48. அது நல்ல கேள்வி, மிகவும் நல்ல கேள்வி. “எவ்விதம்... இன்றிரவு இங்குள்ளவர் அநேகரின் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு கேள்வி எழும்பக் கூடும்: “எனக்கு உரிய ஸ்தானத்தை எவ்விதம் அறிந்து கொள்வது?” இந்த சகோதரன் “கிறிஸ்துவில் எனக்கு என்ன ஸ்தானம், கிறிஸ்துவின் எந்த பாகத்தை நான் வகிக்க வேண்டும்?” என்று கேட்கிறார் என்று ஊகிக்கிறேன்.
49. இப்பொழுது, உதாரணமாக, சகோதரனே, எனக்குத் தெரிந்த சிறப்பான விடையை உங்களுக்கு அளிக்க இதைக் கூறுகிறேன். கிறிஸ்துவில் உங்கள் ஸ்தானம் என்ன... என்பது பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதை வெளிப்படுத்தினது பரிசுத்த ஆவியா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், நீங்கள் செய்யும் காரியங்களில் அவர் உங்களை ஆசீர்வதிக்கிறாரா இல்லையாவென்று பாருங்கள். அவர் உங்களை ஆசீர்வதித்தால், அது அவர்தான். அவர் ஆசீர்வதிக்காமல் போனால்...
50. அண்மையில் ஒருவர் என்னிடம், “தேவன் என்னைப் பிரசங்கம் செய்ய அழைத்திருக்கிறார்” என்றார்.
“நல்லது, அப்படியானால் பிரசங்கம் செய்யுங்கள்” என்றேன். பாருங்கள்? எனவே அவர் - அவர்
51. அது இப்படித்தான் என்று நான் உண்மையில் நினைக்கிறேன்... எவராகிலும் ஒருவர் இவ்விதம் நடந்து கொள்ளும்படி சாத்தான் செய்து, அவர்களை வஞ்சிக்கிறான். அதை தான் அவன் செய்ய விரும்புகிறான். அப்பொழுது உலகத்தார் அனைவருமே தங்கள் விரல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் தங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரமும் அதற்கு அர்த்தம் உரைக்கும் வரமும் உள்ளதாக எண்ணிக் கொள்கின்றனர்; சிலருக்கு தெய்வீகசுகமளிக்கும் வரம் உள்ளது; இன்னும் சிலருக்கு... சில சமயங்களில் அவர்கள் இந்த காரியங்களில் தவறாக உள்ளனர். தங்களுக்கு இந்த வரங்கள் உள்ளபோதே அவர்களுக்கு இவை இல்லையென்று நினைப்பவரும் உண்டு. எனவே அது மிகவும் தந்திரமான ஒன்று.
52. எனவே, சகோதரரே, இதை எப்பொழுதும் கடைப் பிடியுங்கள். அதாவது, ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றும்போது அதை செய்வது வேதப்பூர்வமானதா (அது வேதத்தில் உள்ளதா என்பதைக் கண்டு பிடியுங்கள். அது வேதத்தில் ஒரு இடத்தில் மாத்திரம் எழுதப்படுவதல்ல, நீங்கள் அதைச் செய்வதற்கு அது வேதம் முழுவதிலும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் அர்த்தத்தில் தான்நான் கூறுகிறேன். உங்கள் ஸ்தானம், நீங்கள் சுவிசேஷகர்; மேய்ப்பர், போதகர், தீர்க்கதரிசி, தேவன் உங்களை எந்த ஸ்தானத்தில் இருக்க அழைத்திருக்கிறாரோ அந்த ஸ்தானம். பாருங்கள்? அல்லது உங்களுக்கு அந்நிய பாஷைகள் பேசும் வரம், பாஷைக்கு அர்த்தம் சொல்லும் வரம், சபையில் உள்ள ஒன்பது ஆவிக்குரிய வரங்களில் ஏதாவது வரம், சபைக்குள்ள நான்கு ஆவிக்குரிய உத்தியோகங்களில் ஏதாவதொருஸ்தானம் இருக்குமானால் முதலாவதாக தேவன் அழைத்தாரா என்பதைப் பாருங்கள்.
53. அதன் பிறகு, வழக்கமாக, அதை நான் எவ்விதம் கவனிப்பேன் என்றால்... நான் என்ன செய்வேன் என்று கூறுகிறேன், நான் ஒரு நபரின் சுபாவத்தைக் கவனித்துக் கொண்டே வந்து, அவர்கள் எந்தவிதமான வரத்தை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று காண்பேன். பாருங்கள், தேவன் தம் சிருஷ்டியுடன், அவர் அவனை எந்தவிதமாக உண்டாக்கியிருக்கிறாரோ, அந்த விதத்தில் கிரியை செய்வார். பாருங்கள்? அவர் ஒரு சிருஷ்டியை உண்டாக்கினால்...
54. நீங்கள் ஒரு மனிதனை சலன புத்தியுள்ளவராயிருக்கக் கண்டு, அவர், “கர்த்தர் என்னை ஒரு மேய்ப்பனாக இருக்க அழைத்திருக்கிறார்” என்பாரானால், மேய்ப்பன் சலன புத்தியுள்ளவராக இருக்க முடியாது. மேய்ப்பன் திடமானவர், நிலையுள்ளவர். யாருங்கள்?
55. “தேவன் என்னை போதகராக (teacher) அழைத்திருக்கிறார். அவர் வார்த்தையை எவ்விதம் வியாக்கியானம் செய்கிறார் என்பதைக் கவனியுங்கள். பாருங்கள்? அவர் எல்லாவற்றையும் குழப்புவாரானால், அப்பொழுது நீங்கள் அவர் உண்மையில் போதகர்தானா என்று சொல்லிவிடலாம். பாருங்கள்?
56. அப்படியானால், செய்ய வேண்டியகாரியம் என்னவெனில், நீங்கள் அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொருத்து உங்கள் ஸ்தானம் வழக்கமாக அறிந்து கொள்ளப்படுகிறது.
இப்பொழுது, தேவன் என்னை ஒரு சுவிசேஷகராக அழைத்த போது, நான் மேய்ப்பனாக இருக்க விரும்பினேன். வீட்டிலேயே தங்கியிருப்பது நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். தேவன் என்னை அழைத்தார். முடிவில் எல்லா மக்களும் ஒன்று கூடி...அவர்கள் மிகவும் அழுது 1717 ஸ்பிரிங் தெருவிலிருந்து வெளி வந்தனர். அவர்களில் ஒருவரும் இன்றிரவு இங்கில்லை. அருகில் வசித்த திருமதி ஹாக்கின்ஸ் என்னைச் சந்தித்து அது பொருளாதார நெருக்கடி உண்டாயிருந்த காலம், அண்டை வீட்டிலுள்ள ஒருவர் ஒரு பானை பீன்ஸ் சமைத்து. நாங்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து அதை உண்பது வழக்கம்) அழுது கொண்டே என்னிடம் “நீர் மாத்திரம் ஒரு கூடாரத்தைக் கட்டுவீரானால், மேசையில் என் பிள்ளைகளின் ஆகாரத்தை குறைத்துக் கொண்டு, அதற்கு பணம் தருவேன்” என்றாள். பாருங்கள்?
58. என் அழைப்பு சுவிசேஷகராக இருக்க... அன்று காலையில் இங்குள்ள இந்த மூலைக்கல்லை இன்றிரவு நீங்கள் தகர்த்தால், என் வேதாகமத்தின் கடைசி பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஒரு காகிதம் அதில் காணப்படும், நான் சுவிசேஷகனாக இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினது அதில் எழுதப்பட்டுள்ளது. பாருங்கள்? நான் வெற்றிகரமான மேய்ப்பனாக இருக்கவேயில்லை, அவ்விதம் இருக்கவும் போவதில்லை. ஏனெனில் ஒரு மேயப்பனுக்கு இருக்க வேண்டிய பொறுமை எனக்கில்லை. பாருங்கள்? எனவே நான் மேய்ப்பனாக இருக்க முயன்றால், ஒரு மேய்ப்பன் சுவிசேஷகனாக இருக்க முயன்றால் அது எப்படி முடியாத காரியமோ, அது போல் இருக்கும்.
59. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? கர்த்தர் உங்களை எந்தவிதமாக அழைத்திருக்கிறாரோ, சரீரத்தில் உங்கள் ஸ்தானம் எதுவோ, அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.