476. இப்பொழுது, நாம் பார்ப்போம். நான் நினைக்கிறேன், “இருக்கிறாரா..” நான் படித்த விதமாகவே நீங்களும் படிக்கிறீர்களா என்று பார்க்கலாம். இதை படியுங்கள். [ஒரு சகோதரன், நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி அல்லது ஒரு கிறிஸ்தவன் சரியாக இருக்கிறாரா என்று வாசிக்கிறார் – ஆசி].
நான் சரியாகத்தான் அதைப் படித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். இப்பொழுது நல்லது. நான்...
நித்திய பாதுகாப்பில் நம்பிக்கையில்லாத ஒரு பிரசங்கி சரியாக இருக்கிறாரா?
477. என் கருத்து என்னவெனில் அந்த பிரசங்கி. அவருக்கு நித்திய பாதுகாப்பைக் குறித்து ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை என்றால்... ஆனால் அவர் அதை அறிந்திருந்தது. அது சத்தியம் என்பதை அறிந்திருந்து, அதை பிரசங்கிக்காமல் இருப்பாரானால், தன்னைக் குறித்து அவர் வெட்கப்பட வேண்டியவராயிருக்கிறார், அது உண்மை, அது எந்த கிறிஸ்தவனாயிருந்தாலும். இப்பொழுது கிறிஸ்தவன், இதை நன்றாக புரிந்து கொள்ள இயலாத கிறிஸ்தவனுக்கு நான் கூற விரும்புவது என்னவெனில...
478. [ஒரு சகோதரன், சகோ. பிரன்ஹாமே, இதை மற்ற ஜனங்களுக்கு பிரசங்கிப்பதற்கு இது ஒரு வெளிப்படையான உபதேசம் இல்லை, அல்லவா?... என்று கேட்கிறார் – ஆசி]. இல்லை. இல்லை, இல்லை. அதைக் குறித்து தான் நான் கூறியிருந்தேன். ஆம், பாருங்கள்? பாருங்கள்?
479. இப்பொழுது. சென்ற ஞாயிறு நான் கூறினது உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால், உங்களுக்கென்று ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். பாருங்கள். அதுவே நீங்கள் செய்யத்தக்க மிகச் சிறந்த முறையாகும். உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். நீங்கள் ஒரு பிரசங்கியாக இருப்பீர்களானால் ஒரு பிரசங்க பீடத்தை தெரிந்து கொண்டு, பாருங்கள், பிரசங்கம் செய்யுங்கள். நீங்கள் பிரசங்கி அல்லவென்றால், உங்கள் பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் வாழ்க்கையே ஒரு பிரசங்க பீடமாக அமைந்திருக்கட்டும். பாருங்கள். அது எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது, இல்லையா? பாருங்கள்? பாருங்கள்? ஏனெனில் அநேக தருணங்களில் நாம் காண்கிறது என்னவெனில்... சகோதரர்களாகிய நீங்கள் அதை உங்கள் சபைகளில் செய்யுங்கள்.
480. இதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் சபையோர் சில நேரங்களில் காரியங்களை விளக்குவதிலும் காரியங்களைச் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். அவ்விதம் செய்யாதிருக்க அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள். யாராகிலும் ஏதாவதொன்றை அறிந்து கொள்ள விரும்பினால், அவ்விதம் செய்ய நியமிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் வரட்டும். பாருங்கள்?
481. நீங்கள் கவனமாயிருப்பது நலம். ஒருவேளை நீங்கள் அதற்கு விளக்கம்தரத் தலைப்பட்டால், அவரை இன்னும் அதிகமான குழப்பத்தில் ஆழ்த்தி, அவர் முன்பிருந்ததை விட இன்னும் மோசமான நிலையில் அவரைக் கொண்டு செல்ல வாய்ப்புண்டு. நீங்கள் அவரிடம், “நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்களிடம் கூறுகிறேன், எங்கள் போதகரிடம் வந்து அவரிடம் இதைக் குறித்து பேசுவீர்களானால், பாருங்கள். நாங்கள்... நீர் கூறுவது உண்மையே. எங்கள் போதகர் அதை விசுவாசிக்கிறார் என்று எனக்குத் தெரியும். நானும் கூட அதை விசுவாசிக்கிறேன். ஆனால் அதற்கு ஆதாரம் காட்ட எனக்குத் தெரியாது. நான் ஒரு பிரசங்கியல்ல. அதை நான் விசுவாசிக்கிறேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதை நான் ஏன் விசுவாசிக்கிறேன் என்றால், அவர் வேதத்திலிருந்து அதை விளக்குவதை நான் கேட்டிருக்கிறேன், அதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை” என்று சொல்லுங்கள். பாருங்கள்?
483. சபையோர் அதை போதகரிடம் அறிவிப்பது நலம். போதகரும் அதற்கு எவ்விதம் விளக்கம் தரவேண்டுமென்று உறுதியாக அறிந்திருக்க வேண்டும். எனவே அதை நன்றாக படித்து அறிந்திருங்கள். ஏனெனில் அநேக சமயங்களில் அவர்கள் உங்களை மடக்கி விடுவார்கள், பாருங்கள். என்ன...
484. (ஒரு சகோதரன், “சகோ பிரன்ஹாமே” என்கிறார் - ஆசி) என்னை மன்னியுங்கள். என்னால் கூடுமானால்… ஆனால் எனக்கு அழைப்புள்ளதென்று நான் அறிந்திருக்கிறேன். என் தெரிந்து கொள்ளுதலையும் நான் உறுதியாக்கிக் கொண்டிருக்கிறேன். உ உ (நீங்கள் ஒரு பிரசங்கியாயிருந்தால், உங்களுக்கு ஒரு பிரசங்க பீடம் இருக்க வேண்டும் என்று சற்று முன்பு நீங்கள் கூறினீர்கள்). ஆம், ஐயா. அது உண்மை. “நான் ஒரு பிரசங்கியல்ல. நான் ஒரு சுவிசேஷகன்” ஆம், ஐயா. ஆனால் ஒவ்வொருவருடைய பிரசங்க பீடமும் என்னுடையது. நல்லது. ஆனால் இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சரீர உழைப்பு. அது கடினமான வேலையல்ல. ஆனால் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு பிரசங்கபீடம் எதுவும் கிடையாது. இப்பொழுது நான் வேலை செய்து கொண்டிருப்பது அவருடைய சித்தமாயுள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் வார்த்தையின் மூலமாகவும் ஆவியின் சாட்சி மூலமாகவும் என்னிடம் வேலை செய்யும்படி கூறினார். சற்று கழிந்து பிரசங்க பீடங்கள் எனக்குத் திறக்கப்படும் என்று நான் விசுவாசிக்கிறேன் நிச்சயமாக, அது உண்மை. (“அது சரியா?”). அது சரி, சகோதரனே.
485. சகோதரனே, நீங்கள் அந்த பழைய சபை தஸ்தா வேஜுகளைப் புரட்டிப் பார்ப்பீர்களானால், நான் பதினேழு ஆண்டுகளாக இந்த சபையின் மேய்ப்பனாக இருந்து, ஒவ்வொரு நாளும் பிரசங்கித்து, ஒவ்வொரு நாளும் வேலையும் செய்து வந்திருக்கிறேன். பாருங்கள்? [ஒரு சகோதரன், “நீங்கள் வேலை செய்தால், நீங்கள் அழைக்கப்பட்டதற்கு அது ஒரு நல்ல அடையாளம்” என்கிறார் – ஆசி]. ஆம். பவுல் வேலை செய்தான், இல்லையா? அவன் கூடாரங்கள் செய்தான் (ஒவ்வொரு பிரசங்கியும் ஒரு பிரசங்க பீடத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று நீங்கள் கூறின போது எனக்கு சோர்வு உண்டானது. ஆனால் தேவன் சிறிது காலத்திற்கு நான் வேலை செய்ய என்னை அழைத்திருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்). நிச்சயமாக, பவுல் சென்று கூடாரங்களை உண்டாக்கினான், இல்லையா? அவன் மற்றவர்களின் பேரில் சார்ந்திருக்கக் கூடாதென்று எண்ணி தன் சொந்த கைகளினால் பிரயாசப்பட்டான். நிச்சயமாக. (அந்த நிலையில் தான் நான் இருக்கிறேன்) பாருங்கள்? அது உண்மை. பாருங்கள்? ஜான் வெஸ்லி, “உலகம் முழுவதுமே என் சபை” என்று கூறினார். எனவே, உங்கள் பிரசங்க பீடம் இன்னும் திறந்திருக்கிறது, சகோதரனே. சுவிசேஷகர்கள் உலகெங்கும் செல்கின்றனர். அது சரியா? நீங்கள் உலகமெங்கும் போய். எனவே உங்கள் பிரசங்க பீடம் முழு உலகமே.