454. ஆம். உண்மை. கொடுத்தல் முதலில் வீட்டில் தொடங்குகிறது. பாருங்கள். இங்குள்ள நமது தேவைகளை நாம் முதலில் சந்திக்கிறோம். ஏனெனில் நாம்... இது தேவனுடைய சபை. உங்கள் சிறு சபையும் தேவனுடைய சபையே. உங்களால் உங்கள் மேய்ப்பருக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் போனால், உங்களால் பாடல் புத்தகங்களை வாங்க முடியாமல் போனால், நீங்கள் வேறு இடத்துக்கு பணத்தை அனுப்பக் கூடாது. பாருங்கள்? உங்கள் சபைக்கு வேண்டிய அனைத்துக்கும் நீங்கள் செலுத்திவிட்டு உங்கள் கடன்களை செலுத்தி முடித்த பின்பு, வெளிநாட்டில் உதவி தேவைபடுகிற அந்த மற்ற சகோதரனுக்கு உதவி செய்யுங்கள், பாருங்கள்.
455. நான் நினைப்பது என்னவெனில்... உங்கள் சபைக்காக நீங்கள் பணம் செலுத்திக் கொண்டு இருக்கும்போதே, ஜனங்கள்மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்பினால், நான் மிஷனரி காணிக்கைக்காக ஒரு நிதியை ஒதுக்கி வைக்க விரும்புவேன். ஏனெனில் பலர் தங்கள் உள்ளூர் சபைக்குக் கொடுக்காமல், மிஷனரி ஊழியத்துக்கு கொடுக்க விரும்புவார்கள். அவர்கள் மிஷன்களுக்கு அதை கொடுக்காவிட்டால், வேறெதற்காவது அதை செலவழித்துவிடுவார்கள். எனவே நான் சொல்வது என்னவெனில், மிஷன் ஊழியத்துக்கென்று ஒரு பெட்டியை வைத்து விடுங்கள், நான்... அப்படித்தான் நாங்கள் செய்ய முயல்கிறோம்.