299. இந்த வேதவசனத்தை யார் வேகமாக எடுக்க முடியும்? யாராகிலும் ஒருவர் எடுத்து விட்டாரா? (ஒலி நாடாவில் காலியிடம். ஒரு சகோதரன் 1 கொரி. 14:5ஐப் படிக்கிறார் - ஆசி).
நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும் அந்நிய பாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்.
300. சரி, “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும் படி விரும்புகிறேன்” பவுல் என்ன சொல்ல முயல்கிறான் என்றால்... உதாரணமாக சபை, நீங்கள் என் சபை. பவுலுக்கிருந்த சபைகளில் சில, இப்பொழுது நமக்கு இங்குள்ள அங்கத்தினர்களைப் போல் அவ்வளவு அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டதல்ல. சில வேளைகளில் பத்து அல்லது பன்னிரண்டு பேர். பாருங்கள்? பாருங்கள்? அவன், “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” என்கிறான். அது உங்களைத் திகைப்படையச் செய்து விட்டதல்லவா?
301. பாருங்கள், அப்போஸ்தலர் 19ல் கூறப்பட்டுள்ள அந்த சபையில் ஏறக்குறைய ஒரு டஜன் அங்கத்தினர்கள் இருந்தனர் என்று நினைக்கிறேன். பாருங்கள்? வெகு சொற்பப் பேர், ஊழியக்களத்தில், பாருங்கள். அது எப்பொழுதுமே சிறுபான்மையோராக இருந்து வந்துள்ளது. அவர்கள் ஆண்களும் பெண்களுமாக ஏறக்குறைய பன்னிரண்டு பேராயிருந்தார்கள் என்று அங்கு கூறப்பட்டுள்ளது (அப். 19:7) என்பதை நீங்கள் காணலாம்.
302. இப்பொழுது, நீங்கள் காண்பீர்களானால், பவுல் இங்கு, “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” என்கிறான். “நீங்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன். ஆயினும் அதற்கு அர்த்தம் உரைக்கப்படாவிட்டால், நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன் என்கிறான்.
303. அது எவ்விதம் அங்கு எழுதப்பட்டுள்ளது? யார்... அந்த வசனத்தை எடுத்து விட்டீர்களா? சரி, அதை நாம் மறுபடியும் படிப்போம். இப்பொழுது கவனியுங்கள்.
304. (ஒரு சகோதரன் 1 கொரி. 14:5ஐப் படிக்கத் தொடங்குகிறார். “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும் படி விரும்புகிறேன். - ஆசி). அங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். “நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்” “நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்... “நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்” ஏனென்றால் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அந்நிய பாஷைகளைப் பேசுகிறவனிலும் மேன்மையுள்ளவன்...” இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்ளுங்கள்.
305. இப்பொழுது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறதைவிட மேன்மையுள்ளது வேறெது? அங்கு தானே நீங்கள் என்னை நிறுத்தச் சொன்னீர்கள்? (ஒரு சகோதரன், “அது வித்தியாசமான... என்று நான் கூறிக் கொண்டிருந்தேன்” என்கிறார் - ஆசி). ஆம், பாருங்கள், ஆம். பாருங்கள்?
306. இப்பொழுது. உதாரணமாக, கல்லாதவர் இருவர் இன்றிரவு நமது மத்தியில் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இதைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. நான் உள்ளே வருகிறேன், நீங்கள் எல்லோரும்... இந்த கூட்டத்தை நாம் ஆரம்பித்தோம், நீங்கள் அந்நிய பாஷையில் பேசத் தொடங்குகிறீர்கள், நீங்கள் ஒவ்வொருவருமே ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நல்லது. அது என்ன? பாருங்கள். அந்த கல்லாதவன், “ஊ! இவர்களெல்லாரும் பைத்தியக்காரர் - என்பான். பாருங்கள்? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனஞ் சொன்னால், இந்த கல்லாதவன் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை அவன் சொல்கிறான்.
307. இப்பொழுது, அந்த வசனத்தின் எஞ்சியுள்ள பாகத்தைப் படியுங்கள். (அந்த சகோதரன் தொடர்ந்து படிக்கிறார். அர்த்தத்தையும் சொல்லாவிட்டால்... - ஆசி). பார்த்தீர்களா? சொல்லாவிட்டால், பாருங்கள். நான்... அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன். தொடர்ந்து படியுங்கள்... சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு... பார்த்தீர்களா? சபை பக்தி விருத்தி அடைகிறது.
308. இப்பொழுது. வேறு விதமாகக் கூறினால், ஏன், சபை... இங்குள்ள இந்த ஆள்... இங்குள்ள இத்தனை பேர் கல்லாதவர் என்று வைத்துக் கொள்வோம். இவர்கள் இன்றிரவு நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர்; இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இங்குள்ள நாமனைவருமே கர்த்தர் என்ன கூறப் போகிறார் என்பதை நாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எல்லோருமே அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். யாருமே ஒன்றும் சொல்லவில்லை. அந்நிய பாஷையில் பேசத் தொடங்கி விட்டீர்கள். பவுல், “நீங்கள் அறிய வேண்டியது... நான்... அது நல்லது தான். நீங்கள் எல்லோரும் அந்நிய பாஷையில் பேசினீர்கள், அது நல்லது தான் என்கிறான். ஆனால் உங்களில் தீர்க்கதரிசனம் உரைப்பவர் யாராகிலும் ஒருவர் எழுந்து நின்று “கர்த்தர் உரைக்கிறதாவது, இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் நமக்கு அந்நியர். அவருடைய பெயர் ஜான்டோ. அவர் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறார். அவர் தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் இன்றிரவு இங்கு வந்துள்ள காரணம், அவர் உதவியை நாடுகிறார். அவர் இன்று டென்னஸியிலுள்ள மெம்பீஸில் ஒரு மருத்துவரைக் கண்டார். அவருக்கு சுவாசப் பைகளில் புற்று நோய் உள்ளதென்றும் அவர் மரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மருத்துவர் கூறிவிட்டார்' என்று கூறினால் எப்படியிருக்கும்?
309. பவுல், “எல்லோருமே அந்நிய பாஷைகளில் பேசிக் கொண்டிருக்கும் போது, கல்லாதவன் ஒருவன் உள்ளே பிரவேசித்தால் அவன் உங்களைப் பைத்தியம் பிடித்தவன் என்பான் அல்லவா? ஆனால் ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து இருதயத்தின் அந்தரங்கங்களை வெளியரங்கமாக்கினால், அவன் முகங்குப்புற விழுந்து தேவனைப் பணிந்து கொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான்” என்கிறான் (1 கொரி. 14:23,25). பாருங்கள், அது...
310. நல்லது. இப்பொழுது, இங்கே. நீங்கள் அந்நிய பாஷையில் பேசுகிறீர்கள், ஒருவர் அதற்கு அர்த்தம் உரைத்து, “கர்த்தர் உரைக்கிறதாவது. இது தான் அதன் அர்த்தம். இங்கு ஒரு மனிதன் நமது மத்தியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய மனைவியை விட்டு இங்கு வந்திருக்கிறார். அவர் இன்றைக்கு நாஷ் வில்லில் இருந்தார்” அல்லது மெம்பீஸில், அப்படி ஏதோ ஓரிடத்தில், “அவருக்கு சுவாசப்பை புற்று நோய் உள்ளது. அவருடைய பெயர் ஜான்டோ” என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்?
311. “அதற்கு அர்த்தஞ்சொன்னாலன்றி பாருங்கள், அர்த்தம் சொல்லுதல் பக்திவிருத்தி உண்டாக்குகிறது. பாருங்கள்? அப்பொழுது அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றால்... அந்த ஆள் வெளியே சென்று, “உங்களிடம் ஒன்றைக்கூற விரும்புகிறேன். அந்த ஜனங்களிடம் தேவன் இல்லை என்று என்னிடம் கூறாதீர்கள். நிச்சயமாக அவர் இருக்கிறார்! அவர்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது' என்பார். பாருங்கள்? “
312. எனவே நமக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் வரங்களும் அதனுடன் கூட அந்நிய பாஷைகளில் பேசும் வரங்களும் அவசியமாயுள்ளது. ஆனால் அந்நிய பாஷையில் பேசும் போது, அதற்கு அர்த்தம் சொல்லுதல் அவசியம். அதற்கு அர்த்தம் சொல்லும் போது அது தீர்க்கதரிசனமாகிவிடுகிறது. பாருங்கள்? அது தீர்க்கதரிசனம். அதைக் குறித்த ஒரு கேள்வி இங்குள்ளது, அதை நாம் ஒரு நிமிடத்தில் பார்ப்போம், விரைவில் அதற்கு வருவேன் (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).