313. சரி. இப்பொழுது, சகோதரனே, நீங்கள் யாராயிருந்தாலும், பெயர்கள் எழுதப்படுவதில்லை, சிறு காகிதத் துண்டுகள் மாத்திரமே, பாருங்கள், இதைக் கேட்டவர் யாராயிருந்தாலும், நான் நிச்சயமாக
314. இதை நீங்கள் இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம், பாருங்கள். ஆனால் நான் நினைக்கிறேன். இதன் விளக்கம்; “இதற்கு விளக்கம் தாருங்கள்” என்று என்னைக் கேட் பீர்களானால், இது தான் என் விளக்கம்.
315. இப்பொழுது நீங்கள் 2 கொரிந்தியருக்குத் திருப்புங்கள், யாராகிலும் 5: 1க்குத் திருப்பினால், “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும்” என்று எழுதப்பட்டுள்ளது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது”. சரி.
316. இப்பொழுது அவர்... நீங்கள் மத்தேயு 18:10ஐக் கவனிப்பீர்களானால் அவர் “சிறு பிள்ளைகளைக் குறித்து இங்கு பேசுகிறார். அவர்கள் சிறு பிள்ளைகள், மூன்று அல்லது நான்கு வயதுள்ளவர்கள், அவர்களைக் கொண்டு வந்தார்கள். “சிறு பிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். “சிறு பிள்ளைகள் என்பது “சிறு பிள்ளை” என்பதன் பன்மைச் சொல். சிறு பிள்ளை என்றால் சிறுவன் அல்ல - கைக்குழந்தை அல்ல, அதற்கும் பதின்மூன்று வயதுக்கும் இடையே உள்ள ஒரு பருவம். பாருங்கள்? அதுதானாக பொறுப்புள்ளதாயிருக்கும் பருவத்தை எட்டவில்லை.
317. அவர், “இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” என்றார். அந்த சொல்லுக்கு உண்மையான அர்த்தம் “மோசமாக நடத்தாதீர்கள்” (mistreat). பாருங்கள், “இவர்களில் ஒருவனை மோசமாக நடத்துதல்” ஒரு சிறு பிள்ளையை நாம் மோசமாக நடத்தக் கூடாது. அவர்கள் சிறு பிள்ளைகள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. பாருங்கள்?
318. இப்பொழுது கவனியுங்கள், அவர், “அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்” என்றார். பார்த்தீர்களா? வேறு விதமாகக் கூறினால், அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய சரீரங்கள், அவர்கள் மரித்தால் அவர்கள் செல்லவிருக்கும் அந்த தூதனைப் போன்ற சரீரங்கள், பரலோகத்தில் என் பரமபிதாவின் சமுகத்தில் எப்பொழுதும் இருக்கின்றன”. பாருங்கள்?
319. இப்பொழுது, “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்துபோனாலும் நமக்காக வேறொன்று ஏற்கனவே காத்திருக்கிறது” அது சரியா? அது ஒரு சரீரம்.
320. இங்கு பாருங்கள். இதை விவரிக்க எனக்கு மட்டும் நேரமிருந்தால்! எனக்கு நேரமில்லை என்பதை அறிவேன். ஆனால், 'இங்கே, இதை ஒலிப்பதிவு செய்வதால், இதை சிறிது விளக்குகிறேன், அப்பொழுது நீங்கள் எப்படியும் புரிந்து கொள்வீர்கள்.
321. பாருங்கள், ஒரு இரவு பேதுரு சிறையிலிருந்தான். அவர்கள் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவானின் வீட்டில் ஜெபக் கூட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். கர்த்தருடைய தூதன் - அந்த அக்கினி ஸ்தம்பம் - சிறைச் சாலைக்குள் வந்தார். ஒரு வெளிச்சம் இறங்கி வந்தது. அந்த ஒளி அவனிடம் வந்த போது. பேதுரு சொப்பனம் காண்கிறதாக நினைத்தான். அது... வேதம், “அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது” என்கிறது (அப். 12:7). பாருங்கள்? நம்முடன் இன்றுள்ளவரும் அவரே என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள், அவர் இறங்கி வந்தார். நாமும் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டால், அதே விதமாக நமக்கும் நேரிடலாம். பாருங்கள்? அவர் அங்கு வந்து, “என் பின்னே வா” என்றார்.
322. எனவே பேதுரு, “இப்பொழுது நான் சொப்பனம் கண்டு கொண்டிருக்கிறேன், இந்த சொப்பனத்தின் அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்” என்று எண்ணினான். அவன் காவலாளர்களைக் கடந்து சென்றான். அவன் “உ - ஊ. இப்பொழுது நான் நடந்து கொண்டே செல்கிறேன். கதவுதானாக திறக்கிறதே என்று எண்ணினான். அவன் அடுத்த காவலுக்குச் செல்கிறான், அதுவும் தானாக திறவுண்டது. அவன் நகர வாசலை அடைந்த போது, அதுவும் தானாக திறவுண்டது. பேதுரு சொப்பனம் காண்கிறதாக அப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் அங்கு நின்ற போது, “நல்லது. இப்பொழுது நான் விடுதலையாகி விட்டேன். எனவே நான் மாற்கு என்னும் பெயர் கொண்ட யோவான் வீட்டுக்குச் சென்று அங்கு ஐக்கியத்தில் கலந்து கொள்வேன்” என்றான்.
323. அவர்கள் அங்கு, “ஓ கர்த்தாவே, உமது தூதனை அனுப்பி பேதுருவை விடுவியும்” என்று ஜெபித்துக் கொண்டிருந்தனர்.
324. ஏறக்குறைய அதே நேரத்தில் யாரோ தட்டும் சத்தம் கேட்டது. [சகோ. பிரன்ஹாம் தட்டுகிறார் - ஆசி]. ஒரு பெண் கதவண்டையில் வந்து, “யார் அங்கே? என்று கேட்டாள். அவள் ஜன்னல் சட்டங்களைத் திறந்து பார்த்த போது அது பேதுரு என்று அறிந்து கொண்டாள். அவள் திரும்பிச் சென்று நீங்கள் ஜெபம் பண்ணுவதை நிறுத்திக் கொள்ளலாம், பேதுரு அங்கு நின்று கொண்டிருக்கிறார்” என்றாள்.
அவன், “இது என்ன! திறவுங்கள். நீங்கள் - நீங்கள்...' என்றான். பாருங்கள்?
325. [சகோ. பிரன்ஹாம் மறுபடியும் தட்டுகிறார் - ஆசி]. அவன் “கதவைத் திறவுங்கள், நான் உள்ளே வர வேண்டும்” என்றான். எனவே அவன் சொன்னான்...அவள் திரும்பவும் வந்து, “கதவண்டையில் நின்று கொண்டிருப்பவர் பேதுருதான்” என்று சாதித்தாள்.
326. அவர்கள், “ஓ, அவர்கள் பேதுருவை ஏற்கனவே சிரச்சேதனம் செய்து விட்டார்கள். அது அவருடைய தூதன்” என்றனர். பாருங்கள், பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்த போது, அவன் அதை பெற்றுக் கொண்டான் என்று அவர்கள் எண்ணினர். ஏனெனில் அவன் வருவதற்காக அது பரலோகத்தில் காத்திருந்தது.
327. அன்றொரு நாள் நான் கடந்து சென்று அந்த தரிசனத்தைக் கண்டேன். “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால், நமக்கு வேறொன்று இருக்கிறது”.
328. இந்த சிறுவர்கள் பாவமே செய்யாதவர்கள், பாருங்கள்... பாருங்கள்?
329. ஒரு குழந்தை அதன் தாயின் கர்ப்பத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் போது, அது அங்கு வைக்கப்பட்டவுடன்... பாருங்கள்? பாருங்கள்? ஆனால், அது முதலில் ஆவியாயுள்ளது. அந்த ஆவி மாம்சத்தை தரித்துக் கொள்ளும் போது, ஒரு சிறு ஜீவகிருமி மாம்சத்தைத் தரித்துக் கொண்டு, அதன் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும் போது... கர்ப்பத்தில் அது உதறுகின்றது. குலுக்குகின்ற சிறு தசைகளைக் கொண்டதாயுள்ளது. அது நமக்குத் தெரியும். அவை ஜீவ அணுக்கள். ஒரு குதிரை மயிரை நீங்கள் தண்ணீரில் போட்டால், அது மிதக்கி, அசைந்து கொண்டிருக்கும். அதை நீங்கள் தொடும் போது அது குதிக்கும். அப்படித் தான் தாயின் வயிற்றிலுள்ள ஒரு குழந்தையும் உள்ளது.
330. ஆனால் அது இந்த உலகத்தில் பிறந்து அதன் முதல் சுவாசத்தை சுவாசிக்கும் போது, அது ஜீவாத்துமாவாகிறது. பாருங்கள்? ஏனெனில் பூமிக்குரிய சரீரம் இவ்வுலகில் பிறந்தவுடனேயே, அதை ஏற்றுக் கொள்ள வானத்துக்குரிய ஒரு சரீரம், ஆவிக்குரிய சரீரம் ஒன்றுள்ளது. மாம்சத்துக்குரிய சரீரம் விழுந்தவுடனே, அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனால் அதற்காக பரலோக கூடாரம் ஒன்று காத்திருக்கிறது. ஒரு குழந்தை பூமிக்கு மாம்சத்தில் வந்தவுடனே, அதை ஏற்றுக் கொள்ள ஆவிக்குரிய சரீரம் ஒன்று காத்திருக்கிறது. இந்த ஆவிக்குரிய சரீரம்...மாம்சத்துக்குரிய சரீரம் அழிந்து போனவுடனே, ஆவிக்குரிய சரீரம் ஒன்று மறுபுறத்தில் காத்திருக்கிறது. பாருங்கள்? அதை நாம் 'தியாஃபனி' (theophany) என்று அழைக்கிறோம், பாருங்கள், தியாஃபனி.
(ஒரு சகோதரன், “நல்லது, அப்படியானால், இந்த சரீரம் உயிர்த்தெழும் வரைக்கும், அது ஒரு தற்காலிகமான சரீரமா? என்று கேட்கிறார் – ஆசி). ஆம், பாருங்கள்? ஆம். ஓ, ஆமாம். (“உயிர்த்தெழுதல்வரைக்கும் அந்த நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போமா?) அது சரி. பாருங்கள்? பாருங்கள்?
331. அது இன்னும் மனுபுத்திரருக்கு வெளிப்படவில்லை. நான் நினைக்கிறேன். அதை நான் கண்டேன் என்று எனக்குத் தெரியும். பாருங்கள்? ஆனால் அது என்ன விதமான சரீரம் என்று எனக்குத் தெரியவில்லை, உங்கள் கைகளையும் மற்ற உறுப்புகளையும் உணர முடிவதைப் போல அவர்களையும் என்னால் தொட்டு உணர முடிந்தது. இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறது. நான் உலகத்தை விட்டுச் சென்று அநேக ஆண்டுகள் கழித்தும் இதை நீங்கள் போட்டுக் கேட்க வகையுண்டு. பாருங்கள்? ஆனால்... அது என்னவாயிருப்பினும், அந்த ஜனங்களை நான் தழுவினேன், அவர்கள் கைகளைப் பிடித்தேன். நீங்கள் தத்ரூபமாயிருப்பது போல் அவர்களும் தத்ரூபமாயிருந்தனர். இருப்பினும் அது... அவர்கள் புசிக்கவில்லை, குடிக்கவில்லை, அங்கு நேற்று என்றோ நாளை என்றோ இருக்கவில்லை. பாருங்கள், அது நித்தியம்.
332. இப்பொழுது, அந்த கூடாரம்... அவர்கள் அந்த சரீரத்தில் புறப்பட்டு, பூமிக்குத் திரும்ப வருகின்றனர், அந்த விதமான சரீரத்தில் அவர்கள் அழியாமையைப் பெற்றிருந்தனர். பூமியின் மண்ணானது எப்படியோ அந்த 'தியாஃபனியாக ஒன்று கூடி, அவர்கள் மீண்டும் மானிடராக, ஏதேன் தோட்டத்தில் அவர்கள் புசித்ததைப் போல் புசிக்கின்றனர். பாருங்கள்? “பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக ஒன்று ஏற்கனவே காத்திருக்கிறது.
333. எனவே பாவமே இல்லாத இந்த சிறு பிள்ளைகள் - அவர்களுக்கு இன்னும் பாவம் இருக்கவில்லை - அவர்களுடைய தூதர்கள், அவர்களுடைய “சரீரங்கள்” (பேதுரு அந்த சரீரத்தில் திரும்பி வந்ததாக கருதப்பட்டான்...) காத்திருக்கின்றன. “பரலோகத்தில் பரம பிதாவின் சமுகத்தை தரிசித்தவைகளாய்” அவை எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் உள்ளன. அவர்கள் அதை அறிந்திருக்கின்றனர்.
334. [ஒரு சகோதரன், “இயேசு அவருடைய உயிர்த்தெழுதலின் முதலாம் கட்டத்தில் 'என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை' என்று சொல்லிவிட்டு அதன் பிறகு அறைக்குள் வந்தபோது தோமாவிடம் 'உன் கையை நீட்டி என் விலாவிலே போடு' என்று சொன்னதைப் புரிந்து கொள்ள சிறிது கடினமாயுள்ளது என்கிறார் – ஆசி] அது உண்மை. அவர் இன்னும் ஏறிப் போகவில்லை. (“ஓரிடத்தில் அவர், அவரைத் தொட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தோமாவிடம் அருகில் வந்து அவரைத் தொடும்படி சொல்லுகிறாரே, இவ்விரண்டிலும் வேறுபாடு காணப்படுகிறதே). அவர் இன்னும் ஏறிப் போகவில்லை, பாருங்கள். நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை...
335. அது உண்மை, பாருங்கள், அது வரைக்கும் அவர் தொடப்படக் கூடாது. அவருடைய உயிர்த் தெழுதலுக்குப் பின்பு. அவர் கல்லறையிலிருந்து வெளியே வந்து மனிதர் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்தார், அவர் இன்னும் ஏறிப் போகவில்லை. அவர் சொன்னார். அவர் மரியாளிடம், “என்னைத் தொடாதே” என்றார்.
அவள், “ரபூனி” என்றாள்.
336. அவர், “என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப் போகவில்லை. நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன்” என்றார்.
337. அதன் பிறகு அன்றிரவு - அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த பிறகு - தேவனுடைய சமுகத்துக்கு ஏறிப் போனார். அங்கிருந்து திரும்பி வந்து, அவரைத் தொடும்படி தோமாவை அழைத்தார். பாருங்கள், அவர் தேவனிடத்திற்கு ஏறிப் போனார். அது உண்மை. சரி.