27. ஆமென்! பிள்ளைகளே, தேவனுடைய வீட்டில் எப்படி நீங்கள் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்கு தெரியாதா? இது தேவனுடைய பிரகாரமென்பது உங்களுக்கு தெரியாதா? தேவன் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கின்றார், எல்லாரும் அமைதியாக இருக்கக்கடவர்கள். இது தேவனுடைய இடமாயிருக்கிறது. இங்கு மக்கள் வருகின்றார்கள், தியானிக்கின்றார்கள், ஆத்தும இரட்சிப்பை கண்டடைய முயற்சிக்கின்றார்கள்; மக்களுடைய வாழ்க்கையின் பிரச்சனைகளைக் கண்டறிய முயற்சிக்கின்றார்கள், யாராவது ஒருவருக்கு உதவ முயற்சிக்கின்றார்கள். உங்களால் செய்ய முடிகின்ற சிறிய அளவிலான காரியமானது பயபக்தியுடன் இருந்து, அமைதியாக அமர்ந்திருப்பதேயாகும். சபை ஆரம்பிக்கும் முன்னரே தண்ணீர் பருகிவிடுங்கள், சிறிய பிள்ளைகளுக்கு தண்ணீர் தேவைப்படும் என்பதை நானறிவேன். சிறிய பிள்ளைகளை வைத்திருக்கும் தாய்மார்களே நீங்கள் அங்கே பின்புறத்தில் அமர்ந்து பிள்ளைகளை கூடிய அளவில் அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். உள்ளே மெல்ல பேசுவது கூட இருக்கக் கூடாது, காதோடு காதான பேச்சும் கூட இருக்கக்கூடாது, நாமெல்லாரும் குற்றமுடையவர்களாயிருப்போம். வேதாகமம் வாசிக்கப்பட்டு அந்த ஊழியக்காரன் பிரசங்கபீடத்தை அடையும் போது நாம் அமைதியாக இருந்து கர்த்தர் பேரில் காத்திருக்க வேண்டும். இப்பொழுது தயவு கூர்ந்து அவ்விதமாக செய்ய முயலுங்கள்.
28. எனக்கு தெரியும் - சிறு பிள்ளைகளாகிய நீங்கள் சிறிது அங்குமிங்குமாக புரள வேண்டியவர்களாயிருக்கிறீர்கள், புரிகின்றதா. அப்படிச் செய்வீர்களானால், சிறிது தொல்லைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியுமா, நீ அப்படிச் செய்யக்கூடாது என்று தான் தாயார் விரும்புகிறார்கள், அப்பாவும் நீ அப்படி செய்யக்கூடாது என்று தான் விரும்புகிறார். ஆகவே...
29. நானும் கூட புரண்டு விளையாடுகின்ற சிறிய பிள்ளைகளை உடையவனாக இருக்கிறேன், ஜோசப், ஆகவே காரியங்களை அறிவேன். ஜோசப்பை அமைதியாக வைத்து பார்த்துக் கொள்வதால் ஆராதனையிலிருந்து எதுவும் எனக்கு கிடைப்பதில்லை என்று மேடா கூறினார்கள். நல்லது, யாராவது ஆராதனையிலிருந்து ஏதாவதொன்றை பெற்றுக் கொள்ளத்தக்கதாக அவள் அவ்விதமாகச் செய்கின்றாள். பாருங்கள்?
30. நாம் ஒருவருக்கொருவர் எப்பொழுதுமே மரியாதையும், கனத்தையும் கொடுக்கவே விரும்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையும் அவருடைய வீட்டையும் கனம் பண்ணுங்கள்.