70. அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது உங்களை நீதிமானாக்கி உங்களைப் பரிசுத்தப்படுத்தின பரிசுத்த ஆவியின் அபிஷேகமேயன்றி வேறல்ல. அது மிகவும் அதிகமாக நிறைத்து! இப்பொழுது இந்தக் கேள்வி எனக்குத் தேவைப்பட்டது. இந்த மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்பார் என்று எனக்குத் தெரியவே தெரியாது. தேவன் அதை அறிவார்.
71. இப்பொழுது மிகவும்... இங்கு மிகவும் உஷ்ணமாக இருந்தால், அந்த கதவைத் திறந்து விடுங்கள், உங்களுக்கு உறக்கம் வருவதாக இருந்தால். இதை நீங்கள் நன்றாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இங்கு உண்மையில் சிறிது உஷ்ணமாயுள்ளது. உங்களுக்கு அது உறக்கத்தை வருவிக்கும்.
72. இப்பொழுது கவனியுங்கள், இதை கவனியுங்கள்: நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம்.
73. இப்பொழுது இங்கே பாருங்கள். இதை விளக்க விரும்புகிறேன். இங்கு நான் இருக்கிறேன், நான் ஒரு பாவி. நான் இந்த வழியாய் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். சற்று கழிந்து, ஒரு சமயம், ஏதோ ஒன்று என்னிடம் பேசுகிறது. தேவனைத் தவிர வேறொன்றும் என்னைத் திருப்ப முடியாது. அது சரியா? நான் இந்த வழியாக திரும்பி விடுகிறேன். நான் அவ்விதம் திரும்பும் போது, அது தான் என் நீதிமானாக்கப்படுதல். அது சரியா? அங்குள்ள கிறிஸ்துவின் படமே, நான் போய் சேரவேண்டிய இடம்.
74. எனக்கு நல்லுணர்வு தோன்றும் இடத்துக்கு நான் செல்ல விரும்புகிறேன். பாருங்கள், நான் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன். நான் அவருடன் பேசக்கூடிய இந்த கட்டத்துக்கு வந்துவிட்டேன், ஏனெனில்... நான் இன்னும் என்னைக் குறித்து வெட்கப்படும் நிலையில் இருக்கிறேன். நான் இன்னும் புகை பிடிக்கிறேன், இன்னும் பொய் சொல்கிறேன், நான் செய்யத்தகாத சில தீய காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறேன், எல்லா நேரங்களிலும் எனக்கு ஏற்றத் தாழ்வு, ஏற்றத் தாழ்வு உள்ளது. ஆனால் நான் அவரிடம் நடந்து சென்று அவரிடம் பேச வேண்டும்மென்று வாஞ்சித்து, அவர் என்னை இவையனைத்திலுமிருந்து சுத்திகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். பாருங்கள்? சரி, அது இங்குள்ளது, அது பரிசுத்த பரிசுத்தமாக்கப்படுதலின் கட்டம். அது என்ன செய்தது? அது என்னை நேராக்கியது. பாருங்கள்?
75. இப்பொழுது நான் பரிசுத்த ஆவிக்குச் செல்கிறேன். பாருங்கள் இங்கு நான் அடையும்போது, ஒரு அபிஷேகத்தினால் நான் பரிசுத்த ஆவியில் இருக்கிறேன். அது சரியா? பரிசுத்த ஆவி என்ன செய்கிறது? அது எனக்கு வல்லமையைத்தருகிறது - ஒரு பிரசங்கியாயிருக்க வல்லமை, ஒரு பாடகனாயிருக்க வல்லமை, அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கு வல்லமை, பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பதற்கு வல்லமை. அது முழுவதும் வல்லமையாயுள்ளது, ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய வல்லமை. தேவனுடைய வல்லமையே என்னைத் திசை திருப்பியது. தேவனுடைய வல்லமையே என்னை பரிசுத்தமாக்கியது. என்னை நிரப்பியது பரிசுத்த ஆவியே.
76. இப்பொழுது, ஒரு குறிப்பிட்ட தருணத்தில், நான் இங்கு நின்று கொண்டு எதையோ கூற முயல்கிறேன், தேவனுடைய வல்லமை என் மேல் அதிகமாக இறங்கி என்னால் பேச முடியவில்லை. பாருங்கள்? அப்பொழுது நான் திக்கி பேசத் தொடங்குகிறேன். உதாரணமாக, நான் “சகோதரர்களே” என்று கூற முற்படும்போது, அது...
77. இது இப்படியுள்ளது, இதை நான் இந்த விதமாக விவரிக்கப் போகிறேன். நீங்கள் அதை நிச்சயம் கிரகித்துக் கொள்ள வேண்டுமென்று கருதி சகோதரர்களாகிய உங்களிடம் இதை விவரிக்கப் போகிறேன். “எப்படி இருக்கிறீர்கள், சகோதரனே? பாருங்கள், நான் இன்னும் பாவக் குற்றத்தில் இருக்கிறேன். “உங்களில் நான் ஒருவனாக இருப்பதற்கு நிச்சயம் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சரி. சற்று கழிந்து. என்ன நடக்கிறது? நீங்கள் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் இன்னும் உலகத்தின் அசுத்தமானகாரியங்களை செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்திருக்கிறேன்.
78. சற்று கழிந்து நான் சுத்திகரிக்கப்படுகிறேன். ஏதோ ஒன்று சம்பவித்தது, நான் பரிசுத்தமாக்கப்பட்டு விட்டேன். அப்பொழுது நான் உங்களை முகத்துக்கு நேராக பார்க்க முடிகிறது. நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். பாருங்கள்? சரி. “சகோதரனே, தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்தில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். பரிசுத்தமுள்ள சகோதரராகிய உங்கள் மத்தியில் நான் இருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன்”. ஏன்? நீங்கள் விரலை சுட்டிக் காட்டி என்னைக் குற்றப்படுத்த முடியாது, நான் சுத்திகரிக்கப்பட்டு விட்டேன். இப்பொழுது தேவன் என்னை அவருடைய சேவையில் வைக்கப் போகிறார். ஆம். ஐயா!
79. “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் நீதிமானாக்கப்பட்டு விட்டீர்களா?”
80. “ஆம்! உங்களை ஏறெடுத்தும் பார்க்க முடியாதிருந்த காலத்தை நான் நினைவுகூருகிறேன். சகோதரனே, இப்பொழுது என்னால் உங்கள் முகத்தைப் பார்க்க முடிகிறது.
81. பாருங்கள், இந்த மற்றது என்ன? இப்பொழுது நான்... இது சுத்திகரிக்கப்பட்டு சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது, இது சேவைக்குள் வருகிறது. “பரிசுத்தமாக்கப்படுதல்” என்பது கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது என்றும், அதன் அர்த்தம் “சுத்திகரிக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது” என்றும் நாம் அறிவோம். பாண்டங்கள் பலி பீடத்தினருகில் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு சேவைக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது. ஆனால் சேவையில் இருக்க வேண்டுமானால், நிறைக்கப்பட்டு சேவையில் வைக்கப்பட வேண்டும்.
82. இப்பொழுது, நான் இங்கு சென்று, சேவைக்குள் வந்து விட்டேன். தேவன் தான், “எனக்கு செவிகொடு, எனக்கு செவி கொடு! எனக்கு செவி கொடு!' என்று சொல்லி என்னைத் திசை திருப்பினார். அவர் சொன்னார்...
83. நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? பாருங்கள்? இங்கு (சகோ. பிரன்ஹாம் ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதைப் போல் பேசி விவரிக்கிறார் - ஆசி). பாருங்கள், இங்கே, நீங்கள் மிகவும் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். அதுதான், பார்த்தீர்களா, அதுதான் அந்நிய பாஷையில் பேசுதல்.
84. எனது கருத்து இதுவே: அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதன் அடையாளம் என்று நான் நம்புவதில்லை. அதுவல்ல! ஏனெனில் மந்திரவாதிகளும், பாம்புகளை கையாளுகிறவர்களும், பிசாசுகளும் அந்நிய பாஷையில் பேசுகின்றதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் அந்நிய பாஷையில் பேசினால், நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறீர்கள் என்றும், அது தேவனுடைய பிழையற்ற செயல் என்றும் சொல்லி விட முடியாது. ஆனால், இதை ஞாபகம் கொள்ளுங்கள். பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளில் பேசுகிறார் என்பது உறுதி, ஆனால் பிசாசினால் அதை பாவனை செய்ய முடியும்
85 நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதன் அத்தாட்சி நீங்கள் வாழும் வாழ்க்கையே, பாருங்கள். “ அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத். 7-16). ஆவியின் கனி அந்நிய பாஷை பேசுதல் அல்ல (அவ்விதம் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை). ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், சமாதானம், இச்சையடக்கம் (கலா. 5-22,23). பாருங்கள், அது தான் களி. அது எந்தவிதமான மரம் என்று கூறுவதற்கு, இதை தான் அந்த மரத்தில் காண்கிறீர்கள். பாருங்கள்? அது தான்.
86. மனிதர் பிரசங்கிகளாகிய உங்களை, டீக்கன்மார்களாகிய உங்களை, தர்மகர்த்தாக்களாகிய உங்களை, சுவிசேஷகர்களாகிய உங்களை கவனித்துக் கொண்டேயிருக்கின்றனர். நீங்கள் இந்த தெருவில் நாள் முழுவதும் அந்நிய பாஷையில் பேசினாலும், அவர்கள் உங்களை நம்பமாட்டார்கள். ஆனால் நீங்கள் என்ன கூறுகிறீர்களோ, அதை வாழ்ந்து காண்பித்து, கசப்பான வேர் அனைத்தையும் உங்களை விட்டு களைந்து போட்டு, இனிமையைக் காண்பீர்களானால், அப்பொழுது மனிதர் ஏதோ ஒன்று உள்ளதை உணருவார்கள்.
87. “அந்நிய பாஷையில் பேசுதல்”. தேவனுடைய பலி பீடத்தின் கீழ் தன்னை படைத்திருக்கும் ஆவியினால் நிறைந்த நபர் அந்நிய பாஷையில் பேசுவார் என்பதை நான் விசுவாசிக்கிறேன் ஆனால் தேவனைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத அநேகர் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். பாருங்கள்? அவரைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுகின்றனர். இந்த வரங்களில் எந்த ஒன்றையுமே பாவனை செய்ய முடியும். பாருங்கள்?
88. ஆனால் ஆவியின் கனியோ உள்ளில் உள்ள ஆவி எது என்பதை நிரூபிக்கிறது. நீங்கள் இயேசு கிறிஸ்துவின் ஜீவனுக்கு சாட்சியாக இருக்கிறீர்கள். ஏனெனில், ஆப்பிள் மரத்தில் பீச் மரத்தின் சத்து இருக்குமானால், அது, உலகம் உள்ளது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக பீச் பழங்களைத் தான் கொடுக்கும். அது உண்மை. பாருங்கள், ஏனெனில் அது தான் அதற்குள் இருக்கும் ஜீவன்.
89. இப்பொழுது, இங்கும் அதே காரியம் தான். நாம் எல்லாரும் ஒரே காரியத்தைப் பேசுவதற்காக, இதை நான் உங்களுக்கு விளக்கிக் கூறுகிறேன். நான் விசுவாசிப்பது என்னவெனில்... ஆவியின் அபிஷேகத்தினால் கிறிஸ்துவுக்குள் வரும் ஆவியில் நிறைந்த ஒருவன் வெறுமனே... அதுவல்ல. அந்நிய பாஷையில் பேசுதல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்ட தன் அடையாளமல்ல. பாருங்கள்?
90. அபிஷேகம் என்னும்போது, நீங்கள் பிசாசின் வல்லமையினால் அபிஷேகம் பண்ணப்பட்டு, இந்த பிசாசின் வஞ்சக ஆவியின் அபிஷேகத்தின் மூலம் அந்நிய பாஷையில் பேச முடியும். அதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்? அதை நான் எத்தனை முறை கண்டிருக்கிறேன்?
91. அவர்கள் மனிதனின் மண்டை ஓட்டிலிருந்து இரத்தம் குடித்து விட்டு, அந்நிய பாஷையில் பேசுவது எனக்குத் தெரியும்.
92. வனாந்தரத்திலுள்ள பாம்பாட்டிகள், பெரிய பாம்பை தங்கள் மேல் சுற்றிக் கொண்டு அந்நிய பாஷையில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மந்திரவாதிகள் அந்நிய பாஷையில் பேசி அதற்கு அர்த்தம் உரைக்கின்றனர்.
93. நான் மந்திரவாதிகளின் முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் ஒரு பென்சிலை கீழே வைப்பார்கள், ஓரு புத்தகத்தையும் கீழே வைப்பார்கள். பென்சில் புகை போக்கி குழாயில் மேலும் கீழும் ஓடி, “முகச்சவரம், மயிர். கத்தரித்தல், இரண்டு துண்டு” என்னும் பாடலை வாசிக்கும், அது அந்நிய பாஷைகளில் எழுதி, மந்திரவாதி அதற்கு அர்த்தம் உரைத்து என்ன நடந்ததென்று பிழையின்றி உரைப்பான். அது எனக்குத் தெரியும்: பாருங்கள்? எனவே நான்... பாருங்கள், உங்களால்...
94. பவுல், “அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்து போம், தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். இந்த வரங்கள் அனைத்தும் விரைவில் போய்விடும்” என்று கூறியுள்ளான் (அந்த கேள்வி சற்று பின்னால் நமக்கு வருகிறது,) ஆனால் நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்”. பாருங்கள்? எனவே, நமக்கு நிறைவானது வேண்டும், சகோதரரே. நாம் போலியான அநேக காரியங்களையும், அவை தவறான அர்த்தம் உரைத்ததையும் நாம் கண்டிருக்கிறோம்.
95. ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதை நீங்கள் முகத்துக்கு நேராக காண்பதனால், அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக நம்பி விடாதீர்கள். பாருங்கள்? ஆனால் அவர்களில்காணும் கனிகளைக் கண்டு, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பதை தீர்மானியுங்கள். ஏனெனில் “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு உரைத்திருக்கிறார். பாருங்கள்? அது உண்மை. “அவர்களுடைய கனிகளினாலே”.
96. இப்பொழுது, அதிலிருந்து நான் விலகிச் செல்லாதிருப்பேனாக. ஏனெனில் தேவன் அளித்துள்ள அந்த மகத்தான வரத்தை நான் அவமதிக்க விரும்பவில்லை. பாருங்கள்? நான் விசுவாசிப்பது என்னவெனில், தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழும் ஆவியில் நிறைந்த மனிதன் அல்லது ஸ்திரீ, அல்லது பிள்ளை எவருமே அந்நிய பாஷையில் பேசாமல் அங்கு நீண்ட காலம் வாழமாட்டார்கள். பாருங்கள்? அவனோ அல்லது அவளோ அதை செய்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன்.
97. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது ஒருக்கால் அந்நிய பாஷை பேசாமல் இருந்திருக்கலாம். பாருங்கள்? ஆனால் நீங்கள் எந்நேரமும் தேவனுக்கு முன்பாக கிடக்கும் போது, அபிஷேகத்தின் மேல் அபிஷேகம் உங்களுக்கு கிடைக்கும் போது, ஏதோ ஒன்று நடக்கும். பாருங்கள்? என்றாகிலும் ஒரு நாள் நீங்கள் மிகவும் நிறைந்து, உங்களால் வேறொன்றையும் பேச முடியாத நிலை ஏற்படும். நீங்கள் ஏதோ ஒன்றைப் பேச முனைவீர்கள் ஆனால் உங்களால் அதை பேச முடியாது. ஜனங்கள் மாத்திரம் அது பரிசுத்த ஆவி என்பதை உணருவார்களானால், அவர்கள் முன் சென்று, தங்கள் இருதயத்தைத் திறந்து, தேவன் அவர்களிடம் பேசுவதற்கு விட்டுக் கொடுப்பார்கள்.
98. “பரியாச உதடுகளினாலும் (ஆங்கிலத்தில் “stammering tongues” - அதாவது திக்கு வாயினாலும் - தமிழாக்கியோன்) அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன்' என்று வேதம் உரைக்கிறது. ஏசா-28-18ப் பாருங்கள் (ஏசா-28-11 - தமிழாக்கியோன்).
99. “திக்கு வாய் என்றால் என்ன? ஒருவர் தெளிவாக பேச முடியாமலிருப்பது (சகோ. பிரன்ஹாம் ஒருவர் திக்கு வாயினால் பேசுவதைப் போல் காண்பிக்கிறார் - ஆசி). நீங்கள்... நீங்கள் திக்கிப் பேசுகிறீர்கள். நீங்கள் தெளிவாக பேச முயல்கிறீர்கள். பாருங்கள். ஆவியினால் முழுவதும் நிறைதல் அவர் பேச முயல்கிறார்.. உதாரணமாக நான். “சகோதரன் ஜா - ஜா - ஜாக்... ஜா... சகரன் ஜாக்... சகோதரன் ஜா - ஜா - ஜாக் - ஜாக் - ஜாக்ஸன்” என்று கூறுவதுபோல. பாருங்கள். அது போல, நீங்கள் பேச முயல்கிறீர்கள். ஆனால் உங்களால் பேச முடிவதில்லை. பாருங்கள், அது ஆவியினால் மிக அதிகமாக நிறைந்திருத்தல்! அது...
100. சகோதரரே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பரிசுத்த ஆவி எப்பொழுதாகிலும் உங்களை மிகவும் அதிகமாக அசைத்து, உங்களால் ஒன்றும் பேச முடியாமல் போய், சிறிது நேரம் நீங்கள் அமைதியாக இருந்து, நீங்கள் உட்கார்ந்து அழுகின்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? அவ்விதம் நீங்கள் செய்திருக்கிறீர்களா? நல்லது. அதுதான் பரிசுத்த ஆவி. நீங்கள் மாத்திரம்... ஜனங்கள் அநேக நேரங்களில் அந்நிய பாஷையில் பேசாததன் காரணம், தங்களை எவ்வாறு ஆவிக்கு சமர்ப்பிப்பது என்பதை அறியாததனால் தான். அது அவர்கள் மேலேயே உள்ள போது, அவர்கள் தொலைவிலுள்ள ஏதோ ஒன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? ஆகையால் தான் அவர்களால் முடியாமல்...
101. சிலர் உணர்ச்சிவசப்பட்டு, அர்த்தமே இல்லாத சில வார்த்தைகளைக் கூறுகின்றனர். அவர்களுக்குப் பரிசுத்த ஆவி கிடையாது. இருப்பினும் அவர்கள் அந்நிய பாஷையில் பேசினதால் அவர்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக கூறிக் கொள்கின்றனர். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்”. பாருங்கள்?
102. இப்பொழுது, ஏதாகிலும் கேள்வி உண்டா? (சகோ. ஜூனியர் ஜாக்ஸன், “சகோ. பிரன்ஹாமே” என்கிறார் - ஆசி). ஆம், சகோதரனே. அந்த கேள்வி கேட்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் தவறான ஒன்றை ஏற்றுக் கொண்டு போதிப்பதாக ஒருவர் சந்தேகித்தார். நீங்கள் எந்தவிதமாக போதித்தீர்களோ அதே விதமாகவே நானும் போதிக்கிறேன் நன்றி, சகோ. ஜாக்ஸன். “நான் எத்தனை முறை அந்நிய பாஷையில் பேசினாலும், வேதம் உரைப்பதற்கு என் வாழ்க்கை சாட்சி பகராவிட்டால், தெருவில் போகும் ஒரு நாயை விட நான் சிறந்தவன் அல்ல அது உண்மை. “நான் அபிஷேகம் பெற்று ஆறு மாதங்கள் வரைக்கும் அந்நிய பாஷையில் பேசவேயில்லை எனக்கும் கூட அப்படித்தான் நேர்ந்தது, சகோ. ஜாக்ஸன்.
103. என் கொட்டிலில் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டேன். ஏறக்குறைய ஒரு ஆண்டுகழித்து - அப்படி ஏதோ ஒன்று - நான் அந்நிய பாஷையில் பேசினேன்.
104. அதற்கும் ஓரிரண்டு ஆண்டு கழித்து, நான் ஒரு சபையில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் இப்படி மேடையின் மேல் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது நான் இளைஞனாயிருந்தேன், இப்பொழுது உள்ளதைப் போல் வயதாகியும் விரைப்பாயும் இல்லை. அப்பொழுது என்னால் சிறிது நன்றாக மேடையில் நடமாட முடியும். அக்காலத்தில் நான் பிரசங்கிக்கும் போது அதிக உணர்ச்சி வசப்படுவதுண்டு. அங்கு நின்று கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், ஒரு மேசையின் மேல் குதித்தேன். அது ஒரு பாப்டிஸ்ட் சபை, மில்டவுன் பாப்டிஸ்ட் சபை. நான் மிகவும் பலமாக பிரசங்கித்துக் கொண்டே உட் பாதைக்கு சென்றேன். நான் பிரசங்கத்தை நிறுத்தினவுடனே, ஏதோ ஒன்று என்னை ஆட்கொண்டது. நான் சில வார்த்தைகளை - நான்கு, ஐந்து, ஆறு வார்த்தைகளை - அந்நிய பாஷையில் பேசினேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்கு முன், களைப்படையும் தேசத்தில் கன்மலை, புயலடிக்கும் நேரத்தில் ஒதுங்குமிடம்” என்று நான் கூறுவதை என்னால் கேட்க முடிந்தது. பாருங்கள்?
105. அதன் பிறகு ஒரு நாள் நான் ரயில் பாதையின் வழியாக, ஸ்காட்ஸ்பர்குக்கு இந்த பக்கமாக, ரோந்து வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது. ஓ. என்னே, ரயில் பாதையின் மேல் பனிக் கட்டி படர்ந்திருந்தது. எனக்கு நியமிக்கப்பட்ட முப்பத்து மூன்றாயிரம் எண் நெடுஞ்சாலையில் நான் நடந்து செல்வதற்காக, நான் ரயில் பாதையைக் கடந்து மறுபுறம் சென்றேன். அறுபத்தாறு எண் கொண்ட நெடுஞ்சாலை மற்றொரு பக்கம் சென்றது. அது ஏறக்குறைய ரயில் பாதைக்கு இணையாக சென்றது. நான் பாதையின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது சடுதியாக... நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் எப்பொழுதும் பாடுவது வழக்கம். நான் ஜெபிக்க செல்ல எனக்கு வெவ்வேறு இடங்கள் இருந்தன. நான் பாடிக் கொண்டே தனிமையாக நடந்து சென்று கொண்டிருந்த போது. திடீரென்று நான் அந்நிய பாஷையில் பேசுவதை உணர்ந்தேன், பாருங்கள். நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று எனக்குத் தெரியவேயில்லை.
106. அந்நிய பாஷையில் பேசுதல் எரியும் நிலயில் (combustion) வருவதால், அந்த நபருக்கு தான் என்ன செய்கிறார் என்பதே தெரியாது. அவர்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. பாஷைக்கு அர்த்தம் உரைத்தலும் அவ்விதமாகவே உள்ளது. அர்த்தம் உரைப்பவர்கள் தாங்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்பதை அறிந்திருக்கவே மாட்டார்கள். அதைக் குறித்து அவர்களுக்கு எந்த எண்ணமும் இருக்காது. ஏனெனில் அது இயற்கைக்கு மேம்பட்ட ஒன்று. பாருங்கள். நீங்கள் மாம்சத்தை அதில் நுழைப்பீர்களானால், அது மாம்ச சம்பந்தமாகி விடுகிறது. ஆனால் ஏதோ ஒன்று உங்களைப் பற்றிக் கொண்டு, உங்களை ஆட்கொள்ளும் போது, உங்களை அறியாமலேயே அதை நீங்கள் செய்கிறீர்கள். பாருங்கள்?
107. [சகோ. நெவில், “சகோ. பிரன்ஹாமே, இப்பொழுது நான் ஒன்றைக் கூறலாமா?” என்று கேட்கிறார் - ஆசி]. நிச்சயமாக, சகோ. நெவில், நீங்கள் கூறலாம். “நீங்கள் இவ்விதமாகக் கூறுகிறீர்கள். ஒரு மனிதன் அந்நிய பாஷை பேசும்போது, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனால், அது ஆராதனையில் ஒழுங்கு முறையாக இருக்க வேண்டுமே, நீங்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில்... ஒரு வரத்தையுடைய மனிதன் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறான் அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். ஆம். உதாரணமாக... “அந்நிய பாஷையில் பேசவிருக்கும் ஒருவன்.” அவன் பேசப்போகிறான் என்பதை அறிந்திருக்க வேண்டும் ஆம். அது உண்மை. “இல்லையென்றால், அவன் ஒழுங்கை மீறினவனாயிருப்பான்”. அது உண்மை. அவனுக்கு அந்த உணர்வு தோன்றுகிறது. பாருங்கள்? “அந்நிய பாஷையில் பேசுகிறவன் ஒருவன் இருந்தால், அதற்கு அர்த்தம் உரைக்கிறவன் இல்லாமல் போனால், அவன் அமைதியாயிருக்கக் கடவன்” என்று வேதம் உரைக்கிறது.
108. உதாரணமாக, நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அல்லது யாராகிலும் ஒருவர். நீங்கள் கூச்சலிடவிருக்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடத் தொடங்கும்போது, தேவனுடைய வல்லமை உங்கள் மேல் வரும்வதை நீங்கள் எப்பொழுதாகிலும் உணர்ந்ததுண்டா? எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? நல்லது. நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். பாருங்கள்? நீங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், வல்லமை உங்கள் மேல் வருவதை உண்ருகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் அணைத்து போட வேண்டிய நேரங்கள் உண்டு. அதாவது அதை நீங்கள் அடக்கிக் கொள்ள முடியும். பாருங்கள். அந்நேரத்தில் பேசுவது தகாததாயிருக்கும்.
109. நீங்கள் நின்று கொண்டு அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அல்லது நகரத் தந்தையுடன் அல்லது ஒரு கூட்டம் ஜனங்களுடன் ஏதோ ஒன்றைக் குறித்து இத்தெருவில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்கள் திடீரென்று மேலும் கீழும் குதித்து. “மகிமை. அல்லேலூயா!” என்று கூச்சலிட்டு, எல்லாவற்றையும் உதைத்தெறிந்து. தெருவில் மேலும் கீழும் ஓடத் தொடங்கினால், நீங்கள் பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறுவார்கள். பாருங்கள், அந்த மனிதன் பைத்தியக்காரன் என்பார்கள். பாருங்கள்?
110. நல்லது. அவ்விதம் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியும். அது உங்களைத் தோண்டிக் கொண்டேயிருந்து, உங்களால் அடக்கிக் கொள்ளவே முடியாது என்னும் நிலை ஏற்பட்டாலும், நீங்கள் எப்படியும் அதை அடக்கிக் கொள்வீர்கள். உங்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் நீங்கள்; “ஆம். ஐயா. ஆம். ஐயா. உ - ஊ, ஊ - ஊ. ஆம், ஆம், ஐயா. உ – ஊ “ என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள். அந்த நேரத்தில் அது உங்களை துண்டு துண்டாக தோண்டியெடுத்துக் கொண்டிருக்கும். இருப்பினும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்பதை அறிந்திருப்பீர்கள். பாருங்கள்?
111. அண்மையில் நீதிமன்றத்தில், சில பெந்தெகொஸ்தேயினரை, அவர்கள் ஏதோ ஒன்றைச் செய்ததற்காக - அதிகமாக கூச்சலிட்டார்கள் என்பதற்காக, அப்படி ஏதோ ஒன்றிற்காக - கொண்டு நிறுத்தினர். அவர்கள் செய்தது முற்றிலும் நியாயமானது. பாருங்கள். ஆனால் நீதிபதி அவர்களிடம் ஏதோ ஒன்றைக் கூற முயன்ற ஒவ்வொரு முறையும். அவர்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்கினர். பாருங்கள்? நீதிபதிக்கு கோபம் மூண்டு. “இந்தப் பைத்தியக்கார ஜனங்களை இங்கிருந்து கொண்டு போய் விடுங்கள்” என்று கூறிவிட்டார். பாருங்கள்?
112. அவர்கள் பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைத்தல் உண்டாயிருந்து, அவர்கள் நீதிபதியிடம், “கர்த்தர் உரைக்கிறதாவது. இன்னின்ன காரியம் நடந்தது என்று உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றைக் கூறியிருந்தால்! “கர்த்தர் உரைக்கிறதாவது, நேற்றிரவு நீர் ஒரு வேசியுடன் வாழ்ந்தீர். அவள் பெயர் சாலி ஜோன்ஸ். அவள் இன்னின்ன தெருவில் 44ம் எண் வீட்டில் வசிக்கிறாள். அப்படியிருக்க, நீர் எப்படி என்னை நியாயந்தீர்க்கலாம்? அது கர்த்தர் உரைக்கிறதாவது. அதை நீர் மறுதலிப்பீரானால், இங்கேயே விழுந்து சாவீர்”, ஓ, சகோதரனே! அப்பொழுது அங்கு வித்தியாசமான ஒன்று நடந்திருக்கும்.
113. ஆனால் நீங்கள் அங்கு நின்று கொண்டு அந்நிய பாஷை மட்டும் பேசுவீர்களானால், “நீங்கள் அவர்களுக்கு மூடர்களாயிருப்பீர்கள்” என்று பவுல் கூறினான். பாருங்கள்? நீங்கள் எப்பொழுது அமைதியைக் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுது கடைபிடிக்காமலிருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? இப்பொழுது. அது... பாருங்கள், நான்... இப்பொழுது புரிந்து கொண்டீர்களா, நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். பாருங்கள்? நிச்சயமாக
114. அந்த கேள்வி இங்கே கீழே வருகிறது. அதை நான் கூறாமல் பிடித்து வைத்திருந்த காரணம், அதே கேள்வி நமக்குள்ளது. “அவர்கள் அமைதியாயிருக்க வேண்டுமென்று கருதப்படுகின்றனரா?” பாருங்கள்? அதற்காகத் தான் நீங்கள் கேட்கும் வரைக்கும் அதற்கு பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இப்பொழுதே, பாருங்கள், இப்பொழுதே. கீழேயுள்ள இந்தக் கேள்வியையும் நாம் பார்க்கலாம், அப்பொழுது ஏற்கனவே கூறினவைகளை நாம் குறிப்பிடலாம். எல்லோரும் அந்தக் கேள்விக்கான பதிலை நன்றாக புரிந்து கொண்டீர்களா?
(சகோ. ஃபிரட், “சகோ. பிரன்ஹாமே” என்று அழைக்கிறார் - ஆசி). ஆம், சகோ. ஃபிரட். ஆவியில் பேசும் ஒருவர் அவர் ஆங்கிலேயன் என்றும் அவர் ஆங்கிலம் பேசுகிறவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவர் ஆங்கிலத்தில் பேசும்படி ஆவியானவர் அவருக்குத் தந்தருளுவாரா?
115. நிச்சயமாக. ஆம், ஐயா. பாருங்கள், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் எல்லா பாஷைகளிலும் பேசக் கூடும்.பாருங்கள்? பெந்தெகொஸ்தே நாளில், வானத்தின் கீழ் காணப்படும் எல்லா பாஷைகளையும் பேசினவர்கள் அங்கு கூடியிருந்தனர், பாருங்கள். ஆங்கிலத்தில் பேசுவது... இப்பொழுது. சகோ. ஃப்ரட்டி, இதை நான் எப்பொழுதும் அறிந்திருக்கிறேன், அதாவது நான்... நான் அபிஷேகத்தின் கீழ் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கத்தால், அது ஆவியானவர் பேசும்படி தந்தருளுவதே, பாருங்கள். அது ஆங்கிலம் தெரியாதவனுக்கு அந்நிய பாஷையாயிருக்கும். இருப்பினும்...
116. அந்நிய பாஷை என்பது (ஆங்கிலத்தில்; “unknown tongue” தெரிந்திராத பாஷை - தமிழாக்கியோன்) உண்மையில் அந்நிய பாஷை அல்ல. அது... அங்கு யாராகிலும் இருப்பார்கள்... பெந்தெகொஸ்தேநாளில் அங்கு கூடியிருந்தவர்கள், அந்த பாவிகள் அனைவரும், “இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?” என்றனர் (அப்-2-7,8). அங்கு “அந்நிய பாஷை என்பது இருக்கவேயில்லை. பாருங்கள், அது வேதப்பூர்வமானது அல்ல. பாருங்கள்? அங்கு அந்நியமாக... அது அந்நிய பாஷை அல்ல, அது ஒரு பாஷை. “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? அங்கு தெரிந்திராத பாஷை ஒன்றுமே இல்லை. பாருங்கள்? இதை நாம் விட்டுச் செல்லும் முன்பு, இதன் பேரில் ஏதாகிலும் கேள்வி இப்பொழுது இருக்கின்றதா? “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே”. பாருங்கள்?
117. ஒரு சகோதரன், “மானிட பலவீனத்தின் காரணமாக ஒரு சிறு தவறு நேரிடுகிறது. ஜனங்கள். வேறெதையும் ஏற்றுக் கொள்ள மறுத்து, அதை அப்- 2-4ன்படி தவிர, வேறெந்த விதத்திலும் விசுவாசிக்க மாட்டேன்' என்கின்றனர்” என்கிறார் - ஆசி) நல்லது. அவர்கள் தெரிந்திராத பாஷையில் நிச்சயம் பேசமாட்டார்கள் “இல்லை, தெரிந்த ஒரு பாஷையில்”. உ-ஊ. ஜனங்கள் நீங்கள் கூறுவதை கேட்கக் கூடிய பாஷையில் அவர்கள் பேச வேண்டும். பாருங்கள். ஏனெனில் “தங்கள் தங்கள் பாஷையில் அவர்கள் பேசுகிறதைக் கேட்டார்கள்” (அப்-2-6).
118. இப்பொழுது, நான் இந்த இடத்திலே - பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வேனானால்... நான் சொல்வேன்... இங்குள்ள ஒருவர் பரிசுத்த ஆவியைப் பெற அதை நாடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன், அது சகோ. உட். அது சரிதானே, சகோ. உட்? உங்கள் பெயரை அறிவிக்க நான் நினைக்கவில்லை... என்னவிருந்தாலும் இங்குள்ள நாம் சகோதரரர்கள், இதை நாம் கூற விரும்புகிறோம். அவர் பரிசுத்த ஆவியை நாடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, சகோ. பாங்க்ஸ் அதை சரியான விதத்தில், வேதத்தின்படி பெற்றுக் கொள்வாரானால், அவர் எழுந்து நின்று ஆங்கிலத்தில் பேசுவார். அவர், “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எழும்பினார்” என்று சொல்லுவார். அவர், “அவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் இப்பொழுது என் இருதயத்தில் வந்தார், அவர் தேவனுடைய குமாரன்! என்னுடைய பாவங்கள் போய் விட்டன, எனக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது” என்னும் அனலுரைக்கும் தீர்க்கதரிசனமாக அதை கூறுகிறார். பாருங்கள்? பார்த்தீர்களா? அது பாஷை பேசுதல்...
“நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?”
119. இப்பொழுது இந்தியானாவிலுள்ள நாமும் கென்டக்கி நாட்டிலுள்ளவர்களும் வெவ்வேறு பாஷைகளைப் பேசுகிறோம். என்றும் சகோ. பாங்க்ஸ் கென்டக்கியைச் சேர்ந்தவர் என்றும் வைத்துக் கொள்வோம். அவரால் இந்தியானா பாஷையை பேச முடியாது. அவர் எழுந்து இந்தியானா பாஷையில் பேசுவாரானால் - அவருக்கு அந்த பாஷை தெரியாது என்பது தெரியும். பாருங்கள்? அவர் இந்தியானா பாஷையில் பேசுவதை நாம் கேட்கிறோம். அவர் கென்டக்கி பாஷையில் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர், “தேவனுக்கு ஸ்தோத்திரம்! இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார். அல்லேலூயா!” என்று கென்டக்கி பாஷையில் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாமோ அவர் கூறுவதை இந்தியானா பாஷையில் கேட்கிறோம்.
120. பெந்தெகொஸ்தே நாளில் அவ்விதமாகத்தான் இருந்தது. பாருங்கள்? “இவர்கள் எல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? “இவர் கென்டக்கியை சேர்ந்தவர் அல்லவா? அப்படியிருக்க, இந்தியானா, ஒஹையோ, இல்லினாய், மெய்ன். மசாசூசட்ஸ், கலிபோர்னியா நாட்டைச் சேர்ந்தவர்களாகிய நாம் நம்முடைய ஜென்ம பாஷைகளில் அவர் பேசுவதைக் கேட்கிறோமே, இதெப்படி? கருத்து புரிகிறதா? பாருங்கள், அது ஆவியின் ஏவுதல். பாருங்கள், அவர்கள் ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு அதை கேட்கின்றனர்…
121. பாருங்கள், அங்கு அளிக்கப்பட்ட செய்தி என்னவெனில், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்த சாட்சியே. பாருங்கள். அது உண்மை. தேவன் உங்களில் வாசம் செய்யாவிட்டால், நீங்கள் எவ்வளவு தான் அதைக் குறித்து சாட்சி சொன்னாலும், நீங்கள் இதை இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை. பாருங்கள்? அது உண்மை. நீங்கள் எவ்வளவு நன்றாக…
122. இப்பொழுது வேறு கேள்வி உண்டா? (சகோ. ராய் ராபர்ஃன், “நல்லது, சகோ. பிரன்ஹாமே, அதை நாம், அந்த ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த பெண்ணின் விஷயத்தில், ஜெப வரிசையில் கண்டோம் என்று எண்ணுகிறேன்” என்கிறார் - ஆசி) ஆம். மிகவும் நல்லது, சகோ. ராய். அங்குதான் நான் இப்பொழுது செல்லப் போகிறேன் - போமாண்டுக்கு. அது போமாண்ட் தானே? ஆம், ஐயா.
123. அங்கு ஜெபவரிசை நிறுத்தப்பட்டது. ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் மேடையின் மேல் வந்தாள். வெளிப்படையாகக் கூறினால், நான் வெளியே போகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். இல்லையா? ஹாவர்ட் என்னை வெளியே கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த ஸ்பானிய சிறுமி - அவளுக்கு பதினைந்து பதினாறு வயதிருக்கும் - அழுவதைக் கேட்டேன். நான் பார்த்த போது, நான் தொடர்ந்து சென்றிருந்தால், ஜெபவரிசையில் அடுத்தபடியாக அவளுக்கு ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கு அவள் ஜெப அட்டையை வைத்திருந்தாள். வரிசையில் நிறைய பேர் இருந்தனர், ஆனால் அவளுடையது தான் அடுத்த ஜெப அட்டை. நான், அவளைக் கொண்டு வாருங்கள்” என்றேன். அவர்கள் அவளை மேடையின் மேல் கொண்டு வந்தனர். நான் வேறொரு கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. “அவளை மேலே கொண்டு வாருங்கள்' என்றேன்.
124. நான் அவளிடம் இப்படி ஏதோ ஒன்றைக் கூறினேன்: “நீ விசுவாசிப்பாயா? உனக்குள்ள கோளாறு என்னவென்று உன்னிடம் கூறுவதற்கு இயேசு எனக்கு உதவி செய்வாரானால், அவர் உன்னை சுகமாக்குவார் என்று விசுவாசிப்பாயா?” என்று. அவள் தலை குனிந்து கொண்டிருந்தாள். அவள் செவிடு ஊமை என்று எண்ணினேன். பாருங்கள்?
125. நான் மறுபடியும் அவளைப் பார்த்தபோது, “அவளுக்கு ஆங்கிலம் தெரியாது” என்று சொன்னேன். எனவே அவர்கள் ஒரு மொழிபெயர்ப்பாளரை அங்கு கொண்டு வந்தனர். “அதை நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன். அவள் ஆம் என்று சைகை காட்டினாள். நான் கூறினதை அவளால் மொழிபெயர்ப்பாளரின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. பாருங்கள்?
126: நல்லது, நான் சொன்னேன். நான் பார்த்த போது, எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. நான், “ஒரு பழைய காலத்து அடுப்பைக் காண்கிறேன், அதன் மேல் ஒரு கிண்டி உள்ளது. அது மஞ்சள் சோளக்கதிரினால் நிறைந்துள்ளது. சகோ. ராய், உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? “நீ சோளத்தை அளவுக்கு மிஞ்சி சாப்பிட்டு விட்டாய். அப்பொழுது நீ மிகவும் வியாதிப்பட்டாய், உன் தாய் உன்னைக் கட்டிலில் படுக்க வைத்தாள். அப்பொழுது உனக்கு வலிப்பு வரத் தொடங்கினது. அன்று முதல் உனக்கு அந்த வலிப்பு இருந்து வருகிறது” என்றேன்.
127. அவள் திரும்பி மொழிபெயர்ப்பாளரை நோக்கி, “அவருக்கு ஸ்பானிஷ்பாஷைபேசத் தெரியாது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!” என்றாள்.
128. மொழிபெயர்ப்பாளர் என்னை நோக்கி, “நீங்கள் ஸ்பானிஷ் பாஷையில் பேசவில்லை, இல்லையா?” என்றார்.
129. நான், “இல்லை” என்றேன். நாங்கள் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டதை போட்டுக் கேட்டோம். அது முற்றிலும் ஆங்கிலத்தில் இருந்தது.
130. அப்பொழுது மொழிபெயர்ப்பாளர் அந்த பெண்ணை நோக்கி, “அப்படியானால் அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். பாருங்கள், அவளுக்கு சரியான அர்த்தம் கிடைத்ததா என்று அவர் பார்க்க வேண்டும். “அவர் என்ன சொன்னார் என்று சொல் பார்ப்போம்” என்றார். அவள் நான் சொன்ன வார்த்தைகளை அப்படியே அவரிடம் ஸ்பானிஷ் பாஷையில் எடுத்துக் கூறினாள்.
131. நான் ஆங்கிலத்தில் பேசினதை அவள் தன்னுடைய ஜென்ம பாஷையில் - ஸ்பானிஷ் பாஷையில் - கேட்டாள். “நாம் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளில் இவர்கள் பேசக். கேட்கிறோமே, இதெப்படி? அந்த பெண் சுகமடைந்தாள். பாருங்கள், அதுதான், அது தேவனுடைய அற்புதமான கிரியை.
ஒரு சகோதரன், “அப்படியானால், பரிசுத்த ஆவியைக் கொண்டுள்ள அந்த பாண்டம் ஒரு பாண்டமாக மட்டுமே இருக்கும், அதை நிரப்புகிற ஒருவர் அதை எதை கொண்டும்... என்று கேட்கிறார் - ஆசி).
132. அவருடைய விருப்பத்திற்கேற்ப எதைக் கொண்டும். அது முற்றிலும் உண்மை. அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள், அப்பொழுது உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்வீர்கள், பாருங்கள்? அது எதைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அந்த பாண்டம் அசுத்தத்தினால் நிறைந்திருந்தால், அது தேவனுடைய பாண்டம் அல்ல. அது சுத்தத்தினால் நிறைந்திருந்தால், அது தேவனுடைய பாண்டம். நான் கூறுவது விளங்குகிறதா? (அந்த சகோதரன், “சில நேரங்களில் அந்த பாண்டம் உபயோகிக்கப்பட்டு, அது அறியப்படாமலே இருக்க வகையுண்டு” என்கிறார் - ஆசி). ஓ, நிச்சயமாக. (அந்த சகோதரன் ஒரு சாட்சி கூறுகிறார் - ஆசி). உ-ஊ, உ-ஊள. அது முற்றிலும் உண்மை. நிச்சயமாக. ஓ, நாம் எல்லாருமே அதைக் கண்டிருக்கிறோம், அதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆம், ஐயா. ஆம், ஐயா. நாம் எல்லாருமே... இவை யாவும் நமக்குத் தெரிந்த விஷயமே.
அது நான்காம் கேள்வி என்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவியால் நிறைந்த மக்கள் அனைவருமே விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசுகின்றனரா? அவர்கெளல்லாரிலும் அதிகமான பாஷைகளைப் பேசினதாக பவுல் கூறியிருப்பதைக் காண்கிறேன்.
இப்பொழுத, நான் நினைப்பது என்னவென்றால், இந்த சகோதரனின் கேள்விக்கு பதிலளித்து முடிக்க:
அவர்களெல்லாரிலும் அதிகமாக பவுல் பாஷைகளைப் பேசுதல்.
133. பவுல் அறிவுள்ள ஒருவன், அவனுக்கு அநேக மனுஷகள் தெரிந்திருந்தது. பாருங்கள், அவனால்... அவன் நியாய விசாரணைக்குச் சென்றிருந்தபோது, அவன் இந்த பாஷையை, அந்த பாஷையை பேசினான். அது மற்றவர்களுக்கு அந்நிய பாஷையாக இருந்தது. அது ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டு பேசப்பட்ட பாஷையல்ல. அவை வழக்கமாக பேசப்படும் மொழிகள். ஆனால்... மற்றும்...
134. தேவனுடைய பலிபீடத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆவியின் நிறைவைப் பெற்றுள்ள எந்த ஒரு நபரும் விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ அந்நிய பாஷையில் பேசும் அனுபவத்தைப் பெற்றிருப்பார் என்பது என் கருத்து. ஏனெனில் பவுல் விவரித்துள்ளபடி அது தான் வரங்களில் மிகவும் தாழ்ந்த, மிகவும் குறைந்தவரம். நீங்கள் வரங்களை வரிசைப்படுத்தினால், வரங்களின் வரிசையில் பாஷைகளைப் பேசும் வரமே கடைசியான வரம் (1 கொரி. 12:28).
135. இப்பொழுது, முதலாவதாக, நீங்கள் ஞானஸ்நானம் பெறுகிறீர்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் வரங்களாக இருக்கிறீர்கள் என்றும், நான் வெளியே இருக்கிறேன் என்றும் வைத்துக் கொள்வோம். இப்பொழுது, “ஒரே வாசலினாலே, ஒரே ஆவியினாலே”. ஒரே வாசலின் வழியாக இந்த அறைக்குள் நுழைகிறேன். அது சரியா? நான் அந்த வழியாக வர முடியாது, இந்த வழியாக வரமுடியாது. பின்னால் உள்ள அந்த வழியாக வரமுடியாது. பாருங்கள்? நான் எப்படி இங்கே வருகிறேன்? சகோ. ராபர்ஸன் வழியாகவா? இல்லை, ஐயா. சகோ. லியோவின் வழியாகவா? அவர் அந்நிய பாஷை பேசும் வரம் என்று வைத்துக் கொள்வோம், பாருங்கள், நான் சகோ. லியோவின் வழியாகவா இதற்குள் வருகிறேன்? இல்லை, ஐயா. உ-ஊ. அப்படியானால், நான் எவ்வாறு உள்ளே வருகிறேன்? “ஒரே வசலினாலே, ஒரே ஆவியினாலே'. ஆவி என்பது எல்லாமே பாஷைகள் அல்ல. ஒ, இல்லை. ஹ! பாருங்கள்? பாருங்கள், “ஒரே ஆவியினாலே இந்த சரீரத்திற்குள் நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன்”.
136. இப்பொழுது, இது ஆவி, நீங்கள் எல்லோரும் வரங்கள். நீங்கள், “நல்லது. தேவனே ஸ்தோத்தரியுங்கள்” என்கிறீர்கள். நான் அங்கு செல்கிறேன், அங்கு சகோ. உட் இருக்கிறார், 'அவர் அற்புதங்கள் என்னும் வரம் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? “ஓ, நான் ஒரு அற்புதத்தை செய்தேன். நான் அற்புதத்தை செய்ததனால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று அறிந்திருக்கிறேன். ஒரு “அற்புதத்தினாலே “ நாம் எல்லாரும் அந்த சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை.
137. நான் பிறகு சகோ. ஜூனியிடம் செல்கிறேன், அவர் அறிவு என்னும் வரம் என்று வைத்துக் கொள்வோம். “நல்லது. நல்லது, எனக்கு வேதாகம அறிவு உள்ளது. ஆகையால் எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று எனக்குத் தெரியும்”. இல்லை, நாம் பிரவேசிக்கும் வழி அதுவல்ல.
138. சரி, சகோ. லியோவினாலும் அல்ல, சகோ. உட்டினாலும் அல்ல, சகோ. ஜூனியினாலும் அல்ல. பாருங்கள்? அல்ல. ஆனாலே ஒரே எதனாலே? (சபையோர்”ஆவியினாலே” என்கின்றனர் - ஆசி). இந்த சரீரத்திற்குள்ளாக நான் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறேன். இப்பொழுது நான் அதற்குள் இருக்கிறேன், இப்பொழுது பிதா என்னை எங்கே உபயோகிக்கப்போகிறார்? பாருங்கள்? ஒருவேளை லியோ (அந்நிய பாஷை பேசும் வரம் - தமிழாக்கியோன்) வாசலின் அருகே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடும். அந்நிய பாஷை பேசுதல் ஒரு வேளை முதலாவது காரியமாக இருக்கக் கூடும், அல்லது அப்படி இல்லாமலும் இருக்கலாம். நான் ஆவியை அதிகமாக பெற்றிருக்கக் கூடும், அப்பொழுது தேவன் மற்றெல்லாவற்றையும் கடந்து சென்று சகோ. உட்டை (அற்புதங்களைச் செய்யும் வரம் - தமிழாக்கியோன்) அடைய முடியும். எனக்கு பரிசுத்த ஆவி இல்லையென்று நீங்கள் சொல்ல முடியாது, ஏனெனில் ஞானஸ்நானத்தின் மூலமாக நான் இந்த சரீரத்திற்குள் இருக்கிறேன். நான், “நல்லது. தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக, இப்பொழுது நான் உட்கார்ந்து கொண்டு இளைப்பாறுவேன், நான் பரலோகத்திற்கு செல்வேன்” என்று சொல்வதற்காக தேவன் என்னை இங்கு கொண்டு வரவில்லை. ஹ! நான் கூறுவது விளங்குகிறதா?
139. ஆனால் இங்கிருந்து அங்கு செல்ல முடியும். நான் கூறுவது புரிகிறதா? நான் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியும், அல்லது நடுபாகத்திற்கு செல்ல முடியும், எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஆனால் ஏதோ ஒன்று நடக்கும், ஏதோ ஒன்று நடந்தே ஆக வேண்டும். அது என்ன? ஆவியின் ஞானஸ்நானம் நான் அந்த சரீரத்தில் இருக்கிறேன் என்பதைக் காண்பிக்கிறது. “ஒரே ஆவியினாலே”. சகோதரனே. இதை கிரகித்துக் கொண்டீர்களா? சரி! அது தானே நீங்கள் கேட்டது? சரி.