173. நாம் கீழே சென்ற போது எப்படி இருந்தோமோ அந்த விதத்திலே தான். சரியாக உயிர்தெழுதலானது. இதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த புத்தகமானது கீழே விழுகின்றது (சகோதரன் பிரன்ஹாம் ஒரு புத்தகத்தை கீழே போடுகின்றார் - ஆசி) பிறகு நான் இந்த புத்தகத்தை எடுத்து, வேறொரு புத்தகம், இதற்கு பதிலாக வைத்து விடுகிறேன். இது உயிர்த்தெழுதல் அல்ல. உயிர்த்தெழுதல் என்றால், “கீழே சென்ற அதே காரியத்தை மேலே கொண்டு வருதல்” என்பதேயாகும். இயேசு உயிர்த்தெழுந்தாரா? அவர்கள் அவரை அறிந்து கொண்டனரா? அவர் அதே இயேசுவாக அவர்களுடன் நின்று கொண்டிருந்தாரா? “உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார்.” நீ மரித்த போது எப்படி இருந்தாயோ, அந்த விதமாகவே நீ எழுந்திருப்பாய். அது தான் உயிர்த்தெழுதல் -நீ மனித சரீரமாக மரிக்கின்றாய்; நீ மனித சரீரமாக உயிர்தெழுகின்றாய். அது சரியாக அந்த விதமாகத்தான் இருக்கும். ஆகவே உயிர்த்தெழுதலிலும் அது அந்த விதமாகத் தான் இருக்கும். இதன் பேரில் இன்னும் நாம் இரண்டு மணி நேரம் பேசலாம், ஆனால் நாம் நிறுத்திக் கொள்வது நல்லது.