36. நான் நம்புவதென்னவெனில் ஒரு கிறிஸ்தவன், ஒரு கடமையாக, அவர் உங்களுடைய தனிப்பட்ட நண்பராக இருந்தால்... அவருடன் ஒரு வாதத்தை ஆரம்பிக்க வேண்டாம்; அவ்விதமாக நீங்கள் செய்தால், நீங்கள் சரியாக இல்லையென்று அர்த்தம், உங்கள் - உங்கள் ஆவி சரியானது இல்லை. ஆனால் நீங்கள் அந்த சகோதரனை நேசித்தால்; நீங்கள் நேசித்துத்-தாக வேண்டும், ஏனெனில் நீங்கள், “ஒரு நண்பராகிய போதகர்” என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால்... இந்தக் குறிப்புகளில் எந்த ஒரு பெயரும் கையொப்பமிடப்படவில்லை, இந்த கேள்விகள் எங்கிருந்து வருகிறதென்றும், யார் எழுதினது என்றும் எனக்குத் தெரியாது.
37. இப்பொழுது, நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்ன வென்றால், அது யாராக இருந்தாலும் சரி, இந்த போதகராகிய நண்பர் இந்தவிதமாக ஞானஸ்நானம் கொடுப்பாரானால் நீங்களும் அவருடைய வீட்டிற்கு சென்று வருவதுமாக இருந்தால், நான் - நான் என்றாவது ஒரு சமயத்தில் இந்த கேள்வியை சற்று குறிப்பிடுவேன். அது உங்களுக்கு... அதைக் குறித்த வரையிலும் சற்று பேசுங்கள், அந்த பொருளைச் சுற்றி சுற்றி பேசிக் கொண்டிருங்கள்; கர்த்தர் அதைத் திறந்து ஆவன செய்யட்டும்; அப்படியானால் அப்பொழுது நீங்கள் அதைப் பேச வேண்டு மென்று உங்களிடம் கர்த்தர் கூறுகின்றார். பாருங்கள்? கர்த்தர் கேள்வியை திறக்கும் வரைக்கும் காத்திருங்கள். அதன் பிறகு அவரிடம் கூறுங்கள். நீங்கள், “சகோதரனே, மத்தேயு 28:19 மற்றும் அப்போஸ்தலர் 2:38 மற்றும் இன்னும் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு முரண்பாடு இருக்கிறதா என்று நான் வியப்புறுகிறேன்? இங்கே 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி' என்றும் கூறுகிறது. மற்றொன்று 'இயேசு கிறிஸ்துவின் நாமம் என்று கூறுகின்றது, இது ஏன் என்று உங்களால் விவரிக்க முடியுமா?” என்று கேளுங்கள்.
38. இப்பொழுது - இப்பொழுது, முயற்சிக்காதீர்கள்... நீங்கள் உண்மையாகவே மாணவன் இல்லையென்றால் மற்றும் எதைக் குறித்து பேசுகிறோம் என்பதை அறியாதவர்களாக இருப்பீர்களானால், அதைக் கூறாமல் அப்படியே இருந்து விடுவது நலம். பாருங்கள்? “நல்லது, நீங்கள் வருவீர்களானால்...” என்று அவரிடம் கூறலாம், தெரிந்து கொள்ள வேண்டுமென்று உண்மையான மனமுடையவராக அவர் இருப்பாரென்றால் நீங்கள், “நீங்கள் எங்கள் மேய்ப்பரை அல்லது யாராவது ஒருவரை சந்தித்து அதைக் குறித்து விவாதிக்கலாமே?” என்று கூறலாம்.
39. இது ஒரு ஆழமான காரியமாகும். பாருங்கள்? அதை நீங்களாகவே எடுத்துப் பேச முயற்சிக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் உங்களையே குழப்பிக் கொள்வீர்கள். நீங்கள்... நீங்கள் பேசுவது என்னவென்பதை அறிந்திருந்து, எந்தவித சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாக இருந்து, வேத வசனங்களை அறிந்திருப்பீர்களானால் பரவாயில்லை, ஆனால் அவரை புண்படுத்தாதீர்கள், நீங்கள் என்ன செய்தாலும் சரி, அவர் மனது புண்படும்படி செய்யாதீர்கள். பாருங்கள்? இடறல் உண்டாக்காதீர்கள், அவரிடம் கூறுங்கள்...
40. ஆம், நிச்சயமாக அவர் தவறில் தான் இருக்கிறார். அது உண்மை. அந்த மனிதன் அந்த விதமாக ஞானஸ்நானம் கொடுக்கின்றார் என்றால் அவர் தவறில் தான் உள்ளார். “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் எந்த ஒரு மனிதனும் வேதபூர்வமாக தவறில் இருக்கிறான். அது சரியே.