46. இல்லை, சகோதரனே. அதே ஜனசமூகத்தினிடம் நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியது அவசியமில்லையென்று நினைக்கிறேன். அருமை சகோதரனே, கர்த்தர் உங்களை அழைக்கும் போது, நீங்கள் முன்பு குடியிருந்த ஜன சமூகத்துக்கு உங்களை போக விடமாட்டார் என்று நினைக்கிறேன். அங்கு நீங்கள் ஒருக்கால் வேறு காரியங்களைப் போதித்திருக்கக் கூடும். ஆனால் இப்பொழுதோ, அப்பொழுது நீங்கள் போதித்தவைகளிலிருந்து வித்தியாசமான காரியங்களைக் காண்கிறீர்கள். தேவன் உங்களை அழைக்கும்போது. அவர் ஒருக்கால்... அவர் அதை உங்களுக்கு உறுதிப்படுத்துவாரானால், அவர் எந்தவிடத்திற்கும் உங்களை அனுப்பலாம். பாருங்கள்? நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜனசமூகத்திற்கு செல்ல வேண்டியதில்லை.
47. நீங்கள் அந்த ஜன சமூகத்தில் இருந்த போது உத்தமமாய் இருந்தீர்கள். இந்த கேள்வியை எழுதின சகோதரனை நான் அறிவேன். மிகவும் ஆழமான உத்தமத்துடனும், ஒரு உண்மையான கிறிஸ்தவனாகவும், உங்களுக்குச் செய்யத் தெரிந்த அனைத்தையும் உங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்தீர்கள். அவ்வளவுதான் தேவனுக்குத் தேவை. பாருங்கள்? தேவன் உங்களை மீண்டும் அந்த ஜனசமூகத்துக்கு செல்ல அழைப்பாரானால், நான் மீண்டும் அங்கு செல்வேன். அவர் அவ்விதம் செய்யாவிட்டால், அவர் என்னை எங்கு அனுப்பினாலும் அங்கு செல்வேன். அதன் பேரில் கேள்வி வேறெதாகிலும் உண்டா?