153. இதை அறிந்து கொள்ள உங்களுக்கு உலகத்தில் ஒரு வழியும் கிடையாது. அது சரி. நீங்கள் அறிந்து கொள்ள உலகத்திலே ஒரு வழியும் இல்லை, நாம் ஒருவரையும் நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, தேவன் தான் நியாயாதிபதியாய் இருக்கின்றார், நியாயந்தீர்க்க நாம் இல்லை. பாருங்கள்? நீங்கள் சுவிசேஷத்தை மாத்திரம் பிரசங்கியுங்கள், வாழுங்கள்...
154. சில காலத்திற்கு முன் ஒரு மனிதன் என்னிடம் வந்தார். கடந்த இரவு நான் கூறியதைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அவர் என் வீட்டிற்கு வந்து, "சகோதரன் பிரான்ஹாம் தான்-நான்-நான். விரும்பினது . . . நான் என் பாவங்களை அகற்ற விரும்புகிறேன். நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறி அமர்ந்தார்.
155. அவர் “சர்வேதச பிரசித்த பெற்ற, மகத்தான மனிதனாகிய பில்லிகிரகாம் என்னும் பெயர் கொண்ட நபரைக் குறித்து நான் கேட்டிருக்கிறேன். ஆகையால் அவருடைய கூட்டங்களுக்கு நான் சென்றேன், அவர் 'கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பும் எல்லாரும் உங்கள் கரங்களை உயர்த்தி கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறினார். ஆகையால் தான் என்னுடைய கரங்களை உயர்த்தினேன், அவர் 'இப்பொழுது நாமெல்லாரும் எழுந்து ஜெபம் செய்வோம்" என்றார். ஆகையால் நான் எழுந்து ஜெபித்தேன் ....(என்னை மன்னிக்கவும்)" எவ்வளவு உத்தமமாக ஜெபிக்க முடியுமோ அவ்வளவு உத்தமமாக ஜெபித்தேன். "ஆனால் அது எனக்கு ஒரு நன்மையையும் அளிக்கவில்லை" என்றார்.
156. அவர் "அதன் பிறகு நான் ஓரல் ராபர்ட்ஸ் கூட்டங்களுக்குச் சென்றேன். அவர், 'நான் அவரைக் குறித்து கேள்விபட்டிருக் கிறேன். அங்கே அவர்கள் அவ்வளவாய் மகிழ்ந்து களிகூர்வதைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்றார், மேலும் அவர், " "நான் ஓரல் ராபர்ஸிடம் சென்று 'ஒரு கிறிஸ்தவனாக மாற நாள் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர் “நீங்கள் அங்கே செல்லுங்கள்...' நான் பில்லி கிரகாமின் கூட்டத்தில் கைகளை உயர்த்தினேன் என்று கூறினேன். அதற்கு அவர் 'நீங்கள் அந்த கேள்வி கேட்கப்படும் அறையில் சென்று சந்தோஷமாக அந்நிய பாதைகளில் பேசும் வரை இருங்கள்," என்றார். அவர் மேலும், ''நான் அங்கே உள்ளே சென்று அந்நிய பாஷையில் பேச ஆரம்பிக்கும் வரை நான் ஜெபித்தேன், ஆனால் நான் வெளியே வந்த பிறகு அது எனக்கு ஒரு நன்மையும் அளிக்கவில்லை" என்று கூறினார்.
157. அவர் ''அதன் பிறகு நான் வேறொரு கூட்டத்திற்கு சென்றேன், அவர்கள் நான் பரிசுத்தமாக்கப்படவில்லை என்று என்னிடம் கூறினர். 'நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, மகிழ்ந்து சப்தமிடவேண்டும், போதுமான சந்தோஷத்தைப் பெற வேண்டும்' ஆகவே நாள் சத்தமிடும் வரை ஜெபித்தேன், ஆனால் இன்னுமாய்" என்றார்,
158. தான் ''சகோதரனே, அந்த எல்லாக் காரியங்களும் சரியான வைகளே, ஒவ்வொன்றும் நன்மையானதே. உன்னுடைய கரங் களை உயர்த்துதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், சத்தமிடுதல், அந்த ஒவ்வொரு காரியத்தையும் நான் விசுவாசிக்கிறேன், ஆனால் இருந்த போதிலும் அந்த காரியம் அதுவல்ல, அது இயேசு கிறிஸ்துவாகிய அந்த நபரை ஏற்றுக்கொள்வது ஆகும். பாருங்கள்?" பாருங்கள் அது - -
159. இவைகள் எல்லாம் தன்மைகளாகும். சத்தமிடுதல், அந்நிய பாஷைகளில் பேசுதல், ஓடுதல், குதித்தல், அழுதல், ஜெபம்செய்தல், பேசுதல் ஆகிய இவைகளெல்லாம் தொடர்ந்து வருகின்ற தன்மைகள் மாத்திரமே. முதலாவது காரியம் கிறிஸ்து இயேசுவை ஏற்றுக் கொள்வது மாத்திரமே. பாருங்கள்? ஆகையால் அங்கே நாம் கூறத்தக்கதான சாட்சிகள் இல்லை. ஏனென்றால் ஒரு மனிதன் அழுகின்றான் என்பதினாலா? ஒரு மனிதன் மிகவுமாக அழுது, அழுது முதலைக் கண்ணீர் வடித்து, ஆனால் இன்னுமாய் அவன் தன்னால் இயன்ற மட்டும் மிகப் பெரிய பாவியாயிருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
160. கவனியுங்கள், இயேசுவிற்கு ஆடுகளைத் தவிர வேறொன்றும் கிடையாது. அது சரிதானே? மேய்ப்பன் தன் ஆடுகளை அறிந் திருக்கிறான். வெள்ளாட்டின் சப்தத்தை இங்கிருப்பவர்கள் யாராவது கேட்டிருக்கிறீர்களா? நல்லது, சகோதரனே, நீங்கள் வித்தியாசத்தை அறிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் மேய்ப்பர்களாய் இருத்தல் நல்லது. ஒரு வெள்ளாடு, செம்மறியாட்டைப் போலவே சப்தமிடும். ஹ. அந்த பழைய வெள்ளாட்டை எங்கேயாவது நிறுத்திவைத்து, ஒரு சிறிய செம்மறியாட்டை வேறு பக்கமாக நிறுத்திவீர்களானால், "பா...'', "பா...'' என்ற சத்தம் ஒரே விதத் தில் அமைந்திருக்கும்
161. அவர்கள் பீடத்தின் கீழே ''ஓ தேவனே'' என்று அழுது ''ஓ தேவனே என்று விம்மிக் கொண்டிருப்பதை நான் கேட்டிருக்கிறேன், ஆனால் முழு நேரமும் வெள்ளாடாய் இருக்கின்றனர். அது சரி, சப்தமிடுதல்? நல்லது, என்னே, அவர்கள் மிகவுமாய் சப்தமிட்டு, தரையில் இங்கும் அங்குமாக ஓடி மேலும் கீழுமாக குதிப்பதை நான் கண்டிருக்கிறேன்.
162. இப்பொழுது, “'சகோதரன் பிரான்ஹாமே, அழுவதில் நீங்கள் நம்பிக்கைக் கொள்வதில்லையா?” என்று நீங்கள் கூறலாம்,
163.நீங்கள் என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக, அழுவதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஆனால் அது சாட்சியைக் குறிக்கவில்லை என்று நாள் கூறுகிறேன், பாருங்கள், ஏனென்றால் அவை இரண்டுமே அழுகின்றன. அவர் களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக சப்தமிடு கின்றனர் என்பதை நான் கண்டிருக்கிறேன். ஆம் ஐயா. பிறகு அவ்வாறே இருந்துவிடுகின்றனர். நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றேனோ, அவ்விதமாக உங்களில் அநேகர் இருந்து வருகின்றனர். அவர்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன், பிறகு அவர்கள் வெளியிற் சென்று எவ்வித வாழ்க்கையையும் வாழ்ந்து எதையாகிலும் செய்கின்றனர். ஆகவே, அது ஒரு அடையாளம் இல்லை. ஆனால் நீங்கள் 'நீங்கள் அதற்கு எதிராக உள்ளீர்கள், "' என்று கூறலாம்.
164. ஓ, இல்லை. அந்நிய பாஷைகளில் பேசுவதில் நான் விசு வாசம் கொண்டிருக்கிறேன், அது சபையில் உள்ள தேவனுடைய வரம் ஆகும். அதை நான் வெளியே எடுத்தேனென்றால், நான் தேவனுடைய ஒரு பாகத்தை வெளியே எடுத்துவிடுவேன். நான் என்னுடைய நாவை வெளியே எடுத்தால் - என்னுடைய நாக்கு என்னுடைய சரீரத்தின் ஒரு அவயம், அப்படியானால் முழுமை யான சரீரம் எனக்கு இல்லை. இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நாவுகள் இருக்கின்றன. இங்கே இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் சரீரம் நாவுகளைக் கொண்டதாய் உன்ளது; ஆகையால் நீ அதை வெளியே எடுத்தால், கிறிஸ்துவினுடைய ஒரு பாகத்தை நீ வெளியே எடுக்கின்றாய். ஆனால் அதுதான் சரீரம் என்று நீ இன்னுமாய் அதைக் கூறமுடியாது, பாருங்கள். பாருங்கள்? பாருங்கள்?
165. ஆனால் அது கிறிஸ்து இயேசுவை அந்த நபரை ஏற்றுக் கொள்வதாகும், அதன் பிறகு இந்த மற்றைய காரியங்கள் சரியாக உள்ளே வந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து பொருந்திவிடும். ஆகவே இக்காலையில் இச்சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் இந்த சிறிய மக்கள் குழு, நாம் ஒவ்வாருவரும் திரைகளை நம் பக்கமாக இழுத்து வைத்து, இங்கிருக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்து இயேசு என்னும் நபரை பெற்றுக் கொள்வோமானால், ஒரு குழப்பமோ, அல்லது விவாதமோ நம்மத்தியில் இருக்கவே இருக்காது. அங்கே பரிபூரண அன்பு மாத்திரமே இருக்கும். நீங்கள் இன்னுமாய் இதை அல்லது அதை விசுவாசித்தாலும் முழுவதும் அன்பினாலே நிறையப்பட்டிருக்கும், நீங்கள். . . பாருங்கள்? அது தான். இப்பொழுது, இயேசு, "அவர்களுடைய களிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று கூறினார். ஆகவே ஆவியின் கனி அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், விசுவாசம் என்பதாகும்.
166. இப்பொழுது, நான்..... ஒரு மனிதன் ஒரு கிறிஸ்தவன் என்று சாட்சி பகருகின்ற ஒரு காரியத்தை, என்னுடைய மதிப்பீட்டை, எனக்கு தெரிந்த ஒன்றை நான் கூறுகிறேன். அது என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? அது பெருமுயற்சி கடும் முயற்சி செய் கின்ற ஆத்துமாவாகும். தேவனுக்காக மிகவுமாக பசி தாகம் கொண்டிருக்கிற ஒரு மனிதன். அவர்கள் இரவும் பகலுமாய், அவர்களால் - அவர்களால் தாங்க முடியாது. அவர்கள் -அவர்கள் அவர்கள் தேவனுக்கென்று ஏதாவதொன்றைச் செய்தாக வேண்டுமென்றிருப்பார்கள். அவர்கள் முழுவதுமாக அன்பினால் நிறைந்து…….அவர்கள் ஆத்துமா கடும் முயற்சி செய்யும், எப்பொழுதும், எந்நேரமும் பிரயாசப்பட்டுக் கொண்டே இருக்கும். வேதம் ''கண்ணீரோடே விதைக்கிறவன் கெம்பீரத்தோடே அறுப்பான். அறுத்த அருமையான அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்'' என்று கூறுகின்றது. அது சரியா? அந்த எல்லாக் காரியங்களும். . .
167. இப்பொழுது, கவனியுங்கள், அங்கே இந்த சபையானது.... இந்த காலை வேளையில் நான் கூறுவேனானால், இக்கூட்ட மக்களும் நானும்... தேவன், "இப்பொழுது, வில்லியம் பிரான்ஹாம், கவனி, அந்த மக்கள் குழுவிற்கு நீ என்ன கூறுகின்றாயோ, அதற்கு நீ பதிலுரைக்கும்படியாக நான் செய்யப் போகிறேன். இப்பொழுது, அவர்கள் எல்லாரும் சப்தமிட வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?" என்று கூறினால், ''நிச்சயமாக, அவர்கள் சப்தமிடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' "அவர்கள் எல்லாரும் அந்நிய பாஷையில் பேச வேண்டும் என்று நீ விரும்புகிறாயா?" "ஒவ்வொருவரும் அவ்வாறு செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்" அவர்கள் "எல்லாரும் ஆவியில் நடனமாட வேண்டும் என்று விரும்புகிறாயா?'' ''ஒவ்வொருவரும் அவ்வாறே செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்''
168. ''சரி, மிகவும் நல்லது, ஆனால் அவர்களை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்?” ஹ-ஹூம்
169. "ஜெபிக்கவேண்டும் என்று தங்கள் இருதயத்தில் பாரம் கொண்டவர்களாய், இந்த பீடத்தின் கீழே இருந்து, இங்கே இர வும் பகலும் தங்கியிருந்து, மற்றைய காரியங்கள் உள்ள ஒரு சபை; அவர்கள் வீட்டிலே எந்நேரமும் ஜெபத்திலேயே இருந்து, மக்களை தேவனண்டையில் வரும்படிச் செய்து, தாழ்மையாய் நடந்து, மருத் துவமனைகளில் சென்று நோயாளிகளைச் சந்தித்து, சபைக்கு மக்கள் வரும்படிச் செய்து, சரியானவைகளைச் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சபையையே நான் கொண்டிருப்பேன். அந்த மற்ற காரியங்கள் யாவும் ஒன்றாக இருந்து அந்த மற்றவை சரியாய் இருந்த போதிலும், அது சபைக்குள்ளானதாயிருந்தாலும், இவைகளைக் காட்டிலும் நான் அந்த சபையையே (ஆத்துமா பாரங்கொண்ட சபையை-) நான் பெற்றிருக்க விரும்புகிறேன்.''
170. ஆனால் அதை நான் கொண்டிருக்க விரும்பினால், அந்த ஒன்றை நான் முதலாவதாக வைப்பேன். ஏனெனில் நீ அதை பெற்றுக் கொள்வாயானால், மற்றவை நடந்தேறும். ஹா ஹஜம். பாருங்கள்? நீங்கள் அதைப் பெற்றுக் கொள்வீர்களானால், நீங்கள் தேவனுக்காக மிகவுமாக பசி கொள்வீர்கள், சப்தமிடுவது தானாக நடை பெறும். நீங்கள் தேவனுக்கென்று மிகுந்த பசியடைவீர்களானால் அந்நிய பாஷைகளில் பேசுவது நிகழும். நீங்கள் தேவனுக்காக மிகவும் பசியடைவீர்களானால், நீங்கள் தாமே பசி கொண்டவர்களாகவே இருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் தாமே வேற்றுமை சிந்தை கொண்டவர்களாய் ஆவதை நீங்கள் கவனிப்பீர்களானால், ஞாபகம் கொள்ளுங்கள், அதை கவனியுங்கள், அங்கே வேறொரு ஆவி கிரியை செய்ய முயல்கிறது என்பதாகும். தேவனுக்கு முன்பாக தாழ்மையாகவும், ஆத்துமப் பசிமிக்கவர்களாயும் நடவுங்கள். நல்லவர்களாகவும் பழமை நாகரீகம் கொண்டவர்களாயும் இருங்கள்...
171. எசேக்கியேல் 9ம் அதிகாரத்தின்படி, "பரிசுத்த ஆவியினால் முத்திரையிடும்படியாக முதலாவதாக தேவனுடைய தூதன் சென்றபோது, அவன் நகரத்திலே செய்யப்படுகிற சகலவித அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழு கிறவர்களையே அவன் முத்திரையிட்டான்" என்ற வேதவாக்கியத்தின்மூலம் நான் அதை நிரூபித்துக் காட்ட முடியும். அது சரியா? நகரத்திலே செய்யப்படுகின்ற அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளிலே முத்திரையிட்டான்
172. இப்பொழுது, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும் புகிறேன், நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன். (இப்பொழுது கூடுமானவரை சீக்கிரமாக நான் முடித்துவிடுகிறேன்) பரிசுத்த ஆவியானவர் தாமே ஜெபர்ஸன்வில், நியூ ஆல்பனி, லூயிவில் ஆகிய இடங்களின் வழியாகச் சென்று இந்த மத்திய வேளையில் வீட்டில் இருப்போரை முத்தரித்தால் இன்றைக்கு என்ன நிகழும், “'தேவனே கூட்டத்திற்காக மிகவும் பசியாய் இருப்பவர்களுக்கு எழுப்புதலை அனுப்பும். ஓ, தேவனே, இப்பட்டணத்தின் பாவங்களைப் பாரும் ஓ, அது மிகவும் மோசமானதாய் இருக்கின்றதல்லவா, தேவனே? ஓ, நீர் தயவுகூர்ந்து ஒரு எழுப்புதலை அனுப்பமாட்டீரோ, தேவனே. ஒரு அருமையான பிரசங்கியை எவராவது, ஒரு வரை அனுப்பும். ஓ, கர்த்தாவே பரிசுத்த ஆவிதாமே...''? எங்கே அவர் முத்தரிப்பார்? அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்.
173. இப்பொழுது, "நல்லது, சகோதரன் பிரான்ஹாம், நீர் என்ன கூற முயல்கிறீர்?"
174. நான் இதைத் தான் பயத்தோடும், வலிமையில்லாத கயிறு களின்மேல் நடந்தவாறு இதை கூற விழைகிறேன். உள்ளே இருப்பவர்களுக்கு தாளானது முடிவடையப் போகின்றது என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? பாருங்கள்? கதவுகள் மூடிக்கொண்டிருக் கின்றன. உங்களுக்குள்ளே அதைக் குறித்த பாரம் என்பதே இல்லாமலிருக்கின்றது.
175. பில்லிகிரஹாமும், ஓரல் ராபர்ட் ஐம், நம்மிடையே உள்ள மற்ற எல்லாரும் தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தி னோம், நாம் கறினோம், ஜெபித்தோம், மற்ற எல்லாவற்றையும் செய் தோம். ஆனால், நீங்கள் பாருங்கள், கதவுகள் மூடப்பட்டுக் கொண் டிருக்கின்றன. "அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். "நான் வேத வசனங்களை மேற்கோடிட்டு காட்டுகிறேன், "அசுத்தமாயிருக்கட்டும். நீதி யுள்ளவள் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.'' புறஜாதியாரின் கதவுகள் மூடிக்கொண்டிருக்கின்றன என நான் நம்புகிறேன். பாருங்கள்? காலங்களின் நேரம் முடிவடையப் போகின்றது, இன்னும் வரவேண்டியது சிலர் மாத்திரமே. தேசம் முழுவதும் கூட்டங்களை நடத்தினோம், ஆத்துமாவைக் குறித்து பிரசவ வேதனை இல்லாததால்தான் அதைப் போன்று கூட்டங்கள் உங்களுக்கு இருக்கவில்லை. உங்களுக்கு அந்த பாரம் இருக்கவில்லை.
176. அநேக வருடங்களுக்கு முன் சம்பவித்தது என் நினைவிற்கு வருகின்றது, அன்று நடந்ததை அவர்கள் சபையில் பேசுகின்றதை நீங்கள் எப்பொழுதும் கேட்கின்றீர்கள். ஆனால் அதுவோ இன்னு மாய்த் தொடர்ந்திருக்கவில்லை, சிறிதேனும் இல்லை, ஆனால் அன்று அது புதுப்பொலிவுடன் இருந்தது. தேவன் தமது சபையை அழைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் கதறி அழுதுக்கொண்டு, விம்மிக் கொண்டு இரவு முழுவதும் பீடத்தின்மேல் விழந்து கிடந்ததை நான் கண்டிருக்கிறேன். நான் அவர்கள் வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன். நீங்கள் அவர்கள் வீட்டருகில் வரும் போழுது……ஆணும் பெண்ணுமாக ''ஓ, தேவனே'' என்று கதறிக் கொண்டிருப்பதை உங்களால் கேட்க முடியும்.
177. அவர்கள் சபையினூடே நடந்து செல்வதை நீங்கள் காணலாம். அப்பொழுது, "இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்'' என்று பியானோ கருவியில் இசைக்கப்படு வதை நான் காண்பேன், அங்கே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், உங் க ளுக்குத் தெரியுமா. (சகோ. பிரான் ஹாம் சப்தத்தை உண்டாக்குகிறார்- ஆசி) இந்த சபைக்குள் செல்வோம், வேறொரு சபைக்கு செல்வோம், ''அங்கே அருமையான ஒரு ஊற்று'' என்று அங்கே பாடப்படுவதைக் கேட்போம், "ஓ, தேவளே, என்னுடைய மகனைக் காத்தருளும். என் மகளைக் காப்பாற்றும், அவள் இழந்து போயிருக்கிறாள், கர்த்தாவே, தயை கூர்ந்தருளும்!''
178. அதைப்போன்று இன்று உன்னால் காணமுடியாது. காரணம் என்ன? விலக்கிக் கொண்டுள்ள தேவனுடைய ஆவி இயேசு இதை முன்னறிவித்தார், அவர்களுடைய அன்பு தணிந்து போகும். அக்கிரமம் மிகுதியாவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும். பாருங்கள்? பாருங்கள்? குளிர்ந்து போய் அகன்று விடுகின்றனர். அன்பு தணிந்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் வேஷத்தை தரித்து, பியானோ கருவியை மேலும் கீழாக வாசித்து, ஓ," அல்லேலுயா! தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்பார்கள். பாருங்கள், அது வெறும் வேஷமே. அதைப் போன்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள், பாருங்கள், பாருங்கள், பாருங்கள், பரவாயில்லை நாம், , , நான் இப்படிச் சொல்கையில்...
179. நாம் நம்முடைய சபையைக் குறித்து பேசவில்லை, அமெரிக்காவில் நான் கண்டதைக் குறித்தே பேசுகிறேன். அது ஒரு வேஷம் போலாகிவிட்டது, அது நம்மிடையே இருந்ததைப் போன்று ஒரு நடிப்பாக ஆகிவிட்டது. அந்த ஆத்தும் பசி, முயற்சியானது ஏறத் தாழ இல்லாமற் போயிற்று. ஓ, சகோதரனே, சகோதரியே (தேவன் நம்மேல் இரக்கமாய் இருப்பாராக). தேவன் இரக்கமாயிருப்பாராக!
180. இந்த எழுப்புதல்களையும், மற்ற பலமான காரியங்களையும் நோக்கிப் பாருங்கள், சுவிசேஷமானது தெளிவாகப் பிரசங்கிக்கப்படுகிறது, அது.... எழுப்புதலானது முடிவுற்றவுடன் அவர்கள் சென்றுவிடுவதை இன்றைக்குக் கவனியுங்கள். அது என்னவென்று தெரியுமா?
181. இதை நான் கூறட்டும். தான் ஏன் இதைவிட முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் கவனியுங்கள், இயேசு கூறினார், "பரலோக ராஜ்ஜியம் ஒரு மனிதன் கடலிலே போடப்பட்டு சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் வெளியே இழுத்த போது, கடலில் இருந்த அநேக ஜந்துக்களை எடுத்தான். ஆமைகள், பாம்புகள், நீர் நாய்கள், நண்டு வகைகள், மீன் ஆகியவைகள் வந்தன. பாருங்கள், நான் விசுவாசிக்கிறேன் அந்த வலை...
182. இப்பொழுது, கவனியுங்கள்! இங்கே ஒரு ஆமை உள்ளது, இங்கே ஒரு மீன் உள்ளது. அந்த ஆமை, ஆமையாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் துவக்கத்திலிருந்தே அது ஆமையாகத் தான் இருந்தது. ஆமையினுடைய சுபாவம் தான் அதற்கு அமைந் திருக்கும், அந்த ஒரு சுபாவம் மாத்திரமே அதற்கு இருக்கும். இப் பொழுது நினைவில் கொள்ளுங்கள். நான் ஜெயிக்கப்போகிறேன் என்று கூறியிருக்கிறேன்) பாருங்கள், அது துவக்கத்திலிருந்தே ஆமையாகத்தான் இருக்கின்றது, இப்பொழுதும் அது ஆமைதான். பாம்பாக அது துவங்கியிருக்குமென்றால் இப்பொழுதும் அது பாம்பாகத் தான் இருக்கும். நீர் நாயாக துவக்கத்தில் அது இருந்திருக்குமானால்.....
183. அந்த குளத்தில் இருந்த எல்லா மீன்களும் பிடிபடும் வரை அந்த வலையானது போடப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
184. அதன் காரணத்தால் அவர்கள், ''நல்லது என் கைகளை நான் உயர்த்தினேன். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! நான் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!" என்று கூறுகின்றனர். அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து, "ஓ, லிடியா, அந்த காரியம் உனக்குத் தெரியுமா, அது... முட்டாள்தனமான ஒன்று. நான் சரியாகத்தான் ஊகித்தேன்'' என்று கூறுவர். ஏன்? அதன் சுபாவம் அங்கே இருக்கின்றது, அதன் ஆரம்பமே நீர் நாயா கவும், சர்ப்பமாகவும் இருந்தது.
185. ஏரியிலிருந்து அந்த மீன் இப்பொழுது எடுக்கப்பட்டிருக்கும், வலை காய்வதற்காக வைக்கப்படும். பிறகு இயேசு வந்து தம்மு டைய மீனை எடுத்துக்கொள்வார். நான் என்ன கூற முயல்கிறேன் என்பதைப் பாருங்கள்? ஓ, கிறிஸ்துவத்தின் ஒரு சிறு துளி மாத்திரம் உங்களில் இருந்தால், தேவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் சிறிய அளவில் மட்டும் இருந்தால் முடிந்த வரை இக்காலை வேளையில் அதை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள், உங்கள் இருதயத்தில் அதை வைத்து களி கூருங்கள்,
186. 'தேவ குமாரர் மனுஷ குமாரத்திகளைக் கொண்டார்கள்". நிச்சயமாக அவர்கள் தேவகுமாரர்தான். இப்பொழுதும் அவர்கள் இன்னுமாய் தேவகுமாரர்களாய் இருக்கின்றனர், ஆனால் அவர்கள் விழுந்து போன தேவகுமாரர். அவர்களில் சிலர் வேதபூர்வமாக இருக்கின்றனர், வியூ அவர்கள் எவ்வாறு வேத வாக்கியங்களைப் பேசுகின்றனர்! அவர்கள் தேவகுமாரர். சாத்தான் தேவனுடைய வலது கரமாக விளங்கியவன் என்று உங்களுக்குத் தெரியுமா. இன்றைக்கு உலகில் உள்ள வேத ஞானிகளைக் காட்டிலும் வேத வாக்கியங்களை அவன் அதிகமாக அறிந்திருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதைக் குறித்து பேசி... அவன் வேத கலா சாலைகளை தலைகீழாக ஆக்கிக் கொண்டிருக்கிறான், குறிப்பாக இங்கேயிருந்த பாப்டிஸ்டுகள், "இயேசு கிறிஸ்து ஒரு ரோம போர் வீரனுக்கோ, அல்லது ஜெர்மானிய போர் வீரனுக்கோ பிறந்திருக்க வேண்டும்'' என்று கூறுகின்றனர். அதைக் குறித்த புத்தகத்தை நான் வைத்திருக்கிறேன், வருகின்ற நாட்களில் என்றாவது ஒரு நாளிலே அதை நான் உங்களுக்கு காண்பிப்பேன். அது சரி.
187. முடிவாக யாத்திராகமம். . . ஓ நாம் அதை முடிக்கும் வரை அதை புரிந்து கொள்ள முடியாது. சீக்கிரமாக அதை தான் முடிக் கின்றேன். உங்களுடைய நேரத்தை அதிக அளவில் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். என்னோடு சிறிது நேரமாக பொறுத்துக் கொள்வீர்களா? (சபையார் "ஆமென்” என்கின்றனர் - ஆசி)