459. அன்பு. 1 கொரிந்தியர் 13ம் அதிகாரம், பாருங்கள். “நாடுங்கள்... முதலில்...1கொரிந்தியர் 13ம் அதிகாரத்தை எடுங்கள், சகோதரனே, கடைசி மூன்று அல்லது நான்கு வசனங்களை வாசியுங்கள். 1 கொரிந்தியர் 13... அந்த அதிகாரத்தின் கடைசி மூன்று வசனங்கள்... [ஒரு சகோதரன் 1 கொரிந்தியர் 13: 11-13 வசனங்களைப் படிக்கிறார் - ஆசி].
நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன்; நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்து விட்டேன்.
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன்.
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (சகோ. பிரன்ஹாம் “உ-ஊ, அன்பு” என்கிறார் - ஆசி) 1 கொரி. 13:11,13…