27. நல்லது. இப்பொழுது சகோதரனே, நான்... அதற்கான பதிலை இங்கு எழுதி வைத்துள்ளேன். தேவன் இந்த சகோதரனை அழைத்தல், வாழ்க்கையில் ஒரு அழைப்பு. “அழைப்பு என்னும் இந்த ஒரு பெரிய காரியத்தை நாம் பொருளாகத் தெரிந்து கொண்டு, இரவு முழுவதும் அந்த ஒன்றின் பேரில் பிரசங்கிக்கலாம். உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள் (2பேது. 1:10), பாருங்கள். நாம் அழைக்கப்பட்டோமா என்று வியந்து கொண்டிருக்க நாம் விரும்பவில்லை. நீங்கள் அழைக்கப்பட்டிருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நாம் போர் செய்து கொண்டிருக்கிறோம். பாருங்கள்? சகோதரனே, உங்கள் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்துள்ளதென்றும், ஒரு வேலையைச் செய்ய நீங்ள் தேவனால் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றும் நீங்கள் முற்றிலும் நிச்சயமுடையவர்களாயிருந்தால்...
28. சத்துரு உங்களிடம் இந்த சூழ்ச்சியைக் கையாள முடியும். அதாவது, நீங்கள் உண்மையில் அழைக்கப்பட்டிருக்கையில், நீங்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்று நினைக்கும்படி அவனால் செய்ய முடியும்; அல்லது மாறாக, நீங்கள் அழைக்கப்படாதிருக்கையில், நீங்கள் அழைக்கப் பட்டுள்ளதாக நினைக்கும்படி செய்ய முடியும். எனவே நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
29. இப்பொழுது. இதைச் செய்ய வேண்டிய முறை இதுவே. முதலாவது கண்டுபிடியுங்கள்... நல்லது, இப்பொழுது. இது ஆலோசனை மட்டுமே, இதைக் குறித்து நான் செய்யக் கூடிய ஓரே காரியம் ஆலோசனை தருவதே. பாருங்கள்? முதலாவதாக உங்கள் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்தது என்பதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள், அதன் பிறகு உங்கள் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் பரிசீலனை செய்து பாருங்கள். பாருங்கள்? நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பிரசங்கம் செய்வதற்கு உங்கள் நோக்கம் என்ன? அது வெறும்... இப்பொழுது உங்களுக்கு உள்ள வேலையைக் காட்டிலும் அது எளிதான வேலை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் அதை மறந்து விடுங்கள், அது அழைப்பு அல்ல.
30. தேவனுடைய அழைப்பு உங்கள் இருதயத்தை மிகவும் அனல் மூட்டிக் கொண்டேயிருப்பதால், உங்களால் இரவும் பகலும் இளைப்பாறவே முடியாது. அதிலிருந்து நீங்கள் விலகவே முடியாது. அது உங்களை சதா உறுத்திக் கொண்டேயிருக்கும்.
31. நீங்கள் பிரசங்கிக்க வேண்டுமானால்... உங்களுக்கு வேறொரு நோக்கமும் இருக்கக் கூடும். நீங்கள், “இப்பொழுது எனக்குள்ள வேலையைக் காட்டிலும், நான் வெற்றிகரமாக சுவிசேஷகனுடைய அல்லது மேய்ப்பனுடைய வேலையைச் செய்து, எனக்கு நல்ல சம்பளமும், ஒரு நல்ல வீடும் கிடைக்கப் பெற்று வாழ நேரிட்டால், அது மிகவும் நன்றாயிருக்கும், இப்பொழுது நான் செய்து வருகின்ற வேலையைக் காட்டிலும் அது எளிதாக இருக்கும். அது உண்மையிலேயே அவ்விதம் இருக்கும் என்று எண்ணுகிறேன்...” எனலாம். இப்பொழுது, பாருங்கள், துவக்கத்திலேயே உங்கள் குறிக்கோள் தவறானது. பாருங்கள். அது சரியல்ல. பாருங்கள்? அதில் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள்.
32. இல்லையென்றால் நீங்கள், “நல்லது. இந்த ஊழியத்தை நான் செய்வதனால் ஒருக்கால்... ஜனங்களின் மத்தியில் பிரபலம் வாய்ந்தவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறலாம். பாருங்கள். அப்படியானால், நீங்கள் ஒரு பெரிய தோல்விக்கு ஆயத்தமாயிருப்பதைக் காணலாம். உண்மையாக, பாருங்கள்!
33. ஆனால், “நான் மலிவு பிஸ்கோத்துக்களைத் தின்று ஓடை தண்ணீரைக் குடிக்க நேரிட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் எப்படியும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன்” என்னும் குறிக்கோள் உங்களுக்கு இருக்குமானால் உங்களில் ஏதோ ஒன்று ஊடுருவிப் பாய்ந்து நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பேன், இல்லையேல் மரிப்பேன்' என்று கூற வைக்குமானால்! பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எங்காவது செல்வீர்கள். ஏனெனில் தேவன் உங்களுடன் ஈடுபடுகிறார். தேவன் உங்களுக்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அது தேவன், நீங்கள் இளைப்பாற அவர் விடமாட்டார். வழக்கமாக தேவனால் அழைக்கப்பட்ட மனிதன் இளைப்பாற விரும்பமாட்டான். அதை நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? எந்த மனிதனும்...
34. அண்மையில் மிகவும் விலையேறப் பெற்ற சில சகோதரர்கள் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, நாங்கள் இப்பொழுது வழியில் வந்துவிட்டபடியால், நாங்கள் இப்பொழுது கர்த்தரைக் கண்டடைந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டபடியால், நாங்கள் செய்ய வேண்டிய ஊழியத்திற்காக வரங்களை நாடலாமா? என்று கேட்டனர்.
35. நான், “அவ்விதம் ஒருபோதும் செய்யாதீர்கள்” என்றேன். பாருங்கள்? அவ்விதம் ஏதாவதொன்றைச் செய்ய மக்களுக்கு ஆலோசனை கூறாதீர்கள். ஏனெனில் அதைச் செய்ய விரும்பும் ஒரு மனிதன் வழக்கமாக அதைச் செய்ய முடியாத ஒருவனாயிருப்பான்.
36. அதைவிட்டு ஓடிப் போக முயற்சி செய்யும் ஒரு மனிதனையே தேவன் உபயோகிக்கிறார். பாருங்கள்? அவன் அதை விட்டு ஓடிப் போக முயன்று, “ஓ, சகோதரனே, நான் உங்களுக்கு சொல்லுகிறேன், நான் அழைப்பு எனக்குள் உள்ளது, ஆனால் நான்... வ்யூ! அதைச் செய்ய எனக்கு பிரியமில்லை என்கிறான். பார்த்தீர்களா? அவன் ஓடிப் போக முயல்கிறான்.
37. ஆனால் அதை எப்படியாவது செய்ய வேண்டுமென்று நினைப்பவன், முதலாவதாக என்ன தெரியுமா, அவன் பெருமை கொண்ட ஒருவனாக ஆகிவிடுகிறான். அவன், “தேவனே, மலைகளை அசைக்கத்தக்கதாக எனக்கு வல்லமையை அளிப்பீராக. நான் உமக்கு சொல்லுகிறேன், மலைகளை அசைக்க என்னை நீர் அனுமதிப்பீரானால், உமக்காக நான் ஏதாவதொன்றைச் செய்வேன்” என்கிறான். இல்லை, அவனால் ஒன்றுமே செய்ய முடியாது, அவன் சரியான மனப்பான்மைக்கே தன்னை நகர்த்திக் கொள்ள முடியாது. பாருங்கள். எனவே அவன் தேவனுக்காக மலைகளை அசைக்கவே முடியாது.
38. பவுலை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பவுல் தன் அழைப்பை விட்டு விலகிக் கொண்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஓ, சகோதரனே! அவனால் அதை செய்திருக்கவேமுடியாது. அவன் தன் சபையை விட்டு, எல்லாவற்றையும் விட்டு... அவன் ஆசியாவுக்குச் சென்றான் என்று நினைக்கிறேன், இல்லையா? அது வரைக்கும் அது அவனை இரவும் பகலும் உறுத்திக் கொண்டேயிருந்தது. அது சரியா தவறா என்றும், தேவன் அவனை உண்மையில் அழைத்திருக்கிறாரா என்பதையும் கண்டு கொள்ள அவன் அங்கு மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேதத்தை ஆராய்ந்து பார்த்தான்.
39. எனவே சகோதரனே, தேவன் உங்களை அழைத்திருப்பாரானால், அது உங்கள் இருதயத்தை உறுத்திக் கொண்டேயிருக்கும். அப்படி இருக்குமானால் நான், “பாரமான யாவற்றையும். உங்களை சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளி விடுங்கள்” என்பேன். பாருங்கள்? அது உங்களை உறுத்தாமல் போனால், அதைக் குறித்து நான் பெரிதாக எண்ண மாட்டேன். அதை அப்படியே விட்டு விடுவேன்.
சகோ. பிரன்ஹாமே, என்னிடம் என்ன கூற வேண்டு மென்று அவர் உங்களிடம் கூறுவார் என்று நினைக்கிறீர்களா?
40. தேவன் அவரிடம் நேரடியாக பேசுவார் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், உங்களுக்குத் தெரியுமா, தேவன்... அவர் நம்மிடம் பேசக்கூடாதபடிக்கு நாம் அவ்வளவு பெரியவர்கள் அல்ல. அவர் நம்மிடம் பேசுவார். பாருங்கள், அவர் அவர் நம்மிடம் பேசுவார்.
41. இதை உங்களிடம் கூறுகிறேன், அவர் என்னிடம் அதைக் கூறுவாரானால், ஒருக்கால் அந்த சகோதரன், “நல்லது. அவர் சகோ. பிரன்ஹாமிடம் அவ்விதம் கூறினார், தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறலாம்.
42. ஆனால், பாருங்கள், உங்களுக்கு அழைப்பைக் கொடுப்பது சகோ. பிரன்ஹாம் அல்ல, கர்த்தராகிய இயேசுவே உங்களுக்கு அழைப்பைக் கொடுக்கிறார். பாருங்கள்? அழைப்பைக் கொடுப்பது கர்த்தராகிய இயேசுவானால், அவரே பேசுவார். பாருங்கள்? நான் உங்கள் செவிகளில் பேசலாம், ஆனால் கிறிஸ்து உங்களை ஊழியத்துக்கு அழைப்பாரானால் அவர் உங்கள் இருதயத்தில் பேசுவார். பாருங்கள்? அங்கு தான் அது நங்கூரமிடப்பட வேண்டும், அதிலிருந்து நீங்கள் விலகிச் செல்லவே முடியாது.
இப்பொழுது இரண்டாம் கேள்வியின் பேரில்...
43. இப்பொழுது அதைக் குறித்து ஏதாகிலும் கேள்வி இருக்குமானால், பாருங்கள். அதாவது ஒரு மனிதனின் அழைப்பு தேவனிடத்திலிருந்து வந்து அவனுடைய இருதயத்தில் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து, வேறொரு சகோதரன்... ஓ, இதை எழுதினது யார் என்று எனக்குத் தெரியும். பாருங்கள், அது ஒரு விலையேறப்பெற்ற, அருமையான, கிருபையுள்ள சகோதரன். அவருக்கு தேவனுடைய அழைப்பு உள்ளதென்று நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். ஆனால் நான்... ஆனால் நான் கூறுவதன் பேரில் அவர் அதைச் செய்வதை நான் விரும்பமாட்டேன் (அதன் காரணமாகத்தான் நான் இவ்விதம் அதற்கு விடையளித்தேன்) பாருங்கள். “நல்லது. ஆமாம், சகோ. இன்னார் இன்னார் ஊழியத்துக்குச் செல்ல வேண்டும்” என்று நான் கூறுவதன் பேரில். பாருங்கள்?
44. அப்பொழுது நீங்கள், “அதை நான் செய்ய வேண்டும் என்று சகோ பிரன்ஹாம் என்னிடம் கூறினார்” என்பீர்கள். பாருங்கள், சகோ. பிரன்ஹாமுக்கு ஏதாகிலும் சம்பவித்து, நான் கொல்லப்பட்டேன், அல்லது மரித்துப் போனேன். அல்லது விலகி விட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்பொழுது, பாருங்கள், உங்கள் அழைப்பு அப்பொழுது முடிந்து விடும். ஆனால் சகோதரனே, இயேசு உங்களை அழைப்பாரானால், நித்தியம் என்று ஒன்று உள்ள வரைக்கும். அது ஒலித்துக் கொண்டேயிருக்கும் பாருங்கள்? அப்பொழுது நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
இப்பொழுது இரண்டாம் கேள்வி...
45. இப்படி ஏதோ ஒன்று, “இது கடைசி நாட்கள் என்று நான் அறிந்துள்ளதால், அதைக் குறித்து அந்த சகோதரனை நான் பாராட்டுகிறேன். நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்பதை அந்த சகோதரன் உணர்ந்துள்ளதைக் குறித்தும் கிறிஸ்துவுக்காக ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமெனும் அவருடைய இருதயத்தின் உத்தமத்தைக் குறித்தும் நான் நிச்சயம் அவரைப் பாராட்டுகிறேன்.