41. நீங்கள் சரியாக உள்ளீர்கள். தேவத்துவத்தில் மூன்று நபர்கள் கிடையாது. ஒரு நபராயில்லாமல் ஒரு தனிமனித பண்பு இருக்க முடியாது, ஒரு நபர் தான் அவ்வாறு தனிப்பட்ட பண்பைக் கொண்டிருக்க முடியும். மூன்று தேவர்கள் என்பது கிடையாது. ஒரேயொரு தேவன் தான் இருக்கின்றார், அந்த தேவன் இயேசு கிறிஸ்துவே. இயேசு கிறிஸ்துவில் வாசம் செய்யும் தேவனுடைய ஆவியே தேவன், அவர் தம்முடைய சபையில் (நீங்களும் நானும்) இன்றைக்கு வாசம் செய்து, சர்வவல்லமையுள்ள தேவனாகிய உனக்குள் வாசம் செய்கின்ற அவர் தாமே, நமக்கு தம்மையே பரிசுத்த ஆவியின் வடிவில் பிரித்து வைக்கின்றார்.
42. இப்பொழுது நீங்கள் சரியாக இருக்கிறீர்கள், “பிதா, குமாரன் பரிசுத்த ஆவி”, என்பது அதே தேவனுடைய மூன்று அலுவல்களாகும். ஆனால், மூன்று தேவர்கள் அல்ல, அது வேதபூர்வமாக தவறானதாகும்.