140. நாம் 1 யோவான் 1:8 முதல் 10 வரை பார்ப்போம். இவைகளை பார்க்க இன்னு சிறிது நேரம் எனக்கிருக்குமானால்... எனக்கிருந்தது; நண்பர்களே, அதை நான் எடுக்கவில்லை. நான் - நான் வெளிய செல்ல முயற்சி... நல்லது, நான் யோவானை பிறகு பார்க்கிறேன், நான்... அது எபிரெயர்களின் அடுத்த பகுதியில் இருக்கும். சரி. 1 யோவான் 1:8 முதல் 10 - யோவான் 1:8 முதல் 10.
நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம். சத்தியம் நமக்குள் இராது
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நமமைச்சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
141. இப்பொழுது, என் சகோதரனே சற்று பொறுத்தருள்க. இங்கே 3வது அதிகாரத்திற்கு திருப்பி 9வது வசனத்தைப் பாருங்கள். சரியாக என் வேதாகமத்திலுள்ள பக்கத்தில் நீங்கள் எடுங்கள். எட்டாம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம்:
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும் படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார் (இப்பொழுது நான் பேசிக் கொண்டிருந்ததைக் குறித்தே தான், உன்னை அறிந்து தேவன் முன் குறிக்கின்றார்)
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்ய மாட்டான்.
142. இவ்வாறு தான் வார்த்தை கூறுகிறது. இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டும்.
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
இப்பொழுது சில மக்கள், “நல்லது, இப்பொழுது, இங்கே ஒரு அருமையான சிறுமி அல்லது அருமையான சிறு பையன் இங்கே உள்ளார்கள். இவர்கள் ஆரம்பத்தில் பாவம் இல்லாதவர்கள்” என்று கூறுகிறார்கள். நீங்கள் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய்கள் பேசுகிறவர்களாக உலகத்திற்கு வந்தீர்கள். நீங்கள் இந்த உலகத்தில் பிறந்த போது, நீங்கள் ஒரு பொய்யனாக, ஒரு திருடனாக இருந்தீர்கள், இருக்கின்ற எல்லா காரியங்களும், எல்லா பாவமும் நிறைந்தவர்களாக இருந்தீர்கள், ஒரு திருடனாக அல்ல, ஏனெனில் நீங்கள் திருடவில்லை. ஆனால் நீங்கள்... நீங்கள் ஒரு பொய்யன் அல்ல, ஏனெனில் நீங்கள் பொய் பேசவில்லை. ஆனால் நீங்கள் பிறந்த போது, அந்த ஆவி உங்களுக்குள் இருந்தது, ஏனெனில் நீங்கள் உலகத்தாராயிருந்தீர்கள். அதன் காரணமாகத்தான் நீங்கள் சீர்படத்தக்கதாக உங்களுள் சீர்திருத்தத்தைக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் மரித்து பிறகு பிறக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். சிலுவையிலறையப்படுதல் இல்லாமல் உங்களால் பிறப்பை கொண்டிருக்க முடியாது; உங்களால் உயிர்த்தெழுதலைக் கொண்டிருக்க முடியாது; நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளாக உயிர்த்தெழத்தக்கதாக உலகத்தின் காரியங்களுக்கு நீங்கள் சிலுவையிலறையப்பட்டாக வேண்டும்.
143. நீங்கள் உங்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களின் பேரில் இன்னும் அதைப் போன்றவைகளின் பேரில் சார்ந்திருக்கப் போகின்றீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய ஆவியால் பிறக்கவே முடியாது. நீங்கள் அதை மறக்க வேண்டும், பவுல் செய்தது போல, அவன் அறிந்திருந்த எல்லாவற்றையும் மறந்து, கிறிஸ்து இயேசுவைத் தவிர வேறெதையும் அறியாதவர்களாய் புதியதாகப் பிறக்க வேண்டும். ஓ... இங்கே... நான் அதை உங்களுக்கு... பாருங்கள்? ஒரு புது சிருஷ்டியாகச் செய்வது பிறப்பாகும். இங்கே இருக்கின்ற அந்த கிரேக்க வார்த்தை, முன்பொரு நாள் நான் கிரேக்க அகராதியில் நான் ஆராய்ந்தேன், பிறப்பு என்கின்ற வார்த்தைக்கு “சிருஷ்டிப்பு” என்று அர்த்தம். அது “நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக புதுச் சிருஷ்டிகளாயிருக்கிறீர்கள்” என்று கூறுகிறது. அங்கே ஒரு வார்த்தை இருக்கிறது, சிருஷ்டி என்ற வார்த்தை சிருஷ்டிப்பு என்பதே. நீங்கள் ஒரு புது சிருஷ்டிகளாக இருக்கிறீர்கள். உலகத்தில் அல்ல, ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக. நீங்கள் ஒரு புதிய...
144. இப்பொழுது, நீங்கள் உலகத்திலிருந்தபோது, ஓ, அந்த ஆடம்பரமான காரியங்கள், நேர்த்தியான ஆடைகள் அல்லது அழகான ஏதோ ஒன்றை உங்களுக்குத் தெரியுமா என்கிறீர்கள். பிறகு...?... அது அந்தப் பக்கத்தில் பாருங்கள்? “ஓ, நான் சபைக்குச் செல்கிறேன், நிச்சயமாக. நான் நரகத்திற்குப் போக விரும்பவில்லை, ஆனாலும் நீங்கள் அறிவீர்கள்... “ ஒரு வாலிபப் பெண்ணிற்கு பழுப்பு நிறக் கண்கள் அழகாக உள்ளன, அல்லது ஒரு வாலிபப் பையனுக்கு சுருளான தலைமயிர்தான் அவனுக்கு வசீகரம் - அல்ல வென்றால் “அவன் ஒரு... “ ஏதோ ஒன்று அல்லது மற்றொன்று - அல்லது இச்சையுள்ள அல்லது குடிக்கின்ற அல்லது ஏதாவது ஒன்று கவனத்தை கவர்ச்கிக்க ஏதோ ஒன்று - என்பதை நீங்கள் அறிவீர்கள். அதுதான் உலகம்; நீங்கள் உலகத்திலிருக்கிறீர்கள். வேதம், “நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களில் தேவ அன்பு என்பதே இல்லை,” என்று கூறுகின்றது.
ஆகவே அதை உங்களிடத்திலிருந்து வெளியே எடுத்துப் போடத்தக்கதாக, நீங்கள் மரிக்கத்தான் வேண்டும், மரிக்க வேண்டும், சிலுவையிலறையப்பட வேண்டும், அடக்கம் பண்ணப்பட வேண்டும், பிறகு கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஒரு புது சிருஷ்டியாக உயிர்த்தெழ வேண்டும்.
145. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் முன்னர்; நீங்கள் நித்தியஜீவனுக்கென்று விசுவாசிக்க வேண்டும். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரை உங்களிடம் நித்திய ஜீவன் கிடையாது, ஏனெனில் அதுதான் நித்திய ஜீவன். பரிசுத்த ஆவி தான் தேவன்; அது உங்களுக்குள் இருக்கின்ற தேவனுடைய ஜீவன் ஆகும். அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அது இப்பொழுது உங்களுக்கு புரிகின்றதா? பாருங்கள்? கவனியுங்கள்! பாருங்கள்? நீங்கள் அதற்கென்று விசுவாசிக்கின்றீர்கள்.
146. சற்று பொறுங்கள், இங்கே ஒரு அருமையான காரியம் இருக்கின்றது. இது மிகவும் கடினமான ஒன்றாக இருக்குமானால் பெண்களாகிய நீங்கள் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். (பாருங்கள்) இதில் காரியத்தை ஆணித்தரப்படுத்தலாம். ஒரு தாய் ஜீவனை எடுக்கின்றாள். ஆனால் குழந்தையானது இன்னும் பிறக்காமலிருக்கிறது. ஆனால் நீங்கள் அந்த குழந்தையை சரியாக பாவித்து இயற்கை விதிகளைக் கொண்டு சரியாக பேணுவீர்களானால் அந்த குழந்தையானது இயற்கையாகவே பிறக்கும். ஆனால் நீங்கள் இயற்கையான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லையென்றால், குழந்தை மிகவுமாக பாதிக்கப்படும், அல்லது ஏதோ ஒன்று அதற்குச் சம்பவிக்கும், அதினால் குழந்தைக்கு தொல்லை ஏற்படும் (பாருங்கள்?) அது பிறப்பதற்கு முன்பாக அது அதைக் கொன்று போடும்.
147. நல்லது, அதுவே தான் காரியம். அந்த பாதிப்புகள் சாத்தானிடமிருந்து வருகின்றன. சாத்தான் நரகத்தின் விஷ அம்புகளை எடுத்து எய்து சபையை பாதிப்புறும் படிக்குச் செய்ய முயற்சிக்கின்றான். அது பிறப்பதற்கு முன்பே அதை அவர்கள் கொன்று விடுகின்றனர். ஆனால் நீங்கள் வேதாகமத்தை எடுத்து அதினாலே போஷித்து - அதற்கு குழந்தை ஆகாரத்தை அளித்தால், அந்த தாய் போதுமான விட்டமின்களை எடுத்து... நல்லது எனக்குத் தெரிந்த வரையில் இது தான் வைட்டமின்களில் சிறந்த வைட்டமின் ஆகும். ஆவிக்குரிய வைட்டமின் ஆகும். பாருங்கள்? அது உங்களை வளரும் படிக்குச் செய்கிறது.
148. இப்பொழுது, சபையானது அந்த ஆவிக்குரியவைட்டமின்களை புசிக்க வேண்டியதாயுள்ளது; அந்த வைட்டமின்கள் சரியாக இங்கே உள்ளது, அவை ஒரு புத்தகத்தில் முழுமையாயுள்ளன. ஆகவே நீங்கள் அந்த ஆவிக்குரிய வைட்டமின்களை புசிக்க, கற்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள், அது குழந்தையை பிறப்பிற்கு கொண்டு வரும். நான் என்ன கூற விழைகின்றேன் என்று உங்களுக்கு புரிகின்றதா?
149. இப்பொழுது அந்த சிறு குழந்தையானது ஜீவனைப் பெறுகையில் - அது ஜீவனைப் பெறுகையில், அந்த சிறிய அணுக்கள், செல்கள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு அது அசைந்து மற்றும் உதைத்துக் கொண்டிருக்கும். அது அப்பொழுது அசைந்துக் கொண்டிருக்கும். ஆனால் இன்னுமாக அது பிறக்கவில்லை. ஆனால் அது உலகத்தை வந்தடைந்தவுடன் ஒரு மருத்துவரோ, தாயோ அல்லது யாராவது ஒருவர் அதை மேலே தூக்கி (சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய கைகளைத் தட்டுகிறார் - ஆசி.) அதற்கு ஒரு சிறிய அடி கொடுப்பார். அப்பொழுது அது “வீல் வீல்” என்று கூச்சலிடும். (பாருங்கள்?) அப்பொழுது அது சுவாசிக்க ஆரம்பிக்கும். அது ஜீவ சுவாசத்தை சுவாசிக்க ஆரம்பித்தவுடன் அது ஜீவிக்கின்ற ஆத்துமாவாகி விடுகின்றது.
150. ஆகவே அது தான் சில சமயங்களில்... நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறத்தயாராக இருக்கும் போது; நீங்கள் பிரசவ வேதனையில் இருப்பீர்கள்; நீங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்று வாஞ்சித்துக் கொண்டிருப்பீர்கள். உங்களில் எத்தனைப் பேர் சரியாக இப்பொழுதே அவ்விதமாக இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற வாஞ்சித்து, அது உண்மையாகவே என்னவென்பதை அறிய விரும்பி, அதற்குள்ளாகச் செல்ல வேண்டுமென்று இருக்கிறீர்கள்? பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற விரும்புகிறவர்கள் எத்தனை பேர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பாருங்கள்? நீங்கள் பிரசவ வேதனையில் இருக்கிறீர்கள், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் - விடுவிக்கப்பட வாஞ்சிக்கின்றீர்கள். உங்களுக்குள்ள தேவை என்னவெனில் ஒரு சிறு சுவிசேஷ அடி, அதைப் போன்ற ஒன்று (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய கைகளைத் தட்டுகிறார் - ஆசி.) அப்பொழுது நீங்கள் “மகிமை!” என்று கூச்சலிடுகிறீர்கள். அது சம்பவிக்கும் போது... நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் என்னைக் குறித்து நினைப்பதை நானறிவேன், ஆனால் உலகத்திற்கு பைத்தியமாக காணப்படுகின்ற கிறிஸ்துவின் சிந்தையையுடையவர்களாக நாம் - நாம் இருக்கிறோம். ஏதோ ஒன்று உள்ளில் கூச்சலிடுகின்றது; அப்பொழுது அது வந்து கொண்டேயிருக்கிறது.
151. ஒரு நபர் கூறினதைப் போன்று, அது தண்ணீர் வருவது நின்று போன ஒரு குழாயைப் போன்று. நீங்கள் அதற்குள் ஒரு சிறிய கம்பியை நுழைத்து, கம்பியின் இந்த முனையைப் பிடித்து அழுத்தி குத்தித் தோண்டுவீர்களானால் அப்பொழுது தண்ணீர் வேகமாக அதினூடாக வரத் தவிக்கும். நீங்கள் இன்னுமாக தோண்டுவீர்களானால், அங்கே ஏதோ ஒன்று நுழைய தீவிரிக்கிறதை நீங்கள் காண்பீர்கள். உங்களால் அதை உணர முடியும்; அது அந்த முனையில் இருக்கின்றது. பிறகு அந்த கம்பியை வேகமாக மேலே இழுப்பீர்களானால் (சகோதரன் தண்ணீர் பாய்ந்தோடுகின்ற இரைச்சலின் சத்தத்தை வாயால் சத்தமிட்டுக் காட்டுகிறார் - ஆசி) அந்த தண்ணீரானது குழாயினுள் வேகமாக வரும். அந்த விதமாகத்தான் அது இருக்கிறது. அப்பொழுதிலிருந்து அந்த தண்ணீரானது வந்து கொண்டேயிருக்கின்றது. அந்த விதமாகத் தான் பரிசுத்த ஆவியும் கூட வருகின்றது. பாவமானது குழாய்களை அடைத்துப் போட்டது. நீங்கள் பின்னே சென்று “நான் அமைதியானவன்...?... உங்களுக்குத் தெரியுமா...?... மக்கள் என்னைத் தவறாக எண்ணுவார்கள்...?... அந்த பரிசுத்த ஆவி...” என்பீர்கள். முதாலாவதாக என்ன சம்பவிக்கிறதென்று தெரியுமா?
152. இப்பொழுது, நீங்கள் பரிசுத்த ஆவியின் சிறு அசைவை உணரும்போது... நீங்கள் ஜீவனைப் பார்க்கிலும் அதை அதிகமாக விரும்புவீர்கள்- உங்கள் ஜீவனைப் பார்க்கிலும் அதிகமாய் விரும்புவீர்கள். “நான் அதைப் பெற்றாக வேண்டும் அல்லது நான் மரித்து விடுவேன்” - எல்லாவற்றைக் காட்டிலும் அதையே நீங்கள் மேலாகக் கருதுவீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றை பிடித்துக் கொள்கிறீர்கள். “கர்த்தாவே, இதுதான்” என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். நீங்கள் குப்பியை வெளியே இழுக்கிறீர்கள். வீயூ! இதோ அது வருகின்றது! வேகமாக வருகின்றது! ஓ, என்னே விடுதலை! ஓ! என்னே அங்கே ஒரு...?... அங்கே ஒரு ஜீவனானது அமர்கிறது. நீங்கள் “தேவனுக்கு மகிமை...?...” என்று கூறுகிறீர்கள்.
153. பெந்தெகொஸ்தேயில் அங்கே பேதுரு அங்கே பின்னால் ஒளிந்து கொண்டு “கதவைத் திறந்து வெளியே பாருங்கள், அங்கே யூதர்கள் யாராவது வருகின்றனரா என்று பாருங்கள்” என்றான்.
“இல்லை. யாரையும் என்னால் காணமுடியவில்லை.”
“சரி; அப்படியே தரித்திருங்கள்; ஏனெனில் நான் உங்களுக்கு கூறுகிறேன் - அவர்கள் இங்கே மேலே வருவார்களானால்...?...”
154. அவர்கள் எல்லாரும் அங்கே அமர்ந்திருந்தனர், ஒரு பெரிய பலத்த இடிமுழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாக ஒரு சத்தமானது வந்தது. அது அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதுமாக நிரம்ப ஆரம்பித்தது. ஏதோ ஒன்று சம்பவிக்க ஆரம்பித்தது. அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே ஓடினர்; கதவுகளைத் திறந்தனர், படிகட்டுகளின் கீழாக ஓடி வெளியே சென்று குடிகாரர்களைப் போல தள்ளாடிக்கொண்டு அங்கே... ஆவியினால் நிறைந்து, கூச்சலிட்டு, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.
155. அவர்களோ, “இந்த மனிதர் குடித்து வெறித்திருக்கின்றனர். இவர்கள் கூறுவதை கவனியுங்கள். இயேசு சிலுவையிலறையப்படும் போது அவரை மறுதலித்த, கதவிலிருந்து வெளியே எட்டிப் பார்க்கும் அந்த கோழையை அங்கே பாருங்கள். “அவரை எனக்கு தெரியவில்லை, தெரியாது” என்றானே அவன். ஒரு சிறிய பெண், “ஆம், உன் பேச்சு உன்னை அடையாளம் காட்டுகிறதே. மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன்” என்றாளே, அதற்கு இவன், “அவரை நான் அறியேன்” என்று கூறி சபிக்கவும் செய்தானே,” என்றார்கள்.
156. ஆனால் வாய்க்காலானது திறக்கப்பட்டு ஆவியானவர் அவன் மூலமாக பாய்ந்தோட ஆரம்பித்த போது அவன், “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள் (ஆமென்!) நான் தான் தலைவன். இதை நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக; இவர்கள் குடியினால் வெறிகொண்டவர்கள் அல்ல. (தன் சபைக்காகப் பேசுகிறான்) நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது: “கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் கூறினார்” என்றான். உம்-ம்-ம், என்ன ஒரு வித்தியாசம்! வியூ! என்னே இது ஒரு பயங்கரமான காரியம் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம், ஆனால் சத்தியம் என்ன என்பதை நீங்கள் காண நான் - நான் - அதைச் செய்ய வேண்டும். அதில் அப்படியே தரித்திருங்கள்.
157. இப்பொழுது, நிச்சயமாகவே நீங்கள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறீர்கள்.
158. இப்பொழுது, நான் இதை விவரிக்கத்தக்கதாக - இந்த நாளிலே... “நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் தேவனைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்.” நீங்கள் பாவஞ்செய்வீர்கள் என்று கூறியிருக்கிறார். நீங்கள் பாவஞ்செய்யவில்லையென்பீர்களானால்... நான்...
159. “நான் பாப்டிஸ்ட் சபையில், மெத்தொடிஸ்ட் சபையில், பெந்தெகொஸ்தே சபையில், பிரஸ்பிடேரியன் சபையில் பிறந்திருந்தேன்; நான் அதில் பிறந்திருந்தேன்.” அது எந்த ஒரு வித்தியாசத்தையுமே பிறப்பிக்காது, நீ அதிலிருந்து மறுபடியுமாக பிறந்து வெளியே வரவேண்டும். அது சரியே. நாம் பாவமே செய்யவில்லையென்று கூறுவோமானால், நீங்கள் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருக்கிறீர்கள். ஆகவே அந்த வார்த்தை, அது தான் சத்தியமாயிருக்கின்றது. வசனமே சத்தியம் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? “ஆதியிலே வார்த்தை இருந்தது... அந்த வார்த்தை மாம்சமாகி... வார்த்தை “ ““பிதாவே, உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்.” ஆகவே அவர்தான் அந்த வசனம், வார்த்தை. பாருங்கள்? ஆகவே அந்த வார்த்தை அல்லது கிறிஸ்து உங்களுக்குள்... அவர்தான் வார்த்தையாயிருந்தார். உங்களில் எத்தனை பேர் அதை அறிவீர்கள்? பாருங்கள்? சரி.
160. நல்லது இதை நாம் இந்த விதமாக வாசிப்போம், “நீங்கள் பாவஞ்செய்யவில்லை என்பீர்களானால், நீங்கள் அவரை பொய்யராக்குகிறவர்களாயிருக்கிறீர்கள். மேலும் கிறிஸ்து நமக்குள் இல்லாதிருக்கிறார்.” பாருங்கள், பாருங்கள்? இப்பொழுது அது... பாருங்கள், நீங்கள் பாவஞ் செய்யவில்லை என்று கூறுவீர்களானால் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறக்கத்தான் வேண்டும்.
161. இப்பொழுது, நாம் அடுத்த வசனத்திற்குச் செல்வோம், “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், பாவம் செய்யான், ஏனெனில்...”
162. இப்பொழுது பாவம் என்றால் என்ன? யார் அதைக் கூறினது, யாரோ ஒருவரா? அவிசுவாசம். வேதாகமம் அதைத் தான் பாவம் என்று கூறுகின்றது. ஒரேயொரு பாவம்தான் இருக்கின்றது, அது அவிசுவாசமாகும். அது சரி. “அவரை விசுவாசியாதவனோ ஏற்கெனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.” ஆகவே நீங்கள் ஒருவன் பாவம் செய்வான்.
163. இப்பொழுது நீங்கள், “ஆம் இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். அந்நாட்களிலே அவர்கள் பரிசுத்த ஆவியை அந்த விதமாகப் பெற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நம்புகிறேன், ஆனால் இப்பொழுது அவ்விதமாக இருக்காது என்று நான் நம்புகிறேன்” என்று கூறலாம்.
164. “ஆனால், சகோதரனே, வேதாகமம், “வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்” என்று கூறுகின்றது”
“எனக்குத் தெரியும், ஆனால்... நீங்கள் பாவஞ் செய்கிறீர்கள். நீங்கள் சரியாக பாவம் செய்கிறீர்கள். தேவன் கூறியதை நீங்கள் அவிசுவாசிக்கிறீர்கள்.
“இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்”
165. “நல்லது, எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ள விதம் என்னவென்றால்... “உங்களுக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. வேதாகமம் கூறுகிறது - அவர் கூறினார், “எந்த ஒரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக, என்னுடையது சத்தியமாயிருப்பதாக.” அது சரி.
நீங்கள் “நல்லது, அவர் முக்கியமானவரே, அவர் மாறாதவர்தான், ஆனாலும் என்னால்... அவர் மாறாதவர் என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?” எனலாம்.
“ஆம், அவர் இங்கே இருந்த போது செய்த அதே காரியங்களை சபையில் செய்கின்றார்”
166. “ஓ, என்னால் அதை விசுவாசிக்க முடியவில்லை,” என்றால் நீ பாவம் செய்கின்றாய். நீ பாவம் செய்கின்றாய். தேவனால், பரிசுத்த ஆவியால் பிறந்த ஒருவன் அந்த காரியங்களைக் கூற மாட்டான். அவன் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறேன் என்று கூறிக் கொண்டு அந்தக் காரியங்களைக் கூறினால், அதை அவன் பெற்றுக்கொள்ளவில்லை என்பதன் அத்தாட்சியாக அது காணப்படுகிறது. அவன் என்ன செய்திருந்தாலும் அதைக் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவனுக்கு தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் இல்லையெனில், உயிர்த்தெழுதலின் வல்லமையில் விசுவாசம் இல்லையெனில், முதலாவது காலத்திலே எப்படி பரிசுத்த ஆவியானது ஊற்றப்பட்டதோ சரியாக அதே விதமாக நம்மீது ஊற்றப்பட்டிருப்பதை விசுவாசிக்காமல் இருந்தால், நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருக்கிற அதே தேவன், அப்போஸ்தலர்கள் செய்த அதே காரியங்கள் சரியாக இப்பொழுது நடைபெறுகின்றன, அந்நிய பாஷையில் பேசி, களிகூர்ந்து மற்ற எல்லா காரியங்களும்; இவைகளை அவன் விசுவாசிக்கவில்லையெனில் அவன் தேவனால் பிறந்தவன் அல்ல. ஏனெனில் தேவனால் பிறந்த எவனும் அந்த விதமான பாவங்களை செய்ய முடியாது. அவர்கள் தேவனால் பிறந்தவர்களா இல்லையா என்பதை இந்த விதத்தில் தான் கண்டறிய வேண்டும்.
167. நீங்கள் ஒரு நபரிடம் சென்று, “டாக்டர். இன்னார் - இன்னார்-அவர்களே, ரேவரெண்ட், டாக்டர்., அல்லது இன்னார் - இன்னார் அவர்களே (அது அருமையானது தான், எனக்கு அவ்வாறு பட்டங்கள் இருந்தால் நலமாயிருக்கும் என்றெண்ணுகிறேன்), அப்போஸ்தலர்கள் அன்று செய்த விதமாக சபையிலும் தெய்வீக சுகமளித்தலானது செய்யப்பட வேண்டுமென்பது உண்மைதானோ?” என்று கேட்டால்.
“ஓ இல்லை, இல்லவே இல்லை!” என்பானென்றால், அவன் பாவம் செய்கின்றான். அவன் ஒரு அவிசுவாசி. அது சரி.
168. நீங்கள், “அவர்கள் அங்கு செய்தது போல நாமும் அதே விதமாகவே பரிசுத்த ஆவியை பெறுவோம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் இங்கே வேதாகமத்தில் அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அது என்ன கூறுகிறதென்றால்... பரிசுத்த ஆவியானவர் இறங்கினார், அவர்கள் குடித்து வெறி கொண்டவர்கள் போல தள்ளாடினார்கள், அவர்கள் வெளியே ஓடி அந்த மக்களின் பாஷைகளிலே பேசினார்கள், அதைப் போன்ற காரியங்களைச் செய்தார்கள்; குடித்து வெறித்தவர்களைப் போன்று காணப்பட்டார்கள், சபையும் அவர்கள் குடித்து வெறித்திருந்தார்கள் என்று எண்ணுகிறது. பாப்டிஸ்டு சபையில், நம்முடைய பாப்டிஸ்ட் சபையில், நம்முடைய மெத்தோடிஸ்ட், நம்முடைய பிரஸ்பிடேரியன் சபையில், அல்லது எதுவாயிருந்தாலும் சரி, நாம் பரிசுத்த ஆவியைப் பெறுகையில் நாம் அந்த விதமாக நடந்து கொள்வதைக் என்னால் காண முடியவில்லையே” என்று கேட்கலாம்.
“நல்லது, பிள்ளையே, நான் கூறுவதென்னவென்றால் அது அந்த பன்னிரண்டு பேருக்கு மாத்திரம் தான்.” அவன் பாவம் செய்கின்றான். அவன் தேவனுடைய ஆவியால் பிறந்தவனல்ல, ஏனெனில் வேதாகமம் கூறுகிறது “தேவனுடைய ஆவியினால் பிறந்தவன் அவிசுவாசிக்கமாட்டான். அவன் ஒரு விசுவாசி, அவனால்...” ஏன்? ஏன்? ஓ, இது தான் காரியம். அந்த புறாவானது அவனுக்குள் இருந்து அவனை வழி நடத்துகிறது. ஏனெனில் தேவனுடைய ஆவி அவனுக்குள் இருக்கின்றது, அவனால் அதை மறுதலிக்கவே முடியாது; அவனால் முடியாது. அது தேவனுடைய ஆவியாக இருக்குமானால், தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை மறுதலிக்க முடியாது. நான் என் சொந்த வார்த்தையை மறுதலிப்பேனானால் அப்பொழுது நான் ஒரு பொய்யனாக ஆகிவிடுவேன். ஆகவே நீங்கள் தேவனுடைய ஆவியைக் கொண்டிருக்கிறேன் என்று கூறி, தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பீர்களானால், ஒன்று தேவன் ஒரு பொய்யராக இருக்க வேண்டும் அல்லவென்றால் நீங்கள் ஒரு பொய்யனாக இருக்க வேண்டும், ஒன்று இப்படியிருக்க வேண்டும் அல்லது மற்றதாயிருக்க வேண்டும். ஆகவே வேதம் எந்த ஒரு மனிதனுடைய வார்த்தையும் பொய்யாயிருப்பதாக, என்னுடையது சத்தியமாயிருப்பதாக - என்று கூறுகின்றது. ஆகவே தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு மனிதனால் தேவனுடைய வார்த்தையுடன் முரண்பாடு கொண்டிருக்க மாட்டான்; அது சரியே என்று தான் அவனால் கூற முடியும். வேறெதையும் அவனால் செய்யவே முடியாது. கவனியுங்கள், இது தான் சத்தியம்.
169. கவனியுங்கள், இதை நான் திரும்பவுமாக வாசிக்கட்டும்.
தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில், அந்த வித்து...
170. தேவனுடைய வித்து? என்பது என்ன? ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் வித்தானது. அந்த வித்தானது இப்பொழுது என்ன? கிறிஸ்துவே. கிறிஸ்து தான் தேவனுடைய வித்தாக இருக்கின்றாறா? அவர் அப்படி இல்லையெனில் யாருடைய வித்தாக அவர் இருக்கிறார். அது சரி, அது சரி. அவர் தான் தேவனுடைய வித்து.
171. தேவனுடைய வித்தானது அவனுக்குள் தங்கியிருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் நிலைத்திருக்கவே வருகின்றார்; ஒரு எழுப்புதல் கூட்டத்திலிருந்து மறு எழுப்புதல் கூட்டம் வரைக்குமல்ல - ஆனால் நித்தியமாக இருக்கவே. இப்பொழுது, அதைக் குறித்த வேத வசனத்தை நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், எபேசியர் 4:30. “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.” தேவனுடைய வித்தானது அவனுக்குள்ளாக அப்படியே தங்கி விடுகிறது, ஆகவே அவனால் பாவம் செய்ய முடியாது, ஏனெனில் அவன் தேவனால் பிறந்தவன். தேவனுடைய வார்த்தையை அவனால் அவிசுவாசிக்க முடியாது.
172. இப்பொழுது, ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப் போகாமல் “ஓ அது வேறொரு காலத்திற்குத்தான்” என்று கூறினால், நினைவில் கொள்ளுங்கள் அவன் ஒரு அவிசுவாசியே, அவன் தேவனால் உண்டானவன் அல்ல,
நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது, அப்படித்தானே? நேரம் என்ன? ஓ, என்னே! நான் மறுபடியுமாக ஞாயிற்றுக்கிழமையன்று திரும்பி வர எனக்கு விருப்பமில்லை. இதை நான் வேகமாக, மிக வேகமாக முடிக்கட்டும். என்னால் கூடுமா? இது மிக அருமையாக இருக்கிறது. ஓ, அந்த தேவனுடைய வார்த்தை. இது அருமையான ஒன்று என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அது சரி.
சகோதரன் பிரன்ஹாம் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும். இதை சற்று நான் முடிவில் பார்க்கட்டும், இதை நான் எடுப்பேன்.