239. ஓ, ஆமாம். பாருங்கள்? நல்லது, அது... இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், நீங்களே உங்கள் கேள்விக்கு இங்கு பதில் சொல்லி விட்டீர்கள். பாருங்கள்?
இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டா? (அநேக பாஷைகள் உண்டு பாருங்கள்?) வேதாகமத்தில் இரண்டு விதமான பாஷைகள் உண்டா?
240. பெந்தெகொஸ்தே நாளில் வானத்தின் கீழிருந்த வெவ்வேறு பாஷைக்காரர் அங்கு குழுமியிருந்தனர். பாருங்கள்? சரி.
தனி ஜெபத்தில் பேசப்படும் பாஷைக்கும், சபையில் அர்த்தம் உரைப்பதற்கு பேசப்படும் பாஷைக்கும் வித்தியாசம் உண்டா? ஆம்.
241. பவுல் கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் - அதைக் குறித்து உங்கள் கேள்வியில் குறிப்பிட்டிருக்கிறீர்கள் - “தூதர் பாஷை உண்டு, மனுஷர் பாஷை உண்டு' என்று கூறியிருக்கிறான். தூதர் பாஷை என்பது மனிதன் தனிமையில் தனக்கும் தேவனுக்கும் இடையே ஜெபத்தை ஏறெடுக்கும்போது. ஆனால் அவன் சபையில் ஒரு பாஷையைப் பேசும்போது, அது சபையின் பக்திவிருத்திக்காக அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்”. (1 கொரி. 14: 4). எனவே பவுல், “நான் சபையிலே அந்நிய பாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்” என்கிறான் (1 கொரி. 14:19). அப்பொழுது அது தீர்க்கதரிசனமாக உரைக்கப் பட்டு பக்திவிருத்தி உண்டாக்குகிறது. நான் கூறுவது விளங்குகிறதா?
242. இப்பொழுது... இரண்டு வெவ்வேறு பாஷைகள் உண்டு. அது மனுஷர் பாஷை, தூதர் பாஷை. பாருங்கள்? பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் என்கிறான் (1 கொரி 13:1), பாருங்கள், மனுஷர் பாஷை, தூதர் பாஷை இவ்விரண்டுமே...
243. இப்பொழுது அங்கு தான் பெந்தெகொஸ்தே ஜனங்கள். அந்நிய பாஷை பேசுதலே பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டதன் அடையாளம் என்று கூறுகிறவர்கள்; அவர்கள் என்னிடம், “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் குழப்பமடைந்திருக்கிறீர்கள்” என்றனர்.
244. நான் அவர்களிடம், “நீங்கள் அப். 2:4ன்படி அதை பெறுவீர்களானால், அப்பொழுது அவரவர்களுடைய ஜென்ம பாஷையில் நீங்கள் பேசுகிறதை அவர்கள் கேட்க வேண்டும்” என்றேன். அவர், “ஓ, இல்லை! இல்லை!” என்றார். நான், “நிச்சயமாக அப்படித்தான். ஆம், ஐயா” என்றேன்.
245. அவர், “சகோ. பிரன்ஹாமே, நீங்கள் மிகவும் குழப்பமடைந்திருக்கிறீர்கள். நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்றால்... தூதர் பாஷை என்று ஒன்றுண்டு. அது பரிசுத்த ஆவி தூதன் இறங்கி வந்து உங்களிடம் பேசுவது என்றார்.
246. அது நன்றாக ஒலிக்கிறது, பாருங்கள், அதில் நிறைய சத்தியம் உள்ளது போல் அது தொனிக்கிறது. ஆனால் அது முற்றிலும் சத்தியமல்ல. சாத்தான் ஏவாளிடம், “நீங்கள் நிச்சயம் சாவதில்லை” என்று கூறின போது, அது... அவன் அவளிடம் நிறைய சத்தியத்தை கூறினான், ஆனால் அது சத்தியமல்ல. பாருங்கள்?
247. பவுல், “மனுஷர் பாஷை, தூதர் பாஷை என்கிறான். அவன் குறிப்பிடும் தூதன்...
248. அது எப்படி வேதவாக்கியங்களுடன் ஒன்றாக சேர்ந்து நடனமாடுவதில்லை (jive) என்று நாம் பார்ப்போம். பாருங்கள்? அது “ஒத்துப் போவதில்லை” என்னும் அர்த்தத்தில் தான் கூறுகிறேன். நான் “வேதவாக்கியங்களுடன் சேர்ந்து நடனமாடுவதில்லை” என்று கூறினதால் என்னை மன்னிக்கவும். நான் வேதவாக்கியங்களுடன் “ஒத்துப் போவதில்லை” என்னும் அர்த்தத்தில் தான் இதை கூறுகிறேன். “வேதவாக்கியங்களுடன் இணைவதில்லை' என்பது மிகச் சிறந்த வார்த்தையாகும்.
249. அவர், “தூதர் பாஷைகளைப் பேசுகிற மனிதன், அதுதான் பரிசுத்த ஆவியின் பாஷை, நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது அதைப் பேசுகிறோம்” என்றார்.
நான், “அதை எப்பொழுது எங்கே பெற்றுக் கொண்டீர்?” என்று கேட்டேன்.
250. அவர் பெற்றுக் கொண்ட இடத்தையும், எந்த மணி நேரம், எந்த நிமிடத்தில் அதைப் பெற்றுக் கொண்டார் என்பதையும் எனக்குத் தெரிவித்தார். அதை நான் சந்தேகிக்கவில்லை. பாருங்கள்? எனக்கு எந்த... அவருக்கு நான் நியாயாதிபதி அல்ல. பாருங்கள்? அவர், “அங்கு தான் அதை பேசினேன்” என்றார். அவர் எந்த இடத்தில் பேசினார் என்பதை சரியாக அறிந்திருந்தார். அவர், “எனக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்தது” என்றார்.
251. “அதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் மகனே, அதுவல்ல நீ பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளம் என்றேன்.
அவர், “ஓ, ஆமாம்!. அதுதான் அடையாளம்” என்றான். நான், “இல்லை” என்றேன்.
அவர், “இப்பொழுது பாருங்கள், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன், சகோதரனே!' என்றார்.
252. நான், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக கூறும் அந்த இந்தியானாபோலீஸ் சபையில் இருந்தவர்கள், நீங்கள் உயிர்த்தெழுதலைக் குறித்தும் தேவனுடைய வல்லமையைக் குறித்தும் இன்னும் மற்றவைகளைக் குறித்தும் பேசினதை அவர்கள் ஆங்கில பாஷையில் கேட்டனரா?” என்றேன்.
அவர், “இல்லை, நான் அவர்கள் அறிந்திராத அந்நிய பாஷையில் பேசினேன்” என்றார்.
253. நான், “அப்படியானால் நீங்கள் அப். 2: 4ன்படி அதை பெற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரும்... ஒரு வார்த்தையும் கூட அறியப்படாமல் இருக்கவில்லை. “நம்மில் அவரவர்களுடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே”.
254. அவர், 'ஓ சகோ. பிரன்ஹாமே, நீங்கள் எங்கு குழப்பமடைந்திருக்கிறீர்கள் என்பதை இப்பொழுது காண்கிறேன். பாருங்கள், தூதர்பாஷை என்று ஒன்றுண்டு. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது அந்த பாஷையில் பேசுகிறீர்கள், அதற்கு யாரும் அர்த்தம் உரைக்கத் தேவையில்லை, அது பரிசுத்த ஆவியானவர் பேசுவதாகும். பாருங்கள்? பிறகு அந்நிய பாஷை பேசும் வரம் ஒன்றுண்டு, அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்” என்றார்.
255. நான், 'அப்படியானால் நீங்கள் தலைகீழாக இதைக் கூறுகிறீர்கள். பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் அதை தலை கீழாக பெற்றுக் கொண்டார்கள். அதாவது யாருமே அறிய முடியாத பாஷையில் அவர்கள் பேசுவதற்கு முன்பு, எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய பாஷையில் அவர்கள் பேசினார்கள். அப்படித்தானே? என்றேன். பாருங்கள். எனவே அது உண்மையில்...
256. இரண்டு விதமான பாஷைகள் உண்டு. ஒன்று தூதர் பாஷை. அது மனிதன் தனி ஜெபத்தில் எங்கோ ஓரிடத்தில் தேவனிடத்தில் பேசும் தூதர் பாஷையாகும். நடந்த ஒரு சம்பவத்தை இப்பொழுது நான் உங்களிடம் கூற முடியும், ஆனால் எனக்கு நேரமில்லை. டாக்டர் அலெக்சாண்டரின் இடமாகிய சீயோன் என்னுமிடத்தில் அந்த ஸ்திரீ அரங்கத்துக்கு வந்திருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அங்கு நான் சென்றிருந்தது உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த கூட்டத்துக்கு என்னைக் கொண்டு செல்ல பில்லி வந்திருந்தான். நான், “பில்லி, போய் விடு” என்றேன். நான்...
அவன், “நீங்கள் எதற்காக கூச்சலிடுகிறீர்கள்? யாராகிலும் இங்கு வந்திருந்தார்களா?” என்றான்.
257. நான், “இல்லை, ஐயா. நீ திரும்பிப் போய் சகோ. பாக்ஸ்டரிடம் இன்றிரவு பிரசங்கிக்கும்படி கூறிவிடு” என்றேன்.
258. நான் தரையில் முழங்கால்படியிட்டு, “ஆண்டவரே, எனக்கு என்ன நேர்ந்தது?” என்றேன்.
259. அப்பொழுது திடீரென்று யாரோ ஒருவர் கதவண்டையில் வேறொரு பாஷையில் பேசுவதைக் கேட்டேன். நான் நினைத்தேன்... அது ஜெர்மன் பாஷை. “அந்த ஆளுக்கு ஏதோ தேவை போலிருக்கிறது. அதைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறார்” என்று நினைத்தேன். நான் ஜெபம் செய்வதை நிறுத்திவிட்டு, அங்கு இப்படி நின்றுகொண்டு அவர் பேசுவதை உற்றுக் கேட்டேன். “அந்த விடுதி முதலாளிக்கு அது எப்படி புரியும்?” என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் அந்த விடுதி முதலாளியை எனக்குத் தெரியும், அது நகரத்தை விட்டு ஐந்து மைல் தூரத்தில் உள்ளது என்னைச் சுற்றிலும் அந்த சிறு நகரத்தில் ஜனக்கூட்டம் அதிகமாக இருந்ததனாலே, அங்கு நான் சென்று விட்டேன். நான், “இது விசித்திரமாயுள்ளதல்லவா? என்று எண்ணினேன். நான், “இந்த ஆள் மூச்சு விடாமல் பேசுகிறாரே என்று நினைத்தேன். பாருங்கள், அப்படித்தான் நான் நினைத்தேன், வேகமாக பேசுகிறாரே!” என்று. நல்லது. நான், 'இது என்ன, அது நான் தான்' என்று கூறிக் கொண்டேன். நான் அமைதியாக இருந்தேன். சிறிது கழிந்து அவர் பேசி முடித்தார். அவர் முடித்த போது, நான் ஒரு சேனையின் வழியாக ஓடி மதிலைத் தாண்ட முடியும் என்பது போன்ற உணர்வு எனக்குண்டாயிற்று.
260. நான் வெளியே சென்றேன். அப்பொழுது, பில்லி 'கேட்டை (gate) விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான். நான், “ஒரு நிமிடம் நில்” என்று அவனை நோக்கி கூச்சலிட்டேன்.
261. அவன் திரும்பி வந்தான். அவன் 'சோடா பாப்' குடித்துக் கொண்டிருந்தான். அவன், “அப்பா, என்ன விஷயம்?” என்றான்.
262. நான், “ஒரு நிமிடம் நில், ஒரு நிமிடம் நில், உன்னுடன் நான் வருகிறேன்” என்றேன்.
263. நான் முகத்தை வேகமாக கழுவினேன். அவன், “என்ன விஷயம்?” என்றான். கூட்டத்துக்குச் செல்லும் விஷயத்தில் என்னுடன் பேசி எந்த பயனும் இல்லை என்று அவனுக்குத் தெரியும். அவன், “என்ன விஷயம்?” என்றான்.
264. நான், “ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை. கூட்டத்துக்குப் போகலாம் வா” என்றேன்
265. நாங்கள் கூட்டத்துக்குச் சென்றோம். அங்கு சகோ. பாக்ஸ்டர் உட்கார்ந்து கொண்டு, “என் ஆத்துமாவுக்கும் இரட்சகருக்கும் இடையே ஒன்றுமில்லை” என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். அவர், “வயூ! நீங்கள் வரமாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்!” என்றார்.
நான் “உஷ்” என்று சொல்லிவிட்டு, மேலே சென்று பிரசங்கிக்கத் தொடங்கினேன்.
266. நான் பிரசங்கித்து முடிக்கும் தருணத்தில் அந்த பெரிய அரங்கத்தின் பின்பக்கத்தில் யாரோ ஒருத்தி பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் ஒலிபெருக்கியை அது வரைக்கும் கொண்டு சென்றனர். அங்கு ஒரு ஸ்திரீ மேலும் கீழும் நடந்து, தன்னால் முடிந்த வரைக்கும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள்.
267. பார்க்கப் போனால், அவளுக்கு காசநோய் இருந்தது. அவள் இரட்டை பட்டினம், செயிண்ட் பால்ஸ் நகரத்தை விட்டுப் புறப்பட்டாள். நோயாளி ஊர்தி அவளைக் கொண்டு வர மறுத்து விட்டது. ஏனெனில் அவளுடைய சுவாசப்பைகள் வெடித்து விடும் என்று அவர்கள் பயந்தனர். மருத்துவர், “அவளுடைய சுவாசப் பைகள் தேன்கூடு போல் ஆகி விட்டது. அது வெடித்து விட்டால் இறந்துபோவாள்” என்று கூறிவிட்டார். சில பரிசுத்தவான்கள் 38 மாடல் செவர்லே காரைக் கொண்டு வந்து, பின்னால் உள்ள இருக்கையை நீக்கிவிட்டு, அங்கு படுக்கை போல் ஒன்றை உண்டாக்கி, அவளை அதில் படுக்க வைத்து காரை சாலையில் ஓட்டிக் கொண்டு வந்தார்கள். மேடு போன்ற ஒரு இடத்தின் மேல் கார் மோதி, குலுக்கல் ஏற்பட்ட போது, அவள் இரத்தம் கக்கத் தொடங்கினாள். அந்த இரத்தம் மூக்கின் வழியாகவும் வெளியேறியது. அவள் பலவீனமடைந்து கொண்டே வந்தாள். முடிவில்... அவளுக்கு காரில் இறக்க விருப்பமில்லை. அவள் காரை நிறுத்தச் சொல்லி, புல் தரையில் தன்னை கிடத்தும்படி கூறினாள்.
268. அவர்கள் அவளை வெளியே தூக்கி புல் தரையில் கிடத்தினர். அவர்கள் எல்லோரும் அவளைச் சுற்றி நின்று கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று, அவள் மேல் ஏதோ ஒன்று பட்டதாக அவள் கூறி, எழுந்து நின்றாள். அவள் தன்னால் இயன்ற வரை உரக்க சத்தமிட்டுக் கொண்டே சாலையில் பயணம் செய்யத் தொடங்கினாள். அவள் சபையை அடைந்து உட்பாதையில் மேலும் கீழுமாக நடந்தாள்.
269. நான், “சகோதரியே, அது நடந்தது எத்தனை மணிக்கு?” என்று கேட்டேன். பரிசுத்த ஆவியானவர் என் மூலம் பேசின அதே மணி நேரத்தில் அது நடந்தது. அது என்ன? வரங்கள்.
270. அது என்ன - அந்த 'ஆப்போஸம் ஜெபித்துக் கொள்ளப்படுவதற்காக வாசலில் வந்து படுத்துக் கொண்டிருந்த சம்பவம்! (ஆப்போஸம்' என்பது கங்காருவைப் போன்ற ஒரு அமெரிக்க மிருகம் - தமிழாக்கியோன்). ஒன்றும் அறியாத அந்த மிருகம், அதற்கு ஆத்துமா கிடையாது. நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறியாத ஒன்று; பாருங்கள், அதற்கு ஆத்துமா கிடையாது (அதற்கு ஆவி உள்ளது), ஆத்துமா கிடையாது.
271. அது என்ன? பரிசுத்த ஆவியானவர் வேண்டுதல் செய்தல். தேவன் ஒரு வரத்தை பூமிக்கு அனுப்பினார், பரிசுத்த ஆவியானவரால் மேலும் காத்திருக்க முடியவில்லை. எனவே அவர் வந்து என்னை ஆட்கொண்டு, அவரே அந்தவிதமாக பேசத் தொடங்கி, அவரே வேண்டுதல் செய்தார். நாங்கள் நேரத்தை ஒப்பிட்டுப் பார்த்த போது, அதே நேரத்தில் அவள்... அவர்கள் அவளைப் புல்தரையில் கிடத்தி, என்ன நேரத்தில் அது நடந்தது என்று காண விரும்பினர். ஏனெனில் அவள் மரித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியால், அவள் எந்த நேரத்தில் மரித்துப் போனாள் என்று அவர்கள் கூறவேண்டும். பரிசுத்த ஆவியானவர் என் மேல் விழுந்து அந்த வார்த்தைகளை உரைத்து வேண்டுதல் செய்த அதே நிமிடத்தில் அவள் சுகமடைந்தாள். அவர் வேண்டுதல் செய்தபோது உரைத்த சொற்கள் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. அது பரிசுத்த ஆவியானவர் பேசுதல்.
272. அதை நான் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாருங்கள், எனக்குப் புரியவில்லை. அது ஒருக்கால் அவளுடைய தூதனாக இருக்கலாம். இன்னும் சில நிமிடங்களில் அந்த விஷயத்துக்கு நாம் வரப் போகிறோம். அந்த தூதன் வந்து அந்த செய்தியை அளித்திருக்கலாம், பாருங்கள்?
273. இப்பொழுது - இப்பொழுது, அது-அது சரி. இரண்டு விதமான பாஷைகள் உண்டு. அவைகளில் ஒன்று...
274. ஏதாகிலும் கேள்வி உண்டா? சரி, தேவன் என்ன உரைக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முயலுதல், பாருங்கள். இப்பொழுது நான்... சகோ. ஸ்ட்ரிக்கர், இந்த விஷயத்தில் நான் கூற விரும்புவது என்னவெனில், அதைக் குறித்து சிந்திக்க முயற்சி செய்யாதீர்கள், பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் பேசுவதற்கு விட்டுக் கொடுங்கள். அது என்னவென்று புரிந்து கொள்ள முயற்சி செய்யாதீர்கள். தொடர்ந்து உங்களை பரிசுத்த ஆவிக்கு முழுவதுமாக சமர்ப்பியுங்கள். பாருங்கள்? “ஹெ, நீர் என்ன கூறுகிறீர்?” என்று நீங்கள் கேட்க முனைகிறீர்கள். “ஹெ, நீர் என்னிடமா பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” பாருங்கள், அவர். அவர் புரிந்து கொள்ள முயல்கிறார்.