32. நல்லது, சகோதரன் பாட், எனக்குத் தெரிந்த வரையில்... இப்பொழுது, நாம் பிசாசியலில் ஆரம்பிக்கவுள்ளோம். இப்பொழுது, பிசாசியல் ஒரு மகத்தான காரியமாகும். (இப்பொழுது, உங்களில் சிலர் கடிகாரத்தை கவனித்துக் கொண்டேயிருங்கள். ஒரே கேள்வியின் பேரில் நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதபடிக்கு பாருங்கள்). ஆனால் அந்த பிசாசின் வல்லமைகள், லேகியோன் என்றழைக்கப்பட்ட அந்த மனிதனில் இருந்த அந்த ஆவிகள். அது சரிதானே? அவனுடைய பெயர் லேகியோன். ஏனெனில் எபிரெய மொழியில் லேகியோன், என்பதற்கு “அநேகம்” என்று அர்த்தம். பாருங்கள்? அந்த ஆவிகள் அநேகம் அங்கே இருந்தன.
33. அந்த அருமையான மனிதனுக்குள் இருந்த அந்த ஆவிகள் அவனை மனநிலை பாதிக்கப்பட்டவனாக ஆக்கியது. ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மனிதனை கண்டிருந்தாலோ அல்லது அவர்களோடு ஏதாவது செய்திருந்தாலோ, அவர்களுடைய பலம் அதிக அதிகமாக இருப்பது தெரியும். ஏனெனில் அவர்கள் பிசாசினால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். நீங்கள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியமான மனிதனை அடக்க முயற்சித்திருப்பீர்களானால், ஓ, அவனை அடக்க அநேக பலசாலி மனிதர்கள் தேவைப்படும். அப்படிப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பைத்தியம் பிடித்த மனிதருக்கு தங்கள் பலத்தைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு பலம் இருக்கும்.
34. இப்பொழுது, ஒரு மனிதன் முடமாயிருந்து பரிசுத்த ஆவியானவர் அவர்களைதம் கட்டுக்குள் எடுத்துக் கொள்கையில் - ஒரு மனிதனுக்கு அவனுடைய மனித பலத்தை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக்க பிசாசானவனுக்கு அப்படிப்பட்ட ஒரு வல்லமை இருக்குமானால் - தேவனாலே ஒரு மனிதனுக்குள் எவ்வளவாக வல்லமையை வைக்க முடியும் என்றறிவீர்களா? பாருங்கள்? அவன் அநேக வருடங்களாக முடமாக்கப்பட்டு படுத்துக் கிடக்கையில் அவனை தேவ பலத்தில் நடக்க செய்வது அவன் மீது வருகின்ற தேவ வல்லமையே. அவனுடைய எலும்புகள் நேராகின்றன; அவனுடைய கைகள் நேராகின்றன; அவன் ஒரு புதிதான வாலிப மனிதனைப் போன்று நடக்கிறான், ஏனெனில் பரிசுத்த ஆவியின் வல்லமை அவன் மீது இருப்பதால் தான்.
35. இப்பொழுது, இவைகள் மிகவுமாக தீய ஆவிகளாக இருந்ததினால் அந்த மனிதனை அவர்கள் சங்கிலிகளினால் கட்ட வேண்டியதாயிருந்தது, ஆனால் அவனோ அச்சங்கிலிகளை முறித்து தகர்த்துப்போடுவான். அவன் அச்சங்கிலிகளை முறித்து தகர்த்துப் போட்டுவிடுவான் என்று அவர்கள் கூறினர். அவனை எதைக் கொண்டும் கட்டிப் போட முடியவில்லை. அவனுடைய நிலையானது மிக மிக மோசமான ஒரு நிலையாயிருந்தது, ஏனெனில் அவனுக்குள் பிசாசுகளான லேகியோன் இருந்தது. அப்பொழுது அவன். இயேசு கடலைக் கடந்து கதரேனருடைய நாட்டுக்குள் வந்து கல்லறைகளின் வழியாக நடக்கத்துவங்கின போது. ஆகவே அவன் மிகவும் தீயவன் ஆவான், அந்த மனிதன் அல்ல (பாருங்கள்?), அந்த மனிதன் சரியாகத் தான் இருந்தான்.
36. அந்த மனிதன் செய்ததல்ல. அவ்விதமாகக் காணப்படுகின்ற ஒரு மனிதனை நீங்கள் காண்பீர்களானால், அந்த மனிதன் தான் அவ்வாறு நடந்து கொள்ளுகிறான் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்; அவ்வாறு செய்வது அந்த மனிதனுக்குள்ளிருக்கின்ற பிசாசுதான்.
இப்பொழுது, ஓரேகான் என்ற இடத்தில் அன்றொரு இரவில் என்னைக் கொல்ல மேடையின் மீது வந்த அந்த வெறிப்பிடித்த மனிதன். அந்த மனிதன், நான் - ஏறக்குறைய பத்தாயிரம் மக்களிற்கு முன்பாக அவன் என்னிடமாக வந்து என் முகத்தில் எச்சியைத் துப்பிக்கொண்டு “புல்லுக்குள் மறைந்து கிடக்கும் பாம்பு” என என்னை அழைத்து கொண்டிருந்த அந்த மனிதன், இல்லை, அது அதுவல்ல, அந்த மனிதன் அவ்வாறே செய்யவில்லை. என்னைப் போல அல்லது உங்களைப் போலவே, உணவு உண்டு, குடித்து உறங்கி, ஒருக்கால் ஒரு குடும்பத்துடன் இருந்து அன்பாயிருக்கின்ற ஒரு மனிதன் தான் அவன். ஆனால் அவனுக்குள்ளிருந்த அந்த பிசாசு தான் அதைச் செய்து கொண்டிருந்தது. புரிகின்றதா?
37. ஒரு தவறான நோக்கத்தைக் கொண்டு ஒரு பிசாசை நீங்கள் வெளியே துரத்த முடியாது. அன்பைக் கொண்டுதான் அதை செய்ய முடியும். உலகத்தில் இருக்கின்ற எல்லா சக்தியைக் காட்டிலும் மிக வல்லமையுள்ள ஒரு சக்தி அன்பு தான். இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால் பகைப்பது, வெறுப்பது எப்பொழுதுமே பிசாசின் காரியமாகும். பகைத்தல், வெறுத்தல் பிசாசினால் உண்டாகின்ற ஒன்று. மக்கள் யாரையாவது கடுமையாக வெறுத்தால், நினைவில் கொள்ளுங்கள், இழிவாகக் கருதுதல் அல்லது கடும் வெறுப்பை காண்பித்தால் அது ஒரு மோசமான பிசாசாகும். நீங்கள் அவ்வாறு செய்யவே கூடாது.,
38. நீங்கள் நினைவு கொள்ளுங்கள் அந்த - அந்த... இயேசு தம்முடைய பிரசங்கத்தில் கூறினது, நீங்கள் ஜெபம் செய்கையில், “எங்கள் பரலோகப் பிதாவே,”... அப்பொழுது அவர் கீழே வந்த போது, அவர், “ஒவ்வொரு மனுஷனுடைய தப்பிதத்தை உன்னுடைய முழு இருதயத்துடனே நீ அவனுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பரம பிதா உங்கள் தப்பிதங்களிலிருந்து உங்களை மன்னியாதிருப்பார்” என்று கூறினார். பாருங்கள்? நீங்கள் அவ்வாறு செய்யக் கூடாது.
39. ஆனால், வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்ற வல்லமையை பிசாசு உருவாக்கி (பாருங்கள்?) மேடையின் மீது ஓடச் செய்து என்னைக் கொல்லப்பார்த்தான், சரீரப்பிரகாரமாக அந்த மனிதனால் செய்ய முடியும், அவன் அநேக மடங்கு பலம் வாய்ந்தவனாக... அவன் என்னை அப்படியே தன்னுடைய இரண்டு விரல்களால் அந்த பெல்ட்டை தூக்குவது போல் என்னை உயரத் தூக்கியிருக்கலாம், ஏனெனில் அவன் 260 அல்லது 270 பவுண்ட் எடையுள்ளவனாக இருந்தான்; (ஒரு பவுண்ட் எடை என்பது 0.460கி.) அவன் ஆறறை அடி அல்லது ஏழு அடி உயரமிருந்தான், ஒரு மகத்தான பெரிய ஆள். அவன் அப்படியே... தெருவில் ஒரு பிரசங்கியை தன் கையின் முட்டியால் அடித்து கழுத்துப்பட்டை எலும்பையும் தாடையெலும்பையும் உடைத்து அந்த பிரசங்கியை காயப்படுத்தினான், அவர் மருத்துவமனைக்கு கொண்டு போகப்பட்டார். அவன் பிரசங்கிகளை வெறுத்தான். ஆகவே அப்பொழுது சரியாக அந்த இடத்திலேயே என்னைக் கொன்று போட ஓடி வந்தான். பாருங்கள்?
40. இப்பொழுது, கதரேனருடைய நாட்டில் பன்றிக்குள் அனுப்பப்பட்ட இந்த ஆவிகளில் சில அந்த மனிதனுக்குள் இருந்தன. அப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய மக்களில் சிலர் இங்கே அந்த மனநலக் காப்பகத்தில், தங்கள் தலைகளை சிறு அறைகளிலும் மோதிக்கொண்டிருக்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள், பிசாசுகள் மரிக்காது. பிசாசுகள் எப்பொழுதும் வாழும், ஆனால் பிசாசுகள் கட்டாயம் மரிக்க வேண்டிய ஒரு சமயமானது இருக்கப் போகின்றது. அவைகள் முழுவதுமாக அடியோடு நிர்மூலமாக்கப்படும். ஆனால் இப்பொழுது அவை உயிரோடிருந்து மானிடர்களில் அநேக சந்ததிகளாக கிரியை செய்து வருகின்றன. அவைகளில் சில புற்று நோய் வியாதியின் உருவில் வரும்; சில காச நோயாகவும் வரும். அவை சரீரத்தில் புகுந்து கொள்ளும், அவை ஒரு நபருக்குள் புகுந்து கொள்ளும் வரைக்கும் வல்லமையற்றவைகளாக இருக்கின்றன. அவைகளால் ஒரு நபரின் மூலமாகத்தான் கிரியை செய்ய முடியும், இது நமக்கு மற்றொரு சிந்தனையை அளிக்கிறது, அது பரிசுத்த ஆவியைக் குறித்ததாகும். அது பூமியை மூடிக் கொண்டிருக்கிறது, ஆனால் அது உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் வரும் வரை ஏறக்குறைய உதவியற்றதாக அது காணப்படுகிறது.
41. தேவன் உங்கள் பேரிலும் என் பேரிலும் முழுவதும் சார்ந்திருக்கிறார். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர். பூமி முழுவதும் தேவனுடைய ஆவியால் நிரம்பியுள்ளது, அது ஊற்றப்பட்டுள்ளது. ஆனால் அது நமக்குள்ளாக, மானிடப் பிறவிகளாகிய நமக்குள் வரும் வரைக்கும் அதனால் - அதனால் கிரியை செய்ய முடியாது.
42. ஆகவே நாம் அவனுக்கு கீழாக கிரியை செய்யத்தக்கதாக பிசாசானவன் நம்மை ஆட்கொள்ள விரும்புகிறான். ஆகவே அவன் மிருதுவான முறையில் அவன் செயலாற்றத் தொடங்குகையில், அவன் பாவத்தில் ஆரம்பிக்கின்றான். அவன் அவைகளை ஒரு நீதியான மனிதனுக்குள் வைக்கத்துவங்குகையில், ஒரு அருமையான மனிதன், அவனை அப்படியே நல்லவனாகவே இருக்க முயற்சி செய்ய வைத்து விடுவான்; கூடுமானால் அவன் மரிக்கும் வரைக்கும் அவன் அப்படியே நல்லவனாகவே இருக்கும் படிக்குச் செய்து விடுவான், அவ்விதமாகவே செய்ய அவன் விரும்புகிறான். அவன் இந்த மனிதனை ஆட்கொள்வான், ஏனெனில் நீ எவ்வளவாக நீதியாக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு ஒழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு சுத்தமுள்ளவனாக இருந்தாலும் சரி, எவ்வளவு நேர்மையுள்ளவனாக இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல, நீ மறுபடியும் பிறக்காவிட்டால் உன்னால் பரலோகத்தை அடைய முடியாது. இயேசு அவ்விதம் கூறினார். ஆகவே... அது... நீ மறுபடியும் பிறக்கத்தான் வேண்டும், உனக்கு புதுபிறப்பளிக்கப் பட வேண்டும், இல்லையென்றால் நீ பரலோகத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது - அல்லது கிறிஸ்துவினிடம் வரவோ உலகத்தில் எந்த ஒரு வழியும் கிடையாது.
43. இப்பொழுது, நான் சற்று முன்னர் நான் கூறினது, உங்களுடைய சிந்தனையில் மற்றுமொரு கேள்வியைத் தோன்றச் செய்யும், நான் உங்களுக்கு போதித்தது, அது இன்னுமாக... நான் விசுவாசிப்பதில்லை. ஒரு நித்திய... ஒரு நித்திய எரிகின்ற நரகம் உண்டென்று வேதாகமம் போதிக்கிறதென்று நான் விசுவாசிப்பதில்லை. அவ்வாறு அது போதிப்பதில்லை, ஏனெனில் நரகமானது நித்தியமானதாக இருக்குமானால் அங்கே செல்கின்ற மக்கள் நித்தியமாக தண்டிக்கப்பட முடிகின்ற ஒரே வழி அவர்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரேயொரு விதமான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவனுக்குள் இருக்கின்ற ஒன்று மாத்திரமே. புரிகின்றதா? ஆகவே அவர்கள் அழிக்கப்பட வேண்டும் (பாருங்கள்?); அதாவது அவர்களுடைய சரீரப் பிரகாரமான பாகம் அழிக்கப்படும். அதற்கு பிறகு அவர்களுடைய ஆவிக்குரிய பங்கு அழிக்கப்பட்டுவிடும். அது முழுவதுமாக அழிக்கப்படும்; பிறகு அதைக் குறித்த எந்த ஒரு காரியமும் இருக்காது. “வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும்” என்று வேதம் கூறுகின்றது. அவை முற்றிலும் அழிக்கப் பட்டுவிடும்.
44. பிறகு, பரலோகத்தில் அளவு கோள்கள் உள்ளன என்றும் அவை எல்லாம் ஒரே விகிதத்தில் ஆக்கப்படமாட்டாது என என்னால் நிரூபிக்கமுடியும், ஆனால் உங்களுக்கோ சரிசமமான நித்திய ஜீவன் உண்டு. ஆனால் பூமியில் ராஜாக்கள் தாங்கள் மகிமையையும் கனத்தையும் கொண்டுவருவார்கள் (வெளிப்படுத்தல் 22) தங்களுடைய கனத்தையும் மகிமையையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருவார்கள் என்று வேதம் கூறுகின்றது. ஆகவே புதிய பூமியில் ராஜாக்கள் மற்றும் அதிபதிகள், இருப்பார்கள் என்று அது நிரூபிக்கின்றது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் கூறினார். அவர்கள், “எங்கள் தகப்பனையும் தாயையும் எல்லாவற்றையும் விட்டு உம்மைப் பின்பற்றினோமே எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றார்கள்.
45. அவர், “அந்நாளிலே நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க் கிறவர்களாக பன்னிரண்டு சிங்காசனங்கள் மேல் விற்றிருப்பீர்கள்” என்று கூறினார். பாருங்கள், அது எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாக இருக்கப் போகின்ற ஒரு வரப்போகின்ற வேறொரு பூமிக்குரிய ஒழுங்காகும். அதில் பாவம் இருக்காது, ஆனாலும் நகரங்களில் அவர்களுக்கு அதிபதிகள் மற்றும் இன்னும் மற்றவர் உண்டு, அவை எல்லாமே நித்திய ஜீவனின் வழியிலேயே செய்யப்படும்.
46. ஆனால் துன்மார்க்கர் சரீரத்தில் செய்த கிரியைகளுக்குத் தக்கதான தாங்கள் செய்த பாவங்களின்படியே தண்டிக்கப் படுவார்கள், பிறகு அவர்கள் முழுவதுமாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுப்போவார்கள். இப்பொழுது அதை மாத்திரம் நினைவில் கொள்ளுங்கள். எழுதி குறித்து வைத்துக் கொண்டிருப்பவர்களே, அதை நினைவில் கொள்ளுங்கள்.
47. ஒரே ஒரு விதமான நித்திய ஜீவன் தான் உண்டு என்றும் நாம் அதைத் தான் நாடித் தேடுகிறோம் என்று நான் கூறுவது ஆணித்தரமாக பதிவு செய்யுங்கள்; மேலும் தேவன் ஒருவரே நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறார். இரண்டு விதமான நித்திய ஜீவன் என்பது கிடையாது, ஒரேயொரு நித்திய ஜீவன் தான் உண்டு, அது மாத்திரமே ஜீவிக்கின்றது. மேலும் நினைவில் கொள்ளுங்கள், இதையும் கூட உங்கள் குறிப்பில் எழுதிக் கொள்ளுங்கள்: துவக்கம் என்பதைக் கொண்டதாக உள்ள உண்டாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருக்கின்றது. துவக்கத்தைக் கொண்டிருக்கின்ற ஒவ்வொன்றிற்கும் ஒரு முடிவு உண்டு, துவக்கமே இல்லாத ஒரு காரியத்திற்கு முடிவே கிடையாது. ஒன்றிற்கு மாத்திரம் தான் துவக்கம் என்பதே கிடையாது, அதுதான் தேவன் ஆகும். உயிர்த்தெழுதலில் எழுவதற்கான ஒரேயொரு வழி - உங்களுக்குள் அந்த நித்திய ஜீவன் இருக்கவேண்டும். பாருங்கள்? நீங்கள் திரும்பி மறுபடியுமாக வர ஏதுவான ஒரேயொரு வழிதான் உண்டு, அது துவக்கம் என்பது இல்லாத ஏதோ ஒன்று தான். ஆகவே நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் போது, ஒருபோதும் துவங்காதிருந்த மற்றும் முடிவைக் கொண்டிருக்க முடியாத ஒரு ஜீவன் உங்களுக்குள் வாசம் செய்யும்; நீங்கள் அந்த ஜீவனை உங்களுக்குள் சுதந்தரித்துக் கொண்டிருப்பீர்கள், அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்று தேவனுக்கு குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள். பாருங்கள்? தேவனால் மரிக்க முடியாதிருப்பதைப் போலவே உங்களாலும் மரித்துப்போக முடியாது, ஏனெனில் நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக உள்ளீர்கள்.
48. இங்கே முன்குறித்தலைக் குறித்த ஒரு கேள்வியை சற்று முன்னால் நாங்கள் கொண்டிருந்தோம், அது அந்த அதே காரியத்துடன் சரியாக இதைக் கொண்டு வருகின்றது. நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாக இருக்கிறீர்கள்; ஆகவே தேவன் தம்மைத் தாமே அந்த மகத்தான அக்கினிஸ்தம்பத்தில் பகிர்ந்து பிரித்துக்கொண்டு, அதில் ஒவ்வொன்றும் அந்த ஒவ்வொரு நபருக்குள்ளும் செல்லுமானால், இன்னும் இன்னுமாக அதே விதமாகத்தான் அது செய்கின்றது. நாம் அதை, நாம் கொண்டிருக்கின்ற அனுபவத்தின் மூலமாகவும், வேதாகம போதனைகளின் படியேயும், விஞ்ஞான ஆராய்ச்சியின் படியேயும், அதைக் காண்பிக்க ஏதுவான ஒரு புகைப்படத்தைக் கொண்டு தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் தம்மைப் பகிர்ந்தளிக்கிறார் என்பதை நிரூபிக்க முடியும் என்று இயேசு கூறினார். நம்மால் மரிக்க முடியாது. ஒரு கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது கிடையாது; “என் பேரில் விசுவாசம் கொண்டிருக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான் (பாருங்கள்?) மரிப்பதில்லை.”
49. மரணம் என்கின்ற வார்த்தைக்கு “பிரிவினை” என்று அர்த்தம். இப்பொழுது, சரீரப்பிரகாரமாக, நாம் நம்முடைய சரீரப்பிரகாரமான பார்வையிலிருந்து நாம் வேறு பிரிகிறோம், ஏனெனில் அது இன்னுமாக பாவத்தில் இருக்கின்றது, ஆனால் நம்முடைய ஆவியோ தேவனிடமிருந்து பிரிக்கப்பட முடியாதிருக்கின்ற தேவனுடைய ஆவியாகும், ஏனெனில் நாம் தேவனுடைய பாகமாக இருக்கின்றோம். நாம் - நாம் கொண்டு... தேவனுடைய அந்த சிந்தைக்குள்ளாக நாம் மறுபடியுமாக திரும்பக் கொண்டு வரப்படுகிறோம். தேவன் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் பரிபூரணமானதும் நித்தியமானதாகும். ஆகவே அவரைத் தொழுது கொள்ளப்போகும் ஒரு இராஜ்யத்தின் மக்கள் பேரிலேயே தேவனுடைய மெய்ம்மூலமான சிந்தனைகள் சென்றன, அந்த மெய்ம்மூலமான சிந்தனைகள் நித்தியமாகும். பாருங்கள்? அவர்களால் அழிந்து போகவே முடியாது. தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் நித்தியமானதாகும். இயேசு, “வானமும் பூமியும் ஒழிந்து போகும்; என் வார்த்தைகளோ ஒரு போதும் ஒழிந்து போவதில்லை,” என்றார்.
பாருங்கள்? அவைகள் தேவனோடு நித்தியமானதாக உள்ளன. ஆகவே, “நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும்...” பாருங்கள்? நாம் அவருடைய வார்த்தையின் ஒரு பாகமாகிறோம், அவருடைய ஜீவனின் பாகமாகிறோம், ஏனெனில் நாம் அவருடைய மாம்சத்தின் மாம்சமாகவும், அவருடைய எலும்பின் எலும்பாகவும், அவருடைய ஜீவனின் ஜீவனாகவும் இருக்கிறோம். அப்படியானால் தேவனால் தம்மைத்தாமே அழிவிற்கு ஆளாக்கி கொள்ளமுடியாது. அதே போன்று நாமும் அழிந்து போகவே முடியாது. அப்படித்தான் பரிசுத்த ஆவியும் இருக்கின்றது.
50. ஜார்ஜியாவிலிருந்து வந்துள்ள இந்த சிறிய நபர், சகோதரன் இவான்ஸ் - அவர் நாடு முழுவதும் எல்லா இடத்திற்கும் சென்று வந்துள்ளார். மேலும் இவர் என் அருமை நண்பராகிய ஓரல் ராபர்ட்ஸினுடைய தீவிர ஆதவரவாளரும் கூட; அவருடைய தொலைகாட்சி நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் மற்றும் அவர் செய்த எல்லா காரியங்களுக்கும் இவர் ஆதரவளித்தவர். ஆனால் அன்றொரு நாள் அவர் என்னிடம் “சகோதரன் பிரன்ஹாம், நான் சகோதரன் ஜாக்கருடைய கல்லூரிக்கு சென்றேன். நான் எல்லா இடத்துக்கும் சென்றேன்; அங்கே மூன்று மாதங்கள் நான் தங்கியிருந்தேன். நான் வேட்டைக்குச் சென்றேன்; அநேக இடங்களுக்குச் சென்றேன், அவை ஒவ்வொன்றும், அதே காரியத்திற்குத் தான் திரும்பவுமாக கொண்டுவந்தன. எந்த ஒரு நிச்சயமும் தருகின்ற ஒரு இடத்தை என்னால் கண்டு பிடிக்க முடியவேயில்லை (உங்களுக்கு புரிகின்றதா?) நான் இதைச் செய்வேனானால், அல்லது அதைச் செய்வேனானால், அல்லது இங்கே நான் என்ன செய்யமுடியும், அல்லது என்னால் முடியுமா, அல்லது என்னால் முடியாதா என்றிருந்தேன், உங்களுடைய போதனைகளை கேட்கும் முன்வரை அவ்விதமாக நான் இருந்தேன். கேட்ட பிறகு எல்லாம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவானது.” என்றார்.
ஏனெனில் அவன் மரணத்திலிருந்து ஜீவனிற்குள் வந்து விட்டான். அவன் தனக்குள்ளாக நித்திய ஜீவன் வாசம் செய்ய பெற்றிருக்கிறான். ஆகவே தேவனே மரித்தாலொழிய அவனால் மரிக்க முடியாது. சரியாக அது வேதாகமப் பூர்வமானது ஆகும். பாருங்கள்? அவன் என்றென்றுமாக பாதுகாக்கப்படுகிறான், ஏனெனில் அவன் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறான்.
51. இப்பொழுது, அப்படியென்றால் நீங்கள் பாவம் செய்து பிறகு அதை சரிசெய்து கொள்ளலாம் என்றல்ல, ஏனெனில் நீங்கள் பாவம் செய்கையில் உங்களுடைய பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள். முற்றிலும் சரி. ஆனால் நித்திய ஜீவன் உங்களுக்குள்ளாக இருக்கிறதென்றால், நீங்கள் என்றென்றுமாக ஜீவிக்கிறீர்கள். இயேசு “என்னுடைய வசனத்தைக் கேட்டு (பரி. யோவான் 5:24) - என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஒருபோதும் ஆக்கினைத்தீர்ப்புக்கு வருவதில்லை - ஆனால் அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்,” என்றார். பாருங்கள்?
“என் பிதா ஒருவனை முதலாவது இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில்வரான். என்னிடத்தில் வருகின்ற எல்லாரையும்... என் பிதாவினால் கொடுக்கப்பட்டயாவும் என்னிடத்தில் வரும்.” அது சரி.
“என் பிதாவினால் கொடுக்கப்பட்ட யாவும் என்னிடத்தில் வரும்; அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போவதில்லை. நான் அவர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்.”
(பரி. யோவான் 6)
ஓ, எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட நிச்சயம். பாருங்கள்? ஆகவே நீங்கள் மரணத்தைக் குறித்து திகிலடையவோ அல்லது அதிசயப்பட வேண்டிய அவசியம் என்பதோ உங்களுக்குத் தேவையில்லை.
52. நாம் அவருடைய பிள்ளைகள் என்கின்ற அந்த பரிபூரண நிச்சயத்தை தேவன் நமக்கு அளித்துள்ளார். நீங்கள் உங்கள் பிள்ளைகளை திருத்துவது போல, நான் என் பிள்ளைகளை திருத்துவது போல, நாம் அவருடைய பிள்ளைகளாக இருப்பதால் அவர் நம்மைத் திருத்துகிறார். பிள்ளைகள் தவறு செய்யும் போது நாம் அவைகளைத் திருத்துகிறோம். என் பிள்ளைகள் தவறு செய்யும் போது ஒரு தகப்பன் என்கின்ற வகையில் அப்பொழுது அவர்களை திருத்துவது என் கடமையாயிருக்கிறது. அப்படியானால், தேவனுடைய பிள்ளைகள் தவறு செய்வார்களானால், ஒரு தகப்பன், பிதா என்கின்ற வகையில் அவருக்கும் அது ஒரு கடமையாகும், ஆகவே அவர் உங்களை திருத்துவார். அதை நினைவில் மாத்திரம் கொள்ளுங்கள், நீங்கள் திருத்தப்படுவீர்கள். ஆகவே நீங்கள் அவருடைய பிள்ளையாயிருக்கும் வரையிலும் உலகம் உங்களைத் தொடாதிருப்பதாக (அது சரி!)
ஏனெனில் அவர், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்தில் அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
53. இப்பொழுது, சகோதரன்பாட், உங்களுடைய கேள்விக்கு திரும்பவுமாக வருகின்றேன். அந்த மனிதனை பித்து பிடித்த வெறியனைப் போன்று ஆக்கி, அவனை விட்டு வெளியே சென்ற அந்த ஆவிகள் (பாருங்கள்?) இன்றைக்கும் மக்களுக்குள் அதே காரியத்தைச் செய்கின்றன. பாருங்கள்? அவைகள் அந்த ஆவிகள் தாம் - ஆயிரமாயிரக் கணக்கானவைகள். ஆகவே அந்த பிசாசு ஒரு சிறு அபின் போதை பொருளைப் போல (opium) உள்ளே வருகின்றான். ஒரு சிறு பள்ளி மாணவிக்கு அவர்கள் செய்வது போல; முதல் காரியமாக அவளை சிகரெட் புகைக்க வைப்பார்கள். பாருங்கள்? அந்த பழக்கம் அவளை ஆட் கொள்ளத்துவங்கும். அடுத்ததாக அது என்ன செய்யுமென்றால் இன்னும் கிளர்ச்சி ஊக்கமுடைய சிகரெட்டுகள் புகைக்கும்படிச் செய்யும். அதன் பிறகு, முதலாவது காரியத்திற்கு பிறகு அது கஞ்சா புகைப்பதில் வந்து நிற்கும்; அதற்கு பிறகு இன்னும் கடுமையான அபின், டோப், போதை பொருள் பழக்கத்திற்குள் கொண்டு சென்று விடும். பிறகு அது என்ன செய்யும்? அது அவர்களை பித்து பிடித்த நிலைக்கு கொண்டுச் சென்று விடும். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களாகின்றனர், பிசாசு அவர்களை பிடிக்கின்றன. புரிகின்றதா?
54. ஆகவே பிசாசானவன் சிகரெட்டுகள் புகைப்பதில் இருக்கின்றான். அது அவனுடைய சிறிய சாதாரண மென்மையான வடிவமாகும். இப்பொழுது, அவன் உன்னை நாகரீகப் பாங்கில் முனைப்பான ஒருவன் என்றும் நீ அதைப் பிடித்துக் கொள்வாய் என்றும் அவன் கண்டறிந்துக் கொள்வானானால், அந்த பிசாசானவன் நீ சிகரெட்டுகளைத் தவிர வேறொன்றையுமே காண விடமாட்டான். பாருங்கள்? எவ்வளவு காலம் சிகரெட்டு பிடிக்கிறீர்களோ அவ்வளவு காலம் தன் பிடியில் வைத்திருந்து உங்கள் ஜீவன் அறுந்து போகும் படிக்குச் செய்து விடுவான், ஏனெனில் தேவன் கூறுகின்ற வரையில் உங்களால் செல்ல முடியாது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆனால் நீங்கள் பிரசங்கத்திற்கு மேல் பிரசங்கம், செய்திக்கு மேல் செய்தி, அதை குறித்த ஆணித்தரத்திற்கு மேல் ஆணித்தரமான செய்தி, அதைக் குறித்த எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கையை கேட்கலாம்; அவன் உங்களை புறம்பாக்கி, உங்கள் மனதை வேறெதின் மேலேயோ செலுத்தி விடலாம், நீங்கள் புகழ்பெற்ற ஒருவராக இருக்கிறீர்கள் என்பதின் பேரில் கூட, அல்லது நீங்கள் அந்த பழக்கத்தை கொண்டிருக்கத்தான் வேண்டும் அல்லது அதைப் போன்ற ஒரு எண்ணத்தை அளித்து, நீங்கள் மரித்துப்போகும் வரை உங்களை அதற்குள்ளாகவே வைத்திருப்பான். அல்லது அவன் உங்களை ஒரு சபைக்குள் சேர்ந்துகொள்ளும்படிக்குச் செய்து “நான் ஒரு நல்ல மனிதனாக இருக்கப் போகிறேன். நான் ஒரு நல்ல... நான் சபைக்குச் சென்று சபையை சேர்ந்து கொள்ளப் போகிறேன்” என்று கூறும்படிக்குச் செய்வான். உங்களை அப்படியே அந்த சபைக்குள்ளாக இருக்கும்படிக்கு அவன் செய்வானென்றால், அவன் செய்ய வேண்டியது அவ்வளவே தான். உங்களை அவன் தன் கட்டுக்குள் வைத்துள்ளான், ஏனெனில் நீங்கள்... இயேசு, ஒருவன் ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே (முற்றிலுமாகவே, முற்றிலுமாகவே) உனக்குச் சொல்லுகிறேன்,” என்றார். மற்றொன்றை உங்களுக்கு நான் காண்பிக்கட்டும். இன்றிரவு நான் பேசத்தக்கதாக போதுமான அளவுக்கு தொண்டைக்கு ஓய்வு கொடுத்து, என் மனதிற்கு சற்று ஓய்வளிக்க, ஒரு பிரயாணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கையில்- பிற்பகல் வேளையில் ஒரு சகோதரனுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், அவர் தான் சகோதரன் உட்.
55. இப்பொழுது கவனியுங்கள்! நாம் தானியப் பயிரைக் குறித்து சற்று நாம் பார்க்கப் போகிறோம். அது நாட்டில் இருக்கின்ற தானிய பயிர்களிலேயே மிகச் சிறந்த ஒரு தானியப்பயிராக உள்ளது. இப்பொழுது நான்...?... தானியம் அல்லது கதிர் என அழைக்கலாம், நீங்கள் அல்லது அதை எவ்விதமாகிலும் அழைக்கலாம். நான் - நான் இதை இங்கே கிளார்க் கோட்டப்பகுதி சந்தையில் கொண்டு செல்வேனானால் இந்த தானிய பயிருக்கு நீல ரிப்பன் பரிசை வெல்வேன். இருப்பதிலேயே மிகச் சிறந்த ஒரு தானியப் பயிராகும், அது யாருமே பார்த்திருக்க முடியாத மிக பூரணமான தானியமாகும். நான் இதற்கு நீல ரிப்பன் பரிசை வெல்வேன். நான் இதை பிளாய்ட் கோட்டப் பகுதிக்கு கொண்டுச் செல்வேன்; நான் இதை ஹாரிசன் கோட்ட பகுதிக்கு கொண்டு செல்வேன். நான் இதை மாநிலத்திற்கு கொண்டுச் செல்வேன், பிறகு நான் இதை தேசத்திற்கு கொண்டுச் செல்வேன். எல்லா இடத்திலும் இது நீல நிற ரிப்பன் பரிசை வெல்கின்றது. இது தான் ரிப்பன் பரிசை வெல்கின்றது. இது தான் மிகவும் பரிபூரணமான தானிய பயிராயிருக்கிறது. ஆகவே விஞ்ஞானிகள் தங்களுடைய மகத்தான நுண்நோக்கி கண்ணாடிகளால் இதை உற்று நோக்கி, இதை ஆராய்வார்கள். பாருங்கள்? அந்த... இது சரியான அளவு சாம்பலுப்பு, சரியான அளவிலான சுண்ணாம்புச்சத்தும், மற்றும் - மற்றும் சரியான அளவிலான ஈரப்பதமும் கொண்டதாக உள்ளது. இந்த தானியப் பயிரில் காணப்படுகின்ற ஒவ்வொரு காரியமும் சரியாக மிகப் பரிபூரணமாக காணப்படுகிறது. இப்பொழுது நீங்கள், “நான் இதை எடுத்து விதைத்து இதிலிருந்து வேறொரு சிறந்த தானியத்தை நான் பெறுவேன்” எனக் கூறலாம். ஆகவே நீங்கள் அதை எடுத்து நிலத்தில் விதைக்கின்றீர்கள். அந்த தானியமானது, அந்த பரிபூரண தானியமானது தனக்குள்ளாக ஜீவ அணுவைப் பெற்றிருக்காவிடில், அது நிலத்திலேயே கிடந்து அழுகிப் போகும், அதன் முடிவும் அதுதான். அது எவ்வளவு பூரணமான ஒன்றாக இருந்தாலும் சரி, அது திரும்பவுமாக முளைத்தெழும்பாது. அதற்குள்ளாக உள்ள ஒரு புதிய ஜீவனால் அன்றி அது ஒருபோதும் மறுபடியும் முளைத்தெழும்பாது.
56. நீங்கள் ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளலாம்... இப்பொழுது, உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்தில் இதை நான் கூறவில்லை, நான்... இது சபை, இது என் கூடாரம், ஆதலால் நான் ஒரு பறவையைப் போல சுதந்திரம் கொண்டவனாக இருக்கிறேன். பாருங்கள்? இப்பொழுது, இந்த காரியத்தைக் குறித்ததை நீங்கள் நினைவில் வைத்திருக்க நான் விரும்புகிறேன், ஒரு மனிதன் நல்லவனாக இருக்கலாம்; அவன் தன்னுடைய தசமபாகங்களை செலுத்தலாம்; நேர்மையுள்ளவனாக அவன் இருக்கலாம்; விதவைகளுக்கு அவன் உதவி செய்யலாம்; அநாதைகளுக்கு அவன் உதவலாம்; ஒரு சபை அங்கத்தினனாக அவன் இருக்கலாம். அந்த மனிதனைக் குறித்த ஒரு சிறு குறைபாடும் கூட உன்னால் கண்டுபிடிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் ஒரு காரியம் சம்பவிக்கும்போது அவன் தன்னுடைய சட்டைப் பாக்கெட்டிற்குள் கை விட்டு, அவனிடம் இருக்கின்ற கடைசி காசையும் எடுத்து ஏழைக்கு கொடுப்பவனாக இருப்பான். அவன் பல்வேறு தடங்கல்களுக்கிடையிலும் உன்னோடு கூட துணையாக அவன் இருப்பான். மற்றவர்கள் அநேகர் உன்னைப் புறம்பாக்கினாலும் உன்னைத்தாழத் தள்ளினாலும் அவன் உன்னோடு இருந்து உன் தோழனாகவும் இருக்கலாம்; ஆனாலும் நித்திய ஜீவனாகிய பரிசுத்த ஆவியால் அவன் நிரப்பப்படாத வரையில் அந்த மனிதன் இன்னுமாக தேவனுடைய ராஜ்யத்திற்கு வெளியே தான் அவன் இருக்கின்றான். அது சரியே! இது எவ்வளவாக மிக முக்கியமானதாகும்.
57. அதன் காரணமாகத் தான் என்னுடைய சபையானது இதைக் காணவேண்டுமென்று நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அதைக் குறித்து கூர்மையான அறிவு எனக்கு இருக்கிறதென்று நான் காண்பித்துக் கொள்கிறேனென்று நீங்கள் எண்ணவேண்டாமென்று நான் - நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நான் - நான் உங்களுக்கு கூற முயற்சிப்பது என்னவென்றால், பிசாசானவன் மிக வஞ்சனையுள்ளவன், நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல நடந்து கொள்ளும்படிக்கு அவன் உங்களைச் செய்து மிகவுமாக வஞ்சித்து விடுவான். அவன் ஏதோ ஒன்றைச் செய்து தெரிந்து கொள்ளப் பட்டவர்களிடமும் கூட அவன் கிறிஸ்துவை பாவனைச் செய்து காட்டுவான். அது இரண்டும் மிக நெருக்கமாகக் காணப்படுமென்று வேதாகமம் கூறுகின்றது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள். நீங்கள்...
58. இப்பொழுது இங்கே கவனியுங்கள், இதை ஆணித்தரமாக பார்க்க சில உதாரணங்களை நான் உங்களுக்கு காண்பிக்கட்டும். இந்த ஆவிகளைக் குறித்து நாம் பார்க்கையில், வேத வசனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் எதையெல்லாம் வைத்துக் காண்கிறீர்களோ அதன்படியே பார்ப்போமானால் யாக்கோபைக் காட்டிலும் ஏசா மிக நல்லவனாகக் காணப்பட்டான். இப்பொழுது, ஏசா (இந்த கருத்தை கூறுவதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக) அவன் ஒரு வஞ்சகமானவன் தான். அவ்வளவு தான். இப்பொழுது, நீங்கள் அவனை கவனிப்பீர்களானால், அவன் என்னவாயிருந்தான்? அவன் வம்பளப்பவனாகவும் கோள் சொல்பவனாகவும், ஒரு பெரிய பொய்யனாகவும் இருந்தான். இப்பொழுது, இதை நான் தவறாக சொல்கிறேனென்றால் தேவன் என்னை மன்னிப்பாராக, ஆனால் அவன் பொய் சொன்னான். மேலும் அவன் ஒரு ஏமாற்று பேர்வழியாக இருந்தான், அவனைப் போன்று யாருமே இருக்க வில்லை. அவன் புள்ளியுள்ள கொப்புகளையெடுத்து அவைகளை, ஆடுகளும் மாடுகளும் தண்ணீர் குடிக்க வரும்பொழுது தண்ணீரில் போட்டான். அவைகள் தண்ணீர் குடிக்க வரும்போது, பொலிவதுண்டு. ஆடுகள் மாடுகளும் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால் அவைகள் புள்ளியும் வரியுமுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. யாக்கோபு அவைகளைத் தனக்காகப் பிரித்துக் கொண்டான். அவன் என்ன செய்தான்? அவன் ஏசாவின் வஸ்திரத்தை தன் மேல் உடுத்திக்கொண்டு ஒரு ஆட்டுத் தோலை தன் மீது போட்டுக் கொண்டு அங்கே சென்று தீர்க்கதரிசியான தன்னுடைய கண்பார்வையற்ற தகப்பன் முன்பாக நின்று ஏசாவைப் போல பாவனை செய்தான். அது சரிதானே? அவன் ஒரு எத்தன். உண்மையாகவே அவன் அப்படித்தான் இருந்தான். ஆகவே ஏசா... அந்த விதமாக நான் கூறியிருக்கக் கூடாது. பாருங்கள்? அந்த விதமாக நான் கூற விழையவில்லை. நான் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். அவன் ஒரு - அவன் ஒரு... எனக்குத் தெரியவில்லை; அவன் எந்த விதமாக இருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள்? நீங்கள் அதை உங்கள் சிந்தையில் சற்று சிந்தித்துப் பாருங்கள்; நான்... அவன் தேவனுடைய மகத்தான மனிதனாக இருந்தான், அவனைக் குறித்து தீமையாக எதையும் நான் கூற விரும்பவில்லை (உங்களுக்கு புரிகின்றதா?) ஆனால் அவன் செய்த சிறு சிறு காரியங்களை நான் கூட்டிக்காட்ட விரும்புகிறேன். அவன் எவ்வளவாக வஞ்சித் தான் பார்த்தீர்களா. பொய்யன்? நிச்சயமாக, அவன் அவ்வாறு இருந்தான், அவன் மோசமாக இருந்தான். ஆனால் அவன் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது என்ன?
59. ஏசாவை கவனியுங்கள். இன்றைக்கு இருக்கின்ற நல்ல, ஒழுக்கமிக்க, சபை அங்கத்தினனைப் போல ஏசா ஒரு நல்ல மனிதனாக இருந்தான். அவன் என்ன செய்து கொண்டிருந்தான்? அவன் வேட்டைக்காரனாக இருந்தான். அவன் வெளியே சென்று... ஆம், அவர்கள் அப்படித்தான் தங்கள் ஜீவனத்தைச் செய்து கொண்டிருந்தார்கள். அவன் தன் தகப்பனுடைய மந்தைகளை பராமரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தகப்பன் கண்பார்வையற்றவனாக இருந்தான். ஒரு தீர்க்கதரிசி, கர்த்தருடைய தீர்க்கதரிசி கண்பார்வையற்றவனாக இருந்து தன்னுடைய சொந்த குமாரனால் வஞ்சிக்கப் பட்ட ஒரு தீர்க்கதரிசி, ஈசாக்கு; அவன் மூலமாக கிறிஸ்து வந்தார். நீங்கள் அவனை ஒரு தீர்க்கதரிசி என அழைக்கலாம், அவன் அவ்வாறு தான் என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் கண்பார்வை இல்லாமல் இருந்தானா? ஏன் அவன் தன்னை சொஸ்தமாக்கிக் கொள்ளவில்லை? அது ஏசாவென்று - வந்துள்ளவன் என்று ஏன் அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை? பாருங்கள்? தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிக்கு எல்லாவற்றையுமே கூறுவது கிடையாது? அவர் விரும்புவதை மாத்திரமே அவர்களிடம் கூறுகின்றார். பாருங்கள்?
60. தேவன் அப்பொழுது ஒரு திட்டத்தை செயலாற்றிக் கொண்டிருந்தார், அவர் அதன் படியே தான் செயலாற்ற வேண்டியவராக இருந்தார். தேவன்... நீங்கள் உங்களையே தேவனிடம் ஒப்புக்கொடுத்தால், தேவன் உங்களை சரியாக அவருடைய திட்டத்தின்படியே உங்களை செயல்படுத்துவார்.
61. இப்பொழுது, அவன் என்ன செய்தான் என்பதை கவனியுங்கள், இந்த நபர் என்ன செய்தான் என்பதைப் பாருங்கள். ஏசா சென்று தன்னுடைய பரிதாபத்திற்குரிய, வயதான, கண்பார்வையற்ற தகப்பனை கவனிக்க முயற்சிகள் மேற்கொண்டான், ஆனால் யாக்கோபோ, தன் தகப்பனுக்கு என்ன நேரிட்ட போதிலும் அதை குறித்து அக்கரையற்றவனாக இருந்தான். யாக்கோபு விரும்பின ஒரு காரியம் இருந்தது, அது தான் சேஷ்ட புத்திர பாகம். என்ன வந்தாலும் சரி, எந்த விதத்திலும் அதைப் பெற்றுக் கொண்டாலும் சரி, அதற்காக எந்தக் கட்டத்திற்கு அவன் செல்வதென்றாலும் சரி, அந்த சேஷ்ட புத்திர பாகத்தைக் குறித்து அக்கரைக் கொண்டிருந்தான். ஆனால் ஏசாவோ அதை அலட்சியம் பண்ணினான் என்று வேதம் கூறுகின்றது; வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. ஆகவே வேதாகமம், “ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒரு வேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்ட ஏசாவைப் போல சீர் கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்,” என்று கூறுகின்றது.
62. இப்பொழுது; சேஷ்ட புத்திர- பாகம் என்றால் என்ன? அதுதான் அந்த உரிமையாகும். அதைத் தான் இப்பொழுது உங்களுக்கு நான் கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த பரிசுத்த ஆவிதான் உங்களுடைய சேஷ்ட புத்திர பாகமாகும்; அதுதான் உங்களுடைய சேஷ்ட புத்திர பாகம். அதுதான் தேவனால் உங்களுக்கு அளிக்கப்பெற்ற உங்களுடைய உரிமையாகும். இப்பொழுது, இப்பொழுது, இன்றைக்கு மக்கள், “நான் சபைக்குச் செல்வேன். என்னுடைய அயலானைப் போல நானும் நல்லவன் தான். ஆனால் அந்த பரிசுத்த உருளையர்கள் போல நான் நடந்து கொள்ள வேண்டுமா? என்னால் முடியாது” என்று கூறுகின்றனர். ஓ நீதான் ஏசா! புரிகின்றதா? சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியம் செய்வது போல - அதே விதமாகத்தான் அது காணப்படுகிறது. ஏன், அவன் அதை பயற்றங்கூழ் உணவுக்காக, அதை அவன் பண்டமாற்று கொடுத்து வாங்குதல் முறையில் கொடுத்தான். ஆகவே நீங்களும் அதை விற்கிறீர்கள்... இப்பொழுது, நான் உங்களைக் கூறவில்லை, ஆனால் உலகமோ அதை விட சிறிய ஒன்றிற்கு அதை விற்றுப்போடுகிறது.
63. ஏசா பசியாயிருந்தான். ஆனால், நீங்கள் பாருங்கள், நல்ல குணத்தை நாம் எடுத்துக் கொள்வோமானால்... யாராவது... நாம் யாராவது அங்கு சென்று கூடாரத்தினருகே சில நாட்களுக்கு தங்குவோமானால், ஏசா எப்படிப்பட்டவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்... நாம் ஏசாவைப் பற்றி பார்த்தோம். பாருங்கள்? ஆனால் அவனுடைய இருதயத்திலேயோ அந்த சேஷ்ட புத்திர பாகம் வேண்டுமென்று விரும்பினான். எதைக் குறித்தும் அவன் அக்கரைக் கொள்ளவில்லை. அந்த சேஷ்ட புத்திர பாகமே அவனுக்கு தேவையாயிருந்தது. அது மட்டுமே அவனுக்கு வேண்டியதாயிருந்தது.
64. ஆனால் ஏசாவோ ஒரு நல்ல மனிதனாக இருந்து எல்லாவற்றையும் நன்றாக கவனித்து அக்கரை கொண்டு, எல்லாவற்றையும் நியாயமாக செய்து எல்லாவற்றையும் செய்ய அவன் விரும்பினான்... ஏசா ஒரு சிறந்த சட்டப்பூர்வமாக ஒழுங்காக செயல்படுகின்ற சட்டவாதியாவான். எல்லா காரியமும் நியாயமாக இருக்கவேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால் யாக்கோபிற்கோ ஒரேயொரு காரியம் தான் தேவையாயிருந்தது. அது தான் சேஷ்டபுத்திர பாகமாகும், அதைக் குறித்து தான் அவன் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். ஏசா... அந்த இரண்டு பையன்களுக்கும் என்ன சமபவித்ததென்று பார்த்தீர்களா? யாக்கோபிலிருந்து பன்னிரண்டு கோத்திரப் பிதாக்கள் வந்தது. அவர்களிலிருந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள் வந்தன, எல்லாம் யாக்கோபிலிருந்து வெளிவந்தவை. அவன் - தேவன் யாக்கோபை தன் சொந்த குமாரனென்று அழைத்தார். நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களாலே காணமுடிகிறதா?
65. உங்களுடைய கெளரவம், உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை, உங்களைச் சார்ந்த எதுவாயிருந்தாலும், உலகத்திலுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் பரிசுத்த ஆவி தான் உங்களுக்கு அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்க வேண்டும். நீங்கள் அதைப் பெறும் வரையிலும் ஓயவே கூடாது. நீங்கள் அதைப் பெற்றுத்தானாக வேண்டும். அது தான் உங்களுடைய தலையாய... நீங்கள், “உம், என் வேலை ஸ்தலத்தில் அவர்கள் - எனக்கு தெரியவில்லை. எனக்கு பயமாயிருக்கிறது. ஏனென்றால் என் கணவன், என்... “ எனலாம். பயப்படாதீர்கள்; முதலாவதாக அது இருக்கட்டும். மற்ற எல்லாவற்றையும் புறம்பே செல்ல விடுங்கள். அது முதலாவதாக இருக்கட்டும். “நல்லது, நான் வருகின்ற நாட்களில் ஒன்றில் அதை பெற்றுக்கொள்வேன் என எதிர்ப்பார்க்கிறேன் சகோதரன் பிரன்ஹாம்” எனலாம். வருகின்ற நாட்களில் அல்ல, இப்பொழுதே! இதுதான் நேரம். “நான் மற்றவற்றை செய்யும் முன்னர் அது முதலாவதாக இருக்கட்டும். இப்பொழுதே அதை நான் பெற்றுக் கொள்வேனாக.” பதறல் கொள்ளுங்கள்! நம்முடைய கேள்விக்கு பதில் கூற அது உதவும். நீங்கள் - அதற்காக நீங்கள் பதறல் கொள்ள வேண்டும், உண்மையாகவே நீங்கள் அதைப் பெறவேண்டும் அல்லது மரிக்கவேண்டும். இன்று அதைப் பெற பதறல் கொள்வீர்களானால், (பாருங்கள்) அப்பொழுது தான் நீங்கள் அதைப் பெறப் போகிறீர்கள்.
66. இங்கே பட்டினத்திலே ஒரு யூதன் வசித்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு அவரைத் தெரியுமா அல்லது இல்லையா என்று நானறியேன். புற்று நோயிலிருந்து அவர் சுகமாக்கப்பட்டார். அவர்கள் அவரை புறம்பாக்கிப் போட்டார்கள். அவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டபோது அவர்கள் அவரை வெளியே விரட்டி, அங்கே வெளியே முற்றத்தில் துரத்திவிட்டார்கள். ஆகவே அவர் சென்று மெதோடிஸ்ட் சபையில் சேர்ந்தார். அங்கே அவர்கள் இவர் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றிருப்பதை கண்டு பிடித்த போது, அவர்கள் அவரை பூஜ்யம் சீதோஷ்ணத்தில் வெளியே அனுப்பிவிட்டார்கள், ஓஹியோவில் பத்து டிகிரிக்கு கீழுள்ள சீதோஷ்ணத்தில் அங்கே அவருக்கு ஒரு படுக்கையை போட்டார்கள். (சகோதரன் பீரீமேன், நீங்கள் சகோதரன் இவான்ஸ் அவர்களை நினைவு கூற வேண்டும், அப்படித் தானே?) - அவரை அங்கே வெளியே வைத்து - அங்கே - அங்கே ஒரு நீரிறைக்கும் இயந்திரத்தை வைத்து “இயேசுவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறும்படிக்கு போதுமான அளவு தண்ணீர் அங்கே இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
67. ஆனாலும், அவர் ஒருமுறை ஒரு சிறு சம்பவத்தை என்னிடம் கூறிக்கொண்டிருந்தார். அவர் தன் மனைவியுடன் இந்த குறிப்பிட்ட மக்களுடன் தங்கியிருக்கையில்... அவர் தன்னுடைய எல்லா பொருட்களையும் ஒரு பழைய உடைந்த வண்டியில் குவித்து ஏற்றிக்கொண்டு பட்டினத்தைவிட்டு வெளியே கிளம்பிச் சென்றார். அவருடைய மனைவி அவரிடம், “உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தை விட்டு புறப்படுமுன்னர் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு புறப்பட்டிருக்க வேண்டும். எனக்கு தாகமாயிருக்கிறது” என்றார்.
அதற்கு அவர், “தேனே, அங்கே ஒரு தண்ணீர் குழாய் உள்ளதே” என்றார்.
“சரி, இன்னும் ஒரு நல்ல இடத்தை பார்க்கும் வரை சென்று கொண்டேயிருங்கள்.” என்றாள்.
ஆகவே அவர் இன்னும் சிறிது தூரம் சென்றார், “அதோ, மற்றொரு தண்ணீர் குழாய் இருக்கிறதே” என்றார்.
அவள் “உம், இன்னும் சென்று கொண்டேயிருங்கள்” என்றாள். நீங்கள் கவனிக்கிறீர்களா?
68. பிறகு அவர், “பிறகு அவர் கிராம புறமாக சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒரு தண்ணீர் குழாயும் இருக்கவில்லை,” என்றார். அவள் சிறிது தண்ணீருக்காக போராடிக் கொண்டிருந்தாள். பிறகு சிறிது நேரம் கழித்து அங்கே வயலில் ஒரு பழைய கிராம் தண்ணீர் குழாய் இருந்தது, நிலங்களின் மத்தியில், ஒரு கால்நடை மந்தையினுடாக செல்ல வேண்டும். அவள் அந்த கால் நடை கூட்டத்தை பார்த்து பயந்தாள், ஆனாலும் அவள், “லேவி, நான் தண்ணீர் குடித்துத்தானாக வேண்டும்” என்றாள். ஆகவே அவர்கள் காரை நிறுத்தினர். இவர் காரை நிறுத்தும் முன்னரே அவள் வெளியே சென்று அந்த வேலியைக் கடந்து சென்றாள். அவளுக்கு தண்ணீர் தேவையாயிருந்தது. அதே போன்று தேவன் உங்களுக்கு நிஜமாகும்போது, அதைப் போன்ற தாகம் உங்களுக்கு இருக்குமானால், அதாவது ஒன்று தேவன் வேண்டும் இல்லையென்றால் நீங்கள் மரித்துப் போய் விடுவீர்கள் என்ற நிலை, இனியும் உங்களால் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலை, அப்பொழுது ஏதோ ஒன்று சம்பவிக்கப்போகிறது. அப்பொழுது நீங்கள் தேவனோடு அலுவலில் ஈடுபட வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அதை எடுக்கும்போது அப்பொழுது அது சம்பவிக்கின்றது.
69. இப்பொழுது, இந்த தீய ஆவிகள் மக்களை வஞ்சிக்கின்றது. அந்த ஆவிகள் பலமடங்குகள் மிக பக்தியுள்ளவைகள் ஆகும். இப்பொழுது நீங்கள் “என்ன, தேவபக்தியா?” என்று கேட்கலாம். ஆம், ஐயா! வேதவசனங்கள், வேதாகமம் கூட அவ்வாறே போதிக்கின்றதே. நிச்சயமாகவே அவ்வாறு போதிக்கின்றது.
70. இப்பொழுது, கவனியுங்கள்! இயேசு பரிசுத்த ஆசாரியர்களாயிருந்த ஒரு கூட்டம் மனிதரிடம் வந்தார்; அவர்கள் நியாயப்பிரமாணங்களை ஒவ்வொரு எழுத்தின் படியேயும் கைக்கொண்டனர்; அவர்கள் மிக மிக பக்தியுள்ளவர்களாக இருந்தனர். இயேசு - யோவான் அவர்களை, “விரியன் பாம்புக் குட்டிகளே (அது பாம்புகள்) வருங் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்?” என்று அழைத்தான். இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்.” என்று கூறினார். தேவன் தாமே அதைக் கூறிக்கொண்டிருந்தார். அவர்களால் எவ்வளவு பக்தியாயிருக்க முடிந்ததோ அவ்வளவாக இருந்தனர்.
71. நினைவில் கொள்ளுங்கள், பிசாசு அவனுடைய மனிதனை எடுக்கும் போது, அவனுடைய ஆவியையும் எடுப்பதில்லை. தேவன் தம்முடைய மனிதனை எடுக்கிறார் ஆனால் தம்முடைய ஆவியை ஒருபோதும் எடுப்பதில்லை. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் உங்களுடைய வாழ்க்கையில் வந்து உங்களுடைய ஆவியை பரிசுத்தமாக்குகிறார், உங்கள் மூலமாக ஜீவிக்கின்றார், ஜீவிக்க உங்களுக்கு வல்லமையும் தருகின்றார். ஆனால் உங்களுடைய ஆவியானது சென்றுகொண்டேயிருக்கும் போது, உங்களுடைய ஆவி தேவனோடே தொடர்ந்து தங்கியிருக்கிறது; ஆனால் உங்கள் மீதிருந்த பரிசுத்த ஆவி வேறொருவர் மீது வருகையில், வேறொருவர் மீது, வேறொருவர்...
72. எலியாவின் மேலிருந்த இந்த ஆவியானது எலிசாவின் மீது வந்தது, ஆவியின் இரட்டிப்பான பாகம்; ஏழுநுறு வருடங்கள் அல்லது எண்ணூறு வருடங்கள் கழித்து அது யோவான்ஸ்நானன் மீது வந்தது, அவனை... எலியாவை கவனியுங்கள், எலியா எப்படியிருந்தான் என்று பாருங்கள்; பெரிய வயதான முழுவதும் மயிரைக் கொண்டவனாக, முகம் முழுவதுமாக தாடியுடனே; ஆட்டுத்தோல் போர்த்திக் கொண்டிருந்தவனாக, சுருள்சுருளான புழு போன்று முழுவதுமாக மயிர் நிறைந்தவனாக காணப்பட்டான், அதன் மத்தியில் அவன் முகம் காணப்பட்டது, அந்த தோல் துண்டை சுற்றினவனாக பலமாய் மிதித்து நடந்து சென்று கொண்டிருந்தான், அவனுடைய அரையைச் சுற்றிலும் இதைப் போன்று கச்சைகள் காணப்பட்டன. நீங்கள் தானே... அவன் உங்கள் வீட்டிற்கு நடந்து வந்துக்கொண்டிருக்கிறானென்றால், நீங்கள், “ஊ, ஊ, என்னே! உடனே போலீசைக் கூப்பிடு, என் கதவண்டை இப்படிப்பட்ட ஒரு ஆள் நிற்கின்றானே” என்பீர்கள். ஆனால், அவன் தான் கர்த்தருடைய தீர்க்கதரிசியாயிருந்தான். நிச்சயமாக அவ்வாறு தான்! பிறகு, அவன் மரித்தபோது, அவனுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கு எலியாவின் மீது வந்தது; பிறகு எண்ணூறு வருடங்கள் கழித்து யோவான்ஸ்நானன் மீது வந்தது. அதே விதமாக யோவானும் இருந்து நடந்து கொள்ளும்படிக்குச் செய்தது, ஏனென்றால் அது எலியாவின் ஆவியாக இருந்தது.
73. இப்பொழுது, யோவானின் மீதிருந்த எலியாவின் ஆவி யோவானை எலியாவைப் போன்றே நடந்துகொள்ளும் படிக்குச் செய்யுமானால், உங்கள் மீதிருக்கும் தேவனுடைய ஆவி இயேசுவைப் போலவே நீங்கள் நடந்து கொள்ளும் படிக்குச் செய்யும். இப்பொழுது, அங்கே தான் நீங்கள் பரிசுத்த ஆவியைக் காண முடியும். பாருங்கள்? பரிசுத்த ஆவி அதைத் தான் செய்கின்றது. அது உங்களை சாந்தமுள்ளவர்களாக செய்கிறது, தாழ்மையுள்ளவர்களாகச் செய்கிறது, மன்னிக்கிறவர்களாகச் செய்கிறது.
74. ஒரு கூட்டம் தேவ தூதர்களை அழைக்க உனக்கு வல்லமை இருந்து, உன் முகத்தில் தாடி இருந்தால் அவர்களால் அதைப் பிடுங்கி, உன் முகத்தில் துப்பமுடியுமா? உன் முகத்தில் துப்பிக் கொண்டிருக்கிற மக்களுடைய அன்பிற்காக அதை நீ செய்வாயா? உன்னால் அதைச் செய்ய முடியுமா? யாரோ ஒருவன் உன்னிடம் வந்து, “ஏய், நீ ஒரு மாய்மாலக்காரன்!” என்று கூறி உன்னுடைய கன்னத்தில் அறைந்தால் அவனுடைய மன்னிப்பிற்காக உன்னால் ஜெபிக்க முடியுமா? இப்பொழுது, நீ பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கின்றாயா அல்லது இல்லையா என்பதை நீ இதின் மூலமாக பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளலாம். பாருங்கள்? “என் நாமத்தினிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். “ நீங்கள் அவர்களுக்குச் சமானமாய் நிற்பீர்களா? “சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.”
75. யாராவது உங்களைக் குறித்து தீமையாக பேசினால், அவர்களைக் குறித்து நல்லதையே பேசுங்கள். அவர்களைக் குறித்து நல்லதாக எதுவும் உங்களால் கூற முடியவில்லையெனில் அப்பொழுது எதையுமே பேசாதிருங்கள். அதைப் அப்படியே விட்டு விடுங்கள். புரிகின்றதா? பிறகு, நீங்கள் தனிமையில் சென்ற பிறகு அவர்களுக்காக ஜெபியுங்கள்.
76. அங்கே அந்த நாளில் பரிசுத்த ஆவி எனக்குள்ளாக வந்தது என்பதை நான் புரிந்து கொள்ள ஏதுவாயிருந்த ஒரு காரியமானது என் வாழ்நாளிலே இருக்கிறதென்றால் அது, அந்த காரியத்தால் தான். நான் முரட்டுத்தனமானவனாக, எளிதில் சீறியெழுகின்றவனாக இருந்தேன், நான் தாய் தந்தையின் வம்சவழியான ஐயர்லாந்து வம்சவழியைச் சார்ந்தவன். என்னால் உணவே உண்ண முடியாது, ஏனெனில் என் வாய் எப்பொழுதுமே யாராவது ஒருவரால் நொறுக்கப்பட்டிருக்கும், எதெற்கெடுத்தாலும் தேவையில்லாமல் நான் திடீரென்று தாக்கி விடுவேன். என் பற்கள் சில உடைந்து போய் அதை இப்பொழுது சரி செய்து வைத்துள்ளேன், பேசக்கூடாத இடத்திலெல்லாம் நான் சத்தமிட்டு (பாருங்கள்?) கூறியுள்ளேன்... எப்பொழுதுமே தொல்லைக்குள் அகப்பட்டுக் கொள்வேன். ஆகவே நான் கூறினேன். யாரோ, பள்ளியிலுள்ள என் ஆசிரியை, அவர்கள் என்னிடம்... நான் அவர்களிடம், “மதிப்பிற்குரியவரே, என்னால் - என்னால் திருந்த முடிய வில்லை” என்றேன். பாருங்கள், “எல்லா நேரத்திலும் தொல்லையில் சிக்கிக்கொள்வேன்.” “என்னால் முடியவில்லை” என்றேன். பாவம் அந்த வயதான டேம்ப்பில் அம்மாள், அவர்கள் மகிமைக்கு சென்று விட்டார்கள்.
அப்பொழுது அவர்கள், “சரி, தேனே இங்கே கவனி” என்றார்கள். அவர்கள் என்னை தங்களுடைய மடியின் மீது உட்காரவைத்து என்னை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட ஒரு அன்பை முதன் முறையாக என் மீது பொழியப்பட நான் கண்டேன், - ஒரு வயதான பெண்மணி. அவர்கள் எனக்காக அழுதார்கள். அவர்கள் ““பில்லி, நான் உனக்காக ஒன்றை நான் செய்யப் போகிறேன். தேனே, நான் உனக்கு ஒரு சிறிய மெல்லிய கயிறைத் தரப்போகிறேன், “இனிமேல் அந்த பையன்களில் யாராவது ஒருவன் உன் மீது...” என்றார்கள்.
77. அங்கே என்னை “கிழிந்த கந்தைக் கீற்றுக் கொட்டை” என்று என்னை அழைப்பார்கள், ஏனெனில் நான் கெண்டக்கியைச் சார்ந்தவன் என்பது உங்களுக்குத் தெரியும், என்னுடைய ஆடைகள் மிக மோசமாக இருக்கும். இப்பொழுதிருக்கிற தலை முழு அளவிற்கு முகம் முழுவதுமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். என் முடியை அவர்கள் பரியாசம் செய்வார்கள். உங்களுக்குத் தெரியுமா, ஒரு மிக மோசமான வேளையாக அது எனக்கிருந்தது. அவர்கள் என்னை அடிப்பார்கள், கன்னத்தில் அறைவார்கள். எப்பொழுதாவது யாராவது ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் சுற்றி சுற்றி நடந்து, என்னைக் கண்டு இறுகப் பிடித்து கன்னத்தில் அறைவார்கள். அப்பொழுது ஒரு சண்டை நடக்கும். எங்களுக்கு அடி விழும் - நாங்களும் அடி கொடுப்போம்... நான் கத்திச் சண்டைகள் மற்ற எல்லா சண்டைகளையும் போட்டிருக்கிறேன்.
78. நான் எழுந்திருக்கக் கூட முடியாத அளவிற்கு என்னை அடித்து நொறுக்கிய நான்கு அல்லது ஐந்து பையன்களை சுட்டுத் தள்ள ஒரு வின்செஸ்டர் ரக துப்பாக்கியை எடுத்துச் சென்று முயற்சி செய்திருக்கிறேன். தேவன் என்னைத் தடுத்திராவிட்டால் ஒவ்வொரு பையனையும் கொன்று போட்டிருப்பேன். கீழேயிருந்த தோட்டாக்களை எடுத்து துப்பாக்கியினுள் போட்டேன்; சுடுவதற்கு சிறந்த தோட்டாக்களாக அவை இருந்தன. பாருங்கள்? ஒருக்கால் ஐந்து மனிதரை அல்லது ஐந்து பையன்களை கொன்ற கொலைக்காரனாக நான் இருந்திருப்பேன்.
79. எனக்கு பன்னிரண்டு வயது தான் இருந்திருக்கும், ஆனால் கடுங் கோபக்காரனாக இருந்தேன்! ஆகவே அந்த ஆசிரியை என்னிடம் “பில்லி, இந்த மெல்லிய கயிற்றை எடுத்துக்கொள், உனக்கு கோபம் வரும் போதெல்லாம், நின்று, இந்த கயிற்றில் ஒன்பது முடிச்சுகளைப் போடு. அப்படிச்செய்த பிறகு, அந்த கயிற்றை என்னிடம் கொண்டு வா - உன் கோபம் அடங்கி விடுவது நிச்சயம்” என்றார்கள்.
80. நான், “திருமதி. வேலன், நீங்கள் மிக அருமையான வர்கள். நான் - நான் அவ்வாறு செய்ய முயற்சி செய்யப்போகிறேன்” என்றேன். பாருங்கள்? (ஓ, அது திருமதி டெம்ப்பில்; நான் திருமதி. வேலன் என்று கூறிக்கொண்டிருக்கிறேன். நான் திருமதி... அங்கே ஒரு சமயம் திரு. வேலன் ஆசிரியையாக இருந்தார்.) ஆகவே அந்த கயிற்றை என் பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டேன். நான் வெளியே புறப்பட்டுச் சென்று ஐந்து நிமிடங்கள் கூட கடக்காத நிலையில் ஒருவன் என் மீது விழுந்து அடித்தான். அப்பொழுது நான் அதை செய்ய ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா. நான் கீழே குனிந்து என் கயிற்றை எடுத்தேன்; ஒரு முடிச்சு போட்டேன்; அந்த கயிற்றை கீழே எறிந்துச் சென்று விட்டேன். பாருங்கள்? என்னால் அதைச் செய்ய முடியவில்லை. பாருங்கள்?
81. “ஒரு கிறிஸ்தவனாக என்னால் இருக்கவே முடியாது.” என்றேன். ஆனால் ஒன்றை உங்களுக்கு கூறட்டும், அங்கே ஓஹியோ தெருவில் அந்த இரவில் ஆவியானவர் எனக்குள் வந்தபோது என் கோப சுபாவத்தை நீக்கினது. அன்றோடு அது ஒழிந்தது. நான், “என்னால் அதைச் செய்ய முடியாது. நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது, ஏனெனில் என்னால் அதை மேற்கொள்ள முடியாது. அது எனக்குள்ளாக பிறந்திருக்கின்ற ஒன்று. பையனே, என் அப்பா முரட்டுத்தனமானவர்; பாதி இந்தியரான என் தாயும் கூட, மதுவை கடைசித் துளிவரை விடாமல் குடிக்கும் குடிகாரனிடம் சண்டை போடும் அளவிற்கு கோப சுபாவம் கொண்டவர்களாயிற்றே. அப்படியிருக்க நானா? ஓ, நான்... என்னிடம் சண்டைக்கு வருபவர்கள் கடும் உதை வாங்குவார்களே; அவ்வளவுதான். அவர்களை அடிக்க ஒரு ஏணியின் மீது ஏறிச் செல்ல வேண்டியிருந்தாலும் கூட நிச்சயமாக நான் எறிச் சென்று அடிப்பேனே” என்றேன்.
82. ஆனால் இப்பொழுதோ, நீங்கள் என்னை வெளியே தரதரவென்று முரட்டுத்தனமாக இழுத்துச் சென்று என்னை அடித்துப் போடுங்கள்... பாருங்கள்? ஏன்? நான் இல்லை? நான் இங்கே எதைக் கூற முயன்று கொண்டிருக்கிறேன்? ஏதோ ஒன்று சம்பவித்தது. அந்த பழைய வலிமை, அந்த பழைய வில்லியம் பிரன்ஹாம் மரித்துவிட்டார், ஒருவர் உள்ளே வந்து விட்டார். ஆகவே அது என் விரோதிக்காக நான் வருத்தப்பட்டு மன மிறங்கச் செய்கிறது. யாராவது எனக்கு ஏதாவதொரு பொல்லாங்கு செய்தால், நான் அவர்களுக்கெதிராக ஜெபம் செய்வதில்லை, நான் அவர்களுக்காக ஜெபிப்பேன். இது சம்பவிப்பதற்கு முன்னர், நான் அன்றொரு இரவு, நியூ இங்கிலாந்தில் பரிசுத்த ஆவியானவர் அந்த சோதனையை எனக்களித்தார். அவர் எனக்கு வல்லமையை அளித்து அந்த மக்களை நோக்கி நீ என்ன கூற விரும்புகிறாயோ அதை அப்படியே பேசு” என்று கூறினார். அவர்கள் நடந்து கொண்ட விதமானது... நான் அங்கே பார்த்து “நான் உங்களை மன்னிக்கிறேன்” என்று கூறினேன். சரியாக நான் அவ்விதமாகத் தான் கூற வேண்டு மென்று அவர் எதிர்பார்த்தார். பாருங்கள்? உங்கள் விரோதியை மன்னியுங்கள். பாருங்கள்? உங்களை பாவம் நிறைந்தவர்களாகச் செய்கிறவைகள் இந்த ஆவிகள் தாம். அந்த ஆவிகளை கவனியுங்கள்.
83. இங்கே ஒருவன் வருகின்றான். அவன் அங்கே அந்த கல்லறையில் இருந்தான். யாராவது ஒருவர் அவ்வழியாய் வந்தபோது, இவன் வெளியே ஓடிச் சென்று அவர்களை தாக்கி மேற்கொண்டு விடுவான் என்று வேதாகமம் கூறுகின்றது. அவன் மிகவும் கொடியவனாக இருந்தபடியால் அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. ஆனால் ஒரு நாளிலே மிக அதிக வல்லமை பொருந்திய ஒன்று அந்த வழியாக நடந்து சென்றது. அவன் லேகியோனாகிய அந்த அநேகமான, வெறுப்பு, மனக்குரோதம், பகைமை, பிசாசு போன்றவற்றால் பிடிக்கப்பட்டு, அவன் அங்கே நடந்து கொண்டிருந்தான், அவன் பெரிய ஆளாக இருந்தான். அவர்கள் அங்கே சென்று, ஒரு படையாகச் சென்று அவனை சங்கிலிகளால் கட்டுவார்கள்; அவனோ அந்த சங்கிலிகளை முறித்துப் போடுவான். அந்த பிசாசு அவனுக்குள்ளாக இருந்தது. அங்கே அவன் இருந்தான். அவன்...?... அவன் இங்கே ஜெபர்சன்வில்லில் போற்றுதலுக்குரிய நட்சத்திரமாக இருந்திருப்பான். நிச்சயமாக இருந்திருப்பான். அவன் அந்த பெரிய... சில வாலிப பருவ பையன்கள் “ஓ, அவன் பெரிய உருவ மனிதன்” என்றிருப்பார்கள். இரு நூறு பவுண்டுகள் எடை கொண்டு அதே நேரத்தில் ஒரு துளி கூட மனிதனாக இராத மனிதரை நான் கண்டிருக்கிறேன். அது மனிதத்தன்மையல்ல, அது மிருகத்தன்மை. பாருங்கள்?
84. ஆனால் அங்கே மெலிந்த, தோள் சரிந்த ஒரு ஆள் ஒரு நாளிலே அந்த சாலையிலே வந்து கொண்டிருந்தார், தேகம் சிறிது வளைந்தவராக காணப்பட்டார் (நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது, அவருக்கு முப்பது வயது தான், ஆனால் ஐம்பது வயது போல் காணப்பட்டார் என்று வேதம் கூறுகிறது) ஒரு நாள் அந்த சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். ஆகவே இவன், “ஓ, அந்த சிறிய ஆளை பிடித்து சுழற்றி சுழற்றி வீசி அடிப்பேன்” என்றெண்ணி அவரை நோக்கி ஓடினான். ஆனால், ஓ, என்னே, அந்த ஒன்றை அவன் சந்தித்த போது, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவனை அந்த பிசாசுகள் பிடித்திருந்தன. இப்பொழுது கவனியுங்கள். அந்த நாளிலே... அவன் பிசாசினால் மிகவுமாக பிடிக்கப்பட்டிருந்தான்
85. இப்பொழுது இந்த, இதை நான் உங்களுக்கு ஆணித்தரமாக்க நான் விரும்புகிறேன். அவன் - அந்த பிசாசு அவன் நாவை உபயோகித்து பேசும் அளவிற்கு அந்த மனிதன் பிசாசிற்கு முழுவதுமாக எதிர்ப்பின்றி இணங்கிப் போயிருந்தான். இப்பொழுது, தேவன் உங்கள் நாவை உபயோகித்து பேசத்தக்கதாக நீங்கள் உங்களைத்தாமே முழுவதுமாக தேவனிடம் இணங்கி கீழ்ப்படிந்திருக்கலாமே, அது சரியே! அதைத் தான் நான் வலியுறுத்தி கூறுகிறேன். நான் ஒரு பிரசங்கம் செய்து அது அர்த்தமுள்ளதாக இருக்குமானால், நான் என்னை தேவனிடம் இணங்கச் செய்ததால்தான், வில்லியம் பிரன்ஹாமை அகற்றி விட்டு, கிறிஸ்து தலமை எடுத்து பேச ஆரம்பிப்பதால் தான். பாருங்கள்? அவர் பாஷையில் பேச முடியும்.
86. இப்பொழுது கவனியுங்கள். அந்த தீய ஆவி அவனை மிகவும் அதிகமாக பிடித்திருந்தது, ஏனென்றால் அந்த ஆவியானது அவனை மிக... தங்களுடைய நேரமானது வந்து விட்டதென்பதை அந்த பிசாசுகள் அறிந்திருந்தன, ஏனெனில் அவை அன்பை சந்தித்தன. பாருங்கள்? ஆகவே அவைகள், “அவனை சற்று தொல்லைக்குள்ளாக்குவோம்” என்றன. அப்பொழுது அந்த எல்லா... இப்பொழுது என்ன சம்பவித்ததென்று சற்று கவனியுங்கள். அவன், “என்ன, நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த சிறிய மெலிந்த சரீரத்தில், ஒரு சிறிய மெலிந்து காணப்படுகின்ற ஆளைப் போன்ற நீர் வரவேண்டும்?” “நீர் ஏன் இவ்விதமாக வருகின்றீர்,” என்றான். மேலும், “நீர் யார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர்தாம் இஸ்ரவேலின் பரிசுத்தராயிற்றே, அப்படியானால் ஏன் நீர்...? (இப்பொழுது கவனியுங்கள்! வருங்காலத்தில் பிசாசுகளுக்கு வேதனை அளிக்கப்படப்போகிற ஒரு தருணம் உள்ளதென்று நீங்கள் விசுவாசிக்கவில்லை என்றால் இந்த பிசாசுகள் அறிக்கையிடுவதை சற்று கவனியுங்கள்) “அந்த காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ?” (ஆங்கில வேதாகமத்தில் அந்த (The) உள்ளது - தமிழாக்கியோன்) வருங்காலத்தில் ஒரு வேதனையானது அவைகளுக்கு உண்டு என்பது அவைகளுக்குத் தெரியும். “அந்த காலம் வருமுன்பே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ?” பாருங்கள்.
அப்பொழுது இயேசு, “உன் பேர் என்ன?” என்று கேட்டார். அந்த பெயர் அவருக்கு தெரியும்; ஆனால் அவைகள் அதை அறிக்கையிட வேண்டுமென அவர் விரும்பினார்.
“நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் நாங்கள் லேகியோன் எனப்படுகிறோம்” என்றான் அவன். மேலும் அவன் “நீர் தாமே இந்த மனிதனை விட்டு எங்களை துரத்தப் போகிறீரென்றால்...?,” என்றான்.
87. இயேசு அங்கே ஒரு சிறிய மெலிந்த ஆளாக நின்று கொண்டிருப்பதையும் (பாருங்கள்?) ஏறக்குறைய ஒரு முழு சேனையையும் அடித்துப்போட்டு தோற்கடிக்கக்கூடிய ஒரு மனிதனையும் கவனியுங்கள்; சங்கிலிகளும் கூட அவனைக் கட்டி அடக்க போதுமானதாக காணப்படவில்லை. பாருங்கள், அது மாம்ச பலத்தினால் அல்ல. மாம்ச பலத்தினாலே அதைச் செய்ய முடியாது. உன்னுடைய ஜீவியத்தில் இருக்கின்ற பரிசுத்த ஆவியின் வல்லமை தான் அதைச் செய்யும். பாருங்கள்?
88. அவன், “அந்த காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த வேண்டாம்; நீர் எங்களை துரத்துவீரானால்...
(அவைகளின் கீழ்த்தரத்தைப் பாருங்கள், துஷ்டத்தனம்) நீர் எங்களைத் துரத்துவீரானால், எங்களை அப்படியே உலகத்திற்குள்ளாக கட்டவிழ்த்து விடவேண்டாம், ஏனெனில் வேறு யாருக்குள்ளாவது நாங்கள் செல்வோம் என்பதை உடனே தீர்மானிப்பது கடினம். நீர் எங்களை துரத்துவீரானால்... யாராவது ஒருவருக்குள் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம்; இன்னும் அதிகமான கீழ்த்தரச் செயல்களை நாங்கள் செய்ய விரும்புகிறோம்” என்று கூறினான். அது பிசாசாகும். “அவனை ஒரு கை பார்த்துக்கொள்கிறேன்.” (சகோதரன் பிரன்ஹாம் கீழ்த்தரச் செயலை முகபாவத்தில் தெரிவிக்கின்றார் - ஆசி) பாருங்கள்? அது பிசாசாகும். “நான் அவனை பழிக்கு பழி வாங்குவேன்.” பாருங்கள்? நினைவில் கொள்ளுங்கள், அங்கு நின்று கொண்டிருப்பது உங்கள் சகோதரனாகும், ஆனால் பிசாசானவன் அவன் மேல் இருக்கிறான். பாருங்கள்? “கீழ்த்தரமான ஏதாவதொன்றை நாம் செய்வோமாக. இந்த காரியத்தின் நிமித்தமாக நாம் இந்த கதரேனரை சற்று அவதிக்குள்ளாகும் படிக்குச் செய்வோம்” என்று கூறி... அவைகளின் தலைவன் “நாம் அந்த பன்றி கூட்டத்திற்குள்ளாக சென்று விடுவோம்” என்று கூறினது.
89. இயேசு “உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஆனால் அவனை விட்டு வெளியே வாருங்கள்!” என்றார். ஓ, என்னே! அந்த விதமான சிறிதான மெல்லிய ஆள் அந்த பெரிய பிசாசுகளின் கூட்டமாகிய லேகியோனிடம் பேசுவதைப் பாருங்கள்... “இவனை விட்டு புறப்பட்டுப் போங்கள்! உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். “அப்பொழுது அவைகள் அந்த பன்றிகளுக்குள்ளாகச் சென்றன, அந்த பன்றிகள் திடீரென்று உடல் குலுங்கின, அந்த பன்றிகளுக்கு திடீரென்று குலுங்கி எழுச்சியுறச் செய்தன. ஆகவே அவைகள் நேராக ஆற்றண்டை சென்று, ஆற்றில் மூழ்கி, பாய்ந்து அமிழ்ந்து மாண்டது. அது சரிதானே?
90. இப்பொழுது அவைகள்... ஆம், பிசாசுகள் அவைகளினின்று வெளியே சென்றன, ஏனெனில் பன்றிகள் மாண்டு போகும் படிக்குச் செய்து விட்டிருந்தன. அவைகளை திடீரென்று எழுச்சியடையச் செய்தன. மற்ற எவரைப் போன்றே அவைகளுக்கு திடீரெழுச்சியுண்டாயிற்று. கோபத்தினால் எழுச்சியுறுகிற ஒரு நபரை நீங்கள் கவனித்துப் பார்த்ததுண்டா? ஆம், அது தான் - அதைப் போன்று தான் இதுவும். அது அந்த பிசாசுகள் காண்பீர்களானால், நீங்கள், “உம், கதரேனரிடத்தில் என்ன சம்பவித்தது என்பதை நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன்” என்று கூறுங்கள். பாருங்கள்? அது முற்றிலுமாக சரியே. இன்னும் சில உள்ளே வந்து அவனை முற்றிலுமாக பைத்தியமாக்கி விடுகின்றன; ஏனெனில் பைத்தியம் பிடித்தலில் முதல் கட்டம் கோபமே என்று மருத்துவர் உங்களிடம் கூறுவார். பைத்தியம் பிடித்தலின் முதல் கட்டம் - மேயோ மருத்துவர்களும் அதைத் தான் கூறுகின்றனர்.
91. சகோதரன் பாட், அது சற்று கல்வியறிவில்லாத கரடு முரடான பதிலாயிருந்திருக்கும். நான் அறிந்துள்ளதை மாத்திரமே உரைத்தேன், சற்று அது எதிர்ப்பாராத ஒன்றுதான்.