380. கிடையாது. அவை ஒன்றன் பின் ஒன்றாக வர வேண்டும். பாருங்கள்? ஒருவர் அந்நிய பாஷையில் பேசி அதன் பிறகு அதற்கு அர்த்தம் உரைக்கப்பட வேண்டும். பாருங்கள்? அதன் பிறகு வேறொருவர் அந்நிய பாஷையில் பேசினால், அதற்கு அர்த்தம் உரைத்தாக வேண்டும். நீங்கள் அவ்விதம் செய்யாமல் போனால், அர்த்தம் உரைப்பவருக்கு என்ன செய்வதென்று தெரியாது, ஏனெனில் இரண்டு அல்லது மூன்று செய்திகள் ஒரேயடியாக அவர் மேல் மோதும் போது, அவருக்கு அது குழப்பமாக இருக்கும். தேவன் குழப்பத்துக்கு காரணம் அல்ல, பாருங்கள். எனவே ஒருவர் அந்நிய பாஷையில் பேசட்டும், அதற்கு வேறொருவர் அர்த்தம் உரைக்கட்டும். பாருங்கள்? அதன் பிறகு... மூன்று செய்திகளை அளியுங்கள். ஆனால் அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உரைக்கப்படட்டும்.
381. அப்பொழுது நமக்கு... உதாரணமாக சகோ. ரட்டல் அந்நிய பாஷையில் பேசி அதற்கு சகோ. நெவில் அர்த்தம் உரைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சகோ. ஃபிரட் அப்பொழுது அமைதியாக இருப்பார். அர்த்தத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். முதலாவதாக, இது தேவனால் உண்டானதா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பாருங்கள்? சரி. இப்பொழுது, சகோ. ரட்டல், சகோ. பீலர், சகோ. நெவில் ஒருவர் பின் ஒருவராக அந்நிய பாஷையில் பேசிக் கொண்டே போனால், அர்த்தம் உரைப்பவருக்கு வரிசையாக மூன்று செய்திகள் இருக்கும். அவருக்கு என்ன செய்வதென்று எப்படி தெரியும்? பாருங்கள்? அவரைத் தனியே விடுங்கள். செய்தியை அளித்த பிறகு அமைதியாயிருங்கள். சற்று காத்திருங்கள். அவருக்கு பக்கத்தில் உள்ளவருக்கு ஏதாவதொன்று வெளிப்பட்டால், அவர் அமைதியாயிருக்கட்டும். பாருங்கள்? முதலாவதாக பேசின அந்நிய பாஷைக்கு அர்த்தம் உரைக்கப்படட்டும்.
382. அவ்விதம் அர்த்தம் உரைக்கப்படும் போது, அதை எழுதிக் கொண்டு, பகுத்தறிபவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள், “நல்லது. அது தேவனால் உண்டானது என்பார்களானால், ஒரு செய்தி அளிக்கப்பட்டு விட்டது. அதை கீழே வைத்து விடுங்கள். ஒரு நிமிடம் காத்திருங்கள். முதலாவதாக என்ன தெரியுமா, ஆவியானவர் அடுத்ததாக யார் மேல் அசைவாடுகிறாரோ, அவர் அந்நிய பாஷையில் பேசுவார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்ன கூறப் போகிறார் என்று அறிய அர்த்தம் உரைப்பவர் ஒரு நிமிடம் காத்திருப்பார். அதன் பிறகு அவர் அந்த செய்தியை உரைப்பார், பாருங்கள். அதை எழுதி வைக்க வேண்டும், பாருங்கள்? அது மூன்று பேர் மட்டில் அடங்கியிருக்கட்டும்.