148. அதுதான் அந்த நபரின் கேள்வி. அது சரி. அவர்கள் தூதர்கள் அல்ல என்று நான் நம்புகிறேன். பாருங்கள். அவைகள் ஜீவிகளாய் இருந்தன, “தேவகுமாரர்” என்று வேதம் கூறுகிறது. தூதர்கள் அல்ல, அவர்கள் தேவ குமாரராய் இருந்தனர், அவர்கள் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தனர். வந்து மாம்சத்திற்குள் வைக்கப்பட்டனர்; அவைகள் தாங்களே மாம்சத்திற்குள் நுழைந்து கொள்ளவில்லை இல்லை. இயேசு கிறிஸ்துவைத் தவிர, மற்ற எல்லா மாம்சமும் பாலுணர்வின் மூலம் பிறந்த ஒன்று என்று நான் நம்புகிறேன். கன்னிப்பிறப்பின் மூலம் பிறந்த நபர் இயேசுகிறிஸ்து ஒருவர்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜோசபஸ் மகத்தான சரித்திர அறிஞராயிருந்தாலும்கூட, நான் தான் அதைக் குறித்து அவருடைய கருத்துடன் இணங்குவதில்லை. ஆனால் அவைகள் இயற்கைக்கு மேம்பட்ட ஜீவிகள் என்றும், அவை கீழே வந்து மனிதனின் ஆவியை ஆட்கொண்டன என்றும் நான் நம்புகிறேன். அவைகள் இங்கே சரியாக ஜெபர்சன்வில்லில் இன்றைக்கு இருக்கிறது, சுற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். அதே மிருகத்தனமாக, இச்சைக்கொண்ட, தேவனற்ற ஆவிகள் இன்றைக்கு மனிதர்களுக்குள், இருக்கின்றது. இப்பொழுது ஒரு நாளிலே இம்மனிதர் மரிப்பர்; வேறொரு சந்ததி இருக்குமானால், அவைகள் அவர்கள் மீது வரும்.
149. நினைவில் கொள்ளுங்கள். தேவன் தம்முடைய மனிதனை எடுக்கின்றார். ஆனால் தம்முடைய ஆவியை எடுப்பதில்லை, இது பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியாகும்.
150. அதே பிசாசுதான் (மதங்கள் என்ற வடிவில்) கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தது, அதே பிசாசுதான் இன்றைக்கு நீண்ட அங்கிகளை அணிந்து சபையில் இருக்கின்றது. ஆகவே அவர்கள்... அவர்கள் சரீரத்தின் மேல் உள்ள நீண்ட அங்கிகளை நான் குறிப்பிடவில்லை. உங்கள் ஆத்துமாவின் மேல் உள்ள அங்கியை நான் குறிப்பிடுகிறேன். பாருங்கள், “ஏன், அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன, அப்படிப்பட்ட ஒரு காரியம் இல்லவே இல்லை” நீங்கள் நவீன பரிசேயர்களைக் குறித்து பேசுகின்றீர்கள்! சரியாக அதுதான்.
151. எப்படியாயினும், வேதம் “அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு” என்று கூறுகின்றது. அவர்கள் இன்னுமாய் தேவகுமாரர்களாய் இருக்கின்றனர். ஆனால் விழுந்து போன நிலையில் அவர்கள் உள்ளனர். நான் என்ன கூற முனைகின்றேன் என்பதை பாருங்கள்? சிலர் ஊழியக்காரர்களாய் இருக்கிறார்கள், சிலர் மூப்பர்களாய் இருக்கிறார்கள், சிலர் உதவியாளர்களாக இருக்கிறார்கள், சிலர் பிஷப்புகளாக இருக்கிறார்கள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு மதப்பணி ஆர்வ மிக்கவர்களாய் அவர்கள் இருக்கின்றனர். ஆனால் வேதம்...
152. இப்பொழுது, சகோதரனே, சிறிது நேரத்திற்கு முன் நீர் கேட்ட கேள்விக்கு நான் பதிலுரைக்கப் போகிறேன். யாரோ கூறினார்: