113. இப்பொழுது ஜோசபஸ் அங்கே... எனக்குத் தெரியும், நமது சபை, நீங்கள் என்னை போன்றுதான் இருக்கிறீர்கள். நான் - நான் ஒரு ஏழாவது வகுப்பு வரை படித்த ஒரு பேதை, நான் - நான் கல்வியறிவைக் குறித்தோ மற்றவைகளைக் குறித்தோ கவலைப்படுவதில்லை, சுவிசேஷத்திற்கு இருக்கின்ற தடைகளிலே அதுதான் மிகப் பெரிய தடை என்று நான் கருதுகிறேன். ஆனால் இன்னுமாய், சில சமயங்களில் ஒன்று அல்லது இரண்டு புத்தகத்தை நான் எடுக்கிறேன். இப்பொழுது என்னைப் போன்ற மக்களிடையே நான் கொண்டிருக்கின்ற தொடர்பு என்னவெனில் நாமெல்லாரும் ஒரே கோட்டில் உள்ளோம், நாம் சாதாரண மக்களாயிருக்கிறோம். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வேதம் “சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்டார்கள்” என்று கூறுகின்றது. அங்கே வேறொரு பிரிவினராகிய செல்வந்தர் இருந்தனர். ஆனால் சாதாரண மக்களோ... நம்மைப் போல மிகவும் சாதாரண மக்கள், தேவனை நேசித்து இந்த உலகத்தைக் குறித்து அவ்வளவு அக்கறைக் கொள்ளாமல், தங்கள் குடும்பத்துடனும் பிள்ளைகளுடனும், இருக்கும் மக்கள், நாம் தேவனை நேசித்து சபைக்கு செல்ல விரும்பும் மக்கள் ஆவர், அவருடைய ராஜ்ஜியத்திற்காக நமது துணிகளையும், எதையாகிலும் கொடுப்போம். நாம் அவரை நேசிக்கின்றோம், நாம் எதையும் செய்வோம், சாதாரண மக்கள் தான் அவருக்குச் செவி கொடுத்தனர். இன்றைக்கும் அதே போன்றுதான், சாதாரண மக்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடு கேட்கின்றனர்.
114. இப்பொழுது ஐசுவரியவானுக்கு உலகத்தைக் குறித்து சிந்திக்க நிறைய காரியங்கள் உண்டு, பாருங்கள். அங்கே இருக்கும் அவனிடம் நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அவன் இதற்கு கவனமே செலுத்த மாட்டான். ஆனால் சாதாரண மக்கள் அவருக்கு மகிழ்ச்சியாய் செவி கொடுத்தனர்.
115. இப்பொழுது ஜோசபஸ் என்பவர் எழுதியிருக்கிறார்... இப்பொழுது “தேவ குமாரர்கள்” மனுஷக்குமாரத்திகளை பெண் கொண்டதைக் குறித்து அவருடைய வியாக்கியானம் இதோ இருக்கிறது. அவர் கூறினார். “பூமியின் மேல் இருந்த, விழுந்து போன ஆவிகள்...”
116. இப்பொழுது உங்களுக்குத் தெரியும்.., வெளிப்படுத்தின விசேஷம் 11ஆம் அதிகாரம்... அல்லது 7வது என்னை மன்னி... வெளிப்படுத்தல் 12வது அதிகாரம் சூரியனில் நின்று கொண்டிருந்த ஸ்திரீ. “சிவப்பான பெரிய வலுசர்ப்பம், தன் வாலைக் கொண்டு நட்சத்திரங்களில் மூன்றில் இரண்டு பங்கை இழுத்து பூமியில் விழத்தள்ளிற்று” அது சாத்தான் என்று நாம் அறிந்து கொள்கிறோம், ஆதியிலே அவன் வடதிசைகளில் தன் ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தான். மிகாவேலினுடையதை விட அது அழகாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். ஒரு நாள் அவன் பரலோகத்தில் யுத்தத்தை அறிவித்தான். மூன்றில் இரண்டு பங்கு தேவ தூதர்களை தன்னுடன் இழுத்துக் கொண்டான். அது சரியா?
117. அதன் காரணத்தால்தான் நாம் சிறுபான்மை மக்களாக இருக்கின்றோம். நான் கருதுவது அந்த அந்த பக்கம் … இன்று காலையில் சிறுபான்மையாயுள்ள நாம் - பரிசுத்த ஆவியால் பிறந்து கிறிஸ்துவ பரிமாணத்தில் உள்ள நாம், அத்த “அந்த - அந்த சிறுபான்மையாய் இருக்கின்றோம்.” அது சரி.
118. ஆதியாகமத்தில் எழும்பி வருகின்ற அந்த ஆவிகளை நீங்கள் கவனிப்பீர்களானால், அது எழும்ப ஆரம்பிக்கின்றது. அந்த அழகான, மிகவும் நேர்த்தியான, உயர்தர சபை வழிபாட்டைக் கவனியுங்கள். அது காயீனிடம் இருந்ததைக் கவனியுங்கள். இன்றைக்கும் அதைக் கவனியுங்கள். அது சரியாக வந்து அந்த பரிசேயர்களுக்குள் புகுந்தது. அங்கே இரண்டு வகையினர் இருந்தனர். பரிசேயர், சதுசேயர். பாருங்கள். இப்பொழுது அது சரியாகச் சென்று கொண்டிருக்கின்றது. கத்தோலிக்கத்தில் மகத்தான அசைவுகளில், அழகான ஸ்தலங்களில் அது உள்ளதைப் பாருங்கள்.
119. நல்லது, ஒரு சிறிய ஆட்டுக்குட்டியுடன் இருந்த ஆபேலை கவனியுங்கள். பாருங்கள். ஒரு சாதாரண காரியம். இயேசுவின் நாட்களில் அது இருந்ததைக் கவனியுங்கள். வேத வாக்கியங்கள் முழுவதிலும் அது செய்கிறதைக் கவனியுங்கள், அது எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். தேவன் காலங்கள் தோறும் தம் சபையை அழைத்தபோது, நாம் அந்த நாளில் நாம் சரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த சிறிய கோடு வேதம் முழுவதும், முழுவழியுலும் அந்த சிறிய சிவப்புக் கோடு ஓடுகின்றது, வேதம் முழுவதிலும் அது ஓடுகின்றது. அது இரத்தத் தால் கழுவப் பட்ட மக்களுடையது. கவனியுங்கள்!.
120. இப்பொழுது எனது கருத்தின்படி இந்த “தேவ குமாரர்”, நீங்கள் நிச்சயமாக... ஜோசபஸ் என்ன கூறினார் என்பது அவருக்குத் தெரியாது என்று கூறுவதன் மூலம் நான் அவருடன் ஒத்துக் கொள்ளாமல் இருக்கவோ அல்லது அவரை விட அறிவாளியாகவோ நான் இருக்க விழையவில்லை, ஆனால் நான் எப்படி மனிதனாயிருக்கிறேனோ அவ்வாறே அவரும் மனிதன் தான். அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்தாலும் சரி, அவர் ஒரு மனிதன் தான். அவர் செய்த ஒரே காரியம் அவர் பழைய வேத வசனங்கள், பழைய புனித சின்னங்கள் மற்றும் மேலும் சிலவற்றை ஆராய்ந்து பார்த்தாகும். ஆனால் நம்மிடையே உள்ள பரிசுத்த ஆவியைப் போன்று மேலானது எதுவும் அவரிடம் இல்லை, இப்பொழுது, அவர் தன் இயல்பான மனம் எப்படி செல்கின்றதோ அப்படி…
121. ஆனால் ஆவிக்குரிய மனதில் நாம் எடுத்துக் கொள்கிறோம். அந்த “தேவகுமாரர்” தூதர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். அப்படித்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் நம்புகிறேன்...
122. இப்பொழுது, ஜோசபஸ் அதே காரியத்தைத்தான் கூறினார், ஆனால் அவர் “அவர்கள் மனித மாம்சத்தில் பலவந்தமாகப் புகுந்து கொண்டு... மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்” என்று கூறினார். இப்பொழுது நாம் எல்லாரும் கலப்பு சபையாய் கூடியிருக்கிறோம். நாம் இந்த காலை எல்லாரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், சிறுமிகள், பெரியவர்களாக, கலந்துள்ள வித்தயாசமானவர்களாக இங்குள்ளோம். இங்குள்ள வயதுவந்தோர் புரிந்து கொள்ள இதை நான் பேசுகிறேன். அவர் “இந்த தூதர்கள் பெண்களைப் பார்த்து, மனிதன் ஸ்திரீயோடு வாழ்வதைப் பார்த்தபோது இச்சைக் கொண்டு, மனித சரீரத்தில் பலவந்தமாகப் பிரவேசித்தார்கள். ஆகையால்... அவர்கள் மனுஷக் குமாரத்திகளைக் கொண்டார்கள்” என்று கூறுகிறார்.
123. நல்லது, நான் - நான் அதை நம்புவது கிடையாது. அவர்கள் அங்கே கானானில் பிறந்தவர்கள் என்னும் இக்காரியத்தை நான் நம்புகிறேன். அவர்கள் நோத் தேசத்திற்கு அனுப்பப்பட்ட காயீன் கூட்டத்திலிருந்து பிறந்தவர்கள் ஆவர். அவனை யாரும் கொல்லக் கூடாதபடிக்கு அவன் மேல் ஒரு அடையாளம் இருந்தது. ஏனென்றால் அவன் கொலை... அவன் தன் சகோதரனைக் கொலை செய்தான், ஆனால் கவனியுங்கள், இஸ்ரவேலர் அங்கே சென்றபோது அம்மக்கள் சிலரைக் கண்டனர். அவர்கள் மிகப் பெரியவர்களாய் இருந்தனர். ஆகவே அவர்கள் பக்கத்தில் நின்றால் தாங்கள் வெட்டுக் கிளிகளைப் போலக் காணப்படுவோம் என்றனர். அது சரிதானே? நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர், மகத்தான, பெரிய முரட்டு மனிதர்கள் இருந்தனர். சில சமயங்களில் குழிகளைத் தோண்டுகையில், இம் மகத்தான மனிதர்களின் பிணங்களைக் கண்டெடுத்துள்ளனர்.
124. இப்பொழுது அது எங்கிருந்து வந்தது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, என்னுடைய போதகத்தில் சிறிதானதை கூறுகிறேன். சபை மக்களே, பாருங்கள். காயீன் சாத்தானுடைய குமாரன் என்று தான் நினைக்கிறேன். இதனுடன் நீங்கள் உடன்பட மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். என்னுடைய சொந்த சபை செய்கின்றது. ஆனால் அது இன்னுமாய் தேவன் வித்தியாச மானதை என்னிடம் காண்பிக்கும் வரை, அவன் சாத்தானுடைய குமாரன் தான் என்ற காரியத்தை நான் - நான் அதே காரியத்தைத் தான் விசுவாசிப்பேன். ஏனென்றால் அந்த தேவனற்ற, கொலை பாதகமான ஆவி தேவனிடத்தில் இருந்து வருகின்றது என்று என்னால் பொருத்திக் கூற முடியவில்லை. இல்லை ஐயா. அவனுடைய தந்தை... இங்கே, சர்ப்பத்தின் மேலே சாத்தான் ஏறின போது அவன் தன் தந்தையைப் போலவே இருந்தாக வேண்டும்.
125. சர்ப்பம் ஒரு ஊரும் பிராணி அல்ல, சாபம் அதை ஊரும் பிராணி ஆக்கிற்று. அது ஒரு மனிதனைப் போலவே நிமிர்ந்து நடந்தது. அது அங்கே இருந்த ஸ்திரீயினிடம் சென்றது. அவள் விபச்சாரம் செய்து தன் முதல் குமாரனான காயீனைப் பெற்றெடுத்தாள், தன் தந்தையின் சுபாவம். அந்த பெரிய மிருகம் ஒரு மனிதனைப் போலவே நிமிர்ந்து நடந்தது. இதிலிருந்து தான் இந்த இராட்சதர்கள் வந்தனர் என்று நான் நம்புகிறேன். ஆம், அது முற்றிலும் சரி, இப்பொழுது, அது என்னுடைய சொந்த எண்ணம், அது ஒருவேளை நான் - நான் தவறாய் இருக்கலாம். இது என்னுடைய கருத்து, பாருங்கள். ஆனால் அவர்கள் பெரிய மனிதர்களாயிருந்தனர்.
126. நீங்கள் கவனித்திருப்பீர்களானால், தேவன் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் முன்பாக நின்று கொண்டு “நீ மண்ணிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ மண்ணுக்குத் திரும்புவாய். நான்...” என்று கூறுகிறார்.
127. “ஏனெனில் நீ... செவி கொடுத்ததனால்... உன் புருஷனுக்கு பதிலாக மிருகத்திற்கு செவி கொடுத்ததால் நீ உலகத்திலிருந்து ஜீவனை எடுத்து விட்டாய், ஆகையால் நீ அதை உலகத்திற்கு மறுபடியும் கொண்டு வருவாய்.”
128. ஆகவே, அவர், “சர்ப்பமே, உன் கால்கள் உன்னை விட்டு அகலுவதாக. பாருங்கள், நீ இனி நடக்கப் போவதில்லை. நீ மிருகமாய் இருக்கப் போவதில்லை, நீ இப்பொழுது ஊரும் பிராணியாய் ஆகப் போகிறாய். நீ உன் வயிற்றினால் நகர்வாய், மண்தான் உன்னுடைய ஆகாரமாக இருக்கும்,” என்றார்.
129. அங்கேதான் நான் நினைக்கிறேன்... அந்த முரட்டு சுபாவமுடைய அந்த மிருகம் இந்த ஸ்திரீயுடன் வாழ்ந்து, இந்த பிள்ளையைப் பெற்றாள், பெரிய உயரமாக வயது கொண்ட மனிதன். அது பாதி மனிதத் தன்மையும், பாதி மிருகத் தன்மையையும் கொண்டிருந்தது. காயீன் அந்த சுபாவத்தைக் கொண்டிருந்தான். ஆகவே பிறகு அவன் வெளியிற் சென்றான். அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் ஆதியிலே இருந்த தன் தகப்பனைப் போன்று மிருகத்தனமாகவும், மாம்சீக இச்சையுடையவர்களாயும் இருந்தனர். அந்த பழைய இச்சையுடைய மிருகம் இந்த குமாரத்திகளையும் மற்றவைகளையும் கண்டு, மனுஷக் குமாரத்திகளையும் கொண்டனர். அது சரி.
130. இந்த மனிதர்களைக் கொண்டு வந்த அதே விழுந்துபோன ஆவிகள், அவை சந்ததி சந்ததியாக மக்கள் மேல் இறங்கின, நினைவில் கொள்ளுங்கள், அப்பொழுது வாழ்ந்த அதே ஆவிகள், இன்றைக்கும் வாழ்கின்றன...
131. இன்றைக்கு அதைக் கவனியுங்கள்! நல்லது, நம் நாட்டில் மக்கள் உள்ளனர். இப்பொழுது, நான்... இந்த, நான் ஒரு அமெரிக்கன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இதை நான் உங்களுக்குக் கூறட்டும், நான் உங்களுக்கு ஒன்றைக் கூறட்டும், உலகத்திலுள்ள நாடுகளில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸைக் காட்டிலும், எனக்குத் தெரிந்தவரை இந்த நாடே மிகக் கீழ்த்தரமான நாடாய் இருக்கின்றது. இது மிகவுமாய் இழிந்த நிலையில் உள்ளது!.
132. ஏன், ஆப்பிரிக்கா, ஸ்வீடன் நாடுகளைச் சேர்ந்த அயல் நாட்டு மக்கள்... அங்கே அவர்கள் “அமெரிக்க மக்களாகிய உங்களுக்கு என்ன ஆயிற்று, உங்கள் ஸ்திரீகளுக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதே இல்லையே? வானொலிப் பெட்டியில் ஒலிபரப்பப்படும் பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்து மிகவும் கேவலமாக, இழிவாக உள்ளதே, உங்கள் ஸ்திரீகளுக்கு அங்கு மரியாதை என்பதே கிடையாதா?” என்று கூறுகின்றனர்.
133. நம்முடைய பாடல்களெல்லாம் ஸ்திரீகளைக் குறித்த, பாலுணர்வைக் கொண்டதும், இச்சையுடையதும், மற்றக் காரியங்களை உடையதுமாய் உள்ளது. ஏனென்றால் பிசாசு அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றான். அது முற்றிலும் சரி. பழைய ஹாலிவுட், தொலைகாட்சி, மற்ற எல்லாமும் அந்த கேவலமான, இழிவான, தேவனற்ற காரியங்களை வெளியே அனுப்புகின்றன, அது செய்தித் தாள்கள், பத்திரிக்கைகள், விற்கும் இடங்களிலும், மற்ற இடங்களிலும் செல்கின்றன. எல்லாவற்றிலும் ஸ்திரீகள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு இருப்பதும், மற்றவைகளும் இடம் பெறுகின்றன. அது சரியாக ஆதியில் என்னவாய் ஆரம்பித்ததோ அதைப் போலவே முடிவும் பெறுகிறது. அது ஒரு அவமானமாகும்!.
134. ஒழுக்கம் என்கிற காரியத்திற்கு வருவோமானால், ஸ்திரீயின் ஸ்தானம் தான் எந்த ஒரு தேசத்திற்கும் முதுகெலும்பாய் இருக்கின்றது. நீ தாய்மையை உடைப்பாயானால், நீ உன்னுடைய தேசத்தை உடைத்து விட்டாய். நாம் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நமது ஸ்திரீகள்... புகை பிடித்துக் கொண்டும், விஸ்கி குடித்துக் கொண்டும் மற்றவைகளைச் செய்து கொண்டும் இருக்கிறார்கள், அது வெட்கக்கேடு, அவக்கேடு ஆகும்.
135. ஒரு வாலிபன் ஒழுக்கம் நிறைந்த, கன்னிகையை தன் மனைவியாக அடையத் தேடுவானானால், அத்தன்மை கொண்ட ஒரே ஒரு ஸ்திரீயை அடைய அவன் சில நல்ல பழைமையான, பரிசுத்த ஆவி சபைக்குத் தான் செல்ல வேண்டும். அது முற்றிலும் சரி.
136. அது முட்டாள்தனமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சகோதரனே அது உண்மையா இல்லையாவென்று நீங்கள் ஆராய்ந்து அறியுங்கள், கண்டு கொள்ளுங்கள். அது வெட்கக்கேடு! அது சரி.
அவர்கள் தேவ குமாரர்கள் அங்கே... இப்பொழுது, அதை நான் விளக்கிவிட்டேன்.. பாருங்கள், அது...
137. “ஏன், சகோதரன் பில், கர்த்தரிடத்திலிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன் என்று ஏவாள் கூறினதாக வேதம் உரைக்கிறதே” என்ற வேறொரு கேள்வி இன்றைக்கு என்னிடத்தில் உள்ளது. அது முற்றிலும் சரி. அது கர்த்தரிடத்திலிருந்து தான் வரவேண்டியதாயிருந்தது. தேவன் தான் ஒரே சிருஷ்டிகர். அவர்., பிசாசை தேவன் சிருஷ்டித்தார். அது எப்படி? தேவன் பிசாசை சிருஷ்டித்தார். ஒவ்வொரு விழுந்து போன தூதனையும் தேவன்தான் சிருஷ்டித்தார். அது சரிதானே? ஏன், நிச்சயமாக. அது அவர்களுடைய தெரிந்து கொள்ளுதலாயிருந்தது, அவருடையது அல்ல. அவர் உன்னை உண்டாக்கினார், அதைக் குறித்து நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவர்களைப் போலவே நீயும் நியாயந் தீர்க்கப்படுவாய். அது அவ்விதமே, நிச்சயமாக!.
138. இவர்கள் தேவனுடைய குமாரர்கள், ஆனால் அவர்கள் கிருபையிலிருந்து விழுந்து, இந்த மிருகத்தனம் வாய்ந்த மனிதனிற்குள் வந்தனர். அவர்கள் வெளியிற் சென்று இச்சித்தனர். அவர்கள் ஸ்திரீகளைப் பார்த்த போது, அப்படியே எடுத்துக் கொண்டனர். ஏன், அவர்கள் இன்னும் இங்கே இருக்கின்றனர். அமெரிக்காவின் ஒழுக்கக் கேடானது -தேவனுடைய ஆவியில்லாத மனிதர்களால் நிறைந்துள்ளது. அவர்கள் ஒரு குழந்தையை அதன் தாயின் கரங்களிலிருந்து பிடுங்கி வீசியெறிந்து, அவளை மானபங்கப்படுத்துகின்றனர். தேவனில்லை என்றால் அவன்... அவன் மிருகத்தைவிடக் கேவலமானவனாயிருக்கிறான். அவன் இன்னுமாய் மிருகத்தனத்தை, தேவனற்ற சுபாவத்தை கொண்டிருக்கிறான். மனிதன்.. அவர்கள் “மதம் ருசியாக உள்ளது, எனவே மனிதன் மதத்தின் பேரில் பைத்தியம் கொண்டான்” என்கின்றனர். மதம் தான் ஒரு மனிதனுக்கு சரியான மனநிலைமையை அளிக்கும், அது இயேசு கிறிஸ்துவின் மதம் ஆகும்.
139. கிறிஸ்துவை நீ கண்டடையும் வரை உனக்கு சரியான மன நிலைமை இராது என்பதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க முடியும். அது சரி. அது மிகவும் கடினமானதாய் இருக்கிறது. ஆனால் அதை வேதத்தைக் கொண்டு என்னால் நிரூபிக்க இயலும். அது சரி. நீ இயேசு கிறிஸ்துவைக் கண்டடையும் வரை நீ மிருகத்தனமாகவும், இச்சைகொண்டவனாகவும், எல்லாவற்றையும் கொண்டவனாக இருப்பாய். அவர்தான் அந்த அருமையானவர்.
140. இப்பொழுது, கர்த்தரைக் குறித்து மக்கள் மிகவுமாக ஆராய்கிறார்கள், மிகவும் கடினமாகச் சிந்திக்கிறார்கள், மிகவும் முன்னே செல்ல பிரயாசப்படுகின்றனர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் சில சமயங்களில் அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகின்றது. நீங்கள் அதை விட்டு விடவேண்டும்! நீங்கள் அதைச் செய்யத் தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம் அவரில் அன்புகூர்ந்து, அப்படியே அவரை நேசித்து சென்று கொண்டே இருக்க வேண்டும். அது சரி. அது உங்களைத் தானே எதற்குள்ளாகவோ தள்ளிக் கொண்டோ, நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை ஆக்கிக் கொள்ளவோ அல்ல, முன்னே சென்று தேவன் உனனை எப்படி பயன்படுத்த விரும்புகிறாரோ அவ்வாறே உங்களை விட வேண்டும். உங்களைத் தாமே நீங்கள் ஒப்புக் கொடுத்து, கீழ்ப்படிந்து, சந்தோஷமாக, பாடி துதித்து சென்று கொண்டேயிருங்கள். அதுதான் வழியாகும்.
141. வேதம் “தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கேதுவாக நடைபெறும்” என்று கூறுகிறது. ஆகவே நீங்கள் அவரில் அன்பு கூர்வதில் நிச்சயமுள்ளவர்களாய் இருங்கள். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அது ஒன்று மாத்திரமே. ஆமென்! அவரில் மாத்திரம் அன்பு கூர்ந்து நடந்து செல்லுங்கள். “கர்த்தாவே நான் உம்மை நேசிக்கிறேன், நான் உம்மை நேசிப்பதை நீர் அறிவீர்” என்று கூறுங்கள்.
“நீங்கள் இதை நேசிக்கிறீர்களா?”
“இல்லை, ஐயா, கர்த்தாவே நான் உம்மை, நேசிக்கிறேன்” பாருங்கள்?
142. “நல்லது, நீ... நீ ஒரு மகத்தான பிரசங்கியாக ஆக விரும்புகிறீரா? நீங்கள் இதைப் போன்று ஆக விரும்புகிறீரா?” என்று கூறும்போது.
143. “இல்லை, இப்பொழுது கர்த்தாவே, என்ன... அப்படி நான் இருக்க வேண்டும் என்று நீர் விரும்புவீரானால், அப்படியே ஆகட்டும். நீர் அப்படி. விரும்பவில்லையென்றால், ஆமென், நான் இங்கே சபையின் மிதியடியாகவே சரியாக இருப்பேன்.”
144. “நல்லது, இப்பொழுது இதைக் குறித்து நீர் ஏதாவது ஒன்றைச் செய்வீரானால் மக்களும் உமது சபையைக் குறித்து அதிகமாக நினைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”
145. “மக்கள் என்ன நினைத்தாலும் எனக்குக் கவலை இல்லை, கர்த்தாவே, நீர் என்ன நினைக்கின்றீர் என்பதையே நான் அறிய விரும்புகிறேன். நான் - நான் உம்மோடே இருப்பேன், நீர் என்னிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகின்றீரோ அதைச் செய்வேன், நான் எல்லாவற்றையும் நேசிப்பேன். நிச்சயமாக.”
“நல்லது, இப்பொழுது சகோதரி இன்னார் இன்னாரை அறிவீரா, நீர் அவளை நேசிப்பதில்லை.”
“ஆம், நான் நேசிக்கிறேன் கர்த்தாவே, ஆம் நிச்சயமாக அவளை நான் நேசிக்கிறேன்.”
“ஏன்?”
146. “ஏனென்றால் நீர் அவளை நேசிக்கிறீர், நீர் என்னுள்ளும் இருக்கிறீர். ஆகையால் நான் அவளை நேசித்துதான் ஆக வேண்டும், ஏனெனில் நீர் எனக்குள் இருந்து அவளை நேசிக்கின்றீர்” வ்யூ. அதுதான்.
147. நான் நினைக்கிறேன், அந்த மிருகங்கள் அங்கே... விழுந்த அந்த மிருகம், பாருங்கள்.