161. அது ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும்... பாருங்கள், இப்பொழுது நீங்கள் நம்முடைய விசுவாசம், கிருபை, விசுவாசிகளின் பாதுகாப்பு, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி - அதாவது பரிசுத்தவான்கள் காக்கப்படுதல் போன்றவைகளில் இங்கு கவனம் செலுத்த வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். எபிரேயர் 6ம் அதிகாரம், 4 முதல் 6 வசனங்கள்.
இதை நான் முடித்தவுடனே, உங்களுக்கு இதை தெளிவுபடுத்தித் தர தேவன் எனக்குதவி செய்வாரென நம்புகிறேன். மன்னிக்கவும். இன்றிரவு நான் செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். அதையே நான் நாளை காலை ஆராதனையிலும் பிரசங்கிக்கலாமென்றிருக்கிறேன். பிறகு நான் இங்கிருந்து செல்வேன்.
162. இது மிகவும் கடினமான கேள்வி. பாருங்கள்? நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சத்தமிடும் அனைத்துமே அந்நிய பாஷை பேசும் அனைத்துமே, போதகரிடம் கைகுலுக்கும் அனைத்துமே நித்திய ஜீவனைப் பெற்றிருக்கவில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம், அதை நாங்கள் இந்த சபையில் போதிக்கிறோம் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், தேவன் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருப்பாரானால், அதை நீங்கள் என்றென்றைக்கும் பெற்றிருக்கிறீர்கள் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பாருங்கள்? ஏனெனில் கவனியுங்கள். அப்படி இல்லையென்றால், இயேசு ஒரு கள்ளப் போதகராகி விடுவார். பரி.யோவான் 5:24ல் அவர், "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான்'' என்று கூறியிருக்கிறார். அவரோடு தர்க்கம் செய்யுங்கள். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்... பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான். (நான் வேதவாக்கியங்களை எடுத்துரைக்கிறேன்). பிதா ஒருவனை முதலில் இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் (பாருங்கள்?). என்னிடத்தில் வருகிறவனுக்கு நான் நித்திய ஜீவனைத் தருவேன். (பரி.யோவான் 6); கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்.'' இது அவருடைய வார்த்தைகள்.
163. இப்பொழுது கவனியுங்கள். நான் எபேசியர் 1ம் அதிகாரத்துக்குச் செல்ல விரும்புகிறேன். பவுல் பிரசங்கிக்கிறான்... கொரிந்தியர்கள், அவர்கள் ஒவ்வொருவரும் அந்நிய பாஷையையும் பாடலையும் பெற்றிருந்தனர். மற்ற சபைகளில் இந்த தொல்லை இல்லை என்பதை கவனியுங்கள். பவுல் மற்ற சபைகளில் அதைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவன் ரோம சபையிலோ அல்லது எபேசு சபையிலோ அந்நிய பாஷையைக் குறித்து ஏதாவது கூறியுள்ளானா? இல்லை. இல்லை, அவர்களுக்கும் கொரிந்தியரைப் போல் அந்நிய பாஷை பேசுதலும் மற்ற வரங்களும் இருந்தன. ஆனால் அவர்கள் அதை ஒழுங்குப்படுத்தியிருந்தனர். ஆனால் கொரிந்தியர்களோ அதை ஒழுங்குபடுத்தவில்லை. பாருங்கள்? பவுல் அங்கு சென்று சபையை ஒழுங்குபடுத்தினான்.
அவன்... ஓரல் ராபர்ட்ஸ் கூறுவது போல் “தேவன் நல்ல தேவன்'' என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா?
164. நீங்கள், "சகோ.பிரன்ஹாமே, அந்நிய பாஷை பேசும் பெந்தெகொஸ்தேயினரைக் குறித்தென்ன?'' என்று கேட்கலாம். அவர்களுக்கு பரிசுத்த ஆவி உண்டென்று நினைக்கிறேன். நிச்சயமாக. சரி. ஏன்? கவனியுங்கள். அவர் நல்ல தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஒரு முறை தோமா, "உங்களுக்குத் தெரியுமா, ஆண்டவர்...'' என்றான்.
மற்றவர் அனைவரும் அவரை விசுவாசித்து, "ஓ, அவர் நிச்சயமாக உயிரோடெழுந்து விட்டார்'' என்றனர்.
தோமாவோ, "ஓ, இல்லை, இல்லை, நான் விசுவாசிக்கமாட்டேன். அதை நான் விசுவாசிக்க கூடிய ஒரே வழி, அதற்கான அத்தாட்சி எனக்கு இருக்க வேண்டும். அவருடைய விலாவிலும், அவருடைய கைகளில் ஆணிகள் கடாவப்பட்டதனால் உண்டான காயங்களிலும் என் விரல்களை நான் போட வேண்டும்'' என்றான்.
அவர் நல்ல தேவன் அவர், ''தோமாவே, அருகில் வந்து அப்படியே செய்” என்றார்.
தோமா, "ஓ, இப்பொழுது நான் விசுவாசிக்கிறேன்” என்றான்.
165. அவர், ''ஆம், தோமாவே, நீ என்னைக் கண்ட பிறகு, என்னை உன் கைகளினால் தொட்ட பிறகு, உன் கைகளை என் விலாவில் போட்ட பிறகு விசுவாசித்தாய். ஆனால் காணாதிருந்தும் என்னை விசுவாசிக்கிறவர்களுக்கு எவ்வளவு மிகுதியான பலன் உண்டாயிருக்கும்” என்றார். அவர் நல்ல தேவன். அவர் உங்கள் இருதயத்தின் விருப்பங்களை அருளுகிறார், நிச்சயமாக. அவரை நாம் விசுவாசிப்போம். அது சாத்தானுக்கு மரண அடியாக இருக்கிறது. சகோதரனே, ஒரு மனிதன் தேவனை அவருடைய வார்த்தையின் மூலம் ஏற்றுக் கொள்ளும் போது, அது ஒவ்வொரு முறையும் சாத்தானைக் கொன்றுவிடும். அதுவே சாத்தானுக்குக் கிடைக்கப் பெறும் மிகவும் கடினமான அடியாக இருக்கும். ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளும்போது, நான் அன்றிரவு கூறினபடி, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்''.
166. இப்பொழுது இதை கவனியுங்கள். நான் இப்பொழுது முதலாம் வசனத்திலிருந்து - படிக்கப் போகின்றேன்.
ஆகையால் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு விட்டு... பூரணராகும்படி கடந்து போவோமாக... (நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிற முதலாவது காரியம் என்னவெனில்; இதை பவுல் யாரிடம் கூறுகிறான்? எபிரெயரிடம். எபிரெயர்களுக்கு கற்பிக்கப்பட்டதுதான் எபிரெயர் நிருபம். அது சரியா? இயேசுவைப் புறக்கணித்த யூதர்கள்... உங்களால் இப்பொழுது கிரகித்துக் கொள்ள முடிகிறதா? அவன் யூதர்களுக்கு இதை கூறுகிறான். நியாயப் பிரமாணம் கிறிஸ்துவுக்கு நிழலாகவும் முன்னடையாளமாகவும் இருக்கிறதென்று அவன் காண்பிக்கிறான். பழையவை அனைத்துமே புதியவைகளுக்கு முன்னடையாளம். இப்பொழுது கவனியுங்கள்.... கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு விட்டு... பூரணராகும்படி கடந்து போவோமாக.
167. அவன் அவர்களிடம் உபதேசங்களை குறித்துப் பேசி வந்திருக்கிறான். இப்பொழுது நாம் பூரணமான காரியங்களைக் குறித்து பேசுவோம். நீங்கள் மீட்கப்படும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படும்போது, நீங்கள் தேவனில் பரிபூரணமடைகின்றீர்கள். "தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது'' (1 யோவான் 3:9).
168. பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ள எவனும்; அதாவது தேவனுடைய ஆவியினால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான். ஏனெனில் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவனால் பாவம் செய்ய முடியாது. பாருங்கள்? வேதம் அவ்வாறு கூறுகின்றதா? எனவே அது அங்குள்ளது. நீங்கள்... நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றல்ல; உலகம் உங்களை குறித்து என்ன நினைக்கிறது என்றல்ல, தேவன் உங்களைக் குறித்து என்ன நினைக்கிறார் என்பதே முக்கியம் வாய்ந்தது. பாருங்கள், பாருங்கள்? நீங்கள்... இந்நகரத்தின் தலைவர், நான் மணிக்கு நாற்பது மைல் வேகம் செல்லலாம் என்னும் உத்தரவு பிறப்பித்திருக்கும் போது, எப்படி எந்த ஒரு காவல்துறைகாரனும் என்னை சிறைப்படுத்த முடியும்? முடியவே முடியாது. அதுபோன்று, தேவனுக்கு முன்பாக எப்பொழுதுமே இரத்தம் தோய்ந்த பலி இருந்து அவர் என்னை காணவும் முடியாதபடிக்கு அது எனக்கும் தேவனுக்குமிடையே ஒரு மறைவாக இருக்கும் போது, நான் எப்படி பாவம் செய்ய முடியும்? நாம் மரித்தோம், நம்முடைய ஜீவன் தேவன் மூலமாய் கிறிஸ்துவுக்குள் மறைந்து பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, நீங்கள் எப்படி தேவனுடைய பார்வையில் தவறு செய்பவர்களாவீர்கள். "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு, நாம் மனப்பூர்வமாய் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியில்லை'' (எபி.10:26). ஆனால் இங்கு மனப்பூர்வமாய் பாவஞ் செய்வது கூடாத காரியம் (பாருங்கள்?)
169. இப்பொழுது நாம் தொடர்ந்து படிப்போம்.
...மூல உபதேச வசனங்களை நாம் விட்டு விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்,
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத் தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம்.
(அவர்கள் நாலாம் வசனத்திலிருந்து தொடங்க விரும்புகிறார்கள்)
ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும். தேவனுடைய நல்வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்
மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.
170. இதை நீங்கள் இங்கு படிக்கும்போது, ஒரு மனிதன் பரிசுத்த ஆவியைப் பெற்ற பின்பு பின்வாங்கிப் போய் இழந்து போக முடியும் என்பது போல் உங்களுக்குத் தென்படக்கூடும். ஆனால் அவன் அப்படி செய்வது கூடாத காரியம். பாருங்கள்? அவனால் அப்படி செய்ய முடியாது. அவன் அப்படி செய்தால், கிறிஸ்து பொய்யராகி விடுவார். பாருங்கள்? ஒரு தரம் பிரகாசிக்கப்படுகிறவர்கள். இங்கு கவனியுங்கள். அவன் யாரிடம் இதை கூறுகிறான்? அவன் எல்லைக்கோடு யூதர்களுக்கு இதைக் கூறுகிறான். பரிசுத்த ஆவியினால் நிறைந்த மனிதன் என்று அவன் கூறவில்லை. அவன், ''தேவனுடைய நல்வார்த்தையை ருசி பார்த்தவன்" என்று கூறுகிறான்.
171. இதை நீங்கள் புரிந்துகொண்டு இதைக் காணத் தவறாதிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உவமையாக இதைக் கூற விரும்புகிறேன். அவன் இதை யூதர்களுக்கு எழுதுகிறான். அவர்களில் சிலர் எல்லைக்கோடு விசுவாசிகள். பாருங்கள்? அவன், ''நாங்கள் இந்த கிரியைகளைக் குறித்து பேசுவதை விட்டு விட்டு, பூரணத்தைக் குறித்து பேசப் போகிறோம்” என்கிறான். அவன், "இப்பொழுது நாங்கள் ஞானஸ்நானம், மரித்தோரின் உயிர்த்தெழுதல், கைகளை வைக்குதல், இன்னும் மற்றவைகளைக் குறித்து பேசி வருகிறோம். ஆனால் இவைகளைக் குறித்து பேசுவதை நாம் விட்டு விட்டு பூரணத்தைக் குறித்து பேசுவோம். நீங்கள் பரிசுத்த ஆவிக்குள் வரவேண்டியதைக் குறித்து நாங்கள் இப்பொழுது பேசப் போகின்றோம். நீங்கள் இந்த கூட்டத்துக்கு நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கிறீர்கள்'' என்கிறான்.
172. அப்படிப்பட்ட ஜனங்களை நீங்கள் கண்டிருக்கிறீர்கள். அவர்கள் சுற்றி சுற்றி இங்கேயே இருப்பார்கள். அவர்கள் உள்ளேயும் வரமாட்டார்கள், வெளியேயும் செல்ல மாட்டார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியைப் பாராட்டுவார்கள். அவர்கள் வந்து கொண்டிருப்பார்கள். ஒருக்கால் பரிசுத்த ஆவி அவர்களுக்கு ஏதாவதொன்றை செய்யும். அவர்கள் எழுந்து, கூச்சலிட்டு. தரையில் மேலும் கீழும் குதிப்பார்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்ள அவர்களுக்கு மனமிராது. இல்லை, இல்லை! பாருங்கள்? அவர்கள், "ஓ, ஆமாம், அது நல்லது. ஆனால் அதைக் குறித்து இப்பொழுது அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை'' என்று சொல்லி விடுவார்கள். பாருங்கள், பாருங்கள், பாருங்கள்? எல்லைக்கோடு விசுவாசிகள். அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் அருகாமையில் உள்ளனர். ஆயினும் அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள மாட்டார்கள். பாருங்கள்? அவர்கள் இந்நிலையிலே நீண்ட காலம் இருந்து, பிறகு முழுவதுமாக அகன்று சென்று விடுகின்றனர். இக்கூடாரத்தில் அப்படி செய்தவர் அநேகரின் பெயர்களை நான் கூற முடியும். விழுந்து போன அப்படிப்பட்டவர்களை, மனந்திரும்புதற்கேதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். அவர்களுக்கு இனி மனந்திரும்புதலே இருக்க முடியாது. ஏனெனில் பரிசுத்த ஆவி அவர்களை விட்டுச் செல்லும் அளவுக்கு அவரைத் துக்கப்படுத்தி விட்டார்கள். அவர்கள் மிக அருகாமையில் வந்தனர். ஆனால்...
173. நீங்கள் என்னுடன் கூட வேதாகமத்தை திருப்புவீர்களானால் (உங்களுக்கு நேரமில்லையென்று எனக்குத் தெரியும்). ஆனால் நீங்கள் வேதாகமத்தை உபாகமம் 1ம் அதிகாரத்துக்கு திரும்பி அதை படித்தால், அதே காரியம் அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள். உபாகமம் 1ம் அதிகாரம், 19ம் வசனம் தொடங்கி 26ம் வசனம் வரைக்கும் படியுங்கள். உபாகமம்... நீங்கள் காணலாம்... இப்பொழுது பாருங்கள். இஸ்ரவேலர் அனைவரும்... அவர்கள் என்ன செய்தார்கள், அவர்கள் காதேஸ் பர்னேயாவுக்கு வந்தார்கள். ஓ, நான் ஒன்றைக் காண்கிறேன்! இந்த கூடாரம், இந்த பெந்தெகொஸ்தே உலகம் இப்பொழுது காதேஸ் பர்னேயாவில் உள்ளது. சகோ.நெவில், அது முற்றிலும் உண்மை. நாம் காதேஸ்பர்னேயாவில் - உலகத்தின் நியாயத்தீர்ப்பு ஆசனத்தில் - இருக்கிறோம். (அது நியாயத் தீர்ப்பு ஆசனமாக இருந்தது.)
174. வேவுகாரர்கள் புறப்பட்டு சென்றனர். யோசுவா, "நான் வேவுகாரர்களை அனுப்பினேன்...'' யோசுவா இல்லை, மோசே, "நான் பன்னிரண்டு வேவுகாரர்களை, ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரை, தெரிந்தெடுத்து அனுப்பினேன். அவர்கள் தேசத்தை வேவு பார்த்து அங்கிருந்து ஒரு அறிக்கையை கொண்டு வர, அவர்களை அனுப்பினேன்” என்றான். அது சரியா?
அவர்கள் திரும்பி வந்த போது, அந்த பன்னிருவரில் ஒன்பது பேர், "ஓ, அது நல்ல தேசம் தான். ஆனால், ஓ, இரக்கம், நாம் அதைக் கைப்பற்ற முடியாது. ஓ, என்னே! எமோரியர் அங்கே இருக்கின்றனர். அவர்கள் அருகில் நாங்கள் வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறோம். அவர்கள் ஆயுதம் தாங்கியவர்கள். அவர்கள் மதில் சுவர்கள் மிகவும் பெரியது. ஓ, நீர் எங்களை இங்கு கொண்டு வந்ததைக் காட்டிலும் நாங்கள் எகிப்திலேயே மரித்திருந்தால் நலமாயிருக்கும்'' என்றனர்.
175. ஆனால் காலேபும் யோசுவாவும் அங்கு குதித்து அவர்களை அமைதிபடுத்தினர். அவர்கள், ''நாம் எளிதில் அதைக் கைப்பற்றி விடலாம்” என்றனர். ஆம், ஐயா! இப்பொழுது பாருங்கள், என்ன நடந்தது? தேவன் அதை வாக்கருளினார் என்று காலேபும் யோசுவாவும் அறிந்திருந்தனர். "அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும், தடைகள் எவ்வளவாக இருந்தபோதிலும், அவை எவ்வளவு உயரமாயிருந்தாலும், அவை எவ்வளவு பெரிதாயிருந்தாலும், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேவன் கூறியுள்ளார், எனவே அதை நாம் கைப்பற்றி விடுவோம்'' என்றனர். அந்த இருபத்தைந்து லட்சம் பேர்களில் இவ்விருவர் மாத்திரமே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து சென்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இவர்கள் மாத்திரமே தேவன் கூறினது உண்மை என்று விசுவாசம் கொண்டிருந்தனர். ஆமென்.
176. இப்பொழுது கூடாரம் காதேஸ்பர்னேயாவில் நின்று கொண்டிருக்கிறது. பாருங்கள். அந்த ஜனங்கள் அவ்வளவு அருகாமையில் வந்து, அந்த தேசத்திலிருந்து கொண்டு வந்த திராட்சை பழங்களையும் ருசி பார்த்தனர். அவர்கள் அந்த திராட்சை பழங்களைத் தின்றனர். காலேபும் மற்றவர்களும் அங்கு சென்று திராட்சை குலையைக் கொண்டு வந்த போது இவர்கள் அந்த குலையிலிருந்து சில பழங்களை பிய்த்து தின்று, ''ஓ, அவை ருசி மிகுந்தவை, ஆனால் நம்மால் முடியாது'' என்றனர். அவர்கள் தேவனுடைய நல்வார்த்தைகளை ருசி பார்த்தனர், அவர்கள் பரிசுத்த ஆவியை ருசி பார்த்து அதன் நன்மையைக் கண்டிருந்தனர், அதை ருசி பார்த்திருந்தனர், அவர்கள் தேவனுடைய வார்த்தையை ருசிபார்த்தனர்...'' பார்த்தீர்களா? இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த தேசத்திலேயே, வனாந்தரத்திலே அழிந்து போயினர். அவர்கள் கடந்து உள்ளே பிரவேசிக்கவில்லை. இருப்பினும் அதை ருசிபார்க்கும் அளவுக்கு அவர்கள் போதிய அருகாமையில் வந்தனர். ஆனால் அதை சுதந்தரித்துக் கொள்ள அவர்களுக்கு போதிய கிருபையும் விசுவாசமும் இருக்கவில்லை. அதுதான் அது.
177. இப்பொழுது இந்த கடிதம் எழுதின இந்த அருமையான நபர் என்ன சொல்லுகிறார் என்று கேளுங்கள். நாம் அடுத்த வசனத்தை படிப்போம். ஒரு நிமிடம் கவனியுங்கள். பவுலைக் கவனியுங்கள். இப்பொழுதும் நாம் 7ம் வசனத்தைப் படிப்போம்.
எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுவதற்கேற்றதாயும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு.
178. அவன் என்ன சொல்லுகிறான் என்று பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். இந்த கேள்வி இங்கு கேட்கப்பட்டது. அதன் பிறகு நாம் முடித்து விடுவோம்... இது என்னை அநேக ஆண்டுகளாக தொந்தரவு செய்து வந்தது.
179. ஒரு முறை நான் இந்தியானாவிலுள்ள மிஷாகாவா என்னுமிடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஜனங்கள் அந்நிய பாஷை பேசிக் கொண்டிருந்தனர். நான் இப்பொழுது என் கூட்டத்தினரின் முன்னிலையில் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கை வரலாற்றையும், அந்த கறுப்பு மனிதன், "இதோ அவர், இதோ அவர்” என்று கூறினதையும் நான் கூறக் கேட்டிருக்கிறீர்கள். அதை நான் உங்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
180. அதன் மற்ற பாகம்; நான் இரண்டு மனிதர்களை அங்கு கண்டேன். அவர்கள். ஒருவர் அந்நிய பாஷையில் செய்தி கொடுப்பார், மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். சகோதரனே, அவர்கள் பிழையின்றி உரைத்தனர். அப்பொழுது நான், ''என்ன ஆச்சரியம்! இப்படிப்பட்ட ஒன்றை நான் இதுவரை கண்டதில்லை. நான் தேவதூதர்களின் மத்தியில் இருக்கிறேன்'' என்று எண்ணினேன்... ஒருவர் அந்நிய பாஷை பேசுவார், மற்றவர்...
181. அங்கு வயோதிப் பிரசங்கி ஒருவருடன் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)... இருவரும் சில நேரத்தில் கைகுலுக்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ஒன்றை நான் என் வாழ்க்கையில் கண்டதேயில்லை. ஒருவர் அந்நிய பாஷையில் ஒரு செய்தி கொடுப்பார். மற்றவர் அதற்கு அர்த்தம் உரைப்பார். என்னே, என்னே! அது மிகவும் அற்புதமானது! ஒருவர் பேசி மற்றவர் அர்த்தம் உரைத்தல் என்பது. இருவரும்... அவர்கள் தங்கள் கைகளை உயர்த்தும் போது, அவர்கள் முகம் சுண்ணாம்பு போன்று வெளுத்துவிடும். "ஓ, என்னே, என்னே, என் வாழ்க்கை பூராவும் நான் எங்கிருந்தேன். இது தான் அது. என் பெந்தெகொஸ்தே சகோதரர்கள் செய்வதுதான் சரி” என்று எண்ணினேன். அது முற்றிலும் உண்மை.
182. அதுவரை நான் எதையுமே அதிகமாக கண்டதில்லை. இங்கு சுற்றிலும் நடப்பதைத் தவிர, ஒரு சில ஸ்திரீகள் எங்காவது சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டிருப்பார்கள்... அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒருத்தி மற்றவளை "சண்டைக் கோழியே'' என்று திட்டுவாள். அப்படி ஏதாவதொன்று, இப்படியாக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வார்கள். ஸ்திரீகளை நான் அவமதிப்பதாக கருத வேண்டாம். ஆனால்... அது மிகவும் தாழ்வான நிலையில் இருந்தது. உங்களில் யாராவது... சகோ. கிரகாம், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? நீங்கள் அப்பொழுது சிறு பையனாக இருந்தீர்கள். அப்படித்தான் அது நடந்து கொண்டிருந்தது.
இந்த சகோதரர் பேசுவதை நான் கேட்டபோது, ''ஓ, என்னே! நான் தேவதூதர்களை சந்தித்து விட்டேன்!'' என்று எண்ணினேன்.
183. இரண்டாம் நாள் நான் வீட்டில் மூலையைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. நான், ''ஐயா, எப்படியிருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.
அவரும், "எப்படியிருக்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்டு விட்டு, 'உங்கள் பெயர் என்ன?'' என்றார்.
நான், 'பிரன்ஹாம்” என்று விடையளித்தேன்.
அவர், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இந்த இடத்தை சேர்ந்தவரா?'' என்று கேட்டார்.
நான், இல்லை, ஜெபர்ஸன்வில்லிருந்து வருகிறேன்'' என்றேன்.
அவர், ''ஓ, நல்லது நீங்கள் பெந்தெகொஸ்தேயினரா?” என்றார்.
நான், "இல்லை, ஐயா. நான் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்தவன் அல்ல. பரிசுத்த ஆவியைப் பெற பெந்தெகொஸ்தேயினர் பின்பற்றும் வழி முறைகளை நான் அங்கீகரிப்பதில்லை. இருப்பினும் நான் கற்றுக் கொள்ள இங்கு வந்திருக்கிறேன்'' என்றேன்.
184. அவர், "ஓ, அது மிகவும் நல்லது” என்றார். அவரிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய ஆவியை என்னால் பகுத்தறிய முடிந்தது. (கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயைப் போல்). அவர் மிகவும் நல்ல ஒரு கிறிஸ்தவர். சகோதரனே, அவர் சரியானவராகத் தென்பட்டார். அவர் நல்லவர். நீங்கள் எல்லோரும்... உங்களில் எத்தனை பேர் என் கூட்டங்களில் ஆவியைப் பகுத்தறிதலின் வரம் கிரியை செய்வதைக் கண்டிருக்கிறீர்கள்? பார்த்தீர்களா? அந்த மனிதன் எல்லா விதத்திலும் சரியானவராக இருந்தார். எனவே நான், ''என்னே , அது எவ்வளவு அற்புதம்!'' என்று எண்ணினேன்.
185. அன்று மாலை, எப்பொழுதோ பிற்பகலில் அந்த மற்ற மனிதரை நான் சந்தித்தேன். நான், "ஐயா, எப்படியிருக்கிறீர்கள்?” என்றேன்.
அவரும், "எப்படியிருக்கிறீர்கள்? உங்கள் பெயரென்ன?'' என்று கேட்டார்,
நான் என் பெயரைக் கூறினேன்.
அவர், ''நீங்கள் பெந்தெகொஸ்தேயினரா?'' என்று வினவினார்.
நான், ''இல்லை, ஐயா நான் பெந்தெகொஸ்தேயினன் அல்லவென்று நினைக்கிறேன். நான் கற்றுக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறேன்" என்றேன்.
அவர், "நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.
நான், “எனக்குத் தெரியாது. நீங்கள் எல்லோரும் அதை பெற்றுக் கொண்டுள்ள விதமாக, நான் பெற்றிருக்கவில்லை என்று எண்ணுகிறேன்” என்றேன்.
அவர், "நீங்கள் எப்பொழுதாவது அந்நிய பாஷை பேசியிருக்கிறீர்களா?" என்றார்.
நான் ''இல்லை, ஐயா!" என்றேன்.
அவர், "அப்படியானால், நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள வில்லை" என்றார்.
186. நான், “ஒருக்கால் நீங்கள் கூறுவது சரியாயிருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நான் இரண்டு ஆண்டுகளாக - அதற்கும் சற்று குறைவாக- பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். எனக்கு அதைக் குறித்து அதிகம் தெரியாது. ஒருக்கால் எனக்குத் தெரியாமலிருக்கலாம். எனக்குப் புரியவில்லை..." என்று பேசிக் கொண்டே சென்றேன். ஏன் தெரியுமா? அவருடைய ஆவியை பகுத்தறிய நான் அவரைப் பிடித்து வைக்க வேண்டியதாயிற்று. நான் பகுத்தறிந்த போது, நான் எப்பொழுதாகிலும் ஒரு மாய்மாலக்காரனை சந்தித்திருந்தால், இவர் அவர்களில் ஒருவர். அவருடைய மனைவி கருமை நிறத் தலைமயிர் கொண்டவள். ஆனால் இவரோ பழுப்பு நிறத் தலைமயிர் கொண்ட ஒருத்தியுடன் வாழ்ந்து வந்து அவள் மூலம் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. ஆனால் அந்நிய பாஷை பேசுதல், அர்த்தம் உரைத்தல் போன்றவைகளில் அவர் பிழையற்றவராக இருந்தார். நான் 'ஆண்டவரே. நான் எதற்குள் பிரவேசித்துவிட்டேன்?" என்றேன். தேவதூதர்களிடமிருந்து. எதற்குள் எனக்குத் தெரியவில்லை. நான், "நான் அடிப்படை கொள்கையினன். வேதாகமமே. சரியாயிருக்க வேண்டும். எங்கோ தவறுள்ளது. ஆண்டவரே. இது எப்படி முடியும்?" என்றேன்.
187. அன்றிரவு நான் கூட்டத்துக்கு சென்றிருந்தேன். அந்த ஆவி அங்கு விழுந்தது. சகோதரனே, உங்களால் அதை உணர முடியும். அது பரிசுத்த ஆவி. ஆம், ஐயா! இல்லையென்றால், அது பரிசுத்த ஆவியென்று என்னுடைய ஆவியிடம் அது சாட்சிகொடுத்திருக்க முடியாது. நான் அப்பொழுது ஒரு வாலிபப் பிரசங்கி. அப்பொழுது ஆவியைப் பகுத்தறிதலைக் குறித்து நான் அவ்வளவு அதிகமாக அறிந்திருக்கவில்லை. என்னை இரட்சித்த அதே தேவன் அதே உணர்ச்சியை எனக்குத் தந்தருளினார் என்று அறிந்திருந்தேன். நான் கூரையை அடைந்து விட்டது போன்ற ஒரு உணர்ச்சி. அந்த கட்டிடத்தில் எனக்கு அவ்வளவு அருமையான உணர்ச்சி ஏற்பட்டது. நான் நினைத்தேன்.
188. அங்கு ஏறக்குறைய 1500 பேர் கூடியிருந்தனர். நான், "ஓ, எவ்வளவு அருமையானது!'' என்று நினைத்தேன். இரண்டு மூன்று குழுக்கள் அங்கு ஒன்று கூடியிருந்தன. நான், 'இது என்ன! இது எப்படி முடியும்? அந்த மகத்தான ஆவி இந்த கட்டிடத்தில் விழுகிறது; அங்கு கடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால், அந்த ஆட்கள் அந்நிய பாஷை பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து, பிழையின்றி செய்தி கொடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களில் ஒருவர் மாய்மாலக்காரர், மற்றவர் உண்மையான தேவனுடைய மனிதன், எனக்கு ஒரே குழப்பமாயுள்ளது. என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை'' என்று எண்ணினேன்.
189. அதன்பிறகு உடனடியாக, என் அருமை நண்பர் ஒருவர், சகோ. டேவிஸ் (உங்களுக்குத் தெரியும்), என்னை பொம்மை என்று அழைக்க ஆரம்பித்தார். அது சிறுமிகளின் விளையாட்டுப் பொருள் என்று உங்களுக்குத் தெரியும். எனவே... எனக்கு அப்பொழுது விவாகமாகவில்லை, நான் தனியாயிருந்தேன். எனவே நான்... அவர் என்னுடன் கூட வர ஆரம்பித்தார். அவர் ஒருவாறு என்னை முன் தள்ளிக்கொண்டே சென்றார்.
190. எங்களுக்குச் சிறு... உங்கள் தாயும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். அப்பொழுது இந்த கூடாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. நாங்கள் வெவ்வேறு இடங்களில் சிறு கூட்டங்கள் நடத்தி வந்தோம். முடிவில் அநேக ஆண்டுகள் கழித்து ஒருநாள், இந்த கூடாரம் கட்டி முடிந்த பின்பு, நான் ஜெபம் செய்வதற்காக கிரீன்மில் என்னுமிடத்திலுள்ள என் குகைக்கு சென்றேன். ஏனெனில் சகோ. டேவிஸ் என்னைக் குறித்து பயங்கரமான காரியங்களை தமது பத்திரிக்கையில் எழுதி வந்தார். நான் அவரை நேசித்தேன். ஒன்றும் நேரிடக்கூடாதென்று நான் விரும்பி, அவருக்காக ஜெபிப்பதற்காக நான் அங்கு சென்று குகைக்குள் பிரவேசித்தேன். அங்கு இரண்டு நாட்கள் தங்கினேன். நான், "ஆண்டவரே, அவரை மன்னியும். அவர் அதை வேண்டுமென்று செய்யவில்லை'' என்று முறையிட்டேன். அப்பொழுது ஒரு வேதவாக்கியம் என் ஞாபகத்துக்கு வந்தது.
191. நான் வெளியே சென்றேன். அங்கு ஒரு மரக்கட்டை இருந்தது. அந்த மரக்கட்டை இப்பொழுதும் அங்குள்ளது. அண்மையில் அதன் மேல் நான் உட்கார்ந்தேன். அது மலையின் கீழே, ஓடையிலிருந்து வரும் ஒரு சிறு பாதையில் உள்ளது. நான் அந்த மரக்கட்டைக்கு இரு புறமும் என் கால்களை போட்டு உட்கார்ந்து கொண்டு, தூரத்திலுள்ள மலையைப் பார்த்துக் கொண்டே, என் வேதாகமத்தை மரக்கட்டையின் மேல் இப்படி வைத்தேன். நான், 'உனக்குத் தெரியுமா...'' என்று கூறி ஒரு வேதவாக்கியத்தை-அதாவது, "கன்னான் எனக்கு வெகு தீமை செய்தான்'' என்னும் ஒரு வேதவாக்கியத்தை (2 தீமோ. 4:14). ஞாபகப்படுத்திக் கொண்டு, அதை படிக்கலாமே என்று நினைத்து வேதாகமத்தை திறந்தேன். என் முகத்தை நான் துடைத்தேன். அப்பொழுது காற்று அடித்து வேதாகமத்தை எபிரேயர் 6-ம் அதிகாரத்துக்கு திருப்பியது.
"அந்த வேதவசனம் அங்கில்லை'' என்று சொல்லி வேதாகமத்தை திரும்பவும் மரக்கட்டையின் மேல் வைத்தேன். அப்பொழுது காற்று மறுபடியும் அடித்து அதை மறுபடியும் எபிரேயர் 6-க்கு திருப்பினது. “இது விசித்திரமாயுள்ளதே” என்று நினைத்து “சரி, அதை படிக்கலாம்” என்று படித்தேன். அது இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
ஏனெனில் ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல் வார்த்தையும், இனிவரும் பெலன்களையும் ருசி பார்த்தும் மறுதலித்துப் போனவர்கள்
"அதில் ஒன்றையும் நான் காணவில்லையே' என்று நினைத்து அந்த அதிகாரம் முழுவதையும் படித்தேன். அதில் ஒன்றுமில்லை. நான் “அவ்வளவுதான்” என்று சொல்லி இப்படி வேதாகமத்தை வைத்தபோது, மறுபடியுமாக காற்று அதே அதிகாரத்துக்கு திருப்பினது. நான் வேதாகமத்தை கையிலெடுத்து, "இது என்ன?” என்று வியந்து அதை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் படித்தேன். எனக்கு புரியவில்லை... பிறகு நான் கீழே படித்துக் கொண்டு சென்றபோது, இந்த வசனத்தை அடைந்தேன்.
எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
192. "அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லையே'' என்று வியந்தேன். நான் அப்பொழுது எதைக் குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்க வில்லை... நான் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது, கர்த்தர் சகோ. டேவிஸைக் குறித்தும் மற்றவர்களைக் குறித்தும் எனக்கு ஒரு தரிசனத்தைக் கொடுப்பார் என்று நினைத்தேன். நான் இங்கு உட்கார்ந்து கொண்டு பார்த்தபோது, எனக்கு முன்னால் இருந்த குழியில் ஏதோ ஒன்று சுழலுவதைக் கண்டேன். அது உலகம்; அது சுழன்று கொண்டிருந்தது. அது முழுவதுமாக உழுதிருந்ததைக் கண்டேன். அப்பொழுது விதைகள் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்ட ஒரு மனிதன் புறப்பட்டு சென்றார். அவர் சென்றபோது, பூமி முழுவதும் விதை விதைத்துக் கொண்டே சென்றார், அவர் பூமியின் வளைவை சுற்றிச் சென்று என் கண்களுக்கு மறைந்து போனார். அவர் என் கண்களுக்கு மறைந்து போனவுடனே, இழிவான தோற்றமுடைய ஒரு மனிதன், கறுப்பு உடைகளை அணிந்து, இப்படி சுற்றிச் சுற்றிச் சென்று (அதை விவரிக்க சகோ. பிரன்ஹாம் சப்தம் உண்டாக்குகிறார் - ஆசி) கெட்ட விதைகளை விதைத்தான் (சகோ. பிரன்ஹாம் மறுபடியும் சப்தம் உண்டாக்குகிறார் - ஆசி). நான் அதை கவனித்தேன். பூமி சுழன்று கொண்டேயிருந்தது.
193. சிறிது கழிந்து, கோதுமை பயிர் வளர்ந்து மேலே வந்தது. கோதுமை பயிர் மேலே வந்தபோது, முள் செடிகளும், முள் பூண்டுகளும், களைகளும் கோதுமை பயிரின் மத்தியில் வளர்ந்து மேலே வந்தன. அவையனைத்தும் ஒன்றாகவே வளர்ந்தன. அப்பொழுது பயங்கர வறட்சி உண்டானது. கோதுமைப் பயிர் இப்படி தலையை தூக்கினது; முள்செடி, முள்பூண்டு, களை இவையனைத்தும் தலையை தூக்கின. ஒவ்வொரு களையும் இப்படி பெருமூச்சுவிட ஆரம்பித்தது (சகோ. பிரன்ஹாம் பெருமூச்சு விடுவது போல் சப்தம் உண்டாக்குகிறார் - ஆசி). உங்களால் அதைக்கேட்க முடியும். அவையனைத்துமே மழை வரும்படி அழைத்தன.
194. சிறிது கழிந்து, ஒரு பெரிய மேகம் தோன்றினது. மழை பெய்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினது. அது அங்கு விழுந்தபோது, கோதுமை பயிர் குதித்து, "மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று ஆர்ப்பரித்தது. அதே நேரத்தில் களையும் மேலே குதித்து, "மகிமை, கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அல்லேலூயா” என்று ஆர்ப்பரித்தது. முட்களும்கூட வயலைச் சுற்றி நடனமாடி, "மகிமை, அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று ஆர்ப்பரித்தன.
நான், "எனக்குப் புரியவில்லை'' என்றேன்.
195. அந்த தரிசனம் என்னை விட்டு நீங்கினது. அப்பொழுது நான், "முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது” என்னும் வசனத்தை மறுபடியும் யோசிக்கத் தொடங்கினேன். இயேசு, ''மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பெய்கிறது'' என்றார். ஒரு மனிதன் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு உண்மையாக பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் போலவே அந்நிய பாஷை பேசி, அவர்களைப் போலவே நடந்து கொண்டு, அதே சமயத்தில் தேவனுடைய ராஜ்யத்தில் இல்லாமல் இருக்க வகையுண்டு. அது முற்றிலும் உண்மை. "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” என்று இயேசு கூறவில்லையா? (மத். 7:22-23). அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
196. இதுதான் அதன் சரியான அர்த்தம். பாருங்கள்? அவர்கள் வானத்திலிருந்து வந்த நல்ல மழையை ருசி பார்த்தார்கள். ஆனால் தொடக்கத்திலேயே அவர்கள் தவறாயிருந்தனர். தொடக்கத்திலேயே அவர்கள் நோக்கங்களும் குறிக்கோள்களும் சரியாயில்லை. அது... உங்களால் சொல்ல முடியாது. அவர்கள், ''நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா?'' என்று கேட்டனர் (மத். 13:28).
197. அவர், "அவைகளை அறுப்பு மட்டும் வளரவிடுங்கள், அந்நாளில் இந்த முள்செடிகளும் முள்பூண்டுகளும் ஒருமித்து சுட்டெரிக்கப்படும். கோதுமையோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும்'' என்றார். உங்களுக்கு எது முள் செடி, எது முள்பூண்டு, எது கோதுமை என்று தெரியும். "அவைகளுடைய கனிகளினால் அவைகளை அறிவீர்கள்". பாருங்கள், சகோதரனே, சகோதரியே, நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்காது. என்னவானாலும், பாதையில் அது உங்களைத் தொடர்ந்து பிடிக்கும். எனவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நீங்கள் நாடும்போது... அந்த கேள்வியை யார் எழுதியிருந்தாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பாருங்கள்?
198. இப்பொழுது, அந்த காலத்து எல்லைக்கோடு விசுவாசிகள் சரியாகத்தான் இருந்தார்கள். அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தேவன் வாக்களித்த தேசத்தின் முனைவரைக்கும் சென்றனர். அநேகர் அந்த முனைவரைக்கும் வந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறும் நிலைவரைக்கும் வந்து, அதை புறக்கணிப்பார்கள். அவர்களுக்கு அத்துடன் விட்டுவிட பிரியமிருக்காது. அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் வேதாகம ஞானஸ்நானம் வரைக்கும் வந்து, அதை காணாக் கூடாமல் புறக்கணிப்பார்கள்.
199. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஒருவராகிலும் ஞானஸ்நானம் பெற்றதாக வேதாகமத்தில் ஒரு வேத வசனம்கூட இல்லை. கத்தோலிக்க சபை அதைத் தொடங்கி, அது லூத்தர், வெஸ்லி அவர்களின் வழியாக வந்து இது வரைக்கும் நிலைத்திருக்கிறது. அது முற்றிலும் உண்மை. ஆனால் வேத ஒழுங்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானமே. அதுவே அப்போஸ்தலர்கள் கொடுத்த ஞானஸ்நானம். அந்த நாமத்தில் நீங்கள் ஞானஸ் நானம் பெற்று ஒரு ஸ்தாபனத்தில் இருக்க முடியாது. அது உண்மை.
200. இவைகளை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் அல்லவா? பரிசுத்த ஆவியின் அபிஷேகம், ஆவியின் வரங்கள்; தேவன் அளிக்கும் காரியங்கள்... ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், நீடிய பொறுமை (ஓ, நீங்கள், ஆனால் சகோ.பிரன்ஹாமே, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் நீடிய பொறுமையுள்ளவன்' என்கிறீர்கள். அப்படித்தான் தோன்றுகிறது. அண்மையில் நான் ஓஹையோவுக்கு சென்றிருந்த போது, யாரோ ஒருவர், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேனோ என்று கடிதம் எழுதி என்னைக் கேட்டிருந்தார். நான் ஒரு வார்த்தையும் கூறவில்லை. ஆனால் எப்படியோ அவர்கள் அதைக் கண்டு கொண்டனர். அப்பொழுது ஒத்துழைப்பு கொடுத்த பதினாறு போதகர்கள் பிரிந்து சென்று விட்டனர். இதுவா நீடிய பொறுமை?) - நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், பொறுமை, மற்றும் பரிசுத்த ஆவி. பாருங்கள்?
201. ஓ, சகோதரனே, சகோதரியே, நாம் காதேஸ்பர்னேயாவில் இப்பொழுது இருக்கிறோம். இப்பொழுது நீங்கள் ருசி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நேற்றிரவு பரிசுத்த ஆவி நம்மேல் விழுந்தது. அது பலத்த காற்று போல் நம்மேல் வந்து, உங்களில் அநேகர் மேல் அது அமர்ந்தது. இன்று போதகர்கள் இங்கும் அங்கும் வீடுகளுக்குச் சென்று, பரிசுத்த ஆவியை நாடுபவர்களின் மேல் தங்கள் கரங்களை வைத்து அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். வேறொன்றையும் அதற்கு பதிலாக நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஒருவிதமான சத்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். ஒருவிதமான உணர்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவன் உங்களை வனைந்து ஒரு புது சிருஷ்டியாக - ஒரு புது நபராக - செய்யும் வரைக்கும் நீங்கள் அங்கு காத்திருங்கள். இப்பொழுது நீங்கள் ருசிபார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் - ருசி பார்த்துக் கொண்டிருக்க மாத்திரம் செய்கின்றீர்கள். ஆனால் புறா உங்களை மேசைக்கு வழிநடத்த இடங்கொடுங்கள். அங்கு ஆட்டுக் குட்டியும் புறாவும் ஒருமித்து உட்கார்ந்து கொண்டு தேவனுடைய வார்த்தையை என்றென்றைக்கும் புசித்துக் கொண்டிருப்பார்கள். வானமும் பூமியும் இல்லாமல் ஒழிந்து போனாலும், தேவனுடைய வார்த்தை நிலை நிற்கும். அது உண்மை.
202. நான் தீவிரவாதி என்று தயவு செய்து எண்ண வேண்டாம். நான் தீவிரவாதியாக உங்களுக்கு காணப்பட்டிருந்தால், அப்படியிருக்க வேண்டுமெனும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நான்... இந்த கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த வரையில் நான் பதிலளித்தேன் என்று எண்ணுகிறேன்.
203. எனவே எபிரெயர் 6ம் அதிகாரத்தில் பவுல், ''நாங்கள் இதுவரை உங்களுடன் கூட வருகிறோம்” என்று கூறின எபிரெயர்களுக்கு இதை கூறுகிறான். அவர்கள் அதுவரைக்கும் வருவார்கள். பார்த்தீர்களா? “இப்பொழுது நீங்கள்...'' என்று பவுல், அது வரைக்கும் வந்து ருசி பார்த்தவர்களை நோக்கி கூறுகிறான்.
204. நான் இந்த கட்டிடத்திற்குள் பின்னால் நோக்க நேர்ந்தது. ஜீவிக்கிற தேவன் இருக்கிறார் என்பதை உங்களுக்கு காண்பிக்கப் போகின்றேன். இந்த மனிதனை நான் பிரசித்தப்படுத்தவில்லையென்று எண்ணுகிறேன். அண்மையில் ஒரு கூட்டத்தில் நான் பங்கு கொண்டு விட்டு இங்கு வந்தபோது, என் ஆப்த நண்பர் ஒருவர்; வேட்டையில் என் கூட்டாளி; எனக்கு நல்லவராக இருந்து வருபவர்; என் சபைக்கு வந்திருப்பவர்; என் சகோதரனாயிருந்து வருகிறவரைக் குறித்து நான் அறிவித்தேன். அவரை நான் பஸ்டி என்றழைப்பது வழக்கம். அவருடைய பெயர் எவரட் ராட்ஜர்ஸ். அவர் மில்டவுனில் வசிக்கிறார். அவரைக் குறித்து இங்கு நான் அறிவித்தது எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது? அவர் இங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக வயிற்றை அறுத்து பார்த்த போது, அது புற்று நோயால் நிறைந்திருந்ததைக் கண்டு வயிற்றை மறுபடியும் தைத்துவிட்டு, "அவர் மரித்துப் போவார். இன்னும் சில வாரங்களுக்குள் அவர் இறந்து விடுவார். அவ்வளவுதான்” என்றனர்.
205. நான் இந்த மேடையின் மேல் நின்று கொண்டு அவருக்காக ஜெபம் செய்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் அங்கு சென்று அவரிருந்த அறைக்குள் நுழைந்தேன். என் இருதயத்தை ஏதோ ஒன்று ஏவிக் கொண்டிருந்தது. நான் அறைக்குள் நடந்து சென்று எல்லோரையும் வெளியே அனுப்பி விட்ட பிறகு... சகோ. எவரட் அங்கு படுத்திருந்தார். இது உங்களுக்கு ஞாபகமிருக்கும். நான், 'சகோ. பஸ்டி" என்றேன். (அவரை பஸ்டி என்றுதான் நான் அழைப்பதுண்டு).
206. அநேக நாட்களுக்கு முன்பு நாங்கள் பிரஷ் ஆர்பர் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த போது, மலையின் மேலுள்ள மெதோடிஸ்டுகள் அனைவரும் (அவர்களில் கெர்டி ஒருத்தி) மெல்ல நழுவி, நான் என்ன கூறுகிறேன் என்பதை கேட்க, கிரேக் ஆர்பரின் வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு மெதோடிஸ்டு சபை அவர்களை சபை பிரஷ்டம் செய்து விடுமோ என்னும் பயம் இருந்தது. பிறகு எனக்கு அங்கு ஒரு தரிசனம் உண்டானது. ஒரு டப்பாவில் இறைச்சி குவிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். நான் சில மீன்களைப் பிடித்து, அவைகளைக் கயிற்றில் கோற்று தொங்க விட்டேன். நான் பார்த்த போது... இவை யாவும் தரிசனத்தில் காணப்பட்டன. அன்றிரவு பிரஷ் ஆர்பரிலுள்ள ஒரு கூட்டம் ஜனங்களை நான் விட்டு சென்று, மலையின் மேலுள்ள சகோ. ரைட் என்பவரின் வீட்டிற்கு சென்றேன். அடுத்த நாள் காலை, அவர்கள் என்னைக் காணவில்லை. நான், "நீங்கள் யாருமே...'' என்றேன்.
207. நான் அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அந்த ஒளி; அந்த அக்கினி ஸ்தம்பம் எனக்கு முன்னால் தோன்றி, "நீ இந்த இடத்தை விட்டு காட்டுக்குப் போ. நான் அங்கே உன்னுடன் பேசுவேன்'' என்றது. அதற்கு அடுத்த நாள் தான் அவர்கள் என்னை மலையின் மேல் கண்டு பிடித்தனர். நான் மலையின் மேல் சென்று என் காரை புதரில் ஒளித்து விட்டு, இரவு முழுவதும் அதற்கடுத்த நாளும் ஜெபம் செய்து கொண்டிருந்தேன். சிலர் அங்கு வந்து காரைக் கண்டு பிடித்துவிட்டு என்னிடம் வந்தனர். அன்றுதான் இங்குள்ள சகோ.கிரகாம் ஸ்னெல்லிங் பரிசுத்த ஆவியைப் பெற்று, ஊழியத்திற்கு அழைப்பும் பெற்றார்.
208, அந்த மலையின் மேல் நான் இருந்தபோது, நான் செய்ய வேண்டிய வெவ்வேறு காரியங்களை அவர் என்னிடம் கூறினார். நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். மீன்கள் கோர்வையாக கோர்க்கப்பட்ட தரிசனத்தைக் குறித்து அவர், "அது உன்னுடைய மில்டவுன் சபை'' என்றார்.
அதிலிருந்து நான்கைந்து மீன்கள் விழுந்து விட்டன. நான், ''அவர்கள் யார்?' என்று கேட்டேன்.
அவர், "அது கை ஸ்பென்ஸரும் (Guy Spencer) அவருடைய மனைவியும்; மற்றது மற்ற ஸ்பென்ஸரும் அவரைச் சார்ந்தவர்களும்'' என்றார். யார் யார் போய் விடுவார்கள் என்று அவர் கூறினார்.
209. நான் அவர்களிடம், ''நீங்கள் யாரும் புசிக்க வேண்டாம்” என்றேன். அது எனக்கும் என் மனைவிக்கும் விவாகமாவதற்கு முன்பு. அவர்கள் சகோதரி ஸ்பென்ஸருடன் கூட வீட்டுக்குச் சென்று இரவைக் கழித்தாள். சகோதரி ஸ்பென்ஸர் மிகவும் அருமையானவள், கை ஸ்பென்ஸரும் மிகவும் அருமையானவர். அவர் அங்கு சென்றார். ஓபல் (சகோதரி ஸ்பென்ஸர் - தமிழாக்கியோன்) மேடாவிடம், "இதோ பார், மேடா, நான் சகோதரன் பில் சொல்வதை நம்புகிறேன்' என்றாள். ஆனால் ஓபலுக்கு பசியெடுத்தால், பன்றி இறைச்சியும் (ham) முட்டையும் சாப்பிட வேண்டும். எனவே அவள் சென்று பன்றி இறைச்சியும் முட்டையும் பொறித்து, மேசையினருகில் உட்கார்ந்து, ஜெபம் செய்து, சாப்பிடுவதற்காக மேசையின் மேல் குனிந்தபோது, அவளால் அதை தொடமுடியாமல் அழத் தொடங்கினாள். அதன்பிறகு அவர்கள் வேட்டையாட வந்தனர்.
210. அந்த நாளன்று மலையின் மேல், என்ன நடக்குமென்று அவர் அப்படியே கூறினார். அவர், “இவர்கள் போய் விடுவார்கள், அவர்கள் போய் விடுவார்கள்'' என்றார். ஆனால், டப்பாவில் அடைக்கப்பட்ட இறைச்சியை அவர் நிறைய வைத்திருந்தார். அவர், 'மில் டவுன் ஜனங்களுக்கு மேலும் உபயோகிப்பதற்காக இதை வைத்துக் கொள்” என்றார். அன்றொரு இரவு நான் சகோ.கிரீச் பேசுவதைக் கேட்டபோது... அவர் நேற்றிரவு இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார். எனக்குத் தெரியவில்லை... சகோ.கிரீச், இன்றிரவு இங்கிருக்கிறீர்களா? சகோ. க்ரீச் என்னிடம் வந்து என்னைக் கூப்பிட்டார்; சகோதரி கிரீச் அழுது கொண்டிருந்தாள். அவளுடைய தந்தை அங்கு படுத்துக் கிடந்தார். அவள், சகோ.பில், அவரிடம் சொல்ல வேண்டாம், அவர் மரித்துக் கொண்டிருக்கிறார். புற்று நோய் அவரைத் தின்றுவிட்டது. மருத்துவர்கள் அவர் வயிற்றை அறுத்து பார்த்தபோது, அவர் முழுவதும் புற்று நோயால் நிறைந்திருந்தார்” என்றாள். வில் ஹால்லை உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கும். அதே மருத்துவர் அவர் வயிற்றை அறுத்து பார்த்த போது, அவர் முழுவதும் புற்று நோயால் நிறைந்திருந்தார்... நான் அணில் வேட்டைக்காக அன்று காலை புறப்பட்டு சென்று விட்டேன். அந்த அறையில் ஆப்பிள் பழங்கள் தொங்குவதை நான் கண்டேன். (அந்த வரலாறு உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கிறதல்லவா?). அந்த மனிதன் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இது அநேக ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அவரும் சகோ.பஸ்டியும் நண்பர்கள்.
211. அந்த மருத்துவமனைக்கு - புதிய மருத்துவமனைக்கு - நான் சென்றேன் (நியூ ஆல்பனியிலுள்ள அதன் பெயர் என்னவென்று எனக்கு மறந்து விட்டது) - அந்த புதிய மருத்துவமனையின் பெயர். நான் பஸ்டியைக் காண அங்கு சென்றிருந்தேன். நான் அறைக்குள் நுழைந்து, "சகோ.பஸ்டி'' என்று அவரை அழைத்தேன்.
அவர், "சகோ.பில்" என்று சொல்லி, என் கையை இறுகப் பிடித்து பலமாக கைகுலுக்கினார். அவர் முதலாம் உலக யுத்தத்தில் இராணுவ வீரராக பணிபுரிந்தார். அவருடைய முன்னிலையில் இதை நான் கூறவில்லை. அவருக்கு மிகவும் சிறந்த இருதயம் உள்ளது. அவர் என் கையைப் பிடித்துக் கொண்டார். நான் அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன், அவருடைய வீட்டில் உண்டிருக்கிறேன், அவருடைய வீட்டில் உறங்கியிருக்கிறேன். நான் அவருக்கு சகோதரனைப் போல. அவருடைய பிள்ளைகளும் அனைவரும் - நாங்கள் இரத்த உறவு கொண்ட சகோதரர்கள் போல். அவர் மிகவும் அருமையானவர்.
212. அவர்... ஆனால் அவர் கர்த்தரிடம் ஆழமான அனுபவத்துக்குள் வரவில்லை. அவர். அவருக்கு நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அன்று அந்த மெதோடிஸ்டு போதகர்,
“இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற எவரும் என் கூடாரத்தை விட்டு வெளியேறுங்கள்” என்று கூறினபோது, ஜார்ஜ் ரைட்டும் மற்றவர்களும் வெளிநடந்து விட்டார்கள். அன்று பிற்பகல் நான் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதற்காக டாட்டன்ஸ் ஃபோர்டுக்கு சென்றேன். அவருடைய சபையோர் அனைவருமே தண்ணீருக்குள் நடந்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். இவ்வாறு நான் சென்று கொண்டேயிருந்தேன். அது நன்றாக இருந்தது. தேவன் உங்களுடைய பட்சத்தில் இருந்தால், உங்களுக்கு விரோதமாயிருப்பவன் யார்? அந்த போதகர் எங்கு சென்றார், அவருக்கு என்ன நேர்ந்தது என்று எனக்கு ஒன்றுமே தெரியாது.
213. நான் மருத்துவமனைக்குள் நடந்து சென்றேன். அங்கு பஸ்டி புற்றுநோய் நிறைந்தவராய் படுத்துக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒன்றுமே சிகிச்சை அளிக்கவில்லை. அவர் அசையாதபடிக்கு அவரை கட்டிலோடு சேர்த்து கட்டியிருந்தனர். பஸ்டி என்னிடம், ''சகோ. பில், இது ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே இவ்வாறு நடந்துள்ளது. ஏதோ ஒன்று சம்பவித்தது” என்றார். நாம், 'ஆம், பஸ்டி' என்றேன். நான் இப்பொழுது உங்களிடம் கூறிக் கொண்டிருந்த அந்த ஆவி பலத்த காற்று அடிப்பது போல் உள்ளே நுழைவதை உணர்ந்தேன். அவர் சொன்னார். நான் அறைக்குள் நுழைந்த போது, ஒரு மூலையில் வானவில் காணப்பட்டது. வானவில் உடன்படிக்கைக்கு அடையாளம், தேவனுடைய உடன்படிக்கை. தேவன் அன்று அந்த மலையின் மேல் என்னுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். நான் என் கரங்களை பஸ்டியின் மேல் வைத்து அவருக்காக ஜெபித்தேன்.
மருத்துவர்கள், "அவர் மரித்துப் போவார். எங்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர் இன்னும் சில நாட்களில் இறந்து போவார்” என்றெல்லாம் கூறினர். ஆனால் பஸ்டி ராட்ஜர்ஸ்... அது அநேக வாரங்களுக்கு முன்பு, இன்றிரவு பஸ்டி ராட்ஜர்ஸ் ஆரோக்கியமுள்ளவராய் பருமனடைந்து இந்த சபையில் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சகோ. பஸ்டி எழுந்து நில்லுங்கள், அதோ அவர். நாம் தேவனுக்கு துதி செலுத்துவோம், ஒவ்வொருவரும். அவர்கள் மேலறையில் ஒன்றுகூடி. எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு ஊழியத்துக்காக வல்லமை வந்தது அன்று அவர் அவர்களுக்குச் செய்ததையே உனக்கும் இன்று செய்வார்.
"நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன் “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன் (அல்லேலூயா!) அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன் “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். அந்த ஜனங்கள் எவ்வித உரிமையையும் பாராட்டாமல் உலகப் புகழ் உள்ளதாக பெருமை பாராட்டாமல் இருந்தாலும் அவர்கள் அனைவரும் பெந்தெகொஸ்தேவைப் பெற்றுக் கொண்டு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர் இப்பொழுது அவர்கள் உலகின் எல்லா திக்குகளிலும் அவருடைய வல்லமை மாறாததென்று சொல்லி வருகின்றனர் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன் (அல்லேலூயா!) அவர்களில் நானும் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். என் சகோதரனே, இப்பொழுது வந்து இந்த ஆசீர்வாதத்தை நாடு அது உன் இருதயத்தைப் பாவமறக் கழுவும் அது மகிழ்ச்சி மணிகளை ஒலிக்கும்படி செய்து உன் ஆத்துமாவை அனல்மூட்டும் ஓ, இப்பொழுது அது என் இருதயத்துக்குள் கொழுந்து விட்டு எரிகிறது ஓ, அவருடைய நாமத்துக்கு மகிமை "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன் (நாம் அதைப் பாடுவோம்) ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன் (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். (உங்களில் எத்தனை பேர்) அவர்களில் ஒருவன், உங்கள் கரங்களையுயர்த்துங்கள்? ஓ,என்னே! ஓ, அவர்களில் ஒருவனாக இருப்பதற்காக நான் எவ்வளவாக மகிழ்கிறேன்!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன் (அல்லேலூயா!) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் “நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். அவர்கள் மேலறையில் ஒன்று கூடி எல்லோரும் அவருடைய நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு ஊழியத்துக்காக வல்லமை வந்தது அன்று அவர்களுக்குச் செய்ததையே உனக்கும் இன்று செய்வார் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன் ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன். (அல்லேலூயா) அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்
அந்த பல்லவியை நாம் மறுபடியும் பாடும்போது, நீங்கள் ஒவ்வொருவரும் திரும்பி, உங்கள் பக்கத்திலுள்ள ஒருவரிடம் கைகுலுக்க வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் அவர்களில் ஒருவரா? பாருங்கள்? சரி.
ஓ, அவர்களில் ஒருவன் (சகோதரனே, நீங்கள் அவர்களில் ஒருவர் என்று அறிவேன், நீங்கள் அவர்களில் ஒருவர் என்று அறிவேன்) (சகோ.பிரன்ஹாம் அவருக்கு அருகில் உள்ளவர்களுடன் கைகுலுக்குகிறார் -ஆசி) அவர்களில் ஒருவன் ஓ, அவர்களில் ஒருவன், அவர்களில் ஒருவன் "நானும் அவர்களில் ஒருவன்” என்று சொல்ல முடிவதற்காக மிகவும் மகிழ்கிறேன்