60. அது முதலாம் கேள்வி, “பரிசுத்த ஆவியால் நிறைந்த அனைவருமே... இவையனைத்தும் ஒரே கேள்வியில் அடங்கியுள்ளன. இதற்கு நான்காம் கேள்வி என்று எண் கொடுத்திருக்கிறேன். ஆனால் அதை முதலிலேயே காண்போம், பாருங்கள்?
பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அவர்களெல்லாரிலும் அதிகமாகபாஷைகளைப் பேசினதாக பவுல் கூறியிருப்பதைக் காண்கிறேன். சரி. நான்காம் கேள்வி: பரிசுத்த ஆவியைப் பெறும்போது எல்லாருமே அந்நிய பாஷை... இல்லை, அப்படியில்லை, எல்லாருமே அந்நிய பாஷை பேசுகின்றனரா... இல்லை, பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா?
61. இப்பொழுது, சகோதரனே, நான்... இது ஒரு ஆழமான கேள்வி. இப்பொழுது, அங்கே, நீங்கள் ஒருக்கால். இதற்கான சில விடைகளை ஒருக்கால் நான் பின்பு தரக்கூடும்.
62. பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல். அப்பொழுது நீங்கள் முதலில்... தேவன் உங்களை அழைக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் ஒரு போதும் அழைக்கப்படவே மாட்டீர்கள். பாருங்கள், நீங்களாகவே செய்யக் கூடியது ஒன்றுமில்லை. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். அது சரியா? எனவே பரிசுத்த ஆவியின் ஒரு பாகம் நீதிமானாக்கப்படுதல்.
63. தானிய வயலைக் குறித்து அந்த லூத்தரன் கல்லூரித் தலைவருக்கு நான் விளக்கிக் கூறினதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? பாருங்கள், ஒரு மனிதன் வயலுக்குச் சென்று தன் தானியத்தை விதைத்தான். அடுத்த நாள் காலையில் அவன் வயலில் சென்று பார்த்த போது, அங்கு ஒன்றுமேயில்லை. சற்று கழிந்து அவன் இரு முளைகள் வெளியே நீட்டியிருப்பதைக் கண்டு, “என் தானிய வயலுக்காக தேவனே ஸ்தோத்தரிக்கிறேன்' என்றான். “அவனுக்கு அப்பொழுது தானிய வயல் இருந்ததா?” என்று அந்த லுத்தரன் கல்லூரித் தலைவரைக் கேட்டேன்.
அவர், “மறைவாக (potentially)” என்றார்.
64. 'அது சரி. அவன் அதை மறைவாகப் பெற்றிருந்தான் “என்றேன். அது தான் லுத்தரன்களாகிய நீங்கள்” என்றேன்.
65. சிறிது சிறிதாக அந்த முளைகள் வளர்ந்து பட்டுக் குஞ்சத்தின் கட்டத்தை அடைந்தது. அது மெதோடிஸ்டு! தானியத்தின் இரண்டாம் கட்டம் பட்டுக் குஞ்சம் (tassel). (பண்ணையை வைத்துள்ள சகோதரரே, நான் கூறுவது சரியென்று நினைக்கிறேன்). அப்பொழுது பட்டுக் குஞ்சம் அந்த இலைகளைப் பார்த்து ஏளனமாக, 'ஹ! நான் பட்டுக் குஞ்சம், நீயோ வெறும் இலை. இனிமேல் நீ எனக்குத் தேவையில்லை” என்றதாம். அதன் பிறகு அந்த பட்டுக்குஞ்சம்... மகரந்தப் பொடி பட்டுக் குஞ்சத்திலிருந்து கிழே உதிர்ந்து மறுபடியும் இலையாக வளருகின்றது. இலை எப்படியும் தேவை.
66. அதன் பிறகு அது கதிர் விடுகிறது. அது தான் பெந்தெகொஸ்தே, வரங்கள் புதுப்பிக்கப்படுதல், அது தொடக்கத்துக்கு சென்றது. கதிர் வளர்ந்தவுடனே, அது “பட்டுக்குஞ்சமே, எனக்கு நீ தேவையில்லை; இலையே, நீயும் எனக்குத் தேவையில்லை என்றதாம்.
67. ஆனால், தானியத்தின் முளையிலிருந்த அதே ஜீவன் தான் பட்டுக்குஞ்சத்தை தோன்றச் செய்தது. முளையிலும் பட்டுக் குஞ்சத்திலும் என்ன இருந்ததோ, அதுதான் தானியத்தை தோன்றச் செய்தது. எனவே அந்நிய பாஷையில் பேசும் பரிசுத்த ஆவி என்ன? அது நீதிமானாக்கப்படுதலின் மேலும் வளர்ந்த கட்டம். பாருங்கள்? பெந்தெகொஸ்தே சபை என்ன? மேலும் வளர்ந்த லூத்தரன் சபை. பாருங்கள்?
68. ஆனால், இப்பொழுது, வளர்ச்சியடைந்து விட்ட பிறகு, இந்த கேள்வி எழக் கூடும் அப்படியானால் நான் இருந்த இடத்திலேயே இருக்கவா? இல்லை! இல்லை, தானியம் முதிர்வடைந்து விட்டது. பாருங்கள்? நீங்கள் தானியத்தில் தொடங்குகிறீர்கள். நீங்கள் வார்த்தையில், தானியத்தில், தொடங்குகிறீர்கள். அது நீதிமானாக்கப்படுதலை தோன்றச் செய்கிறது. அது பரிசுத்தமாக்கப்படுதலை தோன்றச் செய்யும் வரைக்கும் நீதிமானாக்கப்படுதலில் நிலைத்திருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் பரிசுத்தமாக்கப்படுதலில் நிலைத்திருங்கள்.
69. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் போது, அது என்ன செய்கிறது? அது என்ன... இன்னும் ஒரு கேள்வி உள்ளது, இல்லையா? சரி.