383. நல்லது, சகோதரரே, அது உண்மையென்று எனக்குத் தெரியும். பாருங்கள், ஆனால் சற்று பொறுங்கள். அதைக் குறித்து இங்கு ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன், ஒரு நிமிடம் பொறுங்கள். பாருங்கள், அநேக சமயங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. பாருங்கள்? ஆனால், இப்பொழுது. சில நேரம் அந்த நபரில்... உங்களில் சிலர் என்னுடன் லூக்கா 3ம் அதிகாரம் 15ம் வசனத்துக்கு வேதாகமத்தைத் திருப்ப விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் செய்து கொண்டிருக்கும்போது, இதை கூற விரும்புகிறேன். உங்களுக்கு அந்த வசனம் கிடைக்கும் போது, அது லூக்கா 3ல் உள்ளது, அது... ஒருவேளை... அது... இதை நான்... நான் கதவை அடைக்கப் போவதில்லை, ஏனெனில் அங்கு யாரும் இல்லை. சகோதரரே, இதை நான் உங்களுக்கு கூறட்டும். இதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது எல்லாவிடங்களிலும் கூறப்படுகிறது. ஆனால் உங்களிடம் இதைக் கூறுகிறேன், பாருங்கள், அது அவ்விதமாகத் தான் வர வேண்டும். அது அவ்விதமாக இல்லையென்றால், என் செய்திக்காக நான் மனஸ்தாபப்படுவேன்.
384. 'கவனியுங்கள், சகோதரரே, இந்த விஷயத்தில் நீங்கள் அமைதியைக் கடைபிடிக்கும்படி, இயேசுவின் முன்னிலையில்உங்களுக்கு கட்டளையிடுகிறேன். ஆனால் நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை புரிந்து கொள்வீர்கள். பாருங்கள்? அவர் அந்த நதியில் முதலாவதாக என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? உங்களுக்கு அது ஞாபகமுள்ளதல்லவா? கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தி... கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாயிருப்பது இந்த செய்தியே. அப்படித்தான் கர்த்தருடைய தூதன் உரைத்தார்.
385. இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, “யோவான்ஸ்நானன்... நீங்கள் எல்லோரும் அதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை புத்தகங்களில் வாசித்திருக்கிறீர்கள், அது நடந்த போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதை கேட்டதையும் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அந்த தூதனே, “கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான்ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, நீ இந்த செய்தியுடன் அனுப்பப்பட்டிருக்கிறாய், இது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாக இருக்கும்” என்னும் செய்தியை அறிவித்தார். இப்பொழுது, “செய்தி”.
386. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால்... வில்லி அங்கு அந்த நட்சத்திரத்தின் கீழ் என் பெயரை எழுதி வைத்திருக்கிறார், ஆகையால் தான் நான் அதை கடந்து வந்து விட்டேன், பாருங்கள், நான் நினைக்கவில்லை... உங்களிடம் நான் முடிந்த வரை உத்தமமாயிருக்கப் போகிறேன், எனக்கும் அந்த செய்தியாளனுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நான் எண்ணுகிறேன், பாருங்கள், அது சரி. நான் எண்ணுவது என்னவெனில், அவருடைய சபையில் ஒரு பாகத்தை வகித்து, அந்த முன்னோடி வரும் வரைக்கும் இந்த செய்தியை அளிக்க நான் அனுப்பப்பட்டிருக்கக் கூடும்.
387. நான் நம்புவது என்னவெனில், நான் என்னவாயிருக்கிறேனோ அவ்விதமாக இந்நாளுக்கான செய்தியை நான் கொண்டிருக்கிறேன் என்று நான் நம்புகிறேன், இதுவே இந்நாளுக்கான வெளிச்சம் என்று நான் நம்புகிறேன், இது வரப் போகிற அந்த நேரத்தைச் சுட்டிக் காட்டுகிறதென்று நான் நம்புகிறேன். கர்த்தருடைய தூதன் அங்கு “நீ கொண்டிருக்கும் அந்த செய்தி” என்று அறிவித்த செய்தி. இப்பொழுது, அங்கு எழுந்த அந்த நட்சத்திரத்தை நீங்கள் கவனிப்பீர்களானால், அது ஒரு...
388. இதை நான் தெளிவாக்க விரும்புகிறேன்... நான் நேரத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும், இங்கு மிகவும் அருமையான வேறு கேள்விகள் உள்ளன. இப்பொழுது பத்து மணிக்கு மேலாகி விட்டது. நீங்கள் வீட்டுக்குப் போக விரும்புகிறீர்கள் என்று அறிவேன். பாருங்கள். ஆனால் இதற்கு செவிகொடுங்கள். உங்களுக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். எனக்கு சில நிமிடங்கள் தருவீர்களா? சரி, சரி.
389. இப்பொழுது பாருங்கள், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். சகோதரரே, இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். பாருங்கள்? இதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் உங்களுக்கு நேராக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் என் மேய்ப்பர்... நீங்கள் என் மேய்ப்பர்களும் மற்றவர்களும், பாருங்கள். இதை நான் செய்தாக வேண்டும். நீங்கள் இந்த செய்தியில் என்னுடன் உழைக்கும் சகோதரர்கள். பாருங்கள்?
390. இப்பொழுது, என்னைப் பொறுத்த வரையில், மனிதன் என்னும் வகையில், நான் உங்களைப் போன்றவன், உங்களை விட மோசமானவன். நான் - நான் - நான்... நீங்கள் அநேகர் கிறிஸ்தவ குடும்பங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். 'பாவிகளில் பிரதான பாவி நான்' என்று ஒரு சமயம் கூறப்பட்டது போல், நான் அவிசுவாசியாகவும் சந்தேகக்காரனாகவும் மிகவும் தாழ்ந்த வாழ்க்கை எனக்கிருந்தது என்றும் நினைக்கிறேன்.
391. ஆனால் பிள்ளை பருவம் முதற்கொண்டு, தேவன் ஒருவர் உண்டு என்றும், என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்தது என்றும் அறிந்திருந்தேன். அதைக் குறித்து எந்த சந்தேகமும் இல்லை, சகோதரனே. பாருங்கள்? ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன். அதாவது செய்தி ஒன்று வரும், செய்தியாளன் ஒருவர் வருவார். அது ஒரு மனிதனாயிருக்குமானால், அது எனக்குப் பின் வருகிற ஒருவராக இருக்கும். பாருங்கள்? அது... ஆனால் நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் இந்த செய்தியானது இந்நாளுக்கான உண்மையான செய்தி, இதுவே கடைசி செய்தி. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று காண்கிறீர்களா, சகோதரர்களே? உங்கள் எல்லோரையும் என் நிலையிலேயே வைக்கிறேன். ஏனெனில் என்னைப் போலவே நீங்களும் இதில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நீங்கள் இதே செய்தியின் செய்தியாளர்கள்.
392. இங்கே பாருங்கள், ஒரு படத்தை வரையப் போகிறேன். படத்தின் மூலம் இதை நன்றாக விளக்கலாம் என்று நினைக்கிறேன். சற்று இந்த கதவை நான் பாதி மூடப் போகிறேன். இது இயேசு, அது இயேசு. இங்கு கெத்சமனேயை வரைகிறேன். இது இங்கே அது அங்கே. உங்களால்... இதை நான் முன்பு சபைக்குக் கூறினதில்லை. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், ஞானத்தை தேடிச் சென்ற மனிதரை எந்தவிதமான வெளிச்சம் (நட்சத்திரம்) நடத்திச் சென்றது? “உம்முடைய பரிபூரண ஒளியினிடத்தில் எங்களை வழி நடத்திச் செல்லும்”
393. இங்கு வரைவதை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு உங்களிடம் ஒன்றைக்கூறப் போகிறேன். அதை நாம் உதறித் தள்ளி விடுவோம். அங்கு வில்லி செய்து வைத்தது சரியென்று கூறுவதை. அது சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் சகோதரரே, அதை என்னால் கூற முடியாது. அப்படி கூறினால் நான் ஒரு பெருமைக்காரன். அப்படி செய்ய மாட்டேன். அதை நான் நம்பினாலும் அதைக் கூற மாட்டேன். பாருங்கள்? வேறு யாராகிலும் அவ்விதம் கூறினால், அது அவர்களைப் பொறுத்தது.
394. இங்கு, அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்ட வண்ணமாக, நடந்த சில காரியங்களை பையன்கள் சாட்சி கூறலாமா என்று. கூட்டங்களில் நடந்த சிலவற்றை நான் பிரசங்க பீடத்திலிருந்து சாட்சி கூறுவது எனக்குப் பிடிக்காது. அதை மேலாளரோ அல்லது யாரோ செய்யட்டும். எனக்கு அவ்விதம் செய்ய பிடிக்கவில்லை.
395. (ஒரு சகோதரன், “அவர்கள் யோவானிடம் வந்து, 'நீ கிறிஸ்துவா' என்று கேட்டனர்” என்கிறார் - ஆசி). ஆம், அது தான், நான் என்ன கூற முயல்கிறேன் என்றால் நீர் தான் அந்த தீர்க்கதரிசியா?” அவன் அதை மறுத்தான். அவன் இவ்விரண்டில் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் 'நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்' என்றான். “வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்”, அவன் தன்னுடைய ஸ்தானத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டான்.
396. [வேறொரு சகோதரன், “அவர்கள் அவனிடம் அவன் அந்த தீர்க்கதரிசியா என்று கேட்டபோது, அவன், 'இல்லை' என்றான் என்கிறார் - ஆசி]. ஆம், இப்பொழுது... அந்த தீர்க்கதரிசி மோசே முன்னுரைத்த அவரே. பாருங்கள், பாருங்கள்? ஆனால் அவன்யாரென்பதை அறிந்திருந்தான். அவன் அதைக் கூறினான். அவன் அவர்களிடம், “நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான். அது அவன். அவன் யார் என்பதைக் கூறினான். பாருங்கள்? ஆனால் அவன் ஒரு...
397. சொல்லுங்கள் (ஒரு சகோதரன், “யோவானைத் தொடர்ந்து கிறிஸ்து வந்தபோது, அவர்கள் அவரிடம் வந்து... மேசியாவுக்கு முன்பு எலியா வரவேண்டுமென்று அவர் போதித்தார். அவர், “நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால் என்றார்” என்கிறார் - ஆசி). அது அவன். அது உண்மை. அது உண்மை. யோவானும், “நான் ஒன்றுமற்றவன்! நான் ஒன்றுமற்றவன்! அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரன் அல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.
398. ஆனால் இயேசு அவனைக் குறித்து என்ன கூறினார்? அவர், “யாரைக் காண வனாந்திரத்துக்குப் போனீர்கள்?” என்று கேட்டார். ஆம், ஆம். “காற்றினால் அசையும் நாணலையோ? அல்லது மெல்லிய வஸ்திரம் தரித்து ஆடம்பரமாயுள்ள மனுஷனையோ? அவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள். யாரைக் காணப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். அவன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவன் உடன்படிக்கையின் தூதன். அப்படித் தான் அவன் இருந்தான். அவன் தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன். அவர், “ஸ்திரீகளில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் இதுவரையிலும் எவனும் இல்லை' என்றார். பாருங்கள்?
399. அவ்விதமாகத்தான் அவன் இருந்தான், பாருங்கள், அவன் உடன் படிக்கையின் தூதனாயிருந்தான். இவன் தான் இயேசுவை, “இதுதான் அவர் என்று அறிமுகப்படுத்தினான். மற்றெல்லா தீர்க்கதரிசிகளும் அவரைக் குறித்து முன்னுரைத்தனர், ஆனால் யோவானோ, “இதுதான் அவர் “ என்றான். பாருங்கள்?
400. இப்பொழுது கவனியுங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். இதை ஒரு சிறிய விதத்தில் எடுத்துக் கொள்ளப்போகிறேன், பாருங்கள். சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்று கேட்டார்கள். அந்த பாடலை, நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவருடைய நட்சத்திரத்தை நாங்கள் கண்டு அவரைப் பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். அதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், வேதத்தில் படித்திருக்கிறீர்கள்.
மேற்கு திசையில் நடத்தி, இன்னும் போய்க் கொண்டிருக்கிறது அந்த பரிபூரண ஒளிக்கு எங்களை வழிநடத்தும்
401. பாருங்கள், அந்த நட்சத்திரம் அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்திச் சென்றது, ஏனெனில் நட்சத்திரம் ஒளியைப் பிரதிபலிப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. அன்றொரு நாள் அதைக் குறித்த நாடகத்தை நாம் பார்த்தோம். அதைகாண அந்த ஞாயிற்றுக்கிழமை எத்தனை பேர் வந்திருந்தீர்கள்? பாருங்கள், அதைக் குறித்து இப்பொழுது தான் நாம் பிரசங்கித்து முடித்தோம். ஷெகினா மகிமை அந்த நட்சத்திரத்தில் பிரதிபலித்தது, நட்சத்திரம் அதைப் பிரதிபலிக்கிறது. அந்த நாடகத்தில் கர்த்தருடைய தூதன் இந்த மேடையின் மேல் நின்று கொண்டு ஷெகினா மகிமையிலிருந்து. பிரதிபலித்துக் கொண்டிருந்தார். அதே காரியம் தான். அது முற்றிலும் உண்மை. அந்த உண்மையானதை இங்கு பார்த்து, அதை அங்கு பார்க்கும்போது, அது பக்கத்தில் இப்படி பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பாருங்கள்?
402. இப்பொழுது இதைக் கவனியுங்கள். அந்த நட்சத்திரம் கிழக்கில் எழும்பினது. அது சரியா? அது ஒரு பெரிய நட்சத்திரம். சரி. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்த நேரத்தில் பூமியில் நட்சத்திரமாக விளங்கினது யார்? யோவான். அவன் தான் அவர்களை அந்த பரிபூரண ஒளிக்கு வழிநடத்தினான். அது சரியா? இயேசு கிறிஸ்துவின் முதலாம் தோற்றத்தின் போது அந்த நட்சத்திரம் கிழக்கில் தோன்றினது. இப்பொழுது அநேக சிறு நட்சத்திரங்கள் வான மண்டலத்தில் ஓடிச் சென்று, இறுதியாக சாயங்கால நட்சத்திரத்தில் முடிவடைகிறது.
403. சாயங்கால நட்சத்திரம் சாயங்காலத்தில் பிரகாசிக்கிறது. காலை நட்சத்திரம் காலையில் பிரகாசிக்கிறது. இவ்விரண்டும் ஒரே அளவுள்ளதாகவும், ஒரே விதமான நட்சத்திரங்களாகவும் இருக்கின்றன. இரண்டையும் இரண்டையும் ஒன்று சேருங்கள், அப்பொழுது அது என்னவென்று அறிந்து கொள்வீர்கள், பாருங்கள். எனவே நட்சத்திரம் மேசியா அல்ல, அவர் மேசியாவைப் பிரதிபலிக்கிறார்.
404. இப்பொழுது நட்சத்திரம் தன் சொந்த ஒளியைக் கொடுப்பதில்லை. அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. அதுசரியா? (ஒரு சகோதரன், “இல்லை” என்கிறார் – ஆசி) ஹ? (ஒரு விதத்தில் சந்திரன் அவ்விதம் செய்கிறது. நட்சத்திரங்கள் தங்கள் சொந்த ஒளியைக் கொடுக்கின்றனர்.) ஆம், சந்திரன்... ஆம், உண்மையில் சந்திரன் ஒளியைப் பிரதிபலிக்கிறது. ஆம், ஒரு நட்சத்திரம் தன் ஒளியைப் பிரதிபலிக்குமானால், அதன் ஒளி... தேவனிடத்திலிருந்து வர வேண்டும். ஏனெனில் - அது ஒருவிதமான பனிக்கட்டி. இல்லையா? (அந்த சகோதரன் “சூரியன்” என்கிறார் - ஆசி). ஹ? அந்த சூரியனிலிருந்து தோன்றின ஒரு சூரியன். (“அந்த சூரியன்கள் நமது சூரியனைவிட தூரத்தில் இருக்கின்றன”). ஆம். அவைகள்... அந்த சூரியன்கள் பெரிய சூரியனிலிருந்து தோன்றினதாக நமக்கு கூறப்பட்டுள்ளது. சூரியன் இந்த கணைகளை அதனிடத்திலிருந்து வெளியே எறிந்தது. அவைகள் சூரியனைப் போல் எரிந்து கொண்டிருக்கும் சிறு கணைகள். எனவே அவைகள் நமக்கு சிறு சூரியன்கள். அது சரியா? சிறு ஒளிகள். (சில... அவைகள் பெரும்பாலும் நமது சூரியனைக் காட்டிலும் பெரியவை) நமக்கு, நமக்கு, பாருங்கள். நாம் நம்மைக் குறித்து இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம். சரி.
405. இப்பொழுது, அவைகள் நமக்கு சூரியன்களாக, அல்லது ஒளியைக் கொடுப்பவைகளாக இருந்தால், அவை முக்கியமான ஒளியைக் கொடுக்கும் சூரியனின் பாகங்கள். பாருங்கள்? பெரிய சூரியன் நமக்கு பெரிய ஒளியை கொடுக்கிறது - பரி பூரண ஒளியை. சிறிய சூரியன்கள், அல்லது சிறிய நட்சத்திரங்கள் - நாம் கும்பலாகக் காண்பவை - பிரகாசிக்கும் சூரியனை விட அதிக தூரத்தில் இருக்கலாம். அவை நமக்கு கொடுப்பவை சூரியனை விட குறைந்த ஒளியையே. ஆனால் அவை ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. அது சரியா? பெரிய சூரியன் உதயமாகும் போது, சிறிய சூரியன்கள் மறைந்து விடுகின்றன. அது சரியா? அவை நமக்கு சூரியன் அல்ல, அவை சூரியனைப் போல் ஒளி தருபவை. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா?
406. இப்பொழுது அவைகளில் மிகப் பெரியது (காலையில்) சூரியன் வருகையை அறிவிப்பது, சூரியன் அஸ்தமிப்பதை அறிவிப்பது விடி வெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமுமே. அது சரியா? இரண்டு மிகப் பெரிய நட்சத்திரங்கள் - கிழக்கு நட்சத்திரமும் மேற்கு நட்சத்திரமும்.
407. இப்பொழுது அது எங்குள்ளதென்று பார்த்தீர்களா? எலியா கிழக்கு நட்சத்திரம் வரப்போவதை அறிவிக்கும் செய்தியாளனாக இருந்தான். அவன் மேற்கு நட்சத்திரத்தை அறிவிப்பவனாக இருப்பான் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது - அதாவது இந்த நாள் கடந்து சென்ற பிறகு, வரப்போகும் புதிய நாளை. அது என்னவென்று இப்பொழுது கண்டு கொண்டீர்களா?'
408. கிழக்கு, “வெளிச்சம் உண்டாகும். பாருங்கள், சூரியன் இப்பூமிக்கு வருவதற்கு சற்று முன்பு, “சூரியன் வரப்போகிறது” என்பதை விடிவெள்ளி நட்சத்திரம் சாட்சி கூறினது. அது சரியா? பாருங்கள், அது விடிவெள்ளி நட்சத்திரத்தைத் தோன்றச் செய்தது. நல்லது. அப்படியானால் விடிவெள்ளி நட்சத்திரமும் சாயங்கால நட்சத்திரமும் ஒரேவிதமான நட்சத்திரங்களே. இதைத் தவிர சிறு நட்சத்திரங்கள் எங்கும் பரவியுள்ளன. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களால் காண முடிகிறதா? செய்தியாளர்கள்.
409. நல்லது. அப்படியானால், அவர் அல்பாவும் ஒமெகாவுமாக, ஆதியும் அந்தமுமாக, வச்சிரக்கல்லும் பதுமராகமுமாக காணப்பட வேண்டியவராயிருக்கிறார். நான் கூறுவது உங்களுக்கு விளங்குகிறதா? இப்பொழுது கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருப்பதால், சரித்திரம் மறுபடியும் நிகழ வேண்டுமானால், இந்தக் கடைசி நாளில் எலியா பிரசங்கிக்க வேண்டிய செய்தியானது. விடிவெள்ளி நட்சத்திரம் அவருடைய வருகையை அங்கு அறிவித்தது போல, சாயங்கால நட்சத்திரம் வரப்போகும் ஒரு புதிய நாளை, வேறொரு நாளை அறிவிப்பதாய் உள்ளது. இது வரப் போகும் சூரியனை - நாம் பெற்றிருந்த சூரியன் போய் விட்டு, ஒரு புது சூரியன், ஒரு புது காலம், ஒரு புது நேரம் வரப்போகிறது என்பதை அறிவிக்கிறது.
410. இப்பொழுது கவனியுங்கள். யோவான் தன் செய்தியை அளித்து கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவித்தான் என்றால், கடைசி நாட்களில் எலியா வருவான். தீர்க்கதரிசி உரைத்தது போல், “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்.”
411. சாயங்கால வெளிச்சம், நாம் பெற்றுள்ள மிகப் பெரிய சாயங்கால வெளிச்சம் சாயங்கால நட்சத்திரமே. அப்படியானால் இந்த மற்ற நட்சத்திரத்தைப் போலவே இதுவும் அதேவிதமான செய்தியைக் கொடுக்க வேண்டியதாயுள்ளது. அதாவது, அது சூரியனைக் குறித்துப் பேசி, சூரியனை அறிவிக்கிறது.
412. நல்லது, இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். சாயங்கால வெளிச்சம் இங்குள்ளது. இந்தக் காலம்மறைந்து போகிறது. நான் கூறுவது விளங்குகிறதா? இந்தக் காலம் கடந்து போய், வேறொரு நாள் வருவதை அது அறிவிக்கிறது.
413. ஏனெனில், பாருங்கள் அது உண்மையில் மேற்கிலுள்ள யாராகிலும் அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால், அது கிழக்கில் இருக்கும். அப்படியானால் பாருங்கள், கிழக்கில் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். ஆனால் அவர்கள் உண்மையில்... அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டு அந்த நட்சத்திரத்தை மேற்கில் நோக்கிப் பார்த்தனர். அது சரியா? அந்த சாஸ்திரிகள் மேற்கில்... கிழக்கில் இருந்து கொண்டு அந்த மேற்கு நட்சத்திரத்தைக் கண்டனர். நான் கூறுவது விளங்குகிறதா? ஆனால் அது மேற்கே இருப்பவர்களுக்கு கிழக்கு நட்சத்திரமாக இருந்தது.
414. பாருங்கள், நாம் கூறுவது போல... நான் அடிக்கடி “கீழ் பாகம் மேலே உள்ளது' என்று கூறுவதுண்டு. எது சரியென்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நாம் நித்தியத்தில் நின்று கொண்டிருக்கிறோம். எனவே தென் துருவம் மேலேயும் வட துருவம் கீழேயும் இருக்கக் கூடும். நமக்குத் தெரியாது. பாருங்கள். மேலே போகும் வழி கீழேயுள்ளது. பாருங்கள்? நாம். நாம் இதை விட்டுச் செல்கிறோம். அதன் பிறகு நாம் நித்தியத்திற்குள் பிர வேசிக்கிறோம். அது வரப்போகும் நித்தியத்தை, வேறொரு நாளை, வேறொரு காலத்தை அறிவிக்கிறதாயிருக்கிறது.
415. இப்பொழுது நாம் சாயங்கால நேரத்திலே இருக்கிறோம். அப்படி இருப்பதாக நாம் நம்புகிறோம், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம். சரி, அப்படியானால், சாயங்கால வெளிச்சம் ஒன்று இருக்க வேண்டும். அந்த சாயங்கால வெளிச்சம், மல்கியா 4ன்படி, “பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்தில் திருப்ப வேண்டும்” - தொடக்கத்தில் இருந்த நிலைக்கு.
416. அவன் முதன் முறையாக வந்த போது, பிதாக்களின் இருதயங்களை பிள்ளைகளிடத்தில் திருப்பினான். அவனைச் சுற்றியிருந்தவர்கள் பிள்ளைகளே. அவன் பிள்ளைகளின்... பிதாக்களின் இருதயங்களை (அந்த பழைமையான, வைதீக, பிதாக்களின் இருதயங்களை) அவன் அங்கு அறிவித்துக் கொண்டிருந்த அந்த வெளிச்சத்துக்குத் திருப்பினான்.
417. அவன் மறுபடியும் வரும்போது, அவன் திசை திரும்பி, (நீங்கள் கவனித்தீர்களா, உலகம் அழிவதற்கு முன்பு, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன்பு). “பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்” - சாயங்கால நட்சத்திரம், அக்காலத்தில் அது விடிவெள்ளி நட்சத்திரமாய் இருந்தது. ஆமென்.
418. அதை நான் சரியாக கூறினேன் என்று நம்புகிறேன், பாருங்கள். விடிவெள்ளி நட்சத்திரம் இப்பொழுது சாயங்கால நட்சத்திரமாயுள்ளது. ஏனெனில் அது அதே நட்சத்திரம். நாம் மேற்கு திசையிலிருந்து கொண்டு கிழக்கே நோக்கிப் பார்க்கிறோம். அவர்கள் கிழக்கில் இருந்து கொண்டு மேற்கே நோக்கிப் பார்த்தார்கள். அது அதே நட்சத்திரம் தான். நான் கூறுவது விளங்குகிறதா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது கிழக்கு நட்சத்திரம் அல்லது மேற்கு நட்சத்திரமாக உள்ளது. நான் கூறுவது விளங்குகிறதா? சரி.
419. இப்பொழுது அது கொண்டு வருகிறது. ஒருவன் பிதாக்களின் விசுவாசத்தை பிள்ளைகளிடத்தில் கொண்டு வருகிறான்; இந்த காலத்தில் “பிள்ளைகளின் விசுவாசம் பிதாக்களினிடத்தில் கொண்டு செல்லப்படுகிறது. நீங்கள் சுற்றி வந்து மறுபடியும் அங்கு அடைகிறீர்கள். நான் கூறுவது உங்களுக்கு விளங்கவில்லையா? அது எக்காலத்தும் ஒரே நட்சத்திரம்தான். ஒரே காரியம், ஒரே செய்தி, ஒரே காரியம் மறுபடியும் வந்தடைகிறது. அது கடந்து சென்று விட்டது.
420. நீங்கள் எந்தப் பக்கம் செல்லுகிறீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? உலகம் சுற்றிக் கொண்டிருக்கவில்லை என்று அவர்கள் கண்டு பிடிக்கும் நேரம் ஒன்று வரும் என்று நான் நம்புகிறேன். அதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நான் நம்பவில்லை. அவர்கள் எவ்வளவுதான் விஞ்ஞான ரீதியாக நிரூபித்தாலும். அவர்கள் எத்தனையோ காரியங்களை விஞ்ஞான ரீதியில் நிரூபித்து பிறகு அதை வாபஸ் வாங்க வேண்டியதாக இருந்தது. தேவன் உலகம் நின்றது என்றும்... சூரியன் என்பதற்கு பதிலாக உலகம் என்று சொல்லிவிட்டேன். பாருங்கள், சூரியன். சூரியன் என்ன செய்வதாக அவர்கள் கூறுகிறார்களோ அது அதைச் செய்வதாக நான் உண்மையில் நம்புவதில்லை. சந்திரன் சுற்றுகிறது என்று எனக்குத் தெரியும். அவ்வாறே சூரியனும் சுற்றியோடுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்?
421. ஆனால் அவர்களில் சிலர், “அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டு அவனிடம் 'சூரியனே நில்' என்று கூறும் படி செய்தார். ஆனால் உண்மையில் அவர் பூமியைத்தான் நிறுத்தினார்” என்கின்றனர்.
422. நான், “பூமி சுற்றாமல் நிற்குமானால் அது ஒரு வால் நட்சத்திரம் போல் விண்வெளியில் ஓடிச் சென்று விடும் என்று நீங்கள் என்னிடம் கூறியிருக்கிறீர்களே, அப்படியானால் என்ன நடந்தது?” என்று கேட்டேன்.
423. நான் திரு.தியீஸ் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உயர்நிலைப்பள்ளியில் வேதாகமம் கற்றுக் கொடுப்பவர். அவரை உங்களுக்குத் தெரியும். நான் அவரிடம், “வேதம் அப்படித்தான் கூறுகிறது. அதாவது பூமி... இல்லை, சூரியன் நின்றது என்று என்றேன்.
424. அவர், “அவர் பூமியை நிறுத்தினார். அவர் யோசுவாவின் அறியாமையைக் கண்டார்” என்றார்.
நான், “அப்படியானால் உங்கள் அறிவினால் அதை செய்யுங்களேன்” என்றேன்.
425 (ஒரு சகோதரன், “சூரியன் எவ்வளவு நேரம் நின்றது என்று அவர்களால் இப்பொழுது விஞ்ஞானப் பிரகாரமாக நிரூபிக்க முடிகிறதென்று நினைக்கிறேன்” என்கிறார் - ஆசி). ஆம், அங்கே அவர்கள்... நானும் கூட அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆம், அவர்கள் உரிமை கோருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு வானசாஸ்திர நிபுணர் ஒருவர் அதைக் குறித்து பேசும்போது, அவர்களால் இதை இப்பொழுது நிரூபிக்க முடியும் என்று கூறினதை நான் கேட்டிருக்கிறேன். அதே நேரத்தில் அவர்கள் வான மண்டலத்தில் ஏதோ ஒன்று நடந்ததென்றும் அது சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தது என்றும் கூறுகின்றனர். அவர்கள் அதையெல்லாம் நிரூபித்து விட்டனர். நல்லது, என்னே, அந்த நேரத்தில் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் அப்படி ஏதோ ஒன்றைச் செய்துள்ளன. எப்படியாயினும், அது நமக்கு மிகவும் ஆழமானவை.
426. எனவே, இப்பொழுது. இந்த செய்தியின் காரணம்... அது அப்படித்தான் என்பதை நிரூபிக்க, இந்த செய்தியை இந்த விதமாக காண வேண்டும். இப்பொழுது, சகோதரரே, நாம் அறிந்திருப்பது என்னவெனில், மனிதன் தேவனாக இருக்க முடியாது. இருப்பினும், மனிதன் ஒருவகையில் தேவனே. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு தேவனே. நீங்கள் தேவனாக இருப்பதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்டீர்கள். ஆனால் நீங்கள் இந்த வாழ்க்கையில் இருக்கும் போது அல்ல. பாருங்கள்? இயேசு நம்மைப் போல் ஒரு மனிதனாயிருந்தார். ஆனால் தேவன் அவருக்குள் இருந்தார். தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது. நாமோ ஆவியை அளவாகப் பெற்றிருக்கிறோம்.
427. ஆனால் இப்பொழுது இந்த வெளிச்சம் வந்து விட்டபடியினால், அது யோவான்ஸ்நானன் செய்தியை அறிவித்த அந்த விதமான செய்தியை அறிவிக்குமானால், அவர் அந்த நதியில் கூறினபடி... பாருங்கள். அது வேறெதாக எப்படி இருக்க முடியும்? என்னைப் பாருங்கள், ஆரம்பப் பள்ளி கல்வியும் கூட இல்லாதவன். அவர் நடக்கப் போகும் சம்பவங்களை என்னிடம் கூறினபோது, அவைகளில் ஒன்றுமே தவறிப் போகவில்லை. அவைகளில் ஒன்றுமே ஒருக்காலும் தவறிப் போகவில்லை. அவர் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள்.
428. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் சகோதரரிடம் கூறினேன். நம்மில் வயதில் மிகவும் மூத்தவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களிடம் நான் இந்தக் காரியங்களைக் கூறியிருக்கிறேன். இந்த ஒளியைக் கண்டதைக் குறித்தும், அது என்ன நிறமாயிருந்தது என்றும் மற்றெல்லாமே. இப்பொழுது அந்த புகைப்படம் அது உண்மையென்பதைக் காண்பிக்கிறது. இந்த வெவ்வேறு காரியங்கள் அனைத்தும் அது உண்மையென்பதை நிரூபிக்கிறது. அது சரியா? நல்லது. அப்படியானால், அது உண்மையாயிருக்குமானால்... அது அந்த ஒளிதான்.
429. இப்பொழுது நான்காம்... (ஒலி நாடாவில் காலியிடம் ஆசி)... அது 3ம் வசனம் தொடங்கி 5ம் வசனம் முடிய, இல்லை. அதுவல்ல... நாம் 14ம் வசனத்தில் தொடங்குவோம். சகோதரனே யார் வேதத்தில் அந்த பாகத்தை திறந்திருப்பது? சரி. பரி. லூக்கா 3ம் அதிகாரத்தில் 14ம் வசனம் தொடங்கி வாசியுங்கள் (ஒரு சகோதரன் லூக்கா 3:14-16 வசனங்களை வாசிக்கிறார் - ஆசி).
போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்
யோவானைக் குறித்து: இவன் தான் கிறிஸ்துவோம் என்று ஜனங்களெல்லாரும் எண்ணங் கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். லூக் 3:14 - 16
430. சரி. அது என்ன? ஜனங்கள் மேசியாவின் வருகையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடியால், இந்த மகத்தான அபிஷேகிக்கப்பட்ட ஊழியத்தை அவர்கள் கண்டபோது, ஒரு மனிதன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வந்து தன் கூட்டத்தை நடத்தி விட்டு, மீண்டும் வனாந்திரத்துக்குச் செல்வதை அவர்கள். கண்டபோது, அவனைப் பின்பற்றின அநேகர் “இவன் தான் மேசியா” என்றனர். அவர்கள் அதை எதிர்பார்த்திருந்தனர். பாருங்கள்.
431. யோவான்ஸ்நானனின் செய்தி இயேசுவின் வருகைக்கு முன்னோடியாக உண்மையான தேவனுடைய செய்தியாயிருக்குமானால், அதே விதமாக... எலியாவின் செய்தியும் அதே விதமாக கருதப்படவேண்டும்... பாருங்கள்? இது அந்த கேள்விக்கு பதில் அளிக்கிறது என்று நினைக்கிறேன், முற்றிலுமாக. பாருங்கள்? இதுவும் அதே விதமாக கருதப்பட வேண்டும். பாருங்கள்?
432. (ஒரு சகோதரன், “அந்தவிதமான முரணான அபிப்பிராயம் கொண்டுள்ளவர் எவருக்காகிலும் உதவி செய்ய ஏதாகிலும் ஒன்றைச் செய்வதற்கு நாங்கள் பொறுப்பாளிகளா? அல்லது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார் - ஆசி). ஒன்றுமில்லை, உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. கேடான சிந்தை. அது கேடான சிந்தையில் முடிவடைய வாய்ப்புண்டா? இவ்விதமாக அது இருக்குமானால் அது கேடான சிந்தையில் முடிவடையும். அதாவது முன்னுரைக்கப்பட்ட இந்த மனிதன் தன்னை மேசியாவென்று அறிவித்தால், அவன் கள்ளக்கிறிஸ்து வென்று நாம் அறிகிறோம். பாருங்கள்?
433. பாருங்கள், இந்த மனிதன் தன்னுடைய ஸ்தானத்தில் நிலைத்திருக்கும் வரைக்கும், பாருங்கள். அவர்கள் யோவானிடம் கூறினது போன்று. யோவான் ஒருபோதும்... யோவான் அவர்களைக் குறித்து எதுவும் கூறினதாக வேதத்தில் உரைக்கப்படவில்லை. அவர்கள் அருமையான கிறிஸ்தவர்கள்... இல்லை, யோவானை விசுவாசித்திருந்த விசுவாசிகள்.
434. அவர்கள் “உண்மையாகவே இந்த மனிதன் தேவனுடைய தீர்க்கதரிசி, அதில் சந்தேகம் எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு அவனிடம் சென்று, “ நீர் தான் அந்த தீர்க்கதரிசி அல்லவா?” என்றனர்.
அவன், “இல்லை” என்றான்.
435. அவர்கள், “நீர் மேசியா தானே” என்றனர். பாருங்கள், அவர்கள் உண்மையில் அவ்வாறு எண்ணியிருந்தனர்.
அவன், “இல்லை” என்றான். பாருங்கள்?
அவர்கள், “இல்லையா, அப்படியானால் நீர் யார்?” என்று கேட்டனர்.
அவன், “நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான்.
436. “ஜனங்கள் அவருடைய வருகையை ஆவலாய் எதிர் நோக்கியிருந்தனர்” என்று வேதம் உரைக்கிறது. அந்த ஜனங்கள் யார்? அவனுடைய செய்தியைக் கேட்டவர்கள், அதற்கு செவி கொடுத்தவர்கள், அவனைப் பின்பற்றினவர்கள், அவனுடைய சகோதரர்கள். பாருங்கள்? அவர்கள் அவனைப் புண்படுத்த விரும்பவில்லை, அவனைப் புண்படுத்த முயலவில்லை. ஆனால், பாருங்கள், அவன் மேசியாவென்று அவர்கள் உண்மையாகவே தங்கள் இருதயங்களில் எண்ணியிருந்தனர்.
437. நல்லது, ஒவ்வொரு தருணத்திலும் சரித்திரம் மீண்டும் நிகழ வேண்டும். அதை நாம் அறிந்திருக்கிறோம். அது மீண்டும் நிகழ வேண்டும்.
438 உதாரணமாக, நீங்கள் மத்தேயு 3-ம் அதிகாரத்தை எடுத்துக் கொள்வீர்களானால் அங்கு, “எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்' என்று உரைக்கப்பட்டது நிறைவேம்படி இப்படி நடந்தது”. (மத். 2:15) என்னும் வசனம் இயேசுவில் நிறைவேறினதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் ஒத்தவாக்கியங்களைப் பார்த்துக் கொண்டே வருவீர்களானால், அது குமாரனாகிய யாக்கோபைக் குறிப்பிடும் ஒன்று. பாருங்கள்? அவ்வசனத்திற்கு. இரட்டை அர்த்தம் உள்ளது.
439. எனவே இப்பொழுது அது. அந்தக் காரியம் எழும்பவில்லை என்றால், அது வருங்காலத்தில் எழும்பும் என்று நான் இப்பொழுதும் கூறுகிறேன். ஏனெனில் இந்த செய்தி தேவனிடத்திலிருந்து வந்ததென்றும், அது கிறிஸ்துவுக்கு முன்னோடியாக உள்ளதென்றும், அது எலியாவின் ஆவியும் வல்லமையும் என்று நான் அறிந்திருக்கிறேன். ஏனெனில் அது பிள்ளைகளின் இருதயங்களைத் திருப்பும் ஒன்றாய் அமைந்துள்ளது. எல்லாமே அதை உறுதிப்படுத்துவதாய் உள்ளது. எனவே உண்மையான ஜனங்கள் அந்த விதமான கருத்தைக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அது முடி வடையத்தான் செய்கிறது. அவர்கள் உண்மையில் அவ்வாறு விசுவாசிக்கின்றனர், 'அவர்கள் என் சகோதரரும் நண்பர்களுமாவர்.
440. இப்பொழுது, எனக்கு. இந்த பட்டினத்தில் எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அந்த மருத்துவரின் பெயரை நான் கூறப் போவதில்லை. அவர் என் நண்பர். அவர் என் தோளின் மேல் கையைப் போட்டு, “பில்லி, நீர் கடைசி காலத்தின் தேவனுடைய மேசியா என்று உம்மிடம் எனக்கு கூறுவது எளிதாயிருக்கும்” என்றார்.
நான் “டாக், அப்படி செய்யாதீர்கள்” என்றேன்.
441. அவர், “நல்லது, இவ்வுலகில் வேறு எவருமே நீர் பெற்றுள்ள காரியங்களையும் நீர் சொல்லும் காரியங்களையும், நீர் செய்யும் காரியங்களையும் பெற்றுள்ளதாக நான் கண்டதில்லை” என்றார். அது அவருக்கு அதிக உதவியாயிருந்தது, பாருங்கள். அங்குள்ள பிரசங்கிகளைக் காண்கிறேன். ஆனால் நீர் வித்தியாசமான ஒருவர், உமக்கு படிப்பு இல்லை என்று எனக்குத் தெரியும். ஏனெனில் மனோதத்துவம் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியாது என்றார்.
நான், “அது உண்மை, டாக்” என்றேன்.
442. அவரிடத்தில் பேசி பிரயோஜனமில்லை. ஏனெனில் அவருக்கு எதுவுமே தெரியாது, அவரிடம் அடிப்படையான விஷயத்தை எடுத்துக் கூறவும் உங்களால் முடியாது. பாருங்கள், அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால், அதுதான், பாருங்கள்.
443. எனக்கு ஒரு கறுப்பு நிற ஸ்திரீயைத் தெரியும். அவள் எனக்கு பக்கத்து தெருவில் வசிக்கிறாள். எனக்கு தெரிந்த மனிதனிடத்தில் அவள் வேலை செய்கிறாள். இந்த மனிதனின் மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து, “இந்த ஸ்திரீ உங்களைத் தெய்வம் போல் தொழுகிறாள். ஏனெனில் அவள் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்த போது நீங்கள் அவள் மேல் கையை வைத்து அவள் குணமாகி விட்டதாக கூறினீர்களாம்” என்றாள். அந்த கறுப்பு நிற ஸ்திரீ வேலை பார்க்கும் இந்த ஸ்தீரியும் அவளுடைய கணவனும் குறிப்பிட்ட ஒரு மருத்துவரும் நான் சற்று முன்பு கூறின மருத்துவர் அல்ல, இவர் வேறொரு மருத்துவர் ஒன்றாக 'கால்ப் (Golf) விளையாடுபவர்கள். அந்த மருத்துவர் அவள் பிழைக்க மாட்டாள் என்று கைவிட்டு விட்டார். அவள் அவருடைய நண்பரின் வீட்டில் வேலை பார்க்கிறவள். கைவிடப்பட்ட அவள் முழுவதுமாக குணமடைந்து விட்டாள். மருத்துவர் அவளில் ஒரு துளி புற்று நோயையும் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. பாருங்கள்; அவள் கூறுகிறாள்...
444. இப்பொழுது, நாம் நினைக்கின்ற அல்லது எடுத்துக் கொள்கின்ற அந்த அர்த்தத்தில் அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் என்ன அர்த்தத்தில் அதைக் கூறுகிறார்கள் என்றால்... தேவன் நம்மோடும், நமக்குள்ளும் இருந்து கொண்டு நமது மூலமாய் கிரியை செய்கிறார் என்று அவர்கள் விசுவாசிக்கின்றனர். தனிப்பட்ட ஒரு நபர் தேவன் என்றல்ல, பாருங்கள். யோவான் ஒரு சாதாரண மனிதன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
445. அது போல் இயேசுவும் ஒரு மனிதனே. அவர் மனிதனே. அவர் ஒரு ஸ்திரீயின் மூலம் பிறந்தார், அவர் மரித்தார். அது சரியா? அவர் மனிதன். அவர் புசித்தார். குடித்தார், அவருக்குதாக முண்டாயிற்று. அவர் உங்களைப் போலவும் என்னைப் போலவும் ஒரு மானிடராயிருந்தார். ஆனால் தேவனுடைய ஆவி அவருக்குள் பரி பூரணமாக, அளவில்லாமல் வாசம் செய்தது. அவர் சர்வசக்திமான்.
446. ஆனால் எலியாவோ அந்த ஆவியில் ஒரு பாகம் மாத்திரமே. ஒரு வேளை அவன் தன் சகோதரரை விட சிறிது அதிகமாக அபிஷேகம் பெற்றிருந்திருக்கக் கூடும். ஆயினும் அவன் ஆவியின் ஒரு பாகம் மட்டுமே. ஜனங்கள் மேசியாவை எதிர் நோக்கியிருந்தனர். அவர்கள் தங்கள் சகோதரரை விட சிறிது அதிகமான இந்த பாகத்தைக் கண்டவுடன், “ஓ என்னே, இது அவராகத்தான் இருக்க வேண்டும்” என்றனர்.
447. ஆனால் இயேசு பிரகாசிக்கத் தொடங்கினவுடனே யோவானின் சிறு வெளிச்சம் அணைந்து போனது. பாருங்கள்?
448. அது போல் அவர் வரும்போது, அந்த பரலோகத்தின் மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்து கிழக்கிலிருந்து மேற்குக்கு வரும் போது, இந்த சிறு வெளிச்சங்கள் அணைந்து போகும்... பாருங்கள்? இப்பொழுது அவர் பூமிக்கு வரமாட்டார். ஆயிரம் வருட அரசாட்சி வரைக்கும் மேசியா பூமிக்கு வரமாட்டார். பாருங்கள். பாருங்கள்? ஏனெனில், “நாம் ஆகாயத்தில் எடுக்கப் பட்டு, கர்த்தரை அங்கு சந்திப்போம். அவர் பூமிக்கு வருவதில்லை. அவர் மணவாட்டியை ஆகாயத்தில் இழுத்துக் கொள்கிறார்.
449. அவர் ஒரு ஏணியை எடுத்துக் கொள்கிறார்... அது என்ன நாடகம், லியோ, அதில் அந்த மனிதன் வீட்டின் பக்கத்தில் ஏணியை வைக்கிறானே? ரோமியோ ஜூலியட். அது சரி. அவர் ஏணியை வைத்து தன் மணவாட்டியைத் திருடிக் கொண்டு போய் விடுகிறார்.
450. இப்பொழுது அவர் யாக்கோபின் ஏணியில் இறங்கி வந்து, “ப்ஸ்ட், இருதயத்துக்கு இனியவளே, இங்கே வா” என்று அழைக்கிறார். பாருங்கள், அவரைச் சந்திக்க நாம் மேலே செல்கிறோம்.
451. ஒரு சகோதரன், சகோ. பிரன்ஹாமே, அதனுடன் இது சரியாயிருக்குமா? இந்த ஜனங்கள் யோவான் ஸ்நானனிடம் வந்து அவனை மேசியா என்று அழைக்க விரும்பினர். [யூதர்கள் மேசியாவை தேவன் என்று கருதுவதாக நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்கிறார் - ஆசி]. - என்ன சொல்லுகிறீர்கள்? நான் என்ன சொல்லுகிறேன் என்றால், அந்த ஜனங்கள் யோவான்ஸ்நானனிடம் வந்து, அவனை மேசியாவாகிய கிறிஸ்து என்று எண்ணினர். மேசியா யூதர்களுக்கு தேவனாயிருப்பார் என்று நீர் ஒரு சமயம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம் ஐயா, அது உண்மை,
452. (ஒரு சகோதரன், “நல்லது, யோவான் அவர்களைக் கடிந்து கொண்டு, அவன் 'அல்ல' என்றும் கிறிஸ்து வரப்போகிறார் என்றும் சொன்னான்” என்கிறார் - ஆசி). அது உண்மை. சீஷர்கள் இயேசுவை 'ஆண்டவர்' என்று ஒப்புக்கொண்டு, 'நீங்கள் என்னை ஆண்டவரென்று சொல்லுகிறீர்கள், நான் அவர்தான்' என்றார். ஆம் “யோவான் 13-ல் அவர் சீஷர்களின் கால்களைக் கழுவின போது...” அம். அது சரியென்று அவர் ஒப்புக் கொண்டார். அவர் ஆண்டவராயிருந்தபடியால், அவர் அது சரியென்று ஒப்புக் கொண்டார். அவர் ஒப்புக் கொண்டார். “அவர் அதை ஏற்றுக் கொண்டார்” உ - ஊ ஆனால், பாருங்கள், இயேசு ஆண்டவராயிருந்தபடியால், அவர் ஆண்டவர்தானா என்று கேட்கப்பட்ட போது, அவர், “ஆம் ஐயா, நான் உங்கள் ஆண்டவரும் போதகருமாயிருக்கிறேன். நீங்கள் அவ்விதம் என்னை அழைக்கிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே” என்றார். ஆனால்... “ஆனால் வேறெந்த மனிதனும் அவ்விதம்...” கூற முடியாது. முடியாது.
453. உதாரணமாக... யாராகிலும் நூன் தேவன் என்று கூறுவர்களானால் அது தவறு என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களிடம் கூற விரும்புகிறேன். பாருங்கள்? நான் கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி, தேவனிடத்திலிருந்து வந்த ஒரு செய்தியைக் கொண்டிருக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்?