10. இப்பொழுது, இது... நீங்கள் அதைக் குறித்துக் கொண்டீர்களானால், ஆதியாகமம் 1:26 முதல் 28, ஆதியாகமம் 2:7. இது ஒரு சிணுக்கமுள்ள, உணர்வு பூர்வமான ஒன்று (touchy). என்னுடைய சொந்த கருத்துதான் என்னிடம் உள்ளது. ஆகவே நான் எப்படி எண்ணுகின்றேனோ அப்படியே உங்களிடம் கூறிவிடுகிறேன். நீங்கள் அதிலிருந்து வேறுபட்டால், நல்லது, அது அருமையான ஒன்று.
11. அந்த கேள்விகளுக்கு அருமையான பதிலை அளித்த சகோ.நெவிலை பாராட்டுகிறேன். இப்பொழுது அது அருமையாயிருக் கிறது.
12. இப்பொழுது, இங்கே ஆதியாகமம் 1:26ல் தேவன் மனிதனை தம்முடைய சாயலாகவும், ரூபமாகவும் உண்டாக்கினார். நீங்கள் அதை கவனிப்பீர்களானால், நீங்கள் 26ஆம் வசனத்தை எங்களோடு சேர்ந்து படிப்பீர்களானால், என்னுடன் சேர்ந்து சரிபார்ப்பீர்களானால் நாங்கள் மகிழ்ச்சியுறுவோம்.
பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக: அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப்பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
13. இப்பொழுது, அதன்பேரில் உலக முழுவதிலும் அநேக முறைகள் விவாதிக்கப்பட்டதையும், அதைக் குறித்து விவாதங்கள் வருவதையும் நான் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஆதியாகமம் 2:7ல் அவர் இங்கே என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அது சரி, அது இங்கே உள்ளது!
தேவனாகிய... மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
14. இப்பொழுது, எந்தவிதமான அமைப்பை... அந்த - அந்த கேள்வியாளர் கேட்க விரும்புகிறார்:
இந்த ஆதியாகமம் 1:26, ஆதியாகமம் 2:7வுடன் எந்தவிதமான தொடர்பு, இணைப்பைக் கொண்டுள்ளது? தேவன் இரண்டு மனிதர்களை சிருஷ்டித்தார். யார் அந்த மனிதன், அவன்... என்ன தொடர்பை அது கொண்டுள்ளது? என்ன... எப்படி அது வேதவாக்கியத்துடன் இணைகிறது.
15. நல்லது, இப்பொழுது ஆதியாகமம் 1:26யை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், முதலாம் பாகத்தை நாம் முதலாவதாக எடுத்துக் கொள்வோம். தேவன் “நாம் உண்டாக்குவோம்” என்றார். இப்பொழுது “நாம்” என்பது... “நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக”. இப்பொழுது நம்முடைய, (our) அவர் யாரிடமோ, வேறொரு நிலைபேறுடைய ஒருவருடன் (Another Being) பேசிக் கொண்டிருந்தார் என்று நாம் அறிந்துகொள்ளுகிறோம், அவர் பேசுகிறார். “நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் நாம் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் மிருக ஜீவன்களையும் ஆளக்கடவர்கள்”.
16. நீங்கள் கவனிப்பீர்களானால், சிருஷ்டிப்பில், உண்மையிலேயே முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டது வெளிச்சம் ஆகும். நீங்கள் சிருஷ்டிப்பின் தொடர்ச்சியைக் கவனிப்பீர்களானால் கடைசியாக சிருஷ்டிக்கப்பட்டது என்ன? ஒரு மனிதன். மனிதனுக்குப் பிறகு ஸ்திரீயானவள் உருவாக்கப்பட்டாள். அது சரி, முதல்... கடைசியாக சிருஷ்டிக்கப்பட்ட, தேவனுடைய சிருஷ்டிப்பு மனித இனமாகும்.
17. தேவன் தம்முடைய முதல் மனிதனை உருவாக்கினபோது, நீங்கள் கவனித்திருப்பீர்களானால், அவர் அவனை தமது ரூபத்தின்படியே உண்டாக்கினார். அவன் தேவ சாயலின்படி உண்டாக்கப்பட்டான். தேவன் என்றால் என்ன? இப்பொழுது தேவன் என்றால் என்ன என்று நாம் காண முடியும் என்றால், அவர் உண்டாக்கிய மனிதன் எப்படிப்பட்டவன் என்பதையும் நம்மால் கண்டுகொள்ள இயலும்.
18. இப்பொழுது பரிசுத்த யோவான், 4 ஆம் அதிகாரத்தை நான்... நாம் இதைப் படிப்போம், இயேசு அந்த ஸ்திரீயுடன் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நீங்கள் திருப்ப விரும்புவீர்களானால், நான்... எனக்கு போதுமான நேரம் இல்லை. நான் இதை எழுதி வைக்கவில்லை, ஞாபகத்தின் மூலம் இதை எடுக்க வேண்டியதாயிற்று. சீக்கிரமாய் நான் கண்டு பிடிப்பேனானால்- இப்பொழுது நீங்கள் அதைப் பாருங்கள், இப்பொழுது நான்காம் அதிகாரம், 14ஆம் வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம்:
நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது… நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றுகளாயிருக்கும்.
அந்த ஸ்திரீ அவரை நோக்கி; ஐயா (Sir) நான் இங்கே மொண்டுகொள்ள வராமலிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்.
இயேசு அவளை நோக்கி: நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார்.
அதற்கு அந்த ஸ்திரீ...
19. நீங்கள் காண வேண்டுமென்று நான் விரும்புகிறதை, இதற்கு இன்னும் மேல் நோக்கிச் சென்றால் இப்பொழுது காணலாம் என்று நான் நம்புகிறேன். இதை இங்கு கண்டுபிடித்து நான் காண நினைப்பது எது? 23, 24ஆம் வசனம். அதுசரி.
நீங்கள்... (அது சரியே...) நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (ஆம் அது சரி, பாருங்கள்.)
உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் (யூதர் அல்லது புறஜாதியார்) பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும்... காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப் பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
20. இப்பொழுது, எனக்குத் தேவையான அடுத்த வசனம்:
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்றார்.
21. இப்பொழுது, தேவன் மனிதனை தமது சாயலின்படியேயும் தமது ரூபத்தின்படியேயும் சிருஷ்டித் திருப்பாரானால், எப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் சிருஷ்டித்திருக்க வேண்டும்? ஒரு ஆவி மனிதனையே. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் எல்லா சிருஷ்டிப் பையும் செய்து முடித்த பின்பு, ஒரு ஆவி மனிதனைச் சிருஷ்டித்தார். இதைக் கூர்ந்து படிப்பீர்களானால் (இந்த கேள்வியைக் கேட்டவருக்கு) தேவன் மனிதனுக்கு மிருக ஜீவன்கள் மேலும், சமுத்திரத்து மச்சங்கள் எல்லாவற்றையும் ஆளும் அதிகாரத்தை அளித்தார் என்பதைப் பார்க்கலாம். ஆனால், தம்முடைய சிருஷ்டிப்பில், மிருக ஜீவன்களையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் வழி நடத்த மனிதனை தம்முடைய சொந்த சாயலின்படி சிருஷ்டித்தார். இன்றைக்கு எப்படி பரிசுத்த ஆவி ஒரு விசுவாசியை வழி நடத்துகின்றாரோ, அதைப்போல. பாருங்கள்?
22. வேறு விதமாகக் கூறுவோமானால், முதலாம் மனிதனாகிய ஆதாம் தேவனுடைய சிருஷ்டிப்புகளிலே கடைசி சிருஷ்டிப்பாக இருந்தான். முதலாம் சிருஷ்டிப்பு தேவன்தாமே ஆவார்; பிறகு தேவனிலிருந்து தேவனுடைய குமாரனாகிய லோகாஸ் (Logos) வெளியே வந்தார்; பிறகு தேவனுடைய வார்த்தையாயிருந்த லோகாஸிலிருந்து (“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்”) லோகாஸிலிருந்து மனிதன் வெளியே வந்தான்.
23. ஓ, நீங்கள் மாத்திரம் என்னுடனே ஒரு சிறுபயணம் (a little trip) வருவீர்களானால், என்னுடைய மனதில் இப்பொழுது ஒரு அழகான காட்சி உள்ளது. இதை நான் உங்களிடம் பேசியுள்ளேன் என்று நம்புகிறேன். நீங்கள் இதை நன்றாகக் காண வேண்டுமென்று நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். இப்பொழுது, நாம் சிறிது நேரம் பிரயாணித்து பின்னோக்கிச் செல்வோம். இப்பொழுது எவ்வளவு வெப்பமாயிருக்கிறது என்று எண்ணாதீர்கள், நாம் பேசி சிந்திக்கப் போகும் காரியத்திற்கு இப்பொழுது நம் மனதைச் செலுத்துவோமாக.
24. சந்திரனோ, நட்சத்திரமோ இல்லாதிருந்த லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கிச் செல்வோமாக. இப்பொழுது, இங்கே ஒன்றுமே இல்லாத காலம் ஒன்று இருந்தது. அங்கு முடிவில்லாமையும் நித்தியமும் மாத்திரமே இருந்தது. தேவன்தாமே எல்லா முடிவில்லா மையும் நித்தியமுமாய் இருந்தார். அவர் அங்கு ஆதியிலேயே இருந்தார்.
25. இப்பொழுது, இந்த திரையின் முனைப்பாகத்திற்கு சென்று, அங்கு நடக்கும் காரியங்களைக் காண்போம்.
26. இப்பொழுது, “பிதாவை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை” சரீரப்பூர்வமாக தேவனை எந்த மனிதனாலும் காண முடியாது, ஏனெனில் சரீர வடிவில் தேவன் இல்லை, தேவன் ஆவியாயிருக்கிறார். பாருங்கள்? அது சரி. “பிதாவை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை. பிதாவின் ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” முதலாவது... யோவான், பாருங்கள்.
27. இப்பொழுது கவனியுங்கள், அங்கு வெற்றிடத்தைத் தவிர வேறொன்றுமே இல்லை. அங்கு வெளிச்சம் இருக்கவில்லை, இருள் இருக்கவில்லை, அங்கு ஒன்றுமே இருக்கவில்லை, ஒரு காரியமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிலே மகத்தான, இயற்கைக்கு மேம்பட்டவரான யேகோவா தேவன், எல்லா வெற்றிடத்தையும் எல்லா வெட்ட வெளிகளையும் எல்லா நேரங்களையும் மூடிக்கொண்டிருந்தார். அவர் என்றென்றைக்குமுள்ளவைகளிலிருந்து, என்றென்றைக்கும் உள்ளவராய் இருக்கிறார். சிருஷ்டிப்பின் துவக்கம் அவரே ஆவார். அது தான் தேவன். ஒன்றையும் காண முடியாதிருந்தது. ஒன்றையும் கேட்க முடியாதிருந்தது. ஒரு அணுவும் காற்றிலே அசைய முடியாதிருந்தது, காற்றே இல்லாதிருந்தது. ஒன்றுமே இல்லாதிருந்தது. ஆனாலும் தேவன் அங்கு இருந்தார். அது தேவன்தான் (இப்பொழுது நாம் சில நிமிடங்களுக்கு கவனிப்போம். அதற்குப் பிறகு...) எந்த ஒரு மனிதனும் அதைக் கண்டதில்லை. இப்பொழுது, அதுதான் பிதா, அதுதான் தேவனாகிய பிதா.
28. இப்பொழுது, கவனியுங்கள். அதற்கு பிறகு சிறிது நேரத்தில் ஒரு வட்ட வடிவத்தில் (halo) அல்லது வேறெதோ ஒன்றை, ஒரு சிறிய பரிசுத்த ஒளி உருவாகுவதை நான் காண ஆரம்பிக்கிறேன். ஆவிக்குரிய கண்களால் மாத்திரமே உங்களால் அதைக் காண முடியும்.
29. ஆனால் இப்பொழுது பாருங்கள், இப்பொழுது முழு சபையாக இதை நாம் பார்க்கிறோம். நாம் மகத்தான ஒரு பெரிய கைப்பிடிக் கம்பியுள்ள படிக்கட்டின் மீதிலிருந்து நின்றுகொண்டு, தேவன் என்ன செய்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த கேள்வியை நாம் சரியாக அணுகி, எப்படி அவர் இதற்குள் அதைக் கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள்.
30. இப்பொழுது, தேவனை ஒருவரும் கண்டதில்லை. அடுத்ததாக அங்கே ஒரு சிறிய வெள்ளை ஒளியானது உருவாகின்றதை நாம் நமது இயற்கைக்கு மேம்பட்ட கண்களால் காணத் துவங்குகிறோம். அது என்ன? வேதமாணாக்கர்களால் அது “லோகாஸ்' (Logos) அல்லது அந்த அபிஷேகிக்கப்பட்ட ஒன்று” (the anointed) அல்லது அந்த அபிஷேகம்” (anointing) என்று அழைக்கப்பட்டது, அல்லது... நான் கூற விழைவது, மானிடர்கள் அது என்னவாயிருந்தது என்பதைக் குறித்த ஒரு எண்ணத்தைக் கொள்ள அது ஏதுவாயிருக்கும்படி தேவனுடைய பாகமானது ஏதோ ஒன்றாக உருவாகத் துவங்கியது. அது ஒரு சிறிய... அல்லது ஒரு அசைந்து கொண்டிருந்த வெளிச்சமாயிருந்தது. அவர்… அதுதான் தேவனுடைய வார்த்தையாகும்.
31. இப்பொழுது, ஒரு அணுவும்கூட இல்லாதிருந்த... ஒரு அணுவை உருவாக்க காற்றுங்கூட இல்லாதிருந்த போது, தேவன் தாமே இந்த குமாரனை பெற்றெடுத்தார். அதுதான்... பாருங்கள், இயேசு, “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே நாம் பெற்றிருந்த மகிமையினாலே என்னை மகிமைப்படுத்தும்,” என்றார். பாருங்கள் தொலைதூரமான காலத்தில்.
32. இப்பொழுது, பரிசுத்த யோவான் 1ல், “ஆதியிலே வார்த்தை இருந்தது' என்று கூறினார். முதலில்... “அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.” தேவன் தம்மைத் தாமே மானிட வர்க்கத்திற்கு வெளியாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தல். அவர் அதை எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள்.
33. இப்பொழுது, அங்கே, இந்த சிறிய வட்ட வடிவு (halo) வருகிறது. இப்பொழுது, இன்னுமாய் எதையும் நாம் காணவில்லை, ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட கண்களால் ஒரு வட்ட வடிவம் அங்கு நிற்பதை நாம் காண்கிறோம். இப்பொழுது, அதுதான் தேவனுடைய குமாரன், அந்த லோகாஸ். எல்லாம் நித்தியமாயிருக்கையில், பிதாவினுடைய வாசற்கதவிற்கு முன்னால் அவர் ஒரு சிறிய குழந்தையைப் போன்று விளையாடிக் கொண்டிருப்பதை இப்பொழுது என்னால் காணமுடிகின்றது. பாருங்கள்? பிறகு இப்பொழுது, பிறகு அவருடைய கற்பனைக் காட்சியமைப்பில் காரியங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதை அவர் நினைக்க ஆரம்பிக்கின்றார். “வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது.
34. பிறகு அவர் கூறுகையில், ஒரு அணு வெடித்து சூரியன் தோன்றி சுழல ஆரம்பித்தது. அது நூற்றுக்கணக்கான லட்சம் ஆண்டுகளாகச் சுழன்று, உருக்காங்கற்களை (clinkers) உருவாக்கி, எரிந்து, இப்பொழுது இருப்பது போலவே இருந்தது; இன்னுமாய் எரிந்து கொண்டு, அணுக்களை உடைத்துக் கொண்டு இருக்கின்றது. ஒரு அணுகுண்டு வெடிக்க ஆரம்பித்தால், இந்த அணுவின் வரிசையானது இதை... இந்த பூமியானது சூரியனைப் போலவே வெடித்துக் கொண்டும் சிதறிக் கொண்டும் இருக்கும். நீங்கள் வேறொரு கிரகத்தில் நின்றுக்கொண்டு இதைப் பார்ப்பீர்களானால் இன்னொரு சூரியனைப் போன்றே இது தோன்றும். அணுக்கள் இந்த பூமியை எரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த வரிசையானது தளர்ந்து இப்படியும் அப்படியுமாக திரும்பி சுழல ஆரம்பிக்கும்... இந்த நெருப்பானது சூரியனிலிருந்து கோடிக்கணக்கான ஃபாரன் ஹீட் (Fahrenheit) அனல் கொண்டு வெளியே வரும், அதன் தீப்பிழம்புகள் லட்ச, லட்சக்கணக்கான மைல்கள் உயர எழும்பும்.
35. இப்பொழுது இதைக் கவனியுங்கள். அழகான ஒன்று! இப்பொழுது, அவர் சூரியனை உண்டாக்கினார். பிறகு முதலாவதாக ஒரு பெரிய உருக்காங்கல் அதிலிருந்து விழுந்து, இந்த பூமியைப் போன்ற எடையை கொண்டதாய் “ஸ்பியூ!” என்று சப்தமிட்டு விழுந்தது. இந்த தேவனுடைய குமாரனாகிய லோகாஸ் அதை பார்த்துக் கொண்டிருந்தார். அதை ஒரு நூற்றுக்கணக்கான, இலட்சக்கணக்கான ஆண்டுகளாக விழ விட்டுவிட்டு பிறகு அவர் அதை நிறுத்துகிறார். பிறகு வேறொன்று பறந்து விழ ஆரம்பிக்கிறது. அதை அவர் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு விழ விட்டுவிட்டு பிறகு அதை நிறுத்துகிறார். இப்பொழுது நாம் நின்றுகொண்டு அது தோன்றி இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
36. இப்பொழுது, அவர் தமது சிந்தையில் எதையோ கொண்டுள்ளார், ஆகையால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் தமது முதல் வேதாகமத்தை எழுதிக்கொண்டியிருந்தார். மனிதன் பார்த்ததிலேயே முதலாவது வேதாகமம் நட்சத்திரங்களும், இராசிமண்டலங்களும் (Zodiac) ஆகும். அது ஒரு பரிபூரண... அது வேதத்துடன் சரியாக பொருந்துகிறது. அது ராசி மண்டலத்தின் முதலாம் அடையாளமான கன்னி ராசியில் துவங்குகிறது. அது சரியா? கடைசி ராசி என்ன? லியோ (Leo) என்கிற சிம்மராசி. அதுதான் இயேசுவினுடைய முதலாம் வருகை. அவர் ஒரு கன்னியின் மூலமாக வந்தார்; இரண்டாம் முறையாக, அவர் யூதா கோத்திரத்தின் சிங்கமாக வருகின்றார். பாருங்கள்? எல்லாவற்றையும் வெளிகொணர்கிறது. கான்சர், புற்று நோயின் காலம் மற்றும் தொடர்ச்சியாக எல்லாமும் இப்பொழுது எல்லா வற்றையும் வானத்திலே அமைத்து வைத்து விட்டார். இந்த வால் நட்சத்திரங்களும், பூமியின் பாகங்களும் அல்லது சூரியன் எல்லாம் அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன.
37. இப்பொழுது, விஞ்ஞானமானது விழுகின்ற அந்த கணைகளை (missiles) பார்க்க செல்கிறதென்றால் அது தேவனை பொய்யராகச் செய்யவில்லை, அதற்கு மாறாக அதை எனக்கு நிருபிக்கின்றது. பாருங்கள், அது அதை இன்னும் அதிக தத்ரூபமாக்குகின்றது. இப்பொழுது கவனியுங்கள், இந்த தொங்கிக் கொண்டிருக்கின்ற கணைகளெல்லாம் அந்த வெப்பமான சூரியனுக்குச் சற்று தூரமாக காற்றில் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அது ஒரு மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாறையாக (iceberg) ஆகின்றது.
38. இப்பொழுது, இவ்விதமாகத்தான் இப்பூமி தோன்றினது. ஒரு பெரிய பழைய அரைகுறையாக எரிந்த ஒரு நிலக்கரித்தணல் அங்கிருந்து பறந்து விழுந்தது. இவ்விதமாகத்தான் இப்பூமி தோன்றியது. பூமியின் கீழே இருப்பது ஒரு சுழல்கின்ற, எரிமலை, சில வெடித்து எரியும். நாம் வாழுகின்ற இந்த உலகமானது எப்படி ஒரு ஆப்பிள் பழத்தின்மேல் தோல் உள்ளதோ அதைப் போன்று அதன் மேல் உள்ள ஒரு கடினமான பாகம் போன்று சுற்றி அமைந்துள்ளது (crust) என்று விஞ்ஞானம் கூறியிருக்கிறது. எல்லா... இப்பொழுது, அநேகமாக 25 ஆயிரம் மைல்கள் இருக்கலாம் (ஏறக்குறைய 8 ஆயிரம் மைல்கள்) 8 ஆயிரம் மைல்கள் அளவுக்கு கனம் பொருந்தினதாக இருக்கிறது. ஆகவே அதற்கு கீழே இருப்பதுதான் எரிகின்ற எரிமலை.
39. பூமியின் மூன்றில் இரண்டு பாகம், இரண்டு பாகத்திற்கும் அதிகமாக தண்ணீரால் நிறைந்துள்ளது; மூன்றில் ஒரு பகுதி, ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி நிலமாக உள்ளது. இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, சுற்றி (பூமியின் மேல் - தமிழாக்கியோன்) அமைந்துள்ள கடினமான பாகத்தைப் (crust) பாருங்கள், அதன் முழுவதுமாக உள்ளில் பயங்கரமான ஆபத்தான வெடிபொருட்கள், எரி வாயு, பெட்ரோல், எண்ணெய், அனைத்தும் போன்றவைகளால் நிறைந் துள்ளன. அது சரியா? ஆகவே மூன்றில் இரண்டு பாகம், அதற்கும் மேல் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. தண்ணீரின் சூத்திரம் (formula) என்ன? மூன்று பாகம் பிராண வாயும் (Oxygen) ஒரு பாகம் நீரக வாயும் (hydrogen) கொண்டது, வெடிக்கும் தன்மை வாய்ந்தவைகள்.
40. ஒவ்வொரு அறையிலும் உஷ்ணத்திலிருந்து குளுமையாக்க தேவையான மின்சாரம் உள்ளது. ஒரு அறையை வெடிக்கச் செய்யும் அளவிற்கு அது போதுமான மின்சாரத்தை உண்டாக்கும். ஒரு சிறிய குழிபந்தாட்ட பந்திலே (golf ball) தேவையான அளவு அணுக்களை நிறைத்து நியூயார்க் பட்டணத்தை வெடிக்கச் செய்து பூமியின் முகப்பிற்கு வெளியே தள்ளிவிடலாம். ஆகவே மனிதன் நரகத்தில் உட்கார்ந்து கொண்டு தன் மார்பில் தட்டிக் கொண்டு 'நரகம் என்கிற இடம் இல்லவே இல்லை” என்று கூறி தேவனுடைய வார்த்தையை எதிர்த்துக் கொண்டு இருக்கிறான். (அதைக் குறித்த சிறிது என்னிடம் உள்ளது, அதை நாம் பார்க்கப் போகிறோம்). ஒவ்வொரு நாளும் அது அடங்கிய (நரகம் - தமிழாக்கியோன்) பெரிய பானையில் நீங்கள் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் இங்கே இருக்கையில், நீங்கள் சரியாக அதன் மேலேயே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், உனக்கு அடியிலேயே நரகம் உள்ளது.
41. ஆகவே இப்பொழுது கவனியுங்கள். ஆனால் இப்பொழுது அது முதலில் கண்டுபிடிக்கப்பட்டபொழுது, இயேசு... இப்பொழுது அந்த சிறிய வட்ட வடிவைக் கவனியுங்கள். அது பூமியை நோக்கி அசைந்து சென்று, அதன் மேல் ஏறி சூரியனுக்கு அருகாமையிலே செல்லத் துவங்குவதை என்னால் காண முடிகிறது. அது ஒன்றுமல்ல, அது ஒரு பெரிய பனிக்கட்டிப் பந்துதான். ஆகவே அது உருக ஆரம்பித்தபோது, மெதுவாக நகரும் பெரிய பனிக்கட்டிகள் (Glaciers) வடக்கு பிரதேசங்களின் வழியாக வெட்டிக் கொண்டு வந்தன. அவ்வாறு அவை வந்த போது கான்சாஸ், டெக்ஸாஸ் போன்றவற்றையும் இன்னும் அங்கு இருந்த மற்ற பிரதேசங்களையும் வெட்டி அமைத்து பிறகு நேராக மெக்ஸிகோ வளைகுடாவிற்குள் சென்றடைந்தது. ஆகவே முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, முழுவதுமே தண்ணீரினால் மூடப்பட்டது.
42. இப்பொழுது, நாம் நம்முடைய காட்சியை ஆதியாகமம் 1ல் காணலாம். “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது' அது சரிதானே? “தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். இப்பொழுது, அவர் ஜலத்தை, வேறு பிரித்து மலைகளையும் நிலங்களையும் வெளி கொணர்ந்து உலர விட்டார். தாவர வகைகள் மற்றும் எல்லாவற்றையும் அவர் உண்டாக்கினார். அவர் சந்திரனை உண்டாக்கினார். சமுத்திரம் கடக்காதவாறு அதற்கு எல்லைகளை அமைத்தார்.
43. அவர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து...?... மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கினார், எல்லா ஜீவராசிகளும் பறவைகளும், பூச்சிகளும், குரங்குகளும் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கி பூமியின் மேல் வைத்தார். அதற்கு பிறகு இந்த கேள்வியைக் கேட்கிறார். “நமது ரூபத்தின்படியே மனிதனை உண்டாக்குவோமாக” (யார்? பிதாவும், குமாரனும்) (ஆங்கிலத்திலே “Let us” என்பதற்கு “நாம் தாமே” என்று பொருள், ஆங்கில வேதத்தில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்)
44. இப்பொழுது, மனிதனானவன் அந்த சிறிய பரிசுத்த ஒளியைப் போன்றோ அல்லது வேறெதாவதொன்றைப் போலவோ உருவாக்கப் பட்டிருந்தானானால், அது காணப்படக் கூடாததாகும் (அது ஒரு ஆவிக்குரிய நிலைபேறுடைய ஒன்று (spiritual Being). ஆகவே அவர் தம்மைத் தாமே சிறிது மேலாக ஒரு திரித்துவமாக, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக ஆக்கிக் கொண்டு வெளிப்பட்டார் அல்லது வெளியாக்கிக் கொண்டார். “நாம் தாம் மனிதனை உண்டாக்குவோமாக” என்று தேவன் இங்கே தம்மைத் தாமே வெளிப்படுத்துகிறார், “நாம் தாமே மனிதனை நமது சாயலாக உண்டாக்குவோமாக,' அது அவருடைய குமாரனும், வேரும், சந்ததியாயும் இருந்தது. அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒருவன். “அவன் ஜீவராசிகளையும், பிராணிகளையும் இன்னும் மற்றவைகளையும் ஆளக்கடவன்.”
45. இப்பொழுது, ஒரு மனிதன் ஒரு மனிதனை வழிநடத்தினான்... பரிசுத்த ஆவி எப்படி ஒரு உண்மையான விசுவாசியை வழி நடத்துகிறதோ அதே போன்று மனிதன் பிராணிகளையும் மற்ற எல்லாவற்றையும் வழி நடத்தினான். தேவனுடைய சத்தம் அங்கே வெளியே... மனிதனின் சத்தம் அங்கே பேசி... பிராணிகளை இவ்வழியாக அழைத்தது, ஆடுகளை இந்த புல்வெளிக்கு கூப்பிட்டது. மீன்களை இந்த தண்ணீருக்கு அழைத்தது. பாருங்கள், அவன் அதிகாரம் உடையவனாய் இருந்தான், எல்லாம் அவனுக்குக் கீழ்ப்படிந்தன.
46. இப்பொழுது, ஆனால் நிலத்தை பண்படுத்துவதற்கோ, உழுவதற்கோ அங்கே மனிதன் இல்லை, ஆதியாகமம் 2, நிலத்தை பண்படுத்த எந்த மனிதனும் இல்லை. “அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார்” (ஆதியாகமம் 2:7). இப்பொழுது நாம் அதை கவனிப்போம், அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, இந்த இயற்கைக்கு மேம்பட்ட ஆவியை அவனுக்குள் வைத்தார்...
47. இப்பொழுது, அவன் அங்கே படுத்துக்கிடந்தான். அதைக் குறித்த அநேக காட்சிகளை என்னால் எடுக்க இயலும். ஆதாம் நிற்பதை என்னால் காண முடிகிறது... அதை நாம் இந்தவிதமாக எடுத்துக் கொள்வோம். ஒரு மரம் போல் அவன் நிற்பதாகப் பார்ப்போம். தேவன் அவனை உண்டாக்கினார். அவன் அப்படியே மரித்த நிலையில் கிடந்தான்; அவனுடைய பாதங்கள், நிலத்தில் வேர் ஒட்டிக் கொண்டிருப்பது போல இருந்தது. பிறகு தேவன், “உண்டாகக் கடவது” என்றார். அல்லது ஜீவ சுவாசத்தை அவனுக்குள் ஊதினார். பிறகு அவன் குதித்தெழுந்து வெளிவந்தான். அவர் ஒரு... ஜீவ சுவாசத்தை அவனுக்குள் ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். இப்பொழுது அவன் அசையத்துவங்கினான்.
48. ஆகையால் பிறகு தேவன் அவனிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். இப்பொழுது, ஸ்திரீக்கான ஆவியை எங்கிருந்து எடுத்தார்? பாருங்கள்? அவர் தாமே... ஆதியாகமம் 1:26ல் அவர் கூறினார் “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, ஆணும் (மனிதன்) பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். அவர் பலமிகுந்த ஆவியை மனிதனுக்கு உண்டாக்கினார். அவர் மிருதுவும், எளிமையும், புலன்களுக்கு இனியதான, பெண்மையின் ஆவியை பெண்ணிற்கு உண்டாக்கினார்.
49. ஆகையால், ஒரு ஸ்திரீ மனிதனைப் போன்று நடப்பதை நீங்கள் கவனிப்பீர்களானால், அவள் ஆதியிலிருந்த, தன் ஸ்தானத்தை விட்டு இடம் மாறிவிட்டாள். பாருங்கள்? அது சரி. அவள்... ஸ்திரீ தன் புனிதமான, பெண்மைக்குரிய இடத்தை இழந்து போயிருப்பது வெட்கத்திற்குரியது என்று நான் எண்ணுகிறேன். அது ஒரு பெருத்த அவமானம். நான் கூறுகிறேன் அது... நான் இதைக் கூறுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, இங்கிருக்கும் ஸ்திரீகளாகிய உங்களைக் குறித்து நான் கூறவில்லை, பேசவில்லை. ஆனால், உண்மையில், அது உங்களைப் புண்படுத்தும், அது அவ்விதமே செய்யும். ஆனால் பாருங்கள், உங்களை ஒன்று நான் கேட்கட்டும். ஸ்திரீகள் அவ்வளவு பெண்மை தன்மை வாய்ந்தவர்களாய் இருந்திருந்தார்கள். ஒரு மனிதன் அவர்களிடம் சென்று பேசினால், ஹம்! அவர்கள் முகம் சிவந்து நாணம் கொள்வார்கள். எப்படியாயினும், நாணம் கொள்வதென்றால் என்ன? அநேக காலமாக அதை நான் காண்பதில்லை. சில ஸ்திரீகள் நாணம் கொண்டாலும் கூட அது எனக்கு தெரியாமல் போகின்றது. ஏனென்றால் நீண்ட காலமாக அதை நான் கண்டதில்லை, காண்பதில்லை. அந்த மதிப்பிற்குரிய காரியத்தை அந்த அருமையான பெண்மைக்குரிய ஆவியை இன்னுமாய் அவர்கள் உடையவர்களாய் இல்லை. அவர்கள் ஒரு... அவர்களால்... அவர்கள் மனிதனைப்போல உடையணிந்து கொள்கின்றனர். மனிதனைப் போன்று மயிரை வெட்டுகின்றனர். மனிதனைப்போல புகைப் பிடிக்கின்றனர், குடிக்கின்றனர், மனிதனைப் போல வக்கிரம் கொள்கின்றனர், மனிதனைப்போல வாக்களிக்கின்றனர், மனிதனைப் போல வேலை செய்கின்றனர். கடினமாகி, வலுவாகி இன்னுமாய் இருக்கின்றனர். ஓ, என்னே! அது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. முற்றிலும் சரி.
50. அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயைக் காண்பதென்பது இப்பொழுது கடினமான ஒரு காரியமாகும். இன்னுமாக அதே போன்று காணமுடியாது. அது சரிதானே? ஆம். அது உண்மையாகும். ஆகையால் ஒரு ஸ்திரீ எழுந்து ஒரு மனிதனைப்போல வலுவுள்ளதாகவும், பெரியவளாகவும், இருக்கும்படி எண்ணப்படவில்லை. ஏனென்றால் அவள் மதுர முள்ள தன்மை கொண்டவள். தேவன் அவ்வாறேதான் அவளை உண்டாக்கினார். வேதவாக்கியங்களின் மூலமாக அதை என்னால் நிரூபிக்க முடியும். ஆம் ஐயா. அது சரி. ஆகையால்...
51. நாம் இந்தக் கேள்வியை விட்டு அப்புறம் செல்கிறோம். ஆனால் இந்தக் கேள்வியிலிருந்து அநேக காரியங்களை எடுக்க நான் விரும்ப வில்லை. ஆனால் பாருங்கள், அங்குதான் அவர் தம்முடைய ரூபத்தின் படியே முதலாவது மனிதனை உண்டாக்கினார்.
52. ஆகவே பிறகு, தேவன் ஒரு நட்சத்திரத்தையும் கூட உருவாக்கும் முன்பே, உலகம் இருக்கும் என்று அறிந்திருந்தார். அவருக்கு, நான் வில்லியம் பிரன்ஹாமாக இருந்து, அந்த முற்பட உருப்படுத்திக்காட்டுதலில் (prefigure) சுவிசேஷத்தை பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பேன் என்றும், நீங்கள் ஜான் டோவைப் போல அங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பீர்களென்றும் உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவருக்கு தெரியும். அல்லேலூயா!
53. இப்பொழுது, இங்கே தான் சட்ட கால்வீனிஸ்டுகள் குழம்பிப் போகிறார்கள். பாருங்கள்? “ஏன் முன்குறிக்கப் பட்ட சிலர் இழந்து போகப்பட வேண்டும்?” என்று கூறுகிறார்கள். யாராவது சிலர் அழிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. ஒருவரும் அழியக் கூடாது என்று தான் அவர் விரும்புகிறார். ஆனாலும் அவர் தேவனாயிருப்பதால், சிலர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் அவர் அறிவார். பாருங்கள்? பாருங்கள், அவர் தேவனாய் இருப்பாரானால் துவக்கம் முதல் முடிவு வரை அவர் அறிந்திருக்க வேண்டும். அப்படித்தானே?
54. ஆகையால் சில ஸ்திரீகளை அவர் உடையவராய் இருக்கப் போகிறார் என்று அவர் அறிவார். ஆதலால் அவர்களுடைய ஆவியை சரியாக அங்கே உண்டாக்கினார். “அவர் அவனை, மனிதனை, ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தார்” என்று வேதம் ஆதியாகமம் 1:26ல் கூறுகின்றது. ஆமென். பாருங்கள்? அவர் ஒரு முன்வடிவில், அவர்கள் பூமியின் மண்ணினாலே உருவாக்கப்படும் முன்பே, அவர் அவர்களை ஒரு முன் வடிவில் ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
55. அதன்பின் தேவன் மனிதனை உண்டாக்கினார், தம்முடைய சொந்த சாயலில் அல்ல. இந்த சரீரமானது தேவனுடைய சாயலின்படி இல்லை. இந்த சரீரமானது மிருகங்களின் சாயிலின்படிதான் உள்ளது.
56. என்னுடைய கோட்டை நான் கழற்றிவிடட்டுமா? இங்கு உஷ்ணமாக இருக்கின்றது. உள்ளே ஒரு கிழிந்த சட்டையை அணிந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் காண முடியாது. ஏனென்றால் அது ஒரு... ஜெஸி சலவையிலிருந்து எடுத்து வரவில்லை, ஆகையால்... ஆனால் கவனியுங்கள், நாம் ஒரு பொருளின் மேல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். பிரசங்க பீடத்தில் கிழிந்த சட்டை ஒரு பொருட்டல்ல. அப்படித்தானே? அது நித்திய ஜீவன் ஆகும்.
57. இப்பொழுது, மனிதனைக் கவனியுங்கள். தாம் ஒரு மனிதனையும், ஸ்திரீகளையும் உடையவராய் இருக்கப் போகிறார் என்பதை தேவன் ஆதியிலேயே அறிந்திருந்தார், ஒரு இரட்சகர் இங்கு இருக்கப் போகிறார் என்றும், அவர் இயேசுவைக் கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர் சிலுவையில் அறையப்படுவார் என்றும் அவர் அறிந்திருந்தார். இப்பூமியிலே இயேசு இருந்தபோது தம்முடைய சீஷர்களிடத்திலே அவர்களை, “உலகம் தோன்றுவதற்கு முன்பே அறிந்திருந்தார்” என்று கூறினார். உலகம் என்பது உண்டாவதற்கு முன்னரே.
58. ஆகவே தேவன் கூறினார், அல்லது பவுல் கலாத்தியரிலே “உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே அவர் நம்மை நியமித்து அவனுக்குள்ளாக அழைத்தார்” என்று கூறுகிறார். அதை நினைத்துப் பாருங்கள்! தேவன்... இதைக் குறித்த வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறதென்று கேட்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கேள்வியோடு சரியாக அது செல்கின்றதாய் இருக்கின்றது. இப்பொழுது என்னுடனேயே கலாத்தியர் 1ஆம் அதிகாரத்தை புரட்டுங்கள், இங்கு கவனியுங்கள் கலாத்தியர், இல்லை. எபேசியர். இப்பொழுது எபேசியர் 1ல் தேவன் என்ன கூறுகிறார் என்பதை கவனமாகக் கேளுங்கள்:
தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
59. இங்கிருக்கிறது, இப்பொழுது கவனியுங்கள்:
அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... (வியூ!)
60. அது மிகவும் அருமையானது அல்லவா? அது மிகவும் அருமையானது அல்ல, அது உண்மையாகவே மிகவும் அருமையானது. உலகம் தோன்றும் முன்பே தேவன் ஆர்மன் நெவிலை அறிந்திருந்தார். அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார் என்றும் தேவன் அறிந்திருந்தார். ஆர்மன் நெவில் சுவிசேஷத்தை பிரசங்கிப்பார் என்று உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் அறிவார். அது ஆச்சரியமானதல்லவா? “அவர் தெரிந்தெடுத்தார்...” ஏன், அவர் சபையின் ஒரு அங்கத்தினர், தாம் அந்த சபையை உடையவராய் இருக்கப்போகிறார் என்பதை தேவன் அறிவார். அவர் “தமக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்' என்று, எபேசு சபைக்கு பவுல் கூறினான். இப்பொழுது நாம் எல்லாரும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினராய் இருக்கிறோம். அது சரிதானே? உலகம் தோன்றுவதற்கு முன்னரே தேவன் உன்னையும், என்னையும் தமக்குள் தெரிந்து கொண்டார். வியூ! என்னே! அது ஆச்சரியமானதல்லவா?
61. இப்பொழுது முதலாவது மனிதன், அவர் முதலாவது மனிதனை தம்முடைய ரூபத்தின்படியே உண்டாக்கினார், நாம் அந்த ரூபத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றோம், அது சரி, உண்டாக்கப்பட்ட நம்முடைய முதலாம் ரூபத்திற்கு.
62. வில்லியம் பிரன்ஹாமாகிய என்னை தேவன் உண்டாக்கின போது, உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே நான் இருந்தேன், அவர் என் சரீரத்தையும், ஆவியையும் உண்டாக்கினார். எனக்குத் தெரிந்தவரை என்ன நடந்தது என்பதை நான் அறியாதவனாய் இருந்தேன், ஆனால்... நான் அங்கு இருந்தேன். ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். ஆகையால் இப்பொழுது, ஒரு நிமிடம், இயேசு தம்முடைய சீஷர்களிடம் “உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவர்களை அறிந்திருந்தேன்” என்று கூறினார். இங்கே பவுல், “உலகம் தோன்றும் முன்னரே, தமக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்,” என்று கூறுகிறான். இப்பொழுது அங்கே என்னுடைய ஒருபாகம், சகோதரன் ஆர்மன் நெவில் மற்றும் உங்கள் எல்லாருடைய ஒரு பாகம் உலகம் தோன்றுவதற்கு முன்பே கிறிஸ்து இயேசுவிற்குள் இருந்தது. இப்பொழுது அதைக் குறித்த என்னுடைய மதிப்பீடு (பகுப்பாய்வு) என்னவென்றால், இன்றைக்கு இந்த ஆவியைப் பெற்றுள்ள மக்கள், அல்லது அந்த ஆவி தேவனை சுற்றியிருந்த முறைப்படி மாற்றி மாற்றி சுழன்ற (Rotated), பரலோகத்திலே சாத்தானுடைய பொய்யை எதிர்த்த, ஆதியிலே விழுந்து போகாத தூதர்கள் ஆவியை மக்கள் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.
63. பூமியின் மூன்றில் இரண்டு பாகம், அதற்கும் மேலாக பாவத்தில் உள்ளது, மூன்றில் இரண்டு பாகமான தூதர்கள் உதைத்து தள்ளப்பட்டனர். ஆகையால் அந்த பிசாசின் ஆவிகள் ஜனங்களுக்குள் வந்து அவர்கள் சரீரங்களில் குடிகொண்டன. நான் என்ன கூற விழைகிறேன் என்பதைப் பாருங்கள்? அவைகள் பிசாசுகள்... அவைகள் ஜனங்களுக்குள் வந்து ஒரு சுபாவத்தை, தன்மையை அளிக்கின்றன. இயேசு மகதலேனா மரியாளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை விரட்டினார். பெருமை, அகங்காரம் (நீங்கள் பாருங்கள், பெரிய மக்கள்) அசுத்தம், ஆபாசம், தீய ஒழுக்கம், மிஞ்சும் தன்மை, சச்சரவு, இவைகள் எல்லாம், பாருங்கள்.
64. தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலின்படியே உண்டாக்க துவங்கின போது இந்த ஆவிகளெல்லாம் அங்கே உண்டாக்கப்பட்டிருந்தன. இயற்கை முறைக்குளடங்காத, அந்த ஆவிகள் உண்டாக்கப்பட்டன.
65. பிறகு அவர் மனிதனை பூமியின் மண்ணிலே வைத்தார், அவன் தான் முதலாவது மனிதன், ஆதாம் ஆவான். அந்த மனிதன் அந்த ரூபத்தின்படியே உருவாக்கப்பட்டான், இங்கிருக்கும் இந்த மானிட மனிதன், அவன் ஒரு மிருகத்தின் ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவன் ஆகும். இந்த மனித சரீரங்கள் மிருகங்களின் ரூபத்தின்படி உருவாக்கப்பட்டதாகும்.
66. நமக்கு ஒரு குரங்கிற்கு இருப்பது போன்ற கையும், ஒரு கரடிக்கு இருக்கும் காலைப் போலவும் இருக்கின்றது. ஒரு சிறிய கரடிக் குட்டியை எடுத்து, அதன் தோல்களையெல்லாம் உரித்து, ஒரு சிறிய பெண் குழந்தைக்கு பக்கத்திலே தலைகீழாக படுக்கவைத்து அதில் வித்தியாசம் உள்ளதா என்று பார். ஹம்! சகோதரனே, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் மார்பு, வயிறுபாகத்திற்கு இடையே உள்ள தடித்த தசைச்சுவர், உதரவிதானம் (Diaphram), மற்றும் அதன் முழு அமைப்பும், அது உருவாக்கப்பட்டவிதமும், அதன் ரூபமும், மற்ற எல்லாமுமே சரியாக ஒன்று போலவே இருக்கும். அது மிருகத்தின் ரூபத்தின்படியே உள்ளது, மிருகங்களை வழி நடத்துவது அவனுடைய கடமையாக இருந்ததால். அவன் மிருகத்தின் சாயலைப்போன்ற ஒன்றாக உண்டாக்கப் பட்டான்.
67. ஆகவே பரிசுத்த ஆவி ஒரு மனிதனிடத்திலிருந்து எடுக்கப் படுமானால், அவன் மிருகத்தைக் காட்டிலும் தாழ்ந்தவனாயிருப்பான், அவன் மிருகத்தை விட மோசமானவனாயிருப்பான். அவ்விதம் கூறுவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால், நீங்கள், தன் சிந்தையிலே மறுஜென்மடையாத (Regeneration மறுபிறப்பு) அவன் நினைவுகளை வழிநடத்த பரிசுத்த ஆவியற்ற ஒரு மனிதனைக் காண்பீர்களானால், அவன் ஒரு தாயின் கையில் உள்ள ஒரு குழந்தையை பிடுங்கி எறிந்து, மிருக இச்சை கொண்டு அவளை மானபங்கப்படுத்திவிடுகிறவனாக இருப்பான். அது முற்றிலும் சரியே.
68. ஒரு கெட்ட ஸ்திரீயை எடுத்துக்கொண்டால் நீ ஒரு வயதான தாய் காட்டுப்பன்றியை (hog) அல்லது ஒரு வயதான நாயை (dog) எடுத்துக் கொண்டால், அதற்கு எல்லா பெயர்களையும் சொல்லி அழைப்போம்... ஆனால் அதனுடைய ஒழுக்கமானது தன் குட்டி நாய்களுக்காக, காட்டுப்பன்றி தன்னுடைய குட்டிகளுக்காக இருக்கின்றன. ஆனால் ஒரு சாதாரண ஒழுக்கமில்லாத ஸ்திரீ... எப்பொழுதுமே, எல்லா நேரமும் நாற்றமெடுக்கும் ஒருவள் ஆவாள். அது சரி. ஆகவே ஞாபகங்கொள்ளுங்கள், கிறிஸ்து இல்லாமல், உன்னுடைய ஒழுக்கமானது... ஒரு நாய்க்குக் கீழாகச் சென்று விடும். அது சரி.
69. ஒரு நாயோ, அல்லது மற்ற மிருகமோ ஆடையினால் தன்னை மூடிக்கொள்ளத் தேவையில்லை. மனிதன்தான் விழுந்து போனவன் ஆவான், மிருக ஜீவன்கள் அல்ல. ஆனால், மிருக ஜீவனானது மனிதனுக்கு (மனித ஜீவனுக்கு) கீழாக உள்ளது, ஏனென்றால் அதற்கு வழிகாட்டியும், சிறந்த தலைவனும் மனிதனே ஆவான். பூமியில் உள்ள எல்லா மிருகமும் மனிதனுக்கு பயப்படுகின்றன.
70. யாரோ ஒருவர், முன்பு ஒரு சமயம், வேட்டையைப் பற்றி என்னிடம், “நீங்கள் அதற்கு பயம் கொள்வதில்லையா? என்று கேட்டார். ஏன், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு மிருகமும் ஆதியிலிருந்து மனிதனைக் கண்டு பயப்படுகின்றது, ஏனெனில் ஆதியிலிருந்து அது அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள்? நிச்சயமாக, நீ ஓடுவாயானால், உனக்கு பின்னாலே அது ஓடிவரும், அது சரியே. ஒரு நாய் அல்லது நீ செய்ய வேண்டும் என்று விரும்பும் எதுவும் அவ்விதமேயாகும். அது சரி.
71. ஆனால் இப்பொழுது கவனியுங்கள், ஒரு மனிதன் இங்கே வருவானானால்... நீங்கள், “இப்பொழுது அதைக் குறித்து என்ன சகோ பிரன்ஹாமே?” என்று கூறலாம்.
72. இப்பொழுது, நீ தேவனை சரியாகக் காணலாம், ஒருத்துவத்திற்கும் திரித்துவத்திற்கும் நடுவில் சரியாக அதை இப்பொழுது காண்பாய். இப்பொழுது கவனியுங்கள், தேவன் தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டார், அவர் கீழேயுள்ள இந்த மனிதனிடம் வரும் அளவிற்கு தம்மைத் தாழ்த்தி தம்மை வெளிப்படுத்தினார். இப்பொழுது, மனிதன் பாவம் செய்தான் தன்னுடைய ஆவியினால் அல்ல, ஆனால் அவன் தன்னுடைய சரீரத்தின் இச்சை, ஆசையில் பாவம் செய்தான். அவன் பாவம் செய்தபொழுது தன்னுடைய சிருஷ்டிகரிடத்திலிருந்து தன்னை வேறு பிரித்துக் கொண்டான். ஆகவே பிறகு தேவன், அந்த லோகாஸ், அவனை சிருஷ்டித்த அதே சிருஷ்டிகர், கீழே வந்து மனிதனுடைய சாயலின் படியே உருவாக்கப்பட்டார். மனிதன் தேவனுடைய சாயலின்படி உருவாக்கப்பட்டான். பிறகு மிருகத்தின் சாயலின்படி அவன் உண்டாக்கப்பட்டு விழுந்து போனான். ஆகவே தேவன் மனித சாயலின்படியே கிறிஸ்து இயேசு என்னும் மனிதனுக்குள் வந்து பாடு அனுபவிக்க கீழே வந்தார். தேவன் ஆவியிலே பாடு அனுபவிக்க முடியாது. தேவன் ஆவியில் எவ்விதம் சரீரபூர்வமான பாடனுபவிக்க முடியும்? அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆகவே தேவன் மனித சாயலின்படியே உருவாக்கப்பட்டு இழந்து போனவர்களை மீட்க தம்மை வெளிப்படுத்தினார். பாருங்கள்?
73. பிறகு தேவன் மாம்சத்திலே பாடனுபவித்தார். 1தீமோத்மேயு 3:16, “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், தேவ தூதர்களால் காணப்பட்டார், சிலுவையிலறையப்பட்டார் பிரசங்கிக்கப்பட்டார், விசுவாசிக்கப்பட்டார், தேவனுடைய வலதுபாரிசத்திற்கு ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்” அது சரிதானே? தேவன் தாமே கீழிறங்கி வந்து மனித சரீரத்திலே வாசம்பண்ணி சோதனையை அனுபவித்தார். “தேவன் கிறிஸ்துவிற்குள் இருந்து, உலகத்தை தம்மோடே ஓப்புரவாக்கினார்” அன்பு என்றால் என்னவென்று பாருங்கள்? தேவனுடைய அன்பு!
74. இப்பொழுது, இப்பொழுது, மனிதனும், ஸ்திரீயும், அதை நாம் காண்போம் என்று நம்புகிறேன். இப்பொழுது ஒரு ஸ்திரீ... இப்பொழுது இதை நீங்கள் காணும் விதத்தில் இதை நான் சரியாகக் கூறட்டும், பாருங்கள். ஸ்திரீ தன்னுடைய புருஷனுக்கு உட்பட்டவளாவாள். “ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை ஆளுகை செய்ய வேண்டும்” என்று வேதம் கூறுகின்றது. ஆனால் அவர்கள் அதை எப்படி மாற்றிப்போட்டு விட்டார்கள்! ஸ்திரீ மனிதன் மீது ஆளுகை செலுத்துகிறாள், “இப்பொழுது, ஜான் நீ வீட்டில் இரு நீ வெளியில் செல்லக்கூடாது!” “சரி என் அன்பே.” அதுதான் காரியம், பாருங்கள்?
75. திரு. அவர்களே, உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும். உன் மனைவிக்காக நீ தான் பதில் கூறப்போகிறாய், ஆனால் உன்னுடைய மனைவி உனக்காக பதில் சொல்லப் போவதில்லை. நீ தான் ஸ்திரீக்குத்தலை, தேவன் மனிதனுக்குத் தலையாய் இருக்கிறார். ஆதலால் அவர், 'ஒரு மனிதன் கிறிஸ்துவுக்காக தன் மயிரைக் கத்தரிக்ககடவன். ஒரு ஸ்திரீ தன் மயிரை கத்தரிக்காதிருக்கக்கடவள். அவள் அவ்விதம் தன் மயிரைக் கத்தரித்தால், அவள் தன் புருஷனை அவமதிக்கிறாள்” என்று கூறினார். பாருங்கள்? வேதவாக்கியம் கூறுகிறபடி நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா?
76. ஷ்ரீவ்போர்டில் ஒருநாள் அதைக்குறித்து சூடாக பேசினேன். ஸ்திரீகளுக்கு நீண்ட மயிர் இருக்கலாமா என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான், “கத்தரிக்கப்பட்ட குட்டை மயிர் உடைய ஸ்திரீகளை விவாகரத்து செய்ய புருஷனுக்கு, அதிகாரம் உண்டு. அது வேதாகம அதிகாரம்” என்றேன். அது சரியே. வேதாகமம் அதைத்தான் கூறுகின்றது. அது முற்றிலும் சரியே. ஓ, என்னே! தங்களுக்கு போதிக்கப் பட்டபடியே பரிசுத்த ஆவி பெற்ற ஸ்திரீகள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், அதுதான். பாருங்கள்? ஆம், அதில் சிறிது தளர்ந்தால். பிறகு...
77. அவர், “இப்பொழுது, அவர்கள் அதைக் கத்திரிக்க வேண்டு மெனில், ஏதோ ஒரு கோளாறு இருந்து தங்கள் மயிரைக் கத்தரித்துத் தான் ஆகவேண்டுமென்று இருந்தால், ஒரு சவரக்கத்தியை எடுத்து முழுவதுமாக மொட்டை அடித்து பிறகு அவளுடைய மயிரை வழவழப்பாகக் செய்யுங்கள்.” என்றார். நீ அவ்வழியாகவருவது சிறந்ததாகும். அது சரி. வேதவாக்கியமும் அதைத்தான் கூறினது. அது, “அவள் தன் மயிரைக்கத்தரித்து, தன் புருஷனை கனவீனப்படுத்துகிறாள். கனவீனமான ஒரு ஸ்திரீயை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து தள்ளிவிடலாம்” என்று கூறுகின்றது. ஆனால், இப்பொழுது அவன் திரும்பவும் விவாகம் செய்யக் கூடாது. ஆனால் அவன் அவளை விவாகரத்து செய்யலாம். அது சரி. அது வேதப்பூர்வமானது. ஓ சகோதரனே, நமக்கு தேவை என்ன வென்றால் இன்னும் கேள்விகளுக்கான சில இரவுகள் வேண்டும்! அது சரி. நீங்கள் அதைப் படிக்க விரும்பினால் அது 1கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் ஆகும். அது சரி. இப்பொழுது இந்த ஸ்திரீ...
78. தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அவர் என்ன செய்தார் என்பதைக் காண்கிறீர்களா? அவர் மனிதனை உருவாக்கினார். அவர் உருவாக்கினார். இப்பொழுது, அதுதான் முதலாம் கேள்வி, பாருங்கள், “அவர்களைச் சிருஷ்டித்தார்” ஆதியாகமம் 1:26 ஆதியாகமம் 2:7ல் “அவர் அவர்களை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்.”
என்ன வித்தியாசம் உள்ளது, அல்லது மேற்கூறப்பட்ட வேத வாக்கியத்தில் தொடர்பு, இணைப்பு எங்குள்ளது? முதலாம் மனிதன் இரண்டாம் மனிதனிடத்தில் எப்படிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தான்?
79. இரண்டாம் மனிதன், உண்டாக்கப்பட்ட, ஐந்து புலன்களில் வெளிப்படையான முதலாம் மனுஷனாய் இருக்கிறான். பாருங்கள்? இப்பொழுது தேவனை உங்கள் கைகளினால் அவ்விதம் தொட முடியாது, உங்கள் கண்களால் தேவனைக் காணமுடியாது. அதைச் செய்ய உங்களுக்கு அவைகளை அவர் அளிக்கவில்லை. நீங்கள்...
80. ஒரு வயதான பரிசுத்தவான் மரிக்கும்போது “அங்கே தாயார் உள்ளார், நான் அவர்களை அநேக ஆண்டுகளாகக் காணவில்லை?” என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? மக்கள் இப்படி கூறுவதை கேட்டிருக்கிறீர்களா...? பாருங்கள், அது என்ன, அவர்களுடைய கண்கள் மங்கி, இயற்கைக்கு மேம்பட்ட கண்கள் உள் வருகின்றன. பாருங்கள்? ஆகவே சில சமயங்களில் நாம்... தேவன் அவ்வாறு செய்வாரானால்... இயற்கைக் கண்கள் மங்கும்போது நாம் தரிசனங்களைக் காண்கிறோம். சரியாக நமக்கு முன்பாக, நாம் நேராகப் பார்க்கையில், அங்கே நமக்கு முன்பாக ஒரு தரிசனம் தோன்றி தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை நமக்கு காண்பிக்கிறது. நான் என்ன கூற விழைகிறேன் என்பதைப் பாருங்கள்?
81. ஆகவே பாருங்கள், “இங்கு பூமிக்குரிய கூடாரமாகிய...” இப்பொழுது இங்குள்ள ஆண்கள் பெண்களில் சிலர் முதிர்வயதை அடைந்துக் கொண்டிருக்கின்றனர். கவனியுங்கள். “இந்த பூமிக்குரிய கூடாரமாகிய...” அங்கிருக்கும் தொண்ணூற்றிரண்டு வயது நிரம்பிய தந்தையைக் குறித்து நான் நினைக்கிறேன். “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், அங்கே (அழியாத) ஒரு ஆவிக்குரிய மனிதன், ஒரு ஆவிக்குரிய சரீரம் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது.” நான் உங்களை அங்கு காண்பேன். நான் நடந்து செல்வேன்...
82. அங்கே சகோதரன் நெவிலை என்னால் தொட இயலாது, ஏனென்றால் அவர்கள் பலிபீடத்தின் கீழே உள்ள ஆத்துமாக்களாய், அவர்கள் “எவ்வளவு காலம் ஆண்டவரே, எவ்வளவு காலம்?” என்று கதறுவதை யோவான் கண்டான். அது ஏனென்று நாம் வெளிப்படுத்தலை ஆராய்ந்தோம். அவர்கள் திரும்பி வரவும், தங்கள் சரீரங்கள், அழிவில்லாத சரீரங்களாகிய அங்கியால் போர்த்தப்படவும், அவர்கள் எவ்வளவாய் வாஞ்சித்தனர். அவர்கள், “எவ்வளவு காலம் ஆண்டவரே?” என்று கதறினர்.
83. இப்பொழுது, ஒருவரையொருவர் அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால் பேசவோ, கைகளைக் குலுக்கவோ அவர்களால் இயலவில்லை அல்லது என்னை மன்னிக்... அவர்களால் பேச முடிந்தது, ஆனால் அவர்களால் கைகுலுக்குதலையோ, மற்றவைகளையோ செய்ய முடியவில்லை. இங்கே அதை நிரூபிக்க ஒரு காட்சி உள்ளது. எந்தோரின் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சாமுவேலின் ஆவியை அழைத்தபோது, சவுல் அதைக் கண்டு அது சாமுவேலின் ஆவி என்று அடையாளம் கண்டுகொண்டான். சாமுவேல் சவுலை அடையாளங்கண்டு, “நீ என்னை எழுப்பி வரப்பண்ணி என்னைக் கலைத்தது என்ன, கர்த்தர் உன்னை விட்டு விலகி உனக்கு சத்துருவாய் இருக்கும்போது நீ என்னிடத்தில் கேட்பானேன்?” என்று கூறினான். அது சரிதானே? அங்கே வயதான சாமுவேல் தீர்க்கதரிசியின் சால்வையைப் போர்த்திக்கொண்டு அவனை நோக்கிப் பார்த்தான். அவன் ஆவியாய் இருந்தான்.
84. அந்த அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ “தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்” என்று கூறி தரையில் விழுந்தாள்.
“ஏன் என்னை கலைத்தாய்?” என்று அவன் கூறினான்.
அதற்கு அவன் “நல்லது, யுத்தம் எப்படி நடக்கின்றது” என்று நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன்,” என்றான்.
85. அவன், “நாளை நீ யுத்தத்தில் மரிக்கப்போகிறாய், நீயும் உன்னுடைய குமாரரும் நாளைய இரவு இந்நேரத்தில் என்னோடிருப்பீர்கள் என்றான்” பாருங்கள்? அவன் சுயநினைவு கொண்டவனாய் இருந்தான், அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீக்கும், சவுலுக்கும், அவன் இங்கே பூமியில் இருந்தபொழுது அவர்களுக்குச் செய்ததையே மறுபடியும் செய்தான்.
86. இப்பொழுது கவனியுங்கள். அநேக சமயங்களில்... தாயும் தந்தையும் மரிக்கும்போது தாங்கள் நேசித்தவர்கள் அருகில் நிற்பதைக் கண்டார்களே அதைக் குறித்தேன்ன? ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட சரீரத்தில், அவர்கள் அவர்களை அறிந்துகொண்டார்கள்.
87. ஆனால் இப்பொழுது மகிமையான பாகம் இங்குள்ளது. இயேசு திரும்பவுமாக உயிர்த்தெழுதலில் வருகையில், அது அந்த சரீரமாக இருக்காது. அந்த சரீரம் அப்போது, பூமிக்கு வந்து ஸ்திரீயினால் பிறப்பிக்கப்படாத, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட (அல்லேலுயா!) வயது ஆகாத, அல்லது சுருக்கம் விழாத, வேறொரு சரீரத்தை பெற்றுக்கொள்ள வரும், உன்னுடைய தலையில் நரைத்த மயிர் உண்டாகாது. எப்போதுமே பரிபூரணமாக இருக்க, அல்லேலுயா! ஓ. சகோதரனே, இந்த உஷ்ணமான இரவில் அது என்னை கூச்சலிடச் செய்யும்! அது சரி! ஓ, என்னுடைய இந்த மாம்சப் போர்வையானது விழுந்து, நான் எழுந்து, நித்தியமான பரிசைப் பற்றிக்கொள்வேன்! கவலை கொள்ள உலகத்தில் நமக்கு என்ன இருக்கிறது?
88. தேவன் என்னை எவ்விதம் ஆதியிலே சிருஷ்டித்தார் என்ற முழுதிட்டமும் அங்கே இருக்கின்றது. நான் இங்கே பூமிக்கு இறங்கி வந்து, சுவிசேஷ பிரசங்கியாக என் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன், அல்லது உங்களைப் போல, நீங்கள் ஆண் அல்லது பெண்ணாக இரட்சிப்பைப் பெற்று, பிறகு தேவனுடைய கிருபையால் நீங்கள் ஜீவிக்கின்றீர்கள். அல்லேலூயா! ஆதியிலே இருந்த அதே ஆவிதான் இங்கேயிருந்து செல்கின்றது. நான் இங்கே இருந்தேன் என்ற நினைவோடு (அல்லேலுயா!) பீடத்தின் கீழாக காத்திருந்து, எப்போதுமாக ஆசீர்வதிக்கப்பட்டு இளைப்பாறுவேன். மறுபடியுமாக திரும்பி நான் வரும்போது, மரணம் என் சரீரத்தைத் தாக்கினதற்கு முன்னிருந்த அந்த மிகச் சிறப்பின் சரீரத்தை நான் எடுத்துக் கொள்வேன், அப்படியே அதை எடுத்துக் கொள்வேன்.
89. உனக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்தி மூன்று வயதாகையில் நீ தளர ஆரம்பிக்கின்றாய், மரணம் உன்னை தாக்குகின்றது. உனக்கு இருபத்தைந்து வயது ஆன பிறகு நீ முன்பிருந்த மனிதனைப் போலவோ அல்லது ஸ்திரீயைப் போலவோ உன்னால் இருக்கமுடியாது, ஏதோ ஒன்று உள்வருகின்றது. உன் கண்களுக்குகீழாக சுருக்கம் ஆரம்பிக்கின்றது. நீ முன்பிருந்தது போலவே உன்னால் சலவை செய்ய முடியாது. உனக்கு முப்பது வயதாகும் போது அதை அதிகமாகக் காணலாம். என்னைப் போல் நாற்பத்து நான்கு வயதாகும்வரை காத்திரு, அப்பொழுது நீ உண்மையாகவே அதைக் காண்பாய். ஆனால் ஓ சகோதரனே! நான் எண்பது, தொண்ணூறு வயதாகி கோலுன்றி அங்கு நிற்கும் வரை காத்திரு. அது என்ன? தேவன் அவனை ஒரு ஓட்டப் பந்தயத்திற்கு ஓட வைக்கிறார். ஆனால் மகிமையான ஒரு நாளிலே... மரணம் உள்வருகின்றது.
90. ஒரு சமயத்தில் நான் அகன்ற தோள்களையும், கருமை நிற மயிரையும் (தலை முழுவதுமாக) என் கண்களின் கீழே சுருக்கம் விழாதவனாக இருந்தேன்; இப்பொழுது என்னைப் பாருங்கள். தளர்ந்து கொண்டிருக்கிறவனாக, தோள்கள் சரிந்தவனாக, பருமனாகிக் கொண்டு, கண்களின் கீழ் சுருக்கம் விழுந்தவனாக, வழுக்கைத் தலையாக இருக்கிறேன். ஏன், இந்த கடைசி இருபது ஆண்டுகளாக மரணம் எனக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். மரணம் தான் அதைச் செய்துகொண்டிருக்கின்றது. தேவன் என்னை வாழ அனுமதிப்பாரானால், நான் எண்பது வயதாகும்வரை பொறுத்திருங்கள், காண்பதற்கு நான் எப்படியிருப்பேன், இந்த பழைய கோலை ஊன்றிக் கொண்டிருப்பேன், அதைப் போல எங்கேயோ நடுங்கிக் கொண்டிருப்பேன். ஆனால், அல்லேலுயா, மகிமையான ஒரு நாளில் மரணம் தன்னுடைய முழுவதையுமே எடுத்துக் கொள்ளும். பிறகு நான் உயிர்த்தெழுதலிலே எழுந்திருக்கையில், நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பேன், திருமதி. பிரன்ஹாம், திரு பிரன்ஹாம் அவர்களால் உண்டாக்கப்பட்ட சரீரத்தில் அல்ல, ஆனால் தேவன் இந்த பூமியில் எப்படி சிறந்ததாக என்னைச் சிருஷ்டித்தாரோ, அதேபோன்று இருப்பேன். நான் சோதனைகளிலிருந்தும், பாவத்திலிருந்தும், மற்ற எல்லாக் காரியத்திலிருந்தும் விடுதலையடைந்தவனாக, இருதய கோளாறு, வியாதி எப்போதுமே வராதவாறு தேவன் தாமே சிருஷ்டித்த ஒன்றாக இருப்பேன். ஓ, என்னே!
91. பிறகு நான் என்னுடைய சிறிய மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு தேவனுடைய பரதீசியிலே புதியவனாக நடந்து செல்வேன். நீங்களும் அதைப் போன்றே செய்வீர்கள். இப்பொழுது இன்றிரவு நீங்கள் கூட்டிக்கொண்டு செல்லும் தலை நரைத்துப்போன வயதான மனைவி என்று நீங்கள் அழைக்கும் அவள், நீங்கள் பீடத்தின் அருகே விவாகம் செய்தபோது எப்படி இருந்தாளோ அதைப் போலவே அழகாக இருப்பாள். அல்லேலுயா! வ்யூ! அது ஒரு மனிதனைக் கூச்சலிடச் செய்யப் போதுமானதாக இருக்கும். அப்படித்தானே? பாருங்கள்?
92. அது சரி, அதுதான் அந்த தொடர்பு, இணைப்பு. தேவன் உறுதியுள்ளவர் ஆவார். தேவன் ஒரு காரியத்தைச் செய்ய முடிவு செய்வாரானால் எண்ணம் கொள்வாரானால், அது அப்படியே ஆகவேண்டும். சாத்தான் இக்காரியத்தை பாலுணர்ச்சியின் மூலமும், ஸ்திரீயின் மூலமும், பிள்ளை பெறச் செய்து அதைப் பாழாக்கினான்.
அவன் இதைப் பாழாக்கினான். ஆனால் அதனோடே முன் செல்லுங்கள், அது சரிதான். இந்த ஜீவியமானது இதை எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், நீ அந்த உருவையும், சாயலையும் எடுத்துக் கொள்ளுகிறாய் என்பதுதான் நீ இந்த ஜீவியத்தில் செய்கின்ற ஒரே காரியமாகும். இப்பொழுது நீ சிகப்பு நிற மயிரையுடைய தலையுடன் இருந்தால், நீ அங்கு அவ்விதமே இருப்பாய். நீ கருமை நிற மயிரையுடைய தலையுடன் இருந்தால், அங்கு அவ்விதமே இருப்பாய். பாருங்கள், நீ சிறந்த முறையில் எப்படி யெல்லாம் இருந்தாயோ. நீ... சாத்தான் இந்த காரியத்தில் குறுக்கீடு செய்தான், குறுக்கே வந்து, அதை நீ பெற்றுக் கொள்ளவே இல்லை... தேவன் நீ எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தாரோ, எண்ணங்கொண்டாரோ, அப்படி இருக்கப் போகிறாய். ஓ, எவ்வளவு மகிமையானது! அதோ உன்னுடைய மனிதன்.
93. இப்பொழுது ஆதியாகமம் 2. நான் விரைவாய் செல்லவேண்டும், நான் அதை எடுப்பேன் (உங்களுக்கு ஏதாவது உண்டா ? நீங்கள்... பதிலைப் பெற்றுக் கொண்டீர்களா?) அது சரி, ஆதியாகமம் 2:18-21.