140. ஆவியில் அந்நிய பாஷை பேசுதலும் தீர்க்கதரிசனம் உரைத்தலும் சபையை பக்திவிருத்தியடையச் செய்வதற்காகவே, ஆனால் அதற்குரிய சேவை ஒன்றுண்டு. பாருங்கள்? சபையில் தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருக்கும்போது... அது தொந்தரவு செய்யக் கூடாது. பாருங்கள்? அது கூட்டத்தை ஒருக்காலும் தடங்கல் செய்யக் கூடாது.
141. இப்பொழுது, பாருங்கள், “தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள்”. நமக்கு இப்பொழுது வேறொரு கேள்வி உண்டு, ஒரு நிமிடம் அதற்கு செல்வோம். பாருங்கள், இந்த வரங்கள் இயங்குவதற்கு... சரியான வழி என்னவெனில்... இது அநேக வரங்களுக்கான பதில், பாருங்கள். நாம் அந்த கேள்விகளுக்கு வரும்போது, நாம் முதலாம் கேள்விக்கு அந்த பதில் உரைத்தோம், இந்த நபர் கேட்ட கேள்விக்கு இங்கு பதில் உரைத்தோம் எனலாம். பாருங்கள்? இது. ஐந்தாம் கேள்வி:.
தேவனை மகிமைப்படுத்த ஆராதனைகளின் போது அந்நிய பாஷைகள் பேசுதலையும் தீர்க்கதரிசனம் உரைத்தலையும் உபயோகிக்கலாமா?
142. பாருங்கள், இப்பொழுது, போதகர்... போதகர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, சபையானது ஒழுங்குக்குள் இருக்குமானால், சரியான முறை... நான், 'சபையை ஒழுங்குக்குள் கொண்டு வாருங்கள்' என்று உங்களிடம் கூறினது உங்களில் அநேகருக்கு தெரியும். இந்த வரங்கள்... கர்த்தருக்கு சித்தமானால், இதை தான் நாம் இந்த கூடாரத்தில் செய்யவிருக்கிறோம். நான் கவனித்து வருகிறேன். சகோ. நெவிலையும் மற்ற சகோதரரையும்ஒழுங்குக்குள் கொண்டு வந்து விட்ட பிறகு, நான் ஏதோ ஒன்றைக் காண்கிறேன். இப்பொழுது நீங்கள்... சகோதரராகிய உங்களில் அநேகர் வாலிப சகோதரராயிருக்கிறீர்கள்.
143. நான் உங்கள் எல்லாரையும் விட இந்த விதத்தில், அனுபவத்தில் மூத்தவன். இந்த ஊழியத்தில் நான் முப்பத்தோரு ஆண்டுகளாக இருக்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கல்லை இங்கு நான் நட்டேன். சந்திக்க வேண்டிய எல்லாவற்றையும் நான் சந்திக்க வேண்டியதாயிற்று. நான் என்ன பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். நீங்கள் அதை அறிந்திருப்பது மாத்திரமல்ல, அதை நீங்கள் எடுத்துக் கூறும்போது, தேவன் அதை ஆதரிக்க வேண்டும்.
144. இதை நீங்கள் மிகவும் வெற்றிகரமாக செய்யக்கூடிய வழி என்னவெனில், நீங்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்யலாம். அதை தான் அவர்கள் அங்கு 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் செய்தார்கள் என்று நினைக்கிறேன்: “அங்கே உட்கார்ந்திருக்க ஒருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், மற்றவன் பேசாமலிருக்கக்கடவன்”. (1 கொரி. 14:30). அது “வரங்களுக்கான சிறப்புக் கூட்டம்” என்று எண்ணுகிறேன். அவர்கள் சிறப்புக் கூட்டம் ஒன்றை வைப்பார்களானால், அது சரியாயிருக்கும். வரங்களைப் பெற்றுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி, அதன் பிறகு சபைக்கு ஆராதனைக்காக வருவார்களானால் அது அருமையாயிருக்கும். அந்த கூட்டத்தை அவர்கள் வைக்கட்டும். அங்கு பிரசங்கம் எதுவும் இருக்காது. அது ஆவியின் வரங்களுக்காக மட்டுமே.
145. அது வெளியாட்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் அல்ல. அவர்கள் உள்ளே வந்து, உட்கார்ந்து கொண்டு, சொல்லுவார்கள். ஒருவர் எழுந்து நின்று, “ஹா ஹா” என்று அந்நிய பாஷை பேசி, வேறொருவர் “ஹா - ஹா” என்பாரானால், உள்ளே வந்த இவர்கள், “என்ன நடந்து கொண்டிருக்கிறது? பாடல்கள் எங்கே? மற்றவை எங்கே?” என்று கேட்கக் கூடும். பாருங்கள்?
146. இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிறவர்களில் அநேகர் (அதற்கு அர்த்தம் உரைப்பவர்கள் போன்றவர்) சுவிசேஷத்தில் குழந்தைகளாயுள்ளனர். பாருங்கள்? அவர்களை மனம் நோக வைக்க வேண்டாம், அவர்கள் வளரட்டும்... அந்த வரத்தில் சிலவற்றில், சாத்தான் உள்ளே பின்னிக் கொள்வதை நீங்கள் காணலாம். அனுபவம் பெற்றுள்ள நாம் அதை கண்டு கொள்ளலாம். பாருங்கள், அதை நாம் புரிந்து கொள்ளலாம், நீங்கள் அதை கவனிக்க வேண்டும்.
147. அண்மையில் ஒரு குறிப்பிட்ட போதகர், இங்கு தற்பொழுது உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒருவர், என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்று, என்னிடம் இதைக் கூறினார், அவர் மிகவும் விலையேறப்பெற்ற ஒரு சகோதரர்.
148. அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதனால் இதை நான் கூறவில்லை, நீங்கள் எல்லோருமே விலையேறப்பெற்ற சகோதரர்கள். அவ்விதம் நான் எண்ணாமல் போனால், உங்களிடம் நேரடியாக, “முதலில் நீங்களும் நானும் நமக்கிடையே இந்த காரியத்தை நேராக்கிக் கொள்வோம்” என்று கூறியிருப்பேன். பாருங்கள்? அது உண்மை. பாருங்கள்? உங்கள் எல்லோரையும் நான் நேசிக்கிறேன், நீங்கள் இதை, வேதத்தின்பால் உங்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மையுடன் கேட்டு, உதவி செய்யும்படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். பாருங்கள்?
149. இந்த சகோதரன் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.... அங்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரீ இருந்தாள், அவள் தவறாயிருந்தாள், இந்த... அந்த ஸ்திரீயை நான் அதற்கு முன்பு கண்டதில்லை, ஆனால் அவள் பேசினதை ஒலிநாடாவில் கேட்டிருக்கிறேன் - அந்நிய பாஷைகளுக்கு அவள் அர்த்தம் உரைப்பதும், ஏதோ ஒன்றைக் கூறுவதும். அதை கேட்கும்போது. அது என்னவென்று நீங்கள் உடனே அறிந்து கொள்ளலாம்.
150. ஒரு நாள், வேறொரு போதகரிடம் நான்... அணில் வேட்டைக்குச் சென்றிருந்த போது, நாங்கள் அடி மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு இதைக் குறித்து பேசினோம். இப்பொழுது இங்குள்ள அந்த இரு போதகர்களுமே, அது என்னவாயிற்று என்பதை அறிந்துள்ளனர். பாருங்கள், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும்.
151. போதகர்களாகிய நீங்கள் ஒரு வரத்தைக் குறித்து ஒருவரைத் திருத்தும்போது, நீங்கள் அவர்களை வேதப் பிரகாரமாக திருத்தும்போது, அவர்களுக்கு கோபம் உண்டானால், அது தேவனுடைய ஆவியல்ல. ஏனெனில் தேவனுடைய ஆவி அவருடைய வார்த்தையின் நிமித்தம் கோபம் கொள்வதில்லை. அவர் அவருடைய வார்த்தைக்கு வருகிறார். பாருங்கள், அந்த வரத்தை உடையவர்திருத்தப் படுவதற்கு எப்பொழுதுமே சித்தமுள்ளவராயிருப்பார். தேவனுடைய உண்மையான பரிசுத்தவான் எவரும் வார்த்தையையே பின்பற்றுவதற்கு விருப்பமுள்ளவராயிருப்பார். ஆம், ஐயா.
152. நானும் திருத்தப்பட விரும்புகிறேன். நான் தவறாகச் செய்து கொண்டிருக்கும் காரியங்களில், பரிசுத்த ஆவியானவர் என்னை திருத்த வேண்டுமென்று விரும்புகிறேன். பதிலீடான ஒன்றும் எனக்குத் தேவையில்லை, உண்மையானதே எனக்கு வேண்டும், இல்லையேல் எனக்கு ஒன்றும் வேண்டாம். என்னைத் தனியே விட்டு விடுங்கள், வேறொன்றையும் நான் பெறும்படி செய்யாதீர்கள். பாருங்கள்? ஏனெனில் கிறிஸ்துவுக்கு நிந்தையைக் கொண்டு வருவதை விட அவ்விதம் செய்வதே மேலாயிருக்கும்
153. வேதம் கூறாத ஒன்றையும் நான் போதிக்கவோ அல்லது கூறவோ மாட்டேன்.
154. ஏதாவது ஒரு சகோதரன், ஒரு கிறிஸ்தவ சகோதரன், தவறான ஒன்றை நான் போதிப்பதைக் காண்பாரானால், ஆராதனை முடிந்த பின்பு அவர் என்னை ஒரு புறம் அழைத்துச் சென்று. “சகோதரனே, உமது அறைக்கு வந்து உம்மிடம் பேச விரும்புகிறேன், நீங்கள் ஒரு விஷயத்தில் தவறாயிருக்கிறீர்கள் என்று கூறுவாரானால், அதை நான் மெச்சுவேன். பாருங்கள், நான் நிச்சயம் அந்த சகோதரனின் செயலை பாராட்டுவேன். ஏனெனில் நான் சரியாயிருக்க விரும்புகிறேன். அது எனக்குத் தேவை.
155. இப்பொழுது, நாம் எல்லோருமே சரியாயிருக்க விரும்புகிறோம், ஆகையால் தான் இந்த காரியங்களை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவை வேதத்திலிருந்து வரவேண்டும். பாருங்கள், வேதவசனங்களை ஒன்றாக இணைக்க.
156. இப்பொழுது, அந்நிய பாஷை பேசுதல் எவ்விதம் இருக்க வேண்டுமென்றால்... சிறிது காலம் கழிந்து... இப்பொழுது சிறிது காலத்துக்கு அது அவ்விதமே சென்று கொண்டிருப்பதற்கு விட்டு விடுங்கள். பாருங்கள், அது அவ்விதமே சென்று கொண்டிருக்க, அவ்விதமே இருக்க விட்டு விடும்படி உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். ஊழியக்காரராகிய உங்களுக்கு, மேய்ப்பர்களாகிய உங்களுக்கு நான் கூறுவது என்னவெனில், இந்த குழந்தைகள் சற்று பெரியவர்களாக வளரும் வரைக்கும். அது அப்படியே சென்று கொண்டிருக்கும்படிக்கு விட்டு விடுங்கள். ஒருக்கால், விரைவிலோ அல்லது காலந்தாழ்ந்தோ, சத்துரு அந்த நபரை வஞ்சிக்க முயல்வான் என்றால், அது அம்பலமாகி விடும். அதைக் குறித்து நமக்கு நிச்சயமாகத் தெரியாது.
157. இப்பொழுது. இதற்குப் பிறகு, இதைத் தொடங்குவதற்கு முன்பு, அது என்னவென்று கண்டுபிடிக்க, ஞானத்தின் ஆவியுள்ள சிலரை, ஆவிகளை பகுத்தறியும் ஆவியுள்ளவர்களை கொண்டு வாருங்கள். முதலாவதாக, ஒரு சிறு தவறு உள்ளதாக யாராகிலும் ஒருவர் கவனிக்கத் தொடங்கினால், அதுதான் பகுத்தறிதல். அதை சிறிது காலம் வளர்த்து வாருங்கள். பாருங்கள்? அந்த பகுத்தறிதல் தவறாகின்றது என்பதை நீங்கள் கண்டால், அதை திருத்துங்கள். அந்த காரியம். அது தேவனிடத்திலிருந்து வந்ததாய் இருக்குமானால், அது வார்த்தையின் அடிப்படையில் திருத்துதலை ஏற்றுக் கொள்ளும். பாருங்கள்?
158. இதை உதாரணமாகக் கூறுகிறேன். நாம் அந்நிய பாஷையில் பேசினோம் என்று வைத்துக் கொள்வோம் - யாரோ ஒருவர். நாம். இங்குள்ளவர்கள் வரங்களைப் பெற்றுள்ள ஒரு கூட்டம் மனிதர் என்று வைத்துக் கொள்வோம். லியோ எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார்; அதற்கு இங்குள்ள வேறொரு சகோதரன் - வில்லர்ட் - அர்த்தம் உரைக்கிறார். நல்லது, சகோ. நெவில், சகோ. ஜூனி, சகோ. வில்லர்ட் காலின்ஸ் பகுத்தறிபவர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, லியோ அந்நிய பாஷையில் பேசினதால்... இங்கு நாம் பரிசுத்தவான்களின் ஒரு சிறு கூட்டத்தை - வரங்கள் கூட்டத்தை - ஒழுங்கு செய்திருக்கிறோம். லியோ அந்நிய பாஷையில் பேசினார். அதற்கு வில்லர்ட் அர்த்தம் உரைத்து, கர்த்தர் உரைக்கிறதாவது, புதன் இரவன்று இங்கு ஒரு ஸ்திரீ வருவாள், அவள் மிகவும் மூர்க்கத்தனமுள்ளவளாய் இருப்பாள். அவளைக் கடிந்து கொள்ள வேண்டாமென்று சகோ. பிரன்ஹாமிடம் சொல் ஏனெனில் அவளுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது. அவளை அந்த மூலைக்கு அழைத்துச் செல்லும்படி சொல். ஏனெனில் அந்த மூலையில் தான் அவள் ஒரு பொல்லாத காரியத்தை செய்தாள். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட காரியம் நடந்தது என்று சொன்னார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? அது மிகவும் நன்றாகத்தான் ஒலிக்கிறது. இல்லையா? பாருங்கள்? சரி.
159. இப்பொழுது முதலாவதாக, என்ன தெரியுமா, பழைய ஏற்பாட்டின் காலத்தில், தீர்க்கதரிசி அல்லது வேறு யாராகிலும்என்ன உரைத்தாலும், அது முதலில் ஊரீம் தும்மினால் பரிசோதிக்கப்பட்டது. பாருங்கள், அது வார்த்தைக்குச் சென்றது. ஊரிம் தும்மீமின் ஒளிகள் பிரகாசிக்கவில்லையென்றால், அதை அப்படியே விட்டு விடுவார்கள். பாருங்கள்?
160. முதலாவதாக நாம் செய்ய வேண்டியது என்னவெனில், அதை வார்த்தைக்குக் கொண்டு செல்வதே. இப்பொழுது, இந்த மனிதன் அந்நிய பாஷையில் பேசினார், அது நன்றாக ஒலித்தது. இந்த மனிதன் அதற்கு அர்த்தம் உரைத்தார், அதுவும் நன்றாக ஒலித்தது. ஆனால் வார்த்தை கூறுவது என்னவெனில், “அது இரண்டு அல்லது மூன்று நியாயாதிபதிகளால் முதலில் தீர்ப்பு கூறப்படட்டும்” என்று. அதை ஊரிம் தும்மீமுக்கு கொண்டு செல்லுங்கள்.
161. இப்பொழுது, முதலாவதாக, வில்லர்ட் காலின்ஸ், “அது தேவனால் உண்டானது என்கிறார். ஜூனியும் “அது தேவனால் உண்டானது என்கிறார் - மூன்றில் இரண்டு பேர். அது ஒரு தாளில் எழுதப்பட்டு, இந்த சபையில் அறிவிக்கப்படுகிறது. அது நடக்கும் முன்பு அதை படிக்கக் கேட்கும் மக்கள், அது நடப்பதைக் காணும்போது, “சகோதரனே, அது தேவன்! பாருங்கள், அது தேவன்” என்பார்கள்.
162. ஆனால் அது நடக்காமல் போனால், என்ன நடக்கிறது? பாருங்கள்? (நாம் இப்பொழுது மற்ற கேள்விக்குச் செல்லப் போகிறோம், அதை நான் இங்கேயே கூறிவிடலாம். “தீர்க்கதரிசனம் அனைத்துமே... அர்த்தம் உரைத்தல் அனைத்தும் செய்திகளும் தீர்க்கதரிசனமாகுமா?) இப்பொழுது, ஒரு நிமிடம். அது நடக்காமல் போனால் என்ன? அப்படியானால், லியோ தவறான ஆவியில் அந்நிய பாஷை பேசினார். மற்றவர் தவறாக அர்த்தம் உரைத்தார்; நீங்கள் தவறாக அது சரியென்று நியாயந்தீர்த்தீர்கள். அதை உங்களிடமிருந்து விலக்கி விடுங்கள். அது உங்களுக்குத் தேவையில்லை, அது தவறானது. அதை தனியே விட்டு விடுங்கள். அது பிசாசு, பாருங்கள்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி). “நான் ஒரு பிரசங்கியல்ல. நான் அர்த்தம் உரைக்கிறவன், கர்த்தாவே. நான் ஒரு பிரசங்கியல்ல. நான்... சகோ. லியோ, “கர்த்தாவே, நான் ஒரு பிரசங்கியல்ல. எனக்கு அந்நிய பாஷை பேசும் வரமுள்ளது, பிசாசு அதில் என்னைக் கவிழ்த்து விட்டான். தேவனே, அதை என்னை விட்டு அகற்றி விடும்” என்பார். நீங்கள், “கர்த்தாவே, எனக்குபகுத்தறிதலின் ஆவியைக் கொடுத்திருக்கிறீர், அதை நீர் அநேக முறை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்பொழுது ஏன் இவ்விதம் நேர்ந்தது? பிதாவே, என்னைச் சுத்திகரியும்! இது ஏன் நேர்ந்தது? என்பீர்கள். பார்த்தீர்களா? அப்பொழுது நீங்கள் உண்மையானதைப் பெற்றுக் கொள்கிறீர்கள்.
163. பாருங்கள், அது வழக்கமான பரிசுத்தாவன்களின் கூட்டம். அதுதான் வேதத்தில் உள்ளதென்று நினைக்கிறேன். ஏனெனில் பவுல், “ஒருவர் தீர்க்கதரிசனம் உரைத்து, ஏதாவதொன்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டால்... அங்கு உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசுகிறவன் முடிக்கும் வரைக்கும் இவன் பேசாமலிருக்க கடவன். அவன் முடித்த பிறகு இவன் பேசலாம். நீங்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக தீர்க்கதரிசனம் உரைக்கலாம்” என்கிறான். அது வழக்கமாக நடைபெறும் ஆராதனையாக இருக்க முடியாது, அது உங்களுக்குத் தெரியும், ஒவ்வொருவராக ஆராதனையின் போது தங்கள் வரங்களை உபயோகிக்க முடியாது.
164. இப்பொழுது. அது தேவனால் உண்டானது என்று நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டுமானால், பாருங்கள், அது மதியீனமாக இருக்குமானால், அது தேவனால் உண்டானதல்ல. அது நிறைவேறுமானால், அது தேவனால் உண்டானது. பாருங்கள்? அது நிறைவேறுமானால். எனவே நமது சபைகளில் பாருங்கள், சகோதரனே, அப்படியானால் நமக்கு திடமான சபை உள்ளது, எவருமே நமது பேச்சிலும் செயலிலும் தவறு கண்டு பிடிக்க முடியாது.
165. நான் பொது ஜனங்களுக்கு முன்பாக நிற்கையில், அது எவ்விதமான சூழ்நிலையில் என்னை நிறுத்துகிறது என்பதைப் பாருங்கள். அதைப் பாருங்கள். ஒரு தவறு நேர்ந்தால் என்னவாகும்? பாருங்கள்? நான் அவரை நம்பியிருப்பதால் தவறு ஏதும் ஏற்படுவதில்லை. பாருங்கள்? அவரை நான் நம்பியிருக்கிறேன். யாராகிலும் ஒருவர், “நீங்கள் தவறு செய்து விடுவோமா? என்று பயப்படுகிறீர்களா, சகோ. பிரன்ஹாமே” எனலாம். இல்லை, இல்லை, ஊ - ஊ, நான் தவறு செய்து விடுவேன் என்று பயப்படுவதில்லை. அவரை நான் நம்பியிருக்கிறேன். அவரே என் பாதுகாப்பு. இதை நான் செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். அதில் நான் நிலைத்திருப்பேன்
166. நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டுமென்று தேவன் உங்களைத் தெரிந்து கொண்டிருப்பாரானால், அவரே உங்கள் பாதுகாப்பாயிருப்பார். பாருங்கள், அவர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார். அவர் உங்களை அனுப்புவாரானால், நீங்கள் கூறும் வார்த்தைகளை அவர் ஆமோதிப்பார். அப்பொழுது நீங்கள் அவருடைய ராஜதூதராகி விடுகிறீர்கள். நீங்கள் அந்நிய பாஷைகள் பேசும் வரமுள்ள ராஜதூதர்; நீங்கள் பாஷைக்கு அர்த்தம் உரைக்கும் வரம் கொண்ட ராஜதூதர்; நீங்கள் பகுத்தறிதலின் வரத்தைப் பெற்ற ராஜதூதர், நீங்கள் மூவரும். நான் கூறுவது விளங்குகிறதா? அப்படியானால் உங்களுக்கு என்ன உள்ளது? உங்களுக்கு ஒரு திடமான சபை உள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் நிற்க பயப்படமாட்டீர்கள்.
167. இங்கு நான் ஒரு கூட்டத்தில் இருந்தேன். இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயப் பையன் ஒருவன் அங்கு வந்திருந்தான், அவன் தற்கொலை செய்து கொள்ள முயன்று கொண்டிருந்தான். சகோ. பாங்க்ஸ் என்னிடம் வந்து, “அந்தப் பையன் நான்கைந்து நாட்களாக இங்கிருக்கிறான்' என்றார். எனக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் உண்டாயிருந்தன. அவரோ, “அந்தப் பையன் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான்” என்றார். அங்குள்ள வாட்டர் வயூ ஓட்டல் நிர்வாகிகள் அந்தப் பையனுடைய நிலைமையைக் குறித்து என்னிடம் அறிவித்துக் கொண்டேயிருந்தனர்.
168. நான் அவனுக்காக ஜெபிக்க அறைக்குள் சென்றேள். நான் அங்கு செல்வதற்கு முன்பு, “சகோ. பாங்க்ஸ், அந்தப் பையனை நான் கண்டதில்லை, அவனைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அங்கு செல்வதற்கு முன்பு அவனுக்குள்ள கோளாறு என்னவென்று உங்களிடம் சொல்லப் போகிறேன்” என்றேன். அது சரியா, சகோ. பாங்க்ஸ்? அங்கு நாங்கள் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அங்கு வந்து, அதைச் செய்தது எதுவென்றும், அவன் எங்கு சென்றிருந்தான் என்றும், அவனுடைய வாழ்க்கையைக் குறித்தும் எல்லாமே அவனிடம் கூறினார். அவன் ஏறக்குறைய மயக்கமுற்று விழுந்தான்.
169. “ஒரு மனிதனிடம் அவ்விதம் கூறும்போது தவறு நேர்ந்து விடும் என்று பயப்படுகிறீர்களா, சகோ. பிரன்ஹாமே?” மேடையின் மேல் நின்று கொண்டு ஒரு மனிதனிடம் அவன் தன் மனைவிக்கு உண்மையில்லாதவனாக நடந்து கொள்கிறான் என்றும், வேறொருஸ்திரீயின் மூலம் அவனுக்குக் குழந்தை உள்ளது என்றும், சொல்லி அது தவறாயிருக்குமானால், அவன் உங்களை சிறையில் போட்டு விடுவான். ஆகவே நீங்கள் சரியாக கூறவேண்டும். பாருங்கள்? பாருங்கள்? அது தேவனால் உண்டாயிருக்குமானால், நீங்கள் பயப்படாதீர்கள்! ஆனால் நீங்கள் பயப்படுவீர்களானால்... அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திராமல் போனால், அது தேவனால் உண்டானதென்று நீங்கள் அறிந்திருக்கும் வரைக்கும் அமைதியாய் இருங்கள். அது சரியா? நீங்கள் சரியாயிருக்கிறீர்கள் என்று நிச்சயமுடையவர்களாய் இருந்து, அதன் பிறகு அதைக் கூறுங்கள்.
170. சகோதரனே, இது கடினமான போதகம், ஆனால் நீங்கள் என் சகோதரர். நீங்கள் முன்னேறிவரும் இளம் ஊழியக்காரர்கள், நானோ வயது சென்றவன், இந்நாட்களில் ஒன்றில் இவ்வுலகை விட்டுப் போக வேண்டியவன். பாருங்கள்? எனவே அது சரியென்று நிச்சயமுடையவர்களாய் இருங்கள்.
171. அறையை விட்டு வெளியே வருகையில்... சிறிது நேரம் கழித்து இதை கூறுகிறேன். ஒரு பையன்... நல்லது, அதன் ஒரு பாகத்தை இப்பொழுது கூறிவிடுகிறேன். நேற்று எனக்கும் சகோ. பாங்க்ஸுக்கும் அதிக வேலை உண்டாயிருந்தது. (ஓ, என்னே), நாங்கள் அதிக கடினமாக உழைத்தோம். நான் என்ன செய்ய வேண்டுமென்று உத்தேசித்திருந்தேன் என்பதை இந்த கூட்டத்தில் உங்களிடம் கூறுகிறேன். லியோவும், ஜீனும், சகோதரராகிய சிலரும் பன்றி வேட்டைக்காகப் போக உத்தேசித்திருக்கிறோம். நம்முடைய கூட்டம் முடிந்தவுடனே, அரிசோனாவில் ஜாவலினா பன்றி வேட்டைக்கென்று அவர்கள் ஐந்து நாட்கள் ஒதுக்கியுள்ளனர். நாங்கள் பீனிக்ஸுக்கு ஒரு நாள் கூட்டத்துக்கு செல்லப் போகிறோம். அடுத்த கூட்டம் தொடங்குவதற்கு இடையில் நான்கு நாட்கள் உள்ளன. நாங்கள் அரிசோனாவில் இருக்க வேண்டும். அப்பொழுது ஜாவலினா பன்றி வேட்டை காலம் துவங்குகிறது.
172. எனவே என் துப்பாக்கி சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்க அதை சுட்டுப் பார்க்க விரும்பினேன்; பாங்க்ஸ் என்னுடன் வந்திருந்தார். நாங்கள் வாசலுக்கு வெளியே வரும்போது, ஒரு மனிதன் உள்ளே வந்தார் (“தயவு செய்து 'சகோ. பிரன்ஹாம் இருக்கிறாரா? என்று கேட்காதீர்கள்” என்று எழுதி வைக்கப் பட்டிருந்த போதிலும்).
173. பாருங்கள், அவர்கள் அதைச் செய்யக் காரணம்... அது வியாதியஸ்தருக்கு அல்ல. என் வீடு, வேண்டுமானால் பாங்க்ஸை கேட்டுப் பாருங்கள், அவர் அடுத்த வீட்டில் வசிக்கிறார். ஜனங்கள் இரவும் பகலும் வந்த வண்ணம் இருக்கின்றனர், வியாதிப்பட்ட பிள்ளைகளையும் கொண்டு வருகின்றனர். நாங்கள் யாரையும் காணாமல் அனுப்பி விடுவதில்லை. ஆனால்.
174. லியோவும் ஜிம்மும் மற்றவர்களும் ட்ரெய்லர் வண்டியிலிருந்து என்னைக் கூப்பிட்டு, “இங்கு வியாதிப்பட்ட பிள்ளையுடன் ஒருவர் வந்திருக்கிறார். இங்குள்ள ஒரு மனிதனுக்கு புற்றுநேய் உள்ளது' என்றார்கள். நாங்கள் எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு அவரைக் காணச் சென்றோம்.
175. நேற்றிரவு மருத்துவமனை அறைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தேன். யாரோ ஒருவர் அங்கிருந்து தொலைபேசியில் என்னை வரும்படி அழைத்தார். அங்கு நான் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் நான் அறைக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து விட்டார். பாருங்கள், வேறு யாரோ ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு என்னை கூப்பிட்டு விட்டார். அதனால் பரவாயில்லை, என்னவாயினும் நான் செல்கிறேன். பாருங்கள்? அப்படிச் செல்ல வேண்டியது என் கடமை, பாருங்கள், யாருக்காகிலும் உதவி செய்வதற்காக
176. அப்படிப்பட்டவர்களுக்காக அங்கு அவ்விதம் எழுதி வைக்கப்படவில்லை. நாங்கள் காரில் ஏறப்போகும் தருணத்தில் இந்த மனிதன் வந்தார். சகோ. பாங்க்ஸுக்குத் தெரியும் நான்... நான் வீட்டில் காத்துக் கொண்டிருந்தேன். சகோ. பாங்க்ஸின் வீட்டுக்கு யாரோ ஒருவர் வந்து அவரை பிடித்து வைத்துக் கொண்டிருந்தார். அவரைக் காண நான் அங்கு சென்றிருந்த போது, நானும் பிடித்து வைக்கப்பட்டேன். நாங்கள் எங்கள் துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டு காரில் ஏறுவதற்காக புறப்பட்ட தருணத்தில், இந்த மனிதன் உள்ளே நடந்து வந்தார்.
177. நான் அவரிடம், அங்கு எழுதி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று தொலைபேசியில் அந்த எண்ணைக் கூப்பிடச் சொல்ல (பட்லர் 2-1519 என்ற எண்) ஆயத்தமானேன். “நாங்கள் அவசரமாய்ப் போக வேண்டும்” என்றேன்.
அவர், “ஐயா, நீங்கள் அவசரமாகப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்” என்றார்.
நான், “என் பெயர்...” என்றேன்.
178. முதலாவதாக நான் அவரிடம் நடந்து சென்றேன். அவர், “எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவருக்கு நான் யாரென்று தெரியாது என்பதை அறிந்து கொண்டேன்.
“என் பெயர் பிரன்ஹாம்” என்றேன். “நீங்கள் தான் சகோ. பிரன்ஹாமோ?” என்று கேட்டார். “நான்தான்” என்றேன்..
179. அவர், “சகோ. பிரன்ஹாமே, உங்களைச் சந்தித்து பேச வேண்டுமென்றிருந்தேன். நீங்கள் வெளியே செல்ல ஆயத்தமாயிருப்பதைக் காண்கிறேன்” என்றார்.
நான், “ஆம், ஐயா, அப்படித்தான்” என்றேன்.
அவர், “நீங்கள் அவசரமாக போக வேண்டும் என்பதை, அறிகிறேன்” என்றார்.
நான், “ஐயா, நான் உடனே போக வேண்டும்” என்றேன்.
180. அவர், “எனக்கு சில நிமிடங்கள் உங்களிடம் பேச வேண்டும்” என்றார்.
181. நான், இப்பொழுது முடியாது என்று சொல்ல வாயெடுத்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர், “அவனை அறைக்குள் கொண்டு செல், அவனுக்கு நீ உதவி செய்ய முடியும்” என்றார். அது எங்கள் திட்டம் அனைத்தையும் மாற்றிவிட்டது. துப்பாக்கி ஒருபுறம் வைக்கப்பட்டு விட்டது. தேவனுடைய வேலை முதலில் பாருங்கள்? அவர் சொன்னார்...
182. “என்னுடன் வாருங்கள்” என்று அவரை அழைத்துச் செல்கையில் சகோ. பாங்க்ஸிடம், “சற்று கழிந்து வருகிறேன்” என்றேன்.
அந்த மனிதன், “இது என் ஆத்துமாவைக் குறித்த விஷயம், சகோ. பிரன்ஹாமே” என்றார்.
நான், “சரி, உள்ளே வாருங்கள்” என்றேன்.
நான் உள்ளே நுழைந்த போது, மேடா, “நீங்கள் இன்னும் புறப்படவில்லையா?” என்று கேட்டாள்.
183. நான், “இல்லை, இல்லை, இல்லை, யாரோ ஒருவர் என்னைக் காண வந்திருக்கிறார்' என்று கூறிவிட்டு, “பிள்ளைகளைமற்ற அறையில் வைத்துக் கொள்” என்றேன். அவரை நான் அந்த சிறு குகை அறைக்குள் கூட்டிச் சென்று, நாங்கள் உட்கார்ந்தோம். நாங்கள் உட்கார்ந்த மாத்திரத்திலே...”
184. அந்த மனிதன் நேற்றிரவு சபைக்கு வந்திருந்தார். அவர் வந்திருந்தாரா பாங்க்ஸ்? நீங்கள், ஆம், நல்லது. நேற்றிரவு வருவதாக கூறியிருந்தார். அவர்...
185. முதலாவதாக பரிசுத்த ஆவியானவர் அவர் யாரென்றும், அவர் என்ன செய்தாரென்றும், அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்ததென்றும், அவரைக் குறித்து எல்லாமே, அவரிடம் கூறத் தொடங்கினார். அதற்கு பாங்க்ஸ் சாட்சி. அவர் வாயைத் திறந்து இரண்டு வார்த்தை கூட பேசவில்லை. அந்த மனிதரிடம், “நீ அலைந்து திரிகிறவன். நீ மாடிஸனில் வசிக்கிறாய், ஆனால் இப்பொழுது நீ இந்தியானாவிலுள்ள ஈவான்ஸ்வில் என்னுமிடத்திலிருந்து வந்திருக்கிறாய். அங்கு நீ ஒரு பிரத்தியேக கொள்கையை (cult) கடைபிடிக்கும் வேதப் பள்ளியில் சேர்ந்து, மிகவும் குழப்பமடைந்திருக்கிறாய். சில நிமிடங்களுக்கு முன்பு தான் நீ லூயிவில்லுக்கு வந்தாய். அங்கு ஒரு மனிதன் இருந்தார், அவருடன் நீ உட்கார்ந்து உணவு உண்டாய். அவர்தான் நீ இங்கு வந்து என்னைக் காணும்படியாகவும் 'அவர் உன் தொல்லை அனைத்தும் நேராக்கி லிடுகிறார்' என்று உன்னிடம் கூறினார். அது கர்த்தர் உரைக்கிறதாவது “ என்றேன்.
186. உட்கார்ந்து கொண்டிருந்த மனிதன் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு என்னைப் பார்த்து, “ஆம், ஐயா” என்றார்.
“அது உங்களை பிரமிக்க வைத்தது. இல்லையா? என்றேன். “ஆம், அது அப்படித்தான் செய்தது” என்றார்.
“நீங்கள் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“ஐயா, நான் விசுவாசிக்க விரும்புகிறேன்” என்றார்.
187. “நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களிடம் கூறட்டுமா?” என்றேன்.
188. அவர், “சரி, ஐயா' என்றார். நான் அவரிடம் அதைக் கூறினேன். அவர், “சகோதரனே, அது உண்மை “ என்றார்.
“உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றேன்.
அவர், “சரி, நான் மாற்றிக் கொண்டு விட்டேன்” என்றார்.
“இதுதான் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது” என்றேன்.
“அது உண்மை! அது உண்மை!” என்றார்.
189. “உங்களுக்கு ஒருதரிசனம் தேவையில்லை, நீங்கள் நேராக்கப்பட வேண்டியது மட்டுமே” என்று சொல்லிவிட்டு, அவர் செய்த ஒரு காரியத்தை அவரிடம் எடுத்துக் கூறினேன். அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அது மிகவும் மோசமான, பயங்கரமான காரியம், அதைச் செய்தது நீங்களாயிருந்தால், அதை நான் கூறுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். கர்த்தர் எனக்கு ஜனங்களைக் குறித்து கூறுவதை நான் வெளியே சொல்வதில்லை. நான் அவரிடம், “சரி, அதைச் செய்வீர்களா?” என்று கேட்டேன்.
அவர், “நான் செய்வேன்” என்றார். நான், “நீங்கள் போகலாம்” என்றேன்.
190. நாங்கள் அந்த அறையில் பத்து நிமிடங்கள் கூட இருக்கவில்லை, இல்லையா சகோ. பாங்க்ஸ்? ஏழு நிமிடங்களுக்கும் பத்து நிமிடங்களுக்கும் இடையே. நாங்கள் வெளியே வந்து, சாலையில் ஒன்றாக காரில் பயணம் செய்த போது - அவரும் நானும், சகோ. பாங்க்ஸும், என் சிறிய மகன் ஜோவும் என்று நினைக்கிறேன் - அவர் என்னிடம் திரும்பி, “மிஸ்டர், உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றார்.
நான், “சரி, கேளுங்கள்” என்றேன்.
191. அவர், “எனக்கு சிறிது குழப்பமாயுள்ளது. என்னைப் பொறுத்த எல்லா விஷயங்களையும் நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்?” என்று கேட்டார். பாருங்கள்? பாங்க்ஸ் கூட இருந்தார்.
192. நான், “மிஸ்டர். நீங்கள் எப்பொழுதாகிலும் என் தரிசனங்களைக் குறித்தும் என் ஊழியத்தையும் கேள்விப்பட்ட துண்டா?” என்று கேட்டேன்.
193. அவர், “ஒரு மணி நேரம் முன்பு வரைக்கும் உம்முடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. லூயிவில்லில் யாரோ ஒருவர் இங்கு போகும்படி கூறினார். நான் நடந்து பாலத்தைக்கடந்து வந்தேன்” என்றார். அது சரியா, சகோ. பாங்க்ஸ்? “உம்முடைய பெயரையும் நீங்கள் யாரென்றும் நான் அறிந்திருக்கவேயில்லை” என்றார்.
194. நான், “என் ஊழியத்தில் அது தேவன் அனுப்பின வரம்” என்றேன்.
195. அவர், “அது அவ்விதம் இருக்குமானால் நான்... என் குழப்பம் எல்லாம் போய் நான் சரியாயிருக்கிறேன். அது என்னவென்றால், தேவன் உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார்.
“அது மிகவும் சரி” என்றேன்.
196. அவர், “நான் வேதத்தில் படித்திருக்கிறேன். ஒரு முறை இயேசு சீஷர்களிடம் பேசி” அவர் “ஜனங்கள்” என்று சொல்வதற்கு பதிலாக “சீஷர்கள்” என்று சொல்லிவிட்டார் - “அவர் சீஷர்களிடம் பேசி அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த காரியங்களைக் கூறினார்” என்றார். பாருங்கள்? “அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து கொண்டார்” என்று வேதத்தில் கூறியுள்ளதை தான் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து, “அது அவருடைய பிதா அவர் மூலம் பேசுதல் என்பதாக அவர் கூறினார்” என்றார்.
“அது உண்மை” என்றேன்.
197. அவர், “அப்படியானால், இப்பொழுது, இப்பொழுது, என்னிடம் இந்தக் காரியங்களை அறிவித்து, நீர் கூறினது உண்மை என்பதை நான் விசுவாசிக்கும்படி செய்வதற்காக தேவன் உம்மை ஒரு கருவியாக உபயோகித்து உமது மூலம் என்னுடன் பேசினார்” என்றார்.
“அது உண்மை தானா?” என்று கேட்டேன். அவர், “ஆம், அது தேவனாயிருக்க வேண்டும்” என்றார்.
198. நான், “சகோதரனே (நானும் பாங்க்ஸும் இவ்வாறு கூறினோம்), கூட்டங்களுக்கு பத்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் சிலரை விட இப்பொழுது உமக்கு அதிகம் தெரிகிறது. அவர்கள் இதைக் குறித்து இன்னும் அறியாமலிருக்கிறார்கள்” என்றேன். அந்த மனிதன்! அதுதான் அது. பாருங்கள்?
ஆவியின் மூலம் அந்நிய பாஷை பேசுதலும் (கிரமமாக) தீர்க்கதரிசனம் உரைத்தலும் ஆராதனையின் போது உபயோகிக்கப்படலாமா?
199. இல்லை. அது இந்த விதமாக உபயோகிக்கப்பட்டு, ஆராதனையின் போது அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் இப்பொழுது, தற்பொழுது, அவர்கள் ஆராதனையில் பேசட்டும். ஆனால் அது கட்டுக்கு மீறும் நிலை ஏற்பட்டால், நீங்கள் கவனமாயிருக்க வேண்டும். சில சமயங்களில் அது தேவனாயிருக்கலாம். சிறு குழந்தை நடக்க முயற்சி செய்யும்போது, நான்கைந்து முறை கீழே விழுந்தால்... இந்த சபைக்கு இப்பொழுது வந்த முதற் கொண்டு இதை காண்கிறேன். நல்லது. அதை அப்படியே விட்டு விடுகிறேன். ஆனால், பாருங்கள், சகோ. பிரன்ஹாமே, அதை ஏன் நீங்கள் திருத்தக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். இல்லை, இல்லை.
200. பில்லி பால் முதலில் நடக்கத் தொடங்கின் போது, அவன் விழுந்து எழுந்திருப்பான். அவன் நடப்பதைக் காட்டிலும் விழுவது தான் அதிகமாக இருந்தது. அவனுக்கு நடக்கத் தெரியவில்லை. ஆனால் அவனுக்கு நடக்கும் வரம் இருந்தது என்று நான் எண்ணுகிறேன். அவனை சிறிது காலம் நடக்கவிடுகிறேன். அவனுடைய கால்கள் தடுக்கி விழும்போது, அவனிடம் கூறுகிறேன். நான் கூறுவது விளங்குகிறதா? பாருங்கள்? அவன் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டு தடுக்கி விழுந்தால், அவனிடம், “எழுந்து நட, நீ எங்கே இருக்கிறாய் பார்?” என்பேன். பாருங்கள்? அது தான் வித்தியாசம், பாருங்கள்.
201. இப்பொழுது அவர்கள் சிறிது காலம் தடுக்கி விழுந்து தடை செய்யட்டும். அவர்களை நீங்கள் திருத்தும் நேரம் வரும் போது. அவர்கள் அதை ஆட்சேபித்தால், அது தேவன் அல்ல என்பதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் தேவனுடைய ஆவி அடங்கியிருக்கிறது. இங்கு நீங்கள் சிறிது குறிப்பிட்டுள்ள வண்ணமாக, “தீர்க்கதரிசனத்தின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது”. பாருங்கள்? அது உண்மை.
(சகோ. ஸ்ட்ரிக்கர், “சகோ. பிரன்ஹாமே, இதை தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என்கிறார் - ஆசி). சரி. சகோதரனே. “அநேக சமயங்களில், நான் ஆராதனைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, அந்நிய பாஷைகள் பேசப்படுவதையும் அதற்கு அர்த்தம் உரைத்தலையும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும், அதைக் குறித்து எனக்கு மோசமான உணர்வு இருந்து வந்திருக்கிறது. நான் வீடுதிரும்பும்போது, வழி நெடுக நான் மனஸ்தாபப்பட்டது போல் தோன்றினது. அது தேவனால் உண்டானதல்ல என்னும் காரணத்தினாலா, அல்லது அது ஒழுங்கின்படி இல்லை என்பதற்காகவா?
202. இருக்கலாம், சகோதரனே, இவ்விரண்டில் ஏதாவதொரு காரணம் இருக்கலாம். பாருங்கள்? இதை நான் கூற முற்படுகிறேன். இப்பொழுது. இது வில்லியம் பிரன்ஹாம் கூறுவது, பாருங்கள். நான் வேதவசனங்களுக்கு செல்லும் வரைக்கும், அது வரைக்கும் நான் கூறுவது என் சொந்த அபிப்பிராயமே. சகோ. ஸ்ட்ரிக்கர், இதை கூற விரும்புகிறேன், இது இவ்விரண்டில் ஏதாவதொரு காரணமாயிருக்கலாம். அது ஒழுங்கின் படி இல்லாததனால் இருந்திருக்கலாம், அல்லது உங்களில் ஏதாவது தவறு இருந்திருக்கலாம். அந்த நபரில் ஏதாவது தவறு இருக்கக் கூடும்; அல்லது செய்தியில் தவறு இருக்கக் கூடும்; ஏதாவதொன்று உங்களுக்கு மோசமான உணர்வு ஏற்பட காரணமாயிருந்திருக்கும்.
203. இப்பொழுது. இப்பொழுது, உங்களுக்கு இங்கு சிறிது உதவி செய்ய விரும்புகிறேன், சகோ. ஸ்ட்ரிக்கர். பாருங்கள்? எப்பொழுதுமே... உணர்வைக் கொண்டு எதையுமே தீர்ப்பு செய்யாதீர்கள், பாருங்கள். அதன் தன்மைகளைக் கொண்டு தீர்ப்பு செய்யுங்கள்; அது என்ன கனி கொடுக்கிறது என்பதன் அடிப்படையில், பாருங்கள். ஏனெனில் சில நேரங்களில்...
204. சில சமயங்களில் நமக்கு உணர்ச்சி உண்டாகிறது என்பது உண்மைதான் - பிசாசின் உணர்ச்சியைப் போல. அது எனக்கும் கூட உண்டாகிறது, அப்பொழுது நான் அதை எளிதாக எடுத்துக் கொள்வேன், அதைக்குறித்து ஒன்றுமே சொல்லமாட்டேன், அதை தனியே விட்டு விடுவேன். ஏனெனில் அது என்னவென்று எனக்கு நிச்சயமாய் தெரியும் வரைக்கும், அது என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது.
205. இப்பொழுது, உதாரணமாக, அநேகர், “வ்யூ! சகோதரனே, எனக்கு பரிசுத்த ஆவி உண்டென்று தெரியும். அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லிக் கொள்கின்றனர். அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அந்நிய பாஷை பேசுகின்றனர். கூச்சலிடுகின்றனர். ஆவியில் நடனமாடுகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் மழை நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் விழுகிறது. அது உணர்ச்சியினால் அல்ல, அவர்களுடைய கனிகளினாலே.
206. அங்கு ஒரு... அதைக் குறித்து நான் கண்ட தரிசனம் ஞாபகமுள்ளதா? எப்படி அந்த... எபிரேயர் 6ம் அதிகாரம், பாருங்கள், “தன் மேல் அடிக்கடி பெய்கின்ற மழையைக் குடித்து பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” (எபி. 6:7-8).
207. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சிறிது காற்றை நான் அறைக்குள் விடுகிறேன். நீங்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டும் களைப்பாயும் இருக்கிறீர்கள் என்று அறிவேன். எனவே இப்பொழுது, பொறுங்கள், இதை சிறிது வேகமாக முடிக்க வேண்டும், இல்லையென்றால் மற்ற கேள்விகளுக்கு நான் வரவே முடியாது. இந்த கேள்விக்கு நாம் இங்குள்ள கேள்விகள் அனைத்திலும் நாம் தொடக்கக் கேள்விகளிலேயே இருக்கிறோம். ஆனால் மற்ற கேள்விகள்... பாருங்கள்...
208. இங்கு கோதுமை வயல் ஒன்றுள்ளது. அதில் ஜிம்ஸன் களை, காக்கில்பர்ஸ் அல்லது இன்னும் மற்ற களைகளும் உள்ளன. நல்லது, இப்பொழுது வறட்சி ஏற்பட்டுள்ளது. கோதுமையைப் போலவே ஜிம்ஸன் களைக்கும் காக்கில்பர் களைக்கும் தாகம் உண்டாகிறதல்லவா? எந்தவிதமான மழை... கோதுமையின் மேல் ஒரு விசேஷித்த மழையும், காக்கில்பர் களையின் மேல் மற்றொரு விசேஷித்த மழையுமா பெய்கிறது? இல்லை, ஒரே மழை தான் இவ்விரண்டின் மேலும் பெய்கிறது. அது சரியா? அது போன்று ஒரே ஆவிதான் மாய்மாலக்காரன் மேலும் கிறிஸ்தவன் மேலும் விழுகிறது. ஆனால் அவர்களுடைய “கனிகளினாலே”. சகோதரனே, அது ஆழமாக பதிந்து விட்டதா?
209. பரிசுத்த ஆவியின் அடையாளம் அதன் கனிகளே, ஆவியின் கனிகள். நல்லது, அது நல்லது. நீங்கள், “நான் ஒரு தண்டு, நான் ஒரு காக்கில்பர். கோதுமை தண்டைப்போலவே நானும் ஒரு தண்டு' எனலாம். ஆனால் எந்தவிதமான ஜீவன் உனக்குள் உள்ளது? அதற்குள் இருக்கும் ஜீவன் முட்களைப்பிறப்பித்து, எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டும், புண் படுத்திக் கொண்டும், நீச்சத்தனமாயும் மோசமாயும் உள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? கர்வம், பாருங்கள், அது ஆவியின் கனியல்ல. ஆவியின் கனியோ சாந்தம், பொறுமை, தயவு, பாருங்கள். இவையெல்லாம். பாருங்கள்?
210. அவர், ஒருவேளை, “நல்லது. உங்களைப் போலவே என்னால் உரத்த சத்தமாய் கூச்சலிட முடியும். தேவனுக்கு ஸ்தோத்திரம். பரிசுத்த ஆவி என் மேல் விழுகிறது எனலாம். அது முற்றிலும் உண்மையாயிருக்கலாம், ஆனால் அவர் வாழ்கின்ற வாழ்க்கை அவர் கூறுவதை ஆதரிக்கவில்லை. பாருங்கள்? அவர் ஒரு களை, அவர் தொடக்கத்திலேயே களையாக இருந்தார்.
211. இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப்படுதல் என்னும் பெரிய கேள்வியை அடைகிறோம், பாருங்கள். நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?
212. அவர்கள் தொடக்கத்திலேயே களைகளாக இருந்தனர், இவரோ தொடக்கத்தில் கோதுமையாக இருந்தார். வறட்சி வந்தது; பிறகு மழை நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிந்தது. சரி, புரிந்து கொண்டீர்களா?
(ஒரு சகோதரன், “ஒரு பிரசங்கியின் கனிகளைக் குறித்தென்ன?... வார்த்தையைப் பிரசங்கிக்கும் ஒருவர்”
என்று கேட்கிறார் - ஆசி).
213. ஒரு பிரசங்கி அங்கு எழுந்து நின்று வார்த்தையை ஒரு பிரதான தூதனைப் போல் பிரசங்கித்து, பாருங்கள், வேதத்திலுள்ள இரகசியங்களை அறிந்து, ஒரு நல்ல மேய்ப்பனாக விளங்கி, ஜனங்களைச் சந்தித்து மற்ற காரியங்களைச் செய்திருந்தாலும், அவர் இழக்கப்பட்டவராயிருக்கக் கூடும். பாருங்கள்? அவருடைய கனி ஒவ்வொரு முறையும் அதைத் தெரியப்படுத்தும், சகோதரனே. பாருங்கள்? அவர் எவ்வளவு நல்லவராயிருந்தாலும், அவர் என்னவாயிருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் அவர் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க வேண்டும். பாருங்கள்?
214. “அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் (பிரசங்கித்தோம்) அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்” என்று இயேசு கூறவில்லையா? (மத். 7: 22), அவர் அந்நிய பாஷை பேசினார், அற்புதங்களைச் செய்தார், பாஷைக்கு அர்த்தம் உரைத்தார், தேவனுடைய பரமரகசியங்களை அறிந்திருந்தார், இன்னும் மற்ற காரியங்கள் அனைத்தையும் செய்தார். இருப்பினும் இயேசு அவர்களை நோக்கி, “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்” என்கிறார் (மத். 7:23). நான் கூறுவது விளங்குகிறதா?
[சகோ. டெய்லர், “தவறான செய்தியைக் கொண்டு வரும் ஒரு மனிதனைக் குறித்தென்ன? அதாவது, அவர் சரியன்று நினைத்துக் கொண்டு, தவறானதைப் பிரசங்கிப்பவர் என்று கேட்கிறார் - ஆசி].
215. நல்லது, அந்த மனிதன் உத்தமமாயிருப்பாரானால் இங்கு உட்கார்ந்திருக்கும் இந்த சகோதரன் திரும்பிச் சென்று இவைகளை மீண்டும் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறது போல. அந்த மனிதன் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவராயிருந்து, அவர் எப்பொழுதாகிலும் சத்தியத்தின் முன்னிலையில் கொண்டு வரப்படுவாரானால், அவர் அதை அடையாளம் கண்டு கொள்வார். பாருங்கள்? “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது”. உங்களுக்கு புரிகி... நான் கூறுவது விளங்குகிறதா, சகோ. டெய்லர்? அதைக் குறித்து தானே நீங்கள் கேட்டீர்கள்? பாருங்கள்?
216. இப்பொழுது, உதாரணமாக, சகோ. க்ரேஸ் ஒரு பாப்டிஸ்ட் பிரசங்கி என்றும் அவருக்கு பரிசுத்த ஆவியைக் குறித்தும், இன்னும் மற்ற காரியங்களான ஆவியின் வரங்கள் போன்றவைகளைக் குறித்து ஒன்றும் தெரியாதென்றும் வைத்துக் கொள்வோம். அவர் நல்லவர், விசுவாசமுள்ள பாப்டிஸ்ட் பிரசங்கி. பாருங்கள்? முதலாவதாக என்ன தெரியுமா, இவை அவருடைய முன்னிலையில் கொண்டு வரப்படுகிறது. நான் விசுவாசிப்பது என்னவெனில், தேவனுடைய பிள்ளை ஒவ்வொருவரும்... ஒவ்வொரு காலத்திலும், தேவன் அவரைப் பிடிக்கும் வரைக்கும் வலை போடப்படும். தேவனுடைய சித்தம் செய்து முடிக்கும் வரைக்கும், ராஜ்யம் வர முடியாது. அது உண்மை. அவர்களில் ஒருவரும் அழிந்து போக முடியாது, பாருங்கள், அது தான் வழி.
217. பரலோக ராஜ்யம் கடலில் வலையைப் போடும் ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வலையை இழுக்கும்போது. அதில் எல்லாவிதமான கடல் ஜந்துக்களும் இருக்கின்றன. அவன்மீனை மட்டும் வைத்துக் கொள்கிறான். ஆமைகளும், மற்றவைகளும் தண்ணீரில் போடப்பட்டு அங்கு சென்று விடுகின்றன. அவன் மறுபடியும் வலையைக் கடலில் போடுகிறான். அவனுக்கு இன்னும் கொஞ்சம் கிடைக்கிறது. ஒருவேளை அவனுக்கு ஒரே மீன் மட்டும் கிடைத்திருக்கும். எல்லாம் பிடிக்கப்படும் வரைக்கும் அவன் வலையைப் போட்டுக் கொண்டேயிருந்தான். இப்பொழுது நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?
218. ஆனால் அந்த மீன் தொடக்கத்திலேயே மீனாக இருந்தது. அது எஜமானின் உபயோகத்திற்காக போடப்பட்டது. அவ்வளவு தான், அவைகளை இன்னும் தெளிவான சுத்தமான குளத்தில், வேறொரு குளத்தில் போட்டார்கள். ஆனால் அவனோ எல்லா மீன்களையும் பிடித்து வெளியே கொண்டு வரும் வரைக்கும், இந்த தவளை குளத்தில் வலையை வீசிக் கொண்டேயிருக்கிறான். நான் கூறு வது விளங்குகிறதா. சகோ. டெய்லர்? அங்குள்ள உங்கள் குடும்பத்தினரின் மூலமாகவே இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சரி, இப்பொழுது.