275. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) இங்கு நான் என்ன எழுதிவைத்திருக்கிறேன் என்பதை காணட்டும், அதை நான் பார்க்க வேண்டும். அர்த்தஞ்சொல்லுகிறவன் இல்லா விட்டால், அவர்கள் பேசாமலிருக்கக்கடவர்கள். 1 கொரிந்தியர் முதலாம் அதிகாரம்... 14ம் அதிகாரம் 28ம் வசனம். யாரிடம் வேதாகமம் உள்ளது? (ஒரு சகோதரன் கீழ்கண்ட வசனத்தைப் படிக்கிறார் - ஆசி). அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், அவன் சபையிலே பேசாமல்...
276. சரி, எப்பொழுதாவது எங்காவது சபையில் அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாவிட்டால், பேசாமலிருங்கள் - அர்த்தஞ் சொல்லுகிறவன் இல்லாமல் போனால்.
277. பீடத்தண்டையில், ஒரே ஒரு காரியம், யாராகிலும்... ஜனங்கள் பீடத்தண்டையில் செல்வதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அண்மையில் ஒரு விலையேறப் பெற்ற சகோதரன் பீடத்தண்டையில் சென்று எவராகிலும் ஒருவரை முதுகில் தட்டி, அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டேன். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று அந்நிய பாஷையில் பேசுபவர் காண்பிப்பது போல் தோன்றினது. பாருங்கள், அது செயற்கையாக பரிசுத்த ஆவியை ஜனங்களிடம் கொண்டு வர முயல்வது போல் உள்ளது. அவ்விதம் செய்யாதீர்கள். பாருங்கள்? செய்ய வேண்டியது என்னவெனில், அந்த நபரைத் தனியே விட்டு விடுங்கள். பரிசுத்த ஆவியானவர் வரும் வரைக்கும், அவர்கள் கரங்களை உயர்த்திக் கொண்டிருக்கட்டும். பாருங்கள். எனவே அது தவறாகும். இல்லை, அவர்கள் சபையில் பேசாமலிருக்க வேண்டும், பாருங்கள்.
278. (ஒரு சகோதரன், “சகோ. பிரன்ஹாமே” என்கிறார் - ஆசி). ஆம், சகோதரனே. ஒரு நபர் ஆராதனைக்கு வந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு செய்தி வரும் போது, அது வழக்கமாக ஆராதனையின் முடிவில் தான் வருகிறது. அப்படி வரும் போது, இந்த வரத்தையுடைய நபர், தூதரின் பாஷைக்கும் அல்லது அளிக்கப்படுகின்ற செய்திக்கும் இடையே என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா?
279. இப்பொழுது, இதைப் பார்ப்போம்... (ஒலி நாடாவில் 'காலியிடம் - ஆசி)... அவர்கள் உள்ளே வந்து அதை எழுதி என் மேசையின் மேல் வைக்க வேண்டும். பாருங்கள்? அதை நான் இவ்விதம் பகிரங்கமாக படிப்பேன். சகோதரனே, அந்த அறைக்குள் நான் சென்று விட்டால், அவ்வளவு தான். பாருங்கள்?
280. அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு, அவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். எல்லோரும் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். அங்கு சகோதரி ஐரீன் மீட்பர் மரித்த குருசண்டை என்னும் பாடலை வாசித்துக் கொண்டிருப்பாள். வாயில் காப்போர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருப்பார்கள். யாராகிலும் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டால், அவர்கள் “உஷ், உஷ், உஷ்” என்பார்கள். பாருங்கள்? சிறு பிள்ளைகள் சத்தம் செய்தால்... வாயில் காப்போர் அவர்கள் பக்கத்தில் இனிமையாக அமர்ந்து, “தேனே, இது கர்த்தருடைய வீடு, நீ அவ்விதம் செய்யக் கூடாது. கர்த்தருடைய வீட்டில் நீ நல்லபடி நடந்துக் கொள்ள வேண்டும்” என்பார்கள்.
281. மனிதர் அவர்களுடைய மனைவிகள், எல்லோருமே, தங்கள் 'கோட்'களை தொங்க விடுவதற்கு அவர்கள் உதவி செய்வார்கள். கதவு திறக்கப்பட்டவுடன், உள்ளே வரும்போது, அவர்களை வரவேற்க கதவண்டையில் யாராகிலும் இருப்பார்கள்... எல்லோரும் அவரவர் வேலையைச் செய்ய ஆயத்தமாகி, சபையை சரியான விதத்தில் வைப்பார்கள். எல்லோருக்கும் உட்கார இடம் கிடைத்து அவர்கள் உட்காருகின்றனரா என்று கவனித்துக் கொள்வார்கள்.
282. நான் அறைக்குள் ஜெபித்துக் கொண்டிருப்பேன் - சில சமயங்களில் பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணியிலிருந்து. யாருமே என்னைத் தொந்தரவு செய்வதில்லை. என் செய்தியுடன் நான் சபைக்கு வருவேன்.
283. ஆராதனை தொடங்கும் போது, பாடல் தலைவர், “இன்னின்ன எண் பாடலுக்கு நாம் பாட்டுப் புத்தகத்தைத் திருப்புவோம்” என்று அறிவிப்பார். உதாரணமாக, “மீட்பர் மரித்த குருசண்டை ' என்னும் பாடலுக்கு, அவர்கள் அதைப் பாடிக் கொண்டே இருப்பார்கள். இரண்டு விசேஷித்த பாடல்களைப் பாடின பிறகு... நாங்கள் பாடல்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை, வார்த்தையில் தான் செலவிடுவோம். அவர்கள் ஞானப்பாட்டுகளைப் பாடுவார்களானால், அதற்காகத்தான் அவர்கள் வழக்கமான ஞானப்பாட்டுகள் பாடும் நேரத்தை வைத்திருக்கின்றனர். நாம் - நாம்... ஜனங்கள் அங்கு முக்கியமாக வருவது வார்த்தைக்காகவே. அது திருத்தும் வீடு.
284. அதன் பிறகு ஒரு கூட்டாளி, உதாரணமாக சகோ. ஜார்ஜ் டீ ஆர்க் எழுந்து ஜெபிப்பார். அதன் பிறகு ஒரு விசேஷித்த பாடல் இருக்கும் - தனியார் பாடல் போன்ற ஒன்று. அதன் பிறகு செய்திக்கான நேரம். யாராகிலும் ஒருவர் என்னிடம் வந்து, அறையை விட்டு வெளியே வர நேரமாகி விட்டது என்றுஅறிவிப்பார். நான் அபிஷேகத்தின் கீழ் புத்துணர்ச்சியுடன் வெளியே வருவேன், பாருங்கள்?
285. நல்லது. ஒருக்கால் அந்த வாரத்தில் அவர்கள் சபையில் ஒரு கூட்டம் நடத்தியிருக்கக் கூடும் - தங்கள் சொந்தக் கூட்டம் ஒன்றை. அல்லது ஒருக்கால் அன்றிரவு ஆராதனை தொடங்கும் முன்னர், அவர்கள், கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கக் கூடும். அது இங்கே இருக்கும். அதை நான் இங்கு பெற்றிருப்பேன். நான், “அடுத்த வாரம் இந்த இடத்தில் ஒரு புயல் உண்டாகும் என்று இந்த தாளில் எழுதப்பட்டிருக்கிறது” என்று அறிவிப்பேன், அல்லது வேறெதாகிலும் ஒன்று நடக்கும் என்று. “அது அந்நிய பாஷையில் பேசப்பட்டு, இந்த சபையில் உள்ள இரு பரிசுத்தவான்களால் - சகோ. இன்னார் இன்னார், சகோ. இன்னார் இன்னார் அவர்களால் அர்த்தம் உரைக்கப்பட்டு இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதை ஆமோதிக்கும் வகையில் இரண்டு சாட்சிகள் கையொப்பமிட்டுள்ளனர்.” இது தேவனால் உண்டாயிருக்க வேண்டும். அது இன்னின்னது, அது இன்னின்னது” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது என் முதல் பாகம்.
286. பிறகு நான் “சரி, இதற்காக நாம் ஆயத்தமாயிருப்போம், எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். பாருங்கள்? யாருக்காகிலும் விசேஷித்த விண்ணப்பம் உள்ளதா?” என்று கேட்டுவிட்டு, “நாம் ஜெபம் செய்வோம்” என்பேன். எழுந்து ஜெபித்த பிறகு, நேராக வார்த்தைக்கு சென்று விடுவேன்.
287. ஆராதனை முடிந்தவுடனே, பீட அழைப்பு கொடுக்கப்படும். பாருங்கள்? பீட அழைப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். ஜனங்களை பீடத்தண்டையில் வரவழைத்தல், பீட அழைப்பு முடிந்த பிறகு, ஒருவேளை நான் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன்.
288. அது போல் ஏதோ ஒன்று. ஆராதனை இவ்வாறு நன்றாக முடிவு பெறும், ஏனெனில் தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்கிறது.
289. அதைக் குறித்து தான் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்... அந்த தூதன் என்னிடம் நடந்து வந்ததாக நான் அன்றிரவு கண்ட தரிசனம் உங்களுக்கு ஞாபகமுள்ளதா? அந்த அறையில் நான் உட்கார்ந்து கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது நள்ளிரவு. “தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு... என்று சொல்லப்பட்டிருக்கிறதே. அது எப்படி முடியும் என்று நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், அந்த ஒளி பிரகாசிப்பதை நான் கண்டேன். இதோ அவர் நான் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு நடந்து வந்தார். பாருங்கள்? அப்பொழுது தான் இந்த கூட்டங்களுக்காக எனக்குக் கட்டளை கொடுத்தார்.
290. இப்பொழுது, இல்லை, செய்தியை அளிக்கும் நபர். அது உங்கள் கேள்வி என்று நினைக்கிறேன். “செய்தியை அளிக்கும் அந்த நபர், அவருக்கு... “செய்தியை அளிக்கும் அந்த நபர். அது கர்த்தருடைய தூதனா இல்லையா என்று அறிந்து கொள்ள முடியுமா?”
291. (ஒரு சகோதரன், “இப்பொழுது, கேள்வி என்னவெனில், தூதர் பாஷைகள் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள்... “ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). அவரால் முடியுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால், பாருங்கள். அவ்விதமாகத்தான் அதை நாம் இப்பொழுது பெற்றிருக்கிறோம். அது இருக்க வேண்டிய விதத்தில் அதை நாம் பெற்றிருப்போமானால், அதற்காக ஒரு வழக்கமான கூட்டத்தை நீங்கள் கொண்டிருப்பீர்களானால்...
292. பாருங்கள், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊழியம் உண்டு. நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் தீர்க்கதரிசனம் உரைக்கிறார். நீங்கள் இங்குள்ள சபையோர், ஆனால் உங்களுக்கு ஒரு ஊழியம் உண்டு. உங்களுக்கு ஏதோ ஒன்றுண்டு, நீங்கள் தேவனுடைய ராஜ்யத்துக்கு உதவி செய்ய முயன்று. அதற்காக ஏதோ ஒன்றைச் செய்கிறீர்கள், பாருங்கள், எனவே சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடுகிறீர்கள். ஆகையால்தான் மேய்ப்பர்களாகிய நாங்கள் ஒன்று கூடுகிறோம். எங்களுக்கு பொதுவாக ஏதோ ஒன்றுண்டு. சகோதரராகிய நீங்கள் ஒன்று கூடி, வேதத்தைப் படித்து, அந்நிய பாஷையில் பேசி, அதற்கு அர்த்தம் உரைத்து. செய்தியை அளிக்கிறீர்கள், பாருங்கள்.
293. ஆனால், இப்பொழுது, இந்த மனிதன், அவர் உணர்ந்தால்... அவர் கூட்டத்திற்கு வந்திருந்தார், அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரமுண்டு. நல்லது. அவர் கூட்டத்துக்கு வந்து. அந்நிய பாஷையில் பேசுகிறார், ஆனால் அதற்கு அர்த்தம் உரைக்கப்படுவதில்லை. அர்த்தம் உரைப்பவருக்கு அது என்னவென்று புரிவதில்லை.
[ஒரு சகோதரன், “அப்படியானால் இந்த மக்கள் சரீரம் பக்தி விருத்தியடையச் செய்கின்றனர், ஆனால் மேய்ப்பர்கள், போதகர்கள் போன்ற உத்தியோகங்கள் சரீரத்தை பரிபூரணப் படுத்துகிறது என்றா கூறுகிறீர்? என்று கேட்கிறார் - ஆசி].
294. ஆம், அதற்காகத்தான் அவையுள்ளன, பரிபூரணப்படுவதற்காக பாருங்கள்? பரிபூரணப்படுவதற்கென்றே இவை அளிக்கப்பட்டுள்ளன. பாருங்கள். சபை பரிபூரணப்படுவதற்காகவே ஆவி அளிக்கப்பட்டுள்ளதென்று நான் நம்புகிறேன்.
295. இப்பொழுது, அந்நிய பாஷையில் பேசுகிறவர்கள் ஆவியில் நிறைந்தவர்கள், அதில் சந்தேகமில்லை. இப்பொழுது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறார், அவர் இந்த கூட்டத்தில் அந்நிய பாஷையில் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்பொழுது, அவர் அர்த்தம் உரைப்பவர்களுக்கு முன்னால் தான் இருக்கிறார், பாருங்கள், இருப்பினும் யாருமே அதற்கு அர்த்தம் உரைக்கவில்லை என்றால், எங்கோ தவறுள்ளது. அர்த்தம் உரைப்பவர் ஒன்றும் செய்ய முடியாது. பாருங்கள். அவர் ஆவியின் ஏவுதலினால் மட்டுமே அர்த்தம் உரைக்க முடியும். அந்நிய பாஷையில் பேசுகிறவர் ஆவியின் ஏவுதலினால் எப்படி பேசுகிறாரோ, அதே போல. அவருக்கு அந்நிய பாஷையில் பேசும் வரம் இருக்கலாம், ஆனால் வழக்கத்தில் உள்ள ஒரு பாஷையைப் பேசும் வரம் அவருக்கு இல்லை.
296. அவர் செய்ய வேண்டிய காரியம் என்னவெனில், அவர் இந்த அந்நிய பாஷையை உபயோகிக்கும் போது, அப்பொழுது அவர் காண்கிறார். இப்பொழுது, அவர் முயற்சி செய்யக் கூடாது. அவர் மறுபடியும் அதை பேசத் தொடங்கினால், அவர் பெருமையுள்ளவர் என்று அறிந்து கொள்ளலாம். அவர் செய்யக் கூடாது... அவர் தொடக்கத்திலேயே தவறாயிருக்கிறார். பாருங்கள், அவரை அது எங்கும் கொண்டு செல்லாது. பாருங்கள், அவர் நினைக்கலாம், “நல்லது. தேவனுக்கு ஸ்தோத்திரம், அந்த ஆளுக்கு நான் பேசின பாஷைக்கு அர்த்தம் உரைக்க பிரியமில்லை. அவ்வளவு தான் “ என்று. இப்பொழுது பாருங்கள், அவர் தொடக்கத்திலேயேதவறாயிருக்கிறார். அங்கே தவறான நோக்கம், தவறான குறிக்கோளை உடையவராயிருக்கிறார். பாருங்கள்?
297. ஆனால் அவர் இனிமையும் தாழ்மையும் உள்ளவராக இருப்பாரானால், அவர், “நல்லது, ஒருக்கால் கர்த்தர் தமது சேவையில் என்னை உபயோகிக்க விரும்பவில்லை. இருப்பினும் நான்... இதன் மூலம் அவர் என் ஆத்துமாவை ஆசீர்வதிக்கிறார், அவர் நான் பக்திவிருத்தியடைய விரும்புகிறார். நான் அந்நிய பாஷையில் பேசும் போது அவருக்கு அருகில் நான் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். தோட்டத்துக்கு நடந்து சென்று, 'ஓ. தேவனே! என்பேன். அப்பொழுது வல்லமை என் மேல் விழுந்து, நான் அந்நிய பாஷையில் பேசி, புத்துணர்ச்சி பெற்றவனாய் உள்ளே வருவேன். ஓ, கர்த்தாவே, நீர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறீர். அந்நிய பாஷையில் பேசுவதன் மூலம் என்னை நேர்க் கோட்டில் வைத்திருக்கிறீர்” என்பார். பாருங்கள்? “கர்த்தாவே, இன்றைக்கு நான் அந்த மனிதனிடம் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாததற்காக என்னை மன்னிக்கவும், ஆண்டவரே. நான் அதை செய்யாமல் விட்டு விட்டேன், அப்படி நான் செய்திருக்கக் கூடாது. பிதாவே, என்னை தயவு கூர்ந்து மன்னிப்பீராக” என்பார். இப்பொழுது அது அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறது. “ஆ, வ்யூ, இப்பொழுது அதைக் குறித்து நல்லுணர்வு தோன்றுகிறது”.
298. பாருங்கள், அப்படியானால் பரவாயில்லை, பாருங்கள், உங்களுடைய அந்த வரம் சபையில் உபயோகிப்பதற்காக அல்ல, ஆனால் உங்களுக்கு பக்திவிருத்தி உண்டாவதற்காக. “அந்நிய பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான் பாருங்கள், அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லா விட்டால், அப்பொழுது... நான் கூறுவது விளங்குகிறதா? பாருங்கள், அது தான். அவனுக்கே அது தெரியாது. அவன்... ஆனால் அவன் தவறாயிருக்கும் போது அதை அறிந்து கொள்கிறான்.
இப்பொழுது, இவ்விரண்டை நீங்கள் பிரிக்கும் வரைக்கும், இவை ஒன்றாக போகும்படி விட்டு விட வேண்டும். அந்த ஒன்றை தான் நீங்கள் செய்ய முடியும். அதன் காரணத்தால் தான் நான் நினைக்கிறேன்...