இல்லை, ஐயா... “தீர்க்கதரிசனம் உரைத்தல்” என்றால் “முன்னுரைத்தல்” பாருங்கள்? சரி.
338. அப்படித் தான் வேதம் கூறுகிறது. அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அதை நாம் அதைக் குறித்து நமக்கு நன்றாகத் தெரியும், பாருங்கள். அது... ஆம், ஐயா, அது... மூன்று பேர் மட்டும் அது 1 கொரிந்தியர் 14ம் அதிகாரத்தில் உள்ளது. பாருங்கள்? அது உண்மை. “மூன்று பேர் மட்டும். சகோதரரே, அதை உங்கள் கூட்டங்களில் கவனித்துக் கொள்ளுங்கள். அநேகம் பேர் அந்நிய பாஷையில் பேச முற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.. அவர்களுக்குப் பரிசுத்த ஆவி இல்லை என்று இப்பொழுது சொல்லி விடாதீர்கள். கொரிந்து சபையை ஒழுங்குபடுத்துவதற்காக பவுல் சென்றிருந்தான். அது நம்மெல்லாருக்கும் தெரியும், இல்லையா? அதை அவன் ஒழுங்குக்குள் கொண்டு வர வேண்டியதாயிருந்தது. அவன், “சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப் படக்கடவது “ என்றான் (1 கொரி. 14:40).
339. நீங்கள் கவனிப்பீர்களானால், பவுலுக்கு கொரிந்து சபையினால் எப்பொழுதுமே தொல்லை உண்டாகிக் கொண்டிருந்தது. அந்த விதமாக அவனுக்கு... அவன் எபேசு சபைக்கு அப்படிப்பட்ட எதையும் கூறவில்லை, அவர்களுக்கு அவன் நித்திய பாதுகாப்பைக் குறித்து போதித்தான். ஆனால் கொரிந்து சபைக்கு அவன் எழுதின நிரூபத்தில், நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே காணப்படவில்லை. அவர்கள் எப்பொழுதுமே குழந்தைகளாயிருந்தனர் - “ஒருவன் அந்நிய பாஷையைப் பேசுகிறான். ஒருவன் சங்கீதம் பாடுகிறான் என்பதாய் (1 கொரி 14:26). அது சரியல்லவா? பாருங்கள்? உங்கள் சபையோர் அவ்விதம் தொடங்கும் படி நீங்கள் விட்டு விடுவீர்களானால்...
340. மார்டின் லூத்தரைப் போல. அவர் ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசினார். அவர் தன்னுடைய நாள் குறிப்பு புத்தகத்தில் (diary), “நான் அந்நிய பாஷையில் பேசினேன். ஆனால் அதை நான் என் ஜனங்களுக்குப் போதித்தால், அவர்கள் வரத்தைக் கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரத்தை நாடிக் கொண்டிருப்பார்கள்” என்று எழுதி வைத்தார். அவர் கூறினது உண்மை, பாருங்கள், அவர்கள் வரத்தை கொடுப்பவரை நாடுவதற்கு பதிலாக வரங்களை நாடுவார்கள்.
341. அதை தான் ஜனங்கள் பெற்றுக் கொள்கின்றனர், அவர்களை அந்நிய பாஷையில் பேச அனுமதிக்கும் போது, அவர்கள் பெருமை கொள்கின்றனர். அது தேவனால் உண்டாகாமல் போனால்... அது ஒன்றுமில்லாமல் போய் விடும். ஆனால் நாம்...
342. நவீன சபைகள் அதை தலைகீழாக செய்து விடுகின்றன, நாமோ அவ்விதம் செய்வதில்லை. அது தேவனுடைய வரம் என்றும், அது தேவனுடைய ஆவியால் அங்கு அளிக்கப்படக் கூடும் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். சகோ. ராய், அப்படித் தானே? அது உண்மை. ஆம், ஐயா. அதை சபையில் வையுங்கள்! அது சபைக்கு உரிமையானது. அந்நிய பாஷையில் பேசும் வரம் தேவனுடைய சபைக்கு உரிமையான ஒன்று.
343. இப்பொழுது, அவருடைய கேள்வி என்னவென்று பார்ப்போம். அது என்ன கூறுகிறதென்றால்:
எல்லா செய்திகளுக்கும் அர்த்தம் உரைக்கப்பட வேண்டும்... அது சரி... அதுவும் முன்று பேர் மட்டில் என்று நினைக்கிறேன்.
344. அது சரி, பாருங்கள், ஏனெனில் நீங்கள் அதற்கு மேல் அனுமதித்தால்... உதாரணமாக, நீங்கள் கூட்டம் ஒன்றை நடத்துகிறீர்கள் என்றும், நாமெல்லாரும் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் வைத்துக் கொள்வோம். இவரை அந்நிய பாஷையில் பேசவிட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை அந்நிய பாஷையில் பேச விட்டு, இவரை அந்நிய பாஷையில் பேசவிடுவதனால் என்ன பயன்? நாமெல்லாரும் மிகுந்த குழப்பமடைந்து, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல் இருப்போம். பாருங்கள்? மூன்று பேர். மட்டில்... உதாரணமாக, ஹாலின் அந்நிய பாஷையில் பேசுகிறார், அவர் அந்நிய பாஷையில் பேசுகிறார்...
345. அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் அந்நிய பாஷைக்கு நீங்களே அர்த்தம் உரைக்கலாம், இல்லையென்றால் அதற்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருக்கலாம். இப்பொழுது நீங்கள்... “அந்நிய பாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்” (1 கொரி. 14:13). அவன் தான் பேசின அந்நிய பாஷைக்கே அர்த்தம் உரைப்பதென்பது, வேறொருவர் அதற்கு அர்த்தம் உரைப்பது எவ்வளவு முறையோ, அவ்வளவு முறையானது. ஆனால், அந்நிய பாஷையில் பேசுவதற்கு முன்பு, அங்கு அர்த்தம் உரைப்பவர் ஒருவர் இருந்தாக வேண்டும். அந்நிய பாஷையில் பேசுகின்ற சிலர் அங்கு இருந்து அதற்கு அர்த்தம் உரைப்பவர் இல்லாமல் போனால், நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்பதற்கு நீங்களே அர்த்தம் உரைக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.
346. நீங்கள் பெருமைக்காக அப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் பக்திவிருத்திக்காகவே இதை செய்கிறீர்கள், பாருங்கள். பெருமைக்காக செய்யாதீர்கள். தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்கும் ஏதுவாக அப்படிச் செய்யுங்கள். பாருங்கள், இவையனைத்தும் ஒரு பெரிய நோக்கத்துக்காக, சகோதரனே. இந்த வரங்கள் தேவனை மகிமைப்படுத்தவும், சபை பக்திவிருத்தி அடைவதற்காகவும், ஜனங்களை தேவனிடத்தில் கொண்டு வருவதற்காவும், தேவன் நம்முடன் இருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவுமே. அவர் மரித்துப் போன தேவன் அல்ல, அவர் ஜீவனுள்ள. தேவனாய் நமது மத்தியில் கிரியை செய்து கொண்டிருக்கிறார். பாருங்கள்?
347. அதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம், ஏனெனில் உண்மையான வரங்கள் கிரியை செய்வதைக் காண்பதை பிசாசு வெறுக்கிறான். வரங்கள் பலவீனமானவை, எனவே இந்த வரங்களை அவன் உபயோகித்து அவனால் கிரியை செய்ய முடியும். என்னே, ஓ. என்னே. இவை ஒவ்வொன்றையும் அவனால் உண்மையில் பாவனை செய்ய முடியும். அதன் காரணத்தால் தான்...
348. இப்பொழுது பாருங்கள், தீர்க்கதரிசன வரம் பெற்றுள்ள ஒருவருக்கும். ஒரு தீர்க்கதரிசிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. தீர்க்கதரிசனம் அளிக்கப்படுவதற்கு முன்பு... தீர்க்கதரிசன வரம் பெற்ற ஒருவர் என்ன கூறினார் என்பதை சபைக்கு அறிவித்து, இரண்டு அல்லது மூன்று பேர் அதை பகுத்தறிந்து, அது உண்மை என்பதை ஆமோதிக்க வேண்டும். ஆனால் தீர்க்கதரிசிக்கு அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பாருங்கள்? தீர்க்கதரிசி என்பது ஒரு உத்தியோகம். தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம். ஒரு தீர்க்கதரிசி பிறப்பின் போதே தீர்க்கதரிசியாகப் பிறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டிருக்கிறான், சகோதரனே. அது தான் தீர்க்கதரிசி. ஆனால் தீர்க்கதரிசன வரம் என்பது ஒரு வரம், பாருங்கள். ஒன்று தேவனால் அளிக்கப்பட்ட உத்தியோகம். மற்றது தேவனால் அளிக்கப்பட்ட வரம். பாருங்கள்? அது தான் வித்தியாசம்.
349. இப்பொழுது, செய்திகள் இவ்விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக, சகோ. ஜூனி இன்றிரவு அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அர்த்தம் உரைப்பவர் என்று நமக்குத் தெரியும். சகோ. நெவிலும் அர்த்தம் உரைப்பவர், பாருங்கள், பாஷைகளுக்கு அர்த்தம் உரைப்பவர். நல்லது. அது நமக்குத் தெரியும். இன்றிரவு இங்கு நாம் உட்கார்ந்து கொண்டிருக்கையில், ஓ, தேவ ஆவியானவர் பேசுவதற்கு துடி துடிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னே! நாம். இதை நாம் பெற்றிருக்கிறோம்... சபை ஆராதனை இன்னும் சில நிமிடங்களில் துவங்கப் போகின்றது. பாருங்கள், அது துவங்குவதற்கு முன்பாக நாம் கூடியிருக்கிறோம். இங்கு நாம் கடைபிடிக்கும் ஒழுங்கின் பிரகாரமாகவே இதை வரிசைப்படுத்தி கூறிக் கொண்டிருக்கிறேன்.
350. நல்லது. முதலாவதாக என்ன தெரியுமா, சகோ. ரட்டல் எழுந்து நின்று அந்நிய பாஷையில் பேசுகிறார். அவர் பேசி முடித்தவுடன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள்? ஜூனி குதித்தெழுந்து, “கர்த்தர் உரைக்கிறதாவது, இன்னின்ன காரியம் நடக்கப் போகிறது” என்கிறார், அல்லது இங்குள்ள யாராகிலும் ஒருவரைக் குறித்து சொல்லுகிறார். அப்பொழுது பதிவாளர்கள், என்ன கூறப்பட்டதோ அதை எழுதிக் கொள்கின்றனர்; உ ஊ, இதை வேகமாக பார்ப்போம்... அவர் என்ன சொன்னார் என்பதை. சரி, அது மறுக்கப்பட்டால், அதை விட்டு விடுங்கள், பாருங்கள், அதை கிழித்துப் போட்டு விடுங்கள். ஆனால் அது மறுக்கப்படவில்லை என்றால், அதை இரண்டு பேர் அங்கீகரிக்கின்றனர். அதன் பிறகு அது இங்கு எழுதப்படுகின்றது. அந்த இரண்டு பேர்களும் அதில் கையொப்பமிடுகின்றனர். பாருங்கள்? அது - அது - அது உங்கள் சபைக்கு. அது... உங்கள் நன்மைக்காகவே இதை எல்லாம் உங்களிடம் கூறுகிறேன், பாருங்கள், அவர்கள் அவ்விதம் தொடக்கத்திலே செய்தார்களோ இல்லையோ என்று எனக்குத் தெரியாது.
351. முதலாவதாக என்ன தெரியுமா, ஹாலின் குதித்தெழுந்து அந்நிய பாஷையில் பேசுகிறார். அர்த்தம் உரைக்கிறவர் முன்பு கூறின அதே செய்தியை கூறலாம். பாருங்கள். அது அதே செய்தியாக இருக்கக் கூடும், நடக்கப் போகிற ஒரு குறிப்பிட்ட காரியம், ஒரு தீர்க்கதரிசனம், பாருங்கள். நடக்கவிருக்கும் ஏதோ ஒரு சம்பவம், அல்லது நீங்கள் செய்ய வேண்டிய ஏதோ ஒன்று. பின்னால் உள்ள சகோ. ராபர்ஸன் குதித்தெழுகிறார். அவரும் அந்நிய பாஷையில் பேசுகிறார். சரி, அதுவும் முன்பு மற்றவரால் அளிக்கப்பட்ட அதே செய்தியாக இருக்கக் கூடும், அதற்கு அதே அர்த்தம் உரைக்கப்படக்கூடும். அல்லது இவை மூன்று வெவ்வேறு செய்திகளாக இருக்கலாம்.
352. இப்பொழுது, தேவன் ஒரே இரவில் ஐம்பது செய்திகளை அளிக்கமாட்டார். அது நமக்குத் தெரியும், ஏனெனில் அதை நம்மால் கிரகித்துக் கொள்ள முடியாது. பாருங்கள்? ஆனால் சபையை ஏதாகிலும் துன்புறுத்திக் கொண்டிருந்தால், உதாரணமாக... அல்லது அது எதாகிலும் ஒன்றைச் செய்து கொண்டிருந்தால், அது சபை சீர்பொருந்துவதற்காகவே, பாருங்கள்? அதற்கு மேல் நான் அந்நிய பாஷையில் பேசுவதை அனுமதிக்க மாட்டேன், பாருங்கள். ஏனெனில் மூன்று பேர் மட்டில் என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்?
353. மூன்று பேர் மட்டில். அதன் பிறகு நான், “அவைகளை எழுதி பிரசங்க பீடத்தின் மேல் வைத்து விடுங்கள்' என்பேன். பாருங்கள்? பிறகு அடுத்த நாள் இரவு நாம் மறுபடியும் கூடுகிறோம். இன்றைக்கும் நாளை இரவுக்கும் இடையே ஏதாகிலும் ஒன்று நடக்க விருந்தால் தேவன் அச்செய்திகளில் ஒன்றில் அதை கூறியிருப்பார். நான் கூறுவது விளங்குகிறதா? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும். இப்பொழுது நான் நினைக்கிறேன். வெப்ஸ்டர் என்ன கூறுகிறார் என்றால், தீர்க்கதாசினமானது... வரப்போவதை முன்னுரைக்காத செய்தி தீர்க்கதரிசனம் என்று அழைக்கப்படலாமா?
354. இல்லை, அது தீர்க்கதரிசனமாக, தீர்க்கதரிசனம் உரைத்தலாக இருக்குமானால், அது வரப்போவதை அறிவிக்க வேண்டும். அது உண்மை.
355. சரி. நான் நினைக்கிறேன். இதுவே கேள்வியின் கடைசி பாகம் என்று நினைக்கிறேன். நாம் அடுத்த கேள்விக்குச் செல்வோம்.