ஊதாரி
50-08-27

16 px

1. நன்றி சகோதரன் பால். மாலை வணக்கம், கூட்டத்தினரே. [சபையார் கரங்களைத் தட்டுகின்றனர் - ஆசிரியர்) மிகவும் நன்றி. உங்களுக்கு நன்றி. ஏறக்குறைய மூன்று வாரங்கள் உங்களுடன் தங்கியிருந்த பிறகும் நான் திரும்பவும் வரவேற்கப்பட்டதை அறியும்போது அது உண்மை யாகவே என்னை நன்றாக உணரச் செய்கிறது. நாம் பரஸ்பர ஐக்கியத்தில் இருக்கிறோம் என்பதை அது காட்டுகிறது. அது... மரணம் கூட நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து போக செய்யாது. நாம் வேறெங்கோ ஜீவிக்கிறோம். அன்பு முன் செல்லுகிறது; எல்லா காரியங்களும் போனாலும், அன்பு இன்னும் நிலை நிற்கிறது. "எங்கு தீர்க்கதரிசனங்கள் இருக்கிறதோ அவைகள் தவறிப்போம்; எங்கே அந்நிய பாஷைகள் இருக்கிறதோ அது அழிந்து போகும்; ஆனால் அன்பு எங்கிருக்கிறதோ அது என்றென்றும் நீடித்திருக்கும். அது நிலைத்திருக்கும், அது நிலைத்திருக்கும். உங்களோடு சிறிது நேரம் பேசும்படியாக எனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்திற்காக, இந்த மத்தியான வேளையில் இங்கிருப்பது சந்தோஷமாயிருக்கிறதென்று நான் மறுபடியும் சொல்லுகிறேன். இங்கு சற்று உஷ்ணமாக இருக்கிறது. எழுப்புதல் முடிவடைகிற இந்த இரவு சுகமளிக்கிற ஆராதனை யாய் இருக்கிறது. இன்றிரவு இந்த கூட்டத்தாரின் மத்தியில் முடிந்த அளவிற்கு ஒவ்வொருவருக்கும் ஊழியம் செய்யும் படியாக அதிகமான நேரத்தை சுகவீனமாய் இருக்கிறவர்களுக்காக ஜெபிக்கும்படியாக நாங்கள் முயற்சிக்க போகிறோம். இப்பொழுது, நான் வீட்டிற்கு வெகு காலதாமதமாக சென்றேன். ஆனால் அடுத்த சனிக்கிழமை, அல்லது வெள்ளிக் கிழமை, பிறகு சனிக்கிழமை காலை எனக்கு ஒரு ஆராதனை இருந்தது. சனிக்கிழமை பிற்பகலுக்கு பிறகு, அக்கறை கொள்ளும்படியாக அநேக அழைப்புகள் இருந்தது. அதன் பிறகு, நான் சென்ற இரவு சபைக்கு சென்று சிறிது நேரம், அதாவது சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்தேன். இன்று பிற்பகலும், இன்றிரவும் எனக்கு ஆராதனை இருக்கிறது. நாளை மதியம் இந்தியானாவில் இருக்கிற நியூ ஆல் ..பனியில் எனக்கு ஆராதனை இருக்கிறது. ஆதலால் அது சரியாக நாம் விரும்புகிறபடி அது முன்னேறி கொண்டிருக்கிறது. ஆனால் எந்த இடமாய் இருந்தாலும் இயேசுவைப் பற்றி சில வார்த்தைகளை பேசும்படியாக அங்கு நாங்கள் இருக்க மிகவும் சந்தோஷப்படுகிறோம். அதுவே கணக்கிடப்படுகிறது.

2. இங்கிருக்கும் ஊழியர்களுக்காகவும், ஊக்குவிக்கும் படியான உணர்வுகளோடு அல்லது அவர்களுக்கு உதவியாய் இருக்கும்படியாக பாடியவர்களுக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாம் இங்கே கூடிவருவதன் நோக்கமே, மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்படியாகத் தான். நான் மாத்திரமே உலக முழுவதிற்கும் செய்தியை எடுத்துச் செல்ல முடியாது. அது ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று கூடி செய்ய வேண்டிய வேலையாய் இருக்கிறது. நாம் நம்முடைய சபைகளையும், நம்முடைய உபதேசங்களையும் மற்றவைகளையும் மறந்து, கிறிஸ்துவையும் அவருடைய சிலுவை மரணத்தையும், மேலும் நமக்கு மத்தியிலுள்ள அதையும் அறிந்து கொள்ள, நாம் ஒன்று கூடி ஒருங்கிணைந் தவர்வர்களாய் வரக்கூடுமானால், ஆச்சரியமான காரியங் களை தேவன் இப்பொழுதே செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். எல்லா காலங்களிலும் இல்லாத வண்ணமாக ஆவியானவரின் அசைவை நாம் காணப்போகிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும், இதை சொல்வதற்கு நடத்தப்படுவதாக நான் உணர்கிறேன். சில சமயத்தில் அல்லது கடந்த சில வாரங்களாக, மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய முயற்சிக்கும் அச்சிறு பகுதியை, இப்பொழுது, மறுபடியும் தேவன் அதை ஏதோ ஒன்றுக்குள் கொண்டு சென்று பெருகச் செய்யப் போகிறார் என நான் விசுவாசிக்கிறேன், அது ஜனங்களுக்கு முன்பாக செய்யும்படி தேவன் எனக்கு கொடுத்த வேறு இரண்டு அடையாளங்களைப் பார்க்கிலும் அது அதிக ஆச்சரியமானதாய் இருக்கும் என நான் உணர்கிறேன், அதை நான் விசுவாசிக்கிறேன். மேலும் அது இதுவரை இருந்ததைப் பார்க்கிலும் மிகவும் கிருபையுடையதாக இருக்கும் என நான் விசுவாசிக்கிறேன். எனக்காக ஜெபி யுங்கள். மேலும் மற்றவர்கள் இந்த ஊக்குவித்தலைப் பற்றிக் கொள்ளக் கூடுமானால் முன்னேறிச் சென்று தேவனிடம் நெருக்கமுள்ளவர்களாய் ஒரு மகத்தான கிறிஸ்தவ சேனை யாய் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள். நான் மறுபடியும் சொல்ல விரும்புகிறேன். இந்த வாரத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட சிறிய வெகுமதிகளும் மற்ற காரியங் களும், நாங்கள் வீட்டை அடையும் வரை இன்னும் அவை களில் சிலவற்றை நான் பிரித்துப் பார்க்கவில்லை. அவை யாவும் மெச்சிக்கொள்ளப் படத்தக்கது. சிறு பெண்ணும் நானும் கூட, நாங்கள் வீட்டை அடையும் போது, ஏன், யாரோ ஒருவர் எனக்கு கொடுத்த இனிப்பு அப்ப வகை பெட்டியை நானும் என்னுடைய சிறிய பெண்ணும் உட்கார்ந்து ஒருவருக் கொருவர் சாப்பிட்டோம். நானும் என்னுடைய சிறிய பெண்ணும், அவைகள் கிடைக்கப் பெற்றதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம்.

3. இப்பொழுது, நாம் அதிக நேரம் எடுக்க விரும்ப வில்லை. இன்று இங்கே இக்கட்டிடத்தில் எவ்வளவு ஜனங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நாங்கள் பார்க்கட்டும். அதாவது கிறிஸ்தவர்கள், கட்டிடம் முழுவதும். ஓ என்னே, பாவிகள் யாராவது இருக்கிறீர்களா? யாராவது ஒரு பாவி இருந்தால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் ஒரு பாவியல்லவென்று நீங்கள் கருதுகிறீர்களா? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்).?... ஒரு பாவி! என்னே !..?... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம். நான் அதற்காக நிச்சயமாகவே மகிழ்ச்சியாய் இருக்கிறேன். அது மிகவும் அருமையானது. இப்பொழுது நல்லது, நீங்கள் விசுவாசித்த பிறகு எத்தனை பேர் பரிசுத்தாவியை பெற்றிருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை நாங்கள் பார்க் கட்டும்...?... ஓ, என்னே . இங்கே பாருங்கள். இது எடுத்து கொள்ளப்படுதலுக்கான ஒரு நல்ல நேரமாக, இல்லையா? ஏற்கனவே..?... நல்லது, நான் இந்த பிற்பகல் வேளையில் "ஊதாரி மைந்தன் திரும்பி வருதல்' என்பதன் பேரில் பேசப்போவதாக இருந்தேன். வழக்கமாக பாவிகளை கிறிஸ்து விடம் வரும்படி செய்வதற்காக நான் இப்பாடத்தின் பேரில் பேசுவது வழக்கம், இங்கே பாவிகளே இல்லாத காரணத்தினால், நல்லது அவரிடம் வரவேண்டியவர் யாருமே இல்லை. இங்கே பாவிகள் யாராவது இருப்பார்களா? எனவே நான் என்னுடைய பாடத்தை மாற்றிவிட்டு, வேறொன்றை எடுக்கலாம்...? நீங்கள் வீட்டிற்கு செல்லும்போது, எல்லா வியாதியஸ்தர்களையும், அக்கம்பக்கத்திலுள்ளவர்களையும் இங்கே வெளியே அழைத்து வந்தால், அப்பொழுது கர்த்தர் இன்றிரவு நமக்காக ஏதோ ஒன்றை செய்து, அது ஒன்றை துவக்க, அது ஒரு மகத்தான ஊற்றப்படுதலை கொண்டு வரும். இன்று இரவு ஆராதனைக்காக, இங்கு எங்கோ சில இடங்களை கயிறுகளால் பகுதிபடுத்தி, அவற்றுள் எல்லா வியாதியஸ்தர், நோயாளிகள், கட்டில்கள், படுக்கை நோயாளிகள் முதலான வர்களை வைக்கப்போவதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று நினைக்கிறேன், அவர்கள் என்னிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது மிகவும் அருமையாக இருக்கும். மேலும் நான் ஜெபிக்கிறேன். தேவன்... இன்றிரவு ஒரே நேரத்தில் இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தேவன் சுகமாக்கும்படியாக நாம் யாவரும் ஒருங்கிணைந்து ஜெபிப்போம். நீங்கள் அதை இங்கு காண வேண்டுமென்று விரும்புகிறீர்களா? நான் வாக்களிக்கிறேன், தேவன் இங்கே... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) இங்கு வருகை தந்திருக்கும் ஒவ்வொருவரையும் சுகமாக்க விரும்புவா ரானால், நீங்கள்... அது எனக்கும் அவருக்கும் உள்ள ஒரு அடையாளமாக இருக்கும். உங்களால் கூடிய மட்டும் துரிதமாக ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளக் கூடுமானால், நான் மறுபடியும் திரும்பி வந்து இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்துவேன். [யாரோ ஒருவர், "நீர் அந்தச் செய்தியை பிரசங்கிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்” என்கிறார் - ஆசிரியர்) சரி. [யாரோ ஒருவர், "நாங்கள் யாவரும் கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவிகள்" என்று கூறுகிறார் - ஆசிரியர்) ஆமென். அதாவது நாம் "கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவிகள்" அது சரிதானே? நாம் அனைவரும் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட பாவிகளாயிருக்கிறோம். நான் ஒரு ஊதாரி யாய் இருந்ததை நினைவுகூருகிறேன். நான் இதற்கு மிக அருகாமையில் இருக்கிறேனா?

4. சரி... ஒவ்வொருவரும் ஞாபகம் வைத்து ஜெபியுங்கள். நாங்கள் சிறிது காலம் இந்த இடத்தைவிட்டு கடந்து போக வேண்டியது இருக்குமானால், எனக்காக ஜெபிக்க மறந்து விடாதீர்கள். இந்த பிற்பகல் வேளையில் நான் ஆராதனைக்கு வருவதற்கு முன்பாக வெளியில், அபிஷேகத்தின் கீழ் இருந்து வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது அந்த மகத்தான சுதந்திரத்தோடு கூட நின்று, ஜனங்களை வாழ்த்துவது, அதை செய்வதற்கு நாங்கள் - நாங்கள் - நாங்கள் சந்தோஷப்படுகிறோம். அது - அது என்னை வளரச் செய்கிறது, பிறகு இரவு நேரங்களில் இவ்விதமான காரியங்களுக்காக அந்த அபிஷேகமானது வரும்போது... சற்று யோசித்து பாருங்கள், சில நேரங்களில் நம்முடைய கூட்டங்களுக்கு அநேக , அநேக ஆயிரக்கணக்கில் ஜனங்கள் நம்மைச் சூழ உட்கார்ந்திருக்கும்போது, குற்றம் கண்டுபிடிப்பவர்களும், பத்திரிகையாளர்களும், சில சமயங் களில் விமர்சனம் செய்யும் ஊழியக்காரர்களும் அங்கு இருக்கின்றனர், தெய்வீக சுகத்தை விசுவாசியாத சபையைச் சார்ந்தவர்களும் அங்கு இருப்பதை நீங்கள் உணர முடியும். அவர்கள் - அவர்கள் ஏதாவது ஒரு தவறை கண்டுபிடிக்க காத்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் கண்டு பிடிக்கிற பட்சத் தில் அதை பிரசுரித்து விடுவார்கள். அது ஒரு - அது ஒரு ... இப்பொழுது, பரிசுத்தாவியானவர் அங்கே சரியாக அசைவுக்குள்ளாய் வரும்வரை எது என்னவாயிருக்கிற தென்று சரியாக புரிந்து கொண்டு எல்லா நேரங்களிலும் எனக்கு தெரிந்த வகையில் சிறப்பாக அதைச் செய்ய வேண்டியுள்ளது. நான் அதிகமாக ஜனங்களைச் சந்திக்க முடியாத காரணம் அதுதான். அவர்களை சந்திக்க விரும்ப வில்லை என்ற காரணத்தால் அல்ல. நான் அப்படி செய்ய விரும்புகிறேன் என்பதை தேவன் அறிவார். ஆனால் என்னால் - என்னால் அவ்விதம் செய்ய முடியாது. ஏனென்றால் நான் சிலரோடு தொடர்பு கொள்ளும்போது, அவர்கள் ஏதோ ஒரு காரியத்தை குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். அது என்னை அவ்விதமான காரியங்களிலிருந்து விலகியிருக்க செய்கிறது. மேலும், “இந்த நபர் குறிப்பிட்ட - குறிப்பிட்ட சில காரியங்களை உடையவராக இருக்கிறார், அல்லது இங்கு இருக்கும் மற்றவர். உங்களுக்கு முன்பாக நின்று கொண் டிருப்பது யார்?” என்று கர்த்தர் கூறுவாரேயானால் நான் அப்படியே இருக்க விரும்புகிறேன். ஒரு தவறு என்ன செய்யும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நான் என்னை சார்ந்திருக்க முடியாது. ஏனென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அவரை சார்ந்திருக்க வேண்டும். அங்கே, கர்த்தர் அந்த காரியங்களை செய்யும்போது நான் அவரை நம்பியிருக்கிறேன். அவர் இந்த முழு கூட்டத் தாரையுமே ஊக்குவித்து இயற்கைக்கு மேம்பட்ட தேவன் நமது மத்தியில் இருக்கின்றார் என்று விசுவாசிக்கச் செய்து நமது மத்தியில் அவருடைய கிரியைகளை மகிமைப்படுத்த ஆயத்தமாகிறார். அந்த வழியில் தேவன் தம்மைக் கண்டு கொள்ள செய்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கிற வேளை யில், இப்பொழுது அவரோடு சிறிது நேரம் பேசுவோமா?

5. எங்கள் பரலோக பிதாவே, இந்த பிற்பகல் வேளை யில் இங்கு இருப்பதற்காகவும், மேலும் உம்முடைய பிள்ளைகளுக்கு மத்தியில் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காகவும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். உம்மை விசுவாசிப்பவர்கள், உமக்காக கஷ்டத்தை சகிப்பவர்கள், உம்முடைய வார்த்தையை பிரசங்கிப்பவர்கள், இரவும், பகலு மாக உமக்கு ஊழியம் செய்பவர்கள், உபவாசித்து ஜெபிப்பவர்கள், எப்பொழுதும் பரலோகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள், அப்படிப்பட்டதான பரலோகத்தை சார்ந்திருக்கிற ஒரு குழுவோடு இந்த பிற்பகல் வேளையில் இணைந்திருப் பதற்காக, நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அநேகமநேகமான நூற்றுக்கணக்கான ஜனங்கள் இங்கே கூடியிருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய ஆவியினால் நிறைந்தவர்கள், தண்ணீர் கலக்கப்படுவதற்காக காத்திருக் கிறவர்கள், நாங்கள் அதற்குள்ளாக இறங்கித்தான் ஆக வேண்டும். கர்த்தாவே, உம்மை அறியாத சிலர் ஒருவேளை இங்கிருக்கக்கூடும். தங்கள் கரங்களை உயர்த்தி அதை குறித்து பகிரங்க அறிக்கை செய்ய, சில பின் தங்கியிருப் பவர்கள், அப்படிப்பட்ட இருதயத்தோடு இருப்பவர்களோடு நீர் இன்று பேசும்படியாக ஜெபிக்கிறேன். உம்மை தங்களுடைய இருதயத்தில் அன்பானவராகக் கண்டு கொள்ள அவர்களை மனந்திரும்புதலின் பீடத்தண்டை கொண்டு வாரும். பரிசுத்தாவியை பெறாதவர்கள் இன்றைக்கு இங்கு வரட்டும். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] "ஓ, தேவனே, என்னை ஆராய்ந்து என்னை சோதித்து யாதொரு பொல்லாங்கும் என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து பின்பு, உம்முடைய இரத்தத்தினாலே கழுவி, என்னுடைய இருதயத்திலே பரிசுத்தாவியாகிய உம்மை நான் பெற்றுக் கொள்ளட்டும்" என்று கூறுங்கள். "கர்த்தாவே, எங்கள் மீறுதல்களை எங்களுக்கு தயவாக மன்னியும். உம்முடைய பிள்ளைகள் தவறுதலுக்குள்ளாக இருக்கி றார்கள். அநேக நேரங்களில் வழியை விட்டு தவறிப் போகிறோம், எங்களை மன்னிக்கும்படியாக நாங்கள் ஜெபிக்கி றோம். (உம்முடைய வார்த்தையை ஆசீர்வதியும். எனக்கு தெரியாது, இந்த பிற்பகல் வேளையில் நான் சொல்வதற்கு ஒரு வார்த்தையும் எனக்கு தெரியாது என்பது உமக்கு தெரியும் பிதாவே. கூடுமாயின் திரும்பி வரும் ஊதாரி மகன்' என்பதைப் பற்றி பேசப் போகிறேன் என்று இப்பொழுது தான் அறிவித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே உமக்காக காத் திருக்க போகிறேன். நீர் என்ன சொல்லுவீரோ அதை நாங்கள் சொல்லுவோம். புறப்பட்டு செல்லுகிறதான ஒவ்வொரு வார்த்தையையும் நீர் ஆசீர்வதியும். அவை பண்படுத்தப்பட்ட நிலத்தில் விழுந்து நூறத்தனையாக பலன் தரட்டும். எஜமானனாகிய கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென்.

6. "ஊதாரி மகன் திரும்பி வருதல்" என்ற பாடத்தை பேசப்போவதாக நான் ஏன் கூறினேன் என்று எனக்குத் தெரியவில்லை . எனக்கு தெரிந்தபடி கடந்த எட்டு வருடங்களாக இந்த வேத வாக்கியத்தை நான் வாசித்ததில்லை, இந்த வேதப் பகுதியை வாசித்ததில்லை . மேலும் நான் அதன் பேரில் பேசும்படிக்கு, எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் தான் நான் அதன் பேரில் பேசினேன் என்று நான் யூகிக்கிறேன். நான் அப்பொழுது பேசினபோது, நான் அதை பரிசேயர்களின் வழியிலிருந்து அதை அணுகினேன் என்று நான் எண்ணுகிறேன். வீட்டைவிட்டு சென்ற குமாரனின் பொருட்டு அவனுடைய சகோதரன் மோசமாக உணர்ந்தான். கதையானது அவ்வழியில் தான் போகிறதென்று நான் நம்பு கிறேன். இழக்கப்பட்டு, வழிதவறிப் போன குமாரன் திரும்பின் போது தகப்பனார் அவனை ஏற்றுக் கொண்டு, அதை அணு கின அவருடைய மனப்பான்மையின் காரணத்தால் அவன் மிகவும் எரிச்சலடைந்தான். சபையானது அந்த வழியில் எண்ணக்கூடாது என்பதைப் பற்றி நான் சபையிடம் பேசினேன். ஒரு பாவி பீடத்தண்டை வரும்போது, முழு சபையும் அவர்களை சுற்றி கூடி வந்திருக்க வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்பாக கீழ்பகுதியான கென்டக்கி யிலுள்ள பர்கஸ் வில்லுக்கு அருகாமையில், நான் பிறந்த அந்த இடத்தில், அது ஞாபகார்த்த நாளாயிருந்தது. அது ஐந்து வருடத்திற்கு முன்பாக, ஞாயிறு பிற்பகல் நான் அங்கு பேசிக்கொண்டிருந்தேன். மேலும் அவர்கள். சில நேரத்திற்கு முன்பாக அவைகளை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு வித்தியாசம், இங்கே நாம் சுற்றிலும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, அருமையான அரங்கத்தில் இருக்கிறோம், ஆனால் அநேக நாட்களுக்கு முன்பு அங்கே நீண்ட சதுர பலகைகளைக் கொண்டும், நீளமான மரங் களாலும் உருவாக்கப்பட்ட ஒரு சிறு பழைய சபை. அப்படிப்பட்டதான ஒரு இடம் அங்கே இருந்தது. என்னை அவர்கள் அந்நாளில் மேலே அழைத்துச் சென்ற போது, அங்கே எல்லா இடங்களிலும் குதிரைகள் இருந்தன. அந்த காலை வேளையை குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந் தார்கள். ஞான பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். நான் அங்கே மேடையின் மீது நின்று கொண்டிருந்தேன். அங்கே ஒரு பக்கத்தில் "ஆமென் மூலையை " அவர்கள் கொண்டிருந் தார்கள். மறுபக்கத்தில் ஸ்திரீகளுக்கான இடம் இருந்தது. அங்கே அவர்களுக்கு பாடல் புஸ்தகம் கூட இல்லா திருந்தது. ஒரு கம்பினால் காற்றழுத்தம் கொடுக்கக்கூடிய ஒரு பழைய ஆர்கன் அவர்களுக்கு இருந்தது. அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உங்களில் யாராவது ஒருவர் அப்படிப்பட்டதான ஆர்கனை பார்த்திருக்கிறீர்களா என்பதை நான் பார்க்கட்டும். ஓ, அது சரி. நீங்கள் மரத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு மகத்தான பெரிய கோலால் இந்த ஆர்கனுக்கு காற்றழுத்தம் கொடுக்க வேண்டும். அவர்கள் இந்த ஆர்கனுக்கு காற்றழுத்தம் கொடுப்பார்கள். சில நேரங்களில் அவர்கள் அதை உபயோகப் படுத்த மாட்டார்கள், காரணம் சில சுருதி கட்டைகள் வேலை செய்யாமற்போவதினால். அவர்கள் சுருதி கொடுப்பதற்கான ஒரு பழைய கருவியை வைத்திருந்து, அந்த கருவியினால் தட்டும்போது வரக்கூடிய சத்தத்திலிருந்து ஊழியர், "ம்ம்ம்ம்ம்” என்று வாய்க்குள்ளாக சுருதி கொடுக்கும்போது, அவர்கள் யாவரும் அந்த சுருதியை பிடித்துக் கொண்டு பாட ஆரம்பிப்பார்கள். 'மரணம் வருகிறதாய் இருந்தாலும், நாங்கள் பொல்லாப்புக்கு பயப்படோம், ஏனென்றால் இயேசு எங்களை தம்முடைய கரங்களில் சுமந்து தம்முடைய வீட்டிற்கு பாதுகாப்பாய் அழைத்துச் செல்வார்" என்பதான பாடலை அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.

7. அந்த ஜனங்கள், அவர்கள் எவ்வளவாய் தேவனை கனப்படுத்தினார்கள். அந்த பிற்பகலில் அல்லது, இன்னும் சரியாக சொன்னால் அந்த இரவில் தெய்வீக சுகத்தைப் பற்றி நான் அவர்களிடம் பேசினேன். அடுத்த நாள் மேலே மலைப் பக்கத்தில் அணில் வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அந்தப் பள்ளத்தாக்கில் மரங்கள் அறுக்கும் சத்தம் எனக்கு கேட்டது. அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கும் படியாக அங்கு போக நினைத்தேன். ஐந்து அல்லது ஆறு மனிதர்கள் மரத்தில் தங்கள் துப்பாக்கிகளை சாய்த்து வைத்து விட்டு நின்று கொண்டிருந்தனர், மூர்க்கத்தனமான வாய்ச் சண்டைகளினூடே அவர்கள் மரங்களை அறுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன், "அந்த பிரசங்கியார் உண்மையை சொன்னார் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவர்களில் இன்னொருவன், "அது கம்பளி சுதேசி களுக்கான நல்ல ஆராதனையாய் இருந்தது” என்று சொன்னான். அதை குறித்து அவன் சொல்ல முடிந்த காரியம் அவ்வளவு தான் என்று நான் யூகிக்கிறேன். மேலும் அங்கே இருந்தது. அவர்கள் இருந்த இடம் வரைக்கும் நான் நடந்து சென்றேன். அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஒரு பெரிய புகையிலையை மென்று கொண்டிருந்தான். அது அவன் வாய்க்குள்ளாக ஒரு பக்கமாக தாடைகளுக்கு நடுவாக புடைத்துக் கொண்டிருந்தது. அவன் அவர்களுக்கு முதன்மை யான பேச்சாளனாய் இருந்தான். நான் அங்கு சென்று "ஹலோ" என்று சொன்னேன். அவர்கள் யாவரும் திரும்பி பார்த்தார்கள். அந்த முதன்மையானவன் என்னைப் பார்த்து விட்டு மென்றுக் கொண்டிருந்ததான புகையிலையை விழுங்கி விட்டு, தன்னுடைய தொப்பியை எடுத்துவிட்டு, "காலை வணக்கம், பார்சன் (போதகர்) பிரன்ஹாம்” என்றான். "என்னே, அது சற்றேறக்குறைய அவனைக் கொன்று விட போதுமானது" என்று நான் நினைத்தேன். அவ்வளவு பெரிய புகையிலையை வாய்க்குள் திணித்து (அவன் விழுங்கினான்).

8. ஆனால் அந்த பிற்பகல் வேளையில் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, மதிய உணவு (dinner) பரிமாறப்பட்டது. இங்கேயிருக்கும் ஜனங்களுக்கு அது மதிய உணவாக (lunch) இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் இப்பொழுது அது விருந்து உணவாக இருக்கிறது. காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று ஒரு நாளைக்கு மூன்று உணவுகளை தென் பகுதியில் நான் உட்கொள்வது வழக்கம். ஆகையால் இரவு ஆகார நேரத்தில் அவர்கள் மதிய ஆகாரத்தை குறித்து சொல்லத் தொடங்கிய போது நான் சற்று குழம்பினேன். இரவு நேர ஆகாரத்தை நான் - நான் தவறவிட்டேன். என்னவாய் இருந்தாலும் அந்த காட்டு பகுதியில் அந்த குதிரைகள் திமிரிக் கொண்டிருந்தது. நான் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை குறித்ததான பொருளின் பேரில் பேசிக் கொண்டிருந்தேன். அங்கு பின் பகுதியில் நன்கு வளர்ந்த ஒரு வாலிபன் நின்று கொண்டிருந்தான். அந்த இடமானது ஜனக்கூட்டத்தினால் மிகவும் நிறைந்திருந்தது. அவன் பிரசங்க பீடத்தண்டை ஓடி வந்து, "தேவனே, என் ஆத்துமாவின் மீது இரக்கமாயிரும்” என்று கதறினான். அவன் மேலே வந்த போது, "தேவன் என்னை இரட்சிப்பாரானால்,” ஏன், அவன் பிரசங்க பீடத்திற்கு பாதி தூரம் கூட வரவில்லை. அங்கு இருந்ததான வயதான தாய்மார்கள் ஏறக்குறைய ஐம்பது பேர் அவனுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு அவனோடு சேர்ந்து பிரசங்க பீடத்தண்டை சென்றார்கள். அங்கு அந்த பிற்பகல் வேளை கூட்டத்தில் ஏறக்குறைய ஐம்பது வினோதமாக மனம் திரும்பினவர்கள் இருந்தார்கள். மேலும் இப்பொழுது, அவர்கள் அங்கு முழங்கால்படியிட்டு, வறட்சியான கண்களோடு பாவங்களை அறிக்கையிட்டு விட்டு, எழுந்து செல்லவில்லை. அங்கே அவர்கள் இரண்டு மணி நேரமாக ஜெபித்தார்கள். அவர்களுடைய ஆடைகள் அவர்களுடைய வியர்வையினாலே பிழிந்து எடுக்கும் அளவிற்கு ஈரமாக இருந்தது. அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்கள் கூக்குரலிட்டுக் கொண்டு காடுகளினூடாக மலைகளின் மீது, ''அல்லேலூயா! அல்லேலூயா!” என்று ஆர்ப்பரித்துக் கொண்டு சென்றார்கள். ஜனங்களே, கவனியுங்கள், அவர்கள் ஒருவேளை பாப்டிஸ்டுகளாய் இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையான பழமை வாய்ந்த பரிசுத்தாவி மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தார்கள். அது சரியே, காரணம் அவர்கள் வாழ்ந்த விதம் அவ்விதமாக இருந்தது. உங்களுடைய கனிகளினாலே அறியப்படுவீர்கள். அது உண்மை.

9. இப்பொழுது, நான் வாசிக்கும்போது, நீங்கள் விரும்பினால் ஜெபியுங்கள்: பரி. லூக்கா 15 - ஆம் அதிகாரத்தில் நாம் இந்த வேத வசனங்களை வாசிக்க விரும்புகிறோம். பரி.லூக்கா 15 - ஆம் அதிகாரம் 11-ஆம் வசனம் தொடங்கி (வாசிப்போம்) (லூக்கா 15:11-24) பின்னும் அவர் சொன்னது. ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்தான். சில நாளைக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற் றையும் சேர்த்துக் கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப் போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தி யை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப் படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனி மேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டு வந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். கர்த்தர் வார்த்தையுடன் தம்முடைய ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக.

10. நான் - நான் ஒரு ஊழியக்காரனைப் போலவோ அல்லது ஒரு பேச்சாளனைப் போன்றோ இல்லை. பூமியின் மேலுள்ள இந்த கூட்டத்தினரில் என்னுடைய பாகம் என்ன வெனில், வியாதியஸ்தராயுள்ள ஜனங்களுக்காக ஜெபிப்பது தான், நான் அதை செய்ய மிகவுமாக விரும்புகிறேன். மேலும் நான் கல்வி கற்றவனல்ல. நான் சொல்லக்கூடிய ஒரே காரியம் என்னவெனில், நான் வேத வசனத்தை வாசிக்கும்போது, அப்படியே ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து, அவர் அதை கூறுவது போல, அப்படியே நான் அதைக் கூற வேண்டியதாய் உள்ளது. நீங்கள் அனைவரும், ஊழியக்கார சகோதரர்களும், நான் இந்த பாடத்தின் பேரில் அப்படியே சிறிது நேரம் பேச முயற்சிக்கையில், நீங்கள் என்னுடன் ஜெபியுங்கள். ஒரு காரியம்.... இயேசு இந்த உவமையை இரண்டு சூழ்நிலையை வைத்துப் பேசிக்கொண்டிருந்தார் என்பதை கவனியுங்கள். இழக்கப்பட்டுப் போனவர்களைக் குறித்து தகப்பனுடைய உணர்வைப் பற்றியும், தேவனிடமிருந்து உறவை முறித்துக் கொண்டு, புறம்பே சென்றவர்களைப் பற்றியும், அவர் வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தார். ஒரு சமயம் நாம் யாவரும் தேவனிடத்திலிருந்து உறவை முறித்துக் கொண்டு, உறவு துண்டிக்கப்பட்டவர்களாய், இரக்கமின்றி, நம்பிக்கையின்றி, அந்தகார உலகத்தில் நடந்து கொண்டு, என்றென்றுமாய் இழக்கப்பட்டிருந்தோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்; இயேசு ஒரு பாவியாக நம்முடைய இடத்தை எடுத்துக் கொண்டு நமக்கு பதிலாக மரித்தார். குமாரனானவர் பாவியாக ஆக்கப்பட்டது முதற்கொண்டு பிதா நம்மை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். எவ்வளவு அற்புத மான சுவிசேஷம்! ஜீவியமானது இயேசுவுக்காக இல்லையென்றால், வாழ்க்கை என்னவாக இருக்குமென்றும், நான் எப்பொழு தாவது, எதையாவது எதிர்ப்பாக்க முடியுமாவென்றும், நான் எங்கு - எங்கு இருப்பேன் என்றும், என்னுடைய வாழ்கையின் முடிவு என்னவாக இருக்கும் என்றும் நான் அடிக்கடி வியந்ததுண்டு.

11. சிறிது காலத்திற்கு முன்னர், நான் மருத்துவ மனையில் படுத்திருந்தேன். ஒரு நோயாளி நாடுகிற சிறந்த மருத்துவர்கள், நான் யூகிக்கிறேன்; மயக்க மருந்தானது தவறுதலாக என் இருதயத்தில் சென்றுவிட்ட பிறகு, அவர்கள் என் முகத்தை நோக்கிப் பார்த்தனர். மயக்க மருந்தானது அது இருக்க வேண்டிய இடத்திற்கு மேலே இருந்ததை கண்டு பிடித்ததால் அதிர்ச்சி அடைந்தனர்...?... அது என்னுடைய இருதயத்திற்கு சென்றுவிட்டது. என்னுடைய இருதயமானது நிமிடத்திற்கு 17 தடவை மட்டுமே துடித்துக் கொண்டிருந்தது. மருத்துவர் என்னுடைய தகப்பனாரிடம் கூறினார்...?... மூன்று நிமிடங்கள் தான் உயிர் வாழ்வேன் என்று. ஓ, என்னே, நான் அவ்விடத்தை விட்டு எவ்வாறு வெளியே வருவேன்? மூன்று நிமிடங்கள் தான் ஜீவித்திருப்பேன். என்னுடைய எல்லா பாவங்களும் எனக்கு முன்பாக நின்றன. நான் ... விசுவாசத்தை உரிமை பாராட்டவில்லை. பாவம், பாவமாக எனக்கு முன்பாக நின்றது. இங்கிருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், அநேக முறை நம்மை நாமே நியாயப்படுத்த முயற்சிக்கிறோம். நீங்கள், "நல்லது, இது மிகவும் மோச மானதல்ல" என்று கூறுகிறீர்கள். ஆனால் மிக அற்பமான பாவமும் அறிக்கை செய்யப்பட வேண்டும். எப்பொழுமே, அது என்னவென்பதோ, அது உங்களுக்கு எவ்வளவு சிறியதாக தோன்றுகிறது என்பதோ ஒரு பொருட்டல்ல. அது தேவனுடைய பார்வையில் பாவமாக இருக்கிறது. முதல் பாவமானது எவ்வளவு சிறியதாக இருந்த தென்பதைப் பாருங்கள், ஆனால் அது மனுக்குலத்திற்கு என்ன செய்ததென்பதையும் பாருங்கள். முதல் பாவமானது செய்யப்பட்ட போது வித்தியாசத்தைப் பாருங்கள். "உம்முடைய குமாரன் விழுந்து விட்டான்” என்ற செய்தியானது பரலோகத் திற்கு வந்தபோது, நல்லது, ஆதாம் தோட்டத்தின் வழியாக சுற்றிலும் ஓடி, "ஓ, பிதாவே, ஓ, பிதாவே, நீர் எங்கே இருக்கிறீர்” என்று கத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது போல தோன்றினது. ஆனால் ஆதாம் போய் தன்னைதானே மறைத்துக் கொண்டான். அது அப்படியே எதிர் மாறாக இருந்தது. பிதாவானவர், "மகனே, மகனே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று அழைத்துக் கொண்டிருந்தார். மனிதன் எப்படியாக தன்னைத் தானே நியாயப்படுத்த முயற்சிப்பானென்று பாருங்கள். அவன் ஏதோவொன்றின் பின்னால் நிற்க முயற்சிப்பான். சரியாக வெளியே வந்து, அவன் என்னவாக இருக்கிறான் என்பதை கூறி, அவனுடைய பாவங்களை தேவனிடம் அறிக்கை யிடுவதற்கு பதிலாக, அவன் ஏதோவொன்றின் பின்னால் மறைத்துக் கொள்ள முயற்சிப்பான்.

12. இங்கே தேவன் நடந்துக் கொண்டும், தோட்டத்தின் வழியாக மேலும் கீழும் ஓடிக்கொண்டும் தம்முடைய இழக்கப்பட்ட மகனுக்காக அலறிக் கொண்டும் அவருடைய தேடுதலாக அது இருந்தது. பிதாவானவர்தான் குமாரனை துருவித் துருவித் தேடிக் கொண்டிருந்தார்; மகன் பிதாவை தேடிக்கொண்டிருந்ததாக அது இருந்திருக்க வேண்டும். இன்றும் அது அப்படியே அவ்விதமாகவே இருக்கிறது. சரியாக மனிதன் பாவம் செய்த உடனே, வெளியே வந்து தன்னுடைய பாவங்களை தேவனுக்கு முன்பாக அறிக்கை யிடுவதற்கு பதிலாக, அவன் திரும்பி சென்றிட முயற்சிப்பான். அவன் ஏதோவொன்றின் பின்னால் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிப்பான். அவன் ஒரு தனக்குத் தானே உருவாக்கிக் கொண்ட மதத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பான். ஆதாமைப் பாருங்கள்.... அவர்கள் அத்தியிலையினால் ஆடைகளை உண்டாக்கிக் கொண்டு, அவர்களைச் சுற்றிலும் போர்த்துக் கொண்டார்கள், அத்தி இலைகள். ஆனால் தேவனுக்கு முன்பாக நிற்கும்படி, ஆதாமையும், ஏவாளையும் தேவன் அழைத்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, அவர்கள் தாங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு மதத்தைக் கொண்டிருந்ததாக உணர்ந்தனர். மதம் என்ற வார்த்தைக்கு "ஒரு மறைக்கும் போர்வை” என்று பொருள். அவர்கள் தாங்களாகவே உண்டாக்கின ஒரு ஆடையினால் தங்களை மூடியிருந்தனர். நீங்கள் அதை காண்கிறீர்களா? இப்பொழுது அந்த அழுத்தமானது இன்றும் இன்னும் கூட மனிதனில் இருக்கிறது. மனம் வருந்தி தேவனுடைய குமாரனின் மேல் விசுவாசம் வைத்து, நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை சுத்திகரிக்கும் அவருடைய குமாரனின் இரத்தத்தை அனுமதிக்கும் தேவனுடைய வழியில் வருவ தற்கு முயற்சிப்பதற்கு பதிலாக, நாம் சுற்றிலும் நழுவிச் சென்று, மற்ற ஏதோவொரு வழியை கண்டுக் கொள்ள முயற்சிக்கிறோம். தேவனுடைய வழியிலிருந்து தப்பிச் செல்லத்தக்க ஏதோவொரு வழி. நாம், "நல்லது, இந்த மதமானது. நாம் இதை சேர்ந்து கொள்வோம், அல்லது அது மிக கண்டிப்பாக இல்லாத இடத்தில் இதை நாம் செய்வோம்” என்று கூறுவோம். மேலும் அத்தி இலைகளினால் உண்டாக்கப்பட்டவைகளுடன், அவர்கள் தேவனை சந்திக்க நேர்ந்தது நன்றாக இல்லாதிருந்தது. என் அன்பான நண்பரே, நீங்கள் இந்த சரீரம் மற்றும் இந்த ஜீவியத்தின் கடைசி மூச்சு காற்றிடத்தில் வரும்போது, அந்த மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகள் நிலை நிற்கமாட்டாது என்பதை நீங்கள் கண்டுக் கொள்வீர்கள். அந்த காரியங்களைக் கொண்டு ஜீவிப்பது நல்லதுதான், ஆனால் அவைகளைக் கொண்டு நீங்கள் மரிக்க முடியாது... நான் யூகிக்கிறேன், என்னுடைய இந்த வயதில், இந்த ஊழியத்தில், என் வயதை உடையவர்கள் - மரித்துக் கொண்டிருக்கின்ற அநேக ஜனங்களின் அருகில் நான் அனேகமாக, இருந்திருக்கிறேன், ஏனென்றால் மரித்துக் கொண்டிருக்கிறவர்களுக்காக நான் மிகவும் அதிகமாக அழைக்கப்பட்டிருக்கிறேன்.

13. சில நாட்களுக்கு முன்னர், எங்களுடைய பட்டணத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வாலிப ஸ்திரீ பரிசுத்தாவியின் ஞானஸ்நானத்தை பெற்றிருந்தாள். அவள் கூடாரத்திற்கு வருவாள். பட்டணத்திலுள்ள வேறொரு வாலிபப் பெண் மிகவும் பிரபலமானவளாய் இருந்தாள். அவள் (இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தையும், பாதுகாப்பையும் மறுதலித்த, நவீன மாதிரியான மதக்குழுவை சேர்ந்தவர்களாய் இருந் தாள். மேலும் எங்களை, ஒரு வழக்கத்திற்கு மாறான மத நம்பிக்கை உடையவர்கள் என்றும் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள் என்றும் கூறினர். ஏனெனில் நாங்கள் கிறிஸ்துவினுடைய இரட்சிக்கும் கிருபையில் விசுவாசம் கொண்டிருந் தோம். ஒரு பரிசுத்த உருளையாய் இருப்பதற்கு அதுவே அவசியமாய் இருக்குமானால், பின்பு நான் அவர்களில் ஒருவனாயிருக்கிறேன். (காரணம்) நான் இரத்தத்தில் விசுவாசம் வைத்திருக்கிறேன். இந்த வாலிப ஸ்திரீ நடனங்களுக்கும் கேளிக்கை களுக்கும் போனாள், ஆனால் அவள் சபையில் ஞாயிறு பள்ளி ஆசிரியையாய் இருந்தாள். சபையானது கிறிஸ்துவின் இரத்தத்தை மறுதலித்து, அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது என்று கூறினது. அது 1900 வருடங்களுக்கு முன்பே உலர்ந்து போய்விட்டது என்று மேய்ப்பர் சொன்னார்: ஒரு சமூக சுவிசேஷம். போகப் போக இந்த அழகான தோற்றம் கொண்ட சிறு பெண் சில வாலிப பையன்களுடன் வெளியே சென்றாள். இந்த மற்ற சிறு பெண்ணோ மேலே கூடாரத்திற்கு வருவாள். அவள் பழைமை நாகரீகமான வஸ்திரங்களை உடுத்தினாள். அவள் தன்னுடைய மயிரை அப்படியே எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருக்கமாக சீவி, நீங்கள் அழைக்கிற இந்த ஒப்பனை அலங்காரம் எதுவும் அவளுடைய முகத்தில் கொண்டிருக்காமல் அல்லது அவர்கள் உடுத்துகிற அப்படிப்பட்ட காரியம் ஒன்றும் அவள் உடுத் தாமல் தெருவில் இறங்கி செல்வது வழக்கம். அவள் தெருவில் இறங்கி போவாள். ஆம், அது உண்மையே; நாம் அதற்கு விரோதமாக போதிக்கிறோம். சுவிசேஷத்திற்கு முக்கிய கவனத்தைக் கொடுக்கும்படிக்கு தேவன் போதகர்களுக்கு உதவி புரிவாராக. சீமாட்டிகளே கவனியுங்கள், ஒரு மனிதனை சந்திக்கும்படி தனக்குத்தானே வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீ எப்பொழுதாவது வேதத்தில் இருப்பாளானால், அது ஒரு ஸ்திரீ மாத்திமே, அதுதான் யேசபேல் ; தேவன் அவளை நாய்களுக்கு உணவாக்கினார். எனவே அவர்கள் வர்ணம் தீட்டிக்கொண்டிருப்பதை நீங்கள் காணும்போது, "எப்படி இருக்கிறீர்கள், செல்வி நாய்க் கறியே?” என்று கூறுங்கள். அது மிகவும் சரியே: தேவன் அவளை நாய்களுக்கு இரை யாக்கினார். நீங்கள் அவளைப் போல இருக்க விரும்புவ தில்லை . எவ்வளவு அழகாக இருக்க வேண்டுமோ அவ்வளவு அழகாக தேவன் உங்களுடைய வழிகளிலே உங்களை அழகுள்ளவர்களாக்குவார். ஆனால் இன்னும் நம்முடைய பரிசுத்த சபையானது அப்படிப்பட்டதான காரியங்களை விட்டுக் கொடுக்கிறது. அது உண்மை என்று நீங்கள் அறிந்திருக்கி றீர்கள். நீங்கள் மறுபடியும் உங்களை வெட்டி சரிப்படுத்தும் அந்த பழைய வரிசையில் திரும்பி வந்து, சுவிசேஷத்திற்கு திரும்பி வருவது நல்லது.

14. இப்பொழுது கவனியுங்கள். இந்த வாலிபப்பெண், அவள் அப்படியே தன் ஒவ்வொரு வழியிலும் செய்துக் கொண்டிருந்தாள், நடனங்களுக்கும், விருந்துகளுக்கும் மற்றவைகளுக்கும் வெளியே சென்றாள். அவள் வியாதியால் தாக்கப்பட்டாள். காரியம் என்னவென்று அவள் புரிந்துக் கொள்ளவில்லை. ஆனால் மருத்துவர் அவளிடம் வந்தபோது, அவள் ஒரு பால்வினை நோயை கொண்டிருந்தாள். அவளுடைய நிலைமை மிகவும் மோசமாயிருந்தது. கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தார்கள், ஆனால் அது கிரியை செய்யவில்லை. இந்நிலையில் அவள் நேராக பரலோகத்திற்கு போவாள் என்றும், ஏனெனில் அவள் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியையாய் இருந்தாள் என்றும் மேய்ப்பர் அவளிடம் கூறினார். எனவே அவர்கள் அனைவரும் அவள் போவதை யும், கர்த்தருடைய தூதர்கள் அவளை அழைத்துச் செல்ல வருவதையும் காண அறைக்குள் கூடிவந்திருந்தனர். அதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக நான் அப்படியே தெருவில் கடந்து சென்றேன். மேய்ப்பர் வீட்டின் கூடத்தில் உட்கார்ந்திருந்தார், அழகான பெரிய வீடு, அருமையான ஜனங்கள். அவர் அப்பொழுதுதான் அறையை விட்டு வெளியே வந்திருந்தார். ஞாயிறு பள்ளி வகுப்பார் அனை வரும் அவள் பரலோகத்திற்கு போவதை காணும்படி உள்ளே பாடல்களை பாடிக் கொண்ருந்தனர். மேய்ப்பர் புகை பிடிக்கும்படி நடந்து வெளியே கூடத்திற்கு வந்தார். மரணம் அப்பெண்ணை தாக்கியபோது, அவள் மரண பீதியில் அலறத் தொடங்கினாள், அவள், "அந்த பெண் எங்கே?” என்றாள். அவர்கள், "எந்தப் பெண்?” என்றனர். அவள், "உன்னுடைய வகுப்பார் எல்லாரும் இங்கே உள்ளனரே” என்றாள். அவளோ, "நான் அவர்களை குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை. என்னுடைய ஆத்துமாவை குறித்து என்னிடம் வழக்கமாக பேசுகிற, அவளுடைய பெயரைச் சொல்லி, அங்கே மேலேயுள்ள அந்த கூடாரத்தைச் சேர்ந்த அந்த பெண்ணைக் குறித்து தான் நான் பேசிக் கொண் டிருக்கிறேன்" என்றாள். "போய் அவளை அழைத்து வாருங்கள்” என்று சொன்னாள்.

15. அவர்கள் மேய்ப்பரிடம் சென்றனர், அவர் உள்ளே ஓடி வந்தார். அவர், "இப்பொழுது, தேனே கவனி, நாங்கள் மருத்துவரை அழைக்கிறோம். அவர் உனக்கு ஊசி போடுவார். நீ சிறிது பதற்றமடைந்துள்ளாய்” என்றார். அவள், "நான் பதற்றமடையவில்லை . நீ மனிதரை வஞ்சிக்கிறவன். நான் இழக்கப்பட்டு நரகத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன், ஏனெனில் நீ எனக்கு அவ்வாறு தான் போதித்தாய்” என்றாள். அந்த பெண் இழக்கப் பட்டவளாய், எது சரியானதென்று அவளிடம் கூற முயற் சித்துக் கொண்டிருந்த மற்ற பெண்ணிற்காக அலறிக் கொண்டே மரித்து, தேவனைச் சந்திக்கச் சென்று விட்டாள். பார் சகோதரனே, இந்த வாழ்க்கை பயணத்தின் முடிவிற்கு நீ வரும்போது, நீ தேவனுக்கு முன்பாக ஒரு பரிசுத்தமான, சுத்தமான ஒரு ஜீவியம் ஜீவித்திருக்க வேண்டுமென்று நீ விரும்புவாய். அதை ஞாபகத்தில் வைத்திருப்பதில் நிச்சயமாயிருங்கள். இப்பொழுது, உங்களுடைய சபையைக் குறித்து - நீங்கள் எந்த சபையை சேர்ந்தவர்களாய் இருந்தாலும், தேவனுக்கு அது காரியமல்ல. உங்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதுதான் காரியம். அது சரியே. நீங்கள் எந்த சபையை சேர்ந்தவர்கள் என்று தேவன் உங்களிடம் கேட்கப் போவதில்லை; உங்களுடைய இருதயத் தில் என்ன இருக்கிறது என்பதைத்தான் தேவன் பார்க்கப் போகிறார்.

16. கவனியுங்கள், தகப்பனையும், தூரமாய் போய் விட்ட குமாரனையும் குறித்து இயேசு இங்கே எவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார். தேவன் எவ்வாறு ஜனங்களை தேடிக் கொண்டும், அழைத்துக்கொண்டும், மனந்திரும்ப வேண்டுமென்று அவர்களை இழுத்துக் கொண்டும் இருக்கி றார் என்பதை அவர் தம் மனதில் கொண்டிருக்க வேண்டும். இன்று, பரிசுத்த ஆவியானவர் இன்னும் தேசங்களினூடாகச் சென்று இழக்கப்பட்டும், மரித்துக் கொண்டும் இருப்பவர்களை வெளியே அழைத்துக் கொண்டிருக்கிறார். நாம் இங்கே இதை விட்டு செல்வதற்கு முன்னால், நான் அத்தியிலைகளை குறித்து ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். தேவன் என்ன செய்தார் என்பதை கவனி யுங்கள். அவர் ஆதாமையும் அவர்களையும் அவர் சந்தித்த போது, அவர்கள் தங்களுடைய சுயமாக உண்டாக்கப் பட்ட மதத்தை கொண்டிருந்தனர். இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை , யாரோ ஒருவர், "சகோதரன் பிரன்ஹாமே, என்னுடைய மதம் என்னவென்று உமக்கு தெரியுமா? என்னுடைய மதமானது அந்த பொன்னான சட்டமாகும்: பிறர் உங்களுக்கு செய்ததையே நீங்களும் அவர்களுக்கு செய்யுங்கள் என்பதாகும்” என்றார். நான், "அது நல்லதுதான், ஆனால் அதில் எந்த இரட்சிப்பும் கிடையாது” என்றேன். அது சரியே. "ஒரு மனிதன் மறுபடியும் பிறவாவிட்டால், அவன் எவ்விதத்திலும் (தேவனுடைய) இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான்.” தேவனுடைய ஆவியால் பிறந்து, புதுப்பிக்கப்பட்டு, மறு ஜென்மமடைந்து, கிறிஸ்து இயேசுவில் புதிய நபராகும்போது, பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதியதாகி, மாற்றமடைந்து, மாறுதல் அடைந்தன. உங்களுடைய வழியில் போய்க் கொண்டிருக்கிறீர்கள், அதற்கு மாறாக திரும்பி இந்த வழியில் வாருங்கள்.

17. இப்பொழுது, ஆனால் அவர்கள் தேவனுக்கு முன்பாக நின்றபோது, ஆதாம் வெளியே வர பயந்தான். அவன், "நான் நிர்வாணியாய் இருக்கிறேன்” என்றான். இப்பொழுது கவனியுங்கள், தேவன் வெளியே சென்று, சில தோல்களைப் பெற்று, உள்ளே வந்து உடைகளை உண்டாக்கி, அவர்களைச் சுற்றிலும் அவைகளை கட்டினார். இப்பொழுது கவனியுங்கள், தேவனுக்கு தோல்கள் கிடைக்க வேண்டுமானால், அவர் ஏதோ ஒன்றை மரிக்க வேண்டும். மூடப்படுவதற்காக ஏதோவொன்று மரிக்க வேண்டும், மேலும் அவர் ஏதோவொன்றை கொன்று, அவைகளிலிருந்து தோல்களை பெற்றிருக்க வேண்டும். ஏதோ ஒன்று அவர்களுடைய இடத்தில் மரித்தது. ஏனெனில் தண்டனையானது மரணமாக இருந்தது. எனவே அவர்கள்ளுடைய குற்றங்களை மூடும்படியாக ஒரு மாசற்ற பலிகடா குற்றவாளிகளுக்காக மரிக்க வேண்டியிருந்தது. அதே விதமாகத்தான் இன்றும் உள்ளது. நண்பர்களே: பொன்னான சட்டமல்ல, அதெல்லாம் சரிதான்; பத்து கட்டளைகளல்ல, அது பரிசுத்தமாக உள்ளது; ஆனால் தேவன் உங்களை மூடும்படி ஏதோ ஒன்றை கொன்றார். நீங்களும் நானும் தேவனுக்கு முன்பாக அவரில் மாசற்றவர்களாய் இருக்கும்படிக்கு, குற்றவாளிகளுக்காக ஒரு வழியை உண்டாக்கும்படி மாசற்றவராகிய அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசு கல்வாரியில் மரித்தார். பரிசுத்த ஆவியானவர் இன்றும் கிறிஸ்து இயேசுவாகிய அவரின் மேல் விசுவாசமாய் இருக்கும்படிக்கு யாரோ ஒருவரை கண்டுபிடிக்க முயற்சிக்கும்படி தேசத்தினூடாக தேடிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் காரியமாகும்.

18. இப்பொழுது, நம்முடைய கதையானது தொடங்குகிறது, அது எனக்கு மிகவும் சோக உணர்ச்சியை தூண்டுகிற ஒரு கதையாக உள்ளது. நான் இப்பொழுது அப்படியே சிறிது அணுக முயற்சிக்கையில், கூர்ந்து கவனியுங்கள். நாம் இந்த பிற்பகலில் அப்படியே சிறிது காட்சியை பெற்றுக் கொள்ளும்படி ஒரு நாடகத்தை அமைப்போம். எனவே பிள்ளைகள் அதை புரிந்து கொள்ளக்கூடும். தேவனே, இந்நாட்களிலுள்ள எங்களுடைய பிள்ளைகளுக்கு உதவி புரியும். சமீபத்தில், மகத்தான ஜெ.எட்கர் ஹூவரும் குழுவாக செயல்படும் அவரது அணியினரும், மகத்தான மனிதர் அல் பெரரும், மொத்தத்தில் குழுவாக செயல்படும் ஹவர் அணியின் வாலிபர்களும், என்னுடைய கூட்டத்திற்கு வந்து மனந்திரும்பி, கிறிஸ்துவினிடம் வழிநடத்தப்பட்டனர். நான் அவரது அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தேன். அது என்னவாக இருந்தது, நான் கலிஃபோர்னியாவிலுள்ள பிரஸ்நோவில், ஒரு கூட்டத்தை கொண்டிருந்தேன், மூன்று இரவுகள். நாங்கள் அங்கிருந்து ஸீட்டிலுக்கு சென்றோம்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர். ]... மேடை. நான் உள்ளே நடந்து சென்ற பொழுது காவலர்களை எங்குமே காணவில்லை. அவர்கள் என்னை ஒரு சிறு அறைக்குள் அழைத்து சென்றனர். நான் வெளியே திரும்பி வரும்போது, டாக்டர் போஸ்வர்த் அவர்கள் தம்முடைய உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். என்னை அறிமுகப் படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; அப்படியே அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில், ஒரே நிறமான ஆடையணிந்த யாரோ ஒருவர் மேலேறி வந்து, அவருடைய தோளை தொட்டு, "நான் ஒரு வார்த்தை சொல்ல விரும்பு கிறேன்” என்றார். டாக்டர் போஸ்வர்த் அவர்கள், "ஐயா, அது இங்கு வழக்கமல்ல” என்றார். அவர் தம்முடைய அறிமுகச் சான்று கடிதங்களைக் காட்டினார். அவர் கேப்டன் அல் பராராக (Captain Al Farrar) இருந்தார். அவர், "சரி ஐயா” என்றார். அவர், "நண்பர்களே ..." என்றார். பத்தாயிரம் பேர் கூடியிருந்தனர். அவர், "கேப்டன்... நான் தான் கேப்டன் அல் பரார்" என்றார். அவர், "பெரும்பாலும் இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அறிவர், ஏனெனில் நான் பிறந்த இடமுள்ள வீடு இங்கே வாஷிங்டன் டாகோமாவிலுள்ளது. மக்களிடமிருந்து ஏமாற்றி பணம் பறிக்கும் திட்டத்தை நிறுத்துவது தான் என் உத்தியோகமாகும். நான் இந்த பிரன்ஹாம் அவர்களுடைய வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் காரியத்தை கேள்விபட்ட போது, நான் அந்த ஏமாற்றி பணம் பறிக்கும் திட்டத்தை நிறுத்தும்படி நான் பிரஸ்நோவுக்கு சென்றேன். நான் அந்த காரியங்களைப் பார்த்திருக்கிறேன், அந்த போதகர் பேசுவதை கேட்டேன்; அவர் ஒரு ஏமாற்றுகாரர் போல் எனக்குத் தோன்ற வில்லை. நாங்கள் சென்று, ஒரு மருத்துவரை அழைத்து வந்து, போலியோவால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத கால்களையுடைய ஒரு சிறு பையனை அனுப்பி வைத்தோம். இவ்விதமாக அந்த இளம்பிள்ளை வாதம்...?..." "அவன் அதனூடாக வந்தபோது... நாங்கள் இரண்டு இரவுகள் தங்கி னோம். இறுதியாக, அந்த பையனை ஜெப வரிசையில் கொண்டு வந்தனர். அவன் வரிசையினூடாக வந்த போது, சகோதரன். பிரன்ஹாம் 'அவன் போலியோவால் பாதிக்கப்பட்ட ஒருவன்' என்றார். அவன் தகப்பனாரிடம் அவரால் விசுவாசிக்க கூடுமா என்று கேட்டார். இந்நிலையில், அந்த தகப்பனார் போலீஸ் படையை சேர்ந்தவராயிருந்தார். அவர், தான் விசுவாசிப்பதாகச் சொன்னார். அந்தப் பையன் எட்டு நாளைக்குள்ளாக சுகமடைவான் என்று சகோதரன். பிரன்ஹாம் கூறினார். நாங்கள் அவனை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தோம். அந்த சிறு பையன் இன்றிரவு இங்கே அந்த திரைக்கு பின்பாக பரிபூரணமாக சுகமடைந்தவனாக நின்று கொண்டிருக்கிறான், பள்ளிக்கு திரும்பினான். நீங்கள் அனைவருமே அதில் நன்றாக நம்பியிருக்கலாம் என்று நான் விரும்புகிறேன்: அவர்களுடைய பண விஷயத்தையும் அவைகளைக் கொண்டு அவர்கள் என்ன செய்கின்றனர், என்ன காரியங்கள் என்று நாங்கள் சோதித்தோம்” என்று அவர் கூறினார். "இது ஒரு ஏமாற்றி பணம் பறிக்கும் தொழிலல்ல என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அது உண்மையாகவே சர்வவல்லமையுள்ள தேவனின் கரமாக உள்ளது” என்றார்.

19. அடுத்த நாள் அவர்களுக்கு இருந்த அந்த பெரிய சிறைச்சாலைக்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். அவர்கள் வாலிப ஸ்திரீகளை உள்ளே கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் துப்பாக்கியால் சண்டையிடுபவர்கள். அவர்கள் தரையில் மேலும் கீழும் நடந்து கொண்டு, ஒருவர் மற்றவரை சபித்துக் கொண்டிருந்தனர். "சங்கை பிரன்ஹாமே, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றார். "ஓ, என்னே, நான் அவர்களிடம் ஒரு வார்த்தை முடியுமா?” என்றேன். அவர், "நிச்சயமாக” என்றார். நான் அங்கிருந்த வாலிப மனிதர்களிடம் சென்றேன். அவர்கள் அங்கே உள்ளே ஒரு பயங்கரமான நிலையில் இருந்தனர். குறிப்பிட்ட அறைகளை திறப்பதற்கு அவர் தம்முடைய மேஜையில் இருந்தவாறே ஒரு பட்டனை அழுத்த வேண்டுமென்றும், இங்கிருந்து அதை செய்தால் மாத்திரமே போதும் என்றும், அதை செய்வது எப்படி என்றும் அவர் என்னிடம் காட்டினார். யாராவது ஒருவர் அவரை துப்பாக்கி யால் சுட்டால், அவர் அங்குள்ள பட்டனை அழுத்த அது ஒவ்வொன்றும் அடைக்கப்பட்டு விடும் ... காவலர்கள் மற்றும் எல்லாமுமே அவ்விடத்தைச் சுற்றிலும் இருந்தனர். அதற்கு பிறகு அதை அவர் செய்து முடித்தார், அவர் தம்முடன் இரண்டு மெய்க்காவலர்களை உடையவரா யிருந்தார். நாங்கள் அந்த கலைக்காட்சி கூடத்திற்குள் இறங்கி சென்றபோது, அவர், "சகோதரன். பிரன்ஹாமே, நீங்கள் துப்பாக்கிகளை விரும்புகிறீர்கள் இல்லையா?” என்றார். நான், “ஆம்” என்றேன்.

20. நாங்கள் அந்த கலைக்காட்சி கூடத்தின் அடியில் ஒரு அறை போன்ற ஒன்றிற்குள் சென்றோம். அவர், "இங்கு தான் நாங்கள் வாலிபர்களுடன் பயிற்சி செய்கிறோம்” என்றார். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்க முடியும் என்றும் எப்படி சுடுவது என்றும் மற்றவைகளை குறித்து அவர் கூற தொடங்கினார். அவர் என்னையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். அவர் என்ன செய்யப்போகிறார் என்று நான் வியப்படைந்தேன்; அவருடன் இருந்த அதிகாரிகளை வெளியேற்றினார். அந்த சிறு இடத்தில் நாங்கள் தனியாக இருந்தோம். சுற்றிலும் எல்லாவிடங்களிலும் உலோக பொருட்கள் கிடந்தன. "சகோதரன் பிரன்ஹாமே” என்றார். நான், "என்ன ஐயா?” என்றேன். அவர் தம்முடைய கரத்தை என்னுடைய தோளின் மீது வைத்தார், நான், "ஓ, என்னே" என்று எண்ணினேன். அவர், "எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று வியக்கிறேன்” என்றார். நான், "கேப்டன் பரார், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்றேன். அவர், "நான் - நான் ஒரு மோசமான மனிதனாக இருக்கவில்லை . நான் சட்டத்தையும், சரியானதையும் கடைபிடிக்க முயற்சிக்கிறேன்” என்றார். "அது உங்களுடைய கடமை, ஐயா” அவர், "ஆனால் நான் உண்மையாகவே இயேசுவை கண்டு கொள்ள விரும்புகிறேன்” என்றார். நான், "நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்றேன். அவர், 'ஆம் ஐயா, ஆனால் நான் தேவனை கண்டதில்லை " (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர். "... இங்கே ஒரு சபையை சேர்ந்துள்ளேன். நான் - நான் அவரை அறியவில்லை. என்னை நானே முட்டாளாக்க முயற்சிக்க அவசியமில்லை. நான் சபையை சேர்ந்தேன். நான் வருடக்கணக்காக ஒரு அங்கத்தினராக இருக்கிறேன். நான் அவரை அந்த விதமாக அறியவில்லை " என்றார். நான், "சரி, கேப்டன் பரார் அவர்களே, நீங்கள் வெறுமனே விசுவாசித்தாலே, நீங்கள் - நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளமுடியும்” என்றேன். அவர், "நான் உங்களிடம் கூறுகிறேன், நீங்கள் வாஷிங்டனை விட்டு செல்வதற்கு முன்னால், நாம் சந்திக்கும் ஏதோ ஒரு இடத்தை நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள். நாம் ஒன்றாக சென்று, அங்கே நாம் அதை குறித்த எல்லாவற் றையும் பேசலாம். நீங்கள் அப்படியே அதை ஏற்பாடு செய்யுங்கள். நாம் மாலை உணவு சாப்பிட்டுவிட்டு ஒன்றாக வெளியே சென்று அதை போன்றவைகளை செய்யலாம். ஒரு வேளை நான் என்னுடைய விசைப்படகை கொண்டு வருகிறேன், நாம் அதை வளைகுடா பகுதிக்கு எடுத்துச் செல்லலாம்” என்றார்.

21. நான், "கேப்டன் அல் பரார் அவர்களே, அவர் உங்களை சரியாக இங்கேயே ஏற்றுக் கொள்வார்” என்றேன். அவர், "இந்த இடத்தில் அல்ல (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்]...?... என்றார். நான், "ஆம் ஐயா” என்றேன். ''அவர் இங்கே கீழே வருவாரா?” என்றார். நான், "அவர் ஒரு மனிதனுக்காக ஒரு திமிங்கலத்தின் வயிற்றுக்குள் சென்றார்” என்றேன். அவர் தம்முடைய சில பிள்ளைகளை வெளியே கொண்டு வரும்படி அக்கினி சூளைக்குள் இறங்கி சென்றார். அவர் இந்த கலைக்காட்சி கூடத்திற்குள்ளும் இறங்கி வருவார்” என்றேன். அங்கே அந்த அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை கழற்றி அதை தரையில் வைத்து விட்டு, தம்முடைய கரங்களை இதைப் போன்று என்னைச் சுற்றிலும் போட்டுக் கொண்டார். தேவன் வியக்கத்தக்க விதமாக இறங்கி வந்து அவரை இரட்சித்தார். இப்பொழுது சுவிசேஷத்தை பிரசங்கிக்க போய்க் கொண்டிருக்கிறார். பிரசங்கியார் வெளியில் செல்கிறார், பிதா வானவர் இன்னும் இழந்து போனவர்களைக் குறித்து அக்கறை கொண்டிருக்கிறார். நீங்கள் யாராயிருந்தாலும், நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் காரியமில்லை, இயேசு உங்களை ஏற்றுக் கொள்ள எவ்விடத்திற்கும் வருவார்.

22. இந்த பிற்பகலில் இந்த ஊதாரியை கவனியுங்கள், அவன் எங்கே இருந்தான்: ஒரு எபிரேயனுக்கு மோசமான இடமாகிய ஒரு பன்றி தொழுவத்தில் இருந்தான். கவனியுங்கள், இப்பொழுது இந்த நாடகத்தை பார்ப்போம். ஒரு பழைமை நாகரீகமான நாட்டுப்புற வீடு அங்கே இருக்கிறது. நாம் அதை சிறிது நேரம் நம்முடைய சிந்தையில் நிலை நிறுத்துவோம். அருமையான வயதான கணவனும் மனைவியும் தங்களுடைய ஜீவியம் முழுவதும் கடினமாக உழைத்து, அங்கே வாழ்ந்து கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். நிச்சயமாகவே மகன் எப்பொழுதும் சொத்துக்கு சுதந்திரவாளியாய் இருக்கிறான். பிறகு ஒரு வேளை இந்த இளைய மகன்... அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சபைக்குச் சென்று, அவர்கள் தேவனை நேசித்து, அவர்கள் தங்களுடைய முழு இருதயத்தோடும் தேவனைச் சேவித்துக் கொண்டிருந்ததாக நாம் குறிப்பிடலாம். ஆனால் ஒரு நாள் இந்த இளைய குமாரன் தான் போய் சேரக்கூடாத ஒரு கூட்டத்துடன் போகத் துவங்கினான் என்று நாம் குறிப்பிடுவோம். இந்த பிற்பகலில் இங்கிருக்கும் வாலிபனே, வாலிப ஸ்திரீயே கவனி, நீ அப்படியே கிறிஸ்தவ செல்வாக்கின் கீழிருந்து சென்ற உடனே, நீ தவறான கரங்களில் இருக்கிறாய். சரியாக அப்பொழுதிலிருந்து, நீ உன்னுடைய பின்வாங்கி போன வழியிலிருக்கிறாய். அதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியானவரின் செல்வாக்கின் கீழிருந்து அப்படியே சென்ற உடனே. பையன்யாரென்றோ அல்லது பெண் யாரென்றோ எனக்கு கவலையில்லை, அவர்கள் இரட்சிக்கப்படாதிருந்தால் அவர்களிட மிருந்து விலகியிருங்கள். அது மிகவும் சரியே. மனிதர்களே, நீங்களும் கூட. யாரோ ஒருவர், 'நல்லது, நான் ஒரு மதுக்கடைக்குள் ஒரு மனிதனுடன் போக முடியும். அவன் பீர் மற்றும் விஸ்கியை குடிக்கும் போது நான் ஒரு கோக் குளிர் பானத்தை அருந்திவிட்டு, திரும்ப வெளியே வந்து அதே நபராக இருக்க முடியும்” என்று கூறினார். நான் அதை சந்தேகிக்கிறேன். அது சரியே. வேதாகமம், "தீமையின் தோற்றத்தின் பக்கத்தில் கூட போகாமல் விலகியிருங்கள்” என்று கூறுகிறது. சத்துருவின் இடத்தை விட்டு நீங்கி யிருங்கள்... அந்த பழைய சரிவில் சறுக்கிச் செல்லும் வண்டி மிகவும் வழுவழுப்பானது ...?... சரிவில் சறுக்கிச் செல்லும் வண்டி (அல்லது அவ்வண்டியில் அமர்ந்து செல்வது), வீழ்ச்சியில் நீ கீழே விழுவதை அறியும் முன்பே உடனே அதை விட்டு விலகு...?

23. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்]...?... அந்த மலையை சுற்றி அவனை அழைத்துச் செல்ல அவன் யாரை யாவது கூலிக்கு அமர்த்தலாமா என்று வியந்தான். ஒருவன், "நல்லது, நான் ஓரத்திலிருந்து இரண்டு அடிக்குள்ளாக இருக்கும்படியாக நிற்காமல் முழு வேகத்தில் இந்த குதிரைகளை நாலுகால் பாய்ச்சலில் வேகமாக என்னால் ஓட்ட முடியும்” என்றான். மற்றொருவன், "நான் நிற்காமல் ஆறு அங்குலங்களுக்குள்ளாக அதை ஓட்ட முடியும்" என்றான். அவன் மற்றொருவனிடம், “உன்னைக் குறித்தென்ன?” என்றான். அவன், "நான் எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியுமோ, அவ்வளவாக விலகியிருப்பேன்” என்றான். அவன், "நீ என்னை (அங்கே) அழைத்துச் செல்" என்றான். உங்களால் பாவத்துக்கு எவ்வளவு அருகில் செல்ல முடியும் என்று பார்க்க வேண்டாம். உங்களால் பாவத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்க முடியும் என்று பாருங்கள். அதின் வழியிலிருந்து விலகி, அப்படியே அதை விட்டு முழுவதுமாக தனியே பிரிந்து வாருங்கள். அதில் கிடந்து அந்த காரியங்களை மகிழ்ச்சியோடு செய்து கொண் டிருக்கிற இங்கேயுள்ள அமெரிக்க ஜனங்களுக்கு அது ஒரு அவமானம். நீங்கள் இன்று வீடுகளுக்கு செல்லுங்கள்... நான் கிறிஸ்தவ வீடுகளுக்கு சென்றிருக்கிறேன், அவர்கள் குளிர் பதனப் பெட்டியைத் திறக்கும் போது, அது முழுவதும் பீர் பாட்டில்களால் நிரம்பி இருக்கும், கிறிஸ்தவ வீடாக இருக்க வேண்டியவை. கிறிஸ்தவர்களே, அந்த விதமான பொருட்களின்னாலே உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டாம்...? நாம் வீட்டிலிருந்த பழைமை நாகரீகமான ஜெப பலிபீடத்தை விற்று போட்டுவிட்டு, அதற்கு பதிலாக ஒரு சீட்டாட்ட மேஜையை செய்து வைத்துள்ளோம். அதனால் தான் உங்களுடைய பிள்ளைகள் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு திரும்புகின்றனர். அது இளம் பருவத்தினரின் ஒழுக்கக் கேடான நடத்தையல்ல. அது பெற்றோர்களின் ஒழுக்கக் கேடான நடத்தையாயுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்கு போதித்து, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களைக் குறித்து அக்கறைக் கொண்டிருப்பார்களானால், அது இருக்காது...?... அந்த விதத்தில் அது சரியே.

24. இந்த வாலிபப் பெண்கள் மனிதர்களுக்கு முன்பாக குளியல் உடைகளை அணிந்துக் கொண்டு, இந்த கடற்கரையில் படுத்துக் கிடப்பதை பாருங்கள். இங்கே வெளியே தெருக்களில், இந்த கீழ்த்தரமான ஆடைகளில் சிலவற்றுடன், யாராவது ஒருவர் அவர்களில் ஒருவரை அவமதிக்கட்டும், மேலும் நீங்கள்..?... நீங்கள் தான் அந்த ஒருவர். அது சரியே. அவளை அவ்விதமாகவே வெளியில் அனுப்புங்கள் அல்லது அவ்விதமாகவே வெளியே போகட்டும்... அது போன்று, நான் அன்றொரு நாளில் ஏதோ ஒரு சிறு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன்; அவள், "நல்லது, நான் வெகு நேரம் சூரிய ஒளி சரீரத்தில் படும்படி இருப்பதால் ஏற்படும் விரும்பத்தக்கவிதமான பழுப்பு நிறத்தை சரீரத்தில் பெற்றுக் கொள்ளும்படி முயற்சித்துக் கொண்டிருக் கிறேன்” என்றாள். நான், "பார். எனக்கும் வீட்டில் ஒரு சிறு பெண் உண்டு; அவளுடைய முடிவு என்னவாகும் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவள் இதைப்போன்று படுத்துக் கிடப்பதை நான் எப்பொழுதாவது கண்டுபிடித்தால், அவள், மகனின் தோல் பதப்படுத்துவதை பெற்றுக் கொள்வாள். திரு. பிரன்ஹாமின் மகன் ஒரு உலோகக் கம்பியினாலோ அல்லது ஏதோ ஒன்றைக் கொண்டு அவளுடைய முதுகில் பதம் பார்த்து, நான் அவளை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வருவேன்” என்றேன். அது சரியே. அவளுக்குத் தேவையான சரியான விதமான பதப்படுதலை அவள் பெற்றுக் கொள்வாள். அது அப்படியே மிகவும் சரியே. (குழுமியிருக்கும் கூட்டத்தார் கைத்தட்டி பாராட்டுகின்றனர் - ஆசிரியர்] உங்களுக்கு நன்றி. நமக்கு தேவை அவ்விதமான (தோலை ) பதப்படுத்துதல் தான்....?... என்னுடைய தகப்பனார் ...?... பத்து கட்டளைகள், நன்னெறி வழி....?... வெளியே மரக்கூடாரத்தினிடம், நாம் விலகியிருப்பது நலமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்...?... பிரம்பால் தண்டிக்காமல் விட்டு விட்டு பிள்ளை யாண்டானை செல்லங்கொடுத்து கெடுத்தல்...?

25. பிறகு இந்த வாலிபன் வெளியே போவதை என்னால் காண முடிகிறது...?... [ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) "நீ அங்கிருக்கும் அந்த பழைய சபைக்கு போக மாட்டேன் என்று நீ உன்னுடைய தாயாரிடம் ஏன் கூறவில்லை. எல்லாமே...?... நீங்கள் செய்வதெல்லாம் சபைக்கு வேக வேகமாக செல்வதும், திரும்புவதும் தான்.” நல்லது, நீ சபைக்குப் போவதைவிட வேறு எந்த சிறந்த இடத்திற்கும் போக முடியாது. அவன், "நீ பட்டணத்திற்கு வந்து, பிரகாசமான விளக்குகளிடம் வந்து, ஒரு பையன் எப்படி ஜீவிக்க வேண்டுமோ, அது போல நீ ஏன் ஜீவிக்கக்கூடாது?" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. நல்லது, நீங்கள் அறிந்து கொள்ளும் முதலாவது காரியம் என்னவெனில், அவனை இப்பொழுது என்னால் காண முடிகிறது, அவன் தன்னுடைய தகப்பனிடம் கேட்கப் போகிறான், அவனுடைய தகப்பனாரும், தாயாரும் வயதான வர்களாய் இருந்தனர். அவன் ஒரு நாள் சலிப்படைந்தனாய் வரும்போது, அவனுடைய தாயாரிடமும், தகப்பனாரிடமும் மரியாதை யின்றி பேசுகிறான். முதலாவது காரியமாக அவன், "அப்பா, நீங்கள் சொத்தில் என் பங்கை எனக்கு கொடுக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். இங்கே இந்த வீட்டை சுற்றியே கிடந்து, இந்த காரியங்களையே செய்துக் கொண்டிருப்பது எனக்கு சலிப்பாக உள்ளது. ஞாயிற்றுக் கிழமையில் நான் காண்பதெல்லாம் சபைக்குப் போவதுதான். மற்ற பையன்கள் ளெல்லாம்...?... வழியிலோ அல்லது அந்த வழியிலோ. அவர்களெல்லோரும் வெளியே சென்று தங்கள் சொந்த வழியை உடையவர்களாய் இருக்கின்றனர். மற்றவர்கள் செய்வதை போலவே நானும் செய்ய விரும்புகிறேன்” என்றான். நீ அந்த கூட்டத்தை பின்பற்றாதே, நீ இயேசு வையே பின்பற்று. ஆனால் அதுதான் வாலிப ஜனங்களின் மனப்பான்மை யாயுள்ளது, இல்லையா?  "மற்றவர்கள் செய்வது போல நானும் செய்ய விரும்பு கிறேன்." நீங்கள் அவர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டாம்; உங்களுடைய முன்மாதிரி - உங்களுடைய முன்மாதிரி இயேசுவாக இருக்கட்டும்.

26. பிறகு அவன், "நல்லது, நீங்கள்...” என்று கூறுவதை நான் கேட்கிறேன். தகப்பனார், "நல்லது மகனே, ஜீவனம் செய்ய நான் கொண்டிருக்கும் ஒரே வழி இது தான். அது தான் பிழைப்புக்கான ஒரே காரியமாக உள்ளது” என்று கூறுவதை நான் கேட்கிறேன். "நல்லது, எனக்கு ஒரு சொத்து உண்டு, நீர் அதை எனக்கு தரவேண்டும். என்னுடைய உரிமை .." உன்னுடைய உரிமை என்ன? பரிதாபமான வயதான தகப்பனாரை என்னால் பார்க்க முடிகிறது; அது அவருக்கு மிகவும் கவலையை உண்டாக்கினது. "நல்லது, நீ என்ன செய்யப் போகிறாய், மகனே?” அவன், "நான் பட்டணத்திற்குச் சென்று, மற்றவர்களைப் போல ஜீவிக்கப் போகிறேன்" என்றான். "நல்லது, உன் அம்மாவுடனும் என்னுடனும் உன்னால் தங்க முடியவில்லையா? நாங்கள் உன்னை எங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்கிறோம். நாங்கள் உனக்கு நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றே விரும்புகிறோம். எங்களால் கூடுமான ஒவ்வொன்றையும் நாங்கள் செய்துள் ளோம்" என்றார். ஆனால் அது அவனைத் திருப்திப்படுத்தாது. சாத்தான் அந்த பையனைப் பிடித்துக் கொண்டான். எனவே அவன் பட்டணத்திற்குச் சென்று மற்ற உலகத்து ஜனங் களைப் போல ஜீவிக்கும்படி போக (விரும்பினான்). பிறகு அவனுடைய தகப்பனார் தாயாரிடம், "தாயாரே, என்ன நடந்ததென்று உனக்கு தெரியுமா? நம்முடைய - நம்முடைய - நம்முடைய பையன் தவறான கூட்டத்துடன் சேர்ந்து விட்டான். அவன் இப்பொழுது ஒரு வாலிபனாக இருக்கிறான், எனவே நான் அந்த பண்ணையை விற்று எனக்கிருக்கிற எல்லாவற்றையும் எடுத்து, அவனுக்கும் அவனுடைய சகோதரனுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டு மென்று அவன் கேட்கிறான். நான் அதைக் குறித்து அவனி டம் பேசி (சமாளிக்க முடியவில்லை " என்று கூறுவதை நான் காண்கிறேன்.

27. நான் அந்த வயதான தாயாரை காண முடிகிறது. அந்த அன்புள்ள வயதான தாய்மார்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. எனக்கும் அவர்களில் ஒருவர் வீட்டில் உண்டு. நான் எப்படியாக அவர்களை நேசிக்கிறேன், நான் நேற்று போய் வருகிறேன் என்று அவர்களிடம் சொன்னேன், அவர்களுடைய முகவாய் கட்டை நடுங்கிக் கொண்டிருந் தது....?... அவ்விதமாக தளர்ச்சியடையும் போது....?... தாயா ரால் அதிக நாட்கள் இருக்க முடியாது. நாங்கள் அங்கே ஒரு விருந்திற்குப் போயிருந்த போது அந்த சமாதானத்தைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியுற்றேன். நான் தாயாரிடத்தில், "அம்மா, நான் - நான் கட்டாயமாகப் போக வேண்டும்” என்றேன், "நான் கட்டாயமாகப் போக வேண்டும்...?..." என்றேன். இன்று பிற்பகல் நம்முடைய கதையில் இந்த வயதான தாயாரை என்னால் காண முடிகிறது, அவள் தன்னுடைய மகனிடம் சென்று, "மகனே, (உன்னுடைய) தாய் துணி களைத் துவைத்து, இஸ்திரி போட்டு, அவள் உனக்காக செய்ய முடிந்த ஒவ்வொன்றையும் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. இப்பொழுது, அவன், 'அம்மா, நீ அந்த காரியங்களை விட்டுவிடும். அது பழைய காலம். நான் அதைப் போன்ற எதையும் விரும்பவில்லை. நான் என்னுடைய வழியை உடையவனாய் இருக்கப்போகிறேன். நான் இப்பொழுது பருவத்திற்கு வந்துவிட்டேன், எனவே நான் அதைக் குறித்து என்னுடைய வழியை உடையவனாய் இருக்கப் போகிறேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவள் தன்னுடைய கரத்தை அவனைச் சுற்றிலும் போட்டு அவனைக் கட்டி அணைப்பதை என்னால் காண முடிகிறது. அவள் அவனை கட்டிப் பிடித்தாள்; அவனோ தன்னுடைய தலையைத் திருப்பிக் கொண்டான்....?... அவன் வெளிப்படையாக ஒரு முத்தத்தை விரும்பவில்லை. பாசமே யில்லை ....?... அவர்கள் இவ்விதம் இருப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. பவுல் அதைப் பேசுகிறான்: சுபாவ அன்பு இல்லாதவர்களாய் இருப்பார்களென்று. அது இன்று அவ் வழியில் தான் உள்ளது. தகப்பனும் தாயும் வீட்டில் அதிகாரம் செலுத்துவதற்கு பதிலாக, பிள்ளைகள் தான் வீட்டில் அதிகாரம் செலுத்துகிறார்கள். பேசுவது அவர்கள் தான். அது ஒரு அவமானம்: இயற்கையான பாசம் இல்லாமல் இருப்பது. தாயார் அவனுடைய கன்னத்தை மென்மையாக தட்டிக் கொடுப்பதை என்னால் காண முடிகிறது. வாலிப ஜனங்களை பாருங்கள், இந்த நாட்களில் ஒன்றில், அந்த காரியம் மாத்திரமே உலகத்தில் இருக்கும் ....?... அவள் சென்றிருப்பாள், அவள் இங்கு இருக்கமாட்டாள். அந்த வயதான தகப்பனார் சபைக்கு சென்று, ஒரு வேளை சந்தோஷத்தினால் அந்நேரத்தில் ஒருமுறை சத்தமிட்ட காரணத்தால் நீ அவரை குறித்து வெட்கப்பட்டாய். சபையிலுள்ள உன்னுடைய அந்த ஆண் நண்பனும், பெண் சிநேகிதியும், "நல்லது, அவரை பாருங்கள், அது பயங்கரமாக இல்லையா?” என்று கூறுகிறார்கள். நீ அவரைக் குறித்து சிறிது வெட்கப்பட்டாயா? அங்கே நீ அவரைக் குறித்து வெட்கப்படாத ஒரு நேரமானது இருக்கும்.

28. சமீபத்தில் ஒரு வாலிபப் பெண் கல்லூரியிலிருந்து வந்தாள். அவளுடைய தாயார் அவளை கல்லூரிக்கு அனுப்பி வைப்பதற்காக துணிகளைத் துவைத்தாள். அவள் இரயில் நிலையத்திற்கு வந்தபோது, அவள் தன்னுடைய வாலிபப் பெண்ணையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு வந்தாள். அவள் தேவனை விட்டும் சபையை விட்டும் விலகி இருந்தாள். அந்த வாலிபப் பெண் அவளுடன் இருந்தாள். அந்த வாலிபப் பெண் இரயிலில் உட்கார்ந்தவாறு வெளியே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய தாயார் அங்கே வெளியே நின்றுக் கொண்டிருந்தாள், அவள் மேல் முழுவதும் தழும்புகளாக இருந்தது. அந்த வாலிபப் பெண் மற்றவர்களுடன் இருந்தாள், அவள் கல்லூரியிலிருந்து வந்து, "அந்த வயதான அருவருப்பான தோற்றமளிக்கும் பெண்ணைப் பார்” என்றாள். அது அந்த பெண்ணின் தாயாராக இருந்தது. "அவள் பயங்கரமாக தோற்றமளிக்க வில்லையா? என்னே, நீ மேஜையில் அவளுடன் உட்கார்ந்து சாப்பிடுவதை வெறுக்கவில்லையா?” என்றாள். அது அவளுடைய பெண் சிநேகிதியாக இருந்தாள். இப்பொழுது, இந்த பெண் பேசுவதற்கு பதிலாக, அவள் தன்னுடைய தலையை திருப்பிக் கொண்டாள். அவள் அந்த இரயிலை விட்டு வெளியே வந்த போது, முகத்தில் சுருக்கம் கொண்ட இந்த வயதான பெண் அவளிடம் ஓடி வந்து, அந்த பெண்ணை சுற்றிலும் தன்னுடைய கரங்களைப் போட்டு அவளை முத்தமிட்டாள். அந்த பெண்ணோ மிகவும் வெறுத்து, அவள் அவளை விட்டு சென்றுவிட்டாள், சபையை விட்டும் தேவனை விட்டும் தூர விலகி இருந்தாள். அவள் பாசமின்றி காணப்பட்டாள்; அவள் வேறு பக்கம் பார்க்கும் படி தன்னுடைய முதுகைத் திருப்பிக் கொண்டாள். அவள், "என் அன்பே, என் அன்பே, உனக்கு என்ன ஆயிற்று" என்றாள். அவளுடைய பெண் சிநேகிதியின் நிமித்தமாக அவள் மிகவும் கூச்சப்பட்டாள்.

29. சற்று கழிந்து, இந்தக் கதையை அறிந்திருந்த நடத்துனர்களில் ஒருவர் நடந்து வந்து, அந்த வாலிபப் பெண்ணின் தோள்களில் தட்டி, "மேரி, இங்கே பார், நீ என்ன கருதுகிறாய்? நீ கல்லூரிக்கு போவதன் காரணத்தால், நீ உன்னுடைய அம்மாவை குறித்து வெட்கப்படுகிறாயா?” ஞாபகம் கொள், உனக்கு அந்தக் கதை தெரியும். ஒரு நாள் அந்த வீடானது எரிந்துக் கொண்டிருந்தது. உன்னுடைய தாயார் ஒரு அழகான ஸ்திரீயாக இருந்தாள். உன்னை விடவும் அல்லது எப்போதும் இருந்ததை விடவும் மிகவும் அழகாக இருந்தாள். "நீ அழுது கொண்டிருக்கும் ஒரு சிறு குழந்தையாக இருந்தாய். அவள் வீட்டின் பின்புறம் துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருந்த போது, வீடு திடீரென்று தீ பிடித்தது. தீயை அணைக்க தீ அணைப்பு வண்டி இங்கே வருகிறது. வீடு கொழுந்து விட்டு எரிந்தது. நீ மேல் மாடியில் அழுது கொண்டிருந்தாய். கொழுந்து விட்டு எரியும் தீயினூடாக செல்ல ஒருவருக்கும் துணி வில்லை. அந்த சிறு தாயார் தன்னை தானே மூடிக்கொண்டு அங்கே உள்ளே சென்று, அவள் அந்த நெருப்பினூடாக ஓடினாள். அவள் உன்னைத் தூக்கினாள். அவளுடைய உடைகளை அவளுடைய சரீரத்திலிருந்து எடுத்து உன்னு டைய முகத்தையும், உன்னை முழுவதுமாக பொதிந்து கொண்டு, உன்னை கரங்களில் ஏந்தி அவளுடைய முகத்தை அந்த நெருப்பில் வைத்தாள். அந்த நெருப்பின் வழியாக அவள் உன்னை காப்பாற்ற வந்தாள். அதன் காரணமாகத்தான் நீ இன்று அழகாக இருக்கிறாய், அவள் தழும்புகளோடு இருக்கிறாள். நீ அந்த தழும்புகளை குறித்து வெட்கப்படலாமா?” என்றார்.

30. இயேசுவும் அதே விதமாகத்தான் நமக்காக செய்தார். நாம் தேவனுக்கு முன்பாக பாவிகளாகவும், அருவருப்பானவர்களாகவும், தள்ளப்பட்டவர்களாகவும், பார்வையை திருப்பி வேறு பக்கம் பார்த்தவர்களாகவும் இருந்த போது, அவர் வந்தார். அழகான தேவ குமாரன், தந்த அரண்மனையை விட்டு பூமிக்கு இறங்கி வந்து, அவ மானத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு, பாவத்தைத் தன்மேல் ஏற்றுக் கொண்டு, கல்வாரியில் கதறிக் கொண்டே மரித்தார். நான் அவருடைய சுவிசேஷத்தை குறித்து வெட்கப் படுவேனா? கிறிஸ்தவர்களாகிய நாம் தெருக்களில் சுவிசேஷத்திற்காக நிற்க வெட்கப்படுகிறோம். அவர் காயமடைந்து அருவருக்கப்பட்டதால், நீங்கள் விடுதலையாக முடிந்தது. அவர் பாவத்தோடு காயப்பட்ட போது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற முடிந்தது. அவரை ஒருபோதும் மறுதலிக்காதீர்கள். அவரை எப்பொழுதும் நேசியுங்கள். எது உண்மையோ அதற்காக நில்லுங்கள். அவருடைய சுவிசேஷத்திற்காக நில்லுங்கள்.

31. இப்பொழுது, வாலிப ஜனங்களின் மனப்பான்மை இன்று ஏறக்குறைய அதே விதமாகத்தான் உள்ளது. இந்த இளைய குமாரனும் அதே விதமாகத்தான் இருந்தான், "அம்மா, நான் இந்த குடும்பத்துடன் இதற்கு மேலே எதையும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் செய்வதெல்லாம் சபைக்குப் போவது தான். நான் கேட்பதெல்லாம் அதுதான்” என்றான். கவனியுங்கள். வயதான தகப்பனார் இப்பொழுது சொத்தை விற்பனை செய்வதற்காக ஒப்புதல் வழங்குவதை என்னால் காண முடிகிறது. நிச்சயமாக வாலிப ஜனங்கள் பயனடையும் வகையில் நாம் ஒரு வகையான நாடக பாணியில் இதை கூறுகிறோம். பிறகு, அந்த பழைய பண்ணையை விற்பனை செய்வதற்காக ஒப்புதல் அளித்து, அதை விற்பதையும், அந்த எல்லா சாமான்களையும் ஒன்றாக பெற்றுக் கொண்டு, பிள்ளைகளுக்கு அதை பிரித்துக் கொடுப்பதையும் என்னால் காண முடிகிறது. தாயாரும், தகப்பனாரும் அப்படியே அவர்கள் பங்கு தீரும் வரை ஜீவிப்பார்கள், ஒரு வேளை அப்போது அது முடிந்து விடும். கவனியுங்கள், அவர்கள் இந்த இளைய மகனுக்கு பங்கைப் பிரித்துக் கொடுத்த போது, அவனுடைய பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, அவன், "இப்பொழுது, நான் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டிருக்கப் போகிறேன்” என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. அடுத்த நாள் காலையில், என்னால் காண முடிகிறது, அவன் சென்று தன் தாயாரிடம், "வயதான ஸ்திரீயே, இப்பொழுது என்னுடைய உடைகளை மூட்டையாக கட்டு. நான் இந்த காலையில் (வீட்டை விட்டுச்) செல்லப்போகிறேன்” என்றான். ஓ, என்னே. எப்படியாக அந்த பரிதாபமான வயதான தாயார் சென்று, அவன் ஒரு சிறு பையனாக இருந்த போது அணிந்திருந்த அந்த சிறு அவைகளை உற்றுப் பார்ப்பாள். அவள் ஒரு ஜோடி சிறு காலணிகளை எடுப்பதை என்னால் காண முடிகிறது... தாய்மார்கள் அதைப் போன்ற காரியங்களை பாதுகாத்து வைக்க விரும்புவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் சிறு பிள்ளையாயிருந்த போது நான் அணிந்திருந்த என்னுடைய பழைய காலணிகளை அம்மா வைத்துள்ளார்கள். அப்பொழுது குழந்தைகள் கொண்டிருந்த அந்த நீளமான ஆடையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். அது ஒரு தாயாருடைய இதயத்திற்கு ஒரு பொக்கிஷமாக உள்ளது. அந்த வயதான தாயார் இந்த சிறு காலணிகளை எடுத்து, அவைகளை ஆர்கன் இசைக்கருவியின் மீது வைத்து, முழங்கால்படியிட்டு, "ஓ, தேவனே, என்னுடைய மகனை பாதுகாத்தருளும், இப்பொழுது என்னை விட்டு போகிறான். நான்...” என்று ஜெபிப்பதை என்னால் காண முடிகிறது.

32. இங்கிருக்கும் எத்தனைப் பேர் அதைப் போன்ற இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை நாங்கள் பார்க்கட்டும் .ஓ, அவர்கள் அருமையானவர்களாகவும், இனிமையானவர்களாகவும் இருக்கவில்லையா? ''என்னுடைய மகனை பாதுகாத்துக் கொள்ளும். அவன் உலகத்துடன் போய் விட்டான். அவனுக்கு என்ன சம்பவிக்கும் என்று எனக்கு தெரியவில்லை; பிதாவே, அவனை பாதுகாக்க மாத்திரம் செய்தருளும்” ஜெபித்துக் கொண்டிருத்தல். உன்னுடைய தாயார் எப்பொழுதாகிலும் உனக்காக ஜெபித்தார்களா? ஓ, என்னுடைய சிறு வயதான தாயார்... எங்களுக்கு ஆகாரம் இல்லாமல் இருக்கும் போது, அவர்கள் தாமே அறைக்குள் திரும்பிச் சென்று தன்னுடைய முழங்கால்களை முடக்கிக் கொண்டு, தேவனிடம் கதறுவதைக் கண்டிருக்கிறேன். அதைப்போன்று ஜெபிக்கும் பழைமை நாகரீகமான தாய்மார்களை இன்னும் அதிகமாக தேவன் நமக்கு தருவாராக. அது தான் நம்முடைய தேசத்தின் முதுகெலும்பாக உள்ளது. (அது சரியே) : தேவனால் இரட்சிக்கப்பட்ட நல்ல தாய்மார்கள். அவள் தேவனிடம், "தேவனே, என்னுடைய மகனை பாதுகாத்துக் கொள்ளும்" என்று கதறுவதை என்னால் காண முடிகிறது. நீங்கள் எப்பொழுது என்ன செய்திருந்தாலும் காரியமில்லை . அவள் மன்னிக்கிறாள். அவளுடைய இருதயமானது எப்போழுதும் திரும்பி வந்து மன்னிக்க ஆயத்தமாக உள்ளது.

33. பிறகு அந்த வயதான தகப்பனாரை என்னால் காண முடிகிறது. அவர் அப்படியே கவலைப்பட்டவராய், முன்னும் பின்னும், வெளியே மேலும் கீழும் நடந்து கொண்டு களஞ்சியத்தை விட்டு வீட்டிற்கு முன்பாக முன்னும் பின்னும் நடந்துக் கொண்டிருக்கிறார். தாயார் வாசலருகில் சென்று, "தகப்பனாரே, என்ன விஷயம்?” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. “ஓ, தாயாரே, எனக்கு தெரியவில்லை . நம்முடைய பெற்றோர் தாங்கள் தேவனால் இரட்சிக்கப்பட்ட நல்ல ஐனங்களாய் இருப்பார்களாயின், அவர்கள் தங்கள் பிள்ளைகளைக்குறித்து கவலைக் கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே ஒரு தகப்பனாக இருக்கிறேன், சரியாக இப்பொழுதே என்னைக் கவனித்துக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறு பையனை (மகனை) நான் பெற்றுள்ளேன். நான் அவனை நேசிக்கிறேன் என்பதை தேவன் அறிவார். நான்... நம்மில் ஒருவர் இந்த பிற்பகலில் மரிக்க வேண்டியிருந்தால், ''நான் அவன் ஒருவனுக்காக பத்தாயிரம் தடவைகள் மரிக்கட்டும். அது சரியே. அவன் ஜீவிக்கட்டும். அதுதான் நம்முடைய குழந்தைகளுக்காக நாம் கொண்டிருக்கும் ஒரு அன்பு. அதன் காரணமாகத் தான் தேவன் இவ்வுலகையும், தம்முடைய பிள்ளைகளையும் மிகவும் நேசித்து, நாம் விடுதலை அடையும்படியாக மரிக்கும் பொருட்டு அவர் தாமே வந்தார். தண்டனைக்கு தம்மையே கிரயம் செலுத்தினார்.

34. இந்த தகப்பனார் சோர்ந்து போனவராய் முன்னும் பின்னும், மேலும் கீழும் நடந்துக்கொண்டிருப்பதை நான் கவனிக்கிறேன். அடுத்த நாள், பையன் வீட்டை விட்டு செல்லும் நேரம் வந்த போது அவன் தன்னுடைய சிறு பெட்டியை நிரப்பிக் கொண்டு, வெளியே வருவதை என்னால் காண முடிகிறது... அவன் சுற்றி வந்து, "மக்களே, இவ்வளவு காலமாக நான் உங்களோடு இருந்தேன்” என்று சொல்லி, அவன் புறப்பட்டு போவதை என்னால் காண முடிகிறது. தாயார், "சற்று நேரம், தேனே. நீ போவதற்கு முன்னால், ஒரு தடவைக் கூட நாம் ஜெபிக்கலாம்" என்றாள். வயதான தாயாரும் தகப்பனாரும் தரையில் முழங்கால் படியிட்டு, கரங்களை ஒருவர் மற்றவர் மேல் போட்டுக் கொண்டு, தேவனிடம், "தேவனே, நாங்கள் அவனை வளர்த்து இதுவரைக்கும் கொண்டு வந்தோம். அவன் இப்பொழுது எங்களிடமிருந்து பிரிந்து, தன்னுடைய வழியில் போகிறான். பிதாவே, தயவு செய்து, அவனை பாதுகாத்துக் கொள்ளும்" என்று ஜெபிப்பதை என்னால் காண முடிகிறது. அவன் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது... ஓ, அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, அவன் அப்படியே பொறுமை இழந்து காணப்பட்டான்; தாய் தகப்பன்மார் ஜெபங்களை இனிமேலும் கேட்க அவர்களுக்கு பிரியமில்லை . அவன் தன்னுடைய மனதிலே வேறு காரியங்களைக் கொண்டிருந்தான். அதன் காரணமாகத்தான் நாம் சில சமயம் பொறுமை அற்றவர்களாய் இருக்கிறோம்; அப்படியே ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை . ஜெபிக்க முடியவில்லை. ஒரு ஜெபத்திற்காக காத்திருக்க முடியவில்லை. ஆனால் நண்பர்களே, நீங்கள் நித்தியம் முழுவதும் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியதான ஒரு நேரம் வரும். இப்பொழுதே ஜெபியுங்கள். எஜமானரை சந்திக்க இப்பொழுதே ஆயத்தமாக இருங்கள். அவர்கள் ஜெபிப்பதை என்னால் கேட்க முடிகிறது. பின்னர் அவர்கள் எழுகின்றனர். தாயார் அவனை அணைத்துக் கொள்ள முயற்சிக்கிறாள், அவனோ தன்னுடைய தலையை திருப்பிக் கொள்ளுகிறான், அவனுடைய தகப்பனார் தம்முடைய கரங்களை அவனைச் சுற்றிலும் போடுகிறார். அவன், "ஓ, நீங்கள் எல்லோரும் தூர விலகிப் போங்கள்” என்று சத்தமிட்டுக் கொண்டு, அந்த மலையின் மேல் போகத் தொடங்கினான். அவன் அந்த மலையைத் தாண்டிச் சென்று, மற்ற உலகத்தாருடன் அந்த பட்டிணத்திற்குள் செல்கையில், தகப்பனாரும், தாயாரும் அங்கே நின்றுக் கொண்டு, தங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் போட்டுக் கொண்டு, அவனிடம் போய் வா என்று கரம் அசைத்துக் கொண்டு நிற்பதை என்னால் காண முடிகிறது. இந்த பெற்றோர் கதறி அழுது கொண்டும், ஜெபித்துக் கொண்டும், மீண்டும் வீட்டிற்குள் திரும்பி வருவதை என்னால் காண முடிகிறது.

35. அவன் அங்கே பெரிய கூட்டத்தோடு சேர்ந்து கொள்வதை என்னால் காண முடிகிறது. அவனுடைய பணமானது செலவழிந்து போவது வரை அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான். அந்த வழியில் தான் உலகம் உங்களை நடத்துகிறது. உங்களிடம் பணம் இருக்கும் காலம் வரை, நீங்கள் நண்பர்களை பெற்றிருப்பீர்கள். ஆனால் உங்களுடைய பணமானது போகும் போது, உங்களுடைய நண்பர்களும் போய் விடுவார்கள். அவர்கள் வறட்சி நிலை நண்பர்கள். உங்களிடம் ஒரு பென்னியும் (காசும்) இல்லா திருந்தாலும் உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நண்பரை நான் அறிவேன். அவர் தான் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து. நான் ஒரு சென்ட் பணமும் இல்லாத நிலையில் இருந்ததுண்டு. அவர் என்னை நேசித்தார். ஒரு பென்னியும் இல்லாமல் இருந்தாலும், நாம் ஒரு மில்லியன் டாலர்களை உடையவர்கள் போன்று அவர் என்னை நேசித்தார். அவர் உங்களை அப்படியே அதே விதமாக நேசிக்கிறார். அந்த தூய்மையான, பரிசுத்தமான, மாசற்ற அன்பானது தேவனிடமிருந்து மட்டுமே தம்முடைய ஜனங்களிடம் வருகிறது. நாம் அந்த விதமாகத் தான் ஒருவர் மற்றவரிடம் தேவ அன்போடு அன்பு காட்ட வேண்டும்.

36. கவனியுங்கள், அவன் அந்த பெரிய சூதாட்ட சாதனங்கள் உள்ள இடங்களிலும், ஒழுக்கக்கேடான கெட்ட பெயரை உடைய அரங்கங்களிலும், மற்ற இடங்களிலும் அவன் இருப்பதை என்னால் காண முடிகிறது. அவனுடைய பணமானது போய்விட்ட பிறகு, அவனுடைய நண்பர்களும் போய் விட்டார்கள். அவன் ஒரு பிரபலமான பையனாக இருந்தான். அவன் எந்த பெண்ணுடனும் ஒரு தேதியைக் குறித்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அவனுடைய பணமானது போன போது, அவர்கள் கூட்டத்தோடு போய் விட்டார்கள். அதே வழியில் தான் பிசாசு உங்களை கைவிட்டு விடுகிறான். உங்களிடம் பணமும், புகழும் இருக்கும் காலம் வரை, சரிதான், ஆனால் அந்த நேரமானது கரைந்து போகும் போது, நீங்கள் முடிந்து விட்டீர்கள். உலகத்துக்கு முன்னே அவ்வளவு தான். பிறகு அவன் வேலையைத் தேட வேண்டியிருந்ததை என்னால் காண முடிகிறது. எனவே அவன் பன்றி வளர்க்கும் ஒருவனாகிய அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடம் சென்றான். அவன் இப்பொழுதிலிருந்து எவ்வளவாய் தாழ்த்தப் பட்டு போனான் என்பதை பாருங்கள்: ஒரு யூதன் தன்னுடைய கரங்களை ஒரு இறந்த பன்றியின் மீது கூட வைக்கக்கூடாது என்று கருதுகிறேன். அவன் தேவையில் இருந்தான், அவன் பட்டினியாய் இருக்கிறான்; அவன் ஒரு வேலை செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் அவனுக்கு மோசமான காரியத்தைக் கொடுக்கின்றனர். அந்த வழியில் தான் பிசாசு செய்கிறான். நீங்கள் அந்த மலையின் கீழாக அடைந்த உடனே, அவன் தன்னிடத்தில் இருக்கும் ஒவ்வொன்றுடனும் உங்களை சுற்றிதிரிய வைப்பான். நான் பார்த்திருக்கிறேன்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்) ...?... அதன் பிறகு அவன் ஒரு நல்ல மனிதனாக இல்லை .

37. அவன் தன்னை அத்தேசத்து குடிகள் ஒருவனிடம் இணைத்துக் கொண்டான். அந்த குடியானவன் பன்றிகளுக்கு தீவனம் போடும்படி இரண்டு பெரிய தீவனம் வைக்கும் பக்கெட்டுகளை அவனிடம் கொடுக்கிறான். பன்றித் தொழுவத்தில் பன்றிகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டு, தாயாரிடமிருந்தும், ஒரு காலத்தில் தான் கொண்டிருந்த மதத்தை விட்டும் ஒரு யூத பையன் இருக்கும் ஒரு இடத்தை குறித்து எண்ணிப் பாருங்கள். பன்றிகளை விட்டு விலகி இருக்க வேண்டியவன், இப்பொழுதோ பன்றியைப் போல நீள் மூக்கு கொண்டு அந்த நிலத்தை கிளறிக் கொண்டிருக்கிறான். அந்த வழியில் தான் பிசாசும் செய்வான். நீ உன்னுடைய முதலாவது சிகரெட்டை புகைக்கும்படி அவன் செய்யும் போது, அதில் கெடுதி ஒன்றும் இல்லை என்று அவன் உங்களிடம் கூறுவான். சிறிது கழித்து, நீங்கள் ஒரு சிகரெட்டு பிசாசாகிறீர்கள். ஒரு தோழமை மது அருந்து தலை செய்வதில் எந்த கெடுதியும் இல்லை என்று அவன் உங்களிடம் கூறுவான். அவர்கள் தூக்கு மரத்திடம் போகும் முன்பாக நான் அவர்களுடன் நின்றிருக்கிறேன். அவர்கள் மின்சாரம் செலுத்தப்பட்டு கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களுடன் நின்றிருக்கிறேன். அவர்கள், "நான் ஒரு சூதாடுபவனாக இருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை, நான் சீட்டாட்டங்களை விளையாடின்போது ஒரு சூதாடுபவனாக இருக்க வேண்டு மென்று கருதவில்லை . நான் ஒரு குடிகாரனாக இருக்க வேண்டுமென்று நினைக்கவில்லை. நான் பெட்ரோல் நிறைக்கும் இடத்திலிருந்து முதலாவது திருடின் போது, நான் ஒரு திருடனாக இருக்க வேண்டுமென்று நினைக்க வில்லை ” என்று அவர்கள் கூறுவர். ஆனால் நீங்கள் செய்ய வேண்டுமென்று பிசாசு விரும்பும் ஒரே காரியம் என்ன வெனில், அதை செய்ய தொடங்க வைப்பதுதான். பிறகு அவன் தொடர்ந்து கொண்டு போய் விடுவான். அவனுடைய இடத்தை விட்டு ஒரு முறை விலகி அவனை கவனித்து பாருங்கள். தவறைச் செய்ய எது முக்கியமாக இருந்தது என்று நீங்கள் அறிவீர்கள், ஆனால் உங்களை இந்த காரியங்களில் சிக்க வைக்கும், உங்களை வழி நடத்துகிற அந்தகார வல்லமையின் ஆதிக்கமும், வான மண்டலத்து அதிகார பிரபுவுமாகும். நீங்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும். உலகத்தின் காரியங்களை விட்டு உங்களை பிரித்துக் கொண்டு, வெளியே வந்து கிறிஸ்துவுக்காக ஜீவியுங்கள். அது சரியே.

38. இந்தப் பிள்ளையை என்னால் காண முடிகிறது. இப்பொழுது, அவன் பன்றிகளை போஷித்துக் கொண்டிருக் கிறான். இங்கே அவன் பன்றி தொழுவத்தில் இருந்துக் கொண்டு, பன்றிகளுக்கு தீனி போட்டு, அதே தீனி பக்கெட்டிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பன்றிகளை போஷித்துக் கொண்டிருக்கிறான். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், அவன் எதை விட்டு வந்தான், அவன் எதை உடையவனாய் இருந்தான். அவன் செலவழித்த சொத்தின் பங்கானது உண்மையாகவே அவனுடைய தகப்பனார் சம்பாதித்தது தான். ஆனால் அவன் இங்கே பன்றி கொட்டகையில் இருந்தான். அவன் கேட்க முடிந்த எல்லாமே பன்றிகளின் உறுமல் சத்தம் தான். அது இன்றிரவு அல்லது இன்று அந்த வழியில் தான் உள்ளது. இப்பொழுது, அநேக தாய்மார்களின் பிள்ளைகள் வெளியே மதுக் கடைகளில் குடித்துக் கொண்டும், ஒழுக்கக் கேடான இடங்களிலும் இருக்கின்றனர். அநேக வாலிப பெண்கள் தெருக்களில் விலைமாதுகளாக இருக்கின்றனர். ஏன்? ஏனெனில் அவர்கள் வீட்டை விட்டும், தேவனை விட்டும், வேதாகமத்தை விட்டும், அதனுடைய போதகங்களை விட்டும் அகன்று, மற்ற உலகத்தாருடன் ஜீவிக்க வெளியே செல்லுகின்றனர். நீங்கள் உலகத்தை விட்டு விலகியிருங்கள். நீங்கள் உலகத்திலோ அல்லது உலகத்தின் காரியங் களிலோ அன்பு கூர்ந்தால், பிதாவினுடைய அன்பு கொஞ்சம் கூட உங்களில் இல்லை என்று வேதாகமம் கூறுகிறது. அதிலிருந்து விலகியிருங்கள். உங்கள் இருதயத்தில் அதை செய்ய விருப்பம் இருக்கும் காலம் வரை பீடத்திடத்திற்கு திரும்பி வாருங்கள். ஆமென், அதெல்லாம் (விருப்ப மெல்லாம் ) போவது வரை அங்கேயே தரித்திருங்கள். ஓ, என்னே. அந்த பழைமை நாகரீகமான மதத்தைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன், அந்த வகையான (மதம்) உங்களை விட்டு அந்த விருப்பத்தை எடுத்துப் போடும்.

39. நான் முதலாவது மனந்திரும்பின போது, ஒரு வாலிபப் பெண் வந்து, "சகோதரன் பிரன்ஹாமே, நீர் புகை பிடிக்கவோ, குடிக்கவோ, அல்லது படக்காட்சிக்கு செல் வதோ அல்லது எதையும் செய்யாமல் இருந்தாலும் வாழ்கை யிலிருந்து என்ன சந்தோஷம் கிடைக்கிறது?" என்று கூறினாள். சில இரவுகளுக்கு பிறகு, சுமார் எட்டு அல்லது பத்து பாவிகள் பீடத்தண்டை வந்தனர். நான், "பத்து வருடங்களில் உலகில் உங்களுக்கு இருப்பதை விடவும் அந்த ஒரு நிமிடத்தில், அதில், நான் அதிக சந்தோஷத்தை உடையவனாக இருக்கிறேன்” என்றேன். இழப்பட்டவர்கள் தேவனிடம் வருகின்றனர்; கிறிஸ்தவர்களாகிய நாம் அங்கு தான் மகிழ்ச்சியை உடையவர்களாய் இருக்கிறோம். இராஜ்ஜியத் திற்குள் வந்து கிறிஸ்துவில் புதிதாக பிறந்த குழந்தைகளை பார்ப்பது, நித்தியமாக உள்ள ஆத்துமா, உண்மையாயுள்ள ஏதோவொன்று. இப்பொழுது பையன் ஒரு பன்றி கொட்டகையில் படுத்திருப்பதை என்னால் காண முடிகிறது. இரவு நேரத்தில் அந்த பழைய இடம் துர்நாற்றம் அடிக்கிறதாய் இருக்கும், எனவே அவன் பன்றிக் கொட்டகையை விட்டுச்சென்று தீவனத் தொட்டியில் பன்றிகளின் பக்கத்தில் படுத்துக் கொள்ளுகிறதாக நான் எண்ணுகிறேன். ஒரு நாள் இரவு, இளைப்பாறுதலற்ற தாயாரும் தகப்பனாரும் தங்களுடைய பையனை குறித்து பேசத் தொடங்குவதை நான் காண்கிறேன்...?... தாயார், "தகப்பனாரே, நான் அப்படியே மிகவும் இளைப்பாறுதலற்று இருக்கிறேன், என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. நான் அப்படியே தொடர்ந்து நம்முடைய பையனைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவன் எங்கே இருக்கிறான் என்று வியக்கிறேன்? அவனுக்கு சாப்பிட ஏதாவது உள்ளதா என்று வியக்கிறேன்” என்று கூறுவதைக் கேட்கிறேன். தகப்பனார், "நல்லது, தேவனிடத்தில் அன்பு கூருபவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்று நாம் எப்போதும் கற்பிக்கப்பட்டுள்ளோம். நாம் ஜெபிப்போம்" என்று கூறுவதை நான் கேட்கிறேன். அவர்கள் தரையில் முழங்கால் படியிட்டு, சிறு ஜானியை குறித்து ஜெபிக்க தொடங்குவதை என்னால் காண முடிகிறது. அவர்கள், "ஓ, தேவனே, எங்கள் பையனை பாதுகாத்துக் கொள்ளும். அவன் எங்கிருந்தாலும், அவன் என்ன நிலைமையில் இருந்தாலும், அவனைப் பாதுகாத்துக் கொள்ளும், பிதாவே, அவனை வீட்டிற்கு அனுப்பும்" என்று ஜெபிப்பதை என்னால் கேட்க முடிகிறது. அவன் எங்கே இருக்கிறான்? கீழே பன்றி கொட்டகையில், பன்றி கொட்டகையில் போயிருக்கிறான்.

40. தேவ தூதன் அவனிடம் வந்து, "பையனே, தூக்கத்தை விட்டு எழும்பு” என்றார். அவனிடம் பேசி, "ஓ, உன்னை குறித்தென்ன, நீ அவர்களிடம் வீட்டிற்குத் திரும்பிச் செல்" என்றார். ''சகல ஆஸ்திகளையும் உடைய என் தகப்பன் அவருக்கிருந்த சகலத்தையும் அவர் எனக்கு கொடுத்தார் என்று எண்ணிப் பார்க்கிறேன். இங்கே, நான் இங்கே படுத்துக் கொண்டிருக்கிறேன், பசியினால் சாகிறேன், பன்றிக் கொட்டகையில் படுத்துக்கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்...' (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அவனுக்கு புத்தித் தெளிந்த போது என்று வேதாகமம் கூறுகிறது. இன்று செய்யும்படியாக சபைக்கு அதுதான் தேவைப்படுகிறது, அவர்கள் புத்தி தெளிவதற்கும், உங்களுடைய பிதா யாரென்று - யாரென்று உணருவதற்கும் தான். சில சமயங்களில் நமக்கு பரலோக பிதா இல்லை என்பதை போல நடந்துக் கொள்கிறோம். பரத்திலிருந்து வருகிற நன்மையான ஈவுகள் அனைத்தும் சபைக்குரியதாக உள்ளது: தெய்வீக சுகம், இரட்சிப்பு, கவலை அல்லது எதிலிருந்தும் விடுதலை, எல்லாமே சபைக்கு உரியதாக உள்ளது. இயேசு மரித்தார், நாம் .... ஐசுவரியமான இராஜ்ஜியத்தின் சுதந்திர வாளிகளாகிய நாம் அவர் மூலமாக தேவனுக்கு உரியவைகளாய் இருக்கும் எல்லாவற்றிற்கும் சுதந்திரவாளிகளாய் இருக்கிறோம்... என் பிதாவானவர் வீடுகளிலும் நிலங்களிலும் ஐசுவரியமுள்ளவர், அவர் இந்த உலகத்தின் செல்வத்தை தம் கரங்களில் பிடித்துள்ளார். அவ்வாறு தான் நாமும் இருக்கிறோம், நமக்கும் இவ்வாறு புத்தி தெளியுமானால். ஓ , அவனுக்கு புத்தி தெளிய துவங்கி, "ஓ, நான் இப்படியே வீட்டிற்கு போவேனே யானால். ஆனால் நானே பாவம் செய்தேன், நான் இனி மேல் ... வீட்டிற்கு செல்ல பாத்திரனல்ல. எனவே நான் என்ன செய்ய முடியும்?" என்று அவன் கூறுவதை என்னால் பார்க்க முடிகிறது.

41. மேலும் அவன். அவன் ஒரு சிறு பையனாக இருந்த சமயத்தைக் குறித்து நான் இங்கே சிந்திக்க முடிகிறது. அவன் வியாதிப்பட்டிருந்த போது, அவனுடைய தாயார் அவனை தொட்டிலிலிட்டு ஆட்டுவதையும், அவனை கையிலெடுத்து, அறையில் முன்னும் பின்னும், மேலும் கீழும் கொண்டு சென்று, அவனை நேசித்து அவனை கவனித்துக் கொண் டாள். இப்பொழுது அவனை நேசித்து, அவனை கவனித்துக் கொள்ள அங்கே யாருமில்லை. அவன் வெளியில் அன்பு காட்டப்படாத உலகத்தில் இருந்து புத்தி தெளிவுக்குள்ளாக மாற்றப்பட்டிருந்தான். அவன் கேட்பதெல்லாம் உருமல் சத்தம் தான்...?... ஒரு வேளை தன்னுடைய தாயார் அறிந்திருந்த ஒரு பழைய பாடலை அவன் பாடத் துவங்கு வதை என்னால் கேட்க முடிகிறது. அப்பாடல் இதைப் போன்ற ஏதோ ஒன்றாக இருக்கிறதென நான் நம்புகிறேன்: என்னுடைய தாயார் மீண்டும் ஜெபிப்பதை நான் கேட்கக் கூடுமானால், அவளுடைய கனிவான சத்தத்தை மீண்டும் கேட்கக் கூடுமானால், நான் எவ்வளவு சந்தோஷமாக இருப்பேன்! அது எனக்கு மிகவும் பிரியமாய் இருக்குமே! என்னுடைய தாயார் மீண்டும் ஜெபிப்பதை நான் கேட்கக் கூடுமானால். இங்கே இருக்கும் நீங்கள், ஒரு வயதான தாயாரின் ஜெபத்தை இந்த பிற்பகலில் கேட்க விரும்பவில்லையா? உங்களில் அநேகர்..?... ஓ, அவன் தன்னுடைய தாயார் ஜெபிப்பதை கேட்கக் கூடுமானால், தேவ தூதர்கள் பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப் பார்க்கிறார்கள். இப் பொழுதே ஜெபியுங்கள்.

42. பிறகு மீண்டும் நான் அங்கே கவனிக்கிறேன், தகப்பனார் உண்மையாகவே இளைப்பாறுதலற்று, எழுந்து தன்னுடைய மேற் சட்டையை அணிந்து கொண்டு, வாசலின் வழியாக வெளியே நடந்து வந்து, அந்த நிலவு வெளிச்சத்தைக் கொண்ட இரவில், பாதையில் நோக்கிப் பார்த்து, "தம்முடைய மகன் எங்கே?" என்று வியந்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. என்னுடைய தகப்பனார் வழக்கமாக பாடும் பழைய பாடல்....?... வயதான தகப்பனார் இதைப் போன்று பாடிக் கொண்டிருப்பார். நான் வழக்கமாக தகப்பனாரை பார்ப்பேன், அவர் ஒரு பழைய சிகப்பு நிற கைக்குட்டையை உடையவராய் இருந்தார்; அவர் வழக்கமாக அதை வெளியே எடுத்து பாதி வெளியே தெரியும்படி அதை தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருப் பார். அவர் வழக்கமாக எழுந்து இந்தப் பாடலைப் பாடுவார்: ஓ, இன்றிரவு என் மகன் எங்கே இருக்கிறான்? ஓ, இன்றிரவு என் மகன் எங்கே இருக்கிறான்? என் இருதயம் நிரம்பி வழிகிறது, நான் அவனை நேசிக்கிறேன் என்பதை அவன் அறிவான். ஓ, இன்றிரவு என்னுடைய மகன் எங்கே இருக்கிறான் ?

43. ஓ, என்னே, தொலை தூரத்திலிருக்கிற தன்னுடைய மகனுக்காக வழியையே நோக்கிப் பார்த்துக் கொண்டி ருந்தார். அந்த பையனுக்கு புத்தி தெளிவடைவதையும், அவன் தன்னுடைய தாயார் ஜெபித்துக் கொண்டிருப்பது போன்ற சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதையும் என்னால் காண முடிகிறது. தேவ தூதர்கள் அந்தச்செய்தியை எடுத்துச் செல்ல காத்திருக்கின்றனர். அவன் எழுந்து பாடுவதையும் இவ்வாறு கூறுவதையும் என்னால் கேட்க முடிகிறது : அவளுடைய ஜெபத்திற்குப் பதிலாக நான் அங்கே இருப்பேன் என்று தாயாரிடம் சொல்லுங்கள். (நாமெல்லாரும் இதைப் பாடுவோம்) பாதுகாக்கும் தூதன் இச்செய்தியை அவளிடம் கொண்டு செல்லட்டும். பரலோக சந்தோஷத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ள நான் அங்கு இருப்பேன் என்று தாயாரிடம் சொல்லுங்கள். ஆம், நான் அங்கிருப்பேன் என்று என் பிரியமான தாயாரிடம் சொல்லுங்கள். இன்று எத்தனை பேருடைய தாய்மார்கள் போய் விட்டார்கள்? உங்கள் கரங்களைப் நான் பார்க்கட்டும். நாம் அப்படியே நம்முடைய கரங்களை பிடித்துக் கொண்டு, அதை பாடுவோம். தாயாரிடம் சொல்லுங்கள்... (நீங்கள் அவளை (அங்கு) சந்திப்பதாக வாக்குக் கொடுத்தீர்களா?) அவளின் ஜெபத்தின் பதிலாக. இந்தச் செய்தியை பாதுகாக்கும் தூதன் அவளிடம் கொண்டு செல்வானாக. பரலோக சந்தோஷத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ள நான் அங்கு இருப்பேன் என்று தாயாரிடம் சொல்லுங்கள். ஆம், நான் அங்கு இருப்பேன் என்று என் பிரியமான தாயிடம் சொல்லுங்கள்.

44. அவன், "நான் எழுந்து என் தகப்பனிடம் போவேன்" என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவன் மெல்ல நடந்து இங்கே வருகிறான் ...?... பகல் வெளிச்சத்தில். தகப்பனாரும் தாயாரும்..?... வெளியே அறையில் உட்கார்ந்துக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அவன் இங்கே வருகிறான்; வயல் வெளிகளில் சூரியன் உதிக்கிறது. அவனுடைய காலில் காலணிகள் இல்லாமல், பழைய கந்தை யான கிழிந்த ஆடையுடன், திகைப்படைந்தவனாய் வீட்டிற்கு வருகிறான். அவனுடைய தாயார், 'தகப்பனாரே, அவன் அங்கே வருகிறான்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. தகப்பனார், "அது என்னுடைய மகன்" என்று கூறுவதை நான் கேட்கிறேன். அவன், "ஓ, தகப்பனே, உம்முடைய குமாரனாய் இருப்பதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும். ஆனால் நான் அப்படியே தொடர்ந்து சென்றுக் கொண்டிருப்பேன்...” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. தகப்பனாரும் தாயாரும் வாசலின் வழியாக வெளியே சென்றனர். அவன் என்ன செய்திருந்தாலும் காரியமில்லை, அவன் இப்பொழுது வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கிறான். ஓடி, தங்களுடைய கரங்களை அவனை சுற்றிப் போட்டுக் கொண்டு, "போய், கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள். நாம் சந்தோஷமாய் இருப்போம்; என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், அவன் காணப்படாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான். இவனுடைய விரலுக்கு ஒரு மோதிரத்தையும், கால்களுக்கு பாதரட்சை களையும் போடுங்கள். வீட்டில் நீங்கள் வைத்திருப்பதிலேயே சிறந்த வஸ்திரத்தை அவனுக்கு உடுத்துங்கள்” என்று கூறினான். இந்த பிற்பகலில் இங்கிருக்கும் ஒவ்வொரு பாவிக்கும் பிதாவினுடைய மனப்பான்மை அவ்விதமாகத் தான் உள்ளது.

45. நான் இழக்கப்பட்டவனாகவும், அதமானவனாகவும், வெளியே உலகத்தில் இருந்தவனாகவும், ஒரு பாவியாக மரித்துக் கொண்டு, ஒரு மருத்துவமனையில் படுக்கையின் மேல் கிடந்ததை நான் நினைவு கூருகிறேன். நான் வெறுமனே கொஞ்சம் நேரம் தான் ஜீவித்திருப்பேன் என்று மருத்துவர் சொன்னார். ஆனால் அழுது பாதையில் வந்து, நான் அழுதவாறே பரலோக பிதாவை சந்திக்க ஓடினேன். அவர் என்னைக் கழுத்தில் முத்தமிட்டு, என் பாவங்கள், கவலைகள் எல்லாவற்றையும் துடைத்து நீக்கிப் போட்டார். அவர் பரிசுத்தாவியாகிய வஸ்திரத்தை எனக்கு தரிப்பித்து, என் விரலில் விவாக மோதிரத்தை அணிவித்தார்; நான் இந் நாட்களில் ஒன்றில் அங்கே ஓரிடத்திற்கு போகப் போகிறேன். நாம் களிகூர்ந்துக் கொண்டு, ஒன்றாக ஜீவித்து, மகிழ்ச்சியாக இருக்கும் இடமாகிய இங்கே தம்முடைய ஜனங்களிடையே என்னை வைத்துள்ளார். ஏன்? நான் ஒரு சமயம் மரித்திருந்தேன், இப்பொழுது ஜீவித்திருக்கிறேன். ஓ, என்னே. நான் ஒரு சமயம் காணாமற்போனேன். இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டேன். இன்று உலகத்தில் அநேக ஊதாரிகள் இருக்கிறார்கள். அங்கே ஊதாரியான மனிதர்களும், ஊதாரிப் பெண்களும் இருக்கிறார்கள். தேவன் அவர்கள் எல்லாரும் மனந்திரும்பி வரும்படி அழைக்கிறார். அது சரிதானே? நாம் வரும்படி அவர் விரும்புகிறார். எங்குமுள்ள எல்லா ஊதாரிகளே, நீங்களெல்லாரும் வரும்படி அவர் விரும்புகிறார். இன்று விலகிப் போன ஒரு ஊதாரியாவது இங்கே இருக்கிறார்களா என்று நான் வியக்கிறேன். என்னுடைய நேரம் கடந்து விட்டதை நான் உணரவில்லை. இங்கே ஒரு ஊதாரி இருக்கிறீர்களா? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். தேவனை விட்டு ஓடுகிற யாரோ ஒருவர், நீங்கள் சரியாக இப்பொழுதே உங்கள் கரத்தை உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாம், நான் ஊதாரியாக இருக்கிறேன். நான் சரியாக இப்பொழுதே கிறிஸ்துவை கண்டு கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுங்கள்.

46. எத்தனைப் பேர் பரிசுத்தாவியைப் பெற்றிருக்க வில்லை ...?... அதைப் பெற்றிருக்கவில்லை ? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. பரலோகத்தை நோக்கிக் கரங் களை உயர்த்திக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் பரிசுத்தாவியை பெற்றிராதவர்களா என வியக்கிறேன், நீங்கள் சரியாக இப்பொழுதே இங்கே வந்திருந்தால். 'நான் அங்கே இருப்பேன் என்ற அம்மாவிடம் சொல்லுங்கள்' என்ற அடிகளை நாம் மீண்டும் பாடும் போது, சரியாக இங்கு வந்து, சரியாக இப்போழுதே நாம் அதை தேவனிடம் சொல்லுவோம். அவர் எனக்காக குருடரின் கண்களைத் திறந்து, செவிடரின் காதுகளை கேட்கச் செய்வாரானால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? உங்களுடைய தேவைகளுக்காக அவர் இப்பொழுது என்னுடைய ஜெபத்தைக் கேட்பார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நாம் பாடுவோம். இப்பொழுது நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து : நான் அங்கு இருப்பேன் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்... (அது சரியே. பாவியான நண்பர்களே, வாருங்கள், நீங்கள்... என் சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னுடன் இருப்பாராக. சகோ தரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. என் சகோ தரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) .... அவளிடம் கொண்டுச் செல்ல. பரலோக சந்தோஷத்தை அவளுடன் பகிர்ந்து கொள்ள, நான் அங்கிருப்பேன் என்று அம்மாவிடம் சொல்லுங்கள், ஆம், நான் அங்கு இருப்பேன் என்று என்னுடைய அன்பான தாயாரிடம் சொல்லுங்கள். இன்றிரவு தகப்பன் மகனை அழைப்பதை, அழைத்துக் கொண்டிருப்பதை நான் கேட்கிறேன். ஓ, என் மகன் இன்றிரவு எங்கே இருக்கிறான்? (இங்கே பாருங்கள், நண்பர்களே. (ஒலி நாடாவில் காலி யிடம் - ஆசிரியர்]...?... ஒரு கடினமான ஜீவியம் ) ஓ, என் மகன் இன்றிரவு எங்கே இருக்கிறான்? என் இருதயம் நிரம்பி வழிகிறது, நான் அவனை நேசிக்கிறேன் என்பதை அவன் அறிவான். ஓ, எங்கே

47. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்)...?... வாருங் கள். என்னே, அது அற்புதமானது, அவர்கள் கூட்டத்தை சுற்றி எல்லா இடங்களிலுமிருந்தும் ஒன்று கூடுகின்றனர். ஓ, கிறிஸ்தவர்களே, அது அழகானதாய் இல்லையா? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அற்புதம். இந்த பிற்பகலில் எஜமானர் இங்கே நின்றுக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?... இங்கு முழங்கால்படியிட்டிருக்கிறவர் களே, அதைக் கவனியுங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம்) அதோ அங்கே எனக்கொரு பிதா உண்டு, அதோ அங்கே எனக்கொரு பிதா உண்டு, அதோ அங்கே எனக்கொரு பிதா உண்டு, மறுகரையில். ஏதோ ஒரு பிரகாசமான நாளில் நான் சென்று அவரைக் காண்பேன் ஏதோ ஒரு பிரகாசமான நாளில் நான் சென்று அவரைக் காண்பேன் ஏதோ ஒரு பிரகாசமான நாளில் நான் சென்று அவரைக் காண்பேன் மறுகரையில் (நாம் அதை பாடுவோம்) அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், மறுகரையில்.

48. எத்தனைப் பேருக்கு மறுபக்கத்தில் ஒரு தகப்பன் உண்டு? உங்கள் கரத்தைப் பார்க்கட்டும். ஓ, என்னே. எத்தனை பேருக்கு அங்கே ஒரு அம்மா உண்டு? உங்கள் கரத்தைப் பார்க்கட்டும். சகோதரனே, சகோதரியே, ஏதோ ஒரு நாளில் நாம் அவர்களைக் காணப் போகிறோம், இல்லையா? உங்கள் அனுபவத்தைக் குறித்து உங்களுக்கு நிச்சயம் இல்லை என்றால், இப்பொழுதே வாருங்கள், வருவீர்களா? நாம் பாடும்போது: அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், மறுகரையில். ஓ, அது ஒரு சந்தோஷமான சந்திப்பாக இருக்காதா! அது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பாக இருக்காதா! அது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பாக இருக்காதா! மறுகரையில். என்னுடைய சகோதரன் மருத்துவமனையில் மரித்துக் கொண்டிருந்த போது...?... "நான் மறுபக்கத்தில் பில்லை (Bill) சந்திப்பேன் என்று பில்லிடம் சொல்லுங்கள், பில்லிடம் சொல்லுங்கள்” என்று (கூறினதை) நான் நினைவு கூறு கிறேன். ஓ, அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக் கூட இருக்கலாம், அந்த பிரகாசமான நாள் நாளைய தினமாகக்கூட இருக்கலாம், மறுகரையில்.

49. நாம் ஏன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தாய்மார்களாகிய நீங்கள் அறிய விரும்புகிறீர்களா...?... இங்கே கூடி தரையில் முழங்கால்படியிட்டு, 'எஜமானர் இப்பிற்பகலில் நினைக்கிறார்' என்று நீங்கள் எண்ணு கிறீர்களா? எப்படியாக இந்த சிறு கூட்டம்...?... இங்கே தனியாக கூடி, நீதியினிமித்தம் பசி தாகம் கொண்டிருக்கிறது. ஓ, என்னுடைய அன்பான நண்பர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஏதோ ஒரு நாளில் ... இது ஒரு கற்பனை யான அழைப்பல்ல, இது உண்மையானது, நாம் அவரை சந்திப்போம். நான் மகிமையுடனும், பரலோகத்தோடும், தேவனுட னும் தொடர்புக் கொண்டுள்ளேன் என நம்புகிறேன். இப்பொழுது இப்பிற்பகலில் பிதாவானவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என்று நான் நம்புகிறேன். நீதியின் மேல் பசி தாகமுடையவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அவர்களை கண்டுபிடிக்கும்படியாக கூட்டத்தினருடாக தேடிக் கொண்டிருக்கிறார், இன்று கூட அவர்கள் நிரப்பப்படுவார்கள். நீங்கள் வரமாட்டீர்களா? நாங்கள் காத்திருக்கும் நேரத்தில் வேறு யாராவது. இங்கே நீதிமானாய் இல்லாத யாரோ ஒருவர். உங்களுடைய அனுபவம் தேவனுடன் சரியாக இல்லாமல், பரிசுத்தாவியை பெறாமல் இருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிவீர்கள், நீங்கள் வருவீர்களா? நாங்கள் ஜெபிக்கிறதான வேளையில் சுற்றிலும் கூடி வருவீர்களா? நாம் இந்த நல்ல பழைய பாடலை பாடலாம். ஓ, வார்த்தை செல்லும்படி விட்டுவிடாதே, அந்த வெளிச்சத்தை நோக்கி உன் கண்களைச் செலுத்து; பரிதாபமான பாவியே, உன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாதே, ஓ, இன்றிரவு இரட்சிக்கப்படு ஓ, இன்றிரவு ஏன் வரக்கூடாது? ஓ, இன்றிரவு ஏன் வரக்கூடாது? (நீ வருவாயா?) நீ இரட்சிக்கப்படுவாயா? அப்படியானால் ஏன் இன்றிரவு வரக்கூடாது? ஓ, ஏன், ஏன் இன்றிரவு வர முடியாது என்று என்னிடம் சொல்லுவாயா? ஓ, பரலோக பிதாவே, இப்பொழுது சற்று பேசும். இப்பொழுது நான் கூறுவதைக் கேட்டு, எளிமையான முறையில் பீடத்தண்டை வந்தவர்களுக்கு அருளும். ஆவியானவர் மகத்தான முறையில் அசைவாடுகிற இந்த வேளையில், கர்த்தாவே, அவர்களை ஏற்றுக் கொள்ளும். ஏன் இன்றிரவு வரக்கூடாது? இதைக் கவனி, நண்பனே: நீ இப்பொழுது இங்கே இருக்கிறாய், ஆனால் இப்பொழுதிலிருந்து 500 வருடங்கள் கழிந்து நீ எங்கே இருப்பாய்? நாளைய சூரியன் ஒருவேளை ஒருபோதும் பிரகாசிக்காமல் போகலாம், நீண்ட காலமாய் தவறாய் புரிந்து கொண்டவைகளை ஆசீர்வதிப்பதற்காக, சரிசெய்வதற்கான நேரம் இதுதான், ஓ, புத்திமானாய் இரு, ஓ, அதை இன்று இரவே ஏன் செய்யக் கூடாது? (நீங்கள் வருவீர்களா? கடைசி அழைப்பு.) ஓ, ஏன் இன்று இரவு வரக்கூடாது? ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் இனிமையானவர் கள். நான் உங்களை நியாயத்தீர்ப்பில் சந்திக்க வேண்டியவர் னாய் இருக்கிறேன். நான் உங்களிடம் பேசுவது இன்றிரவே கடைசி முறையாக இருக்கலாம். நான் உங்களை இயேசு விடம் கொடுக்கிறேன். நீ வருவாயா? ... இரட்சிக்கப்படுவாயா? ஓ, ஏன் இன்றிரவு வரக்கூடாது? நீங்கள், "ஏறக்குறைய இணங்கியிருக்கிறீர்கள்.” ஓ, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் வரமாட்டீர்களா? இரட்சிக்கப்படாத அநேகர், தங்களுடைய இருதயத்தில் பரிசுத்தாவி இல்லாமல் இருப்பவர்கள். "ஏறக்குறைய இணங்கியிருக்கிறீர்கள்” இப்பொழுது விசுவாசிக்கும்படி, இப்பொழுது ஏதோ ஒரு ஆத்துமா, 'ஆவியானவரே, போய்விடும், உம்முடைய வழியில் போய்விடும், இன்னும் ஏதொவொரு வசதியான நாளில் நான் உம்மை அழைப்பேன்" என்று கூறுவதாகத் தோன்றுகிறது. நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பரிசுத்தாவி யானவர் சொன்னார்...?... பீட அழைப்பு... ?... வாலிபர்களும், வாலிபப் பெண்களும், வயதானவர்களும் சுற்றிலும் கூடி வருகின்றனர்...?... தேவனுடைய அழைப்பை ஏன் பொருட்படுத் தவில்லை ? இப்பொழுது ஏதோ ஒரு ஆத்துமா, "ஆவியானரே, போய்விடும், உம்முடைய வழியில் போய்விடும், இன்னும் ஏதோவொரு வசதியான நாளில் நான் உம்மை அழைப்பேன்” என்று கூறுவதாகத் தோன்றுகிறது.

50. ஆர்கன் இசைக் கருவி இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், நீங்கள் உட்காருவதற்கு சற்று முன்பாக, நீங்கள் விரும்பினால், அங்கே இன்னும் ஒரு நபர் கூட உண்டா? சரியாக இப்பொழுதே வாருங்கள். கவனியுங்கள், இந்த நாட்களில் ஒன்றில் அதிக காலம் ஆவதற்கு முன்பே, இங்கேயுள்ள அநேகர் ஒருவேளை போய் விடலாம். இந் நாட்களில் ஒன்றில் நானும் போய் விடுவேன். ஒரு நாளில் சந்திரன் பிரகாசிக்க மறுக்கும்; சூரியன் அதனுடைய வெளிச்சத்தைக் கொடுக்காது. இப்பொழுது, நீங்கள் அப்படியே... நீங்கள் தேவனுடன் சரியாக இருப்பதாக அறியவில்லை யென்றால். இந்த பிற்பகலில், நாம் அதை இங்கேயே சரிபடுத்தி விடுவோம். வாருங்கள். நீங்கள் வருவீர்களா? சரியாக இங்கே வந்து நில்லுங்கள். இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய ஊழியக்காரனுக்கு தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்த முடியுமானால், ஆராதனையில் என்ன சம்ப வித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், இது ஒரு அற்புதமான நாளாக இருக்காதா? நீங்கள் வரமாட்டீர்களா? வாலிப மனிதரே, பெண்களே , நீங்கள் இப்பொழுது தான் ஜீவியத்தை ஆரம்பித்திருக்கி றீர்கள், அப்படியே ஒரு சாலை சந்திப்பில் இருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படவில்லையெனில், நீங்கள் வாருங்கள். நீங்கள் சரியாக இப்பொழுதே இனிமையாவும், தாழ்மையாகவும் கிறிஸ்துவிடம் வருவீர்களா?

51. ஏதோ ஒரு நாளில் அதெல்லாம் முடிந்துவிடும், அப்பொழுது நீங்கள் அவரை சந்திக்கச் சென்று அவருக்காக செய்த செயல்களுக்காக கணக்கொப்புவிப்பீர்கள். இந்த வேளைகளில் ஒன்றில், அங்கே ஒரு அணுகுண்டு தாக்கி, இந்த பட்டணம் விழுந்து சாம்பலாகி விடும். அங்கே ஒரு உயிருள்ள மனிதனும் இல்லாமல் இருக்கும், ஒரு வேளை இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக அது போய் விடலாம். உங்களுடைய பரிதாபமான ஆத்துமா எங்கே இருக்கப் போகிறது? அதனுடன் ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்ளாதே, ஊதாரியே , இப்பொழுதே வா. நீங்கள் ஒரு வகையாக உங்கள் சபையுடன் விளையாடிக் கொண்டு, நீங்கள் சபையை சேர்ந்துக் கொண்டு, ஆனால் ஒரு உண்மையான அனுபவத்தை மெய்யாகவே நீங்கள் பெற்றுக் கொள்ளாதவர்களாய் இருப்பதை அறிந்தால், நீங்கள் வர மாட்டீர்களா? நான் அதை செய்வதற்கு மிகவும் விசித்திரமான விதமாக வழி நடத்தப்படுகிறேன். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். இங்கே பாருங்கள், கிறிஸ்தவ ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் இந்த காட்சியைப் பாருங்கள். தேவன் தெருவில் விழுகிற சிட்டுக் குருவியை போஷிக்கும் காரியத்திலிருந்து தம்முடைய கண்களை மறைத்துக் கொள் வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் ஒரு சிட்டுக் குருவியின் மரணத்தைக் குறித்து அறிவாரானால், நூற்றுக் கணக்கான உத்தமமான ஜனங்கள் ஜெபித்துக் கொண்டிருப்பதைக் குறித்து எவ்வளவாக அறிவார். இது ஒரு அற்புதமான வேளையாக இருக்கப் போகிறது. நண்பர்களே, அவர்கள் இன்னும் இரு பக்கங்களிலிருந்தும் வந்துக் கொண்ருக்கின்றனர். உங்கள் பாதையை நீங்கள் செம்மைப் படுத்துவீர்களானால், தேவன் மிகவும் சந்தோஷப்படுவார். நாங்கள் உங்களுக்காக ஜெபிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடை வோம்.

52. நீங்கள் இந்த கூட்டத்தினரில் ஒருவராக எண்ணப் பட விரும்புவீர்களா? வெளியில் ஒரு சத்தம் கேட்டால் என்னச் செய்வாய்? நீங்கள் மரித்துதான் ஆக வேண்டும், அவர்கள், "என்ன சம்பவித்தது” என்று கேட்டிருக்கிறார்கள். தேவ எக்காளம் தொனித்திருக்கிறது. ஓ, என்னே, கடைசி அழைப்பு அழைக்கப்பட்டு விட்டது. நீ எங்கே இருக்கிறாய்? உங்களால் கூடும் போது... நீங்கள்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்]...?... [ஒலி நாடாவில் காலியிடம்.) ...?... உன்னுடைய ஆத்துமா எங்கே போகும்? உங்களுக்கு ஒரு தருணம் இருக்கும் போதே சரியாக இப்பொழுதே வாருங்கள். அவரை திருப்பி அனுப்பி விடாதே, அவரை திருப்பி அனுப்பி விடாதே, அவர் உன்னுடைய இருதயத்தில் வருவார்...?.. நீ தவறான பாதையில் சென்ற போதும்; அந்த நித்திய நாளில், ஓ, அவர், நன்றாய் செய்தாய் என்று கூறுவதை நீ எவ்வளவாய் விரும்புவாய்! இனிய இரட்சகரை உன் இருதயத்தை விட்டு திருப்பி அனுப்பி விடாதே, அவரை திருப்பி அனுப்பி விடாதே... இப்பொழுது நீ வியாதியாய் இருந்தால், நீ விரும்பி ... நீ தெய்வீக கரிசனையில் தேவனுடன் வந்து கொண் டிருக்கிறாய்..?... இப்பொழுது நீங்கள் விரும்பினால், ஒவ் வொருவரும் உட்கார வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் உட்காருவீர்களானால்...? ஓ, எங்குமுள்ள கிறிஸ்தவ ஜனங்களே, நீங்கள் என்ன செய்தாலும் ஜெபத்தில் இருங்கள். ஞாபகம் கொள்ளுங்கள், இப்பொழுது ஒரு ஆத்துமா ஒரு வேளை இராஜ்ஜியத்திற்குள் வரலாம். பரிசுத்தாவியை வாஞ்சிக்கிற யாரேனும் ஒருவர் இங்கே இருக்கிறீர்களா? நீங்கள் தேவை யில் இருக்கிறீர்களா? அது உங்களுக்கு என்னவாயிருந்தது என்று யோசித்துப் பாருங்கள். நீ பரிசுத்தாவியைப் பெற்ற அந்த இரவு உனக்கு எவ்விதமான உணர்வை உண்டாக்கினது? அது உங்களுக்கு என்ன உணர்வை உண்டாக்கினது? இப்பொழுது பரிசுத்தாவியைப் பெற்றுக் கொள்ள அவர் களுக்கு இதுவே தருணமாகும். அநேகர் பாவ ஜீவியத்தி லிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் உத்தமமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தேவனுக்காக பசியாயுள்ளனர். இப்பொழுது, இங்கே, நான் பீட அழைப்பை செய்ய அரை மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக உங்களைப் பிடித்து வைத்திருக்றேன்.

53. இப்பொழுது நாம் ஜெபித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் ஒவ்வொரு இடங்களிலும் நம்முடைய தலைகளை வணங்குவோம். ஊழியக்கார சகோதரர்களே, நீங்கள் இந்த கூட்டத்தினருக்கு இப்பொழுது உதவி செய்வீர்களா ...?... அவர்கள் மத்தியில் செல்லுங்கள்...? ஒவ்வொருவரும் எல்லா இடங்களிலும் ஜெபித்துக் கொண் டிருக்கிறார்கள். இங்கே தேவனைத் தேடிக் கொண்டிருக்கும் ஜனங்களாகிய நீங்கள் அனைவரும், இப்பொழுது உங்கள் கரங்களை மேலே உயர்த்தி, அப்படியே, 'தேவனே, நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து செல்லுங்கள். எங்கள் பரலோக பிதாவே, இராஜ்ஜியத்தை விட்டு அலைந்து திரிகிற ஊதாரிகளாக நாங்கள் இருக்கிறோம். அன்புள்ள பிதாவே, எங்களில் அநேகர் உம்முடைய பிள்ளைகளென்று அழைக்கப்பட தகுதி உடையவர்களல்ல. நீர் எங்களை அப்படியே உம்முடைய கூலிக்காரர்களாக ஆக்க முடியும், ஆனால் நாங்கள் உம்முடைய கூலிக் காரர்களாக இருக்க வேண்டுமென்று நீர் விரும்பவில்லை. வீட்டை உடையவர்களாய் இருப்பதற்கும், நாங்கள் வீட்டி லிருப்பதை அறிந்து, நாங்கள் பசியாயிருக்கும் போது, நாங்கள் களைப்பாய் இருக்கும்போது சாப்பிடச் செல்ல குளிர் சாதனப் பெட்டிக்கு செல்லும்படியான சிலாக்கியத்தை உடையவர்களாய் இருக்கும் உம்முடைய குமாரனாகவும், குமாரத்தியாகவும் நாங்கள் இருக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீர்...?... ஓ, தேவனே, அவர்களில் அநேகர் பழைய வாழ்க் கையை நினைவு கூருகையில் இன்று நோக்கிப் பாரும், அவர்களை நேசித்த தகப்பனார் மற்றும் தாயாருடைய வீட்டை விட்டும் அவர்கள் அலைந்து திரிந்துக் கொண் டிருந்த போதிலும், அவர்களுக்காக ஜெபித்து, அவர்களை அவளுடைய மரணம் வரை ஆசீர்வதித்த ஒரு பழைமை நாகரீகமான ஒரு தாயார் இருந்தார்கள். ஒரு பழைமை நாகரீகமான ஒரு தகப்பனார்...?... ஓ, தன்னுடைய கண்ணீரை துடைத்துக் கொண்டு மகிமையில் இன்று உட்கார்ந்துக் கொண்டு ...?... கீழே...?... இந்த வழியாக நோக்கிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்...?... பீட அழைப்பு கொடுக்கப்பட்டது, பாவிகளும், ஆத்துமாக்களும் தேவனைத் தேடிக் கொண்டு பீடத்தை சுற்றிலும் கூடியுள்ளனர். ஓ, பரிசுத்த ஆவியானவரே, சரியாக இப்பொழுதே மகத்தான வல்லமையில் அசைவாடும் ; இந்த கட்டிடத்தின் மேல் அசைவாடும், நீர் இங்குள்ள அவர்களில் ஒவ்வொருவரையும் அபிஷேகிக்க காத்துக் கொண்டிருக்கிறீர் என்பதை நான் அறிவேன்...?... யாரோ ஒருவர் மீது உடைத்து ஊற்றவும் பிறகு முழு கூட்டத்தினரின் மேலும் பரவிச் செல்லவும். அங்கே இருக்கலாம்....

54. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்)... இங்கே இந்த அரங்கத்தில் தேவனுடைய ராஜ்ஜியமானது அவருடைய ஜனங்களிடம் வெளிப்படுத்திக் காண்பிக்கப்பட்டாக வேண்டும். ஓ, கிறிஸ்துவே, நானும் கூட இதில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். ஓ, தேவனே, நீர் என்னையும் நினைவு கூர வேண்டுமென்று விரும்புகிறேன். என்னை நினைவு கூரும், என்னுடைய நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. என்னுடைய பங்கு ஆயத்தமாக உள்ளது. ஏதோ ஒரு நாளில் மரணமானது இந்த சரீரத்தை பிரித்தெடுக்கப் போகிறது. இயேசுவே, ஜீவனானது என்னுடைய சரீரத்தி லிருந்து சென்று, நான் உம்மை சந்திக்க வர வேண்டியவர் னாய் இருக்கிறேன். மேலும் கர்த்தாவே, நான் வரும் போது, நீர் அங்கே என்னை சந்திப்பீரா? அந்த பனிமூட்டமானது அந்த அறையில் வரத்தொடங்கி, தொல்லைகள் என்னுடைய கழுத்தை நெரிக்கும் போதும், நாடித்துடிப்பு மேலேறி கழுத்து வரை வரும் போதும், நீர் அங்கே நிற்கும்படி எதிர் பார்ப்பேன். நான் உமக்காக எதிர்பார்ப்பேன். நீர் ...?... ஆம், நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். நீர் என்னோடு கூட இருக்கிறீர். உம்முடைய கோலும் தடியும் என்னை தேற்றும். ஓ, தேவனே, சமாதானத்தைக் கெடுக்கிற உலகளாவிய - உலகளாவிய யுத்தத்திற்கு சிறிது முன்பதாக உள்ள, இப்பொழுதுள்ள இந்த பெரிய இருண்ட வேளையில், அப்படியே நோவாவின் நாட்களில் இருந்தவாறே பரிசுத்த ஆவியானவரின் வல்லமையானது அப்படியே தேசத்தில் அசைவாடுகிற வேளையில், இன்று புருஷரும் ஸ்திரீகளும் கிறிஸ்து இயேசுவிடம் வருவதற்கு, இணக்கமுள்ளவர்ளாய் இருந்து, வாசலுக்குள்ளாக பிரவேசிக்கட்டும், இடுக்கமான வாசலண்டையில், இராஜ்ஜியத்திற்குள் பிறந்திடட்டும். இப்பொழுது, ஓ, தங்களுடைய தவறுதல்களுக்காக வருந்துகிற ஆத்துமாக்கள் முழங்காலில் இருக்கையில், கிறிஸ்து ...?... ஜெபத்தைக் கேட்கிறார். நீர் உம்முடைய இராஜ்ஜியத்திற்குள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்வீர் என்று என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். இந்த பிற்பகல் வேளையிலே, உம்முடைய பரிசுத்த ஆவியானவர் அவர்களுடைய ஜீவியத்தின் மேல் இருந்துக் கொண்டு அவர்களுடைய இருதயத்தின்  வாஞ்சைகளை அவர்களுக்கு கொடுப்பாராக இப்பொழுது பால்கனியில் நின்றுக் கொண்டிருக்கிற அநேகர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அங்கே அந்த பக்க வழியாகவும் மேலும் கீழும் ஊற்றப்படுவாராக. கர்த்தாவே, உம்முடைய ஜனங்களை வெளியே அழைத்து, ஒவ்வொரு இடங்களிலுமுள்ள அவர்களை ஆசீர்வதித்து, அந்த மகத்தான நாளுக்காக எங்களை ஆயத்தப்படுத்தும். இதை அளியும் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பரலோகப் பிதாவே, ஆசீர்வதியும், நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவருடைய மகிமைக்காக 'கேட்கிறோம். நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில், ஒவ்வொரு இடங்களிலுமுள்ள எல்லாரும் இப்பொழுது பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, “கர்த்தராகிய இயேசுவே, என் மேல் இரக்கமாயிரும்...” என்று கூறுங்கள்...?... [ஒரு சகோதரன் ஆராதனையின் தொடர்ச்சி பற்றிய காரியங்களை அறிவிக்கிறார் - ஆசிரியர்.]