31. எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக. “உடனடியாக மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், “ அதுவும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான். இப்பொழுது, இது கேள்வி எண் ஒன்று. அவ்விதமாகத் தான் செய்யப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன். நாம் வேதவசனங்களில் காண்பது...
32. “அது வேதபூர்வமானதா?” என நீங்கள் கேட்கலாம்.
33. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கித்தபோது அந்த அதே வேளையில் மூவாயிரம் ஆத்துமாக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். கர்த்தர் மேல் எவர்கள் விசுவாசம் கொண்டார்களோ அவர்கள் அனைவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர்”. நீ கர்த்தர் பேரில் விசுவாசம் கொண்டு அவரை உன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட உடனே நேராக தண்ணீரண்டை சென்று அங்கே உன் பாவங்களை அறிக்கைச் செய்து அங்கிருந்து ஆரம்பி; சிறியவர் அல்லது பெரியவர் எவராயிருந்தாலும் பரவாயில்லை.
34. நீங்கள் “ஆமாம், இந்த பிள்ளைகள் மிகச் சிறியவர்களாக உள்ளார்களே” எனலாம்.
35. “சிறு பிள்ளைகள் என்னிடம் வருவதற்கு இடம் கொடுங்கள். அவர்களை தடை செய்யாதீர்கள் பரலோக ராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது. என்ன வயதுடையவர்களாயிருந்தாலும் சரி, பீடத்தண்டை வர விரும்புகிற அல்லது ஞானஸ்நானம் பெற்று கொள்ள விரும்புகிற எந்த ஒரு பிள்ளை, குழந்தையின் (child) மேலும் நான் என் கையை வைக்க அஞ்சமாட்டேன், அவர்களுக்கு என்ன வயதாக இருந்தாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல.