462. என் உடன் போதகரான சகோ. நெவிலை ஜெபிப்பதற்காக அனுப்பினேன், பாருங்கள். அது நடந்த இரவு எனக்கு ஞாபகம் உள்ளது. என்ன நேர்ந்த போதிலும் அந்த இராப்போஜன மேசையுடன் நான் நிற்க வேண்டியவனாயிருக்கிறேன்... இங்கு பாருங்கள். இதை விவரிக்க எனக்கு நேரமில்லை. இங்கு உட்கார்ந்திருக்கிற யாரோ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். அது என்னவென்று கூறுகிறேன், சகோதரனே. இயேசுகிறிஸ்துவின் சரீரத்துக்கு அடையாளமாயுள்ள இராப்போஜனம் இருக்கின்ற வேளையில், அது... அது எல்லா நேரத்திலும் காவல் செய்யப்பட வேண்டும்.
463. பாருங்கள், எலியா கேயாசியிடம், “என் கோலை எடுத்துக் கொண்டு போ என்று சொன்னான் (அவன் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட கோலை உடையவானாயிருந்தான்). அவன், “நீ பாதையில் போய்க் கொண்டிருக்கும் போது. யாராகிலும் உன்னிடம் பேசினால் அவருக்கு மறு உத்தரவு அளிக்காதே. யாராகிலும் உனக்கு வாழ்த்துதல் கூறினால், அவருக்கு திரும்ப வாழ்த்துதல் கூறாதே. நீ நேராகப் போய் குழந்தையின் மேல் இந்த கோலை வை” என்றான். அது சரியா? “அந்த கோலுடன் நிலைத்திரு”. பாருங்கள்? அதை தான் நான் செய்து கொண்டிருந்தேன்.
464. இப்பொழுது, அங்கு என் உடன் போதகர் நிற்காமல் போயிருந்தால். நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். அது எப்பொழுது நடந்தது என்று எனக்கு ஞாபகம் உள்ளது. நான்... அவர்கள் மட்டும்... சகோ நெவில் அங்கு நிற்கவில்லை என்றால், அல்லது பீடத்தண்டையில் இருந்த அந்த மனிதனுக்கு உதவி செய்ய வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால்... அப்பொழுது நான் பிரசங்கம் செய்து முடித்திருந்தேன். எனவே நான் இராப்போஜன மேசையினருகில் நின்று கொண்டிருந்தேன் அவாகள் இராப்போஜனத்தைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமான போது, நான் ஏற்கனவே இராப்போஜனத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். சகோ. நெவில் அங்கு நின்று கொண்டிருந்தார். நான் இராப்போஜனம் பரிமாறிக் கொண்டிருந்தேன். சகோ. நெவில் அங்கு நின்று கொண்டிருந்தார்.
465. அவர் பீடத்தண்டையில் வந்த போது, சகோ. நெவில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பிரசங்ம் செய்து கொண்டிருந்த போது, இந்த மனிதன் கூட்டத்திலிருந்து எழுந்து பீடத்தண்டையில் சென்றிருப்பாரானால், அப்பொழுது நான் அந்த மனிதன் இருந்த பீடத்துக்கு சென்றிருப்பேன். என் சகோதரனின் மேல் ஆவியின் அபிஷேகம் தங்கியிருந்ததை நான் கண்டேன். அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு ஊழியக்காரர். அவர் கடமையின் பாதையில் இருந்து கொண்டிருந்தார்.
466. ஒரு போதகர் கடமையின் பாதையில் இருந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் அந்நிய பாஷையில் பேசவோ அல்லது வேறெந்த வகையிலும் தடங்கலாயிருக்கக் கூடாது. ஆம், பரிசுத்த ஆவியானவர் பிரசங்கத்தின் வாயிலாக யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும்போது, இரட்சிப்பைப் பெற யாராகிலும் பீடத்தண்டையில் ஒடிச் செல்வார்களானால், போதகர் தொடர்ந்து தன் கடமையின் பாதையில் இருக்கட்டும். உடன் போதகரோ அல்லது மகனோ இருப்பாரானால், அவர் விரைவாக அந்த நபரிடம் செல்லட்டும். கடமையின் பாதையில் உள்ள போதகரை தொந்தரவு செய்யாதீர்கள். பாருங்கள்?
467. நான் என் கடமையின் பாதையில் இராப்போஜன மேசையின் பின்னால் நின்று கொண்டு இராப்போஜனம் கொடுத்துக் கொண்டிருந்தேன். என் உடன் போதகர் சகோ. நெவில் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு மனிதன் பீடத்துக்கு ஓடி வந்து கொண்டிருந்தார். நான், “சகோ நெவில், அவரிடம் சொல்லுங்கள்” என்று கூறினேன். சகோ. நெவில் அவரிடம் சென்றார். ஆகயைால் தான் நான் போகவில்லை.
468. அந்த மனிதனிடம் செல்ல உடன் போதகரோ அல்லது வேறு யாராகிலும் இல்லாமல் போயிருந்தால், நான் இராப்போஜனத்தை நிறுத்தி விட்டு அவரிடம் சென்று அந்த ஆத்துமா இரட்சிப்படைவதைக் குறித்துக் கவனித்திருப்பேன். பாருங்கள்? ஆனால் அனுப்புவதற்கு ஒருவர் இருந்தார். நான் இராப்போஜனம் கொடுப்பதை நிறுத்தி விட்டுச் சென்றிருந்தால், அது என்னை கடமையின் பாதையிலிருந்து விலகச் செய்திருக்கும்.