357. இப்பொழுது, அது ஒரு நல்ல கேள்வி, பாருங்கள். இதைக்கேட்ட மகனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பராக, ஏனெனில் இது ஒரு நல்ல கேள்வி. அதை நீங்கள் ரப்பர்கையுறையைக் கொண்டு கையாள வேண்டும். இப்பொழுது, நீங்கள் ஒரு... இங்குள்ள நமது சபைக்கு யாராகிலும் ஒருவர் வந்து ஒழுங்கின்படி இல்லாத அந்நியபாஷையில் ஒரு செய்தியையோ அல்லது தீர்க்கதரிசனமோ உரைப்பாரானால், அதைக் குறித்து நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. பாருங்கள்? நீங்கள். அவர்கள் ஒழுங்கில் இல்லை என்று அவர்களுக்குத் தெரிகிறது, அது... ஆராதனையை பாழாக்கி விடக் கூடும். பாருங்கள்? அவ்விதம் அது பாழாக்குகிறதென்றால், டீக்கன்மார்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம், அமைதலாயிருப்பதே. பாருங்கள். ஏனெனில் மேடையின் மேலுள்ள தீர்க்கதரிசி தான் உண்மையில்... நீங்கள் அவருக்குப் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் அவருக்கு போலிஸ்காரர்கள், நீங்கள் சுற்றிலும் காவலராய் இருக்கிறீர்கள். பாருங்கள்?
358. இப்பொழுது, அது யாராகிலும் நம்முடைய... அது யாராகிலும் நம்முடைய சபையைச் சேர்ந்தவர்களாயிருந்தால், அந்த நபர் இதைக் குறித்து பயிற்சி பெறாதவர், பாருங்கள், அவர்கள் பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் செய்ய முயன்று கொண்டிருக்கிறோம். நமது ஜனங்களுக்கு எவ்விதம் பயிற்சி கொடுக்க வேண்டுமென்று நமக்குத் தெரியும். ஆனால் அது நமது சபையில் இல்லாத ஒருவராக இருக்குமானால், அந்த நபர் எவ்விதம் பயிற்சி பெற்றிருக்கிறார் என்று நமக்குத் தெரியாது.
359. உதாரணமாக... கலிபோர்னியாவிலுள்ள கோஸ்டா மீஸா என்னுமிடத்தில் நடந்த சம்பவம். பில்லிக்கு ஞாபகம் இருக்கும். ஒவ்வொரு முறையும் நான் பீட அழைப்பு கொடுக்க ஆயத்தமான போது, ஒரு ஸ்திரீ குதித்தெழுந்து, உட்பாதையில் மேலும் கீழும் ஓடி, அந்நிய பாஷையில் பேசி, பீட அழைப்பை சுக்குநூறாக கிழித்தெறிந்தாள். நான் அங்கிருந்து நடந்து செல்ல வேண்டியதாயிருந்தது. ஆவியானவர் துக்கமடைந்ததை நீங்கள் அங்கு காணலாம். ஒழுங்கின்படி ஒன்று இருக்குமானால், அது தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தாது. பாருங்கள்? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) … அவள் தொடங்க ஆயத்தமாவதற்கு முன்பே அவள் தன்னை எவ்விதம் ஆயத்தப்படுத்திக் கொண்டாள்! ஏனெனில் அவளை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன். ஒழுங்கின்படி இல்லாத ஒன்றைக் காணும் போது, எந்த ஊழியக்காரனும் அவ்விதமே செய்வார். அந்த ஸ்திரீ புறப்பட்டுச் சென்று பில்லியிடம் கூறினாளாம், அன்றிரவு நாங்கள் திரும்பி வரும் போது பில்லி என்னிடம், “அப்பா, பீட அழைப்பை இரண்டு இரவுகள் தடை செய்த அந்த ஸ்திரீ உங்களுக்கு ஞாபகமுள்ளதா?” என்று கேட்டான்.
நான், “ஆம்” என்றேன்.
360. அவன், “அவள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் 'தேவனுக்கு மகிமை, பில்லி, இன்றிவு என்னிடம் வேறொரு செய்தி உண்டு' என்றாள்” என்றான்.
361. நல்லது, பாருங்கள், அவளை கூட்டத்தினரின் மத்தியில் கவனித்துக் கொண்டேயிருந்தேன். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். அங்கு டானி மார்டன் சுகமடைந்ததைக் குறித்துதான் 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிக்கை 'டானி மார்டினுக்கு நடந்த அற்புதம் என்னும் தலைப்பில் வெளியிட்டது. எனவே அந்த ஸ்திரீயை நான் கவனித்துக் கொண்டேயிருந்தேன், பீட அழைப்பைக் கொடுக்க நான் தொடங்கின் போது, அவள்... அவள் சரியான பயிற்சி பெறவில்லை; அவள் நல்லவள் என்பதில் சந்தேகமில்லை. அவள் சுற்றுமுற்றும் பார்த்து, தலைமயிரை ஒதுக்கிக் கொண்டாள். அவள் கலைமயிரை கத்தரித்துக் கொண்டிருந்தாள். அப்படியானால் அவள் அதை அனுமதிக்கும் அசெம்பிளீஸ் சபையையோ அல்லது வேறெதாவது சபையையோ சேர்ந்திருக்க வேண்டும். அவள் தலைமயிரை மேலே கட்டிக் கொண்டு, காலுறையை இழுத்து விட்டுக் கொண்டு ஆயத்தமானாள். நான் பீட அழைப்பைக் கொடுக்கத் துவங்கின நேரத்தில்... நான், “இங்குள்ள எத்தனை பேர் முன்னால் வந்து உங்கள் இருதயங்களை கர்த்தராகிய இயேசுவுக்கு அளிக்க விரும்புகிறீர்கள்?” என்றேன்.
362. அவள் குதித்தெழுந்தாள். நான், “உட்காரு” என்றேன். அவள் மறுபடியும் செய்யத் தொடங்கினாள். நான், “உட்காரு” என்றேன். பாருங்கள்? என்னே, எல்லோருமே... நான் அமைதியாக நின்றேன். அவள் நான் சொன்னதைக் கேளாதது போல் மறுபடியும் எழும்பினாள். நான் மறுபடியும் கூச்சலிட்டேன். இந்த முறை அவளுக்கு கேட்டது. ஏனெனில் அங்கிருந்த பெரிய ஒலிபெருக்கியின் மூலம் நான் போட்ட சத்தம் கட்டிடத்தையே குலுக்கியிருக்கும். அவள் உட்கார்ந்து கொண்டாள்.
363. நான் தொடர்ந்து, “நான் கூறின் வண்ணமாக, எத்தனை பேர் பீடத் தண்டையில் வந்து உங்கள் இருதயங்களை தேவனுக்கு அளிக்க விரும்பிகிறீர்கள்?' என்றேன். நான் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினேன். பாருங்கள்.
364. அன்றிரவு நான் வண்டியில் புறப்பட ஆயத்தமான போது, ஒரு கூட்டம் ஸ்திரீகள் என்னைச் சூழ்ந்து கொண்டு, கோழிக்குஞ்சுகளின் கூட்டம் சத்தமிடுவதைப் போல், “நீங்கள் பரிசுத்த ஆவியை நிந்தித்து விட்டீர்கள்” என்றனர்.
365. நான், “நானா? வேதம் கூறியுள்ள ஒழுங்கை நான் பின்பற்றும் போது, நான் எப்படி பரிசுத்த ஆவியை நிந்திக்க முடியும்?” என்று கேட்டேன். பாருங்கள்?
366. இந்த ஸ்திரீ, “நான் தேவனிடமிருந்து நேரடியாக ஒரு செய்தியைப் பெற்றிருந்தேன்” என்றாள்.
367. நான், “ஆனால், அதை தவறான நேரத்தில் கொடுத்தீர்கள், சகோதரியே” என்றேன்.
“அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல என்றா கூறுகிறீர்கள்?” என்றாள்.
368. நான், “என்னால் சொல்ல முடியாது. அது அவரிடமிருந்து வந்தது என்று நினைக்கிறேன். உன் நன்மைக்காக இதை சொல்லுகிறேன். அது அவரிடமிருந்து வந்தது என்று நினைக்கிறேன். நீ ஒரு நல்ல பெண்மணி என்று நம்புகிறேன், ஆனால் நீ ஒழுங்கைத் தவறி விட்டாய்” என்றேன்.
369. அவளுடைய மேய்ப்பர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் அவளுடைய மேய்ப்பர் தான் என்று எனக்குத் தெரியவந்தது. நான் சொன்னேன். நான், “ஒன்றுமட்டும் என்னால் கூற முடியும். நீ மாம்சத்தில் அதை செய்தாய், அல்லது வேதத்தைக் குறித்து ஒன்றுமே அறிந்திராத ஒரு மேய்ப்பர் உனக்கு பயிற்சி அளித்திருக்கிறார். அவர் எங்களிடம் வந்து, சிறிது நேரம் வேதத்தைக் குறித்து பேசினால் நலமாயிருக்கும். நீ செய்தது தவறு. நீ ஒழுங்கை மீறி விட்டாய். நேற்றுக்கு முந்தின இரவும், நேற்று இரவும் நீ அநேக ஆத்துமாக்களை இழந்து விட்டாய், இன்றிரவும் நீ அதையே செய்திருப்பாய்' என்றேன்.
370. அவளுடைய மேய்ப்பர் என்னிடம், “நீங்கள் கூறுவதை என்னால் ஆமோதிக்க முடியவில்லை, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றார்.
“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டேன்.
371. அவர், “நீங்கள் முடித்து விட்டீர்கள். எனவே அவளுக்கு செய்தி அளிக்க உரிமையுண்டு' என்றார்.
372. நான், “நான் மேடையின் மேல் இருந்தேன். தீர்க்கதரிசிகளின் ஆவி தீர்க்கதரிசிக்கு அடங்கியிருக்க வேண்டும். நான் மேடையின் மேல் அப்பொழுது இருந்தேனே” என்றேன். “ அவர், “நல்லது...” என்றார்.
373. நான், “எனக்கு இன்னும் செய்தி இருந்தது. நான் பீட அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தேன், அவர்களை மண்ணைக் கூட்டுவது போல் கூட்ட. நான் வலையை வீசி, அதை இழுத்துக் கொண்டிருந்தேன். அதை தடுக்க நீங்கள் எந்த தடுக்கலையும் போடக் கூடாது. நான் வலையை இழுத்துக் கொண்டிருந்தேன். அவளோ ஆத்துமாக்களை உள்ளே கொண்டு வருவதில் தலையிட்டுக் கெடுத்து விட்டாள். பாவிகள் வருவதற்கு அழைப்பு விடுக்காமல் போனால், பிரசங்கிப்பதனால் என்ன பயன்?” என்றேன்.
374. அவர், “நல்லது. அவள் செய்தி உங்கள் செய்திக்குப் பிறகு அளிக்கப்பட்டது. அது மேடைக்குப் புறம்பே அளிக்கப்பட்ட செய்தி... அது நேரடியாக தேவனிடமிருந்து வந்த செய்தி” என்றார்.
375. நான் பவுல் உரைத்ததை மேற்கோள் காட்டி, “ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது. ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் கூறுவது கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக் கொள்ளக்கடவன். ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். எங்களுக்கும் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லை'. இல்லை, ஐயா. எதையும் புதிதாக நுழைக்கக் கூடாது! அவர்... இயேசு, 'நானே சத்தியபரர், எந்த மனுஷனும் பொய்யன்' என்று சொல்லியிருக்கிறார். பவுல், 'இங்கு கூறப்பட்டுள்ளதைத் தவிர, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் வேறெதாவது கூறினால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' என்று சொல்லியிருக்கிறான். மிஸ்டர், நீங்கள் வரிசையிலிருந்து நிச்சயமாக விலகியிருக்கிறீர்கள். உங்களுக்கு எப்படிப்பட்ட சபை உள்ளது? அது குழப்பமாகத் தான் இருக்கும் என்று எனக்கு நிச்சயம் தெரியும். ஜனங்கள் இதைச் செய்ய நீங்கள் அனுமதித்தால், உங்கள் பீட அழைப்பை நீங்கள் எவ்விதம் கொடுப்பீர்கள்? அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் ஒரு ஊழியம் உண்டு, ஆனால் உங்களுடைய ஊழியத்துக்கு ஒரு நேரம் உண்டு” என்றேன்.
376. எனவே அது உண்மை. அந்நிய பாஷையில் பேசும் நமது சகோதரர்களாலோ அல்லது சகோதரிகளாலோ இப்படிப்பட்ட ஒன்று நமது சபையில் நேர்ந்தால், ஆராதனை முடிந்த பின்பு டீக்கன்மார்கள் அல்லது நிர்வாகக் குழு அவர்களைச் சந்தித்து, “ஒரு சில நிமிடங்களுக்கு, ஒலிநாடாவைப் போட்டுக் காண்பிக்க விரும்புகிறேன்” என்று கூறவேண்டும். பாருங்கள்? நீங்கள் அதை அல்லது போதகர்... “போதகர் உங்களிடம் பேச விரும்புகிறார். எனவே படிக்கும் அறையில் எங்களைச் சில நிமிடங்கள் சந்திப்பீர்களா, சகோதரனே?” என்று கூறுங்கள். அங்கு சென்று அவரிடம் நல்ல விதமாகப் பேசுங்கள். பாருங்கள்? அவரிடம் எடுத்துக் கூறுங்கள்...
377. ஆனால் எல்லோருமே ஒழுங்கை மீறி உங்கள் போதகரை தொந்தரவு செய்வார்களானால், அப்பொழுது மூப்பர்களாகிய நீங்கள் அவர்களிடம் நடந்து சென்று, “ஒரு நிமிடம்” என்று சொல்ல வேண்டும். அவர்களை நிறுத்தக் கூறும்படி போதகர் உங்களுக்கு சைகை காட்டினால், அது என்ன ஆவியென்பதை அவர் கிரகித்துக் கொண்டார். அதாவது அவர்கள் கூட்டத்தின் ஆவியை முறிக்கிறார்கள் என்று, பாருங்கள்.
378. போதகர் பிரசங்கத்தை நிறுத்தி விட்டு, பயபக்தியுடன் தலைகுனிவாரானால், அப்பொழுது ஒன்றும் சொல்லாதீர்கள். பாருங்கள்? ஒன்றும் சொல்லாதீர்கள். உங்கள் போதகர் அவ்விதம் செய்ய விட்டு விடுங்கள். உங்கள் போதகரை கவனித்துக் கொண்டேயிருங்கள். அவர் உங்களுக்கு இப்படி சைகை காட்டி அதை நிறுத்தச் சொன்னால், அப்பொழுது கிறிஸ்தவ அன்புடன் நடந்து சென்று, “என் சகோதரனே, என் சகோதரியே, அது யாராயிருந்தாலும், “நீங்கள் ஒழுங்கை மீறி விட்டீர்கள் என்று நினைக்கிறேன், ஏனெனில் நீங்கள் தீர்க்கதரிசிக்கு தொந்தரவு விளைவிக்கிறீர்கள். அவர் தேவனிடமிருந்து செய்தியைப் பெற்றிருக்கிறார். அவர் செய்தியை பிரசங்கித்து முடித்த பின்பு, சிறிது நேரம் கழித்து அதைக்குறித்து நாம் பார்ப்போம்” என்று கூறுங்கள். பாருங்கள், அது அவருக்கு தொந்தரவு விளைவிக்குமானால்,
379. ஆனால் யாராகிலும் பேசும் போது, போதகர் மரியாதையுடன் பிரசங்கத்தை நிறுத்தி ஒரு நிமிடம் காத்திருந்தால், அப்பொழுது அவர்... ஒருவேளை அவர் உடனடியாக தொடங்கிவிடலாம். எனவே நீங்கள் கவனிப்பீர்களானால், இந்த சம்பவங்களில் தொண்ணூறு சதவிகிதம், அர்த்தம் உரைத்தல் போன்றவை, வேத வசனங்களையே எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கும். அது இரு சாராரிடையேயும் ஒருக்கால் மாம்சமாக இருக்கக்கூடும். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள்? சரி.