219. ஆம், ஐயா. ஆம், ஐயா. பரிசுத்த ஆவி கட்டுப்படுத்துகிறது. ஆம், ஐயா. அதற்கு உங்கள் மீது கட்டுப்பாடு உண்டு, உங்களுக்கும் அதன் மீது கட்டுப்பாடு உண்டு. நீங்கள் வேதத்திற்கு முரணாக நடந்து கொள்ளும்படி அது ஒருக்காலும் செய்யாது. அது... “ஆவி அயோக்கியமானதைச் செய்யாது. அது உண்மை. சரி.
220. ”உங்களை நேசிக்கும் ஒருவரிடமிருந்து... ஆம், அது, அதை பார்ப்போம். சரி, நாம் வேறொரு கேள்விக்குச் சென்று நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காண்போம்.
221. இப்பொழுது, அதற்கு ஒரு அடிப்படை இருந்ததென்று நினைக்கிறேன். இந்த கேள்விகளை நான் இப்பொழுது படிக்கவிருக்கும் போது, வேறெதாகிலும் கேள்வி... இதன் பேரில் வேறெதாகிலும் கேள்வி உண்டா? நாம் எல்லோரும் புரிந்து கொண்டு விட்டோமா? இதை நாம் எவ்விதம் விசுவாசிக்கிறோம் என்று நம் எல்லோருக்கும் புரிந்து விட்டதா?
222. (ஒரு சகோதரன், “எனக்கு ஒரு கேள்வி உண்டு” என்கிறார் - ஆசி.) சரி. கூறுங்கள். இதன் பேரிலா? சரி. ஆம், இதன் பேரில்தான். நான் சற்று தயங்கினேன். ஆனால்...” தயக்கம் வேண்டாம், இது ஒரு... “நீங்கள் பிரசங்கிக்கும் ஒரு மனிதனைக் குறிப்பிட்டீர்கள். அவருடைய ஊழியத்தில் என்ன நடந்தாலும், அவர் கிறிஸ்து கொண்டு வந்த செய்தியைப் பிரசங்கிக்காமல் இருந்து, அவர் சத்தியத்துடன் தொடர்பு கொள்ளும் தருணம் உண்டாகி, அவர் அதை புறக்கணிப்பாரானால், அப்பொழுது என்ன நடக்கும்? அவர் இழக்கப்படுகிறார். ஒரு நிமிடம் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்... “முன் குறித்தலின் சம்பந்தமாக, இவ்வுலகில் அவர் வருவதற்கு அவர் முன் குறிக்கப்பட்டதன் சம்பந்தமாக அது தான், அதுதான். பாருங்கள்? அப்படியானால் அவர் அவ்விதமாக இருக்கமுன் குறிக்கப்படவில்லை” அவ்விதமாக இருக்க தொடக்கத்திலேயே அவர் முன் குறிக்கப்படவில்லை. “அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை, அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போனார்கள். (1 யோவான் 2: 19).
223. உதாரணமாக, இது இப்படி உள்ளது, எபிரேயர் 6ம் அதிகாரத்திலும் அதே காரியம் தான். பாருங்கள்? ஜனங்கள் அந்த வேதவசனத்துக்கு தவறாக அர்த்தம் உரைத்து, அது “கூடாத காரியம்” என்று நினைக்கின்றனர். அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்று சொல்லியிருக்கிறார். பாருங்கள், அவர்கள் முதலாவதாக அது என்னவென்று விளங்கிக் கொள்ளவேயில்லை. அவர், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும் பரிசுத்த ஆவியைப் பெற்றும் மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்; அவர்கள் தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தங்களைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர்” என்று கூறியுள்ளார் (எபி. 6:4-6; 10:29).
224. நல்லது, என்னைப் பொறுத்தவரையில், அது ஒரு வெளிப்பாடு. அது அப். 2: 38ம் மத் 28:19ம் போன்றது. அதை நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும், பாருங்கள்.
225. இப்பொழுது பாருங்கள், அது இங்குள்ளது, அதே காரியம்தான். நல்லது, இப்பொழுது அவன். எபிரேயரிடம் பேசுகிறான், பாருங்கள்? அந்த அதிகாரத்தை நீங்கள் தொடர்ந்து படிப்பீர்களானால், “ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே” என்று உரைக்கப்பட்டுள்ளது (எபி. 10:31). இங்கு ஒரு மனிதன் இருக்கிறான், அவன் அந்த எல்லைக்கோடு விசுவாசியைப் போன்றவன். இங்கு... இங்கு அதே காரியம்தான், அதுவே பிழையற்ற உதாரணமாக என் மனதில் தோன்றுவதை நான் காண்கிறேன்.
226. தேவன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்தார். அந்த ஜனங்கள் அனைவரும் வெளியே வந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு, வனாந்திரத்தில் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தனர். அது சரியா? சிவந்த சமுத்திரம்... அவர்கள் மோசேயின் செய்திக்கு செவிகொடுத்து, ஆயத்தமாகி அணிவகுத்து நடக்கத் தொடங்கினர் (நீதிமானாக்கப்படுதல்), அவர்கள் திசைத் திரும்பி, இங்கிருந்து தொடங்கினர்.
227. அவர்கள் சிவந்த சமுத்திரத்தை அடைகின்றனர் (இரத்தம்), அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து விடுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் அவர்களைக் கடினமாக வேலை வாங்கினவர் அனைவரும் மரித்துக் கிடந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய மூன்று நாட்கள் பிரயாணம் மாத்திரமே இருந்தது. பாருங்கள்? அது நாற்பது மைல்கள் தூரம்தான். இருந்தது, அவ்வளவு தான் அவர்களுக்கு இருந்தது, பாருங்கள். அதோ அவர்கள் உள்ளனர், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் அதை அடைந்திருப்பார்கள்.
228. இன்னும் சில நாட்களில் பீனிக்ஸில் நடைபெறவிருக்கும் வர்த்தகரின் கூட்டத்தில் அதைக் குறித்து தான் இந்த மலையின் மேல் தங்கியிருத்தல் என்னும் பொருளின் பேரில் பேசலாம் என்று எத்தனித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் நாற்பது வருடங்களாக வனாந்திரத்தில் இருக்கும்படி அவர் செய்துவிட்டார், ஏனெனில் அவர்கள்... உ – ஊ! பாருங்கள்?
229. அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வந்து திரும்பிப் பார்க்கின்றனர் (பரிசுத்தமாக்கப் பட்டவர்களாய்). “ஓ, அல்லேலூயா! தேவனுக்கு ஸ்தோத்திரம்! தேவனுக்கு மகிமை! அல்லேலுயா! என்னை ஒரு காலத்தில் தொல்லைப்படுத்தின அந்த பழைய காரியங்களெல்லாம் மரித்துப் போய் அங்கு கிடக்கின்றன. நான் முன்பு புகைத்திருந்த சிகரெட்டுகள் போய்விட்டன. நான் முன்பு குடித்திருந்த அந்த மதுபானம் இவையனைத்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமாகிய சிவந்த சமுத்திரத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. ஓ, தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!” என்கின்றனர்.
230. கானானைச் சுதந்தரிக்க அவர்கள் ஒவ்வொருவரும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வருகின்றனர். நல்லது, மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு பிரதிநிதியைத் தெரிந்து கொண்டான். அது சரியா? அவன் அவர்களை அங்கு அனுப்பினான். நல்லது, அவர்களில் சிலர், “ஆ, ஆ, ஆ, நம்மால் அதைச் செய்ய முடியாது. முடியாது. அது - அது. அவர்களுக்கு முன்னால் நாம் வெட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறோம்” என்றனர். பாருங்கள்?
231. “இப்பொழுது, நான் பரிசுத்த ஆவியைக் குறித்தும் அந்த காரியங்கள் அனைத்தைக் குறித்தும் பிரசங்கித்தால், நான் எப்படிப்பட்ட சபைக்கு அதை பிரசங்கிப்பேன்? ஏன், எனக்கு காலி இருக்கைகள் மட்டுமே இருக்கும். என் மெதோடிஸ்டு ஜனங்கள் வெளியே நடந்து சென்று விடுவார்கள், என் பாப்டிஸ்டு ஜனங்களும், என் பிரஸ்பிடேரியன்களும் கூட எனலாம். அவர்கள் வெளியே நடந்து செல்லட்டும். அவர்கள் துவக்கத்திலேயே வெள்ளாடுகள்! உங்களுக்கு வேண்டியது செம்மறியாடுகளே, பாருங்கள், பாருங்கள்? நீங்கள் வெள்ளாடுகளுக்கு மேய்ப்பனாக, இல்லை, நீங்கள் செம்மறியாடுகளுக்கே மேய்ப்பனாயிருக்கிறீர்கள்! மேய்ப்பதற்கு செம்மறியாடுகள் இருக்கும்போது, வெள்ளாடுகளை மேய்ப்பதால் என்ன பயன்? பாருங்கள்? நான் சத்தியத்தை சபையில் நான்கு கம்பங்களுக்கு பிரசங்கித்தாலும் எனக்கு அக்கறையில்லை என்று நான் அடிக்கடி கூறியதுண்டு. ஆம், ஐயா.
232. இப்பொழுது பாருங்கள். அவன் என்ன செய்தான்? அவர்கள் திரும்பி வருகின்றனர், யோசுவாவும் காலேபும், இரண்டு சதவிகிதம், அது சரியான சதவிகிதம் தானா... பன்னிரண்டில் இரண்டு பேர். நல்லது. அவர்கள் பன்னிரண்டு பேர் இருந்தனர், அந்த பன்னிரண்டு பேர்களில் இரண்டு பேர் விசுவாசித்தனர். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குச் சென்று, “இது தங்குவதற்கு மிகவும் நல்ல இடம்” என்றனர். யோசுவாவும் காலேபும் வார்த்தையில் நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவன் அதை அவர்களுக்கு கொடுத்து, “அது உங்களுடையது” என்றார். அவர்கள் அங்கு சென்று ஒரு பெரிய திராட்சைக் குலையை வெட்டி இப்படி அதை சுமந்து கொண்டு வந்து, “வாருங்கள், தோழரே! இது மிகவும் அருமையான இடம்! இதை குடித்துப் புசியுங்கள்” என்றனர். பாருங்கள், இவ்வளவு பெரிய திராட்சை பழங்கள்.
233. ஓ, அந்த திராட்சம் குலையைக் கண்ட மற்றவர்கள், “ஆ. நம்மால் செய்ய முடியாது என்றனர். அவர்கள் திரும்பிச் சென்றவுடன் மற்றவர்களிடம், “இல்லை, சகோதரனே, இந்த மோசே நம்மை வனாந்திரத்துக்கு அழைத்து வந்து விட்டான்” - அவன் பிரதிநிதியாக இருந்த இந்த பரிசுத்த ஆவி - “அவன் நம்மை வனாந்திரத்துக்கு அழைத்து வந்துவிட்டான். இதோ நாம் இங்கிருக்கிறோம். நமது ஊழியம் பாழாகி விட்டது, அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடியாது' என்றனர்.
234. பாருங்கள், “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவர்கள் மறுதலிக்கின்றனர். பாருங்கள், அவர்கள் இந்த இரண்டாம் பலி பீடத்துக்கு வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைக் காண்கின்றனர். “ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டு பரம ஈவை ருசி பார்த்தவர்கள். பாருங்கள், “ருசி பார்த்தவர்கள்”. அதை அவர்கள் அங்கிருந்து கொண்டு வந்தனர். அது சரியென்று நாம் காண் கிறோம், அதைக் கண்கூடாக காண்கிறோம். “பரம ஈவை ருசி பார்த்து, இந்த காரியத்தில் பங்கு கொண்டவர்கள். பாருங்கள், இந்த பரிசுத்த ஆவியில் பங்கு கொண்டவர்கள்.
235. “அது நல்லது, அந்த மனிதனைப் பாருங்கள். அவன் குருடனாயிருந்தான் என்று எனக்குத் தெரியும், இப்பொழுது அவன் பார்வையடைந்திருக்கிறான். அந்த வயோதிபனைப் பாருங்கள். அந்த ஆசாமிக்கு என்ன நேரிட்டது? யார் நினைத்தது, படிப்பில்லாத இவர்... அவர் அக்கினியைக் கொண்டவராய் உலகத்தில் நின்று கொண்டிருக்கிறார்”. பார்த்தீர்களா? பாருங்கள்? பாருங்கள்?
236. அதன் பிறகு மறுதலிக்கிறவர்கள் (ஆங்கிலத்தில் “fall away” “விழுந்து போதல் - தமிழாக்கியோன்), பாருங்கள், அவர்களை... மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது... அவர்களுக்கு மீண்டும் மனந்திரும்புதலைக் குறித்து பிரசங்கிக்க வேண்டும். அதற்கு பதிலாக அவர்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் போன்றவைகளுக்கு மறுபடியும் அஸ்திபாரம் போடுதல் என்பதைக் குறித்து உங்களுக்குத் தெரியும். தேவனுக்கு சித்தமானால், அதை நாம் செய்வோம். நாம் திரும்பிச்சென்று அந்த அஸ்திபாரத்தை மறுபடியும் போடுவோம். ஆனால் இவர்களோ அதில் பங்கு கொண்டதற்காக மனஸ்தாபப்படுகின்றனர். “அங்கு நான் சென்றிருந்ததற்காக வருந்துகிறேன். இவர்கள் தங்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கின்றனர். சகோதரனே, அவன் போய்விட்டான்! அவ்வளவுதான். அவன் முடிந்து விட்டான். பாருங்கள்?
237. தெரிந்து கொள்ளப்பட்ட ஒரு பிள்ளை அவ்விதம் செய்வது கூடாதகாரியம். அவன் அதை செய்யவேமாட்டான். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது. அது கானானுக்குள் அல்லது வேறெங்காகிலும் செல்வதற்கு அழைக்கப்பட்டால், அவர்கள் போவார்கள். பாருங்கள்? “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கிறது”.
(ஒரு சகோதரன், “அவர்கள் அப். 2: 38லும் விசுவாசம் கொண்டிருத்தல் அவசியம் இல்லையா?” என்று கேட்கிறார் - ஆசி)
238. அவர்கள் ஒவ்வொரு வேதவாக்கியத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது முற்றிலும் சரி, சகோதரனே.