1 இன்று காலை ஏறக்குறைய 5:00 A.M. மணியளவில், நான் படுக்கையில் படுத்திருக்கும் போது, இத்தரிசனம் எனக்குத் தோன்றியது, ஆனால் இச்சமயத்தில் அது எனக்குப் புரியவில்லை.
நான் சூரியனில் நின்றுகொண்டு பிரசங்கம் பண்ணுவதை நானே காண்பதாக தோன்றியது. நான் மிகப்பெரும் கூட்டமொன்றில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அந்த சபையார் மரங்களடர்ந்த பகுதியில் (wooded area) உட்கார்ந்திருந்தனர், அங்கே சூரியனின் கதிர்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. நான் பிரசங்கித்துக் கொண்டிருந்த பிரசங்க பொருளின் காரணமாக, நான் என்னுடைய இருதயத்தில் மிகவும் களிகூர்ந்து, முழுவதுமாக பரவசமடைந்தேன்.
அந்தப் பாடத்தில் இரண்டு உச்ச நிலைகள் (climaxes) இருந்தன. என்னுடைய முதலாவது உச்ச நிலைக்காக ஒரு பின்னணியை நான் அமைத்துக் கொண்டிருந்தேன், திடீரென்று நான் கவனித்த போது, தாமதமாகியிருந்தது, மதிய நேரம் நெருங்கியது, என்னுடைய சபையார் சரீரபிரகாரமாக பசியடையத் தொடங்கினர். மேலும் அவர்கள் எழுந்து, திரும்பிச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, வெளியே நடந்து செல்லத் தொடங்கினர், ஆனால் அவர்கள் நினைத்தது போலவே சரீரபிரகாரமான ஆகாரம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும், சிலரோ களைப்போடு கேட்டுக்கொண்டிருந்தனர்.
என்னுடைய வலப்பக்கத்தில் விவாகமான வாலிப ஜனங்களில் சிலர் அங்கிருந்து கடந்து செல்வதை நான் கவனித்து, 'போகாதீர்கள்! நான் உங்களுக்குக் காண்பித்திருக்கிற இந்த எல்லா அற்புதமான காரியங்களும் அவைகள் எங்கிருந்து வந்ததென்றோ, நீங்கள் அவைகளை எங்கு கண்டு கொள்ளலாம் என்றோ உங்களுக்குத் தெரியாது!' என்று அவர்களைப் பார்த்து கூச்சலிட்டேன். அப்படியானால் அதுவே என்னுடைய முதலாவது உச்ச நிலையாக (first climax) இருக்க வேண்டும். நான் என்னுடைய வேதாகமத்தை எடுத்து, உச்ச நிலையை அடையும்படி, கூக்குரலிட்டு, 'அவர்கள் வேதாகமத்தில் அதைக் கண்டுள்ளனர், நான் வேதாகமத்தை மாத்திரமே பிரசங்கம் பண்ண வேண்டுமென்று கட்டளை பெற்றுள்ளேன்!' என்றேன். ஆனால் சபைக்கூட்டத்தார் போய்க்கொண்டேயிருந்தனர்.
நான் காட்டிலிருந்த அச்சபையை நோக்கிப் பார்த்தேன், அங்கே யாருமேயில்லை. பிறகு நான் திரும்பி, அதுதான் முதலாவது உச்சநிலை என்றேன், ஆனால் அவர்கள் சாயங்கால ஆராதனைக்காக திரும்பி வருவார்கள் என்று என் இருதயத்தில் நான் அறிந்திருந்தேன், நான் செய்ய வேண்டியதெல்லாம் என்னுடைய காலை ஆராதனையின் ஒரு சிறு பின்னணியை அமைக்க வேண்டும் என்பது தான். அப்போதுதான் சாயங்கால ஆராதனைக்காக அந்த மகத்தான உச்ச நிலையை அடைய முடியும். என்னுடைய காட்டு சபையிலிருந்து திரும்பி, சாயங்கால ஆராதனை தொடங்குவதற்காக காத்திருந்த போது, என்னுடைய இருதயம் மிகவும் பரவசமடைந்தது.
சகோதரன் வில்லியம் மரியன் பிரன்ஹாம்
(சகோதரன் வில்லியம் மரியன் பிரன்ஹாம் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில் உள்ள அவருடைய வீட்டில் 1962-ம் வருடம், அக்டோபர் மாதம் 30-ம் தேதி செவ்வாய் கிழமையன்று இத்தரிசனத்தைப் பெற்றார். அந்தக் காலை வேளைக்குப் பிறகு, அவர் பிரன்ஹாம் கூடாரத்தின் அலுவலகத்திற்குச் சென்று, தம்முடைய மகன் சகோதரன் பில்லி பால் பிரன்ஹாமை சந்தித்து, 'பால், எனக்குக் கடந்த இரவில் கர்த்தரிடமிருந்து ஒரு தரிசனம் கிடைத்தது, நான் உன்னிடம் கூறுகிறபடியே அதை எனக்காக நீ தட்டச்சு செய்து, ஆவணமாக வைத்திட நான் விரும்புகிறேன்' என்றார். அவர் அதற்குப்பிறகு, 1962-ம் வருடம், நவம்பர் மாதம் 4-ம் தேதி பேசிய, தூஷணமான நாமங்கள் என்ற செய்தியில் சுமார் மூன்று பக்கங்கள் அதைக் குறித்து பேசியிருக்கிறார் - ஆசிரியர்.)