேரப் பெண் இருக்கிறாள். அன்றொரு நாள் அவள் மரணத் தருவாயில் இருந்தாள். அதைக் குறித்துதான் அவர்கள் இப்பொழுது என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவளுக்காக ஜெபம் செய்தோம், போய் வைத்தோம்… அந்த குழந்தை இப்பொழுது எழுந்துவிட்டது. தேவனுக்குத் துதியுண்டாவதாக.
127 சில நாட்களுக்கு முன்பு, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். சகோ. கிட்டுக்கு 'ப்ராஸ்டிரேட்' சுரப்பியில் (Prostrate) புற்றுநோய் உள்ளதாக கூறி, என்னை அழைத்தனர். அவருக்கு அப்பொழுது சுமார் எழுபத்தெட்டு வயது; அல்லது எண்பது வயதை அவர் நெருங்கியிருந்தார். அவருக்கு 'பிராஸ்டிரேட்' சுரப்பியில் புற்றுநோய் இருந்தது. அவரை மருத்துவர் கைவிட்டார், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நாங்கள் விரைந்தோம். நானும் பில்லியும் மாறி மாறி காரோட்டி அவர் இருந்த இடத்தை அடைந்தோம். அன்று காலை பரிசுத்த ஆவியானவர் அங்கு போகும்படி எங்களிடம் கூறினார். நாங்கள் வழி நடத்தப்பட்டாலொழிய, அப்படி ஒன்றும் செய்வதில்லை. பரிசுத்த ஆவியானவர் "போ'' என்றார். நாங்கள் இங்கிருந்து புறப்பட்டு அந்த இடத்தை அடைந்து, அந்த வயோதிபரின் மேல் நான் கை வைத்து ஜெபித்தேன். அதன் பிறகு மருத்துவர்கள் சிறிதளவு புற்றுநோயையும் கூட எங்கும் காண முடியவில்லை. தேவனுக்கு மகிமை! ஓ! ஏன்? நமது ஸ்தானம் கிறிஸ்துவில் உள்ளது. நாம் எல்லா வியாதிகளுக்கும் சத்துருவின் எல்லா வல்லமைகளுக்கும் மேலாக அதிக உயரம் எழும்பிவிட்டோம்.
128 தேவனுக்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம் அல்லவா?
பெந்தெகொஸ்தேயன்று விழுந்த அக்கினியினால்
இருதயங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கும்
மக்கள் ஏறக்குறைய எல்லாவிடங்களிலும் உள்ளனர்
அது அவர்களைக் கழுவி சுத்தமாக்கியுள்ளது
ஓ, இப்பொழுதுஅது என் இருதயத்தில் எரிந்து கொண்டிருக்கிறது
ஓ, அவருடைய நாமத்துக்கே மகிமை!
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற
முடிவதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்களில் நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்
நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூறமுடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்
இந்த ஜனங்கள் படிப்பறியாதவர்களாயிருந்தாலும்
உலகப் புகழ் பெற்றதாக பெருமை பாராட்ட முடியாமற்
போனாலும்
அவர்கள் அனைவரும் தங்கள் பெந்தெகொஸ்தேவைப் பெற்று
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்
அவருடைய வல்லமை இப்பொழுதும்
மாறாத்தாயுள்ளதென்று
அவர்கள் இப்பொழுது உலகெங்கிலும் பறைசாற்றுகின்றனர்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
129 உங்களில் எத்தனை பேர் அவர்களில் ஒருவராயிருக்கிறீர்கள்? உங்கள் கைகளை இப்பொழுது உயர்த்துங்கள்.
அவர்களில் நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூறமுடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்.
ஓ, நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூறமுடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்.
இப்பொழுது சகோதரனே இந்த
ஆசிர்வாதத்தை நாடு
அது உன் இருதயத்தை பாவமறக் கழுவும்
அது மகிழ்ச்சியின் மணியை ஒலிக்கச் செய்யத் தொடங்கும்.
உன் ஆத்துமாவை பற்றியெரியச் செய்யும்
ஓ, இப்பொழுது அது என் இருதயத்தில் எரிந்து கொண்டிருக்கிறது
அவருடைய நாமத்துக்கே மகிமை!
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
அவர்களில் நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
அவர்கள் ஒரு மேலறையில் ஒன்று கூடி
அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டனர்.
அப்பொழுது ஊழியத்திற்காக வல்லமை வந்தது.
அன்று அவர் அவர்களுக்கு செய்ததையே இன்றும் உனக்குச் செய்வார்.
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
அவர்களில் நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
130 நாம் இதை மௌனமாக இசைக்கும் போது, நாம் ஒருவரோடொருவர் கைகுலுக்கி, இவ்வாறு கூறுவோம்:
அவர்களில் நானும் ஒருவன், நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்.
நானும் ஒருவன், நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்
நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் அல்லவா? அப்படியானால் ''ஆமென்" என்று சொல்லுங்கள்
(சபையோர் "ஆமென்'' என்கின்றனர் - ஆசி).
அவர்களில் நானும் ஒருவன்,
நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்.
நானும் ஒருவன், நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
131 இந்த ஒரு சரணத்தை நாம் மறுபடியும் பாடலாமா?
இந்த ஜனங்கள் படிப்பறியாதவர்களாயிருந்தாலும்
(அவர்களுக்கு டி,டி, பி.எச்.டி போன்ற பட்டங்கள் எதுவுமில்லை)
இந்த ஜனங்கள் படிப்பறியாதவர்களாயிருந்தாலும்
உலகப் புகழ் பெற்றதாக பெருமை பாராட்ட முடியாமற் போனாலும்
(ஏதோ ஒரு பெரிய ஸ்தாபனம்)
அவர்கள் அனைவரும் தங்கள் பெந்தெகொஸ்தேவைப் பெற்று
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்.
அவருடைய வல்லமை இப்பொழுதும்
மாறாததாயுள்ளதென்று
அவர்கள் இப்பொழுது உலகெங்கிலும் பறைசாற்றுகின்றனர்
அவர்களில் நானும் ஒருவன்
என்று கூற முடிவதற்காக
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
நானும் ஒருவன், நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக மிக்க
மகிழ்ச்சியடைகிறேன்
அவர்களில் நானும் ஒருவன், நானும் ஒருவன்
அவர்களில் நானும் ஒருவன் என்று கூற முடிவதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்
ஓ, இப்பூமியின் கோடிக்கணக்கான பொன் நாணயங்களுக்காக
இந்த விலையுயர்ந்த இடத்தை விட்டு விலக மாட்டேன்.
சோதிப்பவன் என்னை எத்தனையோ முறை சோதித்து என்னை
தூண்டினாலும்
நான் தேவனுடைய ஸ்தலத்தில் பாதுகாப்பாகவும்
அவருடைய அன்பிலும் கிருபையிலும் மகிழ்ச்சியாயிருப்பேன்
நான் அல்லேலூயா பாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
132 ஓ, என்னே! நான் அதைக் குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் அல்லவா? அவர்களில் ஒருவராக இருப்பதற்காக நீங்கள் மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள் அல்லவா? அவர்களில் ஒருவராக, அந்த எளிய மக்களில் ஒருவராக, நீங்கள் உங்களை வெறுமையாக்கி, (விக்கிரகங்களுக்கு முன்பாக அல்ல), ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக வந்து, (ஒரு ஸ்தாபனத்துக்கு முன்பாக வந்து உங்கள் பெயரை புத்தகத்தில் எழுதுவது அல்ல), ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக வந்து (ஒரு ஸ்தாபன பிரமாணத்தை உச்சரிக்க அல்ல) வார்த்தை உங்களில் மாமிசமாவதற்கு அனுமதிப்பதாகும். பாருங்கள், அதுதான். நீங்கள் உங்களை தாழ்த்தினதால், அதன் மூலம் அவர் உங்களை உயர்த்தினார். (துணிகரமுள்ளவர்களாயும் இறுமாப்புள்ளவர்களாயும் இருந்து, "நான் இது, அது, மற்றது'' என்று கூறுவதல்ல) ஆனால் தாழ்மையோடும், இனிமையோடும், "என்னைப் போன்ற ஈனனை அவர் எப்படி இரட்சித்தார்?'' என்று கேட்பதே. அப்படித்தான் ஒரு உண்மையான கிறிஸ்தவன் உணருகிறான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? ஓ, அவர் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
உண்மையாக, உண்மையாக, அவர் எனக்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்
ஓ, உண்மையாக, உண்மையாக, அவர் எனக்கு மிகவும்
உண்மையுள்ளவராக இருக்கிறார்
சிலர் அவரை சந்தேகித்தாலும்,
அவரின்றி என்னால் வாழ முடியாது
ஆகையால் தான் அவரை நேசிக்கிறேன்.
அவர் எனக்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்
உண்மையாக, உண்மையாக, அவர் எனக்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்
உண்மையாக, உண்மையாக, அவர் எனக்கு மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்
சிலர் அவரை சந்தேகித்தாலும், அவரின்றி என்னால் வாழ முடியாது
ஆகையால் தான் அவரை நேசிக்கிறேன், அவர் எனக்கு
மிகவும் உண்மையுள்ளவராக இருக்கிறார்:
ஓ, ஓ, அதைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஆம், ஐயா! ஓ, இந்த மகத்தான பழைய சுவிசேஷ வழிக்காக, அந்த மகிமையுள்ள பழைய சுவிசேஷ வழியில் ஜீவிப்பதற்காக, நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
133 இப்பொமுது, நண்பர்களே, நாம் மறுபடியும் கிறிஸ்துவின் சிங்காசனத்துக்கு முன்பாக சந்திக்கும் வரைக்கும், உங்கள் ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள், தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிப்பாராக. நான் உங்களை இங்கு வைத்திருந்ததற்காக வருந்துகிறேன் என்று என்னால் சொல்ல முடியாது.
உறுமால்களை இங்கு வைத்திருப்பவர்களே, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது, என் கைகளை அவைகளின் மேல் வைத்தேன். பரிசுத்த ஆவி இறங்கினவுடனே நான் அப்படி செய்ததை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நான் அதிக தரிசனங்களுக்கு செல்லவில்லை. ஏனெனில் நான் பெலவீனமாயும் களைப்பாயும் இருக்கிறேன். இங்கு நான் இரண்டு மூன்று மணி நேரம் இருந்து, பிரசங்கம் செய்தேன் என்பதை அறிவீர்கள். தேவன் தேவனாயிருக்கிறார் என்பதை நீங்கள் காண வேண்டும் என்பதற்காக ஜெப வரிசையிலுள்ள ஒரு சிலரை மாத்திரம் நான் பகுத்தறிந்தேன். பாருங்கள்?கூடாத காரியம், முரண்பட்டது போலிருந்தாலும் உண்மையான ஒன்று (Paradox) ஆராயப்பட முடியாத காரியங்கள்… பிசாசு…
உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவில் வல்லமையுண்டு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். உங்களுக்கு வல்லமை இல்லை, உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் மிகவும் உயர்வாக உயர்த்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல, கிறிஸ்து உங்களை உயர்த்தியுள்ளார். எவ்வளவுக்கதிகமாக கிறிஸ்து உங்களை உயர்த்துகிறாரோ, அவ்வளவுக்கதிகமாக நீங்கள் உங்களை தாழ்த்த விரும்புவீர்கள். பாருங்கள், நீங்கள் தாழ்மையுள்ளவர்கள் என்று உணருவீர்கள். என்னைப் போன்ற ஈனனை அவர் எப்படி இரட்சித்தார்? எப்படி இரட்சித்தார்? ஆனால் அவர் இரட்சித்தார். அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆமென். எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது.
134 இயேசுவின் நாமத்தில் முழங்காலை மடக்கி
அவருடைய பாதங்களில் சாஷ்டங்கமாய் விழுவோம்
பரலோகத்தில் ராஜாதி ராஜாவாய் அவருக்கு முடிசூடுவோம்
நமது யாத்திரை முடிந்த பிறகு.
விலையுயர்ந்த நாமம்
(விலையுயர்ந்த நாமம்!),
ஓ என்ன இனிமை!
பூமியின் நம்பிக்கையும்
பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
விலையுயர்ந்த நாமம்
(ஓ, விலையுயர்ந்த நாமம்! அவர் அற்புதமானவர் அல்லவா?)
பூமியின் நம்பிக்கையும்
பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
இப்பொழுது, கவனியுங்கள். இதை மறக்க வேண்டாம், நீங்கள் பல்லவியைப் பாடுங்கள். நான் அதற்கு சரணத்தைப் பாடுகிறேன். பாருங்கள்? நான் பாட விரும்பும் அடுத்த சரணம் எனக்கு ஞாபகமிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.
இயேசுவின் நாமத்தில் முழங்காலை முடக்கி
அவருடைய பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுவோம்
பரலோகத்தில் ராஜாதி ராஜாவாய் அவருக்கு முடிசூடுவோம்
நமது யாத்திரை முடிந்த பிறகு
இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்
ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக
உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும்போது
அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிப்பாயாக
(அவ்வளவு தான். அந்த கையையுயர்த்தி
'பிரேக்கு'கள் போடப்படுவதை கவனியுங்கள். பாருங்கள்? பாருங்கள்?…)
அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில்
உச்சரிப்பாயாக விலையுயர்ந்த நாமம்,
ஓ என்ன இனிமை!
பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்
விலையுயர்ந்த நாமம்
(விலையுயர்ந்த நாமம்!)
ஓ என்ன இனிமை
பூமியின் நம்பிக்கையும்
பரலோகத்தின் மகிழ்ச்சியுமாம்.
135 நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை மறுபடியும் கூறுவோம். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? அந்த சரணத்தை, அதாவது இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல். ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக என்னும் சரணத்தை நாம் கண்களை மூடின வண்ணமாக பாடுவோம்:
இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்
ஒவ்வொரு கண்ணிக்கும் கேடயமாக
(இப்பொழுது கவனியுங்கள். என்ன செய்ய வேண்டும்?)
உன்னைச் சுற்றிலும் சோதனைகள் சூழும் போது
(நீ என்ன
செய்ய வேண்டும்?)
அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரிப்பாயாக
விலையுயர்ந்த நாமம்
(விலையுயர்ந்த நாமம்!)
ஓ, என்ன இனிமை!
பூமியின் நம்பிக்கையும்…
(சகோ. பிரான்ஹாம் சகோ. நெவிவிடம், ஜெபம் செய்து கூட்டத்தை முடிக்கும்படி கேட்டுக் கொள்கிறார் - ஆசி).
பூமியின் நம்பிக்கையும்…
இப்பொழுது, உங்கள் போதகர், சகோ. நெவில்.