113. சரி, என் விலையேறப்பெற்ற நண்பரே, நாம் ஒரே நிமிடத்தில் எபேசியர் 1 ஆம், அதிகாரத்திற்கு திருப்புவோம். இது சரியான பதிலாக இல்லாதிருக்கும் பட்சத்தில் இந்த பொருளைக் குறித்து நீண்ட நேரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நாம் எபேசியர் 1வது அதிகாரத்தை வாசிக்க ஆரம்பிப்போம்.
114. இப்பொழுது, முதல் காரியமாக, இதை நான் கூற விரும்புகிறேன், இந்த, முன்குறித்தல் என்கின்ற வார்த்தையானது பயிற்றுவிக்கப்படாத ஒரு கூட்டத்திற்கு முன்பாக உபயோகப்படுத்துவது ஒரு ஊழியக்காரனுக்கு கடினமான வார்த்தையாக காணப்படும். பாருங்கள்? அது அவ்வாறேதான். நான் அதை உபயோகப்படுத்துவதில்லை. சில நேரங்களில் இங்கே சபையில்... ஆனால் அங்கே கூட்டங்களில், அங்கே வெளியே... எல்லாம் ஒன்றாக எல்லாவற்றிலிருந்தும் ஒன்றாக சேர்க்கப் பட்டிருக்கையில், நான் அந்த வார்த்தையை நான் கவனிப்பேன். நான் முன்னறிவு என்ற வார்த்தையைத்தான் எப்பொழுதும் உபயோகிப்பேன், ஏனெனில் முன்குறித்தல் என்பது தேவனுடைய முன்னறிவேதான். தேவன் முடிவில்லாதவராக இருப்பதால், முன்னறிவின் படியே அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தார், அல்லவென்றால் அவர் முடிவில்லாதவரல்ல. பாருங்கள், பாருங்கள்? என்ன நடக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆதலால் முன்னறிவின்படி அவரால் முன் குறிக்க ஏதுவாயிருந்தது? அதன் காரணமாகத்தான் நான் விசுவாசிப்பதென்னவென்றால், தேவன் - தேவன்...
115. நீங்கள் சுவாசிக்கின்ற காற்றைப் போல; உங்கள் சுவாசம்தான் உங்களுடைய ஆவி என்கின்ற யேகோவா சாட்சிகள் ஸ்தாபனத்தாரின் கருத்துடன் நான் ஒத்துப் போவதில்லை. அது அவ்வாறே இருக்க முடியாது. பாருங்கள் உங்கள் ஆவி உங்களுடைய இருதயத்தில் தான் உள்ளது. பாருங்கள்? நீங்கள் உலகத்திற்கு வருமுன்னறே உங்களுடைய ஆவியைக் கொண்டிருந்தீர்கள். தேவன் எரேமியாவிடம், அவன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னறே அவனைப் பரிசுத்தம் பண்ணி ஜாதிக்கு - ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக்கி, அவனை அறிந்திருந்ததாகவும் கூறினார். (பாருங்கள்?) எரேமியா 1:4.
116. இப்பொழுது கவனியுங்கள். ஆகவே இந்த காரியங்களெல்லாம் முன்னறிவுதான் என்பதை நாம் காண்கிறோம். இயேசு பிறப்பதற்கு முன் - யோவான் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏசாயா அவனைதரிசனத்தில் கண்டு, வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருந்தவன் இவன்தான் என்று கூறினான் - 712 வருடங்கள். ஏதேன் தோட்டத்திலிருந்து, இயேசு கிறிஸ்து உலகத் தோற்றத்திற்கு முன்னர்...
117. எப்படி...? இதை நாம் வாசிப்போமாக. எபேசியர் 1, 1வது அதிகாரம் - 1வது வசனத்திலிருந்து நாம் வாசிக்க ஆரம்பிப்போம்.
...அப்போஸ்தலனாகிய பவுல்... (எப்படி இவன் கூறுகிறான் என்று கவனியுங்கள். பவுல் இவ்விதமாக செய்வது எனக்குப் பிடிக்கும். பவுலை எனக்கு பிடிக்கும், உங்களுக்கும் தானே? ஓ, அவன் கிறிஸ்துவினுடைய அருமையான ஊழியக்காரன் ஆவான். இப்பொழுது இதை கவனியுங்கள்)
தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:
118. கவனியுங்கள், இது உலகத்திற்கு கூறப்படவில்லை; இது ஒரு அயலானுக்குக் கூறப்படவில்லை. இது இயேசுகிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிற சபைக்கு கூறப்படுகிறது (ஓ, இது அருமையானதாக உள்ளதல்லவா?) இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற சபைக்கு. அது... இப்பொழுது இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக எப்படி நீங்கள் செல்கிறீர்கள்? ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். இப்பொழுது - எப்படி... ஆகவே அவன் இதை பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டுள்ள மக்களுக்கு மாத்திரமே கூறுகிறான் (பாருங்கள்?) வெளி உலகத்திற்கல்ல.
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு - தேவனாகிய நம்முடைய பிதா - ஸ்தோத்திரம்: அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்!
119. ஓ, என்னே! இதன் பேரில் சற்று சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு விருப்பமுண்டாகுமா? நல்லது, நமக்கு விருப்பமுண்டு. நிச்சயமாக! அதே பரிசுத்த ஆவி. நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களிலே அவரோடேகூட உட்கார்ந்து, எல்லா ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் தேவன் நம்மை ஆசீர்வதித்திருக்கின்றார் என்று கூறுகிறது, சகோதரி ரோஸ். நான் நம்புகிறேன் - அந்த அது... முந்தின நாளிலே உங்கள் பெயரை என்னால் நினைவு கூற முடியவில்லை. ஜெபவரிசையில் அல்லது ஏதோ ஒன்றில் இருந்தீர்கள் என நான் நம்புகிறேன். பின்னர் அதை நினைவு கூற நான் முயற்சித்தேன். அப்பொழுது நான் - ஆனால் உங்கள் பெயர் ரோஸ் ஆஸ்டின், அது சரியல்லவா...?... இங்கே கூடாரத்திற்கு நீங்கள் எப்பொழுதும் வருவது வழக்கம். அதுவே தான். சரி. இப்பொழுது.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே - எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதம்... (இந்த மேற்கோளை சரியாக நான் வாசிக்கிறேனா என்று நான் பார்க்கிறேன்)
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்: அவர் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.
(இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே அவரோடே கூட கூட்டமாய்க் கூடியுள்ளோம்).
(இப்பொழுது கவனியுங்கள்! எல்லாம் தயாராக இருக்கிறீர்களா?)... தமக்கு முன்பாக... உலகத் தோற்றத்திற்கு முன்னே... (நான் உங்களுக்கு பிரசங்கித்தேன்)... கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே,
120. இப்பொழுது பாருங்கள், அவன் சபைக்கு பேசமுடியும். அவன் அதை குழந்தைகளுக்கு கூற மாட்டான், ஆனால் ஏற்கெனவே கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற ஒரு சபைக்கு அவன் பேசிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது, அவன் ஏதோ ஒரு சபைக்குச் சென்று “இதோ பாருங்கள்” என்று கூற முடியாது. அது கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்ற தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்குத்தான்.
121. இப்பொழுது நீங்கள் “ஆம், நானும் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறலாம். நீங்கள் அப்படித்தான் என்றால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பீர்கள், ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக செல்லக்கூடிய ஒரே வழி அதுவேதானாகும். 1 கொரிந்தியர் 12:13 (பாருங்கள்?) 1 கொரிந்தியர் 12வது அதிகாரம். சரி. “ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக (அது கிறிஸ்துவின் சரீரம்) ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.” இப்பொழுது! அப்படியானால் நாம் ஒரு மனப்பட்டு உன்னதங்களிலே அவரோடு கூட அமர்ந்திருக்கிறோம், பரிசுத்த ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடி நமக்கு மகத்தான காரியங்களை காண்பித்து, நமக்கு போதித்து, காரியங்கள் நிறைவேறும் படிக்குச் செய்து கொண்டிருக்கிறார். ஓ, என்ன ஒரு இடம்.
122. அவன், “அவ்விதமாக அழைக்கப்பட்டவர்களாயிருக்கிற நீங்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்களாகிய உங்களிடம் நான் பேச விரும்புகிறேன். உலகத்தோற்றத்துக்கு முன்னே தமக்குள் தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார், அதைக் குறித்து சற்று சிந்தியுங்கள்.” என்றான். உலகத்தோற்றத்துக்கு முன்னே தேவன் நம்மை தமக்குள் தெரிந்து கொண்டார். இதே பொருளை இன்றிரவில் நான் பேசுவேன் என்பதை உலகத்தோற்றத்திற்கு முன்பே தேவன் அறிந்திருந்தார். அவர் முடிவில்லாதவர். உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே... ஓ! வியூ! பரிசுத்த ஆவியை இப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள். வார்த்தை அதைக் கொண்டு வரும். பாருங்கள்? அந்த விதமாகத்தான் அது வருகின்றது: “பேதுரு இந்த வார்த்தைகளை பேசின போது பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார்.”
123. உனக்கு பரிசுத்த ஆவி கொடுக்கப்படவேண்டுமென்று உலகம் என்ற ஒன்று இருக்கும்முன்னதாகவே தேவனுடைய எண்ணங்களில் நீ இருந்தாய், ஏனெனில் நீ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கும் என்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார்; தாமாகவே அவர் உன்னைத் தெரிந்து கொண்டார். ஏனெனில் நீ வாஞ்சித்தது... நீ அல்லது இயேசு உங்கள் இருவரில் ஒருவராவது பூமியின் மீது இருப்பதற்கு முன்னதாகவே அவர் உன்னை கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார். பிறகு உன்னை தமக்குள்ளாகக் கொள்ளத்தக்கதாக உனக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்பட்ட ஒரு வழியை ஆயத்தம் செய்ய இயேசுவை, மரிக்கும்படிக்கு அவர் அனுப்பினார். ஓ, அது... எனக்குத் தெரியும் நான்... இது தான் சபை, நான் வீட்டில் இருப்பது போல் உணர்கிறேன். ஓ, இது எனக்கு மிகவும் ஐசுவரியமிக்க ஒன்றாகும். இது நான் விரும்பாதது; இது என் வாஞ்சைகளாயிராதது; இது என் சொந்த விருப்பமாய் இல்லாதது; இது என்னுடைய தெரிந்து கொள்ளுதலே அல்ல; இதனுடன் எனக்கு ஒரு தொடர்பும் இல்லாதிருந்தது என்பதை நான் நினைக்கும் போது - ஆனால் உலகமானது துவங்குவதற்கு முன்னதாகவே தேவன் நம்மைக் கண்டு நம்மை ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்திலே நம்முடைய பெயர்களை எழுதி வைத்தார். உலகம் என்கின்ற ஒன்று இருக்கும் முன்பே! தேவனைக் குறித்து பேசுவது என்பது! வியூ!
124. அங்கே நான் அந்த பெரிய கண்ணாடி இருக்குமிடத்தில் நின்று கொண்டிருக்கும் போது... ஒரு நூற்று இருபது மில்லியன் வருடங்கள் நீளமுள்ள விண்வெளியை உங்களால் காண முடியும். (நான் இந்த கண்ணாடியின் மூலமாக பார்க்க தருணமில்லாதிருந்தது, ஆனால் அவர்கள் எடுத்த புகைப் படத்தை நான் கண்டேன்) - நான் அந்த இடத்திலேயே என் கைகளை மேலே உயர்த்தினேன், நான் “நீர் எவ்வளவு மகத்துவமானவர், நீர் எவ்வளவு மகத்துவமானவர்!” என்றேன். அந்த கிரகங்களில் ஒன்றாகிலும் சுழல்வதற்கு முன்பாகவே (அல்லேலூயா!) இயேசு கிறிஸ்துவிற்குள்ளாக தேவன் நம்மைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது, நீர் எவ்வளவு மகத்துவமானவராக இருக்கிறீர். ஆம், ஐயா!
125. உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே, கிரகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, சூரியன் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, சந்திரன் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, வெளிச்சம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்பாகவே, எந்த ஒன்றுமே இருப்பதற்கு முன்னதாகவே, தேவனும் தம்முடைய சிந்தைகளுமாக, தேவன் மாத்திரமே இருந்தபோது, தேவனுடைய நித்திய சிந்தை உன்னை முன்குறித்தலின் படி, முன்னறிவின் படியே உன்னைத் தெரிந்து கொண்டு, நீ பூமியில் இருக்கப் போகிறாய் என்றும், பாவம் என்ற ஒன்று இருக்கும் என்றும் அறிந்திருந்தார்.
126. யாரோ ஒருவர், “அப்படியானால், ஏன் - ஏன் பாவம் இருந்தது?” என்று கேட்டார். அப்படியானால் பாவம் என்ற ஒன்று இல்லாதிருந்தால், ஒரு இரட்சகர் என்கின்ற அவருடைய தன்மை வெளியாகாமலிருந்திருக்கும். அவர் ஒரு இரட்சகராக இருக்கத்தக்கதாக ஒரு பாவி இருக்க வேண்டியதாயிருந்தது. அவர் சுகமாக்குபவராக இருக்கத்தக்கதாக ஒரு வியாதியுள்ள மனிதன் இருக்க வேண்டியதாக இருந்தது. ஆமென்! உங்களுக்கு புரிகின்றதா. அந்த விதமாகத்தான் அது இருக்க வேண்டியதாயிருந்தது. தேவன் தான் அதைக் கண்டு அது அவராலே முன் குறிக்கப்பட்டதாயிருந்தது. பிசாசானவன் காட்சியிலேயே கிடையாது. ஓ, “அப்பா, பிதாவே” என்று பிள்ளைகள் தம்மிடம் அழுது அவர்களை தம்மிடம் கொண்டு வரும் ஒரு கருவியாக சாலையின் ஓரத்திலிருக்கிற குப்பையான அவனை தேவன் உபயோகப்படுத்துகின்றார். அந்த நாளில் தூதர்கள் எப்படிப் பாடுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது எவ்வளவு அற்புதமாயிருக்கும்! நாம் மீட்பின் சம்பவங்களைப் பாடுகையில் தூதர்கள் தலைகளை தாழ்த்துவார்கள்; நாம் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அவர்கள் அறியாதிருப்பார்கள். நிச்சயமாக. அவர்கள் இழக்கப்பட்டவர்கள் அல்ல. அது என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. நாம் எவ்வளவு அருமையாக உணர்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது, நாம் ஒரு காலத்தில் பாவிகளாயிருந்து தேவனிடமிருந்து அகன்றிருந்து, நம்பிக்கையில்லாமல், இரக்கம் இல்லாதவர்களாய், இந்த சீர்கேடான உலகத்திலே தேவனில்லாமல், மரித்துக்கொண்டு, பிசாசின் பாதாளத்திற்கு போய் கொண்டிருந்த வேளையில்; தேவன் தாழ இறங்கி குனிந்து நம்மை தூக்கி எடுத்து, நம்மை மீட்டார்; இப்பொழுது நாம் தூதர்களுக்கு மேலாக இருக்கிறோம். சரியாக இப்பொழுதே!
127. அது என்ன? ஒரு தூதன் பணியாளன் ஆவான். நாமோ குமாரரும் குமாரத்திகளுமாக இருக்கிறோம். அதிகமாக நினைவு கூறப்படுவது யார், உங்களுடைய வேலைக்காரனா அல்லது உங்களுடைய குமாரனா அல்லது குமாரத்தியா? ஓ, என்னே! பரிசுத்தவானுக்கான ஜெபம் ஒரு தேவ தூதனை விட இலட்சக் கணக்கான முறை அதிகம் மேலே செல்லும் (ஆம் ஐயா!) ஏனெனில் அவன் குமாரனாயிருக்கிறான். ஓ, என் சகோதரனே, சகோதரியே. அது சரியே.
128. நீ... சபை... நான் விசுவாசிப்பதில்லை... ஆவியால் நிரப்பப்பட்ட ஜனங்களாகிய நீங்கள் யார் என்பதையும் தேவன் உங்களை வைத்திருக்கின்ற ஸ்தானத்தையும் நீங்கள் எப்போதும் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் தேவனுடைய குமாரர்களாயிருக்கிறீர்கள். ஏன், தேவ தூதன் ஒரு பணியாளன் ஆவான். நீயோ குமாரனாயிருக்கிறாய்! ஒரு தூதனால் ஒரு செய்தியை மாத்திரமே கொண்டு வரமுடியும், ஆனால் அதை செயலாக்கத்தில் கொண்டு வருவது நீ தான். ஆமென்! காட்சியில் இருக்கும் செயலாற்றுபவன் நீ தான். நீ குமாரனாயிருக்கிறாய். உனக்கு செய்தியைக் கொண்டு வரத்தக்கதாக தேவ தூதர்கள் பணியாளர்களாக இருக்கிறார்கள். “நீ இன்ன... இன்னதைச் செய்யும்படியாய் நான் இந்த செய்தியை உனக்கு கொண்டு வந்திருக்கிறேன். இது பிதாவிடமிருந்து வந்திருக்கிறது. நான் இதை உனக்குக் கொண்டு வருகிறேன். ஆம்!” என்று கூறுவார்கள். அவ்வளவேதான். ஆமென்! நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள். அவர் நம்மை முன்குறித்தார்! இப்பொழுது ஒரு நிமிடம் சற்று கவனியுங்கள்.
தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் (கவனியுங்கள், நீங்களாகவே அவ்வாறே இருக்க வேண்டுமென்று முயற்சிக்காதீர்கள், ஏனெனில் உங்களால் முடியாது)... குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... (இப்பொழுது, நாம் தெரிந்து கொள்ளவில்லை... என்னால் அவரை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? நானூறு இலட்சக் கோடி, இலட்சக் கணக்கான, இலட்சக் கோடி, நூறாயிரங்கோடி ஆண்டுகளுக்கு முன்பே எப்படி என்னால் அவரைத் தெரிந்து கொண்டிருக்க முடியும்? ஆனால் அவர் தான் என்னைத் தெரிந்து கொண்டார். ஆமென்? ஓ, சகோதரன் உட், அதுவே தான், பாருங்கள்?)
ஓ, சகோதரனே, இங்கே சில நிமிடங்களுக்கு முன்னர் நான் கண்ட ஒரு கேள்விக்கு இது ஒரு பதிலாக இருக்கும். எங்கோ சற்று முன்னர் நான் கண்டேன்... ஓ ஆம்.
எப்படி ஒரு மனிதனால் தேவனோடு மிக நெருங்கி ஜீவிக்கையில், அவன் பாவமில்லாமல் இருக்க முடியுமா? இதை கவனியுங்கள்.
தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு... உலகத்தோற்றத்துக்கு முன்னே...
129. அவருடைய அன்பு இதைச் செய்தது. என்னுடைய பாவத்துக்கு அவருடைய அன்பு பரிகாரத்தை செலுத்தியது. அவருடைய அன்பு அதை எடுத்துப்போட்டது. இருப்பதிலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தி அன்பு மாத்திரமே. தன்னுடைய மனைவியை மிகவும் நேசிக்கிற ஒருவனைப் பார்ப்பீர்களானால், அவன் தன் மனைவிக்காக உயிரைக் கூட தாராளமாக விடுவான். மேலும் சகோதர அன்பானது...
130. அங்கே நகரத்திற்கு வெளியே இருக்கின்ற இடத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மனிதன் இருந்தார், அவர் சபைக்கு எப்பொழுதேனும் ஒரு முறை சபைக்கு வருவார். அவர் தன் சகோதரனின் வீட்டில் முன்னொரு நாளிலே உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் “சகோதரன் பில்லிற்கு ஏதாவது சம்பவித்தால் என்ன ஆகும்?” என்றார். மேலும் அவர், “நான் சந்தோஷமாக என் மார்பை உந்தித் தள்ளி அவரை தாக்க வரும் துப்பாக்கி குண்டுகளை என் மார்பில் வாங்கிக் கொள்வேன்” என்றார். பாருங்கள்? உனக்காக மரித்தல். அதுதான் அன்பு. தன்னுடைய சகோதரனுக்காக உயிரைக் கொடுக்கும் அந்த மனிதனின் மகத்தான அன்பைப் போல வேறெதுவும் கிடையாது. பாருங்கள்?
131. அன்பினால், அன்பினாலே உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்து கொண்டார். இப்பொழுது கவனியுங்கள்:
தம்முடைய தயவுள்ள சித்தத்தின் படியே நம்மை இயேசு கிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்... (இதோ, முன்குறித்தல் என்கின்ற வார்த்தை) ...முன்குறித்திருக்கிறார்.
132. சகோதரன், மைக். இதைக் குறித்தென்ன? இது அற்புதமானதல்லவா? அவர் உன்னை நேசித்தார். உலகம் என்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே அவர் உங்களை நேசித்தார். உங்கள் சுபாவத்தை அவர் அறிந்திருந்தார்; உங்கள் பலவீனங்களை அவர் அறிந்திருந்தார்; உங்கள் பழக்கங்களை அவர் அறிந்திருந்தார். நீங்கள் என்னவாயிருக்கப் போகிறீர்கள் என்பதையும், உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருந்தார். அவர் அப்பொழுது அங்கிருந்த அந்த மகத்தான பிரபஞ்சத்தை முழுவதுமாக பார்த்து “அவனை நான் காண்கிறேன்” என்றார். உயிரின் ஒரு சிறு தூள் கூட இருப்பதற்கு முன்பாகவே அவர் அதைச் செய்ததால், நீங்கள் தேவனோடு நித்தியமானவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, நீங்கள் நித்தியமாக மாறுகிறீர்கள், ஏனெனில் நீங்கள் தேவனோடிருந்தீர்கள், தேவனின் பாகமாக இருந்தீர்கள். நான் என்ன கூற விழைகிறேன் என்பதை உங்களாலே காண முடிகிறதா? நீங்கள் தேவனைப் போன்றே நித்தியமானவர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள்...
133. என் தந்தை எவ்வளவாக பிரன்ஹாமாக இருந்தாரோ அதே விதமாகவே நானும் பிரன்ஹாமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பிரன்ஹாமின் இரத்தமாக இருக்கிறேன். நான் என் தந்தையுடன் பிரன்ஹாமாக இருக்கிறேன், ஏனெனில் என் தந்தையிலிருந்து நான் பிறந்தவனாயிருப்பதால் அவரோடே நானும் ஒரு பிரன்ஹாமாக இருக்கிறேன். நீங்களும் உட் (Wood) ஆக இருக்கிறீர்கள். ஏனெனில் உங்கள் தந்தைக்கும் உட் என்று தான் பெயர். உங்கள் தந்தை ஜிம் வுட் (Jim Wood) எவ்வளவாக இருந்தாரோ அதேவிதமாக நீங்களும் வுட் (Wood) ஆக இருக்கிறீர்கள். நீங்கள் பாங்க்ஸ் வுட் (Banks Wood) அவ்வளவே. ஆமென்! ஓ, என்னே! நீங்களும் நெவில்தான். ஏனெனில் உங்கள் தகப்பனும் நெவில் ஆக இருந்தார். அவர் எவ்வாறு நெவில்லாக இருந்தாரோ அந்தவிதமாக நீங்கள் நெவில்லாக இருக்கிறீர்கள். மகிமை! தேவனும் நித்தியமானவராக இருப்பதினால் நாமும் நித்தியமானவர்களாக இருக்கிறோம்; ஏனெனில் நாம் தேவனுடைய ஒரு பாகமாயிருந்து, நித்திய ஜீவனின் மூலமாக தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், ஆதலால் நாம் அழிந்து போகவே முடியாது. “கடைசி நாட்களிலே நான் அவர்களை எழுப்புவேன்”.
134. அவர்கள் அங்கே பவுலின் தலையை துண்டிக்க ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்த போது... அவன் அந்த மரண பாதையை கடக்க வேண்டியவனாக இருந்தான். தீமோத்தேயுவிற்கு அந்த கடைசி நிருபத்தை எழுதினான், “நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்! இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார். எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” என்றான்.
அப்பொழுது மரணம், “நான் உன்னை நோக்கி வருகிறேன்” என்றது.
அவன் “உன் கூர் எங்கே?” என்றான்.
பாதாளம் அவனிடம் “உன்னை நான் விழுங்குவேன்” என்றது.
135. அவன், “உன் ஜெயம் எங்கே?” என்றான். அவன் ஒரு உதாரணத்தைக் கொண்டிருந்தான். அவன் திரும்பி கல்வாரியை நோக்கிப் பார்த்து, “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்றான். உங்களுக்கு புரிகின்றதா. ஓ, அது உணர்வுகளை கிளர்ச்சியடையச் செய்யத் தான் வேண்டும்; அது அப்படியே ஆகத்தான் வேண்டும்.
136. ஜீவன்... வார்த்தையானது புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது, ஜீவன், ஜீவனுமாகிய வார்த்தை ஜீவனைப் பிடித்துக்கொள்கிறது, ஆகவே மானிடற்குள்ளாக இருக்கின்ற ஏதோ ஒன்று கூச்சலிடத் தான் வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா, யாரோ ஒருவர், “பில்லி, மக்கள் எழும்பி, தங்கள் கைகளை மேலே அசைத்து அல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லது ஆமென், என்று கூறச் செய்வது எது?” என்றார். வேதாகமம் என்ன கூறுகிறதென்பதை கவனியுங்கள்.
137. பவுல், “நாம் எல்லாரும் அந்நிய பாஷைகளிலே பேசிக் கொள்ளும் போது கல்லாதவர்களாவது... அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் அவன் ஆசீர்வதிக்கப் பட்டவனாயிருந்தால் எவ்விதம் அவன் “ஆமென்” என்று கூறுவான்?” என்றான். பாருங்கள்? நீங்கள் எதைப் பேசுகின்றீர்களோ அதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவர்களாக இருத்தல் வேண்டும். அந்நியபாஷை, அது ஒரு வியாக்கியானம் அல்லது வெளிப்படுத்தலாயிருந்தால் தான்... அதை உங்களால் புரிந்து கொள்ளக் கூடுமானால், அப்பொழுது உங்களால் “ஆமென்” என்று கூற முடியும். அவன் என்ன சொல்லுகின்றான் என்பதை அவன் அறிந்துகொள்ளுகிறான். பாருங்கள்?
138. இப்பொழுது! ஓ, என்னே! அங்கே தாவீதை நோக்கி அந்த சத்துரு வந்து கொண்டிருந்த அந்த நாளைப் பாருங்கள். அவன் அவர்களுக்கு திராட்சரசம் மற்றும் அப்பம் நல்ல இறைச்சியும் அளித்தான். அப்பொழுது அந்த விரோதி வந்து கொண்டிருக்கையில் என்ன செய்வதென்று திகைத்து நின்றார்கள்; இவர்களெல்லாரும் அங்கே வெளியே ஒன்று கூடினார்கள்; எல்லா இஸ்ரவேலரும் விருத்தசேதனத்திற்கு கீழ் ஒன்று கூடினார்கள். (கவனியுங்கள்? இது பழைய யூத விருத்தசேதனத்தின் கீழாகும்) அப்பொழுது அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்தி, “தேவன், நீரே எங்கள் தேவனாவீர். நீர் எங்களை காத்துக் கொண்டு வந்துள்ளீர். நீர் தீர்க்கதரிசியாகிய மோசேயைக் கொண்டு வந்து இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தீர். வனாந்திரத்தினூடாக நீர் அவர்களைக் கொண்டு வந்தீர். அவர்கள் அங்கே இருந்த போது அவர்கள் மீது கைவைக்கவும் கூட யாருக்குமே துணிவில்லை. உம்முடைய சுதந்திரத்தின் அருகில் யாருமே வரவில்லை. அவர்கள் அப்படிச் செய்ய பயந்தனர்,” என்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை சிறியதாக இருந்தது, ஆனால் அவர்களை எதிர்த்து வந்தவர்கள் அப்படியே திரும்பி ஓடினர். ஏனெனில் அவர்களைத் தாக்க வந்தவர்கள், தங்கள் தாக்குதல் தங்கள் மீதே திரும்பக் கண்டார்கள். அவன், “ஓ, நீர் எவ்வளவு மகத்துவமான தேவன். இப்பொழுதும் கர்த்தாவே நாங்கள் பாவம் செய்தோம்... இதோ எங்கள் மனைவிகள், இதோ எங்கள் சிறு பிள்ளைகள்; இந்த மணி நேரத்தில் நாங்கள் இடுக்கமான ஒரு சூழலில் இருக்கிறோம், ஓ, நாங்கள் என்ன செய்வது? விரோதி வந்து கொண்டிருக்கிறானே. நாங்கள் என்ன செய்வது?” என்றான்.
139. அவர்கள் ஜெபித்துக் கொண்டிருக்கையில் ஆவியானவர் கூட்டத்திலிருந்து ஒருவனின் மீது வந்தார். அப்பொழுது அவன், “கர்த்தர் உரைக்கிறதாவது நீங்கள் சண்டையிடமாட்டீர்கள்; அப்படியே தரித்திருங்கள்! (ஆமென்!) அந்த குறிப்பிட்ட வழியாகச் சென்று அங்கே அவர்களைச் சந்தியுங்கள்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். அவர் அப்பொழுது சத்துருக்கள் நடுவில் குழப்பம் நேரிடும் படிக்குச் செய்தார், அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்துக் கொண்டனர். உங்களுக்குப் புரிகின்றதா. உலகத் தோற்றத்திற்கு முன்பே கிறிஸ்து இயசுவுக்குள்ளாக தெரிந்து கொள்ளப்படத்தக்கதாக முன்குறிக்கப்பட்டார்கள். இப்பொழுது…