ஓ, என்னே! அவருடன் பொறுமையாயிருங்கள், அப்படித்தான் நான் நினைக்கிறேன். பாருங்கள்?
ஒரு சகோதரனுக்கு, தான் கேட்டுக் கொள்ளப்படாமலேயே சபையில் ஒரு ஸ்தானத்தை வகிக்க வேண்டும் என்னும் பலவீனம் இருக்குமானால், அவரை எப்படிக் குற்றப்படுத்துவது?
அவரைக் குற்றப்படுத்தக் கூடாது. உதாரணமாக அவர் டீகனாக விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். பாருங்கள்? அவர் அவ்விதம் செய்யக்கூடாது என்று அவரிடம் சொன்ன பின்பும், அவர் எப்படியும் டீகனின் ஸ்தானத்தை வகிக்க விரும்புகிறார். நல்லது. ஒரு நபர் அவ்விதமாக இருப்பாரானால், ஏதோ ஒரு பலவீனம் எங்கோ உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே நான் அவருடன் அன்போடு ஈடுபடுவேன்.
461. நீங்கள் ஒருவரை நன்றாக அறிந்திராமல் அப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்ய நீங்கள் விரும்பமாட்டீர்கள். உங்களால் முடிந்த வரைக்கும் உங்கள் சிறந்த மனிதர்களை உங்கள் குழுவில் நியமியுங்கள். சகோதரனே, வேறெவரையுமே அதில்... அந்த மனிதனை முதலில் பரிசோதியுங்கள். ஒரு மகனுக்கு மேய்ப்பனைக் காட்டிலும் அதிகமான உத்தரவாதம் உள்ளது. ஒரு டீக்கன் குற்றமற்றவராய் இருக்க வேண்டும். பாருங்கள்?