166. ஆம், ஐயா! அவைகளைக் கண்டு பிடிக்க முடியும். பூகோளப் பிரகாரமாக வேதாகமத்தில் அவைகளைக் கண்டு பிடிக்க முடியும். இந்த கடைசி நாட்களில் அவைகள் எங்கேயிருக்கும் என்றும் அவைகளின் முடிவு என்னவாயிருக்குமென்றும் அங்கே தேவன் நமக்கு குறிகின்றார். ஆகவே சரியாக இப்பொழுது, இஸ்ரவேல் அவர்கள் எங்கே இருந்தனரென்று ஒரு புத்தகத்தை படித்தேன் அது...?... அது தன் பாதத்தை எண்ணையில் தோய்த்தது மற்றும் எல்லா காரியத்தையும் அது கூறினது. தேவன் அவர்களை அவர்கள் இடத்தில் ஸ்தாபித்துவிட்டார், அவர்களை வெவ்வேறான இடத்தில் வைத்துள்ளார். கடைசி நாட்களில் அவர்கள் எங்கிருப்பார்கள் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற இடத்திற்கு, பாலஸ்தீனாவிற்கு யூதர்கள் எல்லாரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.