469. சரி. அவருக்கு வார்த்தையை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். அதுவே செய்யக்கூடிய சிறந்த காரியமாகும். வார்த்தை வெளிச்சத்தைக் கொண்டுள்ளது. “சகோதரனே இயேசு அதை வாக்களித்துள்ளார். அது அவருடைய வாக்குத்தத்தம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறிக் கொண்டேயிருங்கள்.
470. அவரைக் குலுக்கவோ, தள்ளவோ, சுற்றிலும் அசைக்கவோ செய்யாதிருங்கள். முயற்சி செய்யாதிருங்கள்... ஆம், நீங்கள் அவருக்கு அதைக் கொடுக்க முயற்சி செய்ய இருங்கள். ஏனெனில் உங்களால் அதைச் செய்ய முடியாது. பாருங்கள்? நீங்கள்... தேவன் அதை அவருக்குத் தந்தருளுவார். வாக்குத்தத்தங்களை எடுத்துக் கூறிக் கொண்டேயிருங்கள். பாருங்கள். அங்கு நின்று கொண்டு வாக்குத்தத்தத்தை மேற்கோள் காட்டிக் கொண்டேயிருங்கள். “பரலேகாத்தின் தேவனே, என் சகோதரனுக்காக ஜெபிக்கிறேன். அவருக்கு பரிசுத்த ஆவியைத் தருவீர் என்பதே உமது வாக்குத்தத்தமாயுள்ளது”.
471. அவரை நீங்கள் உற்சாகப்படுத்த முயல்வீர்களென்றால். அவர், “ஓ, சகோதரனே, மேய்ப்பனே, சகோதரனே - அவருடைய பக்கத்தில் யார் இருக்கிறார்களோ அவரைப் பார்த்து, “நான் பரிசுத்த ஆவியைப் பெற வேண்டும்” என்று கூறிக் கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
472. நீங்கள், “சகோதரனே, அது ஒரு வாக்குத்தத்தம். தேவன் அந்த வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதை சந்தேகிக்காதீர்கள். நீங்கள் வாக்குத்தத்ததை விசுவாசிப்பீர்களானால், இப்பொழுது எந்த வினாடியிலும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் மேல் வருவார். அதை எதிர்பார்த்துக் கொண்டேயிருங்கள். உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் அவருக்கு ஒப்புவித்து 'கர்த்தாவே, உம்முடைய வாக்குத்தத்தத்தின் மேல் நான் நின்று கொண்டிருக்கிறேன்' என்று சொல்லுங்கள்' என்று அவரிடம் கூறுங்கள்.
473. நீங்கள் வாக்குத்தத்தத்தை மேற்கொள்காட்டிக் கொண்டேயிருங்கள். “நீங்கள் மனந்திரும்பி விட்டீர்களா?” என்று அவரிடம் கேளுங்கள்.
அவர் “ஆம்” என்கிறார்.
474. “அப்படியானால் நீங்கள், 'கர்த்தாவே, நான் மனந்திரும்பினால், என்னை மன்னிப்பதற்கு நீர் நீதியுள்ளவராயிருப்பதாக உரைத்திருக்கிறீர். நான் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டால், நான் பரிசுத்த ஆவியை பெறுவேன் என்று நீர் கூறியிருக்கிறீர். கர்த்தாவே, அதை நான் செய்து முடித்து விட்டேன். கர்த்தாவே, இப்பொழுது நான் காத்திருக்கிறேன். அதை நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர் என்று சொல்லுங்கள்' என்று அவரிடம் கூறுங்கள்.
475. பாருங்கள். அது தான் முறை. அவரை உற்சாகப் படுத்திக் கொண்டேயிருங்கள். அவர் வார்த்தையில் நிலைத்திருக்கச் செய்யுங்கள். அது அவர் மேல் வரவேண்டுமென்று இருந்தால் அப்பொழுது வரும்.