1 பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், அமெரிக்கா
அரிசோனாவில் பல பதினைந்து ஆராதனைகளிலிருந்து வந்துள்ளபடியால் என்னுடைய தொண்டை…ஓரு அற்புதமான நேரம் உண்டாயிருந்தது. கர்த்தராகிய இயேசு எங்களை மிக அதிகமாகவும், அபரிமிதமாகவும் ஆசீர்வதித்தார். அவர்கள் கர்த்தருடைய போர் மூறை திறத்தில் சிறிதளவு பணிபுரிய முயற்சித்தனர். அதாவது முதலில் உள்ளே சென்று, அந்த இடத்தின் விளிம்புகளில் தீக்கொளுத்துவது. அதுவே அதற்கு சரியான முறையாயிருக்கும். நான் இதை நம்புகிறேன். நான் பல நாட்களுக்கு முன்பே சென்று, பீனிக்ஸ் முழுவதிலும் சன்னிஸ்லோப் டெம்பே மீசா மற்றும் அங்குள்ளவைகளினூடாக இருந்த எல்லா மிகப் பெரிய சபைகளிலும் பத்து அல்லது பன்னிரெண்டு ஆராதனைகளை நடத்தியிருந்தேன். மேலும் அதைச் சுற்றிலும் ஒருவிதமாக விளிம்புகளில் தீக்கொளுத்துவது மற்றும் அதன்பின்னர் அது ஐந்து இரவுகள் தொடர் கூட்டங்களுக்கு வழிவகுத்தது. மேலும் அது வட அமெரிக்காவில் எங்களுக்கு உண்டாயிருந்த மிகப் பெரிய தொடர் கூட்டமாய் இருந்தது. அது மிகப்பெரிய ஒன்றாக இருந்தது. அது மிகப்பெரிய காலை சிற்றுண்டியாயும், மற்றும்--மற்றும் அது அன்றிரவு விருந்தாயுங் கூட இருந்தது.
2 எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டனர் என்று என்னால் கூற முடியவில்லை. அது எத்தனையோ பேர் பரிசுத்த ஆவி பெற்றுக் கொண்டதும். மற்றும் எத்தனையோ பேர் சுகமடைந்ததும் மற்றும்--மற்றும் இரட்சிக்கப்பட்டதுமான மகத்தானதாயிருந்தது அது--அது ஒரு அற்புதமானதாக இருக்கிறது. எனவே நேரம் கடந்து செல்வதை நாம் காண்கையில் நாம் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அனேக பெரிய மனிதர் உள்ளே வந்தனர். ஒருவரான…
இது சகோதரன் நெவிலுக்கு ஏராளமான நன்மையை செய்யும். இந்த தேசத்தில் உள்ள…மிகப்பெரிய பிரஸ்பிடெரியன் கல்லூரியிலிருந்து வந்திருந்த ஒரு பிரஸ்பிடெரியன் ஊழியக்காரர் ஆவியில் நடனமாடியதை நான் கண்டேன். ஓ. என்னே, அது உண்மையாகவே ஏதோவொரு காரியமாக இருந்தது. அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார். அப்பொழுது அவர் என்னிடத்தில் கூறினார். அவர், "உங்களுடைய ஒலிநாடாக்களில் ஒன்றை நான் கேட்டேன்" என்று கூறி, "அது அவ்வளவு நன்றாக இல்லை" என்றும் கூறினார். தொடர்ந்து. "அது ஒரு விதமாக திடுக்கிடச் செய்வதாயிருந்தது. ஆனால்" என்று கூறி, "நான் அதை என்னுடைய கல்லூரிக்கு கொண்டு சென்று அதை போட்டுக் காண்பித்தேன்" என்றார். மேலும்…அங்கிருந்த அந்த மனோதத்துவ மகத்தான மனிதன், அவர்கள் எல்லோரையும் அவர் அமைதிப்படுத்திவிட்டார் என்று கூறினார். அவர், "பாருங்கள், அவர்கள் அதை எப்படியும் ஒரு முறை கேட்க வேண்டியதாய் இருந்தது" என்று கூறினார். மேலும் அவருக்கு இருந்ததாக அவர் கூறினார்…
மேலும் அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவர் தன்னுடைய சபையில் ஆவியில் நடனமாட வேண்டியதாயிருந்தது என்றார். மற்றும் அவர், "சங்கை அவர்களே. நீங்கள் எப்போது ஒரு புதிய முறையை கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர், "என்னுடைய சபை இந்த ஒன்றை கற்றுக் கொள்ளும்போதே" என்றார். அது மிகவும் அழகாக இருந்தது என்று நினைத்தேன். உங்களுக்குத் தெரியுமா. ஆம், பிரஸ்பிடெரியன் தலைமை குருவானவரே, "என்னுடைய சபை இதை கற்றுக் கொள்ளும் போதே" என்று கூறிவிட்டார். எனவே அது ஒரு நல்ல காரியமாய் இருக்கிறது. ஒரு சிறு குழந்தையைப் போல புதியதாக மற்றும் அவர்…இருந்து வந்தும், பாருங்கள். அவர் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாஸ்டனில் உள்ள மிகப்பெரிய பிரஸ்பிடெரியன் கல்லூரியில் மனோதத்துவ பேராசிரியராக இருக்க வேண்டும். பாருங்கள். அது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது.
3 மேயோவினுடைய தலைமை இருதய அறுவை சிகிச்சையாளர்களில் ஒருவர் ஆவியில் சுவிசேஷத்தை பிரங்கித்ததையும் மற்றும் அந்நிய பாஷைகளைப் பேசினதையும் நான் கண்டேன். ஓ. என்னே! நான் மற்றொரு நிபுணரைக் கண்டேன். அவர் ஒரு ஏழாம் நாள் ஆசரிப்புக்காரராயிருந்தார். அதிலிருந்து வெளியே…அவர் இருதயம் மற்றும் தொண்டை சம்பந்தமான ஒரு--ஒரு--ஒரு நிபுணராய் இருந்தார். மேலும் வயோதிக மனிதனாகிய அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக்கொண்டார். அவர் அதைப் பெற்றுக்கொண்டார். ஓர் இரவு நீதிமன்றத்தில் நான் அவர் மீது கைகளை வைத்தபோது. அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார். எனவே…நம்முடைய கர்த்தர் செய்த அநேக காரியங்களுக்காகவும் மற்றும் இந்த நேரத்தில் குறிப்பாக பார்க்கிறவைகளுக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அப்பொழுது நான் அவர்களிடத்தில். "உறங்கும் கன்னியர் எண்ணெய்யைக் கேட்கத் துவங்கும் இது என்ன மணி நேரமாக உள்ளது என்று நீங்கள் தெளிவாக உணருகின்நீர்களா?" என்று கேட்டேன். அது மணவாளன் வந்ததும் ஆயத்தமாய் இருந்த ஜனங்கள், உள்ளே சென்றதுமான நேரமுமாயிருந்தது. ஓ நாம் இங்கே இந்த கடைசி நாட்களில் ஜீவித்து கொண்டிருக்கிறோம் என்று அறிந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புரிகிறதா? உலகம் இதுவரை அறிந்திராத மிக பயங்கரமான நேரங்கள் ஒன்றில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்றும் இது கர்த்தருடைய வருகைக்கு முன்னதானது என்றும் நான் நம்புகிறேன். அது அற்புதமாயில்லையா? அதாவது இப்போது எந்த நேரத்திலும் சிந்தித்துப் பாருங்கள். எல்லா வேதவாக்கியங்களும் கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டுள்ளனவே! எனவே எந்த நேரத்திலும் நாம் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் நாம் அந்த விதமான எதிர்பார்ப்புகளின் கீழ் ஜீவிக்க வேண்டும். அதாவது எந்த நேரத்திலும் அது சம்பவிக்கலாம். ஜெபித்து ஆயத்தமாயிருங்கள்!
4 8… இன்றைக்கு சில நேர்முக பேட்டிகளில், நான் ஒரு நான் ஃபார்மோசாவிலிருந்து வந்த ஒரு மிஷனரியை எழுபத்தி மூன்று வயதுடைய வீரமிக்க பெண்மணியை சந்தித்தேன். ஆனால் அவளோ சுமார் நாற்பத்தைந்து வயதைக் கடந்தவளைப் போன்று இருப்பாள். மேலும் அவள் இன்னமும் ஒரு--ஒரு குமாரியாய் இருக்கிறாள். மேலும் அவள் ஒரு அழகான வாலிபப் பெண்ணாய் இருந்திருக்க வேண்டும். அவள் "உள்ளதை" உள்ளதென்றும். "இல்லாததை" இல்லையென்றும் கூறின ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்க்கப்பட்டிருந்தாள் என்றும் அவள் கூறினாள். அவள் கண்டிப்பான போதனையின் கீழ் வளர்ந்திருந்தாள். மேலும் அவள், "சகோதரன் பிரான்ஹாமே கிட்டத்தட்ட அந்த குறிப்பிட்ட வயதில் ஓ" என்று கூறி "சுமார் எட்டு வயதில் நான் என் வாழ்க்கையை கர்த்தராகிய இயேசுவுக்கு அளித்தேன் என நான் நினைத்தேன்" என்றாள். அவள் தொடர்ந்து "சுமார் பன்னிரெண்டு வயதில், நான் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபன ஊழியக்காரரால் கவர்ந்திழுக்கப்பட்டு நான் இரண்டாவது ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறி மற்றும் "அதில் பயங்கரமாக வஞ்சிக்கப்பட்டேன்" என்றும் கூறினாள். ஆனால் அவள் "சுமார் பதினேழு வயதில். நான் உண்மையாகவே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டேன்" என்று கூறினாள். மேலும் அவள் இந்த உறங்கும் பாப்டிஸ்ட் சபைகளை எழுப்ப முயற்சிப்பதற்காக இப்பொழுது இங்கே திரும்ப வந்திருக்கிறாள். "மரித்துப்போன" எந்த காரியத்தையாவது அவள் கண்டிருந்தால் அது ஒரு பாப்டிஸ்டாக தானே உள்ளது என்று அவள் கூறினாள். அவள் "இந்த மரித்த பாப்டிஸ்ட் சபைகள் இங்கே திரும்பவும் உள்ளனவா" என்று கேட்டாள். அவள் அவைகளை "பிணவறைகள்" என்று அழைத்தாள்.
நான் "பாருங்கள். நீங்கள் போர்முனையில் இருக்கும்போது… என்று நான் யூகிக்கிறேன்" என்றாள். இப்பொழுது அவள்… என்று நான் நினைக்கிறேன். சற்று சிந்தித்துப் பாருங்கள். எனக்கு ஐம்பத்திரண்டு. நான் பிறப்பதற்கு முன்பே அவள் ஒரு மிஷனரியாக இருந்தாள். அப்படியிருக்க நான் ஊழியக்களத்தில் இறங்க எனக்கு மிகவும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். மேலும் நான். "என்னே, கர்த்தாவே என்னை மன்னியும்" என்றே நினைக்கிறேன்.
5 மேலும் அவள் அருமையாகவும் மிகவும் பிரகாசமாகவும் மற்றும் புத்திசாலியாகவும் இருக்கிறாள். அதன் பின்னர் ஊழியப் பாதையில் நடந்த அனுபவங்களையும் மற்றும் எப்படி ஃபார்மோசாவிலும் மற்றும்--மற்றும் சீனா ஜப்பான் போன்ற இடங்களில் சுவிசேஷம் எவ்வாறு தேவைப்பட்டது என்பதை எனக்குக் கூறிக்கொண்டிருந்தாள். எனவே அவர்கள் அவளை ஊழியக் களத்திலிருந்து திருப்பி அனுப்பிவிட்டனர். "நீங்கள் எழுபது வயதைக் கடந்த பிறகு உங்களால் ஊழியக் களங்களுக்குள் செல்ல முடியாது என்பதை. நீங்கள் அறிவீர்கள்" என்று கூறினாள். எனவே அவர்கள் அவளை திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனாலும் அவள் அமைதியாயிருக்க போவதில்லை. அவள் இந்த எல்லா பாப்டிஸ்டு தொடர் கூட்டங்களுக்கும் போய்க் கொண்டிருக்கிறாள். மேலும் அவள் "பில்லி கிரஹாம்" என்று கூறி, "அவர் பாப்டிஸ்டு செய்தியை கொண்டு செல்லுகின்ற விதத்தையும் பாப்டிஸ்டு சபைக்கு கடன் பட்டவராயிருந்ததையும்" கூறினாள். மேலும், "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுமளவிற்கு அவர் அவர்களை வெகு தூரம் அழைத்துச் செல்கிறதில்லை" என்று கூறினார். அவள் கூறினாள் ஓ. சகோதரியே நீ அதனோடு தரித்திரு, அது பரவாயில்லை அவள் கூறினாள். அங்கிருந்து வந்த அந்த சீனர்களை அவர்களை அவர்களோடு செல்ல அவள் அனுமதிக்கமாட்டாள் என்றும் "நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம்" என்றும் கூறினாள். மேலும் "அதெல்லாம் சரிதான்" என்று கூறினாள். ஏதோ காரியம் சம்பவிக்கும் வரை அவள் அவர்களை அங்கேயே தரித்திருக்கச் செய்தாள் என்றும் மற்றும் அதன் பின்னரே அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக மாறினார்கள் என்றும் கூறினாள்.
நான் "சகோதரியே அந்த விதமாகத்தான் அது செல்கிறது. அவர்களிடத்தில் சொல்லுங்கள். ஏதோ காரியம் சம்பவிக்கும் வரை அவர்கள் தரித்திருக்கட்டும்" என்று கூறினேன்.
6 இப்பொழுது ஒன்பது நாட்களுக்குப் பிறகு "நாம் அதைப் பெற்றுக் கொண்டோம். பாருங்கள். நாம் விசுவாசத்தினால் அதை ஏற்றுக் கொண்டு நம்முடைய ஊழியத்தை தொடர்வோம்" என்று அப்போஸ்தலர்கள் கூறியிருந்தால் என்னவாயிருக்கும். பாருங்கள். அது ஒருபோதும் கிரியை செய்திருந்திருக்காது. ஏதோ ஒன்று நடந்தது என்பதை அவர்களே அறிந்து கொள்ளும் வரை அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். மேலும் இன்றைக்கு நம்மோடு உள்ள தொல்லை அதுவேயாகும். நாம் நீண்ட நேரம் தரித்திருப்பதில்லை. பாருங்கள். அந்தக் காரணத்தினால்தான் அதன் பின்னர் நாம் எந்தவிதமான ஒரு வாழ்க்கையும் வாழ்ந்து எந்த காரியத்தையும் செய்கிறோம். அது நம்மை தொந்தரவு செய்கிறதில்லை. ஏனென்றால் நாம் அங்கே நீண்ட நேரம் தரித்திருக்கிறதில்லை. இன்றைக்கு நாம் உள்ளே இருக்கிறோம். நாளைக்கு வெளியே இருக்கிறோம். மேலும் இந்த விதமாக மற்றும் அந்த விதமாக இருக்கிறோம். நீங்கள் உள்ளே வந்து உங்களுக்கு பின்னால் இருக்கும் வாசல் மூடும் வரை நீங்கள் நீண்ட நேரம் தரித்திருப்பீர்களானால். அப்பொழுது நீங்கள் அங்கேயே தரித்திருக்கப் போகிறீர்கள். நீங்கள் மீட்பின் நாள் வரை முத்திரையிடப் பட்டிருக்கிறீர்கள். நான் அதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
7 மேலும் நான் கூறினது போல பீனிக்ஸ் மற்றும் அந்த பள்ளத்தாக்கிலூடாக அங்கிருந்த அநேக கிறிஸ்தவ சபைகளில் எங்களுக்கு ஒரு மகத்தான நேரம் உண்டாயிருந்தது. அவர்களில் அநேகர் அந்த அருமையான ஜீவனைப் பற்றிக்கொண்டனர.
நான் மேலே தெற்கத்திய மலைக்கு அங்கே பின்னாக நானும். மனைவியுமாக சென்றிருந்தோம். அப்பொழுது ஒரு நாள் நண்பர்களும், என் சகோதரன், டாக், என் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்திருந்தான். மற்றும்--மற்றும் சகோதரன் மற்றும் சகோதரி உட் என் பையனை வைத்திருந்தனர். மேலும் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு இரண்டாவது தேனிலவு உண்டாயிருந்தது. அப்பொழுது அவள். "பில். உமக்குத் தெரியுமா, முதல் தேனிலவைக் காட்டிலும் இது மிகச் சிறந்ததாக இருந்தது" என்றாள். அவள்"முதன் முறையாக நாங்கள் ஒரு தேனிலவுக்குச் சென்றோம். நான் செய்த ஒரே காரியம் ஒரு முகாமில் அமர்ந்திருந்து, நீர் வேட்டையிலிருந்து வருவதற்காக காத்துக் கொண்டிருந்தது தான்" என்று கூறினாள். இவ்வாறு அவள் கூறினாள்.
உங்களுக்குத் தெரியும் நான் வழக்கமாக ஒரு சிறு தந்திரத்தை பயன்படுத்துவதுண்டு. நான் "சரி, இப்பொழுது நான் அதிக பணம் வைத்திருக்கவில்லை"என்று எண்ணினேன். ஒரு வேட்டைப் பயணம் செய்வதற்கு போதுமான பணத்தை ஒரு அப்ப மாவு தகரப் பெட்டியில் சேமித்து வைத்திருந்தேன். மேலும் அதே சமயத்தில் நான் அந்த இலையுதிர் காலத்தில் விவாகம் செய்து கொள்ளப் போவதாகவும் இருந்தேன். எனவே நான் "அவை எல்லாவற்றையும் ஒன்றாக செய்யலாம்" என்று நினைத்தேன். உங்களுக்கு தெரியுமா, மேலும்--மேலும் நான் ஒரு வேட்டை பயணத்திற்கு செல்லப் போகும் போது அது தேன் நிலவாக இருக்கும். உங்களுக்குத் தெரியும். எனவே நாங்கள் ஒருங்கிணைந்தோம். ஆனால் இந்த முறை நாங்கள் அதற்காக பணம் செலுத்திவிட்டு உண்மையாகவே வெளியே சென்றோம். மேலும் ஏன் ஒரு மகத்தான நேரம் உண்டாயிருந்தது.
8 மேலும் அவர்களில் அநேகர் இங்கே கூடாரத்திலிருந்து வருகின்றனர். அங்கே பின்னால் சகோதரன் சாத்மேன் அவருடைய குடும்பம் மற்றும் சகோதரன் டாம் சிம்சன் மற்றும் அவர்களும், சகோதரன் மக்கையரும் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் எல்லோரும் கர்த்தருக்குள் மகத்தான நேரங்களை உடையவர்களாக இருந்தோம்.
9 எனவே நாங்கள் தெற்கத்திய மலைமேல் சென்றோம். அது தென் ஃபீனிக்ஸில் உள்ளது. அந்த அழுத்தத்தில் இருந்து நாங்கள் தூரமாக விலகிச் சென்றிருந்தோம். ஹூ! ஒரு நவீன நகரத்தில் ஒரு அழுத்தம்! ஜனங்கள் பூமியின் மேல் பெருகத் துவங்கும்போது பாவமும் வன்முறையும் தோன்றுவதில் வியப்பொன்றுமில்லையே. மேலும் நான் அங்கே நோக்கிப் பார்த்தேன். ஃபீனிக்ஸின் பள்ளத்தாக்கை நம்மால் காண முடிந்தளவு உயரத்திலே அமர்ந்து நான் மனைவியிடத்தில் "நாம் இங்கே அமர்ந்து கொண்டிருந்த இந்த பதினைந்து நிமிடங்களில் எத்தனை முறை கர்த்தருடைய நாமம் அந்தப் பட்டணத்தில் வீணாக வழங்கப்பட்டுள்ளது என்று நான் எதிர்பார்க்கிறேன்?" என்று கூறினேன்ஹூம்?
பாருங்கள். கிட்டத்தட்ட பெருநகர பகுதியில் டெம்பே மற்றும்--மற்றும் சன்னிஸ்லோப் மற்றும் அதனூடாக எடுத்துக்கொண்டால் அந்த பள்ளத்தாக்கில் பத்து இலட்சம் ஜனங்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான், "முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கேயே கற்றாழை மற்றும் இங்குள்ள ஓநாய்களைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. மேலும் அது அநேகமாக கர்த்தருடைய பார்வையில் அது முன்பிருந்த விதமாகவே இருந்திருந்தால், அது நன்றாக இருக்கும்" என்று கூறினேன். அது உண்மை, அவர்கள் அங்கே அந்த பெரிய பெரிய பட்டணத்தில் அழகான வீடுகள் போன்றவற்றை கட்டியிருப்பது அழகாக இருக்கிறது. ஆனால் அது அருமையாயிருக்கும் புருஷனும் ஸ்திரீகளும் வீதிகளில் நடந்து ஆகாயத்தை நோக்கியவாறு தங்களுடைய கரங்களை உயர்த்தி தேவனை மகிமைப்படுத்தி அவருக்கு நன்றி செலுத்துவது நன்றாக இருக்கும். ஆனால், அதற்கு பதிலாக சபித்தலும், மட்டுமீறி நடத்தலும், குடித்தலுமாயுள்ளது. நாகரிகம் உள்ளே வரட்டும். அங்கே பொல்லாங்கு இருக்கும்.
10 நான். "இந்த நகரத்தில் நேற்று இரவு, நேற்று மாலை எத்தனை விபச்சாரங்கள் நடந்தன! எத்தனை பேர் குடித்தனர்! எத்தனை வீடுகள்…இந்தப் பெரிய நகரத்தில், கடந்த ஒரு மணி நேரத்தில் எத்தனை--எத்தனை முறைகேடான காரியங்கள் நடந்துள்ளன!" என்றேன்.
மேலும் மனைவி என்னிடத்தில் கூறினாள். நான் நினைத்தது போலவே, இந்த விதமான ஒரு காரியத்தை, "அப்படியானால் இங்கு வந்து என்ன பயன்? நீங்கள் ஏன் வீட்டை விட்டு இங்கே வந்தீர்கள்?" என்று அவள் அப்பொழுது கூறினாள்.
அப்பொழுது நான். "அது என்ன என்பதோ இதோ உள்ளது. அது எல்லாவற்றிற்கும் மேலாக, இது நிச்சயமாகவே பெரும்பான்மையில் உள்ளது. ஆனால் அங்கு கீழே ஒரு சிறிய சிறுபான்மை உள்ளது. ஆராதனைக்கு வந்தபோது, அங்கே கடந்த மாலை எத்தனை விசுவாச ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன?" என்று கேட்டேன்.
11 சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே சபைகளில் நிரம்பி வழியும் அளவிற்கு அவர் நமக்கு மிகவும் அவ்வளவு நல்லவராக இருந்தார். அதாவது அந்த இடத்தைச் சுற்றியுள்ள முற்றங்களில் கூட நீங்கள் உள்ளே நுழைய முடியாது. மேலும் அவர்களுடைய ஸ்தாபனங்கள் முதலியவற்றை, கர்த்தர் தம்முடைய ஆவியை ஊற்றி அவர்களை ஆசீர்வதித்தார். மேலும் நான் நான் எந்தக் காரியங்களையும் ஒரு போதும் கண்டிக்காமலிருக்கவில்லை. சுவிசேஷத்தின் நிமித்தம் உடனடியாக தொடர்ந்து கண்டித்தேன். சில நேரங்களில். உண்மையாகவே, அது மிகவும் கடினமானது. ஆனால் அது நான் அறிந்துள்ள ஒரே வழியாய் இருக்கிறது. அதுவோ இங்கு கடினமாக உள்ளது. எனவே நாம் இதற்கு மேல் நிற்க வேண்டிய அந்த நியாயத்தீர்ப்பில் அது கடினமாக இருக்கப் போகிறது. எனவே மொத்தத்தில், அது ஒரு மகிமையான காரியமாய் இருந்தது. மேலும் ஜெபித்து, எங்களைத் தாங்கி, மற்றும்--மற்றும் சிலுவைக்கு அருகில் எங்களை வைத்திருந்ததற்காக இங்குள்ள சபைக்கு நாங்கள் நன்றி கூற விரும்புகிறோம்.
இப்பொழுது இங்கு உள்ள நம்முடைய சொந்த சபைக்குத் திரும்ப வருகிறேன். நான் சில வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்காக ஒருகால் இந்தக் காலை வந்திருக்கலாம். காத்துக் கொண்டிருந்த அநேக நேர்முகப் பேட்டிகளை நான் பெற்றிருந்தேன். அவற்றில் சில நான் இங்கு வந்ததிலிருந்து கடந்த இரண்டு நாட்களாக நான் பெற்றுக் கொண்டவையாகும். நான் சென்றதிலிருந்து ஒரு மாதமாக காத்திருக்கின்றனர். ஆகையால் அவர்கள் தங்களால் முடிந்தவரை துரிதமாக அவைகளில் பங்கெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருந்து வருகிற வெவ்வேறு இடங்களிலிருந்து பங்கெடுக்க முயற்சிக்கின்றனர்.
12 கர்த்தருக்கு சித்தமானால். கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரங்களில் நான் டூசானுக்கு அதனுடைய கீழ் பாகத்திற்கு செல்லப் போகிறேன். மேலும் இப்பொழுது இந்த நேரத்தில் வர்த்தக புருஷராகிய நீங்கள் இதற்காக ஜெபிக்கலாம்… முதலில் அது கர்த்தருடைய சித்தமாக இருக்கிறது என்று நான்கு விசுவாசிக்கும் வரை நான் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஒரு போதும் விரும்புவதில்லை. இப்பொழுது. வருகிற அடுத்த தொடர் கூட்டம் மொடெஸ்டோவில் நடக்கவுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்து வாஷிங்டன் மாநிலம், வாஷிங்டன், மற்றும் சூரிச், அதன் பின்னர் பாலஸ்தீனம். அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும். மேலும் இவை அனைத்தும் இப்போது முதல் ஜூன் வரை நடக்கும். இந்த எல்லா தொடர் கூட்டங்களிலும் நான் பேச்சாளராக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறேன். மேலும் இது மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல எனக்கு ஒரு வாய்ப்பினை அளிக்கலாம். அவர்களுடைய அழைப்பை, ஒவ்வொரு மாதமும் நாங்கள் அழைக்கப்படுகின்றோம். ஆனால் ஒன்று.
13 சபைகளில், பெந்தேகோஸ்தே சபைகளில் ஒரு பெரிய பிளவு உள்ளது. நீங்கள் ஒரு பக்கம் சென்றால் மற்றொன்றுக்கு அதனோடு எந்த சம்பந்தமும் இருக்காது. மேலும் அவர்கள் ஒன்று சேர்ந்து ஒத்துழைக்க மாட்டார்கள். அதனால் நான் இப்பொழுது சுமார் ஐந்து வருடங்களாக என் இருதயத்தில் ஒரு அழைப்போடு செல்லாமலிருக்கிறேன். மேலும் இப்பொழுது ஒருகால் வர்த்தக புருஷர். நிலை நிறுத்துவதற்கு போதுமானதாக, அதாவது இரு பக்கங்களிலுமிருந்து. நீங்கள் பாருங்கள். என்னை அழைத்துச் சென்றால், அப்பொழுது அது அவர்களை செழித்தோங்கி வளரச் செய்யும். அவர்களுடைய நிதித் தேவைகள்--அங்கு உள்ள அவர்களுடைய சபைகளின் தேவை நிமித்தமாக அவர்கள் யாவரும் வந்து அதில் ஒத்துழைக்க வேண்டும். எனவே அவர்கள் தங்களுடைய நிலையைக் காப்பாற்ற வர வேண்டும் நீங்கள் பாருங்கள். ஆகையால் அது ஒரு வேளை கர்த்தருடைய சித்தமாக இருக்கலாம். இருப்பினும். எனக்கு தெரியாது. அது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு தெரியாது.
14 அதன் பின்னர் இந்த வருடத்தில் சகோதரன் பார்டர்ஸ் எனக்கு பயணத்திட்டத்தை அல்லது அழைப்புகளைக் கொடுப்பார். மேலும் நேர்மையாக கூற வேண்டுமானால், இது கடந்த கிறிஸ்மஸிற்குப் பிறகு வந்த, அழைப்பிதழ்களின் இரண்டு மடங்கு தடிமனான ஒரு புத்தகமாகும். ஒரு மானிட சிந்தை இதற்கு தீர்வு காண முயற்சிப்பது முடியாததாகும். அதனால் நான் அவைகளில் எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஒரு கூட்டத்தை எடுத்துக் கொள்ளப் போகிறேன். அங்கிருந்து எங்கு செல்ல வேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார் என்று காத்திருந்து பார்ப்பேன். அதன் பின்னர் நான் அடுத்ததற்கு செல்வேன். அதன் பின்னர் அடுத்தது மற்றும் அவர் எங்கெல்லாம் என்னை செல்லும்படி சொல்லுகிறாரோ அங்கு செல்வேன். எனவே, நீங்கள் எனக்காக ஜெபியுங்கள்.
கடந்த வருடம். சகோதரனோடு…இல்லை அங்கே சகோதரி காக்ஸ்ஸோடு, இந்த பயணத்தை ஏங்கரேஜ் வரை செல்ல சகோதரன் பிரைட் என்னை அழைத்த போது எனக்கு நினைவிருக்கிறது. அது சரி என்றே நான் யூகித்துக் கொண்டு அதன் பேரில் சென்றிருந்தால் என்னவாயிருக்கும்?
இப்பொழுது நான் அதை சிந்தித்துக் கொண்டிருந்தேன். யூகித்தல், நான் அதைக் குறித்த பொருளின் பேரில் பிரசங்கத்தேன். நான் அங்கே வெளியே சென்றதும் சொன்னேன். ஒலி நாடாக்களை பதிவு செய்யும் பையன்களிடம் சொன்னேன். "ஒலி நாடாக்களில் பதிவு செய்ய வேண்டாம். ஒலி நாடக்களை வெளியே அனுப்பவும் வேண்டாம். நான் இங்கே பிரசங்கித்த அதே பாடப் பொருள்களின் பெயரில் பிரசங்கிக்கப் போகிறேன்" என்றேன். நான் இங்கு பிரசங்கித்த ஒன்றையே பிரசங்கித்தேன் என்று நான் நினைக்கிறேன். அவைகளில் மற்றவை யாவும் புதிதானவைகளாக இருந்தன. சகோதரன் மக்கையர் அவைகளை, அவை எல்லாவற்றையும் வைத்துள்ளார்.
15 யூகித்தல், எனவே நான் சென்றிருந்தால் அங்கே யூகித்திருந்தால், அது நடந்ததை விட நிச்சயமாகவே வித்தியாசமாக இருந்திருக்கும். தரிசனம் நிறைவேறியிருந்திருக்காது. ஆனால் தரிசனம் நிறைவேற்றப்பட்டது. கர்த்தர் எப்படி ஆசீர்வதித்தார் என்பதை, அது குறித்து நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள்.
இப்பொழுது என்னுடைய இருதயத்தில் நீண்ட காலமாக மற்றொரு காரியம் இருந்து வருகிறது. சபையே, அதற்காக ஜெபியுங்கள். நான் ஒரு சிறு பையனாக இருந்து வந்தது முதற்கொண்டே நான் இந்த தேசத்தில் இருப்பதனால் ஒருபோதும் திருப்தியடைந்திருக்கவில்லை என்பதை இங்குள்ள ஜனங்களாகிய நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். என் முழு இருதயமும் எப்பொழுதுமே மேற்கு நோக்கியே வாஞ்சித்து வந்துள்ளது. அந்த சிறு இடத்தில் அங்கே என்னுடைய மாமியாருக்காக நான் புல் வெட்டிக் கொண்டிருந்த போது எனக்கு நினைவிருக்கிறது. அது… அந்த இடம், இங்கு உள்ள சபைக்கு சொந்தமானது. நான் படிகளில் ஏறிக்கொண்டிருந்த போது பரிசுத்த ஆவியானவர் என்னிடம் பேசினார். அப்பொழுது அவர் "ஆபிரகாமைப்போல நீ எனக்கு முழுமையாக கீழ்ப்படியும் வரை என்னால் உன்னை மேற்கொண்டு ஆசீர்வதிக்க முடியாது" என்றார். பார்த்தீர்களா? மேலும் ஆபிரகாமை, தேவன் அவனிடத்தில் தன்னைப் பிரித்துக் கொண்டு தனியாக செல்லும்படிக்கு கூறினார். மேலும், அவன் அதைச் செய்த போது அவன் தன்னோடு தன்னுடைய தகப்பனையும், தன்னுடைய சகோதரன் மகனையும் கூட்டிக் கொண்டு சென்றான். மேலும் ஆபிரகாம் தேவனுக்கு முழுமையாக கீழ்ப்படியும் வரை. அதன் பின்னரே தேவன் அவனுக்கு வாக்களித்திருந்த ஒரு முழுமையான நிறைவேறுதல் உண்டாயிருந்தது. மேலும் அந்தப் பிணைப்பு என்னை இங்கு பிணைத்துள்ள அந்த முக்கியமான பிணைப்புகளில் ஒன்று என்னுடைய தாயாய் இருந்தது. நீங்கள் அதை அறிவீர்கள். மேலும் இப்பொழுது தாயார் கர்த்தராகிய இயேசுவோடு இருக்கும்படி சென்றுள்ளார். மேலும் எந்த வழியாக திரும்ப வேண்டும் என்றும், என்ன செய்ய வேண்டும் என்றும், எனக்குத்--எனக்குத் தெரியவில்லை. எனவே நீங்கள் எனக்காக ஜெபியுங்கள்.
16 இப்பொழுது சகோதரன் நெவில், நான் மேடையில் நடந்து சென்றேன். அப்பொழுது நான். "சரி. நான் அங்கு செல்லலாம்" என்று நினைத்தேன். அப்பொழுது ஒருவர் என்னை சந்தித்து என்னே, அவர்கள் இன்றிரவு ஒரு பெரிய ஆராதனையை ஏற்பாடு செய்துள்ளனர்" என்று கூறினார். மேலும் "அவர்கள் பிரசங்க ஆராதனையையும், பாடல் ஆராதனையையும், ஜெப ஆராதனையையும் மற்றும் அதன் பின்னர் காணிக்கைகளையும் எடுக்கப் போகின்றனர் என்றும் அதன் பின்னர் அவர்கள் பாதம் கழுவுதலையும், இராபோஜனத்தையும் மற்றும் ஞானஸ்நான ஆராதனையும் வைத்துள்ளனர்" என்று கூறினார்.
நான். "பாவம் சகோதரனே! என்னே! என்னே, அதெல்லாம் அது என்னவென்று எனக்கு தெரியும். அநேகமாக இந்த காலை கடினமான பிரசங்கத்திற்கு பிறகு இருக்கும்" என்று எண்ணினேன். இப்பொழுது நான், "நான் அங்கே நழுவிச் சென்று, ஒருகால் நான் இராபோஜனம் கொடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவார்" என்று நினைத்தேன்.
மேலும் அவர், "நீங்கள் வழி நடத்தப்படுவதாக உணர்ந்தால் இன்றிரவு நீர் எங்களுக்காக பேசுவீரா?" என்று கேட்டார். எனவே அதன் அர்த்தம் என்னவென்பதை நாம் அறிந்திருந்தேன். ஆகவே அதன்பின்னர் நான் திரும்பிச் சென்று இங்கே ஒரு வேத வாக்கியத்தை குறித்துக் கொண்டு மற்றும் ஒரு சில குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கான ஒரு சிறிய செய்தியை அளிக்கும்படி தேவனுக்கு உதவி செய்யலாம். அதன் பின்னர் நாம் நம்முடைய--நம்முடைய பாதம்-கழுவுதல் மற்றும் அதன் பின்னர் இராபோஜனத்தையும் வைத்துக் கொள்வோம். மேலும் அப்பொழுது மற்றும் ஓ நான், அதற்கு முன்பே அப்பொழுது நான் ஒருகால் முடித்துவிடலாம். இல்லை, நான் உங்களை கிண்டல் செய்து கொண்டிருந்தேன். சுமார் இருபது முப்பது நிமிடங்கள் மற்றும் அதன் பின்னர் நாம் ஞானஸ்நானம் பாதம்…வைத்துக் கொள்வோம். இதனை அடுத்து வருவது என்ன. இராப்போஜனமா? இதனைப் பின்தொடர்ந்து வருகிறதோ இராப்போஜனம். அதன் பின்னர் ஞானஸ்நான ஆராதனை.
17 இப்பொழுது. நீங்கள் ஞானஸ்நானம் பெறப்போகிறீர்கள் என்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்பொழுது தேவனுக்கு சித்தமானால் மற்றும் அது அவரைப் பிரியப்படுத்துமானால் மற்றும் அது மேய்ப்பருக்கும் மற்ற ஜனங்களுக்கும் சரியாயிருக்கும். அடுத்த ஞாயிறு காலை நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். கர்த்தருக்கு சித்தமானால். இந்த வருகின்ற ஞாயிறு பேசவுள்ளேன். ஏனென்றால் நான் ஒரு வேளை வருகின்ற ஞாயிறு நான் மீண்டும் போய் விடுவேன். மேலும் இப்பொழுது நான் இங்கே இருக்கும் பொழுதே நான் வந்து மற்றும்--மற்றும் இங்கே பேசவும் விரும்புகிறேன். ஏனென்றால் நாம் ஒரு விதமாக சகோதரர்களாக இணைந்திருக்கின்றோம். சகோதரன் நெவில் மற்றும் நான் இங்கே, மேலும் நாம்--நாம் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். மேலும் நாம்--நாம்--நாம் நெருக்கமாக இருந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள விரும்புகிறோம்…
18 இது புனிதமானதாகத் தெரிகிறது. ஆனால் அது உங்களுக்கு அந்த விதமாக தோன்றவில்லை என்று நான் நம்புகிறேன். திரு. கோரி ஒருமுறை கூறினார். அவர்…நான் ஒரு விளக்கை, நிறுவனத்திற்காக கண்ணாடி குமிழ் விளக்குகளை விற்கும் விற்பனைக் குழுவில் இருந்தேன். மேலும் அவர் நான்கு அல்லது ஐந்து வருடங்களாக வைத்திருக்கும் ஏராளமான மிக அதிகமான கண்ணாடிக் குமிழ் விளக்குகளை வாங்கினார். நான் திரும்பி அவரிடத்திலிருந்து ஒரு ஃபோர்டு நிறுவனத்திற்காக அவைகளை வாங்கினேன். அப்பொழுது அவர் "பில்லி, நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறோம் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். எனவே அதுதான். தேவைப்படும் நேரத்தில் அந்த விதமாக உதவுவது. நல்லது, ஆகையால் அது--அது உண்மையே. ஒருவருக்கொருவர் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் மற்றும் ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்ய வேண்டும் என்றும் நாம் அறிந்திருக்கிறோம்.
19 இப்பொழுது. இப்பொழுது அதனுடைய உண்மையான பகுதிக்கு நாம் செல்வோமாக. மேலும் நான் தவறாக நினைக்க வில்லையென்றால், நான் இங்கு மிகவும் பின்னால் சகோதரன் பீலரையும், மற்றொரு ஊழியக்காரர சகோதரரையும் நான் காண்கிறேன் என்று நான் நம்புகிறேன். இன்றைக்கு நான் கடந்து சென்ற போது, சகோதரன் ஜூனி ஜாக்சன் இங்கே முற்றத்தில் சகோதரன் கிரீச்சுடன் நின்று கொண்டிருந்தார். அவர்களுக்கு எப்பொழுதாவது இங்கே ஒரு ஆராதனை இருக்கிறதா? ஞானஸ்நான ஆராதனை எனக்குத் தெரியும். சரி, அவர்கள் அந்த நபரை அழைத்து வருவார்களானால் நாம் தண்ணீரை நிரப்பலாம். நாம்--நாம் தண்ணீரை வைத்துள்ளோம். சரி.
20 எனவே இப்பொழுது நாம் இராப்போஜனத்தை நடத்தப் போகிறோம். நான் இராபோஜனத்தைக் குறித்து ஒரு சில நிமிடங்கள் பேசினால் நலமாயிருக்கும் என்று நான் நினைத்தேன்.
இப்பொழுது, நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்பு இப்பொழுது நாம் எல்லாவற்றையும் மற்றும் நம்முடைய எல்லா குழந்தைத்தனமான மற்றும் குழந்தைத்தனமான போக்குகளை இப்பொழுது ஒருபுறம் ஒதுக்கி வைப்போமாக. மேலும்--மேலும் ஜெபத்தினால் தேவனுடைய பிரசன்னத்தை அணுகுவோமாக. நாம் ஜெபம் செய்வோமாக. இப்பொழுது நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு நம்முடைய இருதயங்களும் கூட வணங்கியிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இங்கு ஒரு விண்ணப்பம் இருக்குமாயின்…நீங்கள் அதை தேவனுக்குத் தெரியப்படுத்த விரும்பினால், தேவனுக்கு முன்பாக நான் அதை நினைவுகூர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்களுடைய கரத்தை தேவனிடம் உயர்த்துவதன் மூலம் நீங்கள் அதை தெரியப்படுத்தவும். தேவன் ஒவ்வொரு மற்றும் ஒவ்வொருவருடைய வேண்டுகோளையும் அருள்வாராக.
21 சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவே, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் அவரை வீற்றிருக்க செய்து, அவர் எங்களுக்காக செய்ததை நாங்கள் விசுவாசிக்கும் காரியங்களின் பேரிலும் மற்றும் அதை அவ்வண்ணமே அறிக்கையிடுவதன் பேரிலும் வேண்டுதல் செய்யும்படிக்கு எப்போதும் உயிரோடிருக்கச் செய்தீர், தேவனாகிய கர்த்தாவே. இன்றிரவு, நீர் எங்களுடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஓ. நாங்கள் எல்லா நேரங்களிலும் தொடர்ந்து இரத்தத்தின் கீழ இருக்கவே விரும்புகிறோம். ஏனென்றால் என்ன சம்பவிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. கிட்டத்தட்ட எல்லா காரியங்களும் சுற்றிக் கட்டப்பட்டு கர்த்தருடைய வருகையோ சமீபமாயிருப்பதை, கர்த்தாவே நாங்கள் உணர்கிறோம். மேலும் நாங்கள் ஒரு பயணத்தை மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒரு பயணத்தை குறித்து நினைக்கும் போது, நாங்கள் கைப்பெட்டிகளைக் குறித்தும் மற்றும்--மற்றும் கூடுதலான துணிகளைக் குறித்தும் மற்றும் கூடுதலான பாதரட்சைகளைக் குறித்து நினைக்கலாம். ஆனால் இந்த பயணமோ அதிலிருந்து எவ்வளவு வித்தியாசமானது! இது மூட்டை கட்டுவதல்ல: இது மூட்டைகளை அவிழ்த்து ஒரு புறமாக ஒதுக்கி வைப்பதாகும். உம்முடைய மகத்தான ஊழியக்காரனாகிய பவுல். எபிரெயரின் புத்தகம். 12-ம் அதிகாரத்தில் கூறினதுபோல"பாரமான யாவற்றையும் எங்களை சுற்றி நெருங்கி நிற்கிற அவிசுவாசத்தையும் தள்ளிவிட்டு எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்."
22 மேலும் இந்த நவீன உலகத்திற்கு நல்ல காரியங்களை குறித்து இப்பொழுது எங்களால் தீர்க்கதரிசனம் உரைக்க முடியாது. ஆவியானவர் மூலமாக நாங்கள் தீர்க்கதரிசனம் உரைக்கக்கூடிய ஒரே காரியம். பேரழிவு, தொல்லைகள், பூமியதிர்ச்சிகள், பெரிய சமுத்திர அலைகளின் முழக்கம், சூரியன் மற்றும் சந்திரன் ஒளி தர மறுத்தல் போன்றவையே. மற்றும் லவோதிக்கேயா காலத்தில் சபையில் கிறிஸ்து வாசலுக்கு வெளியே இருந்து கொண்டு உள்ளே வர தட்டிக் கொண்டிருக்கிறார். ஓ தேவனே! பண்டைய மிகாயாவைப் போல ஆகாபுக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் இருந்த போது எப்படி அவனால் ஆகாபை ஆசிர்வதிக்க முடிந்திருக்கும்? அந்த மகத்தான வல்லமையுள்ள தீர்க்கதரிசி எலியா அவனிடத்தில் நடந்து சென்ற போது, மேலும் அந்த குற்றமற்ற மனிதன் நாபோத்தின் ஜீவனை அவன் எடுத்திருந்த படியினால் அவன், "நாய்கள் உன்னுடைய இரத்தத்தை நக்கும்" என்றான். அப்பொழுது எப்படி மிகாயாவால் நல்ல காரியங்களை தீர்க்கதரிசனமாக உரைக்க முடிந்திருக்கும்?
23 கர்த்தரைப் புறக்கணித்து தள்ளியிருக்கிற அலட்சியமான பாவமுள்ள ஜனங்களுக்கு ஆவியினால் நிரப்பப்பட்ட இன்றைய பிள்ளைகள் எப்படி நன்மையை தீர்க்கதரிசனமாக உரைக்க முடியும்? ஓ தேவனே, நாங்கள் நியாயத்தீர்ப்பின் கசப்பு முன்னால் இருப்பதை மாத்திரமே காண்கிறோம். மேலும் சரியில்லாதவர்களிடத்தில் "கர்த்தரிடத்திற்கு" ஓடிப் போங்கள். ஏனென்றால் அவரே விடாய்த்துப்போன ஒரு தேசத்திற்கு கன்மலையாய் இருக்கிறாரே! அவர் புயலின் நேரத்தில் புகலிடமாக இருக்கிறார். கர்த்தரின் நாமம் பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான்" என்று கதறுகிறோம். அடைக்கலத்துக்காக கட்டப்பட்ட அந்த பெரிய பட்டணங்களைக் குறித்து நாங்கள் எப்படி நினைத்துப் பார்க்கிறோம். பின்தொடருபவன்…அந்த மனிதன். அவன் அந்த அந்த துருகத்திற்குள் சென்று விட்ட பிறகு அவன் பாதுகாப்பாய் இருந்தான். எதுவும் அவனைத் தொட முடியவில்லை. ஓ தேவனே, நாங்கள் கர்த்தரிடத்திற்கு விரைந்து ஓடுவோமாக. ஏனென்றால் அவரே எங்களுடைய அடைக்கலமும் எங்களுடைய பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாயிருக்கிறார். ஆகையால், கழுகின் கண்ணால் பார்ப்பதன் மூலமே. தொல்லைகள் உருவாவதையும் மேகங்கள் உருண்டோட, நியாயத்தீர்ப்பின் இடி முழக்கமும் மின்னலும் பூமியின் மீது வர, புயலோ சமீபமாயிருக்கிறது என்பதை நாம் அறிகிறோம்.
24 இன்றிரவு கர்த்தாவே, இங்கே தங்களுடைய கரங்களை உயர்த்தின இவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே அவர்களுக்கு என்ன தேவையாயிருந்தது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. நீர் அறிந்திருக்கிறீர். உயர்த்தப்பட்டிருந்த அந்த கரத்தின் பின்னால் உள்ள அர்த்தம் என்ன என்பதையும். அவர்களுடைய விலையேறப்பெற்ற ஆத்துமாக்களுக்கு நீர் ஒவ்வொரு காரியத்தையும் அருள வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே இதை அருளும். வியாதியஸ்தரை சுகப்படுத்தும். விடாய்த்துப் போனவர்களைத் தேற்றும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தைத் தாரும். விடாய்த்துப் போனவர்களுக்கு சமாதானத்தையும், பசியாயுள்ளவர்களுக்கு ஆகாரத்தையும், தாகமாய் உள்ளவர்களுக்கு தண்ணீரையும், வருத்தப்பட்டவர்களுக்கு சந்தோஷத்தையும், சபைக்கு வல்லமையையும் தாரும். கர்த்தாவே அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இராபோஜனத்தை நாங்கள் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கையில், இயேசுவை எங்கள் மத்தியில் கொண்டு வாரும். கர்த்தாவே, அவர் எங்களை விசேஷித்த முறையில் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.
இந்த சிறிய சபையையும் அதனுடைய அன்பிற்குரிய மேய்ப்பர் எங்களுடைய சகோதரன் நெவில் மற்றும் அவருடைய குடும்பத்தினரையும் மற்றும் உதவிக்காரர்களையும் தர்மகத்தாக் களையும் தற்போதுள்ள ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, மற்றவர்களையும், கர்த்தருடைய வருகைக்காக சந்தோஷத்தோடு காத்துக் கொண்டும், தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டும், மற்றும் புகைப்போக்கிகள் அனைத்தையும் துடைத்து மெருகேற்றி, இருண்ட இடங்களில் சுவிசேஷே வெளிச்சத்தை பிரகாசிக்க செய்கிற உலகத்தை சுற்றிலுமுள்ள யாவரையும் ஆசீர்வதியும்.
இப்பொழுது கர்த்தாவே, இந்த சில வார்த்தைகளை கொண்டு எனக்கு உதவி செய்யும். நாங்கள் அதை வாசிக்கையில் அதை ஆசீர்வதித்து எங்களுக்கு சூழ்நிலை அமைப்பைத் தாரும். ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
25 இப்பொழுது நாம் வேத புத்தகத்தில், பரிசுத்த யோவான் 6-ம் அதிகாரத்திற்கு திருப்பலாம். மேலும் நாம் ஒவ்வொருவரும் வீட்டிற்கு சென்ற பிறகு இந்த முழு அதிகாரத்தையும் படிப்பது நன்மையாக இருக்கும். நான் 47-வது வசனம் தொடங்கி கீழே 59- வரை உள்ளடங்கிய வசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். இராப்போஜனம் என்பதைக் குறித்த பொருளின் பேரிலான ஒரு மூலப்பாடப்பகுதியை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும். இப்பொழுது, இயேசு பண்டிகையிலே பேசுகிறார். அது… இந்த பண்டிகைகள் இருந்தத ஒரு மகத்தான நேரமாய் இருந்தது. வனாந்திரத்தில் இருந்த கன்மலையை பிரதிநிதித்துவப் படுத்தும்படிக்கு அந்த கன்மலையிலிருந்து அவர்கள் தண்ணீரைப் பருகினர். அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் விழுந்திருந்த மன்னாவை, நினைவுகூரும் வகையில், அவர்கள் புசித்தனர். இன்றிரவு நமக்கு உள்ளதைப் போல, அது ஒரு பஸ்கா பண்டிகையாக இருந்தது.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஜீவ அப்பம் நானே.
உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே: இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார்.
26 கர்த்தர் தம்முடைய வார்த்தையை ஆசீர்வதிப்பாராக, நான் இராப்போஜனம் என்பதன் பேரில் ஒரு சில நிமிடங்கள் பேச விரும்புகிறேன். இராப்போஜனம் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? உரையாடு என்பது "பேசுகிறதையே" பொருட்படுத்துகிறது. இருக்க வேண்டிய… உண்மையாகவே இராபோஜனம் என்பது "ஐக்கியங் கொண்டிருத்தல் ஒருவருக்கொருவர் பேசுதல்" என்பதையே பொருட்படுத்துகிறது. நீங்கள் யாரிடமாவது தொலைபேசியில் பேசினால் நீங்கள் ஒரு உரையாடலை அங்கே கொண்டு செல்கிறீர்கள். நீங்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் ஒதுங்கி வந்து கட்டிடத்தின் பின் பக்கத்தில் திரும்பி நின்று, எந்த ஒரு தனிநபரோ, போதகரோ, அல்லது எந்த இரண்டு நபர்களோ, அவர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
27 இப்பொழுது, நீங்கள் வானொலி மூலம் உரையாடுகிறதில்லை. ஏனென்றால் உங்களால் திரும்பி பேச முடியாது அல்லது தொலைக்காட்சி மூலமும் பேச முடியாது. ஆனால் எப்பொழுது… உங்களால் தொலைபேசி மூலம் பேச முடியும். ஏனென்றால் நீங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறீர்கள். அது ஒரு பக்கமாக மாத்திரம் அல்ல. இது… நான் இப்பொழுது உங்களோடு பேச முடியாது. ஏனென்றால் நீங்கள் திரும்பிப் பேசுகிறதில்லை. எனவே ஆகையால், அது ஒரு ஊழியக்காரன் தன்னுடைய செய்தியை அளிப்பதை கேட்பதற்கு வருவதல்ல, அது உரையாடுவதற்கு ஒன்று சேர்ந்து வருவதல்ல. இராப்போஜனம் அதுவாய் இருக்காது…நீங்கள் ஊழியக்காரரோடு உரையாடுவதற்கு வந்தால், நீங்கள் அவரை அல்லது எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் ஒரு பக்கமாக அழைத்து அவனோடு அல்லது அவளோடு உரையாடுவீர்கள்.
ஆனால் நாம் எதற்கு இராபோஜனத்திற்கு வருகிறோம் என்றால் தனிப்பட்ட நபர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவோடு ஐக்கியங்கொள்ளவேயாகும். அதுவே ஐக்கியமாயுள்ளது. அதன் பின்னர் ஐக்கியம் என்பது ஒருவரிடம் முழுக்க முழுக்க பேசுவதல்ல. நாம் பேசிக் கொண்டே இருப்பது. ஆனால் அவர் நமக்கு திரும்ப என்ன கூறுகிறார் என்பதை காத்திருந்து பார்ப்பதாகும்.
28 இப்பொழுது, அங்கே தான், அனேக சமயங்களில், அதாவது நாம் நம்முடைய பெரிய தவறுகளை செய்கிறோம். நாம் எல்லாவற்றையும் பேசுகிறோம். ஆனால் அவர் திரும்ப நமக்கு பதில் அளிக்கும் படியான ஒரு தருணத்தை அளிக்க நாம் காத்திருப்பதில்லை. நாம் சில நேரங்களில், போய் "கர்த்தாவே நீர் இன்ன-இன்னதை மற்றும் இன்ன-இன்னதை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆமென்" என்று கூறி எழுந்து சென்று விடுகிறோம். இப்பொழுது அது உண்மையாகவே ஐக்கியமாயிருக்கவில்லை. அதுவோ போய் ஒரு உதவியை கேட்பதாகும். ஆனால் அவர் திரும்பி பதிலளிக்கும் வரையில் நீங்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் போது, அப்பொழுதுதான் நீங்கள் ஐக்கியங் கொள்ளுகிறீர்கள். கர்த்தரோடு ஐக்கியமாயிருக்கிறீர்கள். இப்பொழுது, மேலும் ஐக்கியங் கொள்வதற்கான ஒரு பெரிய வழி, உடன்பட வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட காரியங்களின் பேரில் உடன்பட வேண்டும். இப்பொழுது, நாம் அந்தக் காரியங்களை பெற்றுக் கொள்ளும் போது சில நேரங்களில் அது வினோதமாக இருக்கிறது…
புசித்தல் அதனோடு தொடர்பு கொண்டுள்ளது. இப்பொழுது நீங்கள் வர்த்தகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஒரு வணிக ஒப்பந்தத்தை செய்ய விரும்பினால், அப்போது அவர்கள் யாரையாவது இரவு உணவிற்கு அழைப்பார்கள். மேலும் அவர்கள் அமர்ந்து புசித்தப் பிறகு, அதன் பின்னர் ஒருவரோடு ஒருவர் பேசுவார்கள். ஒரு நல்ல விற்பனையாளர், வழக்கமாக அவர் வெறும் வயிற்றில் இருந்துகொண்டு ஒரு நபரோடு பேச முடியாது. அவர் தன்னுடைய காலை உணவைப் புசித்தப் பிறகு, அவர் நன்றாக உணரும் வரை காத்திருப்பது மிகச் சிறந்ததாகும். அங்கே அவரை எழுப்பி, படுக்கையிலிருந்து எழுப்பி நீங்கள் அவருக்கு விற்கப் போகும் ஏதோ ஒன்றை குறித்து அவரிடம் சொல்லாதீர்கள். ஆனால் அவர் தன்னுடைய காலை உணவை சாப்பிட்டு விட்டு மற்றும்--மற்றும் சரியான நிலையில் அமரும் வரை காத்திருங்கள்.
29 அன்றொரு நாள், இயேசுவின் பாதத்தை கழுவிய பெண்ணின் பேரில் பிரசங்கத்தேன். கனடாவில் நான் இதை பேசிக் கொண்டிருந்தேன். ஒரு விருந்தினர் மற்றொரு நபரைக் காண வந்திருந்த போது, அவர்கள் உண்மையாகவே வருகை தருவதை அல்லது. ஐக்கியங்கொள்ள வருவதை உணருவதற்கு முன்னரே இந்த நபருக்கு அவர்கள் செய்ய வேண்டிய சில செயல்முறைகள் இருந்தது. ஒரு வருகை என்பது ஒரு ஐக்கியங்கொள்ளுதலாக இருக்கிறது. இப்பொழுது, அவர்கள் வருவதோ…அழைக்கப்பட்டு, முதலாவது நீங்கள் அழைக்கப்பட வேண்டியதாயிருந்தது. அதன் பின்னர் நீங்கள் வாசலண்டை வரும் போது கால்களை கழுவுபவர் பிரயாணத்தின் நிமித்தமாக பாதத்தைக் கழுவுவார். சாலையில் வரும் போது அந்த-- அந்த மிருகங்களின் நாற்றம் உங்களுக்கு உண்டாகும். அவர்கள் எல்லோரும்…ஜனங்கள் மிருகங்களோடு அதே சாலையில் பயணம் செய்தனர். மற்றும்--மற்றும் அதனால் ஒரு துர்நாற்றம் மற்றும் தூசி உண்டானது. மேலும் பாலஸ்தீனிய வஸ்திரத்திலோ அது பட்டபடியால் அது கால்களின் வியர்வையில் பதிந்து கொண்டது மற்றும் மூடப்படாத முகத்திலும் மற்றும்--மற்றும் கரங்களிலும் அது படிந்திருந்தது. மேலும்--மேலும் அவர்கள் இவர்களை வாசலண்டைப் பார்த்து, கால்களை கழுவுபவர் அவர்களுடைய பாதங்களைக் கழுவுவார். அதன் பின்னர் மற்றொரு மனிதன் ஒரு துண்டோடும் மற்றும் ஒரு--ஒரு பரணியில் பரிமள தைலத்தோடு நிற்பார். மற்றும் அவர்கள் இந்த பரிமள தைலத்தை கரங்களில் தெளித்துக் கொண்டு, அவர்கள் அதை எடுத்து இந்த விதமாக பூசுவார்கள். மற்றும்--மற்றும் அதை அவர்களுடைய முகங்களிலும் பூசுவார்கள். அதன் பின்னர் ஒரு துண்டை எடுத்து அவர்களைத் தானே துடைத்து விடுவார்கள். அது எல்லா அழுக்கையும் துர்நாற்றத்தையும் போக்கி விட்டிருக்கும். அதில் பச்சை கற்பூரம் போன்று, ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் ஏதோ ஒன்று இருக்கும்.
30 அதன் பின்னர் அவர்கள் உள்ளே செல்லும் போது, உங்களுடைய பழைய அழுக்கான காலணிகளோடு அல்ல. அந்த அருமையான தரை விரிப்புகளில் நடக்க, அவர்கள் ஒரு சிறிய, வீட்டு உபயோகத்திற்கான ஒரு காலணியை வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் அதை அணிந்து நடந்து செல்வர். அதன் பின்னர் அந்த--அந்த விருந்தாளி உள்ளே சென்றதும், அதன் பின்னர் அந்த விருந்தளிப்பவர் அவர்களை வரவேற்க முத்தம் செய்வார். பாருங்கள். நீங்கள் துர்நாற்றம் வீசுவதோடு இருப்பீர்களானால், அப்பொழுது விருந்தளிப்பவர் உங்களை முத்தமிட நீங்களே விரும்பமாட்டீர்கள். நீங்கள் அழுக்காக இருக்கும் போது, நீங்கள் அந்த தரை விரிப்புகளின் மேல் நடந்து செல்ல விரும்பமாட்டீர்கள். ஆகையால் விருந்தளிப்பவர் உங்களை வரவேற்று முத்தமிட. அதன் பின்னர் நீங்களோ வீட்டில் ஒருவராக இருப்பீர்கள்.
31 மேலும் இப்பொழுது தேவன் அத்தகைய காரியங்களை உடையவராயிருக்கிறார். தேவனுடைய ஐக்கியத்துக்காக நாம் உண்மையாகவே ஆயத்தமாய் இருப்பதற்கு முன்னர், நாம் முதலில் திருவசனமாகிய தண்ணீரால் கழுவப்பட வேண்டும். வேறுபிரிதல், தீட்டு கழிக்கும் ஜலமானது நம்மை நம்முடைய பாவங்களிலிருந்து வேறுபிரிக்கிறது. இப்பொழுது முதலாவது உங்களால் தேவனிடத்தில் பேச முடியாது. உங்களால் தேவனோடு ஐக்கியங்கொள்ள முடியாது மற்றும்…முதலாவது நீங்கள் செய்துள்ளவற்றிற்காக மனந்திரும்ப வேண்டும். ஏனென்றால் உங்களால் மனம்திரும்பும் வரை சரியாக விசுவாசிக்க முடியாது "கர்த்தாவே என் அவிசுவாசத்தை மன்னியும்." புரிகிறதா? "என் அவிசுவாசத்தை மன்னியும்." முதலாவது, நீங்கள் மனந்திரும்ப வேண்டும். மேலும், நீங்கள் மனம் திரும்பும் போது அப்பொழுது நீங்கள்…உங்களுடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதன் பின் நீங்கள ஞானஸ்நானத்துக்கான ஒரு நபராக இருக்கிறீர்கள். இப்பொழுது. ஞானஸ்நானத்திற்கு பிறகு அதன் பின்னரே அவர் பரிசுத்த ஆவியை வாக்களித்தார்.
32 இப்பொழுது. காரியம் என்னவென்றால். இந்த ஐக்கியங்கொள்ளுதல் என்பது நம்முடைய பாதம் கழுவுவதற்கு அதாவது பாதம்- கழுவுதல் என்றிருந்த ஒன்று--ஒன்று மற்றும் அதனோடு சம்பந்தப்பட்ட காரியங்கள் கூட, பரிசுத்த ஆவியின் சுத்திகரிப்பின் ஒரு அடையாளமாக உள்ளது என்பதை நாம் கண்டிருக்கிறோம்.
இப்பொழுது, அப்படியானால் ஒருவருக்கொருவர் பரிமாற்றமான உணர்வு இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய உங்களுடைய விருந்தளிப்பவரோடு உடன்படவில்லையென்றால், அப்பொழுது உங்களால்--உங்களால் ஐக்கியங்கொள்ள முடியாது. இல்லை, உங்களால்--உங்களால் அதை செய்ய முடியாது ஏனென்றால் நீங்கள் அவரோடு உடன்படவில்லை. ஆனால் நீங்கள் உடன்பாட்டில் இருந்தால், அப்பொழுது உங்களால் ஐக்கியங்கொள்ள முடியும். நாம் கர்த்தருடைய பந்திக்கு வரும்போது அது அந்த விதமாகவே உள்ளது. நாம் அவருடைய வார்த்தையோடு உடன்பாட்டில் இருக்கவேண்டும். புரிகிறதா? நாம் மறுபடியும் பிறந்திருக்க வேண்டும். அப்பொழுதே நமக்குள்ள இருக்கிற தேவ ஆவி அவர் எழுதியிருக்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் "ஆமென்" என்று கூறும். அப்போதே நம்மால் அவரோடு ஐக்கியங்கொள்ள முடியும்.
33 இதை நாம் தேவனிடத்திலிருந்து பெற்றிருக்கிறோம். நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், அப்போது நமக்கு தேவனிடத்தில் தயவு உண்டு. நம்முடைய இருதயம் நம்மை குற்றவாளிகள் என்று தீர்க்காதிருந்தால், நாம் நம்முடைய வேண்டுகோள்கள் மற்றும் நம்முடைய விண்ணப்பங்களுக்கான பதிலையும் பெற்றிருக்கிறோம் என்று நாம் அறிகிறோம். இப்பொழுது. நாம் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று தேவன் நம்மிடம் சொல்லி, நாம் புதிய பிறப்பைப் பெற்றுக்கொள்ளாதிருந்தால், அப்போது நாம் நடந்து கொள்வதைக் குறிக்கும். அவரிடத்தில் எதையும் கேட்பதைக் குறித்தும் நாம் சரியான நிலையில் இல்லாதிருப்பதை உணர்வோம் பாருங்கள். ஏனென்றால் நாம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்திருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். அப்பொழுது அது ஒரு பாவியினுடைய ஜெபம் என்ற ஒரே காரியமாயுள்ளது. ஆனால் நான் அவரோடு ஐக்கியத்தில் இருக்கும்போது நாம் அவரிடத்தில் பேசுகிறோம். அதுவே தோழமையைக் கொண்டு வருகிறது.
34 இப்பொழுது, இந்த இராப்போஜனத்தின் பொருளைக் குறித்து நான் சற்று நேரம் விளக்கிக் கூற விரும்புகிறேன். இப்பொழுது, நாம் எடுக்கிற நாம் இராப்போஜனம் என்று அழைக்கிறது, அப்பமும் திராட்சைரசமுமாய் இருக்கிறது. இப்பொழுது, அது குறித்து பேசுவது கூட நல்லது இல்லை என்று அது தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஓ. எப்படி அது பல ஆண்டுகளினூடாக தவறாக சித்தரிக்கப்பட்டு வருகிறதே! அது உண்மையாகவே இராப்போஜனம் அல்ல. அது ஒரு கட்டளையை கடைபிடிப்பதாக உள்ளது. புரிகிறதா? இப்பொழுது அதை இராப்போஜனம் என்று அழைக்கக் காரணம், அது "பரிசுத்த நற்கருணை, அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான சரீரமாயிருக்கிறது" என்று அழைக்கப்பட்டு கொண்டிருக்கிற கத்தோலிக்க சங்கத்திலிருந்து வந்த காரணத்தினாலேயாகும். ஆனால் அது கர்த்தராகிய இயேசுவினுடைய சரீரம் அல்லவே! அது அவருடைய சரீரத்தின் நினைவுகூருதலாய் மாத்திரமே உள்ளது.
35 எத்தனை குருமார்கள் அல்லது பிரசங்கிமார்கள் அல்லது யார் அதை ஆசீர்வதித்தாலும் எனக்குக் கவலையில்லை. அது இன்னமும் அப்பமும் திராட்சரசமுமாகவே உள்ளது. நாம் குருமார்களைப் போல் அல்ல…அவர்கள் நம்மிடத்தில். "குருவானவர் அந்த நற்கருணையை ஆசீர்வதிக்கும் போது தேவன் அவருக்கு செவி கொடுக்க கடமைப்பட்டிருக்கிறார்" என்று சொல்லுகிறார்கள். அவர்களை அதை இராப்போஜனம் "கர்த்தராகிய இயேசுவின் உண்மையான சரீரத்துக்குள்ளான நற்கருணை" என்று அழைக்கிறார்கள். "அதன் பின்னர் விசுவாசி அதை எடுத்துக் கொள்கிறான். அதுவே இராப்போஜனமாய் இருக்கிறது." அது தவறாய் உள்ளதே!
ஐக்கியங்கொள்ளுதல் என்பது "பேசுதல். நீங்கள் பேசக்கூடிய ஏதோ ஒன்றோடு தொடர்பு கொண்டு அது உங்களிடத்தில் திரும்பி பேசுவதாகும்." அதுவே ஐக்கியம். ஒரு மெல்லிய அப்பத்துண்டினால் திரும்ப பேச முடியாது. எனவே. உண்மையாகவே. உண்மையான ஐக்கியம் பரிசுத்த ஆவியானவர் திரும்ப பேசுவதாய் உள்ளது. நீங்கள் அவரிடத்தில் கேட்கும் போது, அப்பொழுது அவர் உங்களிடத்தில் திரும்பிப் பேசுவது, அதுவே சரியான ஐக்கியமாயிருக்கிறது. இது ஒரு நினைவுகூருதலாய் உள்ளது. எடுத்துக்…அவருடைய சிலுவையேற்றம் மற்றும் அவருடைய உயிர்த்தெழுதல், ஒரு இராப்போஜனம் அல்ல. நாம் அதை அவ்வாறு அழைக்கிறோம். ஆனால் அது அதுவல்ல. அது கத்தோலிக்க சபையிலிருந்து வருகிறது. இந்த மெல்லிய அப்பத் துண்டை எடுத்துக் கொள்வதைக் குறித்து நாம் அன்றொரு நாள் அந்த முறையை பார்த்த போது மற்றும் அதை குறித்து அஞ்ஞானமார்க்கமும் அதற்கெதிரான கிறிஸ்தவ மார்க்கமும் என்பதன் பேரில் பேசினோம்.
36 "எப்படி இந்த சிறு வட்ட வடிவமான மெல்லிய அப்பத் துண்டு உண்மையான கிறிஸ்துவின் சரீரமாய் இருக்கிறது." இப்போது கத்தோலிக்க சபை அதை விசுவாசிக்கிறது. ஒரு சபையை கடந்து செல்லும் போது, அவர்கள் தங்களுக்கு சிலுவையைப் போட்டுக் கொண்டு, தங்களுடைய தொப்பிகளை கழற்றுதல் போன்றவற்றை செய்வதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அது சபை அல்ல, அது அங்குள்ள அந்த மெல்லிய அப்பத் துண்டாயிருக்கிறது. "குருவானவர் ஒரு மெல்லிய அப்பத் துண்டிலிருந்து உண்மையான கிறிஸ்துவின் சரீரத்திற்கு மாற்றியிருக்கிற அந்த சரீரத்தை" அங்கே எலிகளும் சுண்டெலிகளும் அதைக் கொண்டு செல்ல முடியும். ஏன், நீங்கள் அவ்விதம் செய்ய முடியாது. சாதாரணமாகக் கூட அதைப் பற்றிச் சிந்திக்க முடியாது. மேலும் ஒரு அப்பத் துண்டு கர்த்தராகிய இயேசுவின் சரீரமாயிருக்கும் என்று சிந்திப்பதோ! அது இருக்க முடியாது.
"ஐக்கியங்கொள்ளுதல் என்பது பேசுவது மற்றும் நீங்கள் பேசுகின்ற ஏதோ ஒன்று. திரும்ப பேசுவதாகும்." தொடர்பு கொள்ளுதல் என்னும் வார்த்தை "பேசுவது" அல்லது "உங்களிடம் பேசும் ஏதோவொன்றுடன் தொடர்பு கொண்டிருப்பது" என்றே பொருள்படுகிறது. ஐக்கியங்கொள்ளுதல், மேலும் தேவன் உங்களிடத்தில் திரும்ப பேசுகிறார். அது இன்னமும் அப்பமும் திராட்சைரசமுமாக உள்ளது. நாம் அதை இராப்போஜனம் என்று அழைக்கிறோம்.
37 இப்பொழுது, நான் வாசிக்கும்போது "என்னுடைய சரீரம் போஜனமாயும் மற்றும் என் இரத்தம் பானமாயும் இருக்கிறது சரீரமும் இரத்தமும் போஜனமும் பானமுமாய் இருக்கிறது" என்று இயேசு இங்கே கூறினதையே வாசித்தேன்.
எப்பொழுது நாம் இயேசுவைக் குறித்து சிந்திக்கவும் மற்றும் அவர் என்னவாக இருந்தார் என்பதையும், அவரோடு தொடர்புகொள்ளவுமே விரும்புகிறோம். அவருடைய சரீரம் என்னவாய் இருக்கிறது? கிறிஸ்துவின் சரீரம் என்றால் என்ன? அது பரிசுத்த ஆவியில் அவரோடு தொடர்பு கொண்டுள்ள விசுவாசிகளின் சரீரமாக இருக்கிறது. ஒரு விக்கிரகம் அல்ல. ஒரு துண்டு அப்பம் அல்ல. ஆனால் விசுவாசியின் இருதயத்தில் உள்ள ஒரு ஆவியாகும். அதாவது மனிதனும் தேவனும் ஒருவருக்கொருவர் பேச முடியும் போது, தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக, அவர்கள் ஒன்று சேர்ந்து இணைக்கப்பட்டுள்ளனர். அழிவுள்ள மனிதன் இரத்தம் சிந்துவதன் மூலமாக பாவமன்னிப்பைக் கொண்டு வந்தான். மேலும் கிறிஸ்துவோடு ஐக்கியங்கொண்டுள்ள இந்த மனிதன் மற்றும் இந்த ஸ்திரீ. பையன் அல்லது பெண், சரீரமாகிய அவரோடு ஐக்கியங் கொள்கின்றனர்.
38 ஒரு கணவனும் மனைவியும் அல்லது ஒரு பையனும் அவனுடைய பெண் சிநேகிதியும் அமர்ந்து பேசுவது போல, கிறிஸ்துவும் அவருடைய சபையும் ஒன்றாக ஐக்கியங்கொள்கின்றனர். அந்தக் காரணத்தினால் தான் நம்மால் அவரிடத்திலிருந்து கேட்க முடிகிறது. இங்கே எதிர்காலம் வருவதற்கு முன்பே அதைக் காண முடிகிறது. எதிர்காலத்தை பரிபூரணமாக சொல்ல முடிகிறது. ஏனென்றால் நித்தியத்தை தம்முடைய கையிலே வைத்திருக்கிற ஒரு தேவனோடு நாம் ஐக்கியங் கொள்ளுகிறோம். கிறிஸ்துவின் சரீரத்தில், காணக்கூடாத ஆவிக்குரிய கிறிஸ்துவின் சரீரத்தில், ஒருவரோடு ஒருவர் ஐக்கியங்கொள்ளுதல். எந்தவிதமான ஒரு விக்ரகமோ அல்லது ஒரு அப்பமோ அல்லது திராட்சரசத்தோடு தொடர்பு கொண்டிராமல் ஒரு--ஒரு ஆவிக்குரிய வடிவில் தொடர்பு கொண்டுள்ளோம்.
39 இப்பொழுது இயேசுவும் அதே காரியத்தை கூறினார். பரிசுத்த யோவான் நான்காம் அதிகாரம், கிணற்றண்டையில் இருந்த ஸ்தீரியினிடத்தில் பேசுவதை, நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவள் இப்படிப்பட்டதான ஒரு காரியத்தின் பேரில் பேசிக் கொண்டிருந்தாள். "எங்கள் பிதாக்கள் இந்த ஊற்றிலே குடித்தார்கள் மற்றும் இந்தக் கிணற்றைத் தோண்டினார்கள். யாக்கோபு மற்றும்--மற்றும் அவருடைய பிள்ளைகளுக்கும் மற்றும் அவருடைய மிருக ஜீவன்களுக்கும் இந்தத் தண்ணீரைக் கொடுத்தார். மேலும் நீங்கள் 'ஒரு குறிப்பிட்ட நகரத்தில் தொழுது கொள்ளுங்கள்' என்று கூறுகிறீர்கள். மற்றவர்களோ "இந்த மலையில்'" என்று கூறுகிறார்கள்.
இயேசுவானவரோ "ஒரு நிமிடம்! நாங்கள் யூதர்கள். மேலும் நாங்கள் ஆராதனை என்றால் என்ன என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்கிறோம். ஸ்திரீயே, ஆனால் இதற்கு செவிகொடு. வேளையானது வந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது உண்மையாய் தொழுது கொள்கிறவர்கள் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வார்கள். "உம்முடைய வசனமே சத்தியம். அப்படி அவரை ஆவியிலும் வார்த்தையிலும். சத்தியத்திலும் தொழுது கொள்பவர்களையே பிதா தேடுகிறார். "உம்முடைய வசனமே சத்தியம்" என்று முடிந்தளவு கூறினார். இப்பொழுது அவர் அதை அந்த ஸ்தீரியினிடத்தில் கூறினார். அப்பம் அல்ல, ஆனால் விசுவாசியின் இருதயத்தில் உள்ள ஒரு ஆவியாகும். அதாவது மனிதனும் தேவனும் ஒருவருக்கொருவர் பேச முடியும் போது, தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக, அவர்கள் ஒன்று சேர்ந்து இணைக்கப்பட்டுள்ளனர். அழிவுள்ள மனிதன் இரத்தம் சிந்துவதன் மூலமாக பாவமன்னிப்பைக் கொண்டு வந்தான். மேலும் கிறிஸ்துவோடு ஐக்கியங்கொண்டுள்ள இந்த மனிதன் மற்றும் இந்த ஸ்திரீ, பையன் அல்லது பெண், சரீரமாகிய அவரோடு ஐக்கியங் கொள்கின்றனர்.
40 பாருங்கள், கிறிஸ்து… தேவன் ஆவியாயிருக்கிறார். கிறிஸ்து என்றால் "அபிஷேகம் பண்ணப்பட்டவர். தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன்" என்று பொருள்படுகிறது அது அவரை கிறிஸ்துவாக்கியது. இப்பொழுது கிறிஸ்து நான் "போஜனமும் பானமுமாய் இருக்கிறேன்" என்றார். ஒரு மெல்லிய அப்பத்துண்டல்ல. நாம் இங்கு எடுத்துக் கொள்கிற ஒரு மெல்லிய அப்பத்துண்டல்ல. அது கிறிஸ்துவல்ல. பீடதண்டை நாம் பானம்பண்ணுகிற திராட்சைரசமும், கிறிஸ்து அல்ல. அது ஒரு அடையாளப் பூர்வமான வழியில், அவரைக் குறிக்கிறது. கிறிஸ்து பரிசுத்த ஆவியாய் இருக்கிறார். சபையின் மேலுள்ள அபிஷேகம், அது போஜனமும் பானமுமாக இருக்கிறது.
41 உலகம் முழுவதிலும் உள்ள மிகப்பெரிய கூக்குரல், அதை நீங்கள் யாரும் கேட்டிருக்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால். நீங்கள் எப்போதாவது கேட்டிருந்தால், அது பசியின் கூக்குரலுக்கு சமமான கூக்குரல் இல்லை. ஒரு தாய் தன்னுடைய குழந்தையோடு இருப்பதை நீங்கள் காணும் போது, மேலும் அவள் நடக்க முடியாமல் மிகவும் பலவீனமாய் இருக்கும் போது, அந்த சிறு குழந்தை மரிக்கிறது. பசியினால் அதனுடைய வயிறு வீங்கி. அந்தத் தாயின் இருதயத்திலிருந்து வரும் அழுகுரல்களைக் கேட்டு, அந்தக் குழந்தை எலும்பும் தோலுமாகி, அதனுடைய கன்னங்களில் குழி விழுந்து அதனுடைய சிறிய ஈறுகள் வெளியே தள்ளிக் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். அதனால் சத்தம் போட முடியாமல், அவளுடைய சிறு கண்கள் வெளிவந்து விடுகின்றன. பசி மற்றும் தாகத்திற்கான கூக்குரலைப் போன்ற கூக்குரலே கிடையாது.
42 வனாந்திரத்தில், எத்தனை மனிதர் தாகத்திற்காக தங்கள் ஜீவியங்களை இழந்திருக்கின்றனர்! அநேக சம்பவங்கள். வனாந்திரத்தின் உண்மையான சம்பவங்களைக் குறித்து. நான் உங்களிடத்தில் தொடர்ந்து முழு இரவும் கூறிக் கொண்டே இருக்க முடியும். நீங்கள் அங்கு சென்றடையும் போது எப்படி…தாகமடைய எப்படி பிசாசு உங்களுக்கு ஒரு--ஒரு கானல் நீரைக் கொடுக்கிறான். நீங்கள் அவைகளை இங்கே பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் அவைகளை பார்க்க மேற்கு நோக்கி செல்ல வேண்டியதில்லை. சாலையில் செல்லும் போது, அது சாலையில் தண்ணீர் உள்ளது போன்றே காணப்படுகிறது. நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றுள்ள, நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்த்திருக்கிறீர்கள். அது ஒரு பொய்யான கானல் நீராய் இருக்கிறது. இங்கே சில காலத்திற்கு முன்னர், சுமார் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. தேசத்தை கடந்து பறந்து சென்ற சில வாத்துக்களைக் குறித்து நான் படித்தேன். அவைகள் ஒரு கானல் நீரைக் கண்டு சாலையில் விழுந்தன. அவைகள் தண்ணீரில் விழுவதாகவே நினைத்துக் கொண்டன. அவைகள் கடினமான சாலையில் விழுந்து போது சிதைந்து போயின. அவைகளோ கானல் நீரை, தண்ணீரில் இறங்கிக் கொண்டிருந்ததாக எண்ணிக் கொண்டன.
43 எத்தனை மூறை பிசாசு அதே காரியத்தை ஜனங்களுக்கு செய்திருக்கிறான். அவர்களுக்கு ஒரு பொய்யான தோற்றத்தை அளிக்க, எங்கே, அங்கே ஒன்றுமே இருக்காது. ஆனால் அது ஒரு பாவனை விசுவாசமாய் இருக்கிறது. ஆகையால் இன்றைக்கு அநேக ஜனங்கள் ஒரு பாவனை விசுவாச மார்க்கத்தையே பெற்றுக் கொண்டு. ஏதோ ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் அல்லது அவ்வண்ணமாயில்லாத ஏதோ ஒரு காரியத்தை பாசாங்கு செய்கிறார்கள்! வாலிப மிஷனெரி ஸ்தீரி உறுதியான நிலையை அடையும் வரை அவள் காத்திருந்ததாக கூறினது போலவே. நாம் அதைச் செய்வது மேலானதாகும். உங்களால் திரும்பி வந்து மீண்டும் அதை முயற்சிக்க முடியாது. உங்களுக்கு ஒரு தருணம் கிடைத்துள்ளது. மற்றும் நீங்கள் திட்ட வரைபடத்தைப் பெற்றுள்ளீர்கள். எனவே நாம் சரியான எல்லைக் குறிக்கு செல்வது மேலாகும்.
44 பசியின் கூக்குரல், கவனியுங்கள். அது ஒரு துன்பகரமான கூக்குரலாய் இருக்கிறபடியால் அது ஒரு பெரிய கூக்குரலாய் இருக்கிறது. அந்த நபர் மரித்துக் கொண்டிருக்கிறார். மேலும் ஓ, நாம் அந்த நிலையை அடைவோமானால், இந்த தேசம் தேவனுக்காக மிகவும் பசிகொண்டுள்ள ஒரு நிலையை அடையக் கூடுமானால்! சரீரப்பிரகாரமான பட்டினியால் வாடும் இந்தியா போன்ற தேசங்களைக் காட்டிலும் இது மிக மோசமான ஒரு பட்டினியில் உள்ளது. இந்த தேசம் ஆவிக்குரியப்பிரகாரமாக பட்டினியாய் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பசியாயிருந்த பிறகு, நீங்கள் பசியை அறியாத ஒரு நிலையினை அது அடையச் செய்கிறது.
உறைதலைப் போன்றே, நீங்கள் வெகு தூரம் சென்ற பிறகு உறைந்து போய், நீங்கள் மிகவும் குளிரடைந்து, அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து நீங்கள் சூடாகிறீர்கள். மேலும் நீங்கள் குளிர்ந்து போகும் போது, நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்களே! அது தான் இன்றிரவுள்ள காரியமாய் உள்ளது. சபைகளில் உறைந்து கொண்டிருக்குமளவுக்கு அவைகள் மிகவும் குளிர்ந்து போயிருக்கின்றன. மேலும் அங்கத்தினர் மூலமாக அவைகள் சூடாயிருப்பதாக எண்ணிக் கொள்கின்றன. மற்றும் ஆவிக்குரியப் பிரகாரமாகவும் மரித்துக் கொண்டிருக்கின்றன. மரித்தலே! அதை அறியாமலிருக்கின்றன. முடிவிலே அவைகள் நித்திரை செய்யும்படி படுத்துக் கொள்கின்றன அதைக் குறித்ததெல்லாம் அவ்வளவுதான். அவன் இனி ஒருபோதும் எழுந்திருப்பதில்லை. ஏனென்றால் அவனுடைய இரத்தம் அவனுடைய நரம்புகளில் உறைந்துள்ளது.
45 இப்பொழுது, தாகம், இயேசு "என் இரத்தம் உண்மையிலேயே பானமாக இருக்கிறது" என்றார். நீங்கள் ஜீவனத்திற்கான தாகமாயிருந்தால், ஜீவனத்திற்கான தாகமாயிருந்தால், அந்த தாகத்தை தணிக்கக் கூடிய ஒரே தண்ணீர் இயேசுவினிடத்தில் இருக்கிறது. "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்." வெளிப்படுத்தின விசேஷத்தில். அதில், "தாகமாயிருக்கிறவன் ஜீவத் தண்ணீர் ஊற்றுகளண்டைக்கு வந்து இலவசமாய் பருகக்கடவன்" என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஜீவனத்திற்கான தாகமாய் இருந்தால் நலமாயிருக்குமே!
46 இந்த ஆரம்பப் பகுதியிலோ அல்லது மாதத்தின் முதல் பகுதியிலோ, வானியலாளர்கள் முன்னுரைத்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இரண்டாவது அல்லது ஐந்தாம் தேதி, அல்லது இந்த மாதத்தில் எங்காவது தொடங்கும். இந்திய வானியலாளர்கள் உலகம் சுக்கு நூறாகி விடும் என்று முன்னுரைக்கின்றனர். அமெரிக்க செய்தித்தாள்கள் அதைக் குறித்து பரிகாசம் செய்கின்றன. உலகம் சுக்கு நூறாக போகின்றது என்று நான் நம்பவில்லை. ஆனாலும் அதைக் குறித்து பரிகாசம் செய்வது தவறு என்று நான் கூறுகிறேன். ஏனென்றால் இந்நாட்களில் ஒன்றில் ஏதோ ஒன்று சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அதைப் போன்ற ஏதோ ஒன்று ஐந்து கிரகங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி போன்றவை தங்களுடைய…வருகின்றன. அவ்வாறு வந்ததை அவர்கள் ஒரு போதும் கண்டிருக்கவில்லை. ஓ. இருபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு இருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை அறிந்து கொள்ள அங்கே அப்போது யார் இருந்தது?
47 இது ஒரு ஆவிக்குரிய பொருத்தத்தை உடையதாயிருக்கிறது என்று நான் முன்னுரைக்கிறேன். இது தேவனுடைய சந்தானத்தின் வருகையாயும், இந்த நேரத்தில் வார்த்தையின் மகத்தான வெளிப்பாடுகள் திறக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன். நினைவிருக்கட்டும் இயேசுவானவர் பிறந்த போது மூன்று நட்சத்திரங்கள் தங்களுடைய சுற்றுப்பாதையில் வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இதுவோ ஐந்தாக உள்ளது ஜந்து என்பது கிருபையாய், கிருபையின் எண்ணாய் உள்ளது. மூன்று பரிபூரணத்தின் எண்ணாயுள்ளது. ஐந்து கிருபையின் எண்ணாக. உள்ளது. இ-யே-சு. கி-ரு-பை வி-சு-வா-௪-ம் முதலியனவாகும். கிருபையின் எண்ணாயிற்றே! தேவன் எப்போதும் தம்முடைய வல்லமையை சபைக்கு அனுப்புகிறார். அது அவருடைய கிருபையாய் இருக்கும். அது ஜனங்களின் கீழ்ப்படிதலாயிருக்காது. மேலும் ஏசாயா 40-ம் அதிகாரத்தில், எப்படி"எருசலேமுடன் அதின் போர் முடிந்தது என்று கூறுங்கள்" என்று கூறினான். அதே சமயத்தில் அவள் விக்கிரக ஆராதனைக்குரிய குற்றவாளியாயிருந்தாள். ஆனால் தேவனுடைய கிருபை அதை அனுப்பிக் கொண்டிருந்ததாயிருந்தது. தேவன் நமக்கு அனுப்புகிற எந்த காரியமும், அது அவருடைய கிருபையாய் இருக்குமேயன்றி நம்முடைய தகுதிகளின் பேரிலானதல்ல. எனவே, அது ஏதோ ஒரு காரியத்தைப் பொருட்படுத்தலாம். ஒரு மாற்றம் இருக்கும் என்று நான் முன்னுரைக்கிறேன். அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது சம்பவிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். நாம்…இப்பொழுது சரியாக அதற்கு மிக அருகில் இருக்கிறோம்.
எந்த மனிதனாவது பசியாயிருந்தால் அவன் கிறிஸ்துவினிடத்தில் வரட்டும். எந்த மனிதனாவது தாகமாயிருந்தால் அவன் கிறிஸ்துவினிடத்தில் வரட்டும் அவர் தாகத்தைத் தணிக்கிறார். அவர் நம்முடைய எல்லா தாகத்தையும் பசியையும் தீர்த்து திருப்தி படுத்துகிறவராய் இருக்கிறார்.
48 சில காலத்துக்கு முன்னர் என்னிடத்தில் ஒரு கதை கூறப்பட்டது. நான் அதை இந்த சபையில் சொல்லியிருக்கலாம். நான் அவ்வாறு கூறியிருந்தாலும், சில முக்கியமான காரியங்களுக்காக அதை திருப்பிக் கூறுவதற்காக நீங்கள் என்னை மன்னியுங்கள். இந்திய வழிகாட்டியாக அல்லது இந்தியர்களின் ஒருவிதமான மேற்பார்வையாளராக ஒருவன் இருந்தான். அவன் நவாஜோ தேசத்திற்கு பயணம் சென்று கொண்டிருந்த போது தொலைந்து போய்விட்டான். அவனுடைய பெயர் காய் என்பதாகும். மேலும் அவன் ஒரு பாதையில், வேட்டையாடும் பாதையில் சென்று கொண்டிருந்தான் அப்பொழுது அவன். "இப்பொழுது நான் இந்தப் பாதையை அடைந்துவிட்டால், நான் நிச்சயமாக தண்ணீரை கண்டடைவேன்" என்று எண்ணிக் கொண்டான். மேலும் அவனுடைய குதிரையோ மிகவும் தாகமடைந்தது. அதனுடைய நாக்கை தொங்க விட்டுக் கொண்டு. வறண்டு போய், மூக்குத் துளைகள் சிவப்பாக மாறி, மணலால் அடைத்துக் கொண்டது. அவன் மணல் புயலில் தன்னுடைய கைகுட்டையை தன்னுடைய முகத்தின் மேல், அது முழுவதும் தூசிபடாதவாறு பிடித்துக் கொண்டிருந்தான். மேலும் அவன் தண்ணீருக்காக மடிந்து கொண்டிருந்தான். அவன் அந்த பாதையை கண்ட போது தன்னுடைய குதிரையை அந்த பாதையில் வழி நடத்திச் சென்று கொண்டிருந்தான். மேலும் அவன் சொன்னான். அவன் குதிரையின் மேல் ஏறி, அவன் இந்த வேட்டைப் பாதையைக் கண்டபோது, "நிச்சயமாகவே இது என்னை தண்ணீரண்டைக்கு கொண்டு செல்லும்" என்றான். எனவே அவன் குதிரையின் மேல் கால்களைப் பரப்பி ஏறி அமர்ந்து அந்த பாதையை நோக்கி செல்லத் துவங்கினான்.
49 மேலும் குதிரை தான் தண்ணீருக்கான பாதையில் இருந்ததையும் கூட அறிந்திருந்தது. தேவன் எப்படி ஊமையான மிருகங்களுக்கு ஒரு உள்ளுணர்வைக் கொடுக்கிறார்! எனவே அது கீழே சென்ற பாதையில் சென்றது. முடிவிலே, ஒரு பக்கமாக திரும்பி, மிகக் கரடுமுரடான பாதையில் சென்றது. குதிரை அந்த வழியாய் திரும்ப விரும்பினது. ஆனால் காயோ வித்தியாசமாக நினைத்தான். அவனோ அதை அனல் வீசும் விசால பாதையில் தொடர்ந்து நடத்த முயன்றான். அவன் அதில் நடத்தத் துவங்கினான். ஆனால் குதிரையோ செல்லவில்லை. அவன் அதை சாட்டைக் குதிமுள்ளால் குத்தினான். அதுவோ கனைத்து விட்டு வேறு வழியாக செல்ல தொடங்கியது. மேலும் அது எகிறத் துவங்கியது. அவனை தூக்கி வீச முடியாத அளவிற்கு அது மிகவும் பலவீனமாக இருந்தது.
50 எனவே அவன் மீண்டும் அதே சாட்டைக் குதி முள்ளால் குத்தி, அவன் குதிரையை வெட்டுமளவிற்கு அதை இழுக்க, குதிரையோ நின்று நடுங்கி, இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, தன்னுடைய ஜீவன் காப்பாற்றபடும்படிக்கு தண்ணீர் கிடைக்க மிகவும் உணர்ச்சிவசப்பட்டான். மேலும் அவன் நோக்கிப் பார்த்தான். அங்கே நோக்கிப் பார்த்தான். குதிரையோ இந்த விதமாக நடுங்கிக் கொண்டு கிட்டத்தட்ட கீழே மயங்கி விழுமளவிற்கு இருந்தது. அவன் அதைப் பார்த்த பொழுது, அதனுடைய பக்கவாட்டில் இரத்தத்தை கண்டான். அவன் ஒரு கிறிஸ்தவனாய் இருந்தான். மேலும் அவன் தன்னுடைய குதிரையினிடத்தில் கூறினான். அவன். "காட்டு… இல்லை. மிருகங்களுக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது என்பதை நான் அவ்வப்போது கேட்டிருக்கிறேன். அந்த வழியிலிருந்து சற்று திரும்பினால் அது தண்ணீருக்கு செல்லும் என்பது போல் தெரியவில்லை. இங்குள்ள இந்த பெரிய பாதை அவர்களை தொடர்ந்து தண்ணீருக்கு செல்லும் இடத்திற்கு கொண்டு செல்வது போல் தெரிகிறது. ஆனால்." என்று கூறி "நீ. என்னை இதுவரை உண்மையாக சுமந்து வந்திருந்தால், நான் உன்னுடைய உள்ளுணர்வை பின் தொடர்வேன்" என்று கூறினான்.
51 ஓ, நான் கிறிஸ்துவைக் குறித்து எப்படி நினைத்துப் பார்க்கிறேன்! அழிவுக்கான பாதை அமைக்கப்பட்டு எல்லா வழிகளிலும் சுடர்விட்டு எரிகிறது. ஆனால் ஜீவனுக்கு போகும் வழியோ நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறார்கள் சிலராய் இருப்பார்கள். உள்ளுணர்வு மட்டுமல்ல. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உங்களை அந்த ஜீவத்தண்ணீரண்டைக்குத் திருப்புவார். அது இதுவரை என்னை பாதுகாப்பாக கொண்டு வந்தது எனவே அது என்னை மீதமுள்ள பாதையிலும் கொண்டு செல்லும் என்று நான் நினைக்கிறேன்.
52 கதையை முடிக்க வேண்டும். அவன்--அவன் அரை மைல் தூரம் கூட சென்றிருக்கவில்லை. திடீரென்று அந்த உண்மையுள்ள குதிரை சரியாக ஒரு பெரிய தண்ணீர் பள்ளத்திற்குள் இறங்கியது. அந்தக் குதிரை எதைக் குறித்து பேசிக் கொண்டிருந்தது என்பதையும், அந்த--அந்த சவாரி செய்பவனுக்கு அதை வெளிப்படுத்தும் விதத்தில் அது என்ன பொருட்படுத்திக் கொண்டிருந்தது என்பதையும் அறிந்திருந்தது. அவன் அங்கே உள்ளே குதித்தான். அவன் குதிரையினுடைய மூக்கில் தண்ணீரை வீசியதாக அவன் கூறினான். அவன் தானே குளித்தான். அவன் கூச்சலிட்டான் மற்றும் அவன் கத்தினான். அவன் தன்னுடைய உச்சக்கட்ட குரலில் சத்தமிட்டுக் கொண்டு, மேலும் தன்னுடைய தொண்டையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு, "நாங்கள் காப்பாற்றப்பட்டோம்! நாங்கள் காப்பாற்றப்பட்டோம்! நாங்கள் காப்பாற்றப்பட்டோம்!" என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். மேலும் குதிரையோ குடித்துக் கொண்டும் நடுங்கிக் கொண்டுமிருந்தது. அவன் அதனுடைய இரத்தம் தோய்ந்த பக்கங்களைப் பார்த்தான். அவை யாவும் சாட்டைக் குத்துமுள்ளால் உண்டாயிருந்தன.
53 அப்பொழுது கூறப்பட்டதோ, அவன் கூறினான்… "தண்ணீரிலிருந்து வெளியே வா" என்று யாரோ ஒருவர் கூறுவதைக் கேட்டான். அப்பொழுது அவன் நோக்கி பார்த்த போது, ஒரு விகாரத் தோற்றங்கொண்ட கால்நடைகளை மேய்க்கும் பையன் அங்கே நின்று கொண்டிருந்தான். எனவே அவன் தண்ணீரை விட்டு வெளியே வந்தான். அவன் நெருப்பின் வாசனையை முகர்ந்து அங்கு நோக்கி பார்த்த போது, அங்கு ஒரு கூட்டம் மனிதர் முகாமிட்டிருந்தனர் என்று கூறினான். அவர்கள் ஒரு கனிவள ஆய்வு எதிர்பார்ப்பில் இருந்து வந்திருந்தனர். அவர்கள் கொஞ்சம் தங்கத்தை கண்டெடுத்திருந்தனர். மற்றும் திரும்பி வரும் வழியில் அவர்கள் தங்கள் குதிரைகளையும், பொதி குதிரைகளையும் வைத்திருந்தனர். மேலும் அவர்கள் இந்த தண்ணீர் பள்ளத்தண்டை வந்து இளைப்பாறிக் கொண்டிருந்தனர். மற்றும் அவர்கள் யாவரும் மது அருந்தியிருந்தனர்.
அவர்கள் கொஞ்சம் மான் கறியை சமைத்து இருந்ததாகவும், மற்றும் இவன் அவர்களோடு சாப்பிட்டதாகவும் கூறினான். மேலும் அவர்களில் ஒருவன், "கொஞ்சம் மது அருந்து" என்று கூறியதாக கூறினான். அப்பொழுது அவன் யாராக இருந்தான் என்றும், அவன் ஜேக் காய். அந்த--அந்த இந்திய வழிகாட்டி என்றும் அவர்களிடத்தில் கூறியிருந்தானாம். எனவே அவன், "சரி இப்பொழுது சற்று மது அருந்து" என்றானாம்.
அதற்கு அவன் "வேண்டாம்" என்று கூறி, "நான் மது அருந்துவதில்லை" என்றும் கூறினானாம்.
மேலும் அது ஒரு விதமாக அந்த ஜனங்களை அவமதிப்பதாக இருந்தது. எனவே அவன். "நீ எங்களிடத்திலிருந்து சற்று மதுவை எடுத்து அருந்து!" என்று கூறினானாம்.
அப்பொழுதும் அவன், "இல்லை நான் குடிப்பதில்லை" என்றானானாம்.
எனவே அவன் அந்த கூஜாவை எறிந்து "மது அருந்து!" என்று கூறினானாம். அவர்கள் எல்லோரும் குடித்திருந்தனர். உங்களுக்கு தெரியுமா, சுமார் அரை டஜன் பேர்.
எனவே இவன் "பையன்களே. உங்களுக்கு நன்றி" என்றானாம்.
அப்பொழுது, "எங்களுடைய மான்கறி சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தால், எங்களுடைய மதுபானம் குடிப்பதற்கு போதுமானதாக இல்லையா" என்று கேட்டார்களாம்.
மேலும் அவர்கள் எப்படி குடித்திருந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா. எனவே இவன் தொடர்ந்து "முடியாது" என்று கூறிவிட்டதாக, அவன் கூறினானாம்.
மேலும் அவர்கள் துப்பாக்கியில் தோட்டாவை நிறைத்து "இப்பொழுது நீ குடிக்க வேண்டும் இல்லையென்றால்!" என்று கூறினார்களாம்.
54 அதற்கு இவனோ, "இல்லை, இல்லை, நான் குடிக்கமாட்டேன்" என்றானாம். அப்போது அவர்கள் துப்பாக்கியில் சுட குறி வைக்கத் தொடங்கினர். இவனோ "ஒரு நிமிடம்" என்றானாம். மேலும். "நான் மரிப்பதற்கு பயப்படவில்லை" என்று கூறினானாம். இவன், "நான்நான் மரிப்பதற்கு பயப்படவில்லை" என்றானாம். அவன் தொடர்ந்து, "ஆனால் நான் மரிப்பதற்கு முன்பு, நான் குடிக்காத காரணத்தை என்னுடைய கதையை நான்--நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன்" என்றானாம். தொடர்ந்து, "நான் ஒரு கென்டக்கியன்" என்றானாம். மேலும் அவன், "ஒரு நாள் காலையில் ஒரு சிறிய பழைய மர அறையில், அங்கே ஒரு தாய் மரித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் என்னை அவளுடைய பக்கத்தில் அழைத்தாள். மற்றும், "ஜேக் உன்னுடைய தந்தை தன்னுடைய கையில் ஒரு சீட்டுக் கட்டுடன், ஒரு மேஜையின் குறுக்கே குடிபோதையில் மரித்துப் போனார்" என்று கூறினாள். தொடர்ந்து, ஜேக் நீ என்ன செய்தாலும் ஒருபோதும் குடிக்காதே'" என்று கூறினாள். அப்பொழுது. "நான் என் கரங்களை என்னுடைய தாயின் நெற்றியின் மேல் வைத்தேன். மேலும் நான் ஒரு பத்து வயது சிறு பையனாக, நான் ஒருபோதும் மது அருந்த மாட்டேன் என்று நான் தேவனுக்கு வாக்களித்தேன்." அவன் தொடர்ந்து. "நான் அதை ஒரு போதும் அருந்தியதில்லை" என்று கூறினான். மேலும். "இப்பொழுது நீங்கள் என்னை சுட வேண்டுமானால். நீங்கள் சுடுங்கள்" என்றானாம்.
அப்பொழுதும் அந்த குடிகாரன் தன்னுடைய துப்பாக்கியை உயர்த்தி மற்றும் கூஜாவை மீண்டும் அவன் மீது வீசி "இதைக் குடி இல்லையென்றால் நான் சுட்டு விடுவேன்!" என்றானாம். அப்பொழுது ஒரு துப்பாக்கி சுட, அந்த கூஜாவோ வெடித்து விட்டதாம்.
55 ஒரு பள்ளத்தாக்கின் பக்கத்தில் விகாரத் தோற்றத்தோடு கால்நடைகளை மேய்க்கும் ஒரு வயோதிகன், தன்னுடைய கன்னங்களில் கண்ணீர் வழிந்ததோடுவதோடு நின்று கொண்டிருந்தான். மேலும் அவன், "ஜேக் நானும் கூட கெண்டக்கியிலிருந்து வந்திருக்கிறேன். நானும் ஒரு நாள் தாயாருக்கு ஒரு வாக்குப் பண்ணினேன். ஆனால் நான் என் வாக்கை மீறிவிட்டேன்" என்று கூறினான். அவன் தொடர்ந்து "இந்த நபர்கள் போதுமான அளவு குடித்து வெறிக்கும் வரை நான் காத்துக் கொண்டிருந்தேன். மேலும் அவர்கள் கூட்டத்தையே கொன்று விட்டு, எப்படியாவது அவர்கள் வைத்திருந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு போகவிருந்தேன்" என்றான். அவன். "ஆனால் நானும் குடிபோதையில் இருந்து வந்தேன் மற்றும் நான் தவறு செய்துள்ளேன்". ஆனால் என்று கூறி "பரலோகப் பள்ளத்தாக்குகளினூடாக என்னுடைய துப்பாக்கி வெடிச் சத்தம் எதிரொலித்த போது நான் அதை மீண்டும் ஒரு போதும் செய்ய மாட்டேன் என்ற ஒரு உறுதி மொழி அடையாளத்தை என்னுடைய தாயார் கேட்டிருப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன்" என்றான். மேலும் அங்கே தேவனுடைய கிருபையினால்இவன் அந்த ஜனங்கள் எல்லோரையும், அங்கிருந்த அவர்கள் எல்லோரையும் கிறிஸ்துவண்டை வழிநடத்தினான்.
பாருங்கள், தண்ணீரை குறித்து ஏதோ ஒன்றும், புத்துணர்ச்சியைக் குறித்து ஏதோ ஒன்றும் உண்டு. நீங்கள் தாகமாயிருக்கும் போது தண்ணீரண்டைக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக இருந்தது. நீங்கள் தாகமாயிருந்து கொண்டிருக்கும்போது தண்ணீரண்டைக்கு செல்வது, அது உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தை செய்கிறதாயுள்ளது.
இப்பொழுது. அவர். "என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சாமாதானத்தையே நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்றார். அவருடைய சமாதானமே நம்முடைய தாகத்தைத் தணிக்கிறது. நாம் சமாதானத்துக்காக ஏங்கிக் கொண்டிருப்போமானால். அப்பொழுது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாக, நமக்கு தேவனிடத்தில் சமாதானம் உண்டு என்பதை அறிந்துகொள்ளும்படி, நாம் அவருடைய சமாதானத்தில் புத்துணர்ச்சியைப் பெறுவோமாக. அவரே நம்முடைய தாகத்தை தணிக்கிற சமாதானத்தை நமக்குக் கொடுக்கிறவர்.
56 வசனமோ. "அவரே மெய்யான போஜனமாயும் மற்றும் மெய்யான பானமுமாயிருக்கிறார்" என்று கூறுகிறது. நான், "மெய்யான போஜனம் மற்றும் மெய்யான பானம்" என்ற 57-வது வசனத்தில் இங்கே சிறு குறியிட்டு வைத்துள்ளேன். அவர் இங்கே என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்.
மேலும் ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் என் பிதாவினால் பிழைத்திருக்கிறது போலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
வேறு வார்த்தைகளில் கூறினால். "பிதா என்னை அனுப்பினார். நான் அவரால் பிழைத்திருக்கிறேன். கிறிஸ்துவினிடத்தில் வருகிற ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவினால் பிழைக்க வேண்டும்." ஓ. என்னே. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அது தான் ஐக்கியங்கொள்ளுதல். நீங்கள் கிறிஸ்துவினால் பிழைக்கும் போது அதுவே நீங்கள் கண்டறிகிற உண்மையான ஐக்கியங்கொள்ளுதலாகும்.
57 இப்பொழுது, நம்முடைய மாம்ச பிரகாரமான சரீரம் உயிர்வாழ்வதற்கு, நம்முடைய சரீரங்களுக்கு ஆகாரமும் பானமும் ஒவ்வொரு நாளும் தேவை. நாம் ஒவ்வொரு நாளும் ஆகாரமும் பானமும் எடுத்துக் கொள்ளாவிட்டால், அப்பொழுது நம்முடைய சரீரம் பலவீனமடைகிறது. நாம் உணவு எடுக்க வேண்டும் என்ற ஏதோ ஒன்று நமக்குள் இருக்கிறது. ஒரு நாள் உணவு அடுத்த நாளுக்கு போதியதாயிராது. நீங்கள் உங்களுடைய அழிவுள்ள சரீரிதத்தை பலப்படுத்த, ஒவ்வொரு நாளும் ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உங்களால் வாழ முடியும். ஆனால் நீங்கள் பலவீனமாக இருப்பீர்கள். இரண்டாவது நாள், நீங்கள் இன்னும் பலவீனமாக இருப்பீர்கள். மேலும் மூன்றாவது நாளில் நீங்கள் மிகவும் பலவீனமாகி விடுவீர்கள்.
பாருங்கள். அந்த விதமாகத்தான் அநேக முறைகள் நாம் ஆவிக்குரிய மண்டலத்திலும் செய்கிறோம். நீங்கள் பாருங்கள். நாம் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவோடு ஐக்கியங்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் அவரிடத்தில் பேச வேண்டும். நாம் ஒவ்வொரு நாளும் அவரோடு இதை தீர்த்துக் கொள்ள வேண்டும். பவுல், "நான் அனுதினமும் சாகிறேன்" என்றான். புரிகிறதா? "அனுதினமும் நான் சாகிறேன்: ஆயினும் நான் பிழைத்திருக்கிறேன். நான் அல்ல கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்." ஆகையால் உயிர் வாழ்வதற்கு, உங்களுடைய மாம்சபிரகாரமான சரீரித்திற்கு ஒவ்வொரு நாளும் ஆகாரமும் மற்றும் ஒவ்வொரு நாளும் பானமும் தேவைப்படுமானால், உங்களுடைய ஆவிக்குரிய சரீரமும் உயிர் வாழ்வதற்கு, ஆவிக்குரிய ஆகாரமும் மற்றும் ஒவ்வொரு நாளும் கர்த்தரோடு ஐக்கியங்கொள்ளுதலும் வேண்டும். ஆம். இயேசு "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல. தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்றார். எனவே, ஒவ்வொரு நாளும் நாம் வேதாகமத்தை ஆய்ந்து படிக்க வேண்டும். சில ஜனங்கள் அதை ஆய்ந்து படிக்கிறதே இல்லை. சிலர் அதை ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுக்கிறார்கள். ஆனால். ஒரு உண்மையான, உண்மையாகவே ஆவிக்குரியப்பிரகாரமாக உருவாக்கப்பட்டுள்ள உண்மையான விசுவாசி. அவன் தன்னுடைய வேதாகமத்தை ஒவ்வொரு நாளும் வாசிக்கிறான் மற்றும் கர்த்தரோடு பேசுகிறான். அது உண்மை. [ஒலிநாடாவில் காலியிடம்--ஆசி.] அவன் அதைச் செய்ய வேண்டும். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல. தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்."
58 இப்பொழுது, நாம் உணவு எடுப்பதற்கான மற்றொரு காரியம், வியாதிகளை எதிர்கொள்ளும்படி நம்முடைய சரீரத்தை பலப்படுத்துவதற்காகவேயாகும். நீங்கள் ஆகாரம் எடுக்காவிட்டால் உங்களுடைய சரீரம் பலவீனமாகி அப்பொழுது அது நோய்களுக்கு உட்படுகிறது. வியாதிகள் இரத்த ஓட்டத்தை உடனடியாக தடை செய்ய, நீங்களோ இங்கே மரித்துப் போகின்றீர்கள். உங்களுடைய இரத்தம் செழிப்பாகவும் மற்றும் தூய்மையாகவும் இல்லையென்றால், பாருங்கள். அப்பொழுது அது, வியாதி உடனடியாக உங்களுடைய இரத்த ஓட்டத்துக்குள் செல்லும். எனவே உங்களுடைய இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க நீங்கள் நல்ல ஊட்டமளிக்கும் உணவை உண்ண வேண்டும். நீங்கள் அவ்வாறு உண்ணவில்லை என்றால் நீங்கள் நோய்களுக்கு ஒவ்வாமையாயிருக்கிறீர்கள். அதுதான் ஏராளமான கிறிஸ்தவர்களோடுள்ள காரியமாய் இருக்கிறது.
59 வெப்ப நிலையூட்டப்பட்ட நிறைக்கண்ணாடிக் கட்டிட செடிகளைப் போல, நீங்கள் ஒரு செடியை வெப்ப நிலையூட்டப்பட்ட நிறைக்கண்ணாடி கட்டடத்திலிருந்து ஒரு செடியை வெளியே எடுத்தால் நீங்கள் அதை குழந்தையைப் போல் பராமரிக்க வேண்டும். அதற்கு வானிலைத் தெரியாது. அதற்கு சூரிய வெளிச்சமும் மற்ற காரியங்களும் தெரியாது. அது மூடி வைக்கப்பட்டு குழந்தையாகவே இருந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்ற அநேகரிடத்திலும் கூட அதுதான் காரியமாக உள்ளது அவர்கள் வெப்ப நிலையூட்டப்பட்ட நிறைக்கண்ணாடிக் கட்டிட செடிகளாய் இருக்கின்றனர். அது உண்மை, ஒவ்வொரு வண்டுகளும் வருவதற்கு இடமளிக்கிறதே! உங்களுக்கு தெரியுமா. அது மாத்திரம் அந்த--அந்த…அது மருந்து தெளிக்கப்பட வேண்டிய மென்மையான தாவரங்களாய் அல்லது கலப்பின தாவரங்களாய் மாத்திரமே உள்ளன.
60 உங்களுக்குத் தெரியுமா. நீங்கள் ஹெர்ஃபோர்ட் பசுவை எடுத்து, அதை அங்கே மேய்ச்சலுக்கு விடுங்கள். அங்கேயே லாங்ஹார்ன் பசுவையும் மேய்ச்சலுக்கு விடுங்கள். அந்த லாங்ஹார்ன் பசு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும். ஏனென்றால் அது அசலான இனமாயுள்ளது. ஆனால் நீங்கள் ஒரு ப்ராங்கஸ் அல்லது ஒரு ஹெர்ஃபோர்ட் இனத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு கலப்பின ரகமாயும் மற்றும் ஒரு கலப்பினமாயுமுள்ளது அது பார்ப்பதற்கு ஒரு சிறந்த பசுவாயும், நிச்சயமாகவே பருமனாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. ஆனால் நீங்கள் அவைகளை வெளியே விட்டால், அவைகளால் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாது. அவைகள் இறந்து போய்விடுமே! அவைகளை குழந்தையையாக பாதுகாக்க வேண்டும். பார்த்தீர்களா?
அதுதான் இன்றைக்கு காரியமாக உள்ளது. நாம் நன்கு உடையடுத்தின கிறிஸ்தவர்களையும், பெரிய சபைகளையும் மற்றும் அதிகக் கல்வியையும், அதிக வேத சாஸ்திரத்தையும் பெற்றுள்ளோம். ஆனால் அவர்கள் எல்லா நேரத்திலும் குழந்தையாக பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களுடைய கண்ணாடியின் வழியாக பார்க்க வேண்டும் இல்லையென்றால் நீங்கள் அவர்களை பார்க்கவே முடியாது. நமக்கு தேவை என்னவென்றால் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் கீழ் பிறந்து, சபை சாஸ்திரத்தின்படி ஜீவிக்காமல் தேவனுடைய வார்த்தையின்படி ஜீவித்து கிறிஸ்துவோடு ஐக்கியங்கொண்டுள்ள சில கலப்படமற்ற கிறிஸ்தவர்களே ஆகும். வார்த்தை விசுவாசிக்குள்ளாக வரும் போது, அவனுடைய அவனுடைய ஆவிக்குரிய சரீரம் உருவாக்கப்படுகிறது. வெப்ப நிலையூட்டப்பட்ட ஒரு நிறைக்கண்ணாடிக் கட்டிட குழந்தையை அல்லவே!
61 ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரன் இன்றைக்குக் கூறினார். அவர் கூறியதை நான் கேட்டேன். அவர் அதை ஒரு ஒளிபரப்பில் கூறினார். அவர் கூறினார். அவர் இந்த தேசத்திற்குள்ளாக வந்த போது, அவருக்கு ஒரு பெரிய சைனஸ் என்ற எலும்பின் உட்புழைத் தொல்லை இருந்ததாம். மேலும் அவர்கள் ஒரு அறுவை சிகிச்சையைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் இதை மற்றும் அதை செய்யப் போவதாகவும் மற்றும் அவருக்கு வெட்டி அறுவை சிகிச்சை செய்து, அந்த எலும்பு உட்புழை சுரப்பியின் பாகத்தை எடுத்து விடப்போவதாகவும். அது அவருடைய முகத்தை மூடி விடும் என்பது போன்று அவர்கள் கூறினார்களாம். மேலும் அவர் பீப்பாய் நிறைய மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறினார். அவர் எடுத்துக் கொள்ளவேண்டிய மருந்துகள் அதுபோல் அநேகமாய் இருந்தனவாம். ஆனால் அவர் ஒரு நல்ல கிறிஸ்தவ மருத்துவரிடம் வந்த போது, அந்த மருத்துவரோ. "நாம் மருந்துகளை மறந்து விட்டு மற்றும் நாம் அறுவை சிகிச்சையும் மறந்து விட்டு அந்த எலும்பு உட்புழையை எதிர்க்கும்படியாக நாம் சரீரத்தை வலுப்படுத்துவோம்" என்றாராம். அதுதான்!
62 ஜனங்கள் முன்பு நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் போல இப்பொழுது வாழாததற்கு காரணம் என்ன? நாம் இதற்காக ஒரு ஊசியை மற்றும் அதற்காக ஒரு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. மற்றும் எல்லாவிதமான மருந்துகளையும் நாம் தானே தெளித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. அது என்ன செய்கிறது? அது நம்மை மிருதுவாக, கொழுப்பாக, மந்தமாக, நலமற்றதாக்குகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு இருந்த மனிதனோ… இப்பொழுது அவர்கள் நோய் சம்பந்தமான ஒவ்வாமைகளையும் மற்றுமுள்ள காரியங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.
நான் ஆப்பிரிக்காவில் இருந்த போது, மலேரியா காய்ச்சலுக்காக ஒரு ஊசி போட்டுக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு மலேரியா கொசு என் கரத்தின் மீது அமர்ந்தால், அப்பொழுது எனக்கு மலேரியா வந்து விடும். அது ரீங்காரமிடுவதில்லை. ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அவைகள் அமரும், அவைகள் அப்படியே அமரும். அவ்வளவு தான். நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் உயிர்த்தப்பினாலும், நீங்கள் அதை பதினைந்து ஆண்டுகளாக உடையவர்களாயிருப்பீர்கள். ஒருகால் சில சமயங்களில் நீங்கள் மரிக்கக் கூடும். மேலும் தங்களுடைய சிறு குடிசைகளில் இருந்த அந்த பூர்வீகவாசிகள், தங்களுடைய கால்கள் முழுவதும் கொசுக்கள் கடித்திருக்க, அவர்கள் நிர்வாணமாக இருந்தனர். கொசுக்கள் அவர்கள் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும். மலேரியா கொசுக்கள், ஆனால் அது அவர்களைப் பாதிக்கவில்லை. ஏன்? அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டனர். அவர்களுக்கு தேவனால் அளிக்கப்பட்ட ஒரு தடுப்பூசி இருந்தது.
63 இன்றைக்கு ஜனங்களோடுள்ள காரியம் அந்தவிதமாகத்தான் உள்ளது. சபையோடுள்ள காரியமும் அந்தவிதமாகத்தான் உள்ளது. நாம் முற்றிலும் சிறு வயதிலிருந்தே மிக அதிகமான ஊசிகளையும் மற்றும் மனிதனால் உண்டாக்கப்பட்ட வேத சாஸ்திரத்தையும் பெற்றுள்ளோம். தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையின் மூலமான தேவனுடைய தடுப்பூசியே நமக்குத் தேவையாய் இருக்கிறது. ஆவிக்குரிய வியாதிகளிலிருந்து பாதுகாப்பளிக்க தனது ஆத்துமாவை வலுப்படுத்த, மனிதன் அந்த விதமான ஆகாரத்தினால் அனுதினமும் ஜீவிக்க வேண்டும். அந்த வியாதிகள் தேசத்தை சுற்றிலும் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கின்றன. இதன் பேரில் ஏராளமான குறிப்புகளை வைத்துள்ளேன். ஆனாலும் நான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
64 இப்பொழுது தடுப்பூசிக்காக ஆயத்தமாக வலுப்படுத்திக் கொள்வோம். இப்பொழுது, இதன் மூலமாக நாம் வாழ்கிறோம். நம்முடைய-நம்முடைய சரீரங்கள் இதைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், நாம் இதைப் பெற்றிருக்கவில்லையென்றால் அப்போது நாம் எல்லாவிதமான வியாதிகளுக்கும் ஆளாகிறோம். மேலும் தேவனுடைய வார்த்தையை, நாம் விசுவாசிக்கிறபடியால் "கர்த்தாவே. உம்முடைய வசனமே சத்தியம்" என்று கூறி ஐக்கியங்கொள்வதன் மூலம் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
"நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டியதில்லை என்று என்னுடைய சபை கூறுகிறது. அவர்கள். "கரங்களை குலுக்குதலே மீண்டும் பிறப்பதாயிருக்கிறது' என்கின்றனர். அவர்கள், தெளித்தல்" என்கின்றனர். அவர்கள், "அதுதான் இது பிதா குமாரன் பரிசுத்த ஆவி'" என்று இந்த எல்லாக் காரியங்களையும் கூறுகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வேதம் கூறியுள்ளது. புரிகிறதா? இப்பொழுது, உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் அந்த செயற்கையான ஊசிகளைப் போட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களை ஒரு செயற்கையான கிறிஸ்தவராகிக் கொள்வீர்கள். புரிகிறதா? உங்களுக்கு அது தேவையில்லை.
65 நீங்கள் ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடியாது. கிறிஸ்துவினூடாக மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். இப்பொழுது அவருடைய வார்த்தை என்ன செய்கிறது? பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்படி. நாம் அவரோடு ஐக்கியங்கொள்கையில். அது நம்முடைய ஆவிக்குரிய சரீரதத்தை பலமுள்ளதாக உருவாக்குகிறது.
நீங்களோ "சகோதரன் பிரான்ஹாம், அவருடைய வார்த்தையில் ஐக்கியங்கொள்ளுதலை' நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?" என்று கேட்கலாம்.
ஆம். அவர் வார்த்தையாய் இருக்கிறார். "ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்." மேலும் நாம் அவருடைய சரீரத்தைப் புசிக்க வேண்டும். அப்படியானால் அவருடைய சரீரம் அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. ஏனென்றால் அவர் வார்த்தையாய் இருக்கிறார். மேலும் அவர், பரிசுத்த யோவான் 15-ல் "நீங்கள் என்னில் நிலைத்திருந்தால் என்னுடைய ஐக்கியங்கொள்ளுதல் என்னுடைய வார்த்தை உங்களில் நிலைத்திருந்தால் அப்பொழுது நீங்கள் "கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்" என்றார். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அது உண்மை. பாருங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்பதைக் கேளுங்கள்!
66 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? யாரோ ஒருவர் உள்ளே வந்து "ஓ. எங்களுடைய சபை சத்தமிடுவதில் நம்பிக்கைக் கொண்டி ருக்கவில்லை" என்று கூறுவதிலிருந்து… பாதுகாத்துக் கொள்ள நீங்கள் உங்களுடைய சரீரத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள். நீங்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளீர்கள். என்ன? நீங்கள் உங்களுக்குள் வார்த்தையில் ஐக்கியங்கொண்டுள்ளீர்கள். நீங்கள் அதிலிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள். ஒரு கூட்ட அர்த்தமற்றவை உள்ளே நுழைந்தாலும், அது என்னவாக இருக்கிறது? அதில் வார்த்தையே இல்லை. ஆகையால் இது தவறாக இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள். அது எவ்வளவு உண்மையாகக் காணப்பட்டாலும் எனக்கு கவலையில்லை. அது வார்த்தையாயில்லையென்றால் அதை அப்படியே விட்டு விடுங்கள். சரி. அதை அப்படியே விட்டு விடுங்கள். அது என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. அதை வார்த்தையோடு ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்!
67 ஜெபத்தில். நான் மிகாயா அங்கு நின்று கொண்டிருந்ததை மேற்கோள் காட்டிக் கொண்டிருக்கையில். பாருங்கள். அது உண்மையாகவே சரியானது போன்று காணப்பட்டது இஸ்ரவேலருக்கு. அந்தத் துண்டு நிலமானது அவர்களுக்கு சொந்தமானது. அந்த அந்நியர்கள் உள்ளே வந்து, அதை அவர்களிடத்திலிருந்து பறித்துக்கொண்டு, தங்களுடைய சொந்த வீடுகளைக் கட்டியிருந்தனர். தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்த அந்த நிலத்தின் பகுதியை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தனர். எனவே அந்த நானூறு எபிரெய தீர்க்கதரிசிகளும் சரியாக கூறுவது போன்று அது காணப்பட்டது. ஆனால். உங்களுக்குத் தெரியுமா. யோசபாத் ஆவிக்குரியப்பிரகாரமாக இருந்ததைக் குறித்து ஏதோ ஒரு காரியம் இருந்தது. எனவே அவன், "உங்களிடத்தில் இன்னும் வேறு யாராகிலும் ஒருவர் உண்டா?" என்று கேட்டான்.
அப்பொழுது. "என்னிடத்தில் மற்றொருவன் உண்டு". ஆனால் என்று கூறி, "நான் அவனை வெறுக்கிறேன். அவன் செய்கிற ஒரே காரியம் தீமையாக தீர்க்கதரிசனம் உரைக்கிறதாகும்" என்றான்.
அதற்கு "போய் அவனை அழைத்து வாருங்கள். நாம் அவனிடத்தில் கேட்போம்" என்றான்.
அப்பொழுது அவன் புறப்பட்டு சென்றான். அவன், "போங்கள். அங்கே போங்கள். ஆனால் இஸ்ரவேலர் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல சிதறடிக்கப்பட்டதை நான் கண்டேன்" என்றான். அதன் பின்னர் அவன் தன்னுடைய தரிசனத்தைக் கூறினான்.
68 இப்பொழுது, யாருடையது சரி? அந்த நானூறு பேரும் சரியா கூறுவது போன்று காணப்பட்டது. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட நானூறு மனிதரும் போங்கள் "கர்த்தர் உங்களோடு இருக்கிறார்" என்றனர். மேலும் சிதேக்கியாவும் கூட ஒரு--ஒரு--ஒரு--ஒரு… சிதேக்கியா இரண்டு பெரிய இரும்பு கொம்புகளைக் கட்டியிருந்தான். அப்பொழுது அவன் "இதன் மூலம் நீர் அந்த அன்னியர்களை தேசத்தை விட்டு துரத்தி விடுவீர்" என்றான். அவன் சரியாக இருந்தாக அவன் நிச்சயம் நம்பினான். அவன் சரியாக இருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் நீங்கள் பாருங்கள் அவன் தவறாயிருந்தான்.
மேலும் இங்கு மிகாயா நானூறு பேருக்கு எதிரான ஒருவனாயிருந்தான். மேலும் அவன். "நீங்கள் போனால் இஸ்ரவேலர் மேய்ப்பனில்லாமல் சிதறடிக்கப்படுவார்கள்" என்றான்.
மற்றவர்களும். "போங்கள் கர்த்தர் உங்களோடு இருக்கிறாரே!" என்றனர். இப்பொழுது பொருள் ரீதியாக அவர்கள் சரியாக இருந்தனர். அந்த இடம் இஸ்ரவேலுக்கு சொந்தமானது. ஆனால் கர்த்தருடைய வார்த்தை ஆகாபை ஆக்கினைக்குட் படுத்தியிருந்த போது தேவன் அவனை ஆக்கினிக்குட்படுத்தியிருந்த போது எப்படி அவரால் ஆசிர்வதிக்க முடியும்?
69 இன்றைக்கும் அது உள்ளது. புரிகிறதா? வார்த்தையின் ஐக்கியம் மிகாயாவுக்குள் இருந்தது. இப்பொழுது, நீங்கள் உண்மையான ஐக்கியங்கொள்ளுதலில் தேவனோடு ஐக்கியங் கொள்ளும் போது உங்களுக்குள்ளிருக்கிற ஆவி இந்த வார்த்தையோடு ஒத்துப் போகவில்லையென்றால் நீங்கள் தேவனோடு ஐக்கியங் கொண்டிருக்கவில்லை. நீங்கள் பிசாசுகளோடு ஐக்கியங் கொண்டிருக்கிறீர்கள். மேலும் அவர்கள் அதிகமாக பாவனை செய்து கொண்டிருக்கிறார்களே! வேதமோ, "கடைசி நாட்களில் கூடுமானால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள். ஆனால் வானங்களும் பூமியும் ஒழிந்துபோம். ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒழிந்துபோகாது" என்று கூறியுள்ளது. மேலும் ஒரு…பவுல். கலாத்தியர் 1:8-ல். "நீங்கள் ஏற்கனவே கேட்டுள்ள சுவிசேஷத்தையல்லாமல். வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால். அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்" என்றான். தூதனும் கூட! ஆதிகால சபையில், பரிசுத்த மார்ட்டின், ஐரேனியஸ், அந்த தேவபக்தியுள்ள மனிதரைப் போன்ற அந்த மனிதர் இருக்கும்போது பிசாசு ஒளியின் தூதனைப் போல பிரசன்னமானான். ஆனால், நீங்கள் கவனியுங்கள். அவன் வார்த்தையிலிருந்து கொஞ்சம் தான் விலகியிருப்பான்.
அவன் ஏவாளிடத்தில் ஒரு ஒளியின் தூதனாக தோன்றி நிச்சயமாகவே "கர்த்தர் இதைக் கூறினார். கர்த்தர் இதைக் கூறினார்." என்று அவளிடத்தில் கூறினான். ஆனால் அவன் கடைசியில் தேவனோடு உடன்படவில்லை. அந்த விதமாகவே பொய்யான ஐக்கியங்கொள்ளுதலும் இன்றைக்குச் செய்கிறது. ஜனங்கள் தேவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கும் போது வார்த்தைக்கு கீழ்படியாவிட்டால், அது ஒரு பொய்யான ஐக்கியங் கொள்ளுதல்,
70 "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் அப்பொழுது நீங்கள் கேட்டுக் கொள்ளுவதெதுவோ" பாருங்கள். "அது செய்யப்படும்." இப்பொழுது ஒரு முறை தரித்திருந்து விட்டு, அதன் பின்னர் அடுத்த முறை தரித்திருக்காமலிருக்க முடியாது. "நீங்கள் என்னில் நிலைத்திருந்தால், என் வார்த்தைகள் உங்களில் நிலைத்திருந்தால்" அதுதான். அங்கே தரித்திருங்கள். நிலைத்திரு என்பது "அங்கே சார்ந்திரு, அங்கே தரித்திரு" என்று பொருள்படுகிறது. ஆம். அது அது பாவமுள்ள வியாதிகளிலிருந்து தடுப்பதாயுள்ளது.
71 இப்பொழுது. நாம் கர்த்தருடைய பந்திக்கு செல்வதற்கு முன்பாக, நான் இப்போது இந்த ஒரு வார்த்தையைக் கூறி முடிக்கட்டும். இரத்தமும் கர்த்தருடைய சரீரமும். விசுவாசத்தோடு கலந்து அதாவது இரத்தமும் சரீரமும், அதாவது ஆவியும் வார்த்தையும் விசுவாசத்தோடு கலந்து நித்திய ஜீவனுக்கு சமமாகிறது. "என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்." அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அது என்ன? அது கர்த்தருடைய இராப்போஜனம். வார்த்தையும் ஆவியும், இந்த ஜீவன் இரத்தத்தில் உள்ளது. வார்த்தையும் ஆவியும் கர்த்தரில் உள்ள விசுவாசத்தின் மூலம் நித்திய ஜீவனுக்கு சமமாகிறது.
72 இதோ என்னுடைய ஜெபம், முடிவு நெருங்கி வருவதை நான் காண்கையில், பாருங்கள். எந்த நிமிடத்திலும், ஏதாவது சம்பவிக்கலாம். மேலும் நாம் கர்த்தருடைய வருகைக்கு வெகு தூரத்தில் இல்லை என்பதை அறிந்திருக்கிறோம்.
கர்த்தாவே தேவகுமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவருடைய வார்த்தையின் ஐக்கியங்கொள்ளுதல் மூலம், நான் இயேசுவைக் காணும் வரை நான் வார்த்தையை பட்டயத்தை எடுத்துக் கொண்டு எனக்குள்ள விசுவாசத்தோடு அதை வீசி, என் வழியினூடாக சென்று ஒவ்வொரு பிசாசின் வல்லமையும் வெட்டட்டும்.
அவருடைய வார்த்தையோடு ஐக்கியங்கொள்ளுங்கள். "நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால். அப்பொழுது நீங்கள் என்னிடத்தில் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அது உங்களுக்காக செய்யப்படும்" எவ்வளவு அழகானது! அதுவே வார்த்தையோடும் ஆவியோடும் உள்ள உண்மையான ஐக்கியங்கொள்ளுதல். விசுவாசத்தோடு அதை ஒன்று சேர்த்து அசைக்க "நீங்கள் கேட்டுக் கொள்ளுவதெதுவோ. அது உங்களுக்காக செய்யப்படும்" நாம் ஜெபம் செய்வோமாக.
73 கிருபையும் உன்னதமுமான பரிசுத்த பிதாவாகிய தேவனே, நான் மகத்தானவராக இருக்கிறேன் என்றகிறவரே, ஆபிரகாமுக்கு எல்ஷடாயாக இருந்தவரே, ஓ தேவனே. எப்படியாய் இந்த கர்த்தருடைய மகத்தான இராப்போஜனம் நித்திய ஜீவனுக்கு சமமாகிறது மற்றும் எப்படியாய் இது பெருமையில் இருந்து தடுக்கிறது. எப்படியாய் அது அவிசுவாசத்திலிருந்து தடுக்கிறது எப்படியாய் அது உலகத்தின் பாவத்திலிருந்து தடுக்கிறது! இது எங்களுடைய பரலோக பிதாவினிடத்தில் தெய்வீக அன்போடுள்ள இராப்போஜனமாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நீதியின் மூலமாக நாங்கள் இந்தப் பந்தியை அணுக வேண்டும். நீர் இன்றிரவு எங்கள் ஒவ்வொருவருக்கும் ஆவியில் அந்த அணுக்கலை தரவேண்டுமென்று கர்த்தாவே, நாங்கள் ஜெபிக்கிறோம். எங்களை மன்னியும். எங்களுடைய ஆவிக்குரிய சரீரங்கள் வளர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சில சபைகளில் அல்லது ஸ்தாபனங்களில் சேருவதைக் குறித்து நாங்கள் கவலைப்படுகிறதில்லை. தவறு செய்ய வேண்டும் என்ற ஒரு வாஞ்சையே இல்லாத ஒரு நிலைக்கு, பாவத்தை தடுக்க ஆவிக்குரிய சரீரத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். மேலும் பரிசுத்த ஆவியானவர் தம்முடைய சொந்த வார்த்தையை எடுத்து எங்களுடைய உதடுகளில் வைத்து, அது அந்நாளில் பேசப்பட்டது போல புதிதாக அதை பேசுவாராக. ஏனென்றால் கர்த்தராகிய இயேசுவிலிருந்த அதே ஆவியாய் அது இருக்கிறது. பிதாவே, நீர் அதை எங்களுக்கு தர வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.
74 வேளையோ முடிவடைந்து கொண்டிருக்கிறது. கடைசி ஒருவர் எப்பொழுது இரட்சிக்கப்படுவார் என்பதை நாங்கள் அறியோம். ஆனால் இங்கே உம்மை தங்களுடைய இரட்சகராக அறியாதவர்கள் இருப்பார்களாயின் கர்த்தாவே, அவர்கள் இன்றிரவே உம்மைக் கண்டறிந்து, அவர்கள் இந்த தண்ணீர் ஞானஸ்நானத்துக்கு வரும் போது, ஒரு நினைவுச் சின்னமாக கன்னி மரியாளிடத்தில் பிறந்த நசரேயனாகிய இயேசு, கொல்லப்பட்டு பொத்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டு தேவனால் மூன்றாம் நாள் உயிரோடெழுப்பப்பட்டு, இன்றிரவு தம்முடைய மகத்துவமானவரின் வலது பாரிசத்தில் வேண்டுதல்கள் செய்யும்படிக்கு சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவராய் வீற்றிருக்கிறார் என்ற ஆதார செய்தியை விசுவாசிக்கிற சரீரமாகிய விசுவாசிகளிடத்தில் அறிக்கை செய்ய வேண்டும் என்று நான் இன்றிரவு ஜெபிக்கிறேன்.
75 கர்த்தாவே, அதே நபர் வேதாகமத்தின் கற்பனைகளுக்கு "நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" என்பதற்கு கீழ்படியும்படிக்கு அருளும். ஓ தேவனே, ஜனங்கள் அதனுடைய உத்தமத்தையும், உறுதியான வார்த்தையான "நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் கட்டளையிடப்பட்டுள்ளது" என்பதை புரிந்து கொள்வார்களாக. ஆகையால், அப்போஸ்தலன் "நீங்கள் மனந்திரும்பி. ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது" என்றான். கர்த்தாவே இன்றிரவு அதிகமான அழைப்பு இருக்கும்படி அருளும்.
76 எங்களுடைய கர்த்தரால் "என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கிறது" என்றும் கூட கூறப்பட்டுள்ளது. ஒரு அந்நியன். ஒரு அந்நியன் பேசுவானானால், அது ஒரு வேதப்பிரகாரமாயிராத சத்தமாயிருந்தால் உடனே ஆடுகள் அதை அடையாளங் கண்டுகொள்ளும். ஓ. தேவனே! அது உம்முடைய சத்தமாய் வேதமாய் இருந்தால், அது என்ன கூறுகிறது என்பதற்கு ஒவ்வொரு ஆடும் அதற்கு செவி கொடுக்கும். ஏனென்றால் அது ஆட்டின் ஆகாரமாய் இருக்கிறது. அவர்கள் ஐக்கியங்கொண்டுள்ளனர். எந்தவிதமான ஆகாரத்தை பிதாவானவர் போஷிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." கர்த்தாவே. அநேகர் கண்டு, புரிந்து கொண்டு, இன்றிரவு உம்மிடத்தில் வர அருள்புரியும்.
பரிசுத்த ஆவியில்லாதவர்கள் அவர்கள் அதை மற்றொரு மணி நேரத்திற்கு என்று தள்ளிப் போடாதிருப்பார்களாக. மற்றொரு மணி வேளை என்பது மிகவும் தாமதமாக இருக்கலாம். ஒரு வேளை அவர்களே இங்கு இல்லாதிருக்கலாம்.
77 பிதாவே உம்முடைய நொறுக்கப்பட்ட சரீரத்தின் பிரதிநிதித்துவமாக இதை இப்பொழுது எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் மேஜையை சுற்றி கூடியிருக்கிறோம். கர்த்தாவே எங்களுக்கு மத்தியில் பாவம் இருக்குமாயின், எங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நீரோ "நீங்கள் கூடி வரும்போது ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்" என்று கூறினீர். தேவனே இந்த சபையில் எங்காவது ஒரு பாவம் இருக்குமாயின், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அந்த மனிதனை அவனுடைய பாவத்திலிருந்து, அல்லது அந்த ஸ்திரீயை, பையனை அல்லது பெண்ணை வேறு பிரிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். மேலும் பிதாவே, ஒவ்வொரு சந்தேகத்திலிருந்தும், ஒவ்வொரு பாவத்திலிருந்தும், ஒவ்வொரு அவிசுவாசத்திலிருந்தும், நீர் என்னை வேறு பிரிக்க வேண்டுமென்று நான் தானே எனக்காக ஜெபிக்கிறேன். அது எந்தக் காரியமானாலும்…அவிசுவாசம் பாவமாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அங்கு உள்ள ஒரே பாவம் அதுவாகத்தான் இருக்கிறது. "விசுவாசியாதவனோ ஏற்கனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று." அங்கு உள்ள ஒரே பாவம் தேவனுடைய வார்த்தையை விசுவாசியாததேயாகும். மேலும் பிதாவே, எனக்குள் எந்த அவிசுவாசமாவது இருக்குமானால் என்னை மன்னியும். ஓ தேவனே, அது நிறைய உள்ளது. மேலும் நீர் என்னை மன்னிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். இன்றிரவு நீர் எனக்கு அளித்திருக்கிற என்னுடைய சபையோரை மன்னியும். வார்த்தையின் பேரில் அவர்களைப் போஷியும். இதை அருளும்.
எங்கள் மத்தியில் சதாகாலமும் உயிரோடு இருக்கும்படி மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிற அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தின் நினைவுகளாக இந்த சிறிய பிட்கப்பட்ட அப்பத் துண்டுகளை நாங்கள் உட்கொள்ளும்போது நாங்கள் அவரிடத்திலிருந்து ஐக்கியங்கொள்ளுதலை, கர்த்தாவே, பரிசுத்த ஆவியின் ஐக்கியங்கொள்ளுதலைப் பெற்றுக் கொள்வோமாக. பிதாவே, இதை அருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
78 இப்பொழுது சுமார் பதினைந்து நிமிடங்கள் இராப்போஜன ஆராதனையில் தரித்திருக்க முடியாமல் செல்ல வேண்டுமென்றிருக்கிற நீங்கள்…நாம் அநேகராக இல்லை. நாம் இராப்போஜனம் எடுத்துக் கொள்வோம். இது ஒரு தனிப்பட்ட சாராருக்கு ஒதுக்கப்பட்ட இராப்போஜனம் அல்ல. இது முற்றிலும் ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்குமானதாய் உள்ளது. தேவன் பாப்டிஸ்ட் மற்றும் மெத்தோடிஸ்ட் போன்றவர்க்கு இடையே ஒரு கோட்டை வரைந்திருக்கவில்லை. நாம் எல்லோரும், ஒரே ஆவியினால், ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். மேலும் நாம் தேவனுடைய இராஜ்யத்தின் சக பிரஜைகளைகளாக இருக்கிறோம். மேலும் இங்கு நமக்கு மத்தியில் அந்நியர் யாராவது இருப்பார்களேயானால். நான் இங்கு அதிகமாக இருப்பதில்லை. யார் அங்கத்தினர் மற்றும் யார் அங்கத்தினர் அல்ல என்பதும் தெரியாது. நினைவிருக்கட்டும். நீங்கள் எந்த சபையை சேர்ந்திருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அதற்கு இதனோடு எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே ஒரு சபை தான் உண்டு. எப்படியும், நீங்கள் அதில் சேர்வதில்லை. நீங்கள் அதற்குள் பிறக்கின்றீர்கள். அது உண்மை. நீங்கள் இந்த தேவனுடைய சபைக்குள்ளாக பிறந்திருக்கிறீர்கள். நாம் அவருடைய நொறுக்கப்பட்ட சரீரத்தை நினைவுகூர்ந்து, மற்றும் பஸ்காவைக் குறித்த இந்த சிறு பொருட்களை உட்கொள்ளும்போது, இன்றிரவு நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். தேவன் இரத்தத்தால் நம்முடைய இதயங்களிலும் மனசாட்சியிலும் தெளிப்பாராக.
79 இப்பொழுது அவர்கள் இராப்போஜனத்தைக் கொண்டு வருவார்கள். நாம் முதலாம் கொரிந்தியர் 12-ம் அதிகாரத்திலிருந்து இப்பொழுது வாசிப்போம். இதற்குப் பிறகு நாம் உடனடியாக இராப்போஜனத்தை எடுக்கப் போகிறோம். தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். ஆகையால் நாம் இதைப் படித்தவுடனே அல்லது இதைப் படிப்பதற்கு முன்பு. நீங்கள் போக வேண்டுமானால் பாருங்கள் நீங்கள் எளிதாக வெளியே செல்லலாம். அதன் பின்னர் மீண்டும் புதன்கிழமை இரவு மற்றும் ஞாயிறு காலையும் ஞாயிறு இரவும் எங்களோடு இருங்கள். நீங்கள் எங்களோடு இராப்போஜனம் எடுத்துக் கொள்ளும்படி தரித்திருக்க முடிந்தால், நீங்கள் அதை செய்வதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஆகையால் அதற்குப் பிறகு உடனடியாக கர்த்தர்…ஞானஸ்நான ஆராதனை இருக்கும். அது சுமார் பதினைந்து நிமிடங்களில், அல்லது அதிகபட்சம் இருபது நிமிடங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். முதலாம் கொரிந்தியர். 11-ம் அதிகாரம். 23-ம் வசனம்.
நான் உங்களுக்கு ஓப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது;: என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் 'இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப்பானம் பண்ணும் போதெல்லாம் என்னை 'நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
இப்படியிருக்க, எவன் புசியாமல்… எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜன பானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான்.
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர் களுமாயிருக்கிறார்கள்; அநேகர் 'நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் ,நியாயந்தீர்க்கப்படோம்.
நாம் 'நியாயந்தீர்க்கப் படும்போது உலகத்தோடே, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
80 இப்பொழுது நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு நிமிடம் மெளன ஜெபம் செய்வோமாக. நான் உங்களுக்காக ஜெபிக்கையில் எனக்காக ஜெபியுங்கள். [சகோதரன் பிரான்ஹாம் நிறுத்துகிறார்--ஆசி.]….. சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த விண்ணப்பங்களை அருளும். எங்களுக்கு விரோதமாக தப்பிதங்களை செய்தவர்களை நாங்கள் மன்னிக்கிறது போல எங்களுடைய தப்பிதங்களை எங்களுக்கு மன்னியும். நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
81 இந்த சிறு துண்டுகளாக பிட்கப்பட்டுள்ள் கோஷர் அப்பம் எண்ணெய், உப்பு, போன்றவையில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது இது கர்த்தருடைய சரீரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது வட்ட வடிவமாக இருக்கவில்லை. இது முழுவதும் துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இது நமக்காக பிட்கப்பட்ட அவருடைய நொறுங்கின சரீரத்தையே பொருட்படுத்துகிறதாய் உள்ளது. தேவன் தாமே இதைப் புசிக்கிற ஒவ்வொருவருக்கும் தம்முடைய ஆசீர்வாதங்களை அருள்வாராக. இப்பொழுது, இது சரீரம் அல்ல. இது அவருடைய சரீரத்தை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதை அப்பமாக தவிர வேற ஏதாவதாக செய்ய எனக்கோ, வேறு எவருக்குமே வல்லமையில்லை. தேவன் மாத்திரமே செய்ய முடியும். அதனால் தான் இந்த அப்பத்தைப் புசித்து இந்த திராட்சரச பாத்திரத்தில் பானம்பண்ணும்படி அவர் நம்மிடத்தில் கூறினார். இப்பொழுது நாம் நம்முடைய தலையைத் தாழ்த்துவோமாக.
82 மகா பரிசுத்தமுள்ள தேவனே உம்முடைய ஊழியக்காரராயிருக்கிற நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த அப்பத்தை அது உபயோகிக்கப்படும் நோக்கத்திற்காக பரிசுத்தப்படுத்தி, எங்களை ஆயத்தப்படுத்தி, நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் போது, எங்களுடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நினைவு கூருவோமாக. மேலும் அவருடைய சரீரம் விலையேறப் பெற்றதாயும் மற்றும் அது பரிசுத்தமாய் இருந்தபடியால், எங்களுக்காக தழும்புகளாலும், முட்களாலும் மற்றும் ஆணிகளாலும் அடிக்கப்பட்டு, அவருடைய கிழிக்கப்பட்ட சரீரத்தின் மூலமாக புறப்பட்டு வந்த ஆவியே எங்களுக்கு நித்திய ஜீவனைத் தருகிறது. கர்த்தாவே நாங்கள் இதைப் புசிக்கையில், இஸ்ரவேலர் வனாந்தரத்திலே நாற்பது வருடங்கள் பிரயாணம் செய்த போது, அவர்களுக்குள்ளே பலவீனமான ஒருவரும் இல்லாதது போல, நாங்கள் பிரயாணம் செய்வதற்கான கிருபையைப் பெற்றுக் கொள்வோமாக. பிதாவாகிய தேவனே, நீர் இந்த அப்பத்தை, கோஷர் அப்பத்தை, அது உபயோகப்படுத்தப்படும் நோக்கத்திற்காக பரிசுத்தப்படுத்தும்படி நாங்கள் ஜெபிக்கையில், இதை அருளும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
83 இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையின் பாத்திரம். நான் அந்த பாடலைக் குறித்து நினைக்கிறேன்.
உம்முடைய காயங்களிலிருந்து ஓடும்
இரத்த ஓடையை நான் விசுவாசத்தினால் கண்டது முதற்கொண்டு
மீட்பின் அன்பே என்னுடைய கருப்பொருளாய் இருந்து வருகிறது
நான் மரிக்கும் வரை அவ்வாறே இருக்கும்.
நான் இந்த இரத்தத்தை, திராட்சை பழங்களை, திராட்சைப் பழரசத்தைக் காணும் போது, அது கர்த்தராகிய இயேசுவின் சரீரத்திலிருந்து வந்த இரத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை நான் அறிவேன். இதை ஏற்றுக் கொள்கிற எவரும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்களாக. அவர்களுடைய சரீரங்களிலிருந்து சுகவீனம் நீங்கிப் போவதாக சோர்வும் பெலவீனமும் நீங்கி போவதாக. தாங்கொணாத் துன்பநிலையும், (ஒவ்வொரு ரூபத்திலும் உள்ள) பிசாசு அவர்களை விட்டு வெளியேறுவதாக. தேவனை மகிமைபடுத்தும்படி நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற இந்த பொல்லாத விபச்சாரமுள்ள சந்ததியினருக்கு முன்பாக அவர்களுடைய வெளிச்சம் பிரகாசிக்க செய்யும்படி, அவர்கள் மகத்தான வல்லமையும் ஆரோக்கியத்தையும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வார்களாக.
84 பரலோக பிதாவே நாங்கள் திராட்சைப் பழரசத்தை உமக்கு அளிக்கிறோம். நாங்கள் வைத்துள்ள இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தத்திற்கு பிரதிநிதித்துவ படுத்தும்படிக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இதை பரிசுத்தப்படுத்தும். "எங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு அவருடைய தழும்புகளால் நாங்கள் குணமானோம்." கர்த்தாவே அந்த ஜீவன், மகத்தான அபரிமிதமான நித்தியஜீவன் எங்களிடத்தில் வந்து. நாங்கள் உமக்கு மேலாக ஊழியம் செய்யும்படிக்கு எங்கெங்கெல்லாம் நீர் எங்களை அழைக்கிறீரோ, அங்கே நாங்கள் உமக்கு ஊழியம் செய்யும்படி எதிர்பார்க்கிற இடம் விட்டு இடம் எங்களை கொண்டு செல்லும்படியான பெலனையும் ஆரோக்கியத்தையும் பெற்றுக்கொள்ளும்படி அருளும். இயேசுவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதங்களை அருளுமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்.