456. நல்லது. நாம் சற்று முன்பு தான் லூக்கா 1: 17ஐ. “எலியாவின் ஆவியை” உடையவனாய் வருவதைக் குறித்துப் பார்த்தோம்.
457. [ஒரு சகோதரன், “இங்குதான் மறு அவதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோர் தங்கள் உபதேசத்தைப் பெற்றுக் கொண்டனரா?” என்று கேட்கிறார் - ஆசி]. மன்னியுங்கள்? மறு அவதாரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோர் இங்கு தான் தங்கள் கோட்பாட்டைத் தொடங்கினரா? அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள், அவர் வேறொரு சரீரத்தில் வருவதாக அவர்கள் நம்புகின்றனர் ஆம், பாருங்கள், ஆவி மரிப்பதில்லை என்பது உண்மை. தேவன் தமது மனிதனை எடுத்துக் கொள்கிறார். ஆனால் அவருடைய ஆவியை அல்ல. அவர்கள், “நீங்கள் நல்லவர்களாக இருந்திருந்தால், ஒரு நல்ல மனிதனுக்குள் திரும்பவருவீர்கள்' என்று கூறுகின்றனர். ஆம், ஆம். நீங்கள் கெட்டவர்களாய் இருந்திருந்தால், ஒரு நாய்க்குள் நீங்கள் வரலாம் என்கின்றனர்”. ஆம், அப்படித்தான் அவர்கள் கூறுகின்றனர். ஆம்.
458. நல்லது. இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு குழுவினரை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தரையையும் துடைக்க மாட்டார்கள். ஒரு எறும்பையும் கூட மிதிக்க மாட்டார்கள். அது ஒரு வேளை தங்கள் பந்துக்களில் ஒருவராக இருக்கலாம் என்பதற்காக. ஆனால், பாருங்கள், அது அஞ்ஞானக் கோட்பாடு. பாருங்கள்? அது அஞ்ஞானம் என்பது உண்மை.