188. என்னை மன்னியுங்கள், ஒரு நிமிடத்தில் இது என்ன என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். அது பேப்பரில் ஒரு வகையாக எழுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ... கிறிஸ்துவினுடைய ஆயிரம் வருஷங்கள் நேரத்தில் இது சம்பவிக்குமா அல்லது மனிதன் நவீன மதவாதிகளாக வாழ்பவன. ஆம் ஐயா,
189. இப்பொழுது, ஒரு நிமிடம், இந்த கேள்வி என்னவென்பதை சரியாக பார்ப்போம்: அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் நம்மில் மீதியான.
190. முதலில் நான் அதை சரி செய்து அதைக் குறித்து நீங்கள் நிச்சயமாக இருக்க விரும்புகிறேன். பாருங்கள், அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீதமுள்ள யூதர்களாகிய அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் சயை எடுக்கப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா? அது இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்....
191. இப்பொழுது,.... நான் - நான்... இதைத் துவங்குவதற்கு முன் நான் இதை என் மனதில் தெளிவாய் பெற்றிருக்க விரும்புகிறேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மீதமுள்ள யூதர்களாகிய இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் சபை எடுக்கப்படுதலில் பங்குடையவர்களாய் இருப்பார்களா?
192. இதை நான் முதலில் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் மீதமுள்ள யூதர்கள் ஆவர், ஆனால் அவர்கள் எடுக்கப்பட்ட சபை அல்ல. பாருங்கள்? வெளிப்படுத்தின விசேஷம் 6.ஆம் அதிகாரத்தில் அதை நீங்கள் காணலாம்.
193. நாம் அதைக்குறித்த அந்த பாகத்தை- அந்த பக்கத்தை- நாம் அடுத்ததாக பார்க்கலாம். அவர்கள் அதைக் குறித்த மற்றொரு கேள்வியை வைத்துள்ளனர். இந்த காரியங்களைக் கவனியுங்கள்.
194. அது சரி, வெளிப்படத்தின விசேஷம் 6ல் இப்பொழுது, அங்கே இதை நீங்கள் பார்க்கலாம். பாருங்கள்? இப்பொழுது நாம் ஆரம்பிக்கப்போகிறோம், அவன் மேற்சென்று குதிரை சவாரி செய்பவர்கள், இன்னும் மற்றவைகளைக் குறித்து அவன் கூறு கின்றான். ''அவர்கள் அதைத் திறந்தபோது"... வெளிப்படுத்தின விசேஷம் 6-ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தை நாம் பார்ப்போம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது....
195. நான் -நான்- தான் தவறு செய்து விட்டேன், நான் தவறான அதிகாரத்தை எடுத்துவிட்டேன். அது 7வது அதிகாரம்: இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு காதர்கள் நின்று, . ,
196. ஓ, என்ன அருமையான ஒரு கேள்வி, அதைப்பார்க்க சிறிது நேரம்தான் உள்ளது, நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வேண்டும். இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு காதர்கள் நின்று பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தாதன்... ஏறிவரக் கண்டேன்...
197. ஓ, நிச்சயமாக இது ஒரு அருமையான கேள்விதான், பாருங் கள்? இப்பொழுது, யோவாள், பூமியிலிருந்து சென்று, ஆவியில், பூமியை நோக்கிப் பார்த்து கூறின மகத்தான காட்சி இது. அவன், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் காற்றுகளையும் பிடித்திருப்பதைக் காண்கிறான்.
198. இப்பொழுது வேதத்தில், "காற்றுகள்” என்றால்... வேத வசனங்களை உங்களுக்கு எடுத்துக் கூற எனக்கு நேரம் இல்லை, ஆனால் நாம் இதைப் பார்க்கலாம். இதற்கு சரியாக பதில் உரைக்கப்படவில்லையெனில், நான் வேறொரு சமயத்தில் அதை எடுப்பேன். அந்த நான்கு……வேதத்தில் காற்றுகள் என்றால் “யுத்தங்களும் சச்சரவுகளும்'' என்று அர்த்தம். யோபின் காலத்தில் காற்று கீழே வந்து அவனுடைய குமாரர்களை எடுத்துப்போட்டது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். நான் என்ன கூற முயல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா, அது-அது -அது தொந்தரவு, வேதனை, பாருங்கள், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் (நான்கு தூதர்கள், அல்லது “நான்ரு செய்தியாளர்கள்'') அவர்கள் அந்த மூலைகளில் நின்றுகொண்டு . . . அல்லது பூமியின் நான்கு திசைகளிலும் நின்றுகொண்டு, அவர்கள் பூமியின் நான்கு காற்றுகரையும் பிடித்திருக்க கண்டேன். . . . . . அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிற தற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி. (இப்பொழுது, அவன் கர்த்தருடைய வருகையைக் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றான். பாருங்கள்?) நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றியில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட் டான். (ஊழியக்காரர்).
199. இப்பொழுது, சபையானது அவருடைய ஊழியக்காரர்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாம் அவருடைய குமாரர், அவருடைய ஊழியக்காரர் அல்ல, யூதர்கள்தான் எப்பொழுதுமே அவருடைய ஊழியக்காரராயிருந்து வந்துள்ளனர். சபையானது அவருடைய ஊழியக்காரராக ஒருபோதும் இருந்த தில்லை, அது அவருடைய பிள்ளைகளாய் இருந்தது. பாருங்கள்? அந்த ஊழியக்காரர்: முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களி லும் முத்திரைப் போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். (இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் யூதர்கள்)
200. இப்பொழுது கவனியுங்கள்! “யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் பன்னீ ராயிரம். காத் கோத்திரத்தில் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் பன்னீராயிரம், இன்னும் மற்ற கோத்திரங்கள் சிமியோன் கோத் திரத்தில் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் பன்னீராயிரம் பென்யமீன் கோத்திரத்தில் பன்னீராயிரம்” இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள், ஆகவே பன்னிரண்டு பன்னிரண்டு... என்ன? ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம். இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் எல்லா கோத்திரத்தாரையும் கவனியுங்கள். அவர்கள் தேவனுடைய "ஊழியக்காரர்" என்பதை இப்பொழுது கவனியுங்கள்.
201. ஒரு வேளை, உங்களுக்கு நான் இதை தெளிவாக்கக்கூடும். இப்பொழுது கவனியுங்கள். இவைகளுக்குப்பின்பு நான் பார்த்தபோது இதோ சகல ஜாதிகளிலும் (இப்பொழுது இங்கே வேறொரு கூட்டம் இருப்பதைப் பாருங்கள்) கோத்திரங்களிலும், ஐனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய இனங்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு, ... (இந்த பரிசுத்த ஆவியின் கூட்டத்திற்கு செவிசாயுங்கள்!)... இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனை தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும்... மகிமையும். ஸ்தோத்திரமும்... வல்லமையும். பெலனும் சதாகாலங்களிலும் உண்டவதாக; ஆமென், என்றார்கள், அப்பொழுது. மூப்பர்களில் ஒருவன்... (இப்பொழுது கவனி யுங்கள், அது... யோவான் தரிசனத்தில் இருந்தான்).... மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி, (இப்பொழுது, யோவான் ஒரு யூதனாய் இருந்ததால் அந்த பன்னிரண்டு கோத்திரங்களை அவன் பார்த்தபோது அவர்களை அடையாளம் கண்டு கொண்டான்)..... வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். இப்பொழுது நீ யூதர்களை கண்டிருக் கிறாய், அவர்கள் ஒவ்வொருவரையும் உனக்குத் தெரியும், கோத்திரங்களாக அவர்களை நீ கணக்குப் பார்த்து எத்தனை ஆயிரம் பேர் முத்திரிக்கப்பட்டார்கள் என்று நீ கூறினாய். ஆனால் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்தவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அதற்கு நான்; ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். (வேறு விதமாகக் கூறுவோமானால், ''அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தான் ஒரு யூதன், தான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன், அங்கேயுள்ள என்-என் ஜனத்தை தான் கண்டேன்" என்று யோவான் கூறுகிறான்).... அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து பாருங்கள்! மகா உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே (சபைகளில் அங்கத்தினர்கள் ஆவதன் மூலம் அல்ல).... ஆனால் ஆட்டுக்குட்யானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். (பாருங்கள்?). ஆனப்படியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரைச் சேவிக்கிரர்கள்.....
202. இப்பொழுது திருமதி. பிரான்ஹாம் எங்கே எனக்குப் பணி விடை செய்கிறார்கள்? வீட்டிலே. அதுதான் மணவாட்டி. திருமதி. நெவில் அங்கேதானே, உங்கள் வீட்டிலிருந்து, உங்களுக்கு பணி விடை செய்கிறார்கள். அங்கேதான் மணவாட்டி (அவர்கள் ஊழியக்காரர் அல்ல).... மணவாட்டி பணிவிடை செய்கிறாள். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடைவதுமில்லை.... (அவர்கள் இங்கேயிருக்கையில் சில வேளை தங்கள் உணவை அவர்கள் இழந்திருக்கலாம். அப்படித்தானே?)..... இனி தாகமடைவது இல்லை….வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதில்லை. இவர்கள் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களே ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் (அங்கே சென்று இருந்த மக்கள் அழுது கொண்டிருந்த கூட்டமாயிருந்தனர்) யாவையும் துடைப்பார் என்றான். (பாருங்கள்?)
203. இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் பசியுள்ளவர் களாயும், தாகமுள்ளவர்களாயும், அழுதும், முணகியும், கதறியும் உபத்திரவத்திலிருந்து வெளிவந்தவர்களாயும் இருந்தனர் ("அந்த பரிசுத்த உருளையர் கூட்டத்தைப் பாருங்கள், ஓ அவர்களுக்கு பைத்தியக்காரர்கள்" என கூறப்பட்டது) ஓ, என்னே! ஆம். பாருங்கள்? ஆனால் அவர்கள் அழுது கதறினர், அவர்கள் குழப்பம் ஏதும் உண்டாக்கவில்லை. அவர்கள் அழுது கதற மாத்திரம் செய்தனர். ஆகையால் பாருங்கள், அவர்கள் சகல ஜாதிகளும், கோத்திரரும், பாஷைக்காரருமாய் இருந்தனர்.
204.இப்பொழுது, இந்த இலசட்த்து நாற்பத்து நாலாயிரம் பேர் யூதர்களாய் இருந்தனர். ஆபிரகாம் தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்தான். யூதர்கள் எப்போதுமே தேவனுடைய ஊழியக்காரர்களாய் இருந்தனர். புறஜாதியார் அவருடைய ஊழியக்காரர்களாய் எப்போதும் இருந்ததில்லை.
205. இப்பொழுது நாம் சீக்கிரமாக கடந்து செல்வோம், ஏனெனில் நம்மிடையே இன்னும் இரண்டு அல்லது மூன்று கேள்விகள் உள்ளது. என்னால் முடிந்த அளவிற்கு வேகமாக இவை களைக் கடந்து செல்வேன். ஆனால் நான் திரும்பவும் வந்து அடுத்த ஞாயிறன்று (கர்த்தருக்கு சித்தமாயிருக்கும் பட்சத்தில்) இலைகளின் பேரில் அதிக நேரம் செலவிடுவேன்.
206. ஆனால் இப்பொழுது, கவனியுங்கள், அவள் பூமியின் நான்கு திசைகள் யாவையும் கண்டான், பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நிற்பதை அவன் கண்டான். "அது வட்டமாக இருந்தது என்று நான் எண்ணினேன்" என்ற நீங்கள் கூறலாம். நீங்கள் பாருங்கள், அதனால் அங்கு நான்கு திசைகள் இருக்கக் கூடாது என்பதல்ல, அது சரி.
207. இப்பொழுது, "பூமியின் நான்கு திசைகளிலும், நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்" வேறு விதமாகக் கூறினால், உலக முழுவதும் போரிலும், சச்சரவிலும் இந்த காற்று னது சென்று வீசினது. அது எப்பொழுதாவது நிகழ்ந்துள்ளதா? முதலாம் உலகப் போர் ஆரம்பிக்கும் வரை அது நிகழவில்லை. ''காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன்" உள்ளே செல்லாதப் படிக்கு அவர்கள் கடினமாகப் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தனர்.
208. ஆகவே இப்பொழுது, இங்கே வேருெருவன் வருகிறான். இப்பொழுது அந்தத் துதனைக் குறித்து நீங்கள் கவனிப்பீர்களானால், எசேக்கியேல் 9ல், புருஷர் தங்கள் கைகளிலே வெட்டுகிற ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டு எருசலேம் முழுவதுமாக யூதர்களை வெட்டுவதற்காக வாசலிலிருந்து புறப்பட்ட போது, இதே தூதன் தான் அங்கே வந்தான். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன், "நிறுத்து! நிறுத்து! நீ நகரமெங்கும் உருவப்போய், அதற்குள்ளே செயல்படுகிற சகல அருவருப்புகளினிமித்தம் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு" என்றான். அது சரிதாளே?
209. அதன் பிறகு, அவர்கள் சென்று படுகொலைகளை செய்ய அவன் அனுமதித்தான். அது தீத்து இராயன் கீழ் நிகழ்ந்த அடக்கு முறை, துன்பம். இப்பொழுது கிழக்கிலிருந்து (அங்கிருந்துதான் இயேசு வருவார்) வருகின்றவனும் அதே தூதன் தான் என்பதை நீங்கள் கவனியுங்கள், அவன் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை வைத்திருக்கிறான், மகிமை!
210. இப்பொழுது, ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்றால் என்ன? ஓஅது உலகத்திலே மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இன்று இருக்கின்றதல்லவா! சிலர் அது ஓய்வு நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர், சிலர் அது இதை அல்லது அதை செய்வது தான் என்று கூறுகின்றனர். ஆனால் வேதம், "பரிசுத்த ஆவிதான் தேவனுடைய முத்திரை" என்று கூறுகின்றது. எபேசியர் 4:30, "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்" என்று கூறுகின்றது. பாருங்கள்? அது சரியே. அது பரிசுத்த ஆவி.
211. பிறகு என்ன வருகின்றது? இப்பொழுது கவனியுங்கள்! ஓ, இதை நான் நினைக்கையில் என் இருதயம் துள்ளி குதிக்கின்றது. இப்பொழுது அவன், " நான்கு காற்றுகளையும் அசையாதபடிக்கு அப்படியே பிடித்திருங்கள்" என்று கூறுகிறான் (வேறொரு வார்த்தையில் கூறுவோமானால்) "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும்" அந்த ஊழியக்காரன், அந்த "யூதர்" (யோவான் திரும்பி, "முத்திரை போடப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களை நான் கண்டேன்” என்று கூறுகிறான்) இப்பொழுது, காற்று அடிக்க ஆரம்பித்து, பூமியை முழுவதுமாக நிரப்பி, முதலாம் உலகப் போரின் போது அர்மெகதோன் யுத்தம் நிகழ்ந்திருக்கும், ஆனால்...
212. இப்பொழுது, உங்களுக்குக் காண்பிக்கத்தக்கதாக வேறொரு வேதவாக்கியத்தை நான் வைத்திருக்கிறேன். இயேசு அந்த மக்களைக் குறித்து பேசினார். அவர், ''சிலர் ஒன்றாம் மணி வேளையில் வருவர், சிலர் வேறொரு மணி வேளையில் வருவார்கள், அவர்கள் தான் பதினோராம் மணி வேளையில் வந்தவர்கள். பதினோராம் மணி வேளை மக்கள்" என்று கூறினார். இப்பொழுது, ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் இடைப்பட்ட வரிகளை படித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் துரிதமாக இங்கும் அங்குமாக தாவ வேண்டியவனாய் இருக்கின்றேன். இப்பொழுது கவனியுங்கள். "பதினோராம் மணி வேளை மக்களே, உள்ளே வாருங்கள்" ஆகவே சரியாக இப்பொழுது. . , "முதலாம் மணி வேளையில் வந்தவர்கள் வந்து கூலியை பெற்றுக் கொண்டார்கள், அடுத்ததாக வந்தவர்களும் கூலியைப் பெற்றுக் கொண்டார்கள், பதினோராம் மணி வேளையில் வந்தவர்களும் முதலாம் மணி வேளை மக்கள் பெற்ற அதே கூலியை பெற்றுக் கொண்ட
213. இப்பொழுது, கவனியுங்கள், யூதர்கள் தான் நாம் பின்பற்றும் தூரத்தைக் காட்டும் மைல் கம்பம். இப்பொழுது, முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது ஒவ்வொரு யூகனும் பல நாடுகளுக்கு சிதறி செல்லும்படியாக ஆனது. முதலாம் வசனத்தைக் குறித்து இன்றைக்கு கேட்கப்பட்டது போன்று, எப்படி அவர்கள் எல்லாரையும் அவர் சிதறடித்திருப்பார், அவர்கள் எல்லாரும் அங்கே உள்ளனர். எல்லா இடங்களிலும் ஒரு உலகப்போர், இங்கே காற்றுகள் எரு சலேமிற்குள் செல்ல வருகின்றது,
214. ஆகவே, அவன், "தாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைப் போட்டுத் தீருமளவும் நிறுத்துங்கள், பிடித்திருங்கள்" என்றான், வேறொரு விதமாகக் கூறினால், "நாம் அவர்களை எல்லா இடத்திலிருந்தும், எல்லா நாடுகளிலிருந்தும் அவர்களைக் கொண்டு வருகிறோம், ஏனென்றால் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை முத்திரை போடத்தக்கதாக நாம் அவர்களை சரியாக உள்ளே கொண்டு செல்லவேண்டும். பிடித்துக்கொண்டிருங்கள்"
215. ஆகவே, பதினோராம் மணி நேர மக்கள் உள்ளே வரத்தக்கதாக முதலாம் உலகப் போரானது, அந்த வருடத்தின் பதினோராம் மாதத்தின் பதினோராம் நாளில், அந்த நாளின் பதினோராம் மணி வேளையில் முடிவுற்றது. யூதனுக்கு விடுக்கப்படுகின்ற கடைசி அழைப்பு! அவன் ஆதியில் அங்கே பெந்தெகொஸ்தேயில் அவர்கள் பெற்ற அதே பரிசுத்த ஆவியை அவன் பெற்று, அதே விதமாக ஞானஸ்நானம் பண்ணப்படுவான், அதே எல்லாக் காரியங்களும் பெற்றுக்கொள்வான். பதினோராம் மணிவேளை மக்கள் உள்ளே செல்கின்றனர்.
216. அவன் ''இப்பொழுது, நாம் முத்திரைப் போட்டு தீருமளவும் பிடித்துக் கொண்டிருங்கள், " என்றான். "எவ்வளவு நேரமாக நீங்கள் அதைப் பிடித்துகொண்டிருப்பீர்கள்?"
217. "நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரை முத்திரை போட்டுத் தீருமளவும் பொறுத்திருங்கள். இப்பொழுது நாம் - நாம் புறஜாதிகளை முத்தரிக்கின்றோம், அவர்கள் ஆயிரமாயிரம் பேர் இந்த பாடுகளின் மூலமும், உபத்திரவங்களின் மூலம் அவர்கள் முத்தரிக்கப்பட்டனர். ஆனால் ஒரு நிமிடம் பொறுத்திடுங்கள். ஒரு நிமிடம் மாத்திரம் பொறுங்கள்! இந்த, , , நாம் இந்த ஊழியக்காரரை முத்தரிக்கும் வரை அந்த நேரத்தை வரவிடாதிருங்கள்", ஆகவே அவன் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை முத்தரித்தான்.
218. பிறகு காற்றுகள் திறந்து விடப்பட்டன. இப்பொழுது, கவனியுங்கள். முதலாம் உலகப் போர் முதற்கொண்டு பூதருக்கு எதிராக அடக்குமுறை கையாளப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டாம் உலகப் போரிற்காக ஹிட்லர் எழும்பினான், அவன் ஆரம்பிக்கையில்.... என்ன? அவன் முழு உலகத்தையே கிழித்து எறிய புறப்பட்டாள். அது சரிதானே? அவன் அதை கிழித்தெறிய முற்பட்டான். ஆம், அவன் அவ்விதம் இருந்தான்.
219. எல்லாமே கம்யூனிசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். இங்கே என்னை நீங்கள் சிறையில் அடைக்க முற்பட்டதை நீங்கள் நினைவில் கொண்டிருக்கிறீர்களா? அந்த இரவிலே, ரிவர் ஹாலில் இதே காரியத்தை குறித்துதான் நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆம், ஐயா, தான் "அங்கே மூன்று கொள்கைகள் (TSMS) தோன்றும். அவை எல்லாம் சேர்ந்து ஒரு கொள்கை (ISM) ஆகிவிடும், அந்த கொள்கை ஒரு அடக்குமுறையைக் கொண்டு வந்து இயேசுகிறிஸ்துவை மறுபடியுமாக பூமிக்கு அனுப்பும் " என்று கூறினேன். அது முற்றிலுமாக சரி. அது கம்யூனிசம் ஆகும். ஹிட்லர், நாசி (Nazi) இன்னும் மற்றவை; முஸ்ஸோலினியினுடைய பாஸிசம் கொள்கை, மற்றும் ஹிட்லர், ஸ்டாலின். நான் "அவைகளில் ஒரு காரியம் நிகழ்ந்தேறும். எது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது வடக்கில் உள்ள இராஜாவாயிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்" என்றேன். சகோ.மாஹோனி, அங்கே இருந்து வருபவர்களாகிய நீங்கள், அந்த காரியங்கள் இங்கே எப்படி போதிக்கப்பட்டன என்று நிச்சயமாக நினைவில் வைத்திருப்பீர்கள்.
220. ஆகவே அவர்கள் "நீ அதை பிரசங்கித்தால்.... " என்றனர்.
221. இந்த N.R.A வைக் குறித்து, நான் "அது மிருகத்தின் முத்திரை அல்ல, நிச்சயமாக அல்ல. அது ஒரு மதச்சம்பந்தமான புறக்கணிப்பு; அது அதுவல்ல'' என்றேன். ''இதுதான் துன்பத்தின் ஆரம்பம் என்பதை மக்கள் அறிந்து, ஆயத்தம் அடைவதற்காக இது முன்னோடியாக உள்ளது, இங்கேயிருந்து தான் நாம் ஆரம்பிக்க வேண்டும். சரியாக இங்கேயிருந்து தான் காலமானது முடிய ஆரம்பிக்கும் நேரம் ஆகும். இப்பொழுது கவனியுங்கள், அந்த நேரம் அங்கே உள்ளது” என்றேன்.
222. இப்பொழுது, யூதர்கள் மேல் அடக்குமுறை கையாளப்படுகின்றது, ஒவ்வொரு தேசத்திலும் அவர்கள் மேல் அடக்குமுறை, இன்னல், வருவிக்கப்பட்டு சரியாக எருசலேமிற்குள் விரட்டப்படுகின்றனர். அது சரிதானே? ஒவ்வொருவரும், அவர்கள் சரியாக... ஆகவே நீங்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை உடையவர்களாய் இருப்பீர்கள். இங்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னுமாய் சற்று பாருங்கள். யோவான்...
223. திரு. போஹனான் இங்கே என்னிடம், "என்னால் அந்த வெளிப்படுத்தின விசேஷத்தை படிக்க முடியவில்லை" என்று கூறினார். அவர் ''அங்கே மணவாட்டி சீனாய் மலையின் மீது நின்று கொண்டிருந்தாள், அங்கே மணவாட்டி மேலே பரலோகத்தில் இருக்கின்றாள், அங்கே மணவாட்டி இருந்தான், அந்த தண்ணீர்.... அவளுடன் போரிடத்தக்கதாக வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது" என்றார்.
224. நான் ''திரு. போஹனான், முதலாவதாக நீர் செய்த தவறு அதை மணவாட்டி என்று அழைத்தது" என்றேன். நான் "அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்களான அந்த யூதர்கள் சீனாய் மலையின் மீது நிற்பார்கள். மணவாட்டி சரியாக இயேசுவுடன் பரலோகத்தில் இருப்பாள். அந்த வலுசர்ப்பம் மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்களுடன் போரிடத்தக்கதாக தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றினது" என்றேன். இந்த குழுதான் அங்கே செல்ல வேண்டியதாயிருக்கிறது, அந்த குழு அல்ல, பரிசுத்த ஆவியைப் பெறாமல் மீதமுள்ள ஸ்திரீயின் வித்து, "பரிசுத்தமாக்கப்பட்ட சபை", இதனுடன்தான் அவன் போர் செய்கிறான். பாருங்கள்?
225. இங்கே மூன்று கோத்திரங்கள், பிரிவுகள் உள்ளன. நீங்கள் எப்பொழுதுமே மூன்றை உங்கள் மனதில் கொள்ளுங்கள். ஆகவே இங்கே நாம், இந்த மகத்தான மீட்கப்பட்ட மணவாட்டியை சுற்றி இந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இருப்பதை பார்க்கிறோம். இங்கே, பரிசுத்தமாக்கப் பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற மறுத்தவர்கள் உள்ளனர். சபையானது அவர்களுக்கெதிராக அடக்குமுறையை... ரோம சபை அவர்களைத் துன்பப்படுத்தும். ஆனால் மணவாட்டி ஏற்கெனவே எடுத்துக் கொள்ளப்பட்டு பரலோகத்தில் இருப்பாள். அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றதோ, அவ்விதமாகவே அவர்கள் இருப்பார்கள். பாருங்கள்?
226. ஆகவே அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் யூதர்கள் ஆவர், தேவனுடைய ஊழியக்காரர். ஆகவே பரிசுத்த ஆவியின் சுவிசேஷம் அவர்களுக்கு பிரசங்கிக்கப்படும் போது ஆதியில் பெந்தெகோஸ்தே நாளில் தமிழ்) அவர்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அதே போன்று இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெறுவார்கள், புறஜாதியின் காலம் முடிவுபெறும், சபையானது முத்தரிக்கப் பட்டு, எடுத்துக்கொள்ளப்படுதல் வருகின்றது.
227. புறஜாதிகளின் நாட்களிலே, சுவிசேஷமானது எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட்டு, புறஜாதிகளிடையே ஆணித்தரமாக கூறப்பட்டு, தண்ணீரில் உள்ள எல்லா மீன்களையும் பிடிக்க முயற்சிக்கப்பட்டது, அவைகளைப் பாருங்கள், அந்த பெரிய ஆமைகள், தண்ணீர் ஜந்துக்கள் இன்னும் மற்றவை பிடிக்கப்பட்டன. ஆனால் எழுப்புதல் முடிவு பெற்ற உடனே அவை மறுபடியுமாக உலகத்திற்குள் சென்று விடுகின்றன. மீனானது ஏற்கனவே எடுத்து வைக்கப்படுகின்றது. நான் என்ன கூற விழைகிறேன் என்று பாருங்கள்?
228. சுவிசேஷமானது பிரசங்கிக்கப்படுகின்றது! பரிசுத்த ஆவி பின் அபிஷேகத்திற்காக, அழுதல், கதறுதல், முணகுதல் போன்றவைகளை இப்பொழுது நீங்கள் கேட்பதில்லை. அவர்கள் உள்ளே வந்து நூற்றுக்கணக்கானவர்கள் மேல் கைகளை வைக்க விரும்புகின்றனர். அவர்கள் நடனமாடி, இன்னும் இதைப்போன்று மற்ற காரியங்களைத் தொடர்ந்து செய்யவிரும்புகின்றனர். அது எல்லாம் சரியே, ஆனால் அதெல்லாம் வெறும் தன்மைகள் ஆகும்.
229. கிறிஸ்து இயேசுவாகிய அந்த நபர் உண்மையாளவைகளை மாத்திரம் பிறப்பித்து, கிறிஸ்து வரும் வரை அந்த நபரை பாது காப்பாக வைத்திருக்கிறார். அவ்விதம் இருக்கின்றார். ஆகவேதான் இப்பொழுது அழுதல் போன்றவை இல்லை, கீதவானது மூடப்படுகின்ற நிலையில் இருக்கின்றது. செய்தியானது சென்றுள்ளது, அது கடைசி முறையாகச் செல்கின்றது, சிலரை தேவனுடைய இராஜ்ஜியத்தில் இழுக்கத்தக்கதாக செல்கின்றது. கதவுகள் மூடப் படுகின்றன!
230. பிறகு அடுத்த காரியம் என்ன? யூதர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப் படவேண்டும். எல்லா காலங்களிலும் அவர்கள் அதை துன்புறுத்தி அதை கேலி செய்தனர்; ஆகவே அவர்களுக்கு பரிசுத்த ஆவி அளிக்கப்படும்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிசேஷகத்தை பெறுகின்றனர். புறஜாதி சபை எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அதை மறுத்து, நீதிமானாக்கப்படுதலில் மாத்திரமே நடந்தவர்கள், அந்த வலுசர்ப்பம் (ரோம் அதிகாரம்) வெள்ளத்தை ஊற்றி, அதன் வாயிலாக கம்யூனிசத்துடன் இணைந்து, சபையை துன்பத்தில் ஆழத்தும். அவர்கள் இங்கே சரியாக படம் பிடித்து காண்பிக்கப்படுகின்றனர்.
231. ஓ, சகோதரனே, அது வருவதை நாம் காண்கையில், அதன் காரணமாகத்தான் நான் தேவனிடம் "கர்த்தாவே, அந்த யூதர்களிடம் நான் செல்லட்டும். நான் அங்கே ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து, அங்கே உள்ள சில புறஜாதிகளிடமும், முகமதியர்களுடனும் பணி செய்யட்டும். நான் அங்கே இருந்து இந்தியாவிற்கு சென்று உண்மையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, அவருடைய அற்புதங்களுடனும், அடையாளங்களுடனும், அவருடைய ஞானஸ்நானத்தையும், பரிசுத்த ஆவியையும் அவர்களுக்கு காண்பிக்கட்டும்." என்று கதறுகிறேன். பிறகு நாம் எருசலேமிற்கு வரும் போது, , ,
232. சகோதரன் பீலர், இதைக் குறித்துதான் நீர் கேட்டுக் கொண் டிருந்தீர். அவர்கள் எருசலேமிற்கு வரும்போது, அங்கே நின்று, "இப்பொழுது, இயேசு தாம் மரித்தோரிலிருந்து எழுந்த தேவ குமாரனானால், அவர் அன்றைக்கு ஆதியில் செய்தது போல அதே காரியத்தைக் குறித்து அவருக்குத் தெரியும், அன்றைக்குச் செய்தது போல அதே ஜீவனை இன்றைக்கு பிறப்பிக்க முடியும். அவ்வாறே அவர் செய்தாரானால் நீங்கள் அவரை உமது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டு, உயிர்த்தெழுதலின் காரியங்களையும், அவருடைய மகத்தான வல்லமையோடு தேவன் நம்மோடு இருக்கிறார் என்பதை காண்பிப்போம்..
233.பிறகு அவர்கள் அதைச் செய்யும் போது, "என்னே, அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பவர்களே... பெந்தேகோஸ்தே நாளில் விழுந்த அதே ஆவிதான் இங்கே உங்களுக்காக இருக்கிறது" என்று கூறுங்கள். அவர்களில் ஆயிரக்கணக்கான பேர் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
234. சுவிசேஷமானது சரியாக அந்த நேரத்தில் யூதர்களுக்குச் செல் கின்றது. அங்கே யூதர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் இருக்கும். அதனால் பத்தாயிரக்கணக்கான யூதர்கள். . . இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் தேவனுடைய இராஜ்ஜியத்தில் கொண்டு செல்லப் பட்டு, முத்தரிக்கும் தூதனால் முத்திரையிடப்படுவர்.
225. அவர் கிழக்கிலிருந்து வருகின்றார் என்று நான் நம்புகின்றேன். அவர் தம்முடைய கையில் அவருடைய முத்திரையுடன் அவ்வாறே தான் நம்மிடையே இப்பொழுது வந்திருக்கிறார். பிறகு, ஓ, நான் அங்கே கூட்டிச் சேர்க்கப்படவிரும்புகிறேன். "நான் இங்கேயும், அங்கேயும் அடக்குமுறையை, துன்பத்தை அனுப்பியிருக்கிறேன், என்னால் முடிந்தவரை கடினப் பிராயசப்பட்டு யூதர்களை விரட்டியிருக்கிறேன். அவர்கள் உள்ளே துரத்தி அடிக்கப் பட்டுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள அநேக யூதர்கள் (அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது) ஏற்கெனவே பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர். ஆனால் அங்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற அங்கே நின்று கொண்டிருக்கும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை நான் கொண்டிருக்கிறேன்"
236. அங்கே, முத்திரையிடும் தூதன் அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரை முத்திரையிட ஆரம்பிக்கையில், புறஜாதி சபையின் கதவுகள் மூடப்படும், யூதர்கள் பரிசுத்த ஆவியை யூதர்களிடம் கொண்டு செல்வர். முழு உலகத்தையும் அசைக்கத்தக்கதான ஒரு எழுப்புதலை அவர்கள் கொண்டிருப்பர். அல்லேலுயா! தேவனுடைய வல்லமையானது யூதர்கள் மத்தியில் வெளிப்படும். ஓ, என்னே இனிமையானது! வ்வியூ ஓ, என்னே!
237. ஏசாயாவை நான் எடுக்கட்டும். நம்மிடையே அந்த "தேவ குமாரர்" பற்றி உள்ளது. இப்பொழுது நாம் பார்ப்போம்: இஸ்ரவேலானது..
238. பாருங்கள் நீங்கள் அதைப் படிப்பீர்களானால், சகோதரனே. நான்... அது ஒன்று சேர்த்து எழுதப்பட்டுள்ளது, சிலவற்றை அவர் அடித்து விட்டிருக்கிறார். நான் வேறென்றை எடுக்கிறேன். உங்க னால் முடியுமானால், தயவு செய்து (சகோதரன் நெவில் கீழ்கண்ட கேள்வியைப் படிக்கின்றார் - ஆசி)