486. ஒரு டீக்கன் அல்லது ஒரு தர்மகர்த்தா அவர்களுடைய சபையின் உபதேசங்களுடன் இசைவாய் இணைந்திருப்பது அவசியம். அவர்களுடைய சபையின் போதக வியாக்கியானங்களுடன் அவர்கள். பரிபூரணமாய் நிலைத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்விதம் செய்யாவிட்டால், அவர்கள் அதற்கு எதிராக போராடி தங்களையே உருவக் குத்திக் கொள்வார்கள். பாருங்கள்? நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்...
487. வேறு விதமாகக் கூறினால், என் குடும்பத்தினரை நான் நேசிக்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களுக்கு விஷம் கொடுப்பது போல இது உள்ளது. பாருங்கள், அதே காரியம்தான். பாருங்கள். நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நீங்கள்...
488. ஒரு தர்மகர்த்தா அல்லது ஒரு டீக்கன் அவர்களுடைய உத்தியோகத்தை வகிக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சபையில் உத்தியோகம் வகிப்பவர் எவரானாலும், பாருங்கள், அவர்கள் அந்த சபையின் பிரதிநிதிகள்.
489. அதன் காரணமாகத் தான் நான் முதல் தடவை, பாப்டிஸ்டு சபையை விட்டு வெளிநடந்தேன், பாருங்கள். அங்கு நான் சிறிது காலம் இருந்தேன். அவர்கள் என்னிடம் சில பெண் பிரசங்கிகளுக்கு குருப்பட்டம் கொடுக்கக் கூறினார்கள். அதன் விளைவாக அங்கு தங்கியிருக்க என்னால் முடியவில்லை. “நான் அவ்விதம் செய்ய மறுக்கிறேன்” என்று கூறினேன்.
490. மேய்ப்பர் என்னை அதட்டி, “இது என்ன? நீ ஒரு மூப்பன்” என்றார்.
491. நான், “டாக்டர் டேவிஸ், நான் குருப்பட்டம் பெற்றுள்ள இந்த பாப்டிஸ்டு சபையின் விசுவாசத்துக்கு முழு மரியாதையையும் அளித்து இதைக் கூற விரும்புகிறேன். பெண்களுக்கு குருப்பட்டம் அளிப்பது பாப்டிஸ்டு சபையின் உபதேசமாயுள்ளது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. அது அதிலிருந்து விடப்பட்டிருந்த ஒன்றாக இருந்தது” என்றேன்.
அவர், “இது சபையின் உபதேசம்” என்றார்.
492. நான், “ஐயா, இன்றிரவு நான் வராமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள். அல்லது நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பீரா?” என்று கேட்டேன். பாருங்கள்?
493. அவர், “உன் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் இன்றிரவு அங்கு இருக்க வேண்டியது உன்னுடைய கடமையாகும் என்றார்.
494. அதற்கு நான், “அது உண்மை தான், ஐயா. இந்த சபை 'காரியங்கள் எல்லாவற்றிலும் நான் பங்கு கொள்ள வேண்டியவனாயிருக்கிறேன். உள்ளூர் மூப்பர்களில் ஒருவன் என்னும் முறையில் நான் கடமையின் பாதையில் இருக்க வேண்டும்” என்றேன். அவர் சொன்னார்... நான், 1 கொரிந்தியர் 14 அல்லது 15-ம் அதிகாரத்தில் பவுல், 'சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக் கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை' என்று ஏன் கூறினான் என்பதற்கு எனக்கு விளக்கம் தருவீர்களா?' என்று கேட்டேன்.
495. அவர், “ஏன், நிச்சயமாக அதற்கு என்னால் விளக்கம் தரமுடியும். பாருங்கள், அது என்னவெனில், ஸ்திரீகள் அனைவரும் பின்னால் மூலையில் உட்கார்ந்துகொண்டு, மற்ற நேரங்களில் பேசுவது போலவே அங்கும் பேசிக் கொண்டிருந்தனர். பவுல், அவர்கள் அப்படி செய்வதை அனுமதிக்காதீர்கள்” என்றான் என்றார்.
496. அதற்கு நான், “அப்படியானால், அதே வேதபாரகனாகிய, அதே அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமாத்தேயுவில், “உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. என்னத்தினாலெனில் முதலாம் ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப் படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டாள்” என்று கூறியுள்ளதற்கு விளக்கம் தாருங்கள். அவள் தான் வஞ்சிக்கப்பட்டாள். “அவள் ஏதோ ஒன்றை தவறாகச் செய்ய வேண்டும் என்று கருதிச் செய்கிறாள் என்று நான் கூற வரவில்லை. அவள் உண்மையில் அதில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள். அவள் உபதேசம் பண்ணக் கூடாது” என்றேன்.
அவர், “அது உன்னுடைய சொந்தக் கருத்தா?” என்று கேட்டார்.
497. “நான் காண்கிறபடி, அது வேதத்தின் கருத்து. வேதம் அவ்விதம் தான் உரைத்துள்ளது” என்றேன்.
498. அவர், “இளைஞனே, அந்த கருத்தை நீ கொண்டிருப்பதற்காக நீ பெற்றுள்ள லைசென்ஸை உன்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ள முடியும்” என்றார்.
499. அதற்கு நான், “அவர்களுக்கு அந்த தொல்லை கொடுக்க மாட்டேன். நானே அதை கொடுத்து விடுகிறேன், டாக்டர் டேவிஸ். உங்களை அவமதிப்பதற்காக அவ்விதம் செய்ய வில்லை.” என்றேன். அவர் லைசென்ஸை வாங்கிக் கொள்ளவில்லை. அவர் அதை அப்படியே விட்டு விட்டார்.
500. அதன் பிறகு அவர் இவ்விஷயத்தில் என்னுடன் நேரடி.யாக விவாதம் ஒன்றை நடத்தப் போவதாகக் கூறினார். “சரி, எந்த நேரத்திலும்” என்றேன் நான். ஆனால் அவர் அதைச் செய்ய வில்லை.
501. சற்று கழிந்து, கர்த்தர் என்னில் பேசிய போது, கர்த்தருடைய தூதன் வந்த போது, அவர் அதைக் குறித்து கேலி செய்தார். நான் அவரிடம், “நல்லது, டாக்டர் டேவிஸ், இப்பொழுதே என் லைசென்ஸை துறந்து விடுவது நலம். ஏனெனில் அது எனக்கு ஒரு பாரமாக இருக்கும். நான் குருப்பட்டம் பெற்று சிறிது காலம் இங்கிருந்தேன். இனிமேல் அது எனக்கு பாரமாக இருக்கும். எனவே அதை இப்பொழுதே துறந்து விடுவது நலமாயிருக்கும்” என்றேன்.
502. எனவே, என்னால் பாப்டிஸ்ட் சபையில் தங்கியிருந்து பாப்டிஸ்டு உபதேசத்தைப் போதித்து, பாப்டிஸ்ட் விசுவாசத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது ஒரு சபை என்பதால், அவ்விதம் நான் செய்திருந்தால், நான் தவறு செய்தவனாயிருப்பேன், பாருங்கள். நான் ஏதோ ஒன்றை மறைக்கிறவனாயிருப்பேன். நான் உண்மையுள்ளவனாயிருந்தால், நான் பாப்டிஸ்ட் ஜனங்களிடம் சென்று (என்னுடைய போதகரிடத்திலோ அல்லது எனக்கு விளக்கம் அளிக்கக் கூடியவர் எவரிடத்திலாகிலும்) அவர்களிடம் ஜீவ வார்த்தையைக் குறித்துக் கேட்பேன். அவர்களால் வேதத்திலிருந்து அதை எடுத்துக் காண்பித்து என் உணர்வுகளை திருப்திபடுத்துவார்களானால், அப்பொழுது அவர்கள் உரைக்கும் விதமாகவே நானும் உரைப்பேன், பாருங்கள், நான் ஒரு பாப்டிஸ்டாக இருப்பேன்.
503. ஆகையால் தான் நான் சுயாதீனமுள்ளவனாயிருக்கிறேன். ஆகையால் தான் நான் எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்திருக்கவில்லை. ஸ்தாபனங்கள் வேத விரோதமானவை என்பது என் கருத்து.
504. எனவே தான் நான் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை. அவ்விதம் சேர்ந்திராதது நியாயமானது என்று நான் உணருகிறேன். பாருங்கள்? எனவே நான் ஜனங்களை சேர்த்துக் கொண்டு அவர்களை அங்கத்தினர்களாக்குவதில்லை. நாம் அங்கத்தினர்களாக பிறக்கிறோம். நாம் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் பிறக்கிறோம் என்பது என் கருத்து. பாருங்கள்?
505. நாங்கள் ஜனங்களின் பெயர்களை புத்தகத்திலிருந்து எடுத்துப் போட்டு அவர்களை சபையிலிருந்து புறம்பாக்குவதில்லை. ஏனெனில அப்படி செய்வது நமது வேலையல்ல என்று நான் கருதுகிறேன். தேவனே சபையை விட்டுப் புறம்பாக்கும் பணியைச் செய்கிறார் என்பது என் கருத்து. பாருங்கள்? ஆனால் நான் விசுவாசிப்பது என்னவெனில், ஒரு சகோதரன் ஏதாகிலும் தவறொன்றைச் செய்யும் போது...
506. உதாரணமாக சகோ நெவில் அல்லது சகோ ஜூனியர் அல்லது... இங்குள்ள சகோதரர் ஒருவர், டீக்கன்மார்கள் தர்ம கர்த்தாக்கள் ஒருவர் தவறு செய்கிறார் என்பதை அவர்கள் கண்டு பிடிப்பார்களானால், சபை என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்கள் ஒன்று கூடி இந்த சகோதரனுக்காக ஜெபிக்க வேண்டும், அவர் அப்பொழுதும் நேராக்கிக் கொள்ளவில்லை என்றால், இரண்டு பேர்கள் அவரிடம் சென்று அவரிடம் எடுத்துக் கூறட்டும். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டால், அதை சபைக்கு முன்பாக அறிவியுங்கள். அப்பொழுதும் அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால், அப்பொழுது அது முழு சபையின் வேலையாயுள்ளது - மேய்ப்பர், மூப்பர்கள் மற்றெல்லாருமே சேர்ந்து அதை செய்ய வேண்டும். டீக்கன்மார் குழுவுக்கோ அல்லது தர்மகர்த்தா குழுவுக்கோ அல்லது மேய்ப்பருக்கோ மட்டும் அதை செய்ய அதிகாரமில்லை.
507. யாரையாகிலும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைக்காக ஐக்கியத்திலிருந்து வெளியாக்க வேண்டுமென்றால் - அவர் இங்கிருப்பதற்கு தகுதியுள்ள மனிதன் அல்ல, அவர் இங்கு வந்து நமது பெண்களை அசுசிப்படுத்தி, நமது ஸ்திரீகளை அவமதித்து, அதே நேரத்தில் அவர் நம்மில் ஒருவர் என்று அழைத்துக்கொண்டால். பாருங்கள்? அவர் வெளியில் வேறங்காகிலும் இருந்து நமது மத்தியில் வந்திருப்பாரானால், அதைக் குறித்து நாம் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட ஒருவர் நமது மனைவிகளுடன் காதல் புரிய முயன்று நமது பெண்மக்களை அவமதித்து, அவ்விதம் எதாகிலும் ஒன்றைச் செய்து, அல்லது நமது பையன்களை கூட்டிச் சென்று தாறுமாறான வழியில் அவர்களுடன் நடந்து கொண்டு அவர்களை சீர்குலையும்படி செய்தால், அப்படி ஏதாவதொன்றைச் செய்தால்,
508. இவைகளை உடனே கவனித்து, அவரை ஐக்கியத்தினின்று புறம்பாக்கி, அவர் இராப்போஜனத்தில் பங்கு கொள்ள அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் நாம் அவர் பங்கு கொள்ள அனுமதிக்க முடியாது. “அபாத்திரமாய் போஜனபானம் பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.”
509. ஒரு ஆள் கூறினவிதமாக, “அவர் இது அதுவாக இருக்கிறார், அவருக்காக ஜெபியுங்கள்” என்பதை நான் விசுவாசிக்கிறேன்.
510. ஸ்வீடனிலுள்ள ஸ்டாக்ஹோமில் நடந்ததை என்னால் மறக்கமுடியாது. சகோ லேவி பெட்ரஸ் ஒரு மகத்தான தேவனுடைய மனிதன். நாங்கள் அமெரிக்காவுக்குத் திரும்பி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால், மேசையினருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு மகத்தான கூட்டங்கள் அங்கு உண்டாயிருந்தன. கார்டன் லிண்ட்ஸே லேவி பெட்ரஸிடம், “இந்த பெரிய சபைக்கு மேற்பார்வையாளர் யார்?” என்று கேட்டார். அந்த சபை அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையை விட மிகப் பெரிய சபை. அவர், “யார் இதற்கு மேற்பார்வையாளர்?” என்று கேட்டார்.
நற்பண்பு கொண்ட லேவி பெட்ரஸ் “இயேசு” என்று பதிலளித்தார்.
அவர், “உங்கள் பிரஸ்பிடர் (presbyter) யார்? என்று கேட்டார், அதற்கும் அவர் “இயேசு” என்று பதிலளித்தார்.
511. அவர், “அது சரியென்று எனக்குத் தெரியும். நாங்களும் எங்கள் அசெம்பிளீஸ் ஆஃப் காட் சபையில் அவ்விதமே விசுவாசிக்கிறோம். ஆனால் உதாரணமாக ஒரு சகோதரன் வழி விலகுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை சபையிலிருந்து புறம்பாக்க அதிகாரமுடையவர் யார்? என்று கேட்டார்.
அதற்கு லேவி பெட்ரஸ், “நாங்கள் புறம்பாக்குதில்லை என்றார்.” அப்படியானால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கார்டன் லிண்ட்ஸே கேட்டார்.
512. அவர், “நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம்” என்றார். அது மிகவும் இனிமையான செயல் என்று எண்ணினேன். அது எனக்கு கிறிஸ்தவத் தன்மையாக ஒலித்தது. நாங்கள் அவருக்காக ஜெபம் செய்வோம். யாருமே அவரைப் புறம்பாக்குவதில்லை, அவர்கள் அவருக்காக ஜெபிக்கின்றனர்.
513. கார்டன் லிண்டஸே, “சில சகோதரர்கள் அவருடன் இணங்கி, வேறு சில சகோதரர்கள் அவருடன் ஐக்கியங்கொள்ள மறுத்தால் என்ன செய்வீர்கள்? ஒரு மேய்ப்பர் பெண்களின் மனிதனாக ஆகத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்... நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சில மேய்ப்பர்கள் அவரைத் தங்கள் சபைகளுக்கு அழைக்க மறுக்கின்றனர். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரை உங்கள் ஸ்தாபனத்திலிருந்து நீக்கி விடுவீர்களா?” என்று கேட்டார்.
514. அதற்கு லேவி பெட்ரஸ், “இல்லை, நாங்கள் அவரைத் தனியே விட்டு விட்டு, அவருக்காக ஜெபிப்போம். இதுவரைக்கும் நாங்கள் ஒருவரையும் இழக்கவில்லை. அவர்கள் எப்படியாயினும் திரும்ப வந்து விடுகின்றனர்” என்றார்.
515. கார்டன் லிண்ட்ஸே, “நல்லது. சிலருக்கு அவர் வேண்டுமென்றும் மற்றவர்களுக்கு அவர் வேண்டாமென்றும் இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
516. “அவர் வேண்டுமென்று நினைக்கிறவர்கள் அவரை ஏற்றுக் கொள்கின்றனர், அவரை வேண்டாதவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்றார்.
517. எனவே அம்முறையை கடைபிடிப்பது சிறந்தது என்று கருதுகிறேன், இல்லையா சகோதரரே? அந்த விதமாக நாம் “சகோதரர்கள்”.
518. இப்பொழுது, சகோதரரே, இங்கு கூறப்பட்டவை உங்கள் கேள்விகளுக்கு ஒருவாறு பதிலளித்தன என்றும் இன்றிரவு நடை பெற்ற கூட்டம் நமக்கு பிரயோஜனமாயிருந்தது என்றும் நம்கிறேன். நான் சிறிது காலம் வெளியே சென்றிருப்பேன். மேற்கில் நடைபெறவிருக்கும் கூட்டங்களுக்குச் செல்கிறேன். நான் தாழ்மையுடன் உங்கள் ஜெபங்களைக் கோருகிறேன்.
519. இங்கு நான் அளித்த சில பதில்கள், அல்லது அவைகளில் பெரும்பாலானவை சரியான பதில்களாக இருக்கக் கூடும். அல்லது அவைகளில் ஒன்றுமே சரியான பதில்களாக இல்லாமலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் அவைகள் என் சிந்தனைக்கேற்றபடி சிறந்த வகையில் சேகரிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டவை. கடைசி சில கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்க்க எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. அவைகள்... நான் என்ன கூறுகிறேன் என்றால், அவைகள் சபையில் ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற... வேதவசனங்கள். அவைகளை ஆழ்ந்து விவரிக்கத் தொடங்கினால் அவை மிகவும் கடினமுள்ள செயலாயிருக்கும் என்று எண்ணினேன். அவை பெரும் பாலும் சபையைக் குறித்த கேள்விகளே.
520. நீங்கள் இவ்விதமாக தொடர்ந்து நிலைத்து வருகிறதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு எந்த விதமான ஒழுங்கின்மையோ, அதிருப்தியோ, குழப்பமோ காணப்படவில்லை. எந்த ஒரு கேள்வியும் விவாதிக்கப்பட்டு, “இது தவறு, இது தவறு. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறப்பட வில்லை. கேள்வி கேட்டவர்கள் தங்கள் நிலையை பெலப்படுத்திக் கொள்வதற்கென ஒன்றை அறிந்து கொள்ள விரும்பின சகோதரர்களே, அவ்வளவு தான். அது தங்கள் போராயுதங்களை இன்னும் இறுகக் கட்டிக் கொள்ள முனைதலே. இவ்வாறு போராயுதங்களை இறுகக் கட்ட உதவும் இன்னும் அநேக கூட்டங்கள் நமக்கு உண்டாயிருக்கும் என்று நம்புகிறேன்.
521. சகோதரரே, என் போராயுதங்களும் இறுகக் கட்டப்பட வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் போராயுதங்களை நான் இன்னும் சிறிது இறுகக் கட்ட தேவன் எனக்கு உதவி செய்ய வேண்டுமென்று எனக்காக தேவனிடத்தில் ஜெபியுங்கள். நான் வாழ்கின்ற வாழ்க்கையும், நான் செய்கின்ற செயல்களும், இன்னும் அதிகமான தாழ்மையின் ஆவியைக் கொண்டும், மிகுந்த ஆவலுடனும் நான் செய்வேனாக. தேவன் தாமே சற்கென இதற்கு முன் எனக்கு இல்லாத அளவுக்கு ஒரு இருதயத்தைக் தருவராக. அதையே உங்களுக்கும் விரும்பி நான் ஜெபிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
522. உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைத்துக் கொண்டு விட்டேன். இப்பொழுது நேரம் பதினொன்று மணிக்கு ஐந்து நிமிடங்கள்...
523. இப்பொழுது, சகோ நெவில், நான்... நான் போக வேண்டிய இடம் ஏறக்குறைய தொளாயிரம் சொச்சம் மைல்களே என்று அறிகிறேன். எனவே நான் திங்கள் காலை வரைக்கும் இவ்விடம் விட்டுச் செல்லப் போவதில்லை. எனவே ஞாயிறு பள்ளிக்காக இங்கு ஞாயிறன்று வரலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் பிரசங்கிப்பதைக் கேட்க ஞாயிறன்று உங்கள் விருந்தினராக இங்கு வருவேன். பாருங்கள்? ஆனால்... நல்லது, சகோதரனே. ஆம், சகோதரனே. சகோ. நெவில், இதுதான் காரணம், சகோதரனே. நான்... உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் எப்பொழுதுமே என் மீது கருணை கொண்டவராய் உமது பிரசங்க பீடத்தை எனக்கு அளித்து வந்திருக்கிறீர்கள்... நான் உங்களுக்கு மூத்த மூப்பன் என்பதைப் போல. ஆனால் சகோ நெவில், நான் அவ்விதம் என்னைக் கருதிக் கொள்வதேயில்லை. நாம் சகோதரர்கள் என்று தான் உணர்ந்து வந்திருக்கிறேன்.
524. சகோ ரட்டல், சகோ. ஜுனி, ஓ, அங்குள்ள சகோதரர் அனைவரும், நாம் எல்லோரும் சகோதரர்களாயிருக்கிறோம். பாருங்கள்.
525. ஆனால் என்ன... காரணம் என்னவெனில், எனது தொண்டை சிறிது கரகரப்பாய் உள்ளது, பாருங்கள். எனக்கு தொடர்ச்சியாக ஆறு வாரங்களுக்கு யுத்தம் உள்ளது. இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு எனக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஓய்வு கிடைத்து, நான் மறுபடியும் கூட்டங்களை அங்கு தொடங்குவேன்.
526. சகோ. ஜூனி, நான் திரும்பி வந்தவுடனே, உங்கள் சபைக்கு வந்து உங்களை மறுபடியும் காணவேண்டுமென்று விரும்புகிறேன். நேற்று உங்கள் சிறு சபையைக் கடந்து சென்றேன் என்று நினைக்கிறன். என் மனைவி, “நான் நினைக்கிறேன்” என்றாள். அது க்ளெனெல்லன் பூங்காவுக்குப் பக்கத்தில்! பாதையின் அருகில் உள்ளதா? அங்கு வந்து அந்த செல்லர்ஸ்பர்க் மக்களிடம் பேச விரும்புகிறேன். அது அருமையாயிருக்கும்.
527. சகோ. ரட்டல், தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக. அங்கு நான் வரவிரும்புகிறேன், நீங்கள் ஒரு அருமையான குழுவைப் பெற்றிருக்கிறீர்கள். இன்றிரவு உட்கார்ந்து கொண்டு, ஒரு முதிய மூப்பர் கேட்பது போல் இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.
528. அங்குள்ள சகோ. பீலர் நமது சுவிசேஷக சகோதரர்களில் ஒருவர். உங்கள் கூட்டங்களில் ஒன்றை நான் எங்காவது எப்பொழுதாவது சந்திப்பேன் என்ற நம்புகிறேன், சிறிது பாதிப்பை உண்டு பண்ணுவதற்கென, உங்களை உயர்த்துவதற்கு ஏதாவதொன்றை எங்காவது கூற. உங்களுக்கும் வேறு எல்லாருக்குமே, இங்குள்ள சகோ ஸ்ட்ரிக்கருக்கும், சுவிசேஷகர்களுக்கும், நான் கூறுவதற்கு எப்பொழுதும் நல்வார்த்தையைக் கொண்டிருக்கிறேன்.
529. இங்குள்ள சகோ. காலின்ஸ் என்றாவது ஒரு நாள் ஊழியத்தில் முழு நேர போதகராயிருப்பார் என்று நம்புகிறேன்.
530. தீரமுள்ள மனிதர்கள், உண்மையான விசுவாசம் கொண்ட மனிதர்களாகிய உங்களுடனும், டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள், சகோதரர்களாகிய உங்கள் அனைவருடனும் தேவன் இருப்பாராக.
531. நீங்கள்... இங்குள்ள சகோதரன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகமில்லை. நீங்கள்... (சகோ. கால்ட்வெல் “சகோ. கால்ட்வெல்” என்கிறார் - ஆசி). நீங்கள்... நீங்கள் மூப்பர்களில் ஒருவர், அப்படி ஏதோ ஒன்று இல்லையா, அல்லது வெறும் (போதகர்) போதகர். “நான் ஒரு போதகர். நான் சர்ச் ஆஃப் காட் சபையில் போதகராயிருந்தேன். அங்கு முழு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க என்னால் முடியவில்லை. அங்கு கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைப் பிரசங்கிக்க இயலவில்லை. அவர்கள் எனக்கு மிகவும் உயர்ந்த ஊழிய லைசென்ஸை அளித்திருந்தனர். ஆனால் அவைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டேன். நீங்கள் இந்த மகத்தான செய்திகளைப் பிரசங்கிப்பதை நான் கேட்டதிலிருந்து, அவைகளைப் புறக்கணித்து விட்டு, அந்த ஸ்தாபனத்தை விட்டு வெளியேறி விட்டேன். இப்பொழுது நான் உங்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன்”.
532. நன்றி, சகோதரனே. எங்கள் ஐக்கியத்திற்கு உங்களை வரவேற்கிறோம். நமது நற்சாட்சிப் பத்திரங்கள் மேலேயிருந்து அளிக்கப்பட்டவை. நமது வாழ்க்கையே நமது நற்சாட்சிப் பத்திரமாக அமைந்துள்ளது. பாருங்கள். அதுவே நமது நற்சாட்சிப் பத்திரம். “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை”. பாருங்கள்? அது உண்மை. அதுவே நமது நற்சாட்சி பத்திரம். ஒரு புதிய... “நமக்கு அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை, வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை” என்று ஹாவர்ட் கூறுவது வழக்கம். அது உண்மை. “அன்பைத் தவிர வேறு பிரமாணம் இல்லை. கிறிஸ்துவைத் தவிர வேறு கோட்பாடு இல்லை. வேதாகமத்தைத் தவிர வேறு புத்தகம் இல்லை.”
533. சகோ. கால்ட்வெல், உங்களை நாங்கள் பெற்றிருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நீங்கள் ஒரு பெரிய ஸ்தாபனத்திலிருந்து வெளி வந்திருக்கிறீர்கள். அது ஆண்டர்ஸன் சர்ச் ஆப் காட் என்று நினைக்கிறேன். (சகோ. கால்ட்வெல், “க்ளீவ்லாண்ட்” என்கிறார் – ஆசி) க்ளீவ்லாண்டு சபை, பெந்தெகொஸ்தே சர்ச் ஆஃப் காட் நான் இங்குள்ள...? சபையில் போதகராயிருந்திருக்கிறேன். ஓ, ஆமாம். ஓ, ஆமாம். நான் அந்த சபைக்கு வந்திருக்கிறேன். ஒரு முறை சகோ. நெவில்... இல்லை சகோ. உட்டுடன் வந்திருக்கிறேன். உங்கள் சபையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து எங்களுக்கு வேட்டை நாய் கிடைத்தது. நான் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் உங்களைக் குறித்து பேசினார்கள். நல்லது. நான் நிச்சயமாக... “என் சபையிலா?” ஒ. சகோ. பர்ன்ஸ் அது சரி, சகோ. பர்ன்ஸ். அது சரி (சகோ. கால்ட்வெல் ஒரு சம்பவத்தைக் கூறுகிறார் - ஆசி). ஒ ஆம், ஓ, பெர்தா, அது சரி. ஓ, அது அருமையானது.
534 அங்குள்ள சகோ. ரூக், அவர் இப்பொழுது மேய்ப்பராகி விட்டாரா, அவர் சுவிசேஷகர் என்று நினைக்கிறேன். அது சரியா? அல்லது நீங்கள் மேய்ப்பராக இருக்கிறீர்களா? (சகோ. “சுவிசேஷகன் மட்டுமே” என்கிறார் - ஆசி). சுவிசேஷகர். சகேர். உங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். கர்த்தருக்காக நீங்கள் செய்து கொண்டிருக்கும் சில மகத்தான ஊழியத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள்... நீங்கள் இந்தியானா போலீஸுக்குச் சென்று கூட்டங்களை நடத்தி கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களை வென்றதாக கேள்விப்பட்டேன். தேவன் உங்களோடு இருப்பாராக, சகோ. ரூக், உங்களைக் கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பழைய ட்ராக்டரை ஓட்டி, உங்கள் முற்றத்தில் உரமிடுவதைக் கண்டிருக்கிறேன். இப்பொழுது நீங்கள் வெளியே கர்த்தருக்கென்று ஏதாவதொன்றைச் செய்ய முயல்வதை நான் காண்கிறேன். உங்களை அவர் ஊழியத்துக்கு அழைத்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரை எப்பொழுதும் உங்களுக்கு முன்பாக வைத்திருங்கள், சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எதன் பேரிலும் ஒப்புரவாகாதிருங்கள்; ஆனால் அதை இனிமையான ஆவியுடன் செய்யுங்கள். உங்கள் செய்தி எப்பொழுதும் பரிசுத்த ஆவியின் இனிமையினால் சாரமேறினதாக இருப்பதாக.
535. சகோ ஸ்ட்ரிக்கர்... [ஒரு சகோதரன், “உங்கள் அனைவருடைய ஜெபங்களையும் நாங்கள் வாஞ்சிக்கிறோம். நாங்கள் வடக்கு 'வெர்னனில் ஒரு சபையைத்துவங்க முயன்று கொண்டிருக்கிறோம்” என்கிறார் - ஆசி]. ஓ, அதை பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்காக நாங்கள் ஜெபிப்போம். “இது வரைக்கும் நன்றாக நடந்து வருகிறது.” அது சரி.
பில்லி, நீ எப்பொழுது மேய்ப்பன் ஊழியம் செய்யப் போகிறாய்?
536. இங்குள்ள டாக்டர் கோட் (Goad), டாக்டர் மெர்சியர், நான் நம்புகிறேன். அவ்விதம் தான் நாம் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்கிறோம். சகோ கோட் அந்த நிலையை அடைந்து விட்டார். அவர் பட்டம் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர், இப்பொழுது அவரால் தோட்டாக்களை நிறைக்க முடியும். ஆம் சகோ. லியோவை அவர் உள்ள விதமாகவே விட்டு விடலாமென்று நினைக்கிறேன்... அவர் 'டாக்டர்' என்னும் பட்டத்தைக் கொண்டவராய் தொடர்ந்து இருக்கட்டும்.
537. நல்லது, பின்னால் உள்ள 'டாக்டர்' பிரன்ஹாமே, நல்ல விதமாக 'டாக்டர்' செய்து வைத்திருங்கள், விளக்கு அவளில் நல்லவிதமாக எரிந்து கொண்டிருக்கின்றது. நான் என்ன சொல்லுகிறேன் என்றால், விசேஷித்த கூட்டங்கள் நடை பெறும் போது, நான் நிர்வாகக் குழுவிடம் பேசி உனக்கு ஏதாகிலும் அதிக பணம் கொடுப்பார்களா என்று பார்க்கிறேன் [சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார் – ஆசி] இந்த இடத்தைப் பெருக்கி மற்ற வேலைகளைச் செய்வதனால், அது உன்னை சந்தோஷப்படுத்தும்.
538. டாக்டர் உட். “அவரை டாக்டர்” என்று நான் அழைக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்று நீங்கள் வியக்கலாம். அவரைத் தவறாக அவ்வாறு அழைக்கவில்லை. அவர் மரத்தை துண்டுகளாக வெட்டுகிறார் என்று உங்களுக்குத் தெரியும். கர்த்தர் ஒரு அழகான மரத்தை வளரச் செய்தால், அவர் அதை வெட்டி அதைக்கொண்டு ஒரு வீட்டை உண்டாக்குகிறார். அவ்விதமான சிறந்த பணியை நான் இதுவரை கண்டதில்லை. எனவே அவரை நான் டாக்டர் என்று அழைக்க வேண்டியவனாயிருக்கிறேன்.
539. சகோ. டெய்லர், நீங்கள் இன்னும் கதவண்டை விசுவாசத்துடன் நின்று கொண்டு, உள்ளே வரும் ஒருவருக்கு இருக்கை அளிக்கிறீர்கள். உங்களை நான் இவ்விதம் கருதுகிறேன்: “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்” (சங் 84:10). அது உண்மை. நிச்சயமாக.
540. சகோ ஹிக்கர்ஸன், நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி மேலே வந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுடைய... நான்... நீங்கள் வழியில் பிரயாணம் செய்யத் தொடங்கி, வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உத்தமத்தையும் நீங்கள் கர்த்தராகிய இயேசுவுக்கென்று செய்யும் எல்லாவற்றையும் நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்து, உங்களை உண்மையுள்ள டீக்கனாக ஆக்குவராக, நீங்கள் அவ்விதமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வீடு கீழ்ப்படிதலுக்குள் வந்து நீங்கள் இருந்து வந்திருக்கிற மற்றொல்லா காரியங்களிலும்.
541. சகோ. ஃபிரட், நீங்கள் கனடாவிலிருந்து எங்களி வந்து நீண்ட காலம் ஆகவில்லை. நீங்கள் கனடா தேசத்தை சேர்ந்தவரென்று நாங்கள் எண்ணுவதில்லை. நீங்கள் தர்மகர்த்தா எங்களுடன் கூட சேர்ந்து அந்நியரும் பரதேசியுமாயிருக்கிறீர் என்று தான் எண்ணுகிறோம், நீங்களும், சகோ. உட்டும் சகோ. ராபர்ஸனுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து உங்கள் உத்தியோகத்தை திறம்பட செய்கிறீர்கள். சகோ. ஈகன் இன்றிரவு இங்கில்லை.
542. சகோ. ராபர்ஸன், நீங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்து வந்திருக்கிறீர்கள். இப்பொழுது விசாரணை நடந்து கொண்டிருக்கும் வரிவழக்கில் சகோ. ராபர்ஸனும் மற்றவர்களும் மிகவும் உதவியாக இருக்கின்றனர்.