(என்னை மனிக்கவும், 6:4 மற்றும் 10:26. நாம் 10:26ஐ பார்ப்போம், சரி, நான் இங்கே அதை எடுத்துவிட்டேன். பாருங்கள்?)
ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால் மனந்திரும்புதற் கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.
174. அது சரியாக நமக்கு கூறுகிறது. இப்பொழுது கவனியுங்கள். முன்பொரு இரவு நான் இதை எடுத்தேன். நான் இதை விவரித்த போது உங்களில் எத்தனைப் பேர் இங்கிருந்தீர்கள்? சரி, அது என்னவென்பது உங்களுக்குத் தெரியும். பாருங்கள், அது எல்லைக் கோட்டு விசுவாசிகளை குறிக்கிறது.
175. எத்தனைப் பேர் உபாகமம் 1ல் வாசித்துள்ளீர்கள், அதில் அந்த வேவுகாரர்கள் கானான் தேசத்திற்குள் சென்று அதினுடைய காரியங்களை ருசிபார்த்தார்கள், கானான் ஆயிரவருட அரசாட்சிக்கு அடையாளமாக இருக்கவில்லை. எத்தனைப்பேர் அதை அறிவீர்கள்? ஒரேயொரு கரம் தான் உயர்த்தப்பட்டிருக்கிறதே? ஜூனி. அது சரி. கானான் ஆயிரவருட அரசாட்சிக்கு நிழலாயிருக்கவில்லை, ஏனெனில் அங்கே யுத்தங்கள், சண்டைகள், கொள்ளைகள் மற்ற எல்லா காரியங்களும் கானானில் இருந்தது. அது பரிசுத்த - கானான் பரிசுத்த ஆவிக்கு நிழலாயிருந்தது. அவர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்ததை, உலகத்தை விட்டு வெளியே வந்ததைக் குறிக்கிறது. அவர்கள் வனாந்தரத்தில் தான் பரிசுத்தமாக்கப்பட்டு, வெளியே அழைக்கப்பட்ட சபையாய் இருந்தனர். கானானில் தான் அவர்கள் பரிசுத்த ஆவியுடன் குடியேறினர் (பாருங்கள்; பாருங்கள்) ஏனெனில் அவர்கள் இன்னுமாக யுத்தங்களைக் கொண்டிருந்தனர். உங்களுக்கு யுத்தங்கள் கிடையாது என்று நீங்கள் நம்பவில்லையெனில் பரிசுத்த ஆவியை ஒரு தரம் பெற்றுக் கொள்ளுங்கள்.
176. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அவர்கள் கானானில் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? அவர்கள் தங்கள் உரிமைகளை சுதந்தரித்துக் கொண்டிருந்தனர். மகிமை! அவர்கள் தங்கள் உரிமைகளை சுதந்தரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கானானிற்குள் செல்லும் வரைக்கும் அவர்களால் தங்களுடைய உரிமைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியாதிருந்தது. அவர்களுக்கு வனாந்தரத்தில் எதுவுமே சொந்தமானதாக இல்லை. பிறகு, அவர்கள் கானானிற்குள் வந்த போது, அப்பொழுது தங்கள் உரிமைகளைக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமக்கும் உரிமைகள் உண்டு. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, நீங்கள் கானானிற்குள் இருக்கிறீர்கள். நீங்கள் அதற்காக போரிடத்தான் வேண்டும். ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீங்கள் போரிட்டாக வேண்டும். ஆம் ஐயா! அதன் காரணமாகத் தான் மக்கள், “சகோதரன் பிரன்ஹாம் இன்றைக்கு நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள்” என்று கூறுகின்றனர். சகோதரனே விரைவில் கானானிற்குள் செல், நீ எதைச் சேர்ந்தவன் என்பதை உணர்ந்து கொள்வாய். கவனி ஜெபம் ஆரம்ப...?... ஆம், ஐயா!
அவன், “சாத்தானே, இங்கே பார். இது என்னுடையது! நான் தான் இதன் சுதந்தரவாளி! தேவன் அவ்விதமாக கூறியுள்ளார்! வெளியே செல்! (அது சரியே!) என் நிலத்தை விட்டு வெளியே செல்!” என்றான்.
“உன்னுடைய நிலமா?” என்கிறான் சாத்தான்.
“அதற்கான உரிமைப் பத்திரம் என்னிடம் இருக்கின்றது. வெளியே செல்! பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலோடு நாளை உனக்கு சட்டப்பூர்வமான முன்னறிவிப்பு எச்சரிக்கையை அளிப்பேன்.” அவன் வெளியே செல்கிறான். நிச்சயமாக, அவன் சென்றுதானாக வேண்டும்.
177. இப்பொழுது, இப்பொழுது, பரம ஈவை ருசி பார்த்தவர்களைக் கவனியுங்கள். இப்பொழுது, இங்கே கவனியுங்கள்.
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப் பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால்... (10, இது 10ம் அதிகாரத்தில் 26வது வசனம்)... பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
178. இப்பொழுது, அவைகளில் ஒன்று அதை ருசிபார்த்தது தான், அடுத்ததாக இருப்பது நீங்கள் அதைப் பெற்று அதனுடைய அறிவை பெற்றீர்கள். அப்படியானால் நீங்கள் எதில் பாவம் செய்கிறீர்கள்? அவிசுவாசம்... இப்பொழுது அவை இரண்டும் எப்படி காணப்படுகிறதென்று கவனியுங்கள். புரிகின்றதா? “சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நீங்கள் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால்...” இப்பொழுது... ஒரு நிமிடம், இதை நான் எடுக்கட்டும்.
நாம், புதுப்பித்து... ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் அருமையான பரம ஈவை ருசி பார்த்தும்... (எதை ருசிபார்த்தார்கள். பாருங்கள்?)... பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
179. அவன் இன்னுமாகச் சென்று நீ முள் பூண்டுகளைப் போலவே நீ உள்ளே உட்காருவதைக் கூறுகிறான், பூமியின் மேல் அடிக்கடி மழையானது பெய்கின்றது; நீ முள் பூண்டுகளைப் போல உள்ளே உட்கார்ந்திருந்தாயானால், பரிசுத்த ஆவி விழும்போது, ஓ, என்னே, மற்றவர்களைப் போல நீயும் அதன் பேரில் சந்தோஷமடைந்தாய், ஆனால் நீயோ அதை உன் கையால் தொட்டு, அங்கே புறப்பட்டுச் சென்று கர்த்தருக்காக உழைத்து அதற்காக ஏதோ ஒன்றை செய் என்றால், இல்லை, இல்லை என்னால் செய்ய முடியாது என்கிறாய். பாருங்கள்? அப்படியானால் அது எதைக் காண்பிக்கிறதென்றால், தேவனுடைய ஆவி உனக்குள் இல்லை என்று தான் காண்பிக்கின்றது. புரிகின்றதா? பிறகு நீ அப்படியே வெளியே கழன்று வந்து விடுவாய், “சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு”
180. ஆனால் இங்கே, நாம் அவிசுவாசிப்போமானால்... இப்பொழுது, பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். அந்த காரியமானது உனக்கு தெரியப்படுத்தப்படும் போது, நீ அதிலிருந்து மனப்பூர்வமாக திரும்பி, “எனக்கு – எனக்கு - எனக்கு ஒன்றும் தேவை இல்லை” என்று கூறினால், நீ அதைக் கண்ட பிறகு, அது மறுபடியுமாக உன் இருதயத்தை நோக்கிக் கூப்பிடாது, உன் காரியம் முடிக்கப்பட்டது; அது சரி. உன்னுடைய கிருபையின் நாளை நீ பாவமாக்கிப் போட்டாய். பாருங்கள்?
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசிக்கிறவர்களாயிருந்தால்... (இப்பொழுது என்னுடைய வேதத்தில் அதை நான் குறித்திருக்கிறேன்... ஓரப்பகுதியில் “M” என்று குறிக்கப்பட்டுள்ளது - பாவம் என்றால் மனப்பூர்வமாய் அவிசுவாசித்தல். பாருங்கள், பாருங்கள்?)...
மனப்பூர்வமாய்... பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், (எல்லா காரியங்களும் உனக்கு நலமாக வெளியரங்கமாக்கப்பட்டிருக்கையில் தேவன் அதை உனக்கு மனமாரக் கொடுக்கையில் நீ மனப்பூர்வமாய் தேவனைப் புறக்கணித்து புறம்பே செல்வாயானால்... பாருங்கள்?)
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும் விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.
மோசேயினுடைய பிரமாணத்தைத்தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு அதிகமான கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்? (ஓ, என்னே!)
181. அது என்னவாக இருக்கும்? ஒரு பிரசங்கி, ஒரு போதகன், நாம்... ஏனெனில் நானும் ஒரு பிரசங்கி, ஒரு பிரசங்கியை நாம் எடுத்துக் கொள்வோம். அவன் இங்கே நடந்து வருகிறான், மேலே வருகிறான், கிறிஸ்துவை பறைசாற்றுகிறான், விபச்சாரம் மற்றும் எல்லா காரியங்களும் இனிமேல் இல்லாத ஒரு நிலைக்கு வருகிறான், ஒரு அருமையான சுத்தமான வாழ்க்கையை வாழ்கிறான், அவன் இங்கே வருகிறான், தேவனுடைய கிருபையானது அவனுக்கு அருமையானதாக அமைந்திருந்தது, அப்பொழுது அவன் சரியாக பரிசுத்த ஆவியின் அறிவிற்குள் நடந்து செல்கிறான் (பாருங்கள்?) நடந்து செல்கிறான், தேவன் அவனை சரியாக பரிசுத்த ஆவியின் அறிவிற்கு வழி நடத்துகிறார், அங்கே அவன் அதைக் காண்கிறான், ஆனால் அவன், “இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். என்னுடைய சபை அதை ஏற்றுக் கொள்ளாது, என்னால் அதைச் செய்ய முடியாது. என்னை அவர்கள் வெளியேற்றி விடுவார்கள். ஆலோசனை சங்கமானது என்னை வெளியேற்றிவிடும். ஊழியக்காரர்கள் கூட்டத்தில் என்னை சபையை விட்டு புறம்பாக்கி விடுவார்கள்” என்று கூறுவான். ஏனெனில் அவனைப் பரிசுத்தப்படுத்தி சத்தியத்தை அறியும் அறிவு என்கின்ற வரையில் அவனைக் கொண்டு வந்த அந்த அதே இரத்தத்தை தகுதியில்லாதது என்று எண்ணி தேவன் அவனை பரிசுத்த ஆவியினண்டை ஒவ்வொரு அடியாக அடிமேல் அடி வைத்து நடத்தி வந்த பிறகு, அதை தன்னுடைய காலின் கீழ் மிதித்தால், பாவத்தினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனி இல்லை.
182. நீங்கள், “ஓ, சகோதரன் பிரன்ஹாமே, ஒரு நிமிடம் பொறுங்கள்.” என்று கூறலாம். ஒரு நிமிடம்! அந்திக் கிறிஸ்துவின் ஆவி அதைத்தான் செய்யும். அவைகளின் இரண்டு தலைகளை கவனித்தீர்களா? யார் அந்த யூதாஸ்காரியோத்து? பிசாசு! அவன் கேட்டின் மகன் என்று வேதம் கூறுகின்றது. கேடு என்றால் என்ன? நரகம். அவன் நரகத்தின் குமாரன், நரகத்திலிருந்து வந்தான், நரகத்திற்குச் சென்றான். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருந்தார், பரலோகத்திலிருந்து வந்தார், பரலோகத்திற்கு திரும்பிச் சென்றார். அவர்களிருவரும் சிலுவைகளில் மரித்தபோது... யூதாஸ்... யூதாஸ் சிலுவையில் மரித்தான் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களில் எத்தனைப் பேர் அதை அறிவீர்கள்? அவன் ஒரு மரத்தின் மீது செத்தான். இயேசுவும்கூட ஒரு மரத்தின் மீது மரித்தார். அது வெட்டி எடுக்கப்பட்ட ஒன்றாயிருந்தது; அவ்வளவுதான். “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். ஆகவே அவன் நரகத்திலிருந்து வந்தான். ஆகவே கவனியுங்கள்... அவன் சபைக்குள்ளாக எவ்வளவாக கள்ளத்தனமாக பதுங்கிச் செல்கிறான். அவனால் முடிந்த வரை மிக உயரிய ஒரு நிலைக்கு வருகிறான். பாருங்கள். அவன் எவ்வளவு வஞ்சிக்கிறவனாகயிருக்கிறான், யூதாஸ் எவ்விதமாக வந்தான்? அவன் என்னவாக இருந்தான்? ஒரு பொருளாளர், பொக்கிஷ தாரியாக இருந்தான், ஒரு சகோதரனாக சபையில் கிரியை செய்து கொண்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, ஒரு... (ஒலிப் பதிவு முழு நிறைவு பெறாத நிலையில் முடிவுறுகிறது - ஆசி.)