92. நான்... நான் மறந்து விட்டேன், அன்றொரு நாளிலே அதைப் பெற்ற போது நான் இதை பார்த்தேன், ஆனால் அது என்னவென்பதை நான் மறந்து விட்டேன். இந்த அருமையான நபரின் கேள்விக்கு கூடுமானவரை நாம் பதிலளிப்போமாக. ரோமர் 7:22, சரி. இருபத்தைந்து, என்னை மன்னியுங்கள். ரோமர் 7,... சமயத்தில் இரு பக்கங்களை புரட்டி விட்டேன். பாருங்கள்?
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே-ஆதலால் நானே என் மனதினாலே - என் - என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமானத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப் பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்.
இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். நான் அதை சரியாக வாசிக்கவில்லை.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே-ஆதலால் நானே என் மனதினாலே - என் - என் மனதினாலே தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப் பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்.
93. அது சரி. சரியாக அதைத் தான் பவுல் அநேக முறைகள் கூறியிருக்கிறான். நான் நன்மையானதைச் செய்யும்போது, தீமையும் இவ்விடத்திலிருக்கிறது. பாருங்கள்? நீங்களும் சரியாக அதைத்தான் செய்கிறீர்கள். உங்களுடைய மனதினாலே, அது தான் உங்களுடைய இருதயமாகும். பாருங்கள்? இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், உங்கள் மனதினாலே நீங்கள் சிந்திப்பதில்லை; அல்லது உங்கள் கண்களினாலே நீங்கள் காண்பதும் கிடையாது. நீங்கள்... உங்கள் இருதயத்தினாலே நீங்கள் காண்கின்றீர்கள். உங்களுக்கு அது தெரியுமா? உங்கள் இருதயமானது தனக்குள்ளாக உங்களையும் இன்னும் வேறொரு நபரையும் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நான்கு வருடங்களுக்கு முன்னர்தான் விஞ்ஞானமானது அதைக் கண்டு பிடித்ததென்று நீங்கள் அறிவீர்கள். இருதயத்தில் ஒரு சிறிய அறை, அங்கு ஆத்துமா வாழ்கிறதென்று அவர்கள் கூறுகின்றனர்.
94. நீங்கள் எப்பொழுதாவது உள் உணர்வு நிலை குறித்து கேள்விபட்டுள்ளீர்களா? நீங்கள் ஏதாவதொன்றை செய்ய ஆரம்பித்து “ஓ, நான் அதை நல்ல முறையில் செயல்படுத்துகிறேன்” என்று நீங்கள் நினைக்கையில், உங்கள் உள் உணர்வு நிலையோ வேறொன்றை உங்களுக்கு கூறுகின்றது.
95. பொய் பேசுவதைக் கண்டு பிடிக்கும் ஆற்றலுடைய பொறிக் கருவியை (lie detector) அவர்களால் உபயோகப்படுத்த முடிகிறது... என் அருமை நண்பர் வழக்கறிஞர் ராபின்சன் அங்கு பின் வரிசையில் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன். அது பயன்படுத்தப்படும் போது அதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா இல்லையாவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நான் அதைப் பார்த்திருக்கிறேன் - இங்கே - இங்கே கர்த்தருடைய தூதனைக் குறித்து நான் கூறினது உண்மைதானா என்று கண்டறிய என்னை அந்த பொறிக் கருவியைக் கொண்டு, சோதனைக்குட் படுத்தினார். ஆகவே, அந்த பொறிக் கருவியை உங்கள் எதிரில் வைத்து விட்ட பிறகு இந்த - இந்த காரியத்தை நான் செய்ய வில்லை என்று உங்களால் கூடுமானவரை மிக அருமையாக மெருகேற்றபட்ட விதமாக கூறினாலும்- நீங்கள் ஒரு குற்றவாளியாக இருந்து அந்த பொய்யைக் கண்டறியும் பொறிக் கருவியானது, நீங்கள் கூறுவது பொய் என்று குறியிடு செய்யும். புரிகின்றதா? எப்படி? அது உங்கள் நரம்புகளின் அதிர்வுகளை அந்தப் பொறிக் கருவியானது கிரகிக்கின்றது. பாருங்கள்? அது உங்களுக்கு கூறி விடும். ஏன் அப்படி நிகழ்கின்றது? மனிதன் தன்னுடைய மூல துவக்கத்திலிருந்தே பொய் சொல்லும் படியாக உண்டாக்கப்பட வில்லை. பொய் சொல்வது பாவமாகும், உங்களைப் பொய் பேசும்படிக்குச் செய்வது உங்கள் மீதிருக்கும் பிசாசானவன் தான். பாருங்கள்?
96. உங்கள் சரீர அமைப்பானது பொய் பேசக் கூடாத விதத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் நீங்கள் மறுபடியும் வாழ வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் என்றென்றுமாக, எப்பொழுதுமே வாழும் விதத்தில் தான் உண்டாக்கப்பட்டு, சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் பாருங்கள், பாவம் உள்ளே வந்து சரீரத்திற்கு மரணத்தைக் கொண்டு வந்தது. அப்படியானால், பாவமானது உள்ளே வந்து சரீரத்திற்கு மரணத்தைக் கொண்டு வருமானால், அப்பொழுது சரீரமானது மரித்துத்தானாக வேண்டும். ஆனால் அதற்குள்ளாக நித்திய ஜீவனால் வாசம் செய்ய முடியும், இந்த ஆவியானது உனக்குள்ளாக மாற்றப்படும் போது நீ நித்திய ஜீவனை கொண்டிருக்கிறவனாக இருக்கின்றாய். கடைசி நாளிலே தேவன் அந்த சரீரத்தை மறுபடியுமாக எழுப்புவார். அவர் அதைச் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.
97. ஆகவே என்னுடைய சிந்தை-சிந்தை... அவன் வேறொரு இடத்தில், “ எனக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது” என்று கூறுகிறான். இப்பொழுது, அந்த சிந்தையில் நீங்கள்-கிறிஸ்துவின் சிந்தையுடன் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். பாருங்கள், உள்ளே இருக்கின்ற பகுதி (பாருங்கள்?), உள்ளே இருக்கின்ற பங்கு, அதனால் நீங்கள் தேவனுக்கு ஊழியம் செய்கிறீர்கள். அந்த உள் உணர்வு நிலை, அங்கே தான் விசுவாசமானது நங்கூரமிட்டு தங்கியிருக்கின்றது.
98. நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இங்கே இருக்கின்ற மக்களாகிய நீங்கள் அநேக முறைகள், உங்களில் அநேகர் ஏதோ ஒன்று நடக்கப்போகின்றது என்று அறிந்திருந்த நேரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது நடந்திட முடியாத ஒன்றாக அது இருந்திருக்கும், ஆனால் அது நடந்திருக்கும், அது சம்பவிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறே நீங்கள் எப்பொழுதாவது உணர்ந்திருப்பீர்களா? அது தான் விசுவாசம், அந்த உள் உணர்வு நிலையானது கிரியை நடப்பித்துக் கொண்டிருக்கிறது.
இப்பொழுது, இங்கே சிறிது உஷ்ணமாக காணப்படுகிறதென்றால், வெப்பம் சற்று அதிகரிப்பதை நீங்கள் உணர்ந்தால் அங்கே இருக்கின்ற அந்த கருவியை இயக்கிக் கொள்ளலாம்.
99. இப்பொழுது, அங்கே உள்ளே அந்த உள் உணர்வு மனசாட்சியானது (பாருங்கள்?) அங்கே உங்களுடைய சிந்தையானது. இப்பொழுது இயேசு “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்... (இப்பொழுது நான் எடுக்க நினைத்தது இதுவல்ல) “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்”. இப்பொழுது தேவனுடைய ராஜ்யத்தை உங்களால் காணமுடியாது, ஏனெனில் பரிசுத்த ஆவி தான் தேவனுடைய ராஜ்யமாகும். “இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தை வல்லமையோடு காணுமுன் மரணத்தை ருசிபார்ப்பதில்லை”, என்று, அவர் கூறினார். “அப்படியானால் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே” என்று வேதாகமம் கூறுகின்றது. அது உங்களுக்குள் இருக்கிறது, அந்த பரிசுத்த ஆவி, அதை உங்கள் கண்களாலே, உங்களால் காணமுடியாது. ஆகவே காண்பது என்றால், “புரிந்து கொள்ளுதல்” என்று அர்த்தம்.
100. நீங்கள் ஏதாவது ஒன்றை நோக்கிப் பார்த்து, சரியாக அதை நோக்கிப் பார்த்துக் கொண்டு, “உம், என்னால் எதையுமே காணமுடியவில்லை, என்னால் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறுவீர்களானால், உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அர்த்தமாகும். புரிகின்றதா? புரிகின்றதா? உங்களால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காண்பது என்றால் “புரிந்து கொள்ளுதல்” என்று பொருள்படும். ஆனால் உங்கள் கண்களால் எதைவேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம். ஆனால் உங்களுக்குள் என்ன இருக்கின்றதோ அதைக் கொண்டு தான் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், அதைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள். பாருங்கள்? தேவனுடைய கண்களைக் கொண்டு நீங்கள் காண்கிறீர்கள்.
101. ஆகவே இப்பொழுது, உங்கள் கருத்திலே நீங்கள் இருங்கள். நீங்கள் தயாரென்றால் உங்களுக்காக அருமையான ஒரு கருத்து இங்கேயுள்ளது. ஒரு கிறிஸ்தவன் தன் கண்களால் காணாத காரியங்களை பார்த்துக்கொன்டிருக்கிறான் (பாருங்கள்?). ஏனெனில் நாம் காணப்படாததைத் தான் நாம் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாருங்கள்? எப்படி நீங்கள் அதைப் பார்க்கின்றீர்கள்? உங்களுடைய உள்ளார்ந்த கண்ணின் மூலமாகத்தான். விசுவாசத்தினால் நீங்கள் அதைக் காண்கிறீர்கள். ஆகவே இப்பொழுது, நாம் அதை நிரூபிப்போம்: முழு கிறிஸ்தவ கவசமானது காணக்கூடாத பண்புகளால், காரியங்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவகவசம் என்றால் என்ன? யாரோ ஒருவர் “பார்ப்பது தான் விசுவாசமாகும்” என்கிறார். அந்த நபர் ஒருபோதும் ஒரு கிறிஸ்தவராக இருக்க முடியாது, ஏனெனில் கிறிஸ்தவ கவசமானது இதைக் கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது, அதுதான்; அன்பு. நீங்கள் எப்பொழுதாவது அதைக் கண்டிருக்கிறீர்களா? அது செயல்படுத்தப் படுகையில் அதைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் அன்பை கண்டதில்லை. உங்கள் கண்களைக் கொண்டு ஒரு பொருளாகக் காணமுடியாது. அன்பின் ஒரு பகுதியை உங்களிலிருந்து வெளியே எடுங்கள், அது எவ்வாறு காணப்படுகிறது என்பதை நான் பார்ப்பேனாக. பாருங்கள்? அன்பு, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், விசுவாசம் - விசுவாசம், நற்குணம் (பாருங்கள்); சரீரப்பிரகாரமான கண்களாலே முழு கிறிஸ்தவ கவசமானது காணப்படாததாக உள்ளது, ஆனால் அது இருதயத்தாலே புரிந்து கொள்ளப் படுகின்ற ஒன்றாக இருக்கிறது! உங்களுக்குப் புரிகின்றதா. உங்களுக்கு புரிகின்றதா.
102. பவுல், “என் மனதினாலே... (“அவன் கிறிஸ்துவின் சிந்தையை உடையவனாயிருக்கிறேன்!” என்று கூறினான்) “நானே என் மனதினாலே தேவனுக்கு ஊழியம் செய்கிறேன், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ் செய்கிறேன்” என்று கூறினான். அது என்ன? இன்றிரவு என் மாம்சமானது, “நீ மிகவும் களைப்படைந்திருக்கிறாய். உன் தொண்டை மிகவும் கரகரப்பாகக் காணப்படுகிறது. அங்கே குளிரில் வெளியே சென்று வந்தாய். இன்றிரவு உன்னால் நீ சபைக்குச் செல்ல முடியாது,” என்று கூறுகிறது. அதுதான் மாம்சத்தின் பிரமாணம். “நீ அவர்களை தொலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூறி கேள்விகளை சகோதரன் நெவிலுக்கு அனுப்பி அவரை பதிலளிக்கும் படிக்கு கூறி விடு”. ஆனால் பாருங்கள். நான் அதைச் செய்வதாகத்தான் வாக்களித்துள்ளேன். பாருங்கள்?
103. இப்பொழுது, என் சிந்தையில், உங்களுக்குள்ளாக பரிசுத்த ஆவியானவர், “நீ உன் வாக்கைக் காத்துக் கொள்” என்று கூறினார்.
ஆனால் மாம்சமே, “நீ மிகவும், களைத்துப் போயிருக்கிறாய்” என்று கூறுகிறது. பாருங்கள்?
104. இப்பொழுது மாம்சமானது, “இதோ பார், நீ மிகவும் அழகானவள், பள்ளியில் நீ தான் மிகவும் அழகுள்ள ஒருவள். ஆகவே உன்னுடைய பரிசுத்த உருளையான தாயும், உன் மூடபக்தி வைராக்கிய தந்தையும் கூறுவதின் மேல் கவனம் செலுத்தாதே. புரிகிறதா? பள்ளியில் நீ தான் அழகாகக் காணப்படுகின்ற பெண்மணியாவாய்” “நீ தான் அழகுள்ள வாலிபன், சிறப்பாகக் காணப்படுகிற பையன், உறுதியாக அமைக்கப்பட்ட கட்டுடல் கொண்டவன் நீ. நகரத்திலேயே நீ தான் புகழ்பெற்றவன்,” என்று கூறும். நீங்கள் பாருங்கள்? அந்த - அந்த... ஆகவே உங்களுடைய அவயவங்களை அதற்கு ஒப்புவித்து விடுகிறீர்கள், பிறகு எப்படி நீங்கள் வெளியே வருகிறீர்கள்? ஒவ்வொரு முறையும் அதன் கடைசியில்... பாருங்கள்?
105. பவுல் “என் மாம்சமானது எப்போதுமே அதற்கு ஒப்புவிக்கவே விரும்புகிறது,” என்றான். உங்கள் மாம்சமும் அவ்விதம் தான் செய்கின்றது. பாருங்கள்? ஆனாலும் இருதயத்தில் இருக்கின்ற தேவனுடைய ஆவியின் பிரமாணமானது மாம்சத்தை மேற்கொண்டு, செய் என்று இருதயமானது எதைக் கூறுகிறதோ, அதற்கு சரீரத்தை கீழ்படியும் படி செய்கின்றது. அல்லேலூயா!
106. கவனியுங்கள், ஒரு பாவிக்கு அவ்விதமாக அது செய்யக் கூடுமென்றால், வியாதிக்கும் கூட அது கிரியை செய்யாமலிருக்குமோ? இருதயத்திலிருக்கின்ற தேவனுடைய ஆவியின் பிரமாணமானது “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்” என்பதை அறிந்திருக்கிறது, அவை தாமே தங்களுடைய வல்லமையால் நின்று அந்த சரீரத்திலிருக்கின்ற அந்த வியாதியானது தங்களுக்கு கீழ்ப்படியும் படிக்குச் செய்கின்றது, ஏனெனில் அது பிசாசாகும். உங்களுக்கு புரிகின்றதா. வியூ! இது மிகவும் ஆழமான ஒரு காரியமாகும். நான் உங்களுக்கு அதைத்தான் கூறுகிறேன். அதுதான். பாருங்கள்.
107. இப்பொழுது, பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணம் உங்கள் மாம்சத்தில் கிரியை செய்கின்றது, ஆனால் ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் உங்கள் இருதயத்தில் கிரியை செய்கின்றது. ஆகவே உங்களுடைய இருதயம், உங்கள் இருதயத்திலுள்ள உங்கள் ஆவியானது செய் என்று எதைக் கூறுகிறதோ அதற்கு சரீரமானது கீழ்ப்படியும்படிக்குச் செய்யும். அது முற்றிலும் சரியே. இப்பொழுது, அதைத் தான் பவுலும் கூறினான். மாம்சமானது எப்பொழுதுமே, “நான் மிகவும் களைப்புற்றிருக்கிறேன்; என்னால் முடியவில்லை; நான் போதுமானவன் அல்ல; என்னால் அதைச் செய்ய முடியாது” என்று கூறும்.
நான் இங்கே லாயிஸிடம் அல்லது டோலெரஸ் அல்லது யாரோ ஒருவர் என்னிடம் பரிசுத்த ஆவியைக் குறித்து அல்லது அதற்கடுத்த ஒன்றைக் குறித்து பேசிக் கொண்டிருந்த போது நான் கூறினேன், “என்ன...”
டோலெரெஸ் “நான் நலமாக உணரவேண்டிய அச்சமயத்திலே அதற்கு மாறான ஒரு விதத்திலே நான் உணரத்தக்கதாகச் செய்தது என்ன?,” என்றார்கள்.
108. நான் “அந்த பிசாசுதான். அதைப் பெற்றுக் கொள்ள தயாராக நீங்கள் இருப்பதை அவன் கண்டான். “ஒரு சிறு தைரியமூட்டும் தடையை அவள் மீது நான் வைப்பேன் (சகோதரன் பிரன்ஹாம் அதை விவரிக்க ஒரு சிறு சத்தத்தை உண்டாக்குகிறார் - ஆசி), அதை சிறிது அவள் பேரில் அதிகரித்து, அவளை சிறிது அமைதிபடுத்தி விடுவேன்! என்றான்,” பாருங்கள்? ஆனால், ஓ, என்னே, அந்த சமயத்தில் தான் நீ எழும்ப வேண்டும்! தேவன் உனக்களித்த உன்னுடைய உரிமைகளை உரிமை கோர வேண்டும்”, என்றேன். அதைத்தான் பவுல் கூற விழைகிறான். பாருங்கள்? அந்த... “எப்பொழுதுமே” - அவன் “நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண் டென்று... காண்கிறேன்” என்று கூறுகிறான்.
109. நான், நீ என்ன செய்ய வேண்டுமென்று கூறட்டும். இதை நான் கவனித்திருக்கிறேன், என் மனைவி மற்றும் நான்... நான் சற்று துரிதமாக முடிக்கிறேன், ஏனெனில் இன்னும் சில நிமிடங்கள் தான் எனக்கு உள்ளன, இன்னும் சில பெரிய கேள்விகள் என்னிடம் உள்ளன. நான் உங்களை நீண்ட நேரம் உட்காரவைக்க விரும்பவில்லை, ஆனால் உங்கள் கேள்விகளுக்கு என்னால் முடிந்த வரை சிறந்த விதத்தில் பதிலளிக்கவே விரும்புகிறேன்.
110. கவனியுங்கள்! காலையில் என்னால் ஆரம்பிக்க முடியும், ஆகவே நான்... இப்பொழுது, ஒரு கூட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லும் படிக்கு தேவன் என்னை வழிநடத்துகிறார், நல்லது, சகோதரனே, எல்லா காரியமும் நடந்தேறுவதை சற்று கவனித்துப் பாருங்கள். அல்லது நீங்கள் என்னை வீட்டிற்குச் செல்ல விடுங்கள், அங்கேயும் நீண்ட தூர தொலைபேசி அழைப்புகள் எனக்கு வருகின்றன. இப்பொழுது நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். சிறு ஜோசப் நேராக என் கழுத்தை நோக்கி என் மீது ஏறி வருவான். சாராள் ஒரு கேள்வியை என்னிடம் கேட்பாள். பெக்கி பியானோவை வாசிக்க ஆரம்பித்து விடுவாள். நான் “உஷ் - உஷ் - உஷ்!” என்பேன். என் கையை அவர்கள் மீது வைத்து, “ஹே, உஷ், உஷ், உஷ், நான் - வியாதியஸ்தருக்காக அப்பா ஜெபிக்கப் போகிறேன்” என்று கூறுவேன்.
“உம், அப்பா, இதோ பாருங்கள், ஜோசப் இவ்வாறு செய்து விட்டான்...” நீங்கள் பாருங்கள்? ஜெபத்தை ஆரம்பித்து விடுவேன். ஜெபம் முடிந்த பிறகு, அவர்கள் தங்கள் பொம்மைகளை எடுத்து அமைதியாக இருப்பார்கள். அது பிசாசாகும். நிச்சயமாக அது அதுவே தான்.
111. பிறகு நான் வந்து, “ஜோசப், நீ இன்ன - இன்ன காரியத்தை செய்யக்கூடாது” என்பேன். உங்களுக்குத் தெரியுமா, முதலாவதாக அவன் ஒரு பழக்கத்திற்குள் வந்து விடுவான் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் பிள்ளைகளிடத்திலும் அதை கவனிக்கலாம், அவர்கள் உங்களிடம் பொய் பேசுவார்கள். ஆம், அது தான் உங்கள் பிள்ளைகள் மேல் இருக்கின்ற பொய்யின் ஆவியாகும். இதற்கு ஒரே ஒரு பரிகாரம் தான் உண்டு. ஒரு பெரிய பிரம்பு அல்ல, உங்களுக்கு தெரியும், சகோதரன் ஜெஸ், நாங்கள் உதை வாங்கின அந்த கோல். நாங்கள் தொல்லையில் சிக்கிக் கொண்டால் பழைய துப்பாக்கிகளிலிருந்து அந்த கோல்களை எடுப்பார்கள், ஹிக்கரி மரத்தின் உறுதி வாய்ந்த கட்டை, உங்களுக்கு தெரியும், பழைய துப்பாக்கி வாய் முகப்பு கட்டைகள். இந்த விதமான பரிகாரம் வேலை செய்யாது. ஆனால் ஜெபம் தான் அந்த தீய பிசாசை அப்பிள்ளையிடத்திலிருந்து துரத்தியடிக்கும். அது சரியே. ஜெபம் தான் அதைச் செய்யும்.
112. ஆகவே உங்கள் சிறு மோலி தன்னுடைய சிறிய காலை உதைத்துக் கொண்டு, அங்குமிங்கும் வெளியே ஓடி, தன்னுடைய சிறு மூக்கை திருப்பிக் கொண்டிருப்பாளானால், அவள் மீதிருக்கும் ஆடைகள் இல்லாமல் போகும் விதத்தில் அவளை நீங்கள் அடிக்கலாம்; ஆனால் இன்னுமாக அவ்விதமாகவே செய்து கொண்டிருப்பாள். ஆனால் நீங்கள் அதை தேவனுக்கு முன்பாக வைத்து, அப்பிள்ளையின் ஆத்துமாவை தேவனுக்கென்று உரிமை கோருங்கள். நீங்கள் அப்படியே செய்து கொண்டு தரித்திருங்கள். எனக்குத் தெரிந்தவரை அது தான் சிறந்த காரியமென்று நான் விசுவாசிக்கிறேன். ஆம், ஐயா! எனக்குத் தெரிந்த வரை அதுதான் சிறந்த ஒரு பரிகாரம், அது ஜெபம் தான்.